You are on page 1of 1

பெரும் மதிப்பிற்குரிய பாகான் செனா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர்

அவர்களே, பள்ளியின் துணைத்தலைமை ஆசிரியர்களே, மற்றும் சக


நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கத்தைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நாள் ஆறாம் ஆண்டு மாணவர்களின்
வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். கடந்த ஆறு ஆண்டுகளாக எங்களை
வழிநடத்தி, ஒரு முழுமைப்பெற்ற மாந்தனாக உருவாக்குவதில் கடுமையான
உழைப்பை வழங்கிய எங்களின் உயிரினும் மேலான அன்பிற்கினிய ஆசிரியர்
ஆசிரியர்களின் அழைப்பின் பேரில் இப்பிரியாவிடை நிகழ்ச்சியில்
இருக்கின்றோம். ‘உயிர் பிரிந்தாலும் உன்னைப் பிரியாத வரம் ஒன்று
கிடைக்குமோ?’ அருமை நண்பர்களே, நாம் இந்த வகுப்பறையில்
நிரம்பியிருக்கும் ஒவ்வொரு நினைவுகளிலும் ஆசிரியர் ஆசிரியர்களின்
குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். அவர்கள் ஒரு நாளும் சோர்வாக
அமர்ந்து நாம் பார்த்ததில்லை. பம்பரம் போல எல்லா வேலைகளையும்
ஏற்றுக்கொண்டு சுழன்றப்படியே இருப்பார்கள். இத்தனை சுறுசுறுப்பான
மனிதர்களை நம் வாழ்நாளில் பார்த்திருக்க மாட்டோம். பாசத்தையும்
அன்பையும் உயிராய் நேசிக்கும் அன்பின் உறவுகளே, கடந்த 12 ஆண்டுகளாகப்
போதித்த ஆசிரியர்களைப் பிரிய போகிறோம் என்பதை வருத்தத்துடனும்
மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் ஆற்றிய சேவைகளை
நாம் எப்பொழுதும் மறக்க இயலாது. நாம் அவர்களுக்குக் காட்டும்
கையசைத்தல் இறுதியானதல்ல என்பதை நாம் புரிந்து கொள்வோம். கூடி
நின்று வாழ்த்த வந்திருக்கும் பெருமைக்குரிய நல்லுள்ளங்களே,
‘ஆசிரியர்களை விட்டுப் பிரியும் சோகக் ‘கண்ணீரில் நனைக்கிறோம் உங்கள்
பிரிவை இனி எப்பொழுதும் திரும்பி வராவிட்டாலும் நீங்கள் விதைத்த
விதைகள் உறங்காமல் வளர்வோம்’ ஆறாம் ஆண்டு மாணவர்களின்
பிரியாவிடை நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் மாணவர்கள்
சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பேச வாய்ப்பளித்த
அனைவருக்கும் நன்றிக் கூறி விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்.

You might also like