You are on page 1of 16

INSTITUT PENDIDIKAN GURU

Kementerian Pelajaran Malaysia


KAMPUS IPOH, 31150 HULU KINTA
PERAK DARUL RIDZUAN

TUGASAN KERJA KURSUS

TATABAHASA TAMIL I

தமிழ் இலக்கணம்

செய்பணி

(BTM 1024)

NAMA PELAJAR : NIRMALAWATY A/P GUNASEELAN


மாணவர் பெயர் : நிர்மலாவதி த/பெ குணசீலன்

ANGKA GILIRAN : 2016242310083


எண் வரிசை

NO.KAD PENGENALAN : 980803-08-5340


அடையாள அட்டை எண்

KUMPULAN / UNIT : (PPISMP) S5


குழு / பிரிவு : எஸ்5

NAMA PENSYARAH : EN.KUNASEELAN A/L SUBRAMANIAM


விரிவுரையாளர் பெயர் : திரு.குணசீலன் த/பெ சுப்ரமணியம்

TARIKH SERAHAN : 26 OGOS 2016


ஒப்படைப்பு பக்கல் : 26 ஆகஸ்டு 2016
1.0 முன்னுரை

தமிழ் நாட்டைத் தமிழர்களே ஆண்ட காலம் சங்ககாலம்.

சங்ககாலம் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. இதற்கு காரணம்

அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், தமிழ்மொழி ஆட்சி,

இலக்கியவளம், புலமைப்போற்றல், பண்பாடு, நாகரிகம் என

சொல்லிக் கொண்டே போகலாம். பாட்டும் தொகையுமாகிய

சங்ககால இலக்கிய விழுமத்திற்கு அக்கால அரசியலும்

நல்லாட்சியுமே காரணமாக இருக்க முடியும். சிறந்த இலக்கியங்கள்

தோன்றும் காலம், ஒரு நாட்டிற்கு நற்காலம் என்பது உண்மை.

ஈடும் இணையுமற்ற தூய தனித்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய

காலம் சங்ககாலமாகும். சங்க இலக்கியங்கள் ஈராயிரம்

ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையைச் சிறப்பைப்

படம் பிடித்து காட்ட மிகவும் உதவுகின்றன.


2.0 தமிழ்மொழி சிறப்பு

ஏறத்தாழ 3000 இலக்கணமும் இலக்கியமும் நிறைந்த உலக

மொழிகளுள் இயல்பாகத் தோன்றிய இயன்மொழியான நம் தமிழ்

மொழிக்குத் தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை,

வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை,

பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என்று பதினாறு பண்புகள்

உள்ளன. உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு,

அணி ஆகியன உண்டு. ஆனால், தமிழ் மொழிக்கு மட்டும்தான்

பொருளுக்கு இலக்கணம் உண்டு. ஆகையால்தான் தமிழை

ஐந்திலக்கணம் என்கிறோம்.

தமிழில் மலையளவு அறநூல்களும் உள்ளன அவற்றுள்

திருக்குறளும் ஒன்றாகும். மனத்தை நெகிழ்வித்து உருக்குவதற்குத்

தேனூறும் தேவார திருவாசகம் தமிழில் வைரமாக ஒளிர்கின்றன.

வேற்று மொழிகளில் இல்லாத அளவிற்கு தொல்காப்பியம்

தொடங்கி பன்னூறு இலக்கிய இலக்கண நூல்கள் தமிழுக்கு வளம்

சேர்த்திருக்கின்றன. உலகில் ஒரு மொழியில் இருக்கின்ற

இலக்கியத்தை வெவ்வேறு மொழிகளில் உணர்ச்சி, பொருள், நயம்,

வடிவம் ஆகியவை குன்றாமல் மொழி பெயர்த்திட இயலும்.

ஆனால், தமிழ் இலக்கியத்தைப் பிற மொழிகளில் இந்நான்கும்

குன்றாமல் மொழி பெயர்க்க முடியாது. உலகில் மற்ற

மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை

உணர்த்த வல்லவை; ஆனால், தமிழ் மொழி இதயத்தால்

பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.


