You are on page 1of 18

ஜாதகம் 2

1. சந்திரன் மாதை நின்று சனியரி புதன்சேய் வண்டி.


மந்திரி சாடி யாக வான்புகர் இரவி வீணை
பிந்திய சிகியு முச்சம் பெலராகு "நீசச
் மாக
வந்தவ னிடபம் சென்மம் வரைகுவீர் பலனைத் தானே.
1. சந்திரன் கன்னியா ராசியிலும், சனி சிம்மத்திலும், புதன் செவ்
வாய், கடகத்திலும், ' குரு
லக்கினம் | சுக்கிரன் கும்பத்திலும், சுக்கிரன்
சூரியன்
சூரியன் மிதுனத்திலும்,
கேது விருச்சிகத்திலும்
புதன் வலிமையுள்ள ராகு
இராசி
செவ்வாய் விருஷபத்திலும், இருக்
கின்ற நிலையில், பிறந்த
சக்கரம்
விருஷப லக்கின ஜாதக
சனி னுக்கு உரிய பலன்ளைச்
சொல்லுவீர்! |
குரு
சந்திரன்
2. பாலகன் பிறந்த இல்லம் பகருவோம் கீழ்மேல் வீதி
சீலமாய்த் தெற்கு வாசல் திருமால்தன் கோட்டம் கீழ்பால்
ஆலத்தை யுண்டோன் காளி அவர்கோட்டம் வடகீழ்
(தங்கும்

நீலியா மாரி மேற்கில் நிகர்குண்டம் தங்கு சென்றோம்.


2. இந்த ஜாதகன் பிறந்த வீட்டைப் பற்றிச் சொல்லுவோம். கிழக்கு
மேற்கு வீதியில், தெற்குப் பார்த்த வாசல் உள்ள வீடு. அதற்குக் கீழ்ப்
புறத்தில் திருமால் ஆலயமும், வடகிழக்கில் சிவாலயமும் காளிகோவிலும்
உண்டு. துர்ககை
் யம்மன் கோவில் மேற்கில் இருக்கிறது. அங்குத் தடாக
மும் உண்டு .
1. இங்குக் கூறியுள்ளபடி கேது ராகுவுக்கு நீசசம் விருஷபம் ;
உச்சம் விருச்சிகம். சிலர் ராகுவுக்கு மாத்திரம் விருச்சிக ராசியில் உச்சம்
என்றும் கேதுவிற்கு விருஷபத்தில் உச்சமென்றும் கூறுவர்,
வி-2
### book_page 56
ஸப்தரிஷி நாடி
3. தும்பியும் மாரி தானும் சொல்லுவோம் வடமேல் திக்கில்
இன்பமாம் சிற்றூர் தன்னில் இலகிய தந்தை யில்லம்
தெம்புடன் மூன்றாம் சென்மம் செனிப்பனாம் இந்தப் பாலன்
அம்புவி யளந்தோன் தங்கை அறைகுவோம் மேலும்
(கேளே.

3. வடமேற்கில் கணபதி, மாரியம்மன் ஆகியோர் ஆலயங்கள் உண்டு.


இப்படிப்பட்ட வளமைவாய்ந்த சிறிய கிராமத்தில், தந்தையின் இல்லத்தில்.
மூன்றாங் கர்பப் த்தில் பிறப்பவன் இவன். பூமியை அளந்த திருமாலின்
சகோதரியாகிய அம்பிகையே! மேலுங் சேட்பாயாக.
4. உதித்தவன் யோகந் தானும் உறுந்தந்தை தாயின் யோகம்
மதித்திட துணைவர் யோகம் வரும்புத்திர களத்திர யோகம்
சதியிலா முன்பின் சென்மம் சாந்தியு மிந்நூல் தன்னில்
விதிக்கிறோம் பலனை யாங்கள் வித்தகி கேட்டி டாயே.
4. பிற த ஜாதகனுடைய யோக பாவத்தையும், தாய்தந்தையரைப்
பற்றியும், சகோதர பாவத்தையும், புத்திர களத்திர யோகத்தையும், முன்
பின் சென்ம விவரத்தையும், அவற்றிர்குள்ள சாந்தி நலத்தையும் இந்நூலில்
சொல்லப் போகிறோம். உமாதேவியே! சேட்பாயாக.
5. தந்தையின் துணை வர் தம்மைச் சாற்றுவோம் பதினொன்
[றாகும்

பந்தமாய்ச் சிலது சேதம் பகருவோம் ஆண்டால் ரண்டு


சந்ததம் கன்னி மூன்று சதிருட னைந்தும் தீர்க்கம்
இந்தவார் தந்தை செய்தி இயம்புவோம் கேளு மம்மா.
5. தந்தையின் கூடப்பிறந்தவர்கள் பதினொருவர். சேதமானவை
போக, ஆண் குழந்தைகள் இரண்டும், பெண் குழந்தைகள் மூன்றும் நல்ல
நிலைமையில் இருக்கும். இனிமேல் தந்தையின் செய்தியைப்பற்றிக் கூறு
வோம். கேளும், தாயே!
6. சொன்ன சொல் கேட்பா னாகும் சோம்பலுங் கொஞ்ச
[முள்ளான்

