You are on page 1of 269

PARTS 1-150

பகவான்ஶ்ரீமன்நாராயணனின் ஆசீர்வாதங்களுடன்
ஸ்ரீமத் பாகவத வாட்ஸ்அப்
பதிவுகளை(பகுதிகள்1-150) தொகுத்து
வழங்கியுள்ளேன்.

வாட்ஸ்அப் பதிவுகளை எனக்கு வழங்கிய என் அன்பு


நண்பர் ஸ்ரீ.கௌரி சங்கருக்கு மனமார்ந்த நன்றிகள்.

தாசன் கோபாலன்

1
*Srimad Bhagavatham | ஸ்ரீமத் பாகவதம்
சுருக்கமான அறிமுகம்*

*Srimad Bhagavatham**Skandham 01 - ஸ்கந்தம் 01*

பகவானின் மகிமையையும், நாம மகிமையையும், பறை சாற்றும் வண்ணம்


பல அற்புதமான சரித்திரங்கள் ஸ்ரீ மத்பாகவதத்தில் உள்ளன.

ரத்தினமாலை போன்று பன்னிரண்டு ஸ்கந்தங்களால் கோர்க்கப்பட்ட பாகவத


மாலையில் உயர்ந்த நீல ரத்னமான ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையே ப்ரதானம்.
பத்தாவது ஸ்கந்தத்தில்தான் ஸ்ரீ க்ருஷ்ண சரித்ரம் சொல்லப்படுகிறது.

அதை பக்தியோடு உருகிக் கேட்பதற்கு நமது மனத்தைப் பக்குவப்படுத்தும்


விதமாக முதல் ஒன்பது ஸ்கந்தங்களில் பல பக்தர்களின் சரித்ரங்களை
ரஸமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.

முதல் ஸ்கந்தத்தில் பாகவதம் தோன்றிய கதையும், நாரதருக்கு பக்தி வந்த


கதையும் சொல்லப்படுகிறது. க்ருஷ்ணன் அவதாரத்தை முடித்துக்கொண்டது,
பாண்டவர்களின் வைகுண்டாரோஹணம் ஆகியவையும்
சொல்லப்படுகின்றன.
எண்ணற்ற ஸ்துதிகளையும், நாம மகிமைகளையும் எடுத்தியம்பும் ஸ்ரீ மத்
பாகவதத்தில் ஐந்து ஸ்துதிகளும் ஐந்து கீ தங்களும் மிக முக்கியமானவை.

1. குந்தி ஸ்துதி
2. பீஷ்ம ஸ்துதி
3. த்ருவ ஸ்துதி
4. ப்ரஹ்லாத ஸ்துதி
5. கஜேந்திர ஸ்துதி

1. வேணு கீ தம்
2. ப்ரணய கீ தம்
3. கோபிகா கீ தம்
4. யுகள கீ தம்
5. ப்ரமர/மதுப கீ தம்

இவற்றுள் முதல் இரண்டு ஸ்துதிகளான குந்தி ஸ்துதியும், பீஷ்மஸ்துதியும்


முதல் ஸ்கந்தத்தில் ப்ரகாசிக்கின்றன.

இரண்டாவது ஸ்கந்தத்தில் புராண லக்ஷணத்தை அனுசரித்து ப்ரபஞ்ச


ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் வர்ணிக்கப்படுகிறது.

மூன்றாவது ஸ்கந்தத்தில் ப்ரஜாபதிகளின் சரித்ரமும், வராஹ அவதார


சரித்ரமும்.கபிலோபாக்யானம் மிகவும் ரஸமானது.

நான்காவது ஸ்கந்தத்தில் நர நாராயணர்களின் சரித்ரம், தக்ஷ யக்ஞம், த்ருவ


சரித்ரம், வேனனின் கதை, ப்ருது மஹாராஜாவின் சரித்ரம்,

2
புரஞ்சனோபாக்யானம், ப்ரசேதசர்களின் கதை துருவஸ்துதி ஆகியவை
உள்ளன.

ஐந்தாவது ஸ்கந்ததில் நாபி, ஆக்ன ீத்ரன், ரிஷப தேவர் ஆகியோரின்


சரித்ரங்கள் சொல்லப்படுகின்றன. ஜடபரதர் என்ற மஹாத்மாவின் சரித்ரம்
மிக முக்கியமானது.ஸ்வர்க, நரகாதி வர்ணனைகள் சுருக்கமாகச்
சொல்லப்படுகின்றன.

ஆறாவது ஸ்கந்தத்தில் சொல்லப்படும் அஜாமிள சரித்ரம் பாகவத மாலையின்


பதக்கமாய் மிளிர்கிறது. தேவாஸுர யுத்தம் வர்ணிக்கப்படுகிறது. இதில்
வ்ருத்திராஸுரன் என்ற மஹாபக்தனின் கதையும், அவனது பூர்வ கதையும்
அழகாக சொல்லப்படுகிறது. பும்ஸவன வ்ரதத்தின் விதிகள் அழகாய்
சொல்லப்படுகிறது.

ஏழாவது ஸ்கந்தத்தில் நமது அரசனான ப்ரஹலாதனின் கதை மிளிர்கிறது.


ஒரு ஸ்கந்தம் முழுவதும் நமது அரசனுக்கேயாம். குழந்தையான
ப்ரஹலாதன் செய்யும் ஸ்துதி மிக முக்கியமானது.
எட்டாவது ஸ்கந்தத்தில் கஜேந்திரன் ஸ்துதி செய்து சரணாகதி செய்கிறான்.
அவனது பூர்வக் கதையும்,மன்வந்தரக் கதைகளும், ஸமுத்ர மதனம்
விரிவாகவும் சொல்லப்படுகின்றன.
எட்டாவது ஸ்கந்தத்தின் எட்டாவது அத்யாயத்தில்எட்டாவது ஸ்லோகத்தில்
மஹாலக்ஷ்மி தாயாரின் அவதாரம் சொல்லப்படுகிறது.பின்னர் வாமன
வடுவின் அழகும், பலியை ஆட்கொண்ட
சரித்ரமும்,மத்ஸ்யாவதாரக்கதையும் விவரிக்கப்படுகிறது.

ஒன்பதாம் ஸ்கந்தத்தில் சூர்ய வம்ச வர்ணனத்தில் துவங்கி, நாபாகனின்


கதையும், அம்பரீஷன் என்ற மஹா பக்தனின் கதை அழகாய்
சொல்லப்படுகிறது. இக்ஷ்வாகு, மாந்தாதா, சௌபரி, திரிசங்கு ஹரிச்சந்திரன்,
ஸகரன், பகீ ரதன் ஆகியவர்களைப் பற்றிய விரிவான கதைகளுடன்
ராமாவதாரம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. ராமனின் வம்சம், நிமியின்
வம்சம், சந்திர வம்சம், புரூரவஸ், பரசுராமாவதாரம், விஸ்வாமித்திரரின்
வம்சம், யயாதி வம்சம், குரு வம்சம், துஷ்யந்தன் சரித்ரம், பரத வம்சம்,
ரந்திதேவனின் கதை, யது வம்சம் ஆகியவை பற்றிய வர்ணனைகளும் உண்டு.
90 அத்யாயங்களையும் இரண்டு பாகங்களையும் கொண்ட பத்தாவது ஸ்கந்தம்
ஆச்ரயம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது. மிக மிக விரிவாக ஸ்ரீ
க்ருஷ்ணனின் சரித்ரம் சொல்லப்படுகிறது.
ஐந்து கீ தங்களும் தசம ஸ்கந்தத்தில் பாடப்படுபவையே.

பதினோராவது ஸ்கந்தம் யதுகுல ஸம்ஹாரம், உத்தவ கீ தை ஆகியவற்றைக்


கொண்டுள்ளது.
பன்னிரண்டாவது ஸ்கந்தத்தில் கலியுக ராஜ வம்ச வர்ணனம், கலிதர்ம
நிரூபணம், கல்கி பற்றிய குறிப்பு, ப்ரளயம் பற்றிய குறிப்பு, பரீக்ஷித்தின் முக்தி,
அதர்வண வேத விபாகம், மார்க்கண்டேய சரித்ரம் ஆகியவையோடு
நாமவைபவத்தை வலியுறுத்தி ஸ்ரீ மத் பாகவதத்தை நிறைவு செய்கிறார் ஸ்ரீ
வியாஸ பகவான்.

3
*ஸ்ரீமத் பாகவதம் – 2* *ஸ்ரீ சுகாசாரியார்*

வேதம் முழுவதையும் கிரஹித்த வியாஸ பகவான், கலியுகத்தில் இருக்கும்


மனிதர்களை கருத்தில் கொண்டு முழு வேதத்தையும் ஒருவர் ஒரு
வாழ்நாளுக்குள் அத்யயனம் செய்வது கடினம் என்று உணர்ந்துகொண்டார்.
எனவே, அதை நான்காகப் பிரித்து
ரிக் வேதத்தை பைலர் என்ற ரிஷியிடமும்,
யஜுர் வேதத்தை வைசம்பாயனர் என்ற ரிஷியிடமும்,
ஸாம வேதத்தை ஜைமினியிடமும்,
அதர்வண வேதத்தை சுமந்து என்ற ரிஷியிடமும் கொடுத்தார்.

பதினேழு புராணங்களை ரோம ஹர்ஷணர் என்ற பௌராணிகரிடம்


கொடுத்தார்.
கடைசியாக பதினெட்டாவதாக எழுதிய ஸ்ரீ மத்பாகவத புராணத்தைக் கொடுக்க
தகுந்த ஒருவரை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஸ்ரீமத் பாகவதம் ஞான யக்ஞம், ஆஸ்ரயம், மோக்ஷ க்ரந்தம் என்றெல்லாம்
அழைக்கப்பட்டாலும் மிகவும் ரஸரூபமானது.
ஒரு தந்தை சொத்தைப் பிரித்துக் கொடுப்பதுபோல் கொடுத்துவிட்டு, தனக்குப்
பிரியமான சொத்தை சரியாக நிர்வகிக்கத் தகுந்த ஆளை எதிர்பார்ப்பதுபோல்
அமைந்தது.

ஸ்ரீ வியாஸ பகவான் ஒருமுறை யாகம் செய்யும்போது, யாக


குண்டத்திலிருந்து தோன்றியவர் ஸ்ரீ சுகாசார்யார்.
தோன்றும்போதே பதினாறு வயது நிரம்பிய இளம் பாலகனாக, அழகு
சொட்டும் உருவத்தோடு விளங்கினார்.
ஞான ஸ்வரூபமான சுகர், யாக குண்டத்திலிருந்து வெளி வந்ததும், எதையும்
கவனியாமல் கிடுகிடுவென்று ஓடத் துவங்கினார்.
எங்கும் நிரம்பியிருக்கும் ஆத்மாவில் ரமிப்பவராதலால் ஆடைகளின்றி,
திக்குகளையே அம்பரமாகக் (ஆடையாக) கொண்டு திகம்பரராக
சங்கல்பமின்றி சஞ்சரித்தார்.
தான் இவ்வளவு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த புத்திரன்
கிடைத்துவிட்டான் என்று மகிழ்ந்துபோன வியாஸரோ, சுகரைத்
துரத்திக்கொண்டு ஓடினார்.

புத்ரா புத்ரா என்று கத்திக்கொண்டு தந்தை துரத்திக்கொண்டு ஓட, சுகர்


தன்னைத்தான் அழைக்கிறார் என்று நினைக்கவில்லை. ஏனெனில் ப்ரபஞ்சம்
முழுவதும் நிரம்பியிருக்கும் ஆத்மாவே தானென்று உணர்ந்திருந்தார்.
ஆனால், வழியிலிருந்த மரம் செடி கொடிகளெல்லாம் ஏன் ஏன் என்று
வியாஸருக்கு பதிலிறுத்தன என்றால், அவருடைய ப்ரும்மானுபவம்
எத்தகையது என்று கற்பனை செய்துகூட பார்க்‌
க முடியவில்லை.

ஓடிக்கொண்டிருந்த சுகர் ஒரு குளத்தின் வழிச் செல்ல, அங்கு ஆடையின்றி


குளித்துக்கொண்டிருந்த பெண்கள் அவரைப் பார்த்துவிட்டு குளியலைத்
தொடர்ந்தனர்.

4
சற்று நேரத்தில் பின்னாலேயே துரத்தக்கொண்டு வந்த வியாஸரைப்
பார்த்ததும் ஓடிச் சென்று ஆடைகளை அணிய முற்பட்டனர்.இதைக் கண்ட
வியாஸர், அந்தப் பெண்களிடம் கேட்டார்.நீங்கள் செய்வது
நியாயமா?பதினாறு வயதுடைய என் மகன் ஆடையின்றி செல்கிறான்.
அவனைப் பார்த்து நீங்கள் வெட்கமடையவில்லையா?கிழவனும், ரிஷியுமான
என்னைக் கண்டதும் வெட்கப்படுகிறீர்களே.
அதற்கு அந்தப் பெண்கள்,மன்னித்துவிடுங்கள் மஹரிஷி. தங்கள் மகன்
இளவயதுடையவராய் இருந்தபோதும், அவரைக் கண்டதும்
வெட்கமேற்படவில்லை, காரணம் அவர் தன்னை ஆணா, பெண்ணா என்று
கூட உணராமல் ப்ரும்மவஸ்துவாகவே இருக்கிறார். அவரைக் கண்டதும்
எங்கள் மனத்தில் எந்த விகாரமும் ஏற்படவில்லை.
ஆனால், நீங்கள் வயதானவர் என்றாலும் நீங்கள் ஆண், நாங்கள் பெண்ணினம்
என்ற பேதம் தெரிவதால் வெட்கம் வந்து ஆடைகளை அணிந்தோம் என்றனர்.

இந்த நிகழ்வு வியாஸரைக் குறைத்துச் சொல்லப்பட்டதல்ல. தந்தையான


அவர் தன்னைக் குறைத்துக்கொண்டு தனயனின் பெருமையை
உணர்த்துகிறார்.
மேலும், ஹ்ருதயத்தில் துளியும் காமவாசனையற்ற, ப்ரும்மஸ்வரூபமான ஸ்ரீ
சுகர்தான் தசமஸ்கந்தத்தில் ராஸலீலையை வர்ணிக்கிறார், என்றால் ராஸம்
எவ்வளவு உயர்ந்தது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

*ஸ்ரீமத் பாகவதம் - 3* *ஸர்வபூத மனோஹரம்*

புத்ரனான சுகரைத் துரத்திக்கொண்டு வியாஸர் சென்றபோதும், அவரால்


தனயனைப் பிடிக்க முடியவில்லை. யக்ஞப் ப்ரசாதமாக ப்ரும்மஸ்வரூபமாய்
அருமையான புத்ரன் கிடைத்தும் அவன் வடு ீ தங்காமல் புறப்பட்டதை
நினைத்து, வருத்தத்துடன் ஆசிரமம் திரும்பினார் வியாஸ பகவான்.
பாடசாலைகளில் அஷ்டமி, அமாவாசை போன்ற பாடம் இல்லாத நாட்களில்,
ஹோமத்திற்கும் அனுஷ்டானங்களுக்கும் வேண்டிய தர்பை, ஸமித் (அரச
மரக் குச்சி) போன்றவற்றை சேகரிக்க மாணவர்கள் காட்டுக்குள் செல்வார்கள்.
ஒரு சமயம் அவ்வாறு செல்லும் மாணவர்கள் குருவான வியாஸரிடம் வந்து
ஸ்வாமி, காட்டினுள் துஷ்ட மிருகங்கள் அதிகமாக ஸஞ்சரிக்கின்றன.
எங்களுக்கு பயமாக இருக்கிறது. அவற்றிடமிருந்து காத்துக்கொள்ள ஏதாவது
உபாயம் சொல்லுங்கள் எனக் கேட்டனர். வியாஸர்...

ஹூம்... பட்... என்று கேட்டவுடன் மிருகங்கள் சிதறி ஓடும்படியாக ஏதாவது


மந்திரோபதேசம் செய்யக்கூடாதோ? ஆனால், அவரோ சற்று யோசித்துவிட்டு,

பர்ஹாபீடம் நடவர வபு: கர்ணயோ: கர்ணிகாரம்


பிப்ரத் வாஸ: கனக கபிசம் வைஜயந்தீஞ்ச மாலாம் |
ரந்த்ரான் வேணோர் அதர சுதயா பூரயன் கோபவ்ருந்தை:
வ்ருந்தாரண்யம் ஸ்வபத ரமணம் ப்ராவிசத் கீ த கீ ர்த்தி:||

என்ற ஸ்லோகத்தை உபதேசம் செய்து இதை ஆவ்ருத்தி செய்துகொண்டே


செல்லுங்கள். எந்த ஜீவராசியும் உங்களை ஒன்றும் செய்யாது என்று
சொன்னார்.அப்படியென்ன ஸ்லோகம் அது?

5
சகல ஆபத்துகளிலிருந்தும் காக்கும் எவ்வளவோ மந்திரங்கள்
இருக்கின்றனவே. பலவற்றை செய்ததே வியாசர்தானே.. ஸ்ரீ மத்
பாகவதத்திலேயே நாராயண கவசம் என்ற அற்புதமான ஸ்லோகத் தொகுப்பு
எதிரிகளிடமிருந்து பாதுகாக்குமே.

ஸ்ரீ மத் பாகவத்திலேயே சுதர்சன ஸ்துதி இருக்கிறது. அதையெல்லாம்


விட்டுவிட்டு கண்ணன் வேணு கானம் செய்யக் கிளம்பிய கோலத்தை
வர்ணிக்கும் ஸ்லோகத்தை இப்போது காக்கும் கவசமாக உபதேசம்
செய்திருக்கிறாரே என்று தோன்றலாம்.

இந்த ஸ்லோகம் ஸ்ரீ மத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் 21ம் அத்யாயத்தில்


சொல்லப்படுகிறது. ஐந்து முக்கியமான கீ தங்களில் கண்ணன் குழலூதும்
அழகை வர்ணிக்கும் வேணுகீ தத்தின் துவக்கத்தில் வருகிறது.

அழகான பெரிய மயில்பீலியை தலையில் வைத்துக்கொண்டு, அன்னை


போட்டுவிட்ட தங்க ஆபரணங்களை எல்லாம் மரப்பொந்தில் கழற்றி
வைத்துவிட்டு, காதுகளில் கர்ணிகாரப் புஷ்பத்தையும், கழுத்தில்
வனமாலையையும் அணிந்துகொண்டு அத்தனை கோபிகளையும் பொறாமை
கொள்ளவைக்கும் குழலை பவள வாயில் வைத்துக்கொண்டு, அத்தனை ஜட
மற்றும் ஜீவராசிகளின் ஹ்ருதயங்களையும் கொள்ளை கொள்ளும்படி மிக மிக
ஒயிலான நடையுடன் ப்ருந்தாவனத்திற்குள் கண்ணன் ப்ரவேசிக்கும் அழகைச்
சொல்லும் ஸ்லோகம்.

குரு உபதேசம் செய்த ஸ்லோகத்தை உரு ஏற்றிக்கொண்டு அதையே


ஆவ்ருத்தி செய்துகொண்டு சீடர்கள் காட்டில் ஸமித் முதலியவைகளைச்
சேகரித்துக் கொண்டிருந்தார்கள்..

என்ன ஆச்சர்யம்! மாணாக்கர்கள் சொல்லும் ஸ்லோகத்தைக் கேட்டு சிங்கம்,


புலி,பாம்பு போன்றவையெல்லாம் கூட ஸ்வபாவத்தை மறந்து அன்போடு
வாலைக் குழைத்துக்கொண்டும் நக்கிக்கொடுத்துக் கொண்டும் சென்றன.
அன்பே உருவான நமது ஸ்வாமியைப் பற்றிய வர்ணனையே போதும். உலகில்
அன்பு பெருகும்.

பர்ஹாபீடம் நடவர வபு:


பர்ஹாபீடம் நடவர வபு:

அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த ஸ்லோகம் காற்றில் சுற்றிச் சுற்றி நமது


ப்ரும்மத்தின் காதுகளுள் நுழைந்தது.
பாமரர்களையும் மிருகங்களையும் மட்டுமல்ல, ப்ரும்மஞானிகளையும்
அசைத்துப்போடும் நமது கண்ணனின் உருவமும், பெயரும். அவதூதரான
ஸதாசிவ ப்ரும்மேந்திராளும்
மதசிகி பிஞ்சா அலங்க்ருத சிகுரே -
மானஸ ஸஞ்சரரே - ப்ரும்மனி
தலையில் மயில்பீலி வைத்துக் கொண்டிருக்கும் ப்ரும்மத்தில் ஈடுபடுவாய்
மனமே என்று பாடுகிறார்.

6
தேனிருக்கும் மலரை வண்டு தேடி வருவதுபோல, நன்கு பழுத்த பழத்தைத்
தேடி கிளி வருவது போல, ஸ்லோகத்தைக் கேட்டதும் சுகமுனியின் கால்கள்
தாமாகவே சொல்பவர்களைத் தேடி நடந்தது...

*ஸ்ரீமத் பாகவதம் - 4*

ஸ்ரீமத் பாகவதம் மோக்ஷத்தை மட்டுமல்ல, கேட்ட மாத்திரத்தில் நான்கு


புருஷார்த்தங்களையுமே அளிக்கவல்லது. அதற்கு ப்ரமாணமாக, அதன் ஒரே
ஒரு ஸ்லோகத்தைக் கேட்டதுமே காணாமல் போன ஸ்ரீ சுகர் வியாஸரிடம்
திரும்பி வந்தார். அதென்ன ஸ்லோகம் சொல்கிறீர்கள்? துஷ்ட
விலங்குகளிடமிருந்து காத்துக்கொள்ள எங்கள் குரு உபதேசம் செய்தார்.

உங்கள் குரு யார்? ஸ்ரீ வியாசார்யார் அவரிடம் அழைத்துப் போவர்களா?



யாகத்திலிருந்து வந்த குருபுத்ரன் இவர்தான் என்று தங்களுக்குள்
குசுகுசுவென்று பேசிக்கொண்டு சுகரை ஆசிரமத்திற்கு அழைத்து
வந்தனர்.திரும்பி வந்த மகனைக் கண்டதும் வியாசர் மிகவும் மகிழ்ந்தார்.சுகர்
ஸ்லோகத்தைப் பற்றி விசாரித்தார்.நீங்கள் இவர்களுக்கு உபதேசம் செய்த
ஸ்லோகம் மிக அருமையாக உள்ளது. என்னை மயக்குகிறது. யாரைப்
பற்றியது?எனக்கும் உபதேசம் செய்வர்களா?ீ

யாருக்கு பாகவதத்தைக் கொடுக்க வைத்திருந்தாரோ அவரே தேடி வந்து


கேட்டால் வியாசருக்கு எப்படி இருக்கும்?"ஒரு ஸ்லோகமென்ன?
பதினெண்ணாயிரம் இருக்கிறது. உனக்காகத்தான் வைத்திருக்கிறேன்"என்று
சொல்லி ஸ்ரீ மத் பாகவதத்தை சொல்லிக் கொடுத்தார்.

வேத அத்யயனம் செய்வதுபோல் சந்தை திருவையாக அதாவது ஒவ்வொரு


ஸ்லோகத்தையும் ஒரு முறை சொல்லி மூன்று முறை வாங்கிச் சொல்லி
அர்த்தத்தோடு உள்வாங்கிக்கொண்டார்.
இன்றைக்கெல்லாம் ஸ்ரீமத் பாகவத பாராயணம் நடக்கும் இடத்திற்குச் சென்று
ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்து பாருங்கள்.

ஸம்ஸ்க்ருதம் ஒரு வார்த்தை புரியாவிட்டாலும், அர்த்தம்


தெரியாவிட்டாலும் பாராயண ஒலி கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கும்.

இவ்வளவு கர்ம வாசனைகளோடு ஸம்சாரத்தில் உழன்றுகொண்டிருக்கும்


நமக்கே பாகவத சப்தம் ஆனந்தம் தருகிறதென்றால், ஸ்வயம்
ப்ரும்மஸ்வரூபாய் விளங்கும் ஸ்ரீ ஸுகருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஆத்மானந்தத்தில் லயித்திருந்த அவர் இப்போது பாகவதானந்தத்தில்


திளைக்க ஆரம்பித்தார். தினமும் பசுமாட்டை ஒரு நேரத்தில் பால்
கறப்பார்கள். ஒருநாள் கோனாருக்கு, ஏதோ வேலையால் கறக்க
இயலவில்லை. நேரமாக ஆக ஆக, பசுமாடு பாலை வெளியே தள்ளிவிட
வேண்டும் என்று தவிக்கும். கோனார் வரவில்லையெனில், தானே கால்களை
மடித்துப் போட்டு பீய்ச்சிவிடும். அதுபோல் மஹாத்மாக்களிடம் கருணை
என்பது ஸ்வபாவமாக பெருகிக்கொண்டே இருக்கும். அதை யார் மீ தாவது
பொழிந்து விடவேண்டும் என்பது மஹாத்மாக்களுக்கு ஒரு அவஸ்தை.

7
பாகவதம் தந்த பேரானந்ததில் திளைத்துக் கொண்டிருந்த சுகர் அதை
யாருக்காவது சொல்ல வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருந்தார்.

ஏழுநாட்களில் மரணம் என்ற சாபத்தோடு தனக்கு யாராவது உய்யும் வழி


காட்டமாட்டார்களா என்று தவித்துக் கொண்டிருந்த பரீக்ஷித்தும் சுகரும்
கங்கைக் கரையில் ஒன்று சேர்ந்தனர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 5**எங்கே கங்கை?*

ஒரு மரத்தின் பயன் என்பது அதன் இலை, பட்டைகள், பூ, காய்கள் நிழல் என்று
அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் பழமே அதன் உண்மையான
பலனாகும்.

வேதம் ஒரு கற்பக மரம். அதனால் அநேக ப்ரயோஜனங்கள் உண்டு. ஆனால்,


அதன் ஸாரமாக பழுத்த பழம்தான் ஸ்ரீமத்பாகவதம். அது நன்கு பழுத்து அதன்
நறுமணத்தினால் ஈர்க்கப்பட்டு அதை எடுத்துக்கொள்ள ஸ்ரீசுகாசார்யர் தேடி
வந்ததினாலேயே அவர் கிளிமுகம் உடையவராக உருவகப்படுத்தப் படுகிறார்.

மேலும், கிளியானது சொல்லிக் கொடுப்பதை மிகைப்படுத்தாமலும், அதே


சமயம் குறைக்காமலும் திருப்பிச் சொல்லும் இயல்புடையது. வியாஸர்
சொல்லிக்கொடுத்ததை அப்படியே திருப்பிச் சொல்கிறார் என்பதனாலும் அவர்
கிளிமுகம் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகிறார்.

ஸ்ரீமத் பாகவதத்தின் மாஹாத்மியத்தில் அதன் பெருமையை விளக்கும்


வண்ணம் அநேக கதைகள் சொல்லப்படுகின்றன.

ஆத்மதேவன் என்ற மஹாத்மாவின் கதை, பக்தி தேவியின் கதை, மேலும்


பாகவத புராணத்தைப் பூஜை செய்த ஒருவரின் கதை ஆகியவை மிகவும்
ப்ரஸித்தம். ஒவ்வொன்றையும் சுருக்கமாகப் பார்க்கலாம்.

தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கங்கா ஸ்நானம் செய்வதற்காக காசிக்கு


பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தார்.

அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் கிடையாது. காசிக்கு செல்ல பல


மாதங்கள் பிடிக்கும். நடந்தோ, அல்லது மாட்டு வண்டியோ கட்டிக்கொண்டு
போவார்கள். பாரததேசத்தில் ஹோட்டல்கள் என்பதே கிடையாது. உணவை
விற்பது பாவம் என்று கருதப்படும் தேசம். ஆங்காங்கு சத்திரங்களிலோ
வட்டுத்
ீ திண்ணைகளிலோ தங்கி இளைப்பாறி, பயணத்தைத்
தொடரவேண்டும். யாத்ரிகர்கள் தங்குவதற்காகவே வட்டு ீ வாசலில் திண்ணை
வைத்துக் கட்டியிருப்பார்கள். இரவு உறங்கச் செல்லுமுன் வாசலில் யாராவது
வந்திருக்கிறார்களா என்று பார்த்து உணவிட்டு பின் கதவடைக்கும் காலம்
ஒன்று இருந்தது.

தென்னாட்டிலிருந்து கிளம்பிய மனிதர், பல நாட்கள் நடந்து நடந்து காசிக்கு


அருகில் சென்று விட்டார். இரவாகிவிட்டதால், ஒருவட்டுத்
ீ திண்ணையில்

8
தங்கினார். காலையில் அந்த வட்டில்
ீ குடியிருந்தவர் வெளியில் வந்ததும்,
அவரைப் பார்த்துக் கேட்டார்

நான் தென்னாட்டிலேருந்து வரேன். காசிக்குப் போய் கங்கைல ஸ்நானம்


பண்ணணும்னு ஆசை. கிட்ட வந்துட்டேன்னு தெரியறது. இங்கேர்ந்து கங்கை
எவ்வளவு தூரம் இருக்கும்? எவ்வளவு நாள் ப்ரயாணம் நடந்தா காசி வரும்?

அந்த மனிதர் பார்க்க மிகவும் ஸாதுவாய் இருந்தார். அவர் சொன்ன பதில்


இவருக்கு மிகவும் அதிர்ச்சியை அளித்தது. காசியாவது, கங்கையாவது,
அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் எங்கேயும் போனதேயில்லை!

பயணிக்குக் கோபம் வந்தது. நமது ஸநாதன தர்மத்தில் ஜென்மாவில் ஒரு


முறையாவது காசியில் போய் கங்கையில் ஸ்நானம் செய்யவேண்டும் என்று
சொல்லப்பட்டிருக்கிறது. பாரததேசத்தின் தென்கோடியிலிருந்து மிகவும்
ஆசை ஆசையாக தவித்துக்கொண்டு எத்தனையோ பேர் கங்கா
ஸ்நானத்திற்காக வருகிறோம். இவர் காசியின் அருகிலேயே இருந்துகொண்டு
தெரியாது என்கிறாரே..

காசி தெரியாதா, கங்கை தெரியாதா? உன் வட்டுத்


ீ திண்ணையில் தங்கியதே
மஹா பாபம். இப்படி ஆகிவிட்டதே என்று கத்திக்கொண்டு பலவாறாக
அவரைத் திட்டிவிட்டுக் கிளம்பினார்.

கோபத்தில் விடுவிடுவென்று நடந்தவர் அன்று மாலையே புண்யமான


வாரணாசி நகரத்தை அடைந்து விட்டார்.
கங்கை எங்கே என்று விசாரித்துக்கொண்டு கங்கைக்கரைக்கு வந்தார்.

கங்கையில் ஸ்நானம் செய்தால்தான் நேற்றிரவு அவர் வட்டில்


ீ தங்கிய பாபம்
போகும் என்று கருவிக்கொண்டு ஸ்நானம் செய்ய ஆயத்தமானார். ஆனால்,
கங்கைக்கரையில் பலரும் ஈரமாக எதிர்ப்பட்டனர். நிறைய பேர் ஸ்நானம்
செய்துவிட்டு அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தனர்.

ஆஹா, இவர்களைப் பார்ப்பதே புண்யம்.


ஈரத்தோடு எதிர்ப்பட்டவரைக் கேட்டார், ஐயா, நீங்க எங்க குளிச்சிட்டு
வரீங்க?அவர் இவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு கங்கைல! என்றார்.
அப்படியா! ரொம்ப சந்தோஷம். எனக்கும் கங்காஸ்நானம் பண்ணணும்னு
ஆசை. இதுக்காகவே தென்னாட்டிலேருந்து புறப்பட்டு பல மாசமா நடந்தே
வந்தேன். கங்கை எங்கே இருக்கு?

அவர் இவரை மீ ண்டும் ஏற இறங்கப் பார்த்தார் என்னாச்சுங்க? கங்கைக்


கரையிலேயே நின்னுண்டு கங்கை எங்கேன்னு கேக்கறீங்க? இதோ
ப்ரவாஹமா ஓடறதே இதான் கங்கை. பார்த்து காலை வைங்க. தண்ண ீர்
வேகம் அதிகம் .

இதோவா, எங்கே எனக்குத் தெரியலயே..


கண்ணு தெரியாதா?

இதோ பாருங்க, நீங்க நிக்கற இடத்திலேர்ந்து ஒரு அடி நகர்ந்தா நதிதானே!

9
சொரேலென்றது பயணிக்கு!
ப்ரவாஹமாக ஓடும் கங்காமாதாவின் ஒரு துளிகூட அவர் கண்ணுக்குத்
தெரியவில்லை... அதிர்ந்து போனார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 6**அசிங்கம் அழகானது*

தென்பாரதத்தின் கோடியிலிருந்து மாதக்கணக்காக நடையாய் நடந்து, ஜென்ம


சாபல்யம் அடைந்துவிட வேண்டும் என்ற தீராத வேட்கையோடு, பல
சிரமங்களைப் பொருட்படுத்தாது, பல ஆபத்துகளிலிருந்து தப்பி வந்தும், காசி
வந்து கங்கைக் கரையை அடைந்துவிட்ட பின்னரும், லட்சியம்
பூர்த்தியாகவில்லை. கங்கா மாதா கண்ணுக்குப் புலப்படவில்லை.

அழுகை அழுகையாய் வந்தது. அப்பேர்ப்பட்ட பாவியா நான்? விமோசனமே


இல்லையா?

கங்கா மாதாவை நினைத்து நினைத்து அழுதழுது புழுவாய்த் துடித்தார்.


இரவாகிவிட்டது. அங்கேயே உட்கார்ந்து அரற்றிக் கொண்டிருந்தார்.

எதனால் தனக்கு தரிசனம் கிட்டவில்லை என்று தெரிந்துகொள்ள


கங்காமாதாவைக் குறித்து தியானம் செய்யத் துவங்கினார்.

தியானத்தில் ஒளிப்ரவாஹமாய் கங்காமாதா தோன்றினாள். அம்மா, எனக்கு


ஏன் தங்கள் ப்ரவாஹம் தெரியவில்லை?

நீ ஒரு பரம பாகவதோத்தமரை அவமத்துவிட்டாய். அவரிடம் சென்று


மன்னிப்பு கேள். அவர் மன்னித்து விட்டாரானால், உனக்கு தரிசனம் கிட்டும்.
அம்மா, நான் அனைவரிடமும் வணக்கத்துடன் பழகும் இயல்புடையவன்.
யாரை அவமதித்தேன்? தாங்கள் சொன்னால், ஓடோடிச்சென்று அந்தப்
பெரியவரின் பாதம் பணிவேன்.

'நேற்றிரவு ஒருவர் வட்டுத்


ீ திண்ணையில் தங்கியிருந்தாயே! அவர் பெரிய
மஹாத்மா. நீ அவரை நிந்தித்து பெரும் பாவத்தை சம்பாதித்துக் கொண்டாய்.
அவரை வணங்கி மன்னிப்புக் கேள்' என்று சொல்லி மறைந்து விட்டாள்
கங்கை.

பயணி சிந்தித்தார். நேற்றிரவு சந்தித்தவரோ, காசி தெரியாது. கங்கை


தெரியாது என்றார். ஆனால், கங்கா மாதாவோ அவரை மஹாத்மா என்கிறாள்.

பார்த்த சில நிமிடங்களில் அவரைப் பற்றி தவறான அபிப்ராயம் கொண்டு


திட்டியது தவறுதான். அவரிடம் மன்னிப்பு வேண்டினால் மட்டும் போதாது.
கங்காமாதாவே ஒருவரை மஹாத்மா என்று கொண்டாடுகிறாள் என்றால்
அவர் என்ன ஸாதனை செய்தார்? என்ன தவம் செய்தார்? ஏதேனும்
மந்திரஜபம் செய்கிறாரா? தெய்வ உபாசனையா?

என்னதான் செய்கிறார் என்று தெரிந்து கொண்டு அவரிடம் உபதேசமும்


வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நிச்சயித்து அந்த கிராமத்தை நோக்கி
நடந்தார்.

10
ஒரு நாளெல்லாம் நடந்து அந்த வட்டை
ீ அடையும் போது இருட்டிவிட்டது.
இரவில் தொந்தரவு செய்யக்கூடாதென்று திண்ணையில் படுத்தார்.

அப்போது மிகவும் கோரமான உருவம் கொண்ட ஏழு பேர் அந்த வட்டினுள்ீ


சென்றனர். அவர்களின் உருவத்தைப் பார்த்து பயந்துபோன பயணி வட்டிற்குள்

எட்டிப் பார்த்தார்.

அந்த வட்டுப்
ீ பெரியவர் உறங்கிக்கொண்டிருக்க, ஒருத்தி விசிறினாள்.
மற்றவர்கள் வட்டைப்
ீ பெருக்கி, நீர் கொண்டு வந்து மெழுகி, கோலம் போட்டு,
வட்டை
ீ ஒழுங்கு செய்து என்று அத்தனை வேலைகளையும் செய்தார்கள்.

எல்லா வேலைகளும் முடியவும் ப்ரும்ம முகூர்த்தம் வரவும் சரியாக


இருந்தது. இப்போது அந்தப் பெண்கள் அனைவரும் அதிரூப சுந்தரிகளாக மாறி
விட்டிருந்தனர். ஏழு பேரும் வட்டை
ீ விட்டுக் கிளம்பி வெளியே வரும் நேரம்,
அவர்களுக்குத் தலைவிபோல் இருந்த ஒரு பெண்ணின் காலில் சென்று
விழுந்தார் நமது பயணி. உற்றுப் பார்த்ததும் அவள்தான் நேற்று தியானத்தில்
தரிசனம் கொடுத்த கங்கா மாதா என்று உணர்ந்து கொண்டார். அம்மா நீங்களா?
இவர்களெல்லாம் யார்? நீங்கள் வந்து சேவை செய்யுமளவிற்கு இவர்
உயர்ந்தவரா? தெரியாமல் தவறு செய்தேன் அம்மா! கங்கா மாதா
புன்சிரிப்போடு சொன்னாள்.

நாங்கள் கங்கா, யமுனா, ஸரஸ்வதி, நர்மதா, கோதாவரி, ஸிந்து, காவேரி


ஆகிய ஸப்த் புண்ய நதிகளாவோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள்
எங்களிடம் ஸ்நானம் செய்து தங்கள் பாவத்தைப் போக்கிக்கொள்கிறார்கள்.
அவற்றின் தாக்கத்தால் நாங்கள் குரூபிகளாக மாறிவிடுகிறோம். தினமும்
இவருக்கு ஸேவை செய்வதன் மூலம் எங்களிடம் சேர்ந்த பாவங்கள்
அனைத்தும் தொலைந்து போய், நாங்கள் எங்கள் ஸ்வரூபத்திற்குத்
திரும்புகிறோம்.

நீ பொழுது விடிந்ததும் அவரை வணங்கு!


என்று சொல்லிவிட்டு ஆறு புண்ய நதிகளுடனும் மறைந்துபோனாள் கங்கா
மாதா. பொழுது எப்போது விடியும் என்று மிகுந்த ஆர்வத்தோடு
காத்திருக்கலானார் பயணி.

*ஸ்ரீமத் பாகவதம் - 7**கிரந்த மகிமை*

கங்கை உள்பட ஸப்த புண்யநதிகளும் வந்து ஒருவருக்கு ஸேவை செய்து


தங்களிடம் சேர்ந்த பாவங்களைத் தொலைக்கின்றன என்றால் அவர் எவ்வளவு
புண்யசாலியாக இருக்கவேண்டும்?

நிச்சயயமாக அவரை நிந்தித்தது தவறு தான். மன்னிப்பு கேட்பதோடு, அவரின்


புண்யத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

பலவாறு சிந்தித்துக் கொண்டு பயணியானவர் வட்டுத்திண்ணையில்



தவிப்போடு அமர்ந்திருந்தார்.

11
சற்று பொழுது புலரும் தருவாயில் வெளியே வந்த அந்த மஹாத்மாவின்
கால்களில் ஓடிச் சென்று விழுந்தார்.
நான் செய்தது பெரும் தவறு ஸ்வாமி. மன்னிச்சுடுங்க!

உங்க பெருமை தெரியாம நேத்திக்கு தாறுமாறா பேசிட்டேன்.

அவருக்கோ ஒன்றும் புரியவில்லை. பயணியை ஆசுவாசப்படுத்தி


உட்காரவைத்து என்னவென்று விசாரித்தார்.

அதையெல்லாம் விடுங்க! எனக்கொன்னும் தெரியாது. கங்கையாவது, ஸப்த


நதியாவது. நான் பிறந்ததிலிருந்து இங்கேயேதான் இருக்கேன் என்றார்.

கங்கையே இவரை மஹாத்மா என்கிறாள். இவரோ கங்கையைத் தெரியாது


என்கிறாரே என்று குழம்பிப்போனார் பயணி. ஆனாலும் இந்தமுறை ஏமாந்து
போய் விடக்கூடாது என்று மேலும் விசாரித்தார்.

அதெல்லாம் இருக்கட்டும்! நீங்க என்ன பூஜை பண்றீங்க? ஏதாவது ஜபம்


செய்யறீங்களா? உங்கள் குரு யார்?

கேள்வி கேள்வி மேல் அடுக்கிக் கொண்டே போக, அவரோ திருதிருவென்று


விழித்தார். பின்னர் பேச ஆரம்பித்தார். இதோ பாருங்க! பூஜையோ, ஜபமோ
எனக்கொன்னும் தெரியாது. நான் செய்வதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்!
என்ன அது?

என் வட்டில்
ீ ஒரு பழைய புத்தகம் இருக்கு. பரம்பரை பரம்பரையாக என்
கொளுத்தாத்தா, தாத்தா, அப்பா எல்லாரும் பாராயணம் செய்த புத்தகம்.
எனக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு அக்ஷரம் கூடத் தெரியாது. அதனால், நான்
பாராயணம் செய்வதும் இல்லை. ஆனால், 'காலையில் ஸ்நானம்
செய்துவிட்டு அந்த புத்தகத்திற்கு இரண்டு புஷ்பங்களைப் போட்டு ஒரு தீபம்
காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்யும் பூஜை. நான் வேறெந்த
தெய்வத்தையும் வழிபடுவதில்லை. கோவில்களுக்கோ யாத்திரைகளோ
சென்றதுமில்லை' என்றார்.

வியப்பின் உச்சிக்கேபோன பயணி,


அந்தப் புத்தகத்தை நான் பார்க்கலாமா?
என்று தயங்கி்த் தயங்கி கேட்டார்.

'வாருங்கள்! காட்டுகிறேன்' என்று வட்டினுள்


ீ அழைத்துச் சென்று
பூஜையிலிருந்த புத்தகத்தை ஜாக்கிரதையாக எடுத்துக் கொடுத்தார்.

தொட்டால் பொடிப்பொடியாக உதிர்ந்துபோகும் நிலையில் இருந்த அந்தப்


புத்தகத்தைப் பிரித்தால் முதல் பக்கத்திலேயே ஸ்ரீமத்பாகவத மஹாபுராணம்
என்ற எழுத்துக்கள் பளிச்சிட்டன!

*ஸ்ரீமத் பாகவதம் - 8* *ச்ரவண யோகம்*

ஸ்ரீ மத் பாகவத பாராயணத்தின் பெருமையை உணர்த்தும் மற்றொரு கதை.

12
க்ருத யுகத்திலும், த்ரேதா யுகத்திலும், த்வாபர யுகத்திலும் அடிக்கடி பூமிக்கு
வந்து ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த நாரதர், கலியுகம் துவங்கியதும்
பூமிக்கு வரவே பயந்தார். கலியின் கோர முகத்தைக் காண நாரதருக்கே
அச்சமாயிருந்தது என்றால், கலியுகம் எப்படி இருக்கிறது என்பது தெளிவு.

இருப்பினும், பகவத் ஸங்கல்பத்தினால் பூமியைச் சற்று பார்த்து வருவோம்


என்று இறங்கினார். எங்கு போனாலும் மக்கள் கூட்டம், ஒரே இரைச்சல்,
சண்டை சச்சரவுகள், அடிதடி. எல்லோரும் எதையோ தேடி அலைந்து
கொண்டிருந்தனர். கோவில்களுக்குப் போனால், கேட்கவே வேண்டாம். அங்கு
நிலைமை இன்னும் மோசம். எங்கே சென்றாலும் காசு கேட்டார்கள்.
பிரகாரங்களிலேயே கடைகள், எச்சில், குப்பைகள். பூமி முழுவதும் பொதுவாக
இயங்கிய ஒரே மொழி பணம் மட்டுமே. பயந்துபோனார் நாரதர். அவரால்
எதையும் சகித்துக்கொள்ள முடியவில்லை.

கண்ணன் லீலைகள் புரிந்த ப்ருந்தாவனம் சென்று பார்க்கலாம் என்று ஸ்ரீவனம்


போனார். அங்கு காடுகள் குறைந்திருந்த போதிலும், பகவந்நாமம் எப்போதும்
ஒலித்துக் கொண்டிருந்ததைக் கேட்டு சற்று நிம்மதி அடைந்தார்.

வைகுந்தம் சென்று பகவானிடம் பூமியின் நிலைமையை எடுத்துச்


சொல்லலாம் என்று நினைத்து கிளம்பினார். அப்போது, 'நாரதரே' என்று ஒரு
குரல் கேட்டது.

தன்னை அடையாளம் கண்டு கூப்பிடுவது யார் என்று ஆச்சர்யத்துடன்


திரும்பிப் பார்த்தார். அங்கு ஒரு மரத்தடியில் இளம் பெண் அமர்ந்திருந்தாள்.
அவளருகில் மிகவும் வயதான இரண்டுபேர் படுத்திருந்தார்கள்.
அவர்களிருவரும் குற்றுயிரும் குலையுயிருமாகப் போராடிக்
கொண்டிருந்தனர்.

நாரதர் அந்தப் பெண்ணைப் பார்த்து,


'யாரம்மா நீ? என்னை எப்படி அடையாளம் தெரிந்தது? இவர்கள் இருவரும்
யார்?'
என்று கேட்டார்.

பக்திக்கு ஸூத்ரம் எழுதியதே தாங்கள்தான். பக்த ஸாம்ராஜ்ய


சக்ரவர்த்தியான ப்ரஹலாதன், துருவ நக்ஷத்ரமாய் விளங்கும் துருவன்
இவர்களெல்லாம் உமது சிஷ்யர்கள். ஆனால், உமக்கே என்னை அடையாளம்
தெரியவில்லை. யாரென்று கேட்கிறீர்? இது எனது துர்பாக்யமாகும். நான்தான்
பக்திதேவி என்றாள்.

அதிர்ந்துபோன நாரதர்,
'பக்திதேவியா? ஏனம்மா இப்படி இருக்கிறாய்?'

'இவர்கள் யார்?'

இவர்கள் என் புதல்வர்கள் ஞானமும், வைராக்யமும். என் நிலையும்


இவர்களைப் போல் தான் இருந்தது. நான் எப்படியோ ஊர்ந்து ஊர்ந்து கண்ணன்
லீலை செய்த இடமான இந்த ஸ்ரீவனத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன். இங்கு

13
வந்ததும் என் நிலைமை சற்று சீரானது. ஆனால் என்ன செய்தாலும் என்
புதல்வர்களை எழுப்ப முடியவில்லை. பக்திக்கு சூத்திரதாரியான நீங்கள்தான்
உபாயம் சொல்லவேண்டும் என்றாள்.

நாரதர், அவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு, அருகில் அமர்ந்து


உபநிஷத், பகவத்கீ தை முதலியவற்றைப் பாராயணம் செய்தார். ஆனால்,
அவர்கள் இருவரின் நிலைமையிலும் முன்னேற்றமே இல்லை.
செய்வதறியாது திகைத்த நாரதர், யமுனைக்கரையில் யோசித்துக் கொண்டே
நடந்தார். அப்போது ஸனகாதி மஹரிஷிகளுள் ஒருவரான ஸனத் குமாரர்
எதிர்ப்பட்டார். ஸனத்குமாரரின் அம்சமாக முருகப் பெருமான் அவதரித்தார்
என்று புராணங்கள் சொல்கின்றன.

நாரதர் கவலையோடு வருவதைப் பார்த்ததும் கேட்டார், 'நாரதரே! எப்போதும்


ப்ரஸன்னமாக பகவன் நாம கோஷம் செய்வரே.
ீ இப்போது என்ன கவலை?'

பக்திதேவியின் நிலையை எடுத்துச் சொன்ன நாரதர், ஞானத்தையும்


வைராக்யத்தையும் எழுப்ப வழி தெரியவில்லை என்றார். என்ன நாரதரே?
கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவாருண்டோ?
எல்லாம் அறிந்த தாங்களே இப்படி சொன்னால் என்ன செய்வது?

திருதிருவென்று விழித்தார் நாரதர்.

தாங்கள் வியாசருக்கு உபதேசம் செய்து எழுதத் தூண்டிய புரணமான ஸ்ரீமத்


பாகவதம் இருக்க என்ன கவலை?

ஸப்தாஹ விதிப்படி பாராயணம் செய்தால் ஞான வைராக்யங்கள்


துள்ளியெழுந்துவிடுமே என்றதும்,

நாரதர், சரியான சமயத்தில் பகவத்ஸ்வரூபமாகவே வந்து நினைவு


படுத்தின ீர்கள். தாங்களே ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ மஹாயக்ஞத்தை
நடத்திக்கொடுக்க வேண்டும் என்றார்.

கரும்பு தின்னக்கூலியா? நன்றாகச் செய்துவிடலாம். இப்போதே


துவங்குவோம் என்றார். ஸ்ரீவனத்தில் யமுனைக் கரையிலேயே ஸப்தாஹம்
துவங்கியது. இனிப்பு இருக்கிறது என்று எறும்புக்கு அழைப்பு
விடுக்கப்படுகிறதா என்ன? ஸ்ரீமத் பாகவதம் ஸ்வயமே அத்தனை
பக்தர்களையும் ஆகர்ஷிக்கக்கூடியது. ஏராளமான பக்தர்கள்
யமுனைக்கரையில் கூட, ஸனத்குமாரர் வெகு விமரிசையாக ஸப்தாஹம்
செய்தார்.

தினமும் பாராயணம் முடிந்து இரவு திவ்யநாம ஸங்கீ ர்த்தனம் நடைபெறும்.


அதில் ஸனத்குமாரர், அர்ஜுனன் முதலியோர் பாட, நாரதர் வணையை
ீ மீ ட்ட,
இந்திரன் மிருதங்கம் வாசிக்க, உத்தவர் ஜால்ரா போட்டுக்கொண்டு பாட,
ப்ரஹலாதன் கையைத் தட்டிக்கொண்டு ஆட, யமுனா ப்ரவாஹத்தோடு
நாமப்ரவாஹமும் சேர்ந்தது.

ஏழுநாள் முடிவில், ஞானமும் வைராக்யமும் ஆரோக்யம் திரும்பி சக்தி


பெற்றனர். பக்திதேவி இன்னும் ப்ரகாசமாக மிளிர்ந்தாள். அவள்

14
ஞானவைராக்யமான தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஸப்தாஹ
பந்தலின் நடுவே வந்து நின்று அமர்வதற்கு இடம் தேடினாள். எங்கும் எள்
போட்டால் விழாது என்னுமளவிற்கு கூட்டமாக அமர்ந்திருந்தனர். நாரதரைப்
பார்த்துக் கேட்டாள்.

"ஸ்வாமி, என்னையும் என் குழந்தைகளையும் பொலிவடையச் செய்தீர்கள்.


இந்த ஸப்தாஹத்தில் எனக்கும் ஒரு இடமளியுங்கள்" என்றாள்.

நாரதர் அவளைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து, 'இங்கு வந்திருப்பவர் அனைவரின்


இதயத்திலும் சென்று உன் குழந்தைகளோடு அமர்வாயாக' என்றார்.

அப்படி அனைவர் மனத்திலும் பக்தி ஞான வையாக்யத்தோடு நிறைந்ததும்,


ஸாக்ஷாத் பகவானான ஸ்ரீ கிருஷ்ணன் அங்கு ஆவிர்பவித்தான்.

ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹத்தை ச்ரவணம் செய்யும் அனைவரின்


ஹ்ருதயத்திலும் பக்தியும் அதைத் தொடர்ந்து வைராக்யமும் ஞானமும்
நிலைபெறும் என்பதாக ஸ்ரீமத் பாகவத மாஹாத்மியம் கூறுகிறது.

*ஸ்ரீமத் பாகவதம் - 9**ஆத்மதேவன் - 1*

ஸனத்குமாரர் செய்த பாகவத ஸப்தாஹத்தில் ஸ்ரீமத் பாகவத மஹிமையை


விளக்கும் ஆத்மதேவன் என்பவரது சரித்ரத்தை சொல்கிறார்.

ஆத்மதேவன் என்ற ஒரு அந்தணர் பூரண வேத அத்யயனம் செய்து


ஸதாசாரத்தோடு வாழ்ந்து வந்தார். பெரிய செல்வந்தராக இருந்த அவர்,
நிறைய தான தர்மங்களும் செய்து வந்தார்.

அத்தனை விஷயங்களும் கைகூடியிருந்தபோதிலும் அவருக்கு ஒரு பெரிய


மனக்குறை. அவருக்கு குழந்தைகள் இல்லை. அத்தனை சாஸ்திரங்களையும்
கற்றுணர்ந்திருந்தபடியால், புத்ரன் இல்லாவிட்டால் புத்து என்னும் நரகம்
சம்பவிக்கும் என்று அஞ்சினார். எனவே குழந்தைப் பேறு வேண்டி ஏராளமான
வைத்யங்கள், பரிகாரங்கள், யாத்திரைகள் என்று செய்து கொண்டேயிருந்தார்.
ஆனால், ஒரு பலனும் இல்லை.

அவரது மனைவி துந்துலி என்பவள். அவளுக்கோ குழந்தை ஆசை அறவே


இல்லை. குழந்தை பிறந்தால், நிறைய பொறுப்புகள் வரும், அழகு
கெட்டுவிடும் என்று அஞ்சினாள். குணத்தில் ஆத்மதேவனுக்கு எதிர்மறையாய்
இருந்தாள்.

எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள்.

எத்தனையோ கோவில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்ட போதிலும்


குழந்தை பிறக்கவில்லையென்று மனம் வாடினார் ஆத்மதேவன்.

15
ஒரு சமயம் வருத்தத்தோடு காட்டு வழி நடந்தார். ஒரு மரத்தடியில்
அமர்ந்தார். துக்கம் தாளாமல் கண்ண ீர் வந்தது. அந்த வழியாகச் சென்ற ஒரு
ஸாது அவரைப் பார்த்தார்.

ஸாதுக்கள் இளகிய மனமும் கரு‌ ணையும் கொண்டவர்கள். பார்த்தால்


தேஜஸ்வியாய், வேதம் படித்தவர் மாதிரி இருக்கிறார். அழுகிறாரே என்று
மனமிரங்கி ஆத்மதேவனை உற்று நோக்கினார். நிமிர்ந்து பார்த்த
ஆத்மதேவன், ஒரு ஸாதுவைப் பார்த்ததும் ஓடிச் சென்று வழ்ந்துீ
வணங்கினார்.

ஏம்பா அழற?

கேட்டதும் இன்னும் அழுகை பெரிதாக வெடித்தது. அவரை ஆசுவாசப்படுத்தி


மீ ண்டும் கேட்டார், ஏன் அழற?

ஸ்வாமி! சாஸ்திரங்கள் எல்லாம் புத்திரன் இல்லாதவனுக்கு கதியில்லை,


நரகம்தான்னு சொல்றது. எனக்கு புத்திரனும் இல்லை. கதியுமில்லை ஸ்வாமி.

இதுக்கா இப்படி அழற? புத்திரன் இருந்து அவன் சரியா ஸம்ஸ்காரம்


செய்தாத்தானப்பா நரகம் வராது. ஆனா, சந்ததி இல்லாம எவ்வளவோ பேர்
இருக்காங்க. புத்ரனே இருந்தாலும் அவன் நமக்கு ஸம்ஸ்காரம் செய்ய அந்திம
நேரத்தில் பக்கத்தில் இருப்பான்னு என்ன நிச்சயம்? சாஸ்திரம்
சொல்றதென்னவோ உண்மைதான். நீ ஏதாவது பரிகாரம் செய்தியா?

எல்லாவிதமான பரிகாரங்களும் செய்துட்டேன். ஏராளமான வழிபாடுகள்,


ஹோமங்கள் எல்லாம் பண்ணியாச்சு.
ஸாதுவுக்கு அவரைப் பார்த்தால் பாவமாய் இருந்தது.

அந்த ஸாதுவுக்கு ஒருவரது தலையெழுத்தைப் படிக்கும் சக்தி இருந்தது. சரி,


உட்கார் என்று சொல்லி அவரது தலையெழுத்தைப் பார்த்தார்

ஆத்மதேவா, இதற்கு முன்னால் ஏழு பிறவிகளுக்கும் உனக்கு குழந்தை


இல்லை. இனி வரப்போகும் ஏழு பிறவிகளுக்கும் குழந்தை பிறக்கப்
போவதில்லை. அதனால, நீ குழந்தை ஆசையை விட்டுவிட்டு ஸந்நியாசம்
வாங்கிக்கோ. நானே கொடுக்கறே‌ன். அது அடுத்த ஜென்மாவுக்கு
சமானமாயிடும். பிறவி இல்லாம முக்தியும் கிடைக்கும். நரகத்துக்காக பயம்
வேண்டாம்.

ஆத்மதேவன் கேட்டுவிட்டு முன்னிலும் பெரிதாய் அழுதான். ஸாதுவோ


திகைத்தார். என்னப்பா சொல்லிட்டேன். இப்படி அழற? எனக்கு குழந்தை
பிறந்துடும்ங்கற நம்பிக்கைலயாவது காலத்தை ஓட்டியிருப்பேன். நீங்க
மஹாத்மாவா இருக்கீ ங்கன்னு பார்த்தா ஏழு ஜென்மத்துக்கு குழந்தை
இல்லங்கறீங்க. இது தெரியாம இருந்திருந்தா நிம்மதியாவாது
இருந்திருப்பேன். குழந்தை வரம் கேட்கறவன் கிட்ட போய் ஸந்நியாசம்
வாங்கச் சொல்றீங்க!

ஸாது பார்த்தார், இவரைப் பேசி சமாதானப்படுத்த முடியாது என்று உணர்ந்து


கொண்டார். அருகில் ஒரு மாமரத்தில் ஒரு மாங்கனி தொங்கிக்

16
கொண்டிருந்தது. அதைப் பறித்து ஏதோ ஜபம் செய்து, இதை உன் பத்னியிடம்
கொடுத்து சாப்பிடச் சொல்! நல்ல குழந்தையாகப் பிறக்கும் என்றார்.

ஆத்மதேவர் மிகவும் மகிழ்ந்து அவரை நமஸ்கரித்துவிட்டு பழத்தோடு


வட்டுக்கு
ீ ஓடினார்

ஏழு ஜென்மத்துக்கு குழந்தை கிடையாது என்றார். இப்போது பழம் கொடுத்து


பிறக்கும் என்கிறாரே. அப்படி என்றால், முன்னது விதி. பின்னது அனுக்ரஹம்.
ஒரு கஷ்டத்திற்கு காரணம் நாம் செய்யும் முன்வினை. அனுக்ரஹம்
செய்யும்போது ஸாதுக்கள் தங்கள் தவத்தின் ஒரு பகுதியை பழம், விபூதி,
குங்குமம் அல்லது ஏதோ ஒரு பொருளில் ஏற்றிக் கொடுக்கிறார்கள். அந்த
வினையின் வரியத்தை
ீ விட அனுக்ரஹ பலம் அதிகமாக இருந்தால் கஷ்டம்
விலகும். மாறாய் இருந்தால், தவத்தின் அளவுக்கேற்ற அளவு வினைப்பயன்
விலகும். முற்றிலும் விலக்க மறுபடி ப்ரார்த்தனையும் அனுக்ரஹமும்
தேவை.

*ஸ்ரீமத் பாகவதம் - 10**ஆத்மதேவன் - 2*

ஸாதுவிடமிருந்து பழத்தைப் பெற்றுக்கொண்ட ஆத்மதேவனுக்கு


ஸந்தோஷம் தாங்கவில்லை. ஓட்டமும் நடையுமாக வட்டிற்கு
ீ வந்தார்.
பழத்தை மனைவியிடம் கொடுத்து,

நம் குறையெல்லாம் தீர்ந்தாச்சு. இந்தப் பழத்தை நீயே சாப்பிடு. குழந்தை


பிறக்கும்னு அனுக்ரஹம் பண்ணி ஒரு ஸாது கொடுத்தார்.

அவளுக்கு எரிச்சலாக வந்தது. இருந்தாலும் அடக்கிக்கொண்டு, பழத்தை


வாங்கி ஸ்வாமி இடத்தில் வைத்தாள்.

குழந்தை பிறந்தால் அழகு போய்விடும் என்பதே அவளது பெரும் கவலை.


மேலும் இரவில் குழந்தை அழும். உறக்கம் கெடும். இருக்கும்வரை நன்றாக
அனுபவித்து விட்டுப் போய்விடவேண்டும். குழந்தை எதற்கு?
ஆனால் அதை கணவரிடம் சொல்ல தயக்கமாய் இருந்தது. ஒருவேளை அந்த
ஸாதுவின் ப்ரசாதத்தால் குழந்தை வந்துவிட்டால் என்ன செய்வது என்று
யோசித்தாள்.

கணவனிடம் சென்று நமக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கணும்னு


வேண்டிக்கிட்டு தீர்த்த யாத்திரை போய்வாங்க! நான் என் அக்காவைக்
கூப்பிட்டு உதவிக்கு வெச்சுக்கறேன் என்றாள்.

ஆத்மதேவனும் தீர்த்த யாத்திரைக்கு புறப்பட்டார். குழந்தை நல்ல


குணங்களோடும், மஹாத்மாகவும் விளங்கவேண்டும் என்பதே அவரது
பிரார்த்தனை. அவர் போனதும் துந்துலி தன் சகோதரியை அழைத்தாள்.

அவளிடம் தன் பிரச்சினையைச் சொன்னதும், அவளோ துந்துலி, எனக்கு


ஏற்கனவே 5 குழந்தைங்க இருக்கு. இப்ப வேற மறுபடி உண்டாயிருக்கேன். என்
வட்டிலோ
ீ வறுமை. என்னால் குழந்தைகளை வளர்க்க முடியல. நீ கொஞ்சம்

17
பணம் கொடுத்தா என் வயத்திலிருக்கற குழந்தையை பெத்து உனக்கே தரேன்.
கொஞ்ச நாள் உன் கூடவே இருந்து வளர்த்தும் கொடுக்கறேன் என்றாள்.

துந்துலிக்கு தன் வயிறு பெரிதாகும் என்று நினைத்தாலே கஷ்டமாக இருந்தது.


எனவே, தமக்கையோடு உடன்பட்டாள். சரிக்கா! இந்தப் பழத்தை என்ன
பண்றது?

கொண்டா என்று அதை வாங்கி கழுநீர்த் தொட்டியில் போட்டாள் அக்காள். சில


மாதங்களில் அக்காவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், ஆச்சரியம் பாருங்கள்,
அவர்கள் வட்டிலிருந்த
ீ பசுமாடு அன்றே ஒரு மனிதக் குழந்தையை
ஈன்றெடுத்தது. ஆனால் அதன் காதுகள் மாட்டின் காதுகள்போல் இருந்தன.

திடீரென்று பசுமாட்டிற்கு மனிதக் குழந்தை பிறந்ததும் திகைத்துப் போனார்கள்


சகோதரிகள். ஓரிரு நாள்களில் ஆத்மதேவன் திரும்பி வந்துவிட, துந்துலி தன்
சகோதரியின் குழந்தையை தன் குழந்தை என்று சொன்னாள்.

ஆனால் அந்தக் குழந்தை களையின்றி விகாரமாய் இருந்தது. பசுமாட்டிற்குப்


பிறந்த குழந்தையோ, பார்த்தவுடனேயே மஹாத்மா என்று சொல்லும்படியான
ஸாமுத்ரிகா லக்ஷணங்களுடன் விளங்கியது.

பசுமாட்டுற்கு மனிதக் குழந்தை எப்படிப் பிறந்தது என்று அவருக்கு


விளங்கவேயில்லை.

தன் குழந்தைக்கு துந்துகாரி என்றும் பசு ஈன்றெடுத்த குழந்தைக்கு கோகர்ணன்


என்றும்பெயரிட்டார்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகள் வளர்ந்தன.


துந்துகாரி மஹா துஷ்ட ஸ்வபாவம் கொண்டவனாய் இருந்தான். ஸாதுவின்
ப்ரசாதமான கோகர்ணன் எல்லா சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து
தேஜஸ்வியாக இருந்தான். இயல்பாகவே ஞானியாகவும் இருந்தான்.
துந்துகாரி வளர வளர கெட்ட பழக்கங்களும் வளர்ந்தன. ஒருநாள்
ஆத்மதேவனிடம் பணம் கேட்டு தந்தை என்றும் பாராமல் அவரை ஓங்கி ஒரு
அறைவிட, அவர் வாசலில் வந்து விழுந்தார்.

வலியால் துடித்த அவரை திண்ணையில் அமர்ந்து ஜபம் செய்து கொண்டிருந்த


கோகர்ணன் பார்த்தான். அவனிடம், என் பிள்ளை அடிச்சுட்டான் என்றதும்,
கலகலவென்று சிரித்தான் கோகர்ணன்.
அப்பா, இன்னும் உங்களுக்கு அஞ்ஞானம் விடலியா? அடிக்கறான். அவனை
என் பிள்ளைங்கறீங்க. இவன் கர்மா செய்தா நீங்க நரகவாசத்திலேர்ந்து
தப்பிக்கப் போறீங்க?
அன்னிக்கே அந்த ஸாது சொன்னார் ஸன்யாஸே ஸர்வதா சுகம்னு.
பகவானை தேடுங்கப்பா. இவ்வளவு கஷ்டப்பட்டப்றமும்கூட இந்த
ஸம்ஸாரம் இனிக்கறதா? என்று கேட்டான்.

ஆத்மதேவன் அந்த ஸாதுவே, குருவாக கோகர்ணனின் உருவில் வந்தாரோ


என்று நினைத்தான். அக்கணமே வட்டைத்
ீ துறந்து கிளம்பினான். தனக்கு
ஆதரவாய் இருந்த ஆத்மதேவன் கிளம்பியதும் கோகர்ணனும் தீர்த்தயாத்திரை
கிளம்பினார்.

18
துந்துகாரி பணத்திற்காக வழிப்பறி, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டான்.
தட்டிக்கேட்ட தாயான துந்துலியை அடித்தே கொன்றுவிட்டான். பின்னர், சில
பெண்களை அழைத்துவந்து உல்லாச வாழ்க்கை நடத்தத் துவங்கினான்.

அவர்களை சந்தோஷப்படுத்த அவன் ஏராளமான பொருளைக்


கொள்ளையடிக்க, அந்தப் பெண்களுக்கு ராஜதண்டனை வருமோ என்று
பயமேற்பட்டது. அவர்கள் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு
ஒருநாள் இரவு துந்துகாரியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று விட்டு
ஓடிவிட்டனர்.

துந்துகாரி தான் செய்த பாவங்களின் விளைவால் துர்மரணம் ஏற்பட்டு,


பித்ருலோகத்தை அடையமுடியாமல், ப்ரும்மராக்ஷஸாக மாறி அந்த
வட்டிலேயே
ீ இருக்கத்துவங்கினான்

*ஸ்ரீ மத் பாகவதம் - 11* -*ஆத்மதேவன் - 3*

கோகர்ணன் தந்தைக்கு ஸ்ரீமத் பாகவதத்தின் தசமஸ்கந்தம் பாராயணம்


செய்யுங்கள் என்றும் கூற, ஆத்மதேவன் ஸ்ரீமத்பாகவத புராணத்தை மட்டும்
எடுத்துக்கொண்டு வட்டை
ீ நீங்கினார் என்கிறது மாஹாத்மியம்.

தீர்த்தயாத்திரை சென்ற கோகர்ணன் கயாவில் இருந்தபோது, தன்


ஊர்க்காரர்கள் சிலரைப் பார்த்தார். அவர்களிடம் தாயும் சகோதரனும் எப்படி
இருக்கிறார்கள் என்று விசாரித்தார். அவர்கள் நடந்த வருத்தாந்தங்களைச்
சொல்லி, துந்துலியும், துந்துகாரியும் இறந்துவிட்டார்கள் என்று கூறினர்.
மிகவும் வருந்திய கோகர்ணன் கயாவிலேயே அவர்களுக்குச் செய்யவேண்டிய
அந்திம கிரியைகளையும், பிண்ட தானங்களையும் செய்தார்.

மந்திரபூர்வமான கிரியைகளை ஒருவரின் வாரிசுகளும், தாயாதிகளும்


செய்தால் மட்டுமே அது இறந்தவரைச் சென்றடையும். ஆனால், கயா
க்ஷேத்திரத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும்
பிண்ட தானங்களைச் செய்யலாம். பயணத்தில் உடன் வந்தவர், அண்டை
அயலார், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், நம் செல்ல ப்ராணிகளுக்காகக் கூட
கயாவில் ச்ராத்தம் செய்யலாம். அப்படிச் செய்தால் இறந்தவருக்கு
ஸ்வாமியான கதாதரன் உயர்ந்த பதத்தைக் கொடுத்துவிடுவார்.
கோகர்ணனும் கயாவில் ச்ராத்தம் செய்துவிட்டு, ஊருக்கு வந்து பார்க்கலாம்
என்று திரும்பி வந்தார்.
வடுீ பாழடைந்து பூட்டியிருந்தது. வட்டுத்
ீ திண்ணையில் அமர்ந்து கண்களை
மூடி, ஜபம் செய்யத் துவங்கினார். சற்று நேரத்தில் ஆடு கனைப்பதுபோலவும்,
யாரோ அலறுவது போலவும், ஊளையிடுவது போலவும் விதம்விதமான
சப்தங்கள் அவரது காதில் விழுந்தன. கண்களைத் திறந்தார். எதிரே புகைபோல்
ஒரு உருவம் இருந்தது. அது இவரிடம் பேச விழைகின்றது என்று
புரிந்துகொண்டு, சில மந்திரங்களைச் சொல்லி தீர்த்த பாத்திரத்திலிருந்து
சிறிது நீரை அதன்மீ து தெளித்தார். இப்போது அந்த உருவம் பேச ஆரம்பித்தது.
கோகர்ணா...

என்னைக் காப்பாத்து

19
என்னைக் காப்பாத்து
அலறியது அந்த உருவம்.
கோகர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை.
யார் நீ? ஏன் இப்படி இருக்க?
நான்தான் உன் அண்ணன் துந்துகாரி.
துந்துகாரியா? இதென்ன கோலம்?
'நான் பஞ்சமா பாதங்களையும் செய்ததால் துர்மரணமாகி இறந்துட்டேன்.'

'ப்ரும்ம ராக்ஷஸாகிட்டேன். எனக்கு உடம்பெல்லாம் எரியுது. அகோரப்பசி.


என்னால் இந்த அவஸ்தையைத் தாங்கமுடியல. இந்த ராக்ஷஸ அவஸ்தை
என்னை விட்டுப் போனாப் போதும். தயவுசெய்து ஏதாவது செய் கோகர்ணா'
அழுதது அந்த உருவம்.

நீயும் அம்மாவும் இறந்துட்டீங்கன்னு கேள்விப்பட்டு நான் உங்களுக்காக


கயாவில் ச்ராத்தம் செய்தேனே. அப்றம் எப்படி இந்த அவஸ்தை உனக்கு?

நூறு கயா ச்ராத்தம் செய்தாக்கூட என் பாவங்கள் போகாது கோகர்ணா.


அவ்வளவு பண்ணிருக்கேன். என்னால் தாங்கமுடியல கோகர்ணா. நான்
உன்கிட்ட அன்பா ஒரு வார்த்தைகூட பேசினதில்ல. ஆனா, நீ
மஹாத்மாவாச்சே.

அண்ணனாச்சேன்னுகூட வேண்டாம். கஷ்டப்படற ஜீவன்னு நினைச்சாவது


இரக்கம் காட்டு. என்னை இந்த அவஸ்தைலேர்ந்து விடுவிக்க ஏதாவது
செய்யப்பா.

கோகர்ணன் பல சாஸ்திர நூல்களை ஆராய்ந்தார். வழி ஒன்றும்


புலப்படவில்லை. ஊரிலுள்ள அத்தனை சான்றோர்களையும் கூட்டி ஏதாவது
வழி உண்டா? சாஸ்திரம் என்ன சொல்கிறது? என்று கேட்டார்.

பலவாறு விவாதங்கள் நடந்தன. முடிவில் கயா ச்ராத்தத்தை விட உயர்ந்த


மார்கம் இல்லை. எல்லா சாஸ்திரங்களும் அதைத்தான் சொல்கின்றன
என்றார்கள்.

ஒரு பழுத்த ஸாது சொன்னார்,

கோகர்ணா, கதியில்லை என்று ஒருவரையும் சாஸ்திரம் தள்ளுவதில்லை.


நிச்சயம் ஏதாவது வழி இருக்கும். நமக்குத்தான் தெரியவில்லை. ஸூரிய
பகவான் ப்ரத்யக்ஷ தெய்வமாவார். அத்தனை சாஸ்திரங்களையும் அறிவார்.
அவரை உபாசித்தால் ஏதாவது வழி புலப்படும்.
கேட்டதும் மகிழ்ந்தார் கோகர்ணன். அவர் காயத்ரியை கோடிக்கணக்கில் ஜபம்
செய்து தேஜஸ்வியாக விளங்கியதால்,
அவ்வளவுதானே என்று சொல்லி சூர்ய மந்திரங்களைச் சொல்லி அவரை
நிறுத்தி விட்டார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 12*-*ஆத்மதேவன் - 4*

20
கோகர்ணன் சூர்ய ஸ்தம்பனம் செய்தார். ஸூர்யபகவான் ப்ரத்யக்ஷமானார்.
என்னை ஏன் நிறுத்தினாய்?

அவரை வணங்கி, தன் சகோதரன் துந்துகாரிக்கு ஒரு கதி சொல்லவேண்டும்


என்று ப்ரார்த்தனை செய்தார்.

ஸர்வஸாக்ஷியாய் விளங்கும் ஸூர்ய பகவான் சொன்னார் :

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்? உன்


தந்தையான ஆத்மதேவனை ஸ்ரீமத் பாகவத பாராயணம் செய்யச்சொல்லி
நீதானே சொன்னாய்? இப்போதும் அதுவே உபாயம்.

துந்துகாரியை ஏழு கணுக்கள் உள்ள ஒரு மூங்கிலில் ஆவஹனம் செய்து


பாராயண விதிப்படி ஸப்தாஹமாக ஏழுநாள்கள் ஸ்ரீமத் பாகவதத்தைப்
பாராயணம் செய்து அவனைக் கேட்கச் செய்தால், உன் சகோதரனுக்கு நற்கதி
கிடைக்கும்.

என்று அருளிவிட்டு தன் கதியைத் தொடர்ந்தார் ஆதித்யன். மிகவும்


மகிழ்ந்துபோன கோகர்ணன், பெரிய பந்தல் போட்டு, வெகு விமரிசையாக
ஸ்ரீமத்பாகவத பாராயணம் செய்தார். ஊர் முழுவதும் கூடியிருந்து
கதாம்ருதத்தை அனுபவித்தனர்.

முதல் நாள் பாராயணம் முடிந்ததும், அங்கு நடப்பட்டிருந்த ஏழு கணுக்கள்


உள்ள மூங்கிலில் ஒரு கணு வெடித்தது. இரண்டாம் நாள் முடிந்ததும்
இரண்டாவது கணு, இப்படியாக ஏழு நாட்களில் ஏழு கணுக்களும் வெடித்து,
ஒரு ஸுந்தர புருஷன் அனைவரும் பார்க்கும்படி அதிலிருந்து தோன்றினான்.
ஒரு திவ்ய விமானமும் வந்தது.

அவ்வளவு பேரும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த


திவ்ய புருஷன் கோகர்ணனை வணங்கினான்.

யார் நீங்கள்?

'தம்பீ, என்னை தெரியவில்லையா? நான்தான் துந்துகாரி. நான் ராக்ஷஸ


அவஸ்தையிலிருந்து தான் விடுதலை கேட்டேன். ஆனால், நீயோ எனக்கு
பரமபதத்திற்கே வழி செய்துவிட்டாய். உனக்கு என் நமஸ்காரங்கள்' என்றான்.

கோகர்ணனுக்கு உடனே ஒரு சந்தேகம் எழுந்தது. திவ்ய விமானத்தில்


துந்துகாரியை அழைத்துப்போக வந்த பார்ஷதர்களைப் பார்த்துக் கேட்டார்.
என் சகோதரன் துந்துகாரிக்கு வைகுண்டம் கிடைத்தது மிகப் பெரிய
சந்தோஷம். ஆனால் ஒரு சந்தேகம்.

கேளுங்கள் கோகர்ணரே! இங்கு நான் உள்பட இவ்வளவு பேரும் ஸ்ரீமத்


பாகவதத்தை ஏழு நாட்களும் அனுபவித்தோமே. ஆனால் இவருக்கு மட்டும்
விமானம் வந்திருக்கிறதே. எங்களுக்கு பரமபதம் எப்போது கிட்டும்?
பார்ஷதர் முறுவலித்து விட்டுச் சொன்னார்.

21
துந்துகாரி இதை விட்டால் தனக்கு கதியில்லை என்று அல்லும் பகலும்
ஏக்கத்தோடு ஒரு ஸ்லோகம்கூட விடாமல் ச்ரத்தையாகக் கேட்டான்.
அதனால் உடனே மோக்ஷம் கிடைத்துவிட்டது

மற்றவர்கள் அப்படி ச்ரத்தையாகக் கேட்கவில்லை. ஆனாலும், மறுபடி மறுபடி


ஸ்ரீமத் பாகவத கதா ச்ரவணம் செய்து கொண்டிருக்கலாம். அவரவர்களின்
அந்திம ஸ்திதியில் நிச்சயம் வைகுண்டம் உண்டு. நீங்கள் விரும்பினால்,
மறுபடி ஒரு ஸப்தாஹம் செய்யலாம் என்றார்.

வாய்ப்பை நழுவவிட மனமில்லாத கோகர்ணன் மறுபடி ஒரு ஸப்தாஹம்


செய்தார். இம்முறை பார்ஷதர் கூறியதுபோல் சிந்தனை வேறின்றி பகவத்
சரணங்களே கதி என்று கொண்டு ஏகாக்ர சித்தத்தோடு ஸப்தாஹம் செய்தார்.
ஏழாவது நாள் திவ்ய விமானம் வந்தது.

இப்போது கோகர்ண‌ னை அழைத்துச் செல்ல திவ்ய விமானத்தில் ஸ்ரீமன்


நாராயணனே வந்தார். மகிழ்ந்துபோய் கோகர்ணனை ஆலிங்கனம்
செய்துகொண்டார். உடனே கோகர்ணனுக்கும் பார்ஷதர்களைப்போலவே
திவ்யரூபம் ஏற்பட்டது.

ஸ்ரீ ராமபிரான் பரமபதம் ஏகும்போது வைகுந்தம் வர விரும்புபவர்கள்


அனைவரும் என்னோடு சேர்ந்து ஸரயுவில் இறங்குங்கள் என்று அறைகூவல்
விடுத்து, தன்னோடு நதியில் இறங்கிய அனைவரையும் பரமபதம் அழைத்துச்
சென்றார்.

இங்கோ கோகர்ணன் பகவான் அல்ல. இருப்பினும், ஸ்ரீ ராமனைப் போலவே,


பரமபதம் விழைபவர்கள் அனைவரும் என்னோடு வரலாம் என அறைகூவல்
விடுத்தார். ஊர் மக்கள் அனைவரும் ஏற, விமானம் அனைவர்க்கும்
இடமளித்தது. கோகர்ணன் தன்னோடு வந்த அனைவரையும்
அழைத்துக்கொண்டு வைகுந்தம் ஏகினார்.

*ஸ்ரீ மத்பாகவதம் - 13*-*அரங்கேற்றம்*

நைமிஷாரண்யத்தில் சௌனகாதி ரிஷிகள் அனைவரும் சேர்ந்து ஸத்ர யாகம்


செய்தனர். ஆயிரம் வருஷங்களுக்கு நடைபெறும் அந்த யாகத்தில் விராம
காலத்தில் அதாவது, யாகம் நடைபெறாத நேரங்களில் வண் ீ பொழுது
போக்குவதோ, உறங்கவோ கூடாது. அதனால், அந்த நேரங்களில் புராணக்
கதைகளைக் கேட்பதும், ஸத்சங்கமுமாக நடத்துவது வழக்கம். அந்த
சமயத்தில் ஸூத பௌராணிகர் அவ்விடத்திற்கு வந்தார். அவரைக் கண்டதும்
ரிஷிகளின் முகங்கள் அன்றலர்ந்த தாமரையாய் மலர்ந்தன.

அவரை வரவேற்று ஆசனம் கொடுத்து அவரிடம் சொன்னார்கள், உங்கள்


தந்தையான ரோமஹர்ஷணரின் ஸ்வரூபமாகவே நீங்கள் சரியான சமயத்தில்
இங்கு வந்திருக்கிறீர்கள்.

புராணங்கள் அனைத்தையும் வியாஸர் ரோமஹர்ஷணரிடம் ஒப்படைத்தார்


என்பதை முன்னமே பார்த்தோம். புராணங்களைச் சொல்லும்போது
பாவங்களில் மூழ்கி, தன்னை மறந்து சொல்வார். அப்போது அடிக்கடி

22
மயிர்க்கூச்சம் ஏற்பட்டு பகவானின் லீலைகளில் மூழ்கி மூர்ச்சையடைவார்
என்பதனாலேயே அவருக்கு ரோமஹர்ஷணர் என்பது காரணப்பெயராயிற்று.
அவரது மகனான, ஸூதரும் தந்தையைப் போலவே பாவபூர்ணராக இருந்து
கதை சொல்வதால் அவருக்கும் தந்தையின் பெயரான ரோமஹர்ஷணர்
என்பதே வழக்காயிற்று.

ரிஷிகள் சொன்னார்கள், கலியுகம் துவங்கிவிட்டது. கலியுகத்தில் மக்கள் படும்


கொடுமைகளை நினைத்தாலே ஹ்ருதயம் கலங்குகிறது. அந்த ஜனங்களுக்கு
நற்கதியடைய சரியான உபாயம் என்ன?

அவர்களின் கேள்வியால் மகிழ்ந்த ஸூத பௌராணிகர் சொல்ல ஆரம்பித்தார்.


கலியுகத்தில் மக்கள் உய்ய ஒரே வழி ஹரிகதா ச்ரவணமாகும். ஹரியின்
அனந்தமான லீலைகளை ஒருவன் கேட்பதாலேயே அவனுக்கு முக்தியின்
வாசல் திறந்துவிடுகின்றது. கலியுகத்திற்கேற்ற புராணமான ஸ்ரீமத்
பாகவதத்தை சொல்கிறேன்.

ஸ்ரீ மத்பாகவத புராணமா? அது எப்போது யாரால் இயற்றப்பட்டது? நீங்கள்


எப்படி அதை அறிந்தீர்கள்?

வியாஸ பகவான் இயற்றிய புராணம். அவரது புத்ரரான ஸ்ரீ சுக மஹரிஷி


அதை பாண்டு வம்சத்து அரசனான பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் ஏழு
நாள்கள் சொன்னார். அப்போது பல மஹரிஷிகள் உபச்ரோதாவாக இருந்து
கேட்டனர். நானும் கேட்டேன். ஸ்ரீ சுகப்ரும்மம் சொன்னதை என் அறிவிற்கு
எட்டியவரை, நான் புரிந்து கொண்ட வரை, நினைவில் நின்றவரையில்
எடுத்துச் சொல்ல முயற்சி செய்கிறேன்..

ஸ்ரீ சுகப்ரும்மம் சொன்னாரா? ஏழு நாள்களா? அவர் பரிவ்ராஜகராயிற்றே.


பசுமாட்டின் மடியிலிருந்து பால் பாத்திரத்தில் விழும் நேரம் கூட ஓரிடத்திலும்
நிற்கமாட்டாரே. அவர் ஏழுநாள்கள் ஓரிடத்தில் எப்படி தங்கினார்? மேலும்
பரீக்ஷித் இளைஞன், ஸார்வபௌமன், அவன் எதற்காக இவ்விளம் வயதில்
கங்கைக்கரைக்கு வந்தான்? சற்று விளக்கமாகச் சொல்லுங்கள் என்றனர்
ரிஷிகள்.

ஸூத பௌராணிகர், முதலில் வியாஸரையும், பிறகு சுக மஹரிஷியையும்


த்யானம் செய்து துதித்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.
*ஸ்ரீமத் பாகவதம் - 14*

கம கல்பதரோர் கலிதம் பலம்


சுகமுகாத் அம்ருத த்ரவ ஸம்யுதம்|
பிபத பாகவதம் ரஸமாலயம்
முஹு: அஹோ ரஸிகா: புவி பாவுகா:||

இது ஸ்ரீ மத் பாகவத த்யான ஸ்லோகங்களுள் ஒன்று. இதன் மொழிபெயர்ப்பாக


ஊத்துக்காடு வேங்கட கவி எழுதிய கீ ர்த்தனம்.

ராகம் : கௌரிமனோஹரி
தாளம் : ஆதி

23
பல்லவி
பழமோ பழமோ பழம் பாகவத பழமோ பழமோபழம்
பவபயம் எனும் ஒரு இருளைக் கெடுத்த
ஸுக முனியெனும் கிளி கொத்திக் கொடுத்த || பழமோ ||

அனுபல்லவி
அழகான மா மறைத் தருமேலே அது
ஆருக்கும் அரிதான தன்மையாலே
முழு மோனப் பொருளுக்கு இவை போலே

முன் செய்த தீவினை எனும் நாரில்லாது


மூண்டிடும் பாவமெனும் வண்டு துளைக்காத || பழமோ ||
சரணம்

தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது


தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது

ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது


அதற்கென்ன மற்றொரு காலம் ஆகட்டும்
அப்போது பார்ப்போம் என்றால் எப்போதும் கிடைக்காத || பழமோ ||

*ஸ்ரீ மத் பாகவதம் - 15*-*வியாஸ நாரத ஸம்வாதம் - 1*

ஸூத பௌராணிகர், நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்


தேவம்
ீ ஸர்ஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயமுதீரயேத் |

என்று நர நாராயணர்களாக அவதரித்த பகவான், வியாஸர் ஸரஸ்வதி தேவி


அனைவரையும் துதித்த பின்னர், பாகவதம் உருவான நிகழ்வை விவரிக்கிறார்.

ஸர்ஸ்வதி நதி‌
தீரத்தில் தனது ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார் வியாஸர்.
ஒன்றேகால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்டு விநாயகரின் உதவியோடு
மஹாபாரதத்தை முடித்திருந்தார். பெரிய மனத்திருப்தி ஏற்பட்டிருந்தது.

இனி கலியுகம் வரப்போகிறது. அந்த மக்களை நல்வழிப்படுத்தி பகவானிடம்


சேர்க்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட நிம்மதி. பதினேழு
புராணங்கள், அத்தனை விதமான தர்மங்களையும், கடைப்பிடிக்கும்
முறைகளையும் உதாரணங்களோடும், கதைகளோடும் விளக்கி மஹாபாரதம்
செய்தாயிற்று. அது ஒன்றைப் படித்தாலே போதும். அனைவருக்கும்
நன்னெறியில் ஒழுகும் விதம் தெரிந்துவிடும். அநாதியான வேதம். எப்படியோ
தலையைப் பிய்த்துக்கொண்டு வகைப்படுத்தியாயிற்று.

கர்ம மார்கத்திற்காக நால்வகை வேதங்கள், ஞான மார்கத்திற்காக


நூற்றியெட்டு உபநிஷத்துக்கள் எல்லாம் முடித்தாயிற்று.

24
இனி கலியுகத்தில் வரும் மாந்தர்களுக்கு ஒரு கவலையும் இல்லை
என்றெல்லாம் மகிழ்ந்தவருக்கு, தான் கொடுத்த கிரந்தங்களை மக்கள் எப்படிப்
பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க ஆவல் ஏற்பட்டது.

கண்களை மூடி சற்று பவிஷ்யத்தைப் பார்த்தவர் இடிந்து போனார்.


வேதங்களையும், புராணங்களையும் சீந்துவாரில்லை. எங்கோ ஒரு சிலரைத்
தவிர வேறெவரும் அவற்றைச் சட்டை செய்யவில்லை. மிகவும் சுவையான,
எக்காலத்திற்கும், அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு தர்மங்களை எடுத்துச்
சொல்லும் மஹாபாரதமும் வண்
ீ விவாதங்களுக்கும் பட்டிமன்றம்
நடத்துவதற்குமே பயன்பட்டது. மக்கள் எப்போதும் எதையோ தேடி அலைந்து
கொண்டேயிருந்தனர்.

தலை சுற்றியது வியாசருக்கு. பகவத் ஸ்மரணையின்றி ஒரு பெரும் மக்கள்


கூட்டம். எப்படி கரையேறுவார்கள்? தன் உழைப்பு அவ்வளவும் வணாகி

விட்டதாய் உணர்ந்தார்.

தளர்ந்த மனநிலையோடு தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து


விட்டார்.

மஹான்களின் கவலை எப்போதும் உலகிலுள்ளோரின் நன்மையைப்


பற்றியதே. அவர்களுக்கு அவ்வாறு ஏற்படும் கவலை ஒரு பெருத்த
நன்மையில் முடியும். ஸாதுக்களுக்கு கவலை ஏற்படுமாயின், அவ்விடத்தில்
பகவான் உடனே ஆவிர்பவிப்பான். அல்லது தகுந்த குருவை உடனே
அனுப்பிவைப்பான். நாரதரின் கவலையைப் போக்க ஸனத் குமாரர் வந்ததை
மாஹாத்மியத்தில் பார்த்தோம்.
வியாஸரின் கவலையைப் போக்க நாரதரே அவ்விடம் வந்தார். அவரே ஸ்ரீமத்
பாகவதத்திற்கு மூலகாரணமும் ஆவார்.

வியாஸர், நாரதர் வருவதைக் கண்டதும் வரவேற்று, அவரை உரிய


மரியாதைகளுடன் பூஜை செய்தார்.

வியாஸரைப் பார்த்து நாரதர் கேட்டார்,


நீங்கள் நலமோடு இருக்கிறீரா?
உடல்நலக்குறைவா? அல்லது
மனதில் ஏதாவது கவலையிருக்கிறதா? உம்மைப் போன்ற மஹாத்மாக்களின்
கவலை லோகோத்தாரணத்திற்கு வழியாயிற்றே...
வியாஸர் சொன்னார் :

நாரதரே! நீங்கள் சூரியனைப்போல் அனைத்தையும் அறிவர்.


ீ காற்றைப் போல்
எல்லா இடங்களிலும் நுழைந்து ஸஞ்சாரம் செய்யக்கூடியவர். தங்களது
உபாசனா தெய்வமோ பரமபுருஷனேயாவார்.

தங்களைப் போன்ற ஸாதுக்களிடம் எதையாவது மறைக்க முடியுமா? நீங்கள்


ஹ்ருதயம் நுழைந்து அனுக்ரஹம் செய்பவராயிற்றே. என் கவலை
தங்களுக்குத் தெரியாதா? அது நீங்குவதற்கு உபாயமும் தாங்களே
சொல்லுங்கள்.

25
நீங்கள் ஒருவரும் சாதிக்கமுடியாத பெரிய காரியத்தை சாதித்திருக்கிறீர்கள்.
வேதத்தைப் பகுப்பதென்ன எளிதா?
எவ்வளவு புராணங்கள் செய்திருக்கிறீர்! மஹாபாரதம் போல் உண்டா?
ஆனாலும்...

என்ன ஆனாலும்?

பகவானின் பெருமைகளையும், குணங்களையும், நாமங்களையும்


வலியுறுத்துவது போல் ஒரு கிரந்தம் செய்யவில்லை. அதுவே
கலியுகத்திற்குப் பயன்படும். வியாசருக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன ஸ்வாமி சொல்கிறீர்? வேதமே பகவானின் புகழைத்தானே பாடுகிறது?


அத்தனை புராணங்களும் பகவானின் மகிமைகளைத்தானே பறை
சாற்றுகின்றன?

மஹாபாரதத்தில் பகவானின் லீலைகள் இல்லையா?

இருக்கிறது ரிஷியே! ஆனால், ப்ரத்யேகமாக பகவன் நாமத்தையும்,


குணங்களையும் மட்டும் வலியுறுத்துவதாக இல்லை. வேதத்தில் பகவானுக்கு
ஆயிரம் தலைகள், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் என்றெல்லாம்
வர்ணிக்கிறீர். உண்மைதான் என்றாலும், லலிதமாக ஆராதிப்பதாக இல்லை.
ஒரு குழந்தை பிறந்தால் அதைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவார்களா?
அது இவ்வளவு எடை, இத்தனை எலும்புகள், என்றெல்லாம் கொஞ்சுவார்களா?
லலிதமாக, அத்தனை பேர் வாயிலும் எளிதாக நுழையும் வண்ணம், சித்ர
பதங்களைப் போட்டு ஒரு புராணம் செய்யுங்கள். அது பகவன் நாம மகிமையை
வலியுறுத்தவேண்டும். அதைப் படித்ததுமே ஹ்ருதயத்தில் பக்தியைத்
தூண்டவேண்டும்.

முக்கியமாக, தப்பும் தவறுமாகப் படித்தாலும், விபரீத பலன்களைத் தராமல்,


நற்பலன்களையே கொடுக்க வேண்டும்.