3.0 சங்க இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும்

3.1 சங்க இலக்கியம்

சங்க காலம் எனப்படுவது பண்டைய தென்னிந்திய வரலாற்றில்

நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதி. இக்காலப்பகுதி

கி.மு.500-இல் இருந்து கி.பி.100 வரை நீடித்திருக்கிறது. சங்க

காலத்தைத் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம் என்று

குறிப்பிடுவர். சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்த்துக்கு

முற்பட்ட சங்க காலத்தில் எழுதப்பட்டச் செவ்வியல் இலக்கியங்கள்.

சங்க இலக்கியங்கள், 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381

பாடல்களைக் கொண்டுள்ளது. சங்க இலக்கியங்கள் ஈராயிரம்

ஆண்டுகளுக்கு முன் தமிழர் வாழ்ந்த வாழ்க்கையையும்

சிறப்பையும் எடுத்துறைக்க பெரும் பங்காற்றுகின்றன. சங்க

காலத்தில் மூன்று சங்கங்கள் உருவெடுத்தன. அவை முதல் சங்கம்,

இடைச் சங்கம் மற்றும் கடைச்சங்கம் ஆகும்.

3.1.1 முச்சங்கங்கள்

3.1.1.1 முதல் சங்கம்

முதற்சங்கம் குமரிக்குத் தென்பால் – கடல்கொளுக்கு முன்

பரந்திருந்த நிலப்பகுதியில் இருந்த தென்மதுரையில்

நிலவியிருந்ததென்றும் இச்சங்கத்தில் அகத்தியர், முரஞ்சியூர்

முடிநாகராயர் முதலிய 549 புலவர்கள் இருந்தனர் என்றும்

அவர்களால் பாடப்பட்டவை பரிபாடல், முதுநாரை, முதுகுருகு

முதலான நூல்களென்றும், அச்சங்கம் 4440 ஆண்டுகள் நிலவிற்று


என்றும் அகத்தியமே இலக்கண நூலாகப் பின்பற்றப்பட்டது என்றும்

களவியலுரை கூறுகின்றது.

3.1.1.2 இடைச்சங்கம்

இச்சங்கத்தில் தொல்காப்பியனார், வெள்ளூர்க் காப்பியன்,

சிறுபாண்டரங்கனார் உள்ளிட்ட 59 புலவர்கள் வற்றீ


ீ ருந்தனர். கலி,

குருகு, வெண்டாளி, வியாழமாலை அகவல் போன்ற நூல்கள்

இயற்றப்பட்டதும் இல்லாமல் அகத்தியமும், தொல்காப்பியமும்

இலக்கண நூல்களாகவும் அமைந்தன. இச்சங்கம் 3700 ஆண்டுகள்

நிலைத்திருந்தன.

3.1.1.3 கடைச்சங்கம்

இச்சங்கத்தில் சிறுமேதாவியார், சேந்தம் பூதனார்,

பெருங்குன்றூர்கிழார், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனின்

நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீ ரனார் முதலிய 49 புலவர்கள்

வாழ்ந்தனர். நெடுந்தொகை நானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு,

குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நூற்றைம்பது கலி,

எழுபது பரிபாடல் போன்றவை இயற்றப்பட்டன. இக்கடைச்சங்கம்

1090 ஆண்டுகள் உத்தர மதுரையில் நிலவியிருந்தன என்று

இறையினார் களவியலுரை கூறுகின்றன.


3.2 அகப்பொருள்

ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நிலவும் காதல்

உணர்வை மையமாகக் கொண்டு அகப்பொருள் அமைந்துள்ளது.

