You are on page 1of 21

1

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்


ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

வெண்டா மரைக்கன்றி நின்பதந்தாங்கவென் வெள்ளையுள்ளத்


தண்டா மரைக்குத் தகாதுகொ லோசகமேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்தாகவுண் டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே. [1]

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்


பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே! [2]

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலில்


குளிக்கும் படிக்கு என்று கூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! [3]

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்


வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! [4]

பஞ்சு அப்பு இதம் தரும் செய்ய பொற் பாத பங்கேருகம் என்


நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய் சகலகலாவல்லியே! [5]

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்


எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகலகலாவல்லியே! [6]
2

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்


கூட்டும் படி நின் கடைக்கண் நல்காய் உளம் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே சகலகலாவல்லியே! [7]

சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல


நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே! [8]

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன


நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத்தாயே சகலகலாவல்லியே! [9]

மண்கொண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்


பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! [10]

Ramayanam

1)அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக


குழந்தைகள் இல்லாமல் இருந்தது. அதனால் தன் குலகுருவான
வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர- காமேஷ்டி யாகம் நடத்தினார்.

2) விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும்,


சுமித்திரைக்கு இரட்டையரான லட்சுமணன் மற்றும் சத்ருகனன்
ஆகியோர் பிறந்தனர்.

3) பின்பு நால்வரும் வசிஷ்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு


கலைகளை கற்று தேர்ந்தார்கள்.
3

4) இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், தசரதரிடம் தன்


யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை
அழிக்க இராமனை அவருடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று
கேட்டதற்கு வேறு வழியின்றி தசரதரும் ராமனையும்
லக்ஷ்மணனையும் உடன் அனுப்பி வைத்தார்.

5)சகோதரர்கள் முனிவரிடம் மேலும் சில அஸ்திர வித்தைகளை கற்று


அரக்கர்களை அழித்து விசுவாமித்திரரிடம் ஆசி பெற்றார்கள்.

6) இளவரசர்களின் வீரத்தால் மகிழ்ந்த விசுவாமித்திரர் இராமனையும்,


இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக
நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார்.

7) அங்கு நடந்த சுயம்வரத்தில் இராமன் யாராலும் உயர்த்த முடியாத


சிவதனுசை எடுத்து உயர்த்தி அதை முறித்து சுயம்வரத்தில் வென்றான்.

8) தசரதரின் சம்மதத்துடன் ராமன் சீதையை திருமணம் செய்து


கொண்டு அயோத்திக்கு வந்தான். இராமனும், சீதையும் திருமணமாகி
பன்னிரண்டு ஆண்டுகள் மகிழ்ந்து வாழ்ந்தார்கள்.தசரதர், இராமருக்கு
மகுடம் சூட்ட முடிவு செய்தார்.

9)அது பிடிக்காத கைகேயி முன்பு தசரதன் தனக்கு வழங்கிய இரண்டு


வரங்களை நினைவு கூர்ந்து இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு
அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும்
தசரதனிடம் கோரினாள்.

10)இதனால் மனம் உடைந்த அரசன், கொடுக்கப்பட்ட வரத்தின்


காரணமாக கட்டுப்பட்டு, இராமரிடம் ஆட்சியை விட்டு தந்து கானகம்
செல்லுமாறு கேட்க இராமர் தனது தந்தையின் ஆணையை
ஏற்றுக்கொண்டார்.

11)இவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு சென்றனர். ராமர்


வெளியேறிய பிறகு, தசரத மன்னர்,ராமன் பிரிந்த துக்கத்தை தாங்க
4

முடியாமல் காலமானார்.

12) இதற்கிடையில், தந்தையின் மரணச் செய்தி கேட்டு தனது


நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப்
பற்றி அறிந்து கொண்டான். தந்தைக்கு இறுதிக் கடன்களை செய்து
முடித்தான்.

13) அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்தித்தான். பரதன்


ராமரிடம் தந்தையின் மரணச் செய்தியைக் கூறி அயோத்தி திரும்பி
வந்து ஆட்சி செய்யுமாறு வற்புறுத்தினான்.

14) தந்தையின் மரணச் செய்தி கேட்டு துடிதுடித்து போன ராமன் தனது


தந்தையின் இறுதி கட்டளையை நிறைவேற்ற தீர்மானித்தான். நாடு
திரும்ப மறுத்தான்.

15) ராமனின் உறுதியைக் கண்ட பரதன் இராமனின் காலணிகளை


கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்தி சென்று அங்கு அரியணையில்
இராமனின் பாதுகைகளை வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை
அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்துவதாக அறிவித்தான். 14
வருடங்களில் ராமன் திரும்பி வரவில்லை என்றால் உயிர் விடுவதாய்
சூளுரைத்தான்.

16) ஸீதையோடும் லக்ஷ்மணனோடும் ராமர் அடர்ந்த காட்டுக்குள்


நுழைந்தார். காட்டில் வசித்த பல முனிவர்களை சந்தித்து, அவர்களின்
குறைகளைக் களைந்தபின் அங்கிருந்து பயணித்து அடுத்த ஆசிரமம்
அடைந்தான். இவ்வாறு பத்து வருடங்கள் பல முனிவர்களின்
ஆஸ்ரமங்களில் ஆனந்தமாய் கழித்துவிட்டு ராமர் அகஸ்திய
முனிவரை சென்று தரிசித்தார்.

17)அகஸ்தியர் ராமருக்கு பல அஸ்திர வித்தைகளை கற்றுத்தந்து


ராமனின் நற்குணத்தை கண்டு மகிழ்ந்து அவருக்கு விஷ்ணு தனுசை
குடுத்து ஆசீர்வதித்தார்.

18) அதை பெற்றுக் கொண்டு ராமர் பின் பஞ்சவடி சென்று குடில்


அமைத்து வாழ்ந்து வந்தார். அங்கு வாழ்ந்து வந்த ஜடாயுவை கண்டு
5

அவரோடு பேசி நட்பு கொண்டார்.

19) அதே சமயம் அங்கு வந்த அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை


அரசன் இராவணனின் தங்கையான சூர்பணகை ராமலக்ஷ்மணரை
கண்டு மோகம் கொண்டு, அவர்களை தன் ஆசைக்கு இணங்குமாறு
கேட்டாள். அதற்கு ராம லக்ஷ்மணர்கள் அவளிடம் வேடிக்கையாக
பேசவே, கோபம் கொண்ட அவள் சீதையை கொல்ல வந்தாள்.

20)உடனே லக்ஷ்மணன் அவளை மூக்கறுத்து தண்டித்தான். இதனால்


கோபமடைந்த அவள் அங்கு வாழ்ந்த அரக்கர்களான கர தூஷனனிடம்
சென்று முறையிட அவர்கள் ராமருடன் போர் செய்தார்கள். ராமன்
தனித்து நின்று அவர்களை வதம் செய்தான்.