படிக்கத் தெரியாவிட்டாலும் கேட்டலே பகவத் சரண சம்மந்தத்தைக் கொடுக்க


வேண்டும். அந்த கிரந்தத்தின் ஒரே ஒரு ஸ்லோகத்தின் பாதி அடியை
யாராவது எதேச்சையாகக் கேட்டாலும் முக்தி கிட்டவேண்டும்.

நாரதர் நம்மீ துள்ள கருணையினால் அடுக்கிக் கொண்டே போக, வியாஸர்


திருதிருவென்று விழித்தார்.

*ஸ்ரீ மத் பாகவதம் - 16*-*வியாஸ நாரத ஸம்வாதம் - 2*

பக்தியைத் தூண்டும் கிரந்தமா? ஒருவர் மனதில் பக்தியை எப்படித் தூண்ட


முடியும்? புரியும்படி சொல்லுங்கள் முனி ச்ரேஷ்டரே. குழப்பத்தோடு
வினவினார் வியாஸர்.

நாரதர் சொன்னார் :
காமம், கோபம், பயம், துக்கம்,மகிழ்ச்சி என்பதுபோல் பக்தியும் உணர்வு தானே.
ஒரு கல்யாண வட்டிற்குப்
ீ போனால் அங்கு நிலவும் மகிழ்ச்சி நம்மையும்

26
தொற்றிக் கொள்கிறது. ஒரு துக்கம் நடந்த வட்டிற்குப்
ீ போனால் நம்மையும்
சோகம் பீடிக்கிறது. அதுபோல் பக்தி நிரம்பியவர்களைப் பார்த்தாலோ,
அவர்களது சங்கம் கிடைத்தாலோ, அவர்கள் பக்தி செய்த விதத்தைக்
கேட்டாலோ ஹ்ருதயத்தில் பக்தி தானே உண்டாகிறது.

உடனே வியாசர் கேட்டார், சரி! உங்களுக்கெப்படி பக்தி வந்தது? அதைக்


கேட்டால் எனக்கு ஓரளவுக்காவது புரிகிறதா என்று பார்க்கிறேன்.

அழகிய முறுவலைச் சிந்திவிட்டு பேசத் துவங்கினார் நாரதர்.

நான் சென்ற பிறவியில், ஒரு சிறிய கிராமத்தில் மிகவும் எளிய குடும்பத்தில்


பிறந்தேன். என் தாயார் இளம் விதவை. கிராமத்திலுள்ள வடுகளில்ீ வட்டு

வேலை செய்து ஜீவனம் நடத்தி வந்தார். மிகவும் நல்லவர். ஸாது. ஒருசமயம்
எங்கள் ஊருக்கு சில ஸாதுக்கள் வந்தனர். எங்கள் ஊர்ப் பெரியவர்கள்
அவர்களை வரவேற்று ஊர் எல்லையில் இருக்கும் சத்திரத்தில் தங்க
வைத்தனர். பின்னர் பஞ்சாயத்தில் பேசி, எங்கள் ஊர் நதி தீரமாக இருந்ததால்
சாதுர்மாஸ்ய விரதத்தை அங்கேயே மேற்கொள்ளும்படி வேண்டினர்.

ஸாதுக்களும் ஊர் மக்களின் அன்பை ஏற்று எங்கள் ஊரிலேயே நான்கு


மாதங்கள் தங்க ஒப்புக்கொண்டனர்.

அப்போது என் தாயார், வந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது என்று


தவித்துக்கொண்டு, கிராமத் தலைவர்களிடம் தான் தினமும் சென்று அந்த
ஸாதுக்கள் தங்கும் சத்திரத்தை சுத்தம் செய்து மெழுகி, கோலம் போட்டு,
விளக்கேற்றும் ஸேவையை செய்ய விரும்புவதாக வேண்டினாள்.

அவளது நல்ல சுபாவத்தை கருத்தில் கொண்டு, அந்த கைங்கர்யம் அவளுக்கே


வழங்கப்பட்டது. அவ்வளவுதான்! என் தாயின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
வட்டுக்கு
ீ வந்தவளுக்கு இருப்பே கொள்ளவில்லை. உறங்கவும் இல்லை.
எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்து மூன்று மணியானதும் எழுந்து
ஓடினாள். ஐந்தே வயதான என்னை குடிசையில் தனியே உறங்கும்படி விட்டுச்
செல்ல தயங்கினாள். எனவே, என்னையும் எழுப்பி அழைத்துக்கொண்டு
போனாள்.

ஸாதுக்கள் ஆடி‌ மாத அமாவாசை முதல் மார்கழி அமாவாசை வரை


சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள். பொதுவாக பரிவ்ராஜக
ஸன்யாஸிகள் மூன்று நாள்களுக்கு மேல் ஓரிடத்தில் தங்கக் கூடாதென்பது
விதி. ஆனால் சாதுர்மாஸ்ய விரத சமயத்தில் மட்டும் நான்கு மாதங்கள்
ஓரிடத்தில் இருப்பார்கள். அது மழைக்காலம் என்பதால் ஸன்யாஸிகள்
சஞ்சாரம் செய்வதில் சிரமங்கள் உண்டு. மழையில் அலைந்தால் உடல்நிலை
பாதிக்கலாம். உடல்நிலை பாதித்தால் சிகிச்சை செய்து கொள்ளக்கூடாது.

எப்போதும் அலைந்து கொண்டிருப்பதால், நான்கு மாதங்கள் ஓரிடத்தில் தங்கி


தவம் செய்து ஆன்ம சக்தியைப் பெருக்கிக் கொள்வார்கள்.

ஜீவ ஹிம்ஸை என்பது அறவே கூடாது. மழைக்காலத்தில் சிற்சிறு


பூச்சிகளும், புழுக்களும் மண்ணில் அலையும். நடப்பவர்கள் கால்களில் அவை
மிதிபட்டால் ஜீவஹிம்ஸையாகிவிடும்.

27
இவ்வாறு பல காரணங்களை உத்தேசித்து சாதுக்கள் ஒரே இடத்தில்நான்கு
மாதங்கள் தங்குவார்கள்.

என் தாய் என்னையும் இழுத்துக்கொண்டு சாதுக்கள் வசிக்கும் சத்திரத்திற்கு


ஓடினாள்.

*ஸ்ரீமத் பாகவதம் - 17 வியாஸ நாரத ஸம்வாதம் - 3*

நாரதர் தன் கதையைத் தானே சொல்லலானார் :

அம்மா ஆசை ஆசையாக ஸாது சேவை செய்தாள். அவர்கள் அதிகாலை 3


மணிக்கு ஏழு முறை சத்தமாக ஹரி ஹரி என்று உரக்கக் கூறிக்கொண்டு
எழுவார்கள். பின்னர் நாமங்களைச் சொல்லிக்கொண்டே ஸ்நானம் செய்ய
நதிக்கு செல்வார்கள். தூக்கக் கலக்கத்தில் அம்மா தரதரவென்று என்னை
இழுத்துக்கொண்டு போனாள்.

அங்கு சென்றதும் ஒரு மூலையாகப் பார்த்து மீ ண்டும் உறங்க ஆரம்பித்தேன்.

அம்மா வந்து தட்டி எழுப்பி, 'ஸாதுக்கள் ஸந்நிதியில் தூங்காதே, எழுந்து


உட்கார்'
என்று உட்காரவைத்தாள். மறுநாள் அவர்கள் செல்லும்போது, சும்மா உட்கார
முடியாமல், ஏதோ குச்சிகளை வைத்துக்கொண்டு விளையாட ஆரம்பித்தேன்.

அம்மா வந்து, 'ஸாதுக்கள் வரும் வழியில் இப்படிச் செய்யாதே. எழுந்து


கையை கூப்பிக்கொண்டு நில்' என்று நிற்கவைத்து விட்டுப்போனாள். மறுநாள்
காலை, அவர்களைத் தொந்தரவு செய்யாமல் பின்னாலேயே போய் வா என்று
அனுப்பினாள். மறுநாள் கேட்டாள்,

அவங்க பின்னால் போனியே, என்ன செய்தாங்க? அவங்க நதியில்


குளிச்சாங்கம்மா. ஏதேதோ மந்திரம் சொல்லிகிட்டே இருந்தாங்க. சரி, அவங்க
பின்னால் போய் அவங்க குளிச்ச தண்ணி எங்க வருதோ அந்த இடத்தில்
நின்னு நீயும் ஒரு முழுக்கு போடு. நதி ஒன்னும் ஆழமில்லை என்றாள்.
அதையும் செய்தேன். இப்படியாக தினமும் ஸாதுக்கள் பின்னால் போவதும்
வருவதுமாக என் நாள்கள் கழிந்தன.
அம்மா, &என்னோடு வந்து என்ன செய்யப்போற? இங்கேயே இரு' என்று
என்னை விட்டுவிட்டு மற்ற வடுகளுக்கெல்லாம்
ீ வேலை செய்யப்போவாள்.
வரும்போது அவர்கள் கொடுக்கும் பழையசோற்றைக் கொண்டு வந்து
எனக்கும் கொடுத்து தானும் உண்பாள். மீ ண்டும் மாலை ஸாதுக்கள்
அனுஷ்டானம் செய்வார்கள். அவர்கள் பின்னாலேயே போய் நானும்
குளிப்பேன். ஏதேதோ பாடுவார்கள். தூரத்தில் அமர்ந்து நானும் அம்மாவும்
கேட்போம். ஒன்றும் புரியாவிட்டாலும் கேட்க இனிமையாய் இருக்கும். அம்மா
மாலையும் அங்கே சுத்தம் செய்து கோலம் போட்டுவிட்டு இரவு வடு ீ
திரும்புவோம்.

28
ஒரு நாள் காலையில் போன அம்மா, மதியம் மூன்று மணியாகியும்
வரவில்லை. ஐந்து வயதுச் சிறுவனான என்னால் பசி தாங்க முடியவில்லை.
ஓ வென்று அழ ஆரம்பித்தேன்.

என் அழுகைச் சத்தம் கேட்டு ஒரு ஸாது அருகில் வந்தார். அவர்கள் மேல்
படக்கூடாது, மரியாதையாய் இருக்கவேண்டும் என்று அம்மா
சொல்லியிருந்ததால் சட்டென்று எழுந்து நின்றேன். அவர் என் கன்னத்தைப்
பிடித்து, கண்ண ீரைத் துடைத்து மனம் மயக்கும் புன்முறுவலோடு என்னைப்
பார்த்து 'ஏம்பா அழற?'பசிக்குது.அம்மாவைக் காணல.நான் ஏதாவது குடுத்தா
சாப்பிடறியா?

சரியென்று தலையசைக்க, அவர் உள்ளிருந்து ஒரு மந்தாரை இலையில்


கொஞ்சம் உணவைக் கொண்டு வந்து கொடுத்தார்.

ஊர்மக்கள் ஸாதுக்களுக்கென்று பார்த்துப் பார்த்து விசேஷமாகச் சமைத்த


உணவு. அவர்கள் எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலந்து ருசி பார்க்காமல், ஏழு
கவளம் உண்டபின், அப்படியே ப்ரசாதமாகக் கொண்டு போய் விடுவார்கள்.
அன்று இன்னும் வந்து எடுத்துப்போகவில்லை போலும்.

அந்த உணவு மிகவும் சுவையாக இருந்தது. விசேஷமாய்ச் சமைத்ததால்


அல்ல. சாதுக்களின் ப்ரசாதம் என்பதால். அது உச்சிஷ்டம் என்றோ, அதன்
மகிமையோ எனக்கு அப்போது தெரியாது. பசிக்கு உணவென்று நினைத்தே
உண்டேன். அவ்வளவுதான்!

அதன் பின் என் நிலைமை மாறிவிட்டது. எனக்கு விளையாட்டில் ஆர்வம்


போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தால் உள்ளிருந்து ஹரி ஹரி
என்ற ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனந்தமாய் இருந்தது. வெகு நேரம்
வரை மூடிய கண்களோடு அசையாமல் அமர்ந்து உள்ளிருந்து எழும் நாதத்தை
அனுபவிக்க ஆரம்பித்தேன்.

ஸாதுக்களின் உச்சிஷ்டத்தால் எவ்வளவு நன்மை நேரும் என்று கணிக்கவும்


முடியுமோ?

காதும் கேளாமல் வாயும் பேசாமல் இருந்த குழந்தை நாம ஸங்கீ ர்த்தனம்


செய்யத் துவங்கியது நமது ஸ்ரீ போதேந்திராளின் உச்சிஷ்டத்தால் அன்றோ?

29
*ஸ்ரீ மத் பாகவதம் - 18*-*வியாஸ நாரத ஸம்வாதம் - 4*

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் தாயே முதல் குருவாகிறாள். தன் குழந்தை


நிம்மதியோடு வாழவேண்டும் என்று ஆசைப்படாத தாயே இல்லை. குழந்தை
கர்பத்திலிருக்கும் போதே அவளது ப்ரார்த்தனைகள் துவங்கி விடுகின்றன.
கைக்குழந்தை என்றும் பாராமல், மாஹாத்மாக்களின் சரணங்களிலும்,
கோவில்களில் ஸந்நிதிகளிலும், குழந்தையைக் கிடத்தி தன் குழந்தையின்
க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்யாத அம்மாக்கள் எங்கேயாவது உண்டா?

இங்கு நாரதரின் பூர்வாசிரமத்தில் அவரது தாயே ஸாதுசங்கத்தை அறிமுகம்


செய்து வைக்கிறாள்.

ஸாது கொடுத்த உச்சிஷ்டத்தை உண்ட குழந்தைக்கு, உள்ளத்தில்


எம்முயற்சியுமின்றி தானாகவே ஹரிநாமம் கேட்டது.

கண்ணை மூடித் திறப்பதற்குள் நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. சாதுர்மாஸ்யம்


முடிந்து ஸாதுக்கள் கிளம்பினார்கள். போகும்போது ஒரு ஸாது குழந்தையை
அழைத்து அதன் வலதுகாதில் ஹரி நாமத்தை உபதேசம் செய்துவிட்டுப்
போனார்.

ஸாதுக்களைப் போல் பொல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. ஒரே


காட்சியில் அன்பினால் ஹ்ருதயத்தில் நுழைந்து விடுவார்கள். இனி
அவர்களைப் பிரிய முடியாது என்னும்படியாக நம்மீ து அன்பைக்
கொட்டிவிட்டு அடுத்தவர்க்கு அனுக்ரஹம் செய்யக் கிளம்பிவிடுவார்கள்.
அவ்வளவுதான் நமது நிலைமை. அமர்ந்தாலும், எழுந்தாலும், நின்றாலும்,
நடந்தாலும், பசித்தாலும், புசித்தாலும் உறங்கினாலும், கனவிலும்கூட
அவர்கள் நினைவே ஆட்கொண்டுவிடும். ஒரு கட்டத்தில் நாம் லௌகீ கமாக
உழன்று கொண்டிருந்ததே தேவலாம் என்னும் அளவிற்கு அவர்களது பிரிவு
வாட்டும். கணவன் மனைவி, தாய், பிள்ளை, காதலன், காதலி இவர்களது
அன்பைக் காட்டிலும் பலமடங்கு சக்தி வாய்ந்தது குருவிற்கும்
சிஷ்யனுக்குமிடையிலான அன்பு.

நம்மைப் பிரிவதன் மூலம், நமது முயற்சியின்றியே நமக்கு குருவின் தியானம்


சித்தித்துவிடும்.

குழந்தையால் அந்த ஸாதுக்களைப் பிரிய முடியவில்லை. அவர்களோடு


போக விழைந்தாலும், ஆதரவற்ற அன்னையை விட்டுப்போக முடியவில்லை.
மேலும் அவனோ ஐந்து வயதுக் குழந்தை.

ஒரு நாள் விதி வசத்தால் தாய் பாம்பு கடித்து மாண்டுபோனாள். ஸாதுசேவை


செய்தும் தாய் இறந்துவிட்டாளே என்று தோன்றவில்லை. மாறாக,
இறைவனை அடையும் வழியில் தடையாக இருந்த ஒரே பந்தத்தையும்
இறைவன் விலக்கினானே என்று தோன்றியது குழந்தைக்கு.

பக்தி, ஞானம், வைராக்யம் இவையெல்லாம் ஒரு உண்மையான


மஹாத்மாவின் ஸந்நிதியில் சும்மா சுற்றிக்கொண்டிருந்தாலே
கிடைத்துவிடுகிறது.

30
இனி தன்னைக் கட்டுப்படுத்த யாருமில்லையென்று ஸாதுக்கள் போன
திக்கிலேயே கிளம்பினான். வழி நடந்து கங்கா தீரத்தை அடைந்தான். மனம்
தியானத்தில் இயல்பாக மூழ்கித் திளைத்தது. கண்ணை மூடிக்கொண்டு
அமர்ந்தால், தானாகவே ஹ்ருதயத்தில் ஒரு ஒளி தோன்றியது. குழலோசை
கேட்டது. மின்னல்போல் அவ்வப்போது திவ்யக் காட்சிகள் தென்பட்டன.

ஒருநாள் அசரீரி கேட்டது. இடிபோன்ற குரலில் பகவான் குழந்தையிடம்


பேசினான். குழந்தாய்! உன்னைக் கண்டு மகிழ்ந்தேன். என் அனுபவத்தில் நான்
யாரோடும் இவ்வளவு சீக்கிரமாக பேசியதுமில்லை. தரிசனம் கொடுத்ததும்
இல்லை. நீ அறிந்தோ அறியாமலோ ஸாதுக்களின் கடாக்ஷத்திற்குப்
பாத்திரமாகிவிட்டாய். குறுக்கு வழியில் வெகு சீக்கிரத்தில் என்
அனுக்ரஹத்தை அடைந்துவிட்டாய். எனினும் இப்பிறவியில் என்
தரிசனத்தைக் காணும் பக்குவத்தை நீ அடையவில்லை. எனவே, உனது
அடுத்த பிறவியில் என் தரிசனம் உனக்கு கிட்டும். குரல் வந்த திசையில்
நமஸ்காரம் செய்த குழந்தை சிரித்தான்.

இப்போது தரிசனம் இல்லை என்கிறேன் சிரிக்கிறாயே. இருக்கட்டுமே.


அதனால் என்ன? இப்போதும் நீங்கள் என்னோடு பேசியதன் காரணம் என்ன
தெரியுமா? அன்றொருநாள் எனக்கு அனுக்ரஹம் செய்தார்களே அந்த
ஸாதுக்கள், அந்த ஊரில் ஒரு குழந்தை நம்மோடு ஓடி ஓடி வந்ததே. இப்போது
எப்படி இருக்கிறானோ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார்கள்.

நீங்கள் அவர்கள் ஹ்ருதயத்தில் குடி கொண்டிருப்பதால், அவர்கள் என்னை


நினைத்ததும் ஓடி வந்து என்னோடு பேசுகிறீர்கள்.

அடுத்த பிறவி என்று நீங்களே வந்து சொல்கிறீர்களே.. அதுவே பாக்யம்தானே.


என்னிடம் வந்து அதைச் சொல்ல அவசியம் என்ன இருக்கிறது? என் மீ தான
அந்த மஹாத்மாக்களின் கருணையே உம்மை என்னோடு பேசத் தூண்டிற்று.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் கொடுங்கள். அது உங்கள்
விருப்பம். எனக்கு உங்கள்மீ து எப்போதும் பக்தி இருக்கவேண்டும் என்று
அனுக்ரஹம் செய்யுங்கள் என்று சொல்லி மீ ண்டும் நமஸ்காரம் செய்தான்.

மிகவும் மகிழ்ந்த பகவான் அப்படியே என்று அசரீரியாகச் சொன்னார். கேட்டுக்


கொண்டிருந்த வியாஸர், ஸ்வாமி, இப்போது அடுத்த பிறவியா? என்றார்.

ஆம். அதன் பிறகு அந்தப் பிறவியை ஹரி தியானத்திலேயே கழித்தேன்.

பிறகு ப்ரும்மாவின் மானஸ புத்திரர்களுள் ஒருவனாக இந்தப் பிறவி


வாய்த்தது.. இப்போது பகவான் தரிசனம் கொடுத்தாரா?

அதை ஏன் கேட்கிறீர்கள் வியாஸரே..

சென்ற பிறவியில் தெரியாத்தனமாக தியானம் செய்துவிட்டேன்.


மின்னல்போல் அவ்வப்போது ஒளியாய்த் தோன்றி, அசரீரியாகப் பேசினார்.
இப்பிறவியில் நான் தியானமோ, யோகமோ, வேறெந்த ஸாதனைகளுமோ
செய்வதில்லை. எந்நேரமும் நாராயணா எனும் நாமத்தையே சொல்கிறேன்.
அதனால் குச்சி வைத்துக்கொண்டு விரட்டினாலும் என்னைவிட்டுப்

31
போவதில்லை. எப்போதும் என்னைச் சுற்றி சுற்றி வருகிறார். எந்நேரத்திலும்
நேரில் தோன்றி என்னோடு பேசுகிறார்.

எனவே, நீங்கள் நாமத்தின் பெருமையை உணர்த்தும் வண்ணம் ஒரு கிரந்தம்


செய்யுங்கள் என்றார் நாரதர்.

_*ஸ்ரீமத் பாகவதம் - 19*__*திரௌபதியின் மேன்மை*_

தலைகீ ழாக நின்றும், உடலைப் பலவாறு வருத்திக் கொண்டும் பல்லாயிரக்


கணக்கான வருடங்கள் தவம் செய்து புலன்களால் சறுக்கி விழுந்து, மீ ண்டும்
தவம் செய்தும் மஹரிஷி என்று பெயர் வாங்கியவர்கள் பலர். ஆனால்,
*நாராயண நாராயண* என்று பகவன் நாமத்தை மட்டுமே எப்போதும் சொல்லி
மஹரிஷி பட்டம் வாங்கிவிட்டேன்.

முக்தியை விரும்புபவர்கள், மற்ற தெய்வங்களிடத்து அஸூயையோ,


வெறுப்போ இல்லாமல், அமைதியுடன் ஸ்ரீ வாசுதேவனது சரணங்களையே
பூஜிக்கிறார்கள்.

ஒரு விஷயம் எவ்வளவு அழகாகச் சொல்லப்பட்ட போதிலும், அது பகவானின்


கீ ர்த்தியைச் சொல்லாவிடில், அதை ஸாதுக்கள் ஏற்பதில்லை.

அதை எச்சில் குழியாக எண்ணுகிறார்கள். எச்சில் குழியிலும் எல்லாரும் மீ தி


வைத்த உணவுப் பண்டங்கள் விழும். ஆனால், அது அவற்றின் சுவை
அறியாது. பகவன் நாமத்தைப் பாடாத நாவும் அப்படியே. அதில் எவ்வளவு
அழகான சொற்கள் விழுந்தாலும், பகவன் நாமத்தைச் சொல்வதாலேயே
ஜீவனுக்கு ஈஸ்வரனின் ரசிகத் தன்மையும், ப்ரபாவமும் புலப்படும்.

ஸம்சாரத்தில் அமிழ்ந்து துக்கங்களால் பீடிக்கப்பட்டிருக்கும் ஒருவனது மனம்


பகவானின் நாமங்களையும் புகழையும் கேட்ட மாத்திரத்தில்
அமைதியடைகிறது. ஸாதுக்கள் எப்போதும் வாசுதேவனின் பெயர்களைச்
சொல்பவர்கள் இருந்தால் கேட்பார்கள். கேட்பவர்கள் இருந்தால்
சொல்வார்கள். ஒருவரும் இல்லையெனில், தாங்களே தனியாக கானம்
செய்து கொண்டிருப்பார்கள்.

அப்படிப்பட்ட ஸாதுக்களைக் கவரும் வண்ணம் பகவானின் கீ ர்த்தி நன்கு


புலப்படும் வண்ணம் அவனது லீலைகளை ஒன்று பட்ட மனத்தோடு
தியானித்து வர்ணிப்பீராக.

வாஸுதேவனை பூஜிக்கும் ஒருவன் நிச்சயமாக மீ ண்டும் பிறவியை


அடைவதில்லை.

இவ்வாறு பலவிதமாகச் சொல்லி, ஸாதுக்களின் மஹிமையையும், பகவான்


நாமத்தின் பெருமைகளையும் எடுத்துச்சொல்லிவிட்டு, நாரதர் கிளம்பினார்.

அதன் பின்னர் வியாஸர் இலந்தை மரங்களால் சூழப்பட்டதும், ஸரஸ்வதி


நதிக்கரையில் அமைந்ததுமான தனது ஆசிரமத்தில் அமர்ந்து பகவானை
தியானம் செய்தார். பின்னர் புராணங்களுள் ரத்தினமாக விளங்கும், ஸ்ரீமத்

32
பாகவதம் என்ற புராணத்தைச் செய்தார். அதைத் தன் மகனான சுகருக்கு
உபதேசம் செய்தார் என்று சொல்லி, ஸூத பௌராணிகர் மேலும்
சொல்லலானார்.

மஹாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வென்றனர். யுத்தத்தில் கடுமையாக


அடிபட்டு குற்றுயிரும் குலையுயிருமாக வழ்ந்து
ீ கிடந்தான் துரியோதனன்.
அவன் மகிழ்ச்சியடைவான் என்று நினைத்துக் கொண்டு துரோணரின்
புதல்வனும், துரியோதனனின் நண்பனுமான அஸ்வத்தாமன் ஒரு வேலை
செய்தான். பாண்டவர்களின் பாசறையில் யாருமில்லாதபோது நுழைந்தான்.
உறங்கிக்கொண்டிருந்த சிறுவர்களான உபபாண்டவர்களை பாண்டவர்கள்
என்று நினைத்துக் கொண்டு, ஐந்து குழந்தைகளையும் கொன்றுவிட்டான்.

ஆனால், துரியோதனன் நண்பனின் இந்தச் செய்கையால்


மகிழ்ச்சியடையவில்லை. மாறாக வருந்தினான். அவன் உடலில் இருந்த
குருதி முழுவதும் வெளியேறிவிட்ட நிலையில் அவனுக்கு நல்லெண்ணம்
வந்தது. குழந்தைகள் இறந்துபட்ட செய்தி கேட்டு பாண்டவர்கள் துடித்துப்
போனார்கள். வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில் குலக்
கொழுந்துகள் பட்டுப்போய் வாரிசற்ற நிலைமை வந்துவிட்டது.

திரௌபதியின் அழுகையால் மூவுலகங்களும் ஸ்தம்பித்துப்


போனதென்றுதான் சொல்ல வேண்டும். அப்போது அர்ஜுனன் இக்காரியத்தைச்
செய்தவன் தலையை இன்று மாலைக்குள் வெட்டுவேன் என்று
சூளுரைத்தான்.

வெட்டியவனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.


அசுவத்தாமாவைப் பிடித்துக்கொண்டு வந்து திரௌபதியின் முன்
நிறுத்தினான்.

அக்னியிலிருந்து தோன்றியவள் அரசகுமாரி. முற்பிறவியில் கடும் தவம்


செய்து தர்மம், வரம்,
ீ சாதுர்யம், அத்தனை சாஸ்திரங்களிலும் நிபுணத்வம்,
ஞானம் இவை அனைத்தும் கொண்ட வரனை வேண்டியவள்.

ஐந்தும் ஒருவரிடத்து ஒருங்கே அமைவது கடினம் என்று ஒரே


ஸ்வரூபமாகவும், ஐந்து உடல்களையும் கொண்ட மஹாபுருஷர்களுக்கு
வரிக்கப்பட்டவள். ஒவ்வொரு வருடமும் அக்னிப்ரவேசம் செய்பவள்.
மஹாபதிவ்ரதை. திருமணமான அன்றிலிருந்து காடுகளில் அலைந்து,
சுடுசொற்களாலும், பழிச்சொற்களாலும் காயப்பட்டு பலவிதமான
துன்பங்களை அனுபவித்தவள். இப்போது குழந்தைகளையும் இழந்து
நிற்கிறாள்.

உறங்கிக்கொண்டிருந்த தன் குழந்தைகளைக் கொன்றது மகாபாவியான


அசுவத்தாமன் என்றறிந்ததும் என்ன சொன்னாள் தெரியுமா?

ஸ்வாமி, இவர் குழந்தைகளைக் கொன்றவராயினும் குரு புத்ரன். குருவை


இழந்துவிட்டோம். தந்தையானவர் மகனின் உருவிலேயே வசிக்கிறார் என்று
சாஸ்திரம் சொல்கிறது. ஏற்கனவே கணவரை இழந்து இவரது தாயும் மஹா
உத்தமியுமான கிருபி துன்பக்கடலில் தத்தளிக்கிறார். குழந்தைகளை இழந்து

33
நான் படும் துயரத்தை அந்தத் தாயும் அனுபவிக்க வேண்டாம். இவரை
மன்னித்து விட்டுவிடுங்கள் என்றாளே பார்க்க வேண்டும்.

த்ரௌபதியின் ஹ்ருதயத்தின் மேன்மையைக் கண்டு பகவானான கண்ணனே


ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனான்.

ஸ்ரீமத் பாகவதம் - 20*__*தர்மசங்கடம்*

மஹாபாரதத்தை அப்போதுதான் முடித்திருந்ததால் அடுத்த கிரந்தத்தை


வியாஸர் யுத்தமுடிவிலிருந்தே துவங்கினார் போலும்.

தன் குழந்தைகளை உறங்கும் போது வெட்டிய அஸ்வத்தாமனை


மன்னித்துவிடச் சொல்கிறாள் திரௌபதி. மேலும் இவன் ப்ராம்மணன்.
இவனைக் கொன்றால் ப்ருமஹத்தி தோஷம் வரும். ஏற்கனவே நாம்
துன்பப்பட்டது போதும். புதிதாய் ஏதும் தோஷங்கள் நமக்கு வர வேண்டாம்.
அதனால் விட்டுவிடுங்கள் என்றாள்.

சாஸ்திரத்தின் மீ தும் குருவின் மீ தும் உள்ள பக்தியால் குருபுத்ரன்


கொடியவனாயினும் வதம் செய்யக்கூடாது என்றாள். உடனே, பீமசேனன்
கொதித்தெழுந்தான். உறங்குபவர்களையும், எதிர்க்க சக்தி
இல்லாதவர்களையும், சிறுவர்களையும் கொன்றவன் ப்ராம்மணனாயினும்,
அவனைக் கொல்லத்தான் வேண்டும். மேலும், எஜமானனுக்கு வேண்டியோ,
தன்னுடைய லாபத்திற்கோ கூட இல்லாமல் வணாகக் ீ கொன்றிருக்கிறான்.
இவனைத் தண்டிப்பது இவனுக்கே நன்மை பயக்கக்கூடியதுதான். எனவே
அஸ்வத்தாமனைக் கொல்ல வேண்டும்.

கண்ணன் கட்டப்பட்டிருக்கும் அசுவத்தாமனிடம் த்ரௌபதியை


அழைத்துப்போக, அவளோ, இவன் குருபுத்ரன் என்று வணங்கினாள்.

தர்மபுத்ரருக்கும் த்ரௌபதி சொல்வது சரியென்று பட்டது. குழப்பமடைந்த


அர்ஜுனன் க்ருஷ்ணனைப் பார்த்தான். கண்ணன் சிரித்தான்.

அர்ஜுனா, குருபுத்ரன். ப்ராம்மணன். அதனால் கொல்லக்கூடாது என்பது


சாஸ்திரம். வணாகீ மஹாபாவங்களைச் செய்தவனை அரசனானவன்
கொல்ல வேண்டும் என்பதும் என்னால் கொடுக்கப்பட்ட சாஸ்திரம்தான்.
இரண்டுமே தர்மமாகிறது. (இம்மாதிரி இரண்டு தர்மங்களுள் எதைச் செய்வது
என்ற குழப்பம் ஏற்படுவதே தர்ம சங்கடமாகும்).

நீயோ இவனைக் கொல்வதாய் சபதமிட்டிருக்கிறாய். எனவே, நீ


த்ரௌபதிக்கும், பீமனுக்கும், எனக்கும், உனக்கும் பிரியமானது எதுவென்று
யோசித்து அவ்வாறு செய் என்றான்.

,அனைவர்க்கும் பிரியமானதைச் செய்வதா? இப்படி மாட்டிவிடுகிறாயே


கண்ணா என்ற அர்ஜுனன் சற்று யோசித்தான். அச்வத்தாமனின் தலையில்

34
ஒரு ரத்தினம் உண்டு. அது அவன் உடன்பிறந்தது. அதனால் மிகுந்த கர்வம்
கொண்டிருந்தான். அர்ஜுனன் அந்த மணியை முடியோடு சேர்த்து அறுத்தான்.

ஒருவரின் தலைமுடியை தெய்வத்திற்குக் காணிக்கையாகக் கொடுப்பதே தன்


ப்ராணனை காணிக்கையாக்குவதற்குச் சமம். அநாவசியமாக முடியை
வெட்டுபவர்களின் ப்ராணசக்தி குறைகிறது. தலைமுடியையும், அவனது
கர்வத்திற்குக் காரணமான ரத்தினமும் வெட்டப்பட்டதால் அவனைக்
கொன்றதற்கு சமமாயிற்று.

மிகவும் சாதுர்யமாக யோசித்து அர்ஜுனன் செய்த காரியத்தினால்


அனைவர்க்கும் சமாதானம் ஏற்பட்டது. உயிர் பிழைத்த அச்வத்தாமன்
மகிழவில்லை. மாறாக, ஒரு பெண்ணால் உயிர்ப்பிச்சை கிடைத்ததே
என்றெண்ணி அவமானத்தினால், அடிபட்ட நாகம்போல் கருவிக்கொண்டு
பாண்டவர்களைப் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டான்.

இழந்த குழந்தைகளை நினைத்து புலம்பிக் கொண்டு அனைவரும்


அரண்மனை திரும்பினர். தர்மபுத்திரர் அரசு கட்டில் ஏறினார். அர்ஜுனனின்
மகனான அபிமன்யு ஏற்கனவே யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டான்.
அவனுக்குத் திருமணமாகி சில காலம்தான் ஆகியிருந்தது. அவனது இளம்
மனைவியான உத்தரை கருவுற்றிருந்தாள்.

துவாரகையை விட்டு வந்து வெகு நாட்களாகிவிட்டதால் கண்ணன் ஊருக்குக்


கிளம்ப ஆயத்தமானான். கண்ணனைப் பிரிவது சுலபமா என்ன? இருப்பினும்
அவன் தங்களுக்காக தனது ராஜ்ஜியத்தையும் பெற்றோரையும், மனைவி
மக்களையும் விட்டுவிட்டு வந்திருக்கிறான் என்பதால், பிரியாவிடை
கொடுத்தனர்.

அனைவரும் வாசலில் வந்து கண்ணனின் ரதத்தைச் சூழ்ந்து நின்றனர்.


ரதத்தில் ஏறப்போன கண்ணனின் கால்களில் காப்பாற்றுங்கள்...
காப்பாற்றுங்கள்...

(பாஹி பாஹி மஹா யோகின் தேவ தேவ ஜகத்பதே! நான்யம் த்வதபயம்


பஷ்ய யத்ர ம்ருத்யு: பரஸ்பரம்) என்று அலறிக்கொண்டு திடீரென்று ஒரு பெண்
ஓடிவந்து விழுந்தாள்.

யாரென்று பார்த்தால், அது அபிமன்யுவின் மனைவி உத்தரை. கண்ணன்


அவளைத் தூக்கி நிறுத்தி, என்னாச்சும்மா? என்று பரிவோடு விசாரிக்க,
தூரத்தில் வானில் நெருப்பைக் கக்கிக்கொண்டு ஏதோ ஒன்று அவளைத்
துரத்துவதைக் காண்பித்தாள். கண்ணóன் அதைப் பார்க்க சற்று நேரத்தில் அது
மறைந்துவிட்டது.. என்னவாய் இருக்கும்?

*ஸ்ரீமத்பாகவதம் - 21 ப்ரும்மாஸ்திரத்தினால் வந்த நன்மை*


வானத்தில் நெருப்பைக் கக்கிக்கொண்டு தூமகேதுவைப் போல் இரும்பாலான
அம்பு ஒன்று உத்தரையைக் குறி வைத்து வந்து கொண்டிருந்தது.

உத்தரை ஓடிவந்து கண்ணனின் கால்களில் விழுந்து சரணாகதி செய்ததும்,


அனைவரும் அதை நோக்கினர்.

35
அது பாண்டவ வம்சத்தைப் பூண்டோடு அழிக்க அஸ்வத்தாமன் விடுத்த
ப்ரும்மாஸ்திரம் என்று அறிந்து கொண்டான் கண்ணன்.

கர்பத்திலிருக்கும் சிசுவைக் கொல்ல அஸ்திரங்களிலேயே உயர்ந்ததான


ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான் அந்தக் கொடியவன்.

ப்ரும்மாஸ்திரம் என்பது தற்போதைய அணுஆயுதத்திற்கும் மேலாக


சேதங்களை விளைவிப்பது. அதனால்தான் மஹாபாரத யுத்தத்திற்கு ஊரை
விட்டுத்தள்ளி குருக்ஷேத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான் கண்ணன். யுத்தத்தின்
பாதிப்பினாலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் குருக்ஷேத்திரம்
வறண்ட பூமியாகக் காட்சியளிக்கிறது.

பாண்டவர்கள் அனைவரும் சட்டென்று தத்தம் ஆயுதங்களை எடுக்க,


கண்ணன் ஸுதர்சனத்தை எடுத்தான்.

சட்டென்று ஸுதர்சனத்தினால் உத்தரையின் கர்பத்தை மறைத்தான்.


அதாவது, உத்தரையின் கர்பத்தினுள் ஸுதர்சனம் ப்ரவேசித்து அதைச் சுற்றிக்
கவசமாயிற்று.

கர்பத்தை நோக்கிவந்த ப்ரும்மாஸ்திரத்தை தானே உள்வாங்கிக்கொண்டு,


மீ ண்டும் கண்ணனிடம் வந்தது.

உபபாண்டவகளைக் கொன்றது அஸ்வத்தாமன் என்றறிந்து அர்ஜுனன்


அவனைப் பிடிக்கப் போகும் போதும் அவன் தன்னைக் காத்துக்கொள்ள
ப்ரும்மாஸ்திரத்தை ஏவினான்.

ப்ரும்மாஸ்திரத்திற்கு ப்ரதி அஸ்திரம் போடக்கூடாது என்பது விதி. என்ன


செய்வது என்று திகைத்தான் அர்ஜுனன்.

அப்போது உடனிருந்த கண்ணன், அர்ஜுனா! இவனுக்கு ப்ரும்மாஸ்திரத்தைப்


போடத்தான் தெரியும். திரும்ப வாங்கத்தெரியாது. ப்ரதி அஸ்திரம்
போடக்கூடாது என்பது விதியாக இருந்தாலும், நீ இப்போது அதற்குப் ப்ரதியா
இன்னொரு ப்ரும்மாஸ்திரம் போடு.

பின்னர் இரண்டையும் சேர்த்து திருப்பி வாங்கு. என்று சொல்ல அர்ஜுனன்


அவ்வாறே செய்தான்.

தர்மத்தின் பக்கம் நிற்கும் தன் பக்தனுக்காக பகவான் எப்படி வேலை


செய்கிறான் பாருங்கள்.

இதில் இன்னொரு அற்புதம் என்னவெனில், குருவான துரோணர், தன்


மகனான அஸ்வத்தாமனுக்குக் கூட ப்ரும்மாஸ்திரத்தை திரும்ப வாங்கக்
கற்பிக்கவில்லை. சீடனான அர்ஜுனனுக்கோ தனக்குத் தெரிந்த அத்தனை
வித்தைகளையும் பூர்ணமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

குருவான அவரது ஹ்ருதயம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

36
குருசிஷ்ய உறவின் மேன்மையை எப்படிக்கூறுவது?

வித்யை சொல்லித்தரும் குருவே இப்படி என்றால், ஞானாசிரியனாக


விளங்கும் ஒரு ஞானி குருவாகக் கிடைத்தால் அவர் பகவானையே தூக்கி
சிஷ்யனிடம் கொடுத்து விடுகிறார். எப்படியாவது ஒரு குருவின் க்ருபைக்கு
பாத்திரமாகிவிட வேண்டும் என்று வலியுறுத்துவதும் அதற்காகத்தான். இதில்
இன்னொரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,

அப்போது ப்ரும்மாஸ்திரத்திற்கு அர்ஜுனனை ப்ரதி அஸ்திரம் போடச்சொன்ன


பகவான், உத்தரை அபயம் என்று அலறியதும் எதையும் யோசிக்காமல் தானே
சுதர்சனத்தால் காத்தான். எதனால் அப்படி? தன்னிடம் அபயம் என்று
வந்தவளைக் காக்க இன்னொருவனின் உதவி பகவானுக்குத் தேவையில்லை.

தன் பக்தர்களான பாண்டவர்களைக் காத்த பெருமை தன் ஒருவனுக்கே என்ற


பெருமையை பகவான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

யோகி, ஞானி என்றெல்லாம் கீ தையில் சொல்பவன் பக்தனை மட்டும்


மத்பக்த:, மத்பக்த: என் பக்தன் என் பக்தன் என்று மார்தட்டிக் கொள்கிறான்.

பக்தனின் வட்டில்
ீ குதிரை குளிப்பாட்டுவது முதல் ஆசையாகச் செய்பவன்,
அவனது வம்ச சிசுவைப் பார்க்க ஆவல் கொண்டு கர்பத்தினுள் புகுந்தான்.
ஸுதர்சன சக்கரத்தில் குட்டியாக பகவானின் திருவுருவம் ஒன்று இருக்கும்.
பின்னாளில் தன் கதையைக் கேட்டே முக்தி அடையப்போகும் பரம
பாகவதனான அந்தக் குழந்தையோடு தானும் சிறிது நேரம் கர்ப்பவாசம் செய்ய
விரும்பினான்.

முதன்முதலில் கர்ப்பத்திலிருக்கும் சிசுவை ஆய்வு (scan) செய்தவன் பகவான்.


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது அத்தனை கலைகளுக்கும்
சேர்த்துத்தான். இன்னும் ஆயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.

குலத்தை அழிக்க வந்த ப்ரும்மாஸ்திரம் கர்ப்பத்திலிருந்த சிசுவிற்கு பகவத்


தரிசனத்தை பெற்றுத் தந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும்
புரியவில்லை. அம்பு வந்ததும், கண்ணன் சுதர்சனத்தை எடுத்ததும் மறைந்து
போனதையுமே அவர்கள் பார்த்தனர்.

ஆனால், அவர்களுள் ஒருவர் என்ன நடந்தது என்று கண்டு பிடித்துவிட்டார்.


பகவானுக்குத் தேவையில்லை.

தன் பக்தர்களான பாண்டவர்களைக் காத்த பெருமை தன் ஒருவனுக்கே என்ற


பெருமையை பகவான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

யோகி, ஞானி என்றெல்லாம் கீ தையில் சொல்பவன் பக்தனை மட்டும்


மத்பக்த:, மத்பக்த: என் பக்தன் என் பக்தன் என்று மார்தட்டிக் கொள்கிறான்.

பக்தனின் வட்டில்
ீ குதிரை குளிப்பாட்டுவது முதல் ஆசையாகச் செய்பவன்,
அவனது வம்ச சிசுவைப் பார்க்க ஆவல் கொண்டு கர்பத்தினுள் புகுந்தான்.
ஸுதர்சன சக்கரத்தில் குட்டியாக பகவானின் திருவுருவம் ஒன்று இருக்கும்.
பின்னாளில் தன் கதையைக் கேட்டே முக்தி அடையப்போகும் பரம

37
பாகவதனான அந்தக் குழந்தையோடு தானும் சிறிது நேரம் கர்ப்பவாசம் செய்ய
விரும்பினான்.

முதன்முதலில் கர்ப்பத்திலிருக்கும் சிசுவை ஆய்வு (scan) செய்தவன் பகவான்.


க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் என்பது அத்தனை கலைகளுக்கும்
சேர்த்துத்தான். இன்னும் ஆயிரம் விளக்கங்களைப் பெரியோர் சொல்வர்.

குலத்தை அழிக்க வந்த ப்ரும்மாஸ்திரம் கர்ப்பத்திலிருந்த சிசுவிற்கு பகவத்


தரிசனத்தை பெற்றுத் தந்தது. சுற்றி நின்று கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும்
புரியவில்லை. அம்பு வந்ததும், கண்ணன் சுதர்சனத்தை எடுத்ததும் மறைந்து
போனதையுமே அவர்கள் பார்த்தனர்.

ஆனால், அவர்களுள் ஒருவர் என்ன நடந்தது என்று கண்டு பிடித்துவிட்டார்.

*ஸ்ரீ மத் பாகவதம் - 22*-*அத்தை செய்த துதி*

ப்ரும்மாஸ்திரத்தால் வந்த ஆபத்தை விலக்கி, கர்ப்பத்தைக் காத்தது கண்ணன்


ஏவிய ஸுதர்சனம் என்பதை குந்தி உடனே புரிந்துகொண்டாள்.

வம்சத்தின் மூத்தவள். பாண்டுவுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அன்றிலிருந்து


காந்தாரியின் பொறாமையை சகித்துக்கிண்டு, தன் பிள்ளைகளைக் கொல்லத்
துணிந்த கௌரவர்களை சகித்துக் கொண்டு, பொறுமையின் உருவமாய்த்
திகழ்பவள். பீஷ்மர், விதுரர் போன்ற பெரியவர்கள் இருந்தும் தன்
பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டவள்.
சிறு வயது முதல், ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் கண்ணன் எப்படி தங்கள்
வாரிசுகளைக் காத்தான் என்பதை அருகிலிருந்து பார்த்தவள்.

உத்தரையின் வயிற்றிலிருக்கும் சிசுதான் இப்போது ஒரே வாரிசு. மற்ற


அத்தனை குழந்தைகளும் இறந்துவிட்டன. அதைக் கண்ணன் காப்பாற்றிக்
கொடுத்ததும், அவனது கருணையை நினைத்து குந்தியின் கண்களில் நீர்
திரண்டது.

குந்தி வசுதேவரின் தங்கை ஆவாள். அதனால் அவள் கண்ணனுக்கு


அத்தையாகிறாள். ரதத்திலேறி கண்ணன் துவாரகைக்குப் புறப்படும் சமயத்தில்
இவ்வளவு அமர்க்களம். கண்ணன் ரதத்தைவிட்டு இறங்கவில்லை. குந்தி
மெதுவாக ரதத்தின் அருகே சென்று கண்ணனைப் பார்த்து கைகளைக்
கூப்பினாள்.

'நீ ஸர்வேஸ்வரன், முதல் காரண புருஷன், பார்வையற்றவனுக்கு


விஷயங்கள் தெரியாததைப்போல், மாயையினால் கண்கள்
கட்டப்பட்டிருப்பவர்களின் கண்களுக்கு உமது ஸ்வரூபம் தெரிவதில்லை.
உம்மை நமஸ்கரிக்கிறேன்' என்றாள்.

இப்படிப்பட்ட ஸ்துதிகளைக் கேட்கவா கண்ணன் அவதாரம் செய்தான்?


கலகலவென்று சிரித்தான். மாயையைத் துணைக்கு அழைத்தான். என்னாச்சு
அத்தே உனக்கு? ஏன் இப்படி சொல்ற?

38
நீ பெரியவ! நீ போய் எனக்கு நமஸ்காரம்னு சொல்ற? அவனைப் பரம்பொருளே
என்றழைத்து தூரத்தில் வைப்பதை அவன் விரும்புவதே இல்லை.
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே என்ற ஆண்டாளின் கூற்றுக்கு
இப்பெயர்களெல்லாம் சிறுபெயர்களாயிற்று என்று பெரியவாச்சான்பிள்ளை
அவர்கள் வியாக்யானம் செய்கிறார். குந்தி புரிந்துகொண்டாள்.

உடனே,

க்ருஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாய ச|

நந்தகோப குமாராய கோவிந்தாய் நமோ நம: ||

என்று அடுத்த வாக்கியம் சொன்னாள். கண்ணன் மகிழ்ந்து போனான். கண்ணா,


வசுதேவன் மகனே, நந்தகுமாரா, கோவிந்தா என்பவை அவன் விரும்பி ஏற்கும்
விளிப்பெயர்கள்.

இந்த ஸ்லோகத்தை அறியாதவர்களே இல்லை எனலாம்.

கண்ணனின் தாய் தேவகி, தந்தை வசுதேவர், பின்னர் வளர்ப்புத்தந்தை நந்தன்


ஒவ்வொருவராய் வரிசையில் நினைக்கிறாள். எனில் வளர்ப்புத்தாயான
யசோதையை நினைக்கவில்லையா என்றால், அவளுக்குத் தனி ஏற்றம்.
பின்னால் ஒரு ஸ்லோகம் முழுவதும் யசோதையை ஸ்மரிக்கிறாள். என்ன
விஷயம் அத்தே சொல்லு!

உன் அவயவங்கள் ஒவ்வொறுமே தாமரையின் வடிவழகை ஒத்தவை


கண்ணா!

பதினான்கு வருடங்கள் சிறையில் வாடிய பின்னரே உன் தாயான தேவகியை


விடுவித்தாய். ஆனால், உன்னைப் பெற்றவளை விடவும் அதிகமாக என்மீ து
வாஞ்சை வைத்து ஒவ்வொரு ஆபத்து வரும்போதும் உடனே ஓடி வந்து
காத்தாய். பீமனுக்கு விஷம் வைத்தார்கள். நீ காப்பாற்றினாய்.

அரக்கு மாளிகையோடு கொளுத்தப்பட்ட போதும் காத்தாய்! ஹிடும்பன்


முதலிய ராக்ஷஸர்களிடமிருந்தும், சூதாட்ட சபையில் த்ரௌபதியையும்,
வனவாஸத்தில் ஒவ்வொருநாளும் ஏற்பட்ட கண்டங்களிலிருந்தும்
காப்பாற்றினாய். ஒவ்வொரு சண்டையிலும், பீஷ்மர் போன்ற மஹாரதர்களின்
அஸ்திரங்களிலிருந்தும் இப்போது ப்ரும்மாஸ்திரத்திலிருந்தும் நீயே
எங்களைக் காத்தாய். உலகனைத்திற்கும் குருவாய் விளங்குபவன் நீ.

நீ ஒடிவந்து தர்சனம் அளித்துக் காக்கும்படியான விபத்துக்களும் கஷ்டங்களும்


எங்களுக்கு அடிக்கடி வரட்டும். ஒவ்வொரு கஷ்டமும் உன் தரிசனத்தாலேயே
விலகுகிறது.

நீ தயிர்ச்சட்டிகளை உடைத்தபோது, யசோதை உன்னைக் கட்டுவதற்கு


கயிற்றைக் கொண்டு வந்தாள். அப்போது முகத்தைத் தாழ்த்திக் கொண்டு,
பயமே பயப்படும் ஸ்வரூபமாகிய நீ பயந்தவன் போல் நின்றாயே! அந்த உன்
ஸ்வரூபம் என்னை மயக்குகிறது. அதுவே என் தியானத்தில் எப்போதும்
இருக்கட்டும்.

39
பிறப்பே இல்லாத நீ தேவர்களுக்கும் எங்களுக்கும் க்ஷேமம் செய்வதற்காக
ப்ரும்மாவின் வேண்டுகோளுக்கிரங்கி அவதரித்திருக்கிறாய்.

யார் உன் சரித்திரத்தைக் கேட்கிறார்களோ, பாடுகிறார்களோ திரும்பத் திரும்ப


சொல்கிறார்களோ, அடிக்கடி நினைக்கிறார்களோ, அவர்கள் உன் திருவடித்
தாமரையை வெகு சீக்கிரம் பார்க்கிறார்கள்.

ஹே கிருஷ்ணா! அர்ஜுனனின் தோழனே! வ்ருஷ்ணி குலத்தலைவனே!

யோகீ ஷ்வரா! உனக்கு நமஸ்காரம் என்று இன்னும் பலவாறு ஸ்துதி செய்து


கண்ணனை வணங்கினாள். குந்தி ஸ்துதி எனப்படும் இந்த ஸ்துதி பஞ்ச
ஸ்துதிகளுள் ஒன்றாகும். இதைக்கேட்டு கண்ணன் அன்போடு ஒரு
புன்முறுவல் செய்துவிட்டு போய்ட்டு வரேன் அத்தை! என்றான்.

அப்போது தர்மபுத்திரர் அருகே வந்து, கண்ணா! இப்போதான் ஒரு ஆபத்து


விலகியிருக்கு. மனம் ரொம்ப சங்கடமாய் இருக்கு. நீயும் இப்பவே
கிளம்பணுமா? நீ இன்னும் கொஞ்சநாள் எங்களோடு இருந்தால் எங்களுக்கு
ஆறுதலா இருக்கும் என்று சொன்னார்.

அங்கிருக்குந்த அனைவர் முகத்தையும் பார்த்தான் கண்ணன். சற்று நேரம்


முன்பு ஏற்பட்ட ஆபத்தின் அதிர்ச்சியிலிருந்து ஒருவரும் மீ ளவில்லை.

சரி, நான் இப்ப போகல.


என்று சொல்லி ரதத்திலிருந்து குதித்து இறங்கி அர்ஜுனனின் தோளின்மீ து
கையைப் போட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.

தாமரைக்கண்ணன் ஊருக்குக் கிளம்பவில்லை என்றதும் அனைவரின்


முகங்களும் சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.

40
*ஸ்ரீமத் பாகவதம் - 23*-*பக்தனின் ஊடல்*

பகவானான கண்ணனே உடனிருந்து யுத்தத்தை நடத்தி அதில்


வெற்றிக்கனியைப் பெற்றுத்தந்தபோதும், தர்மபுத்திரனின் மனக்கலக்கம்
நீங்கவில்லை.

வியாஸரும் மற்ற மஹரிஷிகளும், கண்ணனும் தேற்றியும், தன் சுற்றத்தார்


அனைவரும் போரில் இறந்துபடத் தானே காரணம் என்று எண்ணி சோகத்தில்
ஆழ்ந்தார். அழியக்கூடிய இவ்வுடலைக் காக்க, எவ்வளவு சேனைகள்
கொல்லப்பட்டன. குழந்தைகள், அந்தணர்கள், உறவினர்கள் நண்பர்கள்,
சகோதரர்கள், ஆசிரியர்கள் அனைவர்க்கும் துரோகம் இழைத்துவிட்டேன்.
குடிகளைக் காக்க நேர்ந்த தர்மப்போர் என்றாலும் என் மனம் கேட்கவில்லை.
ஆயிரக்கணக்கான உயிர்களைக்கொன்ற பாவத்தினால் ஏற்பட்ட கறையை
எப்படிப் போக்கிக்கொள்வது? என்று புலம்பினார்.

பின்னர் அந்திம காலத்தில் இருக்கும் பீஷ்மரிடம் சென்று தர்மங்களைக் கேட்டு


அறியச் சென்றார். அவரைத் தொடர்ந்து அர்ஜுனனோடு கண்ணனும்
பீஷ்மரைப் பார்க்கச் சென்றான். பீஷ்மர் யுத்தத்தில் கண்ணன் மேலுள்ள
அபரிமிதமான பக்தியால், கண்ணன் மீ து அம்புமழை பொழிந்தார். தன்மீ து
சாக்கிய நாயனார் எறிந்த கற்களைப் பூக்களால் ஆன பூஜைபோன்று
சிவபெருமான் ஏற்றார். அதைப்போலவே, பீஷ்மர் விட்ட அத்தனை
அம்புகளையும் தானே விரும்பி ஏற்றான் கண்ணன். அந்த அம்புகளால் ஏற்பட்ட
வடுக்களை பூஷ்ணமாக ஏற்று இன்றும் திருவல்லிக்கேணியில்
பார்த்தஸாரதியாய் காட்சியளிக்கிறான். சாதாரண மாந்தர்க்கே அந்திம
நேரத்தில் பகவானை நினைத்தால் மோக்ஷம் கிட்டும் என்றால், பீஷ்மருக்கு?
அவருக்கு மோக்ஷத்தைக் கண்ணன் அருள வேண்டியதில்லை. அவரது தந்தை
சந்தனுவால் விரும்பியபடி மரணம் என்ற வரத்தைப் பெற்றிருந்தார்.
ப்ரும்மச்சர்யத்தாலும், கடுமையான ஸாதனைகளாலும் யோகீ ஷ்வரராகவும்
ஆகிவிட்டார். தன் உடலைத் தான் விரும்பிய நேரம் நீங்கலாம் என்ற வரம்
பெற்றிருந்தும் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார். அதென்ன அம்புகளை
வரிசையாக நட்டுப்போட்ட படுக்கையா என்ன? யுத்தத்தின் பத்தாம் நாளன்று
அர்ஜுனன் விட்ட அம்புகள் அனைத்தும் பீஷ்மரின் உடலின் முன்புறம் குத்தி
பின்புறமாய் வெளிவந்திருக்கின்றன. உடலில் உள்ள குருதி முழுதும்
வடிந்துவிட்டது. அதன் பின்னர் யுத்தம் எட்டு நாள்கள் நடந்தது.
அஸ்தினாபுரத்தின் அரியணை ஒரு தர்மவானிடத்து ஒப்படைக்கப்பட்டது
என்ற சேதியும் அவருக்கு வந்தது. உடல் முழுவதும் வலிகளோடு துடித்துக்
கொண்டு, ப்ராணனை விடாமல், அதற்காகக் காத்திருந்தார் என்று
சொல்பவர்கள் உண்டு. இன்னும் சிலர் உத்தராயண புண்யகாலத்திற்காகக்
காத்திருந்தார் என்று சொல்வார்கள். யுத்தம் மார்கழி மாதக் கடைசியில்
முடிந்துவிட்டது. மகரசங்கராந்தி புண்யகாலமும், உத்தராயணமும் வந்து ஒரு
வாரம் ஆயிற்று. இன்னும் வலிகளோடு உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
எதற்காக? அந்திம காலத்தில் கண்ணனைக் காணவேண்டும் என்பதற்காக.
அதற்கென்ன? அஸ்தினாபுரத்தில்தானே இருக்கிறான்? யாரிடமாவது
சொல்லிவிட்டால் ஓடிவரமாட்டானா? இல்லை. இது பக்தனுக்குள்ள
பிடிவாதம். அதென்ன நான் சொல்லி அவர் தெரிந்து கொள்வது? அவருக்கு
என்னைத் தெரியாதா? என் கஷ்டம் அறியாதவரா? என்னைப் பார்க்க அவருக்கு
எப்போது விருப்பமோ அப்போது வரட்டும். அதுவரை காத்திருப்பேன். வராமல்

41
இருந்துவிடுவாரா என்ன? பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள ஊடல். அவரது
எண்ணம் தெரிந்தே கண்ணனும் ஒரு வாரம் சோதித்துவிட்டு, இப்போது தானே
வந்து அவர் முன் நின்றான்.

கண்ணன் பீஷ்மரைக் காண விரும்பியே தன் பயணத்தைத் தள்ளிப் போட்டான்.

யுதிஷ்டிரன் பிதாமகரை, உயர்ந்த தர்மங்களை எடுத்துச் சொல்லும்படி


கேட்டார். ஒருவன் தன் கடைசி காலத்தில் சில ரகசியமான சொத்துக்களை
மகனிடம் கொடுப்பதுபோல், நீங்கள் எனக்கு இதுவரை சொல்லாத விசேஷ
தர்மங்கள் இருந்தால் அவற்றைச் சொல்லுங்கள் என்றார். தன் முன் வந்து
நின்ற பகவானைக் கண்ணால் பருகிக்கொண்டே யுதிஷ்டிரனின் கேள்விக்கு
பதில் சொன்னார் பீஷ்மர். ப்ரும்மாதி தேவர்களுக்கும் கிட்டாத பகவான் உன்
வட்டில்
ீ வந்து சகஜமாகப் பழகுகிறான். பகவானையே எப்போதும்
நம்பியிருந்தபோதிலும் பாண்டவர்களான உங்கள் வாழ்வில் எவ்வளவு
கஷ்டங்கள். விதி எவ்வளவு வலிமையானது பார்த்தாயா? எல்லாமே
காலத்தின் கோலம். எனவே நடப்பதெல்லாம் நாராயணனின் சங்கல்பம் என்று
கொள்வாய். இவ்வுலகைப் படைத்து காத்து அழிக்கும் ஸர்வ வல்லமை
படைத்த பகவானே உன் வட்டில் ீ இதோ இந்த க்ருஷ்ணனாக நடிக்கிறான்
என்று சொல்லி, பகவானை ஸஹஸ்ரநாமங்களால் துதித்தார். இதற்குள்
ரிஷிகள் பலரும், அமரர்களும் அங்கு கூடினர். மஹாபாரதத்தில்
விஸ்தாரமாகச் சொல்லிவிட்டதால், இங்கு சுருக்கமாகச் சொல்கிறார்
வியாஸர். அதன் பின் பீஷ்மர் மானிடப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும்
பொதுவாகக் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள், ப்ரும்மச்சாரிகள்,
இல்லறவாசிகளின் தர்மங்கள், தான தர்மங்கள், ராஜ தர்மங்கள், மோக்ஷ நெறி,
கற்பு நெறி, பெண்களுக்குண்டான தர்மங்கள், ஏகாதசி போன்ற விரத தர்மங்கள்,
அறம், பொருள், இன்பம், வடு ீ அச்கிய நால்வகைப் புருஷார்த்தங்களை
அடையும் முறை ஆகியவற்றை சாஸ்திரங்களிலும், புராணங்களிலும்
கூறியுள்ளபடி சுருக்கமாகக் கூறினார். பின்னர் தன் கண் முன் நிற்கும்
கண்ணனைக் கண்ணாரக் கண்டு தன் அந்திம ப்ரார்த்தனையை அவன் முன்
ஸமர்ப்பித்தார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 24 பீஷ்ம ஸ்துதி*

சூரியன் வடகிழக்கு திசையில் திரும்ப, உத்தராயண புண்ய காலம்


துவங்குகிறது. பீஷ்மர் என்ற யோகீ ஷ்வரர், தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்ற, விரும்பி ப்ரும்மச்சர்யத்தை ஏற்றவர். கங்கா மாதாவின்
புதல்வர். அத்தனை விதமான தர்மங்களையும் அறிந்தவர். இப்போது யோக
பலத்தால் சரீரத்தை விடப் போகிறார். சபரியின் மோக்ஷத்திற்கு ராமன்
சாட்சியாக விளங்கியதைப் போல், இப்போதும், பகவான் சாட்சியாகவே
விளங்குகிறான்.

அவர் கண்ணனைக் காண விரும்பினார் என்றாலும், கிளம்புவதற்கு முன்பாக


அர்ஜுனனிடம், பீஷ்மரை தரிசனம் செய்துவிட்டு வரலாம் வா என்று சொல்லி
அழைத்துக் கொண்டு வருகிறான்.

பகவானே காண விரும்பித் தேடி வரும் அளவுக்கு பீஷ்மர் பக்தியிலும் சிறந்து


விளங்கினார்.

42
இப்போது, பீஷ்மர் கண்ணனைப் பார்த்து ப்ரார்த்தனை செய்கிறார். எந்த
விருப்பமும் இல்லாத என் மனத்தை, உயிர் துறக்கும் இந்நேரத்தில் ஸ்ரீ
கிருஷ்ணனான உன் திருவடிகளில் ஸமர்ப்பிக்கிறேன்.

நீ ஆத்மாராமனாக இருந்த போதிலும் சில சமயங்களில் லீலைக்காக உன்


சக்தியான ப்ரக்ருதியை ஏற்று உலகைப் படைக்கிறாய். உன் திருமேனியழகு
மூவுலகையும் ஈர்ப்பது. நீலமேக ஷ்யாமளன், சூரிய ஒளிபோல் மின்னும்
பீதாம்பரம் தரித்தவன். சுருண்ட கேசம் முன்னெற்றியில் விழுந்து உன்
தாமரையொத்த முகத்தில் விழுகிறது. அர்ஜுனனின் தோழன், உன்னிடம்
எனக்கு பயன் கருதாத அன்பு உண்டாகட்டும்.

போரில், தூசுகளால் உடலும், முடியும் அழுக்கடைந்திருக்கும்.


முன்னெற்றியில் கேசம் அசைந்தாடும். வியர்வைத்துளிகள் முகத்தை
அலங்கரிக்கும். பாவியான என் பாணங்கள் பட்டு கவசங்கள் பிளந்து உடலில்
காயங்கள் ஏற்பட்டன. அப்படி இருந்தபோதும் நீ பேரழகனாகவே திகழ்ந்தாய்.
அந்தக்கோலத்தில் இருக்கும் உன்னிடம் எனக்கு பக்தி ஏற்படட்டும்.

தோழனான அர்ஜுனனின் சொல் கேட்டு, பாண்டவ கௌரவ சேனைகளின்


நடுவே தேரை நிறுத்தி, சத்ரு சேனையின் உயிரைப் பார்வையாலேயே
அபகரித்த உன்னிடம் எனக்கு பற்று ஏற்படட்டும்.

உறவினர்களைக் கொல்வதா என்று குற்ற உணர்ச்சியால் மயங்கிய


அர்ஜுனனுக்கு பகவத் கீ தை என்ற ஞானோபதேசத்தை வழங்கி 'நான்
செய்கிறேன்' என்ற அகங்காரத்தை அழித்து அவனை ஊக்குவித்த பரமனான
உன் திருவடிகளில் என் மனம் நிலைத்திருக்கட்டும்.

போரில் ஆயுதம் எடுக்கமாட்டேன் என சபதம் செய்திருந்தான் கண்ணன்.


அவனது சபதத்தை உடைத்து ஆயுதம் எடுக்கச் செய்வதாக பீஷ்மர் ஒரு சபதம்
செய்தார். அதற்காக அம்புகளை மழையாக அர்ஜுனன்மீ து பொழிந்தார்.
அர்ஜுனனைக் காக்க அத்தனை அம்புகளையும் தானே முன் வந்து வாங்கிக்
கொண்டான் பகவான். ஒரு கட்டத்தில் பீஷ்மரைக் கட்டுப்படுத்த சக்ராயுதத்தை
எடுக்க அவகாசம் இன்றி, பக்கத்தில் உடைந்து கிடந்த தேரின் சக்கரத்தைப்
பிடுங்கிக் கொண்டு ஓடினான். அவ்வாறு கண்ணன் பீஷ்மரை நோக்கி
சக்கரத்தை எடுத்துக்கொண்டு ஓடும்போது அவனது உத்தரீயம் (மேலாடை)
நழுவி தேர்த்தட்டில் விழுந்தது.

கவசமும் உடைபட்ட நிலையில், உத்தரீயமும் நழுவி, தன் மார்பழகை


முழுமையாக பீஷ்மருக்குக் காட்டிக்கொண்டு ஓடிவந்தான்.

மேலும், அர்ஜுனன் மீ தும் தேரின் மீ தும் பல திவ்யாஸ்திரங்கள்


ஏவப்பட்டிருந்தன. அர்ஜுனன் மீ து அவை தாக்காமல் கண்ணன் காத்தான்.
ஆனால் தேரில் அவற்றின் வரியம் ீ இருந்தது. பகவான் தேரில் இருந்ததால்
அவை தேரை அழிக்காமல் இருந்தன. கண்ணன் தேரை விட்டிறங்கினால்,
அர்ஜுனனுக்கு ஏற்கனவே ஏவப்பட்ட திவ்யாஸ்திரங்களின் வரியத்தால்ீ
ஆபத்து நிகழலாம் என்றெண்ணி ரக்ஷையாக உத்தரீயத்தைத் தேர்த்தட்டில்
விட்டான் போலும்.

43
மேலும் அது தன் இருக்கை. அர்ஜுனனுக்கு ஸாரத்தியம் செய்வது தன்
உரிமை என்று நிலைநாட்ட, துண்டு போடுவது போல் போட்டுவிட்டுப்
போனானோ..

அம்பு மழையிலிருந்து அர்ஜுனனைக் காக்க பீஷ்மரைக் கட்டுப்படுத்த


வேண்டும் என்ற எண்ணமே இருந்ததால், மேலாடை நழுவுவதைக்கூட
கவனியாமல் ஓடினானோ! ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன்
ப்ரதிக்ஞையைக் கூட விட்டுவிட்டு, பீஷ்மரின் ப்ரதிக்ஞையைக் காக்க ஆயுதம்
எடுத்தானோ...

தன் சபதத்தை விட பக்தனின் சபதம் முக்கியம் என்று நினைத்தானோ... ஏழாம்


நாள் போரில் இவ்வாறு ஓடிவந்த கண்ணனின் அழகில் என் மனம் ஈடுபடட்டும்
என்கிறார் பீஷ்மர்.

அர்ஜுனனுடைய ரதத்தையே தன் குடும்பமாக எண்ணி சாட்டையும்


கடிவாளமும் ஏந்தி தேரோட்டியாக அமர்ந்திருந்த கோலத்தைக் காண்பதே
பெரும் பேறு. போரில் இறந்த அனைவருக்கும் சாரூப்ய முக்தி அளித்தானே.
அந்த கண்ணனிடம் எனக்கு பற்று உண்டாகட்டும்.

யோகீ ஷ்வரரான பீஷ்மர், தன் அந்திம காலத்தில் இடைப் பெண்களான


கோபிகளை நினைக்கிறார். எனில், கோபிகளின் பக்தி எத்தகையது?

அழகிய நடை, லீலைகள், புன்சிரிப்பு, கனிந்த பார்வை இவற்றால்


கண்ணனிடம் ஈர்க்கப்பட்ட கோபியர், ராசலீலையில் மயங்கி அவனது
லீலைகளை அனுகரணம் செய்து, தன் வயமானார்களே.. அவர்களை
வணங்குகிறேன்.

அப்படிப்பட்ட பக்தி எனக்கும் ஏற்படட்டும். மறுபிறவி என்று ஒன்று எனக்கு


ஏற்படுமாயின் ப்ருந்தாவனத்தில் ஒரு கோபியாக எனக்கு பிறவி
அமையட்டும்.

ராஜஸூய யாகத்தில் முதல் மரியாதையை ஏற்பதற்காக வந்த பரந்தாமன் என்


கண்முன் நிற்கிறாரே.

காற்று மூங்கில்களை உராயச்செய்து தீயை உண்டாக்கி, அம்மூங்கில்


காட்டையே அழிக்கும். அதுபோல் சூதாட்டம் என்ற தீயால், அரக்கர்களை
அழித்து பூபாரம் குறைத்த க்ருஷ்ணனின் திருவடித் தாமரைகளில் என்
மனத்தை இருத்தி இம்மானுட உடலை விட்டொழிக்கிறேன்.

ஒரே சூரியன் பல பாத்திரங்களில் உள்ள நீரில் ப்ரதிபலித்து பல சூரியன்களாக


காட்சி தருகிறான். அதுபோல் கண்ணனும் ஒவ்வொரு ஜீவனின்
ஹ்ருதயத்திலும் ப்ரதிபலித்து வெவ்வேறாகக் காட்சியளிறான். இவனை நான்
காணப்பெற்றது பெரும் பாக்யம் என்கிறார்.

இது மற்ற ஸ்துதிகளைப் போலன்றி தன் அனுபவத்தை வைத்து ஸ்துதி


செய்கிறார். படிப்பைவிட அனுபூதி சிறந்ததல்லவா?

44
எனவே, எவ்வளவோ துதிகள் பகவானைக் குறித்து இருந்தபோதிலும், பீஷ்மர்
செய்த ஸ்துதி மிகவும் சிறந்ததாகப் பெரியோர்களால் போற்றப்படுகிறது.

பீஷ்மர் தன் மனம், உடல், வாக்கு அனைத்தையும் அடக்கி ஆன்மாவை


க்ருஷ்ணனிடம் ஒடுங்கச் செய்து ஓய்வடைந்தார்.

அவருக்கு விதிப்படி ஈமக்கிரியைகளைச் செய்துவிட்டு தர்மர் சோகத்தில்


மூழ்கினார்.

*ஸ்ரீ மத் பாகவதம் - 25*-*மழை கண்ட பாலை*

அரசவைக்கு திரும்பிய தர்மபுத்ரர் காந்தாரியையும் த்ருதராஷ்ட்ரனையும்


ஒருவாறு தேற்றினார்.

பீஷ்மராலும் கண்ணனாலும் சொல்லப்பட்ட அத்தனை தர்மங்களையும்


கேட்டு, ஆட்சிப்பொறுப்பை ஏற்று தர்மத்தோடு அரசாட்சி செய்யலானார்.
அவரது ஆட்சியில் நன்றாக மழை பொழிந்தது. பூமி விரும்பியவற்றை
எல்லாம் கொடுத்தது.

பசுக்கள் ஏராளமான பாலைப் பொழிந்தன. ஒவ்வொரு பருவ காலத்திலும்,


அவற்றிற்கேற்ற விளைச்சலும், ஔஷதிகளும் நன்கு பலன் கொடுத்தன.
தர்மபுத்ரரின் ஆட்சியில் ஆதி தைவிக, ஆதிபௌதிக, ஆத்யாத்மிகமான
மனக்லேசங்கள், வியாதிகள், பருவகாலத் துயரங்கள், இயற்கையினால்
ஏற்படக்கூடிய இடர்கள் ஆகியவை ஒருபொழுதும் ஏற்படவில்லை.
அனைவரும் நீண்ட ஆயுளோடு மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர் .

சில மாதங்கள் கழித்து, கண்ணன் துவாரகைக்குக் கிளம்பினான். எல்லோரும்


அவனது பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்தனர். அஸ்தினாபுரத்து மக்கள்
நாடெங்கிலும் சாலையின் இருமருங்கிலும் நின்று பிரிவுத்துயரை
அடக்கிக்கொண்டு வழியனுப்பினர். பெண்கள் உப்பரிகையில் நின்று கொண்டு
புஷ்பங்களைத் தூவினர்.

யுதிஷ்டிரர் கண்ணனின் மேலுள்ள பிரியத்தால், கண்ணன் மறுத்த போதிலும்


அவனது பாதுகாப்புக்கென்று ஒரு சேனையை உடன் அனுப்பினார்.

காற்றாய்ப் பறந்த ரதம் துவாரகை நகர எல்லையை அடைந்தது. நகரின்


வாயிலை அடைந்ததும், யுதிஷ்டிரர் அனுப்பிய சேனையைத் திருப்பி
அனுப்பிவிட்டு, கண்ணன் தன் பாஞ்சஜன்யத்தை எடுத்து ஊதினான்.
அவ்வளவுதான்.

கண்ணனின் சங்க நாதத்தை அறியாதவர்களா துவாரகை மக்கள்? பல


காலமாக கண்ணனைக் காணாமல் ஏங்கிக் கொண்டிருந்தனர்.

சபரி தினமும் ராமனுக்காக எதிர்பார்த்து, எத்தனையோ வருடங்களாக


தினமும் கோலமிட்டு, புஷ்பங்களும் கனிகளும் பறித்து வைத்துக்கொண்டு
அதுவரை தான் பார்த்தேயிராத ராமனுக்காகக் காத்திருந்தாள்.

45
துவாரகை மக்களோ கண்ணனின் அன்பில் திளைத்தவர்களாயிற்றே.
எதிர்பார்த்து பார்த்து, எப்போது கண்ணன் வந்தாலும் வரவேற்பதற்காக ஆரத்தி,
புஷ்பங்கள், மங்கள திரவியங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருந்தனர்.

சங்கநாதம் கேட்டதும், அனைவரும் வதிக்குப்


ீ பாய்ந்தோடி வந்தனர்.
துதிபாடிகளும், நர்த்தகிகளும், கண்ணனின் நண்பர்களும், மந்திரிகளும்
விரைந்து வந்து எதிர் கொண்டழைத்தனர்.

கண்ணன் மெதுவாக ரதத்தைச் செலுத்தச் சொல்லி, மக்கள் கூட்டத்தில்


இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்ணுக்குக் கண் நோக்கி,
கையசைத்துக்கொண்டு நகரத்தினுள் ப்ரவேசித்தான். பெண்கள்
உப்பரிகையிலிருந்து புஷ்ப வர்ஷம் செய்தனர். வயதான பெண்கள் வந்து
ஆரத்தி எடுத்தனர்.

மங்கலத் தோரணங்களும், தீபங்களும் ஒவ்வொரு வட்டின்


ீ வாயிலிலும்
ஒளிவசின.
ீ மெதுவாக அரண்மனையை அடைந்தான் கண்ணன். பலராமனும்,
தந்தையும் அணைத்து வரவேற்றனர். வசுதேவருக்கு தேவகியையும் சேர்த்து
ஏழு மனைவிகள். அத்தனை அன்னைகளையும் வணங்கினான் கண்ணன்.
அவர்கள் ஒவ்வொருவரும், கண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சியால் கண்ண ீர்
பெருக்கினர்.

பின்னர் மனைவிகள் இருக்கும் பவனத்தை அடைந்தான் கண்ணன்.

கண்ணன் அஸ்தினாபுரம் சென்றதிலிருந்து அவனது மனைவியர் பலவிதமான


விரதங்களை மேற்கொண்டிருந்தனர். ருக்மிணி உள்பட அனைவரும் இன்று
தான் கண்ணனை முதன்முதலில் பார்ப்பவர் போல் பரவசமடைந்து
விரதங்களை விட்டு எழுந்தோடி வந்தனர்.

ஆத்மாராமனான கண்ணன் எவ்வித அழகிலும் மயங்குவதில்லை.


மன்மதனும் அவன் மனத்தில் எந்த விகாரத்தையும் ஏற்படுத்த முடியாமல்
தோற்றுப் போனான். ஆனால், அவரவர் மனோபாவத்திற்கேற்ப, கண்ணன்
தன்னைத்தான் விரும்புகிறான், தன் அழகில் மயங்கிக் கிடக்கிறான் என்று
அவர்களாகவே நினைத்துக் கொண்டார்கள். அவர்களது மனோபாவத்திற்கேற்ப
கண்ணன் மனைவிகளை சந்தோஷப்படுத்தினான்.

ஶௌனக மஹரிஷி கேட்டார்.

உத்தரையின் கர்பத்திலிருந்த குழந்தை யார்? அவருக்கு என்னவாயிற்று?


ஸூதர் பரீக்ஷித்தின் கதையைக் கூடலானார்.

கர்பத்திலிருந்த குழந்தை கட்டைவிரல் அளவிற்கு ஒரு உருவம் தன்னைச்


சுற்றிச் சுற்றி வருவதைக் கண்டது. மிக அழகாக இருந்த அந்த உருவம்
கையிலிருந்த கதையைச் சுழற்றிக்கொண்டே குழந்தையைப் பார்த்துக் கண்
சிமிட்டிச் சிரித்தது. குழந்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவ்வுருவம்
மறைந்துவிட்டது.

சில நாள்களில் பூமியில் பிறந்த அக்குழந்தைக்கு, யுதிஷ்டிரர் விஷ்ணுவால்


காப்பாற்றப்பட்டவன் என்று பொருள்படும்படி யாக, விஷ்ணுராதன் என்று

46
பெயரிட்டார். பிறந்த குழந்தையோ, தன்னைச் சுற்றியிருந்த
ஒவ்வொருவரையும் கர்பத்தில் தான் பார்த்தவர் இவரா என்று ஆராய்ந்து
ஆராய்ந்து உற்று உற்றுப் பார்த்து அழுதது. அதனாலேயே பரீக்ஷித் என்று
பெயர் பெற்றது.

இப்பெயருக்கு இன்னும் சில காரணங்களும் சொல்லப்படுகின்றன. அவற்றை


அந்தந்த தருணங்களில் காண்போம்.

*ஸ்ரீமத் பாகவதம் - 26*-*கண்ணன் காத்த குழந்தை*

விஷ்ணுராதனுக்கு புண்ணியாக வசனமும், ஜாதகர்மாவும் தௌம்யர் போன்ற


மஹரிஷிகளைக் கொண்டு செய்விக்கப் பட்டது.

தர்மபுத்ரர் ஏராளமான தானங்களைச் செய்தார். அப்போது அவரை வாழ்த்திய


அந்தணர்கள், விஷ்ணுராதன், ஸார்வபௌமனாகவும், மிகுந்த
புகழுடையவனாகவும், மஹா பாகவதனாகவும் விளங்குவான்.

இக்ஷ்வாகு போல் மக்களைக் காப்பவன்.


ராமனைப்போல் மக்களிடத்தில் பிரியமுள்ளவன். சிபியைப்போல்
கொடையாளி, பரதனைப்போல் தன்னைச் சேர்ந்தவர்களுடைய புகழை
அதிகரிக்கச் செய்வான்.

கார்த்தவர்யன்,
ீ அர்ஜுனன் இவர்களைப்போல் சிறந்த வில்லாளி,
அக்னிபோல் நெருங்க முடியாதவன்.
சிம்மம்போல் பராக்ரமம் உள்ளவன்,
பொறுமையுடையவன். ப்ரும்மாவைப் போல் பாரபட்சமில்லாதவன்.
சிவனைப்போல் அனுக்ரஹம் செய்பவன். மஹா விஷ்ணுவைப் போல்
அனைவர்க்கும் ஆச்ரயமாய் விளங்குவான். ஸாக்ஷாத் க்ருஷ்ணனைப்போல்
அனைத்து நற்குணங்களும் கொண்டவன். ரந்திதேவன்போல்
உதாரகுணமுள்ளவன்.

தைரியத்தில் மஹாபலிபோலும், ப்ரஹ்லாதன்போல் பகவானிடம்


பற்றுள்ளவனாகவும் இருப்பான்.

நிறைய ராஜரிஷிகளை உண்டு பண்ணுவான். கெட்ட வழியில் நடப்பவர்களை


தண்டிப்பான். கலியை அடக்குவான்.

ஒரு ப்ராம்மண குமாரனின் சாபத்தால் தன் மரணத்தை அறிந்துகொண்டு,


விரக்தனாகி ஹரிசரணத்தை அடைவான்

வியாசரின் பிள்ளையான சுகரிடம் கதைகேட்டு, ஆத்மஸ்வரூபத்தை


உணர்ந்து, கங்கைக்கரையில் இவனுக்கு மோக்ஷம் கிட்டும் என்றனர்.
ப்ராம்மண சாபம் கிட்டும் என்றதும் சற்று கலங்கிய தர்மபுத்ரர், ஸத்சங்கம்
கிட்டும், மோக்ஷத்தை அடைவான் என்றதும் ஆறுதல் அடைந்தார்.

அன்னை, 5 தாத்தாக்கள், ஏராளமான பாட்டிகள், கொள்ளுப்பாட்டியான குந்தி,


அத்தனைபேரின் அரவணைப்பிலும் வெகுசீக்கிரம் வளர்ந்தான் குழந்தை.

47
ஞாதிகளை வதம் செய்த பாவத்தைப் போக்க, தர்மபுத்ரர் மூன்று அச்வமேத
யாகங்கள் செய்தார்.

பகவான் கண்ணன் வந்து உடனிருந்து யாகங்களை செவ்வனே நடத்திக்


கொடுத்தான். அவ்வமயம் சில மாதங்கள் அஸ்தினாபுரத்தில் தங்கியிருந்த
கண்ணன், தன்னால் காக்கப்பட்ட குழந்தையோடு ஆசையாய்
விளையாடினான். பின்னர், மீ ண்டும் துவாரகை திரும்பும்போது, அர்ஜுனனை
உடன் அழைத்துக்கொண்டு திரும்பினான்.

அதன் பின்னர் ஏழு மாதங்களுக்கு கண்ணனைப் பற்றிய எந்த செய்தியும்


அஸ்தினாபுரத்தை எட்டவில்லை. தர்மபுத்ரர் கவலை கொள்ளத் துவங்கினார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 27*-*காலம்*

தன் இரு சகோதரர்களின் புதல்வர்களுக்குள் யுத்தம் மூண்டபடியால், விதுரர்,


யுத்தத்தில் பங்கேற்க மனமின்றி தீர்த்த யாத்திரை சென்றார்.

யுத்தம் முடிந்த நிலையில் நாடு திரும்பிக் கொண்டிருந்த விதுரர், வழியில்


கங்கைக் கரையில், மைத்ரேய மகரிஷியைச் சந்தித்தார். கண்ணனிடத்துப்
பேரன்பு கொண்டிருந்த அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால்,
சந்தித்ததில்லை. மைத்ரேயரும் விதுரரைப் பற்றி அறிந்திருந்தாரே தவிர
கண்டதில்லை.

ஆனால், உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் அன்பு ஒன்றே அன்றோ! எனவே,


தூரத்தே கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு
கொண்டனர். அன்புணர்வு மிகுதியான உள்ளங்களுக்கு நாவின் துணை
தேவையா என்ன?

ஒருவரை ஒருவர் ஆலிங்கனம் செய்து கொண்டனர். பின்னர், மெதுவாக


மைத்ரேயர் சுதாரித்துக்கொண்டு, நிறைய விஷயங்களைச் சொன்னார்.

விதுரரும் அவரிடம் நிறைய சந்தேகங்களையும், கேள்விகளையும் கேட்டார்.


நேரம் போவதே தெரியாமல் இருவரும் அன்பினால் கட்டுண்டு
அளவளாவினர்.

கண்ணனின் அடியார்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அவனைப் பற்றிப்


பேச நேரமும் போதவில்லை.

பின்னர், விதுரர் மெதுவாக விடை பெற்றுக்கொண்டு அஸ்தினாபுரம்


வந்தடைந்தார்.

தர்மபுத்ரர், தம்பிகள், யுயுத்ஸு, த்ருதராஷ்ட்ரன், காந்தாரி, குந்தி, சஞ்சயன்,


த்ரௌபதி, சுபத்ரை, உத்தரை, க்ருபி, மற்றும் மற்ற உறவுக்காரர்கள்
அனைவரும் வந்து உயிரைக் கை வரவேற்பதுபோல் விதுரரை வரவேற்றனர்.

மிக்க மகிழ்ச்சியுடன் தர்மபுத்ரர் விதுரருக்கு பூஜை செய்தார்.

48
களைப்பாறிய பின்னர், அனைவரும் சூழ, விதுரரிடம் தர்மபுத்ரர் கேட்டார்.

உங்கள் நிழலில் வளர்ந்த எங்களை நினைவு வைத்திருக்கிறீர்களா?

விஷம், நெருப்பு முதலியவற்றிலிருந்து நீங்களே எம்மைக் காத்தீர்.

யாத்திரையாக எங்கெல்லாம் சென்றீர்கள்?

என்னென்ன தீர்த்தம், க்ஷேத்ரங்களை தரிசனம் செய்தீர்கள்?

வழியில் துவாரகை பக்கம் சென்றீர்களா? கண்ணன் எப்படி இருக்கிறான்?


வேறு யாராவது பந்துக்களைப் பார்த்தீர்களா?

விதுரர், ஒரே ஒரு செய்தியைத் தவிர மற்ற எல்லா விஷயங்களையும்


விவரமாகச் சொன்னார்.

துக்ககரமான அந்த செய்தியைச் சொல்லி, அனைவர் மனத்தையும் புண்படுத்த


அவர் விரும்பவில்லை.

சிலகாலம் அங்கு தங்கியிருந்தார் விதுரர். மாண்டவ்ய மஹரிஷியின்


சாபத்தால் நூறு வருஷங்களுக்கு பூமியில் விதுரராகப் பிறந்திருந்தார்.
அப்போது யமனின் வேலையை அர்யமா என்பவர் செய்துவந்தார்.

காலத்தின் வேகத்தை அறிந்த விதுரர், ஒருநாள் த்ருதராஷ்ட்ரனைத்


தனிமையில் சந்தித்தார். அண்ணா, நம் எல்லோருக்குமே மரணகாலம்
வந்துவிட்டது. சீக்கிரம் கிளம்புங்கள். உங்கள் தந்தை, சகோதரர், நண்பன்,
புத்திரர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்.

உங்களுக்கும் முதுமை வந்துவிட்டது. மனிதனுக்கு உயிரோடிருப்பதில் ஆசை


அதிகம். பீமனை விஷம் வைத்துக் கொல்லத் துணிந்தீர். இப்போது வேளை
தவறாமல் வந்து நாய்க்குக் கொடுப்பது போல் உணவு வைத்து
விட்டுப்போகிறான்.

கொழுக்கட்டையை அவன் கொடுக்கும்போது அதே கொழுக்கட்டையில்


நீங்கள் அவனுக்கு விஷம் கொடுத்தது நினைவு வரவில்லையா? குல
வதுவான த்ரௌபதியை சபையில் அவமானப்படுத்திய போது
வாளாவிருந்துவிட்டு, இன்று அவள் தர்மபுத்ரரோடு வந்து தினமும்
வணங்குவதையும் ஏற்றுக்கொள்கிறீரே. அந்த யுதிஷ்டிரனை நீங்கள்
தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு நாடு கடத்தின ீர்கள்.

இப்படியாவது நீங்கள் உயிர் தரிக்கத்தான் வேண்டுமா? நீங்கள்


விரும்பாவிட்டாலும் மரணம் வந்தே தீரும். அதற்கு முன்னால்
விரக்தியடைந்து, தானாகவே அனைத்தையும் துறந்து கிளம்புபவனை தீரன்
என்று உலகம் புகழ்கிறது. ஸ்ரீ வாசுதேவனை மனத்தில் தியானித்து, இவ்வுலக
வாழ்வில் வெறுப்படைந்து, விரக்தியுடன் வடக்கு திசை நோக்கிக்
கிளம்புங்கள். இதன் பின் வரப்போகும் காலம் கலியுகமாகும். என்றார்.

49
இவ்வாறு கேட்டதும், குருடனான த்ருதராஷ்ட்ரன், மன உறுதியுடன்
பந்தங்களை உதறி, விதுரர் சொன்னபடி கிளம்பினார். பதிவ்ரதையான
காந்தாரியும் அவரை பின் தொடர்ந்தாள்.

மாலை அனுஷ்டாங்களை முடித்துவிட்டு, பெரியோர்களை வணங்குவதற்காக


த்ரௌபதியோடு வந்த யுதிஷ்டிரன் பெரிய தந்தை, பெரியம்மா, சிற்றப்பாவான
விதுரர் ஒருவரும் அரண்மனையில் இல்லாதது கண்டு திகைத்தார். பின்னர்
எங்கு தேடியும் கிடைக்காததால் அழுது அரற்றத் துவங்கினார். சஞ்சயனைக்
கேட்டார்.

பெரியப்பா எங்கே? தந்தையில்லாத காலத்தில் எங்களை அரவணைத்தவர்


அவர். பெரியம்மா எங்கே?

கண்கள் தெரியாதே. என்னிடம் ஏதாவது குறையா? சொல்லாமல் எங்கு


போனார்கள்? கங்கையில் விழுந்துவிட்டார்களா? என்றெல்லாம் கேட்க,
சஞ்சயனுக்கும் ஒன்றும் தெரியவில்லை.

ஒருவர் கலக்கமுறும் நேரத்திலெல்லாம் அரவணைப்பவர் குரு ஒருவரே.


நாரதர் அங்கு வந்து சேர்ந்தார்.

மஹரிஷியைக் கண்டதும் யுதிஷ்டிரர் அவரை வரவேற்று பாதபூஜைகள்


செய்து ஆசனம் அளித்தார். பின்னர், அவரிடம் தன் தவிப்பைச் சொன்னார்
யுதிஷ்டிரர்.

கரைகாணாத படகோட்டிபோல் தவிக்கும் தர்மபுத்ரரைப் பார்த்து நாரதர்


சொல்லலானார்.

தர்மபுத்ரரே, நீ வருத்தமடையாதே. உலகமே ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டது.


எந்த இறைவன் நம்மை ஒன்று சேர்த்து வைக்கிறானோ, அவனே பிரித்தும்
வைக்கிறான்.

இந்த தேஹம் அழிவுடையது. ஆனால், ஆத்மா அழிவில்லாதது என்பதைத்


தெரிந்து கொண்டால் நீ வருந்தமாட்டாய். அதனால், உன் பெரியோர்களைக்
குறித்து கலக்கம் அடையாதே. காலத்திலிருந்து யார் யாரைக்
காப்பாற்றமுடியும்? இப்படியாக பல உபதேசங்கள் செய்தார்.

பின்னர், இவ்வுலகில் அசுரர்களை அழிப்பதற்காக ஸ்ரீ வாசுதேவனே


கண்ணனாகப் பிறந்தார். அவரது வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன.
அவர் இவ்வுலகில் வசிக்கும் காலம் வரை நீயும் வசிப்பாயாக.

த்ருதராஷ்ட்ரர் விதுரனோடும், காந்தாரியோடும், இமயத்திற்குத் தெற்கே


உள்ள மஹரிஷிகளின் ஆசிரமத்தில் இருக்கிறார். அவர் பரம வைராக்யத்தை
அடைந்து இன்றிலிருந்து ஐந்தாம் நாள் யோகத்தினாலேயே சரீரத்தை
விடப்போகிறார். அவருக்கு நீ இடையூறாகிவிடாதே. காந்தாரியும் அவரது
யோகாக்னியில் ப்ரவேசிப்பாள். அதன் பின் விதுரர் தீர்த்த யாத்திரை செல்வார்.

என்று சொல்லி, இன்னும் பலவாறு ஆறுதல்கள் சொல்லிவிட்டு அங்கிருந்து


கிளம்பி தும்புரு மஹரிஷியோடு தேவலோகம் சென்றார்.

50
நாரதரின் தரிசனத்தால் தர்மபுத்ரரின் மனக்கலக்கம் நீங்கியது.

