You are on page 1of 36

ஆய்வு அறிமுகம்

“வண்டல் உணவுகள் காட்டும் சமுதாயம்” என்பது ஆய்வேட்டின் தலைப்பாகும்

ஆய்வு நோக்கம்:

சோலை சுந்தர பெருமாள் அவர்களின் வண்டல் உணவுகள் நூல் வழியாக சமுதாய


அமைப்பினையும், உணவில் அமைந்த சமூக ஏற்றத் தாழ்வு புலப்பாட்டு நிலையையும், அதற்கான
தீர்வுகளையும் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஆய்வுக்குரிய முதன்மை நூல்:

சோலை சுந்தரபெருமாள் அவர்களின் ’வண்டல் உணவுகள்’ என்ற நூலே முதன்மை


ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.

ஆய்வு எல்லை:

வண்டல் உணவுகள் நூலில் கூறப்பட்டுள்ள சமுதாய அமைப்பும், உணவில் அமைந்த ஏற்றத்


தாழ்வுகளும் அதற்கான தீர்வுகளும் ஆய்வு எல்லையாக அமைகின்றன.

துணைமை ஆதாரங்கள்:

சமுதாயம் பற்றியும், உணவு பற்றியும் வெளிவந்த நூல்கள், ஆய்வேடுகள் ஆகியன


ஆய்வுத்துணைமை ஆதாரங்களாகக் கொள்ளப்படுகின்றன.

ஆய்வேட்டின் அணுகுமுறை:

சமூகத்தைப் பற்றிக் கூறுவதால் சமூகமுறைத் திறனாய்வும், பகுத்துக் கூறுவதால் பகுப்புமுறைத்


திறனாய்வும், இயல்களை விளக்கிக் கூறுவதால் விளக்கமுறைத் திறனாய்வும் ஆய்வேட்டின்
அணுகுமுறையாக அமைகின்றது.

ஆய்வேட்டின் அமைப்பு:

’வண்டல் உணவுகள் புதினம் காட்டும் சமுதாயம்’ எனும் தலைப்பில் அமைந்துள்ள இவ்வாய்வு


பின்வரும் இயல் பகுப்புகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

ஆய்வு அறிமுகம்

இயல் 1. சமுதாய அமைப்பு

1
இயல் 2. உணவுகள்

இயல் 3. வேளாண்மையின் இன்றைய நிலை

ஆய்வு நிறைவுரை

துணைநூற்பட்டியல்

ஆய்வு அறிமுகம்

ஆய்வு அறிமுகத்தில் ஆய்வுத்தலைப்பு, ஆய்வின் நோக்கம், முதன்மை ஆதாரம், துணைமை


ஆதாரங்கள், ஆய்வு அணுகுமுறை, ஆய்வேட்டின் அமைப்பு முதலியன விளக்கிக் கூறப்பட்டுள்ளன.

இயல் விளக்கம்

’சமுதாய அமைப்பு’ என்ற முதல் இயல் உயர் சாதியினர் தாழ்த்தப்பட்ட சாதியினரைத் தங்கள்
அடிமைகளாக வைத்திருப்பதையும் அவர்களின் துன்பங்களையும் எடுத்துக்காட்டுகிறது.

’உணவுகள்’ - என்ற இரண்டாம் இயல் மக்களின் உணவுமுறையில் காணப்படும் ஏற்ற


தாழ்வுகளையும், பாராம்பரிய உணவுகளையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

’வேளாண்மையின் இன்றைய நிலை’ என்ற மூன்றாம் இயல் மரபணு மாற்றப்பட்ட விதையினால்


ஏற்படும் விளைவுகளையும் விவசாயிகள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டுகிறது.

இயல் வாரியாகக் கூறப்பட்டுள்ள தொகுப்புரையில் உள்ள கருத்துக்கள் யாவும் இவ்ஆய்வேட்டில்


உள்ள முடிவுரைப் பகுதியில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

ஆய்வேட்டின் நிறைவுப் பகுதியாக துணைநூற்பட்டியல் அமைந்துள்ளது.

2
இயல்-1
சமுதாய அமைப்பு
முன்னுரை:

ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் மக்கள் கூடி வாழும் போது அவர்கள் ‘சமுதாயம் ‘எனச்
சொல்லப்படுகிறார்கள். அந்நிலப் பகுதிக்கு ஏற்றவாறு விவசாயம் உள்ளிட்ட தொழில்கள்
அமையப்பெறுகின்றன. தொழிலின் அடிப்படையில் பல சமூக அமைப்புகள் தோன்றின. அவை
சமுதாய ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிவகை செய்தன. முதலாளித்துவச் சமூகம், வளர்ச்சி அடைய
அடித்தளமாகப் பல சமூகங்கள் இருந்திருக்கின்றன என்பதை வரலாறு தெளிவு படுத்தியிருக்கிறது.
அவ்வாரலாற்றுக் கண்கொண்டு தான் வண்டல் நிலத்தையும், அந்நிலத்தில் வாழ்ந்த- வாழும்
மக்களின் பண்பாட்டுத் தளத்தையும் அதன் பரிணாமத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
அவ்வகைப் புரிதலுக்கு சோலை சுந்தரபெருமாளின் ‘வண்டல் உணவு’ நூல் துணை செய்கிறது.

நிலப்பாகுபாடு:

தமிழ் மண்- குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலப்பாகுபாட்டைக்


கொண்டிருந்தது. இம்மண்ணில் வாழ்ந்த மக்களும் அந்தந்த நில வளமைக்கு ஏற்ப பண்பாட்டுத்
தளத்தில் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்திருக்கின்றார்கள் என்பதை நம்பி அகப்பொருள்
விளக்கம்,”பழனம் (வயல்) பழனம் சார்ந்த இடம் மருதம்”1 எனச் சுட்டுகிறது

இம்மண்ணுக்கும் மக்களுக்கும் உரித்தானது இது என்பதை தெளிவாகத் தொல்காப்பிய இலக்கண


நூல் குறிப்பிடுகிறது. இது இன்றைக்கும் சிறந்த ஆவணமாக இருக்கிறது. தொல்காப்பியம் பகுத்துக்
காட்டும் மருத நிலமும் அதன் மக்களும் மேற்கொண்டிருந்த வாழ்க்கையையும், பண்பாட்டுத்
தளத்தையும் விரிவுபடுத்திப் பார்க்கும் வடிவமே ‘ வண்டல் மண்’ இதனை ஒற்றை வடிவத்தில்
சொன்னால் மருதமே வண்டலாக இருக்கிறது. காவிரிக்கரையே மருதத்தில் வளத்தைப்
பெருக்கியது. இந்த நதிக்கரையோர வண்டல் மக்களின் வாழ்க்கை இயற்கையைச் சார்ந்தே
அமைந்திருந்தது. அதனை இந்நூல் விளக்கி உரைக்கின்றது.

நிலவுடைமைச் சமுதாயம்:

உடல் வலிமையும், உழைப்பும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை என்பதைத் தெளிவாக


உணர்ந்த சமூகமே “நிலவுடைமைச் சமூகம்” நிலவுடைமை சமூகம் உருவாக்கிய சுரண்டலையும்,
அடக்கு முறையையும் எதிர்த்துப் போராடும் வாழ்வுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் உடலையும் மனதையும்
சமனப்படுத்திக் கொண்டார்கள். சமூக வளர்ச்சிப் போக்கில் பெரும்பான்மையாக வாழும் உழைக்கும்
சமூகம் சுரண்டலை எதிர்த்து விடாத வாழ்முறையை நிலவுடைமைச் சமூகம் தந்திரமாக உழைக்கும்
சமூகத்தின் மீது சுமத்தியிருக்கிறது. அதற்கு ஏதுவாய் நிலவுடைமையை ஆட்டி வைக்கும்
“வைதீகம்”, “அர்த்தசாத்திரம்”, “மனுசாத்திரம்”, காமசாத்திரம்” என்பவற்றைச் சமூகச் சட்டமாக
ஆக்கிக் கொண்டு உழைக்கும் சமூகத்தின் வாழ்முறையைத் தீர்மானிக்கிற இடத்தைக் கைப்பற்றிக்

3
கொண்டிருந்தது. அவற்றை உழைக்கும் சமூகம் மீறிடும் போது, கொடிய தண்டனைக்கு உள்ளாக்கும்
படியான வழியையும் வகுத்திருந்தது. நிலவுடைமைச் சமூகம் உருவாக்கிய சுரண்டலையும்
அடக்குமுறையையும் கண்டு, உழைக்கும் சமூகமத்தினர் இயற்கை வளங்களைத் தேடி இடம்
பெயர்ந்திருக்கின்றனர் என்பதை, “எல்லாத்தையும் விட்டு வருமானம் எங்கே வருதோ அதன்
போக்கில் தான் போகனும்”2 என நூல் குறிப்பிடுகிறது. நேல்லரிசிச்சோறு உடைமைச் சமூகத்திற்கும்,
உழைக்கும் சமூகத்திற்கும் பொதுவாக இருந்தது. பிரதான உணவான நெல்லரிசிச் சோறு படிப்படியாக
உழைக்கும் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. அதனால் இயற்கை உணவினையே உட்கொண்டனர்.
உழைப்பில் விளைந்த நெல்லரிசிச் சோற்றைத் தின்ன தங்களுக்கு உரிமை உண்டு என்று கோரி,
போராடத் தயக்கம் காட்டினர். இயற்கை, வளர்த்து வரும் உயிரினங்களைக் கொண்டே
தங்களுக்குரிய உணவில் ஒரு பகுதியைத் தேடிக் கொண்டனர். இதிலும் உடைமைச் சமூகம் “தன்
பங்கு தலைப் பங்கு” என்று தலை நிமிர்ந்து கொண்டது. இதனால், “தலை,வலை நாட்டாமைக்கு”
என்ற வழக்கு நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டது. நிலவுடைமைச் சமூகமே உழைக்கும் மக்களின்
உழைப்பைச் சுரண்டிக் கொண்டு “கூலிப்படியையும் சுருக்கிப் போட்டது. அதனால், வயிற்றுக்கும்
வாய்க்கும் போராட வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டுப்போனார்கள். . வாரம் என்பது நிலத்தில்
விளையும் விளைச்சலில் தொடக்க காலத்தில் சரிபாதியாகவும் காலப்போக்கில்
குத்தகைக்காரர்களை மூன்றில் ஒரு பங்கு நிலவுடைமையாளர்களுக்கு அளந்து விடும் முறையை
நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்படி சாகுபடிக்கு நிலங்களைப் பெற்றவர்கள் அனைவரும்
நிலத்தில் உழைப்பவர்களாக இருந்ததால் உழுதுண்பவர்களாக அடையாளப்பட்டார்கள் . நிலவுடைமைச்
சமூகம் பயிர் உற்பத்தியல் செய்யப்படும் நெல்லில் இருந்து எடுக்கப்படும் அரிசியின் தராதரம்
கண்டறியப்பட்டவுடன் தங்களுக்கு என்று உயர் ரகமாகக் கருதும் நெல்லை தங்கள் தேவைக்காக
தனியாக உற்பத்தி செய்வதில் ஈடுபாடு செலுத்தி சேமித்துக் கொண்டனர்.

சாதிப்பாகுபாடு:

நிலவுடைமையைக் கொண்டவர்கள் உடையார்கள், முதலியார்கள், பிள்ளைமார்கள்,


நாயுடுமார்கள், நாடார்கள், பிராமணர்கள், இவர்கள் தங்களை உயர்ந்த சாதியினர் என்று
அடையாளப்படுத்திக் கொண்டனர்.

“சாதிப்பாகுபாடு நால்வருணத்தை வற்புறுத்துகிறது. நால்வருணத்தினர் மட்டும் அல்லாமல்


மேலும் பஞ்சர்,பறையர் என்றும் சொல்லப்படுவதற்கு இந்து மதத்தில் எவ்வித ஆதாரமும் இல்லை.
ஆயினும் நடைமுறையில் ஒரு பகுதிய மக்கள் இவ்வாறு உள்ளனர்”3

மேற்கண்ட வடிவத்தில் தாழ்த்தப்பட்ட பறையர், பள்ளர்களில் உழைப்பாளிகளாக


அடக்கப்பட்டவர்களாக இருந்திருக்கின்றனர். 1960-கள் வரையிலும் கூட இவர்கள் எந்த
உரிமையையும் பெற முடியாத அடிமைகளாகத்தான் இருந்தார்கள்.

“பறையர் என்ற குலத்தினரைப் பற்றி இலக்கியங்களிலும் , கல்வெட்டுக்களிலும் பல செய்திகள்


கிடைக்கின்றன. பறையர்கள் தனிச் சேரிகளில் வாழ்நது
் வந்தனர். அவர்களுக்கெனத் தனிச்
சுடுகாடும் ஒதுக்கப்பட்டிருந்தது.”4

4
உயர் சாதியினர் சிலரே தங்களை “மகாசனங்கள்” என்று நிலைநிறுத்திக் கொண்டனர். இந்த

மகாசனங்கள் மட்டுமே “மாகாணங்கள் என்று நிறுவனமாகச் செயல்பட்டார்கள்.

“உழுதுண்டு வாழ்ந்து வந்த வேளாண் மக்கள் குடிபொருந்திய இடத்திற்கு ‘ ஊர்’ என்று பெயர் .
உழவுத் தொழில் மேற்கொண்டிருந்த வேளாண் குடிகளுடைய குழுக்கள் ‘சித்திரமேழி’என்ற பெயரில்
அழைக்கப்பட்டனர். பிராமணர்களின் குடியிருப்புகள் ‘அகரம்’, ’பிரமதேயம்’, ’சதுர்வேதி’ மங்கலம்
என்று அழைக்கப்பட்டன.”5

எல்லா மக்களும் சமம் என்பதை “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கணியன் பூங்குன்றனார்
கூறுகிறார்.

“பிறப்பிலே சாதி மதத்திலே சாதி

பேசிடும் மொழியிலே சாதி

நிறத்திலே சாதி நாட்டிலே சாதி

நீதியில் நிறையினில் சாதி

அறத்திலே சாதி ஆலயச் சாதி

அழுகிய பிணத்திலும் சாதி”6

என்று சாதி பற்றித் திரு.வி.கல்யாண சுந்தரனர் கூறுகிறார்.

“படிப்பாலும், இடப்பெயர்வாலும் மாறாதது மாறமுடியாதது என்று நம்பப்படுவது சாதியம். காரணம்


சாதியம் பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது”7 என்கிறார் க.ப.அறவாணன்.

“எங்கே ஊர்களில்

ஜாதி இல்லையோ

அங்கே கூவுக சேவல்களே”8

என்று கூறுகிறார் வைரமுத்து.

“ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை சாதியில்”9

உயர்சாதியினர், கீழ்ச்சாதியின மக்களை அடிமை நிலையில் வைத்திருப்பதை இன்னும் ஆங்காங்கே


காணமுடிகிறது.

தீணட
் ாமை:

உழுவித்து உண்பவர்களாக இருந்தவர்கள் வளர்ந்து வந்த சமூக வளர்ச்சியில் மாற்றம் கண்டு


சாதிப்பண்பாட்டில் தீண்டாமைக்குள் அடக்கப்பட்டவர்கள். அவர்கள் பெரும்பான்மையைக்
கொண்டவர்களாக இருந்தார்கள். இப்பண்பாடு காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுத் தான் இருக்கிறது.
சமூக வேலைப் பிரிவினையின் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை ஒடுக்குமுறைச் சட்ட திட்டங்களால்

5
உருவாக்கப்பட்டதன் வடிவக் கூறே தீண்டத்தகாதவர்கள். “சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மக்கள்,
விதியின் மீதும் இறைவன் மீதும் பழியைப் போட்டு விட்டு இதுதான் தமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை
என்று செயலற்றும், சிந்தனையற்றும் முடங்கிக் கிடந்தனர்.”10 அச்சமுகத்தில் தீண்டத்தகாதவர்கள்
என இம்மக்களை ஊருக்குள் ஒதுக்குப்புறத்தில் ஒதுக்கி வைத்தனர். “தின்னதுக்கு திணவு”
“தின்ன மண்ணுக்குச் சோவை”11 என்ற போக்கில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்
கொண்டார்கள். உடைமைச் சமூகம் ஒதுக்கப்பட்ட மக்களைக் கொண்டே கோவில்களைக் கட்டினர்.
ஆனால், அதனுள் வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பசுவின் பால் ஊட்டச்சத்து நிறைந்தது.
அது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. தீண்டாமைக்கு உட்படுத்தியிருந்த
மக்களை நிலவுடைமைச் சமூகம் 19-ம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரையிலும் பசுவின் பாலைப்
பயன்படுத்த அனுமதிக்கவில்லை. தீண்டாமைதக்கு உட்படுத்தியிருந்த பண்ணை அடிமைகள் தான்
மாடுகளின் சாணத்தை அள்ளிக் கொட்டினார்கள் . அம்மாடுகளுக்கு தீவனம் போடுவதில் இருந்து
அனைத்துப் பராமரிப்புப் பணியையும் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

“தீண்டாமை ஒரு பாவச் செயல்

தீண்டாமை ஒரு பெருங் குற்றம்

தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்”12

என்றெல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர தீண்டாமையை அடியோடு அழித்திட உரிய


முயற்சிகள் எடுத்தாலும், முற்றிலுமாக அழிக்கப்படவில்லை. சமுதாயத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர்
என்ற நிலையில் “தீண்டாமை” இன்னும் வழக்கில் உள்ளது.

சாதி அடிப்படையில் தெய்வ வழிபாடு:

சாதி அடிப்படையில் தெய்வ வழிபாடு குறித்து,

1. ஆண் தெய்வங்கள்

2. பெண் தெய்வங்கள்

3. குல தெய்வங்கள்

4. சாதித் தெய்வங்கள்

5. ஊர்த் தெய்வங்கள்13

என டாக்கடர். சு.சக்திவேல் அவர்கள் நாட்டுப்புறத் தெய்வங்களை வகைப்படுத்துகிறார்.


காவிரிக்கரை வண்டல் மண்ணில் பெரும்பான்மையாக வாழ்நத
் ோர் ’சிவமதத்தைப்’ பின்பற்றி
இருந்தார்கள். இந்த ஆதி சிவமக்கள் தமிழையே தங்கள் தாய்மொழியாகக் கொண்டு
வாழ்ந்தார்கள்.

6
“சிவன் வழிபாடு தொன்று தொட்டே தமிழகத்தில் வழங்கி வருகின்றது. சிவனையே முழுமுதற்
கடவுகளாப் பண்டைய தமிழர் வழிபட்டு வந்தனர் என்று சங்க இலக்கியச் செய்திகள்
கூறுகின்றன.”14

தமிழ்ச் சைவமதம் உள்ளடக்கி வைத்திருந்த பெருவாரியான உழைப்பாளி மக்கள் நாட்டார் தெய்வ-


சிறுதெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். தாழ்த்ப்பட்ட பண்ணை அடிமைகள் மாரியம்மன்,
காளியம்மன், காத்தவராயன், முனியன், காட்டேரி, வீரபத்திரன் போன்ற சிறுதெய்வங்களை வழிபாடு
செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். காளி, துர்க்கை போன்ற பெண் போன்ற பெண்
தெய்வங்களுக்கு வழிபாடு நடத்துவதைக் கையில் எடுத்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள் .
தொல்காப்பிய இலக்கணம் கண்ட தொல்காப்பியர், “வேந்தன் மேய பெரும்புனல் உலகம்”15 என்கிறார்.
இப்படி என்றால் ஐவகை நிலங்களுக்கும் தனித்தனி தெய்வங்கள் இருப்பின் எல்லாவற்றிற்கும் மேலாக
இருப்பவர் வேந்தன் ஆகிறான்.

மலை, காடுகள் அழித்து வேளாண்மை பெருக்கம் அடைந்த போது ’முருக வழிபாடும்’ வேளாண்
மக்களுக்கு உரியதாகியிருக்கிறது. இதனால் தான் இம்மண்ணின் பெருங்கடவுளாக ‘சிவன்’
தோன்றியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள். இவ்விரண்டு
கடவுளர்களும் இம்மண்ணின் ஆதிக்கடவுளர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிபாடு
நடத்துவதை இன்றைக்கும் இம்மண்ணின் மக்கள் நடைமுறையில் வைத்திருக்கிறார்கள் .
‘செவ்வாய்ப்பிள்ளையார்’ என்று பெண்கள் மட்டுமே நள்ளிரவில் கூடி நடத்தும் வழிபாடு
இம்மக்களிடம் புகழ்பெற்றது.

பண்ணை அடிமைகள்:

பண்ணை அடிமைத் தொழில் செய்பவர்கள் நிலவுடைமை சமூகக் காலகட்டம் முதலே அந்தந்த


நிலவுடைமையாளர்களின் அண்டையில்- மனையில் வீடு கட்டிக்கொள்ள உரிமை பெற்று இருந்தனர்.
உழைத்து வாழ்க்கை நடத்தும் மற்ற சாதியினரும் பண்ணை அடிமைகள் தான். “கீழைத் தஞ்சை
மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வெறும் கூலிகளாக மட்டுமல்ல
அடிமைகளாகவுமே நடத்தப்பட்டு வந்தனர்.”16 உழுது உண்பவர்களாக, உயர் வர்க்கத்தவர்களுக்குச்
சேவகம் செய்பவர்களாக வைத்துக் கொள்ளப்பட்ட பண்ணை அடிமைகள், ஊர் ஊழியம் செய்யும்
வெட்டிச்சேவர்கள் ஆகிய இருவரும் ஒரே கோட்டில் தான் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். விடியலில்
கோழி கூவிடும் போதே பண்ணை அடிமைகள் பணியாற்ற வயல்வெளிக்குச் சென்றிட வேண்டும்.
அதுபோல அந்தியில் பொழுது இறங்கும் போது, அதாவது இரை தேடிச் சென்ற பறவைகள் இருப்பிடம்
தேடிப் பறந்து செல்லும் நேரத்தில் தான் பணிகளை முடித்துக் கொண்டு கரையேற வேண்டும் . அது
அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட கடப்பாடாகவே இருந்தது. “இருள்புலர் காலை மருதத்திற்கு
உரித்தே”17 என்கிறார் நாற்கவிராச நம்பி. “வைகறை விடியல் மருதம்”18 என்கிறார் தொல்காப்பியர்.
ஆக மருதத்தின் பொழுது வண்டல் நில உழைக்கும் மக்களின் பொழுதாக மாற்றம் பெற்றது. அப்படியே
கரையேறவும் தலையாரிகளோ பண்ணையின் காரியக்காரர்களோ கையசைத்தால் தான் பணியை
முடித்துக் கொள்ள முடியும். இதனை மீறுபவர்களுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது. அதற்கு சமூக
சட்ட திட்டங்கள் அனுமதி அளித்திருந்தன. நிலவுடைமைச் சமூகம் தொடக்க காலத்திலேயே

7
வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்திடும் உற்பத்திக் கருவிகளின் ; திறனை அதிகரிக்கும்
நுட்பத்தைப் பயன்படுத்தி மேன்மைப்பட்டிருந்தது. அதற்கு வேண்டிய கடின உழைப்பைப் பெறவே
அச்சமூகம் பண்ணை அடிமை முறையைக் கட்டமைத்துக் கொண்டிருந்தது. “பண்ணை அடிமை
முறை தான் நிலவுடைமைச் சமூகத்தின் உயிர் நாடியாக அமைந்து போனது. நிலவுடைமையாளர்களின்
மாடுகளையும், ஆடுகளையும் பராமரிக்க என்று பண்ணை ஆட்களாகவோ தினக்
கூலிக்காரர்களாகவோ அமர்வதற்கு முன் இவர்கள் ’அறையாள், அரைப் படி’ என்ற பகுப்பில் “எட்டு
வயது தொடங்கி பதிமூன்று வயது வரையிலும் உள்ள பிள்ளைகள் வேலைக்குப் போக வேண்டும்”
சிறுவர்கள் விடியலில் போனால் அந்தி சாயும் நேரத்தில் தான் உரிமை உடைய மாட்டுக் கொட்டிலுக்குத்
திரும்பி வருவார்கள். அதுவே அவர்களுக்குக் கட்டளையாக இருந்தது. கடந்த நூற்றாண்டில்
முப்பதுகளுக்குப் பிறகு அம்மக்கள் நடத்திய சனநாயகப் போராட்டங்கள் மூலம் பண்ணைகளின்
அதிகாரம் படிப்படியாகச் சுருங்கி வந்தது. “இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டு
அரசாங்கம் ஒரு சட்டத்தின் மூலம் நிலவுடைமைக்கு உச்ச வரம்பு ஒன்று விதித்தது. அதன் கீழ்
குடிமக்கள் யாவரும் பதினைந்து ஏக்கர்களுக்கு மேல் உரிமை கொண்டாட முடியாது என்று திட்டம்
வகுக்கப்பட்டது. நிலமின்றி வருந்திக் கொண்டிருந்த குடிமக்களுக்கு நிலங்கள் பங்கீடு செய்யபடபட்டு
வந்தன”19 பண்ணைக் கூலி நடைமுறைக்கு வந்ததிலிருந்து பண்ணை அடிமைத்தனம் முற்றாக
ஒழிந்தது. அதற்காக உழைக்கும் மக்கள் கொடுத்த விலை மிக அதிகம்.

பெண்களின் நிலை:

உயர்வர்க்த்தினர் பெண்களை இழிவானவர்கள் என்று அடிமைப்படுத்திக் கொண்டனர்


இந்தியாவில் பெண்களது நிலையினைச் சீரழித்து ஆண்களுக்கு அடிமைகளாக்கினர். அதிலும்
விதவைகள் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகள’ பல-ஒரு விதவை மொட்டையடித்துக் கொள்ள
வேண்டும். கட்டிலில் படுக்கையில் படுக்கக் கூடாது தரையில் உறங்க வேண்டும். அவர்கள் வெற்றிலை
போடக்கூடாது. ஒரு நாளைக்கு ஒரு முறை தான் உண்ண வேண்டும். அவள் வெள்ளைப் புடவை தான்
உடுக்க வேண்டும். வளையல், கொலுசு ஆகியன அணியக் கூடாது. இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
உள்ளன. ஒரு விதவை அரைப் பிணம் என்று இந்துக்கள் கூறுவார்கள் . அவள் வீடடி
் ல் சமையல்
செய்யக்கூடாது. தெய்வங்களுக்குப் பூசை செய்யக் கூடாது.

“தாலிக்கு அரும்பெடுத்த

தட்டானும் கண் குருடோ?

சேலைக்கு நூலெடுத்த

சேணியனும் கண்குருடோ?

பஞ்சாங்கம் பார்க்கவந்த

பார்ப்பானும் கண்குருடோ?

எழுதினவன் தான் குருடோ?

எழுத்தாணி கூர் இல்லையோ?”20

8
என்று கணவனின் இழப்பிற்கு இவர்களெல்லாம் காரணமாக இருக்கலாம் என்று எண்ணி வேதனைப்
படுகிறாள்.

கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏறச் செய்வது இத்தகைய சூழ்நிலையில்


ஒரு படி முன்னேற்றமாகும். வுp தவைகளைக் கணவனது உடலுடன் சேர்தது
் எரிக்கும் இழிநிலை
ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவிலும், இந்தியாவில் குடியேறிய ஆரிய சமூகத்திலும் இல்லாத
பழக்கமாகும். “சோழர் காலத்திலும் பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை .
ஆனால் அரசியர் சிலர் தம் கணவனுடன் உடன்கட்டையேறினர் எனக் கல்வெட்டுக்கள்
கூறுகின்றன”21

ஆரம்பத்தில் எல்லாத் தொழில்களும் வீட்டுத் தொழில்களாக இருந்தன. இவற்றைப்


பெண்களே வளர்த்தனர். அவர்கள் இல்லத்தை உருவாக்கினர். காலப் போக்கில் உணவைச் சமைப்பது,
மக்களுக்கு ஊட்டுவது போன்ற பணிகளால் பெண்கள் முழுக்க முழுக்க முடக்கப்பட்டு வீட்டிலேயே
இருக்க வேண்டியவர்களானார்கள். “சமையலறையில் அவள் இருப்பது தான் அவளுடைய
இல்லத்திற்கு மைய அச்சாக அமையும் என்பதாக ஆணாதிக்கச் சமூகம் அவளைக் கட்டிற்குள்
வைத்திருக்கிறது”22 குடும்ப வேலைகள் அனைத்தும் பெண்களே செய்யக் கடமைப்பட்டவர்களாக
ஆக்கப்பட்ட நேரத்தில் சமையல் செய்வது பெண்களுக்கே உரியதாக மாற்றம் செய்யப்பட்டதுதான்
இன்றைக்கு வரைக்கும் பெண்களுக்கு அது அவர்கள் தலையெழுத்து என்று தீர்மானிக்கப்பட்டது.
அக்காலத்தில் தான் “அடுப்படியே திருப்பதி ஆம்படையானே சந்நிதி”23 என்ற சொலவடை
புழக்கத்தில் வந்திருக்க வேண்டும்

பெண்களின் வேளாண்பணி:

தானியம் சேகரிப்பது தொடக்க காலத்தில் பெண்கள் தொழிலாக இருந்தது.


