You are on page 1of 2

ஒழுக்கம்

ஒருவரின் நன்னடத்தையும் நற்பண்பும்தான் ஒழுக்கம் எனப்படுகிறது. ஒழுக்கம் உயிரைவிட மேலானது


என்பது ஆன்றோர் வாக்கு. ஒழுக்கம் யாவரும் விரும்பும் விழுமியமாகும். உயர் மாந்தனுக்கு அழகு
ஒழுக்கமாகும். ஒழுக்கத்தால் மேன்மை கிடைக்கும் என்றும், ஒழுக்கம் தவறுவதால் பழி என்றும் சிறப்பு
வலியுறுத்தப்படுகிறது. நம்மை நல்வழிகளில் நெறிப்படுத்தி, மேன்மையோடு கூடிய வாழ்வில் தழைக்க
செய்யும் பண்பு , ஒழுக்கமாகும். வாழ்வில் , ஒழுங்கு கடைப்பிடித்து வாழ்வதே நாம் தலைசிறந்து வாழ
வழவகுக்கும். ஒழுங்கு என்பது சாட்சிகள் இல்லாத இடத்திலும் தவறிழைக்காமல் நேர்மையாக நடப்பதே
ஆகும்.
ஒழுக்கக் கருத்துகளை எளிய நடையில் நமக்கு எடுத்துரைப்பதற்காக நம் இலக்கியங்களில் பல நூல்கள்
உள்ளன. அவைகளில் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், சிறுபஞ்ச
மூலம் முதலிய நூல்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்திரைப் பதித்தவை. இவற்றில் திருக்குறள்
உலகளவில் தமிழர்களின் ஒழுக்க நெறிகளைப் பறைசாற்றும் ஒப்பில்லா நூலாகப் புகழப்படுகிறது.
அதனால்தான் அதை உலகப் பொதுமறை எனப் போற்றுகிறார்கள். ஒழுக்கம் மனித வாழ்வை நெறிப்படுத்தும்
கூறுகளில் ஒன்று. பெரியோரை மதித்தல், அவர் சொற்படி நடத்தல் ஆகியவை ஒழுக்க நெறிகளின்
முதன்மையானவை. அதுமட்டுமின்றி, பேச்சில், உடையில், செயலில் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து நடக்க
வேண்டும். ஒழுக்கமுடையவர்கள் குமுகாயத்தில் நல்ல பெயருடன் வாழ்கிறார்கள். அதோடு, அவர்கள்
பிறரால் மதிக்கப்படுபவர்க்களாகத் திகழ்கிறார்கள் . அவர்களின் சொல்லையும் கட்டளைகளையும்
தயக்கமின்றி பிறர் ஏற்று நடப்பர்.
மாணவர்களின் ஒழுக்கம் கட்டொழுங்கில் உள்ளது. கட்டொழுங்கைக் கடைப்பிடித்து நடக்கும்
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அவர்கள் உலகம் போற்றும் மாணவர்களாகத் திகழ்வார்கள்.
வாழ்வில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழ்வதே மாணவர்கள் மேன்மையுற்று வாழ வழிவகுக்கும்.
மாணவர்கள் நேர்மையுடனும் சமூகப் பொறுப்பு கொண்டோராகவும் வளர வேண்டும். ஆசிரியர்கள்,
பெரியோர்கள் வழிக்காட்டும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றி, அறிவினால், திறமையினால் சிறந்த
சிந்தனை கொண்டவர்களாகச் செயல்பட வேண்டும். பள்ளிப்பருவத்தில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும்
நடந்து கொள்ளாவிட்டால். வாழ்க்கைப் பாதையில் வழுக்கி விழ நேரிடும். நம்மை வழுக்கி விழாமல் தாங்கிப்
பிடிக்கும் ஊன்றுக்கோல் ஒழுக்கமுடையோர் வாய்சச ் ொல்லும், நம் தமிநீதி நூல்களும்தான். எந்த
நிலையிலும் நமக்குத் தீர்க்கமான வழியை அறம் சார்ந்து போதித்து வழிக்காட்டுகின்றன நீதிநூல்கள்.

