You are on page 1of 21

ஜாதகம் 4

1. பொன்சனி - ஆட தாகப் பூமகன் வீணை யாக


வன்மதி அரியில் புக்க மால்புக ரிரவி ராகு
தன்மையாய்த் தெருக்கா லேறச் செம்பாம்பு நந்தி யாக
இன்ன வன் சென்னங் குண்டை இயம்புவீர் பலனைத் தானே.
1. குருவும் சனியும் மேஷத்திலும், செவ்வாய் மிதுனத்திலும், சந்தி
T

ரன் சிம்மத்திலும், புதன்


லக்கினம்
செவ்வாய்
சுக்கிரன் சூரியன் ராகு
சனி கேது
ஆகியோர் விருச்சிகத்
திலும், கேது விருஷபத்
திலும், தங்கியிருக்கும்
இராசி
படியான கிரக நிலைக
ளுடன் கூடிய விருஷப
சக்கரம்
லக்கினத்தில் பிறந்த
சந்திரன்
இந்த ஜாகதனுக்கு உரிய
பலன்களைச் சொல்லுவீர்
புதன்
முனிவரே!
சுக்கிரன்
சூரியன்
2. காதலி கேட்கும் போது கௌசிகர் கூற லுற்றர்
மேதினில் ஆணாம் சென்மம் விளம்புமில் கீழ்மேல் வீதி
போதவே வடக்கு வாடை போற்றுவோம் மேற்கில் சந்தி
தீதிலா மாரி தென்மேல் செப்புவோம் கேளு மம்மா.
2. என்று பார்வதிதேவி கேட்கும்போது, கௌசிக முனிவர் சொல்லத்
தொடங்கினார். பூமியில் ஆண் மகனாகப் பிறந்த இந்த ஜாதகன் வீடு கிழக்கு
மேற்கு வீதியில் வடக்கு வரிசையில் உள்ள தாகும். இவன் வீட்டுக்கு மேற்
கில் தெருக்கள் கூடும் சந்தி யொன் றுண்டு. மாரியம்மன் கோயில் தென்
மேற்குத் திசையில் இருக்கிறது. மேலுஞ்சொல்லுவோம், தாயே! கேளுங்கள்.
3. இதுவலால் வடமேல் திக்கில் இலகிடும் காளி என்றோம்
பதியது கூரை கொஞ்சம் பகருவோம் சிற்றூர் தன்னில்
நதிகங்கை வம்மி சத்தில் நாயகன் செனிப் பானாகும்
அதிகமாய்த் தவங்கள் செய்யு மம்மை யே மேலும் கேளே.
1, குரு.

2. மேட விராசி.
### book_page 83
விருஷப லக்னம்-ஜாதகம் 4
45

3. இவையல்லாமல், வடமேற்குத் திசையில் காளிகோயில் விளங்கு


கின்றது என்று சொன்னோம். வீடு கூரை வேயப்பட்டது. இப்படிப்
பட்ட ஒரு சிறிய ஊரில் வேளாளர் வமிசத்தில் இந்த ஜாதகன் பிறப்பான்.
மிக்க தவங்களைச் செய்யும் பார்வதி தேவியே! மேலுங் கேள்.
4. இன்னவன் யோகச் செய்கை இவன் தந்தை தாயின் யோகம்
மன்னிய துணைவர் யோகம் வரும் புத்திர களத்திர யோகம்
தன்னிலே முன்பின் சென்மம் சாந்தியும் கூறு கின்றோம்
அன்னையே யாங்கள் சொல்லும் அருண்மொழி குன்றா
(தென்றோம்.

4. இவனுடைய யோகம், இவனது தந்தையின் யோகம், நிலைபெற்ற


இந்த ஜாதகனின் உடன் பிறந்தார்களின் யோகங்கள், இவனுக்குப் பிறக்கப்
போகும் குழந்தைகள், வரப் போகும் மனைவி ஆகியவர்கள் யோகங்கள், இவ
னுடைய முன்பின் சென்மங்களைப் பற்றிய விவரங்கள், சாந்தி முதலிய
எல்லாவற்றையுஞ் சொல்லுகின்றோம், தாயே! நாங்கள் சொல்லும்
இந்தத் தூய்மையான பலன்கள் தவறா என்று சொன்னோம்.
5. தாதைக்குத் தாரம் ரெண்டில் தரித்திடு முதல்மா தீன்ற
நீதியாய் மைந்தன் தானும் நிகழ்த்துவோ மிவனின் தந்தை
ஓதவே யவன்கு ணத்தைப் போற்றுவோம் மாநி றத்தான்
மேதினில் சமதேகத்தன் வித்தகன் யோக சாலி.
5. இவன் பாட்டனாருக்கு இரு மனைவியர். அவர்களில் இந்த ஜாதக
னின் தந்தை முதல் மணைவிக்குப் புதல்வனாகப் பிறந்து விளங்கியவன்
என்று சொல்லுவோம். இவன் தந்தையின் குணத்தைப் பற்றிச் சொல்லு
வோம். மாநிறமுடையவன். குற்றமில்லாத உடலுடையவன். சாமர்த்திய
முடையவன், அதிர்ஷட
் முள்ளவன்.
6. கல்விமான் பெருமை யுள்ளான் கனத்தவர் நேசம்
(கொள்வன்