“வேளாண்மையைக் கண்டு பிடித்தவர்களும் பெண்களே” எருதுகளைப் பூட்டி ஏர் உழுவது கண்டு
படிக்கும் வரை வேளாண்மை, பெண்கள் தொழிலாகவே இருந்தது. பழைய கற்காலத்தில் நிலத்தில்
தோண்டிக் கிழங்கு எடுப்பதற்குப் பெண்கள் பயன்படுத்திய குச்சியிலிருந்து தான் மண்வெட்டி
பிறந்தது. தொல் பழங்கால வேலைப் பிரிவினையில் காய்கறிப் பொருட்களைச் சேகரிப்பது, பயிரிடுவது
ஆகியன பெண்களது தொழில்களாக இருந்தன. வீட்டுப் பெண்களை கொளுத்தும் வெயிலில்
குழந்தைகளை மார்பில் அணைத்தவாறு விதை விதைப்பதற்கு அனுப்புவதை ஒரு கிருஸ்துவ
கத்தோலிக்கச் சாமியார் கண்டித்தார். அதற்கு, அங்குள்ள ஆண்கள், பெண்கள் தாம்
குழந்தைகளைச் சுமப்பவர்கள். பெண்கள் நிலத்தில் விதைக்கும் போது சோளக்கதிர் இரண்டு,
நான்காகிறது. கூடை நிறையக் கிடைக்கிறது. அதே போன்று எல்லாமே பல்கிப் பெருகுகின்றன.
பெண்களுக்குத் தான் பிள்ளை பெறத் தெரியும். அவர்களுக்கு விதையை அதிகரிக்கவும் தெரியும்.
அவர்களே விதைக்கட்டும். அவர்களுக்குத் தெரிந்தது எங்களுக்குத் தெரியாது என்று கூறினார்கள் .
தொடக்கத்தில் பெண்கள் உணவுப் பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கி வேளாண் தொழிலில்
ஈடுபட்டது போலவே உணவைப் பதப்படுத்ததுதலிலும், அதனைப் பஙங்கீடு செய்வதலும் அவர்களே
தலைமை தாங்கியிருக்கிறார்கள். வேளாண்மைக்கு மூலதாரமாக இருக்கும் விதைகளைக்
கோட்டையாகக் கட்டுதலின் போது, பெண்ணை முன்னிறுத்தியே செய்திருக்கிறார்கள். விதைகள்

9
அடங்கிய படியினைப் பெண்களை விட்டுக் கொட்டுகிறார்கள். கூடியிருக்கும் பெண்கள்
பாட்டிசைக்கிறார்கள். ஆடியும், பாடியும் கொண்டாடி மகிழ்கிறார்கள். இச்செயல்பாடு ஆதி வேளாண்
சமூகம் கொண்டிருந்த பண்பாடாகும். “வந்த பிடாரி இருந்த பிடாரியை விரட்டியது போல”24 என்ற
சொலவடை பிறந்த கதையையும் இவ்விடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும் இத்தொன்மம்
நமக்குத் தெரிவிபதாவது, விதையைப் பெண்களே பாதுகாக்கச் செய்திருக்கிறார்கள் என்பதைச்
சுட்டுகிறது. கோட்டை கட்டி விதைகளைப் பாதுகாப்பது வேளாண் மக்களிடம் இன்றைக்கும் இருந்து
வருகிறது. இவ்வழியே விதைகளைச் சிறிதேனும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

ஆணாதிக்கம்:

தாய்வழி உரிமை முறையின் வலுவைச் சிதைக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டதற்கு


இணையான நிகழ்ச்சியினை வேறு எங்கும் காணமுடியாது. தந்தைவழி உரிமை முறைக்கும், தாய்வழி
உரிமை முறைக்கும் இடையே போட்டிகள் இருந்தன. ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவில் தாய்வழி
உரிமை முறை நாகரீகம் வலுவாக வளர்ச்சி பெற்றிருந்தது. ஆரியர்களது தந்தைவழி உரிமை முறைக்கு
இது பலத்த எதிர்ப்பை அளித்தது. எனவே, இதனை அழிக்க வரம்பற்ற வன்முறை மேற்கொள்ளப்பட்டு
இருக்கிறது. அதன் வழியே தந்தைவழி உரிமை நிலைபெற்றது “மைத்ரேயினி சம்ஹிதையில்”
பெண்கள் பொய்யர்கள் என்றும், “தைரிய சம்ஹிதை” நல்ல பெண்ணொருத்தி கெட்ட ஆணை விடத்
தரம் குறைந்தவள் என்று கூறுகிறமுஷது. “கதா சம்ஹிதை” பெண் இரவில் கணவனை மயக்கிப்
பொருள் பெறுபவள் என்று கூறுகிறது. ஏனென்றால், வேதகால மக்கள் மேய்ச்சல் பொருளாதாரம்
தந்தைவழி உரிமைமுறை அமைப்பிற்கு அடிப்படையாக இருந்தததும், அதில் பெண்களுக்கு உயர்ந்த
இடத்தைத் தருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுமாகும் வேதகால சமுதாயத்தில் பெண்களது
நிலை தாழ்வுற்றதற்குக் காரணம் வேதகால மக்களது பொருளாதார வாழ்க்கையாகும்.

“பெண்ணை அடிமையாக வைப்பதை ஆண் தருமமாக்கினான் . இந்த ஆணாதிக்க வலிமையை தன்


உரிமை என்று கொண்டான்”25 வேளாண் குடியினரின் வாழ்க்கை தாய்வழி உரிமை முறையின்
கூறுகள் வலுவான இடம் பெற்றதற்குக் காரணம், அவர்களது பொருளாதார வாழ்க்கையின்
அமைப்பாகும். பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவும், வீட்டடிமைகளாகவும் மாற்றப்பட்டு
விட்டார்கள். இது ஆணாதிக்கக் கால கட்டத்தின் தொடக்கமாக நிலவுடைமைக் காலகட்டத்தின்
தொடக்கக் காலம் வரை தொடர்நது நீடித்துப் பின்னர் நிலைகொண்டு விட்டது. “இன்றைய
சமுதாயத்தில் பெண்களை, அறிவு, ஆற்றல், உழைப்பு, எழுச்சித்திறன் மிக்கவளாகக் கருதாமல்,
கவர்ச்சிப் படமாக, போகப் பொருளாகக் கணிக்கும் நிலை மேலோங்கி உள்ளது.”26 வளர்ச்சி அடைந்த
வேளாண் சமூகத்தில் ஆண்களே குடும்பத்தைத் தலைமையேற்று நடத்தினர். ஆண் தலைமையேற்று
இருந்தாலும், குடும்பத்தைச் செயல்படுத்தும் இடத்தில் பெண்ணே இருக்கிறாள். அதற்கான,
பொருளாதாரத் தேவையை ஆணிடமே எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது இந்த உரிமையை
பெண்ணானவள் கேட்டுப் பெற முடியாது? அப்படியான இடத்தை இச்சமூகம் தந்திடவில்லை.
“பெண்களை சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்திக்க விடாதவர்கள் ஆண்கள். பெண்கள் தங்கள்
உரிமைகளைத் தாங்களே அனுபவிப்பதற்கு மாறாக ஆண்கள் அவற்றைக் கையகப்படுத்திக்
கொண்டுள்ளனர்.”27

10
ஆணிடம் தேவை அனைத்திற்கும் எதிர்பார்த்து எதிராட விரும்பாத பெண்ணினம்
தனக்கான பொருளாதாரத்தைப் பெற மாற்றத்தைத் தேடி வைத்துக் கொண்டு தான்
இருந்திருக்கிறது. அது தான் “கோழி வளர்ப்பு” இதனைச் செய்திட பெண்கள் அதிக நேரத்தைச்
செலவிடத் தேவையிருக்கவில்லை. எளிய முறையில் பொருளாதாரத்தை பெற முடிந்திருக்கிறது
என்றால் அது கோழி வளர்ப்பில் இருந்து தான் இதனைச் “சிறுவாடு காசு” என்று
அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நாணயப் பொருளாதாரம் நடைமுறைக்கு வராத
காலத்திலும் பண்டமாற்று முறையிலும் பெண்கள் சேமிப்பை மேற்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இப்படி அடுக்குப் பானை இடுக்குகளிலும், குதிர் சந்துகளிலும், உண்டிகளிலும், சின்னக்
கலையங்களிலும் கமுக்கமாக சேமித்து வைத்தவை, புதைந்து போனவை ஏராளமுண்டு.

பிராமணர்களின் சமூகச் சட்டம்:

இம்மண்ணில் பாதிக்கும் மேலாக உள்ள வெள்ளாண்மை செய்யப்படும் சாகுபடி நிலங்கள்


கோவில்களுக்கும், மடங்களுக்கும் ‘பட்டா’ உரிமையோடு இருந்தன. புரோகிதர்களாக இருந்த
பார்ப்பனர்களே! தங்களைத் தாங்களே “வேத மதத்தவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக்
கொண்ட பிராமணர்களிடம் எஞ்சிய நிலங்கள் உடைமையாக இருந்தன. “பிராமணர்களுக்குத்
தானமாக வழங்கப்பட்ட நிலம் பிரமதேயம் எனப் பெயர் பெற்றது. கோவில்களுக்குத் தானமாக
வழங்கப்பட்ட நிலம் தேவதானம் எனப் பெயர் பெற்றது”.28 புரோகிதர்கள் எல்லோரையும் விடவும்
தங்களையே உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டனர். கொடியில் காய்க்கும் காய்களைப் பொதுவாக
எல்லோரும் வேறுபாடு இல்லாமல் பயன்படுத்தினார்கள். அதே நேரம் “பூசணிக்காய்” பிராமணார்கள்
மட்டுமே உண்ணக் கூடியது, வேறு யாரும் உண்ணக் கூடாது என்ற சட்டமுறை செய்தனர் . அதனை மீறி
பயன்படுத்திவிட்டால் அவர்கள் மீதும் சமூகச் சட்டம் தன்கடமையைச் செய்யும் “தமிழ் மக்கள்
சமூகத்தில் பிராமணரின் செல்வாக்கு ஓங்கி நின்றது. பிராமணர்கள் தனித்து வாழ்ந்து மக்களிடையே
குல வேறுபாடுகளைப் பெருக்கித் தமிழர் அனைவரையும் “சூத்திரர்” என்ற இழிகுலத்தினராகக்
கருதி கோவில்களிலும், மடங்களிலும் ஒதுக்கி வைத்து விட்டார்கள். கோவிலின் பாதுகாப்புப்
பணியும், அறக்கட்டளைகளும் பிராமணரிடமே ஒப்புவிக்கப்பட்டன.”29 உணவுப் பொருட்களில் மட்டும்
இவர்கள் இப்படியான சட்டத்தினை நடைமுறைப்படுத்தினார்கள் என்று விட்டு விட முடியாது.
உழைப்பாளி மக்களின் உழைப்பைக் கொண்டு இலுப்பை மரங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இலுப்பைப்
பூவிலிருந்து அதன் கொட்டை, மரப்பட்டை வரையிலும் உயர்ந்த மருத்துவக் குணம் கொண்டிருந்தன.
பெரும்பாலும் இம்மரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய் கோவில்களிலும், பிராமணர்கள்
வீடுகளிலும் மட்டும் விளக்கெரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இம்மரங்களைக் கொண்டு பிராமணர்கள்
மட்டுமே வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

தொகுப்புரை:

வண்டல் உணவுகள் எனும் நூலில் ஒடுக்கப்பட்டவர்களின் நிலை பற்றியும், நிலவுடைமையாளர்கள்


பண்ணை அடிமைகளை நடத்தும் முறை பற்றியும் கூறப்பட்டுள்ளது. சாதி வேற்றுமைக்கு ஏற்ப

11
தெய்வங்கள் இருப்பதை ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. பெண்களின் வேளாண்பணியும்
அவர்களது நிலைமையும் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆணாதிக்க சமூகத்தினால் நடக்கும்
சமுதாய விதிமுறைகள் என்ன என்ன ஆராயப்பட்டுள்ளது. பிராமணர்களின் சமூகச் சட்டம்
எத்தகைய உயர்நிலையில் நின்று மற்றாரை கீழந
் ிலைக்குத் தள்ளியது என்பதும்
தெரிந்துரைக்கப்பட்டுள்ளது.

12
குறிப்புகள்:

1. திருஞானசம்பந்தர்.ச.,(உ.ஆ), நாற்கவிராசநம்பி இயற்றிய


அகப்பொருள் விளக்கம்.ப-14.

2. சோலைசுந்தரபெருமாள், எல்லைப்பிடாரி, ப.69.

3. ஆனைமுத்து பெரியார்.வே.,.வெ.ராசிந்தனைகள் தொகுதி ப-57.

4. பிள்ளை, கே.கே, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், ப.332.

5. மேலது ப.310.

6. இராமச்சந்திரன், கோ., தமிழினமே மூத்த இனம் தமிழே

முதன்மொழி, ப-27.

7. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் (தொகுதி-1) ப.-119.

8. வைரமுத்து, வைரமுத்து கவிதைகள், ப-625.

9. கோவிந்தன், வை., பாரதியார் பாடல்கள், ப.-30.

10. முத்து, சி.எம்., வேரடிமண்,ப.-01.

11. சோலை சுந்தரபெருமாள், வண்டல் உணவுகள், ப-5.

12. மகாத்மாகாந்தி, காந்திய சிந்தனைகள்,ப-15.

13. சக்திவேல்,சு., நாட்டுப்புற இயல் ஆய்வு ப-229.

14. பிள்ளை, கே.கே., மு.கூ.நூ,ப-188.

15. இராசா,கி.தொல்காப்பியம் பொருளதிகாரம்,ப-03.

16. முத்து,சி.எம்., வேரடிமண் ப-01.

17. திருஞானசம்பந்தர் ச,மு.கூ.நூ,ப-17.

18. இராசா சி.மு.கூ.நூ,ப-05.

19. பிள்ளை,கே.கே., மு.கூ.நூ,ப-534.

20. சக்திவேல் சு,மு.கூ.நூ,ப-61.

21. பிள்ளை,கே.கே, மு.கூ.நூ,ப-334.

22. வெண்ணிலா அ., மீதமிருக்கும் சொற்கள், ப-166.

23. சோலை சுந்தரபெருமாள்,.மு.கூ.நூ,ப-26.

24. மேலது ப-27.

13
25. ராஜம் கிருஷ்ணன், பெண்விடுதலை, ப-55.

26. நிர்மலா ராணி வி.பெண்ணியத் திறனாய்வு, ப-25.

