You are on page 1of 1

சேமிப்பு

‘தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்’ என்பது பல்லாண்டுக்கு முன்பே நம் முன்னோர்கள்


கூறிச் சென்ற முன்னோர்கள் கூறிச் சென்ற முதுமொழியாகும். இம்முதுமொழிக்குப்
பொருந்தியவாரே அமைகிறது சேமிப்பு. ஆம், நாம் சேமிப்புப் பழக்கத்தைச் சிருவயதிலிருந்தே
பழகிக் கொள்ள வேண்டிய ஒரு பழக்கமாகும். அப்போதுதான் இறுதிவரை நாம் அதை
அமல்படுத்தி நன்மை காண முடியும்.

எனவே, நாம் பணம் சேமிக்க நிறைய வழிகளுண்டு. சிற்றழிவு உடைய உயிர்களாகிய


எறும்பு மற்றும் தேனீக்கள் நமக்கு சேமிக்கும் பழக்கத்தை உணர்த்துகின்றன. நம் சேமிப்பிற்கு
அதிக வட்டியும் பணத்திற்குப் பாதுகாப்பும் தடுகின்ற வங்கியில் சேமிக்கலாம். மாணவர்கள் கூட
பள்ளியில் உல்ள சஞ்சாயிகா திட்டத்தில் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமிக்கலாம் . ஆகையால்,
பணம் சேமிக்க இவ்வழிகளைப் பின்பற்றி வாழ்க்கையில் பயன் பெறுவோம்.

முதலாவதாக, நாம் சேமிக்கும் பணம் நமக்கு ஆபத்து அவசர நேரங்களில் உதவுகின்றது.


உதாரணத்திற்கு, நம்முடைய உற்றார் உறவினர்களோஆபத்தில் அல்லது நோய்வாய்ப்பட்டு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நாம் நம்முடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டு
அவர்களுக்கு உதவலாம். இதனால், நம்மால் ஓர் உயிரைக் காப்பாற்ற இயலும்.

அடுத்ததாக, நாம் சேமிக்கும் பணம் தமக்கு மேற்கல்வி பயிலௌதவுகிறது என்றால் அது


ஆணித்தரமான ஓர் உண்மையாகும். அதாவது, நாம் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும்
பொழுது, நாம் நம் சேமிப்புப் பணத்தினைக் கொண்டு நமக்கு தேவையான புத்தகங்களை
வாங்கிக் கொள்ளாம். இதனால், நாம் நம்முடைய பெற்ரோர்களின் உதவியை எதிர்ப்பார்க்கத்
தேவையில்லாததோடு அவர்களின் சுமைகளையும் சுமைகளையும் குறைக்கலாம்.

இதனை அடுத்து, ‘சிறு துளி பெரு வெள்ளம்’ எனும் பொன்மொழிக்கு ஏற்ப நாம் சிறுக
சிறுக சேமிக்கும் பணமானது நமக்கு சுய காலில் நிற்க உதவுகிறது. உதாரணத்திற்கு போதிய
வருமானம் இல்லாதோர் தன்னுடைய சேமிப்புப் பணத்தைக் கொண்டு பழ வியாபாரம். காய்கறி
வியாபாரம் அல்லது கைவினைப் பொருள் போன்ற சிறு தொழிலை ஆரம்பிக்கலாம். இதனாள்,
அவர்கள் கடன் தொல்லையிலிருந்து மீளலாம்.

தொடர்ந்து, ஒருவரின் சேமிப்புப் பணம் அவரின் அடுத்த தலைமுறையைச் சிறப்புற


வைத்துக் கொள்ள உதவுகிறது. உதாரணத்திற்கு, தற்போதியக் காலக்கட்டத்தில் கொரோனா
எனும் நோய் அனைத்து நாடுகளிலும் கோரத்தாண்டவமாடுகிறது எனும் தகவல்
அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்நோயினால் பலர் உயிர் இழந்ததோடு சிலர் சிகிச்சைப்
பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெருபவர்களைக் காப்பாற்ற சில நாடுகளில் பணப்
பற்றாக்குறையால் அந்நாடு, அந்நாட்டில் தங்கள் சேமித்தப் பனத்தினை வங்கியிலிருந்து
எடுத்துப் பயன்படுத்துகின்றனர். ஆகையால், சேமிப்புப் பணம் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்
உதவுகிறது என்றால் அதில் ஒரு துளியும் ஐயமில்லை.

You might also like