இல்லையென் றுரைக்க மாட்டான் யாரையும் வசியம்


(செய்வன்

எல்லைகள் அதிகம்சேர்ப்பன் இவன்சுகி போசனத்தன்


சொல்லுமே நெறியுள் ளோனாம் சுந்தரி மேலும் கேளே.
6. கல்வியறிவுடையான். பெருமையுடையவன். பெரியவர்கள் நட்
பைக் கொள்ளுவான். தன்னிடம் ஒன்றை யாசித்தவர்கட்கு இல்லையென்று
சொல்லமாட்டான். எப்படிப்பட்டவரையும் வசப்படுத்துவான். பூமியின்
எல்லைகளை அதிகப்படுத்துவான். சுகமான போஜனமுடையவன். சொல்லும்
சொற்களில் ஒழுங்குள்ளவன், பார்வதியே! மேலுங் கேள்,
### book_page 84
ஸப்தரிஷிநாடி
7. பூமியைப் பரிபா லிப்பன் புண்ணிய மனத்த னாகும்
சேமமாங் குடும்பமுள்ளான் சென்றிடம் பெருமையுள்ளான்
தாமத குணத்தா னாகும் தைரியன் அன்ன மீவன்
மாமன் தன் ஆஸ்தி தன்னை மன்ன னு மடைவா னென்றோம்.
7. நிலங்களைப் பரிபாலிப்பான். நல்ல சிந்தையுள்ளவன். சௌக்கிய
மான குடும்பமுடையவன். செல்லுமிடங்களில் பெருமையுடையவன். சிறிது
மந்தமான குணமுடையவன். தைரியசாலி. பசித்தவர்களுக்கு உணவு
தருவான். இவனுடைய மாமனின் சொத்துக்களை இவன் அடைவான் என்று
சொன்னோம்.
8. தந்தையின் ஆஸ்தி தன்னைச் சாதகன் அடையா னென்றோம்
வந்திடும் துணைவர் தம்மை வகுக்கின்றோம் ஆண்பால் -
(ரெண்டு

பந்தமா யிளையோ னுக்குப் பாலர்கள் இல்லை யாகும்


சந்தத மணமு மில்லான் தன் நேத்திர ரோக முள்ளான்.
8. இவனுடைய தகப்பனாரின் சொத்துக்களை இவன் அடைய மாட்
டான் என்று சொல்லுவோம். இவன் தந்தையின் உடன் பிறந்தார்களைக்
பற்றிச் சொல்லுகின்றோம். ஆண் மக்கள் இருவர். இவனுடைய இளையவனுக்
குப் பிள்ளைகள் இல்லை. மணமுமில்லாதவன். கண்வியா தியுள்ளவன்.
9. எப்போதும் பிணியு முள்ளான் யூகையும் குறை வதாகும்
செப்புவோம் அவன் பின் வந்தோன் சேதியைக் கேளு
(மம்மா

அப்புறம் சிலநாள் செல்வன் அநேகமாய் வணிபம் செய்வன்


மெய்ப்புடன் பொருளைச் சோப்பன் மேவுவன் சோங்கின்
[மேலே.

9. எப்போதும் வியாதியுள்ளவன். ஊகிக்கும் சக்தி குறைந்தவன்.