*ஸ்ரீமத் பாகவதம் - 28**கண்ணனின் மறைவு*

தர்மபுத்ரர் பயங்கரமான துர்நிமித்தங்களைக் கண்டார். மரம், செடி கொடிகள்


அந்தந்த பருவங்களின் பலனைத் தரவில்லை. மக்களிடையே துர்குணங்களும்
சண்டை சச்சரவுகளும் மிகுந்தன. கலியுகத்தின் அறிகுறியாக மக்கள்
பொறாமை கொண்டு, சூழ்ச்சிகளில் ஈடுபட்டனர். இவற்றைக் கண்டு
யுதிஷ்டிரர் மிகவும் கவலை கொண்டு பீமனிடம் சொன்னார். பீமா, நாரதர்
சொன்ன காலம் வந்துவிட்டதோ என்றெண்ணுகிறேன். துவாரகைக்குச் சென்ற
அர்ஜுனனை ஏழு மாதங்களாகியும் காணவில்லை. அங்கிருந்து செய்திகளும்
இல்லை. எனக்கு ஏராளமான துர்நிமித்தங்கள் தென்படுகின்றன. இடது தோள்,
துடை, கண் இவை துடிக்கின்றன. பசுக்கள் இடமாகச் சுற்றுகின்றன.

கழுதைகள் வலமாகச் சுற்றுகின்றன. புறாவைப் பார்த்தால் யமதூதனோ என்று


தோன்றுகிறது. கோட்டானும், காக்கைகளும் விடாமல் அலறுகின்றன.
நாய்கள், அரசனான என்னைப் பார்த்து தைரியமாய் குலைக்கின்றன. திக்குகள்
தெளிவின்றி உள்ளன. பூமி ஆடுகிறது. புழுதிக் காற்று வசுகிறது.
ீ சூரியன்
ஒளியிழந்து காணப்படுகிறது. கிரகங்கள் ஒன்றுக்கொன்று
மோதிக்கொள்கின்றன. நதிகளும் நீர்நிலைகளும் கலங்கியிருக்கின்றன.
பூமாதேவிக்கு பகவானின் சரண சம்மந்தம் விடுபட்டு விட்டதா? கன்றுகள்
பால் குடிப்பதில்லை. பசுக்களும் கறப்பதில்லை. தெய்வச்சிலைகள்
அழுவதைப்போல் இருக்கின்றன. ஒருவர் மனத்திலும் மகிழ்ச்சி இல்லை
என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சபைக்குள் ஒருவர்
நுழைந்தார். கண்கள் பஞ்சடைந்து, களையிழந்த முகத்துடன், தலையைத்
தொங்க போட்டுக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி வந்தார். அர்ஜுனனைப்போல்
ஜாடை இருந்தது. அடையாளம் தெரியவில்லை. அருகில் வந்ததும்
பார்த்தால், அர்ஜுனனேதான் அது. அதிர்ந்துபோனார்கள் அனைவரும்.
என்னாச்சு அர்ஜுனா?

ஓடி வந்து அவன் கரங்களைப் பற்றி முகத்தை நிமிர்த்தினான் பீமன்.

அவன் கண்களில் ஆறாகக் கண்ண ீர். முகம் அழுதழுது வங்கிப்


ீ போயிருந்தது.

விஜயா, தேர் எங்கே? படைகள் எங்கே? நடந்தா வருகிறாய்? கண்ணன் எப்படி


இருக்கிறான்? துவாரகையில் எல்லோரும் நலமா? உன்னை யாராவது
அவமதித்தார்களா? ஏதாவது ப்ரதிக்ஞை செய்துவிட்டு அதை மீ றினாயா?
பெரியோர்கள் பசியோடிருக்க நீ முதலில் சாப்பிட்டாயா? நல்ல பெண்டிரிடம்
தவறாக நடந்தாயா? யாரிடமாவது தோற்றுவிட்டாயா? துவாரகையையும்
கண்ணனையும் விட்டு வந்த பிரிவாற்றாமையா? வேறேதும் கெட்ட செய்தி
இல்லையே? அடுக்கடுக்காய்க் கேள்விகள். தலையில் அடித்துக்கொண்டு
ஓவென்று கதறி அழுதுகொண்டே தரையில் அமர்ந்தான் அர்ஜுனன்.

அழுதுகொண்டே, நம் உறவினன் என்று நினைத்த அந்த பகவான் கண்ணன்


நம்மை ஏமாற்றிவிட்டு இவ்வுலகை விட்டுக் கிளம்பி விட்டார். ஹா!
இவ்வளவு நாட்களாக என்னிடம் இருந்த வரம்,
ீ தைரியம், தேஜஸ் எல்லாம்

51
அவர் என்னருகில் இருந்தவரை இருந்தது. அவரோடு எல்லாம் போய்விட்டது.
கண்ணனாலேயே நான் தேவலோகம் வரை சென்று வந்தேன். இந்திரனை
வென்று காண்டவ வனத்தை அக்னிக்குத் தந்தேன்.

உயர்ந்த இந்திரப்ரஸ்தம் நமக்குக் கிடைத்தது. எல்லா அரசர்களும் கப்பம்


செலுத்தினார்கள். பீமன் அண்ணா ஜராசந்தனைக் கொன்றதும்
கண்ணனால்தான். யுத்தத்தின்போது நம்முடனேயே இருந்தானே!
குதிரைகளையெல்லாம் குளிப்பாட்டினான். வனவாசத்தின் போதும், அக்ஞாத
வாசத்தின்போதும் எவ்வளவு இடர்கள். அத்தனைக்கும் துணை நின்றானே!
யுத்தம் முடியும் வரை பகவானான அவன் தேர்த்தட்டிலேயே உறங்கினான்.
இவ்வளவு நாள் வில்லுக்கொரு விஜயன் என்று நான் பெயர்
வாங்கியதெல்லாம் கண்ணன் என்னருகில் இருந்ததால்தானே!
வஞ்சித்துவிட்டானே... ஒவ்வொரு நிகழ்வையும் சொல்லிச் சொல்லி பகவான்
காத்ததைச் சொல்லி அழுதான் அர்ஜுனன். கண்ணன் கிளம்பியதும் வரும்
வழியில் சாதாரணமான தீயோர் படையால் தோற்கடிக்கப்பட்டேன். அதே தேர்,
அதே காண்டீபம், அதே குதிரைகள், சண்டையிட்டதும் அதே அர்ஜுனனான
நானேதான். ஆனால், கண்ணன் இல்லையென்றதும் என் பராக்ரமம்
அழிந்துவிட்டதே! துவாரகையில் அனைவரும் அந்தணர் சாபத்தால்
அறிவிழந்து, கள்ளைக் குடித்து, மனம் தடுமாறி, கோரைப்புற்களால்
அடித்துக்கொண்டு இறந்தனர். நாலைந்து பேர் தான் எஞ்சியிருக்கின்றனர்.
பலமற்றவர்களை பலம் பொருந்தியவர்கள் வெல்வார்கள். பலமுள்ளவர்களோ
தங்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள்.

நம்மைப் பயன்படுத்தி யுத்தத்தின் மூலம் பூமியின் பாரத்தை பகவான்


குறைத்தார். பகவானின் குலமான இடையர் குலத்தை எவரால் அழிக்க
முடியும்? அதனால், அவர்களுக்குள்ளேயே சண்டையிடச் செய்து
அழித்துவிட்டார். கண்ணன் என்னை, அர்ஜுனா, பார்த்தா, நண்பா, விஜயா
என்றெல்லாம் ஆசை ஆசையாய்க் கூப்பிடுவானே! அவன் குரல் என் காதில்
கேட்டுக்கொண்டே இருக்கிறதே என்று பலவாறு புலம்பி அழுதான்.
இவ்விஷயங்களை மைத்ரேயர் ஏற்கனவே விதுரரிடம் சொல்லியிருந்தார்.
எனினும் விதுரர் துக்ககரமான இச்செய்தியைச் சொல்ல தைரியமற்றுப்போய்
சொல்லாமல் விட்டு விட்டார். நாரதரும் ஒரு சூசனை செய்துவிட்டுப்
போனார். அனைவரும் சொல்லொணாத துயரில் மூழ்கினர். எவ்வளவு
பேசினாலும், விதுரர் உற்சாகமிழந்து காணப்பட்டதையும், பின்னர்
த்ருதராஷ்ட்ரனும், காந்தாரியும் கிளம்பியதையும், நாரதர் சொன்னதையும்
தொடர்பு படுத்திப் பார்த்தார் தர்மபுத்ரர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 29*-*பாண்டவரின் ஸ்வர்காரோஹணம்*

உலகிலுள்ள அசுரர்கள் அனைவரையும் பல யுத்தங்கள் மூலமாக அழித்து


முக்தியளித்து பூபாரம் குறைத்த பெருமான், அதற்காகத் தன் உதவிக்கு
இறங்கிய பரிவாரத்தின் பாரத்தை, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
குறைத்தார். பின்னர் தன் உடலையும் மறைத்துவிட்டார். ஆம், உடலைத்தான்.
ஜ்யோதிஸாகக் கிளம்பி ஸ்ரீ மத் பாகவதத்திற்குள் புகுந்து விட்டான் என்று
சொல்கிறது மாஹாத்மியம்.

52
புராண லக்ஷணத்திற்காக ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்கள், ஸ்வர்க நரகாதி
வர்ணனைகள் எல்லாம் சொல்லப்பட்டாலும், பக்தர்களின் மேன்மையும்,
க்ருஷ்ணலீலைகளையுமே ப்ரதானமாய்ச் சொல்கிறது ஸ்ரீ மத் பாகவதம்.

ஆம், பக்தர்களின் சரித்திரத்திலும், அவனது லீலைகளை விளக்கும்


கதைகளிலும், பாடல்களிலும் அவன் பூரண ஸாந்நித்யத்தோடு
விளங்குகிறான். அதைப் படிப்பவர், பாடுபவர் நெஞ்சங்களில் குடி கொண்டு
அவர்களோடு ப்ரத்யக்ஷமாக விளையாடவும் துவங்குகிறான். தர்மபுத்ரர் கலி
பிறந்துவிட்டது, தானும் கிளம்பவேண்டிய காலம் வந்தது என்றுணர்ந்தார். தன்
பேரனான பரீக்ஷித்திற்கு முடி சூட்டினார். கார்ஹபத்யம் என்ற அக்னியை ஒரு
இஷ்டி யாகம் செய்து தன்மேல் ஏற்றிக் கொண்டார். தினமும் அக்னிஹோத்ரம்
செய்து பாதுகாக்கபடும் மூவித அக்னிகளை துறவு பூணும்போது தன்னிடமே
ஆவாஹனம் செய்துகொள்ளவேண்டும் என்பது விதி. பின்னர் அனைத்தையும்
துறந்து மனத்தை அடக்கி ப்ரும்மத்தை உணர்ந்தார். மரவுரி உடுத்து,
பேச்சையடக்கி, உணவை விரித்து, தலை விரிகோலமாய், பார்ப்பவர்கள்
பித்தென்று எண்ணும்படியாக ப்ரும்மத்தை த்யானம் செய்துகொண்டு
அரண்மனையைவிட்டு வெளியேறி வடதிசை நோக்கிக் கிளம்பினார்.

மற்ற பாண்டவர்களும் மனதில் ஸ்ரீ கிருஷ்ணனையே தியானம் செய்து


அண்ணனின் வழிச் சென்று நற்கதியை அடைந்தனர். த்ரௌபதியும் தன்னைத்
தன் கணவர்கள் எதிர்பார்க்காமல் சென்றதை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ண த்யானம்
செய்து அவரையே அடைந்தாள். இந்த பரம மங்கலமான சரித்திரத்தைச்
சிரத்தையுடன் கேட்பவர்கள் பகவானிடம் பக்தி பெற்று மோக்ஷத்தை
அடைவார்கள் என்று பலச்ருதி சொல்லப்பட்டிருக்கிறது.

வாழ்வாங்கு வாழ்ந்த போதிலும், மரணத்தை எவ்வாறு அமைதியுடன்


எதிர்கொள்ளவேண்டும் என்று தெளிவாக உரைக்கிறது இந்நிகழ்வு. பரீக்ஷித்
பெரியோர்கள் அறிவுரைப்படி செவ்வனே ஆட்சி செய்துவந்தான். அவன்
பிறந்தபோது ஜோதிட வல்லுநர்கள் உரைத்த அத்தனை நற்குணங்களையும்
கொண்டு பேரரசனாகத் திகழ்ந்தான். ஸ்வர்கபுரிபோல் பூமியை மாற்றினான்.
தன் மாமன் உத்தரனின் மகளான இராவதியை மணந்து ஜனமேஜயன்
முதலான நான்கு புதல்வர்களைப் பெற்றான். ஒரு சமயம் திக் விஜயம்
செல்லும்போது, ஓரிடத்தில் குரூரமாக நீசன் போலிருந்த ஒருவன், அரச
வேஷம் தாங்கி ஒரு காளையையும், பசுவையும் காலால் உதைப்பது கண்டு
அவனைப் பிடித்து தண்டித்தான்.

*ஸ்ரீமத் பாகவதம் - 30*-*கலியை அடக்கிய வரன்*


சௌனகர் கேட்டார் அந்த நீசன் கலிபுருஷனோ? பசுவைக் காலால்


உதைப்பவன் வேறு யாராய் இருக்கும்? மேலும் அவர் ஒன்று கேட்கிறார்.
இந்நிகழ்வு கண்ணனோடு தொடர்புடையதானால் விவரித்துக் கூறுங்கள்.
இல்லையெனில் வேண்டாம். பகவானைப் பற்றியோ, அவனது பக்தர்களைப்
பற்றியோ கூறாமல் வேறு விஷயங்களைச் சொல்வது வெட்டிப்பேச்சாகும்.
அதனால் யாது பயன்?

எவ்வளவு அருமையான கேள்வி?

53
மேலும் இன்னொரு ஆச்சர்யமான விஷயமும் சொல்கிறார். வரும் யுகத்தில்
மனிதர்கள் அல்ப ஆயுள் கொண்டவர்கள். காலத்தை வணே ீ கழித்து
மரணமடைவார்கள். ஆனால் முக்திக்கும் ஆசைப்படுவார்கள்.
அவர்களுக்கெல்லாம் நன்மை செய்யும் பொருட்டு இங்கு
நைமிஷாரண்யத்தில் ஸத்ரவேள்வி நடக்கிறது. நேரில் வருகை தரும்படி
யமதர்மராஜனை அழைத்து விட்டார்கள். அவரும் வந்துவிட்டார். உள்ளே
வந்துவிட்டால் யாகம் முடியும்வரை அவர் திரும்பிப் போக இயலாது. அவரது
வேலையும் நடக்காது. அதனால் அவர் இங்கிருக்கும் வரை ஒருவருக்கும்
மரணம் என்பதே இல்லை. மனிதர்கள் அனைவருக்கும் இங்கு நீங்கள்
சொல்லும் கதையும் முழுமையாகப் போய் சேரவேண்டும். எனவே,
கலியுகத்திற்கேற்ற பகவத் கதைகளையே கூறுங்கள் என்றார்.

ஸாதுக்கள் நம் மீ து காட்டும் கருணையையும், உதாரகுணத்தையும் சொல்ல


வார்த்தைகள் சிறைப்படுகின்றன. ஸூதர் சொல்லலானார்.

பரீக்ஷித் திக்விஜயத்திற்குக் கிளம்பினான். செல்லுமிடம்தோறும், கண்ணனின்


பெருமை, முன்னோரின் புகழ், அவன் காப்பாற்றப்பட்ட சரித்ரம்,
எல்லாவற்றையும் அவனுக்கு செவிகுளிரச் சொன்ன ஸாதுக்களுக்கு
ஏராளமான வெகுமதிகளை வழங்கினான். கண்ணன் அவனது குடும்பத்தில்
செய்த லீலைகளையும் உதவிகளையும் பூமண்டலம் முழுவதும் எங்கு
சென்றாலும் யாராவது அவனுக்குச் சொன்னார்கள்.

அவற்றை கேட்டு கேட்டுக் கண்ணன் மீ து அபாரிமிதமான பக்தியை


வளர்த்துக்கொண்டான். சிலருக்கு தன் முன்னோர்கள் உதவி செய்திருந்தனர்.
சிலர் கண்ணனும் அர்ஜுனனும் இணைந்து தங்கள் தேசத்திற்கு வந்து
செய்தவற்றை நினைவு கூர்ந்தனர். இப்படியாக அவன் பூலோத்தில் ஸஞ்சாரம்
செய்கையில் ஒருநாள் ஒற்றைக்காலுடன் ஒரு எருது பசுவின் மீ து சாய்ந்து
நின்று கொண்டிருந்ததைக் கண்டான். அவ்விரண்டும் அழுதுகொண்டிருந்தன.
எருதின் ஒரே ஒரு காலையும் விகாரமான ஒருவன் கத்தியைக் கொண்டு
வெட்டத் தயாராய் இருந்தான். மூவரையும் உற்றுப்பார்த்தான் பரீக்ஷித்.
முன்னோர்கள் காட்டிய நெறியில் தவறாது ஒழுகுவதால் பசுவும், காளையும்
பேசியது அவனுக்குப் புரிந்தது. எருது சொன்னது, பூமிதேவியே, உன்
பாரத்தைத் தீர்க்கவே கண்ணன் அவதாரம் செய்தார். அவரது லீலைகளை
நினைத்தாலே முக்தி கிட்டுமே. விட்டுப் போய்விட்டார் என்று
வருந்துகிறாயா? தேவர்களும் உன்னைப் பூஜிப்பார்களே. உன் சௌபாக்யம்
உன்னை விட்டுப்போனதா? இளைத்திருக்கிறாயே..

பூமிதேவி சொன்னாள், தர்மதேவரே, தாங்கள் அறியாததா? பகவானின்


கருணையால், தவம், ஒழுக்கம், தயை, ஸத்யம் என்ற நான்கு கால்களுடன்
விளங்கின ீர்கள். இப்போது சத்யம் என்ற ஒரு பாதம்தான் மீ தமிருக்கிறது.
எப்படியோ அதை வைத்துக்கொண்டு ஜீவிக்கிறீர். அதையும் கலிபுருஷன்
ஊனமாக்கப் பார்க்கிறான். புருஷோத்தமனின் பாதம் என்மீ து
படும்போதெல்லாம் நான் புளகாங்கிதம் அடைந்தேனே. அவர் பிரிவை
யார்தான் பொறுப்பார்?

ஸரஸ்வதி நதிக்கரையில் நடந்த இவ்வுரையாடலைக் கேட்டான் பரீக்ஷித்.


அம்மனிதனைப் பார்த்து நான் காத்து நிற்கும் இவ்வுலகில் பலமற்றவர்களைத்
துன்புறுத்தும் நீ யார்? அரசன் போலிருந்தாலும், நீசனாய் இருக்கிறாய்.

54
கண்ணனும் அர்ஜுனனும் சென்றபின் கேட்க யாருமில்லை என்ற
தைரியத்தில் கொடுமை செய்கிறாய்.. பூமிதேவியைப் பார்த்து சொன்னான்.
துன்பமடைந்தவர்களைக் காப்பதே அரசனின் முதல் கடைமை. எந்த
ஆட்சியில் தீயோர்களைக் கண்டு பயம் கொள்கிறார்களோ அந்த அரசனது
புகழ், ஆயுள், செல்வம், உயர்ந்த கதி எல்லாம் அழிகின்றன. உங்களைத்
துன்புறுத்துபவன் யார்? தர்மதேவதை சொன்னது துன்பத்திற்குக் காரணம்
என்ன என்பதைச் சாஸ்திரம் பலவாறு கூறுகிறது. சிலர் விதி என்றும், சிலர்
கர்மா என்றும், சிலர் இயற்கை சிலரோ தெய்வம்தான் என்றும்
சொல்கிறார்கள். பரீக்ஷித், அதைக்கேட்டு, நீங்கள் பூமாதேவியா? இவரே
தர்மதேவதையாய் இருக்கவேண்டும். இம்மனிதன் கலிபுருஷனோ? என்று
வினவ, பூமிதேவி அமைதி காத்தாள். அதர்மத்தைச் செய்தவனுக்கு எந்த
தண்டனை உண்டோ அதே நரகம் காட்டிக் கொடுப்பவனுக்கும் உண்டு என்று
வாளாவிருக்கிறீர்களா? நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இவனை
தண்டிக்கிறேன் என்று கூறி மிகுந்த கோபம் கொண்டு வாளை உருவி, அந்த
மனிதனை வெட்டத் துணிந்தான். பயந்துபோன அம்மனிதனோ பரீக்ஷித்தின்
காலைப் பிடித்துக்கொண்டு அபயம் அபயம் என்று அலறினான். அபயம்
என்பவனைக் கொல்வது தகாதென்றெண்ணி, வாளை உறையில் போட்டான்
பரீக்ஷித். சரி நான் உன்னைக் கொல்லவில்லை. அபயம் வேண்டுமெனில் என்
ஆட்சி அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் நீ இருக்கலாகாது. உடனே வெளியேறு.
கலி சொன்னான், சக்ரவர்த்தியே, இப்புவி முழுதிற்கும் நீங்களே அரசன். நான்
எங்கு இருப்பதென்று நீங்களே கூறுங்கள். தங்கள் கட்டளைக்குக் கீ ழ்ப்
படிகிறேன்.

சற்று யோசித்த பரீக்ஷித், சூதாட்டம், மது, அறநெறியற்ற, கற்பில்லாத மகளிர்,


ப்ராணிவதம் ஆகிய நான்கும் இருக்கும் இடங்களில் நீ வசிக்கலாம். அரசே,
எனக்கு இவை போதாது; இன்னும் சில இடங்கள் வேண்டும். சரி,
தங்கமிருக்கும் இடத்தைக் கொள் என்றதால், பொய், மதம், பொருந்தாக் காமம்,
பகை ஆகிய இடங்களும் கலிக்குக் கொடுக்கப்பட்டன. மேற்சொன்ன
இடங்களில் கலி வசிக்கலானான். மீ ண்டும் தயை, ஸத்யம், ஒழுக்கம், தவம்
ஆகியவை செழித்தன.

*ஸ்ரீமத் பாகவதம் - 31*-*அந்தணச் சிறுவனின் சாபம்*

சான்றோனான பரீக்ஷித் இவ்வுலகில் அரசனாக விளங்கிய வரை கலியின்


ஆட்டம் செல்லவில்லை. பகவான் பூமியிலிருந்து கிளம்பியதுமே கலிபுருஷன்
வந்துவிட்டான். ஆனால், வண்டு மலரிலுள்ள தேனை மட்டும்
பருகுவதுபோல், பரீக்ஷித் எல்லாவற்றிலும் உள்ள நன்மைகளை மட்டும்
பார்த்ததால், கலியிடம் வெறுப்பு கொள்ளாமல் அவனை விட்டுவிட்டான்.
கலியுகத்தில் புண்ய கர்மாக்கள் செய்ய வேண்டுமென்று நினைத்தாலே
போதும், அவற்றின் நற்பலன் கிடைத்துவிடும். தீய செயல்களை நினைத்தால்
பயனில்லை. செய்தால் மட்டுமே அதன் பலன் கிட்டும். கலிபுருஷன்
அறிவிலிகளிடம்தான் தன் கைவரிசையைக் காட்டுவான். விவேகிகளை
அவனால் ஒன்றும் செய்ய இயலாது. ஒருநாள் பரீக்ஷித்
வேட்டையாடுவதற்காக காட்டிற்குள் சென்றான். ஒரு குறிப்பிட்ட கால
இடைவெளியில் வேட்டையாடுவது அரச தர்மம். காடுகள் அதிகம். அவற்றில்
விலங்குகளும் அதிகம். அரசனுக்குத்தான் வேட்டையாடும் அதிகாரம்
வழங்கப்பட்டது. அப்போதுதான் துஷ்ட மிருகங்களின் எண்ணிக்கை

55
அதிகமாகாமல், அவற்றால், நாட்டு மக்களுக்கு துன்பம் ஏற்படாமல்
காக்கமுடியும். அரசர்களும் வேட்டையாடும் தர்மம் அறிந்தவர்கள்.
இஷ்டம்போல் கொன்று குவிக்கமாட்டார்கள்.

காட்டில் அலைந்தலைந்து மிகவும் களைத்துப்போன பரீக்ஷித் தன்


படைகளைப் பிரிந்து வெகுதூரம் சென்று விட்டான். பசியும் தாகமும் அவனை
மிகவும் வாட்டியது. நீர்நிலைகள் ஏதும் தென்படவில்லை. ஒரு குடிசை
கண்ணில் பட்டது. அதன் வாயிலில் முனிவர் ஒருவர் கண்களை மூடி
த்யானத்தில் ஆழ்ந்து நிர்விகல்ப ஸமாதியில் இருந்தார். அரசன் அவரருகில்
சென்று அழைத்தான் பதில் இல்லை. மீ ண்டும் அழைத்தான் ம்ஹூம். அவர்
ஏனென்று கேட்கவில்லை. மறுபடி மறுபடி அழைத்துப் பார்த்தான்.
முனிவரிடம் அசைவே இல்லை. குடிசைக்குள் சென்று பார்த்தான். நீர்
இருக்கும் இடமும் தெரியவில்லை. தெரிந்தோ தெரியாமலோ துஷ்டர்களிடம்
சிறிது நேரம் பழகினாலும், அதன் பாதிப்பு விடாமல் தொடரும். அரசனோ
கலிபுருஷனைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறானே. பசியோடும் தாகத்தோடும்
அலைந்து அரசன் பலவனமான ீ தருணத்தில் கலி தன் வேலையைத்
துவங்கினான்.

தன்னை அடக்கிவிட்ட அரசனை வழ்த்தத்


ீ தருணம் பார்த்துக்
கொண்டிருந்தான் கலி. பொதுவாகவே, எதைக் கேள்விப்பட்டாலும் பரீக்ஷித்
அதை ஆராய்ந்து சோதித்தபின்னரே ஏற்றுக்கொள்வான். அதாலேயே
அவனுக்கு பரீக்ஷித் என்ற பெயர் மிகவும் பொருத்தம். இப்போது விநாச காலே
விபரீத புத்தி என்று முனிவரைச் சோதிக்கும் எண்ணம் வந்துவிட்டது. இவர்
நிஜமாகவே தியானத்தில் இருக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று
சந்தேகம் வந்தது. எப்போதும் மேலோரோடு பழகி, சான்றோனாக
விளங்குபவன், கர்பத்திலேயே பகவத் தரிசனம் பெற்றவன், புகழ் பெற்ற
பரம்பரையைச் சேர்ந்தவன் பரீக்ஷித். அரசனே தவம் செய்பவர்களைக்
காக்கவேண்டும். அவனே புத்தி தடுமாறி ஒரு காரியம் செய்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு செத்த பாம்பின் உருவில் கலியே கிடந்தான்
போலும். அதை ஒரு அம்பினால் எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டான்.
அப்போதும் அவர் அசையவில்லை.

நிஜமாகவே தியானத்தில்தான் இருக்கிறார் என்று புரிந்துகொண்டு அவரைத்


தொந்தரவு செய்யவேண்டாம் என்று நினைத்துக் கிளம்பினான். அவர்
நடிக்கவில்லை என்றுதான் தெரிந்துவிட்டதே. போகும்போது பாம்பை எடுத்துக்
கீ ழே போட்டுவிட்டுப் போயிருக்கலாம். ஜடாமுடியும், மரவுரியும்,
ருத்ராக்ஷங்களும் அலங்கரிக்க, அந்த சமீ கர் என்ற மஹரிஷியைப் பார்த்தால்
பரமேஸ்வரன் என்று நினைத்தானோ, கழுத்தில் பாம்புதான் குறை.
இருந்துவிட்டுப்போகட்டும் என்று அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பினான்.
சற்று நேரத்தில் சமீ க மஹரிஷியின் புதல்வன் ச்ருங்கி என்ற சிறுவன் அங்கு
வந்தான்.

தந்தையின் கழுத்தில் செத்தபாம்பைப் பார்த்ததும் வெகுண்டான். யார் இதைச்


செய்திருப்பார்கள் என்று சுற்றுமுற்றும் தேடினான். ஒருவரும் காணவில்லை.
சிறுவனாக இருப்பினும் உபநயனம் ஆகியிருந்தது. காயத்ரி ஜபத்தின் பலனால்
மஹா தேஜஸ்வியாய் இருந்தான். அவனுக்கு ஞான த்ருஷ்டியும் இருந்தது.
கண்களை மூடி த்யானத்தில் என்ன நிகழ்ந்ததென்று அறிந்தான்.
சிறுவனாயிற்றே. தந்தைக்கொரு அவமானம் என்றதும் தாங்க

56
முடியவில்லை. அவனிடம் தபோபலம் மிகுந்திருந்தது. தபோதனர்களாலேயே
நாடு செழிக்கிறது. வட்டில்
ீ சோறு உண்ணும் நாய், எஜமானனையே
கடிப்பதுபோல, மஹான்களின் தவத்தால் நாட்டை சுபீக்ஷமாக வைத்திருக்கும்
அரசன், அவர்களைக் காக்காமல், தொல்லை கொடுப்பானா? அரசனான நீ
பலவான், என்று தானே இக்காரியம் செய்யத் துணிந்தாய்? உன் அஸ்திரம்
பெரிதா? இந்த அந்தணச் சிறுவனின் வஜ்ராயுதம் போன்ற வாக்கு பெரியதா?
என்று பார்க்கலாமா? செத்த பாம்பைத்தானே உன்னால் போடமுடிந்தது. இதோ
என் சாபம் ஓ பரீக்ஷித்தே! இன்றிலிருந்து ஏழாம் நாள், பாம்புகளிலேயே
உயர்ந்ததும் தேவலோகத்தில் வசிப்பதுமான தக்ஷகன் என்ற பாம்பு கடித்து நீ
இறக்கக் கடவாய்! என்று சாபமிட்டான். சற்று நேரம் கழித்து தியானம் கலைந்த
சமீ கர், ச்ருங்கியின் முகத்தைப் பார்த்தார். சாபமிட்டுவிட்டதால், அவனது
தேஜஸ் குறைந்திருந்தது.

புத்திசாலியான தபோதனர்கள் சாபமிட்டு தவத்தின் சக்தியைக் குறைத்துக்


கொள்ள மாட்டார்கள். தீங்கு நேரும்போது, இறைவனிடம் சரணாகதி
செய்துவிட்டு அவன் நாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்தால், பகவானால்
சும்மா இருக்கமுடியாது. ஓடோடி வருவான் என்று தெரியும் அவர்களுக்கு.
இவ்விஷயத்தை ஏராளமான மஹான்களின் சரித்ரத்தில் காணலாம்.
விஸ்வாமித்திரரும் ஒவ்வொரு முறையும் தவத்தின் சக்தியை வெவ்வேறு
விதமாக விரயம் செய்துவிட்டு மீ ண்டும் தவம் செய்து கொண்டிருந்தார்.
ஆனால், ஞானத்தை அடைந்ததும், தாடகையும், மாரீசனும், சுபாகுவும்
எவ்வளவு தொந்தரவுகள் கொடுத்தபோதும் சாபம் கொடுக்காமல், ராமனை
அழைத்துவந்தார். தண்டகாரண்ய காட்டில் இருந்த முனிவர்களும் அவ்வாறே
இருந்ததைக் காணலாம். ஞான த்ருஷ்டியால் அனைத்தையும் அறிந்தார்
சமீ கர்.

*ஸ்ரீமத் பாகவதம்- 32*-*தேடி வந்த ஸத்குரு*

பகவன் நாமம் சொல்பவர்களை கலி ஒன்றும் செய்வதில்லை. மிக மிகச்


சுலபமான நாம ஸாதனத்தை ஆதரிப்பதாலேயே கலி ஸாது என்று
மஹாத்மாக்கள் கூறுகிறார்கள். அன்பினால் அடக்கப்பட்டவர்கள் அன்பை
மீ றமாட்டார். பராக்ரமத்தால் அடக்கப்பட்டவரோ மறுபடி வழ்த்த
ீ சமயம்
நோக்குவார். சிறுவன் ச்ருங்கி அரசனுக்கு சாபமிட்டதை ஞானத்ருஷ்டியில்
உணர்ந்த ஸமீ க மஹரிஷி மிகவும் வருந்தினார். அவனைக் கடிந்துகொண்டார்.

மகனே! அரசன் என்ற பெயரில் ஸ்ரீ மன் நாராயணனே இவ்வுலகைக்


காக்கிறான். அரசன் இல்லாத நாட்டில் திருடர்கள் மலிந்து மக்கள்
ஆட்டுமந்தை போல் அழிக்கப்படுவார்கள். அரசன் இல்லாவிடில் நாட்டில்
குழப்பம் ஏற்படும். அனைவரும் தத்தளிப்பார்கள். கலவரங்கள் மலியும்.
அத்தனை பாவமும் நம்மை வந்து சேரும். மக்களிடம் ஒழுக்கக் கட்டுப்பாடு
குறையும். பரீக்ஷித் தர்மவான். மக்களைக் காப்பவன். பக்தன். அரசர்களுள்
ரிஷி போன்றவன். பசியாலும் தாகத்தாலும் வாடியிருந்த அவனை நாம்
அன்போடு கவனித்திருக்க வேண்டும். அவனைச் சபித்தல் தவறு.

இறைவா! முதிர்ச்சியற்ற இந்த பாலகன் குற்றமற்ற அரசனுக்குச் செய்த


தீங்கை மன்னித்து விடுங்கள். உண்மையான பக்தர்கள், தங்களைத்
துன்புறுத்துபவருக்கு தீங்கிழைக்கமாட்டார்கள். இவ்வாறு வருந்திய முனிவர்

57
அரசனின் தவறை ஒரு பொருட்டாக கருதவே இல்லை. பிறகு தன் வேறு
இரண்டு சீடர்களை அழைத்து, இந்த சாபத்தை அரசனுக்குத் தெரியப்படுத்தி
விட்டு வாருங்கள். அவன் ஏதாவது பரிகாரம் செய்து கொள்ளட்டும் என்று
சொல்லி அனுப்பினார். ஏதோ ஒரு வேகத்தில் பசியாலும் தாகத்தாலும்
ஆட்பட்டு தவறு செய்து விட்ட பரீக்ஷித், அரண்மனைக்குச் சென்றதும் மனம்
வருந்தத் துவங்கினான். எப்பேர்ப்பட்ட தவறிழைத்தேன்? முனிவரை
அவமதித்தேனே! இதற்கு எனக்கு சரியான தண்டனை கிடைத்தால் ஒழிய என்
மனம் அமைதியடையாது. உயர்ந்த பரம்பரையில் வந்துவிட்டு இப்படி ஒரு
தவறு செய்தேன். முனிவர்கள், தெய்வம், முன்னோர்கள் அனைவரும்
பழிக்கும் இழிசெயல் செய்த எனக்கு ஏதாவது பெரிய தண்டனை அவசியம்
வேண்டும். அது தான் ப்ராயச்சித்தம் என்று புலம்பினான்.

முனிவரின் சீடர்கள் வந்து ச்ருங்கியின் சாபத்தைச் சொன்னார்கள். சபையோர்


அனைவரும் துடித்துப் போனார்கள். ஒருவர் ம்ருத்யுஞ்ஜய யாகம் செய்யலாம்
என்றார். ஒருவர் பாம்புகள் வராதபடி கருடனுக்கு ப்ரீதி செய்யலாம்
என்றார்கள். சபையில் ஒவ்வொருவரும் ஆளுக்கொன்று சொன்னார்கள்.
பரீக்ஷித் போதும் என்ற ஒற்றைச் சொல்லால் அனைவரையும் அடக்கினான்.
இந்த சாபத்திற்கு நான் தகுதியானவன் தான். தண்டனையை ஏற்கிறேன்.
எனக்கு ஏழுநாள்களில் மரணம். மரணம் வருவதற்குள் நான் என்னென்ன
செய்யவேண்டுமோ அதைச் செய்வேன் என்று சொல்லி, தன் மகன்
ஜனமேயஜயனுக்கு அக்கணமே அரசனாக பட்டாபிஷேகம் செய்வித்தான்.
பின்னர் அனைத்தையும் துறந்து மரவுரி உடுத்து, பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின்
சேவையே சிறந்தது என்று கருதி, பகவானிடமே மனத்தை இருத்தி கங்கைக்
கரையை அடைந்தான். அங்கு அமர்ந்து ப்ராயோபவேசம் அதாவது
வடக்கிருத்தலை மேற்கொண்டான்.

வடக்கிருத்தல் என்பது வடக்கு நோக்கி அமர்ந்து உயிர் பிரியும் வரை உண்ணா


நோன்பிருத்தல். பரிக்ஷித் ஸ்ரீ க்ருஷ்ணனையே த்யானம் செய்யத்
துவங்கினான்.

அவனது உயர்ந்த செயலைக் கண்ட மேலோர் அனைவரும் அங்கு கூடினர்.


ஸாதுக்களே இவ்வுலகைத் தூய்மை செய்கின்றனர். தீர்த்த யாத்திரை என்ற
பெயரில் உண்மையில் அவர்கள் நதிகளையும் தீர்த்தங்களையும்
புனிதமாக்குகின்றனர். அதனாலேயே எவ்வளவு பேர் வந்து ஸ்நானம் செய்து
தங்கள் பாவங்களைப் போக்கிகொண்டாலும் புண்ய நதிகள் ஸாந்நித்யத்தை
இழக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.

கங்கைக் கரையில் பரீக்ஷித்தைக் காண, அத்ரி, வசிஷ்டர், ச்யவனர், சரத்வான்,


அரிஷ்டநேமி, ப்ருகு, ஆங்கிரஸ், பராசரர், விஸ்வாமித்ரர், பரசுராமர், உதத்யர்,
இந்த்ரப்ரதமர், இத்மவாஹர், மேதாதிதி, தேவலர், ஆர்ஷ்டிஷேணர், பரத்வாஜர்,
கௌதமர், பிப்பலாதர், மைத்ரேயர், ஔர்வர், கவஷர், அகஸ்தியர், வியாஸர்,
நாரதர், தேவரிஷிகள், ப்ரும்மரிஷிகள், அருணன் முதலிய இன்னும் பல
ரிஷிகளும் வந்து சேர்ந்தனர்.

பரீக்ஷித் அனைவரையும் வணங்கினான்.

சான்றோர்களான தங்களைக் காண்பதே பெரும் பாக்யம். என்னைப் போன்று


நிந்திக்கத்தக்க செயலைச் செய்த அரசர்கள், தங்கள் பாத தீர்த்தத்தை

58
தலையில் தெளித்துக்கொள்ளவும் அருகதையற்றவர்கள். கொடிய செயல்
செய்த என்னை தக்ஷகன் வந்து நன்றாகக் கடிக்கட்டும். நாங்கள் உங்களிடம்
வணக்கமுடையவன் என்று நீங்கள் தெரிந்து கொண்டாலே போதும். நான்
மன்னிப்பு வேண்டவில்லை. தண்டனைக்கே தகுதியானவன். தக்ஷகன் வரும்
வரையில் நீங்கள் எனக்கு பகவானின் கதைகளைக் கூறுங்கள். உங்கள்
அனைவருக்கும் என் நமஸ்காரங்கள்.

அவனது உயர்ந்த குணத்தைக் கண்ட மஹரிஷிகள் மகிழ்ந்து அவனை


ஆசீர்வதித்தனர். அரசாட்சியையே துறந்து நீ இப்படி வந்தது ஒன்றும்
வியப்பல்ல. உன் முன்னோரின் குலப்பெயரைக் காப்பாற்றிவிட்டாய்.
ஸாதுக்களையே தெய்வமாய் வணங்கும் பரம்பரையில் வந்த நீ
வடுபேறடையும்
ீ வரை நாங்கள் அனைவரும் உன்னுடனேயே இருப்போம்.

மீ ண்டும் மகிழ்ந்து நமஸ்காரம் செய்த பரீக்ஷித், கேட்டான் - ஒருவன் மரணத்


தறுவாயில் செய்யவேண்டியது என்ன? ஒவ்வொரு முனிவரும் ஒரு வழியை
விவாதம் செய்யத் துவங்கினர். அப்போது, மனம்போனபடி உலாவுபவரும்,
திகம்பரரும், ப்ரும்மானந்தத்திலேயே எப்போதும் திளைப்பவருமான ஸ்ரீ சுக
மஹரிஷி அங்கு வந்தார். ஒருவன் உண்மையாக பக்தி செய்து இறைவனை
அடைய விரும்புவானாயின் அவனைத் தேடி ஒரு உத்தம குரு தானே வந்து
சேர்வார் என்பது ஸத்யமாயிற்று.

*ஸ்ரீமத் பாகவதம் - 33*-*மஹான்களின் கருணை*

வயதோ பதினாறு. மென்மையான பாதங்கள், மென்மையான கைகள்,


மென்மையான உடல், கன்னங்களும் மென்மையானவை. மனோஹரமான
உருவம், அகன்ற கண்கள், வளைந்த மூக்கு, சமமான காதுகள், அழகான
புருவங்கள், சங்கு போன்ற கழுத்து, பரந்துயர்ந்த திருமார்பு, நீர்ச்சுழல் போன்ற
தொப்புள்கொடி, மூன்று மடிப்புடைய வயிறு, எண்டிசைகளே ஆடை, திகம்பரர்,
பரந்து விரிந்த சுருள் சுருளான கேசம், நாராயணன் போல் காந்தி, நீலமேக
வர்ணம், நீண்ட கைகள், அழகான புன்சிரிப்பு, பெண்கள் அனைவரும் விரும்பும்
அழகு, தன் ஒளியை மறைத்து உலா வருபவர் ஸ்ரீ சுகர். அவரைக் கண்டதும்,
முனிவர்கள் அனைவரும் சட்டென்று ஆசனத்திலிருந்து எழுந்தனர்.

இவ்வாறு எதேர்ச்சையாக அதிதியாக வந்த ஸ்ரீ சுகரை பரீக்ஷித் வணங்கி


வரவேற்றான்.

எதேர்ச்சையாக என்பதற்கு பகவத் க்ருபையால் என்று பொருள்


சொல்லப்படுகிறது. எனவே, ஸ்ரீ சுகர் அங்கு வந்தது இறைவனின் ஸங்கல்பமே.
தானாக யாரும் குரு என்று கிளம்பமுடியாது. குரு என்பவர் நம்மை
ஆட்கொள்ள இறைவனால் அனுப்பப்படுபவர் ஆவார். அனைவரும்
கொண்டாட அமர்ந்தார் குருதேவர்.

சான்றோர்களுக்கெல்லாம் சான்றோராக விளங்கும் ஸ்ரீ சுகர் நக்ஷத்திரங்களால்


சூழப்பட்டு சந்திரன் ஒளிவசுவதுபோல்,
ீ மஹரிஷிகளாலும், ராஜரிஷிகளாலும்,
ப்ரும்மரிஷிகளாலும் சூழப்பட்டு, ஒளிப்பிழம்பாகக் காட்சியளித்தார். பரீக்ஷித்
பேசினான். ப்ரும்மரிஷித் திலகமே! தாங்கள் கருணையோடு இங்கு வந்து
என்னைப் புனிதனாக்கின ீர்கள். என் முன்னோர்களான பாண்டவர்களிடம்

59
அன்பு கொண்ட ஸ்ரீ க்ருஷ்ணன் அவர்களது பேரனான என்னிடமும் அன்பு
கொண்டார் போலும். இல்லையெனில் வெகுவிரைவில் மரணிக்கப்போகும்
எனக்கு, எவராலும் அறியவொண்ணா நடையுடைய சித்தபுருஷரான தங்களின்
தரிசனம் எப்படிக் கிடைக்கும்? உங்களால்தான் மற்றவர்களுக்கு
அனுஷ்டானங்களில் சித்தி ஏற்படுகிறது. மரணத் தருவாயில் இருக்கும்
ஒருவன் எதைக் கேட்கவேண்டும்? எத்சி ஜபம் செய்யவேண்டும்? என்ன
செயல் செய்யவேண்டும்? எதை நினைக்க வேண்டும்? என்ன பஜனை
செய்யவேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது?
என்பதைக் கூறுங்கள்.

தங்களைப்போன்ற சான்றோர் இல்லறத்தாரின் வட்டு


ீ வாயிலில் மாடு
கறக்கும் நேரம் கூடத் தாமதிப்பதில்லையே.

ஸ்ரீ சுகர் மிகவும் இனிமையான குரலில் பதிலிறுக்கத் துவங்கினார்.


மஹான்களுக்குக் கருணை செய்வது என்பது ஒரு அவஸ்தை.
அவர்களிடமிருந்து எப்போதும் கருணை வழிந்துகொண்டே இருக்கும். அதை
அவர்கள் யார் மீ தாவது பொழிந்துகொண்டே இருப்பார்கள். கருணை
செய்யாமல் அவர்களால் ஒரு கணம்கூட இருக்க இயலாது. பசுமாட்டை
தினமும் ஒரு நேரத்தில் பால் கறப்பார்கள். ஒருநாள் கோனாருக்கு ஏதோ
வேலை வந்ததால் வரமுடியாமல் போனால், மாடு பாலைக்
கறந்துவிடவேண்டும் என்று தவிக்கும். வருவோர் போவோரை அழைத்துப்
பார்க்கும். நேரம் ஆக ஆக யாரும் வரவில்லையெனில், தானே மடிமீ து
கால்களைப் போட்டு பீய்ச்சி அடித்துவிடும்.

அதுபோலத்தான் மஹான்களும். கருணை அவர்களது இயல்பு. எதிரில்


இருப்பவரின் தகுதி முக்கியமில்லை. உத்தவனும் கண்ணனின்
கண்களிலிருந்து வழியும் கருணை வணாகக்ீ கூடாதென்று அவனைத் தனியே
விடாமல் எப்போதும் அவனுடனேயே இருந்து அதை வாங்கிக் கொள்வதாய்ச்
சொல்கிறான். ஸ்ரீ மத் பாகவதத்தை ஸ்ரீ சுகாசாரியார் தந்தையான வியாஸ
பகவானிடமிருந்து பெற்றதிலிருந்து அவரது நிலைமை மாறிவிட்டது.
எப்போதும் நிர்விகல்பமான ப்ரும்மத்தில் லயித்திருந்த அவர் மனத்தில்
ப்ரேமை பொங்கி வழிய ஆரம்பித்தது.

தான் பெற்ற ஆனந்தத்தை யாருக்கேனும் பகிர்ந்து கொடுக்கத் தவித்துக்


கொண்டிருந்தார். மனிதர்களை வெறுத்து ஏகாந்தத்தில் சஞ்சரித்துக்
கொண்டிருந்தவர், ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்ததும் அதை உலகோர்க்குப் பகிர
விழைந்து தகுந்த பாத்திரத்தைத் தேடினார். ஒவ்வொரு வடாகச் ீ சென்று
வாயிலில் நின்றனர். கலியுகம் துவங்கி விட்டிருந்ததால், சில வடுகளில் ீ
சண்டைச் சத்தம் கேட்டது. சில வடுகளில்
ீ மக்கள் ஏதோ விளையாட்டில்
மூழ்கியிருந்தனர். சில வடுகளில்
ீ பிக்ஷைக்கு வந்திருக்கிறார் என்று நினைத்து
ஏதும் சொல்லாமல் உள்ளே சென்றனர். இவர்களுக்கெல்லாம் பாகவதம்
கேட்கத் தகுதியில்லை என்று நினைத்தவர், ஒரு கடாக்ஷம் செய்து விட்டுப்
போனார். ஒருக்கால் அப்படி அவர் கண்களிலிருந்து விழுந்த ஒரு துளிக்
கடாக்ஷம் நம்மீ து பட்டிருக்குமோ என்னவோ. அதனால்தான் நமக்கும்
ஸ்ரீ மத் பாகவதம் கிடைத்திருக்கிறது. சீடன் குருவைத் தேடுவதுபோல்,
குருவும் தகுந்த சீடனை எதிர்நோக்குகிறார். அப்படி அவருக்குக் கிடைத்த
பாகவத ரத்தினம்தான் பரீக்ஷித்.

60
*முதல் ஸ்கந்தம் முற்றிற்று.*

61
*ஸ்ரீமத் பாகவதம் - 34*-*நம்பிக்கையூட்டும் ‌ஸத்குருவின்
வாக்கு*

ஸ்ரீ சுகாசார்யார் பரீக்ஷித் கேட்ட கேள்வியினால்‌ மிகவும் மகிழ்ந்து


சொல்லலானார். அரசனே! உன் கேள்வி மிகவும்‌சிறப்பானது. அனைவர்க்கும்
நன்மை பயப்பது. ஞானிகள் கொண்டாடும் கேள்வி. அனைவரும் அறிய
வேண்டிய சிறந்த விஷயங்களைக் கேட்டிருக்கிறாய். மனிதர்கள்
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். அவர்களது அருமையான
ஆயுள், இரவில் இன்புறுவதிலும், உறங்குவதிலும் வணாகிறது. ீ பகலில்
பொருள ீட்டுதலிலும், குடும்பத்தைக் காப்பாற்றுவதிலும், கேளிக்கைகளிலும்
வணாகிறது.
ீ மனிதன் இவ்வுடல், உறவுகள் எல்லாம் பொய்யென்று அறிந்தே
இருக்கின்றான். எவ்வளவு மரணங்களைக் கண்முன் கண்டாலும், அது
தனக்கும் வரும் என்று சிந்திப்பதில்லை.

முக்தியை விரும்புபவன், அனைத்திலும் ஆன்மாவாக விளங்கும் பகவானான


ஸ்ரீ க்ருஷ்ணனது திருவிளையாடல்களை செவியாரப் பருகி, வாயாரப் பாடி,
மனதார நினைத்தல் வேண்டும். ஞானத்தினாலோ, பக்தியினாலோ,
யோகத்தினாலோ, தர்மங்களைக் கடைப்பிடிப்பதாலோ வேறு
சாதனைகளாலோ என்ன பயன் எனில், அது அவனுக்கு மரணகாலத்தில்
பகவானது நினைவைத் தரவெண்டும். ஏராளமான விதிகளையும்,
விரதங்களையும், அனுஷ்டானங்களையும் கடைப்பிடிக்கும்
முனிவர்களும்கூட, பகவானின் கதைகளையும், கல்யாண குணங்களையும்
கேட்பதில் மிக்க ஈடுபாடு கொள்கிறார்கள். எனில், மாந்தர்களுக்கு வேறு கதி
என்ன இருக்கிறது?

நான் உனக்குச் சொல்லப்போகும் பாகவத புராணத்தை மஹாபாரத யுத்த


முடிவில் நான் என் தந்தையான வியாஸரிடம் கற்றேன். நிர்குண ப்ரும்மத்தில்
ஈடுபட்ட மனத்துடையவனாகினும் என்னை கண்ணனின் கதைகள் மிகவும்
ஈர்த்தன. நீ ஏற்கனவே க்ருஷ்ணனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளாய்.
இதைக் கேட்பதால் உனக்கு பகவானின் திருவடித்தாமரைகளில்
நிஷ்காம்யமான (எதையும் எதிர்நோக்காத) பக்தி ஏற்படும். தனக்கு
நன்மையைத் தேடிக்கொள்வதில் சோம்பேறித்தனம் கொள்பவனின் நீண்ட
ஆயுள் விரைவில் கழியும். ஆனால், பொறுமையுடன் தன் ஆன்ம நலம் பற்றிச்
சிந்திப்பவனின் சில மணித்துளிகளும் மிகவும் மேலானவை.

இக்ஷ்வாகு வம்சத்தில் கட்வாங்கன் என்று ஒரு அரசன் இருந்தார். அவர்


மிகுந்த பராக்ரமத்துடன் விளங்கினார். தேவர்களின் வேண்டுகோளுக்கு
இணங்கி அசுரர்களோடு போர் புரிந்து தேவர்களுக்கு வெற்றிக்கனியைக்
கொடுத்தார். அதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், 'முனிவரே! வேண்டிய
வரம் கேளுங்கள்' என்றனர். கீ ழே பூலோகத்தைப் பார்த்தார்.
தேவலோகத்திற்கும் பூமிக்கும் காலக் கணக்கு வேறென்பதால், பூமியில்
பல்லாயிரம் வருடங்கள் ஓடிவிட்டன. அவரது மனைவி மக்களோ
சுற்றத்தாரோ யாரும் இல்லை. அவரது பரம்பரையில் வேறு ஒருவர்
அரசபீடத்தில் இருந்தார். எனவே தன் அரண்மனைக்கு செல்ல
விரும்பவில்லை. முக்தி வேண்டும் என்று கேட்டார். தேவர்கள் திகைத்தனர்.

62
முக்தி கொடுக்கும் அதிகாரம் எங்களுக்கில்லை. நாங்களும் முக்திக்கு
ஆசைப்படுபவர்களே. ஸ்ரீமன் நாராயணன் ஒருவரே முக்தி வழங்கும் தெய்வம்.
வேறு வரம் கேளுங்கள் என்றான் தேவேந்திரன். கட்வாங்கர் சற்று யோசித்து,
எனில், எனக்கு இன்னும் எவ்வளவு ஆயுள் மீ தி இருக்கிறது என்று சொல்ல
முடியுமா? என்று கேட்டார்.

அது முடியும் முனிவரே!


தங்களுக்கு இன்னும் ஒரு முஹூர்த்த காலமே ஆயுள் உள்ளது என்று
சொன்னான். கட்வாங்கர் உடனேயே பத்மாசனத்தில் அமர்ந்து மனத்தை ஒரு
நிலைப் படுத்தி, பற்றுக்கள் அனைத்தையும் துறந்து ஸ்ரீமன் நாராயணனின்
திருவடியில் மனத்தை நிறுத்தினார். அக்கணமே சரீரத்தைத் துறந்து
முக்தியடைந்தார்.

பரீக்ஷித்தே, உனக்கு ஏழு நாள்கள் அவகாசம் இருக்கிறது. அதுவரை நிச்சயம்


காலன் வரப்போவதில்லை. எனவே, நீ தாராளமாக உனக்கான நன்மையை
அடைந்து விட முடியும் என்று அவனை உற்சாகப்படுத்தும் விதமாகச்
சொன்னார். ஏழுநாள்களை மிகக் குறைவு என்று எண்ணியிருந்த
பரீக்ஷித்திற்கு (நமக்கும்) குருவின் நம்பிக்கையூட்டும் பேச்சு பெரு
மகிழ்ச்சியைத் தந்தது.

*ஸ்ரீமத் பாகவதம் - 35*-*விராட்புருஷன்*

ஸ்ரீ சுகாசார்யார் கட்வாங்கர் ஒரு முஹூர்த்தத்தில் பகவானை அடைந்ததைச்


சொல்லி பரீக்ஷித்தை உற்சாகப்படுத்திவிட்டு மேலும் சொல்லலானார்.

ஹே பரீக்ஷித்! மனதில் திடம் கொண்டு, அனைத்தையும் துறந்து


வெளிக்கிளம்பி, ப்ரும்மச்சர்ய விரதத்தை மேற்கொள்ளவேண்டும். புண்ய
நதிகளில் நீராடி, தனியிடம் சென்று ப்ராணாயாமத்தினால் மூச்சை அடக்கி,
ப்ரணவ ஜபம் செய்யவேண்டும். ஐம்புலன்களையும் அடக்கி, மனதை
பகவானின் மேனியழகில் செலுத்த வேண்டும். பகவானையே இடையறாது
தியானிக்க வேண்டும். பகவானின் ஒவ்வொரு அங்கமாகத் தியானித்து வேறு
விஷயங்களில் மனம் திரும்பாதவாறு பகவானிடம் மனத்தை ஒருமைப்படுத்த
வேண்டும். மனம் ஓய்வடையும் இடமே பகவானின் இருப்பிடம். இவ்வாறு
தியானம் செய்யும்போது ரஜோ குணத்தாலும், தமோ குணத்தாலும் ஏற்படும்
மன மயக்கங்களை தைரியமாக யோகதாரணை அதாவது மீ ண்டும் மீ ண்டும்
பகவானின் ஸ்வரூபத்தில் மனதை செலுத்தி ஜெயிக்கவேண்டும்.

பரிக்ஷித் கேட்டான் எவ்வாறு தியானம் செய்தால் மன மாசுகள் அழியும்?

&புலன்களை அடக்கி, பகவானின் உருவத்தில் மனதை நிறுத்தவேண்டும்.


முக்காலங்களில் நிகழும் அனைத்துமே பகவானின் திருவுருவத்தில்
அடங்கும்' என்று சொல்லி வைராஜன் என்னும் விராட்ஸ்வரூபத்தை
வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

ப்ரபஞ்சத்தைத் தோற்றுவித்த விராட்புருஷரான பகவானுக்கு பாதாள


லோகமே உள்ளங்கால்கள்; ரஸாதலம் பாதங்கள்; மஹாதலம் கணுக்கால்கள்;
தலாதலம் முன்னங்கால்கள்; சுதலம் முழங்கால்கள்; அதலமும், விதலமும்

63
இரண்டு தொடைகள்; பூதலம் இடுப்பு; ஆகாயமே தொப்புள்; நக்ஷத்ர லோகமே
திருமார்பு; மஹர்லோகமே கழுத்து; ஜனோலோகமே திருமுகம்;
தபோலோகமே நெற்றி; இவரது ஆயிரக்கணக்கான தலைகளே ஸத்யலோகம்;
இந்த்ராதி தேவர்களே கைகள்; திசைகளே காதுகள்; ஒலியே கேட்கும் திறன்;
அசுவினி தேவர்களே சுவாசத்வாரங்கள்; மணமே முகரும் சக்தி; ஒளிரும்
அக்னி வாய்; அந்தரிக்ஷ உலகமே கண்கள்; சூரியன் பார்க்கும் திறன்;
இரவுபகலிரண்டும் கண் இமைகள்; ப்ரும்மலோகம் புருவங்கள்; நீர் இரு
கன்னங்கள்; சுவையுணர்வே நாக்கு; வேதங்களே ப்ரும்மரந்திரம்
(உச்சந்தலை); யமதர்மராஜனே தெற்றிப்பற்கள்; மற்ற பற்றுக்களே பற்கள்;
மாயையே புன்னகை; கடைக்கண் பார்வையே ஸ்ருஷ்டி; நதிகளே நாடிகள்;
மரங்கள் ரோமங்கள்; வாயு மூச்சுக்காற்று; நடையே காலகதி; ஸத்வ ரஜஸ்
தமஸ் ஆகிய முக்குணங்களே லீலைகள்; மேகங்களே கேசங்கள்;
ஸந்தியாகாலமே ஆடை; மூலப்ரக்ருதியே ஹ்ருதயம்; சந்திரனே மனம்.
அனைத்துமாக விளங்கும் பகவானுக்கு மஹத் தத்வமே அறிவுத்திறன்.
இவ்வாறு ஏராளமான விவரங்களை விளக்கமாகச் சொல்லி, 'இவரை
தியானித்து தாரணை செய்தல் வேண்டும். இவரே அனைத்தும். இவரைத் தவிர
வேறொன்றுமில்லை. எனவே, எதைக் கண்டாலும் அதை பகவானின் அங்கம்
என்றே பார்ப்பது சுலபமான ஸ்தூல உருவ தியானம். இவ்வாறு ப்ரும்மதேவர்
பகவானை தியானம் செய்து பகவானை மகிழ்வித்து, படைக்கும் திறனான
அறிவைப் பெற்று முன்பு இருந்தது போலவே, ஒவ்வொரு ப்ரளயத்திற்குப்
பின்னும் உலகைப் படைக்கிறார்' என்றார் ஸ்ரீ சுகர்.

பார்க்கும் பொருள்களிலெல்லாம் பகவானை நினைவுபடுத்திக் கொள்வதற்கு


வைராஜ புருஷனின் தியானம் மிகவும் உதவி செய்யும்.

*ஸ்ரீமத் பாகவதம் - 36*-*பாதாதிகேச அழகு*

ஸ்ரீ சுகாசார்யார் தொடர்ந்தார். சப்த ப்ரும்மமான வேதம், அதன் பொருளை


இலைமறை காயாகத்தான் கூறுகிறது. மனிதனின் அறிவோ, அதில் கூறப்படும்
ஸ்வர்கம் போன்ற பலன்களை மட்டும் தேடி அலைகிறது. மனிதன்
மாயையினால் சுற்றிக்கொண்டு, கர்மவாசனைகளால் அலைக்கழிக்கப்பட்டு
இன்பத்தைத் தேடுகிறான். இவ்வுலகில் உண்மையான இன்பம் என்று ஒன்று
இருந்தால்தானே அது அவனுக்கு கிடைக்கும்? ஒவ்வொரு முயற்சியையும்
இது உண்மையான இன்பத்தை அளிக்கவல்லதா? என்று ஆராய்ந்து பார்த்துச்
செய்யவேண்டும். இல்லையெனில் கைவிடவேண்டும். பகவானை
நம்புபவர்களுக்கு என்ன குறை வந்து விடப் போகிறது? இறைவனை நம்பி
வட்டை
ீ விட்டுக் கிளம்புபவனுக்கு படுக்க இறைவன் அளித்த பூமி இருக்கிறது.
பஞ்சு மெத்தை எதற்கு? உணவு நீர் அருந்த கைகள் இருக்க, ஆடம்பரமான
பாத்திரங்கள் எதற்கு? உடுத்த பட்டாடைகள் அவசியமா? பசித்தால்
காய்கனிகள் தர, பிறருக்காகவே வாழும் மரங்கள் உண்டு. தங்குவதற்கு
குகைகள் இல்லையா? தாகம் தீர்க்க நதிகள் இல்லையா? இப்படி இயற்கையே
எல்லாவற்றையும் அளிக்க மனிதன் இன்னொருவனை அண்டிப்
பிழைக்கவேண்டிய அவசியம் என்ன?

வேண்டுபவர், வேண்டாதவர் அனைவர்க்கும் பாகுபாடின்றி அனைத்தையும்


வழங்குகிறான். ஸத்யமே உருவான பகவான் அனைவரிடமும் அன்பு
செலுத்துகிறான். அவனை வணங்கினால் பிறப்பு, இறப்புச் சுழலிலிருந்து

64
விடுபடலாம். இவ்வுலக வாழ்வே யமபட்டணத்தில் ஓடும் வைதரணி நதி
போன்றது. மனிதன் கர்மத்தில் திளைக்கும் விலங்காவான். இவ்வாறு சொன்ன
ஸ்ரீ சுகர், பகவானின் ரூபத்தை வர்ணிக்கிறார். சிலர் ஹ்ருதயாகாசத்தில்
பகவானை ஒரு சாண் உயரமுள்ளவராக தியானம் செய்கின்றனர்.

சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களிலும்


ஏந்தியவர். மலர்ந்த முகம் கொண்டவர்,
தாமரையிதழ் போன்ற அழகிய கண்கள்,
கதம்ப மலரின் அழகிய இதழ்களைப் போன்ற மஞ்சள் பட்டாடை,
ஒளிரும் ரத்தினங்கள் கொண்ட தோள்வளைகள், கிரீடங்கள்,
மென்மையான திருவடித் தாமரைகள்,
திருமகள் வசிக்கும் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு, கழுத்தில் கௌஸ்துபம்,
வாடாத வனமாலை, அரையில் நவரத்தினங்களிழைத்த அரைஞாண்,
விரல்களில் மோதிரங்கள், திருவடிகளில் கொலுசும் தண்டையும்,
வழவழப்பான மாசற்ற கறுத்த சுருண்ட கேசங்கள்,
அழகுற விளங்கும் திரு முக மண்டலத்தில் புன்னகை,
கம்பீரமான பார்வை, அசைகின்ற புருவ நெளிவுகள், கண்ணசைவில்
அடியார்களுக்கு அருளை வாரி வழங்கும் ஒய்யாரம்.
நினைத்தபொழுதே காக்கும் அப்பரமனை மனம் தாரணையில் நிலைபெறுகிற
வரையில் சலிக்காது தியானம் செய்யவேண்டும்.

அதனால் சித்தம் தூய்மையடையும். இடையறாத தியானம் நிலைக்கும்.


இவ்வாறு பாதாதி கேசமாக (முதலில் திருவடி, பின் கணுக்கால், முழந்தாள்,
தொடை, இடுப்பு, திருவயிறு, திருமார்பு, கழுத்து, திருக்கரங்கள்,
திருமுகமண்டலம் என்பதாக) ஒவ்வொரு அங்கமாக தியானம்
செய்யவேண்டும். அடுத்ததாக யோகவழியில் செய்யும் தியானத்தை
விளக்குகிறார் ஸ்ரீ சுகாசார்யார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 37*-*யோக ஸாதனை*

ஸ்ரீ சுகாசார்யார் அடுத்ததாக யோக வழியைச் சொல்கிறார்.

யோகியானவன் உடலை விட்டுவிட விரும்பினால், இடம், காலம்


நிகழ்வுகளில் மனதைச் செலுத்தாமல், அசைவற்ற ஒரு சுகமான ஆசனத்தில்
அமர்ந்து, புலன்களை அதன் வழியில் செல்லாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.
ப்ராணாயமத்தால் மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். புலன்களை வசப்படுத்த
மனதை அடக்கவேண்டும். மனதை புத்தியால் தன்வயப்படுத்த வேண்டும்.
மனம், புத்தி இரண்டையும் அவற்றின் ஆதாரமான ஆத்மாவில் அல்லது
க்ஷேத்ரக்ஞனில் ஒடுக்கவேண்டும். மனம், புத்தி, க்ஷேத்ரக்ஞன் மூன்றையும்
சுத்த ஸத்வமான ஆத்மாவில் லயமாக்க வேண்டும். பிறகு நான்கையும்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மாவில் லயமடையச் செய்தால்
அதன் பின் சாந்தி தான்.

பகவானது காலஸ்வரூபம் ப்ரும்மா உள்பட அனைவரையும் ஆட்டிப்


படைக்கின்றது. தேவர்கள் புலன்களின் அதிபதிகளாக இருந்து ஆட்டிப்
படைக்கின்றது. பகவானின் பரமாத்ம ஸ்வரூபத்தில் லயமடைந்தவனை
பகவானின் காலரூபமான சக்திகூட ஒன்றும் செய்ய இயலாது. ப்ரக்ருதியே

65
ஒன்றும் செய்ய இயலாதெனில், முக்குணங்கள் என்ன செய்து விட முடியும்?
யோகிகள் பரமாத்மாவைத் தவிர, மற்ற அனைத்தையும் இதுவல்ல இதுவல்ல
என்று தள்ளிவிடும்போது, நான் என்றோ, என் மனைவி மக்கள் என்றோ எப்படி
உணர்வான்?

யோக மார்கத்தைப் பின்பற்றும் சாதகன், நானே ப்ரும்மம் என்ற


எண்ணத்துடன், ஆசார்யர்களின் கருணையால், புலன்களின் செயல்களை
அடக்கி, உடலை விடவேண்டும். முதலில் குதிகால்களால் அழுத்தி அமர்ந்து
உடலில் காற்று உருவில் இருக்கும் ப்ராணன், அபானன் முதலிய வாயுக்களை
தொப்புள், இதயம், மார்பு, உள்நாக்கு, புருவ மத்தி, ப்ரும்மரந்திரம் ஆகிய
இடங்களுக்கு ஒன்றின் மேல் ஒன்றாகக் கொண்டு போகவேண்டும்.
மணிபூரகம் என்ற தொப்புளில் உள்ள ப்ராணனை, இதயத்திலுள்ள அநாஹத
சக்கரத்திலும், பின் ப்ரும்மநாடி வழியாக மார்பிலுள்ள விசுத்தி சக்கரத்தில்
கொண்டு போக வேண்டும்‌ . அங்கிருந்து, புத்தியால் அநுஸந்தானம் செய்து
கொண்டு, ப்ராணனை உள்நாக்கிற்குக் கொண்டு போக வேண்டும்.

பின்னர் புருவ மத்தியில் செலுத்த வேண்டும். அப்போது, கண், காது, மூக்கு,


வாய் ஆகிய ஏழு துவாரங்களையும் அடைத்து விடவேண்டும்.
ஆக்ஞாசக்கரத்தில் புருவ மத்தியில் இருக்கும் போது ஸ்வர்கம் முதலிய
உலகங்களுக்குச் செல்லலாம். அவ்வாறு விருப்பமில்லையெனில்,
இறைவனை அரை முஹூர்த்த நேரம் த்யானிக்க வேண்டும்.

பின்னர் ப்ராணனை ஸஹஸ்ராரம் என்ற உச்சிக்குக் கொண்டு செல்ல


வேண்டும். இப்போது ப்ரும்ம ஸாக்ஷாத்காரம் அடைந்தவனாவான்.
புலன்களையும் உடலையும் விடுவதற்கு, ப்ராணன் உச்சிக் குழியைப் பிளந்து
வெளிச் செல்ல வேண்டும்.

யோகாப்யாசம் இல்லாதவனுக்கும் இதுவரை சொல்லப்பட்ட வழியில் தான்


இறுதி காலத்தில் ப்ராணன் வெளியேறுகிறதும் தொண்டைக் குழியில் உள்ள
ப்ராணன் மற்றவர்களுக்கு கண் காது மூக்கு இவைகளில் ஏதாவது ஒன்றின்
வழியாக வெளியேறும்.

ஏனெனில் அத்துவாரங்களின் புலன்கள் அடக்கப்படாததே காரணம். ப்ரும்மாதி


லோகங்களை அடைய விரும்புபவரோ, சித்தராகத் திரியவோ,
ப்ரும்மாண்டத்தில் எங்காவது சுற்றவோ விரும்பும் யோகி, இவ்வுடலை
உதறிக் கிளம்பும்போது, மனம், புலன்களைத் தன்னுடன் எடுத்துச் செல்ல
வேண்டும்.

சூக்ஷ்மமான உடலுடைய பக்தியோக, தபோயோக, ஞானயோக சித்தர்கள்,


உள்ளும் புறமும் விரும்பியபடி தடையின்றி சஞ்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறு சுற்றித் திரியும் யோகிகளின் சஞ்சாரங்களையும், அவர்கள்
அடையும் உலகங்களையும் அவர்கள் எவ்வாறு பகவானின் விராட்
ஸ்வரூபத்தில் அடங்குகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார் ஸ்ரீ சுகாசார்யார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 38*-*பக்தியே கதி*

66
ஸ்ரீ சுகாசார்யார், யோகிகள் சரீரத்தை விட்டதும் எவ்வாறு
பரமாத்மஸ்வரூபத்தில் கலக்கிறார்கள் என்பதை விவரித்துக் கூறினார்.

பின்னர், அரசே! தொன்றுதொட்டு வேதங்களில் கூறப்பட்டு வரும் ஸத்யோ


முக்தியையும், கிரமமாக படிப்படியாக அடையும் முக்தியையும் உனக்குச்
சொன்னேன். இவையே தூமமார்க்கம், அர்ச்சிராதி மார்க்கம் எனப்படும். முன்பு
பிரம்மதேவருக்கு ஸ்ரீ வாஸுதேவர் கூறிய இரண்டு வழிகள் இவை.

பகவான் வாஸுதேவரிடம் அன்புடன் பக்தி செய்யும் வழியைத் தவிர இந்த


நிலவுலகில் விழுந்து தவிக்கும் ஒருவனுக்கு, நன்மையளிக்கும் வழி வேறு
இல்லை.

பிரம்மதேவர் ஒருமனதோடு வேதங்களை திரும்பத் திரும்ப படித்து,


நிதானமாக ஆலோசித்து, பின்னர் பகவான் வாஸுதேவனிடம் தீவிர பக்தி
கொள்வது ஒன்று தான் மேலான வழி என்று நிச்சயித்தார்.

புத்தி, அனுமானம் இவை பகவான் இருக்கிறார் என்பதை ஊகித்தறிய


பயன்படும் ஸாதனங்களே தவிர, பகவானை அடையும் ஸாதனங்கள்
ஆகமாட்டா. மனிதர்களான நமக்கு எங்கும், எந்நேரத்திலும், எவ்விதத்திலும்
பகவான் ஸ்ரீஹரி ஒருவரே, மனோ, வாக், காயங்களால் பாடவும் சிந்திக்கவும்
தகுந்தவர். அனைத்திலும் ஆத்மாவாக விளங்கும் பகவானின் லீலைகளை
ஸாதுக்கள் கேட்டும், பருகியும் மனத்தில் தேக்கி வைத்துக்கொள்கின்றனர்.
அதனால் புலன்களால் மாசடைந்த இதயம் தூய்மையாகிறது.

சுகாசாரியார் மேலும் கூறத் தொடங்கினார். பிரம்மதேஜஸை விரும்புபவன்


பிரம்மாவையும், புலன்களின் சக்தியை வேண்டுபவன் இந்திரனையும்,
மக்கட்பேற்றை விரும்புபவன் ப்ரஜாபதிகளையும், நல்ல இல்லறத்தை
விரும்புபவன் துர்காதேவியையும், ஒளியை விரும்புபவன் அக்னியையும்,
செல்வத்தை விரும்புபவன் அஷ்ட வசுக்களையும், வரத்தை ீ விரும்புபவன்
ருத்ரனையும், அன்னத்தை விரும்புபவன் அதிதியையும், ஸ்வர்கத்தை
விரும்புபவன் பன்னிரண்டு ஆதித்யர்களையும், அரசனாக விரும்புபவன்
விஸ்வேதேவர்களையும், நீண்ட ஆயுளை விரும்புபவன் அஸ்வினி
தேவர்களையும், வலிமையை விரும்புபவன் பூமியையும், அழகை
விரும்புபவன் கந்தர்வர்களையும், கணவன்‌ மனைவி உறவு இனிக்க
ஸதிதேவியான உமையையும், குலம் தழைக்க பித்ரு தேவர்களையும்,
தொல்லைகளிலிருந்து விடுபட யக்ஷர்களையும், உலகியல் இன்பத்தை
வேண்டுபவன் சந்திரனையும், வைராக்யத்தை விரும்புபவன் ஸ்ரீமன்
நாராயணனையும் பூஜிக்கவேண்டும். ஒருவன் எங்கும் எதிலும்
விருப்பமுள்ளவனாயினும், மேற்கண்ட அனைத்தையும்
விரும்புபவனாயினும், முக்தியை அடைய விரும்பினாலும், எதிலுமே
விருப்பமில்லாதவன் ஆயினும், தீவிரமான பக்தி யோகத்தால் எங்கும் நீக்கமற
நிறைந்துள்ள பகவானையே ஆராதிக்கவேண்டும். எந்த தேவதையை
உபாசித்தாலும், ஸாது சங்கத்திலிருந்து கொண்டு, பகவான் ஸ்ரீ ஹரியிடம்
நிச்சயமான பக்தி செய்துதான் முக்தி பெற இயலும்.

சௌனகர் கேட்டார்;
ஸூதரே, பரீக்ஷித் மேலும் என்னென்ன விஷயங்களைக் கேட்டான்? பரிக்ஷித்
சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு ஸ்ரீ

67
க்ருஷ்ணனைப் பூஜை செய்யும் விளையாட்டுக்களையே விளையாடினான்.
வியாஸரின் மகனோ, அனைத்தும் அறிந்தவர். இவ்விருவரும் சேர்ந்தால்
மிகச் சிறந்த பகவத் கதைகளே வெளிப்படும். பகவானைப் பற்றிய
சிந்தனைகளில் கழிக்கும் நேரமானது காலவரையறைகளில்
அடங்குவதில்லை. பகவானைப் பற்றி கேட்காத, பேசாத ஒவ்வொரு நொடியும்
வணே.
ீ அவர்களின் ஆயுள் பறிக்கப்படுகிறது.

மற்ற விலங்குகளைப் போல் வாழும் மனிதன் அவைகளைவிட எவ்விதத்தில்


உயர்ந்தவன்? பகவன் நாமத்தைச் சொல்லாத, கேட்காத ஒருவனின் புலன்கள்
விலங்குகளின் புலன்களுக்குச் சமம். மூவுலகையும் அளந்த பெருமானின்
புகழைக் கேட்காத காதுகள் எலி வசிக்கும் வளை. பாம்பு வசிக்கும் புற்று.
இறைவனின் சரிதத்தை கானம் செய்யாத நாக்கு தவளையின் நாக்கு
போன்றது. பட்டுத்தலைப்பாகை இருப்பினும் அது வெறும் சுமை. இறைவனின்
திருவுருவத்தைப் பார்க்காத கண்கள் மயில்பீலியின் கண்களே.
கோவில்களுக்குச் செல்லாத கால்கள் மரக்கால்கள். இறைவன் புகழைக்
கேட்டு நெகிழாத இதயம் இரும்பு. ஆகவே நீங்கள் பகவானைப் பற்றிய
கதைகளையே கூறுங்கள் என்றார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 39*-*எங்கும் நிறைந்த இறை*

ஸூதர் சொன்னார் :

ஸ்ரீ சுகாசார்யாரின் விளக்கங்களைக் கேட்ட பரிக்ஷித், ஸ்ரீ க்ருஷ்ணனிடம்


மனதைப் பறிகொடுத்தான். பற்றுக்கள் அனைத்தையும் துறந்தான். பிறகு,
நீங்கள் (ரிஷிகள்) என்னிடம் கேட்ட கேள்விகளையே அவனும் சுகரிடம்
கேட்டான்.

மாசற்றவரே! தாங்கள் அனைத்துமறிந்தவர். தங்களது வாக்கினால் என் மன


இருள் அகல்கிறது. ப்ரும்மா எவ்விதம் இவ்வுலகைப் படைக்கிறார்? எவ்விதம்
காப்பாற்றுகிறார்? எவ்விதம் அழிக்கிறார்? கற்பனைக் கெட்டாத சக்திகளை
உடைய பகவான் எந்தெந்த சக்திகளைக் கொண்டு மணல்வடு ீ கட்டி
விளையாடுவதுபோல் தன்னைத்தானே பல உருவங்களாக்கிக் கொண்டு
பலவித லீலைகளைச் செய்கிறார்? பகவானின் லீலைகள் ஊகித்தறிய
முடியாதவையாக விநோதமாக உள்ளன. பலவித ரூபங்களை ஏற்கும்
பகவான் எல்லாச் செயல்களையும் முறைப்படி செய்கிறார். எல்லா
சக்திகளையும் ஒரே நேரத்தில் மேற்கொள்கிறாரா? அல்லது
ஒவ்வொன்றாகவா?

இவ்வாறு வேண்டப்பட்ட ஸ்ரீ சுகர், பகவானை தியானம் செய்து கூறலானார்.


புருஷோத்தமனான பகவான், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய
முக்குணங்களையும் ஏற்று, ப்ரும்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று
திருவுருவங்களிலும் விளங்குகிறார். எல்லா உயிரினங்களிலும்
அந்தர்யாமியாகக் காட்சியளிக்கிறார். ஸாதுக்களின் துன்பத்தைத் துடைத்துப்
பாவங்களைப் போக்கி பக்தியை அளிக்கிறார். தீயோரை அடக்கி, நற்கதி
தருபவர். துறவிகளுக்கு ஆத்மானுபவம் அளிக்கிறார். அசையும் அசையாப்
பொருள்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டவர். தானும் அவற்றுள்

68
விளங்குபவர். பக்ஷபாதம் அற்றவர். பக்தர்களைப் பரிபாலிக்கிறார்.
பிடிவாதத்துடன் சாதனை செய்யும் வேஷதாரிகளால் அறிய முடியாதவர்.
அவருக்கு ஒப்பானவரே இல்லை எனும்போது மேலானவர் எப்படி
இருக்கமுடியும்? ஒத்தார் மிக்கார் இலையாய மாமாயா என்கிறார் ஆழ்வார்.
அவரைப் பற்றிப் பேசினாலும், நினைத்தாலும், கண்டாலும், வணங்கினாலும்,
பூஜை செய்தாலும் ஜீவராசிகளின் பாவங்கள் உடனே அழிகின்றன.

தவம் செய்பவர்கள், புகழ் படைத்தவர்கள், நல்மனம் படைத்தவர்கள்,


மந்திரமும், அதன் பொருளும் அறிந்து கர்மானுஷ்டானம் செய்பவர்கள்,
ஒழுக்கம் தவறாத பக்தர்கள் யாராகினும், தங்களது தவம், தானம்
முதலியவற்றின் பலனை பகவத் அர்ப்பணம் செய்தாலொழிய அவற்றின்
பயனைப் பெறுவதில்லை.

பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாபாவிகளாயினும் அவர்கள் இறையடியாரை


அண்டி பாவங்களைத் தொலைத்து தூய்மை பெறுகிறார்கள். பகவான் அறம்,
பொருள், இன்பம், வடு
ீ ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர்.
வேள்விகள் அனைத்திற்கும் தலைவர். அவற்றை அனுபவித்து பலனளிப்பவர்.
அவரே யதுகுலத்தில் அவதரித்தார். பகவானே ஸாதுஜனங்களின் ஒரே
பற்றுக்கோடாவார்.

ப்ரம்ம தேவருக்கு படைப்புத் திறனைத் தூண்டுவதற்காக ஞானத்தின்


தலைவியான ஸரஸ்வதி தேவியை பகவான் ஏவினார். அவள், ப்ரும்மாவின்
திரு முகத்திலிருந்து, சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜோதிஷம்,
கல்பம் ஆகிய ஆறு அங்கங்களுடன் வேதரூபமாக வெளித் தோன்றினாள்.
இறைவனே ஐம்புலன்களின் சேர்க்கையால் இவ்வுடலை ஆக்கித் தந்து அதில்
ஜீவாத்மாவாக குடி புகுகிறார். அதனாலேயே அவன் புருஷன்
என்றழைக்கப்படுகிறான்.

ஐந்து ஞானேந்திரியங்கள் (அறிவுப்புலன்கள்),

ஐந்து கர்மேந்திரியங்கள் (செயற்புலன்கள்),

ஐந்து ப்ராணன்கள், மனம் ஆகிய பதினாறு சாதனங்களைக்கொண்டு


குணங்களை வெளிப்படுத்துகிறார்.

இப்படிப்பட்ட பகவானுக்கு நமஸ்காரம். அவர் அனைவர்க்கும் நலம்


புரியட்டும்.

ப்ரும்மா இது விஷயமாக பகவானிடம் கேட்டறிந்ததை தன் மகனான


நாரதர்க்குச் சொன்னார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 40*-*நாரதரின் கேள்விகள்*

நாரதர் ப்ரும்மாவிடம் கேட்டார்.

தந்தையே! தாங்களே அனைத்திற்கும் முன் தோன்றியவர். ஆன்ம


தத்துவங்களை விளங்கும்படிச் செய்யும் வழியை உபதேசித்து அருளுங்கள்.

69
ப்ரபஞ்சத்தை விளங்கச் செய்வது யார்?

எந்த சக்தியால் இது இயங்குகிறது?

இதைப் படைத்தது யார்?

கடைசியில் இது எங்கு லயமாகிறது?

எவரை அண்டி இது நிற்கிறது?

இதன் உண்மை ஸ்வரூபமென்ன?

உலகைப் படைக்கும் அறிவு தங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

தங்களுக்கு ஆதாரமாய் இருப்பவர் யார்?

உங்கள் தலைவர் யார்?

யாருக்குக் கட்டுப்பட்டு நீங்கள் உலகைப் படைக்கிறீர்கள்?

தங்களுடைய உண்மை லக்ஷணம் என்ன?

தாங்கள் ஒருவராகவே ஐம்பூதங்களைக் கொண்டு தங்கள் மாயையால்


அனைத்துலகையும் படைக்கிடீர்கள். சிலந்தி தன் வாயில் ஊறும் நீர் கொண்டு
நூலிழுத்து வலை பின்னி அதில் அங்குமிங்கும் சென்று விளையாடுவது
போல் நீங்கள் எவ்வித துன்பமும் இன்றி உலகைப் படைக்கிறீர்களே!
இவ்வுலகிலுள்ள உயிருள்ள, உயிரற்ற, உயர்ந்த, தாழந்த எத்தன்மை
கொண்டதாயினும் அது தங்களாலேயே படைக்கப் படுகிறது. ஆனால்,
தாங்களும் தவம் செய்கிறீர்கள். 'உங்களை விட உயர்ந்த சக்தி உள்ளதா?
எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கள்' என்று கேட்டார்.

ப்ரும்மா இக்கேள்விகளின் பதிலாக படைப்பின் ரகசியத்தைக் கூறினார்:

மகனே, நீ உயர்ந்த கேள்விகளைக் கேட்டாய். என்னை விட உயர்ந்த


பகவானைப் பற்றி நீ இன்னும் அறியாததால் என்னை உயர்ந்தவன் என்கிறாய்.

சூரியன், சந்திரன், கிரகங்கள், நக்ஷத்ரங்கள், அக்னி ஆகிய அனைத்துமே


இறைவனிடமிருந்து ஒளியைப் பெற்று ஒளிர்கின்றன. அதுபோல் நானும்
ஸ்வயம்ப்ரகாசரான இறைவனிடமிருந்து சக்தி பெற்று இவ்வுலகைப்
படைக்கிறேன். ஆனால், இறைவனின் வெற்றிகொள்ள இயலாத மாயா
சக்தியினால், எல்லோரும் என்னை குரு என்கின்றனர். மாயை அவர் எதிரில்
பயத்தோடு நிற்கிறது.

பஞ்ச மஹா பூதங்களும், பிறவிக்குக் காரணமான கர்மாவும், இவற்றை


இயக்கும் காலமும், அவற்றின் மாறுதலுக்கான சுபாவமும், அவற்றை நுகரும்
ஜீவாத்மாவும், அனைத்துமே உண்மையில் பகவான் ஸ்ரீ வாசுதேவனே.

70
வேதங்கள் ஸ்ரீமந் நாராயணனையே காரணமாகவும், குறிக்கோளாகவும்
கொண்டவை.

தேவர்களோ ஸ்ரீமந் நாராயணனின் திருமேனியில் தோன்றியவர்கள்.

வேள்விகள் அனைத்தும் அவரை மகிழ்விக்கவே செய்யப்படுகின்றன.

ஸ்வர்கம் முதலிய உலகங்களும் அவரிடமே கற்பிக்கப்படுகின்றன.

ப்ராணாயாமம் முதலான அஷ்டாங்க யோகங்களும் அவரை அடையும்


ஸாதனங்களே.

தவங்கள் அனைத்தும் நம்மை அவரிடமே அழைத்துச் செல்கின்றன. நாம்


பெற்ற அறிவும் அவரை அறிய உதவும் காரணமாகும். அனைத்து
ஸாதனைகளும் அவற்றால் உண்டாகும் பயன்களும் ஸ்ரீமந் நாராயணனிடமே
அடைக்கலம். படைப்புத்தொழிலை நான் அவரது விருப்பப்படியே
நடத்துகிறேன் என்று சொல்லி, மேற்கொண்டு எவ்வாறு பஞ்ச பூதங்களைக்
கொண்டு படைப்பு நடக்கிறது என்பதை விளக்கினார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 41*-*அண்டத்தின் தோற்றம்*

ப்ரம்மா நாரதரிடம் கூறலானார் :

இறைவன் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவர். அவரது மாயை ரஜோ


குணத்தை ஏற்று படைத்தலையும், ஸத்வ குணம் கொண்டு காத்தலையும்,
தமோ குணம் கொண்டு அழித்தலையும் செய்கிறது. ப்ரளய காலத்தில்
ஜீவன்களும் அவற்றின் கர்மங்களும் சுபாவமும் பகவானிடமே
லயித்திருந்தன. படைக்க வேண்டிய காலம் வரும்போது, இறைவன்
தன்னையே பல்வேறு ரூபங்களில் தோற்றுவிக்க எண்ணி தன் ஜீவன்களின்
கர்மங்கள் மற்றும் ஸ்வபாவங்களைத் தானே ஏற்றுக்கொண்டார்.

ரஜோ குணம், ஸத்வ குணம் ஆகியவற்றால் பெருகிய மஹத் தத்வம்


மாறுதலடைந்து மஹாபூதங்கள், பொறிகள், அவற்றின் அபிமான தேவதைகள்
மற்றும் தமோ குணத்தையே மிகுதியாய்க் கொண்ட அஹங்கார தத்வம்
ஆகியவற்றைத் தோற்றுவித்தது. அஹங்கார தத்வம் மேலும்
மாறுதலையடைந்து மஹாபூதங்களின் சக்தியான வைகாரிகம், தைஜஸம்,
தாமசம் ஆகியவை வெளிப்பட்டன. இவை முறையே அறிவு, செயல், பொருள்
எனப்படும்.

தாமஸ அஹங்காரமே ஐம்பெரும் பூதங்களின் தோற்றத்திற்குக் காரணம்.


இதிலிருந்து ஆகாயம் தோன்றியது. இதன் தன்மாத்திரையும் குணமும் ஒலி
ஆகும். இதன் வழியே பார்ப்பவனையும் பார்க்கப்படும் பொருளையும்
அறியலாம்.

ஆகாயத்திலிருந்து வாயு வெளிப்பட்டது. அது ஒலியையும், தொடு


உணர்வையும் குணங்களாகக் கொண்டது. இதுவே உயிர் வாழக் காரணமான

71
ப்ராணனாகவும், பொறிகளின் வலிமைக்குக் காரணமான ஓஜஸ் திறனாகவும்,
மனவலிமைக்குக் காரணமான ஸஹஸ் (உற்சாகம்) திறனாகவும், உடல்
வலிமைக்குக் காரணமான பலமாகவும் ஆகிறது.

காலம், கர்மம், சுபாவம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட வாயுவிலிருந்து


தேஜஸ் (அக்னி) தோன்றியது. வாயுவிலிருந்து தோன்றியதால், ஒலி,
தொடுவுணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.

தேஜஸிலிருந்து (ஒளி) நீர் தோன்றியது. இதன் குணம் ரஸம் (சுவை) ஆகும்.


இதற்கு ஒலி, உருவம், தொடுவுணர்ச்சி ஆகிய குணங்களும் உண்டு.

நீரிலிருந்து மண் தோன்றியது. இதன் குணம் மணம். நீரிலிருந்து


தோன்றியதால் ஒலி, தொடுவுணர்ச்சி, உருவம், சுவை ஆகிய குணங்களும்
உண்டு.

மண் ஒன்றிலேயே ஐங்குணங்களும் உள்ளன. இவையனைத்தும் தாமஸ


அஹங்காரத்திலிருந்து வந்தவை. ஸாத்வக ீ அஹங்காரத்திலிருந்து மனமும்
அதன் தேவதையான சந்திரனும் வந்தார்கள். மேலும், செயற்புலன்கள் ஐந்து
மற்றும் அறிவுப்புலன்கள் ஐந்தின் தேவதைகள் அனைத்தும் தோன்றின.

ஒலிக்கு எண்திசைக் காவலர்களும், தொடுவுணர்ச்சிக்கு வாயுதேவனும்,


ஒளிக்கு சூரியனும், சுவைத் திறனுக்கு வருணனும், (மணம்) கந்த சக்திக்கு
அசுவினி தேவர்களும், வாக் சக்திக்கு அக்னியும், கைகளுக்கு இந்திரனும்,
கால்களுக்கு உபேந்திரனும், ஜீரண சக்திக்கு மித்திரனும், உபஸ்தம் என்ற
ஜனன சக்திக்கு ப்ரஜாபதியும் பத்து தேவதைகளாவார்கள்.

ராஜஸ அலங்காரத்திலிருந்து காது, தோல், மூக்கு, கண், நாக்கு ஆகிய ஐந்து


அறிவுப்புலன்களும், சொல் (வாக்கு), கைகள், பாதங்கள், விஸர்ஜன இந்திரியம்
(பாயு), ஜனனேந்திரியம் (உபஸ்தம்) ஆகிய ஐந்து செயற்புலன்களும்
தோன்றின. அறிவுச் சக்தியான புத்தியும், செயல் திறனான ப்ராணனும் ராஜஸ
அஹங்காரத்தின் செயல்கள். இவையனைத்தும் ஒன்றோடொன்று
இணையாததால், அவைகள் தங்கி இன்பம் அனுபவிக்க கருவியான உடலை
உண்டாக்க முடியவில்லை. இறைவன் இவைகளைத் தூண்டியதும் அவை
ஒன்றிணைந்து இந்த ப்ரும்மாண்டத்தையும், பிண்டத்தையும் (உடல்)
தோற்றுவித்தன.

உயிரற்ற ப்ரும்மாண்டம் பல்லாயிரம் ஆண்டுகள் நீரிலேயே கிடந்தது.


அனைத்திற்கும் ஜீவனை அளிக்கும் இறைவன் காலம், கர்மம், சுபாவம்
இவற்றை ஏற்று அதை ஜீவனுள்ளதாக்கினார். அந்த அண்டத்தைப் பிளந்து
கொண்டு விராட்புருஷனாகத் தோன்றினார்.

ப்ரும்மஸ்வரூபத்தை அறிந்தவர்கள் விராட்புருஷனின் தொடைகளுக்குக்


கீ ழாக அதலம் முதலிய கீ ழ் ஏழு லோகங்களையும், தொடைகளுக்கு மேல்,
பூமி முதலான மேல் ஏழு லோகங்களையும் உணர்கிறார்கள். முன்பே
விளக்கப்பட்ட விராட்புருஷரின் ஸ்வரூபத்தை இங்கு மீ ண்டும் வர்ணிக்கிறார்
ப்ரும்மா.

72
*ஸ்ரீமத் பாகவதம் - 42*-*இறையின் ஸ்வரூபம்*

விராட் புருஷனின் ஒவ்வொரு அங்கத்தையும் விவரித்த ப்ரும்மா மேலும்


கூறலானார் :
நாரதா, நீ, நான், ருத்ரன், உனக்கு முன் தோன்றிய ஸனகாதிகள், தேவர்கள்,
அசுரர்கள், பறவைகள், விலங்குகள், பாம்புகள், கந்தர்வர்கள், அப்ஸரஸ்கள்,
யக்ஷர்கள், அரக்கர்கள், பூதகணங்கள், ஊர்வன, பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள்,
வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், நீர்வாழ்வன, நிலத்தில் வாழ்வன,
விண்ணில் வாழ்வன, சூரியன் முதலான கோள்கள், அசுவினி முதலான
நக்ஷத்திரங்கள், மின்னல், இடி, தூமகேது முதலான வால் நக்ஷத்ரங்கள்,
நடந்தது, நடப்பது, இனி நடக்கப்போவதுமான இவ்வுலகம், அத்தனையும்
விராட்புருஷனே. இவை அனைத்துமே அவரது திருமேனியில் பத்து அங்குல
பரிமாணத்திற்குள் அடங்கியுள்ளன.