21) அவர்களின் வதத்தினால் மேலும் கோபமடைந்த சூர்ப்பனகை தனது


அண்ணன் ராவணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த
நிலையையிட்டுச் சினம் கொண்ட ராவணன் ராமனைப் பழிவாங்க
எண்ணி மாரீசனை மாய மானாகப் போகச் சொன்னான்.

22)இதை அறியாத சீதை மாயமானை கண்டு ஆசை கொண்டாள். ராமர்,


ஸீதை ஆசையாக கேட்டதால் அந்த மானை பிடிக்கப்போனார்.
மான் மிகத் தொலைவு ஓட ராமனும் அதை பின் தொடர்ந்து சென்றான்.
ஒரு கட்டத்தில் ராமன் மானின் மீது அம்பை எய்தான்.

23)அம்பு பட்ட உடன் மாரீசன் லக்ஷ்மணா சீதா என்று கத்தியபடி கீழே


விழ்ந்தான். அருகில் சென்ற ராமனிடம் நடந்த அனைத்தையும் கூறிய
பின் இறந்தான். ராமனும் சீதையைக் காப்பதற்காக விரைந்து வந்தான்.

24) மாரீசனின் குரல் கேட்டு சீதை வலுக்கட்டாயமாக லட்சுமணனை


இராமனைத் தேடி அனுப்பினாள். லக்ஷ்மணன் போனவுடன், ராவணன்
கபட சன்யாசியாக வந்து சீதையை அபகரிக்க முயன்றான்.

25) சீதையைக் கவர்ந்து செல்ல முயன்றபோது ஜடாயு அவனுடன்


போரிட்டது. ராவணன் ஜடாயுவின் இறக்கைகளை வெட்டி
வீழ்த்திவிட்டு சீதையை புஷ்பக விமானத்தில் கவர்ந்து, இலங்கையை
அடைந்து, அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையின் அழகில்
6

மயங்கி, தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான்.

26)சீதையை காக்க வந்த ராமன் அவளை காணாமல் தேடின போது


வழியில் ஜடாயுவை கண்டான். ராவணன் சீதையை அபகரித்த
செய்தியை சொன்ன உடனே ஜடாயு மரணமடைய ராமன் அதற்கு
இறுதிக்கடன் செய்தான். பின் சீதையை தேடி அலைந்த ராமனும்,
லட்சுமணனும் சபரிமலையில் சபரி மாதாவை கண்டு அவளின்
பக்தியில் மெய்மறந்தனர்.

27) இவ்வாறு பல இடங்களில் சீதையை தேடி ருஷ்யமூக மலைக்கு


வந்து சேர்ந்தனர். மலை மீதிலிருந்து இவர்களை பார்த்த ஸுக்ரீவன்,
‘வாலி அனுப்பி தன்னை கொல்ல வந்தவர்களோ’ என்று எண்ணி பயந்து,
ஹனுமாரை அவர்களிடம் அனுப்பினான்.

28) ஹனுமான் இராமனைக் கண்டு, அவரின் செய்தி அறிந்து,


ஸுக்ரீவனுக்கும் ராமருக்கும் அக்னி ஸாக்ஷியாக நட்பு செய்து
வைத்தார்.
ராமன் சுக்ரீவனிடம் தன் நிலை பற்றிக் கூறினார்.

29)சுக்ரீவன் சீதை கழற்றி எறிந்த ஆபரணங்களை ராமனிடம் காட்ட


ராமனும் சீதையின் ஆபரணங்களை அடையாளம் அறிந்து கொண்டார்.
ராமனிடம் ஸுக்ரீவன் வாலி தனக்கு செய்த துரோகத்தைப் எடுத்துச்
சொன்னான். அதைக்கேட்ட ராமர் நான் வாலியை வதம் செய்வேன்
என்று கூறினார்.

30) சுக்ரீவன் வாலியின் சக்தியை ராமனிடம் கூற ராமன் தன் சக்தியை


நிரூபிக்க அவன் விரும்பியபடி ஏழு மரங்களையும் ஒரே அம்பால்
பிளந்து தன் வலிமையை அவனுக்கு நிரூபித்தார்.

31) பின்னர் ராமன் ஆணைப்படி சுக்ரீவன் வாலியோடு யுத்தம் செய்தான்.


யுத்தத்தில் வாலி ராம பாணத்தால் அடிபட்டு வீழ்ந்திறந்தான். பின்னர்
வானரப் பெரியோர்கள் ஸுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்து
வைத்தனர்.

32) ஸுக்ரீவன் ‘ஒரு மாதத்தில் திரும்பி வர வேண்டும்’ என்று கட்டளை


7

இட்டு வானரர்களை நான்கு திக்குகளிலும் சீதையை தேட


அனுப்பினான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல
திசைகளிலும் சென்று சீதையைத் தேடின.

33) அனுமனுடன் ஒரு சில வானர்கள் தெற்கே தேடி கிளம்பும் முன்


ராமனைக் கண்டு அவரிடம் ஆசிபெற்று, ராமன் தந்த கனையாழியை
பெற்றுக் கொண்டு சென்றனர். முடிவில் கடற்கரையை அடைந்தனர்.

34)ஒரு மாதக் கெடு முடிந்தும் சீதையை கண்டுபிடிக்க முடியாததால்


அங்கதன் "ராமரின் சொற்படி சீதா தேவியை கண்டுப்பிடிக்க
முடியவில்லை. ஜடாயு ராமருக்காக உயிரைக் குடுத்தது. நாம்
ராமருக்காகவும் சீதா தேவிக்காகவும் உயிரை விடலாம்’ என்று
புலம்பினான்.

35)அதைக்கேட்ட ஸம்பாதி என்ற கழுகு ‘ஹா! என் தம்பி ஜடாயுயை


பற்றி விவரமாய் சொல்’ என்று கேட்டது. அதற்கு அங்கதன் விவரம்
சொன்னான்.
அதைக்கேட்டு வருந்திய சம்பாதிக்கழுகு, ஜடயாயுவிற்கு இறுதி
அஞ்சலி செலுத்தி, பின் ‘ஸீதை லங்கையில் ராவணனால் சிறை
வைக்கப் பட்டு இருக்கிறாள்’ என்று சொன்னவுடன், முன்பு நிஷாகர
மஹரிஷி அநுக்ரஹித்தபடி அதற்கு இறக்கைகள் மீண்டும் முளைத்தது.

36)அதைப் பார்த்த வானரர்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்டபட்டது.


ஆனாலும் ‘யார் கடலைக் கடந்து சீதையை பார்த்து வரமுடியும்’ என்ற
கேள்வி வர ஜாம்பவான் ஹனுமாரிடம் ‘வாயுபுத்ரனான உன்னால் தான்
இந்த காரியத்தை செய்ய முடியும்." என்று கூறினார்.