அவனுக்கு அடுத்த சகோதரனின் செய்தியைச் சொல்லுவோம், கேளுங்கள்
தாயே! சிலகாலம் நலமுடன் வாழ்ந் திருப்பன். பலவித வியாபாரங்கள்
செய்வான். முயற்சியுடன் பொருளைச் சேர்ப்பான். கப்பற்பிரயாணம் ,
செய்வான்.
10. தந்திர வாதி யாகும் சமர்தத
் னாம் யூக சாலி
சந்ததி உடைய னாகும் தைரிய மனத்த னென்றோம்
சிந்தையில் கபடு முள்ளான் சித்தினி சாதி யாவன்
பந்தமாய்ச் சலவியா பாரம் பண்ணுவ னிவனே யென்றோம்.
10. தர் திரமுடையவன். சாமர்த்தியமுடையவன். யூகமுள்ளவன்.
மக்கள் விருத்தியுடைவன். தைரியமான மனத்தோடு கூடியவன் என்று
• 1, கப்பல்,
### book_page 85
விருஷப லக்னம்--ஜாதகம் 4
சொன்னோம். மனத்தில் கபடமுள்ளவன். சித்தினிசாதிப் புருஷன். இவன்
திரவ உருவமான பொருள்களை வியாபாரம் செய்வான்.
11. இவ்வித அடையா ளங்கள இலகிய தந்தைக் கேதான்
ஒவ்விய மிந்த பாலன் உதிப்பனாம் மூன்றாம் சென்மம்
பவ்வமாய் முனிவர் கூறப் பத்தினி கேட்க லுற்றாள்
ஒவ்விய தந்தைக் கேதான் உரைத்திட்டீர் தாயார் ரெண்டு.
11. இப்படிப்பட்ட அடையாளங்களுள்ள தந்தைக்குப் புத்திரனாக
இந்த ஜாதகன் பிறப்பான். இவன் மூன்றாம் பிறப்பு என்று முனிவர் செல்ல,
பார்வதி கேட்கத் தொடங்கினாள். இவனுடைய தகப்பனாருக்கு இருதாய்
மார் என்று கூறினீர்கள்.
12. மறுதாயின் குடும்பச் சேதி வரைகுவீர் முனியே என்றாள்
திறமையாய்க் கேளு மம்மா தீங்காகும் குடும்பம் தானும் -
வரும்சுதர் ஆண்பால் ஒன்று வளர்கன்னி அவ்வா றாகும் -
குறையுண்டு அவர்க ளாலே கூறுவோ மிரண்டி லேதான்.
12. இளையதாயின் குடும்பச் செய்தியைச் சொல்லுங்கள், முனிவரே!
என்று கேட்டாள். உடனே முனிவர் சொல்வார். நன்றாகக் கேளுங்கள்,
தாயே! அவளுடைய குடும்பத்தில் கெடுதல்கள் ஏற்படும். ஓர் ஆண்
மகனும் ஒரு பெண்ணும் அவளுக்குப் பிறப்பர். அவர்களால் அவளுக்குக்
குறைகள் ஏற்படும். இவற்றையெல்லாம் இரண்டாம் பாகத்தில் விவர
மாகக் கூறுகிறோம்.
13. சாதகன் குணத்தைக் கேளாய் சாருமா நிறத்த னாகும்
மேதினில் சமதே கத்தன் விளை புலம் சேர்ப்பா னாகும்
பாதக மொருவர்க் கெண்ணான் பந்துபூ சிதனாம் மேலும்
நீதியாய் நடக்கை யுள்ளான் நிமலியே மேலும் கேளாய்.
13. இந்த ஜாதகனின் குணத்தைக் கேளுங்கள். கருமையான நிற
முடையவன். குறையில்லாத உடம்பையுடையவன். விளை நிலங்களைச்
சேர்ப்பவன், ஒருவருக்கும் கெடுதல் எண்ணாதவன். உறவினர்களைப்
போற்றுவான், நியாயமான நடத்தையுடையவன். பார்வதியே! மேலும்
கேட்பாயாக.
14. பால்தயிர் இட்ட முள்ளான் பதநடை சொகுசு முள்ளான்
சீலவா சார முள்ளான் சிந்தையில் கபடு மில்லான்
சாலவே சித்திர வீடு சாதிப்பான் சமமாம் கல்வி
கோலமாம் கிருஷி செய்வன் கோதையே மேலும் கேளே,
### book_page 86
ஸபதாஷ நாடி
14. பால் தயிர்களில் விருப்பமுள்ளான். நடையழகுள்ளவன். சிறம்
ஒழுக்கமுள்ளவன். மனத்தில் வஞ்சனையில்லாதவன். வேலைப்பாடமைக்க
அழகிய வீடு கட்டுவான். சிறந்த கல்வி யுடையவன். நல்ல விவசாயக்
தொழில் செய்வான். தாயே! மேலுங் கேள்.
15. அண்டினோர்க் குதவி செய்வன் அன்னங்கள் போட வல்லன்
குண்டை கோ விருத்தி யுள்ளான் குல நிந்தை யுடைய னாகும்
வண்டி வா கனமு முள்ளான் அடிமைடாள் விருத்தியுள்ளான்
எண்டிசைக் கீர்த்தி கொள்வன் இவன் பித்த தேக முள்ளான்.
15. தன்னை யடைந்தவர்களுக்கு உபசாரம் செய்வான். பசித்து
வந்தவர்களுக்கு உணவளிக்க வல்லவன். எருது, பசு மாடுகள் விருத்தியுள்ள
வன். குலத்தால் பழியை ஏற்பவன். வண்டி, முதலிய போக்குவாவு சாதனங்
களின் வசதியுடையவன், பணியாட்களை மிகுதியாகப் பெற்றவன். எட்டுத்
திசைகளிலும் புகழைக் கொள்ளுவான். பித்த தேக முடையவன்.
*

16. வறுமைக ளில்லா னாகும் வாக்குச்சொல் தப்பா னாகும்


அருமறை யவர்கள் நேசன் அநேகபாக் கியமும் சேர்ப்பன்
திருமகள் வாச முள்ளான் சிலசில வணிபம் செய்வன்
நிறையுப தேச முள்ளான நிமலன் மேல் பத்தி பூண்பன்.
16. தரித்திர மில்லாதவன். சொன்ன சொல் தவறாதவன். வேதம்
உணர்நத
் அந்தணர்களின் சகவாசமுடையவன். பலவித பாக்கியங்களை
யடைவான். இலட்சமீதேவியின் கடாட்ச முள்ள உன். சில வியாபாரங்கள்
செய்வான். நிறைந்த உபதேசங்களைப் பெற்றவன். இறைவன் மீது பக்தி
கொள்ளுவான்.
17. அவனுடைத் துணைவர் தம்மை அறைகின்றோம் மூத்தோர்
(காணோம்

இவனுக்கு இளையோ ருண்டு இயம்புவோ மாண்பா


(லொன்று

பவமுள கன்னி யொன்று பருகிடும் தீர்க்க மாகத்


தவமுடை யோரைக் காக்கும் தயாபரி மேலுங் கேளே.
17. இவனுடைய உடன் பிறந்தார்களைப் பற்றிச் சொல்லுகின்றோம்.
இவனுக்கு மூத்தவர்கள் இல்லை. இளையவர்கள் உண்டு. ஓர் ஆண் மகனும்
ஒரு பெண்ணும் தீர்க்கமாக இருப்பர். தவத்தையுடைய சான்றோர்களைப்
பாதுகாக்கும் கருணை பொருந்திய பார்வதியே! மேலும் கேட்பாயாக.
### book_page 87
விருஷப லக்னம்-ஜாதகம் 4
49