கன்னென மொழியு முள்ளான் கனத்ததோர் புத்தி


(யுள்ளான்

உன்னித நடையு முள்ளான் உறுதியாம் மனத்த னாகும்


பன்னியே யுரைக்க வல்லான் பகருவான் கட்டு வார்த்தை .
### book_page 57
விருஷப லக்னம்-ஜாதகம் 2
19

6. சொன்ன சொல்லைக் கேட்பான். சிறிது சோம்பலுமுண்டு. இனி


மையான மொழியில் பேசக்கூடியவன். பெரும்புத்தியுமுண்டு. கம்பீரமான
நடைத்தோற்ற முள்ளவன். உறுதியான மனமுடையவன். பன்னிப் பன்
னிப் பேசவல்லவன். சொற்களைக் கட்டிக் கூறுவதில் வல்லவன்.
7. உரோமங்கள் நீட்சி யுள்ளான் நுவலுவோம் சிவந்த மேனி
தீமையாங் குணமுங் கொஞ்சம் சீலமு முடைய னாகும்
நேமமாய்ப் பத்தியுள்ளான் தொனமாய் வார்த்தை
[சொல்வான்

தாமதம் ஒடிச லுள்ளான் தனத்தின்மே லிச்சை யுள்ளான்.


7. உரோம அடர்த்தியும், சிவந்த மேனியுமுடையவன். தீய
குணமும், நற்குணமும் கலந்து காணப்படுபவன். பக்திசிரத்தையும்,
நிதானமாகப் பதில் சொல்லக்கூடிய தாமத குணமும், மெல்லிய தேகமும்,
செல்வத்தில் விருப்பமும் உள்ளவன்.
8. கிருஷியும் செய்வா னாகும் கெடுதலைப் புத்தி கொஞ்சம்
விரைவில் வெஞ் சினமு முண்டு விரும்புவான் சுகிபு சிப்பு
கரமதில் விஷ்ணு ரேகை கான்றதோர் சுழியு முண்டு
அறைகிறோம் பித்த வாயு அணுகிடு மிவனுக் கேதான்.
8. விவசாயம் செய்பவன். கேடு நினைக்கும் மனப்பான்மையுமுள்ள
வன். சீக்கிரத்தில் கோபமும் வரும். சுவையுள்ள உணவில் விருப்பமுள்ள
வன். இவன் கையில் விஷ்ணு ரேகையும், விளக்கமான ஒரு சுழியுமுண்டு.
இவனுக்குப் பித்தவாயு நோய் ஏற்படும்.
9. இக்குண முடையோ னுக்கு இவனுமே உதிப்பா னென்றோம்
மிக்கவே இவன்கு ணத்தை விளம்புவோம் சிவந்த மெய்யன்
தக்கதோர் கல்வி கற்பன் தாட்சிண்யன் யூகை சாலி
மைக்கண்ணி னார்கள் மோகன் மனமது கிலேச மில்லான்.
9. இவ்வாறான குணங்கள் வாய்ந்த தந்தைக்கு இந்த ஜாதகன் பிறப்
பான். இனி, இந்த ஜாதகன் குணத்தைச் சொல்லுவோம். சிவந்த மெய்
யன். போதுமான அளவு கல்வி கற்பவன். தாட்சிணியமுடையவன்.
புத்திசாலி. விலைமாதர்களிடம் விருப்பமுள்ளவன். மனத்தில் எப்பொழுதும்
கவலை பற்றாதவன்,
10. பெருமையும் புகழு முள்ளான் புண்ணியங் கொஞ்சம்
[செய்வன்

திருமகள் வாச முள்ளான் சிரமுகம் வடிவு காணும்


உரமுடன் நடக்க வல்லன் உத்தமர் நேசம் கொள்வன்
துறவிபோல் பேச வல்லன் சுருதிகள் கற்க வல்லான்,
### book_page 58
20

ஸப்தரிஷி நாடி
வாழையம் புகழுமுடையவன். சிறிது புண்ணிய சிந்தனையம்
உண்டு. இலட்சுமீகடாட்சமுள்ளவன். வசீகரத் தோற்றமுடைய
எந்தக் காரியத்திலும் பயப்படாமல் நடக்கக் கூடியவன். நல்லவர்கள் -
பைப் பெறுவான். துறவிகளைப் போல் பேசுங் திறமையும், பல சான்
பரிசீலனை செய்யும் தன்மையும் உள்ள வன்.
11. பாக்கிய முடைய னாகும் பசித்தாபன் சீல முள்ளான்
யோக்கியன் பூமி விருத்தி உறுதியா மனத்த னாகும்
வாக்குரை சுத்த முள்ளான் மனைவிக்கு நேய முள்ளான்
தீர்க்கமாய் வயது முண்டு சித்தசன் ஒப்ப தாமே.
11. செல்வப் பெருக்கமுள்ளவன். பசி தாங்க மாட்டாதவன். ஒழுக்க
முடையவன். இவன் காலத்தில் ஒழுங்கான முறையில் பூமிகளை விருத்தி
செய்வான். திடமான மனமுடையவன். சொன்ன சொல் தவறமாட்டான்,
மனைவியிடம் விருப்பமுள்ளவன். நீண்ட ஆயுளுடையவன். மன்மதனை
ஒப்பவன்.
12. இவனுடைத் துணைவர் தம்மை இயம்புவோம் ஆண்பா
(லொன்று

