You are on page 1of 25

வாழ்க்கையே ஒரு

திருவிழா…
- த. கோவேந்தன்
வாழ்க்கை யேஒரு திருவிழா
வந்துள் ளோம்கொண் டாடவே
ஆழ்ந்துள் ளோம் அன் பிணைப்பினில்
அனைத்தியி ரிலும்நாம் வாழுவோம்
மனித வாழ்க்கையே திருவிழா போன்றது . அதை
மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காகவே நாம்
பிறந்துள்ளோம் . இந்த வாழ்க்கையில் நாம்
ஆழ்ந்த அன்பின் பிணைப்பில் திளைத்தோமானால்
அனைத்து உயிர்களுக்குள்ளும் நாம் வாழ
முடியும்

கன்னி 1 ( விளக்கம் )
காலை எழுந்ததும் உன் அன்பினில் ,
காரணம் இலாதம்கிழ்ச்சியில்
சாலையில் நீர்தெ ளிக்கையில்
தழுவும் ந்ம்மனம் களிப்பினில்
நாம் அன்பான வாழ்க்கையில் ஒவ்வொரு
காலைப்பொழுதையும் மிக மகிழ்ச்சியோடு
தொடங்கவேண்டும் . அக்காலை வேளையில் கோலம்
போடுவதற்க்காக எல்லோர் முன் நீர் தெளிக்கும்
போது நம் மனம் மகிழ்ச்சியில் திளைக்கின்றது .

கன்னி 2 ( விளக்கம் )
நம்மைச் சுற்றிலும் அழகொளி
ஞாயிறு ஒண்கதிர் நேருறச்
செம்மை அன்பையே பொழிந்திடும்
சேர்ந்து வந்திடும் ஊரெலாம்
ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் தவறாமல் ஒளிக்கின்ற சூரியன் நம்மைச்
சுற்றிலும் அழகான ஒளியைப் பரப்புகிறது .
இச்செயலானது சூரியன் உலக உயிர்களின் மீது கொண்ட ஆழமான அன்பைக்
காட்டிகிறது

கன்னி 3 ( விளக்கம் )
வியப்புற மக்கள் இயக்கமும்
வேறு வேறொலிப் புட்களின்
தயக்கம் ஒன்றிலாப் பல்லிசை
தழுவச் செய்திடும் வாழியே
மனித வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளும்
பறவைகள் சுதந்திரமாக எழுப்பும் பல்வேறு
ஓசைகளும் நம்மை வியக்க வைக்கின்றன .
இவவோசைகள் இசையாய் நம் வாழ்க்கையை மணக்கச்
செய்வதால் இவ்வாழ்க்கையை வாழ்த்துவோம்

கன்னி 4 ( விளக்கம் )
நாள்பொழு தெலாம்உன் அன்பொலி
நல்வழிக்கு என்னை அழைத்திடும்
நாள்பொழு தெலாஉன் அன்புளம்
நம்பிக் கையின்மகிழ் வூட்டிடும்
ஒவ்வொரு நாளும் கேட்கின்ற இனிமையான
அன்புமொழி , நம்மை நல்ல வழிக்கு இட்டுச்
செல்கிறது . அந்த அன்பே நமக்கு நம்பிக்கை
ஊட்டி மகிழ்விக்கிறது .

கன்னி 5 ( விளக்கம் )
நாள்பொழு தெலாம்அன் புறவுதான்
நலமும் வலுவும் தந்திடும்
நாள்பொழு தெலாவுன் அன்புயிர்
கணந்தொறும் வாழ உதவுமே
நாள் முழுவதும் கிடைக்கின்ற அன்பான உறவுதான்
நமக்கு நலத்தையும் வலுவையும் கொடுக்கின்றது .
இப்படிக் கிடைக்கின்ற இந்த அன்புதான் நாம்
ஒவ்வொரு நொடியும் என்றும் மகிழ்வோடு
வாழ்வதற்குத் துணைபுரிகிறது

