You are on page 1of 3

1

பல்லவி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி – நாள் தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

அனுபல்லவி

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி – எப்போதும்

சரணங்கள்

1. இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை


ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை – எப்போதும்

2. சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே


சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே – எப்போதும்

3. கிறிஸ்தேக நாயகன் கிருபை உன் பூரணம்


கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம் – எப்போதும்

4. வட்டிலும்,
ீ காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும் படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும் – எப்போதும்

5. தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வணை,


ீ மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீ த நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி – எப்போதும்

6. துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்


இன்பமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வழினும்
ீ – எப்போதும்
2

1. ஸ்தோத்தரிப்பேன், ஸ்தோத்தரிப்பேன் இயேசு தேவனை


என் ஜீவனுள்ள நாட்களெல்லாம் ஸ்தோத்தரிப்பேனே

2. உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை


இயேசுவின் நாமத்தினாலே செலுத்துகிறேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

3. பாவக்கறை நீங்க என்னை முற்றிலுமாக


உம் சுத்தமுள்ள இரத்தத்திற்குள் தோய்த்ததினாலே – ஸ்தோத்தரிப்பேன்

4. என்னுடைய நோய்களை உம் காயங்களாலே


என்றைக்குமாய்த் தீர்த்ததினால் ஸ்தோத்தரிப்பேன் யான் –
ஸ்தோத்தரிப்பேன்

5. ஆகாயத்துப் பட்சிகளைப் போஷிக்கும் – தேவன்


தினமும் என்னைப் போஷிப்பதால் ஸ்தோத்தரிப்பேன் யான் –
ஸ்தோத்தரிப்பேன்

6. நாளைத்தினம் ஊன் உடைக்காய் என் சிந்தைகளை


கவலையற்றதாக்கினதால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

7. சீக்கிரமாய் வந்திடுவேன் என்றுரைத்தோனைச்


சீக்கிரமாய்க் காண்பதினால் ஸ்தோத்தரிப்பேன் யான் – ஸ்தோத்தரிப்பேன்

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
பொற்பரன் இயேசுவையே
புவியில் அவர் போல் வேறில்லையே

தந்தையைப்போல் தோளினிலே
மைந்தரெம்மைச் சுமந்தவரே
எந்நாளுமே அவர் நாமமே
இந்நிலத்தே நாம் துதித்திடுவோம்

கன மகிமை புகழடைய
கருணையால் ஜெநிப்பித்ததாலே
கனலெரியும் சோதனையில்
கலங்கிடுமோ என் விசுவாசமே

ஞாலமெல்லாம் கண்டதிசயிக்க
ஆவியின் அபிஷேகத்தாலே
ஏக சரீரமாய் நிறுத்த
இனைத்தனரே நம்மை தம் சுதராய்

ஆதி அப்போஸ்தல தூதுகளால்


அடியோரை ஸ்திரப்படுத்தி
சேதமில்லா ஜெயமளித்தே
கிறிஸ்துவின் நற்கந்தமாக்கினாரே

சீயோனே மா சாலேம் நகரே


சீரடைந்தே திகழ்வாயே
சேவிப்பாயே உன் நேசரையே
சிறப்புடனே இப்பார்தலத்தே

You might also like