இவர் மரணபயம் அளிக்கும் கர்மவினைகளைத் தாண்டியவராகையால்,


பயமற்ற ஆனந்தத்தின் கொள்கலனாகிறார். ப்ரபஞ்சரூபமானவர். ஆனாலும்
ஆனந்தத்தின் வைப்பிடம். அவரது பெருமை அவரது உருவத்தைப் போன்றே
எல்லையற்றது. இதன் பின் ஒவ்வொரு லோகத்தில் வசிப்பவர்களின்
ஆனந்தத்தின் தன்மையை விளக்குகிறார் ப்ரும்மா. இந்த ப்ரும்மாண்டத்தைத்
தோற்றுவித்த இறைவனிடமிருந்தே ஐம்பெரும்பூதங்களும், பொறிகளும்,
ஸத்வம் முதலான தத்வங்களும் தோன்றின. இருப்பினும் அவற்றில்
ஒட்டாமல் தனித்துப் பரிணமிக்கிறார். சூரியன் எவ்வாறு ஒளி தந்து உலகை
விளங்கவைத்தாலும் தான் அதில் ஒட்டாது தனித்து விளங்குகிறாரோ
அதுபோல், அந்தர்யாமியாகிய அந்த இறைவனின் தொப்புளிலிருந்து
வெளிவந்த தாமரை மலரில் நான் தோன்றியபோது, வேள்வியால் அவரை
ஆராதிக்க எப்பொருளும் இருக்கவில்லை. பின்னர் அவருடைய
அவயவங்களிலிருந்தே வேள்விக்கான அனைத்தையும் பெற்றுக்கொண்டேன்.
அவரிடமிருந்து பெற்ற பொருள்களைக் கொண்டே அவரை வேள்விகளால்
ஆராதனை செய்தேன். அதன் பின் தோன்றிய ஒன்பது ப்ரஜாபதிகளும் (மரீசி,
அத்ரி, ஆங்கீ ரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன்)
அவ்வாறே மனத்தை ஒருமைப்படுத்தி பூஜித்தனர்.

அதன் பின்னர் ஸ்வயம்புவ மனு முதலான மனுக்களும், ரிஷிகளும்,


பித்ருக்களும், தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் தோன்றினர். காலம்
கிடைத்தபோதெல்லாம் வேள்விகள் செய்து இறையை வழிபட்டனர். ஸ்ரீமன்
நாராயணன் எவ்வொரு குணத்திற்கும் ஆட்படாதவர். நிர்குணர். ஆனால்,
படைப்பிற்காக கல்யாண குணங்களை மேற்கொள்கிறார். ஸகுணராகிறார்.
அவரே ப்ரபஞ்சத்தின் ஆதாரமானவர். நான் எப்போதும் இறைவனை ஏக்கமும்,
அன்பும் கொண்ட இதயத்துடன் த்யானித்து வருவதால் என் வாக்கு
பொய்ப்பதே இல்லை. தவறான எண்ணங்களும் தோன்றுவதில்லை.
புலன்களும் தீயவழியில் செல்வதில்லை. தவமே வடிவெடுத்ததோ என்று
அனைவரும் எண்ணும்படி இறைவனை நினைத்து தவம் செய்துள்ளேன்.
யோகப் பயிற்சியும் செய்தேன். நானே ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தந்தை.
இவ்வளவு இருந்தும் என்னால் இறைவனை முழுமையாக
அறியமுடியவில்லை. அவரது திறன் எல்லையற்றது. இதுவரை அவரது
ஸ்வரூபத்தை அறிந்தவர் எவருமில்லை. இருப்பினும் என்னால் இயன்ற
அளவிற்கு அவரது ஸ்வரூப லக்ஷணங்களைக் கூறுகிறேன். இறைவன்

73
அணுவளவும் மாயை அற்றவர். சுத்த ஞான ஸ்வரூபி. அந்தராத்மாவின்
வடிவில் அனைத்திலும் நிறைந்திருப்பவர். மூன்று காலங்களிலும் விளங்கும்
உண்மைப்பொருள். அவருக்குத் துவக்கமும் இல்லை. முடிவும் இல்லை.
தொன்மையானவர். முக்குணங்களும் அற்றவர். அவரைத் தவிர
இரண்டாவதாக வேறு ஒரு பொருள் அற்றவர். மனம், பொறிகள், மற்றும்
உடலைத் தன்வயப்படுத்திய முனிவர்கள் தியானத்தின் மூலம் இறைவனை
அறிகிறார்கள்.

தீயொழிக்கம் நிரம்பியவர்களுக்கு உள்ளுறையும் உண்மை மாயையினால்


மறைக்கப்படுவதால் அது புலப்படுவதில்லை. எவ்வளவு அறிந்தாலும்,
ஸமுத்திரத்தின் கரையில் நிற்கும் ஒருவன் அதை எவ்வாறு முழுமையாய்
உணரமாட்டானோ அதுபோல் இறைவனையும் முழுமையாக உணர்பவர்கள்
எவருமில்லை. விராட் புருஷனே இறைவனின் முதல் திருத்தோற்றம்
(அவதாரம்). அதைத் தொடர்ந்து இறைவனின் பல்வேறு அவதாரங்களை
நாரதருக்கு எடுத்துக் கூறுகிறார் ப்ரும்மதேவர்.

ஸ்ரீமத் பாகவதம் - 43 -*இறைவனின் திருத்தோற்றங்கள்- 1*

ப்ரும்மதேவர் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றிக் கூறுகிறார் :

பொதுவாக தசாவதாரம் என்று பத்து முக்கிய அவதாரங்களைக் கூறுகிறோம்.


இருபத்து நான்கு முக்கிய அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா எடுத்துரைக்கிறார்.

ஆனால் உண்மையில் பகவானின் அவதாரங்கள் எண்ணற்றவை. ஒவ்வொரு


மஹாத்மாவிற்கும் காட்சி கொடுப்பதற்காக பகவான் இறங்கி
வருவதெல்லாமும் அவதாரங்களே.

எத்தனை எத்தனை பக்தர்கள்! ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக


அல்லவா வந்திருக்கிறார்! ஒரு ஊருக்குச் செல்லும் வழியில் என்னென்ன
ஊர்கள் இருக்கின்றன என்று கேட்டால், உதாரணத்திற்கு சென்னையிலிருந்து
திருச்சிராப்பள்ளிக்கும் செல்லும் வழியில் என்னென்ன ஊர்கள் வரும் என்று
கேட்டால், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் என்று முக்கிய ஊர்களைச்
சொல்வோம். இன்னும் கேட்டால், மதுராந்தகம், மேல்மருவத்தூர்,
உளுந்தூர்ப்பேட்டை, விருத்தாசலம், அரியலூர் என்று சொல்லலாம். ஆனால்
உண்மையில் இவை மட்டுமா இருக்கின்றன? இருப்பூர்தியில் செல்லும்போது
எத்தனயோ கிராமங்களைக் கடக்கிறோமே. அத்தனையும் வழியிலுள்ள
ஊர்கள் தாமே. சாலை வழியாகச் சென்றால் இன்னும் வேறு பல
கிராமங்களையும் சிற்றூர்களையும் கடக்க நேரிடும்.

அதுபோல், நாமே இடைவிடாமல் குருவின் கருணையால் இறையின்


திருப்பெயரைச் சொல்லி, மகிழ்ந்துபோய், இறைவன் நமக்கு காட்சி
அளிப்பாராயின் அதுவும் ஒரு திருத்தோற்றம் (அவதாரம்) என்றே கருதப்படும்.

ப்ரும்மா குறிப்பிடும் முக்கிய அவதாரங்களாவன :

1. *வராக அவதாரம்*

74
ஆவரண ஜலத்தில் மூழ்கியிருந்த பூமியை வெளிக்கொணர பகவான் எடுத்த
முதல் அவதாரம். அப்போது எதிர்த்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை
வதைத்தார்.

2. *சுயக்ஞன்*

ருசி என்னும் ப்ரஜாபதிக்கும் ஆஹூதி என்ற அவரது மனைவிக்கும் மகவாய்த்


தோன்றினார். தக்ஷிணை என்ற தன் மனைவியிடம் சுயமர்கள் என்ற
தேவர்களைத் தோற்றுவித்து மூவுலகங்களின் துயரையும் போக்கினார்.

3. *கபிலாவதாரம்*

கர்தம ப்ரஜாபதிக்கும் தேவஹூதி என்ற ஸ்வாயம்புவ மனுவின்


பெண்ணுக்கும் ஒன்பது பெண் குழந்தைகளுக்குப் பிறகு, திருமகனாய்த்
தோன்றினார். தாய்க்கு ப்ரும்ம வித்யையை உபதேசித்தார். அது ஸாங்க்ய
யோகம் என்றழைக்கப்படுகிறது.

4. *தத்தாத்ரேயர்*

அத்ரி மகரிஷிக்கும் அன்சூயா தேவிக்கும் பிறந்தவர். அத்ரி மஹரிஷி


இறைவனையே தன் மகனாகப் பிறக்கும்படி வேண்ட, என்னையே உனக்குத்
தந்தேன் என்னும்படியாக தத்தன் என்ற பெயருடன் அவதரித்தார்.

5. *குமாராவதாரம்*

படைப்புத்திறனைப் பெறுவதற்காக ப்ரும்மா பகவத் அர்ப்பணமாக தவம்


புரிந்தார். அப்போது பகவான் ஸனகர், ஸனந்தனர், ஸனத்சுஜாதர்,
ஸனத்குமாரர் என்ற திருப்பெயர்களுடன் நால்வராக அவதாரம் செய்தார்.
ப்ரளயத்தில் மறைந்துபோன ப்ரும்ம தத்வத்தை இந்த கல்பத்தில் ரிஷிகளுக்கு
உபதேசம் செய்தனர்.

6. *நர-நாராயணாவதாரம்*

தர்மதேவதைக்கும் தக்ஷப்ரஜாபதியின் பெண்ணான மூர்த்தி என்பவளுக்கும்


நரன், நாராயணன் என்ற குழந்தைகளாகப் பிறந்தார். இவர்களுடைய தவ
வலிமை ஒப்புயர்வற்றது.

7. உத்தானபாதனின் மகனான துருவன் என்கிற ஐந்து வயதுக் குழந்தைக்குக்


காட்சி கொடுப்பதற்காக வந்த அவதாரம். அவனுக்கு அழிவற்ற துருவ
பதத்தையளித்தார். இன்றும் ஸப்தரிஷிகளும் துருவனைச் சுற்றி வந்தே
இறைவனைத் துதிக்கின்றனர்.

8. *ப்ருது சக்ரவர்த்தி*

தீயவழியில் சென்ற வேனன் என்ற மன்னனை ரிஷிகள் ஒரு ஹூங்காரம்


செய்து அழித்தனர். அவர்களது ப்ரார்த்தனைக்கிணங்கி பகவான் வேனனின்

75
கைகளிலிருந்தே தோன்றினார். பூமியிலிருந்து அனைத்து செல்வங்களையும்
வெளிக்கொணர்ந்தார். இவர் பெயராலேயே பூமி ப்ருத்வ ீ
என்றழைக்கப்படுகிறது.

9. *ரிஷப தேவர்*

ஆக்ன ீத்ரன் என்பவரின் மகனான நாபி என்பவருக்கும் ஸுதேவி


என்றழைக்கப்படும் மேரு தேவிக்கும் மகனாய் பிறந்தார். பரமஹம்ஸ
ஆசிரமத்தில் நிற்கும் ரிஷிகளின் தர்மத்தை அனுஷ்டித்து காட்டினார்.

10.*ஹயக்ரீவ அவதாரம்*

ப்ரும்மா செய்த ஸத்ர யாகத்தில் யக்ஞபுருஷரான பகவான் உருக்கி வார்த்த


தங்கம் போன்ற திருமேனியுடன் வெளிவந்தார். வேதமே உருவெடுத்து
வந்ததோ எனும்படி அவர் மூச்சு விடும்போது மனம் கவரும் வேதங்கள்
வெளிவந்தன.

*ஸ்ரீமத் பாகவதம் - 44 இறைவனின் திருத்தோற்றங்கள் - 2*

11. *மத்ஸ்யாவதாரம்*

சாக்ஷுஷ மன்வந்தரத்தின் முடிவில் அடுத்து வரப்போகும் சத்தியவிரதன்


என்ற பாண்டிய மன்னனுக்கு மீ ன் உருவில் காட்சியளித்தார். ப்ரளய ஜலத்தில்
வேதங்களை சொல்லிக் கொண்டு அதிலேயே விளையாடி மகிழ்ந்தார்.
தாசாவதாரத்தில் முதலாவதாகச் சொல்லப்படும் மத்ஸ்யாவதாரம் நமது
தமிழ்நாட்டில் மதுரையம்பதியில் நிகழ்ந்தது.

12. *கூர்மாவதாரம்*

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற விரும்பி பாற்கடலைக் கடைந்தபோது


இறைவன் ஆமை உருக்கொண்டு மத்தாக விளங்கிய மந்தர மலையைத் தன்
முதுகில் தாங்கினார்.

மலை முன்னும் பின்னுமாக அவர் முதுகில் சுழன்றது அவருக்கு முதுகு


சொறிந்துவிடுவது போல் சுகமாக இருந்ததாம்.

76
13. *நரஸிம்மாவதாரம்*

உத்தம பக்தனான ப்ரஹலாதனைக் காப்பதற்காக ஏற்பட்ட அவதாரம். சிங்க


முகத்துடனும் மனித உடலுடனும் தோன்றி ஹிரண்யகசிபுவைக் கொன்று
தேவர்களின் துயர் தீர்த்தார்.

14. *கஜேந்திரனுக்காக வந்த அவதாரம்*

ஹரி என்று பெயர் பெற்ற இந்த அவதாரம், முதலையினால் துன்புற்ற


கஜேந்திரன் என்கிற யானையைக் காப்பதற்காக நிகழ்ந்தது. 'ஆதிமூலமே,
அகில லோகநாதனே!' என்றழைத்த யானைக்கு தானே அது என்னும்படி
கருடன் மீ தேறி விரைந்து வந்து காத்தார்.

15. *வாமனாவதாரம்*

அதிதி தேவியின் மகனாக அவதரித்தவர். தன் சகோதரர்களான தேவர்களின்


துயர் நீக்கவும், பரம பக்தனான பலிச் சக்ரவர்த்தியின் அஹங்காரத்தை
அழித்து அவரை ஆட்கொள்ளவும் சிறிய திருமேனியாக இருந்தவர். திரிவிக்ரம
அவதாரம் எடுத்தார்.

16. *ஹம்ஸாவதாரம்*

நாரதரின் அளப்பரிய அன்பினாலும், பக்தியினாலும் ஈர்க்கப்பட்டு


அன்னப்பறவை உருவில் தோன்றி பாகவத தர்மத்தையும், பக்தி
யோகத்தையும் உபதேசித்தார்.

17. *மனு*

ஒவ்வொரு மன்வந்தரத்திலும் அந்தந்த காலத்தில் அதிபதியான மனுவாக


இறைவனே அவதாரம் செய்கிறார்.

18. *தன்வந்த்ரி*

பாற்கடலைக் கடையும்போது, கைகளில் அமுதக் கலசத்தோடு தோன்றியவர்.


தன் பெயரைச் சொன்னாலே அனைத்து நோய்களையும் குணப்படுத்துபவர்.

19. *பரசுராமாவதாரம்*

அந்தணர்களைக் காக்க வேண்டிய அரசர்களே அவர்களைத் துன்புறுத்தி


தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ள முற்பட்டனர். அப்போது கூர்மையான
(பரசு) கோடரியை ஏந்தி தீயொழுக்கமுள்ள அரசர்களை 21 முறை அழித்தார்.

20. *ஸ்ரீ ராமாவதாரம்*

தன் பதினாறு கலைகளுடனும் பூர்ணாவதாரமாக தன் அம்சங்களோடு


அவதரித்தார். மானுட தர்மத்தை அனுஷ்டித்துக்‌காட்டினார்.

21. *ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்*

77
இவரும் பூர்ணாவதாரமே. பூபாரம் தீர்க்க தன் அம்சமான பலராமனோடு
அவதரித்து எண்ணற்ற லீலைகள் புரிந்தார்.

22. *ஸ்ரீ வியாஸாவதாரம்*

காலமெனும் நீரோட்டத்தில் மானிடர்களின் அறிவும் ஆற்றலும்


குறையும்போது, ஒவ்வொரு சதுர்யுகத்தின் துவாபர யுகத்திலும்
ஸத்யவதியின் வயிற்றில் பிறந்து வேதமாகிய விருக்ஷத்தைப் பல
கிளைகளாகப் பிரிக்கப் போகிறார்.

23. *புத்தாவதாரம்*

தேவர்களின் பகைவர்களான அசுரர்கள் கண்ணுக்குப் புலப்படாமல்


வசித்துக்கொண்டு, சத்தியத்தை அழிக்கத் துவங்குவார்கள். அப்போது
மனத்தில் மயக்கத்தையும் கவர்ச்சியையும் உண்டுபண்ணும் வண்ணம்
அழகிய திருமேனியை ஏற்று, புத்தர் என்ற வடிவில், வேதநெறிக்குப் புறம்பான
ஆனால் மக்கள் நலனுக்கேற்ற பல வாழ்க்கை நெறிகளை உபதேசிக்கப்
போகிறார்.

24. *கல்கி அவதாரம்*

கலியுகமுடிவில், வேதம் எங்குமே ஒலிக்காது. ஓரிடத்திலும் ஸத்சங்கம்


நடைபெறாது. நல்ல விஷயம் என்று எதுவுமே இருக்காது. அப்போது கலியை
அழிப்பதற்காக தென்னிந்தியாவில் சம்பளம் என்ற கிராமத்தில் அவதாரம்
செய்வார். தேவதத்தம் என்ற குதிரையில் சுற்றி, கோடிக்கணக்கான
துஷ்டர்களை வாளால் வதம் செய்யப்போகிறார். அப்போது மாந்தர்களிடையே
ஸத்வகுணம் மிகுந்து க்ருதயுகம் தோன்றும். படைக்கும்போது ப்ரஜாபதிகள்,
ப்ரும்மாவாகிய நான், காப்பாற்றும்போது விஷ்ணு, அழிக்கும்போது ருத்ரன்
என்று அனைத்து ரூபங்களாகவும் விளங்குபவர் பகவான் ஒருவரே என்று
சொல்லி, யோகமாயையை அறிந்தவர்கள் பற்றிய விவரத்தையும் கூறினார்
ப்ரும்மா.

*ஸ்ரீமத் பாகவதம் - 45*-*பரிக்ஷித்தின் கேள்விகள்*

ப்ரும்மா நாரதரிடம் மேலும் சொன்னார் :

பகவானது உண்மை நிலை எப்போதும் அழிவற்றது. அமைதியானது. இன்பமே


வடிவெடுத்தது. அறிவொளியாலானது. இரண்டற்றது. பயமற்றது.
சோகமற்றது. மாயை எனும் மலமற்றது. அதனால் புலன் வழிச் செல்லுதல்
இல்லை. ஸத், அஸத் இரண்டையும் கடந்தது. உபநிடதங்களாலும் விளக்க
இயலாதது. ஏதோ ஒரு பொருளை உதாரணமாக வைத்துக் கூற
முற்பட்டாலும், சொல்ல இயலாதது. செயல், செய்பவன், காரணம், மூன்றும்
இன்னும் பல கர்மாக்களும் கூட அவரிடம் அழைத்துச் செல்ல முடியாது.

மாயை அவரைக் கண்டாலே நாணம் கொண்டு ஓடி ஒளிகிறது. பொறி


புலன்களை அடக்கிய பெரியோர் மனதை இறைவனிடம் ஒருநிலைப்படுத்தி

78
அவரை அடைந்துவிடுகிறார்கள். வேறு தனியான முயற்சி அவர்களுக்குத்
தேவைப்படுவதில்லை. வருணனுக்கு நீர் வேண்டுமெனில் கடப்பாரையை
எடுத்து பூமியைத் தோண்டுவானா என்ன? அதுபோலத்தான் அனைத்து
செயல்களுக்கும் பலன் தருபவன் இறைவனே. மனிதன் தன் தாதுக்களின்
(பஞ்ச பூதங்களின்) சக்தியை இழந்து இறக்கும்போது, உடற்கூட்டினுள்
இருக்கும் இறைவன் அழிவதில்லை. ஆகாயத்திற்கு அழிவுண்டா? அதுபோல
தன் இச்சையினாலேயே ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிக்கும் பகவான்
அவற்றில் ஒட்டாது தனித்து நிற்கிறான். அந்த பகவானான ஸ்ரீ ஹரியின்
மகிமைகளை சுருக்கமாகக் கூறினேன். இந்த பாகவதத்தை எனக்கு பகவான்
உபதேசித்தார். நான் சுருக்கமாகக் கூறிய பகவானின் மகிமைகளை,
உலகோர்க்கு அன்பே வடிவான பக்தி உண்டாகும்படி நீ விரிவாக எடுத்துக்
கூறுவாய்.

பகவானின் திருவிளையாடல்களை விவரித்துக் கூறுபவரும், அதை


பக்தியுடன் கேட்பவரும் எக்காலத்திலும் மாயைக்கு ஆட்படுவதில்லை
என்றார். எல்லாவற்றையும் கவனமாகக் கேட்ட பரிக்ஷித் நிறைய
சந்தேகங்களைக் கேட்டான்.

மஹரிஷியே, நாரதர் தன்னிடம் வருபவர் அனைவர்க்கும் இறைவனின்


அருளையும் தரிசனத்தையும் பெற்றுத் தருபவராயிற்றே. பகவானின்
மகிமைகளை அவர் யார் யாருக்கு எவ்வெவ்விதமாக உபதேசித்தார்? பகவான்
ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனதைச் செலுத்தி இவ்வூனுடலை உதறித் தள்ளும்
வழியைக் கூறுங்கள். பகவானின் பெருமையைக் கேட்பவர்கள் இதயத்தில்
அவன் குடியேறுகிறான். அவர்களிடம் உள்ள மலங்கள் அழிகின்றன. ரிஷியே
ஜீவாத்மாவிற்கு பஞ்சபூதங்களோடு தொடர்பில்லை. ஆனால், பஞ்ச
பூதங்களாலான இவ்வுடலோடு தொடர்புள்ளதே. அது இயற்கையா? வேறு
காரணம் உண்டா?

மனிதனின் அங்கங்களைப் போல் விராட் ஸ்வரூபனின் அங்கங்களும்


எல்லைக்குட்பட்டதா?

பகவான் எப்படி மாயையை விட்டு ஆனால் அனைவருள்ளும் அந்தர்யாமியாய்


விளங்குகிறார்?

மஹாப்ரளயம், அவாந்திர ப்ரளயம், இவற்றின் கால அளவென்ன?


முக்காலங்களின் நிகழ்வு எவ்வாறு கணிக்கப்படுகிறது? மனிதர் மற்றும்
தேவர்களின் ஆயுட்காலம் எவ்வளவு?

வினாடி முதல் வருடம் வரை எவ்வாறு அறியப்படுகிறது?

தங்கள் கர்மங்களால் ஜீவர்கள் அடையும் கதிகள் எவ்வளவு? அவை


என்னென்ன? எவ்வாறு அடையப்படுகின்றன?

தேவன், மானிடன், அரக்கன் முதலிய பிறவிகள் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய


முக்குணங்களின் பரிணாமத்தால் ஏற்படுகின்றன. அத்தகைய பிறவிகளை
அடைய ஜீவன்கள் என்னென்ன கர்மாக்கள் செய்யவேண்டும்?

79
பூமி, பாதாளம், திசைகள், ஆகாயம், கிரகங்கள், நக்ஷத்ரங்கள், மலைகள்,
கடல்கள், நதிகள், தீவுகள் ஆகியவையும், அவற்றில் வாழும் உயிரினங்களும்
எவ்வாறு தோன்றின?

ப்ரும்மாண்டத்தின் உள், வெளி அளவு எவ்வளவு?

சான்றோர்களின் நடத்தை என்ன? வர்ணாஸ்ரமங்களின் நெறிமுறை என்ன?

யுகங்கள் எத்தனை? அவற்றின் கால அளவுகள் என்ன? அவற்றின் கால


நெறிமுறைகள் என்னென்ன? ஒவ்வொரு யுகத்திலும் பகவான் எவ்வாறு
திருத்தோற்றங்கள் கொள்கிறார்?

மனிதனின் பொது தர்மம், விசேஷ தர்மம், தொழில் தர்மம், ஆகியவற்றைக்


கூறுங்கள் மன்னர்களின் தர்மம் என்ன?

துன்பப்படுவோரின் தர்மம் என்ன?

ப்ரக்ருதி தத்துவங்கள் எத்தனை? அவற்றின் உண்மைத் தோற்றம் என்ன?


இறைவனை வழிபடும் முறை யாது? அஷ்டாங்கயோகத்தின் வழிமுறை
என்ன?

அஷ்ட சித்திகள் எவ்வாறு பெறப்படுகின்றன? அவர்கள் முக்தியடையும்


மார்க்கம் யாது? அவர்களது உடல் எவ்வாறு அழியும்?

இதிஹாஸ புராணங்களின் உள்கருத்து என்ன?

உயிர்களின் தோற்றம், வளர்ச்சி, வழ்ச்சி


ீ எவ்வாறு ஏற்படுகின்றது?
கர்மங்களும், நியமங்களும், அவற்றின் பலன்களும் ஒன்றுக்கொன்று
எவ்வாறு முரண்படாமல் விளங்குகின்றன?

நாஸ்திகன் எவ்வாறு உருவாகிறான்?

ப்ரளயத்தில் ப்ரக்ருதியோடு லயமாகும் ஜீவன் மீ ண்டும் எப்படித்


தோன்றுகிறான்? ஜீவனின் தளையும், விடுதலையும் எவ்வாறு? ஆத்மா
எப்படித் தனித்து நிற்கிறது?

அனைத்துமறிந்த தங்களிடம் என் ஐயங்கள் அனைத்தையும் கேட்டுவிட்டேன்.


எனக்கு தயை கூர்ந்து விளக்கவேண்டும். எனக்கு ஏழுநாட்களுக்கு மரணம்
இல்லை. தங்களின் வாக்காகிய அமுதத்தைப் பருகுவதால் பசி, தாகம்
முதலியவையும் இல்லை.

இவற்றைக் கேட்டதும் ஸ்ரீ சுகர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அழகிய


புன்முறுவலுடன் பதில் கூறத் துவங்கினார்.

80
*ஸ்ரீமத் பாகவதம் - 46*-*ப்ரும்மாவின் தவம்*

ஸூத பௌராணிகர் கூறினார்...

சௌனகாதி மஹரிஷிகளே! அடியாரும் சான்றோரும் நிரம்பிய அவையில்


அரசனான பரீக்ஷித், பகவானின் அமுதத் திருவிளையாடல்கள் பற்றிக் கேட்க
விரும்பி, ஸ்ரீ சுகரிடம் வேண்டவே, அவர் மகிழ்ச்சி மிகுந்து
வேதத்திற்கொப்பான ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கூறினார்.

அது முன்பு ப்ரும்ம கல்பத்தின் துவக்கத்தில் பகவானே ப்ரும்மாவிற்கு


உபதேசித்தது. பாண்டு மகனின் கேள்விகளுக்கு பதில்களை வரிசையாகக் கூற
ஆரம்பித்தார் ஸ்ரீ சுகர்.

கனவு காண்பவனுக்கும் கனவில் தோன்றும் விஷயங்களுக்கும் எவ்வாறு


தொடர்பில்லையோ, அதேபோல், தேகம் முதலியவற்றைக் கடந்த அனுபவ
ரூபமான ஆத்மாவிற்கு, மாயையால் தோற்றமளிக்கும் உலகியல்
பொருள்களுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.

மாயையினால் ஜீவன், பற்பல உருவங்களாகக் காட்சியளிக்கும் (குழந்தை,


சிறுவன், இளைஞன், மனிதன், தேவன் என்று பலவாறாக மாறிக்
கொண்டிருக்கும்) உடலுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எண்ணுகிறது.

முக்குணங்களையும் கலக்கி நிற்கும் காலம், மயக்கம் தரும் மாயை,


இவற்றைக் கடந்த ஆனந்தமயமான ஆத்ம ஸ்வரூபத்தில் மூழ்குகையில்
ஜீவனின் நான் எனது என்ற பற்று அகன்று முழுமையடைகிறான்.

ப்ரும்மாவின் உண்மையான தவத்தினால் மகிழ்ந்த இறைவன், அவரெதிரே


தோன்றி ஆன்ம தத்துவத்தின் உண்மைப்பொருளை விளக்கினார். அதையே
உனக்குச் சொல்கிறேன்.

மூவுலகங்களுக்கும் பிதாவான ப்ரும்ம தேவர் தான் பிறந்த இடமான


தாமரையிலிருந்து எவ்வாறு உலகைப் படைக்கலாம் என்று எண்ணினார்.
ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை.

சரி, தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய, தாமரைத்தண்டைப்


பிடித்துக்கொண்டு கீ ழிறங்கினார். எவ்வளவு தூரம் இறங்கினாலும் அது
எங்கிருந்து முளைத்தது என்று தெரியவும் இல்லை. சுற்றிலும் வெற்றிடம்.
தண்டு கீ ழே போய்க்கொண்டே இருந்தது.

சலித்துப்போன அவர், மீ ண்டும் ஏறி கமலத்திலேயே அமர்ந்தார். அப்போது


அவர் காதுகளின் அருகில், த ப என்ற ஒலி கேட்டது. ஆச்சரியப்பட்ட அவர் ஒலி
எங்கிருந்து வருகிறது என்று அறிய முயன்று தோற்றுப்போனார்.

மீ ண்டும் அதே ஒலி கேட்டதும், தன்னைப் படைத்தவருக்குத்தான் தான்


இங்கிருப்பது தெரியும். அவர் குரலாய்த்தான் இருக்கவேண்டும் என்று முடிவு
செய்து, அதைத் தனக்கான கட்டளையாய் ஏற்று தவம் செய்யத் துவங்கினார்.

81
தவமியற்றுபவர்களிலேயே ப்ரும்மதேவர் மிகவும் உயர்ந்தவர். அவரது
ஞானமோ அளவிடற்கரியது. தன் பஞ்ச ப்ராணன்களையும் ஒடுக்கி, மனம்,
கர்மப் புலன்கள், அறிவுப்புலன்கள் ஆகியவற்றைத் தன்வயப்படுத்தி கடுந்தவம்
இயற்றினார். ஆயிரம் தேவ வருஷங்கள் அதாவது 3,60,000 மனித
வருஷங்களுக்கு அனைத்துலகும் ஒளிபெறத் தவமியற்றினார்.

அவரது தவத்தைக் கண்ட இறைவன், அவருக்கு ஸ்ரீ வைகுண்ட தரிசனம்


அளித்தார். அதற்கிணையான லோகம் ஏதுமில்லை. அங்கு, ஆத்யாத்மிகம்
போன்ற துன்பங்களோ, மரணபயமோ, உடற்பற்றோ, மயக்கமோ இல்லை.
அங்கு ரஜோகுணமோ, தமோ குணமோ, ஸத்வ குணமோ இல்லை. காலன்
கால் வைக்காத லோகம்.

ப்ரக்ருதியான மாயையும் இல்லை. விருப்பு வெறுப்பு இல்லை. விஷ்ணு


பார்ஷதர்கள் உள்ளனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 47*__*பகவான்*_

ப்ரும்மாவின் கடும் தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவருக்கு வைகுண்ட


தரிசனத்தை அளித்தார். அங்கு விஷ்ணு பார்ஷதர்கள் ஸ்ரீ
விஷ்ணுவைப்போலவே தோற்றமளித்தனர். திருமகள் அனைத்துச்
செல்வங்களையும் கொண்டு பற்பல விதங்களில் இறைவனுக்கு பூஜை
செய்கிறாள். தன் அன்புக்கணவனின் திருவிளையாடல்களை இனிமையான
குரலில் பாடுகிறாள். வண்டுகள் அவளின் அழகில் மயங்கி அவளது
குணங்களைப் பாடுகின்றன. ஒப்பற்ற தலைவனும், அழகே
உருவானவனுமான இறைவன் ப்ரகாசமாக விளங்குகிறார். சுநந்தன், நந்தன்,
ப்ரபலன், அர்ஹணன் முதலிய பார்ஷதர்கள் பகவானுக்குப் பணிவிடை
செய்கின்றனர். அவரது திருமுகம் தாமரையை ஒத்தது. மயக்கும் இனிய
புன்முறுவல் தவழ்கின்றது. பெரிய அகன்ற திருக்கண்களில்
செவ்வரியோடுகிறது. தலையில் திருமுடி, காதுகளில் குண்டலங்கள்,
அரையில் மஞ்சள் பட்டாடை, திருமார்பில் தங்கத்தாலான ரேகை போல்
(மின்னற்கொடி போல்) திருமகள். நாற்கரங்கள். ஆஹா! என்ன அழகு! விலை
மதிக்கவொண்ணா பீடத்தில் பகவான் எழுந்தருளியிருக்கிறார்.

செல்வம், தர்மம், புகழ், செழிப்பு, ஞானம், வைராக்யம் இந்த ஆறு குணங்களும்


சேர்ந்திருப்பதே 'பக' எனப்படும். பக என்னும் தன்மை கொண்டவர் பகவான்
ஆகிறார்.

இவை அனைத்தும் நிலைத்து நிற்கும் இடமாக இறைவன் இருக்கிறார். தனது


நித்திய ஆனந்தத்தில் எப்போதும் நிலைத்திருக்கிறார். இவ்வாறு இறைவனை
தரிசித்த ப்ரும்மா ஆனந்தக் கடலில் மூழ்கினார். ஆனந்தக்கண்ண ீர் சொரிய,
பகவானின் திருவடித்தாமரைகளை சிரம் தாழ்த்தி வணங்கினார். அன்பே
வடிவான பகவான், தன்னைக் கண்ட ஆனந்தத்தில் திளைத்துக்கொண்டு,
படைப்பிற்கான கட்டளையை எதிர்நோக்கியிருக்கும் ப்ரும்மாவின்
கரங்களைத் தன் இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு புன்னகை பூத்தவாறு
கூறலானார் :

82
ப்ரும்மதேவரே! எல்லா வேதங்களையும் உமக்குள் கொண்டிருக்கிறீர்.
வெகுகாலம் தவம் செய்து என்னை மகிழச் செய்தீர். நானோ அடியார்
விரும்பியதனைத்தும் அளிப்பவன். என்னை தரிசிக்கும் வரைதான்
ஒருவனைச் சிரமம் தீண்டமுடியும். நீங்கள் என்னைக் காணாமலேயே, என்
குரலைக் கேட்டு அதன்படி செய்தீர். இந்த வைகுண்ட தரிசனத்தை நானே
உமக்கு விரும்பி அளித்தேன். படைப்பை எப்படிச் செய்வது என்று நீங்கள்
மயங்கியதால் தவம் செய்யக் கட்டளையிட்டேன். தவம் எனது ஹ்ருதயம்.
நானோ தவத்தின் ஜீவன். தவத்தைக் கொண்டே இந்தப் ப்ரபஞ்சத்தைப்
படைக்கிறேன். தவத்தாலேயே காக்கிறேன். தவத்தினாலேயே என்னுள்
இழுத்துக்கொள்கிறேன். என் திறன் அனைத்தும் தவமே. ஆனால் அதைச்
செய்வது மிகவும் கடினம்.

ப்ரும்மா இறைவனிடம் சொன்னார்:

இறைவா! அனைத்து உயிர்களின் சாட்சி தாங்களே. தாங்கள் தங்களது


தடங்கலற்ற ஞானத்தால் என் உள்ளத்தை அறிந்தீர். தாங்களே மாயையின்
தலைவர். சிலந்தி தன் வாயிலிருந்து கசியும் திரவத்தால் வலை பின்னி, அதில்
சுற்றிச் சுற்றி விளையாடி தனக்குள் இழுத்துக் கொள்கிறது. அவ்வாறு
செய்வதால் அதன் உடல் பருமனாகவோ, இளைத்தோ மாறுபாடு
அடைவதில்லை. அதுபோல், தாங்களும் தங்களுடைய பற்பல சக்திகளால்
ப்ரபஞ்சத்தைப் படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக்கொள்கிறீர். நீங்களும்
செய்யும் லீலைகளால் எந்த மாறுபாடுகளும் இல்லாமல் இருக்கிறீர்.

இவ்வாறு எப்படிச் செயல்படுகிறீர்கள்? மேலும், தாங்கள் கட்டளையிட்டால்,


சோம்பலின்றி படைப்புத் தொழிலைத் துவங்குகிறேன். தங்கள் திருவருளால்
'நான்தான் படைக்கிறேன்' என்ற அகந்தையோ, அவற்றின் மீ து பற்றுதலோ
எனக்கு ஏற்படாமல் இருக்கட்டும். (இவ்விடத்தில் மிகவும் ஆச்சரியமாக
தற்கால வழக்கத்தை ஸ்ரீமத் பாகவதம் மேற்கோள் காட்டுகிறது)

இறைவா! தோழமை பூண்ட ஒருவன் மற்றொருவரின் கைகளைப் பிடித்துக்


குலுக்குவதுபோல் என் கைகளைத் தங்கள் திருக்கரங்களால் பிடித்தீர். 'என்
படைப்புத்தொழில் தங்கள் சேவை என்பதை எப்போதும் நான் மறவாதிருக்க
வேண்டும்' என்றார். பகவான் மிகவும் மகிழ்ந்து ப்ரும்மாவிற்கு சதுஸ்லோகீ
பாகவதம் என்னும் பாகவத ஸாரத்தை உரைத்தார்.

பகவான் சொன்னதால் இது பாகவதம் எனப்படுகிறது.

*ஸ்ரீமத் பாகவதம் - 48* -*சதுஸ்லோகீ பாகவதம்*

தன்னை வணங்கிய ப்ரும்மதேவரின் கரங்களைப் பிடித்துக்கொண்டு பகவான்


உபதேசம் செய்த நான்கு ஸ்லோகங்களும் சதுஸ்லோகீ பாகவதம்
எனப்படுகின்றன. ப்ரபஞ்சம் மற்றும் படைப்பின் ரகசியங்களைக் கூறும் அந்த
ஸ்லோகங்கள் பின்வருமாறு :

1. ‍அஹமேவாஸமேவாக்ரே யதாபா வோயத் ரூபகுணகர்மக:|


ததைவ தத்த்வவிக்ஞாநமஸ்து தேமத நுக்ரஹாத்||

83
படைப்பிற்கு முன் நான் மட்டுமே இருந்தேன். அதுதான் என் தூய்மையான
பரிபூரண நிலை. என்னைத் தவிர ஸ்தூலமாகவோ, ஸூக்ஷ்மமாகவோ
வேறெதுவுமில்லை. படைப்பின் உருவமாகத் தோன்றும் அனைத்தும் நானே.
ப்ரபஞ்சம் ப்ரளயத்தில் லயமடைந்தபின் நானே தனித்திருக்கிறேன்.

2. ருதோ(அ)ர்தம் யத் ப்ரதீயேத ந ப்ரதீயேத சாத்மநி |


தத்வித் யாதா த்மநோ மாயாம் யதாபா ஸோ யதா மம||

ஒரு பொருளின் பிம்பம் என்பது உண்மையில் அந்தப் பொருள் அல்ல. அது


வெறும் பிம்பமே. பரமாத்மாவான என்னைத் தவிர வேறொரு பொருள்
இல்லை. என் ப்ரதிபிம்பமாகத் தோன்றும் பொருள்கள் நிஜம் இல்லை. ராகு
என்று ஒரு கிரகம் ஆகாயத்தில் காணப்படாத போதிலும் உண்மையில்
இருப்பதுபோல், நான் யாராலும் காணப்படாவிடினும் உண்மையில் நான்
மட்டுமே இருக்கிறேன். இருக்கும் பொருளை மறைப்பதும், இல்லாத
பொருளைக் காட்டுவதுமாக, என் மாயை இரண்டு விதமாக செயல்படுகிறது.

3. யதா மஹாந்தி பூதாநி பூதேஷூச்சாவயேஷ்வநு |


ப்ரவிஷ்டாந்யப்ரவிஷ்டாநி ததா தேஷு ந தேஷ்வஹம் ||

ஆகாயம் முதலிய ஐம்பெரும்பூதங்கள் எல்லா பொருள்களிலும் உள்


நிரம்பியுள்ளன. ஆனால், அப்பொருள்கள் தோன்றுமுன்னேயும்
பஞ்சபூதங்களும் இருந்தன. எனவே உட்புகவில்லை என்றும் கூறலாம்.
இருவிதமாகவும் கொள்வதற்கு வாய்ப்பளிக்கிறது. அதுபோல்,
அனைத்துயிர்களிலும் ஆன்மாவாக உள்நுழைந்துள்ளவன் நானே. ஆனால்,
உடல்களில் மட்டுமின்றி அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்தும்
இருக்கிறேன். உதாரணத்திற்கு, மண்ணைக் கொண்டு சுவற்றைக்
கட்டுகிறார்கள். சுவற்றில் மண் இருக்கிறது. மண் இல்லாமல் சுவர் இல்லை.
ஆனால், சுவர் இல்லாமலும் மண் உண்டு.

4. ஏதாவதே வ ஜி க்ஞாஸ்யம் தத்த்வஜிக்ஞாஸுநாத்மந:|


அந்வயவ்யதிரேகாப் யாம் யத் ஸ்யாத் ஸர்வத்ர ஸர்வதா ||

உலகியல் வஸ்துக்கள் ஒவ்வொன்றையும் இது ப்ரும்மமல்ல இது


ப்ரும்மமல்ல என்று எதிர்மறைப் போக்கில் தள்ளிக்கொண்டு வருவதாலும்,
அவற்றின் ஆன்மாவாக விளங்குவதால் இது ப்ரும்மமே என்ற
நேர்மறைப்போக்கிலும் அறியப்படுபவன் நான் ஒருவனே. அனைத்தையும்
கடந்தும், உள்நுழைந்து வியாபித்தும் இருப்பவன் இறைவன் ஒருவனே.
பரமாத்மாவின் உண்மைத் தத்துவம் இதுவொன்றே.

இக்கொள்கையை ஒருமனதுடன் பற்றிக்கொள். உனக்கு எப்போதும்


எவ்விதமான படைப்புகளாலும் மயக்கம் ஏற்படாது என்று கூறி
ப்ரும்மதேவரை ஆசீர்வதித்துவிட்டு தன் ஸ்வரூபத்தை மறைத்துக்கொண்டார்
இறைவன்.

அந்த ஸ்ரீ ஹரியை வணங்கிவிட்டு தன் படைப்புத் தொழிலைத் துவங்கினார்


ப்ரும்மதேவர்.

84
*ஸ்ரீமத் பாகவதம் - 49* -*புராண லக்ஷணங்கள்*

படைப்பின் ரஹசியங்களையும் பகவான் உபதேசித்த சதுஸ்லோகீ


பாகவதத்தையும் நாரதர்க்கு எடுத்துச் சொன்னார் ப்ரும்மா. நாரதர் அவற்றை
வியாஸருக்குக் கூறினார். ஸ்ரீ சுகர் மேலும் கூறலானார்...

அரசே! புராணம் என்பது பத்து லக்ஷணங்கள் கொண்டது. அவை அத்தனையும்


கொண்டது ஸ்ரீமத் பாகவதம். ஸர்கம், விஸர்கம், ஸ்தானம், போஷணம்,
ஊதிகள், மன்வந்தரங்கள், பகவத் கதைகள், நிரோதம், முக்தி, ஆஸ்ரயம்
ஆகியவையே பத்து லக்ஷணங்களாகும்.

பகவானின் நியமனத்தால் ஏற்பட்ட முக்குண பரிமாணங்களால் தோன்றிய


பஞ்சபூதங்கள், சப்தம் போன்ற தன்மாத்திரைகள், ஐம்புலன்கள், அஹங்காரம்,
மஹத் முதலியவை பற்றிக் கூறுவது ஸர்கம்.

விராட்புருஷனிடமிருந்து தோன்றிய ப்ரும்மதேவரின் படைப்புகளைப் பற்றிக்


கூறுவது விஸர்கம். ஜீவன்களை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் இறைவனின்
பெருமைகளே ஸ்தானம் ஆகும்.

தன் பக்தர்களிடம் இறைவன் காட்டும் கருணையே போஷணம் ஆகும்.

அன்புடன் மக்களைக் காக்கும் தூய தர்மத்தைப் பின்பற்றும் மனு என்னும்


அரசர்களைப் பற்றிக் கூறுவது மன்வந்தரக் கதைகள்.

ஜீவனை கர்மத்தளைகளில் மாட்டிவிடும் வாஸனைகளைப் பற்றிக் கூறுவது


ஊதிகள் ஆகும்.

பகவானின் பற்பல திருத்தோற்றங்களையும், பக்தர்களின் கதைகளையும்


கூறுவது ஈசானு கதைகள் அல்லது பகவத் கதைகள் ஆகும்.

இறைவன் யோகநித்ரை புரியும்போது, ஜீவன் உபாதிகளுடனேயே


இறைவனோடு கலப்பது நிரோதம் நான் என்ற அஹங்காரத்தைத் துறப்பது
முக்தி. அதுவும் விளக்கப்படுகிறது.

அசைவனவும், அசையாதனவும் தோன்றுவதற்கு ஆதாரமான இறைவனிடமே


அவையனைத்தும் லயமாகின்றன. இதுவே ஆஸ்ரயம். இதை விளக்குவதற்கு
ஏராளமான உதாரணங்களும், அனுபவக்கதைகளும் கூறப்படுகின்றன.

ஐம்பொறிகளில் எதை எடுத்துக் கொண்டாலும், அதன் உருவம், அதன்


அதிஷ்டான தேவதை, அதன் உணர்ச்சி மூன்றும் உண்டு. அனைத்திற்கும்
ஜீவன் பொதுவானது. கண்ணை எடுத்துக்கொண்டால் பஞ்சபூதங்களால் ஆன
கோளம் ஆதி பௌதிகம் அதன் பார்வைக்கு தேவதை சூரியன். அது ஆதி
தைவிகம். பார்க்கும் சக்தி ஞானமே வடிவான பகவான். அது ஆத்யாமிகம்.
இம்மூன்றும் ஒரே ஜீவனுக்குள் வெளிப்படுகிறது. இம்மூன்றிலும்
ஒன்றில்லாவிடில் மற்றொன்றை நம்மால் அறிய முடியாது. மூன்றையும்
சாட்சியாக இருந்து அறிபவர் பரமாத்மா. அவரே ஆஸ்ரயன் ஆவார். விராட்

85
புருஷன் ப்ரும்மாண்டத்தைப் பிளந்துகொண்டு வெளிவந்து தான் வசிக்க இடம்
வேண்டி நீரைப் படைத்தார்.

விராட்புருஷனுக்கே நரன் என்ற பெயருண்டு. அவரிடமிருந்து தோன்றியதால்


நீருக்கு நாரம் என்ற காரணப்பெயர் வந்தது. நீரிலேயே ஆயிரம் வருஷங்கள்
குடியிருந்ததால் நாராயணன் என்று பெயர் வந்துவிட்டது. பகவானின்
சங்கல்பத்தாலேயே பஞ்சபூதங்கள், கர்மாக்கள், அவற்றின் கதி, அவற்றை
செயல்படுத்தும் காலம், அதன் இயல்பு, இவையனைத்தையும் அனுபவிக்கும்
ஜீவன் அனைவர்க்கும் செயல்படும் சக்தி கிட்டுகிறது. பகவான் செயல்படாமல்
இருப்பாராயின் இவையனைத்துமே சக்தியற்றுச் செயல்படாமல்
இருக்கின்றன.

*ஸ்ரீமத் பாகவதம் - 50*-*படைப்பின் முறை*

தனித்து நீரில் யோகசயனத்தில் இருந்த விராட்புருஷன் விழித்துக்


கொண்டதும், ஒவ்வொரு அங்கமும் செயல்படுவதற்கேற்ப அவற்றின்
அதிஷ்டான தேவதைகளும், புலன்களின் சக்திகளும் உயிர்பெறுகின்றன.
அவர் பார்க்க நினைத்தபோது சூரியன் தோன்றினான். அவரே கண்ணின்
அதிஷ்டான தேவதை.

கரங்களை அசைத்தபோது அவற்றின் அதிஷ்டான தேவதையான இந்திரன்


தோன்றினான்.

மாயை பற்றி நினைத்தபோது, இதயமும் அதை ஒட்டி மனமும், அதன்


அதிஷ்டான தேவதையான சந்திரனும் தோன்றின. இவ்வாறு ஒவ்வொரு
தேவதையாக விராட்புருஷனின் செயல்பாடுகளுக்கேற்ப தோன்றின.
இவ்வுருவத்திற்கப்பாலும் இறைவன் சூக்ஷ்ம ரூபமாக நீக்கமற
நிறைந்திருக்கிறான். அது சொல்லுக்கெட்டாதது. மனத்திற்கும் எட்டாதது.
இறைவனின் ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்கள் இரண்டுமே மாயையின்
தோற்றங்கள். உண்மையில் இறைவன் தானாக எச்செயலும் செய்வதில்லை.
மாயையைக்கொண்டே அத்தனை செயல்களையும் நிகழ்த்துகிறான்.

ப்ரும்மா விராஜன் என்ற உருவிலும், வாச்யன் (சொல்லப்படுபவன்), வாசகன்


(சொல்பவன்) என்ற உருவிலும் விளங்குகிறார். அதாவது சொல், பொருள்
இரண்டு உருவிலும் இருக்கிறார். இன்னும் பல திருமேனிகளையும்,
திருப்பெயர்களையும் கொள்கிறார். மரீசி முதலிய ப்ரஜாபதிகள், மனுக்கள்,
தேவர்கள், ரிஷிகள், பித்ரு தேவதைகள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள்,
வித்யாதரர்கள், அசுரர்கள், குஹ்யகர்கள், கின்னரர்கள், அப்ஸரஸ்கள்,
நாகர்கள், சர்ப்பங்கள், கிம்புருஷர்கள், உரகர்கள், மாத்ருதேவதைகள்,
அரக்கர்கள், பிசாசர்கள், ப்ரேதங்கள், விநாயகர்கள், கூஷ்மாண்டர்கள்,
உன்மாதர்கள், வேதாளர்கள், யாதுதானர்கள், கிரகங்கள், பறவைகள்,
விலங்குகள், பசுக்கள், மரங்கள், செடிகொடிகள், மலைகள், ஊர்வன, அசைவன,
அசையாதன, கருவில் தோன்றுவன, முட்டையிலிருந்து வெளிவருவன,
அழுக்கிலிருந்து தோன்றும் புழுக்கள், நீர், நிலம் ஆகாயத்தில் வசிப்பன
அனைத்தையும் ப்ரும்மாவே படைக்கிறார்.

86
இவற்றில் சான்றோர்களிடம் ஸத்வ குணமும், தீயோர்களிடம் தமோ
குணமும், இரண்டும் கெட்டு நடுவிலிருப்போரிடம் குணக்கலப்பும் இருப்பது
அவரவரின் பாவ புண்ய கர்மாக்களினாலேயே ஆகும். ஸத்வ, ரஜஸ், தமஸ்
அடிப்படையில் மூன்று இடங்கள் உள்ளன. அவை

தேவர்கள் அனுபவிக்கும் ஸ்வர்கம்,

மனிதர் அனுபவிக்கும், செல்வம் மக்கள் முதலியவை,

நரகம் ஆகியவை.

இவற்றிலும் குணபேதங்களால் பிரிவுகள் உண்டு.

இறைவனே உலகைக் காக்க அறமே உருவெடுத்த மஹா விஷ்ணுவாகவும்,


மீ னம், வராகம் போன்றவையாகவும், ராமன், கிருஷ்ணன் போன்ற மானுட
வடிவிலும் அவதாரம் செய்கிறார். இறைவன் ப்ரளய காலத்தில் காலாக்னி
ருத்ர ரூபியாகவும் இருந்து தம்மிடம் தோன்றிய ப்ரபஞ்சத்தைத் தானே
சிதறடிக்கிறார். இப்படியெல்லாம் சொன்னபோதிலும், வேதங்களாலும்,
சான்றோர்களாலும் இறைவனின் மகிமைகளையும், ஸ்வரூபத்தையும்
முழுதும் கூற இயல்வதில்லை. பகவானே எல்லாவற்றையும் செய்வதாகக்
கூறும் வேதங்கள், பின்பு, அவையனைத்தும் மாயையின் செயல், பகவானிடம்
ஏற்றிச் சொல்லப்பட்டது என்கின்றன.

கல்பம் என்பது இருவிதங்கள்.

ஒன்று ப்ரும்மாவின் ஆயுள்காலம் முடியும்வரை உள்ள மஹாகல்பம்.


இன்னொன்று ப்ரும்மாவின் பகல்பொழுது முடியும்வரை உள்ள அவாந்தர
கல்பம். இதுவரை சொன்னது இரண்டு கல்பங்களின் துவக்கத்திலும்
நிகழ்பவை. எல்லா கல்பங்களிலும் படைப்பு என்பது ஒரே மாதிரிதான் நிகழும்.
மஹாகல்பத்தில் ப்ரக்ருதி, மஹத் என்பவற்றிலிருந்து துவங்குகிறது.
அவாந்தர கல்பத்தில் ஜீவராசிகளிலிருந்து படைப்பு துவங்குகிறது. ஒன்று
புதிதாகத் துவங்குவது. மற்றொன்று திருத்தியமைப்பது. இதன் பின் சௌனகர்
விதுரரின் தீர்த்த யாத்திரை பற்றி வினவுகிறார்.

*இரண்டாவது ஸ்கந்தம் முற்றிற்று.*

*ஸ்ரீமத் பாகவதம் - 51 யார் வடு


ீ ?*

சௌனகர் கேட்டார் :

ஸூதரே, பரம பக்தரான விதுரர் யுத்தத்தைக் காண சகியாமல், தீர்த்த


யாத்திரை சென்றாராமே. அப்போது மைத்ரேய மஹரிஷியை சந்தித்தார்
என்று கூறின ீர்களே.

இருவருக்கும் பகவத் விஷயமாக ஏதாவது உரையாடல் நடந்ததா?

87
ஒரே தெய்வத்தை வழிபடும் இரு பக்தர்களோ, ஒரே குருவை அடைந்த
உண்மையான சீடர்களோ சந்தித்தால் வேறென்ன பேசுவார்கள்?

அவர்களது தெய்வத்தைப் பற்றியே அவர்களது பேச்சு இருக்கும். அவர்களின்


உரையாடல் எங்கு நடந்தது?

விதுரர் எதற்காக சுற்றத்தை வெறுத்துக் கிளம்பினார்?

ஸூதர் சொன்னார்:

இதே கேள்வியை பரிக்ஷித்தும் கேட்டார். அதற்கு ஸ்ரீ சுகர் கூறிய பதிலையே


உங்களுக்குச் சொல்கிறேன்.

ஸர்வேஸ்வரனான இறைவன் ஸ்ரீ க்ருஷ்ணன் பாண்டவ தூதனாக


அஸ்தினாபுரம் சென்றான்.

அப்போது துரியோதனன் 'என் வட்டிலோ


ீ அல்லது விருந்தினர்
மாளிகையிலோ தங்கலாமே' என்றழைத்தான்.

தூது வந்த இடத்தில் கை நனைக்கலாது என்று சொல்லிவிட்டான் கண்ணன்.


த்ரௌபதியை மானபங்கம் செய்யும் சமயத்தில் வாளாவிருந்ததால், பீஷ்மர்,
த்ரோணர் போன்றவர்கள் மீ தும் அவனுக்கு வருத்தம் இருந்தது.

யார் வட்டில்
ீ தங்கலாம் என்று யோசித்துக் கொண்டு ராஜவதியில்
ீ இறங்கி
நடந்தான்.

பகவான் வதியில்
ீ நடப்பதைக்கண்டு அவன் பின்னால் அனைவரும் வந்தனர்.
முதலில் வெள்ளை வெளேரென்ற பளிங்கு மாளைகை வந்ததும்
*இது யார் வடு?*
ீ என்று கேட்டான்.

பீஷ்மர் முன் வந்து 'என் வடுதான்


ீ கண்ணா... உள்ளே வா' என்றழைத்தார்.

பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்தான்.

அடுத்து வந்த மாளிகையை துரோணர் தன் வடென்று ீ அழைத்தார்.


கர்ணனுக்கும் ஆசை. அவனும் தன் மாளிகையைக் கடக்கும்போது
கூப்பிட்டுப்பார்த்தான். கண்ணன் பிறகு வருகிறேன் என்றதும் திட்டினான்.

வரிசையாக ஒவ்வொரு வட்டையும்


ீ கடந்து சென்று கொண்டே இருந்தான்.
எங்கேதான் தங்கப்போகிறான் என்ற ஆவல் அனைவர்க்கும் மேலிட்டது.

அப்போது மிகச் சாதாரணமாக அந்த சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல் ஒரு


பழைய ஓட்டுவடு ீ வந்தது.

இது யார் வடு?


ீ என்று கேட்டான்.

இது உன்னுடைய வடுதான்


ீ கண்ணா...

88
என்றார் விதுரர். அந்த வடுீ கண்ணனுக்கு கோகுலத்து வட்டை ீ நினைவு
படுத்தியது போலும். மிகவும் மகிழ்ந்துபோன கண்ணன், ஆ.. என் அம்மா
யசோதைக்குத்தான் என்மீ து எவ்வளவு அன்பு. நான் எங்கு போனாலும்
அவ்விடத்தில் நான் வசிக்க ஒரு வடு
ீ கட்டி வைத்திருக்கிறாளே..

'நான் இன்று இங்கேயே தங்குகிறேன்' என்று சொல்லி அவனது சொந்த


வட்டிற்குள்
ீ நுழைவதுபோல் உள்ளே போனான்.

குந்தியும் விதுரர் வட்டில்தான்


ீ தங்கியிருந்தாள். அப்படிப்பட்ட பக்தர் விதுரர்
பகவான் எழுந்தருளிய அந்த வட்டை ீ விட்டுச் சென்றாரே..

அவர் மைத்ரேயரைச் சந்தித்துப் பேசிய உரையாடலை சான்றோர்கள்


கொண்டாடுகிறார்கள். அந்த உரையாடலைக் கூறுங்கள் என்றார் பரிக்ஷித்.

ஸ்ரீ சுகர் சொன்னார் :

மறுநாள் பகவான் அவைக்குச் சென்றபோது, அவன் கூறிய நல்லுரைகள்


அனைத்தும் குருடனான த்ருதராஷ்ட்ரனுக்கு செவிடன் காதில் ஊதிய
சங்காயிற்று. அப்போது விதுரர் எழுந்து பல நல்லுரைகளைக் கூறினார்.

அவையே விதுர நீதி என்று பெரியோரால் போற்றப்படுகிறது. விதுரர்


சொன்னார்,

அண்ணா!

துரியோதனன் பிறந்தபோதே உங்களுக்குக் கூறினேன்.

இவன் கலிபுருஷனின் அவதாரம். இவனால் நாடு கெட்டுப்போகும்.

குலம் விளங்க ஒருவனைத் தள்ளலாம். கிராமம் விளங்க ஒரு குடும்பத்தைத்


தள்ளலாம்.

நாடு விளங்க ஒரு கிராமத்தையே அழிக்கலாம். ஆத்மாவை உணர உலகையே


துறக்கலாம்.

துரியோதனன் மீ து புத்ரபாசம் வேண்டாம். நாடு கடத்துங்கள் அல்லது கொன்று


விடுங்கள் என்று சொன்னேன்.

இவனை இப்போதே விலக்கிவிட்டு கண்ணன் சொல்வதைக் கேளுங்கள்


என்றார்.

உடனே துரியோதனன், வெகுண்டு எழுந்து விதுரரைப் பார்த்து ஆத்திரத்துடன்,


வேலைக்காரியின் மகனான இவனை யார் சபைக்கு அழைத்தது? நாம் போடும்
சோற்றை உண்டு நமக்கெதிராகப் பேசுகிறான். இவனை நாடு கடத்துங்கள்
என்று கத்தினான்.

அதைக் கேட்டு த்ருதராஷ்ட்ரன் பேசாமல் இருக்கவே, விதுரர், இதுவும்


பகவானின் லீலை என்று உணர்ந்து, சிறிதும் கலக்கமின்றி, கோட்டை

89
வாசலில் வில்லை வைத்துவிட்டு‌அஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறினார்.
கௌரவர்கள் செய்த புண்ணியங்களின் பலன் அன்றே தீர்ந்தது.

தன் ப்ரியனான பகவான் எங்கெல்லாம் அர்ச்சாவதாரமாய்


எழுந்தருளியிருக்கிறாரோ அங்கெல்லாம் செல்ல மனம் கொண்டு தீர்த்த
யாத்திரை கிளம்பினார் விதுரர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 52*-*விதுரரின் தீர்த்தயாத்திரை*

தீர்த்த யாத்திரை சென்ற விதுரர், மதுரா, ப்ருந்தாவனம், அதன் உபவனங்கள்,


கோவர்தனம், யமுனை, கங்கை, இன்னும் பல புண்ய நதிகள், நாராயண
ஸரஸ், போன்ற பல இடங்களுக்கு தனி ஒருவராகவே யாத்திரை சென்றார்.

உயிர் வாழத் தேவையான மிதமான, ஸாத்வகமான,


ீ சுத்தமான உணவை
மட்டுமே எடுத்துக் கொண்டார்.

ஒவ்வொரு நதியிலும் தனித்தனியாக நீராடி, விரிப்பு ஏதுமின்றி நிலத்தில்


படுத்தார். மிக மெல்லிய தேகமுடையவராகி அவரைச் சேர்ந்தவர்கள் அவரை
அடையாளம் கண்டு கொள்ள முடியாதவாறு மரவுரியுடுத்து, விரதங்களை
மேற்கொண்டு சுற்றித் திரிந்தார்.

பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு ப்ரபாஸ தீர்த்தத்திற்கு


திரும்புவதற்கு வெகு காலமாயிற்று.

இதற்கிடையில் பாரத யுத்தம் முடிந்து தர்மபுத்ரர் நேர்மையுடன் நல்லாட்சி


புரிந்து வந்தார். பாரதப்போரில் நிகழ்ந்தவை அனைத்தையும் கேள்வியுற்ற
விதுரர் வருந்தியவராக மௌன விரதமேற்று ஸரஸ்வதி நதி மேற்கு நோக்கிப்
பாயுமிடத்தை அடைந்தார்.

அங்கு திரிதர், உசனஸ், மனு, ப்ருது, அக்னி அஸிதர், வாயு, ஸுதாசர், கோ,
குகன், சிராத்ததேவர் ஆகியோரின் பெயர்களில் இருந்த புண்ய தீர்த்தங்களில்
நீராடி, இறந்துபோன உறவினர்களுக்காக நீர்க்கடன் செய்தார்.

ஸரஸ்வதி நதி தீரத்தில் மஹரிஷிகளாலும், தேவர்களாலும் நிறுவப்பட்ட


பற்பல திருக்கோவில்கள் இருந்தன. எல்லாவற்றையும் தரிசனம் செய்தார்
விதுரர்.

அக்கோவில்களின் கோபுர கலசங்களில் சுதர்சன சக்கர அடையாளங்கள்


இருந்தன. அவற்றைப் பார்த்ததும் கண்ணன் நினைவு வந்தது.

அங்கிருந்து கிளம்பி, ஸௌராஷ்டிரம், சௌவரம்,


ீ மத்ஸ்யம், குருஜாங்காலம்
ஆகிய தேசங்களைத் தாண்டி யமுனைக்கரையை அடைந்தார்.

அங்கு பரம பாகவதரான உத்தவரை சந்தித்தார். தூரத்திலிருந்து பார்க்கும்


போதே பரமபக்தர் என்று தெரிந்துவிட்டது. பாம்பின் கால் பாம்பறியும். உத்தம
பக்தர்களை அத்தகையோரே அறிவர் அன்றோ...

90
துவாரகையில் கண்ணனோடு அல்லவா இருப்பார். இங்கு வந்திருப்பவர்
உத்தவர் மாதிரி இருக்கிறதே..

தான் கண்ணனின் மந்திரி என்று எப்போதும் மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கும்


உத்தவன் முகமோ வாடிப் போயிருந்தது. ஏதோ பெயருக்கு உயிரைச்
சுமந்தவரைப் போல் காணப்பட்டார்.

பக்தர்களின் ஹ்ருதயம் ஒன்றே. ஏனெனில் அவர்கள் ஹ்ருதயத்தில்


குடியிருப்பவன் ஒருவன்தானே. அதனால் ஹ்ருதயத்திலும் பேதம் இல்லை.
அருகில் வந்ததும், அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

கண்ணனையே நேரில் கண்டவர் போல் அகமகிழ்ந்து போனார்கள் இருவரும்.


ஆரத்தழுவிக்கொண்டு பேச்சற்ற நிலையில் தவித்தார்கள் இருவரும்.
ஒருவாறாக சிறிது நேரம் கழித்து விதுரர், கேள்விமழை பொழிந்தார்.

உத்தவரும் விதுரர் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறார். பரம பக்தர் என்று


நன்றாய்த் தெரிந்தது. ஆனால் கேள்விப்பட்ட விவரங்கள் எதுவும்
ஒத்துப்போகாத அளவிற்கு விதுரர் உரு மாறியிருந்தார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 53*-*கேள்விக்கணைகள்*

உத்தவரும் விதுரரும் யமுனைக் கரையில் சந்தித்தனர். ஆனந்தத்தில்


தம்மையே மறந்து தழுவிக்கொண்டு வெகுநேரம் நின்றனர். பின்னர், விதுரர்
உத்தவனைப் பார்த்து மிகவும் பரபரப்புடன் வரிசையாக
கேள்விக்கணைகளைத் தொடுத்தார். கண்ணனைப் பற்றி ஏதேனும் செய்தி
கிடைத்தால் போதும் என்ற தவிப்பு மிகுந்திருந்தது அவர் குரலில்.

தன் தொப்புள் குழியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவின்


வேண்டுகோளுக்கிணங்கி பூபாரம் தீர்க்கவந்த கண்ணனும் பலராமனும்
நலமா? குருவம்சத்தின் நெருங்கிய நண்பரான வசுதேவர் நலமா? குந்தி
முதலிய தன் சகோதரிகளுக்கு தந்தையைப்போல் மனம் மகிழ்ந்து
திளைக்கும்படி வேண்டியதையெல்லாம் கொடுத்து சீர்செய்வாரே.. அவர்
எப்படி இருக்கிறார்?

ருக்மிணியின் மகனும், சிறந்த சேனாதிபதியுமான ப்ரத்யும்னன் நலமா?

அரசனாகும் ஆசையை அறவே விட்டொழித்தவரும், கண்ணனின்


வேண்டுகோளுக்காக அரசாட்சி செய்பவருமான உக்ரசேனர் நலமா?

ஸ்ரீ க்ருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி முருகனைப் பலவாறு


விரதங்களால் பூஜித்து சாம்பன் என்ற பெயரில் தன் மகனாகவே
அடைந்தாளே.. சாம்பனும் ஜாம்பவதியும் எப்படி இருக்கிறார்கள்?

அர்ஜுனனிடமிருந்து தனுர்வேதத்தின் ரகசியங்களைக் கற்ற ஸாத்யகி நலமா?

ஶ்வபல்கரின் மகனான அக்ரூரர் கிருஷ்ண பக்தியில் தலை சிறந்தவராயிற்றே.


மஹா அறிவாளி. க்ருஷ்ணனின் காலடிச்சுவடுகளைக் கண்டு

91
பரமானந்தமடைந்து ப்ருந்தாவனத்து வதிகளில்
ீ விழுந்து புரண்டவர் அவர்.
அவர் நலமோடு இருக்கிறாரா?

போஜமன்னனின் பெண்ணான தேவகி தேவமாதா அதிதிக்கு ஒப்பானவள்.


வேதமாதா வேள்விகளின் நெறிகளையும், அவற்றின் பொருளையும் மந்திர
உருவில் தாங்குவதுபோல் ஸ்ரீ க்ருஷ்ணனை உதரத்தில் தாங்கினாளே. அவள்
நலமா?

சாஸ்திரங்களுக்கும் வேதங்களுக்கும் ஆதிகாரணன் எனவும்,


அந்தக்கரணங்களில் ஒன்றான மனதின் தேவதையென்றும் புகழப்படும்
அநிருத்தன் நலமா?

(அந்தக்கரணங்கள் நான்கு - சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் ஆகியவை.


அவற்றின் தேவதைகள் முறையே வாசுதேவன், ஸங்கர்ஷணன், ப்ரத்யும்னன்,
அநிருத்தன் ஆகியோர்)

உத்தவரே!

க்ருஷ்ணனை ஹ்ருதய கமலத்தில் தாங்கி உடலைத் துரும்பென


மதிப்பவர்களான ஹ்ருதீகன், சத்யபாமாவின் மகனான சாருதோஷ்ணன்,
கதன் ஆகியோர் நலமா?

தர்மபுத்ரன் பற்றி ஏதாவது தெரியுமா?

க்ருஷ்ணனும் அர்ஜுனனும் அவரது இரு கரங்கள் போல் இருப்பார்களே. அவர்


நல்லாட்சி புரிகிறாரா?

பீமன் போர்க்களத்திற்கு தேரிலேறித்தான் வருவான். யுத்தம் சற்று


உக்ரமடைந்ததும் சினத்தினால் கீ ழே குதித்து கதையைச் சுழற்ற
ஆரம்பிப்பானே. அவனது சினம் குறைந்திருக்கிறதா?

காண்டீபத்தை ஏந்திய அர்ஜுனன், தன்னைச் சார்ந்தவர் அனைவர்க்கும்


நற்பெயர் வாங்கித் தருபவன். வேடனாக வந்த பரமேஸ்வரனையே
பாணங்களால் மூடி மறைத்தவனாயிற்றே. அதனால் மகிழ்ந்து அவர்
பாசுபதாஸ்திரம் கொடுத்தாரே..

இப்போதுதான் பகைவர்கள் அழிந்து விட்டார்களே. அவன் சந்தோஷமாக


இருக்கிறானா?

நகுல சகாதேவர்கள் மாத்ரிக்குப் பிறந்தார்கள். ஆனால், அவர்களைத் தன்


பிள்ளைகள் போலவே வளர்த்தாளே குந்தி. மற்ற மூன்று பாண்டவர்களும்
மிகுந்த அன்புடன் அவர்களைக் காத்தார்கள்.
அவர்கள் இருவரும் நலமா?

குந்தியின் நிலை மிகவும் பரிதாபகரமானது. அளவுக்கதிகமான கஷ்டங்களை


அனுபவித்த அவள் இப்போதாவது மகிழ்ச்சியாய் இருக்கிறாளா? கீ ழ்
நிலைக்குப் போய்க் கொண்டிருக்கும் என் அண்ணன் த்ருதராஷ்ட்ரனைப்
பற்றித்தான் மிகுந்த கவலையாய் இருக்கிறது.

92
பாண்டுவிற்கு அவர் செய்யும் துரோகங்கள் இன்னும் முடியவில்லை. ஆனால்
பகவான்தானே அத்தனை பேரையும் ஆட்டிப்படைக்கிறான். எனவே,
வருந்துவதில் அர்த்தமில்லை.

கௌரவர்கள் பகவானையே அவமதித்தனரே. க்ருஷ்ணனைப் பற்றிய


ஏதாவதொரு செய்தியையாவது கூறுங்கள் உத்தவரே..

க்ருஷ்ணனின் புகழைக் கேட்டாலே போதும். ஒருவர் அத்தனை


சங்கடங்களிலிருந்தும் விடுபடுவார்.

இறைவனான அவர், மானுட வேடம் தரித்து யதுகுலத்தில் திருத்தோற்றம்


கொண்டார். விதுரர் மிகுந்த படபடப்புடன் பேசிக்கொண்டே போனார்.

உத்தவரோ தனக்கும் க்ருஷ்ணனுக்கும் இடையே இருந்த நட்பையும்,


இப்போது பிரிவாற்றாமையையும் நினைத்து தன்வசமிழந்து பதில் கூறவும்
சக்தியின்றி, கண்ண ீர் உகுத்தபடி ஒரு முஹூர்த்த காலம் பேசாமல் இருந்தார்.

அவர் ஐந்து வயதுக் குழந்தையாக இருந்தபோது குழந்தை விளையாட்டில் ஸ்ரீ


க்ருஷ்ணனின் உருவத்தை பொம்மையாகச் செய்து அதைப் பூஜிப்பதும்,
பேசுவதுமாக விளையாடுவார். உணவு உண்ண அன்னை அழைக்கும் குரல்
கூட காதில் விழாது. இப்போது வயதாகிவிட்டது. கண்ணனுடனேயே
பலகாலம் இருந்தவருக்கு பேச்சு எப்படி எழும்? அவரது கண்கள்
மூடியிருந்தன. மெய்சிலிர்த்தது.

ஆறாகக் கண்ண ீர் பெருகியவண்ணம் இருந்தது. அவரது நிலைமையைக்


கண்ட விதுரர், இவரை தரிசித்ததே பெரும் பாக்யம் என்று எண்ணிக்
கொண்டார்.

அவராக அந்நிலையிலிருந்து விடுபடும்வரை நிலவைக் காண ஏங்கும்


சகோரபக்ஷிபோல் பொறுமையாகக் காத்திருந்தார்.

ஸ்ரீமத் பாகவதம் - 54 -பிரிவுத்துயர்

விதுரர் உணர்ச்சிப் பெருக்கினால் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளைக்


கேட்டு, பேச்சற்ற நிலையில் கண்ண ீர் வழிந்தோட கண்ணனின்
நினைவுகளிலேயே மூழ்கியிருந்தார் உத்தவர்.

ஒரு முஹூர்த்த நேரம் கழித்து சற்று உணர்வு திரும்பியவராய் தழுதழுக்கும்


குரலில் பேசத் துவங்கினார்.

க்ருஷ்ணனாகிய சூரியன் அஸ்தமித்துவிட்டது விதுரரே.. அவரின் அத்தனை


உறவினர்களும் காலம் என்னும் பாம்பினால் விழுங்கப்பட்டனர்.

நலமா என்று கேட்டால் நான் என்ன சொல்வது?

93
கண்ணனோடு நெருங்கிப்பழகியும், அவரை பகவான் என்று யாதவர்கள்
அறிந்து கொள்ளவில்லையே. கண்ணனை தங்களுக்குள் சிறந்தவன் என்றே
எண்ணினர்.

தவமே புரியாத யாதவர்களோடு சிலகாலம் பழகிவிட்டு, தன் உடலை


மறைத்துக்கொண்டார் கண்ணன். அனைத்து உலகங்களையும் மயக்கும்
அழகுத் திருமேனி கொண்டவர். ஏன்? அவரே அதைக் கண்டு வியந்தார்.

தர்மபுத்திரர் நடத்திய ராஜஸூய வேள்வியைக் காண வந்த அனைவரும்


ப்ரும்மதேவனின் படைப்புத்திறன் இவரோடு முடிந்ததோ?

இதற்கு மேலான அழகை இனி அவர் படைக்க இயலாதோ என்று நினைத்தனர்.

அவரது உளம்கனிந்த பார்வையாலும், விநோதமான சிரிப்பாலும் இடையர்


குலப்பெண்கள் அனைவர் மனதையும் கவர்ந்தார்.

அவர் பிறப்பற்றவர். ஆயினும் வசுதேவரின் திருமகனாய் பிறந்தார். அவர்


பயமற்றவர். எனினும் கம்சனிடம் பயந்தவர்போல் கோகுலத்தில்
ஒளிக்கப்பட்டு வளர்ந்தார்.

அவரது பராக்ரமம் எல்லையற்றது. இருப்பினும் காலயவனனுக்கு


பயந்தவர்போல் வடமதுரையை விடுத்து துவாரகைக்கு ஓடினார்.
இவையெல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

கம்சனைக் கொன்றதும், சிறைக்கு ஓடிச்சென்று தாய் தந்தையரை


விடுவித்தார். அவர்கள் கால்களில் விழுந்து என்ன சொன்னார் தெரியுமா?

கம்சனுக்கு பயந்து கோகுலத்தில் ஒளிந்து வசித்த என்னால் தங்களுக்கு எந்தப்


பணிவிடையும் செய்ய முடியவில்லை.. தாங்கள் அதை மனதில் கொள்ளாது
என்னை மன்னிக்க வேண்டும் என்றார். அதை நினைத்தாலே என் மனம்
விம்முகிறது.

அவரது இரு புருவங்களிலும் காலதேவன் வசிக்கிறான். அவற்றை நெரித்தே


இவ்வுலகின் பாரத்தைக் குறைத்தார்.

தன்னை நிந்தித்த சிசுபாலனுக்கு அவர் ஸாயுஜ்ய பதவி கொடுத்ததை


நீங்களும் அறிவர்கள்தானே..
ீ இப்படிப்பட்டவரின் பிரிவை எவரால் சகிக்க
இயலும்?

பாரதப்போரில் பல்லாயிரக் கணக்கான வரர்கள்


ீ அவரது
திருமுகமண்டலத்தின் அழகைப் பருகியவாறே அவரது உலகை
அடைந்தனரே.

அவரே மூவுலகிற்கும் தலைவர். தன் இயல்பான செல்வத்தினால்


குறைவற்றவர். அவருக்கு ஈடானவரே இல்லை எனும்போது உயர்ந்தவர்
எவரேனும் உண்டா?

94
இந்திராதி தேவர்களும் லோகபாலர்களும் காணிக்கைகளை
கையிலேந்திக்கொண்டு அவரைக் காண வரிசையில் நிற்கிறார்கள்.

காணிக்கை செலுத்தும்போது தங்கள் கிரீடங்கள் அவர் திருவடியில் படுமாறு


சிரம் தாழ்த்தி வணங்குகிறார்கள். அப்படிப்பட்டவர், உக்ரசேனரை உயர்ந்த
சிங்காசனத்தில் அமர்த்திவிட்டு அவரருகில் கைகட்டி நின்று, 'அரசே! நான்
சொல்வதைக் கேட்டருளுங்கள்' என்று கூறி சேவை செய்கிறார்.

மார்பில் விஷம் வைத்துக்கொண்டு பாலூட்ட வந்த பூதனைக்கு யசோதைக்கு


அளிக்கும் அதே நற்கதியை அளித்தார். அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு வேறு
யாரைச் சரணடைவது?

அசுரர்கள்கூட பகைமையினால் எப்போதும் தியானித்துக் கொண்டு அவரையே


அடைந்தனரே. பூமிக்கு நலம் செய்ய சிறையிலன்றோ அவதரித்தார்.

யமுனை நதிக்கரையில் பற்பல பறவைக்கூட்டங்கள் நிரம்பிய அடர்ந்த


காடுகளில் இடைச்சிறார்களுடன் கன்று மேய்த்து விளையாடினார். ஏராளமான
குழந்தை விளையாட்டுக்களை இடைச்சிகளுக்குக் காட்டினார்.

சிலசமயம் அழுவார். சிலசமயம் சிரிப்பார். ஒன்றுமறியாதவர் போல்


மிடுக்காக ஒரு பார்வை பார்ப்பார். அத்தனையும் அழகு சொட்டுமே..

கண்ணனின் மாமனான கம்சன் அவரைக் கொல்வதற்காக விருப்பம்போல்


வடிவெடுக்கும் மாயாவிகளான பல அரக்கர்களை அனுப்பினான்.

குழந்தைகள் தம் விருப்பம்போல் விளையாட்டு பொம்மைகளை


போட்டுடைப்பதுபோல் அத்தனை அரக்கர்களையும் உடல் சிதறச்செய்தார்.

காளியனின் விஷம் கலந்த நீரைக் குடித்து மயங்கிய கோபச்சிறுவர்களை தன்


அமுதப்பார்வையால் உயிர்ப்பித்தார்.

காளியனையும் அடக்கி, கடலுக்குத் துரத்தி, நீரை மக்களுக்குப் பயன்படச்


செய்தார்.

கண்ணன் வந்து குடியிருந்ததால் நந்தகோபரின் திருமாளிகையில் ஏராளமான


செல்வம்‌ குவிந்து செல்வச் சுமை ஏற்பட்டது. அதை எப்படி நல்வழியில்
செலவழிக்க வேண்டும் என்று வழிகாட்டி நந்தனை உத்தம
அந்தணர்களைக்‌ கொண்டு கோஸவம் (பசுக்களைப் பூஜிப்பது) என்ற
வேள்வியைச் செய்தார்.

இந்திரனின் கர்வத்தை அடக்க, குழந்தைகள் நாய்க்குடையைப்


பிடுங்குவதுபோல் கோவர்தன மலையைப் பிடுங்கிக் குடையாய்ப் பிடித்து
தன்னையே நம்பியிருக்கும் கோகுலவாசிகளைக் காத்தார்.

இவ்வாறு கண்ணனின் ஒவ்வொரு லீலையையும் சொல்லிச் சொல்லி


அழுதார் உத்தவர்.

95
*ஸ்ரீமத் பாகவதம் - 55*__*யாதவகுலத்தின் அழிவு*

உத்தவர் தொடர்ந்தார்...

சரத்கால இரவில் ப்ருந்தாவனமெங்கும் பௌர்ணமி நிலவு பரவியிருக்கும்


வேளையில் கண்ணன் இனிய முரளிகானம் செய்துகொண்டு ராஸலீலை
செய்தார்.

தாய் தந்தையரைக் காக்க வடமதுரை வந்து மாமன் கம்சனை கீ ழேதள்ளிக்


கொன்று, அவன் உடலை தரதரவென்று தரையில் இழுத்தார்.

சாந்தீபனி முனிவரின் குருகுலம் சென்று வேதங்களையும் அதன் ஆறு


அங்கங்களையும் ஒரே முறை கேட்டு அத்யயனம் முடித்தார்.

அவரது இறந்த மகனை மீ ட்க பஞ்சஜனன் என்ற அரக்கனின் வயிற்றைக்


கிழித்தார். பின்னர் யமலோகம் வரை சென்று அவனை மீ ட்டு வரும்
வழியிலேயே குரு தனக்குச் சொன்ன அத்தனை வித்தைகளையும் அவனுக்கு
போதித்து முழுமையாக்கி குருவிடமே ஒப்படைத்தார்.

பீஷ்மக மஹாராஜனின் மகளான ருக்மிணியின் அழைப்பை ஏற்று காந்தர்வ


முறைப்படி விவாஹம் செய்ய எண்ணி, கருடன் அமுதகலசத்தை கவர்ந்து
செல்வதுபோல் அவளை அழைத்து வந்தார்.

நக்னஜித் என்பவரின் மகளான ஸத்யாவை அவளது திருமணத்திற்குப்


பணயமாக வைக்கப்பட்டிருந்த ஏழு காளைகளை அடக்கி திருமணம் செய்து
கொண்டார்.

ஸத்யபாமா பாரிஜாத மலருக்கு ஆசைப்பட்டாள். அப்போது சாதாரண


உலகியலைப் பின்பற்றி மனைவிக்கு கட்டுப்பட்ட கணவன் போல்
ஸ்வர்கத்திலிருந்து பாரிஜாத மரத்தையே எடுத்து வந்து அவளது ஆசையைப்
பூர்த்தி செய்தார்.

இந்திரனின் வேண்டுதலுக்கிணங்க நரகாசுரனைக் கொன்றார். அவன் பிற


அரசர்களிடமிருந்து கவர்ந்த செல்வம் போக மீ தியையும், அரசாட்சியையும்
அவனது பிள்ளையான பகதத்தனுக்குக் கொடுத்தார்.

நரகாசுரனின் அந்தப்புரத்தில் நுழைந்தார். அப்போது நரகாசுரனால் கடத்திவந்து


சிறை வைக்கப்பட்டிருந்த 16000 ராஜகுமாரிகள் கண்ணனைக் கண்ட நொடியில்
காதல்கொண்டு மணக்க விரும்பினர்.

பகவான் தன் மாயையால், அவரவர்களுக்கு ஏற்ப தனித்தனி வடிவம் கொண்டு


அவர்கள் அனைவரையும் மணந்தார்.

தன் அளவிடற்கரிய லீலைகளை வெளிப்படுத்த எண்ணிய பகவான் அவர்கள்


ஒவ்வொருவரிடம் தனக்கு ஒப்பான பத்து பிள்ளைகளைத் தோற்றுவித்தார்.

96
காலயவனன், ஜராஸந்தன், சால்வன் முதலியோர் மதுரையை
முற்றுகையிட்டபோது அவர்களை முசுகுந்தன், பீமன் முதலியோரைக்
கொண்டு வதைத்தார்.

சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், தந்தவக்த்ரன் முதலிய


அசுரர்களில் சிலரைத் தானே கொன்றார். சிலரை பீமனை விட்டுக் கொல்லச்
செய்தார்.

விதுரரே! துரியோதனாதியர், பாண்டவர்கள் இன்னும் பல அரசர்களின்


படையால் பூமியே நடுங்கிற்றே. அவர்களை உண்மையில் கொன்றவர்
கண்ணனன்றோ?

கர்ணன், துச்சாதனன், சகுனி போன்றவர்கள் பீமனால் முறிக்கப்பட்டு


வழ்ந்தபோதும்
ீ பூபாரம் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை என்று
எண்ணினார்.

பதினெட்டு அக்ஷௌஹிணி படைகள் அழிந்தன. ஆனால் எனது


அம்சபூதமாகத் தோன்றிய யாதவப் படை மிகப்பெரிதாக வளர்ந்து நிற்கிறதே..

அவர்கள் தாமாகவே அழிந்தால்தான் உண்டு. வேறெவரும் அழிக்க இயலாது


என்று எண்ணினார். தர்மபுத்ரரை அரசபீடத்தில் அமர்த்தினார்.

உத்தரையின் வயிற்றிலிருந்த பூரு வம்சத்தின் விதையான பரிக்ஷித்தைக்


காப்பாற்றினார். தர்மபுத்ரருக்கு மூன்று அஸ்வமேதயாகங்களை நடத்திக்
கொடுத்து அவர் நிலவுலகை‌ மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள
அறிவுறுத்தினார்.

உள்ளும் புறமும் எங்கும் வியாபித்திருக்கும் பகவான் எதிலும் ஒட்டாமல்


உலகியல் நெறிகளை மேற்கொண்டு அனைத்து சுக போகங்களையும்
அனுபவித்துக் கொண்டு துவாரகையில் வசித்து வந்தார்.

ஒரு சமயம் விளையாடிக் கொண்டிருந்த யாதவ குமாரர்களும், போஜ


குமாரர்களும் சில முனிவர்களை சினம் கொள்ளச் செய்தனர்.

யாதவகுலத்தின் அழிவே பகவானின் திருவுளம் என்றறிந்த முனிவர்கள்


அவர்களுக்குச் சாபமிட்டனர்.

சிலமாதங்கள் கழித்து வ்ருஷ்ணி, போஜ, அந்தக வம்சத்து யாதவர்கள் ப்ரபாஸ


தீர்த்தத்திற்கு வந்தனர்.

அங்கு நீராடி ரிஷிகள், பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்து அந்தணர்களுக்குச்


சிறந்த தானங்களை அளித்தனர்.

அங்கு தங்கியிருந்த சமயத்தில் உணவு ஏற்று, பின்னர் மதுவருந்தினர்.


அதனால் மதிகெட்டு ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு அடித்துக்கொள்ள
ஆரம்பித்தனர்.

97
மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து தீ ஏற்பட்டு காட்டை அழிப்பதுபோல்
தங்களுக்குள் அடித்துக்கொண்டு மாய்ந்து போனார்கள்.

பகவான் தன் மாயையின் திறனைக்கண்டு பின் ஸரஸ்வதி நதி தீரத்தில் ஒரு


மரத்தடியில் அமர்ந்தார்.

தன் குலம் அழிவதைக் காண என் மனம் தாங்காது எனவும், என்னை


பதரிகாச்ரமம் செல்லும் படியும் கட்டளையிட்டார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 56*__*பகவானின் விசித்ர லீலைகள்*

உத்தவர் தொடர்ந்தார்...

பகவான் என்னை பத்ரிகாஸ்ரமம் செல்லக் கட்டளையிட்டார். நான் அவரைப்


பிரிய மனமின்றிப் பின் தொடர்ந்தேன். பகவான் க்ருஷ்ணன் அழகோ அழகு.

அனைத்திற்கும் பற்றுக்கோடு. அழகிற்கு அழகு சேர்க்கும் அழகரான அவர்


ஸரஸ்வதி நதிக்கரையில் ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

தாமரை போன்ற தன் திருவடியைத் தன் தொடை மேல் வைத்திருந்தார்.


ஆனந்தமே வடிவெடுத்தது போல் காணப்பட்டார். அப்போது மைத்ரேய
மஹரிஷி தற்செயலாய் அங்கு வந்தார்.

அவர் பராசர முனிவரின் சீடர். குருபுத்ரரான வியாசரின் உற்ற தோழர்.


பகவானின் பரம பக்தர். சித்தர். அவரைக் கண்டதும், இவரது கனிந்த
பார்வையும், புன்சிரிப்பும் கண்டு என் சோர்வெல்லாம் தீர்ந்தது என்று பகவான்
என்னிடம் கூறினார்.

பகவான் மேலும் சொன்னார்; உத்தவா, யாராலும் அடையமுடியாததை


உனக்கு அளிக்கப் போகிறேன். முற்பிறவியில் நீ அஷ்டவசுக்களுள் ஒருவன்.
முன்பு ப்ரஜாபதிகளும், வசுக்களும் சேர்ந்து ஒரு வேள்வி இயற்றினர்.
அப்போது நீ என்னையே அடையவேண்டும் என்ற ஒரே விருப்பத்தோடு
என்னைப் பூஜித்தாய்.

நீ பரமசாது. என் பரிபூரணமான அருள் பெற்ற உனக்கு இஃதே கடைசிப் பிறவி.

நான் இப்போது உடலைத் துறந்து வைகுண்டம் செல்லப்போகிறேன். உன்


பக்தியால் நீ தனித்திருக்கும் என்னை தரிசித்துவிட்டாய்.

முன்பு பாத்ம கல்பத்தில் படைப்பின் தொடக்கத்தில் என் தொப்புள்


கொடியிலிருந்து தோன்றிய ப்ரும்மாவுக்கு என்னைப் பற்றியும், என்
திருவிளையாடல்கள் ப‌ற்றியும் கூறினேன். ஞானத்தை வழங்கும் அதை
ஞானிகள் பாகவதம் என்கின்றனர். அதை இப்போது உனக்குத் தரப்போகிறேன்.

(அதுவே உத்தவ கீ தையாகும். பதினோராம் ஸ்கந்தத்தில் விரிவாகக்


கூறப்படுகிறது.)

98
விதுரரே! பகவானுக்கு என்மீ து எவ்வளவு கருணை பார்த்தீரா.. இதைக் கேட்டு
என் மேனி சிலிர்த்தது. ஆனந்தக் கண்ண ீர் பெருகியது. இரு கரங்களையும்
கூப்பி அஞ்சலி செலுத்தினேன்.

இறைவா! தங்கள் திருவடிகளை சேவிப்பவர்களுக்கு நான்கு பெரும்


பேறுகளும் கிட்டுகின்றன. ஆனால் பிச்சைப்பொருளான அவற்றின் மீ து
எனக்கு இச்சையில்லை. தங்கள் திருவடிக் கமலங்களை சேவிப்பதொன்றே
எனக்கு மகிழ்ச்சி. தங்களுக்கென்று விருப்பங்கள் இல்லை. செயல்களும்
இல்லை. ஆனால், பற்பல செயல்களை எங்களுக்காக நிகழ்த்துகிறீர்.

எங்களுக்காகப் பிறக்கிறீர். காலகாலனான தாங்கள் பகைவர்க்கு


பயந்தவர்போல் ஓடுகிறீர். நீர் ஆத்மாராமன். தங்களை மகிழ்விக்க வேறு
சாதனம் தேவையில்லை. ஆனால் 16000 பெண்களைத் திருமணம் செய்து
திருவிளையாடல் புரிந்தீர்.

விசித்ரமான உங்கள் திருவிளையாடல் யாருக்கும் புரிவதில்லை.


தங்களுடைய அறிவு என்றுமே மழுங்காதது. ஆழ்ந்து அகன்றது. குறைவற்றது.
ஆனால், ஏதுமறியாதவர்போல் மந்திராலோசனையில் என்னையும் அழைத்து
என் அபிப்ராயம் கேட்பீர். அது என்னை என்னவோ செய்கிறது.

ப்ரும்மதேவருக்குத் தாங்கள் உபதேசித்த பாகவதத்தை அறிந்துகொள்ள


எனக்கு சக்தியும் தகுதியும் இருக்குமானால் எனக்குச் சொல்லுங்கள். நான்
சிரமமின்றி சம்சாரக் கடலைக் கடப்பேன்.

இவ்வாறு நான் வணங்கி வேண்ட பகவான் எனக்கு நல்லுபதேசம் செய்தார்.

அவரை வலம் வந்து வணங்கி, இன்று அவரைப் பிரிந்த வருத்தத்தோடு


உம்மைச் சந்தித்தேன். கண்ணனைக் கண்ட மகிழ்ச்சி ஒரு புறம். பிரிவுத்துயர்
ஒருபுறம். நான் பத்ரிகாஸ்ரமம் கிளம்புகிறேன் என்றார்.

விதுரர், தாங்கவொணாத துக்கச் செய்தியைக் கேட்டும் தன் ஞானத்தால்


பொறுத்துக்கொண்டார். வணக்கமாக உத்தவரிடம் கேட்டார்.

