You are on page 1of 8

அறநெறிச்சார

ம்(72)
(படிவம் 3)
(பொருளும் விளக்கமும் )
அறநெறிச்சாரம் ஒரு கண்ணோட்டம்
• அறநெறிச்சாரம் எனும் நூலை இயற்றியவர் முனைப்பாடியார். இவர் வாழ்ந்த காலம்
13-ஆம் நூற்றாண்டு என வரலாறு குறிப்பிடுகிறது. இவர் தொண்டை மண்டலம்
திருமுனைப்பாடி எனும் நாட்டின் தலைநகரமான முனைப்பாடியில் வாழ்ந்தவர்.
அருகக் கடவுளை வணங்கிய இவர் ஒரு சமண மதத்தைச் சார்ந்த துறவியாவார்.
அறநெறிச்சாரம் ஒரு தமிழ் நீதி நூல். அறத்தின் வழியைப் பிழிந்து சாரமாகத்
தருவதால் இந்நூல் இப்பெயர்ப் பெற்றது. இதில் 226 வெண்பாக்கள் அடங்கியுள்ளது.
இந்நூல் அருங்கலக்செப்பு என்னும் நூலைத்தழுவி எழுதப்பெற்றது என்றும், நல்லறம்,
நல்லொழுக்கம், நல்ஞானம், வீடுபேறு போன்ற அறநெறிகளைத் தெளிவாக
சொல்வதாகவும் உரையாசிரியர் பலர் விளக்கமளிக்கின்றனர்.
எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பிற் பிறிதில்லை - அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்

பதவுரை
எப்பிறப்பாயினும் - வேறு எந்தப் பிறப்பானாலும்,

மக்கட்பிறப்பின் - மக்கட் பிறப்பினைப் போல,

ஒருவற்கு ஏமாப்பு பிறிது இல்லை - ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை,

அப்பிறப்பில் - அம் மக்கட் பிறப்பில், கற்றலும் - கற்றற்குரியவற்றைக் கற்றலும்,

கற்றவை கேட்டலும் - கற்றவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிதலும்,

கேட்டதன்கண் நிற்றலும் - கேட்ட அந்நெறியில் நிற்றலும், கூடப்பெறின் - கூடப் பெற்றால்.


பொருளும் விளக்கமும்
• மனிதப் பிறப்பில் கற்க வேண்டியதைக் கற்க வேண்டும். கற்றறிந்த
அறிஞர்களின் அரிய கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட
கருத்துகளின்படி வாழ்க்கையில் நடக்கவும் வேண்டும். இவ்வாறு செய்வதன்
வழி உலகிலுள்ள மற்ற எந்தப் பிறப்புகளையும்விட மனிதப் பிறப்புச்
சிறப்பானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்.
கொடுக்கப்பட்டுள்ள பயிற்சிகளைச் செய்க.

பொருள் எழுதுக.
எப்பிறப்பாயினும்= _______________________
ஏமாப்பொருவற்கு = _______________________
கற்றலும்
= _______________________
கற்றவை
= _______________________
கேட்டதன்கண்
= _______________________
பிறிதில்லை
= _______________________
.
கொடுக்கப்பட்டுள்ள செய்யுளடிகளை நிரல்படுத்துக

கற்றலும் கற்றவை கேட்டலும்


நிற்றலும் கூடப் பெறின்
கேட்டதன்கண்

எப்பிறப் பாயினும் ஏமாப் மக்கட் பிறப்பில்


பொருவற்கு
பிறிதில்லை – அப்பிறப்பில்

• ___________________________________________________________
___________________________________________________________
___________________________________________________________
___________________________________________________________
___
பயிற்சி க்கும் முயற்சி க்கும்.......
1. ‘மனிதன் கற்க வேண்டியவை’ என்ற கூற்றின்படி நாம் அறிந்து கொள்வது யாது?
2. கல்வி நம் வளமான வாழ்க்கைக்கு எவ்வாறு உதவும் என நீ நினைக்கிறாய்?
3. இவ்வுலகில் ஏன் மக்கட் பிறப்பு உயர்ந்ததாகக் கருதப்படுகிறது? விளக்குக.
4. தமிழ் இலக்கியங்களில் உள்ள நீதி நூல்கள் மக்களுக்கு எவ்வாறு துணை
நிற்கின்றன?
5. திருவள்ளுவர் இயற்றிய குறள்களில் கல்வியின் மேன்மையை எடுத்துரைக்கும்
ஒரு குறளை எழுதுக.
•நன்றி

You might also like