You are on page 1of 29

BACHELOR OF TEACHING (PRIMARY EDUCATION)WITH HONOURS

(BTPSE)

SEMESTER MEI 2020

HBTL 3403

(KESUSATERAAN TAMIL III)

NO. MATRIKULASI : 810914105680001

NO. KAD PENGENALAN : 810914105680

NO. TELEFON : 0166969095

E-MEL : allykumaran@yahoo.com

PUSAT PEMBELAJARAN : SRI RAMPAI LEARNING CENTRE


எண் தலைப்பு பக்கம்

1 அகத்திணைப் பாடல்களுக்கென 3 - 5
தனிச் சிறப்புகள்,கூறுகள்
உள்ளன.
அகத்திணைப் பாடல்கள்வழி நீர்
2 6 - 12
தெரிந்து கொண்ட அன்றைய
வாழ்வியல் கூறுகள்

3. சிலப்பதிகாரம் தமிழின் முதற் 13 - 16


காப்பியம் என்பதைத் தவிர்த்து
மற்ற காப்பியங்களிலிருந்து
தனித்து நிற்கப் பல காரணங்கள்
உள்ளன.

சிலப்பதிகாத்தில் கூறப்பெறும்
4. 17 - 20
முற்பிறப்புச் செய்தியின்
முக்கியத்துவம்

5 §Áü§¸¡û áø¸û 21

1. அ) அகம் என்ற சொல்லின் பொருள் உள்ளே-உள்ளிருப்பது-


அகத்துள் இருப்பது என விரியும்.தலைவனும் தலைவியும் தம்
உள்ளத்துள் உணர்ந்து அனுபவிக்கும் இன்பம்
இத்தன்மையுடையது எனப் பிறர்க்கும் விளக்க இயலாததாக
இருப்பது.தம்முள்ளும் ஒருவர்க்கொருவர் விளக்க இயலாததாக
இருப்பது.ஆகவே காதல் ஒழுக்கத்தை “அகம்” என்றது மிகவும்
பொருத்தமாகும். ‘அகம்’ என்பதை ‘ஆகுபெயர்’ என்றார்
நச்சினார்க்கினியர்.அகம் என்பது அகத்தே (உள்ளத்தே) நிகழும்
இன்பத்திற்கு ஆகி வந்தது அவர் கருத்து.காதலுக்கு உள்ளமே
முதன்மை;உள்ளத்து ‘அவாவே’(ஆசை) தூண்டுதலாகக் ‘காதல்’
வெளிப்படும்;உடல் கருவியேனும் உள்ளமே காரணம்,காதலில்
மொழியும் செயலும் உள்ளத்தின் வழிச்செல்லும்;உள்ளத்துள்
நினைக்கும் நினைவும் காதல் நுகர்ச்சிக்குச் சமம்.இவையாவும்
காதலை-அன்புணர்ச்சியை ‘அகம்’ என்று வழங்கும்
சொல்லாட்சியின் பொருத்தத்தைப் புலப்படுத்துவன.தலை
மக்கள் தத்தம் உள்ளத்து உள்ளேயே எண்ணி மகிழும்
ஏற்றத்தைக் குறிப்பது அகம்.பின்னர்த் தோன்றிய தொன்னூல்
விளக்கம் என்னும் நூலும், ‘அகத்திணை என்பது மனத்தின்
ஒழுக்கம்’ என்று வரையறுப்பது குறிப்பிடத்தக்கது.அகப்பொருள்
பற்றிய இலக்கண நெறி தமிழுக்கே உரியது;இது உலகறிய
வேண்டிய பேருண்மை! இதற்கான சான்றுகள் பல உள்ளன.
 குறிஞ்சிப்பாட்டுப்பாட்டு
சங்க இலக்கியங்களில் ஒன்றான குறிஞ்சிப் பாட்டு
களவொழுக்கத்தைப் பற்றியது.அது ஆரிய அரசன்
பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குப் பாடப் பெற்றது
என்பர்.தமிழ் அறிவித்தல்’ என்பதற்குத் தமிழின் அகப்பொருள்
சிறப்பை எடுத்துரைப்பது என்பது பொருள்.ஆரிய மன்னன்
இச்சிறப்பை அறியாதிருந்தான் என்பதிலிருந்து அகப்பொருள்
இலக்கண மரபு தமிழுக்கேயுரிய தனிச்சிறப்பு என்பது
புலப்படுகிறதல்லவா?
 பரிபாடல்
பரிபாடலில் குன்றம்பூதனார் பாடிய ஒன்பதாம் பாடல்
களவொழுக்கம் பற்றியது.அதனுள் ‘தள்ளாப் பொருளியல்பின்
தண்டமிழ்’ என்ற தொடர் வருகிறது.அது பொருள் இலக்கணம்
தமிழின் தனிச்சிறப்பு என்பதைக் காட்டுகின்றது.
 இறையனார் அகப்பொருள்
இறையனார் அகப்பொருள் உரையில் வரும், ‘இந்நூல் என்
நுதலிற்றோ எனின்,தமிழ் நுதலிற்று(இந்த நூல் என்ன
சொல்லுகிறது என்றால் தமிழ் சொல்கிறது)என்ற பகுதி அகமே
தமிழ் என்பதைச் சுட்டி நிற்கிறது.
 தமிழ்நெறி விளக்கம்
அகப்பொருள் இலக்கணத்தைப் பற்றிக் கூறும் பழந்தமிழ்
இலக்கண நூல் ஒன்றுக்குத் ‘தமிழ்நெறி விளக்கம்’ என்றே
பெயர் அமைந்திருப்பதும் இங்கு எண்ணத்தக்கது.
 கலைக் களஞ்சியம்
கலைக் களஞ்சியத்தில் பேராசிரியர் மு.அருணாசலம்,
‘இக்காதல் ஒழுக்கத்தை இலக்கண நெறியால் வரையறுத்துக்
கூறுதல் தமிழர்க்கே உரிய தனிப் பெருஞ் சிறப்பாகும்’
(தொகுதி-1)என்று வரைந்துள்ள விளக்கமும்
குறிப்பிடத்தக்கது.மேற்காட்டியவற்றுள் ‘தமிழ்’ என்ற சொல்
தமிழ் அக இலக்கியம் ,அக இலக்கணம்,தமிழர் அகவாழ்வு
நெறி என அனைத்துப் பொருளும் தருவதை உணரலாம்.
 தமிழுக்கே உரியது
அகப்பொருட் பாடல்கள் வடமொழி உள்ளிட்ட வேறு பல
மொழிகளிலும் உண்டு.எனினும் அகப்பொருள் பாடல்களின்
அமைப்புக்கு வழிகாட்டும் இலக்கணப் பாகுபாடுகள் தமிழில்
மட்டுமே உண்டென்பது உணர்தற்குரியது.தமிழ் ஆராய்ச்சியின்
வளர்ச்சி என்ற நூலின் ஆசிரியர் ஏ.வி சுப்பிரமணிய அய்யர்
குறிப்பிடும் கீ ழ்க்காணும் செய்திகள் ஒப்பிட்டு உணரத்தக்கன.
“வடமொழியில் சில பாடல்களையும்,பாடல்களையும்,பாடல்
தொகுதிகளையும் ஊன்றிக் கவனித்தால்,அவற்றில் தமிழ்
அகப்பொருள் இலக்கணத்தின் இயல்புகள் காணப்படுகின்றன.
‘வடமொழி இலக்கண நூல்களில்,பொருள் இலக்கணத்தைப்
போல் ஒரு பகுதி இருப்பதாகத் தெரியவில்லை.’
இவ்வாறே-‘தொல்காப்பிய முதல் ‘சூத்திர விருத்தி’ என்ற உரை
வரைந்த சிவஞான முனிவர் வடமொழியில் இருந்து
பெறப்படாமல் தமிழில் மட்டுமே உள்ளதாகப் பல இலக்கணக்
கூறுகளைப் பட்டியலிட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.அவற்றுள்
ஓன்று ‘அகம்-புறம் என்ற பொருட்பாகுபாடு’ என்பதாகும்.