‌ கவான் தங்களுக்குச் சொன்ன நல்லுபதேசத்தை எனக்குச் சொல்ல



வேண்டும். பகவானைப் பற்றிய உண்மை அறிவைப் புகட்ட தம்மைப்போன்ற
அடியார்களால்தான் முடியும். அதற்காகத்தானே அடியார்கள் உலகெங்கும்
சுற்றி வருகின்றனர்.

உத்தவர் பதிலுரைத்தார். விதுரரே, பகவான் எனக்குக் கூறியவற்றை அப்போது


அங்கிருந்த மைத்ரேய மகரிஷியும் கேட்டார். அவற்றை தங்களுக்குச்
சொல்லும்படி மைத்ரேயருக்கு என் எதிரில்தான் கட்டளையிட்டார். ஆகவே,
நீங்கள் மைத்ரேய மஹரிஷியைக் கண்டு அவ்விவரங்களை அறிந்து
கொள்ளுங்கள் என்று சொல்லிப் புறப்பட்டார். விதுரர் துள்ளிக் குதித்தார்.

அனைவரும் தாம்‌உடலை விடும் நேரம் பகவானை ஸ்மரிக்க விரும்புவர்.


ஆஹா! பகவானுக்கு ஏழையான என்மேல் எவ்வளவு கருணை. அவர் உடலை
விடும் சமயம் என் பெயரைச் சொன்னாரே..

99
ஒரு பக்கம் பகவான் கிளம்பிய துக்கம்... இன்னொரு புறம் பகவான் தன்னை
மறவாமல் நினைத்தானே என்ற ஆனந்தம்.. தவித்துக் கொண்டு ஒருவாறாக
யமுனைக் கரையிலிருந்து புறப்பட்டு மைத்ரேயர் வாசம் செய்யும் கங்கைக்
கரையை நோக்கி நடந்தார் விதுரர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 57**விதுர மைத்ரேய ஸம்வாதம் - 1*

பரீக்ஷித் கேட்டார்:

அந்தணரது சாபத்தால் போஜ மற்றும் வ்ருஷ்ணி குலத்தின் சிறந்த வரர்கள்,



சேனைத்தலைவர்கள், மஹாரதர்கள் அனைவரும் இறந்துபட்டனர்.

மும்மூர்த்திகளுக்கும் தலைவரான க்ருஷ்ணனே உடலை மறைத்துக்


கொண்டார். அப்படியிருக்க, அவர்களில் ஒருவரான உத்தவர் மட்டும் எவ்வாறு
மீ தமானார்?

அவருக்கு எதுவும் ஆகவில்லையா?

ஸ்ரீ சுகர் பதிலுரைத்தார்:

பகவான் க்ருஷ்ணன் அந்தணரது சாபம் என்ற சாக்கில் தன் குலத்தையே


அழித்து, தானும் இவ்வுலகை விடுத்து கிளம்பும் போது என்னைப் பற்றிய
ஆத்மஞானத்தைப் பெற தகுதியானவன் உத்தவர் ஒருவரே.. அவர் எனக்கு
நிகரானவர். தன்னைத்தானே வெற்றி கொண்டவர். புலனடக்கம் உள்ளவர்.
ஆகவே, என்னைப் பற்றிய தத்துவ ஞானத்தை உலகோர்க்கு
அளித்துக்கொண்டு இங்கேயே இருக்கட்டும் என்று நினைத்தார்.

எனவே உத்தவரை பத்ரிகாஸ்ரமம் சென்று தன்னை ஆராதித்து வரும்படி


கட்டளையிட்டார்.

விதுரர் உத்தவர் கூறியபடி மைத்ரேயரைத் தேடி ஹரித்துவாரத்தை


அடைந்தார். விண்ணுலகிலிருந்து விழும் கங்கை மண்ணுலகைத் தொடும்
இடம் ஹரித்துவாரமாகும்.

க்ருஷ்ண பக்தியால் மனத்தூய்மை பெற்ற விதுரர், மைத்ரேயரின் நற்குண


சீலங்களால் ஈர்க்கப்பட்டு அவரிடம் தன் ஐயங்களைக் கேட்டார்.

1. உலகில் அனைத்து மக்களும் சுகம் வேண்டி பற்பல காரியங்களைச்


செய்கின்றனரே. அதனால் இன்பம் அடைகிறார்களா? அல்லது மேலும் பல
துன்பங்கள் வருகின்றனவா? உண்மையில் எது செய்தால் நலம்?

2. எந்த நல்வழி சென்றால் இறைவன் மகிழ்ந்து பக்தனின் தூய்மையான


உள்ளத்தில் அமர்வான்? அமைதி நல்கும் நல்வழி எது?

3. பகவான் ஸ்வதந்த்ர புருஷர். மூவுலகங்களையும் அடக்கி ஆள்பவர். அவர்


என்னென்ன அவதாரம் செய்து என்னென்ன திருவிளையாடல்கள் புரிந்தார்?

100
4. எவ்வாறு செயலற்ற யோகமாயையால் உலகங்கள் அனைத்தையும்
தன்னுள் அடக்கிக் கொள்கிறார்?

5. பகவான் ஒருவராக இருந்தும் ப்ரும்மாண்டத்தின் அனைத்துயிர்களிலும்


அந்தர்யாமியாக ஊடுருவிப் பல்வேறு உருவங்களாகக் காட்சியளிக்கிறாரே.
அதெப்படி?

6. பகவான் எந்தெந்த தத்துவங்களை ஏற்று இவ்வுலகங்களையும், அதன்


தலைவர்களையும், படைத்தார்?

7. ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாகவே இயல்பு, செயல், மேனி


ஆகியவை வருமாறு படைக்கிறாரே. அதெப்படி?

அனைத்து நெறிமுறைகளையும் தங்களின் உற்ற நண்பரான வியாசர்


சொல்லிப் பலமுறை கேட்டுள்ளேன். கண்ணனின் கதையமுதம் எவ்வளவு
கேட்டாலும் திகட்டுவதில்லை.

நீங்கள் தேன ீயைப்போல் அனைத்து கதைகளிலிருந்தும் ஸாரமான தேன்


போன்ற க்ருஷ்ண கதைகளைச் சேகரித்துள்ள ீர்கள். எனக்கு அவைகளைச்
சொல்லுங்கள் என்றார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 58*-*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 2*

விராட்புருஷனின் தோற்றம் உலகனைத்திற்கும் நலம் பயக்கும் கேள்விகளை


விதுரர் கேட்டார்.

மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்:

விதுரரே, தங்கள் மனம் எப்போதும் இறைவனின் திருவடியிலேயே


லயித்திருப்பதால் உலகிற்கே நலம் தரும் கேள்விகளைக் கேட்டீர்.

இவற்றால் தங்கள் புகழ் மேலும் ஓங்கப்போகிறது. வியாசரின் சகோதரன்


விசித்ரவர்யன்.
ீ அவர்களிருவருக்கும் தாய் ஸத்யவதி. விசித்ரவர்யனின்

மனைவியாய் இருந்த பணிப்பெண்களுள் ஒருத்தியின் வயிற்றில் வியாசரின்
அருளால் அவதரித்தீர். நீங்கள் அவரவர் செய்வினைகளுக்கேற்ப
தண்டனையருளும் யமதர்மராஜனின் அம்சமாவர்.
ீ ஆணிமாண்டவ்ய
ரிஷியின் சாபத்தால் இவ்வுலகில் பிறந்தீர்.

தாங்கள் பகவான் க்ருஷ்ணனுக்கு மிகவும் ப்ரியமானவர். பகவான் தான்


வைகுண்டம் செல்லும் சமயம் தங்களுக்கு ஞானோபதேசம் செய்யுமாறு
என்னிடம் கூறிச் சென்றார்.

பகவானின் திருவிளையாடல்களில் முக்கியமான படைத்தல், காத்தல்,


அழித்தல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுகிறேன் என்று சொல்லி, பகவான்
தனித்திருப்பதையும், பின்னர் தன் மாயா சக்தியால் முக்குணங்களை
தோற்றுவித்ததையும், அவைகளில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினால் தன்

101
அம்சத்தை அதனுள் புகுத்தி சமன் செய்ததையும் கூறினார். அதுவே ஜீவன்
ஆகும்.

பின்னர் மஹத் தத்வம், ஐம்பெரும் பூதங்கள், பத்து புலன்கள், மனம், அஹம்


எனும் தத்வம் ஆகியவற்றின் தோற்றம், தன்மை, குணங்கள் ஆகியவற்றை
விரிவாகச் சொன்னார்.

தொடு உணர்ச்சி, வாயு, ஒளி, அக்னி, சுவை, நீர், மணம், மண் ஆகியவற்றின்
தோற்றங்களும் விளக்கப்பட்டன.

இவையனைத்தும் தனித்தனியாக இருந்தமையால் ப்ரபஞ்சம்


உருவாகவில்லை. தேவர்களின் ப்ரார்த்தனைக்கிணங்கி, பகவான்
அவற்றினுள் அந்தர்யாமியாக நுழைந்து தன் க்ரியா சக்தியால் அவற்றின்
செயல்பாடுகளைத் தூண்டிவிட்டார்.

இருபத்துமூன்று தத்வங்களும் ஒன்றிணைந்து விராட்புருஷனைத்


தோற்றுவித்தன. அதுவே பகவானின் முதல் அவதாரம்.

இவரிடமிருந்தே அனைத்து ஜீவன்களும் தோன்றின. விராட்புருஷன் உணர்வு


கொண்டதும் அவரது அங்கங்களிலிருந்து சகல தேவதைகளும் தோன்றினர்.

அவருடைய உருவம், ஸ்தானம், லோகங்கள் ஆகியவற்றை விரிவாக


விளக்கினார் மைத்ரேயர். (இரண்டாவது ஸ்கந்தத்தில் நாம் இவற்றை
விரிவாகப் பார்த்தபடியால், இங்கே குறிப்பு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.)
மைத்ரேயர் மேலும் கூறினார்.

விதுரரே, காலம் தர்மம் இவற்றோடு கூடி யோக மாயையின் பெருமையை


வெளிப்படுத்துபவர் இந்த விராட் புருஷன். இவரது ஸ்வரூபத்தை
முழுமையாக எவராலும் வர்ணிக்க இயலாது.

மனம்nபோனபடி உலக விஷயங்களைப் பேசி பேசித் தூய்மையை


இழந்துவிட்ட என் நாவைத் தூய்மைப் படுத்துவதற்காகவே, என் குரு
உபதேசம் செய்தவற்றை என் சிற்றறிவிற்கு எட்டியவரை உமக்குச்
சொல்கிறேன். கேளும் என்றார்.

102
*ஸ்ரீமத் பாகவதம் - 59*-*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 3*

புகழுக்குப் புகழ் சேர்க்கும் பகவானின் திருவிளையாடல்களின் பெருமையை


பற்றித் திரும்பத் திரும்ப பேசுவதே இறைவன் நமக்கு நாக்கு அளித்ததன்
பெரும் பயன்.

படித்தறிந்த சான்றோர்கள் திருவாய் மலர்ந்தருளும் இறைவனது திருப்புகழ்


அமுதத்தை செவியாரப் பருகுவதே செவி படைத்ததன் பயன் என்பதும்
சான்றோர்களின் திருவுளம்.

அவரது மாயை மாயாவிகளையும் மயக்குவது. அந்த பகவானை


வணங்குகிறேன் என்றார் மைத்ரேயர்.

இவற்றைக் கேட்டு மிகவும் மகிழ்ந்த வியாசரின் மகனான விதுரர், மேலும்


கேட்டார். மஹரிஷியே! பகவான் அறிவே வடிவானவர்; மாறுதலற்றவர்;
குறைவற்ற நிறை குணமுள்ளவர். ஆனாலும் நிர்குணமுள்ளவர்.

அவ்வாறான பகவானுக்கு திருவிளையாடல்களை முன்னிட்டு என்று


சொன்னாலும்கூட செயல்களும் குணங்களும் எப்படிப் பொருந்துகின்றன?

குழந்தை ஆசையினால் விளையாடுகின்றது. ஆனால், இறைவனோ


சுபாவத்திலேயே மனநிறைவு பெற்றவர். ஆத்மாராமரானவர். எதிலும்
ஒட்டாதவர். அவர் ஏன் திருவிளையாடல்கள் புரிகிறார்?

இடம், காலம், சூழல், தன்னியல்பு வேறு எந்த காரணங்களாலும்


பாதிக்கப்படாத ஞானமே வடிவான பகவான் எவ்வாறு மாயையுடன்
ஒன்றுபடுவார்?

அனைத்துயிர்களின் சாட்சியான இறைவனுக்கு கர்மங்களினால் ஏற்படும்


துன்பமோ, ஆனந்தக் குறைவோ எப்படி ஏற்படும்?

அறியாமைக் கோட்டைக்குள் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறேன். தயை


கூர்ந்து என் ஐயத்தைத் தெளிவுபடுத்துங்கள்.

யான், எனது என்ற செருக்கற்ற மைத்ரேயர், புன்னகை மலர்ந்த


திருமுகத்தோடு பேசத் துவங்கினார்.

ஆன்மா எதிலும் ஒட்டாது. தனிப்பட்டது. கனவில் ஒருவன், தான்


வெட்டப்பட்டதாகக் காண்கிறான். ஆனால், உண்மை அதுவல்ல அல்லவா?

கனவு கலைந்ததும் உண்மை புலப்படுகிறது. ஆனால், கனவு நீடிக்கும்வரை


அது உண்மையென்றே நினைக்கிறான்.

கனவில் அவன் ஆழ்ந்திருந்தபோதும் அவனது உண்மை நிலை இருந்தது.


ஆனால் சலனமற்று உறக்கத்தில் இருந்தது.

103
நீரில் நிலவின் பிம்பம் தெரிகிறது. நீரில் அலை ஏற்படும்போது, நிலவு
அசைவதுபோல் இருக்கிறது. மேலே நிமிர்ந்து பார்த்தால் நிலவு
அசையவில்லை. அசைவது நீர்.

ஆனால் நிலவு அசைவது போல் தோன்றச் செய்வது மாயை.

அதுபோல் ஆன்மாவுக்கு எந்த குணமும் இல்லை. ஆனால் உடலைக்


கொண்டே அறியப்படுவதால் கர்ம வாசனைகளின் பாதிப்புகளான குணங்கள்
உள்ளுறையும் ஆன்மாவின் குணங்களாகத் தெரிகின்றன.

உலகின் பற்றுக்களைத் துறந்து அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகுபவனுக்கு


பகவானின் அருளால் பெற்ற பக்தி யோகத்தினால் மாயையின் தோற்றம்
சிறிது சிறிதாக இப்பிறவியிலேயே விலகும்.

நீருக்கு வடிவம் இல்லை. அது வைக்கப்படும் பாத்திரத்தின் வடிவை


எடுத்துக்கொள்கிறது. ஆனால் அதைக் காண இயலும்.

அதைக் குளிர வைத்தால் பனிக்கட்டியாகிறது. பனிக்கட்டிக்கு ஸ்திரத்தன்மை


உண்டு. எனவே வடிவம் கொள்கிறது. காணவும் இயலும்.

அதே நீரை காய்ச்சினால் ஆவியாகிறது. அப்போது வடிவமும் இல்லை.


காணவும் இயலாது.

ஒரே நீர் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு குணம் கொண்டதாக


விளங்குகிறது.

அந்ததந்த திருவிளையாடல்களுக்கு ஏற்ப ஒரே இறைவன் பல்வேறு


ரூபங்களையும் ஸ்வபாவங்களையும் ஏற்கிறான்.

ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவனின் கண்கள் பார்ப்பதில்லை. காதுகள்


கேட்பதில்லை. அதுபோல் அந்தர்யாமியான இறைவனிடத்தில் ஈடுபடுட்டதும்
பொறிகள் நிலைபெற்றுவிடுகின்றன. அவனுக்கு விருப்பு, வெறுப்பு முதலிய
தோஷங்கள் அழிந்துவிடுகின்றன.‌

பகவான் சர்வ சாட்சியாகையால் எதனாலும் பாதிக்கப்படுவதில்லை.


அவனிடம் மனத்தை ஒருமுகப்படுத்திய ஜீவனுக்கும் எந்த பாதிப்பும் இல்லை
என்றார் மைத்ரேயர்.

104
*ஸ்ரீமத் பாகவதம் - 60*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 4*

விதுரர் மேலும் கூறலானார்:

அறிஞரே, ஜீவனின் தன்மையையும் ப்ரபஞ்சமே மாயையின் தோற்றம்


என்பதையும் விளங்கிக் கொண்டேன். தங்களைப் போன்ற பகவத் பக்தர்களே
இறைவனை அடைய உண்மையான வழிகாட்டிகள்.

அற்ப புண்ணியம் செய்தவனுக்கு ஸத்சங்கம் கிடைக்காதன்றோ?

ஸத்சங்கம் கிடைக்காதவன் புண்ணியம் செய்யாதவன். ஆயிரக்கணக்கான


பாதங்கள், தொடைகள், கைகளைக்கொண்ட அந்த விராட்புருஷனை
வேதங்கள் புராண புருஷன் என்றழைக்கின்றன.

அவரிடம்தான் அனைத்துலகங்களும் ஒன்றோடொன்று மோதாமல்


இடைவெளியுடன் இருக்கின்றன. அவரிடமிருந்து சக்திகளுடன் பத்து
பிராணன்கள் தோன்றின. அதிலிருந்து இந்திரியங்களும் அதன் சக்திகளும்
அதன் தேவதைகளும் தோன்றின. அதிலிருந்து நான்கு வர்ணங்களும்
தோன்றின.

அவரிடமிருந்து தோன்றிய பற்பலவிதமான உருவங்கள், குணங்கள் கொண்ட


ஜீவர்கள், இவ்வுலகம் முழுதும் நிறைந்த தங்களது மகன்கள், பேரன்கள்,
கொள்ளுப்பேரன்கள், மற்றும் தங்களது கோத்திரத்தில் பிறந்தவர்கள் என்று
எவ்வாறு பெருகினார்கள்?

எவ்வாறு வாழ்க்கையை நடத்துகிறார்கள்?

அனைவர்க்கும் பிதாவான ப்ரும்மதேவர் எந்தெந்த ப்ரஜாபதிகளைப்


படைத்தார்?

எந்தெந்த ஸர்கங்களையும் அதன் பிரிவுகளையும், மன்வந்தரங்களையும்,


அவற்றின் அதிபதிகளையும் படைத்தார்?

மனுக்களின் வம்சாவளி, பூமிக்கு மேலும் கீ ழும் உள்ள லோகங்கள், அத்தனை


விதமான பிறவிகளின் உடலமைப்பு, தோன்றும் விதம் ஆகியவற்றையும்
பற்றி சொல்லுங்கள்.

முக்குணங்களின் தன்மையை ஏற்றுக்கொண்டு அவர் வெவ்வேறு


திருமேனிகள் கொண்டு எவ்வாறு முத்தொழில்களை செய்கிறார்?

ரூபம், ஆசாரம், ஒழுக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நான்கு


வர்ணங்கள், நான்கு ஆசிரமங்கள், மஹரிஷிகளின் பிறப்பு, வேதங்களின்
பிரிவுகள், வேள்விகளின் விளக்கங்கள், யோகமார்கம், ஞானமார்கம், அதற்கு
சாதனமான வேதாந்த சாஸ்திரங்கள், பகவானால் உபதேசிக்கப்பட்ட
பாஞ்சராத்ரம் முதலிய ஆகம தந்திர நூல்கள், வேதநெறி தவறிய நாத்திக
நெறியின் மாறுபாடுகள், ஜாதிக்கலப்பால் நிகழும் பிறவிகள், அவர்களது
குணம், செயல்கள், ஆசாரங்கள், ஜீவன் தன் மரணத்திற்குப் பின் அடையும்

105
கதிகள், அவற்றின் வகைகள் ஆகிய அனைத்தையும் பற்றி விவரமாகக்
கூறுங்கள்.

நான்கு புருஷார்த்தங்களையும் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி பெறும்


வழிகள், வியாபாரம், அரச நெறி, சாஸ்திரங்கள் ஓதலும் கேட்டலுமான
முறைகள், தென்புலத்தார் கடன் விதிமுறைகள், பித்ருகணங்களின் படைப்பு,
கோள்கள், தாரைகளின் கணங்கள், காலம் ஆகியவற்றின் போக்கை அளவிடும்
ஜோதிர் மண்டலங்கள் முதலியவை பற்றியும் கூறுங்கள். தானம், தவம்,
வேள்விகள், குளம் - கிணறுகள் வெட்டுதல் போன்ற தர்மங்களால் என்ன
பயன்?

பகவானான ஜனார்த்தனர் எந்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதால்


மகிழ்ச்சியடைவார்?

எவ்வகையானவர்க்கு அருள் புரிவார்? மஹத் தத்வங்களின் மறைவு


எவ்விதம்? அவை எவ்வாறு இறைவனுள் ஒடுங்குகின்றன?

ஜீவனுடைய இயல்பு தத்துவம் என்ன? குரு சீடன் இவர்கள்


ஒருவருக்கிடையே ஒருவர் அடையும் பயன் என்ன? ஞானத்தை அடையும்
வழிமுறைகள் யாவை?

குற்றமற்றவரே, வேதம் ஓதுதல், தனங்கள், தவங்கள், ஆகிய எவையும் ஒரு


ஜீவனது ஜனன மரண பயத்தைப் போக்க வல்லதன்று. தங்களைப் போன்ற
பெரியோர்கள் வாயிலாகக் கேட்டுணரும் அறிவொன்றே அச்சத்தைப்
போக்கவல்லது.

ஸ்ரீ சுகர் கூறினார்.

விதுரர் பகவானைப் பற்றிய புராண விஷயங்களைக் கேட்கவே, மைத்ரேயர்


அவற்றைச் சொல்வதற்கு தனக்கு ஒரு வாய்ப்பு கிட்டியமைக்காக மகிழ்ந்தார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 61*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 5*

விதுரர் கேட்ட கேள்விகளுக்கு மைத்ரேயர் மகிழ்வுடன் பதில் கூறத்


துவங்கினார்.

தர்மராஜரின் அம்சமான தாங்கள் வெற்றி கொள்ள முடியாத பகவானின் புகழ்


மாலையை நொடிக்கு நொடி புதிதாகத் தொடுக்கிறீர்கள்.

உலக மக்கள் அற்ப சுகத்திற்கு ஆசைப்பட்டு ஏதாவது ஒரு செயலைச் செய்து,


அதனால் பெரிய துன்பத்தை அடைகிறார்கள். அது நீங்கவே நான் பகவானைப்
பற்றிய இந்த பாகவதத்தைக் கூறுகிறேன்.

இதை ஒரு சமயம் ஸங்கர்ஷண மூர்த்தி ஸனகாதி முனிவர்களுக்கு தானே


முன்வந்து கூறினார்.

106
குறைவற்ற அறிவின் வடிவினரான ஸங்கர்ஷண மூர்த்தி பாதாள லோகத்தில்
இருக்கிறார். ப்ரும்ம தத்வத்தை அறிய விரும்பிய ஸனகாதி முனிவர்கள்,
அவரிடம் சென்று வினவினார்கள்.

மானஸீக பூஜையில் தனக்கு ஆதாரமான பகவானைப்


பூஜித்துக்கொண்டிருந்தார் ஸங்கர்ஷணராகிய ஆதிஸேஷ பகவான்.
ஸனகாதிகள் கேள்வி கேட்டதும், மூடியிருந்த தாமரை மொட்டுப்போன்ற தன்
திருக்கண்களைத் திறந்து அவர்களை நோக்கினார்.

ஸனகாதிகள் ப்ரும்மலோகத்திலிருந்து கிளம்பும்போது அங்கிருந்து பாதாளம்


வரை பாயும் கங்கை நதியில் நீராடி வந்தனர். அதனால், அவர்கள்
திருமுடியில் ஈரம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்படிப்பட்ட திருமுடியை
ஸங்கர்ஷணரின் திருப்பாத தாமரைகளில் வைத்து வணங்கினர்.

அவரது பெருமையை நன்கறிந்த அவர்கள், கசிந்து கண்ண ீர் மல்கி அவர்


புகழைப் பாடினர். அவர் மகிழ்ந்து பாகவதத்தை ஸனகாதியர்க்குச் சொன்னார்.
அதை ஸனத்குமாரர் ப்ரும்மசர்ய விரதம் பூண்ட ஸாங்க்யாயன முனிவர்க்குக்
கூறினார்.

ஸாங்க்யாயனர் பகவானின் திருவிளையாடல்களை தனது சீடரும் எனது


குருவுமாகிய பராசரர்க்கும், ப்ருஹஸ்பதி பகவானுக்கும் கூறினார்.

புலஸ்திய முனிவரின் பரிந்துரையின் பேரில், பராசர மஹரிஷி இந்த ஸ்ரீமத்


பாகவதத்தை எனக்கு உபதேசித்தார். குழந்தாய் விதுரா, நீ மிகவும் ச்ரத்தை
கொண்டவன். பக்தியும் விநயமும் கொண்ட உனக்கு நான் இதைச்
சொல்கிறேன்.

படைப்பு துவங்கும் முன் ப்ரபஞ்சமே நீரில் ஆழ்ந்திருந்தது. அப்போது ஸ்ரீ மன்


நாராயணன் ஒருவரே பரிபூரண ஞானஸ்வரூபமான ஆனந்தத்தில் திளைத்து
வேறெந்த செயலுமின்றி ஆதிசேஷனாகிய படுக்கையில் கண்களை மூடிய
வண்ணம் யோகத்துயில் கொண்டிருந்தார்.

நெருப்பின் எரிக்கும் திறன் கட்டை முழுதும் பரவியிருப்பினும் அது


மறைந்திருப்பதுபோல், அனைத்து ஜீவராசிகளின் சூக்ஷ்ம சரீரங்களையும்
தன்னுள் அடக்கிக் கொண்டு, தன் வாசஸ்தலமாகிய நீரில் சயனித்துக்
கொண்டிருந்தார். படைப்பு துவங்குமுன் அனைத்தையும் விழிக்கச் செய்ய
கால சக்தியை மட்டும் விழித்திருக்கச் செய்தார்.

காலசக்தி பகவானையே அச்சாணியாக உடையது. இவ்வாறு பகவான் ஆயிரம்


சதுர்யுகங்கள் தனது சித்சக்தியுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது,
தன்னாலேயே தூண்டப்பட்ட காலசக்தி ஜீவன்களையும், அவர்களது
செயல்பாடுகளையும் செய்ய முடுக்கிவிட்டது.

அப்போது பகவானின் உடலிலேயே அத்தனை லோகங்களும் காணப்பட்டன.

அவற்றின்மீ து அவரது திருக்கண்ணோக்கு விழவே, பூத ஸூக்ஷ்மங்கள்


ரஜோகுணத்தால் மாறுதல் அடைந்து, படைப்பைத் துவக்குவதற்கான
சக்தியாக அவரது தொப்புளிலிருந்து வெளிப்பட்டன.

107
பகவானின் தொப்புளிலிருந்து ஒரு தாமரை மலர் வெளிவந்தது. அதன்
ஒளியால் ப்ரளயஜலம் ப்ரகாசித்தது.

அந்தத் தாமரையில் பகவான் அந்தர்யாமியாக உள்நுழைந்தார். அப்போது


அதிலிருந்து தனக்குத்தானே அத்தனையும் உணர்ந்தவராக ப்ரும்மதேவர்
தோன்றினார்.

அவரை உலகம் ஸ்வயம்பு (தான்தோன்றி) என்றழைக்கின்றது. ப்ரும்மதேவர்


தன்னைச் சுற்றி ஏதுமின்றி தான் தனித்திருப்பதைக் கண்டு நாற்புறங்களிலும்
நோக்கினார். அப்போது அவருக்கு நான்கு முகங்கள் உண்டாயின.

முதலில் அவருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இத்தாமரை மலரில்


அமர்ந்துள்ள நான் யார்? என் பெயரென்ன? எந்த ஆதாரமும் இன்றி தாமரை
எப்படித் தோன்றியது? இதன் அடியில் ஆதாரமாக இருப்பது எது?
என்றெல்லாம் யோசனை செய்தார்.

ஏதும் விளங்காததால், தாமரையின் உள்நாளம் வழி கீ ழ்நோக்கிச் சென்று நீரின்


அடிமட்டத்தை அடைந்தார். இருப்பினும் ஆதாரம் கிடைக்கவில்லை.

இவ்வாறு இருளிலேயே தேடி தேடிப் பலகாலம் கடந்துவிட்டது.

அனைத்து உயிர்களின் காலத்தைக் கணக்கிட்டு அழிக்கும் சக்திதான்


பகவானின் ஆயுதமான காலச் சக்கரம். அது அனைவர்க்கும் பயத்தை
அளிப்பது.

முயற்சி பயனற்றுப்போனதால் ப்ரும்மதேவர் மீ ண்டும் தன் இடத்திற்கே


வந்தமர்ந்தார்.

மூச்சையும் மனத்தையும் அடக்கித் தவத்தில் மூழ்கினார். தேவர் காலக்


கணக்கில் நூறாண்டுகள் கடுந்தவம் செய்தார். த்யான ஸமாதியில் அவருக்கு
ஞானம் தோன்றியது. முன்பு தேடிக் காணாதது இப்போது இதயத்தில் ஒளிரக்
கண்டார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 62*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 6*

மைத்ரேயர் தொடர்ந்தார்:

அந்த ஊழிநீரில் தாமரைத் தண்டு போன்ற வெளுத்த பெருத்த


திருமேனியுடைய ஆதிசேஷப் படுக்கையில் தனி ஒருவராகப் படுத்திருக்கும்
ஸ்ரீ மன் நாராயணனைக் கண்டார் ப்ரும்மா. ஆதிசேஷனின் பதினாயிரம்
முடிகளும் பகவானுக்கு குடை பிடித்ததுபோல் இருந்தன. அதன் முடிகளில்
ஒளிரும் ரத்தினங்கள் நாற்புறமும் உள்ள இருளை நீக்கி எங்கும்
ஒளிமயமாக்கின.

108
ஸ்ரீ மன் நாராயணனது நீருண்டமேகம் போன்ற திருமேனி மரகதமலையின்
ஒளியை மங்கச் செய்தது. இடுப்பில் விளங்கும் பொன்னாடை மாலை நேர
சூரிய கிரணங்களைத் தாங்கும் மேகம்போல் இருந்தது. தலையில் விளங்கும்
கிரீடம் மரகத மலைக்குப் பொற் சிகரங்கள் போலிருந்தது.

அவரது திருமார்பில் விளங்கும் வனமாலையோ மரகதமலையில் உள்ள செடி


- கொடிகள், அருவிகள், ரத்தினங்களின் அழகை விஞ்சுவதாக இருந்தது.

மூன்று உலகங்களையும் தன்னுள் கொண்ட ஸ்ரீ மன் நாராயணனின்


திருமேனியின் நீள அகலங்களை வர்ணிக்க இயலாது‌
.

திருமேனியெங்கும் அணிகலன்கள். பீதாம்பரம், ஆடை, அணிகலன்களால்


இவருக்கு அழகு சேரவில்லை. இவரது திருமேனியால் தான் அவற்றிற்கு
அழகு.

தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டி பற்பல வழிகளில்


தொழுதேத்தும் தன் பக்தர்கள் காண்பதற்காக திருவடியைச் சற்றே உயர்த்தி
வைத்துக் கொண்டிருக்கிறார்.

தாமரை இதழ் போன்ற மெல்லிய விரல் நகங்களின் அழகு நிலவை


வெட்கமுறச் செய்வது.

உயர்ந்த அழகிய மூக்கு, வில் போன்ற வளைந்த புருவங்கள், காதுகளில் அழகு


மிளிரும் மகர குண்டலங்கள், கொவ்வைப் பழம் போன்ற சிவந்த அதரங்கள்,
அடியார்களின் துன்பம் துடைக்கும் புன்னகை, இவ்வாறான திருமுக
மண்டலத்தால் தன் அடியார்களை மகிழச் செய்கிறார்.

இடுப்பில் கதம்ப மலரின் கேசரங்கள் போல் மஞ்சள் நிறப்பொன்னாடை, அதன்


மேல் அரைஞாண், மார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு. கழுத்தில் விலை
மதிப்பில்லா முத்துச்சரங்கள். என்னே அழகு!

அடுத்ததாக பகவானை சந்தன மரத்திற்கும் மலைக்கும் ஒப்பிட்டு


வர்ணிக்கிறார் ஸ்ரீ சுகர்.

பகவானின் கழுத்தில் வனமாலை. வேதங்கள் பகவானைத் துதிப்பது போல்


வனமாலையில் மொய்க்கும் வண்டுகள் இனிதே ரீங்காரம் செய்து
பாடுகின்றன. ஆகவே வனமாலை அவரது புகழின் இருப்பிடமாகிறது.
வனமாலையின் அம்சமாகத் தோன்றிய தொண்டரடிப் பொடி ஆழ்வாரும்
புஷ்ப கைங்கர்யம் செய்தார்.

தான் குடியிருக்கும் பகவானின் அதே உருவில் ஈடுபட்டு பூலோக வைகுண்டம்


வந்து அரங்கன் சேவையில் ஈடுபடுகிறார்.

அவர் பாடிய திருமாலையில் ஒரு பாடலான பச்சை மாமலைபோல் மேனி,


மேற்கண்ட பாகவத ஸ்லோகங்களின் மொழிபெயர்ப்போ எனும் அள்விற்கு,
ஒத்துப்போகின்றன. அவர் வனமாலையாய் தவழ்ந்த அதே பகவானை பூலோக
வைகுண்டத்தில் கண்டு வர்ணித்திருக்கிறார்.

109
இறைவனின் காட்சி மறைந்ததும், ப்ரும்மா ரஜோகுணம் நிரம்பியவராகி
உலகைப் படைக்க விரும்பினார்.

ப்ரளய ஜலம், ஆகாயம், வாயு, தாமரை மலர், தான் ஆகிய இவை ஐந்தே
விஷயங்கள் தான் அவருக்குத் தெரிந்தன. இவற்றை வைத்துக் கொண்டு
எப்படி படைப்புத் தொழிலை நிகழ்த்துவது என்று அவருக்குப் புரியவில்லை.

அதனால் தன் தோற்றத்திற்குக் காரணமான பகவானை ஒன்றுபட்ட


மனத்துடன் மீ ண்டும் தியானிக்கத் துவங்கினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 63*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 7*

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்:

ப்ரும்மா தனக்கு ஆதாரமான பரம்பொருளைத் தியானத்தில் கண்டு தன்


மனதிற்கும் வாக்கிற்கும் எட்டியவாறு பலவாறு துதித்து களைப்படைந்து
ஓய்ந்தார். அப்போது மானஸீகமாகவே பகவான் அவருடன் பேசினார்.

ப்ரும்ம தேவரே! நீர் வேதத்தை உம்முள் கொண்டிருக்கிறீர். நீர் மனந்தளர்ந்து


சோர்வடையலாகாது. நீர் என்னிடம் வேண்டப் போவதை நான் முன்னமேயே
தயார் செய்து விட்டேன். நீங்கள் மறுபடி தவம் செய்யுங்கள். பக்தி செய்யுங்கள்.
தாங்கள் படைக்கப்போகும் அனைத்தையும் உங்கள் இதயத்திலேயே
தெளிவாய்க் காண்பீர்கள்.

அப்போது ஒரு முகப்பட்ட மனதில் ப்ரபஞ்சம் முழுதும் நான்


வியாபித்திருப்பதையும், என்னுள் அடங்கிய முழு ப்ரபஞ்சத்தையும்
காண்பீர்கள். பக்தி செய்யும் உங்களை ரஜோகுணம் பாதிக்காது.

உங்களுக்கு என்னைப் பற்றி பூரண அறிவு இருக்கிறது. நீர் ஸகுணனாக


என்னைக் கண்டபின்னும் நிர்குணனாக அறிந்து துதித்தது எனக்கு
மகிழ்ச்சியளிக்கிறது.

நீங்கள் துதித்த இந்தத் துதியினால் என்னைத் துதிப்பவர்க்கு


வேண்டியதெல்லாம் அளிப்பேன். மக்கள் அனுஷ்டிக்கும் பூர்த்த தர்மம் (குளம்
வெட்டுதல் போன்ற), தவம், வேள்விகள், தானங்கள், யோகஸாதனைகள்,
ஸமாதி, தியானம் முதலியவற்றால் பெறும் நன்மைகள் எவையோ அவை
எனது மகிழ்ச்சியால்தான். அவற்றின் உண்மையான பலன் நான் மகிழ்வதே.

நீர் எனது ஆத்மா. என்னை மூலகாரணமாக உடையவர். எனவே, யாருடைய


உதவியும் இன்றி, அனைத்து லோகங்களையும், ஜீவராசிகளையும், முந்தைய
கல்பத்தில் இருந்தபடியே உங்களிடமிருந்தே படைக்கத் துவங்குவர்..
ீ பின்னர்
பகவான் ப்ரும்மாவின் ஹ்ருதய கமலத்தினின்றும் மறைந்தார்.

இப்போது விதுரர் இடை மறித்தார். ப்ரும்மா தன் உடலிலிருந்தும்


மனதிலிருந்தும் எவ்விதமான படைப்புகளைச் செய்தார்?

110
மைத்ரேயர் அவரது ஆர்வத்தைக் கண்டு புன்முறுவல் பூத்துக் கொண்டே கூறத்
துவங்கினார்:

பகவான் கூறியபடி ப்ரும்மா மனதை நாராயணனிடம் ஒருமுகப்படுத்தி நூறு


தேவ வருஷங்கள் தவமியற்றினார். ஊழிக்காற்றினால் அவர் வற்றிருக்கும்

தாமரை மலரும், ப்ரளய ஜலமும் வெகு வேகமாக அசைந்தன.

தனது தவத்தால் தன் சக்தியும், ஞானமும் பெருகுவதை உணர்ந்து அந்தத்


திறனால் ஊழிக்காலக் காற்றை ஊழி நீருடன் விழுங்கினார். அவர்
அமர்ந்திருந்த தாமரை மலர் ஆகாயம் முழுதும் பரவி நின்றது. அதைக்
கொண்டே அத்தனை லோகங்களையும் முன் கல்பத்தில் இருந்தபடியே
படைக்க விழைந்தார். தாமரையின் உட்பகுதிக்குள் நுழைந்து அதை பூ:, புவ:,
ஸ்வ: என்ற மூன்று லோகங்களாகப் பிரித்தார்.

அத்தாமரையோ பதினான்கு லோகங்களையும், அதற்கு மேலும் படைக்கலாம்


போல் பெரிதாக இருந்தது.

பூ:, புவ:, ஸ்வ: ஆகிய மூன்று உலகங்களும் கர்மாக்களை அனுபவிக்கும்


இடங்களாகும். ப்ரும்மதேவரும் ஜீவராசிகளில் ஒருவரே. அவருடைய
லோகத்திற்கு படைப்பு இல்லையா என்ற கேள்வி எழலாம்.

ப்ருமா பயனை எதிர்நோக்கா அறங்களின் முழுப் பயனாவார். மேற்சொன்ன


மூன்று லோகங்களுக்கும் ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும் தோற்றமும்
அழிவும் உண்டு. மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம், ஆகியவை
நிஷ்காம கர்மங்களின் பயனை அனுபவிக்கும் இடங்கள்.

அங்குள்ளவர்களுக்கு ப்ரும்மாவின் இரண்டு பரார்த்தங்களும் முடியும் வரை


அழிவில்லை. இரண்டு பரார்த்தங்கள் முடியும்போது ப்ரும்மாவுடன் சேர்ந்து
இந்த லோகங்களில் உள்ளவர்களுக்கும் மோக்ஷம்தான்.

*ஸ்ரீமத் பாகவதம் - 64*_*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 8*

விதுரர் காலஸ்வரூபத்தை விளக்கிக் கூறும்படி மைத்ரேயரை வேண்டினார்.


விதுரரின் கேள்விகளால் பகவானின் அனந்தமான மகிமைகளைச் சொல்லும்
பாக்யம் கிடைத்ததை எண்ணி ஆனந்தப்பட்டுக் கொண்டு மைத்ரேயர்
பதிலிறுத்தார் :

காலம் என்பது பகவானைப் போலவே ஆதி அந்தமற்றது. உலகின் பொருள்கள்


மாறுபாடு அடைவதைக் கொண்டே காலம் அறியப்படுகின்றது. காலத்தைக்
கருவியாகக் கொண்டு பகவான் தன்னையே எல்லாமாகப் படைக்கின்றார்.
காலத்திற்கும் பகவானைப் போல் எந்த மாறுதலுமில்லை.

ஆனால், காலத்திற்காட்பட்ட ஜீவன்களுக்கு இளமை, முதுமை போன்ற


மாறுதல்கள் உண்டு. என்றும் பதினாறாக இருக்கும் மார்க்கண்டேயர்,
ஸுகாசார்யார் போன்றவர்கள் காலத்துக்கப்பாற்பட்டு விளங்குவதைப்
பார்க்கிறோம். அவர்கள் வரையில் காலமாறுதலே இல்லை.

111
மேற்கொண்டு, படைப்பைப் பற்றி விளக்க ஆரம்பித்தார் மைத்ரேயர்.

முதலில் அகில உலகமும் மாயையினால் பகவானிடம் ஒடுங்கியிருந்தது.

காலத்திற்கு மாறுதல் இல்லை என்று பார்த்தோம். மறைவதற்கான


காலத்தையும், தோற்றத்திற்கான காலத்தையும் பகவான் நிர்ணயிக்கின்றான்.
காலசக்தியைக் கொண்டே திரும்பவும் உலகைப் படைக்கின்றான்.

இவ்வுலகம் இப்போது எப்படி இருக்கிறதோ, அப்படியேதான் இதற்கு முன்பும்


இருந்தது. இனி வரப்போகும் ப்ரளயம் முடிந்து மறுபடியும் தோன்றும்போதும்
இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியேதான் தோன்றும்.

சுலபமாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் உறங்கும் போது செயல்


பொறிகள் அனைத்தும் ஓய்கின்றன. (கை கால்கள்) அறிவுப்புலன்களும்
ஓய்கின்றன. (உணரும் திறன்கள்) மனமும் லயமடைகிறது.

அப்போது புற உலகம் தெரிவதில்லை. மனதிலேயே பல்வேறு விதமான


விஷயங்களைக் கனவில் காண்கிறோம். அதற்கு கர்மேந்திரியங்களோ
ஞானேந்திரியங்களோ தேவைப்படவில்லை.

உறக்கத்திலிருந்து எழும்போது பத்து புலன்களும் உணர்வு பெறுகின்றன.


தூங்குவதற்கு முன் ப்ரபஞ்சம் எப்படி இருந்ததோ அப்படியே காண்கிறோம்.

ஒன்பது விதங்களாகப் படைப்பு நிகழ்கிறது. அதைத் தவிர ப்ராக்ருதம்,


வைக்ருதம் என்பவை பத்தாவதாகும்.

1. மஹத் தத்வம்

இது ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் மாறுபாடு.

2. அஹங்காரம்

இதிலிருந்து பஞ்ச பூதங்கள், கர்மேந்த்ரியங்கள், ஞானேந்திரியங்கள்


ஆகியவை தோன்றுகின்றன.

3. பஞ்ச பூதங்களையும் தோற்றுவிக்கும் பூதஸூக்ஷ்மங்கள், தன்மாத்திரைகள்

4. பத்து பொறிகளின் படைப்பு

5. ஸாத்வக
ீ அஹங்காரத்தினின்று தோன்றும் பொறி மற்றும் புலன்களின்
அதிஷ்டான தேவதைகள்.

6. அவித்யை

இது அனைத்தையும் மறக்கச் செய்வது.

- இது வரை ப்ராக்ருத ஸ்ருஷ்டிகள்.

112
7. ப்ரும்மதேவர் ரஜோகுணத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யும்
படைப்புகள். இது முதல் வைக்ருத ஸ்ருஷ்டி ஆகும்.

ப்ரும்மதேவரின் மூவகைப் படைப்புகளில் முதலாவது *தாவரங்கள்*.

தாவரங்கள் ஆறு வகைப்படும்.

1. வனஸ்பதிகள்

(பூக்காமல் காய்க்கின்ற அத்தி, ஆல் போன்ற மரங்கள்)

2. ஔஷதிகள்

(பூத்துப் பயன்தரும் நெல் முதலியவை)

3. கொடிகள்

(மரத்தைப் பற்றிக் கொண்டு வளர்பவை)

4. த்வக்ஸாரம் (மேல்பட்டைகளில் பலமுடைய மூங்கில் முதலானவை)

5. வருதங்கள்

(தரையில் படரும் கொடிகள் பூசணி முதலியவை)

6. த்ருமங்கள்

(பூத்துக் காய்க்கும் மரங்கள்)

8. விலங்குகள்

நிமிர்ந்திராது குறுக்காக வளர்பவை.

இவை 28 வகைப்படும்.

உணவு, தூக்கம், பயம், இனப்பெருக்கம் ஆகிய அறிவுகள் மட்டும்


கொண்டவை.

முகர்ந்து பார்த்தே வேண்டியதைத் தேடிக்கொள்ளும்.

நட்போ பகையோ வெகுகாலம் நினைவிராது.

(ஒரு குளம்புள்ளவை, இரண்டு குளம்புகள் உள்ளவை, ஐந்து நகங்கள் உள்ள


விலங்குகளும், பறவைகளும்)

9. மனிதன்

113
ஒரே விதமான ஸ்ருஷ்டி, மேலிருந்து கீ ழ்நோக்கி ஆகாரம் செல்லுமாறு
படைக்கப்பட்டவர்கள்; ரஜோகுணத்தில் பற்றுதல் அதிகம் உள்ளவர்கள்;
பல்வேறு செயல்களில் ஈடுபடுபவர்கள்.
இன்ப துன்ப சிந்தனை உள்ளவர்கள்.

தேவர்களின் படைப்பு முன்பே கூறப்பட்டது. (பூத ஸூக்ஷ்மங்கள்) - அவை


எட்டு விதம்.

தேவர்கள், பித்ருக்கள், அசுரர்கள், கந்தர்வ - அப்ஸரஸ்கள், யக்ஷ - அரக்கர்கள்,


சித்த-சாரண-வித்யாதரர்கள், பூத-ப்ரேத-பிசாசர்கள், கின்னர-கிம்புருஷர்கள்
ஆகியவை.

பகவானின் பத்துவிதமான படைப்புகள் பற்றிக் கூறிய மைத்ரேயர்,


மேற்கொண்டு மன்வந்தரங்களையும், வம்சங்களையும் பற்றி கூறத்
துவங்கினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 65*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 9*

மைத்ரேயர் கால அளவுகளைக் கூறலானார்:

விதுரரே!

பரமாணு என்பது மிகநுண்ணிய வடிவம்.

அதை மேலும் பிரிக்க முடியாது.

இது எப்போதும் உள்ளது. அழிவற்றது. இவைகள் ஒன்று சேர்ந்துதான்


ஜீவர்களின் அவயவங்கள் தோன்றுகின்றன.

சூக்ஷ்மமான பரமாணுக்களின் ஒன்று சேர்ந்து பூமி முதலியவை ஆகின்றன.


அவற்றின் மொத்த கூட்டமைப்பு 'பரமமஹாந்', (மிகப்பெரியது) எனப்படும்.

இவற்றிற்கு ப்ரளயம் முதலிய அவஸ்தை வேறுபாடுகளோ, புதியது, பழையது


என்கிற கால அளவோ, குடம், துணி போன்ற அமைப்பு வேறுபாடுகளோ
இல்லை.

புழுதியிலிருந்து மலை வரை பரமாணுக்களின் கூட்டமைப்பு என்பதைப் புரிந்து


கொள்ள முடியும். இதுபோலவே காலத்தின் சிறிய பெரிய அளவுகள் உண்டு.

ப்ரபஞ்சத்தின் பரமாணுவைக் கடக்க ஆகும் நேரம் 'பரமாணு காலம்.' இது


மிகவும் நுண்ணிய நேரம்.

படைப்பு முதல் ப்ரளயம் வரை உள்ள நீண்ட காலம் ப்ரும்மாவின்


ஆயுள்காலம். அதைப் 'பரமமஹாந்' என்பர்.

இரண்டு பரமாணுக்கள் சேர்ந்தது ஒரு அணு.

114
மூன்று அணுக்கள் சேர்ந்தது ஒரு 'த்ரஸரேணு.'

ஜன்னல் வழியே வட்டில்


ீ படரும் சூரிய ஒளியில் பறப்பதுபோல் காணப்படும்
துகள் 'ரேணு.'

இம்மாதிரியான மூன்று த்ரஸரேணுக்களைக் கடக்க சூரியன் எடுத்துக்


கொள்ளும் நேரம் 'த்ருடி.'

100 த்ருடிகள் = வேதை.

3 வேதை = ஒரு லவம்.

3 லவங்கள் = ஒரு கண்ணிமைக்கும் நேரம்.

3 கண்ணிமைக்கும் நேரங்கள் = ஒரு நொடி.

5 நொடிகள் = ஒரு காஷ்டை.

15 காஷ்டைகள் = ஒரு லகு.

15 லகு = ஒரு நாழிகை.

2 நாழிகைகள் = ஒரு முஹூர்த்தம்.

பகல் சில சமயம் அதிகமாகவும், சிலசமயம் குறைவாகவும் இருக்கும்.

பகல் இரவு சக்திகளின் முஹூர்த்தங்கள் நீங்கலாக,

6 அல்லது 7 நாழிகள் = ஒரு ப்ரஹரம்.

இதை யாமம் என்றும் கூறுவர்.

ஆறு பலம் எடையுள்ள, இரண்டு சேர் நீர் கொள்ளளவுள்ள ஒரு தாமிரப்


பாத்திரத்தின் அடியில், இருபது குன்றிமணிகள் எடையுள்ள நான்கு அங்குல
தங்கக் கம்பியால் துளையிட்டு அதை நீரில் மிதக்க விடவேண்டும்.
அந்தப்பாத்திரம் நீர் நிரம்பி முழுவதும் மூழ்க ஆகும் நேரம் ஒரு
நாழிகையாகும்.

இரவும் பகலும் ஒவ்வொன்றும் நான்கு யாமங்கள் கொண்டவை.

15 நாள்கள் = ஒரு பக்ஷம்.

அது சுக்ல பக்ஷம் (வளர்பிறை),

க்ருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) என்று இருவகைப்படும்.

2 பக்ஷங்களும் சேர்ந்தது ஒரு மாதம். இது பித்ருக்களுக்கு ஒரு நாள்.

115
2 மாதங்கள் = ஒரு ருது.

6 மாதங்கள் = ஒரு அயனம்

அது உத்தராயணம், தக்ஷிணாயணம் என்று இருவகைப்படும்.

சூரியன் ஆகாயத்தில் வடக்கு திசையில் இருந்தால் உத்தராயணம் என்றும்


தென்திசையில் இருந்தால் தக்ஷிணாயணம் எனவும் கொள்ள வேண்டும்.

2 அயனங்கள் = ஒரு வருடம்.

இது தேவர்களுக்கு ஒரு நாள்.

இம்மாதிரி நூறு வருடங்கள் = ஒரு மனிதனின் பூரண ஆயுள்.

சூரியன், குருபகவான், ஸாவனம், சந்திரன், நக்ஷத்ரங்கள் ஆகியவற்றின்


கதிகளை அனுசரித்து வருடங்கள் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம்,
இடாவத்ஸரம், அனுவத்ஸரம், வத்ஸரம் என்று பெயர் பெறுகின்றன.

12 (சூர்ய) சௌர மாதங்கள்= 1 ஸம்வத்ஸரம்.

குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் 16 மாதங்கள் = பரிவத்ஸரம்

30 நாள்கள் = ஒரு ஸாவன மாதம்

12 ஸாவன மாதங்கள் = ஒரு இடாவத்ஸரம்.

அமாவாசையில் முடிவது சாந்திரமான மாதம்.

12 சாந்திரமான மாதங்கள் = ஒரு அனுவத்ஸரம்

சந்திரன் 12 ராசிகளையும் சுற்றி வரும் காலம் நக்ஷத்ர மாதம்.

12 நக்ஷத்ர மாதங்கள் = ஒரு வத்ஸரம்.

சுக்லபக்ஷ ப்ரதமை அன்று சங்கராந்தி வந்தால், அன்றே சந்திர, ஸௌர


மாதங்கள் துவங்கும். அதற்கு ஸம்வத்ஸரம் என்று பெயர். அப்போது
ஸூர்யமானத்தில் 6 நாள்கள் அதிகம்.

சந்திரமானத்தில் 6 நாள்கள் குறையும். இந்த 12 நாள்கள் இடைவெளியால்


வருடம் முன்பின்னாக முடியும். 5 வருடங்களுக்கொரு முறை 60 நாள்கள்,
அதாவது இரண்டு மாதங்கள் வித்யாசம் வரும். இவை மல மாதங்கள்
என்றழைக்கப்படும்.

இந்த ஐந்து விதமான வருடங்களையும் செயல்படுத்துவது சூரியன்.


மனிதர்களின் ஒரு வருடம் தேவர்களின் ஒரு நாள் என்று முன்பே பார்த்தோம்.

116
க்ருதயுகம், த்ரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் நான்கும் சேர்ந்து ஒரு
சதுர்யுகம் =
12,000 தேவ வருடங்கள் அல்லது 43,20,000 மனித வருடங்கள்.

நான்கு யுகங்களுக்கும் முறையே 4000, 3000, 2000, 1000 தேவ வருஷங்கள்.

ஒவ்வொரு யுகத்திற்கும் எத்தனை ஆயிரமோ அத்தனை 200 வருடங்கள் யுக


சந்திக்காக சேர்த்துக் கொள்ளப்படும்.

க்ருதயுகம் = 4000+(4*200)= 4800 தேவ வருஷங்கள்

த்ரேதாயுகம் 3600 தேவ வருஷங்கள்.

துவாபரயுகம் 2400 தேவ வருஷங்கள். கலியுகம் 1200 தேவ வருஷங்கள்.

360 மனித வருடம் = ஒரு தேவ வருடம்.

எனில்,

கலியுகம் =
4,32,000 மனித வருடங்கள்

அதன் இரு மடங்கு 8,64,000 மனித வருடங்கள் = துவாபரயுகம்

மும்மடங்கு 12,96,000 மனித வருடங்கள் = த்ரேதாயுகம்

நான்கு மடங்கு 17,28,000 மனித வருடங்கள் = க்ருத யுகம்.

மூவுலகங்களுக்கு வெளியே இருக்கும் மஹர்லோகம் முதல் ஸத்யலோகம்


வரை

1000 சதுர்யுகங்கள் = ஒரு பகல்.

1000 சதுர்யுகங்கள் ஒரு இரவு.

அதுபோல் நூறு வருடங்கள் = ப்ரும்மாவின் ஆயுள். அவரது 50 வருடங்கள்


ஒரு பரார்த்தம்.

14 மன்வன்தரங்கள் = 1000 சதுர்யுகம்.

ஒரு மனு ஆட்சி செய்யும் காலம் = 71.4 சதுர்யுகங்கள் = மன்வந்தரம்.

பரமாணு முதல் இரண்டு பரார்த்தம் வரை நீளும் காலசக்தியும் தேகத்தின் மீ து


பற்றுள்ளவர்களையே கட்டுப்படுத்துகிறது. பகவானைக் கட்டுப்படுத்த
இயலாது.இதன் பின் ப்ரும்மாண்டகோசத்தை விளக்குகிறார் விதுரர்.

117
*ஸ்ரீமத் பாகவதம் - 66*__*விதுர மைத்ரேய‌ஸம்வாதம் - 10*

மைத்ரேயர் தொடர்ந்தார்:

ப்ரும்மா ஸப்தப்ரும்மமாக, வேதமாகத் தோன்றிய காலம் *ப்ரும்ம கல்பம்*.


அதன் முடிவில் தாமரை மலரில் தோன்றினார். அதனால் அது *பாத்ம கல்பம்*
என்றழைக்கப்படுகின்றது.

அவரது இரண்டாவது பரார்த்தத்தின் துவக்கத்தில் ஆரம்பித்து இப்போது வரை


*வராக கல்பம்*. இதில் பகவான் வராக மூர்த்தியாக அவதாரம் செய்தார்.

பரமாணு காலம் துவங்கி இந்த இரண்டு பரார்த்தங்கள் வரையிலான


ப்ரும்மாவின் ஆயுள் காலம் பகவானுக்கு ஒரு நொடியாகும்.

இந்த ப்ரும்மாண்ட கோசம் எட்டு அடிப்படைத் தத்துவங்களைக் கொண்டது.

ப்ரக்ருதி, மஹத், அஹங்காரம், சப்தம், ஸ்பர்சம் முதலிய ஐந்து


தன்மாத்திரைகள்.

இவை மேலும் ஐந்து பூதங்கள், பத்து பொறிகள், மற்றும் மனம் என்று பதினாறு
மாறுதல்களை உடையது.

இது உள்ளும் புறமும் 50 கோடி யோஜனை தூரம் உள்ளது. பூமி, நீர், அக்னி,
வாயு, ஆகாயம், அஹங்காரம், மஹத் என்ற 7 ஆவரணங்கள் உடையது. இந்த
ஆவரணங்கள் (திரை) ஒன்றுக்கொன்று பத்து மடங்கு பெரியவை.

இப்படிபட்ட ப்ரும்மாண்ட கோசம் பகவானிடம் ஒரு அணுபோல்


காணப்படுகின்றது. இதைப்போல் கோடிக்கணக்கான ப்ரும்மாண்டங்களை
உடையவர் அவர். புராண புருஷரான (பழைய வஸ்து) இவரை மஹாவிஷ்ணு
எனவும் அழைக்கின்றனர்.

விதுரரே, இனி ப்ரும்மதேவரின் ஸ்ருஷ்டிகள் பற்றிக் கூறுகிறேன்.


கேளுங்கள்..

ப்ரும்மா முதலில்
அஞ்ஞானத்தின் ஐந்து தொழில்களைப் படைத்தார்.

1. தாமிஸ்ரம் (துவேஷம்)

2. அந்ததாமிஸ்ரம் (மரணமே ஜீவனின் முடிவு என்ற எண்ணம்)

3. மோகம் (உடல் பற்று)

4. மகாமோகம் (பொறிகளின் சுகத்தில் பற்று)

5. தமஸ் (ஆன்ம தத்வத்தை மறைக்கும் அறியாமை எனும் மாயை)

118
முதலில் தத்வங்களைப் படைத்தபின் ஜீவ ஸ்ருஷ்டியைத் துவக்கினார்.

இதன் பின்,வேதங்கள்,வேள்விகள் (ஷோடஸி, உக்தம், சயனம்,


அக்னிஷ்டோமம், அப்தோர்யாமம், அதிராதரம், வாஜபேயம், கோஸவம்),
அவற்றின் விரிவுகள், உபவேதங்கள், ப்ரும்மசர்யம், இல்லறம், வானப்ரஸ்தம்,
துறவறம், ஆகியவற்றின் நெறிகள், ரித்விக்குகளின் வகைகள், அவர்களின்
நெறிகள், ஆயுர்வேதம் (மருத்துவம்), தனுர்வேதம் (ஆயுதங்கள், போர்
வகைகள்) காந்தர்வ வேதம் (இசை, பரதம் முதலியன), ஸ்தாபத்ய வேதம் (வடு ீ
கட்டுதல் முதலியன), ஐந்தாவது வேதமான இதிஹாஸ புராணங்கள்,
தர்மத்தின் நான்கு பாதங்களான வித்யை, தானம், தவம், ஒழுக்கம், அவற்றின்
நெறிமுறைகள் ஆகியவற்றைப் படைத்தார்.

உஷ்ண ீக், காயத்ரி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப், ஜகதீ, பங்க்தீ, ப்ருஹதீ ஆகிய


சந்தங்கள் ப்ரும்மாவின் உடலிலிருந்து தோன்றின.

அ முதலான உயிரெழுத்துக்கள், க முதல் ம வரையிலான


மெய்யெழுத்துக்கள், ஶ, ஷ, ஸ, ஹ, முதலிய ஊஷ்ம எழுத்துக்கள், ய,ர, ல, வ
என்ற அந்தஸ்த (இடையின) எழுத்துக்கள் ஆகியவையும் ப்ரும்மாவிடமிருந்து
வந்தன. அவரது திருவிளையாடல்களிலிருந்து ஸப்தஸ்வரங்களின் த்வனி
தோன்றியது.

ப்ரும்மா வெளிப்படையாக ஸப்தப்ரும்மத்தின் எழுத்துக்களின் ஒலிகளாகவும்,


உள்முகமாக *ஓம்* எனும் ப்ரணவத்தின் த்வனியாகவும் இருக்கிறார்.

இவ்வளவு செய்தும் படைப்பு பெருகாததைக் கண்டு வருத்தமுற்றார் ப்ரும்மா.

*ஸ்ரீமத் பாகவதம்-67*_*விதுர மைத்ரேய


ஸம்வாதம்-11*_*வராக அவதாரம் - 1*

எவ்வளவு விஷயங்களைப் படைத்திருந்தபோதும், ஜீவன்களின் படைப்பு,


பெருகவே இல்லை. மிகுந்த ஆயாசத்துடன் ப்ரும்மா தன் உடலை விட்டார்.
அவரது சரீரம் நான்கு திக்குகளாலும் ஆகர்ஷிக்கப்பட்டு புகை மூட்டமாயிற்று.

புதிய சரீரம் கொண்ட அவர், தன் செய்கையில் பிழைகள் உள்ளதா என்று


ஆராய்ந்தார். ஒன்றும் புரியாமல் பகவானை சிந்தனை செய்யத் துவங்கினார்.

அப்போது அவரிடமிருந்து ஆண், பெண் என்று இரண்டு உடல்கள் ஏற்பட்டன.


'க' எனில் ப்ரும்மதேவர். அதிலிருந்து உண்டானது காயம். அவ்வாறு
பிரிந்ததில் ஆண் உருவம் ஸ்வாயம்புவ மனு என்று பெயர் பெற்று முதல்
மனுவாயிற்று. பெண் பகுதி சதரூபா என்ற பெயரில் ஸ்வாயம்புவமனுவின்
ராணியானார்.

அது முதல் ஆண், பெண் உடலுறவால் ப்ரஜைகள் தோன்றலாயினர்.


சக்ரவர்த்தியான ஸ்வாயம்புவமனுவிற்கும், சதரூபைக்கும் ஐந்து குழந்தைகள்
பிறந்தனர். அவர்கள் ப்ரியவ்ரதன், உத்தானபாதன் என்ற இரு ஆண்
குழந்தைகளும், ஆகூதி, தேவஹூதி, ப்ரஸூதி ஆகிய மூன்று பெண்
குழந்தைகளும் ஆவார்கள்.

119
ஸ்வாயம்புவ மனு ஆகூதியை ருசி என்பவருக்கும், தேவஹூதியை
கர்தமருக்கும், ப்ரஸூதியை தக்ஷனுக்கும் திருமணம் செய்துகொடுத்தார்.
அவர்களது சந்ததியால் இவ்வுலகம் நிறைந்தது.

விதுரர் கேட்டார்:

ரிஷியே, பகவானின் சரணகமலங்களைத் தனது இதயத் தாமரையில் வைத்து


வழிபடும் அடியார்களின் குணங்களைக் கேட்பதே கற்ற கல்வியின் பயன்
என்று சான்றோர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த ஸ்வாயம்புவமனுவின்
சரித்திரத்தைக் கூறுங்கள் என்றார்.

இவ்வார்த்தைகளால் மைத்ரேயர் மகிழ்ச்சியால் மேனிசிலிர்த்தார். பின்னர்


கூறத் துவங்கினார்:

ஸ்வாயம்புவமனு சதரூபையுடன் வந்து ப்ரும்மாவிடம் கூறினார். பகவானே,


நீங்களே படைப்பு அத்தனைக்கும் காரணம். நாங்கள் தங்களுக்குச்
செய்யவேண்டிய சேவை என்ன என்று கூறியருளுங்கள் என்றார்.

ப்ரும்மா, 'பெற்றோரின் கட்டளையை விநயத்துடனும் ஈடுபாட்டுடனும் தன்


திறமைக்கேற்பச் செய்வதே தனயனின் முதற்கடைமை. நீ சதரூபையுடன்
இல்லறம் நடத்தி குழந்தைகளைத் தோற்றுவித்து, அறநெறி வழுவாமல்
இவ்வுலகைக் காத்து வா. பரமபுருஷனை வேள்விகளால் ஆராதனம் செய்
என்றார்.

மனு மீ ண்டும் கேட்டார்.

தாங்கள் கூறியபடி செய்து பகவானை மகிழ்விக்கிறேன். ஆனால், நானும் என்


மக்களும் வசிக்க ஒரு இடம் காட்டுங்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும்
இருப்பிடமான பூமி ப்ரளய நீரில் மூழ்கிவிட்டது. அதை மேலே கொண்டுவர
முயற்சி செய்யவேண்டும் என்றார். ப்ரும்மா பூமியை எவ்வாறு மேலே
கொண்டு வருவது என்று யோசனையில் ஆழ்ந்தார்.

வழி எதுவும் புலப்படாததால் எந்த பகவானின் ஹ்ருதயத்திலிருந்து நான்


படைக்கப்பட்டேனோ, எவர் இவ்வுலகைப் படைக்கச் சொல்லி என்னை
நியமித்திருக்கிறாரோ அந்த பகவானே இதற்கும் வழி காட்டட்டும் என்று
நினைத்து, பகவானை மனதால் துதித்தார்.

அப்போது, மிகவும் ஆச்சரியமாக, ப்ரும்மாவின் மூக்குத் துவாரத்திலிருந்து


கட்டை விரல் அளவுள்ள ஒரு வெண்மைநிற வராகம் வெளிவந்தது.
அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆகாயத்தில் ஒரு யோஜனை
தூரத்திற்கு வளர்ந்தது.

மரீசி முதலிய அந்தணர்கள், ஸனகாதி முனிவர்கள், மனு, ப்ரும்மா


அனைவரும்‌ பெருகிய வராக உருவத்தைக் கண்டு யாராயிருக்கும் என்று
தீவிரமாகச் சிந்தித்தனர்.

120
இந்த ப்ராணி யார்? எதற்காக வந்தது? என்றெல்லாம் யோசித்தனர்.
ப்ரும்மாவின் முகத்திலிருந்தே வேதங்கள் தோன்றின. அவ்ரது
முகத்திலிருந்து தோன்றிய வராகமும் வேத ஸ்வரூபமான இறைவனே.

*ஸ்ரீமத் பாகவதம்- 68*_*விதுர மைத்ரேய ஸம்வாதம்


-12**வராக அவதாரம் - 2*

ப்ரும்மாவின் மூக்கிலிருந்து கட்டைவிரல் அளவிற்கு வெளியே வந்த அந்த


வராகம், அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மலையளவிற்குப்
பெரிதாகி நின்றது. யார் இது என்று எல்லோரும் குழம்பிய வேளையில், ஒரு
கர்ஜனை செய்தது. அதைக் கேட்டதும் அனைவர் மனத்திலும் இருந்த பயமும்
குழப்பங்களும் நீங்கின.

ப்ரும்மாவும், மற்ற அந்தண ஸ்ரேஷ்டர்களும் மகிழ்ந்து அவரை பகவான்


என்று உணர்ந்து, மிகவும் தூய்மையான வேத மந்திரங்களால் துதிக்கலாயினர்.

வேதஸ்வரூபமான பகவான் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார். திரும்பவும்


கர்ஜித்துக் கொண்டு, விளையாடுவதுபோல் ப்ரளய நீரில் நுழைந்தார். தன்
வாலை உயரத்தூக்கி ஆகாயத்தில் சுழற்றிக்கொண்டு, பிடறிமயிர்களை
உதறிக்கொண்டு குளம்புகளால் மேகக் கூட்டங்களைச் சிதறடித்தார்.

மிகவும் கடினமான திருமேனியும், குத்திட்டு நிற்கும் ரோமங்களும்,


வெண்மையான தெற்றிப்பற்களும், சிவந்த கண்களும் கொண்டு மிகவும்
அழகாக விளங்கினார். வேள்வித் திருவுருவாக இருப்பினும், முகர்ந்து பார்த்து
பூமியைத் தேடினார். பயங்கரமான தெற்றிப்பற்கள் இருந்தாலும், கண்களில்
கருணை வழிய தன்னைத் துதித்த ரிஷிகளைக் கடாக்ஷித்துக்கொண்டு
ஜலத்தினுள் நுழைந்தார்.

வஜ்ரமலை போன்று நீரில் யக்ஞவராஹமூர்த்தி குதிக்கவும்,


ஸமுத்திரராஜனின் வயிறு கிழிக்கப்பட்டது போல் நீரில் பெரிய பிளவு
ஏற்பட்டது. இடிபோன்று பெரிய சத்தம் கேட்டது. உயரக்கிளம்பிய
அலைகளைக் கண்டால், ஸமுத்திரராஜன், கைகளைத் தூக்கி, ப்ரபோ,
என்னைக் காப்பாற்றுங்கள் என்று அலறுவது போல் இருந்தது.

குளம்புகளால் கத்திபோல் நீரைக் கிழித்துக்கொண்டு, அடிவரை சென்றார்.


அங்கு ஜீவன்களின் இருப்பிடமான பூமியைக் கண்டார். உடனே, தன்
தெற்றிப்பல்லால், அழகாக பூமிப்பந்தைத் தூக்கிக்கொண்டு
ரஸாதலத்திலிருந்து மேலெழுந்தார்.

மிக மிக அழகான காட்சி அது. அப்போது, மிகுந்த பராக்ரமம் மிக்க


ஹிரண்யாக்ஷன் என்ற அசுரன் கையில் கதையுடன் அவரை வழி மறித்தான்.

உடனே, பொங்கிய சீற்றத்துடன், சிங்கம் யானையைக் கொல்வதுபோல்


அவ்வசுரனை விளையாட்டாகக் கொன்றார் பகவான். அவனது செங்குருதி
பகவானின் உடலிலும், கன்னங்களிலும் படிந்திருந்தது, வெண்மைநிற யானை
சேற்றில் விளையாடியதுபோல் இருந்தது.

121
யானை தந்தத்தினால் தாமரையைத் தாங்கி வருவதுபோல், தெற்றிப்
பற்களால் பூமியைத் தாங்கிவந்தார். முனிவர்களும் ப்ரும்மாவும் இரு
கரங்களையும் சிரமேற்குவித்து வேதமந்திரங்களால் பகவானைத் துதித்தனர்.

யக்ஞவராஹத்தின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் விளங்கும் வேள்வியின்


அங்கங்களை விரிவாகக் கூறி மிகவும் விரிவாகத் துதி செய்தனர். பலவிதமாக
பகவானை அவர்கள் துதி செய்ய, பகவான் அவற்றைக்‌கேட்டுக்கொண்டே,
பூமியை அதனிடத்தில் வைத்துவிட்டு மறைந்தார்.

அனைத்து ஜீவன்களின் துன்பங்களையும் களையும் பகவான் ஸ்ரீ ஹரியின்


மனம் கவரும் இத்திருவிளையாடலைச் சொல்பவர், கேட்பவர் ஆகியோரிடம்
பகவான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். ஒருவர் பகவானை மகிழ்ச்சி கொள்ளச்
செய்துவிட்டால், அவருக்கு என்னதான் கிடைக்காது? அவருடைய
விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேறெதிலும்
விருப்பமில்லாதவருக்கு, பகவான் தன்னையே தந்து விடுகிறார். இறைவனது
திருவிளையாடல்களைக் கூறும் கதைகள்‌ நம்மைப் பிறப்பு இறப்புச்
சுழலிலிருந்து விடுவிக்கின்றன.

*ஸ்ரீமத் பாகவதம் - 69*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 13*

வராஹ அவதார கதையைக் கேட்ட விதுரர், மேலும் ஸ்ரீ ஹரியின்


லீலைகளைக் கேட்க விரும்பி, மைத்ரேயரிடம் கேட்டார்.

முனி ஸ்ரேஷ்டரே, யக்ஞவராஹ மூர்த்தியினால், ஹிரண்யாக்ஷன்


கொல்லப்பட்டான் என்று சொன்ன ீர்கள். பகவானுக்கும் அவனுக்கும் ஏன் போர்
மூண்டது? என்ன காரணம்? விளக்கிக் கூறுங்கள் என்றார்.

மைத்ரேயர் சொல்லத் துவங்கினார்:

விதுரரே, உங்கள் கேள்வி மிகவும் ஆழமானது. மனிதர்களின் யமபயத்தை


நீக்க வல்ல ஸ்ரீ ஹரியின் அற்புதமான லீலையைக் கேட்கிறீர்கள்.

ஸ்வாயம்புவமனுவின் புதல்வரான உத்தானபாதனின் மகன் துருவன் என்பவர்


பகவானின் கதைகளைக்கேட்டு, அதன் மகிமையால் யமனின் தலையில் கால்
வைத்து ஏறி த்ருவபதம் பெற்றார்.

இந்தக் கதையை தேவர்களுக்கு ப்ரும்மா கூறினார்.

ஒரு சமயம் கச்யபர், ஸ்ரீமன் நாராயணனை அக்னிஹோத்ரத்தினால்


ஆராதனை செய்துவிட்டு தியானத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது, தக்ஷ ப்ரஜாபதியின் மகளான திதி என்பவள், தன் கணவரான


கச்யபரிடம் காமத்தினால் சென்று மாலை வேளையில் அவரோடு
இன்புற்றிருக்க விரும்பினாள்.

கச்யபர் அவளைப் பார்த்து, மிகவும் பொறுமையுடன் கூறினார்.

122
நீ விரும்பியவாறு செய்கிறேன். ஒருவன் மனைவி மூலம்தான் அறம்,
பொருள், இன்பம் ஆகிய முப்பேறுகளைப் பெறுகிறான். அப்படியிருக்க,
மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்க முடியுமா?

*இல்லறத்தான்* மற்ற மூன்று ஆசிரமத்தில் ஒழுகுபவர்களையும் ஆதரித்து,


இல்வாழ்வில் விருந்தோம்பல் எனும் உயர்ந்த கடைமையாற்றி அதன்
மூலமே பிறவிக்கடலைக் கடந்து விடுகிறான்.

மனைவி மீ து இல்லறக் கடமைகளைச் சுலபமாக ஏற்றிவிட்டு கணவன்


நிம்மதியாகத் திரிகிறான். இல்லறத்தான் மனைவியின் துணையோடு,
பொறிகளையும் அடக்கி ஆள்கிறான்.

உன்னைப் போன்ற மனையாள் செய்யும் உதவிக்கு, என்னைப் போன்ற


நற்குணசீலர்கள்கூட, எத்தனை பிறவி எடுத்தாலும் கைம்மாறு செய்ய
இயலாது.

ஆனால், இப்போது மாலை வேளை. மாலை வேளையில் பரமேஸ்வரன், தம்


பூதகணங்களோடு நந்திமேலேறி வலம் வருகிறார்.

இந்நேரத்தில் கூடுவது தவறு. எனவே, நல்ல முஹூர்த்தம் வரும் வரை சற்று


பொறுத்திரு.

பரமேஸ்வரன் நமக்கு உறவினர்தானே என்று நினைத்துவிடாதே. அவர்


மாயைத் திரையைக் கிழித்து அற்ப சுகங்களை வெறுத்தவர். அனைவரும்
அவர் புகழைப் பாடுகின்றனர். மிகவும் பெருமை வாய்ந்தவர். என்றாலும்,
யாராலும் விரும்பத்தகாத வேஷத்தை வேண்டுமென்றே ஏற்றிருக்கிறார்.

நாய்க்கிரையாகும் இவ்வுடலை அறிவிலிகள் தான் 'ஆத்மா' என்று எண்ணி,


நல்லாடைகள், நறுமணப்பூச்சுக்கள், அணிகலன்கள், பகவான் மற்ற அனைத்து
போகப்பொருள்களும் கொண்டு அழகு செய்து கொண்டு
மகிழ்ச்சியடைகின்றனர்.

"அவையெல்லாம் இந்தப் பாம்புகள் போன்றவை என்று வெளிக்காட்டவே


பரமேஸ்வரன் பாம்புகளை அணிந்துகொள்கிறார்."

"அவர் ப்ரபஞ்சத்தின் காரணர் ஆவார். (ஹரியும், சிவனும் ஒன்று என்பதாக)


அவரது திருவிளையாடல்கள் நம் அறிவுக்கெட்டாதவை"
என்று அழகாக எடுத்துரைத்தார்.

கணவர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாமல், பொறிகளின் வசம்


ஆட்பட்ட திதி, கச்யபரைப் பிடித்திழுத்தாள்.

தவறான செயலுக்கு தம்மையும்‌பிடிவாதமாய் இழுப்பது கண்டு, கச்யபர் இது


விதி வழியென்று நினைத்து, அவள் விருப்பத்திற்குட்பட்டார்.

பின்னர் நீராடி, மூச்சையும் பேச்சையும் விடுத்து, தனிமையில் ப்ரும்மத்தை


த்யானம் செய்து காயத்ரி ஜபம் செய்யத் துவங்கினார்.

123
*ஸ்ரீமத் பாகவாதம் பதிவு 70 கதை கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் பதிவு
செய்யப்படும்.*

ஸ்ரீமத் பாகவதம் - 71*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 15*

_*சுழலும் தாமரை*_

காதலியின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும் காதலர் மனம்


துள்ளுவதுபோல், பகவானின் தொடர்புடைய சிறு பொருளைக் கண்டாலும்
பக்தர் மனம் எழும்பிக் குதிக்கும்.

வைகுந்த வாசலை அடைந்துவிட்ட ஸனகாதியரின் மனநிலையை எப்படிச்


சொல்வது?

அங்கிருக்கும் எந்த அற்புதப்பொருளின் மீ தும் அவர்களது கவனம்


செல்லவில்லை. ஓட்டமும் நடையுமாக, ஆனந்தக் கண்ண ீரோடு,
ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு ஆறு வாயில்களைக் கடந்துவிட்டனர்.

ஏழாவது வாயில் அருகே வந்தாயிற்று..

ரத்தினங்கள் பதித்த தகதகக்கும் தங்க வாயில்..

ஆச்சு.. இதோ இன்னும் இரண்டு நிமிடத்தில்..

இந்த வாசலைத் தாண்டினதும் பகவத் தரிசனம்..

ஆஹா..

நினைக்கும்போதே மேனி சிலிர்த்தது..

ஒரே ஓட்டம், தாண்டப்போனால், சட்டென்று குறுக்கே தங்கப் பிரம்புகள்.

ஒன்றும் புரியவில்லை. மீ ண்டும் போக முயற்சித்தால் மறுபடி


தடுக்கப்பட்டனர்.

ஐந்து வயது பாலகர் உருவத்தில் இருப்பவர்கள், திகம்பரர்கள், பரம பக்தர்கள்.


ஆர்வத்தினால் எதையும் கவனியாதவர்கள்; எங்கும் எதிலும் ஒரே
விஷயத்தையே காண்பவர்கள்; தங்கு தடையின்றி எல்லா இடங்களுக்கும்
செல்பவர்கள்; தாங்கள் தடுக்கப்படுகிறோம் என்றதும் சட்டென்று சினம்
வந்துவிட்டது. யாரென்று நிமிர்ந்து பார்த்தால், நெடிதுயர்ந்த பெரிய
உருவங்கள்; பகவானை ஒத்த திருமேனி; விலையுயர்ந்த ஆபரணங்கள்;
குண்டலங்கள், கிரீடங்கள், கையில் கதை. நீலமேனியர்கள், நான்கு
திருக்கரங்கள், கழுத்தில் தவழும் வனமாலை. கண்கள் சிவந்து, சற்றே சினந்து
காணப்பட்டனர்.

124
ஸனகாதியர் அவ்வாறு தடுக்கப்பட வேண்டியவர்கள் அல்லர். பகவத்
தரிசனத்திற்கு வந்த இடையூறு கண்டு ஒரே ஒரு கணம் சினந்ததில்,
வார்த்தைகள் சீற்றமாய் வந்து விழுந்தன.

பகவானிடம் பயன் கருதாது பக்தி செய்பவர்க்கே வைகுந்த வாசம்‌கிட்டும்.


அவர்களிடம் தீய குணங்களே இராது. அப்படியிருக்க உங்களுக்கு
இறைவனைச் சந்திக்க வருபவரைத் தடுக்கும் புத்தி எவ்வாறு ஏற்பட்டது?

நீங்கள் உண்மையான பகவத் பக்தர்களாயிருப்பின் எங்கள் மீ து சந்தேகம் வந்து


தடுத்திருக்கமாட்டீர்.

பகவானைச் சேர்ந்தவர்கள் அனைவரிடமும் அவனையே காண்கின்றனர்.


நீங்கள் எங்களை வேறாகப் பார்ப்பதாலேயே தடுத்தீர். பார்ஷதர்களாயினும்
உண்மைப் பொருளை உணராது நிற்கிறீர்.

வேற்றுமை எண்ணம் இருப்பதால், வைகுந்தத்தை விடுத்து காம, க்ரோத,


லோப மோஹம் நிறைந்த அசுரப் பிறவிகளாகக் கடவர்கள்.
ீ இது உங்களுக்கு
நன்மையே பயக்கும்.

இதுவரை எந்த அஸ்திர- சஸ்திரத்தாலும் தடுக்கமுடியாத அந்த பகவத்


பார்ஷதர்கள் சாபத்தைக் கேட்டு நடுநடுங்கிப் போனார்கள்.

சட்டென்று அவர்களது பாதங்களில் வழ்ந்தனர்.


ஐயன்மீ ர்! எங்கள் தவறுக்கு ஏற்ற தண்டனைதான் இது. பகவானின் கருத்தை


அறியாது தடுத்துவிட்டோம். எங்கள் பாவங்கள் தாங்கள் தந்த தண்டனையால்
தீரட்டும். எங்கள் மீ து சற்றே பரிதாபம் கொண்டு, ஒரே ஒரு க்ருபை
செய்யுங்கள். நாங்கள் எந்த லோகத்தில் எவ்வளவு கீ ழ்த்தரமான
பிறவியுற்றாலும், இறைவனின் நினைவு எங்களை விட்டு அகலாமல்
இருக்கவேண்டும்.

இவ்வளவையும் அறிந்த கபட நாடக ஸூத்ரதாரியான பகவான் திருமகளுடன்


அங்கு வந்தார்.

அவர் வரும் முன்னரே திருவடிக் கமலங்களில் திருமகள் அர்ச்சனை செய்த


துளஸியின் கந்தம் முன்னறிவிப்பு செய்ய, புளகாங்கிதம்‌ அடைந்து
மூர்ச்சையடைந்தனர் முனிவர்கள்.

பின்னர் மூர்ச்சை தெளிந்து, இதுவரை இதயத் தாமரையில் கண்டு


கொண்டிருந்த பகவான் இப்போது ஸனகாதியரின் கண்களுக்கு விருந்தாக
எதிரே..

பார்ஷதர்கள் வெண்கொற்றக்குடை பிடிக்க, ராஜஹம்ஸத்தின் இறக்கைகள்


போல இருமருங்கும் சாமரங்கள் வச,

வெண்கொற்றக்குடையின் முத்துக்கள், சந்திரனிலிருந்து அமுதம்


சொட்டுவதுபோல் காற்றில் இங்குமங்கும் அசைய..

125
என்னே ஒரு காட்சி!

நீலத்திருமேனி, மார்பில் தங்க ரேகையாய் ஒளிரும் திருமகள்,

அழகிய உருண்ட இடுப்பில் பீதாம்பரம், அரையில் கனக மேகலை, வண்டுகள்‌


சூழ்ந்து பாடும் வனமாலை, திருக்கைகளில் கங்கணங்கள்,

மின்னொளியை விஞ்சும் மகர குண்டலங்கள், அதை விஞ்சும் பளபளக்கும்


கன்னங்கள், எடுப்பான அழகிய நாசி, கண்ணைப் பறிக்கும் அழகிய
திருமுகமண்டலம், அழகிய முத்துமாலைகள், மார்பில் கௌஸ்துப மணி,
அவரது ஒளியால் வைகுந்தம் மேலும் அழகுபெறுகிறது.

ஒரு கையை கருடனின் தோளில் ஊன்றிக் கொண்டு, மறு கையால் தாமரை


மலரைச் சுழற்றிக் கொண்டு வருகிறார்.

போதுமென்றே தோன்றாமல் பார்க்கத் தூண்டும் திருமேனியழகு. சட்டென்று


தலைதாழ்த்தி வணங்கினார்கள் ஸனகாதியர்.

அதென்ன? தாமரைப்பூவைச் சுழற்றுவது?

*ஸ்ரீமத் பாகவதம் - 72*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 16*

_*பகவானின் விநயம்*_

தம்மை வைகுந்த வாயிலில் தடுத்த பார்ஷதர்களான ஜெய விஜயர்களை


ஸனகாதிகள் அசுரர்களாகும்படி சபித்தனர்.

ஸகல ஜீவர்களின் அந்தராத்மாவாக விளங்கும் பகவானுக்கு வாசலில்


நடப்பது தெரியாதா.. எல்லாம் முடிந்தபின்னர், தாமரைப் பூவைச்
சுழற்றிக்கொண்டு வந்தார். அவரது திருவிளையாடலுக்கு வேறு யார் வசனம்
எழுத இயலும்? புதிய அவதாரங்களுக்காக விதை போட்டவர் அவரே..

பகவானின் அத்யந்த பக்தர்களான பார்ஷதர்களுக்கு வந்திருப்பவர்களைப்


பற்றித் தெரியாதா? அப்படித் தெரியாதவர்கள் பார்ஷதர்கள் ஆக முடியுமா?
ஸனகாதியர் பெரும் ஞானிகள். அவர்களுக்கும் ஒரு இடத்திற்குப் போனால்,
அங்குள்ள வழிமுறைகளை பின்பற்றவேண்டும் என்று தெரியாதா?
வாயிற்காவலரின் வேலை வருபவர்களை விசாரிப்பது என்று
அறியாதவர்களா? இரு பக்கமும் அவர்கள் தன்னிலை இழந்து இப்படி
நிகழ்ந்ததன் காரணம் என்ன?

அனைவரின் ஹ்ருதயத் தாமரைகளையும் ஆட்டுவிப்பவன் நானே என்பதாக


தாமரையைச் சுழற்றிக்கொண்டு வந்தார் போலும். அதற்கேற்றபடியே பேசவும்
செய்கிறார். பகவானைப் பார்த்ததும் ஸனகாதி முனிவர்கள் பிறந்த பயனை
அடைந்ததாக மகிழ்ந்தனர். துதி செய்யத் துவங்கினர்.

முதலும் முடிவுமற்ற இறைவா! நல்லோர் தீயோர் அனைவர் மனதிலும்


விளங்கும் அந்தர்யாமி தாங்களே. ஆனால், ஸ்வரூபத்தை மறைத்துக்

126
கொள்கிறீர்கள். எங்கள் தந்தையான ப்ரும்மா, தங்களைப் பற்றிய
தத்துவங்களை எங்களுக்கு உபதேசித்தார். அப்போதே எங்கள் ஹ்ருதயத்தில்
வந்து அமர்ந்து விட்டீர்கள்.

இன்று பரம ஸத்வ ரூபமான தங்களை தரிசிக்கும் பேறு பெற்றோம். யான்


எனது என்ற அஹங்காரத்தையும், விருப்பு வெறுப்பையும் விட்ட
முனிவர்களும் பக்தி யோகத்தின் வாயிலாகவே தங்களின் இந்த ரூபத்தைக்
காண்கிறார்கள். நாங்கள் இதற்கு முன் செய்த பாவங்களால் நரகவாசம்
கிட்டினாலும் பரவாயில்லை. ஆனால், எப்போதும் எங்கள் மனம் வண்டு போல்
தங்கள் திருவடித் தாமரைகளையே சுற்றவேண்டும். எங்கள் வாக்கு
தங்களையே பாடவேண்டும். செவிகள் தங்கள் திருப்புகழையே
கேட்கவேண்டும். தங்களைத திரும்பத் திரும்ப வணங்குகிறோம்.
இதைக்கேட்ட பகவான் மிகவும் மகிழ்ச்சியடைந்து கூறலானார்:

முனிவர்களே! என் பார்ஷதர்கள், என் எண்ணம் அறியாது, தங்களுக்கு


அபச்சாரம்‌ செய்து விட்டனர். உங்களை அவமதித்த இவர்களுக்கு நீங்கள்
விதித்த தண்டனை உகந்ததே. உங்களுக்கு இழைக்கப்பட்ட அபச்சாரம்
உண்மையில்‌ எனக்கிழைத்ததாகும். அவர்கள் சார்பாக நான் உங்களிடம்‌
மன்னிப்பு வேண்டுகிறேன்.

வேலையாள் செய்த தவறை எஜமானனின் குற்றம் என்று தான் பொதுமக்கள்


சொல்வார்கள். அது யஜமானனின் நற்பெயரை அழித்துவிடும்.
அந்தணர்களிடம் அபசாரப்படுபவர்களை நான் வெறுக்கிறேன்.

நான் உங்களைப்போன்ற முனிவர்களுக்குச் செய்யும் பணிவிடையால்தான்


என் திருவடிகளுக்கு இவ்வளவு மகிமை. திருமகளும் என்னைவிட்டு
அகலாமல் இருக்கிறாள். வேள்விகளால் நான் நிறைவு பெறுவதில்லை.
தங்களைப்போன்ற பக்தர்கள் நல் உணவைப் புசித்தால் ஒவ்வொரு
பிடியையும் நானே உண்பதுபோல் மனநிறைவு அடைகின்றேன்.

யோகமாயையின் எல்லையற்ற சக்திகள் அனைத்தும் எனக்கடிமை. ஆனால்


நானோ, தங்களைப் போன்ற அடியார்களின் திருவடித் தூளியை என் சிரசில்
தாங்குகின்றேன்.

அந்தணர்களும், பசுக்களும், காப்பவர் அற்றுத்திரியும் ஸகல ப்ராணிகளும் என்


திருமேனியே ஆகும். அவற்றை என்னிடமிருந்து வேறாய்க் காண்பவர்களை
யமதூதர்கள் கிழிப்பார்கள்.

என் பார்ஷதர்கள் தவறை உணர்ந்து வணங்கி நிற்கிறார்கள். அவர்கள்


சாபத்திலிருந்து சீக்கிரமாக விமோசனம் அடையவேண்டும். அதற்கு நீங்கள்
தயை கூர்ந்து அருள் புரிய வேண்டும்.

ஈரேழு லோகங்களையும் அதன் ஜீவன்களையும் படைக்கும் பகவான், எப்படி


தான் என்ற எண்ணம் துளியும்‌இல்லாமல் தன் பக்தர்களிடமே விநயமாய்ப்
பேசுகிறான்!

ப்ரும்மா மேலும் சொல்கிறார்:

127
தேவாதி தேவனைக் கண்டதுமே ஸனகாதியரின் சினம் மறைந்துவிட்டது.
அவர் அந்தணர்களைப் புகழ்ந்து பேசியதும் என்ன செய்வதென்று புரியாமல்
திகைத்து நின்றனர். பின்னர் உடல் புல்லரிக்க, கைகூப்பிய வண்ணம்
பகவானைப் பலவாறு துதி செய்தனர். பின்னர், தாங்கள் இந்த பார்ஷதர்களுக்கு
வேறு தண்டனையளித்தாலும் சரி, அல்லது தங்களிடமே
வைத்துக்கொண்டாலும் சரி, இவர்களைச் சபித்ததற்காக எங்களுக்கு ஏதேனும்
தண்டனை அளித்தாலும் சரி. எதுவாயினும் ஏற்கிறோம் என்றனர்.

பகவான் சொன்னார்: அந்தண ஸ்ரேஷ்டர்களே, தாங்கள் இவர்களுக்கு அளித்த


தண்டனை முன்பே நிச்சயிக்கப்பட்டது. தாங்கள் வருந்த வேண்டாம். இவர்கள்
அசுரப் பிறப்பை அடைந்து என்னையே ஒருமுகமாய் நினைத்து விரைவில்
என்னை அடைவார்கள். அதன்பின் ஸனகாதியர் பகவானை மீ ண்டும் வணங்கி
விடை பெற்றுக்கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் பகவான் ஜெய விஜயர்களைப் பார்த்து, நீங்கள்


பயமின்றிச் செல்லுங்கள். நீங்கள் வாயிற்காவல் பணியில் இருப்பதால்
உங்கள் கடைமையைத் தான் செய்தீர்கள். நான் எல்லாம் வல்லவன் ஆயினும்,
அந்தணர்களுடைய சாபத்தை மாற்ற விரும்பவில்லை. முன்பு நான் யோக
நித்திரையில் இருந்தபோது, மஹாலக்ஷ்மியை இவ்வாறு தடுத்தீர்கள்.
அப்போது அவளும் இதே சாபத்தை அளித்தாள். எனவே, அசுரராய்ப் பிறந்து
என்னிடம் பகைமை கொண்டு வேறு எண்ணமே இல்லாமல் என்
தியானத்திலேயே இருங்கள். அதுவே யோகமாகி, பாவம்‌ நீங்கப் பெற்று
என்னை அடைவர்கள் ீ என்று அவர்களுக்கு ஆறுதல் தரும் வண்ணம்
கனிவுடன் பேசிவிட்டு, தன் இருப்பிடம்‌சென்றார்.

சமயத்திற்குத் தக்கவாறு, எதிரிலிருப்பவரின் மனோபாவம் தெரிந்து


ஆறுதலாய்ப் பேசும் கலை பகவானுக்கே உரியது.

ஸமயானிகி தகு மாடலாடனே - ஸ்ரீ ஸ்ரீ தியாகராஜர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 73*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 17*

_*பார்ஷதனா? அசுரனா?*_

ஸனகாதியரின் சாபம் பெற்ற ஜெய விஜயர்கள் தங்கள் சோபையையும்


பெருமையையும்‌ இழந்தனர். அவர்கள் வைகுண்டத்திலிருந்து கீ ழே
விழும்போது அத்தனை தேவர்களும் திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள்தான் இப்போது கச்யபர் மூலமாக திதியின் வயிற்றில் உள்ளனர்.
அவர்களுடைய தேஜஸால் உங்கள் அனைவரின் தேஜஸும்‌மங்கியுள்ளது.
இவ்விஷயத்தில் பகவான் தலையிட்டு அனைவர்க்கும் நன்மை புரிவார்.
கவலை வேண்டாம் என்று ப்ரும்மா சொன்னதும், தேவர்கள் கலைந்து
ஸ்வர்கம் சென்றனர்.