27. முத்துவேல், உடைமுள், ப-11

28. பிள்ளை கே.கே.,மு.கூ.நூ,ப-246.

29. மேலது ப-316.

14
இயல் - 2
உணவுகள்
முன்னுரை:

தமிழ்நாட்டின் நெற்கஞ்சியம் என்றழைக்கப்படுகின்ற தஞ்சை மாவட்டத்தின் “உணவுப் பண்பாடு”


குறித்ததொரு முக்கியமான நூலாக இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது. வண்டல் மக்களின்
பண்பாட்டில் உணவு வகித்த இடத்தை வசாய்மொழி வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும்
கருத்துறைப்புகள் இந்நூலினுள் இடம் பெற்றிருக்கின்றன.

நெல் உற்பத்தி முறை:

வேளாண்மையை ஆண்கள் தலைமையேற்று செய்யத் தொடங்கிய காலத்தில் உற்பத்தியில்


இருந்த நெல் வகைகளை அந்தந்த மண்ணின் பண்புக்கும், பருவச் சூழலுக்கும் ஏற்ற வகையான
நெல்லைப் பயிர் செய்தார்கள். உயர்வானதாகக் கருதும் நெல்லை எல்லாப் பருவத்திலும் பயிர் செய்ய
முடிவதில்லை. அதற்கான தனித்த பருவச்சூழல் அவசியமாகிறது. இதனால் உயர் ரகமாகக் கொண்ட
நெல்லை அதிகம் விளைவிக்காமல், அதிகம் விளைச்சலைத் தரும் நெல்லைப் பெருமளவில் உற்பத்தி
செய்து பொதுவிநியோகத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்திருக்கிறார்கள். நெல்லைப்
பயிரிடும் போது நிலத்தை உழுது நாற்று நடவு செய்யும் முன் இயற்கையில் கிடைக்கும் தழை
உரங்களாலும், மடித்தும் போன மண்புழுக்கள் புரளும் கால்நடைகளின் கழிவுகளாலும்
உரமூட்டினார்கள். அறுவடை தொடங்கும் முன் கொலுஞ்சியையோ, நரிப்பயிரையோ விதைத்து
வைத்து விடுவார்கள். வயல் முழுவதும் செடி மண்டிக் கிடக்கும். சாகுபடிக்கு ஏற்ற தருணத்தில் வரும்
தண்ணரை
ீ க் கொண்டு அந்த வயல்களில் தேக்கி வைத்து விடுவார்கள். அதனோடு கூடவே வயல்
வரப்புகளிலும், களத்து மேட்டிலும், திடல் திட்டுகளிலும், வளர்த்து வைத்திருக்கும் வேப்பமரங்களில்
இருந்து அதன் இலைக் கொத்துக்களையும் இன்னும் ஆடுதொடா என்று அழைக்கப்படும்
இலைகளையும் கட்டுக் கட்டாகப் பரப்பிடுவார்கள். அப்படி செய்து வைத்து விடுவதால், நீரைத் தேக்கி
வைத்திருக்கும் அந்த வயல் கரும்பச்சை நிறத்தில் தோற்றம் அளிக்கும் இப்படிக் கிடக்கும். வயலில்
ஏர்கட்டி உழுவதும் மேடு பள்ளங்களை மண்வெட்டி கொண்டு நிரவிவிடும் வேலைகளைத்
தொடர்ச்சியாக நடத்திடுவார்கள். இப்படி தயார்படுத்தி வைத்திடும் வயலில் நடப்படும் நாற்று பயிராகி
விளைந்திடும் விளைச்சலைச் சொல்லி மாளாது. “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி”1
என்ற பழமொழி தோன்றிய காலத்திலிருந்து இம்மண்ணில் காலால் மடை திறந்து நீர் பாய்ச்சின காலம்
எல்லாம் பொய்யாகி விட்டது. “தமிழகத்து மக்கள் மழையையே நம்பி வாழ்நது
் வந்துள்ளனர். உழவுத்
தொழிலைப் போற்றி வளர்த்துள்ளனர்”2 கடுமையாக, மண் வறண்டு போன பின்னரும் அம்மண்
கிளந்து ஒரு நேரத்தில் தானே விளைச்சலைப் பெறுகிறது. மக்கள் “மண் விளைஞ்சிட்டு” என்று
சொல்லிக் கொண்டு ஏர் உழவுக்குத் தயாராகி விடுவர்கள். இம்மண்ணானது ஏர்க் கலப்பையைக்
கட்டினதும் பொலபொல என்று கிளறப்பட்டு விடும். வெள்ளு விதை விதைப்புக்கு ஏற்ற பக்குவத்தை
அடைந்து விடுகிறது. வெள்ளு விதை என்பது கோட்டையில் உள்ள விதை நெல்லை அப்படியே

15
எடுத்துப் போய் தெளிப்பதாகும். தெளிக்கப்பட்ட விதை மேல் மண்ணோடு கலந்து கிடக்கும். மழைப்
பொழிவில் அவை முளைத்து ஒரு சாண் அளவுக்கு வளர்ந்த பின் தண்ணீரைத் தேக்கிக் களை
எடுத்து விடுவார்கள். இது “நடவு வெய்யாமல் நெல் பயிரிடும் முறையாகும்.” இதற்கு தெளிநாற்று
என்று பெயருண்டு. வழக்கமாக நாற்றாங்காலில் விதை பாவி, காலத்தில் பறித்து நடவு செய்யும்
விதைகளைத் தவிர்த்து இந்த மாற்று விதைகளையும் கண்டறிந்து அதைப் பாதுகாத்து
இருக்கிறார்கள்.

“விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது”3 (கு.எ.16)

என்பார் திருவள்ளுவர் இம்மண்ணில் வேளாண்மை பல்கிப் பெருகிய வரலாறு குறித்து முன்பகுதியில்


சொல்லப்பட்டுள்ளது. இந்த வண்டல் சோழநாடு சோறுடைத்து” “தமிழகத்தின் நெற்களஞ்சியம்”,
“நஞ்சை கொழிக்கும் நன்னிலம்” “நானிலம் போற்றும் நஞ்சை” “பொன் கொழிக்கும் பூமி”4 என்ற
போற்றுதலுக்குரிய மண்ணாகத் திகழ்கிறது.

“தமிழகத்தின் மிகச் சிறந்த தொழிலாக விளங்கியது உழவு தான். சங்க இலக்கியத்தில்


இதற்கு அளவற்ற சிறப்பு கொடுக்கப்பட்டுள்ளது. “உணவுப் பண்டம் உற்பத்தியாகக் கூடிய செழிப்பான
நாட்டை உடையவன் சோழன் குளமுற்றத்துத் எஞ்சிய கிள்ளி வளவன் ”5 என்று ஆவுர் மூலங்கிழார்
பாராட்டிப் பரவுகின்றார். இதன் மூலம் “மக்களுக்கு உணவை வழங்கிய உழவுத் தொழிலை
வளர்த்தலில் பழங்காலத் தமிழ் மன்னர்கள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தனர்”6 என்பது
தெளிவாகிறது.

கால்நடைகளின் பங்கு:

அக்காலத்தில் வேளாண் மக்களுக்குப் பக்கத் துணையாகவும், உற்ற துணையாகவும் இருந்தவை


கால்நடைகளே. இந்தக் கால்நடைகள் உற்பத்தி உறவுகளோடு நெருக்கமாகப் பின்னிப்
பிணைக்கப்பட்டு இருந்தன. “யானை கட்டிப் போர் அடித்தவர்கள்” என்று சோழ வளநாட்டின்
மக்களையும், வேளாண்மையின் பெருமையையும் பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள். இந்தப் பெருமை
வண்டல் நிலத்திற்கு உண்டு. கால்நடைகளில் குறிப்பாக பசுவினத்தைப் புனிதமாக மதித்தார்கள்
அதன் மூத்திரம் கூட ‘கோமியம்’ என்ற பெயரில் தீட்டைப் போக்குவதாக நம்பினர். பசுவினத்தில்
காளைகளையும், எருமை இனத்தில் கிடாரிகளையும், கடாக்களையும் முதன்மையான உற்பத்திக்
கருவியான ஏரில் பூட்டி, சேற்று உழவிற்கும், வைக்கோல்போர் அடிப்பதற்கும், வைக்கோலைப் பரப்பி
அதன் மேல் இவ்வகை மாடுகளைப் பிணையல் சுற்றிடச் செய்து வைக்கோலை மசிய வைத்து
அம்மாடுகளுக்கு உணவாகப் பயன்படுத்தினார்கள். அம்மாடுகளின் சாணத்தை பயிருக்குப்
பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்கிப் பயன் அடைந்தனர்.

16
நிலவுடைமையாளர்களின் உணவுகள்:

நிலவுடைமையாளர்கள் பலரும் உணவுக்காகப் புறா வளர்ப்பினில் ஈடுபட்டனர். மணிப்புறா,


சுட்டுப்புறா, வெள்ளைப்புறா போன்ற இனங்கள் கறி உணவுக்காகவே வளர்க்கப்பட்டன. மயிலின்
கறியும், மானின் கறியும் மிகவும் மென்மையானவை. இவை இரண்டும் சிறந்த உணவாகக்
கொள்ளப்பட்டன. முயலும் கறி உணவுக்காகவே வளர்க்கப்பட்டது. இவை அனைத்தும்
நிலவுடைமையாளர்களின் உணவாக மட்டுமே இருந்தன. கிச்சடிச் சம்பா என்னும் அதிசன்ன ரக
அரிசியை நிலவுடைமையாளர்கள் மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. மீன்
வகையில் உயர்ந்ததான ‘வரால்மீன்’ வெள்ளெலி, உடும்பு, மடையன் போன்றவற்றையும் உணவாகக்
கொண்டனர். பழையசோறு சிறந்த உணவாக நிலவுடைமையாளர்களால் விரும்பி உண்ணும் நிலை
ஏற்பட்டு இருக்கிறது. பச்சரிசிச் சோற்றை உயர்ந்த குடியினர் பயன்படுத்தினர்.

தாழ்த்தப்பட்டோரின் உணவுகள்:

இம்மண்ணில் வாழும் உயிரினங்களாகிய கோழி, மீன், எலி, நத்தை, நண்டு, வாத்து


போன்றவற்றையும் பறவை இனமாகிய காடை, கௌதாரி, மைனா, குயில் போன்றவற்றையும் விலங்கு
இனமாகிய வயது முதிர்ந்த மாடுகளையும், இறந்து போகும் மாடுகளையும் பண்ணை அடிமைகளாக
இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் உணவாக உட்கொண்டனர். உயர்சாதி பண்ணை அடிமைகளாக
இருப்பவர்கள் ஆடுகளை அறுத்து விருந்து உபசரிப்பது உண்டு. புழுங்கல் அரிசிச் சோற்றை
தாழ்த்தப்பட்ட குடியினர் உட்கொண்டனர்.

“அரிசிச் சோற்றையே பண்டைய தமிழர் தம் சிறப்பு உணவாகக் கொண்டனர். அவர்கள்


புழுங்கலரிசியையே உண்பது வழக்கம்.”7

தாழ்த்தப்பட்ட பண்ணை அடிமைகள் ஒட்டடைவகை அரிசிச் சோற்றை மீன் குழம்புடன் சேர்தது



உட்கொண்டனர். பழைய சோற்றையும் அதன் நீரையும் சிறந்த உணவாக தாழ்த்தப்பட்ட மக்கள்
உண்டனர்.

மறைந்துபோன நெல்விதைகள்:

இம்மண்ணில் வேளாண் மக்கள் காலம் காலமாகக் காப்பாற்றிய மரபான நெல் விதைகள் நம்மை
உரசிக் கூட பார்க்காமல் மண் மூடிப் போயிருக்கின்றன. ஆண்டுக் கணக்கில் மழை காணாமல்
வறண்டு போனதும், மாதக் கணக்கில் மழை கொட்டி வாரிக் கொண்டு போனதும் ஏராளம். தாது
வருடப் பஞ்சத்தினால் மட்டும் இருபதுக்கு மேற்பட்ட விதைகள் மருந்துக்குக் கூட வைத்துக் கொள்ள
முடியாமல் மக்கள் பசிக்கு இறையாகியிருக்கின்றன. எக்காலத்தோ வீசச
் த்தோடு பிறந்த “பசி
வந்தால் பத்தும் பறக்கும்”8 என்ற சொலவடை தாதுவருடப் பஞ்ச காலத்தில் உறுதியாகி
இருக்கிறன்றது. “தமிழகத்தில் தொன்று தொட்டு பாராம்பரியமாக விளைவிக்கப்பட்ட 3000-க்கும்
மேற்பட்ட நெல் ரகங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. அதற்குப் பதிலாக சத்துக்கள் குறைந்த
குறு ரகங்களுக்கு மவுசு அதிகரித்து விட்டது.”9 முன்னும் பின்னும் தள்ளினாலும் சுமார் முன்னூறு
ஆண்டுக் காலத்தில் வேளாண் மக்களின் வாழ்க்கை வீராப்புடன் நிமிர வைத்த ‘விதை நெல் முதலை’

17
நாம் அறிய வகை தொகை கிடைத்திடவில்லை. அதே நேரம் சங்க இலக்கியம் தொடங்கி பக்தி
இலக்கியங்கள், சிற்றிலங்கியங்கள் வரையிலும் காணக் கிடைக்கும் நெல் விதைகளைப் பற்றி
கேள்விப் படத்தான் முடிகிறது. லாமல் போயிருக்கிறது.