பூவின் மணமெனப் புனிதத் தமிழினுக்கு


ஆவி ஆகும் அகப்பொருள் இயல்பே
மலருக்கு நறுமணம் இன்றியமையாதது;அதுபோலத் தூய
தமிழுக்கு அகப்பொருள் இலக்கணம் இன்றியமையாதது
என்பது பொருள்.இது அறுவகை இலக்கணம் எனும் நூலை
இயற்றிய வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அறுதியிட்டு
உரைக்கும் பேருண்மை.

திணை முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்


குறிஞ்சி நிலம் பறவை -கிளி,மயில் புணர்தலும்
-மலையும் மலையைச் விலங்கு- புணர்ச்சி
சார்ந்த புலி,கரடி,யானை நிமித்தமும்
இடமும் தாவரம்-
காலம் மூங்கில்,வேங்கை
-கூதிர்காலம்,யாமம் மலர்
-வேங்கை,குறிஞ்சி
தெய்வம்-முருகன்
முல் நிலம் பறவை- இருத்தலும்
லை -காடும் காட்டைச் மயில்,கானக்கோழி இருத்தல்
சார்ந்த இடமும் விலங்கு- நிமித்தமும்
காலம் முயல்,மான்
கார்காலம்;மாலை தாவரம்-
கொன்றை,காயா
மலர்-
முல்லை,தோன்றி
தெய்வம்-திருமால்

மருதம் நிலம் பறவை- ஊடலும் ஊடல்


-வயலும் வயலச் நாரை,அன்னம் நிமித்தமும்
சார்ந்த இடமும் விலங்கு-எருமை
காலம் தாவரம்-
-முதுவேனில்காலை கொன்றை,காயா
மலர்-
தாமரை,குவளை
தெய்வம்-இந்திரன்
நெய்தல் நிலம் பறவை-அன்னம் இரங்கலும்
-கடலும் கடலைச் விலங்கு- இரங்கல்
சார்ந்தஇடமும் சுறா,முதலை நிமித்தமும்
காலம் தாவரம்-புன்னை
-முதுவேனில்:காலை மலர்-
தாழை,புன்னை
தெய்வம்-வருணன்
பாலை நிலம் பறவை- பிரிதலும்
-குறிஞ்சியும் கழுகு,பருந்து பிரிதல்
முல்லையும் விலங்கு-செந்தாய் நிமித்தமும்
முறமையில் திரிதல் தாவரம்-உழிஞை
காலம் மலர்-பாதிரி
-பின்பனி;நண்பகல் தெய்வம்-துர்க்கை
ஆ) சங்க அகப்பாடல்களை வரையறை செய்ய முற்படும்போது
அகப்பாடல்களின் தனித்துவம் வெளிப்படும்.அகமாந்தர் பற்றிய
பாடல்களை அகப்பாடல் என்று கொள்வதற்கு அம்மாந்தர்களைப்
பாடிய புலவர்கள் அவ்வ்வுணர்வுகளை மிக நுணுக்கமாக எடுத்துக்
காட்டியுள்ளனர்.அகமாந்தர்களின் அகவுணர்வுப் பண்புகளை ‘முதல்
வகையில் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வு அவனது வாழ்வை
நெறிப்படுத்திய சமுதாயச் சூழல்,வாழ்வு பற்றிய அவனது கொள்கை
ஆகியவை பற்றிய பின்புல அறிவு அடிப்படையாக
அமைகிறது.இரண்டாவது வகையில் படப்பில் வரும்
பாத்திரங்களுக்கு அமைந்த சூழல்,அச்சூழலில் பாத்திரங்களின்
உள்ளத்தில் எழுந்த உணர்வு ஆகியவை பற்றிய அறிவு
அடிப்படையாக அமைகிறது.மூன்றாவது வகையில் படைப்பாளியின்
கடந்தகால இலக்கிய மரபு அவன் காலத்து இலக்கியப் புதுமை
ஆகியவை பற்றிய அறிவு அடிப்படையாக அமைகிறது என்று
கூறுகிறார் இராமகிருஷ்ணன்.(அகத்திணை மாந்தர்கள் ஓர்
ஆய்வு,ப.21)

சங்க பாடல்களை பாடிய புலவர்களுக்கு அவர்கள் சூழலும்,


அவர்களது வாழ்க்கைப் பின்னணியும்,வாழ்வு பற்றிய
கொள்கையும்,முன்னோர்,மரபுகளும் அகப்பாடல்களைச்
சிறப்பாயமைக்க உதவின.தொல்காப்பியர் அகத்திற்கு
இலக்கணமாக வரையறை செய்து காட்டிய இலக்கண மரபு
சங்கப் புலவனது கால வாழ்க்கை மரபாக
இருந்திருக்கும்.ஏனெனில் சங்கப் புலவர்களது பாடல்களை
அகம்,புறம் எனப் பாகுபாடு செய்வதற்கு அப்பாடல்களில்
பொருளமைதி பேணப்பட்டிருந்தது.பாடலைப் பாடிய புலவர்
பாடலில் யாரையும் பெயர் சுட்டிக் குறிப்பிடாத இறுக்கமான
வரையறைத் தனது பாடல்களில் பாடும் மரபாகப்
பேணினர்.இது பின்னர் இலக்கணக்காரர்களால் அக இலக்கண
மரபாக வரையறை செய்யப்பட்டுவிட்டது.அகத்திணை என்ற
வாழ்வியல் முறை புலவனின் பாடல் பின்னணியாக
அமைந்திருந்தது.இதுவே அகப் பாடல்களில் தனிச்சிறப்பு
பெற்று விளங்குகிறது.சங்க அகப்பாடல்களில் உள்ளப்
புணர்ச்சியே உயிர்நிலையாக அமைவதனைப் போன்று பக்திப்
பாடல்களில் ஆன்ம நாயகனாகிய இறைவனுக்கும் தம்மைத்
தலைவியாக பாவித்துக் கொண்ட பக்தனுக்கும் இடையே
அமைந்துள்ள நெருக்கமான உள்ளத் தொடர்பு அப்பாடல்களில்
அடித்தளமாக அமைகிறது.நோக்குவ எல்லாம் அவையே
போறல் என்பது தலைவனை நினைத்து நினைத்து உருகும்
ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரிதும் கையாண்டது,
“நோக்குவ எல்லாம் அவையே போறல்”
(தொல்.பொருள்.அகம்.நூ.எ.46)
எனும் துறையாகுன்.தொல்காப்பியரின் இக்களவியல் துறை
பக்தி இலக்கியங்களுக்குப் பெரிதும் பொருத்தமாய்
அமைந்துள்ளது.காணப்படுகிற பொருள்கள் எல்லாவற்றிலும்
காதலிக்கப்பட்டவரின் உருவத்தையே பக்தி இலக்கியங்களின்
அடித்தளமாக அமைகிறது.
உலகிலூள்ள பொருள்கள் எல்லாவற்றிலும் இறைவன்
உருவத்தைக் காண்பதையே பக்தியின்
இலக்கணமாகவும்,பக்தனின் இயல்பாகவும் உள்ளது.
“பார்க்கின்ற மலரூடு நீ யே யிருந்தீயப்
பனிமலர் எடுக்கமனமும்
நண்ணேன்” (தாயுமானவர் பாடல்,கருணாகரக்
கடவுள்(6,1-2)
என்று பாடியுள்ளார் தாயுமானவர்.
நம்மாழ்வார் உண்ணும் சோற்றிலும் பருகும் நீரிலும் தின்னும்
வெற்றிலையிலும் கண்ணனின் திருவுருவத்தைக் கண்டதாகப்
பாடியது இங்கு நினைவு கூறத்தக்கது.(திருவாய் மொழி 6,7-1)
“பார்த்த விடத்திலெல்லாம்-உனைப் போலவே
பாவை தெரியுதடீ”
(பாரதியார் கவிதைகள்,கண்ணன் பாட்டு.கண்ணம்மா என்
காதலி,5-1)
என்ற அடிகளில் பாரதியார் பார்த்த இடங்களில் எல்லாம் தன்
காதலியைக் கான்கிறார்.
“பூவினில் வாசம் புனற் பொற்புப்
புதுவிரைச் சாந்தினி னாற்றத்தோடு
நாவினிற் பாடனள் ளாறுடைய
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்” (1-7-4)