அவனியில் கன்னி ரெண்டு அறைகின்றோம் தீர்க்க மாக


நவனியில் இளையோ னாக நாயகன் வருவா னென்றோம்
கவனமாய் இவன் தன் சேதி கழறுவோம் கேளு மம்மா.
12. இவனுடைய உடன் பிறந்தவர்களைப் பற்றிச் சொல்லுவோம்.
ஆண் ஒன்று. பெண் இரண்டு. இவையிரண்டும் நிலைத்திருக்கும். அவற்றுள்,
இளைய சகோதரனாக இந்த ஜாதகன் பிறப்பான். இவனுடைய செய்தி
யைப்பற்றிச் சொல்லுகின்றோம். கேளுங்கள், தாயே!
13. கல்விமான் சிவந்த மேனி காலாட்க ளுடைய னாவன்
இல்லையென் றுரைக்க மாட்டான் இயம்புவான் கட்டு
[வார்த்தை

சொல்லது இரண்டு முள்ளான் சுகமாக வார்த்தை சொல்வன்


நல்லவன் தந்திர வாதி நற்சுகி போசனத்தான்.
13. கல்வியறிவுடையான். சிவந்த உடம்போடு கூடியவன். வேலைக்
காரர்களை யுடையவன். பசித்து வந்தவருக்கு இல்லையென்று சொல்லாதவன்.
சொற்களைக் கட்டிக் கூறுவதில் சமர்த்தன். சில சமயங்களில் இரண்டுவித
மாகப் பேசுவான். இனிய சொற்களைச் சொல்லுவான். நல்ல குணமுடை
யவன், தந்திரமுடையவன். போஜன சுகமுள்ளவன்,
### book_page 59
விருஷப லக்னம் -ஜாதகம் 2
21

14. குடும்பத்தை ஆத ரிப்பான் குலத்துக்கு மேலாய் வாழ்வான்


அடவுடன் மனைவி ஒன்று அறைகிறோம் தீர்க்க மாகத்
திடமதாய் ஆண்பால் ரெண்டு செப்பினோம் கன்னி ஒன்று
கடமையாய் மூன்றுந் தீர்க்கம் காதலி மீண்டுங் கேளே.
14. தன் குடும்பத்தை நன்கு சாப்பான். குலத்தில் சிறந்தவனாக
வாழ்வான். இவனுக்கு மனைவி ஒருத்தி யுண்டு. அவள் ஆயுள் விருத்தியாகும்.
இந்த ஜாதகனுக்கு ஆண் கழர்தைகள் இரண்டும், பெண் குழந்தை ஒன்றும்
உண்டு. இம்மூன்றும் நீண்ட ஆயுளுடன் இருக்கும். தாயே! மேலுங்
கேட்பாயாக.
15. துணைவிகள் செய்தி தம்மைச் சொல்லுவோம் இரண்டி
(லேதாம்

கனமுடன் சாத கர்க்குக் கழறுவோம் மன்றல் காலம்


அனையவே இருப தாண்டில் அம்மாது வருவ ளாகும்
மணமது இரண்டு என்றோம் மங்கையே மேலுங் கேளே.
15. இவனுடைய சகோதரிகளைப் பற்றிய விவரங்களை இரண்டாம்
பாகத்தில் சொல்லுவோம். இவன் திருமண காலத்தைப்பற்றி இப்பொழுது
கூறுவோம். இந்த ஜாதகனின் இருபதாம் வயதில் மனைவி வாய்ப்பாள்.
இவனுக்கு இரு மனை வியர் என்று கூறினோம். பார்வதிதேவியே! மேலுங்
கேட்பாயாக.
- 16. முனிவர் இவ் வாறாய்ச் சொல்ல மொழிகுவார் பராசர் தானும்
கனமுடன் சாத கர்க்குக் கழறினீர் தாரம் ரெண்டு
இனமதைச் சொல்லு மென்ன இயம்புவார் வதிட்டர் தானும்
மனையவள் தானம் தன்னில் வருங்கேது இருப்ப தாலும்,
16. முனிவர் இப்படிச் சொல்லப் பராசரர் கேட்கத் தொடங்கினார்.
ஜாதகனுக்கு இரு மனை வியர் என்று - சான்னீர்கள். காரணம் என்ன ?
கூறுங்கள் என்று கேட்க, வசிஷ்ட முனிவர் விடை கூறுவார்; களத்திர
ஸ்தானத்தில் கேது இருப்பதாலும்,
17. 'குருதியும் நீச்ச மாகக் கொண்டதால் மனைவி ரெண்டு
விரைவினில் இதனைக் கேட்டு விளம்புவார் பராசர் தானும்
குருவுமே குடும்பனாளைக் குணமுடன் பார்த்த தாலே
அறைகின்றோம் தாரம் ஒன்று அபிமானம் ஒன்று
[சொன்னோம்.

