You are on page 1of 21

வணக்கம்

பெயர் : தியாகேஸ்வரி த/பெ முனியான்டி.

ஆண்டு : 6 வெற்றி.

பாடம் : நன்னெறி கல்வி.

ஆசிரியர் பெயர் : திருமதி.கோ.சந்திரகலா.

பள்ளி பெயர் : தேசிய வகை சங்காட் தமிழ்ப்பள்ளி.


உள்ளடக்கம் :-
தொகுதி 1: நெறி 1: இறை நம்பிக்கை.

தொகுதி 2: நெறி 2: மரியாதை.


இறை நம்பிக்கை

இறை நம்பிக்கை என்பது இறைவனை வழிபடும் மூலம் நாம் இறைவன்


மீது வைக்கும் நம்பிக்கை ஆகும்.

கடவுளை நேசிப்பவன்
கடவுளை தேடுகிறான்;
மனிதனை நேசிப்பவன்
கடவுளாக வாழ்கின்றான்.
இஸ்லாமியரின் புனித நூல்

o திருக்குர்ஆன் என்று அழைக்கப்படுகிறது.

o மனிதனின் அன்றாட வாழ்கை நடைமுறை தொடங்கி சட்டத்திட்டம் வரை அனைத்திற்கும்


ஆதாரமாக விளங்குகின்றது.

o அறிவுரைகள்,தொன்மங்கள்,செய்திகளின் தொகுப்பு,இஸ்லாமியர்களின் சமய நம்பிக்கை


போன்றவற்றைக் குறிப்பிடுகின்றது.

o உண்மையையும் பொய்மையையும் பகுத்தறிந்து செயல்படக் கூறுகின்றது.


கிறிஸ்துவரின் புனித நூல்

 பரிசுத்த வேதாகமம் (பைபிள்) என்று அழைக்கப்படுகின்றது.

 இறைவனின் உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தார் என்று உணர்த்துகிறது.

 பாவங்கள் செய்யாமல், இறைவழியில் நடக்கும்படி எடுத்துக் கூறுகின்றது.

 இறைவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் அன்பு கொள்ளப் பாலமாக இருந்து


நெறிப்படுத்துகிறது.
சீக்கியர்களின் புனித நூல்

 குரு கிரந்த் சாயிப் (Guru Granth Sahib) என்று அழைக்கப்படுகின்றது.

 உலகில் உள்ள அனைத்து மக்களும் சமமானவர்களே என்று கூறுகின்றது.

 உண்மையைப் பேசுங்கள்; உண்மையுடன் வாழுங்கள் என்பனவற்றை


உணர்த்துகின்றது.

 கடவுளின் கட்டளைக்கு உட்பட்டு வாழ வழிவகுக்கின்றது.

 எளிமை,கருணை,அன்பு, அருள்,போன்ற நற்குணங்கள் கொண்டிருப்பதை வலியுறுத்துகின்றது.


இந்தியர்களின் திருக்குறள் நூல்

 திருக்குறள் ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும்.

 சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின்


திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச்
செய்யுள்களைக் கொண்டது.

 இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.

 மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும்


இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.

 இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார்.


புத்தர் புனித நூல்

 மூன்று வகையான போதனைத் திரட்டுகளை திரிபிடகம் கொண்டுள்ளது.

 பிடகம் என்பது கூடை அல்லது திரட்டு எனப்பொருள்படும்.

 அவற்றில் கூறப்படும் சமயக்கொள்கைகளே தேரவாதம் என்று கருதப்படுபவை.

 திரிபிடகம் கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின்


மூலமான புனித நூல் ஆகும்.

 அவை: சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என்பவையாகும். இந்த மூன்று பிடகங்களில்


அடங்கிய இருபத்து ஒன்பது நூல்களையும் பௌத்த சமயத்தின் மூல நூல்கள் எனப்படுகின்றன.
புத்தரின் போதனைகள் வழங்கும் நன்மைகள்

நற்சிந்தனை நற்கடமை
மக்கள் நல்ல நாடு செழிப்பு
எண்ணங்களுடன் அடையும்.
வாழ்வர்.
புத்தரின்
போதனைகள்
வழங்கும்
நன்மைகள்.
நல்தியானம்
நற்முயற்சி
மக்கள்
மகிழ்ச்சியான
சூழலில் நற்செயல் நாடு
வாழ்வர். நன்மொழி முன்னேற்றம்
நாட்டிற்கு அடையும்.
நற்பெயர் பண்பாடு
ஏற்படும். வளரும்.
இந்தியர்களின் நவராத்திரி விரதம்

 மனிதனுக்கு ஆற்றல் அவசியம். உடல் நலம், பொருள் நலம், கல்வி நலம்


ஆகியவற்றைப் பெறுவதற்காகச் சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி
கருதப்படுகின்றது. ஒன்பது இரவுகள் விரதம் இருந்து சக்தியின் ஆற்றல் அறிந்து
நன்மை பெறுவர்.இந்துவாகிய நான் முதல் மூன்று நாள்கள் துர்க்கை அம்மனுக்கும்
அடுத்த மூன்று நாள்கள் இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாள்கள் சரஸ்வதிக்கும் விரதம்
இருந்து வழிபடுவேன்.
முஸ்லிம்களின் நோன்புப் பெருநாள்

 நான் ரமடான் மாதம் முதல் நாளிலிருந்து ஒரு மாதம் நோன்பு எடுத்து இப்புனிதப்
பெருநாளைக் கொண்டாடுவேன். இந்நோன்பு எனக்குப் புலன்களை அடக்கும் விதத்தைக்
கற்றுக் கொடுத்ததனால் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் இக்காலக் கட்டத்தில்
அதிகமாக இறைவனின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருப்பேன். நாட்டு மக்கள்
நல்லிணக்கத்தோடு வாழப் பிரார்த்திப்பேன். இவையனைத்தும் என் மனத்திற்கு அமைதியைத்
தருகின்றன.
மரியாதை

மரியாதை என்றால் நாம் மதம், இனம் என்ற பாகுபாடு பார்க்காமல்


ஒருவருக்கு வழங்கும் மதிப்பு ஆகும்.