என்று வரும் இப்பாடலடிகள் திருஞானசம்பந்தரின் உள்ளத்து


உணர்வை படம்பிடித்துக் காட்டுகிறது.
கேட்காத பொருள்களைக் கேட்குன போலவும்.சொல்லாத
பொருள்களைச் சொல்லுன போலவும் பாவித்து அவற்றை
விளித்துப் பேசி,அளவு மிகுந்த காதல் உணர்வையும்
ஆற்றாமையும் வெளிப்படுத்துவதும்,நெஞ்சத்தை உறுப்புடையது
போலவும் உணர்வுடையது போலவும் எண்ணுதல் நெஞ்சொடு
கிளத்தல் அகப்பொருள் மரபாகும்.
(தொல்.பொருள்,அகம்.நூ.எ.142)இவ்வகப் பொருள் மரபினைக்
கடவுட் காதலில் ஒன்றிய பக்தர்கள் போற்றிப்
பாடியுள்ளனர்.இதனால் பக்திப் பாடல்களுக்கும்
அகப்பொருள்களுக்குமிடையே அமைந்துள்ள நெருங்கிய
தொடர்பினை அறியமுடிகிறது.

கைவளை நெகிழ்தலும் பசலை படர்தலும்


தலைவி தலைவன் மீ து கொண்ட அன்பின் மிகுதியில்
கைவளை கழலுதலும் மெய் பசப்புறுதலும் தலைவனைப்
பிரிந்த தலைவியிடம் காணப்படும்
மெய்ப்பாடாகும்.திருநாவுக்கரசரின் தலைவி தலைவனைக்
கண்டவுடன் தன் கை வளை நெகிழ்ந்து விடும்படி காதல்
மிகுந்து காணப்படுவதினை,
“ஐய னாவடு தண்டுறை யாவெனக்
கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே” (5-29-9)
“உள்ளுவார் வினைதீர்க்கு மென்றுரைப்பருல கெல்லாம்
கள்ளியே னானிவர்க்கென் கனவளையுங் கடவேனோ?

என்ற இப்பாடலடிகளில் கூறுகிறார்.இதேபோன்று கருத்துடைய


குறுந்தொகைப் பாடல் ஒன்று உள்ளது.தலைவி தன்
தோழியிடம் தான் தலைவன் மீ து கொண்ட காதலால்
கைவளைகள் கழலும்.உடலின் கண் பசலை கொண்டு காமம்
மிகுதியால் கிடந்தேன்.அக்காதல் நோய் என்னிடம் மிகப்
பெரியதாயிருந்ததே என்று கூறுவதினை,
“கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பூர்தலும்
மைபடுசிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கு நாடனொடு
மருவேன் தோழியே காமமோ பெரிதே” (குறுந்.371)

எனும் பாடலடிகளில் காணமுடிகிறது.இவ்விடத்தில்


திருநாவுக்கரசரின் தலைவியும்,குறுந்தொகைத் தலைவியும்
காதல் மிகுதியால் கைவளை நெகிழ்வதாகப் பாடும்
ஒப்புமையைக் காணமுடிகிறது.
பசலை படர்தல் சங்க இலக்கியத்தில் மிகச் சிறப்பாக
போற்றப்படும் துறையாகும்.பக்தி இலக்கியங்கள் இவ்வகத்
துறையைக் கடவுள் காதலர்கள் கையாண்டுள்ளனர்.பாசம்
என்னும் தத்துவக் கொள்கைக்கு அகப்பொருள் மரபில்
அமைந்த பசலை படர்தல் பற்றிய சிந்தினையே வழிவகுத்தது
என்று கூறலாம்,பசலை படர்தல் என்பது தன் நினைவு நீங்கித்
தலைவன் நினைப்பு மிகுவதால் தன் மெய்யில் தோன்றும்
வேறுபாடாகும்.அக இலக்கியங்களில் அமைந்துள்ள இத்துறை
போன்று பக்தி இலக்கியங்களிலும் பாடல்கள்
காணப்படுகின்றன.

“பொங்கொளி மார்பில் தங்கிய திருநீறு


ஆதரித் திரைஞ்சிய பேதையர் கையில்
வெள்வளை வாங்கிச் செம்பொன் கொடுத்தலின்
பிள்ளை யாவது தெரிந்தது பிறர்க்கே”
(11,ஆ.பி.மு.கோ.பா.10)

எனும் இப்பாடலில் தலைவன் கைவளை பெற்றுக் கொண்டு


பசலை நோய் கொடுத்தலைக் காணமுடிகிறது.
“கைவளை நெகிழ்தலும் மெய்பசப்பூர்தலும்” (குறுந்.371)

என்ற குறுந்தொகைப் பாடலடி இப்பாடலுக்கு மிகப்


பொருத்தமாய் அமைவதைக் காணமுடிகிறது.இதே போன்று
பொருள் பொதிந்த பாடல் ஒன்று பதினொரந் திருமுறையில்
உள்ளது.அப்பாடல்,
“..................காற்றாங்
குறைந்த சம் பந்தனென்னா
முலையிடைப் பொன்கொண்டு சங்கிழந்
தாள் எந்தன் மொய்குழலே” (11 ஆ.பி.திரு.அ.37)

என்பதாகும்.இதில் தலைவி தலைவனை நினைத்து


காமமிகுதியால் பசலையாகிய பொன்னைப் பெற்றுக் கொண்டு
வளை கழல்தல் பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