இதில் ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றும்

கூறுவர். ஒவ்வொரு பாடலுக்கும் திணையும் துறையும்

கூறப்பட்டிருக்கும். திணை என்பது நிலம் சார்ந்த ஒழுக்கத்தைக்

குறிக்கும் அதேசமயத்தில் துறை என்பது பாடப்பெற்ற சூழலைக்

குறிக்கும். அகப்பொருள் ஐந்து திணை அதாவது குறிஞ்சித் திணை,

முல்லைத் திணை, மருதத் திணை, நெய்தல் திணை மற்றும்

பாலைத் திணை அடிப்படையில் அமைந்ததாகும். இந்த ஐந்து

திணைகளுக்கும் உரிய அகப்பொருள் இலக்கணம் மூன்று

வகைப்படும். அவை முதற்பொருள், கருப்பொருள் மற்றும்

உரிப்பொருள் ஆகியன ஆகும். நிலம், பொழுது ஆகிய இரண்டும்

முதற்பொருள் எனப்படும். ஒவ்வொரு திணைக்கும் உரிய நிலமும்

பொழுதும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:

திணை நிலம் பொழுது


குறிஞ்சி மலையும் மலை சார்ந்த குளிர் / முன்பனி
(முருகன்) இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும் கார்காலம் / மாலை
(திருமால்)
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆறு பெரும் பொழுது /
(இந்திரன்) வைகறை
நெய்தல் கடலும் கடல் சார்ந்த இடமும் ஆறு பெரும் பொழுது /
(வருணன்) சாயும் காலம்
பாலை பாலை நிலமும் பாலை நிலம் இளவேனில் முதுவெனில் /
(கொற்றவை) சார்ந்த இடமும் நண்பகல்
ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்கள், அவர்களின்

தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள்,

பறவைகள், விலங்குகள், நீர்நிலை முதலியவற்றைக்

கருப்பொருளாகும். கருப்பொருள் பாடல்களில் பின்னணியாகச்

செயல்படுகின்றது. உரிப்பொருள் எனப்படுவது ஒவ்வொரு

திணைக்கும் உரிய பொருளாகும். உரிப்பொருள் திணைக்கு உரிய

முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது. ஐந்து திணைகளுக்கும்

உரிப்பொருள் பின்வருமாறு:

குறிஞ்சி - புணர்தல் - தலைவனும் தலைவியும் ஒன்று சேர்தல்.

முல்லை - இருத்தல் - தலைவி, பிரிவைப் பொறுத்துக்


கொள்ளுதல்.
மருதம் - ஊடல் கொள்ளுதல். - தலைவனிடம் தலைவி பிணக்குக்
கொள்ளுதல்.
நெய்தல் - இரங்கல் - தலைவி பிரிவுக் காலத்தில் வருந்துதல்.
பாலை - பிரிவு - தலைவன் தலைவியை விட்டுப் பிரிதல்.

3.3 புறப்பொருள்

புறப்பொருள் என்பது வரம்,


ீ போர், தூது, வெற்றி, கொடை,

நிலையாமை முதலியவற்றைக் கூறுவது ஆகும். ஒரு குறிப்பிட்ட

அரசனையோ வள்ளலையோ குறுநில மன்னனையோ பெயரைச்

சுட்டி அவனுடைய வரம்,


ீ வெற்றி, கொடை முதலியவற்றைப்

பாடுவது புறப்பொருள் மரபு ஆகும். இவ்வாறு அன்றி ஒருவருக்கு

அறிவுரை சொல்வது போலவோ யாரையும் சுட்டிக் கூறாமல்


புறப்பொருள் பாடல் அமைவதும் உண்டு. புறப்பாடல்கள் நூற்றுக்கு

நூறு உண்மை. இவை வேந்தன் முதல் வேடன் ஈறாக உள்ள

மக்களின் காதல் தவிர்த்த பிற பண்புகளைப் படம் பிடிக்கின்றன.

