You are on page 1of 29

ஒருவராய் பெரிய அதிசயம்

செய்பவர் நீர் தானே யேசையா -


(2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி
வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண
செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)
தழும்புகளால் சுகம் ஆக்குவேன்
என்றவர் நீர் தானே யேசையா - (2)
இந்த நாளில் செய்யுமே இறங்கி
வந்து செய்யுமே - (2)
ஒரு அற்புதம் நாங்கள் காண
செய்யுமே - (2)
ஹாலேலூயா - (8)
சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும்,தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்
1. நெருக்கத்தின் நேரத்திலும்
தண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்தால், சந்தோஷமாயிருங்க
-சந்தோஷமா

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க
--- சந்தோஷமா

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க
--- சந்தோஷமா
4. என்ன தான் நேர்ந்தலும்சோர்ந்து
போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க
--- சந்தோஷமா
சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.
1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்ததை
் கள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
--- ஆஹா ஹா
2. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய்
--- ஆஹா ஹா
3. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்பப ் ணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே --- ஆஹா ஹா
1. அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் (2)

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்


முழு பெலத்தோடு அன்பு கூருவேன்

ஆராதனை ஆராதனை -4

2. எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே (2)
இதுவரையில் உதவினீரே - உம்மை

3. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா

என்னைக் கண்டீரே நன்றி ஐயா - உம்மை

4. யெகோவா ராப்பா யெகோவா ராப்பா


சுகம் தந்தீரே நன்றி ஐயா
சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மை
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்

சிங்க கெபியோ சூளை நெருப்போ


அவர் என்னை காத்திடுவார் - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் – 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2

எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்


தூதர் சேனைகள் கொண்டென்னை
காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2

இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்


சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2

அவரே என்னை காப்பவர்


அவரே என்னை காண்பவர் - 2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார் - 2
                        - சிங்க கெபியில்
திறந்த வாசலை என் முன்னே வச்சீங்க
தடை இல்லாம பிரவேசிக்க
உதவி செஞ்சீங்க
சின்னவன் என்னை பெருக செஞ்சீங்க
நான் நெனைச்சு கூட பார்க்காத
வாழ்க்கை தந்தீங்க

நன்றி நன்றி நன்றி தேவா


நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிரியைகளில் மகிழுகிறோம் நாதா

நன்றி நன்றி நன்றி தேவா


நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி நன்றி தேவா
உங்க கிருபையில வாழுகிறோம் நாதா

வெண்கல கதவு ஒடஞ்சு போச்சு


கண்ணு முன்னால இருப்பு தாலு முறிஞ்சது
உங்க வல்லமையால சூழ்நிலைகள் மாறினது
வார்த்தையினால இழந்ததெல்லா
திரும்ப வந்தது கிருபையினால

ஏசேக்கு போனதால கவலையே இல்லை


சித்னாவும் போனதால கவலையே இல்ல
இடம் கொண்டு நான் பெருக நெனச்சதுனால
ரெகொபோத்த தந்தீங்க கிருபையினால
நான் அழுதபோது எல்லாம் என் அருகில்

வந்தவரே
உங்க கரங்களினாலே என் கண்ணீர்
துடைத்தவரே
–2

1.அன்பாய் இருபேன் என்று சொல்வார்கள்


அலட்சியமாய் விட்டு போவார்கள் – 2
அன்பு தருபவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

2.உதவி செய்வேன் என்று சொல்வார்கள்


உதறி தள்ளி விட்டு போவார்கள் – 2
உதவி செய்பவரும் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

3.உலகம் என்னை வெறுத்தது ஐயா


உறவுகள் என்னையும் பகைத்தது ஐயா – 2
வெறுக்காத தெய்வம் நீர்தான் ஐயா – 2
உம்மை அன்றி எனக்கு யாரு ஐயா – 2

இயேசு தான் அவர் இயேசு தான் – 4

பாடுவேன் பரவசமாகுவேன்
பறந்தோடும் இன்னலே
1.அலையலையாய் துன்பம்
சூழ்ந்து நிலை கலங்கி ஆழ்த்தையில்
அலைகடல் தடுத்து நடுவழி
விடுத்து கடத்தியே சென்ற கர்த்தனை

2.என்று மாறும் எந்தன் துயரம்


என்றே மனமும் ஏங்கையில்
மாராவின் கசப்பை மதுரமுமாக்கி
மகிழ்வித்த மகிபனையே

3.ஒன்றுமிலா வெறுமை நிலையில்


உதவுவாரற்றுப் போகையில்
கன்மலை பிளந்து தண்ணீரை
சுரந்து தாகம்  தீர்த்த தயவை

4.வனாந்திரமாய் வாழ்க்கை மாறி


பட்டினி சஞ்சலம் நேர்கையில்
வானமன்னாவால்ஞானமாய் போஷித்த
காணாத மன்னா இயேசுவை

5.எண்ணிறந்த எதிர்ப்பினூடே
ஏளனமும் சேர்ந்து தாக்கையில்
துன்பப்பெருக்கிலும் இன்முகம் காட்டி ஜெயகீதம் காத்தவரை
அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்
இந்த லேசான உபத்திரவம்