17. செவ்வாய் நீசச


் மாய் இருப்பதாலும், மனைவியர் இருவராவர்
என்று கூறப் பராசரர் கேட்டுச் சொல்லுவார். குரு குடும்ப ஸ்தானத்தைப்
1. செவ்வாய்,
### book_page 60
ஸப்தரிஷிநாடி
பார்தத
் தனால் மனைவி ஒருத்தியே. இவனுக்கு அபிமான ஸ்திரீயாக
பவள் மற்றொருத்தி என்று கூறினோம்.
18. செயமுனி இதனைக் கேட்டு செப்புவார் வதிட்ட ருக்கு
நயமுதல் தாரத் திற்கு நாட்டினோம் சங்கை யொன்று
தயவுடன் திருமங் கல்யம் சாற்றுவான் இரண்டு தானும்
வியமில்லை தாரம் தானும் வித்தகி கேட்க லுற்றாள்.
18. செயமுனி என்பவர் இவைகளைக் கேட்டுவிட்டு, வசிஷ்டரைப்
பார்த்து ஒன்று சொல்லுகிறார். முதல் மனை விக்கு ஒரு குறைவு ஏற்படும்
என்று சொல்லுகிறோம். அதாவது முதல் மாங்கலியம் போய்விடும். இரண்
டாம் முறையாகத் திருமங்கலியம் ஏற்படும். இதுவே தவிர, மனைவி இறக்க
மாட்டாள். இதனைக் கேட்டுப் பார்வதிதேவி சொல்லுகிறாள்.
19. ஏதுகா ரணத்தி னாலே இரு'தாரம் ஒருத்திக் கேதான்
ஓதினீர் அந்தச் சங்கை உத்தமன் தரித்த முத்திரை
மேதினில் கள்ள னாலே விரயமாய்ப் பின்பு தானும்
தீதிலா ஒருமாங் கலியம் சேர்ப்பனாம் என்று சொன்னோம்.
19. என்ன காரணத்தினால் ஒருத்திக்க இரண்டு மாங்கல்யம் ஏற்
படும் என்று சொன்னீர் ? என்று கேட்க, இவள் கணவனால் முதலில் ஏற்
பட்ட மாங்கலியம் திருட்டுப் போய்விடும். பின்பு குற்றமில்லாத வேறொரு
மாங்கலியம் செய்து மனைவியின் கழுத்தில் அணியன் என்று கூறினோம்.
20. அவள் குணஞ் சிவந்த மேனி அம்மான் தன் வர்க்க
[மென்றோம்

நவனியில் உத்திரத்தில் நாயகி வருவா ளாகும்


தவநிலை யோருக் கன்பள் தன் மனம் பொறுமை யுண்டு
கவனமாய் அன்னம் ஈவள் காதலி ! கோபி என்றோம்.
20. மனைவியின் தன்மைகளைச் சிறிது கூறுகிறோம். சிவந்த உடல் ;
இந்த ஜாதசனின் மாமன் வர்க்கத்திலிருந்து இவனுக்கு மனைவியாக வருவாள் .
அவள் வட திசையிலிருந்து வருபவள். தவமுடைய சான்றோருக்கு அன்புடை
யவள். மனத்தில் சிறிது பொறாமையுண்டு. ஏழைகளுக்கு உணவு கொடுப்
பாள். தாயே! கோபமுடையவள் என்று சொன்னோம்.
21. புத்திர பாகம் தன்னைப் புகலவே ஆண்பால் ஒன்று
சித்தமாய்த் தீர்க்க மாகும் சீரண மற்ற தெல்லாம்
அத்திரி கேட்க லுற்றார் அவனுக்கு மதலை தோடம்
பெத்தகா ரணங்க ளென்ன புகலுவீர் முனியே என்றார்.
1. திருமாங்கல்யச்சாடு.
### book_page 61
விருஷப லக்னம்-ஜாதகம் 2
21. இவனுடைய புத்திரபாவத்தைப் பற்றிச் சொல்லுவோம். ஆண்
குழந்தை ஒன்று, இது தீர்க்கமாக இருக்கும். மற்றவையெல்லாம் நிலைக்
காது. அத்திரிமுனிவர் கேட்டார் ; இவனுக்கு என்ன காரணத்தினால்
புத்திரதோஷம் ஏற்பட்டது ? சொல்லுங்கள், முனிவரே! என்றார்.
22. 1 அஞ்சினுக் குடைபோ னோடே 2 ஆரலும் கூடி மூன்றில்
தஞ்சமாய் இருந்த தா லே சாற்றி னோம் புத்திர தோடம்
விஞ்சிய ஒருவன் தீர்க்க மொழிந்திட்டீ ரது எவ் வாறு
'அஞ்சினில் மதியும் நிற்க அறைந்திட்டோம் ஒருவன் தானே.
22. ஐந்தாம் இடத்துக்கு உடையவனாகிய புதனுடன் செவ்வாயும்
சேர்ந்து, கடகத்தில் தங்கியதால் புத்திர தோஷம் ஏற்படும் என்று சொன்
னோம். ஒரு புதல்வன் தீர்க்கம் என்று எவ்வாறு கூறினீர் ? என்று அத்திரி
முனிவர் மீண்டும் கேட்க, சந்திரன் கன்னியில் இருப்பதனால் ஒருவன் தீர்க்
கம் என்று கூறினோம் என்றார்.
23. அதுவுமே சாந்தி செய்யில் அறைந்திட்டோம் வயது தீர்க்கம்
எதனாலே சாத்தி செய்ய இவனுமே முன் சென் மத்தில் --
சதியிலா தவளைக் கீழ்பால் சாற்றிய சிற்றூர் தன்னில்
வதிபனு மருகர் வமிசம் வந்தவ னிவனே யென்றோம்.
23. இவன் ஒரு சாந்தி செய்தால் குழந்தைகள் வயது தீர்க்கமாம்.
சாந்தி செய்ய வேண்டிய காரணம் என்ன ? என்று கேட்க, இந்த ஜாதகன்
முற்பிறப்பில், குற்றமில்லாத தவளை என்னும் ஊருக்குக் கிழக்கே உள்ள
ஒரு சிறிய கிராமத்தில் ஜைனகுலத்தில் பிறந்தவன் என்று சொன்னோம்.
24. பூமிபொன் னுள்ளா னாகிப் புத்திரர் மனைவி யோடு
சேமமாய்க் குடும்பி யாகித் தினம்வரு வோர்க்கு அன்னம்
காமனும் அளித்து வந்தான் கனத்ததோர் அரசர் நேசன்
நேமங்கள் தப்பா னாகி நிருபனும் வாழந்தா னென்றோம்.
24. நிலம், செல்வம் முதலியன மிகுதியாகப் பெற்றிருந்தான்.
மனைவிமக்களோடு சுகமான குடும்பமுள்ளவனாக இருந்தான். பசித்து வரு
பவருக்கு உணவு அளித்தான். பெரிய அரசர்கள் நட்பைப் பெற்றிருந்தான்.
ஒழுங்குமுறை தவறாதவனாகி இவன் வாழ்ந்து வந்தான்.
1. ஐந்தாம் இடமாகிய சிம்மராசிக்குரிய புதன்.
2. செவ்வாய்.