3.4 சங்க நூல்களும் பாடுபொருளும்

3.4.1 எட்டுத்தொகை

இத்தொகைநூற்பாடல்கள் அகம், புறம், ஆகிய செய்திகளை

அறிவிப்பன. அரசர்களின் போர் சிறப்பையும், வெற்றி

மேம்பாட்டையும், கொடை வன்மையையும், கல்வி, கேள்வி,

ஒழுக்கம், கலை, பண்பாடு, நாகரிகம், சமயம் முதலிய

பலவற்றையும் விளக்கிக் கூறுவன. களவு, கற்பு என்று பகுக்கப்பட்ட

அகத்திணை வாழ்வை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

என்னும் திணைகளில் அமைத்துபாடுவன.

எட்டுத்தொகை நூல்கள் (1) அகம் சார்ந்தவை (2) புறம்

சார்ந்தவை (3) இரண்டும் சார்ந்தவை என்று மூன்று வகையாக

அமையும். அவற்றுள், அகம் சார்ந்தது நற்றிணை, குறுந்தொகை,

அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை என்ற ஐந்துமாகும். புறம்

சார்ந்தது புறநானூறு, பதிற்றுப்பத்து என்ற இரண்டுமாகும். அகமும்

புறமும் கலந்தமைந்த தொகுதி பரிபாடல் மட்டுமே.


3.4.2 பத்துப்பாட்டு

சங்ககாலத்தில் வேதநெறி மெல்ல நுழையத் தலைப்பட்டது.

அந்தணர்களால் அமைக்கப்பட்ட சாலைகள், அந்தணர் பள்ளிகள்

இருந்தன. அரசர்கள் மக்கள் நலம் பேணி ஆட்சி செய்தனர்; அவர்கள்

பெரு வரராகவும்
ீ வள்ளலாகவும் வாழ்ந்தனர். சோழன் கர்காற்

பெருவளந்தான் தன்மீ து பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங்

கண்ணனார்க்கு நூறாயிரம் பொன் பரிசளித்தான் போன்ற

செய்திகளும்; சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன்;

உரோகினி சந்திரனை விட்டுப் பிரியாதவள்; முருகன் மலைமகன்;

திருமாலின் கொப்பூழிலிருந்து தோன்றிய தாமரை மலரில்

நான்முகம் தோன்றினான்; சிவப்பெருமான் மும்புரம் எரித்தமை

முதலிய பல புராணக் கதைகளும் பத்துப்பாட்டுள் இடம்பெற்றுள்ளன.

திருமுருகாற்றுப்படை என்னும் புலவராற்றுப்படை,

பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,

மலைபடுகடாம் என்னும் கூத்தாற்றுப்படை முதலிய ஐந்து

ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டுள் அமைந்துள்ளன. பத்துப்பாடல்களில்

இந்த ஐந்து ஆற்றுப்படைகளும் மதுரைக்காஞ்சி மற்றும்

நெடுதல்வாடையும் புறப்பாடல்களாகும். எஞ்சிய முல்லைப்பாட்டு,

குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை அகப்பாடல்களாகும்.


4.0 சங்க இலக்கியத்தின் அருமையும் பெருமையும்

சங்க இலக்கியங்கள் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்த ஒரு

பேழையாகும். கருத்து வளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய

அழகான பாடல்களைக் கொண்டு சங்க இலக்கியங்கள்

மிளிர்கின்றன. இவற்றின் அருமையும் பெருமையும் எண்ணிலடங்கா.

அவற்றில் சில பின்வருமாறு:

4.1 தொல்காப்பியம்

சங்க காலத்தில் தோன்றிய தமிழ் நூல்களுள்

மிகத்தொன்மையான இலக்கண இலக்கிய நூல்

தொல்காப்பியமாகும். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள்

என்று மூன்று அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது. எழுத்ததிகாரம்,