37)ஹனுமானும் சாப விமோசனம் அடைந்து, தன் பலத்தை உணர்ந்து,


உலகளந்த பெருமாளைப் போல் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு
மஹேந்திர மலையில் ஏறினார். ‘ராம பாணம் போலச் சென்று
ஸீதாதேவியை கண்டு வருவேன்" என்று நண்பர்களுக்கு வாக்களித்து
விட்டு ஆகாசத்தில் பறந்து சென்றார். இடையில் வந்த மைனாக
8

மலையிடம் உரையாடி, அதன் செய்தி அறிந்து ஆசீர்வதித்து


பயணத்தைத் தொடர்ந்தார்.

38)பின் ஸுரஸா என்ற நாகமாதா ஹநுமானை பரீக்ஷிக்க தன்


வாயினுள் புகுந்து செல்லுமாறு கூற,புத்தியால்அவளின் பெரிய வாயில்
சூக்ஷம உருக்கொண்டு வாய்க்குள் புகுந்து வெளிவந்து ஜெயம்
கொண்டார்.

39)அதன் பின் ஸிம்ஹிகை என்ற ராக்ஷஸி அனுமனின் நிழலை பிடித்து,


அவரை விழுங்க நினைக்க, அனுமன் அவள் வாயின் உள்ளே புகுந்து
அவள் ஹ்ருதயத்தை தன் நகங்களால் பிளந்து, வென்று, லங்கையை
அடைந்தார். ஸ்வர்ண நகரான லங்கையின் அழகைக் கண்டு
மதிமயங்கினர்.

40) சூரியன் அஸ்தமித்தவுடன் பூனை போன்ற சிறு உரு கொண்டு


கோட்டைக்கு உள்ளே நுழைந்தார். லங்கையின் காவலாக இருந்த
லங்கினி அரக்கியை விளையாட்டாக ஜெயித்து, நகரின் உள்ளே
சென்று, அதன் அழகையும் பாதுகாப்பையும், ராக்ஷஸர்களின் போக
வாழ்வையும் கண்டு வியந்தார்.நகரெங்கும் தேடி சீதையை காணாது
ராவணனின் அரண்மனையில்தேடிச்சென்றார்.

41)ராவணனின் அரண்மனை அழகைக் கண்டு மதிமயங்கினார்.


அங்கிருந்த 2 புஷ்பக விமானத்தையும் கண்டு வியந்தார். ஒவ்வொரு
அறையிலும் சீதையை தேடிச்சென்று பின் ராவணனின் அந்தப்புரத்தில்
நுழைந்தார்.
அங்கு ராவணன் தன் மனைவிகளுடன் உறங்குவதை கண்டு ‘பிறன்
மனைவியை தூங்கும் போது பார்த்தோமே’என்று கவலைப்பட்டர்.

42) பின்பு சீதையை தேட இந்த எண்ணம் தடையாக இருக்குமோ என்று


எண்ணி தெளிந்த பின் மீண்டும் தேடினார். மந்தோதரியை ஸீதையோ
என்றெண்ணி நின்றார். பின்னர் இவள் சீதையாக இருக்க மாட்டாள்
என்று முடிவு செய்து மற்ற அறைகளில் மீண்டும் தேடினார்.

43)எங்கு தேடியும் ஸீதையை காணாமல் வருந்தி மனக்கலக்கம்


9

அடைந்த அனுமன் உயிரையும் விடத்துணிந்தார். பின்பு அது


சரியில்லை என்றும் எந்த நேரத்திலும் மனவுறுதியை கைவிடக் கூடாது
என்று முடிவு செய்து, ‘எது வரையில் ஸீதாதேவியை பார்க்கிறேனோ
அது வரையில் ஓயமாட்டேன். மீண்டும் தேடுவேன்.’ என்று கிளம்பினார்.

44) தான் லங்கையில் இன்னும் எவ்விடத்தில் தேடவில்லை என்று


ஆராய்ந்து பார்த்தபோது அங்கே ஒரு அழகான வனம் தெரிந்தது. உடனே
அந்த அசோக வனத்தின் உள்ளே குதித்து தேடினார். அங்கிருந்த
நீரோடை, மலர் செடிகள், மான்கள், மயில்கள் என அனைத்தையும்
கண்டு வியந்தார்.

45) அங்கிருந்த ஒரு பெரிய சிம்சுபா மரத்தில் அமர்ந்தபடி அம்மரத்தின்


அருகில் பார்த்த போது அங்கே இன்னொரு மிகப்பெரிய சிம்சுபா
மரத்தடியில் ஒரு பெண் கலையிழந்த முகத்துடன், நெடுநாளாக
ஆகாரமின்றி, குளிக்காமல், தலைமுடி சடை விழ, கண்களிலிருந்து நீர்
பெருகி ஓட, ஒற்றை ஆடையுடன், ராம நாமத்தை சொல்லிக் கொண்டே
இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

46)அவளை பல அரக்கியர்கள் காத்து நிற்பதையும் கண்டார். ராமா


பத்தினி சீதா தேவியைக் கண்டு ஆனந்தத்தில் தன்னை மறந்தார். ஆகா
இவளல்லவோ ராமனுக்கு ஏற்ற சீதை என்று மகிழ்ந்துருகினார்.
சீதையிடம் உரையாடுவதற்கு அருகில் சென்றவர் திடீரென்று அங்கே
ராவண வருவதைக் கண்டு மரங்களின் நடுவே ஒளிந்துகொண்டார்.
ராவணன் தன் மனைவிகளுடன் அங்கு வந்து ஸீதையிடம் பலதும்
பேசினான்.

47)"சீதா நான் உனக்கு கொடுத்த கெடு ஒரு வருடத்தில் பத்து மாதங்கள்


கடந்து போயின. இனியும் நீ இவ்வாறு பிடிவாதம் பிடிப்பது நன்றன்று
உடனே என்னை திருமணம் செய்துகொள்" என்று மிரட்டினான். அதற்கு
ஸீதை, ஒரு பில்லை பிடுங்கி நீ இதற்கு சமானம் என்று அவனுக்கு
உணர்த்தி "உயிர் பிழைக்க ஆசை இருந்தால் ராமரிடம் என்னை
ஒப்படைத்து மன்னிப்பு கேட்டுக் கொள் இல்லையென்றால் இராமன்
10

இங்கு வந்து உன்னையும் உன் குலத்தையும் வேறறுப்பார்” என்று


தைரியமாய்ச் சொன்னாள்.

48)இதனால் கோபமடைந்த ராவணன் அரக்கியர்களிடம் சீதையை


தனக்கு சாதகமாக மாற்றும் படி ஆணையிட்டு சீதையை பயமுறுத்தி
அங்கிருந்து சென்றான். அவன் போன பின் ராக்ஷஸிகள் ராமரை
குறைத்து பலவாறாக பேசி சீதையை கொல்வதாகவும் மிரட்டினார்கள்.