மடலேற்றம்
தலைவியை விரும்பிய தலைவன் தலைவியை
ஏற்றுக்கொள்ளும்படி கூறுவான்.தலைவி மறுக்கத் தலைவன்
மடலேற எண்ணி அதைக் தலைவியிடம்
வெளிப்படுத்துவான்.தலைவி மீ து கொண்ட காதலை ஊராரும்
சுற்றத்தாரும் அறியவும்,தலைவி மீ து கொண்ட காதலைத்
தலைவி உணரவும் தலைவன் மடலேறுவான்.தலைவன்
மடலேறுவது அக்கால வழக்கம்.தலைவன் மடல் ஏறியதால்
அத்தலைவனுக்குத் தலைவியைப் பெற்றோரும் சுற்றத்தாரும்
மணமுடித்து வைப்பர்.
திருச்சிற்றம்பலக் கோவையாரில் உள்ள மடலேற்றம்
பற்றிய பாடலில் தலைவன் நான் மடலேறப் போகிறேன்
என்கிறான்.தோழி மறுக்கிறாள்.தலைவன் ஏன் முடியாது என்று
கேட்கிறான்.அதற்குத் தோழி தலைவனே! மடலேற
வேண்டுமானால் தலைவியினுடைய படத்தை வரைய
வேண்டும்.தலைவியின் படத்தை நும்மால் வரைய
முடியாது.அவள் குரலுக்குப் பதிலாக யாழையும்,பல்
வரிசைக்குப் பதிலாக முத்துக்களையும்,கூந்தலுக்குப் பதிலாக
மேகக் கூட்டத்தையும்,உதடுகளுக்குப் பதிலாகக் கோவைக்
கனியையும் வரைய வேண்டும்.ஆகவே இவை அனைத்தையும்
தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம் இருக்குமாயின்
அதனைக் கொண்டு வந்து மடலேறுக!என்று கூறுகிறாள்
தோழி.இக்கருத்தை,

யாழும் எழுதி எழில்முத்து


எழுதி இருளின் மென்பூச்
சூழும் எழுதா வகைசிதைத்
தீட்டிஎன் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத்
தோன்புலி யூர்இளமாம்
போழும் எழுதிற்றுஓர் கொம்பர் உண்
டேல்கொண்டு போதுகவே (8.திருக்கோவை.79)

எனும் பாடலடிகளில் கூறியுள்ளார் மாணிக்கவாசகர்.


மடல் ஏறித்தான் தலைவியை அடைய
வேண்டுமா,இதைவிடச் சாவு வருமேயாயின் அது
சிறப்புடையதாக இருக்கும் என்று வருந்திக் கூறுகிறான்
தலைவன்.பனை மடலாலே செய்யப்பெற்ற குதிரையில் ஏறி
எருக்கம் பூ, பூளைப் பூ முதலியவற்றைச் சூடி,இடம் அகன்ற
பல ஊர்களிலும் நாட்டிலும் திரிந்து,அழகிய தலைவியின்
நலன்களை எல்லாம் எடுத்துக் கூறிச் செல்லும் மடலேறும்
தொழிலைச் செய்யாமல்,என் மனத்தைக் கட்டுப்படுத்தி அதுவே
நோயாக இருந்து இறந்து போவேனாயின் அது எவ்வளவு
நன்மையாக இருக்கும்.அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே பாம்பு
விழுங்கிய நிலவைப் போன்ற கூந்தலுடன் விளங்கும்
நெற்றியையுடைய தலைவி யான் நினக்கும் தோறும் என்
எதிரே வந்து என்னை மெலியச் செய்கிறாள்.அதனால் எனக்குக்
காமநோய் மிகுதியாக இருக்கிறது என்னும் கருத்துடன் பின்
வரும் பாடல் அமைகிறது.

மடல்மா ஊர்ந்து மாலை சூடிக்


கண்அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி ஆக விளியலங் கொல்லோ?
அகல்இரு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல
அளகம் சேர்ந்த சிறுநுதல்
கழறும் மெலிக்கும் நோய்ஆ கின்றதே! (நற்றி.377)

என்ற இப்பாடலின் இறுதி நான்கடிகளில் தலைவியின்


அழகைக் கூறுகிறான் தலைவன்.இவ்விரு
மடலேற்றப்பாடல்களிலும் தலைவியின் அழகு
கூறப்பட்டுள்ளது ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

களவுக்காலப் பிரிவுத் துன்பம்


தலைவன் தலைவியின் நட்பு,களவில் மிகச் சிறப்பாகப்
போற்றப்படுகிறது. தலைவனும் தலைவியும் மறைவில்
கூடுதலால் இன்பமும்,பிரிந்தால் ஏற்படும் இடைவிடாத
துன்பமும் அவர்களைச் சேர்க்கின்றன.பிரிவால் காதலர்கள்
படும் துன்ப நிலைகளைப் பாடும் பாடல்களின்,தலைமக்களது
பிரிவுத்துன்பமே மிகுதியாகக் காணப்படுகிறது.ஒருவரைப்
பிரிந்து ஒருவர் வருந்தும் நிலையும் உயிர் வாழாத்
தன்மையுமே அகப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.

நல்கார் நயவாராயினும்
பல்காற் காண்டலு முள்ளத்துக் கினிதே (குறுந்.60)

தாயுடன் றலைக்கும் காலையும் வாய்விட்


டன்னா யென்னுக் குழவி போல
இன்னா செயினு மினிதலை யளிப்பினும்
நின்வரை பினளென் தோழி
தன்னுறு விழுமங் களைஞ்ரோ விலளோ (குறுந்.397)

என்ற இக்குறுந்தொகைப் பாடல்களில் தலைவி தன்னை


முழுமையாகத் தலைவனிடம் கொடுத்து நிற்கும் அன்பு
வழிப்பட்ட அடிமைத் திறனைக் காணமுடிகிறது.இச்சங்ககால
அன்பே பக்திக்கால இறையன்பாக உருமாற்றம் பெற்றதனை,

“வைந்தநீறு மெய்யிற் பூசுவராடுவார் வங்கிருள்



வந்தெனாராவ் வளைகொள்வது மிங்கொடு மாயமாய்
அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய
எந்தை மூக்கிச் -சரத்தடிகள் செய்கின்றதோ மரகதமே” (2-
120-6)

எனும் இப்பாடலில் உணரமுடிகிறது.தலைவன் தலைவி


களவுக்காலத்தில் கூடுவதும், இருவரும் பிரிந்து வருந்துவதும்
காணப்படுகிறது.இது சங்க இலக்கியப் பாடலை நம்
கண்முன்னே நிறுத்துவதாக அமைகிறது.
தலைமக்கள் கூடியும்,பிரிந்தும்,மறுபடி கூடியும் வாழ்வதாக
அகப்புறப் போராட்டங்களின் நிலைக் களன்களாக களவுக்
காலம் அமைக்கிறது.பிரிவால் படும் துயரமே பாடல்களில்
மிகுதியாக
அமைந்துள்ளன.குறிஞ்சி,முல்லை,மருதம்,நெதல்,பாலை எனும்
ஐந்தனுள் குறிஞ்சி நீங்கலாக நான்கும் பிரிவினைப் பற்றியே
பேசுகிறது.