3. இலக்கினத்துக்கு ஐந்தாமிடம் : கன்னி.


### book_page 62
ஸப்தரிஷிநாடி
25. அப்படி வாழு நாளில் அவனூர்க்குக் குடகி லேதான்
மெய்ப்புட னரசர் வாசம் செய்தனர் நகர மொன்றில்
மைப்படி மாது ஒன்று மறைகுலம் நாணி ழந்தோள்
செப்புவாள் இவனைக் கண்டே சித்திரம் வாரும் என்றாள்,
25. அப்படி வாழ்ந்திருக்கும் காலத்தில், அவன் வசித்து வந்த
ஊருக்கு மேற்கில் உள்ள நகரத்துக்கு ஒரு சமயம் சென்றான். அங்கு,
அந்தணர் குலத்தைச்சேர்ந்த கைம்பெண் ஒருத்தி இவனைக் கண்டு என் வீட்
டுக்கு வந்து ஒரு சித்திரம் எழுதிக்கொடுங்கள் என்று கேட்டாள்.
26. அம்மொழி இவனும் கேட்டு அவளில்லம் செல்ல லுற்றான்
துன்மையாய் விரகம் கொண்டு சுந்தரி போகம் துய்க்க
இன்பமாய் வாரும் என்றாள் இவன தற் கிசையா னாகி
வம்புகள் பேச லுற்றான் அறைகின்றாள் விதவை மாது ;
26. அந்த வார்த்தையைக் கேட்டு, இவன் அப்பெண்ணின் வீட்டுக்
குச் சென்றான். அங்கு அவள் இவன் மீது மோகங்கொண்டு, “' என்னுடன்
இன்பம் அனுபவிக்க வருக '' என்று இவனை யழைத்தாள். இவன் அவள்
விருப்பத்துக்கு உடன்படாது, பலவாறு அவளை ஏசினான். அவற்றைக்
கேட்டு, அந்த விதவைப்பெண் சொல்லுகிறாள் :
27. சுதர்களும் மனைவி செல்வர் சோர்நத
் ிடு முனக்கு மேதான்
கன முடன் மறுசென் மத்தில் கன்னிகை யானு தித்துப்
பதியினில் மனைவி யாகப் பாவையும் வருவே னென்று
விதவிதம் சொல்லி யேதான் வித்தகி நீங்க லுற்றாள்.
27. உன் மக்களும் மனைவியும் இறப்பர். உன் செல்வமும் குறையும்.
மறுபிறப்பில் யான் உன் மனைவியாக வருவேன் என்று பல சொற்களைச்
சொல்லிவிட்டு அந்தப்பெண் நீங்கினாள்.
28. அச்சென்மம் தன்னி லேதான் அவன்பந்து இல்லா வேளை
உச்சித பேதி யாலே உரைந்தனன் எமப திக்கு
மிச்சமாய் இகலோகத்தில் மேவின னிவனே யென்றோம்
நச்சுபோல் அந்தத் தோஷம் நல்கிடு மிவனுக் கேதான் ;
28. அப்பிறப்பில் இந்த ஜாதகனும் உறவினர் யாரும் அருகினில் இல்
லாத வேளையில் பேதி ஏற்பட்டு மரணமடைந்தான். பின்பு பிரமனால்
படைக்கப்பட்டு இவ்வுலகத்தில் இப்பிறப்பாகப் பிறர் தான். விஷம் போல்,
அந்தப் பெண்ணின் சாபம் இவனை யடைந்தது.
### book_page 63
விருஷப லக்னம்-ஜாதகம் 2
25