“கிச்சடிச்சம்பா” என்னும் அதிசன்ன ரக அரிசியானது சிவப்பு கிச்சடி சம்பா, வெள்ளை


கிச்சடி சம்பா என்று இரண்டு வகைப்படும். இதனைத் திட்டவட்டமாக நிலவுடைமையாளர்கள் மட்டுமே
பயன்படுத்தினார்கள் என்று அறிய முடிகிறது. “தொங்கட்டான்” நெல்லானது கொத்துக் கொத்தாக
கதிர்களைத் தொங்க விடும். கன்னிப் பெண்கள் அணியும் தொங்கட்டான் போல தோன்றி
அழகூட்டும். இந்த அரிசி மிகுந்த இனிப்புச் சுவை கொண்டது. “தங்கச் சம்பா” மஞ்சள் நிறம்
கொண்டது. இதில் கால்நடைகளுக்குத் தீவனமாக இருக்கும் வைக்கோல் மிகுதியாகக் கிடைப்பதால்
செல்வாக்கும் பெற்றிருந்தது. எப்படியான பருவச்கூழல் இருந்தாலும் விவசாயியை ஏக்கம் கொள்ளச்
செய்திடாது. “கட்டச்சம்பா” பழுப்பு நிறமுடையது. மண்ணில் இருக்கும் உரத்திற்கு ஏற்ப
விளைச்சலைத் தரும் “சேம்புச்சம்பா” வெளிர் சிவப்பு நிறம் கொண்டது. மக்கள் தங்கள் மொழியில்
சேம்பு சம்பா என்றே சொல்லிக் கொண்டனர் . இந்த அரிசிச் சோறு மக்களிடம் செல்வாக்குப்
பெற்றிருந்தது. “வெள்ளைச்சம்பா” வெண்ணிறம் கொண்டது. இந்தப் பயிர் ரோசக்காரப்பயிர் என்ற
பெயரைப் பெற்று இருந்தது. இந்த அரிசிச் சோற்றைத் தின்னுபவர்களுக்கு நீரிழிவு நோய்
வருவதில்லை.” “மடக்குறுவை” நெல்லின் நிறத்திலேயே இருக்கும். இந்த நெல்லரிசியை மருவரிசி
என்றும் அழைப்பார்கள். இது உழைக்கும் மக்களுக்கு ஏற்ற அரிசியாக இருந்திருக்கிறது. இந்த
அரிசியில் செய்த பழைய சோற்று நீரை அருந்தும் போது உற்சாகத்தோடு இருக்க முடியும்
என்கிறார்கள். “ஓட்டடை” வெள்ளை ஒட்டடை, சிவப்பு ஒட்டடை என்று இரண்டு வகைப்படும். இதில்
கிடைக்கப்படும் அரிசியும் நெல்லின் நிறத்தை ஒட்டியே இருக்கும். இரண்டு நாட்கள் கூட தண்ணீர்
ஊற்றாமல் வைத்துக் கொள்ளலாம். எளிதில் நொந்து விடாது. கட்டுச்சோறு கட்டுவதற்கு ஏற்ற அரிசி.
“கார்” அரிசி செம்பழுப்பு நிறமுடையது. இனிப்புச் சுவை கொண்டது. அவல் இடிக்கச் செய்யும் போது
இந்த நெல்லையே பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் சோறாக்கி உணவாக உண்ணவில்லை.
“எட்டாம்படி” வெளிர் சந்தன நிறத்தில் பளிச்சிடும் இதனை, எட்டாம் நம்பர் என்றும், பெருஞ்சீரகச்
சம்பா என்றும் அழைத்தனர். இவ்வரிசி ஏழைக்கிச்சடி என்ற பெயரையும் தக்க வைத்திருக்கிறது.
வேளாண் மக்களிடையே இந்த நெல்லுக்குப் பெரும் வரவேற்பு இருந்தது. தைப்பொங்கலுக்கு
வெள்ளாமை வயலில் இருந்து கொண்டு வரப்படும் புதிர் இந்த விளைச்சலில் இருந்து தான்
பெரும்பாலும் அரிசி பயன்படுத்தப்பட்டது. “பதினெட்டம்படி” வெள்ளைச் சம்பாவை ஒத்து வளரும்
தன்மை கொண்டது. வயலில் நடும் போது நல்ல வளர்ச்சியைப் பெற்று விளைச்சலையும்
வஞ்சகமில்லாமல் குவித்து விடும் தன்மை கொண்டது. “குடவாலை” வெள்ளைக் குடவாலை,
சிவப்புக் குடவாலை என்று இரண்டு வகை உண்டு. மருத நிலமும், நெ;யதல் நிலமும் ஒருங்கிணையும்
நிலப்பகுதியல் பயிர் செய்ய ஏற்றதாக இருக்கிறது. ஆதி வேளாண் மக்கள், குலக்குழு மக்கள்
பயன்படுத்திய மரபான நெல் வகையாக இருக்கலாம். இது பழைய சோற்றுக்கு சிறப்பிடம்
பெற்றிருக்கின்றது. 2011-ம் ஆண்டு மேற்சொன்ன நிலப்பகுதியில் இந்த இருவகை நெல்லும் நல்ல
விளைச்சலைத் தந்தது. ஆனால் “கைக்கு எட்டியது. வாய்க்கு எட்டாமல் போனது”10 அதனைப் பயிர்
செய்த வெள்ளாமைக்காரர்களின் நெல்லுக்குச் சந்தை இல்லாமல் போனது தான் சோகம்.
“திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல்லில் முப்பதுக்கும் மேற்பட்ட

18
ரகங்களை மீண்டும் பயிரிட்டு நெல்லுக்கு உயிர் கொடுத்து வருகிறார். அறுபதாம் குறுவை, புங்கார்,
கருங்குறுவை, வெள்ளக்கார், வெள்ளை சித்ரகார், தூயமல்லி, குழியடிச் சம்பா, சிவப்புக் குறுவை
கார், கல்லுருண்டை சம்பா, வெள்ளை நெல், வரப்பு குடைஞ்சான், கிச்சடி சம்பா, கார், தங்கச்சம்பா,
சிவம்பு சீரகச்சம்பா, சொர்ண மசூரி, சம்பா மோசனம் கண்டசாலா, சிட்டிகார், ஏரி நெல், மாப்பிள்ளை
சம்பா, கட்டுயாணம், நவரா போன்ற நெல் ரகங்களுக்கு மீண்டும் உயிரூட்டியவர் ‘நெல்ஜெயராமன்’11

பழங்களின் வகைகள் - பயன்கள்:

இம்மண்ணில் வாழ்ந்த மக்கள் பல வகைப் பழங்களை உண்டனர் “நாவல் பழம்” புரட்டாசி, ஐப்பசி
மாதங்களில் மட்டுமே கிடைத்திடும். அடர்த்தியான கருமை நிறம் கொண்டிருக்கும். இந்த நாவற்பழம்
“சர்க்கரை நோயைப் போக்கும் அரிய மருத்துவக் குணம் கொண்டது. “நெல்லி” தை, மாசி
மாதங்களில் அறுவடைக்கு வந்து விடுகிறது. ஊறுகாய் போட்டு உண்ணும் பழக்கமும் உண்டு. இந்த
நெல்லிக்காய் அரிய மருத்துவ குணம் கொண்டது. “மா,பலா, வாழை” இவ்வண்டல் மண்ணின்
மக்களிடம் ‘முக்கனி என்ற சிறப்புப் பெயர் பெற்றிருந்தன. இவை தெங்வீக அருள் பெற்ற பழங்கள்
என்ற பெயரையும் தக்க வைத்துக் கொண்டு இருக்கின்றன.

“தனித்தனிமுகக் கனிபிழிந்து வழத்தொன்றாக் கூட்டிச்

சக்கரையுங் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்த நறுந் தேன் செய்து பசும்பாலுந் தெங்கின்

தனிபாலுஞ் சேர்ந்தொருதம் பருப்பிடியும் விரவி

இனித்த நறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின்

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்த மறந் திருப்பொதுவில் விளக்கு நடத்தரசே

அடிமலர்கென் சொல்லணியாம் அலங்கல் அணிந்தருளே”12

சிவபெருமான் இப்படியாகச் செய்யப்பட்ட அமுதினை விடவும் தெள்ளமுதானவன் என்று


சுட்டியிருப்பது உணவுப் பொருட்களின் தன்மைக்கு மிகச் சிறந்த சான்றாகிறது. மாமரங்கள் மார்கழி,
தை மாதங்களில் மொக்கு வைத்து ஆடி மாதம் வரையிலும் காய்களும் , பழங்களும்
கொடுத்திடுகின்றன. மாமரங்கள், புஞ்சைக் காடுகளிலும் முல்லைக் காடுகளிலும் பெரும்பாலும்
வளர்ந்திருக்கின்றன. மன்னர்களின் வாழிடங்களிலும், கோவில்களிலும் மாமரப் பலகைகளே பெரிய
அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. காயும், கனியும் வணிகப் பொருளாக மாறிய பின்னாளில்
இதனை புஞ்சைச் சாகுபடி முறையில் திட்டமிட்டுத் தான் வளர்த்திடுகிறார்கள் . மாங்காய் என்று
பொதுவாகச் சொன்னாலும் அதில் பல வகைகள் உண்டு. தேன்காய்ச்சி, பச்சரிசி காய்ச்சி, வாளைக்
காய்ச், கோணக்காய்ச்சி, சாம்பல் காய்சச
் ி, மாவு காய்சச
் ி, கிச்சிலி காய்ச்சி, தேங்காய் காய்ச்சி,
குங்குமக் காய்ச்சி, புளிக் காய்ச்சி, கலி காய்ச்சி, தடுக்குக் காய்ச்சி, எலந்தைக் காய்சச
் ி, நார்
காய்ச்சி, சாம்பிராணி காய்ச்சி.

“வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் விவசாயி ராமகிருஷ்ணன். இவரது தோட்டத்தில் மா


மரத்தின் கிளையில் ஒரே காம்பில் இருபது காய்கள் கொத்தாக காய்த்து தொங்குகின்றன.

19
இதனைச் சுற்றுப்புற மக்கள் அதியசத்துடன் பார்த்து செல்கின்றனர்.”13 என்ற செய்தி மா
உற்பத்தியை விளக்கம். பலா இம்மக்களிடையே மிகச் சிறந்த உணவாக இருக்கிறது. அத்தோடு
“இராஜ அம்சம் கொண்ட பழம்” என்ற பெயரும் இருக்கிறது. இதனை ஒடுக்கப்பட்ட மக்கள் உண்ண
அனுமதி இல்லை. அதனால் அவர்கள் அதற்கு இணையான சத்துடைய களாக்காயை உண்டனர்.
இந்தக் களாக்காய் வண்டல் மக்களின் பசியைப் போக்கியிருக்கின்றது. “பலாக்காய் இல்லாட்ட
களாக்காய்”14 இப்படியான சொல்லாடலை இவ்வண்டல் மண் மக்களின் வாழ்வில் கேட்க முடியும்.

“மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுத் தேவையை காட்டில் கிடைக்கும் பழங்கள் மூலம்
நிறைவு செய்தான்”15

20
மரங்களின் வகைகள் பயன்கள்:

இவ்வண்டல் மண்ணில் “வாழை” நஞ்சைப் புஞ்சைப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.


இம்மண்ணுக்கு மரபாய் இருந்த வாழை, மொந்தன் பூவன் என்ற இரண்டு இனமே.

“வாழையடி வாழையாய் வாழ்”16 என்ற புலவர் மொழி இருப்பது போல,

“வக்கற்றவனுக்கு வாழை மரம்”17 இப்படியான மக்கள் மொழியும் உண்டு. மொந்தன் வாழைக்காய்


மாதவிடாய் காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு உண்ணும் போது தீர்வு கிடைத்து விடுகிறது. குடலில்
ஏற்படும் கல்லைக் கரைத்து விடும். பாம்பு கடித்தவுடன் இந்தத் தண்டின் சாற்றை அருந்தக்
கொடுத்தால் விஷமுறிவு ஏற்பட்டு விடுகிறது. இம்மண்ணின் மக்கள் பூவன் பழத்தை வைத்து
படையல் செய்கிறார்கள். “தென்னை” புஞ்சைப் பயிர். வண்டல் மண்ணில் செழிப்புற்று வளரும்
தன்மை கொண்டது. “பெத்த புள்ளை சோறு போடுதோ இல்லையோ வச்ச புள்ள சோறு போடும்”18
என்ற அழுத்தமான நம்பிக்கை இம்மண்ணின் மக்களிடம் இருக்கிறது. இந்தத் தென்னை லெமூரியா
கண்டம் சிதறுண்டு போன போதே இம்மண்ணில் வளர்ந்து இருக்கிறது என்று ஆய்வாளர்கள்
புலப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு தொன்மை மிக்கது தென்னை மரம். மிக நீண்ட காலப் பயிர்.
ஒரு தென்னை நூறு வருடம் கூட வாழ்ந்து பயன் தரும் ஐம்பது அடி உயரம் வரை வளரும். தொடக்க
காலத்தில் இவ்வண்டல் நில மக்கள் இம்மரத்தின் மட்டையைக் கீற்றாக முடைத்து தான் மனிதனின்
அடிப்படைத் தேவையான வீட்டைக் கட்டிக் கொண்டு தங்களைக் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இளநீர் மருத்துவக் குணம் பெற்று இருக்கிறது. வெப்பு நோய்க்கு சிறந்த மருந்து. தேங்காயில் இருந்து
எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. “உழவு நிலம் செழிபாய் இருந்ததால்
தென்னையும், வாழையும் தமிழகமெங்கும் பயிராகின”19 “பனை” இம்மண்ணில் புஞ்சைக்
காடுகளில் ஏராளமாக வளர்தவைதான். நீண்ட காலம் வாழும் தன்மை கொண்டவை. பெண் பனை
மரம் மட்டும் காய்க்கும். ஆண் மரத்தில் இருந்து தொங்கும் பூ பண்பாட்டுத் தளத்தில் இடம்
பெறுகிறது. இந்த மரத்தின் மட்டைகளைக் கொண்டு குடிசைகளுக்குக் கூரை வேய்ந்து
வாழ்கிறார்கள். “பனை ஓலையால் வேயப்படும் குடிசைகள் மீது இடி விழாது” என்பது மக்கள்
நம்பிக்கையாக இருக்கிறது இதன் இளங்காயில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ‘நுங்கு’ சிறந்த
மருந்து என்றே சொல்லே வேண்டும். கோடை காலங்களில் இதன் அறுவடை நடக்கிறது பனை
மரத்தில் இருந்து கிடைத்திடும் பதனீரைக் கொண்டு பனை வெல்லமும் , பனங்கற்கண்டும்
தயாரிக்கப்படுகின்றன. இவை இரண்டும் சிறந்த மருந்தாக இருக்கின்றன. “பண்டைய தமிழர்கள்
இம்மரத்திலிருந்து கிடைக்கும் பனம்பழம், நுங்கு ஆகியவற்றை உண்ணும் வழக்கம்
பரவியிருந்தது”20

கிழங்குகளின் வகைகள்- பயன்கள்:

கிழங்கு வகைகளில் மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு,


காய்வள்ளிக் கிழங்கு, அல்லிக் கிழங்கு போன்றவற்றை இவ்வண்டல் மக்கள் உணவாகக்
கொண்டனர். “மரவள்ளிக்கிழங்கு” கட்டையைப் பிடித்து மேலே தூக்கினால் போதும். வேர்களாக
உள்ள கிழங்குகள் பொத பொதவென்று மண்ணோடு பிடிங்கிக் கொண்டு வெளிவந்து விடும். “ஐப்பசி