“............... காதலர்
ஒருநாள் கழியினும் உயிர் வேறுபடூஉம்” (நற்றி.129)
“மணங்கமழ் கானல் இயைந்த நங் கேண்மை
ஒருநாள் பிரியினும் உய்வரிது”
“.................அளியள்தானே யாக்கைக்கு
உயிரியைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே” (அகநா.339)
“வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே” (குறுந்.32)
“பிரிவதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய உலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே” (குறுந்.57)

என்று வரும் பாடலடிகளில் தலைவன் தலைவியின் அன்புப்


பிணைப்பில் பிரிவி தலைப்படுதல் உயிர் போதலுக்குரிய
துன்பம் தருவதாக அமைகிறது.இங்கு இருவர் உறவும்
உடலோடு உயிர் கலந்தது.ஆதலால்,உடம்பினைப் பிரிந்தாலும்
உயிரினைப் பிரிவது போன்ற துன்பம்
உணரப்படுகிறது.இறைக்கும் உயிர்க்கும் உள்ள காதல் உறவு
இத்தன்மை உடையது என்று முன்னரும்
கூறப்பட்டது.இங்கு,கண்ண ீர் வடித்து,புலம்பித் துடிக்கும்
நிலையினைக் காணமுடிகிறது.இந்த நிலையில் அமைந்த
பாடல்கள் பக்தி இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.
“நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்” (8-
10-15)

“மணங்கமழ் கானல் இயைந்த நங் கேண்மை


ஒருநாள் பிரியினும் உய்வரிது”
(நற்றி.293)
“.............. அளியள்தானே யாக்கைக்கு
உயிரியைந்தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே”
(அகநா.339)
“வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே”
(குறுந்.32)
“பிரிவதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய உலகத்
தொருவே மாகிய புன்மைநா முயற்கே” (குறுந்.57)

என்று வரும் பாடலடிகளில் தலைவன் தலைவியின் அன்புப்


பிணைப்பில் பிரிவு தலைப்படுதல் உயிர் போதலுக்குரிய
துன்பம் தருவதாக அமைகிறது.இங்கு இருவர் உறவும்
உடலொடு உயிர் கலந்தது.ஆதலால்,உடம்பினைப் பிரிந்தாலும்
உயிரினைப் பிரிவது போன்ற துன்பம்
உணரப்படுகிறது.இறைக்கும் உயிர்க்கும் உள்ள காதல் உறவு
இத்தன்மை உடையது என்று முன்னரும் கூறப்பட்டது.இங்கு
உயிர் ,இறைவனது அன்பில் கனிந்த அருளினைப் பெறாத
காலங்களில் வருந்தி,கண்ண ீர் வடித்து,புலம்பித் துடிக்கும்
நிலையினைக் காணமுடிகிறது.இந்த நிலையில் அமைந்த
பாடல்கள் பக்தி இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகிறது.
“நானும் என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலும் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
(8-10-15)

என்ற இப்பாடலடியில் தலைவன் தனக்கு அருளவில்லை


எனில் தலைவி இறந்து விடுவதாக வருந்தி கூறுவது ஒப்பு
நோக்கத்தக்கதாகிறது.
2.அ)

சிலப்பதிகாரம் தமிழின் முதற் காப்பியம் என்பதைத் தவிர்த்து மற்ற


காப்பியங்களிலிருந்து தனித்து நிற்கப் பலசோழநாட்டில்
பிறந்த,பாண்டிய நாட்டில் தன் பெருமையைக் காட்டி,சேர நாட்டில்
தெய்வமான கற்பரசியின் கதையைக் கூறும் நூல்
சிலப்பதிகாரம்.ஒரு நாவலுக்கான அத்தனை சிறப்புகளையும்
கொண்டது சிலப்பதிகாரம்.அது மட்டுமில்லை,அந்த காப்பியத்தைப்
படைப்பதில் புதுமையான பல படைப்பிலக்கிய திறமைகளை
அடிகளார் வெளிப்படுத்தியிருப்பது அவரது ஆக்கத்திற்கு முன்னால்
இல்லாத புதுமாதிரியாய் அமைந்திருப்பது வியப்பாக இருக்கின்றது.

அது வரை தண்ணுர்ச்சி பாடல்களாய் இருந்த இலக்கிய மரபை


மடை மாற்றி ஒரு முழுமையான காப்பியப் போக்குச் சோதனைக்கு
உட்படுத்தி அதில் வெற்றி கண்ட முதல் தமிழ் மகன் இளங்கோ
ஆவார்.அதே மாதிரி தமிழ் இலக்கிய உலகு வேறொரு புதுமையான
மாறுதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டது அடிகளாரின்
இந்த வெற்றிக் காப்பியத்திற்கு பின்னால் தான். அதுவரை அரசு
மரபினையேப் போற்றிப் பாடிய வழக்கத்தை மாற்றி முதன்
முதலாக ஒரு சாதாரணக் குடிமகனை பாட்டுடைத் தகைவனாக
வரித்து பாடிய முதல் பெரும் காப்பியம் அடிகளாரின் சிலம்புக்
காவியமே.

இளங்கோ குணவாயில் கோட்டம் எனும் அருகன் கோயிலில்


இருந்த சமண முனிவர்களை அடைந்து துறவு மேற்கொண்டு
இளங்கோ அடிகளாக மாறிய பின் அவரிடம் சாத்தனார்
கண்ணகியின் முழு வரலாற்றையும் கூறுகிறார்.கண்ணகியின்
தன்னலம் கருதாத் தியாகம் இளங்கோவின் மனத்தைக் கவர்ந்து
விடுகிறது.உடனே, “சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுது யாம்
ஓர் பாட்டைச் செய்யுள்” என்று அறிவித்தார்.இவ்வாறே
சிலப்பதிகாரம் என்னும் சீரிய காப்பியம் பிறந்தது.

சிலப்பதிகாரத்தின் தனிச் சிறப்பு

‘இந்த அரும் பெரும் காப்பியம் மூன்று என்னும் எண்ணோடு


பின்னிப் பிணைந்தாய்த் திகழ்கிறது’என்று டாக்டர் பூவண்ணன்
தமது ‘சிந்தனையை அள்ளும்
சிலம்பில்’குறிப்பிட்டுள்ளார்.காப்பியம் நோக்கம்
மூன்று.அவையானது:
- அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றமாகும்.
- உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல்.
- ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்

சிலப்பதிகாரத்தின் பெரும் பிரிவுக்குக் காண்டம் என்றும் சிறு


பிரிவுகளுக்குக் கதை என்றும் பெயர்.இதில் மூன்று
காண்டங்கள்(புகார்,மதுரை,வஞ்சி) உள்ளன.

மொத்தம் மூன்று + பத்து (முப்பது) காதைகள் உள்ளன.


 இக்காவியம் சேர,சோழ,பாண்டியன் எனும் மூவேந்தர்களின்
சிறப்புகளைப் பேசுகிறது. ‘முடிகெழு வேந்தர் மூவர்க்கும்
உரியது’ என்ற சாத்தனாரின் கூற்றாக அமையும் அடிகள்
இதற்குச் சான்று பகரும்.
 காப்பியத்தின் களங்களான புகார்,மதுரை,வஞ்சி எனும் மூன்று
நகரஞ்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 காப்பியத்தின் முதன்மை மாந்தர் மூவர்.அவர்கள்
கோவலன்,கண்ணகி, மாதவியாகும்.
 இதற்கு முத்தமிழ்க் காப்பியம் என்ற சிறப்புப்
பெயருமுண்டு.ஏனெனில் தமிழரின் முக்கூறுகளான
இயல்,இசை,நாடகம் இடம் பெற்றுள்ளன.
 இக்காப்பியம் அறம்,பொருள் இன்பம் என மூன்று
பொருள்களைக் கூறுகிறது.