மைத்ரேயர் மேலும் கூறத் துவங்கினார்:

திதி தேவி நூறாண்டுகள் கழித்து இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்.


அப்போது எல்லா லோகங்களிலும் ஏராளமான தீய சகுனங்கள் தோன்றின.

128
அவற்றைக் கண்டு ஸனகாதியர் தவிர மற்ற அனைத்து லோகங்களில்
உள்ளோரும் பயந்து போனார்கள்.

அந்த அசுரர்கள் இருவரும் பிறவியிலேயே மிகுந்த பராக்கிரமமும், பாறை


போன்ற உடலும் கொண்டு மலை போல் வளர்ந்தனர். இருவரும்
இரட்டையர்கள்.

மூத்தவனுக்கு ஹிரண்யகசிபு என்றும் இளையவனுக்கு ஹிரண்யாக்ஷன்


என்றும் பெயரிட்டார் கச்யபர்.

ஹிரண்யகசிபு தன் பராக்கிரமத்தாலும், தபோ வலிமையாலும்


மூவுலகங்களையும் லோகபாலர்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு மிகுந்த
செருக்குடன் அலைந்தான்.

தம்பியான ஹிரண்யாக்ஷன் அண்ணன் மேல் ‌மிகுந்த பிரியம்‌ கொண்டு


அவனுக்குப் பிடித்தவற்றையே செய்தான். போரில் மிகுந்த விருப்பம்
கொண்டவனாக கையில் கதையேந்திக் கொண்டு அமரலோகம் சென்றான்.

மலை பெயர்ந்து வருவது போல் வரும் அவனைக்‌கண்டு தேவர்கள் அஞ்சி


ஒளிந்தனர். அவர்கள் ஒளிவதைக் கண்ட ஹிரண்யாக்ஷனுக்கு கர்வம்
அதிகரித்தது. பெரிய கர்ஜனை செய்துகொண்டு, ஸ்வர்கத்தை விட்டுக்
கிளம்பினான்.

நீர் விளையாட்டு விளையாட எண்ணி ஸமுத்திரத்தில் மதயானை போல்


குதித்தான். நீர்வாழ் பிராணிகள் அனைத்தும் பயந்து நடுங்கி வெகு
தொலைவில் ஓடின. அவன் நீரை அளைவதால் ஆர்ப்பரிக்கும் அலைகளை
கதையால் ஓங்கி அடித்தான்.

சண்டை செய்ய யாருமின்றி சுற்றித் திரிந்தவன், வருணனின் தலைநகரமான


விபாவரி பட்டணத்தை அடைந்தான். அங்கு சென்று அசுரலோகத்தின்
தலைவனான வருண தேவனைப் பரிஹாசம் செய்ய எண்ணி, ஒரு
பணியாளன் போல், அரசே! தாங்கள் ராஜசூய வேள்வி செய்து அனைத்து
அரசர்களையும் வெற்றி கொண்டீர்கள். லோகபாலராகவும், பெரும் புகழ்
பெற்றீர்கள். எனக்குப் போர்ப் பிச்சை அளிக்கவேண்டும்!
என்றான்.

வருண தேவர் பொங்கியெழுந்த கோபத்தை அடக்கிக்கொண்டு,


பொறுமையாக,

நண்பனே! நான் ஓய்வு பெற்றுக்கொண்டு விட்டேனே. உனக்கு இணையாகப்


போர் செய்யத் தகுந்தவர் பகவான் மஹாவிஷ்ணுவே ஆவார். அவரைத் தவிர
வேறு எவரும் உன்னோடு சமர் செய்யத் தகுந்தவர் அல்லர். நீயோ பெரும்
போர் வரன்.
ீ எனவே, அவரைத் தேடிச் செல். அவர் உன்னை வெற்றி கொண்டு
உன் செருக்கை அழிப்பார் என்றார்.

உனக்கீ டாக சண்டை செய்ய ஒருவர் உள்ளார் என்பதைக் கேட்ட


ஹிரண்யாக்ஷன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். வேறெதையும் கவனிக்காமல்

129
நாரதரைப் பிடித்து மிரட்டி, ஸ்ரீ ஹரி பாதள லோகம் வந்திருக்கிறார் என்று
அறிந்து கொண்டான்.

பாதாள லோகத்தில் ஸ்ரீ ஹரியைத் தேடியலைந்த ஹிரண்யாக்ஷன் அங்கு


தன்னால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியைத் தன் தெற்றிப் பற்களின்
நுனியால் தாங்கிக்கொண்டு ஒரு வராஹம் மேலெழுவதைக் கண்டு மிகுந்த
சினம் கொண்டான். பகவானைக் கண்டதும் ஹிரண்யாக்ஷன் பலவாறு கத்த
ஆரம்பித்தான்.

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நிந்தனை போல் தோன்றினாலும், அவை


உண்மையில் ஸ்துதிகளே. அவற்றில் உதாரணத்திற்கு ஒன்று.

ஆஹைநமேஹ்யக்ஞ மஹீம் விமுஞ்ச நோ


ரஸௌகஸாம் விஶ்வஸ்ருஜேயமர்பிதா|
ந ஸ்வஸ்தி யாஸ்யஸ்நயா மமேக்ஷத:
ஸுராதமாஸாதிதஸூகராக்ருதே||

மேலோட்டமாகப் பார்த்தால், அறிவில்லாதவனே! இங்கு வா! இந்த பூமி


பாதாளவாசிகளுக்காக ப்ரும்மதேவரால் பரிசாகக் கொடுக்கப்பட்டது. காட்டுப்
பன்றி உருவில் வந்த தேவர்களில் கடையனே! நான் பார்த்துக்
கொண்டிருக்கும்போது நீ இந்த பூமியை எடுத்துக் கொண்டு சுகமாகச்
செல்லமுடியுமா?

இதன் உண்மைப் பொருளாகப் பெரியோர் சொல்வது, எவரைக் காட்டிலும்


மேலான அறிவாளி ஒருவர் இல்லையோ, அத்தகைய மேதாவியே! தேவர்கள்
அனைவரும் எவரைக் காட்டிலும் கடையர்களோ, அத்தகைய தலைவரே! தன்
விருப்பத்தினால் விளையாட்டாக காட்டுப்பன்றி உருவை எடுத்தவரே! நான்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீங்கள் இந்த பூமியையும், பரந்த அரசையும்
அடைவது நிச்சயம். இதில் சந்தேகமே‌ இல்லை. ஆனால், தயை கூர்ந்து
பூமியை எங்களுக்காகத் தந்துவிடுங்கள்..

அசுரனாயிருந்தாலும் பார்ஷதனாயிருந்ததால், இகழ்வது போல் பேசி


பகவானைப் புகழ்ந்து பேசுகிறான் ஹிரண்யாக்ஷன்.

130
*ஸ்ரீமத் பாகவதம் - 74*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 18*

ஹிரண்யாக்ஷனுக்கும் பகவானுக்கும் சமர் மூண்டது.

ப்ரும்மா தேவகணங்களுடன் அங்கு வந்து, 'ப்ரபோ, இவன் மிகுந்த


பலசாலியாய் இருக்கிறான். தன் பலத்தினால் பெருகும் கர்வத்தினால்
அனைவரையும் துன்புறுத்துகின்றான். இப்போது 'அபிஜித்' என்ற புண்ய காலம்
வந்துவிட்டது. நீங்கள் விளையாட்டாகச் சமர் செய்தது போதும். இவனைக்
கொன்று விடுங்கள்' என்று வேண்டினார்.

ஹிரண்யாக்ஷன் கதை, சூலம் முதலியவற்றைக் கொண்டு தாக்கினான்.


பகவான் அவற்றையெல்லாம் விளையாட்டாகப் பிடித்தார்.

ஹிரண்யாக்ஷன் ஓடிவந்து பகவானது அகன்ற திருமார்பில் ஒரு குத்து


விட்டான். யானையைப் பூமாலையால் அடிப்பதுபோன்று அவர் அசையாமல்
நின்றார்.

மிகவும் விரிவாக இப்போரை வர்ணிக்கிறார் மைத்ரேயர்.

ஹிரண்யாக்ஷன் பற்பல மாயைகளை ஏவினான். பகவான் அனைத்தையும்


தகர்த்தெறிய சக்கரத்தை ஏவினார். கடைசியில் விளையாடியது போதும்
என்று நினைத்தவராக, அவனை விளையாட்டாக ஒரு அடி வைத்தார்.
இரண்யாக்ஷன் தலை சுற்றியது. முழி பிதுங்கியது. வேரற்ற மரம்போல்
விழுந்தான்.

அப்போது பகவான் தன் திருவடியால் அசுரனை உதைக்க, யோகிகளும்


ஆசைப்படும் நிலையை ஹிரண்யாக்ஷன் அடைந்தான். பகவானது
திருமுகத்தை பார்த்துக் கொண்டே உயிரை விட்டான்.

சூழ்ந்து நின்றிருந்த தேவர்கள் அனைவரும் துதி செய்ய பகவான்


வைகுண்டத்தை அடைந்தார்.

இந்த வராஹமூர்த்தியின் திருவிளையாடலைக் கேட்பவர்கள் ப்ரும்மஹத்தி


முதலிய எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றார்கள்.

'இச்சரித்ரம் மிகவும் பவித்ரமானது. செல்வத்தையும், புகழையும் அளிப்பது.


ஆயுளை வளர்ப்பது. இதைக் கேட்பவர்களுக்கு பிறவியின் முடிவில்
வைகுண்டம்‌கிட்டும்'
என்று பலவிதமான பலச்ருதிகளைக் கூறினார் மைத்ரேயர்.

இதன் பின் ப்ரும்மாவின் படைப்புகளைப் பற்றி விதுரர் மீ ண்டும் வினா எழுப்ப,


மிக விரிவாக ப்ரும்மாவின் ஒவ்வொரு படைப்பு தோன்றும் விதத்தையும்
விளக்கினார் மைத்ரேயர்.

அதன் பின் மனுவின் வம்சம் பற்றிக் கேட்டார் விதுரர்.

131
ஸ்வாயம்புவ மனுவிற்கு மூன்று பெண்களும், இரண்டு ஆண் மகவுகளும்
பிறந்தன என்று முன்னமே கூறின ீர்கள். அவர்களைப் பற்றிக் கூறுங்கள்.
மஹாயோகியான கர்தமருக்கு ஸ்வாயம்புவமனு தேவஹூதி என்ற தன்
பெண்ணை மணம் செய்து கொடுத்தார் என்றும் சொன்ன ீர்கள். மற்ற
பெண்களான, ஆகூதி, ப்ரஸூதி ஆகியவர்களின் சந்ததிகள், ப்ரியவிரதன்,
உத்தானபாதன் ஆகியோரின் ப்ரபாவங்கள் ஆகியவற்றைக் கூறுங்கள்.

மைத்ரேயர் சிரித்துக் கொண்டே கூறலானார்:

கர்தம ப்ரஜாபதி ப்ரும்மாவின் நிழலிலிருந்து தோன்றினார் என்று முன்னமே


பார்த்தோம்.

அவரிடம் ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யும்படி ப்ரும்மா கூறினார்.

கர்தமர் ஸரஸ்வதி நதி தீரத்தில் வந்து பதினாயிரம் ஆண்டுகள் தவத்தில்


ஈடுபட்டார்.

பகவான் ஸ்ரீ ஹரியை ஒருமுகப்பட்ட மனத்துடன் ஆராதனை செய்தார்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தபின்னர், இறைவனின் தரிசனம்


கிட்டவில்லையென்று ஏங்கித் தவித்தார். பக்தியால் அவரது நெஞ்சம் உருகி,
கண்ணில் வழியும் நேரம், அவரது ஹ்ருதய கமலத்தில் வற்றிருந்த
ீ பகவான்
அவன் கண்முன் தோன்றினார்.

தாமரைக்கண்கள், வெண்தாமரை, நீலத்தாமரைகளால் ஆன மாலை,


பொன்னிற ஆடை, அலைபாயும் கறுத்த குழல், ஒளிவசும்
ீ தங்கக் கிரீடம், மகர
குண்டலங்கள், சங்கு, சக்ரம் கதை முதலிய ஆயுதங்களோடு, ஹ்ருதயம்
கலக்கும் ஆயுதமான தாமரையும் ஏந்தி, புன்னகையோடு கருடன் மேல்
எழுந்தருளினார்.

கருடன் கழுத்தைச் சுற்றியிருந்த திருவடித் தாமரைகளின் அழகில் மனதைப்


பறி கொடுத்தார் கர்தமர். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இறைவனை
வணங்கினார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 75*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 19*

கருடன் மீ தேறி அழகே உருவாக எம்பெருமான் வந்த காட்சியை எவ்வளவு


சொன்னாலும் முழுதும் சொல்ல இயலாது.

கர்தமர் ஆனந்தக் கடலில் மூழ்கினார். இரு கரங்களும் சிரமேற் குவிந்தன.


தழுதழுக்கும் குரலில் பேசத் துவங்கினார்.

ஸர்வேஸ்வரா! ஸத்வ குணமே உருவான தாங்கள் கண்கள் பயனுற தரிசனம்


தந்தீர். பற்பல பிறப்புகளைப் பெற்றும் யோகிகள் மானுடப்பிறவியெடுத்து
தங்களது இந்த தரிசனத்தைக் காணவே விரும்புகின்றனர்.

132
இந்த ஸம்ஸார ஸமுத்ரத்தை சுலபமாக கடக்க ‌ஒரே சாதனம் தங்களது
திருவடித் தாமரைகளே. அப்படிப்பட்டவற்றைக்‌கண்ட பின்னும் மனிதன் உலக
சுகங்களைக் கேட்கிறான்.

நீங்கள் வேண்டியதனைத்தும் அளிக்கும் கற்பகத்தரு. என் இதயம் காமத்தால்‌


கலங்கியுள்ளது. எனக்கு இல்வாழ்க்கையின் நெறிகளைக் கடைப்பிடித்து
ஒழுகும் ஒழுக்கமான, பக்தியுள்ள பெண்ணை மனைவியாக அருளவேண்டும்.

தாங்களே இவ்வுலகைப் படைத்து, காத்து, முடிவில் உம்மிடமே


அடக்கிக்கொள்கிறீர்கள்.

சிலந்திப்பூச்சி தன்னிடமிருந்து வரும் திரவத்தால் வலையைப் பின்னி


விருப்பம்போல் விளையாடிவிட்டு தன்னுள்ளேயே இழுத்துக்கொள்கிறது.
திரவத்தை வெளியெ விடுவதாலோ, உள்ளிழுத்துக் கொள்வதாலோ அதற்கு
எந்த மாறுபாடும் ஏற்படுவதில்லை. அதுபோல் ப்ரபஞ்சம் உங்களிடமிருந்து
தோன்றும்போதும், அதை நீர் உள்ளடக்கிக் கொள்ளும்போதும், எந்த
மாறுபாடும் இன்றி பூரணராக விளங்குகின்றீர்.

மாயை எனும் சக்தியை ஏவி உலகை ஆட்டிப் படைக்கிறீர்கள்.

உலகியல் இன்பம் விரும்புபவர்களாயினும் சரி, முக்தியை


விரும்புபவர்களாயினும் சரி, நீங்கள் வேண்டுபவர்க்கு வேண்டியவற்றை
அருளுகிறீர்கள் என்று சொல்லி நமஸ்கரித்தார்.

மனதைக் கவரும் புன்னகையோடு பகவான் பேச ஆரம்பித்தார்.

'கர்தமரே! தாங்கள் மனம், பொறிகள் ஆகியவற்றை அடக்கி என்னை


வழிபட்டீர்.‌ தங்கள் எண்ணம் அறிந்து, அதற்கான ஏற்பாட்டை நான் முன்னமே
செய்துவிட்டேன். என்னை வழிபடுவது ஒருபோதும் வணாகாது.

ப்ரும்மதேவரின் புதல்வரான ஸ்வாயம்புவமனு ஏழு தீவுகள்‌ அடங்கிய
இவ்வுலகைக்‌காத்து வருகிறார்.'

'தர்மங்கள் அனைத்தும் அறிந்த ராஜரிஷியாகிய ஸ்வாயம்புவ‌


மனு நாளை
காலை இங்கு வருவார். அவருக்கு அழகும், இளமையும், நற்குணங்களும்,
ஒழுக்கமும் நிறைந்த பெண் இருக்கிறாள். அவளைத் தங்களுக்கு மணம்
செய்துவைப்பார்.'

'அந்த அரசகுமாரி, தங்களுக்கேற்றவள். தங்கள் மனம் போல்


நடந்துகொள்பவள். அவளைத் திருமணம் செய்துகொண்டு,
உலகம்‌போற்றும்படி இல்லறம் நடத்துவர். ீ தங்களுக்கு ஒன்பது பெண்
குழந்தைகள் பிறப்பார்கள். அவர்கள் மரீசி முதலிய மஹரிஷிகளை மணந்து
உலகம்‌போற்றும்‌சந்ததிகளைத் தோற்றுவிப்பார்கள்.'

'கடைசியில் நானும் தங்கள் மகனாக அவதரித்து சாங்க்ய சாஸ்திரத்தை


எழுதப்போகிறேன்.'

'இனிய இல்லறம் அமையப்பெற்று, ஜீவராசிகளிடம் அன்பு காட்டி வாழ்ந்து,


பின் மனத்தையடக்கி உள்ளும் புறமும் என்னையே காண்பீர்'

133
என்று கூறினார்.

பகவானை ஆராதிக்கும் ஒவ்வொரு பக்தர்க்கும் இத்தகைய வாழ்வை அவர்


அனுக்ரஹம் செய்கிறார். மனதை உட்செலுத்தினால் பகவான்
வெளித்தோன்றுகிறார்.

இறைவன் கர்தம மஹரிஷிக்கு அருள் செய்துவிட்டு, அவர் பார்த்துக்


கொண்டிருக்கும் போதே, பிந்துஸரஸ் என்ற அவ்விடத்திலிருந்து கிளம்பி
வைகுண்டம் சென்றார்.

அவர் செல்லும் வழியெங்கும் சித்தர் துதி செய்தனர். கருடனின் இறக்கைகள்


இரண்டும், ப்ருஹத், ரதந்திரம் எனும் ஸாம வேதங்களாகும். அவற்றிலிருந்து
வரும் கானத்தைக் கேட்டுக்கொண்டே பகவான் வைகுண்டம் சென்றார்.

இறைவன் போகும் முன் கர்தமரைப் பார்த்து அன்பொழுக கண்களும்


இதழ்களும் பேச, முறுவலித்துவிட்டுச் சென்றார்.

*ஸ்ரீமத் பாகவதம் - 76*_*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 20*

கர்தமர் பதினாயிரம் ஆண்டுகள் தவம்‌ செய்தும், இறைவனை அடைய


பக்குவம் போதவில்லையே என்று வருந்தினார். அவரது பக்தியை மெச்சி,
அவருக்குக் காட்சி தந்தார் இறைவன்.

பக்தி செய்பவருக்கு தன்னையே தருவதற்கு பகவான் தயாராய் இருக்க, தான்


இல்லறம் நடத்த மனைவி கேட்கிறோமே என்று கூனிக் குறுகினார் கர்தமர்.
இருப்பினும், அவரது தவத்தின் நோக்கம் அதுவே என்பதால், இறைவன் நல்ல
இல்லறத்தையும் அருளி, தானே அவருக்கு மகவாய்ப் பிறப்பதாய் வாக்களித்து
முக்தியும் தருவேன் என்று வாக்களித்துப் போனான்.

கர்தமரின் பக்தியை எண்ணி எண்ணி பகவானும் உண்மையில்


உருகிப்போனார். அவரது கண்களிலிருந்து தன் பக்தரான கர்தமரை நினைத்து
ஆனந்தக்கண்ண ீர் பெருகியது. பகவான் சிந்திய ஆனந்தக்கண்ண ீர் ஒரு
குளமாகி பிந்துஸரஸ் என்றழைக்கப்படுகிறது.

பகவான் கிளம்பிச் சென்றதும்,‌ கர்தமர் பகவான் கூறிய காலத்தை


எதிர்பார்த்திருந்தார். அவர் மனமோ, தான் கண்ட இறைக்காட்சியில்
மூழ்கிப்போயிருந்தது. அப்போது, தங்கத் தகடுகள் வேய்ந்த தேரில்,
ஸ்வாயம்புவ மனுவும், சதரூபையும் மகள் தேவஹூதியோடு அங்கு
வந்தனர்.

நிறைய முனிவர்கள் வசிக்கும் ஸரஸ்வதி நதிக்கரையில் இருந்தது


பிந்துஸரஸ். அதன் நீர் பரிசுத்தமானது. அமுதம் போன்ற சுவையுடையது.
மரம் செடி கொடிகளால் சூழப்பட்டது. பூக்களும், பழங்களும்‌ நிறைந்தது.
வண்டுகளின் ரீங்காரம்‌ எப்போதும்‌ கேட்டுக்கொண்டே இருக்கும். அங்கு
நிறைய விலங்குகள் இருந்தன.

134
மனு செல்லும் சமயத்தில், கர்தமர் தமது அனுஷ்டானங்களை‌ முடித்து
அமர்ந்திருந்தார். வெகுநாட்கள் தவம்‌ செய்திருந்தபடியால்‌ அவரது மேனி
ஒளிப்பிழம்பாகக் காணப்பட்டது.

பகவானைக் கண்டதால், அவர் முகம் மலர்ந்திருந்தது. இதழ்களில்‌


குறுஞ்சிரிப்பு தவழ்ந்தது. நல்ல உயரமானவர். அகன்ற திருக்கண்கள்.
ஜடாமுடி, மரவுரி அணிந்திருந்தார். அவரைக் கண்டதுமே மனத்தைப்
பறிகொடுத்தாள் தேவஹூதி.

தம் இருப்பிடம் நோக்கி வந்த மனுவை வரவேற்று இன்மொழிகளால் பலவாறு


பாராட்டி, உபசரித்தார்.

கர்தமர் தன்னைப் புகழ்வது கண்டு சற்றே வெட்கத்துடன் பேசினார் மனு.


தங்களது உயர்ந்த ஸ்வபாவமும், ஞானமும் தங்கள் பேச்சில் தெரிகிறது.
தாங்கள் அனைத்து தர்மங்களையும் அறிந்திருக்கிறீர். என்னைப் பற்றிச்
சொல்லும் சமயம் ஒரு அரசனது அறநெறிகளை எனக்கு உபதேசம் செய்தீர்.
இது எனது பாக்யம். தங்களின் அனுக்ரஹம் கிடைக்கப்பெற்றேன்.

இவள் என் மகள். தங்களுடைய குணங்கள், ஒழுக்கம், தவம் ஆகியவற்றைப்


பற்றி நாரத மஹரிஷி மூலம்‌ அறிந்தாள். அதுமுதல் தங்களையே
மணாளனாக நிச்சயித்திருக்கிறாள். ஆகவே, அந்தணோத்தமரான தங்களுக்கு
என்‌ மகளைக கன்னிகாதானம் செய்துகொடுக்கிறேன். இவள் தங்கள்
வாழ்க்கை‌
முறை செவ்வனே நடைபெறுவதக்கு உறுதுணையாக இருப்பாள்.
இதுவரை ப்ரும்மசர்யத்தில் இருந்தீர்கள். இனி அப்படி இன்றி இவளை ஏற்று
இனிய இல்லறம் நடத்துங்கள் என்று வேண்டினார்.

கர்தமர் மகிழ்ச்சியோடு தேவஹூதியைப் பற்றித் தான் கேள்வியுற்றவற்றைக்


கூறி, ஒரு நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

இவ்வுத்தமியை திருமணம் செய்து, இவள் வயிற்றில் ஒரு மகன் பிறக்கும்


வரை இல்லறம்‌மேற்கொள்வேன். அதன்பின் பகவான் எனக்கு உபதேசித்தபடி
ஜீவஹிம்சையற்ற துறவறம்‌ மேற்கொண்டு நாராயணனை ஆராதிக்க
விரும்புகிறேன்.

இவ்வாறு கூறிய கர்தமர், கண்களை ‌மூடி ஒரு கணம் மனதில் நாராயணனை


நினைத்து தியானம் செய்து மௌனமானார். நாராயணன் செல்லும் முன்
தன்னைப் பார்த்து கொவ்வைப்பழ இதழ் விரித்துச் செய்த புன்முறுவல்
நினைவுக்கு வந்தது. கர்தமரின் முகம்‌மலர்ந்தது. அவரும் புன்னகை புரிந்தார்.
அப்புன்னகையின் அழகில் மனதைக் கொடுத்த தேவஹூதி, நிபந்தனைகளை
பற்றிக் கவலை கொள்ளாமல், அவரை மணக்க தந்தையிடம் உடனே சம்மதம்‌
தெரிவித்தாள்.

135
*ஸ்ரீமத் பாகவதம் - 77*_*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 21*

ஸ்வாயம்புவ மனு தன் மகள், மனைவி இருவரின் விருப்பத்தையும்


அறிந்துகொண்டு, நற்குணக் கொள்கலனான கர்தம மஹரிஷிக்கு தன் மகளான
தேவஹூதியை மகிழ்ச்சியோடு கன்னிகாதானம் செய்து கொடுத்தார்.

அவளுக்கு விவாஹ காலத்தில் கொடுக்கவேண்டிய அத்தனை சீர்


வரிசைகளையும், ஆபரணங்களையும், குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து
உபகரணங்களையும் மகிழ்ச்சியோடு கொடுத்தார்.

பெண்ணைத் தகுந்த வரனுக்கு திருமணம் செய்து கொடுத்து கவலை நீங்கப்


பெறினும், அவளைப் பிரிவதனால் மிகுந்த மனவருத்தம் கொண்டார்.
பாசத்துடன் நா தழுதழுக்க 'அம்மா, மகளே' என்று கேவிக் கேவி கலங்கி
அழுதார்.

பின்னர் பலவாறு மணமக்களை ஆசீர்வதித்துவிட்டு மனைவியுடனும்,


பரிவாரங்களுடனும் கிளம்பினார்.

கர்தமரிடம் விடைபெற்றுக் கொண்டு ஸரஸ்வதி நதியின் இரு‌ மருங்கிலும்


அமைந்துள்ள முனிவர்களின் ஆசிரமங்களின் அழகை ரசித்துக்கொண்டே தன்
தலைநகரான பர்ஹிஷ்மதி நகருக்குள்‌நுழைந்தார். ப்ரும்மாவர்த்தத்திலிருந்து
தமது அரசன் திரும்பி வருவது கண்டு குடிமக்கள் மகிழ்ந்து
மேளதாளங்களுடன் வரவேற்றனர்.

அனைத்து செல்வங்களும் நிரம்பியது மனுமன்னனின் தலைநகரமான


பர்ஹிஷ்மதி நகரம். ரஸாதலத்திலிருந்து பூமியைத் தூக்கி வந்த யக்ஞ
வராஹமூர்த்தி தன் உடலைச் சிலிர்த்துக் கொண்ட போது அவரது ரோமங்கள்
இங்கு விழுந்தன. அவை பச்சை நிறம் கொண்ட தர்பைகளாகவும்
நாணல்களாகவும் ஆகின. அவற்றைக் கொண்டு முனிவர்கள்‌வேள்விகளுக்கு
இடையூறு செய்யும் அரக்கர்களை விரட்டியடித்தனர்.

மனு இந்த தர்பைகளைப் பரப்பி யக்ஞ புருஷரான நாராயணனை பூஜித்தார்.


அந்த தர்பைகளுக்கு பர்ஹிஸ் என்று பெயர். அந்த நாணல்கள் நிரம்பிய நகரம்
பர்ஹிஷ்மதி.

தன் அரண்மனைக்குள் சென்று தர்மத்துடன் கூடிய வாழ்க்கையை நடத்தினார்.


கந்தர்வர்கள்‌அதிகாலையில்‌அவர் புகழைப் பாடியபோதும், அதில் மனத்தைச்
செலுத்தாமல், ஸ்ரீ ஹரியின் புகழையே மனதார நினைத்தார்.

பகவான் விஷ்ணுவின் புகழையே நினைப்பது, அவரது


திருவிளையாடல்களையே கேட்பது, அதையே நினைத்து நினைத்து
உருகுவது அதைப் பற்றியே எழுதுவது, அதை உலகெங்கும் பரப்புவது என்று
இருந்ததனால், அந்த மன்வந்தரம் முழுவதும் அவரது நேரம் வணாகவே

இல்லை.

136
இவ்வாறு மனு தனது ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்தி
(தூக்கம்) மூன்று நிலைகளிலும், ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய
முக்குணங்களின்‌நிலைகளிலும் பகவானிடமே பக்தி செய்தார்.

இவ்வாறே ஸ்வாயம்புவ மனு தன் 71 சதுர்யுகங்களையும்‌கழித்தார். விதுரா,


பகவான் ஸ்ரீ ஹரியைச் சரணடைவோரை உடல் பற்றிய, விதிப் பயனால்
விளையக்கூடிய, மற்றும் மனிதர்களாலும், ஜீவராசிகளாலும்‌உண்டாகக்கூடிய
துன்பங்கள் என்ன செய்துவிடும்?

அனைத்து ஜீவராசிகளுக்கும்‌ நன்மையைச் சிந்திக்கும் ஸ்வாயம்புவ‌


மனு
முனிவர்களின்‌ வேண்டுகோளுக்கிணங்க அனைத்து வர்ணசிரமங்களின்‌
நியதியை வகுத்தார். அதுவே இன்றும் மனுநீதி என்ற பெயரில்
வழங்கப்படுகிறது.

மிகவும்‌ அற்புதமான மனுவின் சரித்திரம் புண்ணியகரமானது. தொடர்ந்து


அவரது மகளான தேவஹூதியின் கதையைப் பார்ப்போம் என்றார்
மைத்ரேயர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 78*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 22*

மைத்ரேயர் தேவஹூதியின் சரித்திரத்தை சொல்லத் துவங்கினார்.

தனது பெற்றோர் புறப்பட்டுச் சென்றதும், கற்புக்கரசியான தேவஹூதி, தன்


கணவரின் உள்ளத்தைப் புரிந்துகொண்டு, பார்வதி தேவி பரமேஸ்வரனுக்கு
சேவை செய்வது போல் பணிவிடை செய்து வந்தாள்.

மிகுந்த நம்பிக்கை, மனத்தூய்மை, அன்பு கலந்த மரியாதை, தன்னடக்கம்,


பணிவிடை செய்வதில் ஆவல், நட்புணர்வு, இன்சொற்கள், ஆகியவையுடன்
மனதார பணிவிடைகள் செய்தாள். உலகியல் சுகம், கபடு, பகைமை, பேராசை,
கீ ழான ஒழுக்கம், செருக்கு, சோம்பல், ஆகியவற்றைத் துறந்தாள். ஒளியே
திருமேனி கொண்டாற்போல் விளங்கும் கணவரை பணிவிடைகளால்
ஆராதித்தாள். தெய்வத்திற்கும் மேலாகக் கணவரை நினைத்தாள்.

திருமணம் நடைபெற்றதும், கர்தமர் இயல்பாக எழும் பகவத் சிந்தனையினால்


தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். ஸமாதி நிலையில் எவ்வளவு காலம்
இருந்தாரோ தெரியாது. தியானத்தில் இருக்கும் கணவருக்கு இடையூறு
ஏற்படாத வண்ணம் தேவஹூதி பணிவிடைகள் செய்தாள்.

அனவரதமும், அவரைச் சுற்றி சுத்தம்‌ செய்வதும், விசிறுவதும், அவரது


மேனியை பூச்சிகள் தொந்தரவு செய்யாமலும், பார்த்துக்கொண்டாள். உலகப்
ப்ரக்ஞையே இல்லாமல் சிலை போல் அமர்ந்து வெகுநாள்கள்
ஸமாதியிலேயே இருந்தார் கர்தம ரிஷி.

பிறகு ஒருநாள் தியானம் கலைந்தபோது, தன் மனைவியான தேவஹுதியைக்


கண்டார். தனக்குச் செய்யும் பணிவிடைகளாலேயே தவம் கைகூடப்பெற்று,
மிகுந்த தேஜஸ்வினியாக இருந்த தேவஹூதி, நிறைய விரதங்கள் இருந்து
உடல் மெலிந்திருந்தாள்.

137
திருமண காலத்தில் அவளின் அழகையும், இப்போது தனக்குப் பணிவிடை
செய்ததனால் மிகவும் மெலிந்திருந்த தேவஹூதியையும் ஒப்பு நோக்கி அவள்
விஷயத்தில் மிகவும் மகிழ்ந்து மனம் கசிந்தார்.

மனைவியை பார்த்துச் சொன்னார். மனு மஹாராஜனின் மகளான நீ,


என்னிடம் காட்டும்‌ மரியாதை மிக உயர்ந்தது. உயிர் கொண்ட அனைத்து
ஜீவன்களுக்கும் தத்தம் உடலே முக்கியமாய் இருக்க, நீயோ எனக்குப்
பணிவிடை செய்யும் ஆர்வத்தினால் உன் உடலை அலட்சியம்
செய்துவிட்டாய்.

எனது தவம், தியானம், உபாசனை, பக்தி இவற்றால் எனக்குக் கிடைத்த


இறைவனின் அருள் ப்ரசாதங்களான செல்வங்களை உனக்குக் காட்டுகிறேன்.
இவற்றை நான் கேட்கவில்லை. இறைவனே விரும்பி எனக்களித்தவை
இவை. இவற்றில் உனக்கும் பங்கு உண்டு.

இந்த திவ்ய காட்சிகளைவிட உலகில் வேறெதுவும் பெருமை வாய்ந்தது


இல்லை. பகவானின் புருவ நெறிப்பினால் அழியக்கூடியவை உலகியல்
செல்வங்கள். நீ உன் பிறவிப் பயனை அடைந்தாய். உன் கற்பின் பெருமையால்
இறை ப்ராசாதம் உனக்கு கிட்டியது என்றார்.

கணவரின் அன்பான பேச்சைக்கேட்டு வெட்கத்தால் சிவந்த தேவஹூதி, அவர்


யோகசித்திகளிலும், ஸகல கலைகளிலும் வல்லவர் என்று உணர்ந்து
கொண்டாள். அன்பால் தழுதழுத்த குரலில் பேசலானாள்.

தங்களது யோக சித்திகளாலும், தவத்தாலும் பெறப்பட்ட இச்செல்வங்கள்


ஒன்றும் எனக்கு வியப்பளிக்கவில்லை. கற்புக்கரசியான மனைவிக்கு
கணவன் மூலம் பெறப்படும் குழந்தையே பெறும்பேறு.

நமது இல்லறம் செழிக்க நான் பின்பற்ற வேண்டியவற்றைக் கூறுங்கள். நான்


இப்போது பலமற்றவளாக இருக்கிறேன். தங்களுடன் இன்பம் துய்க்க
ஏற்றவளாக நான் மாறுகிறேன். என்னைக் காமதேவன் வாட்டுகிறான். நாம்
இன்பமாக வாழ ஒரு மாளிகையையும் தயார் செய்து கொடுக்க வேண்டும்
என்றாள்.

தன் அன்பு மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணிய கர்தமர்,


விருப்பம்போல் செல்லக்கூடிய ஒரு விமானத்தை தன் யோக சக்தியால்
உண்டு பண்ணினார்.

அந்த விமானமே அரண்மனைபோல் இருந்தது. தங்கமயமானது. அழகானது.


ரத்தினங்கள் இழைத்த தூண்கள் கொண்டது. ஏராளமான செல்வங்களை
உடையது. பலவிதமான வண்ணங்களாலும், கொடிகளாலும்,
திரைச்சீலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அதில் பல அடுக்குகள் கொண்ட
அறைகள் இருந்தன. எல்லாவற்றிலும் தனித்தனியே கட்டில்கள், விசிறிகள்,
இருக்கைகள் அனைத்தும் அழகுற விளங்கின.

சுவர்கள் நெடுக அழகிய ஓவியங்கள் அலங்கரித்தன. பவளப் படிகள், கதவுகள்


வைரத்தால் ஆனவை. மேற்கூரை இந்திரநீலக் கற்களால் ஆனது. அழகான

138
தங்க கோபுர கலசங்கள். விமானங்களில் ஆங்காங்கே மாடப்புறாக்கள்,
அன்னப்பறவைகள் செதுக்கப்பட்டிருந்தன. அவற்றை உண்மையென
நினைத்து பல பறவைகள் வந்து உறவாடின. அங்கு வசதிக்கேற்றவாறு,
விளையாட்டு மைதானங்கள், ஓய்வறைகள், உள் முற்றங்கள், வெளி
முற்றங்கள் எல்லாம் இருந்தன. இப்படியாக கர்தமர் நிர்மாணித்த விமானம்
அவருக்கே வியப்பூட்டியது. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்து
தேவஹூதி மகிழ்ச்சியடையவில்லை.

*ஸ்ரீமத் பாகவதம் - 79*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 23*

மைத்ரேயர் தொடர்ந்தார்:

அனைவரின் உள்ளத்தையும்‌ அறியும் திறன்‌


கொண்ட கர்தம மகரிஷி,
இவ்வளவு அழகான விமானத்தைப் படைத்தும் தேவஹூதி மகிழ்ச்சி
அடையவில்லை என்று உணர்ந்தார்.

தேவஹூதி கிழிந்த அழுக்கடைந்த ஆடைகளை அணிந்திருந்தாள். மிகவும்‌


இளைத்துப்போய், கேசங்கள் அழுக்கடைந்து சடை போட்டிருந்தது.

அவளைக் கண்ணுற்ற கர்தமர், 'பயந்த சுபாவம்‌ உடையவளே! நீ இந்த


பிந்துஸரஸில் நீராடி விமானத்தில் ஏறிக்கொள். இந்த நீர்நிலை பகவானால்
உண்டாக்கப்பட்டது. அனைத்து விருப்பங்களையும்‌ பூர்த்தி செய்யவல்லது'
என்றார்.

அழகிய கண்களை உடைய தேவஹூதி, கணவரின் ஆணைப்படி பிந்துஸரஸ்


என்ற அந்த நீர்நிலையில்‌மூழ்கினாள். அங்கே அவளுக்கு மிக ஆச்சரியமான
காட்சி காத்திருந்தது.

பிந்துஸரஸினுள் ஒரு அழகிய மாளிகை இருந்தது‌


. ஆயிரக்கணக்கான இளம்
பெண்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களது திருமேனியிலிருந்து
தாமரை மணம் வசியது.
ீ அவர்கள் தேவஹூதியைக் கண்டு கைகூப்பி, அம்மா!
நாங்கள் உங்கள் பணிப்பெண்கள். தங்களுக்கு என்ன சேவை செய்ய
வேண்டும்? கட்டளையிடுங்கள்! என்றனர்.

அவர்கள் தேவஹூதியின் விருப்பத்திற்கிணங்க, அவளை உயர்ந்த


வாசனைப்பொடிகளால் தைல ஸ்நானம் செய்வித்தனர். உயர்ந்த
பட்டாடைகளை அணிவித்தனர். விலை உயர்ந்த ஆபரணங்களால் அவளை
அலங்கரித்தனர். அறுசுவை உண்டியையும், இனிய நன்ன ீரும் கொடுத்தனர்.

மிக அழகிய பெண்ணாக அவளை உருமாற்றியிருந்தனர் அப்பெண்கள்.


ஏராளமான நகைகளுடன் அழகு மிளிரும்‌ தன்னை தன் கணவரான
கர்தமருக்கு அர்ப்பணிக்க விரும்பினாள் தேவஹூதி. அவ்வாறு அவள்
நினைத்ததுமே, பணிப்பெண்களோடு கணவனின் எதிரே நிற்கக்கண்டு
வியந்தாள்.

கர்தமரின் யோகசக்தியைக் கண்டு மிகவும் ஆச்சரியமுற்றாள். கர்தமருடன்,


அவரால் படைக்கப்பட்ட அழகிய விமானத்தில் ஏறினாள்.

139
தன் மனைவி தேவஹூதியாலும், ஆயிரக்கணக்கான வித்யாதரப்
பெண்களாலும் பணிவிடை செய்யப்பெற்று கர்தமர் தன்னையும் மிகுந்த
அழகுடன் ஆக்கிக்கொண்டார்.

மன்மதன் போன்ற அழகுடன் தேவஹூதியின் மனம் மகிழும் வண்ணம்‌


விளங்கினார் கர்தமர். தன் மனைவியுடன் பலவிதமான தேவ உத்யான
வனங்களிலும், மானஸ ஸரஸ்களிலும்‌விமானம் மூலம் சுற்றினார்.

அவ்விமானம் நினைத்தபடி தடையின்றி எங்கும் செல்லவல்லது. அதிலேறி


அனைத்து உலகங்களிலும் தடையின்றி சஞ்சாரம் செய்து தேவர்களையும்
விஞ்சினார்.

பகவானின் திருவடிகளில் பற்றுள்ளவர்க்கு அனைத்தும் கிடைக்கும். அவர்கள்


விரும்ப மாட்டார்கள். விரும்பினால், அவர்களால் அடைய முடியாதது
ஒன்றுமே இல்லை.

உலகங்கள்‌ முழுவதையும் மனனைவிக்கு சுற்றிக் காண்பித்து, அவளோடு


பலவாறு இன்புற்ற பின்னர், தன் இருப்பிடம்‌திரும்பினார் கர்தமர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 80*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 24*

நூறு வருட காலம் திவ்ய விமானத்திலேயே சுகமாய் வாழ்ந்தனர் கர்தமரும்,


தேவஹூதியும். அத்தனை காலமும் ஒரு நொடிபோல் கடந்தது. கர்தமர்,
தேவஹூதி நிறைய மக்கட்செல்வம் விரும்புகிறாள் என்றறிந்து தன்னை
ஒன்பது ரூபங்களாக ஆக்கிக்கொண்டு கர்பாதானம் செய்தார்.

அதன் பின் உரிய காலத்தில் ஒரே நாளில் ஒன்பது மிக அழகான பெண்
குழந்தைகளைப் பெற்றாள் தேவஹூதி. குழந்தைகள் பிறந்ததும், கர்தமர் தான்
துறவறம் மேற்கொள்ளப்போவதாகச் சொன்னார்.

மனம் கலங்கிய தேவஹூதி, கண்ண ீருடன் தரையைப் பார்த்துக் கொண்டு


சொன்னாள். பகவானே! எனக்கு அபயம்‌ கொடுங்கள். இக்குழந்தைகளுக்கு
நல்ல ஒழுக்கமுள்ள கணவர்களைத் தேடிக் கொடுங்கள். தாங்கள் துறவறம்
மேற்கொண்டபின் என் வருத்தம் போக்கவும், வாழ்விற்கு பிடிமானமாகவும்
ஒரு புதல்வன் வேண்டும்.

இன்பங்களில் மனதைச் செலுத்தி, அந்தோ, நூறு வருட காலம் ஒரு


நொடிபோல் கழிந்தது. எனக்கு இனியாவது இறை சிந்தனை ஏற்படட்டும்.

ப்ரும்மத்தை அறிந்த தங்களுடன், எனக்கு ஏற்பட்ட இவ்வுறவே எனக்கு அபயம்


அளிக்கட்டும். அருள்புரியுங்கள். அறியாமையால் அஸத்துக்களிடம் வைக்கும்
அன்பு, உலகியல் தளைகளுக்கு காரணமாகிறது. அதே அன்பை தங்களைப்
போன்ற ஸாதுக்களிடம் வைத்தால், அதுவே உலகியல் தளைகளைக்
களைகிறது. மாயையால் நான் வஞ்சிக்கப்பட்டிருக்கிறேன். மோக்ஷத்தையே
பெற்றுத் தரும்‌தங்களைக் கணவராய் அடைந்தும்‌உலகியல் இன்பங்களில்

140
மனதைச் செலுத்தி தளைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்கூட
எனக்கு எழும்பவில்லை. என்று வேண்டினாள்.

கர்தமருக்கு, அப்போதுதான் பகவான் தனக்கு மகவாய் பிறப்பதாக


வாக்களித்தது நினைவுக்கு வந்தது. தேவஹூதியைப் பார்த்துக் கூறலானார்.

மாசற்றவளே! நீ இவ்வாறு வருந்தவேண்டாம். எல்லையற்ற கல்யாண


குணங்கள் கொண்ட பகவான், உன் திருவயிற்றில் அவதாரம்
செய்யப்போகிறார். உனக்கு மகவாய் பிறந்து, அஞ்ஞானத்தைப் போக்கி, ஆன்ம
தத்துவத்தை விளக்கி, என் புகழையும் பரப்பப்போகிறார். எனவே நீ புலன்களை
அடக்கி, பகவானிடம்‌மனதை நிறுத்தி, தானங்களாலும், கற்பு நிலையாலும்,
தவத்தாலும் பகவானை வழிபடுவாய் என்றார்.

அதையே உபதேசமாக ஏற்ற தேவஹூதி, அவ்வாறே பகவானைப்


பூஜிக்கலானாள். வெகுகாலம் சென்றதும், ஒரு திருநாளில், பகவான் அவளது
திருவயிற்றில் ப்ரவேசித்து உரிய காலத்தில் அரணியிலிருந்து அக்னி
தோன்றுவது போல் அவதாரம் செய்தார்.

அப்போது, ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் கர்தமரின்


ஆஸ்ரமத்திற்கு வந்தனர். பல மங்கள வாத்யங்களை முழங்கினர்.

இட்ட கட்டளையை ஏற்று செவ்வனே நிறைவேற்றியதற்காக ப்ரும்மா


கர்தமரைப் பலவாறு புகழ்ந்தார்.

ஸாக்ஷாத் ஸ்ரீ ஹரியே உன் வட்டில்


ீ பிறந்திருக்கிறார். அவர் கபிலர் என்னும்
திருநாமத்துடன் ஸாங்க்ய யோகத்தை நிறுவுவார்.

உன் குமாரிகளை மரீசி முதலிய ரிஷிகளுக்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப


திருமணம் செய்து கொடு
என்று கர்தமரை வாழ்த்தி, சின்னஞ்சிறு உருவில் பிறந்த குழந்தையாய்
காட்சியளிக்கும் பகவானை வணங்கி விடை பெற்றார் ப்ரும்மா.

ப்ரும்மாவின் வார்த்தைப்படி, கர்தமர் தன் புதல்விகளின் திருமணத்தை


நடத்தினார்.

மரீசிக்கு கலை என்பவளையும்,

அத்ரிக்கு அநஸூயை என்பவளையும்,

ஆங்கிரஸுக்கு ச்ரத்தை என்பவளையும்,

புலஸ்தியருக்கு ஹவிர்பூ என்பவளையும்,

புலஹருக்கு கதி என்பவளையும்,

கிரதுவுக்கு கிரியை என்பவளையும்,

ப்ருகு முனிவருக்கு கியாதி என்பவளையும்,

141
வஸிஷ்டருக்கு அருந்ததி என்பவளையும்,

அதர்வருக்கு சாந்தி என்பவளையும்

கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு முறைப்படி அத்தனை


உபசாரங்களையும் செய்தார் கர்தமர். அனவரும் தத்தம் இருப்பிடங்களுக்கு
சென்றனர்.

*ஸ்ரீமத் பாகவதம் - 81*_*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 25*

தன் ஒன்பது பெண்களின் திருமணத்தையும் முடித்த கர்தமர், தனக்கு


மகனாகப் பிறந்திருக்கும் கபிலரிடம்‌தனிமையில் சென்றார். அவரை வணங்கி
பின்வருமாறு கூறலானார்:

தத்தம் ‌வினைகளால் பாவ புண்யங்களை அனுபவிக்கும் ஜீவர்களிடம்‌


தேவதைகள் வெகு நாள்கள் கழித்துத்தான் அனுக்ரஹம் செய்கிறார்கள்.

துறவிகளோ பக்தியோகத்தினால் தனிமையில் தங்களது திருப்பாத


கமலங்களை ஆராதிக்கிறார்கள்.

ஆனால், பகவானாகிய தாங்களோ ஸம்சாரிகளான இவர்கள் உலகியல்‌


இன்பங்களை விரும்புபவர்கள் என்றும், எங்களது தாழ்மையையும்‌ சற்றும்‌
நினையாமல் அற்பர்களான எங்கள் வட்டில்‌
ீ வந்து அவதாரம்‌செய்தீர்கள்.

முன்பு‌என்னிடம்‌என் மகவாய் பிறப்பதாகக்‌கூறிய வாக்கை மெய்ப்பித்தீர்கள்.


நான்கு கரங்கள்‌ கொண்ட திருமேனியை விட்டு இரு கரங்களோடு மானிட
உருவம்‌கொண்டீர்.

ஐஸ்வர்யம், வைராக்யம், புகழ், அறிவு, வரம்,


ீ ஸ்ரீ எனப்படும் செல்வம் இவை
ஆறும் ஒருங்கே கொண்ட பகவான் ஆகிய உங்களை சரணடைகிறேன்.
(மேற்சொன்ன ஆறு குணங்களும் ஒன்றிணைந்தது 'பக' எனும் குணம். அந்த
குணத்தை உடையவர் பகவான்). சக்திகள் அனைத்தும் தங்களுக்கு அடிமை.
ப்ரக்ருதி, அதன் அதிஷ்டான புருஷன், மஹத் தத்வம், அவற்றை இயக்கும்‌
காலம், முக்குணங்களின்‌ அஹங்காரம், அண்ட சராசரங்கள், அதனுடைய
பாலர்கள் அனைத்தும்‌ தாங்களே. அனைத்தையும் நீங்கள் ‌உங்கள் வாயில்
அடக்கிக்கொள்கிறீர்கள். அனைத்திலும் பெரியவரான கபில மூர்த்தியான
தங்களைச் சரணடைகிறேன்.

தங்கள்‌ கருணையால் மூன்று விதமான கடன்களிலிருந்தும் விடுபட்டேன்.


என் விருப்பங்கள்‌ அனைத்தும் நிறைவேறின. நான் துறவறம்‌ ஏற்று
இவ்வுலகியல் இன்ப துன்பங்களிலிருந்து விடுபட்டு உங்களையே எப்போதும்
நினைத்துக்கொண்டு உலா வர விரும்புகிறேன். எனக்கு அனுமதி தாருங்கள்
என்றார்.

பகவான் கூறினார்:

142
முனிவரே, நான் முன்பு உம்மிடம் கூறியதை மெய்ப்பிக்கவே உமக்கு
மகனாகப்‌பிறந்தேன்.

இவ்வுடலானது ஆன்மா என்று தவறாக அறியப்பட்டு வருகிறது.


இவ்வுலகோர்க்கு ப்ரக்ருதி, ஜீவன், பரமன் இவைகளின் உண்மை தத்துவத்தை
எடுத்துரைக்கவே அவதாரம்‌செய்துள்ளேன்.

ஆன்ம அறிவைப் பற்றிய இந்த நுண்ணிய வழி வெகு காலமானதால்


அழிந்தேபோனது. அதைத் திரும்பவும் நிறுவுவதற்காகவே இத்திருமேனியைக்
கொண்டுள்ளேன்.

நான் உமக்கு அனுமதி அளிக்கிறேன். நீங்கள் துறவறம்‌மேற்கொள்ளலாம்.


பயனில் பற்றில்லாமல் பணி செய்து, பயனை எனக்கு அர்ப்பணம் செய்து,
ம்ருத்யுவை வெற்றிகொண்டு முக்தி அடைவதற்காக என்னைப் பணிந்து
வாரும்.

நான் தேவஹூதிக்கு ஆன்மவித்யையை உபதேசிக்கப்போகிறேன். அவளும்


உலகியல்‌ துன்பங்களைத் தாண்டி, ஞானம்‌ பெற்று என்னை
அடையப்போகிறாள்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: பகவான் சொன்னதைக்கேட்டு கர்தமர் கபில


பகவானை விழுந்து வணங்கிவிட்டு யாருக்கும் சொல்லாமல் அவ்விடம்
விட்டு நீங்கினார்.

அதன் பின் அஹிம்சையை வேராகக் கொண்ட துறவறத்தை ஏற்று, வைதிக


கர்மங்களையும்‌துறந்து, எங்கும், எதிலும் பற்றின்றிச் சுற்றித் திரிந்தார். யான்,
எனது என்ற அஹங்காரத்தை விட்டு பகவானிடம்‌ மனத்தை ஒரு
நிலைப்படுத்தினார். அவரது அறிவு உள்நோக்கி அமைதியாய் இருந்தது.

அலைகளற்ற நடுக்கடல்போல் அமைதியாய் விளங்கினார் கர்தமர். அனைத்து


தளைகளிலிருந்தும் விடுதலை பெற்று, விருப்பு வெறுப்பற்ற சமநோக்குடன்
பகவத் பக்தி நிறைவு பெற்று பரமபதத்தை அடைந்தார் கர்தமர்.

சாங்க்ய சாஸ்திரத்தை எடுத்துரைக்க வந்த கபில பகவானின் பெருமைகள்


கேட்கக் கேட்க அலுக்கவேயில்லையே. அவர் மேலும் என்னென்ன செய்தார்
என்று விளக்கிக் கூறுங்கள் என்றார் சௌனகர்.

ஸூத பௌராணிகர் இதையே தான் விதுரரும் கேட்டார். அதற்கு மைத்ரேயர்


கூறியவற்றைக் கூறுகிறேன் என்று கூறி, தொடர்ந்து தேவஹூதிக்கும்
கபிலருக்கும் நடைபெற்ற உரையாடலைக் கூறத் துவங்கினார்.

143
*ஸ்ரீமத் பாகவதம் - 82*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 26*

கர்தமர் வனம் சென்றபின், கபிலர் தன் தாயான தேவஹூதியை மகிழ்விக்க


எண்ணி, அந்த ஆஸ்ரமத்திலேயே தங்கினார்.

ஒருநாள் தேவஹூதி, கர்தமர் தன் மகனான கபிலரைப் பற்றி கூறியவைகளை


நினைவு கூர்ந்தாள்.

கர்தமர் என்ற பெரிய ஆத்மஞானியைக் கணவராகப் பெற்றும் நாள்களை


வணேீ கழித்துவிட்டோம்.

மகனாக இறைவனே அவதரித்திருக்கும்போதும் இப்பிறவியை உய்விக்கும்


வழியை அறியத் தவறினால், அது முட்டாள்தனம் என்றெண்ணினாள்.

கபிலர் தனித்திருக்கும் சமயத்தில், அவரிடம் சென்றாள்.

ப்ரபோ! இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து, பொறிகளின் அடிமையாய்


காலத்தை வணடித்து
ீ விட்டேன். அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கிறேன்.

பற்பல பிறவிகள் எடுத்து நொந்துபோய் முடிவில் உன் கருணையால்


இம்மானுடப்பிறவி கிடைத்துள்ளது. நீ என்னை கரையேற்றவே எனக்கு
மகனாகப் பிறந்துள்ளாய். என் அஞ்ஞான இருளகற்றி எனக்கு ஞானக் கண்
அருள்வாய்!

அனைத்து ஜீவராசிகளுக்கும் நீயே தலைவன். அனைத்திற்கும் மூலகாரணன்.


நற்குணங்களின் கொள்கலன்.

ஜீவர்களை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துச் செல்லும் சூரியன் போல்


அஞ்ஞான இருளிலிருந்து ஞானப்பாதையில் அழைத்துச் செல்லவந்த
ஞானசூரியன் நீயே.

உன்னைத் தவிர சரணமடையத் தக்கவர்கள் யாருளர்?

ஆகவே, உன்னையே சரணடைகிறேன்.

ப்ரக்ருதி (மாயை), புருஷன் (இறைவன்) பற்றிய தத்துவத்தை எனக்கு


உபதேசம் செய்தருளும்படி இறையான உன்னை வணங்கி வேண்டுகிறேன்
என்றாள்.

தேவஹூதி தன் பொருட்டு வேண்டினாலும், இவற்றை நாம் படிக்கும்போது,


நம்பொருட்டுச் சொன்னாள் என்றே தோன்றுகிறது. ஒருவரின் பொருட்டு
சொன்னாலும், ஞானவழி நம் அனைவர்க்குமானதே.

தாய் கேட்ட கேள்வி, அனைத்து ஜீவர்களுக்கும் முக்தியில் ஆசையை


உண்டுபண்ணுவதாகவும், எவ்வித மறைவு எண்ணமும் இன்றி தூய்மையான
வேண்டுகோளாகவும் இருப்பது கண்டு சான்றோர்களின் புகலிடமான கபிலர்
முகம்‌மலர்ந்தார்.

144
பின்னர் தாயிடம்‌கூறலானார்:

தாயே! ஆன்மாவின் உண்மையை உணர்த்தும் ஞானயோகம் உலகியல்


தளைகளிலிருந்து விடுபட சிறந்த சாதனமாகும். இதில்‌ இன்ப துன்பங்கள்
இல்லை. இரண்டும்‌அழிந்துவிடும்.

முன்பு, நாரதர் முதலிய மஹரிஷிகளுக்கு இதை நான் உபதேசித்தேன்.

ஒரு ஜீவன் தளைகளில் சிக்கிக் கொள்ளவும், அதிலிருந்து விடுபடவும் முக்கிய


காரணமாக இருப்பது மனமே.

உலகியல் இன்பங்களில் சென்றால் அது தளைப்படுகிறது. இறைவனிடம்


ஒன்றினால் விடுதலை அடைகிறது.

உண்மையற்ற பொய்யான உலகியல் விஷயங்களில் ஈடுபட்டால், காமம்,


ஆசை, கோபம் முதலியவற்றிற்கு காரணமாகிறது. அதே மனம், ஆசைகளை
ஒதுக்கிவிட்டு தூய்மை பெறுமாயின், இன்ப துன்பங்களை சமமாக எண்ணும்
தன்மை பெறுகிறது.

இவ்வாறான மனம் கொண்டவன்,

ஆன்ம ஞானம், வைராக்யம், பக்தி ஆகியவற்றைக் கொண்டவனாய்


இருப்பான். ப்ரக்ருதியின் பரிமாணங்களான உடல், பொறி, புலன், மனம்,‌
ப்ராணன் இவைகளிலிருந்து இயல்பாகத் தனித்திருப்பான். முக்குணங்களால்
பாதிப்படைய மாட்டான். தேவர், மனிதர் என்ற வேறுபாடு அற்றிருப்பான்.

உடலால் வேறுபட்டிருப்பினும், ஞானத்தினால் வேறுபாடில்லாமலும்,


அணுவிலிருந்து பிரிக்கமுடியாதவனாயும்‌இருப்பான்.

இவன் இன்ப துன்பங்களில் ஈடுபடாமல் தனித்திருக்கும் ஆன்மாவையும்,

உலகியல் தளைகளை விளைவிக்கும் திறன் இன்றித் தோற்றுப்போன


மாயையையும் காண்பான்.

அம்மா!
அனைத்து ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக விளங்கும் பகவானிடம்
ஏற்படும் பக்தியைத்தவிர, முக்தி அடைய வேறொரு எளிய சாதனம் இல்லவே
இல்லை என்பது யோகிகளின் கருத்து.

145
*ஸ்ரீமத் பாகவதம் - 83*_*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 27*

தாயைப் பார்த்து சாதகனின்‌தன்னிறைவை விளக்கிய கபிலர் மேற்கொண்டு


ஸாதுக்களின்‌மகிமைகளைக் கூறுகிறார்:

"தாயே! உலகியல் இன்பங்களைப் பெரிதென நினைத்து ஒழுகுபவர்களுடனான


இணக்கம் என்றும் எதனாலும் அறுக்க இயலாத பாசக்கயிறு."

"அதே மன ‌இணக்கம், உத்தம ஸாதுக்களிடம் ஏற்படுமாயின் அது


இடையூறின்றித் திறந்து வைக்கப்பட்ட முக்தி வாயில் என்றும் அறிஞர்கள்‌
கூறுகிறார்கள். அத்தகைய சாதுக்களைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்."

சாதுக்கள் பூமியினும் பொறுமை மிக்கவர்.


பிறர் துன்பங்கண்டு இரங்கி, பயன் நோக்காது உதவி புரியும் கருணை மிக்கவர்.

ஆகவே, அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பராவார்.


பகைவரற்றவர்.

ஐம்புலன்களையும், மனதையும் வெற்றி கொண்டவர்.

ஒழுக்கமே அவர்க்கு பொன்னகை.

பிறவற்றில் மனதை ஓடவிடாது பகவானான என்னிடம்‌காதல்‌கொண்டவர்.

எனக்காக அனைத்து கர்மங்களையும் துறந்தவர்.

சுற்றமனைத்தையும் நீக்கி, என்னையே சுற்றமாய்க் கொண்டவர்.

எனது திருவிளையாடல்களை கேட்டு மகிழ்பவர்.

அவற்றையே திரும்ப திரும்பக் கேட்பதும் சொல்வதுமாகப் பொழுது


போக்குவர்.

என்னிடமே நிறைந்த மனம் கொண்ட இத்தகைய சாதுக்களை


வினைப்பயனால் விளையும்‌துன்பங்கள் கூட வருந்தச் செய்யாது.

கற்பின் சிகரமே! இத்தகைய ஸாதுக்களையே ஒருவன் தேடிச் சென்று


அடையவேண்டும். அவர்களுடைய ஒரு தொடர்பினால், செவிக்கும்
இதயத்திற்கும்‌ அமுதாய் விளங்கும் எனது திருவிளையாடல்கள் பற்றிய
கதைகளை எப்போதும் கேட்கும் வாய்ப்பு கிட்டும்.‌அக்கதைகளைக் ‌கேட்பதால்,
முக்தியில் ஈடுபாடும், என்னிடம்‌அன்பும்‌தோன்றும்.

படைத்தல், காத்தல், அழித்தலாகிய எனது திருவிளையாடல்களைக் கேட்டு,


அதையே சிந்தனை செய்வதால் என்னிடம்‌அசைவற்ற பக்தி உண்டாகும்.

146
அதனால் ஸ்வர்கம் முதலியவற்றில் இருக்கும் பற்று நீங்கி பக்தி யோகத்தால்
மனதைத் தனதாக்கிக் கொள்ள இயலும். அப்படிப்பட்ட சாதகன் முடிவில்
என்னையே அடைகிறான் என்றார் கபிலர்.

தொடர்ந்து பக்தியோகம்‌பற்றி வினவினாள் தேவஹுதி.

*ஸ்ரீமத் பாகவதம் - 84*__*விதுர மைத்ரேய ஸம்வாதம் - 28*

மூலகாரணனான இறையைத் தன் மகவாகப் பெறும் பேறு பெற்ற தேவஹூதி


வினவினாள்:

பக்தி யோகத்தினால் உங்களை அடையலாம் என்று சொன்ன ீர்கள். பக்தி


யோகம் எத்தகையது? அதன் உண்மை ஸ்வரூபம் என்ன? உலகியல்
தளைகளில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பெண்ணாகிய நான் எத்தகைய
பக்தியைச் செய்தால், ஆனந்தமே உருவான உங்களைச் சுலபமாக
அடையலாம்?

இலக்கை குறியாக அடிக்கும் அம்பைப்போல், பகவானைக் குறியாக அடித்துத்


தரும் அந்த பக்தியோகத்தைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்:

நீங்கள் கூறிய பக்தியோகம் சுலபம் போல் தோன்றினாலும்‌ அறிஞர்க்கும்


அரிது. நீங்களோ அண்டியவரைக் காக்கும் ஹரி. நானோ மந்தபுத்தியுள்ள
பெண்பிள்ளை. எப்படிக் கூறினால் எனக்கு எளிதாக விளங்குமோ அப்படிக்
கூறியருள வேண்டும்.

கபிலர் இதைக்கேட்டு பெரிதும் மகிழ்ந்து பக்தியோகத்தை விளக்கும்


ஸாங்க்யம் என்ற யோகத்தை எடுத்துரைத்தார்.

அம்மா! உலக விஷயங்களை என்னென்னவென்று அறிவிக்கும்


ஞானேந்திரியங்கள், கர்மங்களைச்‌ செய்யும்‌ கர்மேந்திரியங்கள், இவற்றை
ஊக்குவிக்கும் மனம் ஆகிய இம்மூன்றுமே காரணமின்றி எந்தப்‌பயனையும்
விரும்பாது.

இவற்றைத் தூய்மையான இறைவனிடத்தில் நிலைபெறச் செய்வதே


பக்தியாகும். இது முக்தியைக் காட்டிலும் சிறந்தது.

வயிற்றிலுள்ள அக்னி, உண்ணப்பட்ட உணவை ஜீரணம்‌


செய்து
அழிப்பதுபோல், அனாதி கர்மவாசனைகளின் கொள்கலனான இவ்வுடலை
பக்தி விரைவில் பொசுக்குகிறது. கர்மா அழியுமானால் உடல் தேவையில்லை.
கர்மாவை அனுபவிக்கவே உடல்.

எனது திருவடி சேவையில் ஈடுபாடு கொண்டு அனைத்துச் செயல்களையும்‌


எனக்காகவே செய்யும்‌பக்தர்கள், எனது கல்யாண குணங்களை விவரிக்கும்‌
லீலைகளை ஒருவருக்கொருவர் அன்புடனும் ஆசையுடனும்
பேசிக்கொள்வார்கள். இத்தகைய பக்தர்கள் முக்தியையும் விரும்ப
மாட்டார்கள்.

147
சிரித்த முகமும், தாமரைக்‌கண்களும் கொண்ட என் அழகிய திருமேனியை
கண் குளிரக் கண்டு மகிழ்கிறார்கள். செவிக்கும் மனதிற்கும் இனிதான என்
அழகைப் புகழ்ந்து பாடிப் பாடி பொழுதைப் போக்குகிறார்கள். பெரிய
தவச்சீலர்களாயினும், அவர்கள் விரும்புவது இஃதே.

என் திருமேனியின் ஒவ்வொரு அங்கமும்‌ அழகின் எல்லை. என் மேல்


கொண்ட பக்தி, அவர்கள் விரும்பாவிடினும் அவர்களுக்கு முக்தியளிக்கிறது.

என் பக்தர்கள் அவித்யை அறவே நீங்கிய பின்னர், என் மாயையினால்


படைக்கப்பட்ட ப்ரும்மலோகம் முதலான அனைத்து போகங்கள், அஷ்டமா
சித்திகள், வைகுண்ட லோகத்தையும் கூட விரும்புவதில்லை.

ஆனால், அவர்களுக்கு இவையெல்லாம் தானாகவே கிடைக்கின்றன.

அவர்களுக்கு அன்புக்கிடமான ஆத்மா, காதலுக்கிடமான காதலி, மனைவி,


மக்கள், நம்பிக்கைக்கிடமான தோழன், நன்மையே நவிலும்‌ ஆசிரியன்,
நன்மையே செய்யும்‌ தோழன், பூஜை செய்யத் தகுந்த குலதெய்வம்
அனைத்தும் நானே.

என்னுடைய காலச் சக்கரம்‌இவர்களைத் தீண்டாது.

இவர்களை நான் ஸம்சார ஸாகரத்தினின்றும் கரையேற்றுகிறேன்

ஸ்ரீமத் பாகவதம் - 85-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 29

கபில பகவான் தன் பவள வாய் திறந்து தன்னைச் சுமந்த தாயின் பந்தங்களை
அறச்செய்யுமாறு பேசினார்:

அம்மா! நான் அனைத்து ஜீவனுள்ளும் அந்தராத்மாவாக இருப்பவன். ப்ரக்ருதி,


புருஷன் இவர்களை வழி நடத்துபவன்.

என்னை வணங்குவதால் மரணபயம்‌நீங்கும்.

என்னிடமுள்ள பயத்தினாலேயே பஞ்ச பூதங்களும் தன் பணிகளைச்


செவ்வனே செய்கின்றன.

ஆகவே, யோகிகளும், பக்தர்களும் பயமே இல்லாத என் சரணத்தையே


பற்றுகிறார்கள்.

ப்ரக்ருதி முதலிய தத்வங்களின் இலக்கணத்தைத் தொடர்ந்து கூறினார் கபிலர்.

அன்பு அம்மா! ஆன்மாவைப் பற்றிய உண்மை அறிவே மோக்ஷத்திற்கு வழி


காட்டும். அதுதான் மனிதர்களின் யான், எனது என்ற அஹங்காரத்தைக்
களைய உதவும்.

இந்த அகில உலகங்களும் எந்த பரமனால் எங்கும் நிரம்பி வழிகிறதோ, அந்த


ஆன்ம தத்வமே புருஷன்.

148
அவன் அனாதி. தோற்றமும் முடிவும் இல்லாதவன். ப்ரக்ருதி வயப்படாதவன்.
ஹ்ருதய குகையில் காட்சி தருபவன். தனக்குத்தானே ஒளிர்பவன்.

ப்ரக்ருதி ஸத்வம், ராஜஸம், தாமஸம் எனும்‌ முக்குணங்கள் உடையது.


அதற்கு சுயமாக சக்தி கிடையாது. பகவானுடன் இருப்பதாலேயே சக்தி பெற்று
தன் மாயையால் செயல்களைப் புரிகிறது.

ப்ரக்ருதி என்பது ஆவரண சக்தியான மறைக்கும் திறன், விக்ஷேப சக்தியான


கலக்கும் திறன் என்று இருவகைப்படும்.

ஆவரண சக்தியோடு ஜீவனுடன் கூடினால் அது அவித்யை அல்லது


அறியாமை எனப்படும். விக்ஷேப சக்தியுடன்‌ பகவானைக் கலந்தால், அது
மாயை எனப்படுகிறது.

புருஷன் ஜீவன், ஈஸ்வரன் என்று இருவகையாகத் தோன்றமளிக்கிறான்.

ப்ரக்ருதியின் உண்மையறிவின்மையால், உலகியல்‌ இன்ப துன்பங்களை


அடைகிறான் ஜீவன்.

அதே ப்ரக்ருதியைத் தன்வயப்படுத்தி படைப்பு முதலியவைகளைச்


செய்கிறான்.

ப்ரக்ருதியின் உண்மை அறிவைப் பெறும் ஜீவன் ஈஸ்வரனின் ஸ்தானத்தை


அடைந்து அவனுடன் கலந்து விடுகிறான்.

அவ்வாறு உண்மை அறிவைப் பெற்ற ஜீவனையும் ஈஸ்வரனையும்


வேறுபடுத்த இயலாது.

ப்ரக்ருதியின் உண்மை அறிவற்ற ஜீவன் உலகை ஐந்து வழிகளால்


அடைகிறது.

ப்ரக்ருதியின் ஸத்வகுணத்தைக் கொண்டு ஆதிபுருஷன் போன்ற ஜீவன்


படைக்கப்படுகிறான்.

அந்த ஜீவன் ப்ரக்ருதியின் சக்தியில் மயங்கி தன் உண்மை ஸ்வரூபத்தை


மறந்துவிடுகிறான். இதனாலேயே ஆண் பெண்களுக்குள் ஈர்ப்புத்தன்மை
தோன்றியது. அதை ஜீவன் தன் குணமாக ஏற்றுக்கொண்டான்.

அந்த ஜீவன் முக்குணத்தினால் ஏற்படும் செய்கைகளைத் தான் செய்வதாகவே


எண்ணுகிறான்.

நானே செயல்களைச் செய்கிறேன் என்ற எண்ணத்தினால் தான், செயலற்ற,


ஸ்வந்தந்திரமான, ஆனந்தமயமான ஜீவனுக்கு பிறப்பு இறப்பு, ப்ரக்ருதிக்கு
அடிமையாவது போன்ற தன்மைகள் ஏற்படுகின்றன.

தேவஹூதி கேட்டாள் -

149
புருஷோத்தமா! ப்ரக்ருதி அதாவது கண்ணால் காணப்படும் உலகம், புருஷன்
இவை இரண்டின் இலக்கணம் என்ன? இவைதானே ப்ரபஞ்சத்திற்கு காரணம்?
இவை இரண்டும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன?

பகவான் சொல்லத் துவங்கினார்:

ப்ரக்ருதி முக்குணங்களை உடையது. அழிவில்லாதது. காரண காரிய


வடிவானது. எல்லாவிதச் செயல்பாடுகளுக்கும் நிலைக்களனாக விளங்குவது.

ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், அஹங்காரம், மஹத்,


அவ்யக்தம்‌என்ற நான்கு அந்தக்கரணங்கள், பத்து பொறிகள் ஆகிய இருபத்து
நான்கு தத்துவங்கள் அடங்கிய திறன் ப்ரக்ருதியின் காரியம்‌ என்று
கூறப்படுகிறது.

மேற்கொண்டு இந்த தத்வங்களை விளக்கிக் கூறினார் கபிலர்.

ஸ்ரீமத் பாகவதம் - 86-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 30

ப்ரக்ருதியின் செயல் தத்வங்களான இருபத்து நான்கினையும் விளக்கினார்


கபிலர்.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்‌பஞ்ச மஹாபூதங்கள்.

கந்தம் (மணம்), பொறி - புலன்கள்‌பத்து

காது, தோல், கண், மூக்கு, நாக்கு ஆகிய ஐந்தும் அறிவுப்புலன்கள்


(ஞானேந்திரியங்கள்).

பேச்சு (வாக்கு), கை, கால், பிறப்புறுப்பு, கழிவுகளை வெளியேற்றும் உறுப்பு


இவை ஐந்தும் செயற்புலன்கள்.

மனம் (உணர்தல்), புத்தி (தெரிந்து அறிதல்), அஹங்காரம் (தானெனும்


எண்ணம்), சித்தம் (பகுத்தறிவு) இவை நான்கும் அந்தர்முகமான இந்திரியங்கள்
(அந்தக்கரணங்கள்).

அவற்றின்‌ செயல்கள் ஸங்கல்பம் (எண்ணுதல்), நிச்சயம் (தீர்மானம்),


அபிமானம், சிந்தை ஆகியவை.

இவ்வாறு ஸகுண ப்ரும்மத்தின் சரீர அமைப்பு இருபத்து நான்கு தத்வங்கள்‌


கொண்டது. இருபத்தைந்தாவது தத்வம் காலம் ஆகும்.

காலம் தனியாக இல்லாமல் புருஷனான பகவானின் ஸம்ஹார சக்தியாக


கருதப்படுகிறது.

மாயையின் செயலுருவான உடலையே ஆன்மா என்று எண்ணி அகங்காரம்‌


கொண்டு 'செயல்புரிபவன் நானே' என்றெண்ணும் ஜீவனுக்கு காலத்தைக்
கண்டு பயம் உண்டாகிறது.

150
பகவான் ஒருவரே. தன் மாயா சக்தியால் அனைத்து ஜீவராசிகளின்
ஜீவனாகவும், வெளியில் காலத்தைக் கணக்கிடும் காலனாகவும்
விளங்குகிறார். அவர் எந்த மாறுதலையும் அடைவதில்லை.

அவரே இருபத்தைந்தாவது தத்வமாகவும் கூறப்படுகிறார்.

ஜீவன்களின் கர்மவினைகளின் பயன் முக்குணங்களின் கலப்பு விகிதத்தில்


மாற்றம் ஏற்படுத்துகிறது.

முதலில்,

பகவான் தன் சித்சக்தியை ஜீவராசிகளின் தோற்றத்திற்கு இடமான


ப்ரக்ருதியில் விடுத்தான். அதிலிருந்து ஒளிமயமான மஹத் தத்வம்
தோன்றியது.

மறைதல், மாறுதல் முதலியவை அற்றதும் இந்த ப்ரபஞ்சத்தின்


முளையானதுமான மஹத் தத்வம் தன்னுள் அடங்கிய ப்ரபஞ்சத்தை
வெளிப்படுத்த தனது ஸ்வரூபத்தை மறைத்து நிற்கும் இருளைத் தன்
ஒளியினால் அகற்றியது.

மஹத் தத்வம் ஸத்வ மயமானது. தூய்மையானது. பகவானை அறியும்


சாதனமாவது. ராக த்வேஷமற்றது. பகவானின் நான்கு வியூகங்களில்
ஒன்றான வாசுதேவனாக அறியப்படுகிறது.

சித்தம்‌என்றழைக்கப்படுவதே மஹத் தத்வம் ஆகும்.

சித்தத்தின் அதிஷ்டான தேவதை க்ஷேத்ரக்ஞன். உபாசனை தெய்வம்


வாசுதேவன்.

அஹங்காரத்தின் அதிஷ்டான தேவதை ருத்ரன். உபாசனா தேவதை


ஸங்கர்ஷணன்.

புத்தியின் அதிஷ்டான தேவதை ப்ரும்மா. உபாசனா தேவதை ப்ரத்யும்னன்.

மனதின் அதிஷ்டான தேவதை சந்திரன். உபாசனா தெய்வம் அனிருத்தன்.

தண்ண ீர் மண்ணின் சம்பந்தமின்றி இருக்கும்போது, அதாவது நதி, குளம், ஏரி


என்று உருவம் ஏற்காதபோது அதன் தன்மைகளான அலை, நுரை, சத்தம்
ஆகியவற்றை விட்டு அமைதியாய் தூய்மையாய் இருக்கிறது.

அதுபோல் சித்தத்தின் இயல்பு தூய்மை மற்றும்‌அமைதி ஆகும்.‌

மஹத் தத்வத்தின் அசைவினாலேயே முக்குணங்களும், அவற்றிலிருந்து


ஐம்பூதங்களும், பொறி - புலன்களும், மனமும் தோன்றின.

இந்த அஹங்கார தத்வமே ஸங்கர்ஷணன் ஆகும்.

151
ஒவ்வொரு தத்வத்தின் தன்மையையும், அவற்றின் உற்பத்தியையும் மிக
விரிவாக விளக்கினார் கபிலர்.

கதைகளை மட்டும் படித்துக்கொண்டு|போனால் சுவாரசியம்‌ மிகும் தான்.


ஆனால், 18000 ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீ மத் பாகவதத்தின் மிகச் சிறு
பகுதியே பகவானின் உண்மை ஸ்வரூபத்தின் இந்த தத்வங்கள்.

இவற்றை ஒருமுறையாவது படிக்கும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம்


என்றே எழுதப்படுகிறது. இருப்பினும்‌ இதுவும்‌ மிகவும் சுருங்கச்
சொல்லப்பட்டதேயாகும்.

ஸ்ரீமத் பாகவதம் - 87-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 31

கபிலர் தொடர்ந்து தத்வங்களை விளக்கினார்.

தாயே! அஹங்கார தத்வத்தின் ரூபம் ஸங்கர்ஷணன் ஆவார். இதுவே


இந்திரிய அபிமானம் உள்ளவர்களிடத்தில் செய்கையின் காரணமாகத்
தென்படுகிறது.‌ ஸத்வகுணங்களோடு அமைதியாகவும், ரஜோகுணம்
மேலிட்டால் கோரமாகவும், தமோகுணங்களைக் கொண்டு மடமையாகவும்
நிற்பது இதுவே.

ஸாத்வக ீ அஹங்காரமே மனஸ் தத்வம் உண்டாகக்‌காரணம். மனஸ் தத்வமே


இந்திர்யங்களின் அதிஷ்டான தேவதையான அனிருத்தன் என்று
அழைக்கப்படுகிறது.

ராஜஸ அஹங்காரம்‌ மாறுதல் அடைந்து புத்தி தத்வம் தோன்றியது.


கண்ணுக்குப் புலனாகும் விஷயங்களைப் புரிந்துகொள்வது, இந்திரியங்களை
அதன் தொழிலில் ஊக்குவிப்பது, உலகியல் பொருள்களில் தோன்றும்
மாற்றத்தை ஆராய்வது இவை புத்தியின் காரியங்களாம்.

ஐயப்பாடு (சம்சயம்), தவறாகப் புரிந்து கொள்வது (விபர்யயம்), உள்ளது


உள்ளபடி அறிந்து கொள்வது (நிச்சயம்), ஞாபக சக்தி (ஸ்ம்ருதி), தூக்கம்
(நித்திரை), ஆகியவையும் புத்தியின் இலக்கணங்களே. இந்த புத்தி தத்வமே
பகவானது மூன்றாவது வியூகமான ப்ரத்யும்னன் எனப்படுகிறது.

கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் இதிலிருந்து தோன்றின. செயல்‌


,
அறிவு என்ற பிரிவினால் இருவகை இந்திரியங்களாயின. இதில்‌ செயல்
ப்ராணனின் சக்தி, அறிவு புத்தியின் திறன்.

பகவானின் சைதன்யத்தின் தூண்டுதலால் தாமஸ அஹங்காரம்‌


மாறுதலடைந்தது. அது சப்த தன்மாத்திரையைத் தோற்றுவித்தது.
சப்தத்திலிருந்து ஆகாயமும், ஒலியை அறியும் காது என்ற புலனும்
தோன்றின.

கண்களால் காணமுடியாமல் மறைந்திருக்கும்‌ பொருளின் தன்மையையும்,


பெயரையும் புத்திக்கு தெரிவிப்பது ஒலி. ஒலி வடிவான சாஸ்திரங்களின்

152
வாயிலாக பகவானைக் காட்டித் தரக்கூடியது. இது ஆகாயத்தின் நுண்ணிய
வடிவாகும்.

அனைத்து ஜீவன்களிலும் உள்ளும் புறமாக நிரம்பி இருப்பது ஆகாயமாகும்.


இந்திரியங்களுக்கும், ஆன்மாவிற்கும் இருப்பிடமாக விளங்குவது ஆகாயமே.

சப்த தன்மாத்திரையை இயல்பாக உடைய ஆகாயம் காலத்தினால்


மாற்றமடைந்து ஸ்பர்ச தன்மாத்திரை உண்டாயிற்று.

அதிலிருந்து வாயு தோன்றியது.

தொடுவுணர்ச்சியை நமக்குத் தரும்‌தோல் என்ற புலன் உண்டாயிற்று.

மென்மை, கடினம், குளிர்ச்சி, சூடு ஆகியவை தொடுவுணர்ச்சியின் இயல்புகள்.

வாயுவின் நுண்ணிய சக்தி இதுவே. மரம் செடி கொடிகளை அசைத்தல்,


எங்கும்‌உலாவுதல், வாசனை, நாற்றம் முதலியவற்றை மூக்கிற்கு எடுத்துச்
செல்லுதல், அனைத்து புலன்களுக்கும் செயல் ஊக்கத்தை அளித்தல்
ஆகியவை வாயுவின் செயல்கள்.

அதன் பின்னர், காலரூபியான பகவானால்‌ தூண்டப்பட்டு‌ ஸ்பர்ச


தன்மாத்திரையான வாயு மாறுதல் அடைந்து அதிலிருந்து ரூப தன்மாத்திரை
தோன்றியது. அதிலிருந்து ஒளியும் உருவத்தைக் காட்டித்தரும் கண்கள்
என்னும் புலனும் தோன்றின.

பொருள்களின் உருவத்தைக் காட்டுதல், பொருளின் அமைப்பாகவே இருத்தல்,


ஒளியின் குணமாக இருத்தல் ஆகியவை ரூப தன்மாத்திரையின்
இலக்கணங்கள்.

வெளிச்சம் தருவது, வேக வைப்பது, ஜீரணிப்பது, குளிரைப் போக்குவது, பசி


தாகம் உண்டு பண்ணுவது, அதற்காகச் சாப்பிடுவது, பருகுவது ஆகியவை
அக்னியின் காரியங்கள்.

அதன் பின் ரூப தன்மாத்திரையான அக்னியிலிருந்து ரஸ தன்மாத்திரை


தோன்றியது. அதிலிருந்து நீரும், நாக்கு என்ற புலனும் தோன்றின. ரஸம்
என்பதே மதுரம்‌ என்ற சுவை. அதனுடன் சேரும்‌ பொருள்களின்
வேறுபாட்டால் இனிப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்ற
சுவைகள் பிரித்துக் காட்டப்படுகின்றன.

பிறவற்றை ஈரமாக்குதல், பிரிந்திருப்பதை ஒன்றாக்குதல், போதும் ‌என்ற


மனநிறைவு கொளல், ப்ராணனை நிலைக்கச் செய்தல், பசி தாகத்தால்
விளையும் சோர்வை நீக்குதல், வெம்மையைக் குறைத்தல், கிணறு
முதலியவற்றிலிருந்து இறைக்க இறைக்க ஊறுதல் ஆகியவை நீரின்
காரியங்கள்.

பகவானால்‌ தூண்டப்பட்டு ஜல தத்வத்திலிருந்து தோன்றியது கந்தம்


(வாசனை). அந்த தன் மாத்திரையிலிருந்து ப்ருத்வி என்னும்‌ மஹாபூதம்
தோன்றியது. இந்த கந்தத்தை அறிவிப்பது கிராணேந்திரிய்ம் (மூக்கு) ஆகும்.

153
கந்தம் என்பது ஒன்றாக இருப்பினும் பல்வேறு பொருள்களின்‌சேர்க்கையால்
கலப்பான‌மணம், துர் நாற்றம், நறுமணம், சாரம் (நெடி), புளிப்பு மணம் என
பலவாறு வேறுபடுகிறது.

விக்ரஹம், பொம்மை முதலிய உருவங்களால் ப்ரும்மத்திற்கு ஓர்


உருவத்தைக் காட்டுவது, ஆதாரமற்ற போதிலும் நிலையாய் நிற்றல்,‌
அசையும்‌ அசையாப் பொருள்களின் ஆதாரமாதல், ஆகாயத்தை ஒரு
நிலைக்குள்‌ அடக்குதல் (குடத்துக்குள் ஆகாயம்), குணங்களைப்
பிரித்துக்‌
காட்டுதல் ஆகியவை பூமியின்‌காரியங்கள்.

ஸ்ரீமத் பாகவதம் - 88-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 32

பஞ்சபூதங்களும், புலன்களும் அவற்றின் தன்மாத்திரைகளிலிருந்து


வெளிவந்ததை விவரித்தார் கபிலர்.

ஐந்து பூதங்களும் ஒன்றிலிருந்து ஒன்று உண்டானதால், அவற்றிற்கு தாயான


வஸ்துவின் குணமும் உண்டு. அதாவது ஆகாயத்தின் குணம் ஒலி.
அதிலிருந்து தோன்றிய வாயுவிற்கு ஒலியும் உண்டு; தொடுவுணர்வும் உண்டு.
வாயுவிலிருந்து தோன்றிய அக்னிக்கு ஒலி, தொடுவுணர்வு, ஒளி (ரூபம் -
கண்ணுக்குப் புலப்படும்) ஆகியவை உண்டு. அக்னியிலிருந்து தோன்றிய
நீருக்கு ஒலி, தொடுவுணர்வு, உருவம், சுவை ஆகியவை உண்டு.

நீரிலிருந்து தோன்றிய மண்ணுக்கு ஒலி, உருவம், தொடுவுணர்வு, உருவம்,


சுவை, மணம் ஆகிய ஐந்து குணங்களும் உண்டு.

மஹத் தத்வம், அஹங்காரம், மற்றும் ஐம்பூதங்கள் ஆகிய இந்த ஏழு


தத்வங்களும் ஒன்றோடொன்று சேராமல் தனித்து நின்றன.

பகவான் அந்த தத்வங்களினுள் காலம், கர்மம் ஆகியவற்றுடன் நுழைந்தார்.


அதனால் உந்தப்பட்ட அவை, ஒன்றோடொன்று பிரிக்க முடியாமல் ஒன்று
சேர்ந்தன. அப்போது உயிரற்ற முட்டை வடிவிலான அண்டம் தோன்றியது.

இந்த அண்டத்திற்கு விசேஷம்‌என்ற பெயர் உண்டு. இது நாற்புறங்களிலும்


ஜலம், அக்னி, காற்று, ஆகாயம், மஹத் தத்வம் ஆகிய ஆறு ஆவரணங்களால்
சூழப்பட்டுள்ளது. இவை மேல்நோக்கு வரிசையில் ஒவ்வொன்றும்
முன்னதைக் காட்டிலும் பத்து மடங்கு பெரியது. ஆறு ஆவரணங்களையும்
(மறைப்புகள்) தாண்டி ஏழாவதாக ப்ரக்ருதி உள்ளது.

பகவான் ஸ்ரீ ஹரியின் உருவமான ஈரேழு பதினான்கு லோகங்களும் இந்த


அண்டத்தில் அடங்கியுள்ளன. ஒளிமயமான அண்டத்திலிருந்து
விராட்புருஷன் தன்‌ உறக்கத்தை விட்டு எழுந்து உயிரற்ற அண்டத்தினுள்
சக்தியாய் நுழைந்தார். இந்திரியக் கூட்டங்களைப்‌ பிரித்து ஸ்தூலமாகத்
தனக்கு ஒரு ரூபம் ஏற்படுத்திக்கொண்டார்.

154
தன் ஒவ்வொரு இந்திரியத்திற்கும் ஒரு அதிதேவதையைப் படைத்தார்.
வாக்கின் அதிதேவதை அக்னி. மூக்கின் அதிதேவதை வாயு. கண்களின்
அதிதேவதை சூரியன். காதுகளின் அதிதேவதை திக் தேவதைகள். தோல்,
ரோமங்கள், மீ சை, கேசம்‌முதலியவற்றின் அதிதேவதை மூலிகைகள்.

ஜனனேந்த்ரியத்தின் அதிதேவதை நீர். கழிவுகளை அகற்றும் இந்திரியத்தின்


தேவதை ம்ருத்யு. கைகளின் தேவதை இந்திரன். கால்களின் தேவதை
மஹாவிஷ்ணு. நாடி நரம்புகளின் அதிதேவதை நதிகள்.

வயிற்றின் தேவதை ஸமுத்ரம். ஹ்ருதயம், மனம் ஆகியவற்றின் தேவதை


சந்திரன். புத்தியின் அபிமான தேவதை ப்ரும்மா. அஹங்கார தத்வத்தின்
அதிதேவதை ருத்ரன். சித்தம் எனும்‌ பகுத்தறிவின் அபிமான தேவதை
க்ஷேத்ரக்ஞன். அனைத்திற்கும் காரணமான விராட்புருஷன் யோகத்தில்
இருந்தார். இவ்வளவு இந்திரியங்களும் தேவதைகளும் தோன்றி
விராட்புருஷனை யோகத்திலிருந்து எழுப்ப முயன்றனர்.

அத்தனையும் தோன்றக் காரணமாய் இருந்த சக்தியான விராட்புருஷன்,


க்ஷேத்ரக்ஞனைத் தவிர மற்ற அனைத்து தேவர்களும் அவற்றின்
இந்திரியங்களுள் உந்து சக்தியாய் நுழைந்து எழுப்பியும்‌எழவே இல்லை.

பின்னர் அந்தராத்மாவான க்ஷேத்ரக்ஞன், சித்தத்தின் அதிஷ்டான


தேவதையான வாசுதேவனுடன் இதயத்தில் நுழைந்தார். அக்கணமே
விராட்புருஷன் ப்ரளய ஜலத்திலிருந்து வெளிவந்தார்.

இதுவே நம் விஷயத்திலும்‌ நடக்கிறது. புத்தியும் அந்தராத்மாவும்


விழித்துக்கொள்ளும் வரை ஒருவன் தூக்கத்திலிருந்து விடுபடுவதில்லை.
அந்தராத்மாவான வாசுதேவனே அனைத்துயிர்களிலும் விளங்குகிறார்.

ஜலத்தில் ப்ரதிபலிக்கும் சூரியன், நீரின் குளிர்ச்சி, அசைவு முதலியவற்றால்


பாதிக்கப்படுவதில்லை. அதுபோல்‌ பரமாத்மா இவ்வுடலினுள் இருப்பினும்
உடலின் இன்ப துன்பங்கள் அவரைப் பாதிப்பதில்லை. அதனால் எந்தச்
செயலுக்கும் அவர் சாட்சியே தவிர கர்த்தா இல்லை.

ஸ்ரீமத் பாகவதம் - 89-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 33

ப்ரக்ருதியின் குணங்களுடன் தொடர்பு கொள்ளும் ஜீவன் அஹங்காரத்தால்


'நானே செய்பவன்' என்று எண்ணுகிறான்.

இதனால் தன் இயல்பான சுதந்திரத்தை இழந்து, ஆனந்தத்தை மறந்து, பாவ


புண்யங்களுக்குத் தக்கவாறு, பற்பல வகையான பிறவிகளை அடைகிறான்.
பிறப்பு இறப்புச் சுழலில் மாட்டிக் கொள்கிறான்.

கனவில் தோன்றும் அச்சம், சோகம் முதலியவற்றுக்கு காரணம் ஏதுமில்லை.


ஆனால், கனவு இருக்கும்வரை அவற்றை அனுபவிக்கத்தான்
வேண்டியிருக்கிறது.

155
அதுபோலவே, அச்சம், துயரம், நான், எனது, பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்கு
எந்த ஆதாரமும்‌இல்லை.

எனினும், அஞ்ஞானத்தின் காரணமாக புலன் நுகர் பொருள்களில் கவனம்


செலுத்துவதால் ஜீவனுக்கு பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலை
கிடைப்பதில்லை.

உலகியல் பற்று கொண்ட மனதை இடைவிடாத பக்தி யோகத்தாலும்,


வைராக்யத்தாலும் மெல்ல மெல்லத் தன்வயப்படுத்த வேண்டும்.

மிகவும்‌ ஈடுபாட்டுடன் அப்யாசம் செய்து, சித்தத்தை ஒரு நிலைப்படுத்தி,


ஆன்மா வேறு, ப்ரக்ருதியின் உருவான உடல் வேறு என்று அறியவேண்டும்.
பக்தியுடன் தேனினும்‌இனிய திருக்கதைகளைச் செவியாரப் பருக வேண்டும்.

எல்லா ஜீவராசிகளிடமும் பகைமை பாராட்டாமல் அன்புடன்‌பழகவேண்டும்.