18. இவனுடை மணத்தின் காலம் இயம்புவோ மொருபா


[னொன்பான்

அவனியில் தட்சி ணத்தில் அம்மாது வருவா ளென்றோம்


கவனமா யவள் தன் சேதி கழறு வோம் சிவந்த மேனி
தவ முடை யோருக் கன்பள் தயாளமாம் குணத்தளாமே.
18. இவனுடைய திருமண காலத்தைப் பற்றிக் கூறுவோம். பத்தொன்
பதாவது வயதில் தெற்குத் திசையிலிருந்து இவனுக்கு மனைவியாக வாய்ப்
பவள் வருவாள். அவளுடைய செய்தியைக் கூறுவோம். சிவந்த மேனியுடை
யவள். சான்றோர்களிடம் பக்தியும் அன்பும் கொண்டவள், இரக்க
முடையவள்.
19. புத்திமான் பொறுமை சாலி புண்ணிய மனத்தளாகும்
சித்தமே கரப்பும் இல்லாள் தீங்கதை மனத்தி லெண்ணாள்
- நித்தியம் சுசீல முள்ளாள் நேமியோர் மெச்ச வாழ்வாள்
பத்தினி வர னுக் கன்பள் பார்வதி மேலுங் கேளே.
19. புத்திசாலி. பொறுமை யுள்ளவள். நல்ல சிந்தை புடையவள்.
மனத்தில் சிறிதும் கபடமில்லாதவள். கெடுதல் நினைக்கமாட்டாள். எப்
பொழுதும் நல்லொழுக்கமுள்ளவள். உலகிலுள்ளோர் பாராட்ட வாழ்
வாள். கணவனிடம் மிக்க அன்புடையவள். பார்வதியே! மேலும் கேள்.
20. முனிவரிவ் விதமாயக் கூற மொழிகுவார் புசண்டர் தாமும்
கனிவுள சாத கர்க்குக் கழறுவோம் தாரம் ரெண்டு -
இனமதைச் சொல்லு மென்ன ஏழினில் ராகு நிற்க
அனையவப் பதத்தி னாலே அறைகின்றோம் தாரம் ரெண்டு.
20. கௌசிக முனிவர் இப்படிக் கூறிக் கொண்டுவா, புசண்ட முனி
வர் மேலும் கூறுவார். இந்த ஜாதகனுக்கு இரண்டு மனைவியர் என்று கூறு
வோம். காரணம் என்ன? சொல்லும், என்று கேட்க, முனிவர் சொல்லுவார்.
இலக்கினத்துக்கு ஏழாமிடத்தில் ராகு தங்கி யிருப்பதனாலே இரு மனைவியர்
என்று சொல்லுகின்றோம்.
21. சயமுனி இதனைக் கேட்டுச் செப்புவா ரம்ம னுக்கு
வியமேழோ னிரண்டில் நிற்க மிக்கவேழ் புதனும் நிற்கப்
பயமில்லை தார மொன்றே பகருவோ மிவனுக் கேதான்
நயமாக நாலில் சந்திரன் நல்கியும் குருவும் பார்க்க ;
21. செயமுனி என்பவர் இதனைக் கேட்டு, பார்வதியை நோக்கிச்
சொல்லுவார். விரயத்துக்கும் ஏழாமிடத்துக்கும் உடையவனாகிய செவ்
வாய் மிதுனத்தில் தங்கியிருக்க, ஏழாமிடத்தில் புதனும் நிற்பதால்
### book_page 88
ஸப்தரிஷிநாடி
அஞ்சவேண்டியதில்லை. இவனுக்கு மனைவி ஒருத்தியே யாவள். தவிரவும்
காலாமிடத்தில் சந்திரன் நிற்க, அ னும் குருவினால் பார்க்கப்படுவதால் :
22. தாரமே ஒன்று என்றோம் சாதகன் தனக்குப் புத்திரர்
வீரது ஆண்பாலுந்தான் விளங்கிடும் பெண்பா லொன்று
கூறிய மொழியைக் கேட்டுக் குறு முனி சொல்லு கின்றார்
வீறாது மதலை என்றீர் விளம்புவீர் அந்தச் சங்கை.
22. மனைவி ஒருத்தி என்று சொன்னோம். இந்த ஜாதகனுக்குப்
புத்திர பாக்கியத்தைப் பற்றிச் சொல்லுவோம். இவனுக்கு ஆண் குழந்தை
பிறந்து விளங்காது. பெண் குழந்தை யொன்று விளக்கும். இவ்வாறு
செயமுனி கூறியதைக் கேட்டு, அகத்தியர் கேட்கின்றார். ஆண் குழந்தை
விளங்காது என்று சொன்னீர், அதற்கு உரிய தோஷத்தைச் சொல்லுங்கள்.
வேறு
23. புத்திரத் தானும் புதனுமே யாகிச்
சித்தமாய் 1 ஆறோன் சேர்ந்துமே ஏழில்
வித்தகர் குருவும் ' விரயத்தில் செல்லக்
குத்தமாம் ஆண்பால் கூறினோம் ஐயா.
23. புத்திர ஸ்தானாதிபதி புதனாகி அவனோடு ஆறாம் வீடடு
் க் கதிபனா
கிய சுக்கிரனும் ஏழாமிடத்தில் சேர்நது
் நிற்பதாலும், குரு விரய ஸ்தான
மாகிய பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதாலும், இந்த ஜாதகனுக்குப்
புத்திர தோஷம் கூறினோம், முனிவரே!
24. சாதக ரீதியா யைந்தாம் பாவம்
ஓதினோம் அதைநீர் உணருவீர் என்றார்
நீதியாய் நாலை நிகர்குரு பார்க்கப்
போதவே *குடும்பப் பூமகன் இருக்க;
24. சோதிட சாஸ்திர முறைப்படி ஐந்தாம் பாவத்தின் விவரத்தைச்
சொன்னோம். குரு நான்காம் இடத்தைப் பார்பப் தாலும், இரண்டாமிட
மாகிய குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதாலும்,
1. சுக்கிரன்.