21
அடைமழை”21 என்ற வழக்கு இம்மக்களிடையே உண்டு. பெரும்பாலும் சூரியக் கதிரையே உணர
முடியாத காலம் என்று சொன்னால் மிகையில்லை. இக்காலத்தில் அந்தக் கிழங்கை மகசூல்
செய்வது சற்று எளிது. இதனை விளைவிக்கும் சிறுநிலவுடைமையாளர்கள் பண்டமாற்று
முறையிலேயே பெரும்பாலும் விற்பனை செய்து விடுவார்கள். அதாவது ஒரு எடை தூக்கி (சுமார்
பத்துக்கிலோ) கிழங்குக்கு இரண்டு மரக்கால் நெல்லைத் தர வேண்டும். 1980 வரையிலும் இம்முறை
நடைமுறையில் இருந்தது. “பழந்தமிழர்கள் வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு ஆகியவற்றையும் சிறப்பு
உணவாகக் கொண்டனர்.”22 மரவள்ளிக் கிழங்கை அடையாகச் சுட்டு சாப்பிடுவது உண்டு.
“சர்க்கரை வள்ளிக் கிழங்கு” கொடியில் வேர் விடுவது இது இனிப்புச் சுவை கொண்டது. இந்தக்
கிழங்கு உணவை, சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையிலும் விருப்பத்துடன் உண்பார்கள் .
மிகச்சிறந்த ஊட்டச்சத்தாகவும் அமைந்து போய் விடுகின்றன. பாட்டி வைத்திய முறையில் வாயுப்
பொருள் என்று ஒதுக்கச் சொல்லுகிறார்கள். “பெருவள்ளிக்கிழங்கு” சற்று தடிமனான கொடியின்
வேரில் கிழங்கு விட்டு இருக்கும். ஒரு கொடி வேரில் ஒன்று இரண்டு கிழங்குகள் தான் விட்டு
இருக்கும் அதே சமயம் இந்தக் கிழங்கு ஒன்று ஒரு எடை கனத்திற்குப் பெருத்து இருக்கும் .
சர்க்கரை வள்ளிக் கிழங்கு போல் அதிக இனிப்புச் சுவை இருக்காது. மணற்பாங்கான வண்டலில்
நல்ல விளைச்சலைத் தரும். விதைத்து அறுபது நாட்களில் மகசூலைப் பெறலாம். ஆவணி மாதமே
பயிரிடச் சிறந்த பருவமாகும். கார்த்திகை மாதத்தில் மகசூலைப் பெறலாம். “கார்த்திகை கால்
கோடை” என்ற வழக்கைப் பெற்றிருந்தாலும், பெரும்பாலும் வேலை வெட்டி கிடைப்பதில்லை. வேளாண்
தொழிலாளிகளின் கார்த்திகை மாத உணவுப் பஞ்சத்தைப் போக்கிக் கொண்டு இருந்தது.
‘காய்வள்ளிக் கிழங்கு’ பெருவள்ளிக்கிழங்கினைப் போலவே பயிரிட வேண்டும். இந்தக் கிழங்கு
மக்களிடம் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தது. காரணம் எல்லா வயதினரும் எந்த அச்சப்பாடும்
இல்லாமல் உண்ணமுடியும். ‘அல்லிக்கிழங்கு” கடுங்கோடையின் வெப்பத்தைச் சமாளிக்கத் தக்க
கிழங்கு. நீர் நிலைகளின் அடிச்சேற்றில் இருந்து கொததுக் கொத்தாக வேர் விடும. இந்த அல்லியில்
இரண்டு வகை உண்டு. சிவப்பல்லி, வெள்ளை அல்லி, இவ்விரண்டும் எவ்வளவு உயர் நீர் மட்டமாக
இருந்தாலும் அந்த நீர்மட்டத்திற்கு மேல் இலை விட்டுப் பூத்து நிற்கும். இந்தக் கிழங்கை யாரும்
விதைப்புச் செய்வது இல்லை. பாதுகாப்பதில்லை. குளத்தில் தண்ணீர் தேங்கியதும் துளிர்விட்டு
வளர்ந்து கிழங்கு விடும் தன்மை கொண்டது. சிறுவர்கள் குளத்தில் நீந்தி விளையாடும் போது
இந்தக் கிழங்குகளைத் தோண்டி மேலே கொண்டு வருவார்கள். பெரும்பாலும் சுட்டும், அவித்தும்
தின்கிறார்கள். சில சமங்களில் அடையாகச் செய்தும் சாப்பிடுகிறார்கள். அல்லிப் பூவின் மையத்தில
இருக்கும் சூல் குப்பியைச் சிறுவர்களும் சிறுமியர்களும் விரும்பித் தின்பார்கள் . மிகவும்
குளிர்ச்சியானவை. இந்தச் கிழங்கை மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். “ஏழைகளின்
தங்கப்பஸ்பம்” என்று அழைக்கப்படுகிறது.

தானியங்களின் வகைகள்- பயன்கள்:

உழைக்கும் மக்களின் உணவுகளில் தானியங்கள் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன. அவை


மக்காச்சோளம், பட்டாணி மொச்சை, அவரை, துவரை, உளுந்து, தட்டைப்பயிறு போன்றவைகளாகும்.
இந்தத் தானியங்கள் உழைக்கும் மக்களுக்கு உழைப்பீடாகக் கிடைப்பவையாகும். நெல்லரிசிச்சோறு
கிடைக்காத நேரங்களில் இவை முதன்மை உணவாக இருக்கின்றன. இதில் துவரை மட்டும் குத்து

22
வகையைச் சார்ந்தது. மற்றவை அனைத்தும் கொடி இனமாகும். பாசிப்பயரிலும், நரிப்பயரிலும்
புரதச்சத்து அதிகம் இருக்கிறது. இந்த இரண்டு வகைப்பயிரிலும் “புட்டு” செய்து உண்பது சிறப்பு.
இவைகளைக் கொண்டு “பயறு பணியாரம்” செய்து உண்பர். இதே போன்;று உளுந்தில்”புரதச்சத்தும்,
நுண்ணூட்டச் சத்தும் மிகுதியாக இருக்கின்றன”. இந்த உளுந்து மருத்துவக் குணம் கொண்டது.
பெண்கள் பருவம் எய்திய ஒரு வாரகாலம் இந்த உளுந்தைக் கஞ்சியாக்கியும், களியாக்கியும் செய்து
கொடுக்கிறார்கள். “பழந்தமிழர்கள் பயிர் வகைகளாகிய சோளம், தினை, அவரை, கம்பு, எள்,
உளுந்து, ஆகியனவும் உணவில் சேர்த்தனர்”23 “மொச்சை” முற்றி நெற்றாக ஆனதும் கொட்டையைப்
பிரித்து எடுக்கிறார்கள். இதனை மொச்சைக் கொட்டை என்று அழைக்கிறார்கள். கருவாட்டுக்
கொதியில் சேர்த்திடும் போது இது மேலும் சுவை பெறுகிறது. “மக்காச்சோளம்” இம்மண்ணில்
ஆற்றுப்படுக்கைகளில் அதிகமாக விளைகின்றன. சோளக் கதிர்களை இளமுறுவலாக வறுத்து
மாவாக்கி சோளக்களி, சோளப்புட்டு, சோள அடை என்ற வகைப்பாட்டில் உணவாகக்
சொல்லப்படுகின்றது. “துவரைப் பருப்பைக் கொண்டு குழம்பு செய்கிறார்கள். துவரையிலும்
புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. தனிப் பருப்பாக வேக வைத்து நெய் சேர்த்து உண்பது உண்டு.
அனைத்து வகை தானியங்களும் “குழாய்ப்புட்டாக” வடிவம் கொள்கின்றன. “சத்துமாவு உருண்டை”
பெரும்பாலும் பலவகை தானியங்களையும் ஒன்றாகக் கலந்து ஈடாக அரிசியையும் சேர்த்து
இளவறுவலாக வறுத்து அப்படியே மாவாக்கி விடுவார்கள் . இந்த மாவை நீண்ட தூரம் பயணிக்கும்
காலங்களில் எடுத்துச் சென்று உணவாக்க கொள்வார்கள். உழைக்கும் மக்கள் பயரை வறுத்து
உடைத்து “பயறுக்கஞ்சி” காய்ச்சினர். இந்தப் பயறுக்கஞ்சி இறப்புச் சடங்குகளில் பெரிதும் முன்
வைத்து வழிபடுகிறார்கள். இப்பயர்கள் அனைத்திலும் புரதச்சத்து அதிகமாக உள்ளது குறிப்பிடத்
தக்கது.

விழாக்கால உணவுகள்:

தமிழர் திருநாளாம் உழவர் திருநாளன்று இனிப்புப் பொங்கல், வெண்பொங்கள் என்று


தனித்தனியாகப் பொங்கல் பொங்குவார்கள். இது இன்றளவும் நடைமுறையில் இருப்பதைக்
காண்கிறோம். “பதனிப் பொங்கல்” இம்மக்களிடையே விரும்பத்தக்க உணவாக இருக்கிறது.
தென்னை, பனைமரங்களில் வடிக்கும் பதனியைக் கொண்டே தண்ணீர் கலக்காமல் செய்வது தான்
பதனிப் பொங்கல். “அவல் பொங்கல்” கோட்டை கட்டிப் பாதுக்காக்கும் விதையைக் கொண்டு அவல்
இடித்தெடுப்பார்கள். அவலை நொதிப்புச் செய்து நாட்டுச் சக்கரையையோ பனை வெல்லத்தையோ
கலந்து வைத்து வழிபாடு செய்வார்கள். “குசேலனின் புராணக்கதையில் இந்த அவல் சிறப்பாகப்
பேசப்பட்டுள்ளது.”24 உயர்குடி மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட பண்டிகைகளில்
குறிப்பிடத்தக்கது “தீபாவளி” இந்தப் பண்டிகையின் போது பல வகையான பண்டங்களைச்
செய்கிறார்கள். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. “அதிரசம்,” முறுக்கு இந்த முறுக்கும் அதிரசமும்
இம்மண்ணின் மக்கள் மனதில் இன்றைக்கும் நீங்கா இடம் பெற்று இருக்கின்றன. பண்டிகை
காலங்களில் மட்டுமல்லாமல் திருமணக் காலங்களிலும் இடம் பெறுகின்றன. உயர்சாதி சமூகம்
மட்டுமே செய்வது “அரிசிப்பாயாசம்” உழைக்கும் மக்களிடம் இம்முறை இல்லை.

பழையோறு உண்ணுதல்:

23
வேளாண் வாழ்வில் உள்ள மக்கள் விடியல் பொழுதையும், அந்தி சாயும் பொழுதையும் வேளாண்
நிலங்களிலேயே தான் சந்திக்க வேண்டியிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இருட்டு வாழ்க்கையையே
வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். இரவு நேரத்தில் தான் அவர்கள் சூடான உணவைத் தயாரித்து
உண்ண முடிந்ததது. இரவு சாப்பிட்டது போக மீதச் சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்துக்
கொள்வார்கள். மறுநாள் காலையில் இச்சோறு “பழைய சோறாக” இருக்கும். வேலைக்குப் புறப்படும்
போது அச்சோற்று நீரை வடித்துச் சிறிது உப்பு கலந்து அருந்திச் செல்வார்கள் அந்தப் பழைய சோற்று
நீர் அவர்களுக்குத் தெம்பைக் கொடுததது. மீதச் சோற்றை பெண்கள் வேலைத் தலைப்புக்கு
எடுத்துச் செல்வார்கள். வயல்வரப்புகளில் அச்சோற்றை கும்பாக்களிலோ, தூக்குகளிலோ வைத்துக்
கொண்டு சாப்பிடுவது எளிதாகியது. இந்தப் பழைய சோறு அவர்களுக்கு மிகச் சிறந்த உணவாக
இருந்தது. பிராமணர்கள் காலையில் செய்து கொள்ளும் சுடு சோற்றில் எஞ்சியதில் நீர் ஊற்றி வைத்து
முன் இரவில் அந்தப் பழைய சோற்றை சிறந்த உணவாகக் கொள்கிறார்கள் என்பது தான்
தனித்தன்மையாக இருக்கிறது. நிலவுடைமையாளர்களும் பழையசோற்று நீருக்கென்று தனித்தே
மண்பானையில் சோறு ஆக்கி இளஞ்சூட்டுப் பக்குவத்தில் நீர் ஊற்றி, மூடி வைத்து விடுவார்கள்.
அப்படித் தனித்து வடித்து வைத்துப் பழைய சோறாகப் பயன்படுத்தும் அச்சோற்றை நான்கைந்து
நாட்கள் வரையிலும் வைத்துக் கொள்கிறார்கள்.

புலால் உணவுகள்:

வேளாண் சமூகம் உணவாகக் கொள்ளும் உணவுப் பொருட்களில் புலால் உணவு பிரதான


இடத்தைப் பிடித்துக் கொண்டது. வண்டல் நிலத்தில் வாழும் பெரும்பான்மையான மக்களிடம் புலால்
உணவே, உணவுப் பண்பாடாக நிலைபெற்று இருந்தது. ஊட்டம் மிக்க புலால் உணவையே
தங்களுக்கான உணவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். வேளாண் கலத்திலேயே எளிதாகவும்,
தேவைக்கு ஏற்பவும் கிடைக்கும் நீரில் வாழும் உயிரினங்களே அவர்களின் உணவாகிப் போயின.
பிராமணர்கள் புலால் மறுப்புக் கொள்கையைப் பின்பற்றினர் . இவர்கள் புலால் உணவைத் தவிர்திடக்
காரணம், உழைக்காதவர்களுக்கு புலால் உணவு செரித்திடுவதில்லை. பெரும்பாலான புலால் உணவில்
கொழுப்பு அதிகமாக இருக்கிறது. அந்தக் கொழுப்பினைச் செரித்திடும் தன்மை அற்றவர்களாக
ஆனார்கள். “சாஸ்திர நூல்களிலேயே கவனத்துக்குரியதான மனு சாஸ்திரத்தில் இறைச்சி குறித்துப்
பல்வேறு குறிப்புகளைக் காண முடிகிறது”25. குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து அவர்களுக்குப்
பறவைகளின் இறைச்சியும், மீனும் உணவாகத் தரப்பட்டன. வேட்டைச் சமூகத்தில் இருந்து உற்பத்திச்
சமூகமாக மாறினாலும் அவர்கள் வேட்டையாடி வந்த விலங்குகள், பறவைகளின் உணவை விரும்பியே
உண்ணுதலை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மாமிச உணவுக்கு என்று ஆடுகளையும்,
கோழிகளையும் வளர்த்திருக்கிறார்கள். “ஆட்டுக்கறியானது உடலுக்குக் குளிர்ச்சியைத்
தரக்கூடியது”. ஊட்டச்சத்து மிக்கது. மனிதர்களுக்கு எலும்பு தொடர்பாய் வரும் நோய்களுக்குக்
“கோழிக்கறி” சாற்றைக் கொதி செய்து கொடுத்துக் குணப்படுத்தும் முறை நடைமுறையில்
இருக்கிறது. “நத்தையை” இடித்து எடுக்கப்படும் சாறு “மூலநோய்க்கு” அருமருந்தாக இருக்கிறது.
“மீன்” இனங்களிலேயே வரால் என்ற மீன் தான் உயர்வாகக் கருதப்படுகிறது. “காடையின் கறி” உடல்
வெப்பத்தைக் குறைத்திடும். மருதநிலக் காடுகளில் வாழ்பவை. “கௌதாரி, மைனா, குயில்”
போன்றவைகளின் கறிகள் உடல் வெப்பத்தைக் குறைத்திடும். “வெளவால்” கறியைத் தின்னுவதால்

