You are on page 1of 1

ஆசிரியர் தின ஜெபம் .

அன்பு இறைவா! என் ஆசிரியப் பணியை அன்பால் நிறைத்திட,


நாள்தோறும் நன்றி நவின்றிட, ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி கண்டிட,
காலந்தோறும் கற்றுக் கொண்டே இருந்திட அருள் தா!

என் பொறுப்பில் உள்ள மாணவர்களைப் பாகுபாடு இல்லாமல் அன்பு


செய்ய, அறிவு புகட்ட, ஆற்றல் அளித்திட, ஊக்கமூட்டி உறுதுணையாக
இருக்க அருள் தா!

நல்லவர்கள், கெட்டவர்கள் அறிவாளிகள், அறிவற்றவர்கள்


ஒழுக்கமானவர்கள், ஒழுக்கமற்றவர்கள் எனும் பட்டம் சூட்டாமல்
அனைவரையும் ஒன்றாக, நன்றாக
ஆசிக்க, நேசிக்க அருள் தா!

அறிவுரையைப் பின்பற்றுவதைவிட என் வாழ்வை, என் செயல்களை என்


மாணவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக
வாழும் வரம் தா!

ஆசிரியப் பணி ஓர் அறப்பணி. அர்ப்பண உணர்வுடன் நாளும் என்னையே


அர்ப்பணிக்க அருள் தா!

கண்ணியத்தோடு கடமையைச் செய்து நல்ல மனிதனாய், வாழும்


புனிதனாய் நாளும் வலம்வர அருள் தா!

இணைந்து செயல்படுவதில்தான் இன்பம். மனமிசைந்து,


கரமிணைத்து கருணையோடு தினம் பணி செய்திட அருள் தா!

என் வாழ்வின் எல்லாமும் நீ தான்! அன்பின் தோற்றுவாயும் அறிவின்


ஊற்றுவாயும் நீதான் !உன்னில் சங்கமம் ஆகி உண்மையை உரக்கச்
சொல்லிட அருள் தா!

- Mnkd;

******

You might also like