You are on page 1of 5

அனைவருக்கும் வணக்கம்.

நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர்


பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர்.
இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும்
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக்
கொண்டிருக்கிறார்.

முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும்


அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத
பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார். நாத்திகராக வளர்ந்து ஆத்திகராக மறைந்த
கவியரசர் இலக்கியம், அரசியல், ஆன்மீ கம், திரைப்படம் என்று எல்லாத் துறைகளிலும்
முத்திரை பதித்தவர்.

தத்துவம் என்பதை ஆங்கிலத்தில் philosophy என்பர். தத்துவம் என்பதற்கு உண்மையை


அறிதல் என்றும், வாழ்க்கையில் மனிதனுக்கு ஏற்படுகின்ற ஆழ்ந்த சிந்தனையின்
விரிவாக்கம் என்றும் பொருள் கூறுவர். வேதாந்தம், சிந்தாந்தம், தத்துவம் இம்மூன்றும்
ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாகத்

தோன்றினாலும் அடிப்படையில் இவை வெவ்வேறானவை.

ஆண்டவன் எங்கே இருக்கிறான். நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள்


பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை
நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக
விடையளிக்கிறார் நம் கவியரசர்.

ஆசை, கோபம், களவு கொள்பவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு, நன்றி, கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம் – இதில்

மிருகம் என்பது கள்ள மனம் – உயர்

தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த


ஆறு கட்டளை அறிந்த மனது

ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்..

ஆசை, கோபம், களவு என்ற விலக்க வேண்டிய மூன்று கட்டளைகளையும் அன்பு,


நன்றி மற்றும் கருணை என்ற கொள்ள வேண்டிய மூன்று கட்டளைகளையும்
அறிந்து அவற்றைப் பின்பற்றும் மனங்களே ஆண்டவன் குடியிருக்கும்
இல்லங்களென்கிறார் கவியரசு.

அதுமற்றுமின்றி மனித வாழ்வு எவ்வளவு நிலையற்றது, அந்த நிலையற்ற வாழ்வை


முழுவதும் உணர்ந்து கொள்ளாமல் ஒருவன் வாழும் குறுகிய காலத்தில் எவ்வளவு
பாவச் செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகாத
செயல்களைப் புரிகிறான்? எவ்வளவு அழகாக் கேட்கிறார் பாருங்கள்…

ஆடிய ஆட்டம் என்ன?

பேசிய வார்த்தை என்ன?

தேடிய செல்வம் என்ன?

திரண்டதோர் சுற்றம் என்ன?

கூடுவிட்டு ஆவி போனால்

கூடவே வருவது என்ன?

வாழ்க்கைத்தத்துவங்களைச் சொன்ன அதே கவிஞர் வாழ்க்கைச் சக்கரத்தின்


அச்சாணியாக விளங்கும் காதலின் மகத்துவத்துவத்தைச் சொல்வதையும்

பார்ப்போம். பொதுவாகக் காதலர்கள் காதல் வயப்பட்டுக் கூறுபவை, உன் மனம்


நானறிவேன் என் மனம் நிறைந்தவளே போன்ற வாக்கியங்கள். கவிஞர் ஒரு படி
மேலே சென்று, பண்பட்ட காதலர்கள் வழியாகச் சொல்வதைப் பாருங்கள்.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்

நீ காணும் உலகங்கள் நானாக வேண்டும்


ஒருவர் மற்றவர் உயிரோடு கலந்து விடும் உன்னத உறவை விளக்கிடும் வரிகள்
இவை. காதலர்களுக்கென பத்துக் கட்டளைகள் வரைந்தால் முதலாவதாக இருக்க
வேண்டிய கட்டளை மேலே கூறப்பட்ட வரிகள்.

நிலையாமை என்னும் தத்துவம் இந்து மதத்தில் நிலைத்த ஒன்று. இளமை


நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என இம்மூன்றும்
வாழ்வில் நிலையில்லாதனவாகும். இத்தத்துவத்தை ஆடி அடங்கும் வாழ்க்கையடா,
ஆறடி நிலமே சொந்தமடா என்று நீர்க்குமிழி திரைப்படப் பாடலில் நன்கு
உணர்த்தியுள்ளார். அதுவும் இப்பாடல் கோவட்-19
ீ நோயால் சிக்கி இப்பாடல்
வரிகளுக்கிணங்க போராடும் மனித சமூகம் இந்த உண்மையை உணர வேண்டும்.
இந்த உண்மையை உணர்ந்தால்தான் ஒன்றின்இழப்புக்கும், ஒருவரின் இழப்புக்கும்
வருந்தும் மனப்பான்மை குறையும். இதுவே, உலக நியதி என்ற தெளிவு பிறக்கும்.
இத்தகைய தெளிவினை கண்ணதாசனின் தத்துவப்பாடல்கள் உணர்த்துகின்றன.