49)ராமன், ராஜ்ஜியத்தில் இருந்து துரத்தப்பட்ட ஒரு அற்ப மானிடன்


என்றும் "ராமனிடமிருந்து உன் மனதைத் திருப்பி எங்கள் ராட்சஸ
ராஜனான ராவணனை மணந்து கொள்" என்று மிரட்டினார்கள். ஸீதை
‘என்னை நீங்கள் கொன்று தின்றாலும் சரி. உங்கள் பேச்சைக் கேட்க
மாட்டேன். என் கணவன் ராமனே என் தெய்வம்’என்றாள்.

50)அப்பொழுது த்ரிஜடை என்ற ராக்ஷஸி அங்கே வந்து சீதைக்கு


ஆதரவாக ராட்சசிகளிடம் பேசினாள். ஸீதைக்கு நல்ல வேளை
வரப்போவதைக் குறிக்கும் ஸ்வப்னம் ஒன்றை தான் கண்டதைச்
சொல்லி, ராக்ஷஸிகளை சீதையிடமிருந்து விளக்கினாள். சீதையின்
மனதையும் நல்ல வார்த்தைகள் சொல்லி தேற்றிவிட்டுச் சென்றாள்.

51) சீதை ராமர் இத்தனை நாட்களாக வரவில்லையே, தன்னை


மறந்தாரோ அல்லது இறந்திருப்பாரோ என்ற எண்ணம் ஏற்பட தன்
உயிரை விட முடிவெடுத்து தனது பின்னலில் தூக்கிலிட்டுக்
கொள்வதற்காக முயற்சி செய்ய தொடங்கினாள்.

52)இவை அனைத்தையும் மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டு


இருந்த ஹனுமான், சீதையை உடனே காக்க வேண்டும் என்று
எண்ணினார். ராமன் ஒருவரே சீதையை அடைய கூடிய மார்க்கம்
என்பதை உணர்ந்து ராம கதையை அவள் கேட்கும்படி இனிமையாக
சொன்னார்.

53)சீதை தன் உயிரை விட நினைக்கும் பொழுது திடீரென்று ராமனின்


11

கதையை கேட்டு வியந்து தேடிப் பார்க்கையில் மரத்தின் மேலிருந்த


அனுமனை கண்டாள்.

54) உடனே ஆஞ்சநேயர் மரத்திலிருந்து கீழிறங்கி சீதையிடம் ‘அம்மா


நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டதற்கு அவள் தான் ராம
பத்தினி சீதை என்று சொன்னாள். அனுமன் தான் ராம தூதனாய்
வந்திருப்பதைத் தெரிவித்தார். ஆனால் அவளோ ராவணனே
மாறுவேடம் கொண்டு வந்திருப்பதாய் பயம் கொண்டாள்.

55)அவளுடைய பயம் போவதற்காக ஹனுமார் ஸீதாதேவியிடம் ராம


சரித்திரத்தையும் ராமனின் அங்க அடையாளங்களையும்,
குணங்களையும் சொல்லி பின் ஸுக்ரீவனோடு நட்பையும், வாலி
வதத்தையும், வானரர்கள் நான்கு திக்குகளில் ஸீதையைத்
தேடுவதையும், தான் கடலைக் கடந்து வந்து அவளைக் கண்டதையும்
விவரமாக கூறியதோடு ராம நாமம் பொறித்த அவருடைய
மோதிரத்தை ஸீதாதேவியிடம் அளித்தார்.
56)ஸீதை ராமனின் மோதிரத்தை கண்டதும் சோகம் தீர்ந்து மகிழ்ச்சி
அடைந்தாள். சீதை அனுமனிடம் ‘ராமர் என்னை மறக்காமல்
இருக்கிறாரா? ஏன் இன்னும் என்னை மீட்க வரவில்லை?’என்று
பலவாராக வருந்த, ஹனுமார் அன்னைக்கு தன் விச்வரூபம் காட்டி
‘அன்னையே !! இனி அழ வேண்டாம். இப்போதே வேண்டுமானாலும்
என் முதுகில் ஏற்றிக் கொண்டு போய் உங்களை ராமரிடம் சேர்க்கிறேன்.
உத்தரவு தாருங்கள்" என்று சொன்னர்.

57)அதற்கு ஸீதை "அனுமனே! ராமரே இலங்கை வந்து இந்த ராவணாதி


ராக்ஷஸப் பதர்களை அழித்து, என்னை மீட்டுக் கொண்டு போவது தான்
அவர் புகழுக்கு அழகு. ராவணன் கொடுத்த கெடுப்படி ஒரு மாதம்
மட்டுமே நான் உயிர் தரிப்பேன். எனவே நீ போய் சீக்கிரம் அவர்களை
அழைத்து வா’ என்றாள். அனுமனும் "விரைவில் ராமர் வந்து தங்களை
மீட்டுச் செல்வார்" என்று சொன்னார்.

58) அனுமன் தான் சீதாதேவியை கண்டதற்கு அடையாளமாக


எதையாவது தரவேண்டிக் கேட்க சீதை தனக்கும் ராமனுக்கும் தெரிந்த
காக்காசுர வதத்தையும் , ராமன் தனக்கு திலகமிட்டதையும் கூறி
12

அதோடு தன் சூடாமணியையும் அடையாளமாக ஹனுமாரிடம்


தந்தாள்.

60)அதை பெற்றுக்கொண்ட அனுமன் கிளம்ப முற்படும் போது


ராவணனின் படை பலத்தை அறிய என்ன செய்வது என்று சிந்தித்து,
அந்த வனத்தை அழிப்பதே அதற்கு வித்திடும் என்று முடிவு செய்து
அசோகவனத்தை அழித்தார்.

61)அசோக வனத்தின் பெரிய மரங்கள் நீரோடை, பூவனம் என்று


அணைத்தயும் அழித்து பெரிதாக கர்ஜித்தார். அதைக் கேட்டு ராக்ஷ்சிகள்
பயந்து ராவணனிடம் ஓடிச்சென்று அனுமனைத் பற்றி கூறினார்கள்.
ராவணனும் அனுமனை பிடிக்கச்சொல்லி தன் சேனா வீரர்களை
அனுப்பினான். அனுமன் தன்னை பிடித்து வர அனுப்பிய
ராக்ஷ்ஸர்களை தவிடு பொடியாக்கினார். ‘நான் ராமதாஸனான
ஹனுமார். ராமன் துணையிருக்க என்னை எதிர்க்க முடியாது’ என்று
கர்ஜித்தார்.
62) இதனால் கோபம் அடைந்த ராவணன் ஜம்பு மாலியையும், 5
ஸேனாபதிகளையும், 7 மந்திரி குமாரர்களையும், ராவணனின்
புதல்வனான அக்ஷகுமாரனையும் ஒருவர் பின் ஒருவராக அனுப்ப
ஆஞ்சநேயர் அனைவரையும் வதம் செய்தார். இதனால் மேலும் கோபம்
கொண்ட ராவணன் தன் மூத்த மகன் இந்தரஜித்தைத் அனுப்பினான்.
அவன் அனுமன் மீது ப்ரம்மாஸ்திரம் எய்ததும் ஆஞ்சநேயர் தாமாகவே
அதற்கு கட்டுப்பட்டார். உடனே அரக்கர்கள் அனுமனை ராவணனின்
அரண்மனைக்கு இழுத்து சென்றனர்.