சோர்ந்து போகாதே - நீ

1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்


புதிதாக்க படுகின்ற நேரமிது --- சோர்ந்து

2. ஈடு இணையில்லா மகிமை


இதனால் நமக்கு வந்திடுமே --- சோர்ந்து

3. காண்கின்ற உலகம் தேடவில்லை


காணாதப் பரலோகம் நாடுகிறோம் --- சோர்ந்து

4. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்


பாக்கியம் நமக்கு பாக்கியமே --- சோர்ந்து

5. மன்னவன் இயேசு வருகையிலே


மகிழ்ந்து நாமும் களிகூருவோம் --- சோர்ந்து

6. மகிமையின் தேவ ஆவிதாமே


மண்ணான நமக்குள் வாழ்கின்றார் --- சோர்ந்து
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
வந்து நிற்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்

ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே
துதித்திட வந்தோம்
தொழுதிட வந்தோம்
தூயவர் இயேசுவையே

1. ஆலயம் செல்லுவதே
அது மகிழ்ச்சியை தந்திடுதே
என் சபையுடனே உம்மை துதித்திடவே
கிருபையும் கிடைத்திட்டதே - ஆராதிக்க

2. பலிகளை செலுத்திடவே
ஜீவ பலியாக மாறிடவே
மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - ஆராதிக்க

3. நன்மையை செய்தவர்க்கே
நாங்கள் நன்றி செலுத்துவோமே
எம் காணிக்கையை உம் கரங்களிலே
உற்சாகமாய் விதைக்கிறோமே - ஆராதிக்க

4. துதிகன மகிமையுமே
முழு மனதோடு செலுத்துவோமே
சம்பூரண ஆசிர்வாதங்களால்
திருப்தியாய் அனுப்பிடுமே - ஆராதிக்க
1. அநாதி சிநேகத்தால்
என்னை நேசித்தீரைய்யா
காருண்யத்தினால்
என்னை இழுத்துக் கொண்டீரே

உங்க அன்பு பெரியது


உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது

2. அனாதையாய் அலைந்த
என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து
காத்துக் கொண்டீரே - உங்க

3. நிலையில்லாதா உலகத்தில்
அலைந்தேனய்யா
நிகரில்லாத இயேசுவே
அனைத்துக் கொண்டீரே - உங்க

4. தாயின் கருவில் தோன்றுமுன்னே


தெரிந்துக் கொண்டீரே
தாயைப் போல ஆற்றி தேற்றி
அரவணைத்தீரே - உங்க

5. நடத்தி வந்த பாதைகளை


நினைக்கும் போதெல்லாம்
கண்ணர ீ ோடு நன்றி சொல்லி
துதிக்கிறேனைய்யா - உங்க

6. கர்தத
் ர் செய்ய நினைத்தது
தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக
செய்து முடித்தீரே - உங்க
அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

பெலனடைய நிரப்பிடுமே
பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே
ஞானத்தின் ஆவியே --- அசைவாடும்

தேற்றிடுமே உள்ளங்களை
இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை
அபிஷேக தைலத்தினால் --- அசைவாடும்

துடைத்திடுமே கண்ணரெ ீ ல்லாம்


கிருபையின் பொற்கரத்தால்
நிறைந்திடுமே ஆனந்தத்தால்
மகிழ்வுடன் துதித்திடவே --- அசைவாடும்

ஆராதனை நாயகன் நீரே


ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்

1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்


ஆண்டவர் இயேசுவிலே
விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை

2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்


மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவுமே முடங்கிடுமே
மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை

3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள


திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நாம் சேர்நத் ிடவே
அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை
ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்


நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டுக் கொடுக்கலயே...
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே


என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம


முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து


நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

என் உயிரான உயிரான உயிரான இயேசு


என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

1. உலகமெல்லாம் மறக்குதையா!
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே

2. உம் வசனம் எனக்கு உணவாகும்


உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா!
உம் வசனம் தியானிக்கிறேன்

3. உம் திரு நாமம் உலகத்திலே


உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே
உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

1. உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

2. சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

3. ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

4. ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்தத் ிவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே
எந்தன் கன்மலை ஆனவரே
என்னை காக்கும் தெய்வம் நீரே
வல்லமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமைக்கு பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

உந்தன் சிறகுகளின் நிழலில்


என்றென்றும் மகிழச் செய்தீர்
தூயவரே என் துணையாளரே
துதிக்குப் பாத்திரரே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் பெலவீன நேரங்களில்


உம் கிருபை தந்தீரைய்யா
இயேசு ராஜா என் பெலனானீர்
எதற்கும் பயம் இல்லையே

ஆராதனை உமக்கே (4)

எந்தன் உயிருள்ள நாட்களெல்லாம்


உம்மை புகழ்ந்து பாடிடுவேன்
ராஜா நீர் செய்த நன்மைகளை
எண்ணி துதித்திடுவேன்

ஆராதனை உமக்கே (4)


எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு
நேராக என் கண்களை ஏறெடுப்பேன்

வானம் பூமி உண்டாக்கின - கர்த்தரிடம்


எனக்கு ஒத்தாசை வந்திடுமே

1. உன் காலைத் தள்ளாடவொட்டார்


உன்னைக் காக்கிறவர் உறங்கார்
இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர்
உறங்குவதில்லை, தூங்குவதுமில்லை --- வானம்

2. கர்தத
் ர் எல்லாத் தீங்குக்கும் விலக்கி
உன் ஆத்துமாவையுங் காப்பார்
உன் போக்கையும் வரத்தையுமே
இது முதற்கொண்டு என்றென்றைக்குங் காப்பார் -
வானம்

தொல்லைக் கஷ்டங்கள் சூழ்ந்திடும்


துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற் கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு


உண்டெனக்கு உண்டெனக்கு
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

ஐயம் மிகுந்ததோர் காலத்தில்


ஆவி குறைவால் தான் – மீட்பர்
உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்று
இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று
இயேசென்னைக் காக்க வல்லோர்

என்ன வந்தாலும் நம்புவேன்


என் நேச மீடப் ரை – யார் கைவிட்டாலும்
பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
அவர் என்னைக் கைவிடமாட்டார்
யாக்கோபை போல நான் போராடுவேன்
எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

1. அன்னாளை போல ஆலயத்தில்


அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்


அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இரங்கி வாரும் ஐயா

3. தாவீதை போல அனுதினமும்


துதித்து நான் மகிழ்நத
் ிடுவேன்
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்
லேசான காரியம், உமக்கது லேசான காரியம் ( 2 )
பெலன் உள்ளவன், பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன், பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம், உமக்கது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான


காரியம் (2)
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம்
(2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான
காரியம் (2)
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம்
(2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
3. இடறிய மீனவனை சீஷனாய் மாற்றுவது லேசான காரியம்
(2)
இடையனை கோமகனாய் அரியணை ஏற்றுவதும் லேசான
காரியம் (2)
உமக்கது, லேசான காரியம் --- பெலன் உள்ளவன்
நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
1. பல கோடி வார்ததை
் கள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையிலே உண்டு அற்புதமே
--- நீரின்றி
2. கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள் உம் ஜீவனை தந்தவர் நீர்
உம்மையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாதைய்யா
--- நீரின்றி
3. எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
--- நீரின்றி
1. ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்து கொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)
ஆராதனை ஆராதனை ஆராதனை
ஓ... நித்தியமானவரே --- (2)
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன் --- (2)
2. கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)
3. வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் --- (2)
வாக்குப்பண்ணினவர் மாறிடார்
வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
சோர்ந்து போகாதே - நீ
சோர்ந்து போகாதே
சோர்ந்து போகாதே
உன்னை அழைத்தவர்
உண்மையுள்ளவர்
1. காலங்கள் கடந்ததோ
தாமதம் ஆனதோ
வாக்குத்தத்தங்கள்
உன் வாழ்வினில் தொலைந்ததோ
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
2. அவர் மனிதன் அல்லவே
பொய் சொல்வதில்லையே
அவர் உண்மையுள்ளவர்
வாக்குமறப்பதில்லையே
வாக்குத்தந்தவர் சிறந்தவர்
சிறந்ததை தருபவர்
ஏமாற்றங்கள் இல்லையே
பரலோகமே உம்மைத் துதிப்பதால்
கர்த்தாவே அங்கே வாழ்கிறீர்
உம் ஆலயத்தில் உம்மைத் துதிக்கிறோம்
கர்த்தாவே எழுந்தருளும்
துதிக்கிறோம் துதிக்கிறோம்
ஒன்றாக கூடித் துதிக்கிறோம் (2) - அல்லேலூயா
1. உந்தன் நாமம் உயர்த்தும் இடத்தில்
அங்கே வாசம் செய்வீர் (2) --- துதிக்கிறோம்
2. உம்மைப்போல் ஒரு தெய்வமில்லை
சர்வ சிருஷ்டிகரே (2) --- துதிக்கிறோம்
3. துதியும் கனமும் மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம் (2) --- துதிக்கிறோம்
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும்
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீரத் ்தீரே
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே
--- ஊற்று
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
கனி தந்திட நான் செழித்தோங்கிட
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட
--- ஊற்று
3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட
--- ஊற்று
4. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
புதுபெலன் அடைந்து நான் மகிழ்நத ் ிடவே
பரிசுத்தத்தை பயத்துடனே
பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே --- ஊற்று

குயவனே உம் கையில் களிமண் நான்


உடைத்து உருவாக்கும் (2)
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே (2)
என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில் (2)
1. உம் சேவைக்காய் எனை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் - உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே --- என்னைத்
2. உமக்காகவே நான் வாழ்கிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல் - உம்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே --- என்னைத்
3. உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட எனை மாற்றுமே - ஓய்வின்றி
உமைப் பாட ஓயாமல் உமைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே --- என்னைத்

You might also like