29. அந்ததோர் தோடம் தீர அறைகின்றோம் கிரிகை ஒன்று


மைந்தனும் மனைவி யோடு வள்ளூரு தனக்குச் சென்று
சந்ததம் மாலுங் கேதான் சகச்ரவர்ச் சனைகள் செய்து
முந்திய மறையோ ருக்கு முயற்சியால் அன்ன மீய ;
29. அந்தத் தோஷம் தீர ஒரு பரிகாரம் கூறுகின்றோம். இந்த ஜா தான்
தன் மனைவியுடன் திருவள்ளூருக்குச் சென்று, அங்குக் கோயில் கொண்
டுள்ள திருமாலுக்கு ஆயிரம் பெயர்களால் அருச்சனை செய்து, அந்தணர்க
ளுக்கும் போஜனம் அளிக்க,
30. பாவங்கள் விலகு மென்றோம் பாலனும் தீர்க்க மாகும்
மேவிய யிதற்கு மேலே விளங்காது மதலை தானும்
தாவிய மாதுர் சேதி சாற்றுவோம் சிவந்த மேனி
பூவினில் நிந்தை யுண்டு புருடனுக் கினிய ளாமே.
30. இவனுடைய தோஷங்கள் நீங்கும் என்று கூறுவோம். இவனது
புத்திரனும் தீர்க்கமாவான். ஒரு புதல்வனுக்குமேல் இவனுக்கு
இல்லை. இவனுடைய தாயின் செய்தியைப் பற்றிச் சொல்லுவோம்.
சிவந்த மேனியுடைவள். இவளுக்குச் சிறிது பழியுண்டு. கணவனுக்கு
இனியளா யிருப்பாள்.
31. அவளுடைத் துணைவர்......... ஆணது ஒருவ னென்றோம்
பவமுள கன்னி யவ்வார் பருகிடும் தீர்க்க மாக
நவனியில் மாமன் தானும் நற்றந்தை இல்லம் நீங்கிக்
கவனமாய்க் கிழக்குத் திக்கில் காவலன் செல்வா
[னென்றோம்.

31, தாயினுடைய துணைவர் .......... ஆண்மகன் ஒருவனென்று கூறு


வோம். பெண்ணும் அவ்வாறே ஒருத்தி. அவள் தீர்க்கமாவள். இந்த
ஜாதகனுடைய மாமன் தன் தந்தையின் வீட்டைவிட்டு நீங்கிக் கிழக்குத்
திசை நோக்கிச் செல்லுவான்.
32. மாமன் தன் சேதி யெல்லாம் வரைகின்றோம் ரெண்டி
[லேதான்

நேமமாய் மாதுர் சென்மம் நிகழ்த்துவோம் விவர மாக


ஆவலாய் ஓரூர் தன்னில் அவள்கவு ரீக வம்சம்
பாவையும் பிறந்தாள் என்றோம் பலருக்கு நல்லோ ளாகி ;
32. மாமனுடைய செய்திகளை யெல்லாம் இரண்டாம் பாகத்தில்
விவரமாகக் கூறுகின்றோம். தாயின் பிறப்பைப் பற்றிச் சொல்லுகிறோம்
விவரமாக, ஒரு சிற்றூரில் கௌரிக வமிசத்தில் அவள் பிறந்தாள். பல
ருக்கும் நல்லவளாக இருந்த சமயத்தில் ;
### book_page 64
ஸப்தரிஷி நாடி
33. வரனுமே செட்டுச் செய்து வந்தவ ரிளைப்பை யாற்றித்
திறமையா யிந்த மாதைச் செல்வனும் மணம்பு ரிந்து
உறைந்தனன் காஞ்சி தன்னில் உதித்திடு மதலை யுண்டாய்ப்
பெருமையாய்த் தெய்வ பக்தி பேதையு மில்லா ளாகி ;
33. வியாபாரம் செய்து, பசித்து வந்தவர் இளைப்பைப் போக்கி, நல
முடன் வாழ்ந்து கொண்டிருந்த செல்வன் ஒருவன் இவளை மணம் புரிந்து
கொண்டு, காஞ்சீபுரத்தில் வசித்து வந்தான். அப்பொழுது புத்திர பாக்
கியம் ஏற்பட்டது. இந்தப் பெண்ணுக்குத் தெய்வபக்தி இல்லாமல் ;
34. பணிகள் மே லிச்சை வைத்துப் பாவையு மாண்டா
[ளென்றோம்

கணிகையு மிச்சென் மத்தில் கருதினா ளிவளே யென்றோம்


அணையவே யிவள்பிற் சென்மம் ஆலங்காட் டதற்கு
(உத்திரம்

வணிகர்தம் குலமு திப்பாள் வரைகின்றோம் மேலும் கேளே.