சொல்லதிகாரம் என்னும் இரு அதிகாரங்களிலும் மொழியின்

சிறப்பிலக்கணங்களும் பொருளதிகாரத்தில் தமிழர்களின் அகம், புறம்

ஆகிய இரு ஒழுக்கங்களின் அடிப்படையில் எழுந்த காதல் வாழ்வும்,

கற்பு வாழ்வும், அக்காதலையும் கற்பனையும் கருப்பொருளாகக்

கொண்டு எழும் இலக்கியத்துக்கான இலக்கணங்களும் விரிவாக

ஆராயப்பட்டுள்ளன. தொல்காப்பியம், இன்றைய

சமுதாயத்தினரிடையே முக்கியமாக மாணவர்களிடத்தில் இலக்கண

இலக்கிய அறிவை வளர்ப்பதற்கு இன்றியமையாத ஒன்றாக

விளங்குகிறது.
4.2 புறநானூறு

“யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

இன்னா தென்றலும் இலமே, மின்னொடு

வானம் தண்துளி தலைஇ யானாது

கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்

முறை வழிப் படூஉம் என்பது திறவோர்

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே,

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.” (புறம்: 192)

புலவர் கணியன் பூங்குன்றனார் மேற்குறிப்பிட்டப் பாடலின்

வழி எல்லா ஊரும் நமது ஊர்தான்; அங்கு வாழும் மக்கள்

அனைவரும் நமது உறவினர்கள்தான்; தீயது, நல்லது மற்றும்

துன்பமும் அதன் தீர்வும் பிறரால் வருபவை அல்ல; வாழ்க்கையில்

இறப்பு என்பது புதியதல்ல என்று வலியுறுத்துகிறார். வாழ்க்கை

இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப்படுவதும் தவறு அதோடு

வாழ்க்கையிலுருந்து விலகி ஏற்கும் துறவும் கொடியது என்று


சொல்வதும் தவறு என்றும் இடித்துரைக்கிறார். வானம், மின்னல்

வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண்

ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று

நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் சிறு படகைப் போல அரிய

உயிரிக்கத்திலானது. முன்னர் இட்ட முறைவழியே போகத்தான்

செய்யும் என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள்

சொல்லுவார்களாம்; அந்தக் காட்சியில் நாங்கள் தெளிந்தோம் என்று

புலவர் கூறுகின்றார். ஆகையால், அறிவிலும் செல்வத்திலும்

பிறப்பிலும் மேலானவர்களைப் போற்ற வேண்டும். அதேவேளையில்

நம்மை விடவும் கீ ழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்தலும்

கூடாது என்று உணர்த்துகிறார் புலவர். இத்தகையக் கருத்து

நிரைந்தப் சங்கக்காலப் பாடல்கள் இன்றைய இளையோரிடையே

நற்பண்புகளை நிரப்பி நல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதில்

எள்ளவும் ஐயமில்லை.

4.3 பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து சேர அரசர்களின் பெருமைகளை

எடுத்துரைக்கும் பாடல்களாகும். எடுத்துக்காட்டாக, நெடுஞ்சேரலாதன்

வடக்கே இமயமலை வரை படையெடுத்துச் சென்று வென்றவன்;

அதற்கு அடையாளமாக இமயத்தில் வில்லைப் பொறித்தவன்;

தமிழினத்தின் சிறப்பை உலகறியச் செய்தவன்; ஆரியர்களை

வென்று தன்னை வணங்கச் செய்தவன்; கடம்பர்களை வென்றவன்;

பகைவரோடு வஞ்சனையின்றிப் போர் செய்தவன்; தன் வரர்களுக்குக்


கவசமாகவும் விளங்கியவன்; பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுமாறு


போர் செய்தவன்; போரில் பெற்ற பெருஞ்செல்வங்களைப்

படைகளுக்கும், குடிமக்களுக்கும் அளித்துள்ளான்; தனது உறவினரின்

நீண்ட நாள் பசியைப் போக்க மாமிசம் கலந்த வெண்சோற்றினை

அளித்துள்ளான்; இவன் பரிசிலர்க்குத் தெளிந்த கள்ளினையும், புதிய

ஆடைகளையும் அணிகலன்களையும் வழங்கிச் சிறப்பித்ததை,

மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு

நனையமை கள்ளின் தேறலொடு மாந்தி

நீர்ப்படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன

நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை

நூலாக் கலிங்கம் வாள் அரைக் கொள ீஇ (சிறுபாண்.139)

