You are on page 1of 2

மாதிரி வாக்கியங்கள்

1. திரு. மாறன் பூச்சாடி தட்டில் தேங்கி இருந்த தண்ணீரைக் கீழே


ஊற்றுகிறார்.

2. திரு. செழியன் செடி வெட்டும் கத்தரியால் அழகுச் செடியை


நேர்த்தியாகவும் முறையாகவும் கத்தரிக்கிறார்.

3. திரு.குமரன் புல் வெட்டும் இயந்திரத்தால் புற்களை முறையாகவும்


பாதுகாப்பாகவும் வெட்டுகிறார்.

4. கயல்விழி தோண்டிய குழியில் பூச்செடியை கவனமாக நடுகிறாள்.

5. திருமதி மாலதி எல்லோருக்கும் பாத்திரங்களில் உணவை


முறையாகவும் சுத்தமாகவும் பறிமாறுகிறார்.

6. திரு. வேந்தன் மண்வெட்டியால் ஆழமான குழியைத் தோண்டுகிறார்.

7. திரு.முகுந்தன் குப்பைகளையும் காய்ந்த இலைகளையும் எரிகின்ற


நெருப்பில் போடுகிறார்.

8. திருமதி குழலி காய்ந்த இலைகளைத் துடைப்பத்தால் நேர்த்தியாகக்


கூட்டுகிறாள்.
(கொடுக்கப்படும் வாக்கியங்கள் மாதிரிகளே. வாக்கியத்தில் மெருகூட்டும்
சொற்கள் இருப்பதை கவனத்தில் கொள்ளவும்)
வாக்கியம் அமை.

1. திருமதி மங்கை தன் ஆசைக் குழந்தைக்குப் பாசத்துடன் உணவு


ஊட்டுகிறார்.
2. திரு.வளவன் பொது தகவலைத் தெரிந்து கொள்ள ஓய்வு நாற்காலியில்
அமர்ந்தவாறு நாளிதழை மும்முரமாக வாசிக்கிறார்.
3. பேகன் தன் காலால் பந்தை உற்சாகமாக உதைக்கிறான்.
4. சேரன் தான் விரும்பிய அழகிய மணல் வீட்டைச் சந்தோசமாகக்
கட்டுகிறான்.
5. குகன் சுவை மிகுந்த பனிக்கூழை வாங்குவதற்கு வியாபாரியிடம்
பணத்தைக் கொடுக்கிறான்.

You might also like