You are on page 1of 6

Praise The LORD!!

1.

1. எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்


உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன்
உம்மைப் போல் ஒரு தேவனைப் பூமியில் அறிந்திடேன்
உயிர் தந்த தெய்வம் நீரே
பல்லவி
ஆ! ஆனந்தம் ஆனந்தமே
அல்லும் பகலிலும் பாடிடுவேன்
இயேசுவே எந்தன் ஆருயிரே
2. பெற்ற தாயும் என் தந்தையுமானவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே
வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ
வாக்கு மாறாதவரே
3. உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே
உந்தன் நாமத்தை நம்பிடுவேன்
உம்மையல்லாதிப் பூமியில் யாரையும் நம்பிடேன்
உயிருள்ள தெய்வம் நீரே
4. எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே
தந்த வாலிப நாட்களிலே
இந்த மாய உலகத்தை வெறுத்திட அளித்தீரே
பரிசுத்த ஜீவியமே
5. பொன் வெள்ளியுமோ பெரும் பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே

பல்லவி: என்னை மறவா இயேசு நாதா

உந்தன் தயவால் என்னை நடத்தும்.

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்

வரைந் தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்

ஆபத்திலே அரும் துணையே

பாதைக்கு நல்ல தீபமிதே

2. பயப்படாதே வலங்கரத்தாலே

பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்

ஏழை என்னை நின் கையினின்று


எவரும் பறிக்க இயலாதே

3. தாய்தன் சேயை மறந்துவிட்டாலும்

உன்னை மறவேன் என்றதாலே ஸ்தோத்திரம்

உள்ளங்கையில் என்னை வரைந்தீர்

உன்னதா எந்தன் புகலிடமே

4. திக்கற்றோராய் கைவிடேனே

கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்

நீர் அறியா யாதும் நேரிடா

என் தலை முடியும் எண்ணினீரே

5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்

தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்

அக்கினியின் மதிலாக

அன்பரே என்னைக் காத்திடுமே

6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்

வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்

பறந்திடுதே உம் நாமத்திலே

பரனே எனக்காய் ஜெயக்கொடியே

7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே

ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்

எப்படியாயினும் வருகையிலே

ஏழை என்னைச் சேர்த்திடுமே

3.

பல்லவி: திருப்பாதம் நம்பி வந்தேன்

கிருபை நிறை இயேசுவே

தமதன்பை கண்டடைந்தேன்

தேவ சமுகத்திலே.

1. இளைப்பாறுதல் தரும் தேவா


களைத்தோரைத் தேற்றிடுமே

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்

சுகமாய் அங்குத் தங்கிடுவேன்

2. என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்

இன்னல் துன்ப நேரத்திலும்

கருத்தாய் விசாரித்து என்றும்

கனிவோடென்னை நோக்கிடுமே

3. மனம் மாற மாந்தன் நீரல்ல

மனவேண்டுதல் கேட்டிடும்

எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே

இயேசுவே உம்மை அண்டிடுவேன்

4. என்னைக் கைவிடாதிரும் நாதா

என்ன நிந்தை நேரிடினும்

உமக்காக யாவும் சகிப்பேன்

உமது பெலன் ஈந்திடுமே

5. உம்மை ஊக்கமாய் நோக்கிப்பார்த்தே

உண்மையாய் வெட்கம் அடையேன்

தமது முகப் பிரகாசம்

தினமும் என்னில் வீசிடுதே

6. சத்துரு தலை கவிழ்ந்தோட

நித்தமும் கிரியை செய்திடும்

என்னைத் தேற்றிடும் அடையாளம்

இயேசுவே இன்று காட்டிடுமே

7. விசுவாசத்தால் பிழைத்தோங்க

வீர பாதை காட்டினீரே

வளர்ந்து கனிதரும் வாழ்வை

விரும்பி வரம் வேண்டுகிறேன்


8. பலர் தள்ளின மூலைக்கல்லே

பரம சீயோன் மீதிலே

பிரகாசிக்கும் அதை நோக்கி

பதறாமலே காத்திருப்பேன்

4.

பல்லவி: இயேசு நேசிக்கிறார்--இயேசு நேசிக்கிறார்;

இயேசு என்னையும நேசிக்க யான் செய்த

என்ன மா தவமோ?

1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்

மாசிலதா பரன் சுதன்றன் முழு

மனதால் நேசிக்கிறார்.

2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம்

நரராமீனரை நேசிக்கிறாரென
நவில லாச்சரியம்

3. நாதனை மறந்து நாட்கழித் தலைந்தும்,

நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்

நித்தமாச்சரியம்.

4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்

அதை நினைத் தவ ரன்பின் கரத்துளே

ஆவலாய்ப் பறப்பேன்.

5. இராஜன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்,

ஈசன் இயேசெனைத் தானேசித்தாரென்ற


இணையில் கீதஞ் சொல்வேன்.

5.

1. ஆனந்தமாய் நாம் ஆர்ப்பரிப்போமே

அருமையாய் இயேசு நமக்களித்த


அளவில்லாக் கிருபை பெரிதல்லவோ

அனுதின ஜீவியத்தில்.

பல்லவி: ஆத்துமமே என் முழு உள்ளமே

உன் அற்புத தேவனையே ஸ்தோத்திரி,

பொங்கிடுதே என் உள்ளத்திலே

பேரன்பின் பெரு வெள்ளமே.

2. கருணையாய் இதுவரைக் கைவிடாமலே

கண்மணிபோல் எம்மைக் காத்தாரே,

கவலைகள் போக்கி கண்ணீர் துடைத்தார்

கருத்துடன் பாடிடுவோம்.

3. யோர்தானைக் கடப்போம் அவர் பெலத்தால்

எரிகோவைத் தகர்ப்போம் அவர் துதியால்,

இயேசுவின் நாமத்தில் ஜெயங் கொண்டே

என்றென்றுமாய் வாழுவோம்.

4. பரிசுத்தவான்களின் பாடுகளெல்லாம்

அதி சீக்கிரமாய் முடிகிறதே,

விழிபபுடன் கூடித் தரித்திருப்போம்

விரைந்தவர் வருகிறாரே.

5. படகிலே படுத்து உறங்கினாலும்

கடும்புயல் அடித்துக் கவிழ்த்தினாலும்,


கடலையும் காற்றையும் அமர்த்தியெம்மை

காப்பாரே அல்லேலூயா.

6.

பாரீர் அருணோதயம் போல்


உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே


சரோனின் ரோஜாவும் லீலி புஸ்பமுமாம்
பதினாயிரங்களில் சிறந்தோர்

காட்டு மரங்களில் கிச்சிலி போல்


எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம்

அவர் இடது கை என் தலைகீழ்


வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே

என் பிரியமே ரூபவதி


என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமுகத்தில் மகிழ்ந்திடுவேன்

என் நேசர் என்னுடையவரே


அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்லுவேன் அந்நேரமே

நாம் மகிழ்ந்து துதித்துடுவோம்


ஆட்டுக்குட்டியின் மண நாளிலே
சுத்தப் பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்திலே

You might also like