You are on page 1of 2

பிரியாவிடை உரை

எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய தலைமையாசிரியர்


அவர்களே,
துணைத்தலைமையசிரிகளே,
ஆசிரியர்களே,எங்கள் அன்புக்குப் பாத்திரமான
வகுப்பாசிரியர் திருமதி நாகேஸ்வரி அவர்களே, என் சக
மாணவ நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் இருகரம்
வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்.இன்றோடு நமது
தொடக்கல்விக்கு நாம் விடை கொடுக்கும் நாள்.ஆறாண்டுகள்
இப்பள்ளியில் பயின்று இடைநிலைப்பள்ளிக்குச்
செல்லவிருக்கிறோம்.அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட
இப்பிரியாவிடை நிகழ்வில் ஓரிரு வார்த்தைகள் கூற வாய்ப்பு
கிடைத்தமைக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

ஒரு வெற்றுத்தாளாய் இப்பள்ளியில் காலடி எடுத்து


வைத்தோம். அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன். வீட்டை
விட்டு ஒரு புதிய உலகத்திற்கு நாங்கள் வந்த
போது,எங்களுக்குத் தாயாய், தந்தையாய், சகோதர்களாய்
நீங்கள் பழகியது, எங்கள் கண்களில் நீரை
வரவழைக்கிறது.எங்கள் கல்விக்கண்களைத் திறந்து வைத்த
தெய்வங்கள் நீங்கள்.நீங்கள் பாய்ச்சிய இந்த அறிவு வெளிச்சம்
காலந்தோறும் எங்களை வழி நடத்தும்.

இப்பள்ளியில் நாங்கள் பயின்ற காலத்தில் பல தவறுகள்


செய்திருக்கலாம்.அதற்காக, இவ்வேளையில் மன்னிப்புக்
கோருகிறோம். பெருமனதுடன் எங்களை மன்னிப்பீர்கள் என்று
நம்புகிறோம். இறுதியாக, உங்கள் அனைவரையும் நாங்கள்
அடிக்கடி வந்து பார்ப்போம் எனக்கூறி என் உரையை
முடித்துக் கொள்கிறேன், நன்றி.

You might also like