மாணவர்கள் தம் பாடங்களில் கற்கும் கருத்துகளைத் தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுதல் கூடாது.
மாணவ பருவத்திலேயே ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், நாட்டுப்பற்றையும் மேலும் வளர்ந்து, எந்தவித
வேற்றுமையும் இன்றி அனைவரையும் மதிக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்ற நெறிப்படி நடக்க
வேண்டும். இதையே வள்ளுவர்,
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக
என்று அழகாகழும் தெளிவாகவும் நமக்கு எடுத்துரைத்திருக்கின்றார். என்வே, மாணவர்கள் திரைப்படம்,
தொலைக்காட்சி போன்ற புறக் கவர்சச ் ிகளில் அடிமையாகி தம் வாழ்வை வீணடிக்காமல் உயிரினும் மேலான
ஒழுக்கத்தையும் அறிவூட்டும் கல்வியையும் சீருடன் கற்று, கற்ற நல்நெறிகளை வாழ்வில் கடைப்பிடித்து
வாழ்ந்தால் சிறக்கலாம்.
ஒழுக்கத்தை வளர்ப்பதில் சமயம் நற்பாங்காற்றுகிறது. சமய நெறிகளைக் கற்று நடப்போரிடம்
இயற்காயாகவே ஒழுக்கப் பண்புகள் உயர்ந்து காணப்படும். விட்டுக்கொடுத்தல், சான்றோரை மதித்தல்,
இறை நம்பிக்கை அவர்களிடையே மேலோங்கி இருக்கும். நல்நெறிகளையும் நமக்கு வலியுறுத்தும்
நோக்குடன் சான்றோர்கள் இயற்றிய பக்தி இலக்கியங்கள் பல செறிய கருத்துகளை அன்பு வழியில் நமக்கு
எடுத்துரைப்பாக உள்ளன. அவைகளில் தேவாரம், திருவாசகம், திருமந்திரம் போன்ற நூல்களில் உள்ள
பாடல்கள் நம்மை நெறியில் வாழ வைத்து இறைவழியே அன்பு வழி என்பதைத் தெளிவுப்படுத்துகிறது. சமயம்
கற்றுத் தரும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்து அறவழியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள
வேண்டும்.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் என்பது குறள் நெறி. விழுப்பம் என்றால் உயர்வு என்று பொருள். ஒழுக்கம்
வாழ்வில் உயர்வைத் தருவதால் ஒழுக்கத்தை உயிரினும் பெரிதாய் மதித்துப் போற்ற வேண்டும். ஒருவர் தம்
வாழ்வில் நன்மை அடைய வேண்டுமென்றால் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்தல் அவசியமானது.
இக்கருத்தைதான் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்கிறார்கள். நல்லொழுக்கத்தோடு கூடிய உயர்வே
நிலைக்கும்; தழைக்கும். ஒழுக்கம் இல்லாமல் வாழ்க்கை மாலுமி இல்லாத கப்பலாகதான் இருக்கும். ஒழுக்க
நெறி வாழ்க்கையில் ஒழுங்கமைப்பை ஏற்படுத்தும். இது கற்றறிந்த மக்களால் உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட
நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதிலிருந்து விளைகிறது. ஒழுக்கம் இல்லாமல், குமுகாயத்தில் மகிழ்ச்சியான
வாழ்க்கையை நடத்துவது மிகவும் கடினம். ஆகவே, தனிநபர் ஒழுக்கம் குமுகாய ஒழுக்கமாக மாறும்.
அதுவே, நாட்டின் ஒழுக்கமாக நிலைபெறும்.
ஒழுக்கமுடன் வாழ்வது ஒவ்வொரு மனிதருக்கும் மேன்மை தரும்; காரணம் ஒழுக்கம் மன அமைதி
தரும். அதோடு, அன்பான வாழ்விற்கு வழிவகுக்கும். எனவே, ஒழுக்கமுடன் வாழ்வதை உயிராகக் கொள்ள
வேண்டும். வாழ்ககை
் ப் பாதையில் கவனத்துடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ளாவிட்டால், வாழ்வில்
வழுக்கி விழ நேறிடும். ஆகவே, நல்வழியில் ஒழுக்கமோடு வாழ்வோம்.

You might also like