சிலப்பதிகாரம் தமிழரின் முதல் காப்பியம்.அது தமிழுக்குத்


தனிப் பெரும் சிறப்பைத் தந்தது.
பெண்கள் காலில் அணியும் சிலம்புக்கு இக்காப்பியத்தில்
தனியிடம் தரப்பட்டுள்ளது.இக்கதையோட்டத்தில் முக்கிய
இடம் வகிக்கும் சிலம்புக்குச் சிறப்பளித்து,சிலப்பதிகாரம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது.சூழ்வினை சிலம்பு காரணமாகச்
“சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுது யாம் ஓர் பாட்டைச்
செய்யுள்” என்று இளங்கோவடிகள் கூறுயுள்ளதை முன்பே
பார்த்தோம்.

மங்கலமான மணநாள் விழாவில் ஆரம்பிக்கிறது இந்தக்


காப்பியம்.கோவலன் கண்ணகி மணநாள் விழாவை படம் பிடித்தாற்
போல காட்சிப்படுத்தும் ஆரம்ப அத்தியாயமான மங்கல வாழ்த்துப்
பாடலின் திருமணக் காட்சியின் வர்ணனைகள் நம்மை
மயக்குகின்றன.மாலைகள் பொருத்திய மண்டபம்.நீலப்பட்டிலான
விதானத்தின் கீ ழே அழகிய முத்துப் பந்தல்.வானில் நீந்தும் சந்திரன்
ரோகிணியைச் சாரும் நல்லதோர் ஓரையில் அருந்ததி அன்ன
கற்புடை நங்கை கண்ணகியின் வலது கரம் பற்றி மாமுது பார்ப்பான்
மறை வழிகாட்டிட கோவலன் மங்கலத் தீ வலம் வருகிறான்

நறுமணப் பொருட்களை ஏந்திய அழகிய மகளிர்.மாலைகளை


தாங்கிப் பிடித்தபடி வாழ்த்துப்பா பாடிய நங்கையர்.சுண்ணப்பொடி
ஏந்திய மங்கையர்.அகிற்புகை சூழ்ந்த சூழலும் விளக்குகளை ஏந்திய
மகளிர் புன்னகைச் சுடருடன் சூழ்ந்து வர நடுவில் முளைப் பாலிகை
தாங்கியும்.பூரண கும்பம் ஏந்தியும் மங்கையர் வலம் வந்தனர்
காட்சிப்படுத்தல்கள் நீளும் பொழுது அந்தக்கால திருமணவிழாக்கள்
எப்படியிருந்திருக்கும் என்று நமக்கு ஒரு அறிமுகம்
கிடைக்கிறது.பாரம்பரிய பழக்க வழக்கங்களில் எந்த பெரிய
மாற்றமும் இல்லாமல் இன்றைய நம் இல்லத் திருமண
விழாக்களும் கிட்டத்தட்ட அதே மாதிரியாக் இன்றும் இருப்பதில்
உள்ளூர ஒரு மகிழ்ச்சி வேறே.

பூரண கும்பம் ஏந்திய மகளிர் வலம் வரும் அந்த சமயத்தில்


கவிஞன் வாக்காக அந்த வரிகள் அவன் அறியாதது போலவே
வருகின்றன:பொற்கொடி போன்ற நீண்ட கூந்தல் கொண்ட மகளிர்
“இந்த மங்கை நல்லாள் தன் காதலனை கண்ணிலும் மண்ணிலும்
பிரியாது என்றும் வாழ்வாளாக!அவனும் இவளின் பிணைந்த கை
நெகிழாமல் இருப்பனாக பதுமணம் காணும் இந்த தம்பிகள் தீதின்றி
நீடுழி வாழ்க! என்று மலர் தூவி வாழ்த்துகின்றனர்.ஊழ்வினை
உருத்து வந்து ஊட்டும் என்பது தெரியும்.இருந்தும் பின்னால்
நேரவிருக்கிற பயங்கரத்தை இந்த வாழ்த்து மழை ஒருகால் புரட்டிப்
போடுமோ என்கிற லவவேச ஆசையாலோ என்னவோ அடிகளார்
வார்த்தைப் பின்னல்களை வாழ்த்தின் இடையே
செருகியிருக்கிறார்.காதலின் நேர்த்தியை செயலில் வடித்துக் காடும்
இன்னொரு இடம்.முதலிரவில் கண்ணகியில் தோளில்
சாய்ந்து,கோவலன் ஐந்தாம் வேதம் ஓதுகிறான்: “பெண்ணே!உன்னை
மலையிடைப் பிறவாத மணி என்பேனா?கடலிடைப் பிறவாத
அமிழ்து என்பேனா?யாழிடைப் பிறவாத இசை என்பேனா?நீண்ட
கருங்கூந்தலை உடைய உன்னை....” என்று அந்த நின்னையில்
காதல் நாயகனின் பாதி வர்ணிப்பிலேயே காதல் வசனத்தை வெட்டி
இளங்கோ புதுமை செய்கிறார்.நின்னை?...காதலியின் கடைக்கண்
பார்வையில் அந்தப் பேரழகின் முன்னே தடுமாறிய பேச்சு,செயலாய்
நீளப் போகிறது என்று நமக்குத் தெரிகிறது...

சிலப்பதிகாரத்தை நயம் பாராட்டுதல் என்று ஆரம்பித்தால் அதற்கு


எல்லையே இல்லாமல் போகும்.அந்த காப்பியத்தின் திரும்பிய
பக்கமெல்லாம் தமிழ் கொஞ்சுகிறது.அந்நாளைய தமிழர் பண்பாட்டின்
விழுமியங்களை ஒவ்வொன்றாக எடுத்து கடைப்பரப்பிய அழகு
காணக்கிடைக்கிறது.இன்றைய நாவலான அன்றைய அந்த
காப்பியத்தின் கட்டுக்கோப்பான அமைப்புகள் நம்மைக்
கவருகின்றன.மூன்று காண்டங்களில் முப்பது காதைகளை நகரும்
கதைப்போக்கிற்கு வெகுப்பொருத்தமாக அமைக்கிறார்.மூன்று
காண்டங்களுக்கும் அவர் பெயர் கொடுத்த பெருமையே அந்நாளைய
தமிழகத்தின் மூவேந்தர்களின் தலைநகரங்களுக்கான பெருமையாகி
எந்த வேற்றுமையும் இன்றி மூவேந்தர்களுக்கிடையேயான
ஒன்றுமைப் பதாகையை உயரத் தூக்கிப் பிடிக்கிறது.

புகார் காண்டத்தில் காப்பியத் தலைவன் – தலைவியின் கல்யாணக்


கோலம்.அவர்களின் குடும்ப வாழ்க்கையின் துவக்கம்
என்றாகி,வணிக குலத்தின் வாழ்க்கைப்பாட்டிற்கு ஏற்ப கோவலன்
மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பட்டிற்கு ஏற்ப கோவலன்
மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பட்டு ஒன்றைச் சிலப்பை
கையிலேந்தி நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்து
வஞ்சிக்காண்டத்தில் கற்பின் தெய்வமாய் காட்சி தருகிறாள்.

