You are on page 1of 1

இறை வாழ்க இறை தந்த தமிழ் வாழ்க

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க

இன்றைய நிகழ்ச்சியின் முதல் அங்கமாக இறை வணக்கம். அதனை வழங்க


முதலாம் ஆண்டு மாணவர்களை அன்புடன் அழைக்கின்றேன். அனைவரையும்
எழுது நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறை வணக்கத்தை வழங்கிச் சென்ற முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நன்றி.

பள்ளியின் தலைமையாசிரியர் ஐயா திரு.பெரு.சோமசுந்தரம் அவர்களே,

இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர், பாரிட் புந்தார் தமிழ் வாழ்வியல்


இயக்கத்தின் தலவர் ஐயா திரு.க.முருகையன் அவர்களே,

பள்ளியின் துணைத் தலைமையாசிரியர் ஐயை குமாரி ஆ.சாந்தி அவர்களே,

பள்ளியின் மாணவர் நலப் பொறுப்பாசிரியர் ஐயை குமாரி இலா.தவமணி அவர்களே,

பள்ளியின் புறப்பாட நடவடிக்கை ஆசிரியர் ஐயை திருமதி. மு.சாந்தி அவர்களே,

ஆசிரியர்களே, பெற்றோர்களே, மாணவர்களே, 1-ஆம் ஆண்டு மாணவச்


செல்வங்களே,

உங்கள் அனைவரையும் இன்றைய எழுத்தறிவித்தல் விழாவிற்கு வருகை


தந்தமைக்கு பள்ளியின் சார்பாக நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்து
அனைவரையும் வருக வருகவென வரவேற்கின்றோம்.

நிகழ்ழ்சியின் அடுத்த அங்கமாக தலைமையுரை. அதனை வழங்க பள்ளியின்


தலைமையாசிரியரை அன்புடன் அழைக்கின்றேன்.

உரையாற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் ஐயா திரு.பெரு.சோமசுந்தரம்


அவர்களுக்கு நன்றி.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


பகவன் முதற்றே உலகு.

தமிழின் மொத்தம் 247 எழுத்துகளில் எப்படி அ என்ற எழுத்து


எழுத்துகளுக்கெல்லாம் முதல் எழுத்தாக இருக்கின்றதோ அதே போன்று
இவ்வுலகுக்கு முதன்மையாகவும் அடிப்படையாகவும் இருப்பவர் இறைவன். இது
திருக்குறள் என்பது அனைவரும் அறிந்தது. திருவள்ளுவர் தாம் எழுதிய 1330
திருக்குறள்களில் தமிழின் முதல் எழுத்தான அ என்ற எழுத்தை வைத்தே
திருக்குறளை துவக்கி உள்ளார் என்பது தமிழின் சிறப்புகளில் ஒன்றாகும். அதுபோல்
இன்று நம் பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துகளில் முதல் எழுத்தான ‘அ’ என்ற
எழுத்தை எழுதி அவர்களின் தமிழ் மொழி கல்வியின் பயணத்தைத்
தொடங்கவிருக்கின்றனர். அவர்களின் பயணம் நல்ல முறையில் தொடங்க
அனைவரும் அவர்களை வாழ்த்துவோம்.

அவ்வகையில் இன்றைய எழுத்தறிவித்தல் விழாவை சிறப்புடன் வழிநடத்த பாரிட்


புந்தார், தமிழ் வாழ்வியல் இயக்கத்தின் தலைவர் ஐயா திரு.முருகையன் அவர்களை
அன்புடன் அழக்கின்றேன்.

You might also like