63)அனுமன், ராவணன் அரண்மனையில் சிறிதும் கலக்கமின்றி அவன்


செய்த தவற்றை சுட்டிக்காட்டி, "ஸீதையை ராமரிடம்
ஒப்படைக்கவில்லை என்றால் ஸர்வ நாசம் ஏற்படும்" என்று
அறிவுறுத்தினார். இப்படி தனக்கே நல்ல புத்தி சொன்ன ஹனுமாரை
கண்டு ராவணன், கோபத்துடன் அவரை கொன்றுவிடுமாறு
உத்தரவிட்டான்.

64)உடனே ராவணனின் தம்பி விபீஷணன் அதை தடுத்து, ‘அண்ணா


தூதனைக் கொல்லக் கூடாது என்று ராஜநீதி உள்ளது" என்று
13

சொன்னவுடன், ராவணன் அவனின் அறிவுரைக்கேற்ப தன் உத்தரவை


மாற்றி ஹனுமாரின் வாலில் தீ வைக்கச் சொன்னான். இந்த செய்தியை
சிலர் சீதையிடம் சொல்ல, சீதை அக்னி பகவானை வேண்டினாள்.

65)அப்பொழுது அனுமாரே வியக்கும் வண்ணம், அவர் வாலில்


வைக்கப்பட்ட தீ குளிர்ச்சியாகிவிட்டது . ராக்ஷஸர்கள் தெருவில்
அவரைக் இழுத்துக் கொண்டு சென்றனர். அவரின் நிலை
கண்டு கைக்கொட்டிச் சிரித்தார்கள். அனுமன் அனைத்தையும்
அமைதியாக ஏற்றுக்கொண்டார்.

66) நகரின் எல்லைக்கு வந்தபின் இதுதான் சமயம் என்றெண்ணி


ஹனுமார், தன் உருவத்தை சுருக்கி கட்டிலிருந்து விலகி பின் தன்
உருவத்தை பெரியதாகி, தன் வாலில் வைத்த தீயினால், விபீஷணன்
கிருஹத்தைத் தவிர, இலங்கையின் எல்லா மாளிகைகளுக்கும் தீ
வைத்தார். தீ பரந்து விரிந்து எங்கும் எரிய ஆரம்பித்தது.

67) பின் சமுத்திரத்தில் தன் வாலின் தீயை அணைக்கும் போது - ஆகா


ஸீதைக்கு தீயினால் ஆபத்து உண்டாகி இருக்குமோ? சீதையை பற்றி
சிந்திக்காமல் இலங்கையில் தீ வைத்தோமே என்றுனர்ந்து சீதை
பத்திரமாக இருக்கிறாள் என்று உறுதிப் படுத்திக் கொள்ள மீண்டும்
அசோக வனம் சென்று சீதை நலமாக இருப்பதைக் கண்டு, அவளிடம்
உத்தரவு பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பி வானரர்களை நோக்கி
கிளம்பினார்.

68)வழியில் தான் தந்த வாக்குறுதி படி மைநாக பர்வத்தை கண்டபின்


தனது நண்பர்களை காண ஆவலோடு கர்ஜித்தபடி பறந்து வந்தார். தனது
நண்பர்களை கண்ட ஹனுமார் "கண்டேன் ஸீதையை" என்று
முழங்கினார். அதைக்கேட்ட வானரர்கள் களிப்புடன்
கொண்டாடினார்கள்.

69) அனுமனிடம் சீதையைக் கண்ட சேதியை விரிவாக கூறும்படி


ஜாம்பவான் கேட்க அனுமன் அனைத்தையும் கூறி, சீதையை
தன்னோடு வர அழைத்தபோது, அவள் "ராமனே ராவணனை போரில்
வென்று பின் தன்னை அடைய வேண்டும்" என்று கூறியதை
14

விவரித்தார். ராமரோடு அவளை சேர்த்து வைக்க எல்லா வானரர்களும்


ராவணனோடு யுத்தம் செய்ய வேண்டும் என்றும் உற்சாகப் படுத்தினார்.
இந்த செய்தியை ராமரிடம் கூற வேண்டி உடனே வானரர்கள் வேகமாக
கிஷ்கிந்தா நோக்கி சென்றனர்.

70) வழியில் மதுவனத்தை கண்ட வானரர்கள் அங்குள்ள பழங்களின்


தேன் குடித்து வெற்றியை கொண்டாட அங்கதனிடம் உத்தரவு கேட்க
அவனும் சரி என்றான். அவர்கள் அந்த மதுவனத்தில் பழங்களின்
தேனை குடித்து, அதனால் போதை ஏறி தன்னிலை அறியாது,
அவ்வனத்தின் காவலர்களை துன்புறுத்த, அந்த காவலர்கள்
சுக்ரீவனிடம் சென்று முறையிட்டனர். வானர்கள் திரும்பிவந்த
செய்தியறிந்து சுக்ரீவன் மகிழ்ந்து உடனே அவ்வானர்களை ராமனிடம்
அழைத்து வர உத்தரவிட்டான்.

71) அதை கேட்டவுடன் காவலர்கள் விரைந்து அங்கதனிடம் போய்ச்


சுக்ரீவனின் ஆணையை கூறினார்கள். உடனே வானரர்கள்
ராமனைக்கான விரைந்தனர். சுக்ரீவனும் ராமனை அடைந்தான்.
அனுமன் ராமனைக் கண்டு வணங்கி "கண்டேன் சீதையை" என்று கூறி
ராமனிடம் சீதை தந்த சூடாமணியை கொடுத்து, அவள் சொன்ன
அடையாளங்களையும் சொன்னார். ஸீதையின் சோக
நிலைமையையும், ராமரிடம் அவள் கொண்ட மாறாத பக்தியையும்,
சொல்லி ராமரின் மனதை தேற்றினார். செய்தி கேட்ட ராமர்
ஹனுமாரை ஆலிங்கனம் செய்து ‘இன்று நீ என் குல கௌரவத்தை
காத்தாய்’ என்று புகழ்ந்தார். இனி எப்படி கடலைத் தாண்டுவது, என்று
கவலைப்படும் ராமரை ‘நாங்கள் இருக்கிறோம். எல்லாம் வெற்றிகரமாக
முடியும். உடனே கிளம்ப உத்தரவு செய்யுங்கள்’ என்று சுக்ரீவன்
தைரியம் சொல்ல, ராமர் உத்தரவின் பேரில் வானரப் படை கிளம்பியது.