24
உயிரணுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. “பண்டைய தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம்
பரவியிருந்தது. வெள்ளாடு, செம்மறியாடு, மான், முயல், நண்டு, நத்தை, கோழி, காடை மீன், உடும்பு
முதலியவற்றினைச் சமைத்து உண்டனர். ஊன் என்பது பிறகாலத்தில் புலவு என்று வழங்கப்பட்டது.”26

துணை உணவுகள்:

இம்மக்களால் விரும்பி உண்ணப்பட்டவை “கூழ்வடகமும், பொரிச்ச முறுக்கும்”. முதன் முதலில்


தாய்மையடையும் பெண்களுக்கு வளைகாப்புச் சடங்கு செய்யும் போது, சோற்றுக்குத் துணை
உணவாக கூழ்வடகத்தை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் . பொரிச்ச முறுக்கு மழை
காலங்களிலும், வேளாண்பணி நடைபெறும் காலங்களிலும் மக்களால் அதிக அளவில்
உண்ணப்படுகிறது. ‘கெட்டி உருண்டை” மறைந்து போய் கொண்டிருக்கும் துணை உணவுகளில் ஒன்று.
எளிதில் நேரம் வாய்க்காத காலங்களில் அங்காடி வணிகம் செய்யும் பெண்களிடம் பண்டமாற்று
முறையில் வாங்கியே உண்கிறார்கள். “சுடுதேங்காய்” மாடு மேய்ப்பவர்களுக்கு நல்ல உணவாக
இருக்கிறது. தேங்காயில் ஓட்டை போட்டு அதனுள் பயரையோ, வறுகடலையையோ எடுத்துக்
கொண்டு சம அளவு நாட்டுச் சக்கரை கலந்து தேங்காய்க்;குள் போட்டு நெருப்பில் புரட்டி சுட்டு
எடுப்பார்கள். தேங்காய் விண்டு வரும் போது அதனை, உண்பார்கள்.

கள் அருந்துதல்:

பண்ணை அடிமைகளும் மற்ற உழைக்கும் மக்களும் வெக்கையின் தாக்கத்தில் இருந்து


தங்களை விடுவித்துக் கொள்ள நெல்லரிசிக் கள்ளை அருந்துகிறார்கள். பானையில் சோற்றை
ஆக்கி அதன் மேல் வேடுகட்டி மூன்று நாட்கள் காற்றாட வைத்திருந்து பிறகு பூமியில் குழிவெட்டிப்
புதைந்து வைத்திடுவார்கள். மாதக்கணக்கில் பூமியில் புதைந்து கிடந்த பின்னர் அதனை எடுத்து
வடிகட்டிப் பெரிய பானையில் ஊற்றி மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி வைத்து விடுவார்கள். நாளாக
நாளாக அது புளிப்பு ஏறி சீறிக் கொண்டு இருக்கும். வேலையை முடித்துக் கொண்டு வீடு
திரும்பியதும் அதனை அளவாகக் குடிக்கும் போது ஏற்படும் போதை, உடல் களைப்புப் போகவும், இரவு
உணவைக் கூடுதலாக உண்ணவும், அது வழிவகை செய்திடுவதாகச் சொல்லுகிறார்கள். “தென்னை
மரத்தில் இருந்து வடித்து இறக்கப்படும் கள் ஏழைகளின் சிறந்த மதுவாகிறது.”27 உழைப்பதால்
ஏற்படும் உடம்பு வலியைப் போக்க மிக உறுதுணையாக இருக்கிறது. கள்ளை வடிப்பதற்குச் சரியான
பருவமாகக் கார்காலத்தையும் எதிர்பார்த்திருப்பார்கள். “பனை மரத்திலும், ஈச்ச மரத்திலும் கள்
இறக்குவார்கள்.”28 தென்னை, பனை மரங்களைவ விட ஈச்ச மரத்திலேயே குடம்குடமாய் கள்
இறக்கிடுவார்கள். ஒவ்வொரு இன மரத்தில் வடிக்கப்படும். கள்ளிலும் வேறு வேறு வகைப்பட்ட
ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. இதைத் தவிர்த்து ஒவ்வொரு வகை மரத்தினின்றும்,
வடித்தெடுக்கும் கள்ளிலும் தனித்தனியான மருத்துவக் குணம் இருக்கிறது என்கிறார்கள் . இந்த
மூன்று விதக் கள்ளையும் அனைத்துச் சமூகப்பிரிவினரும் சமத்துவமாக உண்ணும் படியான நிலை
இருக்கவில்லை. பனை மரத்துக் கள் விற்பனை செய்யுமிடம் ஊர்க் கடைசியில் தான் இருந்தது.
ஈச்சங்கள்ளையும், பனங்கள்ளையும் தாழ்த்தப்பட்ட பண்ணை அடிமைகளும், இடைச்சாதி பண்ணை
படிக்காரர்களும், பெரும்பாலும் அருந்தியதாகவும் அறிய முடிந்தது. நிலவுடைமையாளர்களும்,
வணிகர்களும், மற்றவர்களும் தென்னை மரக்கள்ளை விரும்பி அருந்தியிருக்கிறார்கள்.

25
“கள்ளுண்ணும் வழக்கம் பழந்தமிழக்கத்தில் மிகவும் விரிவாகப் பரவியிருந்தது. இயற்கையாகக்
கிடைக்கும் தென்னங்கள், ஈச்சங்கள் ஆகியவற்றையும், புளித்த சோற்றுக்கள் முதலியவற்றை
விருப்பத்துடன் குடித்தனர்.”29 கள்ளுக்குப் பணம் கொடுப்பதை விட நெல்லாகவோ, பயறு
வகைகளாகவோ ஈடுகொடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த மூன்று மரங்களிலும் இருந்து கள்ளை
வடித்து இறக்கிடுவோர் சாதிப்படிநிலையில் ஒன்றாக இருக்கவில்லை. தென்னை மரக்கள்ளை
வடிப்பவர்கள் இம்மண்ணின் பூர்விக இனத்தவராக இருந்தார்கள். பனை மரத்தில் இருந்தும், ஈச்ச
மரத்தில் இருந்தும் கள்ளை வடிப்பவர்கள் இவ்வண்டல் மண்ணுக்கு குடிபுகுந்தவர்களாக இருக்க
வேண்டும் என்று அறிய முடிகிறது.

தொகுப்புரை:

’ வண்டல் உணவுகள்’ எனும் நூலில் காட்டப்பட்டுள்ள நெல் உற்பத்தி முறையையும்


கால்நடைகளின் பங்கு பற்றியும் கூறப்பட்டுள்ளது. உயர் சாதியினர், கீழச
் ாதியினர் உணவுகள், புலால்
மற்றும் விழாக்கால உணவுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. மறைந்து போன பல விதமான
நெல்விதைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பழைய சோறு உண்ணும் முறையையும் துணை
உணவுகளையும் பற்றி தொகுக்கப்பட்டுள்ளது. கள் அருந்துவதில் காணப்படும் சமுதாய ஏற்றத்தாழ்வு
பற்றி ஆராயப்பட்டுள்ளது. ஆக உணவுகளும் சமூக ஏற்றதாழ்வின் குறியீடுகளாக அமைந்தது
அறியப்படுகிறது.

குறிப்புகள்:

1. சோலை சுந்தரபெருமாள், வண்டல் உணவுகள் ப.47.

2. பிள்ளை, கே.கே, தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் ப-17.

3. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.16.

4. சோலை சுந்தரபெருமாள், மு.கூ.நூ,ப.49.

5. பிள்ளை கே.கே., மு.கூ.நூ,ப.155.

6. மேலது ப-176.

7. மேலது ப-142.

8. சோலை சுந்தரபெருமாள் மு.கூ.நூ,ப.50.

9. தினமலர் நாளிதழ், 09.08.2017, ப-6.

10. சோலை சுந்தரபெருமாள், மு.கூ.நூ,ப.65.

11. தினமலர் நாளிதழ் 09.08.2017, ப-6.

26
12. வள்ளலார், திருவருட்பா, ப-15.

13. தினமலர் நாளிதழ், 10.08.2017, ப-2.

14. சோலை சுந்தரபெருமாள்., மு.கூ.நூ,ப.78.

15. கண்மணி குணசேகரன், வந்தாரக்குடி, ப.20.

16. சோலை சுந்தரபெருமாள், மு.கூ.நூ,ப.80.

17. மேலது ப-80.

18. மேலது ப-81.

19. பிள்ளை, கே.கே; மு.கூ.நூ,ப.155.

20. மேலது ப-142.

21. சோலை சுந்தரபெருமாள் மு.கூ.நூ,ப.115.

22. பிள்ளை கே.கே.; மு.கூ.நூ,ப.142.

23. மேலது ப-155.

24. சோலை சுந்தரபெருமாள் மு.கூ.நூ,ப.128.

25. மேலது ப.88.

26. பிள்ளை கே.கே.; மு.கூ.நூ,ப.143.

27. சோலை சுந்தரபெருமாள் மு.கூ.நூ,ப.82.

28. மேலது ப-83.

29. பிள்ளை, கே.கே.; மு.கூ.நூ,ப.144

27
இயல் - 3
வேளாண்மையின் இன்றைய நிலை

நம் சமூகத்தில் விவசாயிகளின் வாழ்க்கைச் சூழல் கேள்விக்குறியாக காட்சியளிக்கிறது.


மக்களிடம் இயற்கை பற்றிய சிந்தனையும் அவற்றைப் பேணுவதின் அவசியமும் குறித்த விழிப்புணர்வு
இல்லாமையால் விவசாயம் வீழச
் ்சியை அடைந்து வருகிறது.

நவீன மரபணு மாற்றப்பட்ட விதைகள் -விளைவுகள்:

மக்கள் சமூகத்தைச் சீரழிவுக்குக் கொண்டு செல்லும் அதிநவீனம் என்று சொல்லி மக்களைச்


சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கும் வேளாண்மையைக் கையில் எடுத்திருக்கும் “கார்ப்பொரேட்
நிறுவனங்கள், விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் உரிமையையும் கையில் வைத்துக்
கொண்டு இருக்கிறார்கள்” மரபான விதைகளைக் கையில் வைத்துக் கொண்டு அவ்விதைகளை
மரபணு மாற்றம் செய்து அதிக விளைச்சலைத் தரும் விதைகளை உற்பத்தி செய்யும் புதிய முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விதைகளைக் கொண்டு வேளாண்மை செய்யும் போது,
விளைச்சல் அதிகரிப்பது உண்மை தான். தொடக்கத்தில் நெல் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த
விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைப்பது போல மாயத் தோற்றம் காட்டியதும் உண்மை தான்.
“மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளில் போதுமான சத்துக்கள் இல்லை என இயற்கை முறையில்
வேளாண்மை செய்யும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.”1 நவீன மரபணு மாற்றப்பட்ட
விதைகளைக் கொண்டு வேளாண்மை செய்யும் போது அந்நாற்று பயிராகி விளைச்சலைத் தரும்
வரையிலும் நோய்களில் இருந்தும், பூச்சிகளில் இருந்தும் காப்பதற்கான மருந்துகளுக்கும்,
உரங்களுக்கும் சான்றளிக்கப்படுகிறது. இந்தப் பரிந்துரைகளை உற்பத்தியல் ஈடுபடும் விவசாயிகள்
மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. “மரபணு மாற்ற விதைகள் இரசாயன உரங்கள்
ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் பாரம்பரிய விதைகள், இடுபொருட்கள் ஆகியவற்றின் மூலம்
விளையும் விவசாயப் பொருட்கள் விற்பனைக்கு தனி சந்தை ஏற்படுத்த வேண்டும் என ‘நிடி ஆயோ’
அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி வலியுறுத்தியுள்ளார்”2

“வேளாண் பொருட்களை விற்க ‘இ-ராகம்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி


உள்ளது.”3

பகாசுர பன்னாட்டு நிறுவனம்:

உலக அளவில் வேளாண் விதைகளின் காப்புரிமையை இந்தியப் பாராளுமன்ற ஒப்புதலுடன்


கையில் எடுத்துக் கொண்டு தன்னாதிக்கம் செலுத்தி வருகிறது. “மான் சாண்ட்டோ” என்ற பகாசுர
நிறுவனம். அந்நிறுவனம் இம்மண்ணின் மரபான விதைகளை அதிக விளைச்சலைத் தரும் வீரிய
விதைகளாக மரபணு மாற்றம் செய்துள்ள நெல் விதைகளைக் கொண்டே செய்திடும் போது உற்பத்திப்
பெருக்கத்தையே கணக்கில் கொண்டு இருக்கின்றனர். இந்த மரபணு மாற்றம் பெற்ற நெல் விதைகள்

28
விளைவிக்கும் நெல்லில் மனித நலவாழ்வைப் பறித்திடும் ‘நஞ்சு’ இருப்பதை அவர்கள் உணர்ந்தே
இருக்கிறார்கள். இருந்தாலும், அதைப் போக்கிடும் ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. மக்களைச்
சுரண்டிக் கொழுக்கும் மருந்து நிறுவனங்களை வளம் பெறச் செய்வதில் மிகுந்த அக்கறை எடுத்துக்
கொள்பவைதானே இந்தப் பன்னாட்:டு பகாசுர நிறுவனங்கள். நவீனத்துவம் நமது உணவு முறையின்
பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தையும் அழித்து விட்டது என்றே கூற வேண்டும். இன்’றைக்கு
முப்பத்தைந்து வயதைக் கடந்த பெரும்பாலானவர்கள், தின்னும் உணவுக்குச் செலவழிக்கும்
செலவை விட இரண்டு பங்கு மருந்து மாத்திரைகளுக்குச் செல செய்திடுகிறார்கள்.