புலனடக்கத்துடன் இறைச்சிந்தனை தவிர மற்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பகவத் அர்ப்பணமாக உறுதியுடன் தன் கடைமைகளைச் செய்யவேண்டும்.


மிதமான ஆகாரம் ஏற்று ஸாது சங்கத்தில் எப்போதும்‌இருக்கவேண்டும். மற்ற
சேர்க்கையைத் தவிர்க்க வேண்டும்.

தேகத்திலோ, அதைச் சார்ந்திருக்கும் மனைவி, மக்களிடமோ, நான் எனது


என்ற வண்
ீ அபிமானம் கொள்ளாதிருக்க வேண்டும்.

ப்ரக்ருதி வேறு, புருஷன் வேறு என்ற அறிவால் ஜாக்ரத்(விழிப்பு), ஸ்வப்ன


(கனவு), ஸுஷுப்தி (தூக்கம்) முதலிய நிலைகளைக் கடக்க வேண்டும்.
இவ்வாறு செய்பவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ரும்மத்தையே
அடைகிறான்.

நீர் நிலைகளில் நீரில் தோன்றும் சூரியனின் ப்ரதிபிம்பம், அருகிலிருக்கும்


சுவற்றில் ப்ரதிபலிக்கும். அதைப் பார்த்தாலும், நாம் அறிவது என்ன?
ஆகாயத்தில் சூரியன் இருக்கிறான் என்பதேயாகும்.

அதுபோல், ஆழ்ந்த உறக்கத்தில் அனைத்து புலன்களும் அஹங்காரத்தில்


ஒடுங்கி விடுகின்றன. அப்போது விழிப்பு, உறக்கம், கனவு மூன்று
நிலைகளிலும் சாட்சியாக விளங்கும் ஜீவாத்மா விழிப்புடன் இருக்கிறது.
அதனால்தான், உறங்கி எழுந்ததும் 'நான் நன்றாகத் தூங்கினேன்' என்று
சொல்ல முடிகிறது.

மற்ற புலன்கள் செயலற்றுக் கிடப்பினும் ஜீவன் விழிப்புடன் இருப்பதாலேயே


உடலில் உயிர்ப்புத்தன்மை இருக்கிறது. இல்லையெனில் உடலின் பெயர்
வேறாகிவிடும்.

விழித்துக்கொண்டிருக்கும்போது இந்திரியங்கள் செயல்படக் காரணம்


அந்தர்யாமியான பகவான் என்று புரிந்துவிடும். உறங்கும்போது புலன்கள்
செயலற்றிருப்பதால் அந்தர்யாமி இல்லை என்றாகிவிடாது.

156
உண்மையில் ஆழ்ந்த உறக்கத்தில் இல்லாமல் போவது அஹங்காரமும்
புலன்களின் உணர்வும் மட்டுமே. உறக்கத்தில் அஹங்காரம் செயலற்றுப்
போவதால் தானே இல்லாமல் போய்விட்டதாக நினைக்கிறான்.

உறக்கத்தில் அஹங்காரம் தொலைந்து ஜீவன் விழிப்புடன்தான் இருக்கிறது.


அம்மா! மேற்கூறிய அனைத்தையும்‌ ஆராய்ந்து விவேகத்துடன்
பரமாத்மாவை அறிந்து கொள்ள வேண்டும் என்றார் கபிலர்.

மிகவும்‌ மகிழ்ந்த தேவஹூதி, நம் பொருட்டு மேலும் கேள்விகள் கேட்கத்


துவங்கினாள்.

ஸ்ரீமத் பாகவதம் - 90-விதுர மைத்ரேய ஸம்வாதம்‌- 34

இறைவனை மகனாகப் பெற்ற தேவஹூதி, குருவிடம் சிஷ்யை கேட்பது


போல் கேட்டாள்.

ப்ரும்மத்தை அறிந்த ஞானியாகிய என் ப்ரபுவே! ப்ரக்ருதியும்‌ புருஷனும்


ஒன்றையொன்று தழுவிய நித்ய வஸ்துக்கள். ப்ரக்ருதி புருஷனை விட்டுப்
பிரிவதே இல்லை.

பூமியும் அதன் குணமான மணமும், நீரும் அதன் தன்மையான சுவையும்


எப்படி ஒன்றை விட்டு ஒன்று பிரியாதோ அவ்வாறே ப்ரக்ருதியும் புருஷனும்
பிரிவதில்லை.

இயற்கையில் ஆன்மா செயலற்றதாக இருப்பினும் ப்ரக்ருதி அவனை


செயல்பட வைக்கிறது. ப்ரக்ருதியோடு சம்பந்தம்‌உள்ளவரை ஆன்மாவிற்கு
சுதந்திரம்‌இல்லையே! பிறகு எப்படி விடுபடும்? என்றாள்.

பகவான் சிரித்தார். பின்னர் கூறலானார்:

அம்மா! அக்னியை உண்டாக்க அரணிக்கட்டையை கடைவது வழக்கம்.


அக்னியானது தான் தோன்றக் காரணமாயிருக்கும் அரணிக்கட்டையையே
எரித்துவிடும்.

விறகடுப்பை எரிக்க ஒரு குச்சியைப் பயன்படுத்துவோம். அந்தக் குச்சியால்,


மற்ற விறகுகளை அடுப்பில் தள்ளுவோம். கடைசியில் இவ்வளவு நேரமாக
அடுப்பை எரிக்க பயன்படுத்திய குச்சியும் அடுப்பினுள்ளேயே போடப்பட்டு
எரிந்துபோகும்.

ப்ரக்ருதியால் உண்டாக்கப்பட்ட புத்தி, மனம், இந்திரியங்கள்‌ ஆகியவை


ப்ரக்ருதியை எரித்து விடும்.

எப்படி என்றால், ஸ்வதர்மத்தை, அதாவது தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட


கர்மத்தை ஒருவன் பலனை எதிர்பார்த்து செய்யாமல், பகவத் அர்ப்பணமாகச்
செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் மனத்தூய்மை ஏற்படும். அதனால்,
இறைவனின் திருவிளையாடல்கள் பற்றிய கதைகளில் ஊக்கம் ஏற்படும்.
அதனால் தீவிரமான பக்தி ஏற்படும். அதன் மூலம் தத்துவத்தை உணரும்

157
அறிவும், திடமான வைராக்யமும், சித்தம் ஒருமைப்படுவதால் புருஷனுடைய
அறியாமை நாளடைவில் குறைந்துகொண்டே வந்து பின்னர் முற்றிலும்
அழிந்துவிடும்.

கனவில் வரும் பற்பல துன்பங்களால் கனவில் மிகவும் கஷ்டப்படுகிறான்.


விழித்துக்கொண்ட பின்னர், கனவில் வந்த கஷ்டங்கள் அவனைப்
பாதிக்கவில்லை என்று உணர்கிறான்.

அதுபோல் உண்மை நிலையை உணர்ந்தவனை ப்ரக்ருதியால் சம்சார


பந்தத்தில் சிக்கவைக்க முடியாது. இவ்வாறு ஒருவன் பற்பல பிறவிகள்
தோறும் பகவானான என்னைப் பற்றிய நினைவாகவே வெகுகாலம்‌
இருப்பானாகில், அவனுக்கு ப்ரும்மலோகம் உள்பட அனைத்து
போகங்களிலும் வெறுப்பு தோன்றி வைராக்யம்‌சித்திக்கும்.

அம்மா! வைராக்யம்‌ கைவரப்பெற்ற என் பக்தன் மிகுந்த துணிவுடையவன்


ஆகிறான். என் கருணையினால், தத்வங்கள் அனைத்தின் ஸாரமான
காண்பதனைத்தும் பொய், இறைவனே சத்யம் என்ற அனுபவத்தை
பெறுகிறான். அவனது அத்தனை சந்தேகங்களும்‌நீங்கப்பெறுகிறான்.

தேகமே ஆன்மா என்ற அபிமானம் அவனை விட்டொழியும். சூக்ஷ்ம உடலை


விட்டு யோகிகள் எப்படி திரும்பி வர இயலாத இடத்தை அடைகிறார்களோ,
அதே இடத்தை என் பக்தன் அடைகிறான். அவ்விடம் கைவல்யம் எனப்படும்
ஆனந்தவடிவான என் உலகமே ஆகும்.

அஷ்டமா சித்திகளும் கடினமான யோக சாதனையால்‌மட்டுமே கைகூடும்.


வேறு சாதனைகளால் அவற்றை அடைய முடியாது. ஆனால், பக்தியோகம்‌
கூடியவனுக்கு அணிமாதி சித்திகள் தானே கைகூடும். அவை மாயையே
உருவானவை. ஆகவே மனதை தன்பால் இழுத்துவிடும். உலகியல்
தளைகளை மேன்மேலும் தோற்றுவிக்கும். அவைகளில் பற்று வைப்பவர்கள்
மீ ளவே இயலாத சம்சாரக் கடலில் விழுந்து விடுகிறார்கள்.

பக்தியோகம் கைவரப் பெற்றவர் அவற்றில் மனம் வைக்காமல்


இருப்பாராயின், உலகியல் பற்றுக்களிருந்து விடுபட்டு, உடலின் தொடர்பு
நீங்கி, மரணபயமற்ற ஆனந்தமே வடிவான என் பரமபதத்தை அடைந்து
விடுகிறார். இதற்குச் சிறந்த உதாரணம்...

குருவிடம் பக்தி செலுத்திய கணிகண்ணன் கிழவியைக் குமரியாக்கினார்.


ஆனால், அந்த சித்தியில் மயங்காமல், குருவருளால் நிகழ்ந்ததென்று
அர்ப்பணம் செய்தார். அந்த கணிகண்ணன் ஊரை விட்டுப் போனால், அவர்
பின்னால், குருவான திருமழிசை ஆழ்வாரும், பகவானும், காஞ்சியில்
இருக்கும் தெய்வங்களும் நடந்து போகிறார்கள்.

ஸ்ரீமத் பாகவதம் - 91-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 35


த்யான யோகம் - 1

158
பக்தியோகத்தை ஐயம் திரிபற விளக்கிய கபில பகவான், தேவஹூதியைப்
பார்த்து மேலும் சொன்னார்:

அம்மா! நீங்கள் ஓர் அரசகுமாரி. தங்களுக்கு இப்போது த்யான மார்கம் பற்றி


சொல்கிறேன்.

த்யானம் என்பது ஏதாவது ஒரு உருவத்தை தொடர்ந்து மனதில் நினைப்பது.

இதற்கு யமம், நியமம், ஆசனம், ப்ராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணை,


த்யானம், ஸமாதி என்று எட்டு படிகள் உண்டு.

தன் சக்திக்கேற்ப வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தல்.

தன் வர்ணாஸ்ரமத்திற்கு ஒவ்வாத கர்மங்களைத் தவிர்த்தல்.

இறையருளால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்தல்.

சான்றோர்களின் திருவடியை அண்டி நிற்றல்.

அறம், பொருள், இன்பம் இவற்றை பெரிதாக எண்ணி அவற்றிற்காக


பெருமுயற்சி கொள்ளாதிருத்தல், (அதாவது உலகியல் சுகங்களிலேயே
எப்போதும் உழலாமை).

முக்தி நெறிக்கு அழைத்துச் செல்லும்‌செயல்களில் ஈடுபாடு.

மிகத் தூய்மையான உணவு ஏற்றல் (இரண்டு பாகம் அன்னம், ஒரு பாகம்‌


நீர்,
ஒரு பா‌கம் காற்று உலாவ இடம்).

மக்கள் நடமாட்டம்‌அதிகமற்ற பாதுகாப்பான இடத்தில் தனித்திருத்தல்.

அஹிம்சை, சத்தியத்தையே பேசுதல்.

தேவைக்கு மேல் பொருள் சேர்க்காதிருத்தல்.

புலனடக்கத்துடன் ப்ரும்மசர்ய விரதம் ஏற்றல்.

அறநெறிகளை கடைப்பிடிக்கும்போது நேரும் துன்பங்களைப் பொறுத்தல்.

அறநெறி நூல்களைக் கற்றல்.

இறையைப் பூஜித்தல்.

ஆகியவை யமம் மற்றும் நியமத்தில் அடங்கும்.

தூய்மையான ஓரிடத்தில் ஆசனத்தை அமைத்து, அதில் நெடுநேரம்


அமர்ந்திருப்பினும் களைப்பு ஏற்படாமல், உடலில் அசைவுகளற்று நேராக
இருக்கும்படி அமரவேண்டும். பின்னர் ப்ராணாயாமம் செய்யப் பழக
வேண்டும்.

159
பூரகம், கும்பகம், ரேசகம் என்ற முறையிலோ, அனுலோமம், ப்ரதிலோமம்
என்ற முறையிலோ சுவாசத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால் சித்தம் ஒருநிலைப்படும். காற்று, தீ இவைகளால் காய்ச்சப்பட்ட


தங்கம் சுத்தமாவதுபோல், சுவாசத்தை தன்வயப்படுத்தினால் ரஜோகுணமும்
அதன் தீமைகளும் அடங்கி மனம் சுத்தமாகும்.

யோகியானவன் ப்ராணாயாமத்தால் வாதம், பித்தம்,:கபம் போன்றவைகளின்


வேறுபாட்டால் உடலில் ஏற்படும் தீமைகளையும், தாரணையால்
பாவங்களையும், ப்ரத்யாகாரத்தினால் உலகியல் விருப்பங்களையும்
போக்கிக்கொள்ள வேண்டும்.

த்யானத்தினால் ராகத்வேஷங்களை ஒழித்து இறைவனிடத்தில் நெருங்க


வேண்டும்.

பழங்காலத்தில் பெரிய பணக்காரர்கள், பாதுகாப்பிற்காக வட்டுச்


ீ சுவர்களில்
ஆங்காங்கு தங்கம், நகைகளைப் புதைத்து வைப்பார்கள்.

பிற்காலத்தில் வட்டை
ீ மராமத்து செய்வதற்காக சுவற்றில் எங்கு இடித்தாலும்,
திடீர் திடீரென்று தங்கக்காசுகளும், நகைகளும் கொட்டும்.

அதுபோல், ஸ்ரீ மத் பாகவதத்தில் 18000 ஸ்லோகங்களில் எந்த ஸ்லோகத்தில்


கை வைத்தாலும், அதிலிருந்து ஒரு அற்புதமான பக்தி பாவம், நாம மஹிமை,
ஸாது மஹிமை, இறைவனைப் பற்றிய ஒரு செய்தி, ப்ரார்த்தனை, ரூப
வர்ணனை என்று கொட்டுகிறது.

மீ ண்டும் மீ ண்டும் பகவானின் ரூபவர்ணனை ஏராளமான இடங்களில்


வருவதால், ஸ்ரீமத்பாகவத பாராயணமும், கதா ச்ரவணமுமே த்யானத்தின்
பலனைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீமத்பாகவத்தின் சிறப்பே அதுதான்.

த்யான யோகத்தின் 6 படிகளை பற்றிச் சுருங்கச் சொன்ன கபிலர், த்யானம்


செய்யவேண்டிய ரூபத்தை 21 ஸ்லோகங்களில் மிக விரிவாக வர்ணிக்கிறார்

160
ஸ்ரீமத் பாகவதம் - 92--விதுர மைத்ரேய ஸம்வாதம் - 36-
த்யான யோகம் - 2

த்யான யோகத்தின் எட்டு படிகளை விளக்கிக் கொண்டிருக்கும் கபில பகவான்


இப்போது த்யானம் செய்ய வேண்டிய ரூபத்தை வர்ணிக்கிறார் :

மலர்ந்த செந்தாமரை போன்ற முகம் தாமரையிதழ் போல் பிரிந்து


செவ்வரியோடிய நீண்ட பெரிய விழிகள்.

நீலோத்பல (கருநெய்தல்) மலர் போன்ற கருநீலத் திருமேனி கைகளில் சங்கம்,


சக்ரம், கதை, அரையில் மலர்ந்த தாமரை மலரின் மகரந்தம் போல்
பொன்னிறப் பட்டாடை திருமார்பில் ஸ்ரீ வத்ஸம் என்ற மரு.

கழுத்தில் அழகிய கௌஸ்துப ஹாரம் மார்பில் கொழுத்த வண்டுகள்


கூட்டமாய் மொய்க்கும் வனமாலை, விலை உயர்ந்த மாலைகள்

கைகளில் கைவளைகள்

தலையில் நவரத்ன கிரீடம்

தோள்களில் தோள்வளைகள்

அரையில் தங்க அரைஞாண் கயிறு

திருவடிகளில் சிலம்புத்தண்டைகள்

பக்தர்களின்‌
ஹ்ருதய கமலமே அவரது ஆசனம்

ஆயிரமாயிரம் கண்கள் கொண்டு பார்த்துக்கொண்டே இருந்தாலும்


தெவிட்டாத சாந்தமான அழகான திருமேனி

இப்படிப்பட்ட பூரண அழகுடைய பகவானை மனம் ஒருநிலைப்படும்வரை


த்யானிக்கவேண்டும்.

பகவானின் லீலைகள் அனைத்தும் மனதைக் கவர்ந்திழுக்கக் கூடியவை.


ஆகவே நின்ற திருக்கோலம், உலாவரும் கோலம், அமர்ந்த திருக்கோலம்,
சயனத் திருக்கோலம், இதயாகாச குகையில் இருக்கும்‌ திருக்கோலம்,
இன்னும்‌அவரவர் மனத்திற்கேற்ப பற்பல கோலங்களிலும் த்யானிக்கலாம்.

பின்னர் படிப்படியாக பகவானின் ஏதாவதொரு அங்கத்தில் மனத்தை


நிறுத்தவேண்டும்.

பகவானின் திருவடித் தாமரைகளை முதலில் த்யானம் செய்யவேண்டும்.

அத்திருவடிகள் த்வஜம், அங்குசம், வஜ்ரம், தாமரை முதலிய ரேகைகள்‌


கொண்டது. சற்றே எடுப்பான சிவந்த நகங்களின்‌காந்தி, நிலவு போல் அடியார்
மனதிற்கு குளுமை தந்து சாந்தி தர வல்லது.

161
திரிவிக்ரம அவதாரத்தின் போது ஸத்யலோகம் வரை நீண்ட இத்திருவடிகளை
ப்ரும்மா கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய அந்த நீரானது கங்கையாயிற்று.

அந்த கங்கையைத் தலையில் தரித்தார் சிவன்.

இந்திரனின் வஜ்ராயுதம் மலைகளைப் பொடிப்பொடியாக்கியதுபோல்,


இத்திருவடிகள் பக்தர்களின் மலைபோன்ற பாவக்குவியலை பொடிப்
பொடியாக்குகின்றது. அத்தகைய திருவடிகளை வெகுநேரம் தியானம்
செய்யவேண்டும்.

அதன்பின் அவரது கரங்களால் அடிக்கடி வருடப்படும் முழந்தாள்களை


தியானம் செய்தல் வேண்டும்.

மிகவும் வலுவான பகவானின் தொடைகள் கருடனால் சுமக்கப்படுவது.


அவற்றை மனத்தில் நிறுத்தவேண்டும்.

பின் பகவானது தொப்புள் கொடியையும், அதைக்கொண்ட திருவயிற்றையும்


தியானம் செய்யவேண்டும்.

ஸகல உலகங்களுக்கும் தோற்றுவாய் அதுதானே. அதன் பின்


முத்துமாலைகள் தவழும் மரகத மலைத்தடம் போன்ற திருமார்பை தியானம்
செய்யவேண்டும்.

அத்திருமார்பில் அல்லவோ மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்?

நினைப்பவர்க்கு மனநிறைவை அளிப்பது. கண்களுக்கு விருந்தாவது.


கௌஸ்துபமணி திகழும் அத்திருமார்பகத்தை வெகுநேரம்
தியானிக்கவேண்டும்.

பகவானின் நான்கு நகரங்களும் எண்டிசை லோகபாலர்களின் இருப்பிடம்.


மந்தர மலையை மத்தாக நிறுத்தி அமுதம் கடைந்தபோது கலகலவென்று
உராய்ந்த பளபளக்கும் பொன் வளைகள் மிளிரும் திருக்கரங்களை தியானம்
செய்யவேண்டும்.

ஒரு கரத்தில் ஆயிரம் சூரியன்போல் ப்ரகாசிக்கும் சக்கரப்படை. மறுகரத்தில்


தாமரைமேல் வற்றிருக்கும்
ீ அன்னம்போல் வெண்சங்கம். இவற்றையும்
தியானம் செய்தல் வேண்டும்.

பகைவர்க்கு எமனாகும் கதை, வண்டுகள் மொய்க்கும் வனமாலை,


ஜீவன்களின் ஆத்ம தத்வமான கௌஸ்துபம் இவற்றை தியானம்
செய்யவேண்டும்.

தன்‌
அடியார்களுக்கு அருள் வழங்கவே பகவான் பற்பல அவதாரங்களை
மேற்கொள்கிறார்.

காதுகளில் ஊஞ்சலாடும் மகரகுண்டலங்களின் ஒளி கன்னத்தில்


எதிரொளிக்கும். அழகு மிகுந்த தோற்றம். எள்ளுப்பூ போன்ற எடுப்பான நாசி.

162
அன்றலர்ந்த தாமரைபோல் விளங்கும் திருமுகத்தை தியானம்
செய்யவேண்டும்.

முன்நெற்றி முடிகள் சுருண்டு தவழும் திருமுகமண்டலம்.

தாமரைபோன்ற திருக்கண்கள். அசைந்து அசைந்து சுற்றி வரும்


வாளைமீ ன்களாய் விழிகள்.

உயர்ந்து அழகுற விளங்கும் புருவங்கள்.

பகவானின் பார்வையை ஹ்ருதயத்தில் நிறுத்தி தியானிக்கவேண்டும்.

கருணையும் அன்பும் பெருக்குவது. அருள் மழை பொழிவது.

அதன் பின் பகவானின் புன்னகையை தியானம் செய்தல் வேண்டும்.

தன் திருவடிகளில் அண்டி நிற்கும் அடியார்களின் சோகக்கடலை கணத்தில்


வற்றச் செய்வது அது.

பகவானின் திருமேனி அழகில் எளிதில் தியானத்தில் நிற்பது அவரது


புன்சிரிப்பே ஆகும். சிவந்த இரு உதடுகளின் காந்தி, மல்லிகை
மொட்டுக்கள்போல் அழகான சிறு பல்வரிசையில் பட்டு பற்கள் சற்றே
சிவந்தது போல் காணப்படுகின்றன.

(புன்னகையொன்றினால் கர்தமரை ஆட்கொண்டார் பகவான். பகவானின்


புன்னகை அழகு அவர் முகத்தில் தெரிய, தேவஹூதி மயங்கி அவரைத்
திருமணம் செய்தாள். கடைசியாகச் சொல்வதே தியானத்தில் நிற்கும்.
தேவஹூதி ஏற்கனவே புன்னகை அழகில் ஈடுபட்டவள் என்பதால் அவளுக்கு
அது சுலபமான தியானப்பொருளாகும் என்று நினைத்து கடைசியாக அதையே
அவளது நினைவில் நிறுத்துகிறார் போலும்).

இவ்வாறு பகவானை தியானம் செய்ய செய்ய அவர்மீ து அளவிலாக் காதல்


பெருகும்‌ . பக்தியினால் உளமுருகும். ஆனந்ததினால் உடல் புல்லரிக்கும்.
ஆனந்தக் கண்ண ீர் பெருகும். இதுவரை புத்தியினால் தியானரூபத்தைப்
பிடித்துக் கொண்டவர்க்கு, இனி புத்தியின் செயல்பாடுகளும் நின்றுபோகும்.
அதாவது மீ ன் பிடிக்கப் பயன்பட்ட வலை, மீ னைப் பிடித்ததும்
கைவிடப்படுவதுபோல்.

அதன்பின் அவன் எங்கும் எதிலும் பகவானையே காண்பான். தனியாக பகவத்


தியானம் அவசியமற்றுப்போகும்.

163
ஸ்ரீமத் பாகவதம் - 93 -விதுர மைத்ரேய ஸம்வாதம்‌- 37

ஆத்ம ஸாக்ஷாத்காரம்‌ அடைந்தவனுக்கு தன் உடல் பற்றிய நினைவு


இருப்பதில்லை. உட்கார்ந்திருக்கிறானா, நிற்கிறானா, நடக்கிறானா, திரும்பி
வந்துவிட்டானா என்பதும் தெரியாது.

உடல் இருந்தபோதிலும், அதிலிருந்து வேறுபட்டே நிற்கிறான்.

இவ்வுடல் முன்வினைக்கு அடிமைப்பட்டது. கர்மப்பயனை அனுபவித்து


முடியும்வரை பொறி புலன்களுடன் தான் இருக்கும்.‌

ஆனால், பக்தியோக ஸமாதியை அடைந்தவன், இறை தத்வத்தின்


உண்மையை அறிந்தவன் இவ்வுடலையோ, அதைச் சார்ந்த உறவுகளையோ
தனதென்று நினைப்பதில்லை.

கனவில் கண்ட உடல், கனவு உள்ளவரை‌உண்மையென்று தோன்றும். கனவு


கலைந்ததும் அவ்வுடலின் நினைவு மறைந்துவிடும். உடலிலிருந்து கொண்டே
சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கும் பரமன் உடலிலிருந்து வேறுபட்டவனே.
தனித்தவன்.

ஒரு கட்டை தீப்பற்றி எரியும்போது தீப்பொறி, புகை எல்லாம் உண்டாகிறது.


ஆனால் அவை தீ இல்லை. கட்டையையும் தீ என்பதில்லை. தீ கட்டையை
பற்றிக் கொண்டிருக்கிறது.

அதுபோலவே உடலில் குடியிருக்கும் ஜீவன் உடலில் இருக்கும்


பஞ்சபூதங்கள், பொறி, புலன்கள், அந்தக்கரணம் (புத்தி, மனம், சித்தம்)
ஆகியவற்றை இயக்குகிறது. ஆனால் சாட்சியாகவே இருக்கிறான்.
அவற்றோடு சம்பந்தப்படுவதில்லை.

வளியை வாகனமாய்க் கொண்ட ஜீவனும்

குடியேறிய காயமிது - உந்திப்பற

ஒருநாள் பறந்திடும் - உந்திப்பற

அண்டஜம் (முட்டையிலிருந்து தோன்றியவை)

ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து தோன்றியவை)

உத்பிஜம் (விதையிலிருந்து தோன்றியவை)

ஜராயுஜம் (கருவில் தோன்றியவை)

ஆகிய அனைத்து ஜீவராசிகளும் உடலால் வேறுபட்டவை. ஆனால்,


பஞ்சபூதங்களிலிருந்து தோன்றியவைதாம். அதனால் எல்லா ஜீவன்களிலும்
தன்னையும், தன்னுள் எல்லா ஜீவன்களையும் பார்க்க வேண்டும்.

164
எரியும் தீ அனைத்தும் ஒன்றே. ஆனாலும் அது பற்றியிருக்கும் பொருளின் நீள
அகலத்தைப் பொறுத்து மாறுபாட்டுடன் தெரிகிறது. அதுபோல் ஜீவன், தான்
அண்டியிருக்கும் குணம், உருவம் ஆகிய வேறுபாடுகளால் பலவாறாகத்
தெரிகிறது.

வெல்லம் வார்க்கப்படும் அச்சைப் பொறுத்து தெரிவது போல். வளையல்,


தோடு, மாலை என்று விதம் விதமாக அலங்கரித்துக் கொள்கிறோம். ஆனால்,
அவற்றைத் திருட வருபவனுக்கு ரூபம் தெரிவதில்லை. அனைத்தும் தங்கம்
என்று ஒரே விஷயமாகத் தெரிகிறது.

ப்ரக்ருதி என்பது பகவானின் ஒரு அம்சம். உண்மையான பகவத் தத்வத்தை


மறைக்கும் திரை. அதுவே மாயை. அதுவே அனைத்திற்கும் காரணமாகவும்
அதிலிருந்து தோன்றும் காரியமாகவும் இருக்கிறது. இவ்விதமானதென்று
அறியவொண்ணாதது.

அதை பக்தன் பகவானின் அருளாலேயே வெற்றிகொண்டு ப்ரும்ம


ஸ்வரூபமாகவே ஆகிவிடுகிறான்.

ஸ்ரீமத் பாகவதம் - 94-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 38

தேவஹூதி கபில பகவானைப் பார்த்துச் சொன்னாள்:

ப்ரபோ! ஸாங்க்ய சாஸ்திரத்தில் கூறியவாறு மஹத் தத்வம், புருஷன்,


ப்ரக்ருதி ஆகியவற்றின் இலக்கணங்களையும், அவற்றை தனித்தனியே
பிரித்தறியும் வழியையும் ஸாங்க்ய யோகத்தின் லட்சியமே பக்தி
யோகம்தான் என்றும் கூறின ீர்கள்.

ஜீவராசிகள் பிறப்பு, இறப்பு என்னும் பற்பல வழிகளில் உழல்கின்றனவே.


எதனால் அப்படி?

இதைக்‌கேட்டறிந்தால் உலக விஷயங்களில் வெறுப்பு தோன்றுமல்லவா?

ப்ரும்மா முதலியவர்களையும் கட்டுப்படுத்தும் உங்கள் காலஸ்வரூபத்தைப்


பற்றி சொல்ல வேண்டும். காலனைப் பற்றிய பயத்தால்தான் மக்கள்‌
சிறிதளவாவது நற்காரியங்களைச் செய்கின்றனர்.

கபிலர் கூறலானார்:

பக்தியோகத்தில் பல வழிகள் உண்டு. அவரவர் மன இயல்பிற்கேற்ப பல


பிரிவுகளைக்கொண்டது.

படம், சிலை ஆகியவற்றில் என்னை நினைத்து பூஜை செய்வார்கள். உலகியல்


இன்பங்கள், புகழ், செல்வம் வேண்டுமென்று பூஜை செய்வார்கள். பகவான்
தனது அந்தராத்மா என்று அறியாமல் செய்யப்படும் பூஜை ராஜஸ
பூஜையாகும். இவனது வேண்டுதலின் பலனுக்கேற்ப பக்தியும் குறையும்.

165
தன் பாவங்கள் தொலைய வேண்டும். செய்யும் பூஜையின் பயனையும்
பகவானுக்கு அர்ப்பணம் செய்து அதனால் பகவான் மகிழ வேண்டும். இது
அறநெறி. இதைச் செய்வது நமது கடைமை என்று செய்யப்படும் பக்தி சாத்வக

பக்திதான். ஆனால் ஒட்டுதல் இல்லை.

பெருக்கெடுத்து வரும் கங்கை வழியில் ஏற்படும் அத்தனை தடைகளையும்


மீ றிக்கொண்டு கடலைக் குறித்தே ஓடுகிறது. அதுபோல், பகவானின் கல்யாண
குணங்களைக் கேட்டு ஹ்ருதய வாசியான என்னை நோக்கி, எவ்விதச்
சலனமும் இன்றி, பயனை எதிர்நோக்காமல் மனம் தேடி ஓடி வரவேண்டும்.

தைலதாரை போன்று இடையறாத இறைச் சிந்தனை இயல்பாக


இருக்கவேண்டும். இதுவே பக்தியோகத்தின் இலக்கணம்.

தாய்க்கு குழந்தையைப் பற்றிய சிந்தனை இயல்பாகவே இடையறாது


ஏற்படுவதுபோல் உள்ளம் பகவானிடம் ஓடிவருவதே பக்தி.

இவ்விதமாக பக்தி செய்யும் பக்தன் வைகுண்ட வாசத்தையும் கூட


விரும்பமாட்டான். எப்போதும் என் சேவையிலேயே த்ருப்தி அடைவான்.

இத்தகைய பக்திதான் அடைய வேண்டியதாகும். இதனால் அவன்


முக்குணங்களைத் தாண்டி அன்பே உருவான என் ஸ்வரூபத்தில்
ஐக்கியமாகிறான்.

பகவானது கல்யாண குணங்களைக் கேட்டதும் எப்படி பக்தி வரும்?


என்று கேட்டாள் தேவஹூதி.

கபிலர் சிரித்துக்கொண்டே கூறினார்.

ஒருவன் நித்ய கர்மாக்களை பயன்‌கருதாமல் செய்ய வேண்டும். யாருக்கும்


எவ்விதத் துன்பமும் தராத செயல்களையே செய்ய வேண்டும்.
சாஸ்திரங்களில் சொல்லியவாறு பூஜை செய்யவேண்டும்.

எனது அர்ச்சாவதாரத்தை தரிசித்தல், தொட்டு நீராட்டுதல், அர்ச்சனை


செய்தல், ஸ்துதி செய்தல்,
வணங்குதல்,
உலகப்பற்றை விடுதல்,
எல்லா ஜீவராசிகளிடமும் என்னை உணர்தல்,
தைரியமாகவும், வைராக்யத்தோடும் இருத்தல்,
பெரியோர்களிடம்‌மரியாதை,
ஏழை எளியோரிடம்‌கருணை,
எனது திருநாமங்களை உரக்கச் சொல்லி மகிழ்தல்,
மனதை ஒடுக்குதல்,
எப்போதும் ஸத்சங்கத்தில் இருத்தல்

ஆகிய குணங்களை ஒருவன்‌ கைக்கொள்வானாயின் எவ்வித முயற்சியும்


இன்றி அவன் மனத்தூய்மை பெற்று எளிதாக பக்தியும் பெறுவான்.

166
சிலையில் மட்டும் என்னைக் கண்டு, மற்ற ஜீவராசிகளிடம் என்னை
உணராமல் வெறுப்பைக் காட்டுபவன் என்னை அவமதிப்பவனாகிறான்.
இதனால் அவனுக்கு மன அமைதி ஏற்படாது.

பிற உயிர்களை மதிக்காது எவ்வளவுதான் என்னை விதிப்படி பூஜித்தாலும்,


நான் உகப்பதில்லை.

பூஜையின் நோக்கமே நான் எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக இருகிறேன்


என்பதை உணர்வதுதான்.

பிற உயிர்களிடம் வேற்றுமை பாராட்டுபவனுக்கு மரணபயம்‌உண்டு.

ஸ்ரீமத் பாகவதம் - 95 -விதுர மைத்ரேய ஸம்வாதம் - 39

கபிலர் கூறலானார்:

மனுவின் மகளே! என் அன்புத்தாயே!

இதுவரை பக்தியோகம்‌n, அஷ்டாங்க யோகம் இரண்டையும் கூறினேன்.


இவற்றில்‌ ஏதாவதொன்றை கைக்கொண்டு சாதனை புரிந்து இறைவனை
அடையலாம்.

வேதாந்தி பரப்ரும்மம்‌ என்கிறான். யோகி பரமாத்மா என்கிறான். பக்தன்


பகவான் என்கிறான். இவன் தான் புருஷனும், ப்ரக்ருதியும். இறைவன் இவை
இரண்டிற்கும் அப்பால் உள்ளவன்.

ஜீவனுக்கு அவரவர் கர்ம வினைக்கேற்ப பலனை அளிப்பதால் விதி என்றும்‌


கூறுவர்.

பகவானுக்கு காலம் என்கிற பெயருண்டு. இது ஜீவன்களுக்கு பயத்தைக்


கொடுக்கிறது.

தான் வேறு பகவான் வேறு என்ற பேதபுத்தியுடன் அலைபவனுக்குத்தான்


காலத்திடம் பயம்.

காலஸ்வரூபனான பகவான் ஜீவன்களுக்குள் புகுந்து அவற்றைக் கொண்டே


அவற்றை அழிக்கிறார்.

காலரூபனான பகவானுக்கு நண்பன், பகைவன் எவரும்‌இலர். காலம் மிகுந்த


ஊக்கத்துடன், பகவானை மறந்து போகத்தில் திளைப்பவனுக்கு நோயாக
உள்நுழைகிறார்.

காலத்திடம் பயம் கொண்டே சூரியன் உதிக்கிறான். மேகம்‌மழை பொழிகிறது.


நட்சத்திரங்கள்‌ ப்ரகாசிக்கின்றன. மரம், செடி, கொடிகள், மூலிகைகள்
அனைத்தும் அதனதன் பருவத்தில் பூத்துக் காய்க்கின்றன.

167
இவருடைய கட்டளைப்படியே நதிகள்‌ பாய்கின்றன. கடல் கரையைக்‌
கடக்காதிருக்கிறது. அக்னி சுடர் விட்டு எரிகிறது. மலைகளுடன் கூடிய பூமி
கடலில்‌மூழ்காதிருக்கிறது.

இவருடைய கட்டளையினாலேயே உண்டான பஞ்ச பூதங்கள்‌


ஒன்றையொன்று மிஞ்சாமல் கட்டுப்பாட்டோடு செயல்படுகிறது.

அவரே மரணதேவனான யமனையும் அழித்து ப்ரபஞ்சத்தையும் அழிக்கிறார்‌.


இவ்வளவு சக்தியுடன் இயங்கும் காலரூபனை, பல பிறவிகள் எடுத்தாலும்
ஜீவன்கள் அறிந்து கொள்வதில்லை.

தன் சுகத்திற்காக ஜீவன் பல பொருள்களை சேகரித்து வைக்கிறான். பகவான்


அனைத்தையும் தகுந்த காலத்தில் அழிக்கிறார். ஜீவன் துக்கப்படுகிறான்.

ஜீவன் நரகத்தில் வேதனை அடைந்தாலும், மாயையினால் மதிமயங்கி, உடல்,


மனைவி, மக்கள், செல்வம், உற்றார், உறவினர் என்று மனதை ஆழ ஊன்றி
அனைத்து செல்வங்களையும் பெற்றுவிட்டதாக எண்ணுகிறான்.

குடும்பத்தைக் காக்கும் முயற்சியில் தோல்வி ஏற்படின், பேராசை


கொள்கிறான். மனவலிமை தளர்கிறது. பிறர் செல்வத்தை பறிக்கும்
முயற்சியில் ஈடுபடுகிறான். இவனது சக்தி குறையும்போது மனைவி, மக்கள்
அலட்சியம்‌செய்கிறார்கள்.

இவ்வளவு துன்பம் அனுபவித்தும்‌உலக வாழ்வில் வெறுப்பு கொள்வதில்ல.


மரியாதையின்றி போடப்படும் சோற்றை நாய் போல் உண்டு காலம்
கழிக்கிறான். கடைசியில் காலபாசத்திற்கு ஆட்பட்டு மரணத்தை தழுவுகிறான்.
அப்போது சிவந்த கண்களை உடைய யமதூதர்களைக்‌ கண்டு பயந்து
மலமூத்திரங்களைக் கழிக்கிறான். இறந்த அவனுக்கு யாதனா சரீரம்‌
ஏற்படுகிறது. அதைப் பிடித்துக்கொண்டு தான் ஸ்தூல உடலை விடுகிறான்.
யமதூதர்கள் யாதனா சரீரத்தை கட்டி இழுத்துக்கொண்டு வெகுதூரத்திலுள்ள
யமபட்டணம் செல்கிறார்கள்.

வழியில் யமதூதர்களின் பயமுறுத்தலால் நடுங்குகிறான். தன்‌ பாவச்


செயல்களை நினைத்து வருந்துகிறான்.

வழியில் பசி தாகத்தால் தவிக்கிறான். கொளுத்தும் வெயில். நெருப்புக்காற்று


வசும்‌
ீ வழி. நிற்க நிழலோ, தாகத்திற்கு தண்ண ீரோ கிடைக்காது. நடக்கத்
திராணியின்றி விழும்போது யமதூதர்கள்‌சாட்டையால் அடிப்பார்கள்.

தர்மத்தில் பற்றுள்ள ஸத்புத்ரனைப் பெற்று வளர்த்திருப்பானாகில் அவன்


இவனைக் குறித்துச் செய்யும்‌ கர்மாக்களால் ஜீவனுக்கு வழியில் உணவும்
நீரும்‌கிடைக்கும்.‌

ஆங்காங்கே மூர்ச்சையாகி விழுந்து எழுந்து இருளடர்ந்த பாதையில்


யமதூதர்களால் இழுத்துச் செல்லப்படுகிறான்.

168
யமலோக மார்கம் 7,92,000 மைல்கள் உடையது. இந்த தூரத்தை இரண்டு
அல்லது மூன்று முஹூர்த்த காலத்தில் கடக்குமாறு இழுத்துச்
செல்லப்படுகிறான்.

அங்கு அவனது பாவங்களுக்கேற்ப கட்டைகளை அடுக்கி தீ வைத்துக்


கொளுத்தப்படுகிறான். சிலசமயம் அவன் உடலையே யாரோ வெட்டித்தர,
அதை அவனே உண்ணுமாறு நிர்பந்தப் படுத்தப்படுகிறான்.

யமபுரியில் நாய்களும், கழுகுகளும் இவனது யாதனா சரீரத்தை உயிருடன்


பிடுங்கித் தின்னும். உயிர் போகாது. தேள்கள் கொட்டும்.

அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவார்கள். மலையிலிருந்து


உருட்டுவார்கள். கைகால்களைக் கட்டி நீரில் மூழ்கடிப்பார்கள்.

ஆணோ, பெண்ணோ யாராக இருப்பினும்‌ பாவத்தின் பலனை


அனுபவிப்பதற்கென்றே உண்டாக்கப்பட்ட தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம்,
ரௌரவம் என்ற நரக வேதனையை அனுபவித்தே ஆகவேண்டும்.

தாயே! சிலரோ ஸ்வர்கமும் நரகமும் இந்நிலவுலகிலேயே இருக்கின்றன


என்றும்‌ சொல்கிறார்கள். ஏனெனில்‌ இத்தகைய துன்பங்கள் பூமியிலேயே
காணப்படுகின்றன.

மிகுந்த சுயநலத்தோடு பிறரைத் துன்புறுத்தி தன்னை மட்டும் பேணுபவன்,


இவ்வுலகிலேயே அவனால் ‌பேணப்பட்ட உடலை விட்டுவிட்டு,
குடும்பத்தையும்‌விட்டு இறந்தபின் தன் பாவங்களையே அனுபவிக்கிறான்.

தன் பாவமூட்டைகளே அவனுக்கு சோற்று மூட்டை. தனியொருவனாகவே


நரகத்தை அனுபவிக்கிறான்.

நரகத்தில் பாவத்தின் பலனில் சிறிது அனுபவித்து, பின்னர் நாய், பன்றி,


முதலிய பிறவிகளை எடுத்து பாவத்தைக் குறைத்துக்கொண்டு மீ ண்டும்‌
மனிதப்பிறவியை அடைகின்றான்.

ஆனால், இவ்வளவு துன்பங்களையும்‌ மறந்து மீ ண்டும் ‌பாவத்தைச்


செய்கிறான்.

ஸ்ரீமத் பாகவதம் - 96-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 40

கபிலர் ஜீவனின் நிலையை மேலும் சொல்லலானார் :

தாயே! முற்பிறவியில் தான் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப நரகவாசம்


முடித்தபின், ஜீவன் மீ ண்டும் பிறவியெடுக்கவேண்டி, ஒரு புருஷனின்
வரியத்தில்
ீ விந்து மூலம் நுழைந்து ஒரு பெண்ணின் கருப்பையை
அடைகிறான்.

கர்மங்களை அனுபவித்து தூய்மையாகி வருகிறான் என்றால் அவனுக்கு


கர்மவினைக்கேற்ப பிறவி ஏற்படுவதெங்ஙனம்? முரணாயிருக்கிறதே..

169
- சட்டென்று கேட்டாள்‌தேவஹூதி.

கலகலவென்று சிரித்த கபிலர்,

நன்றாகக்‌கேட்டீர்கள்‌அம்மா!

சில தீய வினைகளின் பயனை ஜீவனின் உடலால் தாங்க இயலாது. எனவே


அவற்றின் பயனை அவன் யாதனா சரீரத்தில் அனுபவித்துக் கழிக்கிறான்.
அதனால் முற்றிலுமாக வினைகள்‌அழிந்து விடுவதில்லை.

மற்றைய பாவ புண்யங்களின் பலனை உடல்‌எடுத்து சுக துக்கங்கள்‌மூலம்


அனுபவித்தே கழிக்க வேண்டியிருக்கிறது. இதில்‌முரண் ஏதுமில்லை அம்மா!
என்று சொன்னதும் சமாதானமடைந்தாள் அன்னை.

தெய்வச் சேய் தொடந்து மானுடச் சேயைப் பற்றிச் சொல்லத் துவங்கியது.

பெண்ணின் கர்பத்தில் புகும் வரியம்‌


ீ ஓரிரவில் அவளின் குருதியில்
கலக்கிறது.

ஐந்து நாள்களில் நீர்க்குமிழி போல் உருக்கொள்கிறது.

பத்து நாள்களில் ஓர் இலந்தைப்பழ அளவு உள்ளதாக ஆகிறது. பின் சில


நாள்களில் மாமிசப் பிண்டமாகவோ, பறவை முதலிய பிறவிகளில்‌
முட்டையாகவோ ஆகிறது.

ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதங்களில் கைகால்களும், மூன்றாவது


மாதத்தில் நகங்கள், எலும்பு, தோல், தோலின் மேல் உரோமங்கள், ஆண்,
பெண் குறிகள், கண், காது, மூக்கு முதலிய துவாரங்களும்‌உண்டாகின்றன.

நான்காம் மாதத்தில் ஏழு தாதுக்களும், ஐந்தாம்‌ மாதத்தில் பசி, தாகம்


முதலியன ஏற்படுகின்றன.

ஆறாம்‌ மாதத்தில் தொப்புள் கொடியுடன் கூடிய ஜவ்வு கருவைச்


சுற்றிக்கொள்கிறது.

இப்போது ஆணாக இருந்தால், வலது புறமாகவும், பெண்ணாக இருந்தால்


இடது புறமாகவும் சுழல்கிறது.

தாய் உட்கொள்ளும் உணவால் ரத்தம், மாமிசம் ஆகியவை வளர்கிறது.

தாய் உண்ணும் சூடான, குளிர்ந்த, காரமான உணவுகள் ஜீவனை பாதிக்கிறது.

அவனைச் சுற்றி மிக மெல்லிய சிற்சிறு ஜவ்வுப்பைகள். அவற்றில் மல


மூத்திரங்கள், பித்த நீர், குழாய்களில் பாயும் உதிரம்.

கருப்பையில் இருக்கும் நீருக்குள் மிதக்கிறான். அதில் உண்டாகும் சிற்சிறு புழு


பூச்சிகள் அவன் உடலைத் தீண்டுகின்றன.

170
அதனால் வேதனையடைகிறான்.

இப்போதெல்லாம் வட்டுக்குள்ளேயே
ீ கழிவறைகள்.

அவை சுத்தமாக இல்லையெனில் அவற்றின் துர்நாற்றம் வட்டுக்குள்



வசினால்
ீ நம்மால் வட்டினுள்
ீ இயங்கமுடியாது.

கருப்பையைச் சுற்றி மெல்லிய ஜவ்வுப்பைகளுக்குள் விதம் விதமான


மலங்களின் துர்நாற்றத்தை சகித்துக்கொண்டு விருப்பமே இல்லாமல் படுத்துக்
கிடக்கிறான்.

கரு, தொப்புள் கொடியால் சுற்றப்பட்டு, ஜவ்வினால்‌ மூடப்பட்டு, முதுகும்


கழுத்தும்‌ வளைந்து கால் மேல்வயிற்றிலும், தலை கீ ழாகவும் இருக்க
கருப்பைக்குள் வாசம் செய்கிறான்.

கைகால்களை அசைக்க இயலாது. நெடுமூச்சு விட இயலாது. அப்போது


தெய்வாதீனமாய் அவனுக்கு தான் செய்த கர்மங்களின்‌
நினைவு வருகிறது.

பாவம்!

ஏழாவது மாதம் முதல் சுகதுக்கங்களைப் பற்றிய நினைவு உண்டாகி,


கருப்பையில் ப்ரசவக் காற்றினால் (சூதிகா வாயு) வருந்தி, அந்த
வயிற்றிலேயே புழுபோல் நில்லாமல் சுழன்றுகொண்டே இருப்பான்.

இவ்வாறு ஏழு தாதுக்களால் ஏற்பட்ட தேகத்திற்குள் அடைபட்டுக் கிடக்கும்


ஜீவனுக்கு உடல் வேறு, ஆன்மா வேறு என்ற ஞானம் தோன்றுகிறது.

இனி என்ன பிறவி வருமோ? என்னென்ன துன்பங்கள் வருமோ?

தன்னைச் சுமக்கும் தாயும், மற்ற உறவினர்களும் இனியாவது பிறவிச்


சுழலிலிருந்து விடுபட உதவி செய்வார்களா? அல்லது, உலக வாழ்க்கையில்
பணம், மற்றும் வசதிகளைத் தேடி உழலும்படி பணித்து விடுவார்களா? என்று
அஞ்சுவான்.

அப்போது தன்னைக் கருப்பையில் இட்ட பகவானை நோக்கி ஒவ்வொரு


ஜீவனும் கரம் கூப்பித் தொழுகின்றது.

ஸ்ரீமத் பாகவதம் - 97-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 41

கர்பத்திலிருக்கும் ஜீவனுக்கு இறைவனின் நினைவு வந்து தொழத்


தொடங்குகிறது.

என்னைப்போன்ற பாவி எவரும்‌ இலர். நான் எவ்வளவோ வாய்ப்புகள்


கிடைத்தும் துர்மதியால் அவரது திருவடிகளைச் சரண்புகவில்லை.

தன்னைச் சரணடையும் உயிர்களைக் காக்கவே அவர் பல்வேறு அவதாரங்கள்


செய்கிறார்.

171
கல்லும் முள்ளும் நிறைந்த நிலவுலகில் திருப்பாதங்கள் நோக அலைகிறார்.
அத்தகைய திருவடிகளை இப்போது சரணடைகிறேன்.

மாயைக்கு ஆட்பட்டு பஞ்சபூதங்களாலும், பத்து பொறிகளாலும் கட்டப்பட்டு


என் முன் வினைப் பயனால் கர்ப்பவாசம் இருக்கிறேன்.

பகவானோ மாயைக்கு ஆட்படாதவர். பூரணஞான வடிவானவர். ஆனாலும்


என் இதயத்திலும்கூட வாசம் செய்பவர். அவரையே சரணமடைகிறேன்.

ஜீவனான நான் உண்மையில் தேகமற்றவன். ஆனால், எனக்கு உடல்


இருப்பதுபோல் தோற்றம் கொண்டிருக்கிறேன்.

ப்ரக்ருதி புருஷனை ஆளும் அந்த பகவானை சரணமடைகிறேன்.

மாயையினால் என் உண்மை ஸ்வரூபம்‌ மறைக்கப்பட்டு ஜனன மரணச்


சுழலில் சிக்கிகொண்டேன்.

உண்மையான ஸாதுக்களின் அல்லது பகவானின் அருளின்றி எப்படி


மீ ண்டுவர இயலும்?

அத்தகைய ஸாது சங்கம் எனக்குக் கிட்டுமோ கிட்டாதோ?

இப்போது எனக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கொடுத்திருப்பவர் அந்த


பகவான் ஒருவரே.

என் மூன்று விதமான தாபங்களையும் போக்கி அமைதி பெற அவரையே


வணங்குகிறேன்.

தாய் என்கிற பெயரில் வேறொரு பெண்ணின் கருப்பையில் விழுந்து


ஜாடராக்னியால் சுடப்பட்டு துன்புறுகிறேன்.

எனக்கு எப்போது விடுதலை கிட்டுமோ?

பத்து மாதங்களே ஆன இந்த ஜீவனுக்கு இப்படிப்பட்ட ஞானத்தை இறைவா!


உங்களைத் தவிர வேறார் அளிக்கமுடியும்?

தம்மைக் கைகூப்பி வணங்குகிறேன்.

பகுத்தறிவு கொண்டு, அனைத்தையும் தெரிந்த உம்மைச் சரணமடைகிறேன்.

இக்கருக்குழியில் எனக்கு மிகுந்த துன்பமாய் இருக்கிறது. ஆனாலும் வெளி


உலகம்‌இன்னும் அதிகமாக அச்சுறுத்துகிறது.

வெளியில் சென்றதும் மாயை சூழும். இவ்வுடலே நான் என்று தோன்றும்.

இந்த ஸம்சாரச் சுழல் எனக்கு மீ ண்டும்‌ நேராவண்ணம் விவேகத்தோடு


பகவான் நாராயணனின் பாதகமலங்களை ஹ்ருதயத்தில் நிறுத்துவேன்.

172
என்றெல்லாம் கருப்பையில் இருக்கும் ஜீவன் வேண்டுகிறது.

பத்து மாதங்கள் கழித்து சூதிகா வாயுவினால் தலைகீ ழாகத் தள்ளப்படுகிறது.

அப்போது அதன்‌மூச்சு தடைபட்டு, உச்சந்தலையில் சடம்‌


‌என்ற‌வாயுவினால்‌
தாக்கப்படுகிறது.

கர்பத்தில்‌ இருந்த சிசு மிகவும்‌ துன்பப்பட்ட போதிலும், ஞானம் இருந்தது.


வெளியில்‌ வரும்போது அந்த ஆனந்தம்‌ சட்டென்று மறந்துவிடுவதால்
'தேகமே ஆன்மா' என்னும்8 மாயையினால் மூடப்பட்டு அழத் துவங்குகிறது.

க்வா க்வா என்று அழுதழுது ஆனந்தம் எங்கே எங்கே? என்று கேட்கிறது.

ஸ்ரீமத் பாகவதம் - 98-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 42

கபிலர் தொடர்ந்து ஜீவனின் நிலைமையை விளக்குகிறார் :

கருப்பைக்குள் ஞானத்தோடு இருக்கும்‌ ஜீவன் வெளியில் வந்ததும்


அனைத்தையும் மறந்து விடுகிறது.

குழந்தையின் எண்ணத்தையறிந்து வளர்க்கத் தெரியாதவர்களால்


வளர்க்கப்படும் அக்குழந்தை, பசியால் அழும் போது வயிற்றுவலி என்று
நினைத்து வேப்பெண்ணெய்யையும், வயிற்றுவலியால்‌ அழும்போது
பசியென்று பாலையும்‌கொடுக்கிறார்கள்.

எதையும் சொல்லத் தெரியாமல், பரிதாபமாகக் கஷ்டப்படுகிறது.

வியர்வையால் உண்டாகும் புழு பூச்சிகள் கடிக்கும் போது


சொறிந்துகொள்ளவோ, எழுந்து உட்காரவோ சக்தியற்று விளங்குகிறது.
இவ்வாறு ஐந்து வயது வரை குழந்தைப் பருவமும், சிறுபிள்ளைப் பருவமும்
(பௌகண்டம் ஐந்து முதல் பதினாறு வயது வரை) கழிகிறது. பின்
யௌவனமான காளைப்பருவத்தில் விதம்விதமான விருப்பங்களால்
அலைக்கழிக்கப்படுகிறான்

அவை கிட்டாமல் கோபமடைகிறான். சாதிக்க முடியாமல் போனால்


துக்கமடைகிறான்.

வயது ஆக ஆக, கர்வமும் கோபமும் வளர்கிறது. இவனைப் போன்று


சுகபோகங்களைத் தேடியலைபவர்களுடன் பகைமை கொள்கிறான். அது
அவன் அழிவிற்கே காரணமாகிறது.

அறியாமையால் புத்தி மாறாட்டம்‌ கொண்டு பஞ்ச பூதங்களுடைய


இவ்வுடலைத்தான் தான் என்று எண்ணுகிறான்.

இவ்வுடல் கிழட்டுத்தனம், நோய் போன்ற பல துன்பங்களுக்கு ஆளாகிறது.


அது அறியாமை மற்றும் கர்மத்தினால் கட்டப்பட்டுள்ளது.

173
ஜீவாத்மா அவ்வுடலைப் பற்றிக்கொண்டு நிற்கிறது.

அதைக் காப்பாற்ற பல கர்மங்களைச் செய்கிறது. கர்மங்களின் பயனாக உடல்


கிடைக்கிறது. அதைக் காக்க மீ ண்டும் கர்மங்கள். இப்படி கர்மங்களாலேயே
கட்டப்பட்டு திரும்பத் திரும்ப பிறவித்தளையில் உழல்கிறது.

வயிற்றுக்காகவும் இன்ப சுகத்திற்காகவும் பாடுபடும் ஜீவன்


பாவாத்மாக்களோடு நட்புகொண்டு பாவச் செயல்களில் ஈடுபடுவானாகில்
நரகத்தையே அடைகிறான்.

தீயோர் இணக்கத்தால் உண்மையுணர்தல், அகமும் புறமும் தூய்மையாக்கும்


சௌசம், தயை, நாவடக்கம், பரமபுருஷார்த்தத்தில் செல்லும்‌ மனம்,
தனதான்யமாகிற செல்வம், தவறான செயல்களைக் கண்டு வெட்கம், புகழ்,
பொறுமை, புலனடக்கம், மேன்மை பற்றிய சிந்தனை அனைத்தும் பாழ்படும்.
ஆகவே, தீய செயல்கள் புரிவோர், உடலே ஆன்மா என்ற பற்றுடையோர்,
பெண்கள் பின் அலைவோர், மனநிறைவற்ற அஸத்துக்கள் ஆகியோருடன்
ஒருபோதும்‌நட்பு கொள்ளக்கூடாது.

மற்ற சேர்க்கையால் ஏற்படும் தீமையைவிட பெண்வழிச் சேர்க்கையால்


ஏற்படும் தீமை மிக அதிகம்.

ப்ரும்மா முதல் அவரால் படைக்கப்பட்ட ரிஷிகள், தேவர்கள் அனைவரும்


பெண்ணுருவான மாயையால் பாதிக்கப்படுபவர்கள் தாம்.

மேலும்‌பெண்ணாசையின் தீமைகளை விளக்கினார் கபிலர்.

ஸ்ரீமத் பாகவதம் - 99-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 43

ஜீவனின் உபாதி சரீரம் முக்தியடையும் வரை ஜீவனுடன் தொடர்ந்திருக்கும்.

முக்தி பெற விரும்புபவன் பிறப்பு இறப்பு கண்டு வருந்தலாகாது.

ஆன்மாவின் உண்மையைப் பற்றிய அறிவு, பகவானைத் தவிர மற்ற


உலகியல் விஷயங்களில் பற்றின்மை, சாஸ்திரங்களை உணர்ந்த கலக்கமற்ற
புத்தி ஆகியவற்றினால், மாயையால் தோன்றிய இவ்வுலகில் ஓடித்திரிய
வேண்டும். வாழவும் வேண்டும்.

அறிவுள்ள மனிதன் தன் கடமைகளைச் செய்கையில்‌பலனை எதிர்பார்த்துச்


செய்வதில்லை. உரியமுறையில் பகவத் அர்ப்பணமாகவே செய்கிறான்.

உடல்‌இன்பத்திற்காகவும் செய்வதில்லை. இம்மாதிரி மனிதர்கள் சாந்தமான,


தூய்மையான மனத்துடன் துறவு மனமுடையவராக தன் கடமையைச் செய்து
சத்வகுணம் மேலோங்கி இருக்கிறான்.

அவன் முடிவில் அர்ச்சிஸ் அல்லது தேவயானம் என்ற சூரியன் வழியில்,


நீக்கமற நிறையும் பகவானையே அடைகிறான். அர்ச்சிராதி மார்கம் என்பது

174
ஒளி, அஹஸ்(பகல்), வளர்பிறை, உத்தராயணம், ஸம்வத்ஸரம் (வருடம்),
வாயு, சூரியன், சந்திரன், வித்யுத் (மின்னல்), வருணன், இந்திரன், ப்ரும்மதேவர்
என்ற வரிசைக் கிரமம் ஆகும்.

ப்ரும்மதேவர் தன் ஆயுள்காலமான இரண்டு பரார்தங்கள் முடிந்ததும், பூமி,


ஜலம், காற்று, தீ, ஆகாயம், மனம்,‌ இந்திரியங்கள், சுவை, ஒளி, ஊறு, ஓசை,
நாற்றம் என்ற விஷயங்கள், அஹங்காரத்தால்‌ சூழப்பட்ட ப்ரபஞ்சத்தை
அழிக்க எண்ணி சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண வடிவோடு கலந்து
பரப்ரும்மத்தில் ஐக்கியமாகிறார்.

அப்போது ப்ராணனையும்‌மனதையும் வசப்படுத்திய யோகிகள் இவ்வுடலை


விடுத்து ப்ரும்மதேவருடன் ஐக்கியமாகிறார்கள்.

பகவத் குண ச்ரவணம், பக்தி, முக்தியை அளிப்பது. பிறவிச் சுழலிலிருந்து


விடுவிப்பது. இறைவனைப் பற்றிய கதைகளைச் செவியாறப் பருகாமல்,
வணான
ீ உலகின்‌ கவர்ச்சியான செய்திகளைப் படிப்பது, கேட்பது போன்ற‌
செயல்களைச் செய்பவர்கள், நல்ல உணவை விடுத்து மலத்தைத்
தேடியலையும் பன்றி போல் ஆவர். அவர்களை விடப்‌ பேறு கெட்டவர்
எவருளர்? அவர்கள் விதியின் கொடுமைக்கு‌ஆளாவர்.

ஸ்ரீமத் பாகவதம் -100-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 44

கபிலர் ஜீவன்களின் கதியைத் தொடர்ந்து கூறியபின் பக்தியின் மேன்மையை


தாய்க்கு மனதில் படியும்படி அழுத்திச் சொன்னார்:

தாயே! வாசுதேவரது திருவடிகளையே எப்போதும் நினைத்துப் போற்றுங்கள்.


அவரது கல்யாண குணங்களைக் கேட்டதுமே பக்தி பெருகும். பெருகிய
பக்தியால் மனம், வாக்கு, காயம் மூன்றையும்‌அவருக்கே அர்ப்பணம் செய்து
பஜனை செய்யுங்கள்.

பக்தி யோகத்திற்கு அடிப்படை வைராக்யம். அது இல்லாமல் பக்தி எப்படி


உண்டாகும் என்று கேட்க வேண்டாம்.

பகவான் வாசுதேவனின் குணங்களை ஆசையோடு கேட்க‌


க் கேட்க பக்தியும்,
உலக விஷயங்களில் வைராக்யமும் தானே வரும்.

அதனால் ஸாக்ஷாத்காரமான அறிவு தோன்றும். பின்னர் பகவானை நேரில்


காணலாம்.

உண்மையில் எல்லாப் பொருள்களும் பகவானின் தோற்றமே. அதனால்


சமமானவை. பகவத் பக்தனின் மனம், புலன்களின் செயல்களால்
பிரியத்தையோ பிரியமின்மையையோ காண்பதில்லை. புகழ்வதையும்,
இகழ்வதையும் ஒன்றாகவே எண்ணுகிறான்.

பற்றற்ற சம புத்தியால், ஆத்மாவை ப்ரும்மத்துடன் இணைத்துக் காண்கிறான்.

175
ப்ரும்மம் ஒன்றே. அது ஞானவடிவானது. குணங்களற்றது. இருப்பினும் பொறி
புலன்களுக்கு வசப்படுவோர்க்கு பல்வேறு ரூபங்களாகக் காட்சியளிக்கிறது.
பரப்ரும்மம், மஹத் தத்வம், வைகாரிகம், ராஜஸம், தாமஸம், ஐம்பெரும்
பூதங்கள், பதினோரு இந்திரியங்கள் அனைத்தும்‌ பகவானே.
ஸ்வயம்ப்ரகாசரான பகவான் மஹத் தத்வத்துடன் சேர்ந்து ஜீவன்
எனப்படுகிறார்.

ஜீவாத்மாவின் உடலாக இருக்கும் ப்ரும்மாண்டமும் ப்ரும்மமே. அண்டத்தில்


உள்ளது அனைத்தும் பிண்டத்திலும்‌உண்டு.

போற்றத்தக்கவளே! இதுவரை ப்ரும்ம ஸ்வரூபத்தை அறிந்துகொள்ளும்‌


முறைகளை விளக்கினேன்.

நிர்குண ப்ரும்மத்தை விளக்கும் ஞான யோகம், என்னையே பற்றி நிற்கும்‌


பக்தியோகம்‌இரண்டின் குறிக்கோளும் என்னை அடைவதே.

அன்னையே! சாஸ்திரங்களில் பல்வேறு வழிகள் கூறப்படுகின்றன.

ஸகல் ஜீவராசிகளுக்கும் உதவும் குளம், கிணறு வெட்டுதல், ஸ்ம்ருதிகளில்


கூறியபடி எல்லா ஜீவராசிகளிலும் என் ஸ்வரூபத்தைக் கண்டு அவர்க்கு
உதவி செய்தல், சாந்திராயணம் முதலிய விரதங்கள், பிறர்க்கின்னா
செய்யாமை என்னும் தவம், வேதம்‌ ஓதுதல், அதன் திரண்ட பொருளை
ஆராய்தல்,

மனதையும் பொறி புலன்களையும் தன்வயப்படுத்துதல்,

செய்யும் செயல்கள் அனைத்தையும் பகவத் அர்ப்பணமாகச் செய்தல்,

நியமம் முதலிய கட்டுப்பாடுகளுடன் யோகப்பயிற்சி செய்தல்,

பக்தியோகம்,
பயன் கருதிச் செய்யும் இல்லற தர்மம்,
பயன்‌கருதாமல் செய்யும் துறவு,
ஆன்ம தத்வத்தை அறியச் செய்யும்‌ஞானயோகம்,

பற்றற்ற திடமான வைராக்யம்

- இவற்றுள் எதைச் செய்தாலும்‌ ஸகுண, நிர்குண ஸ்வயம்ப்ரகாசரான


இறைவனை அடையலாம்.

ஞானம் பற்றிய இவ்வுண்மைகளை என்னை அடைய ஈடுபாடில்லாதவர்க்கும்,


விநயமற்றவர்க்கும், தீய பழக்கமுள்ளவர்க்கும், என் அடியார்களிடம்‌பகைமை
கொண்டவர்க்கும் ஒருபோதும் சொல்லலாகாது.

ஆனால்,
தாயே! என்னையே மனதில் கொண்டு இதை ஈடுபாட்டுடன் எவன்‌கேட்பானோ,
பிறருக்குச் சொல்வானோ அவன் நிச்சயம்‌எனது பரமபதத்தை அடைவான்.

176
கபிலரின் ஞானோபதேசத்தைக் கேட்ட தேவஹூதி அஞ்ஞானத் திரை நீங்கப்
பெற்றாள்.

கபிலரை வணங்கிப் பலவாறு துதித்தாள்; வணங்கினாள்.

பின்னர் கபிலர் தாயிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

தேவஹூதி ஸரஸ்வதி நதிக்கு கிரீடம் வைத்தாற்போல் விளங்கும்


பிந்துஸரஸின் கரையிலேயே யோகாப்யாசம் செய்து மனதை அடக்கி
சமாதியில் இருந்தாள்.

கணவரையும் மகனையும் பிரிந்து முகம் வாடியிருந்தாள். எனினும்


தவத்தினால் ஒளிர்ந்தாள்.

கபிலர் சொன்னவாறே பகவானை பாதாதிகேசம் தியானம்‌


செய்தாள்.

சிலநாள்களிலேயே நித்ய முக்தரான பகவானை அடைந்தாள்.

அவள் செய்த யோக சாதனைகளால் அவளது திருமேனி தூய்மை பெற்று


நதியாகப் பெருகிற்று.

சித்தர்களால் சூழப்பெற்று விளங்கும் அப்புண்ய நதி அனைத்து சித்திகளையும்


வழங்கவல்லது.

பகவான் கபிலர் தாயிடம் விடை பெற்றுக்கொண்ட பின் வடகிழக்கு திசை


நோக்கிச் சென்றார்.

சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள், முனிவர்கள் அனைவரும்‌ அவரை


துதித்துக் கொண்டு பின் சென்றனர்.

வடகிழக்கு எல்லையை அடைந்ததும் அவரை ஸமுத்திரராஜன் வரவேற்று


உபசரித்து இடமளித்தார்.

அங்கு அவர் உலகநலனுக்காக யோகம்‌மேற்கொண்டு விளங்கிவருகிறார்.

கபிலர் வாசம் செய்யும் இடம் தான் கபிலாரண்யம் என்றும் தற்போது


கலிஃபோர்னியா என்றும் வழங்கிவருவதாகப் பெரியோர் சொல்கின்றனர்.

மூன்றாம் ஸ்கந்தம்‌முற்றிற்று.
ஸ்ரீமத் பாகவதம் - 101-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 45

மைத்ரேயர் கூறினார்.

மாசற்ற விதுரா! நீ விரும்பிக் கேட்டபடி கபிலருக்கும் தேவஹூதிக்கும் நடந்த


உரையாடலை விவரித்துக் கூறினேன். ஆன்ம யோகம் பற்றிய கபிலரின்
கொள்கைகள் மிகவும் ரகசியமானவை. அவற்றைச் சொல்பவர், கேட்பவர்

177
அனைவர்க்கும் ஸ்ரீ மன் நாராயணனின் பாத தாமரைகளில் பக்தி உண்டாகி
அவரையே அடைவர்.

தொடர்ந்து ஸ்வாயம்புவ மனுவின் வம்ச வரலாற்றைக் கூறலானார்


மைத்ரேயர் :

ஸ்வாயம்புவ மனுவிற்கு ஆஹூதி, ப்ரஸூதி, தேவஹூதி என்று மூன்று


பெண்கள்.

ஆகூதி என்ற பெண்ணை மனு, ருசி என்ற ப்ரஜாபதிக்கு 'புத்ரிகா தர்மம்' என்ற
நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்.

புத்ரிகா தர்மம் எனப்படுவது யாதெனில், புத்ரன் இல்லாமல் பெண்ணை


மட்டும் பெற்றவர், பெண்ணுக்குப் பிறக்கும் புத்ரனை தனக்குக்
கொடுக்கவேண்டும் என்ற உறுதிமொழியோடு கொடுப்பதாகும்.

ஆகூதிக்கு சகோதரர்கள் இருந்தபோதிலும், மனுவிற்கு பிள்ளைகள் அதிகம்


வேண்டும் என்பதால் அப்படிச் செய்தார்.

ருசிக்கும் ஆகூதிக்கும் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று இரட்டைக்


குழந்தைகள் பிறந்தனர்.

ஆண்மகவாய்ப் பிறந்தவர் யக்ஞன் எனும் பெயர் கொண்ட மஹாவிஷ்ணுவின்


வேள்வித் திருமேனியே ஆகும். பெண்மகவு மஹாலக்ஷ்மியின் அம்சமாக
நாராயணனை விட்டகலாமல் பிறந்த தக்ஷிணை என்பவள்.

மனு, மகள் ஆகூதியின் மகனைப் பெருமகிழ்ச்சியோடு எடுத்து வந்து


வளர்க்கலானார். ருசி தக்ஷிணையைத் தானே வைத்துக் கொண்டார்.

பின்னர் யக்ஞருக்கும்‌ தக்ஷிணைக்கும் திருமணம் நடந்து பன்னிரண்டு


மகன்களைப் பெற்றனர்.

ஸ்வாயம்புவ மனுவின் காலத்தில் அவர்கள் தூஷிதர்கள் என்ற தேவர்களாக


இருந்தனர். விஷ்ணுவின் அம்சமான யக்ஞன் இந்திரனாக இருந்தார்.

மனுவின் புதல்வர்களான பிரியவிரதன், உத்தானபாதன் இருவரும்


மஹாவரர்கள்.
ீ அவர்களது வம்சத்தினரே மன்வந்தர அரசர்களாயினர்.

விதுரரே! தேவஹூதியின் கதையைச் சொன்னேன். மனு, தன் இன்னொரு


மகளான ப்ரஸூதியை ப்ரும்மாவின் மகனான தக்ஷனுக்கு மணம் முடித்தார்.

அவர்களது வம்ச பரம்பரைதான் மூவுலகும் பரவி நிற்கிறது.

கர்தமரின் ஒன்பது பெண்களும் ஒன்பது ரிஷிகளை மணந்தார்கள் என்று


முன்னமே பார்த்தோம். அவர்களின் வம்சத்தைக்‌கூறுகிறேன் கேளும். கலை
என்பவள் மரீசியை மணந்தாள். அவள் கச்யபர், பூர்ணிமான் என்ற இரு
பிள்ளைகளைப் பெற்றாள்.

178
பூர்ணிமானுக்கு விரஜன்,விச்வகன் என்ற பிள்ளைகளும், தேவகுல்யை என்ற
பெண்ணும் தோன்றினர். இந்த தேவகுல்யை தான் தன் அடுத்த பிறவியில்
தேவநதியான கங்கையாகத் தோன்றினாள்.

கர்தமரின் பெண்ணான அனஸூயை அத்ரி மஹரிஷியை மணந்தாள்.


அவர்களது புதல்வர்கள் தத்தர், துர்வாசர், சந்திரன் என்ற மும்மூர்த்திகளின்
அம்சங்களாவர்.

விதுரர் உடனே கேட்டார். குருவே, இம்மூன்று மூர்த்திகளும் எதற்காக


அத்ரியின் ஆசிரமத்தில் அவதாரம் செய்தனர்?

மைத்ரேயர் பதிலிறுக்கத் துவங்கினார் :

விதுரா! அத்ரி மஹரிஷி அனஸூயாவுடன் ருக்ஷ பர்வதம் சென்று அங்கு


பகவானைக் குறித்து ஒற்றைக் காலில் நின்று நூறு வருடங்கள்
தவமியற்றினார்.

தனக்கு இறைவனுக்கொப்பான புதல்வன் வேண்டும் என்பதே அவரது


தவத்தின் நோக்கம். அவரது தவத்தில் மகிழ்ந்து பகவான் மும்மூர்த்திகளாய்க்
காட்சி அளித்தார்.

ஆச்சர்யமடைந்த அத்ரி, அவர்களை விழுந்து வணங்கிப் பூஜித்தார். பின்னர்,


நான் குழந்தை வரம் வேண்டி ஒரு பகவானைத்தானே தியானம் செய்தேன்?
ஒரே பகவான்தான் உலகைப் படைத்து, காத்து, அழிக்கும் பொருட்டு
மூவராய்ப் பிரித்துக்கொண்டீர்கள். ஆனால், எனக்கு நீங்கள் மூவராய்க் காட்சி
தருவதன் நோக்கம் என்ன? என்று வினவினார்.

மும்மூர்த்திகள் அழகாகப் பதில் சொன்னார்கள். நீங்கள் எந்த ஜகதீச்வரனை


வேண்டின ீர்களோ அவரே தான் நாங்கள். உங்கள் தவத்தில் மகிழ்ந்தோம்.
எங்கள் மூவரின் அம்சமாகவும் உங்களுக்கு மூன்று புதல்வர்கள் பிறப்பார்கள்
என்றனர்.

அதன்படியே அத்ரிக்கு, மஹாவிஷ்ணுவின் அம்சமாக தத்தரும், சிவனின்


அம்சமாக துர்வாசரும், ப்ரும்மாவின் அம்சமாக சந்திரனும் தோன்றினார்கள்

179
ஸ்ரீமத் பாகவதம் - 102-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 46

தொடர்ந்து கர்தம ப்ரஜாபதியின் பெண்களின் வம்சங்களைச் சொன்னார்


மைத்ரேயர்.

சிரத்தா என்ற பெண்ணை ஆங்கீ ரஸுக்கு மணம் முடித்தார் கர்தமர்.

அவர்களுக்கு ஸின ீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்று நான்கு பெண்கள்.

ஸின ீவாலி என்பவள் தேய்பிறை சதுர்தசிக்கும், குஹூ அமாவாசைக்கும்,


ராகா பௌர்ணமிக்கும், அனுமதி வளர்பிறை சதுர்தசிக்கும் அதிதேவதைகள்.

இவர்களைத் தவிர, பகவானைப் போன்ற பெருமை உடைய உதத்யர்


என்பவரும், தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆங்கீ ரஸின் புதல்வர்கள் ஆவர்.

அவர்கள் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் புகழ் பெற்று விளங்கினர். ஹவிர்புக்


என்ற கர்தமரின் மகளை புலஸ்தியர் மணந்தார்.

இவர்களின் மகன்கள் அகஸ்தியரும், விச்ரவஸ் என்பவரும் ஆவர்.

விச்ரவஸின் மனைவியான இடபிடை என்பவளிடம் யக்ஷர்களின்


தலைவரான குபேரன் பிறந்தார். இன்னொரு மனைவியான கைகஸி
என்பவளின் புதல்வர்களே ராவணன், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன்
ஆகியோர்.

புலஹரின் மனைவி கதி என்பவள். அவளது புதல்வர்கள் கர்மச்ரேஷ்டன்,


வரீயான், ஸஹிஷ்ணு ஆகியோர்

க்ரது என்பவரின் மனைவி க்ரியை. இவள் ப்ரும்மதேஜஸுடன் விளங்கும்


வாலகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்களைப் பெற்றாள்.

வசிஷ்டரின் மனைவியான ஊர்ஜை அல்லது அருந்ததி சித்ரகேது முதலான


ஏழு மகன்களை ஈன்றாள். அவர்கள் ஸப்தரிஷிகள் ஆனார்கள்.

ஸப்தரிஷி என்பதும் பதவிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு


மஹரிஷிகள் ஸப்தரிஷிகளாக இருக்கின்றனர்.

அவர்கள் சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன்,


வஸுப்ருத்யானன், த்யுமான் ஆகியோர்.

அதர்வா என்ற முனிவரின் பத்னி சித்தி என்பவள் ததீசி‌முனிவரைப் பெற்றாள்.


அவரை அசுவசிரஸ் என்றும் அழைப்பர்.

ப்ருகு மஹரிஷியின் மனைவி கியாதி என்பவள். அவள் தாதா, விதாதா ஆகிய


இரு மகன்களையும் திருமகளின் அம்சமான லக்ஷ்மி என்ற மகளையும்
பெற்றாள்.

180
மேரு மஹரிஷி ஆயதி, நியதி என்ற தன் புதல்விகளை தாதா, விதாதாவிற்கு‌
மணம் செய்து கொடுத்தார்.

அவர்களுக்கு மிருகண்டு, பிராணன் என்ற புதல்வர்கள் உண்டு

மிருகண்டுவின் மகன்‌ மார்க்கண்டேயர். பிராணனின் மகன் வேதசிரேயஸ்.


ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகன் உசனஸ் என்னும்
சுக்ராசார்யார்.

விதுரா!

இந்த ஒன்பது முனிவர்களும் ப்ரஜைகளைப் படைத்து உலகத்தைப்


போஷித்தனர்.

இந்த வரலாற்றைச் சிரத்தையுடன் கேட்பவர்களின் பாவங்கள் உடனே நீங்கும்.

ஸ்ரீமத் பாகவதம் - 103-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 47

மனுவின் வம்சத்தைத் தொடர்ந்து கூறினார் மைத்ரேயர்.

ப்ரும்மதேவரின் மகன் தக்ஷன் ஸ்வாயம்புவ மனுவின் மகள் ப்ரஸூதியை


மணந்தான் என்று பார்த்தோம்.

அவர்களுக்கு கண்ணழகிகளாக பதினாறு மகள்கள் பிறந்தனர்.

தக்ஷன் தன் பதிமூன்று பெண்களை தர்மதேவதைக்கும், அக்னிக்கு ஒரு


பெண்ணையும், பித்ரு கணங்களுக்கு ஒரு பெண்ணையும், ஸம்சார
பந்தத்தைப் போக்கும் சிவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து
கொடுத்தான்.

ச்ரத்தை, மைத்ரி, தயை, சாந்தி, துஷ்டி, புஷ்டி, கிரியை, உன்னதி, புத்தி, மேதை,
திதிக்ஷை, ஹ்ரீ, மூர்த்தி ஆகிய பதிமூன்று பேரும் தர்மதேவனின்‌
மனைவிகள்.

ச்ரத்தை சுபனையும், மைத்ரீ ப்ரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி


சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி செருக்கையும் (அஸூய:)
பெற்றார்கள்.

எல்லா நற்குணங்களையும் கொண்ட மூர்த்தி என்பவள் நர, நாராயணன்


என்னும் ரிஷிகளைப் பெற்றாள்.

இவ்விருவரும்‌பிறந்த போது, உலகெங்கும்‌செழித்து மகிழ்ந்தது. தேவர்கள்


பூமாரி பொழிந்து துதி செய்தனர். அவர்களது துதியைக்‌
கேட்டு மகிழ்ந்த நர
நாராயணர்கள் கந்தமாதன மலை நோக்கிச் சென்றனர்.

181
விதுரா! பகவானின் அம்சமான அவர்களே பூபாரம் தீர்க்கவேண்டி இப்போது
யதுவம்சம், குருவம்சம் இரண்டிலுமாக ஸ்ரீக்ருஷ்ணனாகவும்,
அர்ஜுனனாகவும் அவதாரம்‌செய்துள்ளார்கள்.

அக்னி தேவனின் மனைவியான ஸ்வாஹா என்பவள் பாவகன், பவமானன்,


சுசி என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் வேள்விகளில்
ஹோமம் செய்யப்படும் பொருள்களை மட்டுமே புசிப்பார்கள். இந்த
மூவரிடமிருந்து 45 விதமான அக்னிகள்‌தோன்றின.

தாத்தாவான அக்னி தேவன், மகன்களான மூன்று பேர், அவர்களின்


மகன்களான 45 பேர், ஆகிய நாற்பத்தொன்பது பேரும் அக்னிகளே. வே‌தம்
ஓதும் அறிஞர்கள் இவர்களின் திருப்பெயர்களைச் சொல்லியே இஷ்டிகளைச்
செய்கின்றனர்.

அக்னிஷ்வர்த்தாக்கள், பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள், ஆஜ்யபர்கள் என்று


நால்வகை பித்ருதேவதைகள் உளர்.

அவியுணவை உண்பவர்கள் அக்னிகள் என்றும், அந்தணர்களின்


திருக்கரங்களில் இடுபவற்றை உண்பவர் அனக்னிகள் என்றும் அறியப்படுவர்.

இந்த பித்ருதேவதைகளின் ஸ்வரூபத்தின் மனைவி ஸ்வதா என்பவள்.

இவர்களது குழந்தைகள் வயுனா, தாரினி என்ற இரு பெண்கள். இவர்கள்


வேதம் ஓதியவர்கள். இவர்களுக்கு சந்ததி இல்லை.

பரமேஸ்வரனின் மனைவியான ஸதி பெரும் குணவதி. அவள் எப்போதும்


அவருக்கு தொண்டு செய்வதிலேயே அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தாள்.
அவளுக்கும் புத்ரன் இல்லை.

குற்றத்தையும் கூட குணமாக ஏற்கும் பரமசிவனிடம் தன் தந்தை தக்ஷன் வண்



பகை பாராட்டியதால் அவள் தன் இளம் பருவத்திலேயே யோகத்தீயினால்
தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்.

ஸ்ரீமத் பாகவதம் - 104-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 48

தன்‌ மகளிடம் மிகுந்த அன்பு கொண்ட தக்ஷன்‌ ஏன் மாப்பிள்ளையிடம்


பகைமை பாராட்டினான்?

சகல விதமான அசையும் அசையா ஜீவராசிகளின் தந்தை போன்றவர்


பரமேஸ்வரன். அவரிடம்‌ கூட ஒருவனால் பகைமை பாராட்ட முடியுமா
என்ன?

ஸதி தேவி உயிரை விடும்‌ அளவிற்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்


விதுரர்.

ஹரி பக்தி செய்கிறேன் என்று சிவன் உள்ளிட்ட மற்ற தெய்வங்களிடம் குற்றம்‌


பாராட்டுவதும், சிவ பக்தி செய்கிறேன் என்று ஹரியிடம்‌ தோ‌ஷம்

182
பாராட்டுவதும் தவறு என்றுணர்த்தவே ஹரியின் அவதாரங்களை விரித்துக்
கூற ஆரம்பிக்கும் முன்னரே, ஹரியிடம் ஏற்பட்ட அளவற்ற பக்தியால்
சிவனிடம் தோஷம் பாராட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த
சரித்திரத்தை வைத்திருக்கிறார் வியாசர்.

மற்ற அனைத்து புராணங்களையும் விடவும் ஸ்ரீமத் பாகவதம் ஏற்றம்


பெறுவதன் காரணமும்‌இஃதே.

மற்ற தெய்வங்களிடம் துவேஷமின்றி இஷ்ட தெய்வத்திடம் ப்ரேமையை


வைக்கவேண்டும். அப்படிச் செய்பவர்க்கு எல்லா தெய்வங்களும்
அனுகூலமாக நிற்கும்.

அனைத்து தேவதா, மனுஷ்ய, ஜீவ ஸ்வரூபங்களும் ஒரே பகவான்


எனும்போது அவர்களின் வெவ்வேறு ரூபங்களை மனத்தில்‌கொண்டு குற்றம்
பாராட்டலாகாது.

ஹரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவனுக்கு இரு தெய்வங்களின் அருளும்


எட்டாக்கனியே..

மைத்ரேயர் கூறத் துவங்கினார் :

முன்பொரு சமயம் விஸ்வஸ்ருஜகன் என்ற ப்ரஜாபதிகள் நடத்திய


ஸத்ரயாகத்தில் முனிவர்கள், தேவர்கள், அக்னிதேவர்கள் அனைவரும்
பரிவாரங்களுடன் குழுமினர்.

மகிமை மிக்க பெரியோர் நிறைந்த சபையில் தேஜஸ் மிக்க தக்ஷன்


நுழைந்தான். அவனது ஒளி அனைவரையும் கவர்ந்தது. அவனைக் கண்டு
ப்ரும்மாவையும், பரமேஸ்வரனையும் தவிர மற்ற அனைவரும் எழுந்து
நின்றனர். அனைவரையும்‌பணிந்து, பின் தன் தந்தையான ப்ரும்மதேவரையும்
வணங்கி ஆசனத்தில் அமர்ந்தான்.

தன்முன் அமர்ந்திருக்கும் சிவபெருமான் மட்டும் எழுந்திருக்காதது அவனுக்கு


எரிச்சலை ஊட்டியது.

அவரை எரித்துவிடுவான் போல பார்த்துக் கொண்டு பேசலானான்.

பெரியோர்களே, நான் பொறாமையினாலோ, கர்வத்தாலோ கூறவில்லை.

இதோ‌ இங்கிருக்கும் சிவன் காந்தக் கண்ணழகியும், இளவரசியுமான என்


மகளை அக்னி சாட்சியாக மணந்தான். எனக்கு மருமகன் மற்றும் சீடன்
போன்ற இவன் எழுந்து வணங்கி மரியாதை செய்திருக்க வேண்டும்.
அகம்பாவத்தினால் வாய் வார்த்தையாகக் கூட மரியாதை செய்யவில்லை.

விருப்பமின்றி தகுதியற்றவர்க்கு வேதத்தை சொல்லிக் கொடுத்தாற்போல்


விருப்பமின்றி என் மகளை இவனுக்குக் கொடுத்தேன்.

அவளுக்கு சற்றும்‌ பொருத்தமில்லாதவன். மயானங்களில் சஞ்சரிக்கிறான்.


சாம்பலையும், அருவருக்கத்தக்க கபால மாலையும் அணிகிறான். ஆடுகிறான்.

183
பாடுகிறான். பித்தன் போல் இருக்கிறான். உண்மையில் பெயரளவில்தான்
சிவன். (சிவன் என்றால் மங்களமானவன் என்று பொருள்).

பித்தர்களே இவனுக்குப் பிடித்தமானவர்கள்.

பூதகணங்களின் தலைவன். ப்ரும்மதேவரின் பரிந்துரையால் இவனுக்கு


பெண்ணைக் கொடுத்தேன் என்று கத்தினான்.

உண்மையில் இது நிந்தாஸ்துதி ஆகும். ஞானியும், எப்போதும் ஆனந்தத்தில்‌


திளைப்பவரும், தன் சரீர நினைவே அற்றவராக சஞ்சரிப்பவருமான
பரமேஸ்வரன் உண்மையில் இதைக் கேட்டு மகிழ்ந்தார்.

எனினும் தக்ஷன் விரோதத்தினால் பேசுகிறான். புறத்தோற்றத்தை மட்டுமே


பார்க்கிறான். ஞானஸ்வரூபத்தை அறியவில்லை என்பதால் மௌனமாக
இருந்தார்.

அவர் எதுவும் பேசாமல் உணர்வுகளற்று இருப்பதைக் கண்ட தக்ஷன் மேலும்


ஆத்திரமடைந்து அவருக்கு சாபம் விடுத்தான்.

இனி இவனுக்கு எந்த யாகத்திலும் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம்


கிடையாது.

வேள்விச் சாலையில் இருந்த அனைவரும் தக்ஷனைத் தடுத்தனர்.

சிவநிந்தை கேட்டதால் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

பரமேஸ்வரன் பேசாமல் இருப்பதைக் கண்டு, தன் தலைவரை ஏசுவதைக்


காணச் சகியாமல் கொதித்துப்போன நந்தி தேவர் தக்ஷனுக்கு சாபமிட்டார்.

அறிவிலியான தக்ஷன் ஆன்மா வேறு, பரமாத்மா வேறு என்று


பேதம்‌
கொண்டான். தன்னைப்‌ பற்றிய புகழ்ச்சியில் மயங்கி கர்வம் மிகுந்து
ஆத்ம ஸ்வரூபத்தை மறந்தான். இவன் விரைவிலேயே மனிதத் தன்மையை
இழந்து ஆட்டுத்தலையைப் பெறட்டும் என்றார்.

ஸ்ரீமத் பாகவதம் - 105-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 49

தக்ஷனின் கதையைத் தொடர்ந்து சொன்னார் மைத்ரேயர்.

தன் மாப்பிள்ளையான சிவன், ப்ரஜாபதியான தனக்கு மரியாதை


அளிக்கவில்லை என்று அஹங்காரத்துடன் அவரைக் கண்டபடி ஏசத்
துவங்கினான் தக்ஷன். அனைத்தையும் நிந்தாஸ்துதியாக ஏற்று பரமேஸ்வரன்
அமைதி காத்தார்.

ஆனால் சபையிலிருந்த மற்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் தக்ஷனைத் தடுக்க


முயற்சி செய்தும் அவன் கேட்காமல் யாகத்தில் ஹவிர்பாகம் கிடையாது
என்ற சிவனுக்கு சாபமும் அளித்தான்.

184
தன் தலைவரை நிந்தனை செய்ததைப் பொறுக்க இயலாமல் நந்திதேவர்
தக்ஷனுக்கு ஆட்டுத்தலை கிடைக்கட்டும் என்று சாபமளித்தார். அவர்
இன்னொரு கொடூரமான சாபத்தை அந்தணர்க்கும் அளித்தார்.

அறிவிலியான தக்ஷன் கர்மங்களை மெய்யென்று எண்ணுகிறான். இவனும்,


இவனைச் சேர்ந்தவர்களும்‌ ஸம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு
தவிக்கட்டும். இவன் செய்த நிந்தனையை அனுமதித்த அந்தணர்களுக்கு
பிழைப்பிற்காக வேத அத்யயனம்‌ செய்யும் நிலைமை வரட்டும்.
பிழைப்பிற்காகவே விரதங்களும், தவமும் மேற்கொண்டு பொறி இன்பத்தில்
உழலட்டும் என்ற கொடூரமான சாபத்தை அளித்தார் நந்திதேவர்.

அதைக் கண்டு பொறுக்காத ப்ருகு முனிவர் சிவனடியார்கள்‌ஆசாரம் விடுத்து


பாஷண்டிகளாக அலையட்டும்‌என்று சாபம் விடுத்தார்.

அவரது சாபத்தைக் கண்டு வருந்திய சிவன் தன் கணங்களுடன் அமைதியாக


வெளியேறினார்.

விதுரா! ப்ரஜாபதிகள் அனைவரும் யாகத்தை முடித்துக்கொண்டு


கிளம்பினார்கள்.

மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான இப்பகைமை வெகுகாலம் நீடித்தது.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தலைவனாக தன்


மகன் தக்ஷனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.‌ இதனால் அவனது கர்வம்
மிதமிஞ்சி வளர்ந்தது.

அவன் பரமேஸ்வரனையும், ப்ரும்மநிஷ்டர்களையும் அவமதித்து வாஜபேயம்‌


என்ற யாகத்தைச் செய்து முடித்தான்.

பின்னர் ப்ருஹஸ்பதிஸவம் என்ற சிறந்த யாகத்தைத் துவங்கினான். அந்த


வேள்வியில் தேவர்கள், ப்ரும்மரிஷிகள், பித்ருக்கள் அனைவர்க்கும்‌
மரியாதை செய்தான்.

அப்போது தக்ஷான் மகளான ஸதீதேவி ஆகாய மார்கத்தில் சென்ற தேவர்கள்


பேசிக் கொண்டதிலிருந்து தன் தந்தை செய்யும் வேள்வி பற்றி
அறிந்துகொண்டாள்.

கயிலைக்குச் சமீ பத்தில் வசிக்கும் கந்தர்வர்கள் அவரது மனைவிகளுடன்


நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் பல அணிந்து,‌விமானம் ஏறிச்செல்லும்
காட்சியைக் கண்டு தானும் போகவேண்டும் என்று ஆர்வம் கொண்டாள்.

தன்‌கணவரான பரமேஸ்வரனிடம்‌சென்று, தங்கள்‌மாமனார் இப்போது யாகம்‌


நடத்துகிறாராம். எல்லா தேவர்களும்‌ அங்குதான் செல்கிறார்கள். நாமும்
போகலாமே என்றாள்.

185
அந்த வேள்விக்கு என் சகோதரிகள்‌அனைவரும் வருவார்கள். என் தாயையும்
அவர்களையும் பார்த்து வெகு காலமாயிற்று. என் தந்தை எனக்களிக்கும்
சீர்வரிசைகளை நான் தங்களுடன்‌சேர்ந்து பெற விரும்புகிறேன்.

மாயையால் விளங்கும்‌இப்பிரபஞ்சம் தங்களிடமே நிலைத்து விளங்குகிறது.