72) வானர சேனையோடு கடற்கரையை அடைந்ததும் ராமன், கடலை


எப்படி கடப்பது என்று நண்பர்களோடு கலந்தாலோசித்து அங்கேயே
படைகள் தங்க உத்தரவிட்டார். அதேசமயம் இலங்கையில்
ஹனுமாரின் பராக்ரமத்தால் கலங்கிய ராவணன், தன் நகரை மீண்டும்
சீர் செய்து, சபையில் மந்திரிகளை அழைத்து, வானரப் படை வந்தால்
எப்படி சமாளிப்பது என்று யோசனை கேட்க அந்நிலையிலும் சில
15

ராக்ஷஸர்கள் ‘உங்களை வெல்ல யாராலும் முடியாது’ என்றும்


‘நாங்கள் இருக்கும் போது என்ன பயம்?’ என்றனர்.

73) விபீஷணன் ‘"அண்ணா பிறன் மனைவியை கவர்தல் பெரும் பாவம்.


எனவே ஸீதையை ராமரிடம் ஒப்படைத்து நிம்மதியாய் இருப்போம்’
என்று கூற சீதையை திருப்பி அனுப்ப முடியாது என்றான் ராவணன்.
அதனால் விபீஷணனுக்கும் ராவணனுக்கும் இந்திரஜித்திற்கும்
இடையே கடுமையான வாக்குவாதம் நடக்க நிலை மறந்து ராவணன்
விபீஷணனை ‘கூடவே இருந்து குழி பறிக்கும் பங்காளி குணத்தை
காட்டுகிறாய். தம்பியானதால் உன்னை கொல்லாமல் விடுகிறேன்"
என்று அவமானப் படுத்தி பேசினான். அதனால் மனமுடைந்த
விபீஷணன் உடனே தன் நாட்டை துறந்து , ராமர் இருக்கும் இடம் வந்து,
"ராமரை சரணடைய ராவணன் தம்பியான விபிஷணன் வந்திருக்கிறேன்
என்று தெரிவியுங்கள்” என்று கூறினான்.
74)வானரர்கள் ராமரிடம் அதைச் சொல்லி, எதிரியிடமிருந்து வரும்
அவனை நம்ப வேண்டாம் என்றனர். ஹனுமார் மட்டும் ‘இவனை
சேர்த்துக் கொள்ளலாம்” என்றார். ராமர் "என்னை வந்து
சரணடைந்தவனை நான் எல்லா கோணங்களிலும் காப்பேன். இது என்
விரதம். அவனை அழைத்து வாருங்கள்’என்றார். ராமனின் உத்தரவுப்படி
விபீஷணன் ராமரை சரணடைய, ராமர் அவனை ஏற்றார்.
லக்ஷ்மணனிடம் ஸமுத்ர ஜலம் கொண்டு வரச்சொல்லி ராவணனுக்குப்
பின், விபீஷணனை லங்கைக்கு ராஜாவாக பட்டாபிஷேகம் செய்து
வைக்கிறேன் என்று வாக்களித்தார்.

75) ராமர் விபீஷணனிடம் கடலை கடக்க உபாயம் கேட்க அவன் ‘நீங்கள்


ஸமுத்ரராஜாவை வேண்டினால் வழி விடுவார்’ என்று சொன்னான்.
ராமரும் அதை ஏற்றார். மூன்று நாட்கள் தர்ப்பைப் புல்லின் மேல்
உண்ணாமல் தவமிருந்து ஸமுத்ரராஜனிடம் வேண்டியும் அவன்
வரவில்லை. ‘லக்ஷ்மணா! வில்லை எடு. இந்த கடலை வற்ற
செய்துவிடுகிறேன். நாம் நடந்தே இலங்கைக்கு செல்வோம்’என்று
கோபமடைந்த போது ஸமுத்ரராஜன் வந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு
‘நளனைக் கொண்டு பாலம் கட்டுங்கள். அது முழுகாமல்
பார்த்துக்கொள்கிறேன்' என்று சொன்னான். ராமர் நளனையும்
வானரர்களையும் கொண்டு தேவர்களும் வியக்கும் வண்ணம், நூறு
16

யோஜனை நீளம், பத்து யோஜனை அகலத்திற்கு கடலின் மேல் பாலம்


கட்டி அதன் மூலமாக லங்கை சென்று அடைந்தனர்.

76) ராமர், அந்நகரின் அழகைக் கண்டு மயங்கினார் . ராவணனுக்கு ஒரு


கடைசி வாய்ப்பு குடுக்க விரும்பி ‘ஸீதையை என்னிடம் ஒப்படைத்து
உயிர் பிழைத்துப் போ-என்று சொல்லி அங்கதனை தூதனாய்
அனுப்பினார். ராவணன் அதைக் கேட்டுக் கோபமடைந்து அங்கதனை
பிடிக்கச் சொல்ல அங்கதன் அங்கிருந்து தப்பித்து ராமனிடம் வந்து
சேர்ந்தான். யுத்தம் துவங்கியது.

77)முதல் நாள் யுத்தத்தில் இந்திரஜித் கண்களுக்கு புலப்படாமல்


மறைந்திருந்து, ராம லக்ஷ்மணர்களை நாகபாசத்தால் கட்டினான்.
பயங்கர விஷப் பாம்புகளின் கட்டில் அவர்கள் மயங்கி கிடப்பதைக்
கண்ட இந்திரஜித் அவர்களை வென்றுவிட்டேன் என்று நாடு திரும்பி
கொண்டாட்டங்களை தொடங்கினான். விபீஷணன், சுக்ரீவன்
எல்லாருமே ராமனின் நிலைகண்டு பயந்தார்கள்.

78)அப்போது கருட பகவான் அங்கு வர, விஷப்பாம்புகள் பயந்து


ஓடிவிடுகின்றன. ராம லக்ஷ்மணர்களை கருட பகவான் தடவிக் குடுக்க
அவர்கள் முன்பை விட இரண்டு மடங்கு சக்தியும் தேஜஸும்
பெற்றார்கள். ராவணன், ராம லக்ஷ்மணர்கள் நாக பாசத்திலிருந்து
விடுபட்டு நிற்பதைப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்தான். சீதையிடம் சூழ்ச்சி
செய்ய முடிவு செய்தான்.

79)ராவணன் சீதையை பயமுறுத்த எண்ணம் கொன்டு ராமரின்


தலையை மாயையால் தோற்றுவித்து ஸீதையிடம் காட்டி
பயமுறுத்தினான். அவள் புலம்பி அழுதாள். கதறும் ஸீதையை
திரிஜடை ஸமாதானம் செய்தாள். ராவணன் போனவுடன் அந்த தலை
மறைந்து விடுகிறது. சீதை இராவணன் மாயையை உணர்ந்தாள்.