34. ஆபரணங்கள் மீது விருப்பம் கொண்டு, இறுதியில் மாண்டாள்
என்று கூறினோம். இப்பிறப்பில் இந்த ஜாதகனின் தாயாகப் பிறந்தாள்
இவள் என்று கூறுகிறோம். இவள் மறுபிறப்பில் திருவாலங்காட்டிற்கு
வட திசையில் வணிகர் குலத்திலுதிப்பாள், என்று கூறுகின்றோம். மேலும்
கேட்பாயாக.
35. தந்தையின் பூர்வ சென்மம் சாற்றுவோம் தணிகை கீழ்பால்
வந்ததோர் பேரூர் தன்னில் வள முள ரெட்டி வமிசம்
சந்ததம் கிருஷி யோங்கித் தனம்பூமி யுள்ளா னாகிச்
சிந்தையில் தரும வானாய்ச் செல்வனும் வாழ்நத
் ா
[னென்றோம்.

35. தந்தையின் முற்பிறப்பைப் பற்றிக் கூறுவோம். திருத்தணிகை


யின் கிழக்கில் உள்ள ஒரு பெரிய ஊரில், செல்வச் செழிப்புள்ள ரெட்டி
யார் வமிசத்தில் பிறந் திருந்தான். விவசாயத் தொழிலில் பெருமை பெற்று,
செல்வம் விளை நிலம் இவைகள் மிகுதியுமுடையவனாகி, மனத்தில் தரும ,
சிந்தையுடையவனாய் இவன் வாழ்ந்திருந்தான் என்று கூறினோம்.
36. மரணமே யாகி யேதான் வந்தன னிவனின் தந்தை
அறைகின்றோம் இவன்பின் சென்மம் ஆதிமால் வேங்க
[டத்துள்

திறமையாய்ப் பிரம்ம சேயாய்ச் செனித்துமே அரசர் பக்கல்


உரமுடன் சீவிப் பானாம் உத்தமி மேலுங் கேளே.
### book_page 65
விருஷப லக்னம்-ஜாதகம் 2
36. பின்பு மரணமடைந்து இப்பிறப்பில் பிறந்தான் இவன் தந்தை
என்று கூறுகின்றோம், இவன் மறுசென்மத்தில் திருவேங்கடத்துள்
அந்தணர் குலத்தில் பிறந்து, அரசர்களைச் சார்ந்து ஜீவித்திருப்பான்.
உத்தமியே 1 மேலுங் கேட்பாயாக,
37. தந்தையின் மரணங் கேளே சாற்றுவோம் முப்ப தாண்டில்
பந்தமாய் மாதுர் காலம் பகருவோம் அதில்மேல் பத்தும்
எந்தையே யிவனின் காலம் இயம்புவோம் அன்பா னேழில்
முந்திய மேட மாத மெழில்பரு வங்கள் தன்னில் ;
37. இந்த ஜாதகனின் தந்தைக்கு மாண காலத்தைப் பற்றிச் சொல்லு
வோம். இவன் முப்பதாவது வயதில் தந்தை மரணமடைவான். இவன்
தாய் இவனுடைய நாற்பதாவது வயதில் மரணமடைவாள். இந்த ஜாதகனின்
மரண காலத்தைச் சொல்லுவோம். ஐம்பத்தேழாவது வயதில் சித்திரை
மாதத்தில் வளர்பிறையில் ;
38. சேத்தும சுரத்தினாலே செல்வனு மரண மாகி
வித்தகன் பின்சென் மத்தை விளம்புவோம் காசி தன்னில்
தீர்த்தத்துக் கருகி லே தான் செனிப்பனாம் பிரம்ம சேயாய்
நாற்றிசை புகழ வாழ்வன் நாயகி கேட்டி டாயே.
38. கபவாத சுரத்தினாலே மரணமடைவான். இவன் பின்சென்
மத்தைக் கூறுவோம். காசி நகரில் கங்கை நதிக்கருகில் உள்ள ஒரு வீட்டில்
அந்தணர் குலத்தில் பிறப்பான். நான்கு திசையிலும் உள்ளவர்கள் புகழும்
படி வாழ்வான். தலைவியே! கேட்பாயாக.
39. இவனுடை யோகச் செய்கை இயம்புவோம் தனங்க
(ளுள்ளான்