ஒன்று கூடி நாட்டுக் காகத்


தொண்டு செய்வோமோ! -நாமும்
தொண்டு செய்வோமே!
அன்றே நமது நாட்டின் பெருமை
அதிகமாகுமே! -இன்னும்
அதிகமாகுமே!
அரசுரிமையில் மரியாதை

 மலேசியா 1957- ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அன்று முதல்


மலேசியா அரசுரிமை பெற்ற நாடாகத் திகழ்கின்றது. இதன்
அடிப்படையில் நம் நாட்டிற்குத் தனி அரசியலமைப்பு
வகுக்கப்பட்டது. நமக்கென்று தேசியக் கொடி, தேசிய பண், தேசிய
மலர், தேசிய விலங்கு, தேசிய கோட்பாடும் உண்டு.
குடிமக்களாகிய நம் கடமை என்ன? இவற்றைப் போற்றி, மதித்து
வாழ்வது ஆகும்.

 மலேசியாவின் அரசியலமைப்பில் பல சட்டங்கள் உள்ளன.


இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாட்டில் அமைதியும்
வளப்பமும் ஏற்படுகின்றன. எனவே, நாட்டு மக்கள் மலேசிய
அரசியலமைப்பை மதித்துப் போற்ற வேண்டும்; பின்பற்ற
வேண்டும்.
ருக்குன் நெகாரா கோட்பாடு

 இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.

 பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.

 அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.

 சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்.

 நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.


நெடுஞ்சாலையில் மரியாதை

 நம் நாட்டில் சட்டங்கள் இயற்றுவதற்கு அடிப்படையாக


அமைவது மலேசிய அரசியலமைப்புச் சட்டம் ஆகும். இதன்
அடிப்படையில் நாடாளுமன்றத்தில் சட்டங்கள்
இயற்றப்படுகின்றன. இச்சட்டங்களை அனைவரும் மதிக்க
வேண்டும். நெடுஞ்சாலைகள் தொடர்பான சட்டங்களும்
நாடாளுமன்றத்தில் இயற்றப்படுகின்றன.நாட்டின்
மேம்பாட்டிற்காகவும் மக்கள் நலத்திற்காகவும்
நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும்,ஓட்டுநர்களில் சிலர் நெடுஞ்சாலை
விதிமுறைகளுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை.
நோக்கம் மதிப்பதன் முக்கியத்துவம்

 நாட்டின் ஒவ்வொரு  நாடு சுபிட்சமாக இருக்கும்.


குடிமகனும்  மக்கள் ஒற்றுமையாக இருப்பர்.
தனிமனிதரையும் சமூக
அமைப்பையும் மதித்துப்
போற்றிப் பண்போடு நடக்க  மக்களிடையே சண்டைகள்
வழிக்காட்டுதல் . ஏற்படாது.

உங்களிடமிருந்து மரியாதை
தொடங்குகிறது
மதிக்கும் வழிமுறைகள் இதனால் ஏற்படக்கூடிய
 நம் நாட்டை பற்றி உயர்வாக மனவுணர்வுகள்
கூறுதல்.

 நாட்டு பண் பாடுகையில் நேராக o மகிழ்ச்சி


நிற்றல்.
o மனநிறைவு
 பிற இனத்திரையும் மதத்தையும்
மதித்தல்.
o திருப்தி
 ஒற்றுமை உணர்வோடு வாழுதல்.
தேசியக் கோட்பாட்டைப் போற்றி மதிப்பதால் ஏற்படும்
நன்மைகள்.

 ஒற்றுமை ஓங்கும்

 நாடு சுபிட்சமாக இருக்கும்

 நெறி உள்ள மக்களை உருவாக்கலாம்

 நாடு மேன்மை அடையும்


நீங்கள் எவ்வாறு மரியாதை செலுத்துவீர்கள்?

 தேசிய தினம் கொண்டாடப்படும் போது நான் என் நாட்டுப் பற்றை வெளிப்படுத்துவேன்.

 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டைப் பற்றி வினவும் போது நான் என் நாட்டைப்
பற்றி உயர்வாகக் கூறுவேன்.

 நாட்டுப் பிரதமர் உங்கள் பள்ளிக்கு வருகை தரும் போது நான் அவருக்குப் பணிவுடன்
பூங்கொத்துக் கொடுத்து மரியாதை செலுத்துவேன்.
நாம் பூமியை மதிப்பதால் நம் சிந்தனையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இத்தகைய மாற்றம் ஏற்படும்போது உமக்குத் தோன்றும் மனவுணர்வை
விளக்குக.

 மகிழ்ச்சி.

 மனநிறைவு.

 பெருமை.

 இன்பம்.
நன்றி

You might also like