புகார் காண்டத்தில் காப்பியத் தலைவன் – தலைவியின் கல்யாணக்


கோலம்,அவர்களின் குடும்ப வாழ்க்கையின் துவக்கம்
என்றாகி,வணிக குலத்தின் வாழ்க்கைப்பாட்டிற்கு ஏற்ப கோவலன்
மதுரை ஏகி அநியாயமாய் கொலைக்களப்பாட்டிற்கு ஒன்றைச்
சிலம்பை கையிலேந்தி நீதி கேட்ட கண்ணகி மதுரையை எரித்து
வஞ்சிக்காண்டதில் கற்பின் தெய்வமாய் காட்சி தருகிறாள்.

புகார் காண்டத்தின் மூன்றாவது காதையான அரங்கேற்றுக்


காதையிலேயே தேவமகளிருக்கு எந்தவிதத்திலும் குறைவு படாத
மாதவியின் அறிமுகம் கிடைக்கிறது.அவள் நாட்டிய
அரங்கேற்றத்தை அரங்கேற்றும் சாக்கில் ஆடல்,பாடல்
இலக்கணங்களின் அத்தனை அம்சங்களையும் அலசுகிறார்
அடிகளார்.கூத்தாசிரியனின் சிறப்பு,நாட்டிய மேடையின்
அமைப்பு,நாடக அரங்கில் வைக்கப்படும் தலைக்கோல்,அதனை
வழிபடும் மரபு என்று நிறைய விவரங்களை
அறிகிறோம்.சூழலோசை,யாழிசை,மத்தள
முழவு,ஆமந்திரிகை,குயிலும் என்று இசையில்,இசைக்கருவிகள ீன்
வரிசை,வரிசை கட்டப்படுகிறது.அந்தி மாலை சிறப்புச் செய்
காதையில் மாதவியின் தாய் சித்திராபதி பரிசிலாக விலை பேசிய
ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் மாலையை வாங்கி மாதவையை
உரிமை கொள்கிறான் கோவலன்.மாதவியுடன் சுகித்திருக்கிறான்.

இந்திர விழவு எடுத்த காதையில் புகார் நகரின் மருவூர் பாக்கத்தின்


காட்சிகள். பட்டினப்பாக்கத்தின் நகரச் சிறப்புகள் எல்லாம் பண்டைய
தமிழகத்தின் பிரமிக்க வைக்கும் வாணிபச் சிறப்பைச்
சொல்கின்றன.இப்படி ஒவ்வொரு காதையிலும் சிலப்பதிகார
காப்பியத்தின் பக்கங்கள் புரட்ட புரட்ட எத்தனை செய்திகள் வரிசை
கட்டி நிற்கும் வகைவகையான எவ்வளவு விவரக் குறிப்புகள் என்று
வாசிக்கையிலேயே மலைக்கிறோம்.இத்தனைக்கும் இடையே நமக்கு
தெரிய வருவது என்னவென்றால் ஆங்கிலேயர் வருகைக்குப்
பின்னால் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து
கொண்டோம் என்று சொல்வது எவ்வளவு வரலாற்றுப் பிழை என்று
தெரிகிறது.செய்யுளும் உரைநடையும் விரவிக் கலந்தவாறு
உரைநடை இடையிட்ட செய்யுளாய் இருந்த காப்பிய வடிவு,செய்யுள்
நீங்கிய உரைநடையாய் நாவல் என்று வடிவு
கொண்டிருக்கிறது.அவ்வளவு தான்.காப்பியம் என்று அழைக்கப்பட்ட
பண்டைய இலக்கிய வடிவின் அடுத்த மாற்றத்திற்குள்ளான வடிவு
தான் இன்றைய நாவல்.அவ்வளவு தான்.இப்படியாக இன்றைய
நாவல் இலக்கியத்திற்கு அன்றே காப்பியம் என்ற வடிவில்
கால்கோள் விழா நடந்திருக்கிறது.
ஆ)

ஊழ்வினை என்றால் என்ன?

அது முற்பிறப்பில் செய்த நல்வினை,தீவினை.ஒவ்வொருவரும்


முற்பிறப்பிலே செய்த நல்வினை,தீவினைகளின் பலனை
இப்பிறப்பில் அனுபவித்துதான் ஆகவேண்டும்.இது மிகப் பழங்காலக்
கொள்கை.ஏற்கனவே நாம் கணியம் பூங்குன்றனாரின் புறநானூற்றுப்
பாடலில்,நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆர்உயிர் முறைவழி படூம்
என்பது என்று கண்டோம்.இதன்வழி பண்டைத் தமிழ் மக்களின்
நம்பிக்கை நமக்குப் புலனாகிறது.

சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் ஊழ்வினை


வலியுறுத்தப்படுகிறது.கோவலன் மாதவியின் நடத்தையில்
ஐயமுற்றது ஊழ்வினையால்தான்.அவன் கண்ணகியோடு
மதுரைக்குச் சென்றது,பொற்கொல்லன் சொல்லை நம்பியது,நீதி
தவறி பாண்டியன் அவனைக் கொல்லப் பணித்தது அனைத்தும்
ஊழ்வினையின் பயந்தான் என்கிறார் இளங்கோவடிகள்.

முந்தைய பாடலான வழக்குரைக் காதையிலும் கண்ணகியின்


கூற்றாக, “....ஊழ்வினை துறப்ப சூழ்கழல் மன்னா!நின்நகர்ப்
புகுந்து. ....” என்ற அடிகள் ஊழ்வினையை விளக்கி இருந்ததைக்
கண்டோம்.

தொடர்ந்து கட்டுரை காதையில் கூறப்படும் செய்தியைக்


காண்போமா?

கோவலன் நல்ல குடும்பத்தில் பிறந்தவந்தானே!அப்படிதானே


கண்ணகியும் அவனைப் பற்றிப் பாண்டியனிடம் கூறினாள்.பின் ஏன்
அவனுக்கு இந்த அகால மரணம்?அவனைக் கொல்ல வந்த
காவலர்கள் கூட “இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு
இவன் கொலைப்படும் மகன் அல்லன்!” என்றனரே! காரணம்
ஊழ்வினைதான்.

“கோவலன் பண்டை வினை உருத்துஎன்” என்று அவனது அகால


மரணத்தைப் பற்றிக் கூறும்போது இளங்கோவடிகள்
கூறுகின்றார்.இதற்குக் காரணமான கோவலன் தனது முற்பிறப்பில்
செய்த தவற்றைப் பற்றி இப்போது காண்போமா?

கோவலன் முற்பிறப்புத் தவற்றைப் பற்றி நாம் மட்டுமே தெரிந்து


கொண்டால் போதுமா? கண்ணகியும் அறிய வேண்டுமே.அவளுக்கு
யார் எடுத்துரைப்பது?அவள் இருக்கும் சூழ்நிலையில் யார் அவளுக்கு
உண்மையை உணர வைக்க முடியும்?

என்ன செய்தார் இளங்கோ?