என்ற பாடல் வரிகள் மூலம் அறிவதும் மட்டுமல்லாமல்

நெடுஞ்சேரலாதனின் அருமையையும் அறிய முடிகிறது. இத்தகைய

அரசர்களின் பெருமைகளை எடுத்துரைக்கும் பாடல்களானது

இளைஞர்களை எதிர்காலத்தில் தலைச்சிறந்த

தலைவர்களாக்குவதற்கு வழிவகுக்கும் என்பது வெள்ளிடைமலை.


5.0 முடிவுரை

சங்க காலத்தில் அனைத்து துறைகளிலும் சமமான வளர்ச்சி

இருந்தது. எப்படி வாழ வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும்

என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. போருக்குச்

செல்லும்போதுகூட எவ்வாறு போரிட வேண்டும் என்ற

நெறிமுறைகளையும் சங்க இலக்கியங்களின் வழி காணலாம். சங்க

காலத்தில் அனைத்து செயலிலும் ஒழுக்கமும், விதிமுறைகளும்

இருந்தன. மனிதன் வாழக்கூடிய அனைத்து நெறிகளும் சங்ககால

இலக்கியத்தில் உள்ளன. ஆகவே, சங்கக்கால இலக்கியங்கள் ஒரு

மனிதனின் வளர்ச்சிக்கும் புகழ் பெற்று வாழ்வதற்கும் பெரும்

பங்காற்றுகிறது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை.


துணைமேற்கோள்

புத்தகம்

பாலசுப்பிரமணியன், சி. (1959). தமிழ் இலக்கிய வரலாறு. சென்னை: பாரி


நிலையம்.

நாராயணசாமி, வயி. (2012). சங்க காலம் முதல் இன்றுவரை இலக்கிய


வளர்ச்சி. புதுச்சேரி: விஜயா பதிப்பகம்.

இணையம்

http://www.tamilvu.org/courses/degree/p104/p1043/html/p1043663.htm

https://karthiksivaraman.wordpress.com

http://nyanabarati.blogspot.my/2009/03/blog-post_03.html
நன்றியுரை

என்னுள் குடிக்கொண்ட இறைவனுக்கு வணக்கம். என் பெயர்

நிர்மலாவதி த/பெ குணசீலன். எஸ்5 பிரிவைச் சார்ந்த நான்

இவ்வேளையில் இச்செய்பணியை மிகச் சிறப்புடன் செய்து முடிக்க

உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய விரிவுரையாளர் திரு.கா.சுப்ரமணியம்

அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள

ஆசைப்படுகிறேன். அவ்வப்பொது எனக்கு எழுகின்ற

சந்தேகங்களையும் தீர்த்து வைத்து இந்தச் செய்பணியைச் சிறப்பான

முறையில் முடிக்கப் பெரிதும் துணைப்புரிந்துள்ளார்.

அடுத்ததாக, நான் துவண்ட நேரத்தில் எல்லாம் எனக்குப் பக்க

பலமாய் இருந்து ஆறுதல் அளித்ததுமல்லாமல் நிதி வகையில்

பெரிதும் துணைப்புரிந்த என் பெற்றோருக்கும் என்னுடைய

நன்றியை சமர்ப்பிக்கிறேன். செய்பணியைப் பற்றிய எனது

சந்தேகங்களைத் தீர்த்ததுமல்லாமல் பல நேரத்தில் குறிப்புகள்

கொடுத்து உதவியுள்ள என் தோழன் தோழிகளுக்கும் என்னுடைய

நன்றி மலர்களைச் சமர்ப்பிக்க நினைக்கிறேன்.

நன்றி, வணக்கம்.

You might also like