மான்சாண்ட்டோ ஒப்பந்தம்:

உலகமயம், தனியார்மயம், தாராளமயம் என்ற கூரிய ஆயுதங்களோடு உலக முதலாளிகள்


இம்மண்ணைக் குறிவைத்து நகரும் போது இந்தியப் பாராளுமன்ற சனநாயகம் அந்தக் குறிக்கு
இலக்காகி வீழ்நது
் போனது. மான்சாண்ட்டோ என்ற அமெரிக்கப் பெரு முதலாளி இந்தியாவோடு ஒரு
ஒப்பந்தம் செய்து கொண்டான். அதன் படி இந்த மண்ணில் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த
மரபான விதைகளை நீக்கி விட்டு அவன் தரும் வீரிய வித்துக்களைக் கொண்டு வேளாண்மையைத்
தொடரும் படியான சூழ்சச
் ியான ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டார்கள் என்று முன் பகுதியில்
விளக்கப்பட்டது. நம் மண்ணுக்கே உரிய விதைகளுக்கு அவர்கள் காப்புரிமைப் பெற்றுள்ளார்கள்.
நமக்கு அவற்றின் மீது உரிமையில்லாமல் போய்விட்டது. இம்மண்ணில் வேளாண்மை செய்து வரும்
வெள்ளாமைக்காரர்கள் மரபார்ந்த வேளாண் முறைகளோடு மரபான விதைகளை விதைத்திருப்பதை
அந்த நிறுவனக் கையாட்கள் பார்த்து விட்டால் போதும், இம்மண்ணுக்குரிய விவசாயியை அவனது
கூலிப்படைகளே கைது செய்யலாம். மரணதண்டனையும் தரலாம். இதற்கு மக்கள் எதிர்ப்புத்
தெரிவித்து கலகம் விளைவித்தால் அமெரிக்க முதலாளியையும், அவனது கூலிப்படைகளையும்
காப்பாற்ற இந்தியப்படை இம்மண்ணின் மக்களை ஒடுக்கும். இம்மக்கள் மீதே துப்பாக்கியைத்
திருப்பும். இதுதான் அரசு செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தமாகும். “ மான்டேகு- செம்ஸ்போர்ட்டு
திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட இரட்டையாட்சியில் வேளாண்மைத் துறையானது இந்தியரின்
கைகட்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது.4

விவசாயிகள் தற்கொலை:

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்”5

என்று திருவள்ளுவரும்,

“இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது”6 என்று மகாத்மா காந்தியும்


சொல்லிடக் காரணம், வேளாண் தொழிலின் மேன்மையை மிக நுட்பமாக அவர்கள் அறிந்து
இருந்ததால் தான். “விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் விவசாயம் வளமாக இருக்கும் .”7
‘இந்தியா ஒரு விவசாய நாடு’ விவசாயிகளிடம் இருந்தும் அவர்கள் செய்யும் உற்பத்தியின் மூலம்
பெறும் வரிகளைக் கொண்டே இந்திய அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதைக்
கணக்கில் கொண்டால், விவசாயிகள் காலகாலத்திற்கும் வஞ்சிக்கபட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

29
என்பதை எளிதில் விளக்கிக் கொள்ள முடிn யும். “1980-ல் ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
தொடங்கப்பட்டது. உழவுத் தொழிலின் வளர்ச்சியே இத்திட்டத்தின் சீரிய நோக்கமாகக்
கொள்ளப்பட்டன. இத்திட்டத்தின் பயனாய் தமிழ்நாட்டில் உழவுத் தொழில் பல முனைகளிலும்
வளர்ச்சியுற்று வந்துள்ளது”8 உற்பத்தி செய்யப்படும் நெல்லுக்கான விலையைத் தீர்மானிப்பது
அரசின் கையில் இருக்கிறது. குண்டூசியைத் தயாரிக்கும் முதலாளிகள் அதன் விலையையும்
தீர்மானிக்கின்றார்கள். ஆனால், முதலீடு செய்து கடும் வறட்சியிலும், வெள்ளப் பெருக்கினாலும்
தங்களை உட்படுத்திக் கொண்டு உற்பத்தி செய்திடும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த
விளைபொருளுக்கு விலையைத் தீர்மானிக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றார்கள் . இப்படியான
நிலைமைகளைச் சமாளிக்க முடியமால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் ”
ஒவ்வொரு பன்னிரெண்டு மணி நேரத்திற்கும் ஒரு விவசாயி இந்தியாவில் தற்கொலை செய்து
கொள்கிறான்”9 இன்றைக்கு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு
இருப்பதை இந்த முதலாளித்துவச் செய்தி நிறுவனங்களே வெளியிட்டு வருவதை நாம் பார்த்தும்
படித்தும் வருகிறோம். ‘ஓர் ஆய்வறிக்கை சொல்லும் தகவலின் படி1997 முதல் 2011 வரை
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை மட்டும் 2,14,500 பேர்.”10
உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வாழ்வில் நாளும் எதிர்மறையான விளைவுகளைத் தான்
சந்திக்க வேண்டியிருக்கிறது. விவசாயம் எந்திரமயமாகி வருவதால் மனித உழைப்புச் சுருங்கி
வருகிறது. விவசாயத் தொழிலாளிகள் நிலத்தை விட்டு வெளியேறுவது அதிகரித்துக் கொண்டே
உள்ளது. விளைபொருட்களுக்குச் சரியான விலை கிடைக்கததால் விவசாயிகள் கடன்பட்டு நிலத்தை
விற்று விட்டு வெளியேறும் நிலை அதிகரித்து வருகிறது. “விவசாயி பாவம் தங்கத்துல
தார்க்குச்சியும், வைரத்துல கலப்பையும் வாங்கியா கடன் படுகிறான்? வானமும் பூமியும் எப்பப்போ
ஏய்க்குதோ அப்பப்பக் கடன் படுகிறான்”11

விவசாயிகள் போராட்டம்:

இன்றைய காலகட்டத்தில் பயிர் விதைப்பதற்கும், விளைவிப்பதற்கும் அணைகளைத் திறந்து


விடக் கோரி போராட்டம் நடத்துகின்றனர். “மேட்டூர் அணையினைத் திறந்து விடமால் அரசு
விவசாயிகளை வஞ்சிக்கிறது.”12 இயற்கைச் சீற்றத்தினால் பயிர்கள் அழிந்து போனதும் ஏராளம் .
“தஞ்சை மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ‘பயிர் காப்பீட்டுத் தொகை’ வேண்டி விவசாயிகள்
போராட்டம் நடத்தினர்.”13

விவசாயிகள் கடன் பெற்றிருக்கும் சூழலில் இவ்வாறு பயிர்கள் அழியும் நிலையில்


கடனாளியாக மாற்றப்படுகிறார்கள். “இந்தியாவிலேயே தமிழக விவசாயிகள் இரண்டாவது இடத்தில்
கடனாளிகளாக இருக்கிறார்கள்.”14 இத்தகைய வாழ்வியல் போராட்டத்திற்கும் மேலாக அந்நிய
சக்திகள் “மீததே
் ன் திட்டம்” என்னும் பெயிரில் தமிழகத்தினை அழித்து விட முடிவு செய்தனர்
இதனால், விவசாய நிலங்கள் முற்றிலுமாக அழிந்து விடும் நிலை ஏற்பட்டு விடும். “தமிழகம் மட்டும்
இன்றி இந்தியாவில் பல நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் மீத்தேன் திட்டத்தினை எதிர்த்துப்
போராட்டம் நடத்தினர்.”15 விவசாயிகள் தங்களின் நிலங்களையும் வாழ்வினையும் காப்பாற்ற பல்வேறு
முயற்சிகளை மேற்கொண்டனா. புதுடெல்லியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டம்
நடத்தினர்”16

30
“விவசாயிகள் இல்லை என்றால் நம் நாட்டில் வேளாண்மையே இருந்திருக்காது. விவசாயிகள்
பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். விவசாயத்தை நம்பி ஏராளமான
குடும்பங்கள் இருக்கின்றன.”17

தொகுப்புரை:

நவீன மரபணுமாற்றப்பட்ட விதைகளால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. பகாசுர


பன்னாட்டு நிறுவனத்தின் செயலும் அவர்களது மான்சாண்ட்டே ஒப்பந்த முறை பற்றியும்
கூறப்பட்டுள்ளது. அரசின் மெத்தனப் போக்கினால் நிகழும் விவசாயிகள் தற்கொலை பற்றி
கூறப்பட்டுள்ளது. விவசாயிகளின் போராட்டமும் அவர்களது நிலைமையையும் பற்றி
தொகுக்கப்பட்டுள்ளது. இனிவரும் சமுதாயம் வேளாண்மையைக் காத்து வளர்க் வேண்டும் எனும்
கருத்து ஆணித்தரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

31
குறிப்புகள்:

1. தினமலர் நாளிதழ், 09.08.2017, ப-6.

2. மேலது 25.08.2017, ப-4.

3. மேலது 03.08.2017 ப-2.

4. பிள்ளை கே.கே. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் ப.530.

5. திருவள்ளுவர், திருக்குறள், கு.எ.1033.

6. சோலை சுந்தரபெருமாள் வண்டல் உணவுகள் ப.29.

7. வெங்கடேசன்,க. இந்திய வரலாறு ப.83.

8. பிள்ளை, கே.கே மு.கூ.நூ,ப.531.

9. வைரமுத்து, மூன்றாம் உலகப்போர் ப.57.

10. மேலது ப-57.

11. மேலது ப-32.

12. தினகரன் நாளிதழ், 29.09.2017 ப.2.

13. மேலது 28.09.2017 ப-1.

14. வைரமுத்து, மு.கூ.நூ,ப.105.

15. தினமலர் நாளிதழ் 23.03.2017 ப.3.

16. மேலது 20.03.2017 ப.2.

17. வைரமுத்து, மு.கூ.நூ,ப.16.

ஆய்வு நிறைவுரை

32
இவ்வாய்விற்கு முதன்மை ஆதாரமாக அமைந்த “வண்டல் உணவுகள்” நூலில் அமைந்துள்ள
செய்திகள் இயல்வாரியாகத் தொகுக்கப்பட்டு இங்கு கூறப்பட்டுள்ளது.

‘சமுதாய அமைப்பு’ என்னும் இயலில் சாதி வேறுபாடுகளையும், பண்ணை அடிமைகளையும்,


பெண்களின் நிலை பற்றியும் கூறப்பட்டுள்ளது. ‘உணவுகள்’ என்னும் இயலில் இயற்கை
உணவுகளையும், புலால் உணவுகளையும் அதன் பயன்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. வேளாண்மையின்
இன்றைய நிலை என்னும் இயலில் விவசாயிகளின் போராட்டங்களையும், தற்கொலைகளையும் பற்றிக்
கூறப்பட்டுள்ளது. இவ் ஆய்வேட்டில் காட்டப்பட்டுள்ள சமுதாய அமைப்பினை இன்றளவும் ஒரு சில
இடங்களில் காண முடிகிறது. மரபு முறையான உணவுகளையும், இயற்கை வேளாண்மையும்
மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இவ் ஆய்வேடு அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை உணவுகளையும்,
உடல் நலத்தையும் காக்க மரபு முறையான உணவுகளே சரியான முறையாகும் என்பது எனது கருத்து.

துணைநூற்பட்டியல்
முதன்மை ஆதாரம்

1. சோலைசுந்தரபெருமாள் - வண்டல் உணவுகள்

பாவை பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.மு.ப.-2014

துணை ஆதாரங்கள்

1. ஆனைமுத்து பெரியார், வே. - ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுதி

சிந்தனைகயாளர்கள் கழகம், திருச்சி,

மு.ப.1974.

2. இராசா, கி,(உ.ஆ) - தொல்காப்பியம் பொருளதிகாரம்

(பகுதி-1) பாவை பப்ளிகேஷன்ஸ்,

சென்னை மு.ப.2007.

33
3. இராமசந்திரன், கோ, - தமிழனமே மூத்த இனம் தமிழே

முதன்மொழி,

மாணிக்கவாசகர் பதிப்கம், சென்னை.

4. கண்மணி குணசேகரன் - வந்தாரக்குடி (நாவல்),

பாவை பப்ளிகேஷன்ஸ்,

சென்னை, மு.ப.-2013

5. கோவிந்தன்,வை., - பாரதியார் பாடல்கள் அறிவுப்பதிப்பகம்,

சென்னை

மு.ப.2005.

6. சக்திவேல், சு., - நாட்டுப்புற இயல் ஆய்வு,

மாணிக்கவாசகர் பதிப்பகம், சென்னை.

7. சிவசுப்பிரமணியன்,எம்.,(உ.ஆ)- திருக்குறள்,

கமர்சியல் ஆப்செட் பிரிண்டர்ஸ்,

சிவகாசி.மு.ப.2013.

8. திருஞானசம்பந்தர் ச.,(உ.ஆ) - நாற்கவிராச நம்பி இயற்றிய

அகப்பொருள் விளக்கம்,

கதிர் பதிப்பகம்,

திருவையாறு,

மு.ப.-2010

9. நிர்மலா ராணி,வீ., - பெண்ணியத் திறனாய்வு,

காவ்யா வெளியீடு,

சென்னை.

34
10. பிள்ளை,கே.கே., - தமிழக வரலாறு மக்களும்

பண்பாடும்,

ஸ்ரீவெங்கடேஸ்வரா பிரிண்டர்ஸ்,

சென்னை.மு.ப.-2011.

11. முத்து சி.எம்., - வேரடிமண் (நாவல்),

மருதம் பதிப்பகம், ஒரத்த நாடு,

மு.ப.2003.

12. முத்துவேல் - உடைமுள் (நாவல்),

குமரன் பதிப்பகம்,

சென்னை,

மு.ப.-2007.

13. ராஜம் கிருஷ்ணன் - பெண் விடுதலை,

தாகம் பதிப்பகம்,

சென்னை,

இ.ப.-2003.

14. வெங்கடேசன்.க - இந்திய வரலாறு,

என்.சி.பப்ளிகேஷன்ஸ்,

சென்னை.

15. வெண்ணிலா அ., - மீதமிருக்கும் சொற்கள்,

நியூ செஞ்சரி புக்ஹவுஸ்

சென்னை.

35
16. வைரமுத்து - வைரமுத்து கவிதைகள்,

சூர்யா வெளியீடு,

சென்னை.

17. வைரமுத்து - மூன்றாம் உலகப்போர்,

சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்,

சென்னை,

மு.ப.2012.

ஆராய்ச்சிக் கட்டுரை:

1. தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள் (தொகுதி-1) தமிழ்


உயராய்வு மையம்.அ.ப.ம. கலைக்கல்லூரி, பழனி – 2005.

ஆய்விற்குப் பயன்பட்ட நாளிதழ்

1. தினமலர் நாளிதழ் 20.03.2017, 23.03.2017

2. தினகரன் நாளிதழ் 28.09.2017, 29.09.2017

36

You might also like