தான் நீதி தவறிய உணர்ந்து பாண்டியன் உயிர் துறக்கிறான்.அவன்


தேவியும் கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்றடுடன்
மடிகிறாள்.ஆனாலும் கண்ணகியின் சீற்றம் தணியவில்லை.
“பட்டாங்கு யானும் ஓர்பத்தினியே ஆமாகில் ஒட்டேன் அரசோடு
ஒழிப்பேன்” என்று சூளுரைத்துத் தன் இடமார்பைத் த்ருகியெடுத்து
வஞ்சினம் கூறி வசியெறிகிறாள்.மதுரைப்
ீ பற்றி எரிந்தது.

அப்போது மதுரை நகரில் காவல் தெய்வமான மதுராபதி கண்ணகி


முன் தோன்றினாள். “கோவலன் முடிவு அவன் தீவினைப் பயனாக
ஏற்பட்டது; பாணடியன் நல்லவனே” என்று புரிய வைக்கிறாள்.இப்படி
மதுராபதியின் கூற்றாக அமையும் பாடல் வரிகள் மூலம்
கோவலனின் தவறு என்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

அ.பாடல் 1

கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு

வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும்

தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்

காம்பெழு கானக் கபில புரத்தினும்

அரைசாள் செலவத்து நிரைதார் வேந்தர்

வயாத்
ீ திருவின் விழுக்குடிப் பிறந்த

தாய வேந்தர் தம்முள் பகையுற

இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ்

செருவல் வென்றியிற் செல்வோ ரின்னமையின்

விளக்கம்

மணம் நிரம்பிய பொழில்கள் சூழ்ந்த கலிங்க நாட்டின்,இனிய நீர்


வயல்கள் நிறைந்த சிங்கப்புரத்திலும் மூங்கில் காடுகள் நிறைந்த
கபிலப்புரத்திலும் அரசாளும் செல்வப் பேற்றினையுடைய
ஒழுங்குபடத் தொகுத்த மாலையணிந்த திருந்திய வேலினை ஏந்திய
பெரிய கைகளை உடைய வசு,குமரன் என இருவர்
இருந்தனர்.இவர்களுக்குள்ளே பகை ஏற்பட,இவர்கள் நாட்டுக்கு
இடைப்பட்ட ஆறு காவத்திற்கு உட்பட்ட நிலத்தில் போர் நிகழ்ந்து
கொண்டிருந்தது.எவரும் அவ்வழியே போகாந்திருந்தனர்.

பாடல் 2

அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து


கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு

சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர்

அங்கா டிப்பட் டருங்கலன் பகரும்

சங்கமன் என்னும் வாணிகன் தன்னை

முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன்

வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன்

பரத னென்னும் பெயரனக் கோவலன்

விரத நீங்கிய வெறுப்பின னாதலின்

ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு

வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வழிக்

விளக்கம்

அரும்பொருள்களின் மேல் கொண்ட ஆசையினால்,சிறந்த


அணிகலன்களைச் சுமந்தவனாகத் தன் நாட்டை விட்டுச் செல்லும்
மக்களில் ஒருவனாகக் கபிலபுரத்து வணிகண் சங்கமன் தன்
மனைவியோடு சிங்கப் புரத்தினுள்ளே நுழைந்தான்.

அழியாத புகழுடைய சிங்கபுரத்தின் ஒரு கடைவதியில்


ீ புகுந்து,தான்
கொண்டு வந்திருந்த சிறந்த அணிகலன்களை அவன் விற்றுக்
கொண்டிருந்தான்.பைந்தொடி!முற்பிறப்பில் உன் கணவன் பரதன்
என்ற பெயரில் அரசனுக்கு அரச காரியம் செய்பவனாக
இருந்தான்.ஆராய்ந்து முடிவெடுத்தலே அறம் என்பதை
ஒதுக்கியவன்.கபிலபுரத்தின் வெறுப்பைக் கொண்டவன்.அதனால்
சங்கமனை ஒற்றன் எனப் பிடித்துக் கொண்டு போய் மன்னனிடம்
காட்டிக் கொன்றான்.

பாடல் 3
கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி

நிலைக்களங் காணாள் நீலி என்போள்

அரசர் முறையோ பரதர் முறையோ

ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென

மன்றினும் மறுகினும் சென்றனர் பூசலிட்டு

எழுநா ளிரட்டி எல்லை சென்றனள் பூசலிட்டு

எழுநா ளிரட்டி எல்லை சென்றபின்

தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி

மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில்

கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்

எம்முறு துயரம் செய்தோர் யாவதும்

தம்முறு துயரமிற் றாகுக வென்றே

விழுவோ ளிட்ட வழுவில் சாபம்

பட்டனி ராதலிற் கட்டிரை கேள்நீ

விளக்கம்

கொலைக்களத்தில் இறந்துபட்ட சங்கமனின் மனைவியான ‘நீலி’


என்பவள் தனக்கொரு நிலைக்களமும் காணாது துடிதுடித்தாள்.அரசே
இது முறையோ?ஊராரே இது முறையோ?சேரியினரே இது
முறையா? என்று அரற்றினாள்.மன்றங்களிலும் தெருக்களிலும்
சத்தமிட்டாள்.பதினான்கு நாட்கள் சென்ற பின்,தன் ‘கணவனைத்
தொழும் நாள் அது’ எனப் பலவாறான அவனைப்
போற்றி,கொல்லப்பட்ட காதலனோடு தானும் ஒன்று சேரக்
கருதினாள்.அப்போது, ‘எமக்கு இத்தகைய பெருந்துன்பத்தைச்
செய்தவர் எவ்வகையானும் அவரும் இத்தகைய துன்பத்தையே
இப்பிறப்பில் அடைந்தீர்கள்.
மதுராபதி தெய்வம் மேற்கண்டவாறு கூறியது.இதன்வழி,
“ஊழ்வினையாலேயே பாண்டியன்
தவறிழைத்தான்;ஊழ்வினையாலேயே கோவலன் கொலையுண்டான்”
என்று அத்தெய்வம் கண்ணகிக்கு உணர்த்தியது.சிலப்பதிகாரத்தில்
பல இடங்களில் ஊழ்வினை பற்றிய செய்தியிருப்பினும்
இப்பகுதிதான் முற்பிறப்பில் கோவலன் செய்த தவறு என்ன
என்பதை நமக்கு எடுத்தியம்புகிறது.

ஊழ்வினையைத் தடுக்க முடியாது.அது பயனை ஊட்டியே தீரும்”


என்ற கருத்தை வலியுறுத்தவே கோவலனின் முற்பிறப்புச்
செய்தியைக் கூறிய மதுராபதி தெய்வம் தொடர்ந்து,உம்மை வினை
வந்து உருத்தக் காலை,செம்மையிலோர்க்குச் செய்தவம் உதவாது”
என்றுரைக்கிறது.

‘முன்வினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகரச்


செய்யும்போது அத்தீவினையாளருக்கு எந்த தவமும் பயன்படாது;
அவ்வூழின் செயலைத் தடுக்க முடியாது’ என்பது இதன் பொருள்.
நாம் செய்த வினைப்பயனை நாம் அனுபவிக்காமல் இருக்க
முடியாது.இந்த நம்பிக்கையுடைய மக்கள் அறநெறியைப் பின்பற்றி
நடப்பார்கள்.

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’


மேற்கோள் நூல்கள்

1.KESUSATERAAN TAMIL III MODUL

2.இணையம்

You might also like