நவதானியம் விருத்தி செய்வன் நாடெல்லாம் கீர்த்தி ஏற்பன்


அவனியில் செட்டுச் செய்வன் அநேகருக் குதவி செய்வன்
பகைவரை வெல்வா னாகும் பெருகிடும் பூமி தானே.
39. இவனுடைய யோகத்தைப் பற்றிக் கூறுவோம். செல்வமுடை
யவன். நவதானியங்களையும் விருத்தி செய்வான். நாடெங்கும் புகழ்
ஏற்படும். வியாபாரம் செய்வான். பலருக்கு உதவி செய்வான். விரோதி
களை வெற்றி கொள்ளுவான். இவனுக்கு நிலங்கள் மேன்மேலும் சேரும்.
40. பரியுண்டு சகடு முண்டு பலவித லாபம் சேர்ப்பான்
வரவரச் செல்வ மோங்கும் மாடுகள் விருத்தி யாகும்
நிறைந்திடும் திருவு தானும் நிகர் திருப் பணியும் செய்வன்
அரசர்கள் உறவு கொள்வன் அம்பிகை யாளே கேளாய்.
1. சித்திரை,
### book_page 66
ஸப்தரிஷி நாடி
40. குதிரைகளுண்டு, வண்டிகளும் உண்டு. பலவிதங்களில் வா
களில் லாபம்
அடைவான். வரவரச் செல்வங்கள் பெருகும். மாடுகள் பின்
ள மிகுதியாம்.
இலட்சுமீ கடாட்சம் பூரணமாக எற்படும். ஒப்பற்ற பல திருப்பணி
செய்வான். அரசர்கள் நட்பைக் கொள்ளுவான். பார்வதியம்மையே! ..
41. பால்பாக்கிய முடைய னாகும் பாரினால் பொருளு முண்டு
சீலவான் அன்ன மீவன் திருமாலுக் கடிமை செய்வன்
ஆலம்போல் பகைவர் தம்மை யவனுமே செயிப்பா னாகும்
கோலமாய்த் தீர்தத
் ம் தோய்வன் குடும்பத்தை யாத ரிப்பன்
41. பால் பசு பாக்கியமுடையவன். பூமியினால் செல்வம் உண்டு
ஒழுக்கமுள்ளவன். ஏழைகளுக்கு உணவு தருவான். திருமாலுக்குத்
தொண்டு செய்வான். விஷம் போன்ற கொடிய பகைவர்களை வெல்வான்.
பல புண்ணிய தீர்தத
் ங்களில் நீராடுவான். குடும்பத்தை நன்கு
காப்பான்.
42. பாலகன் செனன காலம் பரிதியின் தசையி லே தான்
கோலமாய் ஆண்டு மூன்று குறித்திடும் திங்கள் ஆறும்
ஞாலமேல் சாத கர்க்கு நவிலுவோம் ரோகம் தானும்
சீலமாய்த் தந்தைக் கேதான் செலவுகள் அதிக முண்டு.
42. இந்தப் பாலன் பிறந்த காலத்தில் சூரியமகாதசையில் மூன்று
வருஷம் ஆறு மாதம் இருப்பு என்று சொல்லுவோம். இவனுடைய
தந்தைக்கு இவன் பிறக்கும்போது வியாதியுண்டு. செலவுகள் மிகுதி.
43. பந்துவில் சூத முண்டு பயங்கர மனங்க ளுண்டு
சிந்தையாய் நேத்திர ரோகம் தீட்சண்யம் சிரங்கு முண்டு
வந்துமே நிவர்த்தியாகும் விவரங்கள் ரெண்டில் சொல்வேன்
கந்தனைப் பெற்ற மாதே! கழறுவோ மிதன்மேல் கேளே.
43. உறவினர்கள் வழியில் அசுபம் ஏற்படும். பயங்கரமான எண்
ணங்கள் உண்டாம். கண் வியாதியுண்டு. சிரங்குமுண்டு. இவைகள்
பின்பு நிவர்தத
் ியாம். மற்ற விவரங்கள் இரண்டாம் பாகத்தில் சொல்லு
வோம். முருகக்கடவுளைப் பெற்ற பார்வதியே! இதற்குமேல் சொல்லுவோம்,
கேட்பாயாக.
44. மதி தசை ஒருபா னாண்டும் வந்திடும் கல்வி தானும்
பதியது புதிதாய் நேரும் பகருவோம் குடும்பம் வேறு
சதியிலா துணைவர் விருத்தி சனபகை பூமி சேரும்
நதிபல தீரத
் ்தம் நேரும் நாற்காலி விருத்தி யுண்டாம்.
### book_page 67
விருஷப லக்னம்-ஜாதகம் 2
20
44. சந்திரமகாதசை பத்து வருஷங்களும் நல்ல கல்வி கற்பான்.
வசிக்கும் ஊர் புதிதாகும். குடும்பம் வேறாம். உடன் பிறந்தார் விருத்தி
ஏற்படும், ஜன விரோதம் உண்டாகும். நிலம் சேரும். பல தீரத ் ்தங்களில்
நீராடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். கால் நடைகள் விருத்தியுண்டு.
45. செட்டுகள் செய்வான் தந்தை சனங்களும் வசிய மாகும்
நட்டமும் கொஞ்ச முண்டு நன்மாதுர் வாயு பாதை
திட்டமாம் பிதாம கிக்குச் செப்பினோம் மார கங்கள்
சட்டமா யிரண்டில் சொல்வேன் சங்கரி விவர மாக.
45. வியாபாரங்கள் செய்வான். தந்தையைச் சேர்ந்தோர் இவனுக்கு
வசமாவர். வியாபாரத்தில் சிறிது நஷ்டமும் ஏற்படும். தாய்க்கு வாயு
ரோகம் உண்டாகும். இவனுடைய பாட்டிக்கு (தந்தையைப் பெற்ற
தாய்க்கு) மரணம் முதலியவை பற்றி உறுதியாக இரண்டாம் பாகத்தில்
விவரமுடன் சொல்லுவேன். பார்வதியே! கேள்.
### book_page 68

You might also like