You are on page 1of 7

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்

கழையிடை ஏறிய சாறும்,


பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

அன்னைத் தமிழாம் தாய்த்தமிழின் பாதந்தொட்டு வணங்குகிறோம், வாழியே தமிழ்...!

பெருமதிப்பிற்குறிய பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி.சுசிலா கில்டா அவர்களே,

இன்றைய விழா நாயகர்களான ஆசிரியர்களே,

மாணவர்களே மற்றும் வருகை புரிந்திருக்கும் அனைவரையும் மெதடிஸ்ட் மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளியின் “


ஆசிரியர் தின கொண்டாட்டத்திற்கு” வருக வருக என வரவேற்கின்றோம்.

அன்னை அளவிற்கு
அக்கறை காட்டிடும்
ஒரு கூட்டம் உண்டு
தந்தை போல
கண்டித்து நடத்திடும்
ஒரு தரிசனை உண்டு

ஏணி போன்று
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
ஏற்றிவிட ஒரு இனம் உண்டு

இவர்களுக்கு
ஆசான், ஆசிரியர், குரு
என பல பெயருண்டு

என்பதற்கு ஏற்ப நாம் நம் ஆசிரியர்களைப் போற்றி கொண்டாடத்தான் இங்கு கூடியிருக்கிறோம்.

நிகழ்வின் முதல் அங்கமாக, தேசிய பண், பள்ளிப்பாடல் மற்றும் தமிழ் வாழ்த்து பாடப்படும். எனவே,
அனைவரும் எழுந்து நிற்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவரும் தங்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு இலக்கை அடைவேன், என எப்பொழுதும்


நம்பிக்கையுடன் இருப்பார் எங்கள் பள்ளி தலைமையாசிரியர். அதே நம்பிக்கை, துடிப்புடன் இந்நிகழ்வில்
உரையாற்ற தலைமையாசிரியர் திருமதி.சுசிலா கில்டா அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

உரையாற்றிச் சென்ற பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களுக்கு நமது நன்றி.

வருகையாளர்களே,
நிகழ்வின் அடுத்த அங்கமாக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரின் உரை. பெற்றோர்.ஆசிரியர்
சங்க தலைவர் திருமதி.சுமதி அவர்களை உரையாற்ற அன்புடன் அழைக்கின்றோம்.

தலைமையுரையை வழங்கிச் சென்ற திருமதி.சுமதி அவர்களுக்கு நமது நன்றி.

தொடர்ந்து, மாணவர்களின் பிரிதிநிதியான மாணவர் தலைவர் செல்வி சமிரா என் அவர்களின் உரை.
மாணவர் தலைவரை அன்புடன் அழைக்கின்றோம்.
மாணவர் தலைவருக்கு நமது நன்றி.

தொடர்ந்து, கல்வி அமைச்சின் வாழ்த்துரையை வாசிக்க ஆசிரியர் திரு.முருகன் அவர்களை அன்புடன்


அழைக்கின்றோம்.

ஆசிரியர் திரு.முருகன் அவர்களுக்கு நமது நன்றி.

எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால்

நோக்கம், லட்சியம் ஒன்று தானே

என் மாணவன் முன்னேற வேண்டும்

தேர்ச்சிப்பெற வேண்டும்

வெற்றி பெற வேண்டும்

ஆஹா !

எத்தனை உயரிய எண்ணம்

நீங்கள் அல்லவா

வணக்கத்துக்குறியவர்கள்

என்பதற்கு ஏற்ப அடுத்ததாக, ஆசிரியர் உறுதிமொழி. இதனை வழிநடத்த ஆசிரியை திருமதி.மு.ஜெயந்தி


அவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

ஆசிரியை திருமதி.மு.ஜெயந்தி அவர்களுக்கு நமது நன்றி.

தொடர்ந்து, ஆசிரியர் பண் பாடப்படும். ஆசிரியர்கள் அனைவரும் எழுந்து இப்பண்ணை பாட அன்புடன்
அழைக்கின்றோம்.

ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது நன்றி. ஆசிரியர்கள் தங்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக்


கொள்கிறோம்.
இனி, நாம் அனைவரும் காத்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. இதோ...நமது பள்ளியின்
‘ஆசிரியர் தின கொண்டாட்டம் 2019 ‘ தொடங்க உள்ளது.

நமது இன்றைய நிகழ்வை மேலும் மெருகூட்ட மாணவர்களின் படைப்பு ஒன்று உள்ளது. இப்படைப்பை வழங்க
ஆறாம் ஆண்டு மாணவர்களை அன்புடன் அழைக்கின்றோம்.

இதோ எனதருமை ஆசிரியர்களே உங்களுக்காக...

சிறப்பாக தங்களது படைப்புகளை வழங்கிச் சென்ற மாணவர்களுக்கு நமது நன்றி.

தொடர்ந்து, நம் ஆசிரியர்களை மகிழ்விக்கும் வகையில் சில மாணவர்கள் ஆசிரியர்களுக்காக கவிதையை


ஒப்புவிக்க வருகின்றனர். இதோ...

முதலாவதாக _______________ அன்புடன் அழைக்கின்றோம்.


தொடர்ந்து,TERIMA KASIH GURU பாடல் பாடப்படும். மாணவர்கள் அனைவரும் எழுந்து
இப்பாடலை பாட அன்புடன் அழைக்கின்றோம்.

அன்பினை வழக்கும் அட்சய பாத்திரங்களே

அறிவுச் சுடர் ஏத்தும் அணையா தீபங்களே

அறிவுப் பசி தீர்க்கும் கற்பக விருட்சங்களே

அன்பின் வழி நடத்தும் முன் மாதிரிகளே

பின்தங்கிய சமுதாயம் உயர்த்தும் உன்னத உள்ளங்களே

பிறர்க்காய் மெழுகென உருகி ஒளி தரும் தியாக துருவங்களே

ஆசிரியர்களே..
என் அன்பிற்கினிய ஆசிரியர்களே உங்களைக் கொண்டாடும் வகையில் நிகழ்வில் அடுத்த அங்கமாக
அணிச்சல் வெட்டும் நிகழ்வு. அணிச்சலை வெட்ட தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்களை மேடைக்கு அழைக்கின்றோம்.

தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நமது நன்றி.

தொடர்ந்து, ஆசிரியர்களுக்குள் பரிசு பரிமாற்றம் செய்யும் நிகழ்வு.

இந்நிகழ்வைத் தொடக்கி வைக்க ஆசிரியர் திருமதி.மு.ஜெயந்தி அவர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

இனி தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை வழி நடத்த
_______________________ அன்புடன் அழைக்கின்றேன்.

___________________ அவர்களுக்கு நமது நன்றி.

கல்விக் கடலை ஊட்டி

கற்றோனாய் சிலைவடித்த

ஆசிரியர் அனைவருக்கும்

மீண்டும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

இத்துடன் இன்றைய நமது காலை நிகழ்வு ஒரு நிறைவைக் காண்கின்றது.

இத்துடன் நான் விடைபெறுகிறேன்.


நன்றி, வணக்கம்.

தொடர்ந்து ஆசிரியர்களுக்கு போட்டி விளையாட்டு நடத்தப்படும். இதனை வழி நடத்த ஆசிரியை


திருமதி.சந்திரப்பிரியாவை அன்புடன் அழைக்கின்றேன்.

You might also like