2. இலக்கினத்துக்குப் பன்னிரண்டாம் இடம் : ஈண்டு மேஷம்


3. புத்திர பாவம்.
4. இரண்டாம் இடம் : மிதுன ராசி,
### book_page 89
விருஷப லக்னம்-ஜாதகம் 4
51

வேறு
25. முன் செனம வினையி னாலே மொழிந்திட்டோம் மதலை
[தோடம்

என்ன ஊழ் அதனை நீங்க ளியம்புவீ ரென்று கேட்க


மன்னிய முன் சென் மத்தை அறைகின்றோம் அருணை
(உத்திரம்

உன்னித பேரூர் தன்னில் உயர்பிரம்ம குலத்தி லேதான் ;


25. முற்பிறப்பில் இந்த ஜாதகனுக்கு ஏற்பட்ட தீவினையினாலே இப்
பிறப்பில் இவனுக்குப் புத்திர தோஷம் உண்டாயிற்று என்று கூறினோம்.
அது என்ன தீவினை ? அதனைச் சொல்லுங்கள், என்று கேட்க, முனிவர்
சொல்லுகின்றார். இவனுடைய முன் சென்மத்தைச் சொல்லுகின்றோம்.
திருவண்ணாமலைக்கு வடக்கில் உள்ள சிறந்த ஓர் ஊரில் பிராமண குலத்தில் ;
6. உதித்துமே பெருமை பூண்டு உயர்பூமி உள்ளா னாகிப்
பதியினில் திரிபு முண்டாய்ப் பாலகன் வாழும் நாளில்
விதிக்கிறோம் வந்த ஊழை விதவையைப் போகந் துய்த்து
அதினாலே கருவு தங்கி அநேகமாய் அவிழ்த மீநத
் ான்.
26. இவன் பிறந்து, பெருமை பெற்று, நிலங்கள் மிகுதியாக உடைய
னாகி, வீட்டில் மாறுதல் ஏற்பட்டு, வாழுங்காலத்தில் உண்டான தீவினையைச்
சொல்லுகின்றோம். கணவனை யிழந்த பெண்ணொருத்தியுடன் இவன்
இன்பம் அனுபவித்ததனால் அவளுக்குக் கர்ப்பம் ஏற்பட்டது. பலவித
மருந்துகள் அவளுக்குக் கொடுத்தான்.
27. கருவுக ளழிந்து பின்பு காரிழை மரண மானாள்
அருமையா யந்தத் தோடம் அணுகிற்று இவனுக் கேதான்
அறைகின்றோ மச்சென் மத்தில் மைந்தர்கள் தோட
[முண்டாய்ப்

பெருமையும் குறைவ தாகப் பிழைத்தனன் இவனே


[யம்மா .

27. அதனால் அவளுடைய கர்ப்பம் அழிந்து, அவளும் மரண மடைந்


தாள். இந்தத தோஷம் இவனை வந்தடைந்தது. ஆகையினால் அச்சென்
மத்தில் புத்திர தோஷங்கள் உண்டாகி, பெருமையுங் குறைந்து, வாழ்ந்
தான் இவன். |
### book_page 90
54

ஸப்தரிஷி நாடி
35. கச்சிக்கு மேல்பா லாகக் கனமுள பேரூர் தன்னில்
இச்சையாய் வணிகர் வம்ச மிவளுமே பிறந்து மேலும்
மிச்சமாய்ப் பூஷ ணங்கள் மேதினில் பாக்கியம் பெற்றுக்
கச்சணி மாது வுக்குக் காளைகள் இல்லா தாகி;
35. காஞ்சீபுரத்துக்கு மேற்கில் உள்ள பெருமை மிக்க ஓர் ஊரில்
வணிகர் குலத்தில் இவள் பிறந்து, ஆபரணங்கள் செல்வங்கள் முதலிய பல
பாக்கியங்களையும் உலகத்தில் அடைந்து வாழும்போது, இவளுக்குப் புதல்
வர்கள் இல்லாமல் இருந்ததால் ;
36. வரனுடன் தலங்கள் சென்று மாதீர்தத
் ம் தோய்ந்து
[மேதான்

அறநெறி யார்க்கு அன்னம் அன்புட னீநது


் வந்து
உரமுடன் உள்ளூர் மீண்டு உத்தமி விரதம் கொண்டு
குறைமன மாக வேதான் கோடித்தாள் நோன்பை யேதான்.
36. தன் கணவனுடன் பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரை
சென்று, தீரத
் ்தங்களில் நீராடி, நல்லொழுக்கமுள்ள சாதுக்களுக்கு அன்
புடன் உணவளித்து மகிழ்ந்து, தன் ஊருக்குத் திரும்பி, விரதம் மேற்
கொண்டு, நிறைந்த மனமில்லாமல் பல நோன்புகளைச் செய்தாள்.
37. அச்சென்மம் தன்னி லேதான் அவளுக்கு மதலை யின்றிக்
கச்சணி வாயு நோயால் காதலி மரண மாகி
மிச்சமா யிச்சென் மத்தில் விளங்கினாள் இவளே யென்றோம்
உச்சித மறுசென் மத்தை உரைக்கின்றோம் கேளு மம்மா.
37. அந்தப் பிறப்பில் அவளுக்குக் குழந்தை யில்லாமல், வாயு நோய்
ஏற்பட்டு மரண மடைந்தாள். பிறகு இந்தச் சென்மத்தில் இப் பிறப்பாகப்
பிறந்தவள் இவள் என்று சொன்னோம். இவளுடைய மறுபிறப்பைப் பற்றிச்
சொல்லுகின்றோம் : கேளுங்கள், தாயே!
38. தில்லையில் சைவ வமிசம் தேவியு முதித்து மேதான்
நல்லவ ளாகி யேதான் நாட்டில் நற் கீர்த்தி பெற்று
வல்லியும் வாழ்வா ளாகும் அறைகின்றோம் தந்தை
(சென்மம்

அல்லலை அகற்று மாதே அம்பிகை யாளே கேளாய்.