80)மறுநாள் ராவணன் ப்ரஹஸ்தன் என்ற சேனாதிபதியை பெரும்


படையோடு போருக்கு அனுப்ப நீலன் என்கிற வானர ஸேனாதிபதி
அவனை வதம் செய்தான். வியப்படைந்த ராவணன் ‘இவன் ஸாதாரண
17

எதிரியில்லை. நானே யுத்தத்திற்கு போகிறேன்’ என்றபடி மறுநாள்


அவனே யுத்தத்திற்கு வந்தான். ராமரோடு யுத்தம் செய்தான்.

81)யுத்தத்தில் ராமன் அவனுடைய ரதம், கொடி, சாரதி, வில், கவசம்,


கிரீடம் எல்லாவற்றையும் வீழ்த்தி கருணையினால் நிராயுதபாணியாய்
இருக்கிறான் என்பதால் கொல்லாமல் விட்டார். ராவணன் படுதோல்வி
அடைந்தான். கோட்டைக்கு திரும்பிய ராவணன் ‘ஒரு மனிதனிடம்
தோற்றேனே என்று அவமானத்தால் புழுங்கினான். பயம் மேலிட
கும்பகர்ணனை எழுப்பச் செய்தான்.

82) கும்பகர்ணன் ‘நான் இருக்கும் போது உனக்கு என்ன கவலை' என்று


கிளம்பினான். அடுத்த நாள் போரில் வானரர்களை கதி கலங்கச்
செய்தான். முடிவில் ராமருடைய அஸ்திரங்களுக்கு இரையானான்.
இதைக் கேட்ட ராவணன் சோகமடைந்து நினைவிழந்தான்.

83)கும்பகர்ணன் வதமடைந்த பின் ராவணன் தன் தம்பிகள், பிள்ளைகள்


பல பேரை போருக்கு அனுப்பினான். அவர்களை வானரர்கள் வதம்
செய்தனர். பின் இந்திரஜித் மறைந்திருந்து லக்ஷ்மணரை
ப்ரம்மாஸ்திரத்தால் வீழ்த்தினான். லக்ஷ்மணரை காக்க ஜாம்பவான்
சொற்படி ஹனுமான், ஹிமயமலையில் ஓஷதிபர்வதத்தில் உள்ள
ஸ்ஞ்சீவனி என்ற மூலிகையைத் தேடி பறந்து சென்று
நேரமின்மையால் அந்த மலையையே கொண்டு வந்தார். அந்த
மூலிகைகளின் காற்றுப் பட்டவுடன் லக்ஷ்மணர் உயிரோடு எழுந்தான்.
எல்லாரும் ஹனுமாரைப் புகழ்ந்தார்கள்.

84)செய்தி அறிந்த இந்திரஜித் யாகமொன்றை நடத்தினான். அதை


தடுத்து இந்திரஜித்தை ஜெயிக்க லக்ஷ்மணன் அனுமதி கோர ராமன்
விபீஷணனிடம் உரையாடி அனுமதி அளித்தார். வானரப் படையோடு
சென்று லக்ஷ்மணன் அந்த யாகத்தை தடுத்து, இந்திரஜித்தோடு
கடுமையான யுத்தம் செய்தான். லக்ஷ்மணன் ராமன் மேல்
ஆணையிட்டு இந்திராஸ்திரத்தை விட இந்திரஜித் தலை கீழே
விழுந்தது. வெற்றி வீரனாய் திரும்பிய லக்ஷ்மணனை ராமர் அணைத்து
மகிழ்ந்தார்.
18

85)புத்ர சோகத்தால் பீடிக்கப் பட்ட ராவணன் ‘நிஜமாகவே ஸீதையை


கொல்லுவேன்’ என்று கிளம்பினான். அப்பொழுது மந்திரிகள்
'மூவுலகாலும் நீங்கள் ராமரோடு யுத்தம் செய்து வென்றால் ஸீதையை
அடையலாம்’ என்று மீண்டும் சொன்னவுடன் ராவணன் ராமனை
ஜெயிப்பேன் திரும்பினான்.மீண்டும் ராவணன் யுத்தத்திற்கு வந்தான்.
இப்பொழுது இந்திரன் தன் தேரையும் சாரதி மாதிலியையும் ராமனுக்கு
துணையாக அனுப்பினார். யுத்தம் ஆரம்பமானது.

86)ராமன் ராவணனை அம்பால் ஒன்பது முறை வீழ்த்தியும் அவன் உயிர்


தப்பினான். இதனால் ராமர் ஒரு கணம் மனம் தளர்ந்தார். மாதலி
ஞாபகப் படுத்தியவுடன் ராமர், ராவணன் மீது பிரம்மாஸ்திரத்தை
விட்டார். பிரம்மாஸ்திரம் மார்பை துளைக்க, ராவணன் கீழே
விழுந்தான். குருதி சேற்றில் தன் இறுதி நிமிடங்களை கழித்தபடி
கிடந்தான்.

87)மண்ணில் கிடந்த ராவணனிடம் குரு உபதேசம் பெற்றுக்


கொள்ளுமாறு இராமன் லக்ஷ்மணனை அனுப்பினார். லக்ஷ்மணனிடம்
ராவணன் கர்வத்தை விட்டு வாழ்வதே சிறந்தது. கர்வம் இல்லாத
வாழ்வே பேரின்பம் தரும் என்று குரு உபதேசம் அளித்தான். இறக்கும்
தருவாயில் ராமனைக் கண்டபோது இராமன் இராவணனுக்கு
விஸ்வரூப தரிசனம் தந்தார் . அதைக் கண்ட ராவணன் முக்தி
அடைந்தான். மூவுலகமும் நிம்மதி அடைந்து மகிழ்ந்தது.

88)ராவணனின் மனைவிகள் வந்து அவன் உடல் மீது விழுந்து அழுது


புலம்பினார்கள். ராமர் உத்தரவின் பேரில் விபீஷணன் ராவணனுக்கு
முறைப்படி இறுதி சடங்கு செய்தான். பின் லக்ஷ்மணன் ராமன் உத்திரவு
படி விபீஷணனை இலங்கைக்கு அரசனாக பட்டம் சூட்டினார்.