கன்னி 6 ( விளக்கம் )
பாடுப்பொருள் : வாழ்க்கை

மைக்கரு : அன்பு
நயங்கள்…
1. ஒசைநயம்

எதுகை

வாழ்க்கை – ஆழ்ந்துள்
காலை – சாலையில்
நம்மைச் – செம்மை
வியப்புற - தயக்கம்

மோனை

வாழ்க்கை- வந்துள்
ஆழ்ந்துள் – அனைத்துயி
காலை – காரணம்
செம்மை-சேர்ந்து
1. ஒசைநயம்

சந்தம்

நலமும் – வலுவும்

இயைபு

அன்பினில் – களிப்பினில்
அழைத்திடும் – வூட்டிடும்
2. அணிநயம்

உருவக அணி

வாழ்க்கையே ஒரு திருவழா –


வாழ்க்கை ஒரு திருவிழாவாக
உருவகம் செய்யப்படுகிறது

திரிபு அணி

நம்மை – செம்மை
2. அணிநயம்

பின்வரும்நி
லை அணி

நாள்பொழுதெல்லாம்
நாள்பொழுதெல்லாம்

தன்மை
நவிற்சி அணி

நாள்பொழு தெலாம்அன் புறவுதான்


நலமும் வலுவும் தந்திடும்
நாள்பொழு தெலாவுன் அன்புயிர்
கணந்தொறும் வாழ உதவுமே
3.. பொருள்நயம்

தெரிப்பொரு
ள்

மக்களின் நல்வாழ்வுக்கு அன்புதான் அடிப்படை . மனிதர்களை


ஒன்றுப்படுத்தும் ஆற்றல்மிக்கது அன்பு . நமக்கிடையே
வேறுபாடுகளை மறந்து நாம் ஒருவருக்கொருவர் அன்பு
செலுத்தினால் மகிழ்ச்சியாக வாழலாம்

புதைப்பொரு
ள்

வாழ்க்கையில் காணும் யாவற்றையும் ரசித்து


மகிழ்வுடன் வாழ்வதே சிறப்பு எனும் கருத்தை
இக்கவிதையின்வழி நயமாகக் கவிஞர்
உரைக்கின்றார்
3.. சொல்நயம்

கவிஞரின் சொல்லாட்சித் திறத்தை இக்கவிதையில் காண


முடிகிறது. திருவிழா என்றாலே மகிழ்ச்சி , கொண்டாட்டம் ,
குதுகலம்தான் நிறைதிருக்கும் . நம் வாழ்க்கையை அதுபோல
துன்பமில்லாமல் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்
என்பதால் “ வாழ்க்கையே ஒரு திருவிழா “ என்கிறார் .
படிப்பினைக
ள்
1. அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செழுத்தினால் நாமும்
மகிழ்ச்சியாக வாழலாம் .
2. மனிதர்கள் மொழி, சமயம் , பண்பாடு என வேறுப்பட்டாலும்
அதை நாம் ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த வேண்டும்
3. உலகில் மகிழ்ச்சியாக வாழும் முயற்சிகளில்
முனைப்புக் காட்ட வேண்டும்
4. அன்பின்வழி மக்களை இணைக்க முடியும்
தாக்கங்கள்
1. நாம் மகிழ்ச்சியாக வாழ்வே இந்தப் பூமியில் பிறந்துள்ளோம் . ( கருத்து )
வாழ்வில் வரும் துன்பங்கள் நிரந்தரமில்லை என்பதை
அறிகிறேன் . ( உணர்வு )
மகிழ்ச்சியாக வாழ்வதற்காக வழிகளில் நான்
ஈடுப்படுவேன் .( தீர்வு )

2. உலகில் வாழும் எல்லா உயிர்கள் மீதும் அன்பு


செலுத்தி வாழ்வோம் . ( கருத்து )
எல்லா உயிரிங்களும் நான் சமமாகப் பார்க்கும்
மனப் போக்கைக் கொள்வேன் . ( உணர்வு )
பாகுபாடு காட்டாமல் எல்லா உயிகளையும் நான்
நேசிப்பேன் .( தீர்வு )

3. மனிதர்கள் பலவகையில் வேறுப்பட்டாலும் அதை


நாம் ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த வேண்டும் .
( கருத்து )
வேற்று இன மனிதர்கள் மீது வேறுப்பாடு
பார்க்காமல் அன்பு செலுத்திவேன் . ( உணர்வு )
இயன்றவரை மற்றவரிடம் கடுஞ்சொல் தவிர்த்துக்
கனிவாகப் பேசுவேன் .( தீர்வு )

You might also like