மேலும், பாலும் பழமும் திரைப்படத்தில் போனால் போகட்டும் போடா–இந்த பூமியில்


நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்ற பாடலில் பாமர மக்களும் புரிந்துக்
கொள்ளும்படி நிலையாமைத் தத்துவத்தை விளக்கியுள்ளார். கவிஞர்.

மனித உடல் நிலையில்லாதது என்றும், அது எந்த நேரத்திலும் அழியக்கூடியது


என்றும் கூறுவர். இதைத்தான் இந்து மதமும், சித்தர் பாடல்களும்
வலியுறுத்துகின்றன. பட்டினத்தாரின்,விட்டு விடப் போகுதுயிர் விட்ட வுடனே உடலை
சுட்டு விடப் போகின்றார் சுற்றத்தார் என்ற பாடல்கள் பரவலாக பலரால்
அறியப்படவில்லை. ஆயினும் அச்செய்தியை,

விட்டு விடு ஆவி பட்டு விடும் மேனி

சுட்டு விடும் நெருப்பு

சூனியத்தின் நிலைப்பு

என்ற கண்ணதாசனின் வரிகள் திரைப்பட பாடலாக அறியப்பட்டு பாமரனாலும்


பேசப்படுகிறது. இவ்வுலகில் புகழோடும், செல்வாக்கோடும், ஆணவத்தோடும்
வாழ்ந்தாலும் இறுதியில் ஒரு பிடி சாம்பல் என்ற தத்துவத்தை காயமே இது
பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.
மனிதன் உயிருடன் இருக்கும்போது மனைவி, மக்கள் என்று சொல்லி மகிழ்ச்சியாக
வாழ்கிறான். ஆனால், உடலை விட்டு உயிர்

பிரியும் போது உயிருக்கு உயிராக இருந்தவர்கள் உடன் செல்லமாட்டார்கள் என்ற


நிலையை,

வடுவரை
ீ உறவு வதி
ீ வரை மனைவி

காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ

ஆடும் வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம்

கூட வரும் கூட்டம் கொள்ளை வரை வருமா?

தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்கு கன்னி

பட்டினிக்கு தீனி கெட்ட பின்பு ஞானி

என்ற பாடல் மூலம் யாக்கை நிலையாமைப் பற்றி நன்கு விளக்கியுள்ளார்.

செல்வம் நிலையாமை பற்றி குறிப்பிடும் போது, வாழ்க்கையில் வசதி


படைத்தவர்களுக்கு அவர் வைத்திருக்கும் செல்வம்தான் உறவாகும். செல்வம்

இல்லாதவர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் மட்டுமே சொந்தம் என்கிறார்.


இதனை,

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்

இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்

என்ற பாடல் வரிகளில் கண்ணதாசன் கூறியுள்ளார். பணம் வைத்திருப்பவர் தன்


கையிலிருக்கும் பணத்தைக் கொண்டு மகிழ்வுடன் வாழ்வர். அதே சமயத்தில்
பிறருடைய துன்பத்தையோ, ஏழைகளின் வறுமையையோ துளியளவும்
எண்ணுவதில்லை. அவனுக்குத் தன்னுடைய செல்வம்தான் சொந்தமென்றும், அதுவே
உலகமென்றும் நினைக்கிறான். பணம் என்னடா பணம்;: குணம்தான் இந்த உலகத்தில்
நிரந்தரமாக இருப்பது. நாம் இவ்வுலகை விட்டு பிரியும் போது பணம் நம்முடன்
வருவதில்லை.

கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான


சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி
வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில்
தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் எனும்
படத்திற்காகக் கவிஞர் எழுதிய நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் எனும் பாடலில்
இடம்பெறும்,

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது

என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை.

கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு


மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில்.
அவர் எழுதிய வரிகளே அவரது வாழ்விற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ன.
கவிஞரின் இதுபோன்ற எத்தனையோ பாடல்களும் கவித்துவமான கவிதைகளும்
ஆண்டுகள் பல ஆனாலும் அனைவருடைய மனதையும் விட்டு அகலாது.
என்றென்றும் அவை மக்களின் மனதில் நிலைத்திருக்கும் என்று கூறி
விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்

You might also like