89)ஹனுமார் ஸீதாதேவியிடம் ராமரின் வெற்றியை ஸ்ரீராமஜெயம்


என்று எழுதிக் காட்டி இனி கவலை வேண்டாம் என்று சொன்னார்.
ஸீதை ஹனுமாரை மனதார புகழ்ந்து வாழ்த்தினாள். பின்னர்
ஹனுமார் ‘உங்களை ஹிம்ஸித்த இந்த ராக்ஷஸிகளுக்கு தகுந்த
தண்டனை குடுக்கிறேன் என்று சொன்ன போது, ‘வேண்டாம், பிழை
பொறுத்தல் பெரியோர் கடமை. மன்னித்து விடு “என்று சொன்னாள்.
19

90)பின்னர் விபீஷணன் ஸீதாதேவியை ராமரிடம் அழைத்து வர, ராமர்


சீதா தேவியை அக்னி பிரவேசம் செய்யச் சொன்னார். சீதையும்
இராமனின் வாக்கிற்கிணங்க அக்னி பிரவேசம் செய்தாள்.
அக்னிப்ரவேசத்தால் தூய்மை அடைந்த பிராட்டியை ராமன் ஏற்றார்.
ப்ரம்மாதி தேவர்கள் ராமரை முழுமுதற் கடவுளாக துதித்தார்கள்.

91)பிறகு புஷ்பக விமானத்தில் சுக்ரீவன், விபீஷணன், லக்ஷ்மணன்


மற்றும் ஸீதையோடு ராமர் அயோத்தி கிளம்பினார். பரத்வாஜ
முனிவரின் ஆச்ரமத்தை அடைந்தார். அங்கு ராவண வதத்திற்கான
பரிகாரங்களை செய்ய, அவை முடிய சிறிது தாமதம் ஆனதால்
ஹனுமாரை பரதனிடம் தான் அயோதி வரும் செய்தியை சொல்ல
அனுப்பினார்.

92)ராமன் 14 வருடம் முடிந்து திரும்பி வராத காரணத்தினால் அக்னி


பிரவேசம் செய்ய தயாராக இருந்த பரதனை சந்தித்து அனுமன் ராமர்
வருகிறார் என்ற இனிய செய்தியை கூறியவுடன் பரதன் ஆனந்தத்தில்
முழ்கினான்.

93)பின் ராமர் முதலானோர் விமானத்தில் வந்து சேர, பரதன் அவர்களை


வணங்கி வரவேற்றான். ராமரும் பரதனை அன்போடு அணைத்தார்.
தனது தாய்மார்களளை வணங்கினார். பரதன் பாதுகைகளை தலையில்
வைத்த வண்ணம் இந்நாட்டின் ராஜ்யத்தை ஏற்க வேண்டும் என்று
ராமனிடம் கேட்க ராமனும் பட்டத்தை ஏற்கிறேன் என்று வாக்களித்தார்.

94)பின் தன் ஜடாமுடிகளை களைந்து ராஜ குமாரனாக அலங்கரித்துக்


கொண்டு சுமந்திரர் சாரத்யம் செய்ய தன் நண்பர்களோடு அயோத்தி
நகருக்கு சென்றார்.அயோத்தியில் ஜனங்கள் எல்லாரும் ராமரை
கைகூப்பி வணங்கி வரவேற்றார்கள்.

95) ராமரும் 14 வருடங்களில் நடந்த விஷயங்களை மந்திரிகளுக்கும்


மக்களுக்கும் சொல்ல, மறுநாள் ராமன்பட்டமேற்க போவதை
வஸிஷ்டர் மக்களுக்கு அறிவித்தார் . அதைக் கேட்ட மக்கள் ஆனந்தம்
அடைந்தார்கள்.
20

96) அன்றிரவு பரதன் ராமனின் நண்பர்களுக்கு நல்ல வரவேற்பை


அளித்தார். பின் பரதனின் வேண்டுகோளுக்கு ஏற்ப சுக்ரீவன்
வானரர்களை அனுப்பி நான்கு ஸமுத்ரத்திலிருந்தும், கங்கை முதலிய
ஐநூறு நதிகளிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்கு புண்ய தீர்த்தம் கொண்டு
வரச் செய்தார்.

97)மறுநாள் ராமனுக்காண விடியல் வந்தது. ராமரையும் ஸீதையயும்


அலங்கரித்து, ரத்ன ஸிம்ஹாஸனத்தில் அமரச் செய்து, ஸுக்ரீவனும்
விபீஷணனும் கவரி வீச, சத்ருக்னன் குடை பிடிக்க, வஸிஷ்டர்
முதலான 8 ரிஷிகள் மந்திரபூர்வமான ஜலத்தினால் ஸ்ரீராமரை
பதினான்கு உலகிற்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து
வைத்தார்கள்.

98)மக்கள் ஆடி பாடி கொண்டாடினார்கள். ராமன் பலருக்கு ஆடை


அணிகலன்களையும், தங்க நாணயங்களையும், ஆவினங்களையும்
தானமாக தந்து மகிழ்ந்தார். நண்பர்கள் பலர் ராமருக்கு பரிசுகளைத் தந்த
மகிழ்ந்தனர். இராமன் பரதனுக்கு யுவராஜாவாக பட்டம் சூட்டினர்.
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு !ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன
ஹனுமத் ஸமேத ஸ்ரீராமசநத்ர மஹராஜ் கி ஜய் !- என்ற ஜெயா
கோஷமிட்டனர்.

99) இவ்வாறு பட்டாபிஷேகம் இனிதே நடந்தேற ராமரின் நண்பர்கள்


மீண்டும் பல பரிசுகளைப் பெற்று தங்கள் ஊர் திரும்பினார்கள். ஸ்ரீ
ராமசந்திரன் பூவுலகை பல ஆயிரம் ஆண்டுகள் ஆண்டார். பல
அஸ்வமேத யாகங்கள் செய்தார். ராமன் ராஜ்யத்தில் மக்கள் ஒருவரை
ஒருவர் ஹிம்ஸிக்காமல் இருந்தார்கள்.இந்த உலகம் ராம மயமாக,
ஆனந்த மயமாக இருந்தது. விஷ்ணுவின் அவதாரமான ராமன்
பூலோகத்தை பரிபாலனம் செய்தபின் விஷ்ணு லோகம் அடைந்தார்
.இதுவே வால்மீகி மஹரிஷியின் ராமாயணம்.

100) இந்த ராம கதையை படிப்பவர்கள் வேண்டிய வரங்களை


ராமபிரானின் அநுக்ரஹத்தால் பெறுவார்கள். நற்கதி அடைவார்கள் .
பித்ருக்களின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். ஸ்ரீ வால்மீகி இராமாயணம்
இனிதே நிறைவடைந்தது.
21

"அதௌ ராம தபோ வனாதி கமனம் ஹத்துவா ம்ரிகம் காஞ்சனம்


வைதேகி ஹரணம் ஜடாயு மரணம் சுக்ரிவ சம்பாஷணம்
வாலி நிர்தலனம் சமுதிரதரணம் லங்கா புரிதாஹனம்
பஸ்சாத் ராவண கும்பகர்ண ஹனணம் எதாதி ராமாயணம்"

ஸ்ரீராம தூத மஹாதீர


ருத்ர வீர்ய ஸமத் பவ
ஆஞ்சநேய கர்ப்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே

யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்


தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

You might also like