38. சிதம்பரத்தில் சைவ குலத்தில் இவள் பிறந்து நல்ல குணமுடை
யவளாய் நாட்டில் புகழ்பெற்று வாழ்வாளாம். தந்தையின் மறுசென்மத்தைச்
சொல்லுகின்றோம். எல்லோருடைய துன்பங்களையும் போக்கும் பார்வதியே!
அம்பிகையே! கேட்பாயாக.
### book_page 91
விருஷப லக்னம் - ஜாதகம் 4
39. தந்தையின் முன்சென் மத்தைச் சாற்றுவோம் ஆழி
[மேல்பால்

அந்தணர் குலமு தித்து ஆரியர் கல்வி கற்றுச்


சந்தத மரசர் பக்கல் தானதி காரம் பெற்றுப்
பந்தமாய் வாழு நாளில் பகருவோம் ஊழி தானே.
39. தந்தையின் முற்பிறப்பைப் பற்றிச் சொல்லுவோம். திருப்பாற்
கடல் என்னும் ஊருக்கு மேற்கில் பிராமண குலத்தில் பிறந்து வடமொழிக்
கல்வி முதலானவற்றைக் கற்று அரசர்களிடத்தில் உத்தரவு பெற்ற அதிகாரி
யாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் நேர்ந்த தோஷத்தைச்
சொல்லுவோம்.
40. வருவோர்கள் மனத்தைத் தேற்றி வண்மையாய்த் தீர்ப்புச்
(செய்து

பெருமையாய் வாழு நாளில் பேசுவோம் ஊழி தானும்


ஒருமையாய் இருவர் தானும் உறைந்துபின் விரோத முற்று
வறுமையாய் இவன்பா லுந்தான் வந்தனன் வேளா
[ளன்தான்.

40. தன்னிடம் வழக்குரைக்க வருபவர்களுக்கு அவர்கள் வழக்கைக்


கேட்டு அவர்கள் மனம் சமாதானம் அடையும் வகையில் நியாயமான தீர்ப்
பைக் கூறியனுப்பிப் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருந்தான். இங்கனம்
வாழும் நாளில் நேர்நத
் ஒரு தோஷத்தைச் சொல்லுவோம். தானும் தன்
ஞா தியுமாக ஒற்றுமையாக வாழ்ந்திருக்கையில் இடையில் ஏற்பட்ட விரோ
தத்தினால் ஞாதி தன் பாகத்தை யபகரித்துக் கொள்ள, ஒன்றும் செய்ய
முடியாமல் ஏழ்மை யடைந்த ஒரு வேளாளன் இவனிடம் வந்தான்.
41. ஞாதியின் பாகம் வேண்டி நவின்றனன் ஒருவன் தானும்
பாதகன் தனைய ழைத்துப் பகர்நத
் ிட லஞ்சம் வாங்கிச்
சூதினால் தீரப
் ்புச் செய்தான் தோற்றவன் மனவெறுப்பால்
மேதினில் சொல்லு கின்றான் மெல்லியே கேட்டி டாயே.
41. அப்படி வந்த வேளாளன் தன்னுடைய ஞாதி யபகரித்துக்
கொண்ட பாகத்தை மீட்டுத் தரும்படி இவனிடம் வேண்டினான். உடனே
இவன் ஞாதியை யழைத்து வழக்கைச் சொல்லி, அவனிடம் லஞ்சம்பெற்
றுக் கொண்டு வஞ்சனை யாக ஞா தியின் பக்கமே தீரப் ்புச் செய்தான்.
வழக்குத் தோற்றுப் போன வேளாளன் மிக்க மன வெறுப்படைந்து சொல்
லுகின்றான். பார்வதி தேவியே! கேட்பாயாக,
### book_page 92
56

ஸப்தரிஷிநாடி
42. தந்தையி னாஸ்தி போக்கித் தந்துணை விகளால் நிந்தை
வந்துமே செனன காலம் எறுமைகள் அதிகம் நேர்ந்து
நொந்திடும் குடும்ப மென்று நுவலுவா னேழை தானும்
சந்ததம் கிரகம் நீங்கித் தாயின் தன் வர்க்கந் தன்னில்;
42. ஒரு பக்சமாகத் தீர்ப்புச் சொன்ன இவன் தன் தந்தையினால்
சேர்த்து வைக்கப்பட்ட ஆஸ்திகளை இழந்து, தன் சகோதரிகள் மனைவி
முதலியவர்களால் நிந்தனை பெற்று, பிறக்குங் காலத்தில் மிக்க வறுமையுள்ள
நிலையில் இருந்து குடும்பத்தோடு வருந்துவான் என்று சாபமிட்டான். மேலும்
நல்வினை நீங்கி, தாயாரின் வர்க்கத்தினர் ஆதாவில் ; -
43. சீவிப்பா யென்று சொல்லிச் செப்பினான் ஏழை தானும்
மேவிய அச்சென் மத்தில் விரையினில் பருவு கண்டு
தாவியே மரண மாகிச் சதுமுகன் வரையப் பட்டுத்
தாவிய இச்சென் மத்தில் சனித்தவன் இவனே யென்றோம்.
43. சீவிப்பாய் என்று கூறினான் ஏழை. பொருந்திய அச்சென்மத்தில்
மரும ஸ்தானத்தில் சட்டி புறப்பட்டு அதனால் மரணமடைந்தான், பின்பு
பிரமதேவனால் படைக்கப்பட்டு இச்சென்மத்தில் பிறந்தவன் இவனே
யென்று சொன்னோம்.
44. முன்சென்ம மேழைசாபம் முயன்றதா லிச்சென் மத்தில்
தன் தந்தை இல்லம் காணான் சக்தியா லவமானங்கள்
வந்திடு மென்று சொன்னோம் வரைகின்றோம் பின்சென்
[மத்தைச்

சந்ததம் காஞ்சி தன்னில் தனவைசிய னாகி யேதான் -


சொந்தநன் வணிடம் செய்து சுகமுடன் வாழ்வா னாமே.
44. முற்பிறப்பில் ஏழையின் சாபம் ஏற்பட்டதால், இப்பிறப்
பில் தந்தையின் வீட்டிலிருக்க முடியாமலும், பெண்ணால் அவ
மானங்களும் நேரும் என்றும் சொன்னோம். மறுபிறப்பைப் பற்றிக் கூறு
கின்றோம், காஞ்சீபுரத்தில் தனவைசிய குலத்தில் பிறந்து, சொந்த வியா
பாரங்கள் செய்து, சுகமாக வாழ்வான்.
45. தந்தையின் மரண காலம் சாற்றுவோம் முப்பான் மூன்றில்
வந்தவை காசி மாதம் வரைகின்றோம் கருமம் தானும்
பிந்திய அன்னை காலம் பேசுவோம் முப்பா னொன்பான்
தன் தனுர் மாதந் தன்னில் தாய்க்குமே கண்டம் உண்டாம்.
45. இவனுடைய தந்தையின் மரண காலத்தைக் கூறுவோம். முப்
பத்து மூன்றாம் வயதில் வைகாசி மாதத்தில் இந்த ஜாதகனுக்குக் கருமதசை
### book_page 93
விருவுப லக்னம்-ஜாதகம் 4
57

யுண்டென்று கூறுகின்றோம். இவன் தாயின் மாண காலத்தைப்


பற்றிச் சொல்லுவோம். இவனுடைய முப்பத்தொன்பதாம் வயதில் மார்
கழி மாதத்தில் தாய்க்கு மரணம் ஏற்படும்.
46. இன்னவன் பொதுயோ கத்தை இயம்பு?வாம் சுகமு
(முள்ளான்

தன் சொலும் மேன்மை யுள்ளான் சகலரும் மெச்ச


(வாழ்வான்

உன்னித பாக்கிய வானாம் உலகு ளோர்க் குதவி செய்வான்


பன்னிய பூமி சேர்ப்பன் பாரினில் கீர்த்தி யுள்ளான்.
46. இவனுடைய பொதுவான யோகத்தைப் பற்றிச் சொல்லுவோம்.
நலமுடையவன். தன் வார்த்தைக்கு மதிப்புப் பெற்றவன். பலரும் போற்ற
வாழ்வான். சிறந்த பாக்கியங்களுள்ளவன். உலகிலுள்ளாருக்கு உபகாரங்கள்
செய்வான். பூமிகள் சேர்ப்பான். உலகினில் கீர்த்தியுள்ள வன்.
47. சித்திர வீடு செய்வன் செப்புவா ளம்மன் தானும்
எத்திசை யெந்த காலம் இவன்வீடு செய்வா னென்றீர் ?
பத்தினி கேட்கும் போது பகருவார் விசுவா மித்திரர்
சுத்தமாய்ப் பதினெட் டாண்டில் தொகுப்பனாம் கிரகம்
[தானே.

47. அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய வீட்டைக் கட்டுவான். பார்


வதியம்மன் கேட்கலுற்றாள். எந்தத் தசையில், எந்தக் காலத்தில் இவன்
வீடு கட்டுவான் என்று சொன்னீர்கள்? பார்வதி தேவி இவ்வாறு கேட்கும்
போது, விசுவாமித்திரர் சொல்லுவார். பதினெட்டாம் வயதில் வீடு கட்டு
வான்.
48. இன்னவன் சனனந் தொட்டு இவனுடை ஆயுள் மட்டும்
உன்னித மறைபோல் யோகம் ஓங்கிடு மிவனுக் கேதான்
பன்னிய மரண காலம் பகருவாய் என்று கேட்க
மன்னிய முனிவர் சொல்வார் மங்கையே மேலும் கேளே.
48. இவனுடைய பிறப்பு முதல் ஆயுள் முடிவு வரை மேன்மையுள்ள
வேதங்களைப் போல் இவனுடைய யோகங்கள் உயரும். இவனுக்கு மரண
காலம் எப்பொழுது என்று சொல்லுவீர் ? என்று பார்வதி கேட்க, கேள்,
மேலும், என்று விசுவாமித்திர முனிவர் கூறுவார்.
### book_page 94
ஸப்தரிஷிநாடி
49. சாதகன் மரண காலம் சாற்றுவோ மறுபா னேழில்
தீதிலாக் 'கூனி மாதம் சிறந்ததோர் பருவந் தன்னில்
மேதினில் சூலை யாலே வித்தகன் மரண மாவன்
மாதுகேள் இவன் பின் சென்மம் வரைகின்றோ மிவசை
[கேதான்.

49. இந்த ஜாதகனின் மரண காலத்தைப் பற்றிச் சொல்லுவோம்


அறுபத்தேழாம் வயதில் குற்றமற்ற பங்குனி மாதம் வளர் பிறையில் கலை
நோய் ஏற்பட்டு இவன் மரணமடைவான். பெண்ணே ! கேள். இவ
மறுபிறப்பைப் பற்றிச் சொல்லுகின்றோம்.
50. காஞ்சிமா நகரி லேதான் காவல னிக்கு லத்தில்
வாஞ்சையா யுதிப்பா னாகும் வணிபங்க ளதிகம் செய்வன்
தாஞ்சையா யிவன்பின் னாலே தன்மனை கெண்ட மாகும்
பூஞ்சோலை வாசஞ் செய்யும் புண்ணிய வதியே கேளாய்
50. காஞ்சீபுரத்தில் இந்த ஜாதகன் இக்குலத்தில் விருப்புடன் உதிப்
பான். வியாபாரங்கள் மிகுதியாகச் செய்வான். இவனுக்குப் பிறகு இவன்
மனைவி மரணமடைவாள். அழகிய சோலைகளை யமைத்து அவற்றில் உல்
லாச வாழ்வு வாழ்வான். புண்ணியவதியாகிய பார்வதி தேவியே! மேலுங்
கேள்.
51. செனித்திடு காலந் தன்னில் செம்பாம்பு திசையிருப்புக்
குனித்திடு மாண்டு டைந்தும் கூறுவோம் திங்க
[ளொன்பான்

வனிதையே சாத கர்க்கு வனேகமாய்ப் பிணியு முண்டு


இனங்களுஞ் சேத மாகும் இடறுக ளனந்த முண்டு.
51. செனன காலத்தில், கேது மகா தசை இருப்பு ஐந்து ஆண்டுகளும்
ஒன்பது மாதங்களும் என்று சொல்லுவோம். தாயே! இந்த ஜாதகனுக்குப்
பிணிகள் அதிகமுண்டு. இவனுடைய சுற்றத்தார்களுக்கு அசுபங்கள் நிகழும்.
துன்பங்கள் மிகுதியாக ஏற்படும்
52. புகர்திசை பலனை யாங்கள் புகலுவோம் பூமி சேரும்
பதியது புதிதாய்ச் செய்வன் பெருகிடும் துணைவர் தாமும்
வகையான மனைவி வாய்க்கும் வான்பொருள் வந்து சேரும்.
தகைமையாய்த் துணைவர் கட்குச் சாற்றுவோம் சுபமு .
(முண்டாம்.

52. சுக்கிர மகா தசையின் பலனை நாங்கள் சொவ்லுவோம். பூமிகள்


சேரும். புதிய வீடு கட்டுவான். உடன் பிறந்தார், நண்பர்கள் ஆகியோர்
1. பங்குனி
### book_page 95
விருஷப லக்னம்--ஜாதகம் 4
59
விருத்தியாவர். பொருத்தமான மனைவி வாய்பப் ாள். மிகுந்த பொருள்
சேரும். இவனுடைய உடன் பிறந்தார் முதலியவர்களுக்குச் சுபங்கள்
ஏற்படும் என்று சொல்லுவோம்.
53. தந்தையின் துணை வ ருக்கும் சாற்றுவோம் சுபங்கள் தாமும்
அந்ததோர் துணைவன் தன்னால் அநேகமாய்ப் பொருளுஞ்
[சேரும்
சந்ததம் காலி விருத்தி சஞ்சல நிவர்தத
் ி யாகும்
சொந்தஆள் அடிமை சேரும் சுயபந்து நேச மாவர்.
53. இவனுடைய தந்தையின் உடன் பிறந்தார்களுக்கும் சுபங்கள்
ஏற்படும் என்று சொல்லுவோம். உடன்பிறந்தவன் வழியாக மிகுதியான
பொருளுஞ் சேரும். மாடுகள் விருத்தியாம். சஞ்சலங்கள் அனைத்தும் நீங்
கும். சொந்த ஆட்களும், பணியாட்களும் சேருவர். சொந்த பந்துக்கள்
மிக்க நேசமா யிருப்பர்.
54. பெண்ணினால் குறைவு நேர்நது் பின்புதான் சாந்த மாகும்
கண்ணிய மாக வாழ்வன் கீர்த்திக ளதிக மோங்கும்
பண்ணிய கிருஷி யோங்கும் பகருவோம் விபரம் ரெண்டில்
அண்ணலைப் பூசை செய்யும் அம்பிகை யாளே கேளாய்.
54. பெண்ணினால் குறை ஏற்பட்டுப் பின்பு நிவிர்தத
் ியாகும். மதிப்
பாக வாழ்வான். புகழ் மிகுதியாக ஓங்கும். செய்யும் பயிர்த் தொழில்கள் ,
விருத்தியாம். இரண்டாம் பாகத்தில் மற்றவற்றை விபரமாகச் சொல்லு
வோம். பரமசிவனைப் பூசைசெய்யும் பார்வதி தேவியே! கேட்பாயாக.
### book_page 96

You might also like