ஆனால் நானோ பெண். உண்மை ஸ்வரூபத்தை அறிய இயலாத பேதை.
தங்களின் கருணைக்குப் பாத்திரமானவள்.

தந்தை, உற்ற நண்பர், ஆசிரியர், கணவன் ஆகியோர் வட்டிற்கு


ீ அழைப்பின்றிச்
செல்லலாம் என்பது சாஸ்திரமல்லவா?

எனவே தயை கூர்ந்து என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என்றாள்.

அதைக்கேட்டுச் சிரித்த பரமேஸ்வரன், 'தேவ!ீ நீ சொல்வது உண்மைதான்.


அன்புள்ளவர் வட்டிற்கு
ீ அவசியம் செல்லலாம். ஆனால், அஹங்காரத்தினால்
எண்ணம் மாசடைந்தவர்கள் சான்றோர் பெருமையை உணர்வதில்லை.
அவர்கள் வட்டிற்கு
ீ நம் உறவினர்தானே என்றெண்ணி ஒருக்காலும்
போகக்கூடாது.'

'அவர்கள் அவமரியாதையாகப் பேசக்கூடும். வில்லால் அடிக்கும் அம்பைக்


காட்டிலும் சொல்லால் அடிப்பது அதிக வேதனை தரும். சொல்லம்பால்
புண்பட்டவனால் அதை மறக்க இயலாது. எபோதும்‌ அதை நினைத்துப்
புலம்புவான்.'

'அழகியே! உன் தந்தை உயர்ந்தவர்தான். ஆனால் எனக்கு உன்னைத்


திருமணம் செய்து கொடுத்ததை நினைத்து வருந்துகிறார். இப்போது நீ அங்கு
சென்றால் அன்போ மரியாதையோ கிடைக்காது.'

'ஒருவரை ஒருவர் வணங்குவது அவர் உள்ளுறையும் இறைவனையே சேரும்.


ஆனால், அஹங்காரம்‌ நிரம்பியவர் மனத்தில் இறைவன் வெளிப்
படுவதில்லை.'

'என்னிடம் பகை கொண்ட உன் தந்தையை நீ சென்று பார்த்தால் அவர்


உன்னை அவமதிப்பார்.'

'நல்ல நிலையில் உள்ளோருக்கு உற்றார் உறவினரால் அவமானம் நேரிட்டால்


அது அவரின் திடீர் மரணத்திற்கு காரணமாகிவிடும்' என்றார்.

ஸ்ரீமத் பாகவதம் - 106-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 50

பகவான் சங்கரர் ஸதிதேவியை தக்ஷன் நடத்தும் யாகத்திற்கு


போகவேண்டாம் என்று சொல்லி அதற்கு பல்வேறு காரணங்களையும்
சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால், ஸதிதேவியின்‌ மனம் ஊசலாடியது. வெளியில் போவதும், அவர்


என்ன நினைப்பாரோ என்று உள்ளே வருவதுமாக அலைந்தாள்.

186
தன் உறவினரை பார்க்கப் போகவேண்டாம் என்ற பரமேஸ்வரன் மீ து கோபம்
கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. மனம் கலங்கிய தேவி, அன்பினால் தன்
திருமேனியில் பாதி அளித்த சிவனை விட்டுப் பிரிந்து பிறந்தகம் சென்றாள்.

அவள் போவதைக் கண்ட மணிமான் முதலிய பார்ஷதர்கள் சிவனின்


அனுமதியுடன் நந்திதேவரை அழைத்துக் கொண்டு அவள் பின்னால்
சென்றனர். அவளை நந்தியின் மீ து அமரச் செய்து, உரிய அரச மரியாதையுடன்
வாத்யங்களை முழக்கிக் கொண்டு சென்றனர்.

இவ்வாறு ஸதிதேவி பணியாட்கள் புடைசூழ யாகசாலையில் நுழைந்தாள்.

அங்கு நாற்புறமும் வேதம் ஒலித்தது. யாகத்திற்கான மிக விமரிசையான


ஏற்பாடுகளைக் கண்டாள்.

தன் வட்டை
ீ நாடி வந்த பெண்ணை வா என்று கூட தக்ஷன் அழைக்கவில்லை.
மாறாக அவமதித்தான். அவனிடம்‌ கொண்ட அச்சத்தால் வேதியர்களும்
வாளாவிருந்தனர்.

அவளது உடன் பிறந்தோரும் அன்னையும்‌ மகிழ்ந்து கட்டிக்கொண்டு


உச்சிமோந்து வரவேற்றனர்.

தந்தையால் அவமதிக்கப்பட்ட ஸதிதேவி எதையும் ஏற்கவில்லை.

வேள்வியைக்‌ கவனித்தபோது பரமேஸ்வரனுக்கு ஹவிர்பாகம்‌


அளிக்காததைக் கண்டு துணுக்குற்றாள். மூவுலகையும்‌எரிப்பாள் போல சினம்‌
கொண்டாள்.

தேவியின் கோபத்தைக் கண்டு தக்ஷனைக் கொல்ல எழுந்த தன்


பூதகணங்களைக் கையமர்த்திவிட்டு கோபத்துடன் கரகரத்த குரலில்
தக்ஷனைப் பார்த்து உரக்கப் பேசினாள்.

தந்தையே! அகில சராசரங்களிலும் அன்பு கொண்டவர் சங்கரர். அவருக்கு


வேண்டியவர் வேண்டாதவர் யாருமில்லை.

மிகவும் உயர்ந்தவர். அவரிடம்‌ உம்மைத் தவிர வேறு யார் பகைமை


கொள்வார்?

தங்களைப் போன்றோர் மற்றவரின் நற்குணங்களையும்‌ குற்றமாகவே


காண்பர்.

பிணமாகப் போகும் இவ்வுடலை ஆத்மா என்று கொண்டாடுபவர்


சான்றோரைப் பழிப்பதில் வியப்பேது?

சான்றோர் பொறுமைக்கடல் ஆவர். ஆனால் அவரை அவமதிப்பதைப்


பொறுக்காத சான்றோரின் திருவடித் துகள் அவமதிப்பவரின் புகழை
அழித்துவிடும்.

187
இரண்டே எழுத்துக்கள் கொண்ட 'சிவ' என்னும் நாமம் மிக உயர்ந்தது. அதை
அறிந்தோ அறியாமலோ சொல்பவர்க்கு பாவங்கள் அனைத்தும் விலகி
மங்களம்‌உண்டாகும்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் உறவான அவரிடம்‌பகைமை கொண்டீர்.

தர்மரக்ஷகனான பகவானை அறிவிலி என்று எவராவது நிந்திப்பாரேயாகில்


அவரைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு திறனில்லையெனில்
காதுகளைப் பொத்திக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட
வேண்டும்.

நீலகண்டனை அவமதிக்கும் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வுடலை


இனி ஒரு கணமும் தரிக்கமாட்டேன். உடலுக்கு ஒவ்வாத உணவை
உட்கொண்டு விட்டால் வாந்தி எடுத்தாவது அதை வெளியேற்றவேண்டும்.
இல்லையெனில்‌தீமை நேரிடும்.

ஆன்மாவை உணர்ந்த ஞானிகளது மனம் வேதத்தில் கூறிய கர்மகாண்டத்தை


பின்பற்றாது. அவர்களது நடவடிக்கைகளை எவரும் புரிந்துகொள்ள இயலாது.

கர்ம காண்டம் அனைத்துமே ப்ரவிருத்தி தர்மம். உலக வாழ்வை நடத்த


உதவுவது. வாழ்வை வெறுப்பவர் பின்பற்றுவதோ நிவ்ருத்தி தர்மம்.
இரண்டுமே வேதத்தில் கூறப்பட்டவை தாம்.

சங்கரரோ ப்ரும்ம ஸ்வரூபம். அவர் இவையனைத்தையும்‌கடந்து நிற்பவர்.


பரமேஸ்வரன் என்னை தாக்ஷாயண ீ என்றழைப்பார். சிவத்வேஷியான உமது
பெயரால் இனி என்னை அவர் அழைக்க நேரிட்டால் நான் தலைகுனிந்து
வருந்த நேரிடும். உம்மால் ஏற்பட்ட இவ்வுடலை ஒழிக்கிறேன் என்று சொல்லி
ஸதீதேவி மஞ்சள் ஆடை அணிந்து மௌனம் மேற்கொண்டு
இருகண்களையும் மூடி வடக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்தாள்.

யோக சக்தியானால் ப்ராணனை மேலே எழுப்பி இதய சக்கரத்தில்


நிறுத்தினாள். பின்னர் புருவ மத்திக்கு கொண்டு வந்தாள். அங்கிருந்து
அக்னியை மூளச்செய்து உடலெங்கும் நிரப்பினாள். அவளது திருமேனி
முழுதும் யோகத்தீ சூழ்ந்தது. பரமேஸ்வரனையே மனதில் தியானித்து மிகுந்த
தூய்மை மிக்கவளாகி உடலை நீத்தாள்.

அங்கிருந்த தேவரும் ரிஷிகளும் 'ஹாஹா' என்று கூக்குரலிட்டனர். பின்னர்


அனைவரும் தக்ஷனைத் தூற்றினர்.

188
ஸ்ரீமத் பாகவதம் - 107-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 51

ஸதிதேவி தன் ப்ராணனை விடுவதைக் கண்ட சிவகணங்கள் தக்ஷனைக்


கொல்ல ஆயுதங்களை கையிலேந்திக் கொண்டு வேகமாக ஓடிவந்தனர்.
அவர்களது வேகத்தைக் கண்டு, ப்ருகு ரிஷி வேள்வியைக் கெடுப்பவர்களைக்
கொல்லும் பொருட்டு அதற்குரிய மந்திரங்களைக்கூறி அக்னியில் ஹோமம்
செய்தார். அப்போது ருபுக்கள் என்ற வலிமை மிக்க தேவகணங்கள்
ஆயிரக்கணக்கில் எழுந்தனர். இவர்கள் தங்கள் தவலிமையால்‌சந்திரலோகம்
சென்று ஸோமபானம் அருந்தியவர்கள்.

தேஜஸ் மிகுந்த அவர்கள் கைகளில் கொள்ளிக்கட்டைகளோடு எதிர்ப்பதைக்


கண்டு அனைவரும் நாற்புறமும் சிதறி ஓடினர்.

தக்ஷன் அவமதித்ததால் ஸதிதேவி தன் இன்னுயிரை நீத்ததையும், தன்


கணங்கள் அனைவரும் ருபுக்களால் விரட்டப்பட்டதையும் நாரதர் மூலம்
அறிந்த சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டார்.

மிகுந்த கோபத்துடன் உதடுகளை கடித்துக் கொண்டு மின்னல் மற்றும் அக்னி


ஜ்வாலைபோல் ஒளிரும் தன்‌ஜடாமுடியிலிருந்து ஒரு சடையைப் பிடுங்கி
பயங்கரமாக அட்டஹாஸம்‌ செய்து செய்துகொண்டு, அதை தரையில்
ஓங்கியடித்தார்.

(சிரிப்பது ஹாஸம்.
புன்முறுவல் செய்வது மந்தஹாஸம்.
ஹாஹா என்று சத்தம்போட்டு வாயை நன்றாகத் திறந்து சிரிப்பது
அட்டஹாஸம்)

உடனே அதிலிருந்து மேகம்போல் கருத்த திருமேனி, அக்னியாய் ஒளிரும்


மூன்று கண்கள், பயங்கரமான பற்கள், மண்டையோட்டு மாலை, பலவிதமான
ஆயுதங்கள் ஆகியவற்றுடன் வரபத்திரன்
ீ தோன்றினார்.

அவர் பரமேஸ்வரனை இரு கரம்‌ கூப்பி வணங்கி, நான் என்ன


செய்யவேண்டும்? உத்தரவிடுங்கள்! என்றார்.

பரமேஸ்வரன் அவரைப் பார்த்து "ஹே! ருத்ரனே! நீ எனது அம்சமே. என்


கணங்களுக்கு தலைமை தாங்கிச் சென்று தக்ஷனையும் அவனது
வேள்வியையும் அழித்துவிட்டு வா!"
என்றார்.

விதுரா! வரபத்ரன்
ீ பரமேஸ்வரனை வலம் வந்து வணங்கிவிட்டு அங்கிருந்து
புறப்பட்டார்.

மிகவும் ஆர்ப்பரிக்கும் ருத்ரகணங்கள் சூழ, முத்தலை கொண்ட சூலத்தை


கையிலேந்தி, காலில் வரக்கழல்மணிகள்
ீ ஒலிக்க பயங்கரமாக
கர்ஜித்துக்கொண்டு வேள்விச்சாலையை நோக்கி ஓடினார் வரபத்திரன்.

189
அப்போது வேள்விச்சாலையில் இருந்த தக்ஷனும் அவனைச் சார்ந்தவர்களும்
வடதிசையிலிருந்து கிளம்பிய புழுதி வெள்ளத்தைப் பார்த்து "இதென்ன
பேரிருள்? எங்கிருந்து இவ்வளவு புழுதி கிளம்பியது?" என்று
பேசிக்கொண்டனர்.

புயற்காற்றில்லை. தீயோரைத் தண்டிக்கும் ப்ராசீனபர்ஹிஸ் அரசனாக


இருக்கிறான். எனவே திருடர் பயமும்‌இல்லை.

(நல்ல அரசன் இருந்தால் திருடர் பயம் இருக்காது)

பசுக்கள் மேய்ச்சல் முடிந்து வரும் வேளையும் இல்லை. ப்ரளயம் தான்


வரப்போகிறதோ என்று விதம்விதமாக கற்பனை செய்தனர்.

தக்ஷனின் மனைவியும், மற்ற பெண்களும் தக்ஷன் செய்த பாவத்தின்


விளைவால் ஏதோ அசம்பாவிதம் நேரப்போகிறது என்று பயந்தனர்.

வரபத்திரன்
ீ காலரூபனாக அழிக்கக் கிளம்பியதும் அவரது கோபக்கனலால்
அனைவர் மனதிலும் பயம்‌உண்டாகியது. தக்ஷனுக்குப் பல துர்நிமித்தங்கள்
தோன்றின.

அதற்குள்ளாக அங்கு ஓடிவந்த ருத்ர கணங்கள் யாகசாலையைச் சூழ்ந்து


கொண்டனர்.

சிலர் குள்ளர்கள். சிலர் மஞ்சள் நிறத்தவர். சாம்பல்‌நிறத்தவர் சிலர். சிலர்


முதலைபோல் வயிறும் வாயும்‌படைத்தவர்கள்.

சிலர் கிழக்கு மேற்காகப் போடப்பட்டிருந்த தூலங்களை உடைத்தனர். பத்னி


சாலைகளை அழித்தனர். யாகசாலையின் முன்புறமுள்ள சபா மண்டபம்,
ஆக்ன ீத்ரசாலை, யஜமானனின் அறை, போஜன சாலை, சமையற்கூடம்
அனைத்தையும் த்வம்சம் செய்தனர்.

வேள்விக்குண்டங்கள், வேள்விக்கான பாத்திரங்கள் அனைத்தும்


உடைக்கப்பட்டன. வேள்வித்தீயில் சிறுநீர் கழித்து அணைத்தனர்.

அங்குள்ள முனிவர்களையும் பெண்களையும்‌பயமுறுத்தினர்.

மணிமான் ப்ருகு மஹரிஷியைப் பிடித்துக் கட்டினார். வரபத்ரன்


ீ தக்ஷனையும்,
சண்டீசர் பூஷாவையும், நந்திகேஸ்வரர் பகனையும்‌பிடித்துக்கொண்டார்கள்.

மற்ற கணங்கள் கற்களால் அனைவரையும் அடிக்க அனைவரும்‌ சிதறி


ஓடினர்.

முன்பொருசமயம் ப்ரஜாபதிகள் நிறைந்த சபையில் மீ சையை


முறுக்கிக்கொண்டு சிவனைக் கேலி செய்தார் ப்ருகுமுனி. வரபத்ரன்
ீ அவரது
மீ சையைப் பிய்த்தெறிந்தார்.

நடுச்சபையில் தக்ஷன் சிவனை அவமதித்தபோது அவனைக் கண்களால்


ஊக்குவித்த பகனின் கண்களைப் பிடுங்கினார்.

190
தக்ஷன் பரமேஸ்வரனை ஏசும்போது பற்கள் வெளியே தெரியும்படி சிரித்த
பூஷாவின் பற்களை அடித்து நொறுக்கினார்.

அனிருத்தன் திருமணத்தில் பலராமர் பகடையாடும்போது கலிங்கமன்னன்


சிரித்தான். அப்போது கோபம்கொண்ட பலராமன் அவனது பற்களை
உடைத்தது போல்‌இருந்தது இது.

பின்னர் வரபத்ரன்
ீ தக்ஷனைக்‌கீழே தள்ளி அவன் தலையைக் கொய்ய முயற்சி
செய்தார். எவ்வளவு முயற்சி செய்தபோதும் தலை வெட்டுப்படவில்லை.

சற்றுச் சிந்தித்த வரபத்திரன்


ீ வேள்விச் சாலையில் வேள்விக்கான பசுவை
பலியிடும்‌முறையால் தக்ஷனின் தலையைக் கொய்தார்.

இச்செயலைக்கண்டு பூதகணங்கள் அனைவரும் கொண்டாடினர். தக்ஷனைச்


சேர்ந்தவர்கள் ஹாஹா என்று கதறினர்.

தக்ஷனின் தலையை வேள்வித்தீயில் போட்டு வேள்விச்சாலை


முழுவதையும் தீக்கிரையாக்கிவிட்டு வரபத்ரன்
ீ கயிலாயம்‌சென்றார்.

ஸ்ரீமத் பாகவதம் - 108-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 52

மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்:

ருத்ரகணங்களின் செய்கையால் பயந்துபோன தேவர்களும் புரோஹிதர்களும்


ஓடிச்சென்று ப்ரும்மாவிடம்‌முறையிட்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்பே எதிர்பார்த்திருந்த ப்ரும்மனும் ஸ்ரீமன்‌


நாராயணனும்
தக்ஷனின் வேள்விக்குச் செல்லவில்லை.

தேவர்கள் கூறியதைக் கேட்ட ப்ரும்மா, "தேவர்களே! வலிமை மிக்க ஒருவன்


தனக்கு எதிரானவனுக்கு தீமை எண்ணினால், அவன் எண்ணும் தீமைகள்
அனைத்தும் அவனுக்கே வந்துவிடும்."

"முறைப்படி வேள்விகளில் ஹவிர்பாகம் கொடாமல் பரமேஸ்வரனுக்கு


பெருந்தவறு இழைத்து விட்டீர்கள். அவர் எளிதில் அருள் புரியும் வள்ளல்.
அவர் தாளிணைப் பற்றி மன்னிப்புக் கோருங்கள்."

"நீங்கள் துவங்கிய வேள்வி முற்றுப்பெற வேண்டுமானால், உடனே சென்று


பாவ மன்னிப்பு வேண்டுங்கள். ஏற்கனவே தக்ஷனின் சொல்லம்புகளால்
மிகவும்‌ புண்பட்டிருக்கிறார். இப்போது அன்பு மனைவியையும்‌
இழந்துவிட்டார். அவருக்குக் கோபம் வருமாகில் அனைத்து உலகங்களும்‌
அழியும்."

"அவரது பராக்கிரமத்தையும் உண்மை நிலையையும் எவரும் அறியமாட்டார்."

191
"அவரைச் சமாதானப் படுத்துவதும் கடினம். அவர் திருவடிகளில் தஞ்சம்
புகுவதே ஒரே வழி" என்றார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மா தானும்‌


கைலாயம் கிளம்பினார்.

ஏற்கனவே வைகுண்டத்தை மிக அழகாக நேரில் காண்பிப்பதாக


வர்ணித்திருக்கிறார் வியாஸ பகவான். இப்போது கைலாயத்தை அழகுற
வர்ணிக்கிறார்.

"கைலாய மலையில் மூலிகைகள், தவம், மந்திரம், யோகம்‌இவற்றால் சித்தி


பெற்றவர்களும்‌
, மற்றும் பிறவியிலேயே சித்தி பெற்ற தேவர்களும்
யோகிகளும் முனிவர்களும் நித்ய வாசம்‌செய்கின்றனர்."

"கின்னரர்கள், கந்தர்வர்கள், அப்ஸரப் பெண்டிர்கள்‌நிறைந்தது அம்மாமலை."

"பல வண்ணமயமான தாதுக்கள் நிறைந்த உயர்ந்த சிகரங்களை உடையது."

"மரங்கள், செடிகொடிகள், புதர்கள்‌ மண்டியது. காட்டு விலங்குகள்‌ கூட்டம்‌


கூட்டமாகச் சஞ்சரிப்பது."

"பளிங்கு போன்ற நீரோடைகளும், அருவிகளும் கொண்டது. குகைகளும்


தாழ்வரைகளும் நிரம்பியது. சித்தர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்களின்
விளையாட்டுத் தோட்டமாக விளங்குவது."

"மயில்கள் அகவல் ஒலிகள், பஞ்சம ஸ்வரத்தில் குயில்களின் குரல்கள் ,


வண்டுகளின் ரீங்காரம், பல்வேறு பறவைகளின் கலகலவென்ற ஓசை,
நதிகளின் சலசலப்பு போன்ற பல்வேறு நாதங்கள்‌ கேட்டுக்கொண்டே‌
இருக்கும்."

"ஏராளமான கற்பகத்தருக்களைக் கொண்டது. அங்குமிங்கும் நடந்து செல்லும்


யானைகளைக் கண்டால் மலைதான் அசைகிறதோ என்று தோன்றும்."

"மந்தாரம், பாரிஜாதம், ஸரவம், தமாலம், தேக்கு, பனை, மருதம், மா, கதம்பம்,


வேம்பு, நாகம், புன்னாகம், சம்பகம், பாடலம், அசோகம், மகிழம், குந்தம்,
மருதோன்றி முதலிய மரங்கள், நூறு‌இதழ்கள் கொண்ட பொற்றாமரைகள்,
ஏலக்காய், மாலதிக்கொடிகள், குடை மல்லிகை, மல்லிகை, வ்ருக்ஷி ஆகிய
பூக்களும்‌நிரம்பி வழிகின்றன."

"இன்னும் கைலாயத்தில் காணப்படும் ஏராளமான மரங்கள், பூக்கள்,


விலங்குகளின் வகைகள் அனைத்தும் விவரமாகச் சொல்லப்படுகின்றன."

"அங்கு அவர்கள் அளகாபுரியைக் கண்டனர். ஸௌகந்திகம் எனும்


தாமரைப்பூக்கள் நிறைந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டனர்."

"அளகாபுரிக்கு வெளியில் பகவானின் தாமரைத் தாள்கள் பட்டு, நந்தா,


அளகநந்தா என்று பவித்ரமான புண்ய நதிகள்‌உள்ளன."

192
"பொன், வெள்ளி, நவமணிகளால் இழைத்துச் செய்யப்பட்ட விமானங்களில்
யக்ஷர்களது மனைவிகள்‌ உலா வருகின்றனர். அதனால் அளகாபுரி
மின்னல்களால் சூழப்பட்ட ஆகாயம்போல் காட்சியளித்தது. நீலத்தாமரைகள்‌
மிகுந்த தடாகங்கள் காணப்பட்டன."

அனைத்தும் கண்டுகொண்டே சென்ற தேவர்கள் அங்கு ஒரு பெரிய கல்லால


மரத்தைக் கண்டனர்.

அம்மரம்‌ நூறு யோஜனை உயரமுடையது. எழுபத்தைந்து யோஜனை


தூரத்திற்கு அதன் கிளைகள் படர்ந்திருந்தன. அங்கு எப்போதும்‌ நிழல்‌
நிரம்பியிருந்தது. பறவைகளின் கூடுகளே இல்லை.

அம்மரத்தடியில் வசித்தால்‌ மனம் ஒன்றுபடும். முக்தியின்பம்‌ பெற


விரும்புவோர் வந்து கூடுமிடம்‌அது.

அவ்வால மரத்தடியில் சினம் தவிர்த்த யமனோ? என்னும்படி வற்றிருக்கும்



சிவபெருமானைக் கண்டனர் தேவர்கள்."

"அமைதியே உருவாக ஸனகர், முதலியவர்களும், குபேரனும்‌சேவை செய்ய


பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார்."

"உலகங்கள் அனைத்திற்கும் தலைவர், ஏழைப் பங்காளன், நண்பர்,


அன்புள்ளத்தால் அனைவர்க்கும் அருள் செய்பவர். உலக நன்மைக்காக
உபாசனை, தவம், தியானம் ஆகியவற்றைச் செய்பவர்."

"மாலைவேளை மேகம் போல் செந்நிறத் திருமேனி கொண்டவர். பொன்னார்


மேனி, விபூதி, தண்டம், சடைமுடி, மான்தோல், சந்திரகலை ஆகியவற்றோடு
விளங்கினார்."

"தர்பையினாலான ஆசனத்தில் அமர்ந்த முனிவர்கள் நாற்புறமும் சூழ,


மத்தியில் நாரதருக்கு ப்ரும்ம தத்வத்தை உபதேசம்‌செய்து கொண்டிருந்தார்."

"தனது இடது பாதத்தை வலது தொடையில் வைத்து, இடது முழங்காலில்


திருக்கரத்தை வைத்து ஊன்றி, வலது முன்னங்கையில் ருத்ராக்ஷமாலை
ஏந்தி ஞான முத்திரை காண்பித்துக் கொண்டிருந்தார்."

"தேவகணங்கள் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினர். ப்ரும்மாவைக்


கண்ட பரமேஸ்வரன் எழுந்திருந்து இரு கரம்‌
கூப்பி அவரை வணங்கினார்."

"அக்காட்சி வாமன அவதாரம் எடுத்தபோது லோகபூஜ்யரான மஹாவிஷ்ணு


கச்யப முனிவரை வணங்கியது போலிருந்தது."

உடனே மற்ற தேவர்களும், முனிவர்களும் ப்ரும்மாவை வணங்கினர்.

ப்ரும்மதேவர் பரமேஸ்வரனிடம்‌பேசலானார்.

ஸ்ரீமத் பாகவதம் - 109-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 53

193
தேவகணங்கள் புடைசூழ கைலாயம் சென்ற ப்ரும்மதேவர் பரமேஸ்வரனை
வணங்கிவிட்டுக் கூறலானார்:

சங்கரா! தாங்கள் பூரண ப்ரும்மம் என்பதை அறிவேன். வேத‌


மார்கத்தைக்‌
காப்பாற்ற எண்ணி தக்ஷன்‌ மூலம்‌ இந்த வேள்வியை உருவாக்கியதே
தாங்கள்தானே. விரதங்கள், அனுஷ்டானங்கள், வர்ணாஸ்ரம ‌தர்மம்
ஆகியவற்றைத் தோற்றுவித்தவரும் தாங்களே.

புண்ய கர்மங்கள் செய்பவர்க்கு ஸ்வர்கத்தையும்‌ முக்தியையும்


அருள்கிறீர்கள்.

தீயசெயல் செய்பவர்க்கு கொடிய நரகத்தை அளிக்கிறீர்கள்.

சாதாரணமான பாமரனை கோபம்‌ அடிமைப்படுத்துதல் இயல்பு. ஆனால்,


தங்கள் திருவடியில் மனத்தை லயிக்கச் செய்பவர்கள்,‌ சகல
ஜீவராசிகளிடத்தும் தங்களையே காண்பவர்களை கோபம் எவ்வாறு
அடிமைப்படுத்த முடியும்?

எங்கும்‌ எதிலும்‌ வேற்றுமை பாராட்டி, கண்மூடித்தனமாக கர்ம மார்கத்தில்


உழல்பவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள், பொறாமைத்தீயில்
வெந்துபோகிறவர்கள்,
இவர்களை இவர்களது நடத்தையே கொன்றுபோடும். அவ்வாறிருக்க
பெரியோர்களான தாங்கள் அவர்களை கொல்லத் தேவையில்லையே.

பகவானான பத்மநாபனின் மாயை வெல்ல முடியாதது. அநேகமாக


எல்லோருமே அதன்‌அடிமைகள்தாம். அவர்கள் மனம் பேதலித்து வேற்றுமை
பாராட்டும்‌ இடத்தில் இது விதியின் வலிமையே அன்றி இவனாகச்
செய்யவில்லை என்று கருணை கொள்வார்களேயன்றி தம்‌ வலிமையைக்
காட்டுவதில்லை.

வேள்வியில் தங்களுக்கு ஹவிர்பாகம்‌உண்டு என்பது நியதி. அறிவிலிகளான


இந்த புரோஹிதர்கள் தங்களுக்கு ஹவிர்பாகம் கொடாமல் வேள்வியை
நடத்தியது மாபெரும் தவறுதான். தாங்கள் இவ்வேள்வியை அழித்ததும்
நியாயமே. ஆனால், பாதியில் நின்று போன யாகத்தை பூர்த்தி செய்ய கருணை
செய்யுங்கள்.

வேள்வி செய்யும் தக்ஷன் உயிருடன் எழட்டும். பகனுக்கு கண்கள்‌


கிடைக்கட்டும். ப்ருகு முனிவரும் பூஷாவும் இழந்தைவைகளைப் பெறட்டும்.
ஆயுதங்கள், கற்கள் இவைகளால் உடல் நொறுங்கிய தேவர்கள் தங்கள்
கருணையால் விரைவில் குணமடையட்டும்.

வேள்வியில் எஞ்சிய அனைத்துமே உமது பாகமாகட்டும். தாங்கள் பாகத்தை


ஏற்றாலேயே வேள்வி பூர்த்தி அடையட்டும் என்று வேண்டினார்.

பரமேஸ்வரன் சிரித்தவாறே 'கேளுங்கள்' என்று சொல்லிக் கூறலானார்:

194
ப்ரும்மதேவரே! பகவானின் மாயையில் மயங்கிய புத்தியற்ற தக்ஷன்
போன்றவர்களின் செயல்களைப் பற்றி நான் சிந்திப்பதோ, பேசுவதோ இல்லை.

ஆனால், தவறு செய்பவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? அதனால்தான்


இச்சிறிய தண்டனை.

தக்ஷன் தலை எரியுண்டதால் அவன் ஆட்டுத்தலையைப்‌பெறட்டும். மித்ரன்


என்ற தேவனின் கண்களால் பகன் யாகத்தைப் பார்க்கட்டும். மாவுப்
பண்டங்களைச் சாப்பிடும் பூஷா வேள்வி செய்யும் எஜமானனது பற்களால்
மென்று சாப்பிடட்டும். வேள்வியில் எஞ்சியதை எனக்களித்த தேவர்களது
உடலுறுப்புகள் முன்போல் ஆகட்டும்.

கையிழந்த அத்வர்யு முதலானவர்கள் அஸ்வினி தேவர்கள் மற்றும்‌பூஷா


ஆகியோரின் கரங்கள் வாயிலாகத் தன்‌ காரியங்களைச் செய்துகொள்ளட்டும்.
ப்ருகுமுனிவர் ஆட்டுக்கடாவின் மீ சையைப்‌பெறட்டும் என்றார்.

ஏதோ இந்த அளவிற்கு இரங்கி‌ ச் செய்தாரே என்று அத்தனை தேவர்களும்


உடனேயே நன்று நன்று‌என்று ஆர்ப்பரித்தனர்.

பரமசிவனிடம் விடைபெற்றுக்கொண்டு மீ ண்டும் வேள்விச்சாலைக்கு


வந்தனர் தேவர்கள்.

அங்கு ஸ்வன ீயம்‌ என்ற யக்ஞப்பசுவான ஆட்டின் தலையை தக்ஷனின்


உடலில் பொருத்தியதும் அவன் உயிர் பெற்றெழுந்தான். முன்பு
பகைமையினால் மனம் கலங்கியிருந்த தக்ஷன் இப்போது
மனத்தெளிவடைந்து சிவனின் கருணையை நினைத்து கண் கலங்கினான்.

பேச நா எழவில்லை. பொங்கும் இதயத்தை கட்டுப்படுத்திக்கொண்டு மனதார


சிவனைத் துதிக்கலானான்.

இறைவா! தங்களை நான் அவமதித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல்


அனுக்ரஹமே செய்தீர்கள்.

ஒருவன் ஆசார அனுஷ்டானமின்றி பெயரளவில் அந்தணனாக


இருந்தாலும்கூட நீங்களும் மஹாவிஷ்ணுவும் அவனைப்
புறக்கணிப்பதில்லை. அப்படியிருக்க வேள்வி செய்பவர்களை எப்படிப்
புறக்கணிப்பீர்கள்?

தாங்களே ப்ரும்மாவாக இருந்து அனைத்து வேதங்களையும்,


ஜீவராசிகளையும் படைத்தீர்கள். மாடு மேய்ப்பவன் கையில் கோல் கொண்டு
பசுக்களை ஒருமுகப்படுத்தி காப்பதுபோல் தாங்கள் சாஸ்திரங்களைக்
கொண்டு அனவரையும் சகல ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறீர்கள்.

தங்கள் பெருமையறியாமல் கீ ழான சொல்லம்புகளால் உம்மைத்


தாக்கிவிட்டேன். நான் தங்களுடைய கருணைக்கு எவ்விதக் கைம்மாறும்
செய்ய இயலாதாவன்.

195
என் மேல் தாங்கள் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று தக்ஷன் மிகவிரைவில்
மனம் மகிழும் இயல்புடைய பரமேஸ்வரனைத் துதித்தான்.

பின்னர் ப்ரும்மாவின் அனுமதி பெற்று ரித்விக்குகள், புரோஹிதர்கள்


ஆகியவர்களின் உதவியுடன்‌மீ ண்டும் யாகத்தைத் துவங்கினான்.

ஸ்ரீமத் பாகவதம் - 110- விதுர மைத்ரேய ஸம்வாதம் - 54

அந்தணர்கள் தக்ஷனின் வேள்வியைத் தொடங்கவும், ஏற்கனவே


பூதகணங்களால் வேள்வியில் ஏற்பட்ட தோஷங்களைப் போக்கவும், பகவான்
விஷ்ணுவின் ப்ரீதிக்காக 'புரோடாசம்' என்ற ஹவிஸை மூன்று
பாத்திரங்களில் தயார் செய்தனர். அதை அத்வர்யு என்ற ப்ரதான புரோஹிதர்
கையீலேந்தி நிற்க, வேள்வி நாயகனான தக்ஷன் பகவான் விஷ்ணுவைத்
தியானித்தான்.

அழைக்குமிடத்திற்கு ஓடிவரும் பெருமான் உடனே ஆவிர்பவித்தார்.

அவரது திருமேனி ஒளியில் அனைத்தும் மங்கிப்போயின. ப்ருஹத், ரந்திரம்


என்ற இரு ஸாமவேதங்களையும் இறக்கைகளாகக் கொண்ட கருடன் மேல்
ஏறிக் காட்சியளித்தார்.

ஸ்ரீ மத் பாகவத்தில் இரண்டு மூன்று அத்யாயங்களுக்கு ஒரு முறையேனும்


பகவான் விஷ்ணுவின் ரூபவர்ணனை மிக விஸ்தாரமாகச் சொல்லப்படும்.

இவ்வாறு சொல்லிச் சொல்லி கதை கேட்பவரின் மனதில் காதுகளின்


வழியாகவே பகவானின் ரூபத்தை ப்ரதிஷ்டை செய்து விடுகிறார் வியாஸ
பகவான்.

நீலமேகத் திருமேனி, இடுப்பில் பீதாம்பரம், அதன்மேல் ரத்தினக் கற்கள் பதித்த


தங்க ஒட்டியாணம், சூரிய ஒளி போல் கண்ணைப் பறிக்கும் கிரீடம், தாமரை
மலரன்ன திருமுகம், கறுத்த அளகபாரம் (சுருண்ட கேசம்), காதுகளில் மகர
குண்டலங்கள், பக்தர்களைக் காப்பதற்காகவே எட்டு கரங்களிலும் சங்கு,
சக்கரம், தாமரை மலர், அம்பு, வில், கதை, வாள், கேடயம் முதலிய
ஆயுதங்கள், கர்ணிகார மரம் போன்ற உறுதியான திருமேனி, மார்பில் ஸ்ரீ
வத்ஸம் எனும் திருமகள் வசிக்கும் மரு, கழுத்தில் வனமாலை, அழகான
புன்சிரிப்பு, கருணை ததும்பும்‌ பார்வை இவற்றுடன் ப்ரபஞ்சமே மகிழும்
வண்ணம் பகவான் தோன்றினார்.

ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் உடனே எழுந்து வணங்கினார்கள்.

பகவானின் புகழைச் சொல்லி மாளாது. எனினும் அனைத்து தேவர்களும்


தங்களால் இயன்ற ஸ்துதிகளைச் செய்தனர்.

தக்ஷன் உடனே பூஜா பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பார்ஷதர்கள் சூழ


பகவானின் திருவடியை அடைந்து துதித்தவாறே சரணடைந்தான்.

196
தக்ஷன், ரித்விக்குகள், ஸபையோர்கள், ஸ்ரீ ருத்ரன், ப்ருகு, ப்ரும்மா, இந்திரன்,
ரித்விக்குகளின் மனைவியர், ரிஷிகள், ஸித்தர்கள், தக்ஷனின் மனைவி,
திக்பாலகர்கள், யோகிகள், ப்ரும்மா, அக்னி, தேவர்கள், கந்தர்வர்கள்,
வித்யாதரர்கள், ப்ராஹ்மணர்கள் அனைவரும் தனித்தனியாக பகவான் முன்
சென்று அவரைத் துதி செய்து வணங்கினார்கள்.

அக்காட்சி, எப்படி இருந்ததெனில், ஒரு மஹாத்மா ஒரு க்ருஹத்திற்கோ,


அல்லது ஒரு சபைக்கோ எழுந்தருளினால், அங்குள்ளவர் அனைவரும்
பொதுவாக ஒரு முறை வணங்குவர். இருப்பினும் அதனால் மனத்ருப்தி
கொள்ளாமல் தனித்தனியாக ஒருமுறை அவர் முன் சென்று வணங்குவதைப்
போல் இருந்தது.

வேள்வி துவங்கியதும் அத்தனை தேவர்களுக்குமான ஹவிர் பாகம்


வழங்கப்பட்டதைக் கண்டு மகிழ்வுற்ற பகவான் தானும் தனது
ஹவியைப்பெற்றார்.

பின்னர் தக்ஷனை அழைத்துக் கூறலானார்:

தக்ஷனே! ஜகத்திற்கு ஆதிகாரணனான நானே ப்ரும்மாவாகவும், சிவனாகவும்


உருக்கொண்டிருக்கிறேன். அனைத்து ஜீவன்களின் ஆன்மாவும் நானே.
அவர்களின் அத்தனை செயலுக்கும் சாட்சியாக விளங்குகிறேன். ஸத்வம்,
ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை ஏற்று மாயையை இயக்கி அந்தந்தச்
செயல்களுக்கேற்ற உருவமும் பெயரும் கொண்டு விளங்குகிறேன்.

அறிவிலிகள் என்னையும், ப்ரும்மாவையும், சிவனையும் வெவ்வேறாகப்


பார்க்கிறார்கள்.

எந்த மனிதனாவது அவனது தலை, கை, கால்கள் முதலியவற்றை வேறு


ஒருவனுடையது என்று எண்ணுவானா? அதுபோலவே என் பக்தன்
என்னிடமும், மற்ற ஜீவராசிகளிடமும் வேற்றுமை பாராட்டுவதில்லை.

எங்களுக்குள் வேற்றுமை காண்பவன் அமைதியைப் பெறுவதில்லை என்றார்.

மைத்ரேயர் கூறலானார்:

இவ்வாறு கூறி அவனை ஆசீர்வாதம் செய்துவிட்டு பகவான் கிளம்பியதும்,


தக்ஷன் மற்ற தேவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்துவிட்டு வேள்வியை
முடித்து அவப்ருதஸ்நானம் செய்தான்.

(அவப்ருதம் என்பது வேள்வியை முடித்துப் பின் செய்யவேண்டிய மங்கள


ஸ்நானம்)

அனைத்து தேவர்களும் தக்ஷனை உன்‌ மனம் என்றும் தர்மநெறியில்


நிற்கட்டும்‌என்று வாழ்த்திவிட்டு இருப்பிடம்‌சென்றனர்.

இவ்வாறு தக்ஷன் மகளான ஸதிதேவி யோகத்தீயால் உயிர் நீத்த பின்


ஹிமவானின் மனைவியான மேனா தேவியிடம் பார்வதி என்னும் பெயருடன்

197
மகளாகப் பிறந்தாள். பரமேஸ்வரனையே புகலாகக் கொண்ட அவள்,
அவரையே கணவராக அடைந்தாள்.

இந்த சரித்திரத்தை ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், பரம பாகவதருமான


உத்தவரிடமிருந்து கேட்டறிந்தேன்.

விதுரா! இச்சரிதம் ஆயுளையும், புகழையும் வளர்க்கக்கூடியது.


பாவமூட்டைகளை அழிப்பது. இதை பக்தியோடு தானும் கேட்டு பிறருக்கும்
சொல்பவனது ஸம்சார துக்கம் நீங்கும்.

ஸ்ரீமத் பாகவதம் - 111-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 55

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்:

ப்ரும்மாவின் புதல்வர்களான ஸனகாதிகள், நாரதர், ரிபு, ஹம்ஸர், ஆருணி,


யதி முதலியவர்கள்‌ப்ரும்மசர்ய விரதத்தை ஏற்றனர். ப்ரும்மாவின் மற்றொரு
பிள்ளையான அதர்மனின் மனைவி ம்ருஷா. அவர்களுக்கு தம்பன், மாயை
என்ற இரட்டையர் பிறந்தனர். தென்மேற்கு திசையின் அதிபதியான நிர்ருதி
அவர்களை வாரிசாக ஏற்றார். அவர்கள்‌ மூலம் லோபன், நிக்ருதி (கபடத்தனம்)
ஆகியோர் பிறந்தனர். அவர்களின் சந்ததி கலி (கலகம்), துக்ருதி(கெட்ட சொல்).
அவர்களின் சந்ததி பயம், ம்ருத்யு. அவர்களின் குழந்தைகள் நிரயன் (நரகம்),
யாதனா (நரகத்தை அனுபவிக்கும் உடல்) ஆகியோர்.

விதுரா!

இதுவரை ப்ரபஞ்ச நாசத்திற்கு காரணமான அதர்மனது வம்சம்


சொல்லப்பட்டது. புனிதமான இக்கதையை உட்பொருளுணர்ந்து மூன்றுமுறை
கேட்பவரின் பாவங்கள் முற்றிலுமாய் அழியும்.

இப்போது ஸ்ரீ ஹரியின் அம்சமான ப்ரும்மதேவரின் அம்சமாகத் தோன்றிய


ஸ்வாயம்புவ மனுவின் வம்சக் கதையைத் தொடர்வேன்.

மஹாராணி சதரூபைக்கு ப்ரியவிரதன், உத்தானபாதன் என்ற இரண்டு


மகன்கள்.

அவர்களுள் உத்தானபாதனை பற்றிச் சொல்கிறேன் என்றார் மைத்ரேயர்.

மூத்தவனான ப்ரியவிரதன் இருக்க இளையவன் உத்தானபாதன் கதையை


எதற்காக வியாஸர் முதலில் வைத்தார் என்று தோன்றலாம்.

உத்தானபாதனின் மகனான துருவனின் சரித்திரம் அத்தகையது.

ஐந்தே வயதில் தூய்மையான பக்தியால் இறைவனை தரிசிக்கும் பாக்கியம்


பெற்றவன்.

இன்னொரு முக்கியமான காரணம் என்னவெனில் துருவனின் கதை என்பது


அவனது குருவான நாரதரின் பெருமைகளை நிரூபிக்கும் கதையாகும். ஸ்ரீமத்

198
பாகவதம் எழுதத் தூண்டி தனக்கு அருள் செய்த குருவான நாரதரின்
பெருமையை முதலில் சொல்ல அவர் மனம் துடித்தது.

நாரதரின் கதையை ஆரம்பத்திலேயே பார்த்தோம். அவரும் ஐந்து வயதில்


ஆதரவற்ற நிலையில் ஸாதுக்களின் காரணமற்ற கருணையால் இறையை
உணர்ந்தவர்.

அவருடைய சரித்திரத்தை ஒத்தாற்போலவே துருவனும் தன் ஐந்து வயதில்,


ஆதரவுகளற்ற சமயத்தில் குருவின் கருணையால் இறையை உணர்ந்தான்.

தன்னைப்போலவே இக்குழந்தை கஷ்டப்படுகிறானே என்று நினைத்த


நாரதரும் அவன்பால் கருணையைக் கொட்டி கொட்டி அனுக்ரஹம் செய்த
கதை. அதை நினைத்ததும் துருவனின் கதையை வியாசர் முதலில் சொல்ல
விழைந்தார் போலும்.

உத்தானபாதனுக்கு இரு மனைவியர். மூத்தவள் ஸுநீதி. இளையவள் ஸுருசி.

அழகுடனும், அனைத்து நற்பண்புகளுடனும் விளங்கினாள்‌ ஸுநீதி.


இருப்பினும் ஸுருசியின் பேரழகில் மயங்கிய உத்தானபாதன் அவளது
கைப்பாவையாக மாறிப்போனான்.

புலன்களின் ருசிக்கு அடிமைப்பட்டால் நீதி தன்னால் விலகிப்போகும்.

முதலில் தனக்கு அரண்மனை வாசம்‌கிடைத்தால் போதும் என்று நினைத்த


ஸுருசி, பின்னர் பட்டமஹிஷியாக ஆசைப்பட, அதற்கும் இணங்கினான்
உத்தானபாதன். ஸுநீதியின் அமைதி ஸுருசிக்கு இன்னும்‌ தைரியத்தை
ஊட்ட, அவளது நற்பண்புகளையும் அமைதியையும்‌ கண்டு பொறாமை
கொண்டு அலட்சியம்‌செய்யத் துவங்கினாள் ஸுருசி.

உலகையே ஆளும் ஸார்வபௌமனான உத்தானபாதன் ஸுருசியை


மகிழ்விக்க தன் பங்கிற்கு ஸுநீதியை அவமதித்தான்.

இதற்கிடையில் ஸுநீதிக்கு துருவன் என்ற குழந்தையும், ஸுருசிக்கு


உத்தமன் என்ற குழந்தையும் பிறந்தன. நாளுக்கு நாள் சபையோர்,
பணியாட்கள், சிலசமயம்‌மக்கள் மத்தியிலும் ஸுநீதிக்கு அவமரியாதைகள்
நிகழ்ந்தன. எல்லோரும் மூத்த ராணி பாவம் என்று வம்பு பேசத் துவங்கினர்.

தனக்கு ஏற்பட்ட அவமானங்களைப் பொறுத்தாலும், இந்தச் சூழ்நிலையில்


குழந்தை வளர்ந்தால் அதன் மனநிலை பாதிக்கப்படும் என்று தவித்தாள்
ஸுநீதி.

அரசனுக்குரிய எத்தனையோ மாளிகைகளில் அரண்மனையை விட்டுத் தள்ளி


இருந்த எளிமையான ஒரு மாளிகையைத் தேர்ந்தெடுத்து குழந்தைக்கு
விவரம்‌தெரிய ஆரம்பிக்கும்‌முன்னரே அங்கு சென்று வசிக்கத் துவங்கினாள்.

தானாகவே தொல்லை விட்டது என்றெண்ணிய அரசன், அவளுக்கான


மானியங்களுக்கு ஏற்பாடு செய்து, சில பணியாளர்களையும் நியமித்தான்.
அதோடு மூத்த மனைவியையும் தன்‌ குழந்தையையும் மறந்தே போனான்.

199
அத்தனை விதமான நற்பண்புகளையும், தன் நடத்தை மூலமாகவும்,
இதிஹாஸ புராணக் கதைகள் மூலமாகவும் துருவனுக்கு ஊட்டிய ஸுநீதி,
அவனிடம் தந்தையைப் பற்றி மூச்சுகூட விடவில்லை. அடிக்கடி வட்டில்

ஸத்சங்கங்கள் ஏற்பாடு செய்வாள்.

நாளொரு மேனியும்‌பொழுதொரு வண்ணமுமாகக் குழந்தை வளர்ந்தது.

பொதுவாக ஒரு செடியோ மரமோ இலை விட்டு, மொட்டுக்கட்டி, பூத்தபிறகே


அதன் நறுமணத்தை வெளிப்படுத்தும். ஆனால், துளசியோ முளைத்து முதல்‌
இலை விடும்போதே வாசனையுடன் திகழும்.

அதுபோல், ஒருவர் பெரிய மஹாத்மாவாக வரப்போகிறார் என்றால் அவரது


இளமைப் பருவத்திலேயே, இறைவனைக் காணும் முன்பே, அனிச்சை
செயல்கள்‌மூலம் அவரது மேன்மை வெளிப்பட்டுவிடும்.

துருவனது முகமும், கண்களும், ஸாமுத்ரிகா லக்ஷணமும், அவன்து


குணவைபவங்களும் ஆளுமையும், ஈர்ப்புத்தன்மையும், தேஜஸும்‌அவனை
மஹாத்மாவாக விளங்கப்போகிறவன் என்று பறை சாற்றின.

ஐந்து வயதானதும் துருவன் க்ஷத்ரியர்களுக்கான பாடசாலையில்


சேர்க்கப்பட்டான்.

ஸ்ரீமத் பாகவதம் -112-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 56

அரசனான உத்தானபாதன் அலட்சியம் செய்ததால் குழந்தை துருவனோடு


தனியாக வசித்து வந்தாள் அவனது மூத்த மனைவி ஸுநீதி.

குழந்தை அரச வம்சத்தினருக்கான பாடசாலையில்‌ சேர்க்கப்பட்டான்.


ஒருநாள் பள்ளியில் ஏதோ விழாவில்‌ பங்கேற்பதற்காக குழந்தைகளை
வெகுவாக அலங்கரித்து, பெற்றோரே அழைத்து வந்து பள்ளியில் விட்ட
வண்ணம்‌இருந்தனர்.

குழந்தை துருவனையும் அழகாக வெண்பட்டுடுத்தி விட்டு, பட்டுச் சட்டை


போட்டுவிட்டு, முத்து மாலைகள்‌ அணிவித்து, கங்கணங்கள் போட்டு,
காதுகளில்‌ குண்டலங்கள் அணிவித்து, நெற்றியில் அழகாக திலகம்‌இட்டு,
தலையில் ஒரு மயில்பீலி வைத்து அலங்கரித்து பள்ளியில் கொண்டு விட்டள்
ஸுநீதி. குழந்தையா அல்லது நடமாடும் தெய்வம்தானோ என்னும்படி அழகும்
தேஜஸுமாய் ஜ்வலித்தான் துருவன்.

சற்று முன்னமே வந்து விட்டதால், வேடிக்கை பார்க்கத் துவங்கினான்.

அவனது நண்பர்கள் ஒவ்வொருவரையும்‌ ஆணும் பெண்ணுமாய் இருவர்


அழைத்துவந்து பள்ளியில் விட்டனர். அவர்கள் தங்கள் குழந்தை பள்ளியினுள்‌
செல்லும் வரை பார்த்துக் கொண்டே நிற்பதையும் கையசைத்து
புன்னகையுடன் விடை‌பெறுவதையும்‌கண்டான்.

200
அநேகமாக எல்லாக் குழந்தைகளுடனும்‌இருவர் வந்தனர்.

மெதுவாகத் தன் தோழர்களை அழைத்துக்‌கேட்டான்.

வரசிம்மா,
ீ உன்னை இரண்டுபேர் பள்ளிக்கு கொண்டுவந்து விட்டார்களே..
அவர்கள்‌யார்?

அவன் சொன்னான். என் அம்மா அப்பா.. இன்னொருவனைக்‌ கேட்டான்


துருவன். உன்னைக் கொண்டு வந்து விட்ட இருவர் யார்?

என் அம்மா அப்பா.

இப்படியாக துருவன் வகுப்புத்தோழர் அனைவரையும்‌ கேட்க, எல்லாக்


குழந்தைகளும் துருவன்‌ கேட்கும் கேள்வி வித்தியாசமாகப் பட்டதால்‌
அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

என்னாச்சு துருவா?

ஒன்றுமில்லை என்றவன்
தயங்கி தயங்கிக் கேட்டான்.

எல்லாருக்குமே அம்மா அப்பா என்று இரண்டு பேர் இருப்பார்களா? அல்லது


யாருக்காவது ஒருவர் மட்டும்‌இருப்பாரா?

ஒரு குழந்தை சொன்னது..

துருவா.. எல்லாருக்கும் அம்மா அப்பா உண்டு.

எனக்கு அம்மா மட்டும் தானே இருக்காங்க..

அட.. இதானா..

உனக்கும் அப்பா இருக்கார் துருவா..

எனக்கு அப்பாவா?
யாரது?

ஊருக்கே தெரியுமே.. உனக்குத் தெரியாதா?

தெரியாதே.. யாரடா அது? தயவு செய்து சொல்லுங்களேன்.

ஒரு குழந்தை சொன்னான்.

என்னுடைய அப்பா கஜானா அதிகாரி. இவனுடைய அப்பா சேனாதிபதி.


இவ்வளவு ஏன்? எங்க எல்லாருடைய அப்பாவும் உன் அப்பாகிட்டதான்
கைகட்டி வேலை பார்க்கறாங்க. உன் அப்பாதான் துருவா இந்த நாட்டின் ராஜா..

201
துருவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. இதுவரை அம்மா சொன்னதே
இல்லையே..

நிஜம்மாவா? அவர் எங்கே இருப்பார்? உங்களுக்குத் தெரியுமா?

ஒரு குழந்தை துருவனின் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு பாடசாலை


வாயிலுக்குப் போனான்.

அதோ அங்கே தெரியறதே! பெரிய கோட்டை. அதுக்குள்ள அரண்மனை..


மேலே கொடி பறக்கறது பார்த்தாயா? அதுதான் உன் அப்பா வசிக்கும்
அரண்மனை.. பல்வேறு விதமான உணர்ச்சிகள் துருவனைத் தாக்க, அவனுக்கு
தன் அப்பாவை உடனே பார்க்கவேண்டும் என்று தோன்றியது.

அந்தக் குழந்தையின் கையை உதறிவிட்டு அரண்மனையை நோக்கி சிட்டாய்ப்


பறந்தான். கோட்டை வாயிலை அடைந்ததும் காவலாளிகளைப் பார்த்து
தயங்கி நின்றான். காவலாளிகள் துருவனைப் பார்த்ததும் புரிந்து கொண்டனர்.

டேய்.. அந்தம்மா பையன்.. இளவரசர்டா.. இவரை உள்ள விட்டா சின்னம்மா


நம்ம வேலையை விட்டுத் தூக்கிடுவாங்களே.. யார் கண்டது? இதெல்லாம்
பெரிய இடத்து சமாச்சாரம். என்ன இருந்தாலும்‌இவர்தான் மூத்த இளவரசர்.
நாளைக்கு ராஜா மனசு மாறி இவர் சின்ன ராஜாவா வந்து உள்ள உட்கார்ந்தா
அப்பவும் நமக்கு வேலை காலி..

இப்ப என்ன பண்றது? பேசாம வழக்கமா பண்றதைப் பண்ணுவோம். சரி சரி..


காவலாளிகள் அவரவர் இடத்தில் சென்று நின்று கொண்டே உறங்குவதைப்
போல் நடிக்கத் துவங்கினர். தன்னை அவர்கள்‌தடுக்கவில்லை என்றுணர்ந்த
துருவன் உள்ளே ஓடினான்.

எல்லா வாயிலிலும்‌இவ்வாறே ஆயிற்று.

அந்த காவலாளிங்கல்லாம்‌உள்ள விட்டுட்டாங்க. நமக்கேன் வம்பு


என்பதாக எந்த வாயிற்காலனும் துருவனைத் தடுக்க முயலவில்லை.

நேராக சபா மண்டபத்தை அடைந்தான் துருவன்.

ஸ்ரீமத் பாகவதம் - 113-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 57

தந்தையைக் காணும் ஆவலில் அரண்மனைக்கு ஓடினான் துருவன். சபா


மண்டபம் வரை வந்துவிட்டான். அவனைத் தடுப்பார் எவருமிலர்.

அங்கே அரியாசனத்தில் உத்தானபாத மஹாராஜா அமர்ந்திருந்தான். அவனது


ஒரு தொடையில் 4 வயதுடைய சிறுவன். பக்கத்தில் அரசனின்
இளையமனைவி ஸுருசி நின்றுகொண்டிருந்தாள்.

ஓடிவந்த குழந்தையைப் பார்த்ததுமே அது தன் மகன் துருவன் என்று புரிந்து


கொண்டான் உத்தானபாதன்.

202
துருவனின் அழகும், தேஜஸும், கண்டதுமே வாரியணைத்துக் கொஞ்ச
வேண்டும் போல் முகத்தில் மிளிரும் குறுகுறுப்பும் மிகவும் மகிழ்ந்து
போனான் அரசன்.

அடுத்த கணமே ஸுருசியை நினைத்து பயந்து, தன் மகிழ்ச்சியைக் காட்டாமல்


பேசாமல் அமர்ந்திருந்தான். துருவனைக் கண்டதும் உடனே திரும்பி கணவன்
முகத்தைத்தான் பார்த்தாள் ஸுருசி.

என்ன செய்கிறான்? குழந்தை மேல் பாசம் இருக்கிறதா, வரவேற்கிறானா,


என்று பார்த்தவள் ஒரு கணம் அரசன் முகம் மலர்ந்ததையும், பின்னர் அவன்
தன்னை அடக்கிக் கொண்டதையும் கவனித்தாள்.

துருவனோ, "என் அப்பா தானே.."

"அந்த மடியில் இருப்பவன் என் தம்பியோ.. அவன் அப்பா மடியில்


உட்கார்ந்திருக்கிறானே.. இந்த மடி காலியாகத் தானே இருக்கு. நாம்
உட்காரலாமே.."

என்றெண்ணி கிடுகிடுவென்று உயர்ந்த அந்த சிம்மாசனத்தின் படிகளில் ஏறி,


ஒரே தாவாகத் தாவி தந்தை மடியில் அமர்ந்தான்.

மகிழ்ந்துபோன உத்தானபாதன் ஏதும் சொல்லாமல் இருந்தான்.

மடியில் அமர்ந்த குழந்தையை வராதே என்று சொல்லாமல் பேசாமல்


இருக்கிறார் என்றால் அதில் அவருக்கு உடன்பாடு.

தீப்பட்டாற்போல் துடித்தாள் ஸுருசி. இன்றைக்கு தந்தை மடி. பிறகு


மெதுவாக தினம் வர ஆரம்பிப்பான். இவனைத் தொடர்ந்து இவன் தாயும்
வருவாள். பிறகொருநாள் மூத்தமகன் என்று சிம்மாசனத்திற்கும் உரிமை
கேட்பான். முளையிலேயே கிள்ளவேண்டும்.

ஆங்காரத்துடன் பாய்ந்து வந்து, துருவனின் பட்டுப்போன்ற கன்னத்தைப்


பிடித்து நறுக்கென்று கிள்ளினாள். செக்கச்சேவேலென்று சிவந்தது
குழந்தையின் கன்னம். கையைப் பிடித்திழுத்து கீ ழே தள்ளினாள். உயரமான
சிம்மாசனத்தின் படிகளில் உருண்டு கீ ழே விழுந்தான் ஐந்தே வயதான
துருவன்.

கரகரத்த குரலில் கத்தினாள்! ஹே சிறுவனே! நீ அரசரின் மகனாக


இருக்கலாம். ஆனால் அரசர் மடியில் அமர வேண்டுமானால், என் வயிற்றில்‌
பிறக்க வேண்டும்.

சிறு குழந்தையான நீ எட்டாத பொருளுக்கு ஆசைப்படுகிறாய். நீ வனம் சென்று


ஸ்ரீமன்நாராயணனைக் குறித்து தவம் செய். அவரைக் கண்டு என் வயிற்றில்
பிறப்பதற்கு வரம் வாங்கிக்கொண்டு வந்து என் மகனாகப் பிற.

அப்போது உன் தந்தை மடியில் மட்டுமல்ல, சிங்காசனத்திலும்‌அமரலாம்.

203
அவள்‌ஏன் அவ்வாறு கூறவேண்டும்? அதுவும் ஸுருசி போன்ற துர்நடத்தை
உள்ள பெண்ணின் வாயில் தவம் செய்து பகவானைப் பார் என்ற வார்த்தை
வந்துவிடுமா என்ன? ஒவ்வொருவருக்கும் பகவான் ஒவ்வொரு விதமாய்
அழைப்பு விடுக்கிறான்.

மேலும், துருவனின் அழகும், தேஜசும் கண்டு அவளும்‌உள்ளூர, இப்பேர்ப்பட்ட


அழகான குழந்தை என் மகனாய் இருக்கலாகாதா? என்று ஏங்கினாள்.
அதனாலும் துருவனைக் கண்டு என் வயிற்றில் பிறக்க வரம்‌ வாங்கி வா
என்கிறாள். இல்லையென்றால் கொடுஞ்சொல்லாய்ச் சொல்லும்போது
இத்தகைய வார்த்தைகள்‌ஒருவர் நாவில் வந்துவிடுமா?

க்ஷத்ரியக்‌
குழந்தை துருவன், அடிபட்ட நாகம்போல், மிகுந்த கோபத்துடன்
வந்த அழுகையைz உதட்டை கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டு வேகமாக
அங்கிருந்து வெளியேறினான். பெருமூச்செறிந்து கொண்டு ஓட்டமும்
நடையுமாக அவன் வட்டைீ அடைந்தான்.

ஸ்ரீமத் பாகவதம் - 114-_விதுர மைத்ரேய ஸம்வாதம் - 58

அரண்மனையில் ஸுருசியால் அவமானப்படுத்தப்பட்ட துருவன்


கோபத்தையும் அழுகையையும் அடக்கிக்கொண்டு வேகமாக வட்டை

அடைந்தான்.

பள்ளிக்குச் சென்ற மற்ற குழந்தைகள் வட்டிற்கு


ீ திரும்பிய வண்ணம் இருக்க,
துருவனைக் காணாமல் அவனை எதிர்நோக்கி வாசலிலேயே நின்று
கொண்டிருந்தாள் ஸுநீதி.

அவ்வளவு நேரமாக அடக்கி வைத்துக் கொண்டிருந்த உணர்வுகள் அனைத்தும்


ஒன்று சேர்ந்து தாயைக் கண்டதும் பீறிட்டு அழுகையாய் வெடித்தது.

பள்ளிக்குச் சென்ற குழந்தை தன்னை கட்டிக்கொண்டு வாய்விட்டு கேவிக்


கேவி அழுவதைக் கண்டதும் ஸுநீதி துடித்துப்போனாள்.

என்னாச்சு துருவா?

ஏதாவது அடிபட்டுக் கொண்டாயா?

வலிக்கிறதா?

ஏதேனும்‌
சண்டையா?

யாராவது ஏதாவது சொன்னார்களா?

குழந்தையை அள்ளிக் கொண்டு உள்ளே சென்று முகத்தை துடைத்து


முத்தமிட்டு வரிசையாய் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். எதற்கும்
பதிலில்லை.

சேடிப்பெண்ணை நோக்க, அவர்களுக்குத் தெரியாத விவரமா?

204
அரண்மனையிலிருந்து துருவன் வடுவரும்‌
ீ முன்னர் செய்தி காற்றாய்
பரவியிருந்தது.

சேடிப்பெண்‌தயங்கி தயங்கிச் சொன்னாள்.

சின்ன ராஜா அரண்மனைக்குப்‌போனார்மா..

என்னது அரண்மனைக்கா?

யார் சொன்னது இவனுக்கு?

தெரியாதும்மா..

அங்கே என்ன நடந்தது?

சேடிப்பெண்‌ ஒரு விவரம்‌ கூட விடாமல்‌ நேரில்‌ கண்டவள்‌ போல்


அனைத்தையும்‌ஒப்பித்தாள்.

ஸுநீதி மிகவும் ஸாது. அவளது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

அவளது தாமரைக் கண்களில் கண்ண ீர் அருவியாய் ஓடியது.

ஐந்தே வயதான குழந்தையிடம், "காட்டுக்குப்போ, தவம் செய்து என் மகனாகப்


பிறக்கும் வரம் வாங்கி வா" என்று ஒருத்தி சொல்வாளா?

அவள்‌ மகனாகப் பிறக்க வேண்டும் என்றால் இறந்தால் தானே பிறக்க


முடியும்?

ஐந்து வயதிலேயே இவ்வளவு துவேஷமா?

நாளை வளர்ந்தால் பட்டத்திற்கு போட்டியாகி விடுவான் என்று ஆளை


வைத்துக்‌கொல்லவும் தயங்கமாட்டார்களே.

ஆட்சியில் இருப்பவர்களிடம் எல்லா பலமும் உண்டு.

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாய் கண்களைத் துடைத்துக்கொண்டு


குழந்தையின் முகத்தைப் பார்த்தாள். பிறகு சொன்னாள்.

உன் சிற்றன்னை சரியாகத்தான் சொல்லியிருக்கிறாள் துருவா.

பாவியான என் வயிற்றில் பிறந்ததால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டம்.


நமக்கு எப்போதும் பகவான்தான் அரண்.

திட்டுவது போல் சொல்லியிருந்தாலும் சிற்றன்னை சொன்னதில் உண்மை


இருக்கிறது.

205
மறந்தும் பிறர்க்கு தீங்கு நினையாதே. மற்றவர்க்கு நாம் நினைக்கும் தீங்கு
உண்மையில் நம்மையே அடைகிறது.

உன் தாத்தா ஸ்வாயம்புவ மனு ஏராளமாகத் தவமியற்றி பகவானை ப்ரீதி


செய்திருக்கிறார். உன் தாத்தாவின் அப்பாவான ப்ரும்மாவும் பல்லாயிரம்‌
வருடங்கள் தவமியற்றித்தான் ப்ரும்ம பதவியை அடைந்தார்.

நீ காட்டுக்குச் சென்று தவமியற்று. பகவான் உனக்கு எப்போதும்


துணையிருப்பார்.

குழந்தையைக் கட்டியணைத்து உச்சி மோந்து, திலகமிட்டாள்.

கண்ணைத் துடைத்துக் கொண்டு தாயை வணங்கிவிட்டு தீரனாகக்


கிளம்பினான் துருவன்.

ஸ்ரீமத் பாகவதம் - 115-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 59

சிற்றன்னையின் கொடுஞ்சொற்களால் புண்பட்ட துருவன் தாயின் சொற்படி


காட்டுக்கேகினான்.

ஒருவன் தூய்மையான மனத்துடன் உண்மையாக இறைவனைத்


தேடுவானாகில், அவனைத் தடுத்தாட்கொள்ள ஒரு உத்தம ஸத்குருவை
அனுப்புகிறான் இறைவன்.

சீடன் இறைவனைத் தேடும் சமயத்தில் குரு தான் சீடனைத்தேடி வருகிறார்.

அன்று வைகுண்டத்திலிருந்து நாரதர் கிளம்பும் சமயம் பகவானான ஸ்ரீஹரி


அவரை அழைத்து, தன் கழுத்திலிருந்த தாமரை மாலையை அவர்
கழுத்திலிட்டு, "நாரதா, இன்று உனக்கு லாபம்" என்று சொல்லி அனுப்பினார்.

நாரதர் தான் என்ன வியாபாரம் செய்கிறோமா, பகவான் ஏன் லாபம் என்று


சொல்கிறார் என்று யோசித்துக்கொண்டே புறப்பட்டார்.

துருவனோ நாட்டைக் கடந்து காட்டிற்குள் நடக்கத் துவங்கினான்.

பூமிக்கு வந்து நாரதர் ஸஞ்சாரம் செய்து கொண்டிருந்த சமயம் குட்டிக்


குழந்தை துருவனைக் கண்டார். கண்டதுமே அவன் யாரென்பதையும்,
அவனது நோக்கத்தையும் ஞான த்ருஷ்டியால் அறிந்து கொண்டார்.

அவனது குறுக்கே வழியை மறைத்து நின்றார்.

கோபத்தோடும், வைராக்யத்தோடும் தலையைக் குனிந்து கொண்டு


விடுவிடுவென்று நடந்து கொண்டிருந்த துருவன் பாதை தடை பட்டதும்
நிமிர்ந்து பார்த்தான்.

நெடுநெடுவென்ற உயரம், அமைதி ததும்பும் புன்னகைத் திருமுகம், கருணை


பொங்கும் கண்கள், நீண்ட கைகள், தாமரை போன்ற கரகமலம், தாமரைத்

206
திருவடிகள், சிவந்த திருமேனி, தோளில் மஹதி என்னும் வணை,
ீ கழுத்தில்
தாமரை மாலை.

நாரத மஹரிஷி என்று உணர்ந்தான். அன்னை சொல்லியிருக்கிறாள்.


ஏற்கனவே தன் வட்டிற்கு
ீ அவர் விஜயம்‌செய்த போதும் பார்த்திருக்கிறான்.

அவனது இரு கரங்களும்‌குவிந்தன.

வாஞ்சையுடன் கரகமலத்தால் குழந்தையின் தலையைத் தடவினார் நாரதர்.


அக்காட்சி துருவனின் தலையில் தாமரைமலரைச் சூட்டினாற்போலிருந்தது.

குழந்தை எங்க போற? உத்தானபாத மஹாராஜாவின் பையன்


துருவன்தானே நீ?

தலையை ஆட்டினான்.

கண்கள் சிவந்திருந்தன.

என்ன இங்க சுத்தற? இது காடு. இங்க நிறைய மிருகங்கள்‌ இருக்கும்.


இங்கேயெல்லாம் வரக்கூடாது. எதற்கு வந்த?

தபஸ் பண்ண..

தபஸா ? நீயா?

ம்ம்..

தபஸ் பண்ணி?

பகவானை பார்க்கப் போறேன்..

துருவா வட்டில்
ீ ஏதாவது சண்டையா?

அதெல்லாம் இல்ல. நான் பகவானைப் பார்க்கணும்.

எதுக்கு?

பார்க்கணும் அவ்ளோதான்.

குனிந்ததலை நிமிராமல் டாண் டாண் என்று பதில் வந்தது.

ஸுருசி பொல்லாதவளாச்சே.. ஏதாவது சொன்னாளா?

குடும்பத்தில் சண்டைன்னெல்லாம் காட்டுக்கு வரக்கூடாதுப்பா. அப்படி


பார்த்தா யாருமே நாட்டில் இருக்கமுடியாது.

அதெல்லாம் தெரியாது. பகவானைப் பார்க்கணும்.

207
நான் வேணும்னா உத்தானபாதன் கிட்ட சொல்லி சமாதானம் பேசி உன்னை
சேர்த்து வெக்கட்டுமா?

இன்னிக்கு சண்டைன்னு நீங்க சேர்த்துவெச்சா,


திரும்ப சண்டை வராதா? ஒவ்வொரு முறையும் நீங்க வரமுடியுமா?

அதெல்லாம் வேண்டாம். பகவானைப் பார்க்கணும்.

துருவா! இங்க துஷ்ட மிருகங்கள்ளாம் உண்டு. சின்ன சின்ன பூச்சிகள், கொசு,


உன்னால் தூங்கக்கூட முடியாது.

நீங்க நாரத மஹரிஷின்னு எனக்குத் தெரியும். நீங்க ஊர் ஊராகப் போய்


பகவானைப் பார்க்கணும்னு எத்தனை பேருக்கு எடுத்துச் சொல்லியிருக்கீ ங்க..

ஆமா.. யாராவது ஒருத்தர் உங்க பின்னால் வந்தாங்களா?

இப்ப நான் ஒருத்தன் வந்திருக்கேன். என்னையும் திருப்பி அனுப்பறது


நியாயமா?

அசந்து போனார் நாரதர்.

சட்டென்று பக்கத்திலிருந்த தடாகத்தில் குதித்து இரண்டு தாமரை மலர்களைப்


பறித்து வந்தான் துருவன்.

குழந்தையைக் காணவில்லையே என்று தேடினால் நாரதரின் சரணத்தில்


தாமரைகளை வைத்துவிட்டு ஸாஷ்டாங்கமாக விழுந்து கிடந்தான்.

அவரது பாதத்தாமரைகள் அழகா? அல்லது அவன் பறித்து வந்த தாமரைகள்


அழகா என்று அருகில் வைத்து ஒப்பு நோக்கினாற் போலிருந்தது அவன்
செயல்.

குனிந்து குழந்தையை இரு கரங்களாலும் வாரியெடுத்தார் நாரதர். அப்போது


அவரது கழுத்திலிருந்த தாமரை மாலை துள்ளி துருவன் கழுத்தில் விழுந்தது.
பகவான் லாபம் என்று சொன்னதன் காரணம் புரிந்தது. உத்தம குருவிற்கு
உத்தம சீடனே பெரிய லாபம்.

துருவன் சொன்னான். குருநாதா.. குழந்தையான எனக்கு பகவான் காட்சி


தருவான் என்று அனுக்ரஹம் செய்யுங்கள். தங்கள் வாக்கைக் காப்பாற்ற
பகவான் நிச்சயம் என்முன் தோன்றுவார்.

நெகிழ்ந்து போனார் நாரதர். இப்படி ஒரு பக்தன் தேடினாலும் கிடைப்பானா?

துருவனை மனதார வாழ்த்திப் பேசத் துவங்கினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 116-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 60

நாரதர் சொல்லும்போது இன்னொன்றும் சொன்னார்.

208
குழந்தாய்! தன்னைவிட உயர்ந்த நிலையிலிருப்பவனைக்‌ கண்டு மனம்
மகிழவேண்டும். பொறாமை கொள்ளக்கூடாது. தன்னைவிட தாழ்ந்த
நிலையிலிருப்பவனைக் கண்டு இரக்கம் கொள்ள வேண்டும். சமமாக
இருப்பவனிடம்‌ நட்பு பாராட்ட வேண்டும். இவ்வாறு நடப்பவனுக்கு
துன்பமில்லை.

துருவன் கூறினான்:

"தாங்கள்‌உபதேசித்த இந்த மார்கம் என்னைப்போன்ற க்ஷத்ரியர்களுக்கில்லை.


என் சிற்றன்னையின் சொற்களால் என் மனம் கலங்கியுள்ளது. எனக்கேற்ற
மார்கத்தை உபதேசிக்க வேண்டும். நிச்சயம் எனக்கு பகவானின் காட்சி கிட்டும்
என்று ஆசீர்வாதம்‌செய்யுங்கள்" என்றான்.

மிகவும் மகிழ்ந்த நாரதர், உன்னைக்‌ கண்டு எனக்கு மிக்க மகிழ்ச்சியாய்


இருக்கிறது.

உன் தாயின் உபதேசமே சிறந்தது. மூவுலகிலும் சிறந்த அரண் பகவான்


வாசுதேவனே. நீ அவரை மனதை ஒருமுகப்படுத்தி பஜிப்பாயாக.

(பஜ - வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து) அறம், பொருள், இன்பம், வடு



ஆகிய நான்கு புருஷார்த்தங்களில் எதை வேண்டினாலும் அதற்கு வழி ஸ்ரீமன்
நாராயணனைப் பூஜிப்பதே.

பரிசுத்தமான யமுனைக் கரையில் மதுவனம் என்கிற இடம்


உள்ளது.(தற்போதைய மதுரா, க்ருஷ்ண ஜென்மபூமி தான் அது)
அங்கு பகவான் ஹரி நித்யவாஸம்‌செய்கிறார். அங்கு செல்.

"யமுனையில்‌ மூன்று வேளை நீராடி, மனதை அலையவிடாமல், ஒரு


ஆசனத்தில் நிலையாக அமர்ந்துகொள்.
பின்னர் ப்ராணாயாமம் செய்து ப்ராணன், பொறி, மனதின் மாசுகளை நீக்கி
ஸ்ரீமன் நாராயணனை தியானம் செய்."

"குழந்தாய்! பகவானின் திருமுகமும்‌ கண்களும் எப்போதும் பக்தர்களுக்கு


அருள்வதற்காகவே தெளிவாக மலர்ந்து விளங்குகின்றன."

"அழகிய புருவங்கள், கன்னங்களின் அழகோ சொல்லவொண்ணாது.


தேவர்களும் கண்டு மயங்கும் அழகு."

"ரமண ீயமான திருமேனி, கொவ்வைப்பழம் போல் சிவந்த உதடுகள்.


செந்தாமரை மலரின் இதழ்களாகக் கண்கள்."

"மார்பில் ஸ்ரீ வத்ஸம், நீலமேகவர்ணத் திருமேனி, கழுத்தில் வனமாலை,


நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, தாமரை‌மலர்.
தலையில் ரத்தினக் கிரீடம்,
காதுகளில்‌மகரகுண்டலம்,
கைகளில் தோள்வளை, கங்கணங்கள்,

209
கழுத்தில் கௌஸ்துப ஹாரம், இடுப்பில் பொன்னாடை, அரையில் மேகலை,
திருவடிகளில் ஸ்வர்ண பாதசரங்கள்,
பகவானின் திருமேனி மனதிற்கு அமைதியளிப்பது. கண்களுக்கு விருந்து."

"இவ்வாறு பகவானை நினைத்து மானஸ பூஜை செய்பவனது உள்ளத்தில்


ரத்தினத் துண்டுகளாய் ஒளிரும் நகங்கள் கொண்ட தன் பாதகமலத்தைத்
தோன்றச் செய்கிறார்."

"இவ்வாறு தியானம் செய்தால் மனம் ஆனந்தக் கடலில் மூழ்கித் திளைக்கும்.


வெளியிலேயே வராது."

"இதைத் தவிர உனக்கு ஒரு ரகசியமான மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்."

"இப்போது நான் உபதேசிக்கும்‌ மந்திரத்தை ஏழு நாள்கள் தொடர்ந்து ஜபம்‌


செய்பவன் வான் உலகில் உலாவரும் தேவர்களையும் தரிசிக்கலாம்" என்று
சொல்லி துருவனின் வலது காதில்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
என்று துவாதசாக்ஷரி (பன்னிரண்டு எழுத்துக்கள் கொண்ட மந்திரம்) உபதேசம்
செய்தார்.

பகவானை முன் சொன்ன மாதிரி உன்னைப் பார்ப்பதுபோல் ஹ்ருதயத்தில்


நிறுத்தி இந்த மந்திரத்தைச் சொல்லி, எளிமையான பொருள்களைக் கொண்டு
பூஜிக்க வேண்டும். விக்ரஹமோ, கல்லோ கிடைத்தால்‌ பூஜிக்கலாம்.
இல்லையெனில் அனைத்தையும் மனதினாலேயே செய்வது நலம்.

காட்டில்‌ இயற்கையாகக் கிடைக்கும் நீர், காய், கிழங்கு, பழம், இலை


ஆகியவற்றை அளவாக உண்டு, மனதை ஒருமுகப்படுத்தி, மௌனவிரதம்
ஏற்று தியானிக்கவேண்டும்.

இவ்வாறு பூஜை செய்பவனின் பக்தி வளரும்; பகவானின் மேல் அன்பு


பெருகும். அவன் விரும்பும் அனைத்தையும்‌ பெறுவான். உலகியல்‌
பொருள்களில் வைராக்யம் ஏற்பட்டால், முக்தி கிட்டும்.

இவ்வாறு நாரதர் சொன்னதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்ட துருவன்,


அவரை மும்முறை வலம் வந்து, விழுந்து வணங்கி, பின் மதுவனத்தை
நோக்கி நடக்கத் துவங்கினான்.

காலில் விழுந்த குழந்தையை உளமார மகிழ்ந்து "ஸர்வ மங்களமும்


உண்டாகட்டும்"
என்று ஆசீர்வாதம்‌ செய்தார் நாரதர். பின்னர் உத்தானபாதனின்
அரண்மனையை நோக்கிப் போனார்.

ஸ்ரீமத் பாகவதம் - 117-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 61

குழந்தை துருவனுக்கு துவாதசாக்ஷரி மந்திரத்தையும் தியான முறையயும்


உபதேசம் செய்து, அவனை மதுவனத்திற்கு அனுப்பி விட்டு உத்தானபாதனின்
அரண்மனைக்குச் சென்றார் நாரதர்.

210
எதற்காக?

உத்தம குருவானவர், தன் சீடனது ஸாதனையில் அந்தர்முகமாக ஏற்படும்


தளைகளை மட்டுமின்றி பஹிர்முகமாக ஏற்படும் அதாவது வெளியில்
ஏற்படும் தளைகளையும் நீக்குகிறார்.

என்ன தான் உதாசீனப்படுத்தினாலும் அரசனின் வாரிசு. காணவில்லை எனில்,


அரசனுக்கு இழுக்கு. வரர்களை
ீ அனுப்பி தேடித் தூக்கிக் கொண்டு வரச்செய்து
விட்டால்?

எனவே உத்தானபாதனிடம் சென்றார் நாரதர்.

அவர் நினைத்தது போலவே, அவன் துருவனைத் தேடிக் கண்டு


பிடித்துக்கொண்டு வர வரர்களுக்கு
ீ ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.

கவலை இருந்தபோதிலும், நாரதரை வரவேற்று உபசரித்தான்.

அரசே! உங்கள் முகம் வாடியிருக்கிறதே. ஏதேனும் கவலையா? குறையா?


ஒன்றுமறியாதார்போல் கேட்டார்.

அரசன் சொன்னான். ப்ரும்மரிஷியே! என் மகன் துருவனுக்கு ஐந்தே வயது.


பெண்பித்து பிடித்த நான் அவனை அவனது தாயாருடன் விலக்கி வைத்தேன்.
காட்டில் துணை யாருமின்றி பசியால் முகம் வாடிப் படுத்திருக்கும் அந்தக்
குழந்தையை ஓநாய்கள் வந்து கடிக்காமல் இருக்கவேண்டும்.

அவன் அன்போடு என் மடியில் அமர வந்தான். நான் அவனை மடியில்


இருத்திக்கொள்ளவில்லை. என்னைப்போல தீயவன் உண்டா? என்று
வருந்தினான்.

நாரதர் கூறினார். குழந்தையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். பகவான்


அவனைக் காப்பாற்றுகிறார். அவனது பெருமையை நீ அறியமாட்டீர். உம்
புதல்வன் திறமை மிக்கவன். இந்திரன் முதலியவர்களாலும் செயற்கரிய
செயலைச் செய்துவிட்டு உம்மிடம் திரும்பி வருவான்.

எனவே அவனைத் தேடும் பணியைக் கைவிடுங்கள் என்றார்.

நாரதர் கூறியதைக் கேட்ட உத்தானபாதன் அரசாங்கத்தில் கவனமின்றி


துருவனையே நினைத்துக் கொண்டிருந்தான்.

துருவன் மதுவனம் சென்று யமுனையில் நீராடி, அன்றைய இரவு


உபவாசமேற்றான்.

பின்னர் நாரதர் கூறியபடி பகவானை மனத்தில் இருத்தி உபாசிக்கலானான்.

முதல் ஒரு மாதம் மூன்று தினங்களுக்கொரு முறை விளாம்பழம்,


இலந்தைப்பழம்‌முதலியவற்றை உண்டு பகவானைப் பூஜித்தான்.

211
இரண்டாம்‌
மாதம் ஆறு தினங்களுக்கொரு முறை உலர்ந்த இலைகளையும்,
சருகுகளையும் புற்களையும்‌உணவாகக் கொண்டு பகவானை ஆராதித்தான்.

மூன்றாவது மாதத்தில் ஒன்பது நாள்களுக்கொரு முறை யமுனை நீரை


மட்டும்‌உட்கொண்டு மீ ண்டும்‌தியானத்தில் ஆழ்ந்தான்.

நான்காவது மாதம் பன்னிரண்டு நாள்களுக்கொரு முறை சுவாசித்தான்.

ஐந்தாம்‌ மாதம் அவனது நிஷ்டை கலையவே இல்லை. ஒற்றைக்காலில்


தூண்போல் அசையாமல் நின்று தியானிக்கலானான்.

ஸ்ரீமத் பாகவதம் - 118-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 62

நான்கு மாதங்களாக கடுந்தவம் இயற்றி வந்த துருவன், ஐந்தாம் மாதம்


மூச்சையடக்கி, முற்றிலுமாக மனதை உள்முகமாய் திருப்பி, பகவானின்
திவ்ய மங்கள விக்ரஹத்தை த்யானம் செய்தான்.

மஹத் முதலிய தத்வங்களுக்கு ஆதாரமான மற்றும் ப்ரக்ருதி, புருஷன்,


இவைகளுக்குத் தலைவனுமான ப்ரும்ம ஸ்வரூபத்தை இவ்வாறு துருவன்
தியானம் செய்தான். அப்போது அவனது தவத்தின் கடுமை தாங்காமல்
மூவுலகங்களும்‌நடுங்கின.

ராஜகுமாரனான துருவன் ஒற்றைக்காலில் நின்றுகொண்டு தவம்‌செய்தபோது,


அவனுடைய கால் கட்டைவிரலால் அழுந்தப்பட்ட பூமி ஒரு பக்கமாகச்
சாய்ந்தது. ஒரு பெரிய யானையை படகில் ஏற்றிச் சென்றால் படகு
இடப்புறமும் வலப்புறமும் மாறிமாறிச் சாய்வது போலிருந்தது அது.
துருவனது ப்ராணன் வெளியிலுள்ள அனைத்து ப்ராணன்களிலும்
வேறுபாடின்றி ஒன்றியதும், அவன் மூச்சை நிறுத்தியதால், அனைத்து
உயிர்களுக்கும் ப்ராண வாயு இன்றி, மூச்சு தடைபட்டது.

ஆகவே, தேவர்கள் அனைவரும் பகவானை சரணடைந்தனர். பகவானே!


அனைத்து ஜீவராசிகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. ப்ரபோ!
எங்களைக் காக்கவேண்டும்.

பகவான் சொன்னார்:

தேவர்களே! பயம் வேண்டாம். உத்தானபாதனின் மகன் துருவன் மூச்சை


நிறுத்தி, மனதை என்னிடமே ஒரு முகப்படுத்தித் தவம்‌செய்கிறான்.
அதுசரி! நீங்கள் யாரேனும் தவம் செய்தால் அவர்களைச் சோதனை செய்து
யாரேனும் தேவமாதர்களை வைத்தோ, அல்லது பல இயற்கை இடர்களை
ஏற்படுத்தியோ கலைக்க முயற்சி செய்வர்களே!

ஐந்து வயதுச் சிறுவன் ஐந்தே மாதங்களில் இவ்வளவு கடும் தவம்


இயற்றியிருக்கிறானே. நீங்கள் அதைக் கலைக்க ஏதும் செய்யவில்லையா?

கேட்கும்போதே பகவானின் கண்களில் குறும்பும், பெருமிதமும் மிளிர்ந்தன.


தயங்கிக்கொண்டு தலையைக்‌குனிந்து கொண்டு பேசினான் தேவர் தலைவன்.

212
முயற்சி செய்தோம் இறைவா.. இடி, மின்னல், மழை, புயற்காற்று,
தேவமாதர்கள், மற்ற அச்சுறுத்தும் மிருகங்களின் ஒலிகள் எதற்கும் அவனது
தவம்‌கலையவில்லை.

அதெப்படி அவனால் முடிந்தது?


தேவர் தலைவனே சொன்னான்.

தவம்‌
செய்பவர்கள் நான் தவம்‌ இயற்றுகிறேன் என்ற எண்ணத்தோடேயே
தவம்‌
செய்வர்.

இவன் அப்படிச் செய்யவில்லையோ?

இல்லை ஸ்வாமி. இச்சிறுவன் தன் குருவான நாரதரின் வாக்குப்படி, "நான்


செய்வேன். அவர் கருணையால் எனக்கு பகவத் தரிசனம் கிட்டும் என்ற
நம்பிக்கையோடு செய்கிறான்."

"அவனுக்கு தான் தான் முயற்சி செய்கிறோம் என்ற எண்ணம் துளியும்


இல்லை. அவனை நாரதரின் அருள் கவசம் போல் காக்கிறது. அதை
உடைத்துக்கொண்டு எத்தளையும் அவனது அருகே கூடச் செல்வதில்லை.
எனவே வெகு சீக்கிரம் தவம் கைக்கூடிவிட்டது."

தன் பக்தனின் பெருமையையும், நாரதரின் பெருமையையும் கேட்ட


பகவானின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

"கலகலவென மாணிக்கப்பரல் சிதறியது போல் சிரித்தார். எனக்கே அவனைப்


பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. நான் போய் அவனை தரிசனம் செய்து
அவனது தவத்தைத் திருப்பி விடுகிறேன்.
நீங்கள் இருப்பிடம்‌ செல்லுங்கள்" என்றார். குருவருள் ஒருவரைக்
காக்குமானால் அவர்க்கு எப்போதும் யாரும் தீங்கிழைக்கவே இயலாது.

ஸ்ரீமத் பாகவதம் - 119-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 63

துருவனைக் காண பகவான் ஆவல் கொண்டார். உடனே கருடன் மேலேறிப்


புறப்பட்டார்.

கிளம்பும் போது நாரதர் துருவனிடம் தன்னை எப்படி வர்ணித்தாரோ அதே


போல் தாம் இருக்கிறோமா என்று சரி பார்த்துக் கொண்டார். ஐந்து வயதுக்
குழந்தையல்லவா? குரு எப்படிச் சொன்னாரோ அப்படியே தியானம்
செய்கிறான். கோலத்தைச் சற்றே மாற்றினாலும், குழந்தைக்கு குரு
சொன்னவர் இவர் இல்லையோ என்று சந்தேகம் வந்துவிடுமாம்.

மதுவனத்தை அடைந்து துருவனின் முன்பு போய் நின்றார். பகவானே எதிரில்


வந்தபோதும் குழந்தை கண்களைத் திறக்கவில்லை. காரணத்தை
ஆராய்ந்தபோது, அவன் அந்தர்யாமியாக ஹ்ருதயத்தில்
கண்சிமிட்டிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் தெரியும் பகவத் ஸ்வரூபத்தில்
ஈடுபட்டிருப்பதைக் கண்டார்.

213
உடனே ஹ்ருதயத்தில் தெரியும் ஸ்வரூபத்தை மறைக்க, சட்டென்று தன்
தியான மூர்த்தி மறைந்தது கண்டு திகைத்துப் போய் விழிகளைத் திறந்தான்
துருவன்.

ஹ்ருதயத்தினுள் தெரிந்த உருவம் குதித்து வெளியே வந்தாற்போல் இருந்தது.


அந்த ஸ்வரூபத்தை திடீரென எதிரில் கண்டதும்‌ குழந்தைக்கு பேச்சு
வரவில்லை. வெகுநாட்களாக ஒரே நிலையில் இருந்ததால் சட்டென்று
அவனது உடல் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் தடுமாறிக் கொண்டு
எழுந்து, கோலைப் போல் பகவானின் திருவடிகளில்‌விழுந்தான்.

பின்னர் கண்களால் அமுதுபோன்ற திருமேனியைக் குடித்துவிடுபவன்


போலும், முத்தமழை பொழிபவன் போலும் அன்பு பொங்க பொங்கப பார்த்துக்
கொண்டே இருந்தான்.

அவன் தன்னைத் துதிக்க விரும்புவதையும், ஒன்றும் சொல்லத் தெரியாமல்


திருதிருவென்று விழிப்பதையும் உணர்ந்த பகவான் வேதமே உருவான பாஞ்ச
ஜன்யம் என்ற வெண் சங்கினால் அவன் கன்னத்தைத் தொட்டார்.

அந்த நொடியிலேயே துருவனுக்கு தெய்வகமான ீ பேசும் திறன் ஏற்பட்டது.


பகவான் அவசரம்‌ அவசரமாக ஒரு குழந்தைக்கு அனுக்ரஹம்‌ செய்யக்‌
கிளம்பியதைப் பார்த்ததும், ஜகன் மாதாவான ஸ்ரீதேவிக்கு பொறுக்குமா?

ஐந்து மாதங்களாக ஒரு வேளை உணவுகூட இன்றி பட்டினி கிடக்கும்


குழந்தையைப் பார்க்க வெறும் கையோடு கிளம்புகிறாரே என்று தவித்தாள்.

வெண்சங்கை எடுத்து பாற்கடலிலிருந்து ஒரு சங்கு பாலை மொண்டு


வைத்துவிட்டாள்.

சங்கினால் பகவான் கன்னத்தைத் தொட்டதும், அவன் வாயில் அன்னை


கொடுத்தனுப்பிய ஞானப்பால் வழிந்ததோ..

அப்படி ஒரு ஸ்துதி செய்திருக்கிறான் குழந்தை. மேலும், பகவான் சங்கினால்


துருவன் கன்னத்தைத் தடவியபோது, ஸுருசி கிள்ளிய கன்னத்தை தடவி
சமாதானப் படுத்துவது போல் இருந்ததாம் குழந்தைக்கு.

அக்கணமே துருவனுக்கு ஞானம் சித்தித்தது. பகவானை இரு கரம் கூப்பி


ஸ்துதி செய்யத் துவங்கினான்.

ஸ்ரீமத் பாகவதம் - 120-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 64

பகவானைக் கண்டதும் பரவசத்தில் பேச்சற்றுப் போன துருவனை சங்கினால்


அவன் கன்னத்தில் தொட்டார் பகவான்.

துருவனுக்கு அக்கணமே ஞானம் சித்திக்க, பகவானைப் பார்த்து ஸ்துதி


செய்யத் துவங்கினான்.

214
எம்பெருமானே! தாங்கள் அனைத்து சக்திகளையும் உடையவர். நீங்களே என்
அந்தக்கரணத்தினுள் நுழைந்து என் வாக் சக்தியையும், மற்ற புலன்களையும்
உயிர்ப்பித்தீர்கள்.

அந்தர்யாமியான தங்களுக்கு வணக்கம்.

பகவானான தாங்கள் இரண்டற்றவர். ஒருவர். தங்களது அளவற்ற சக்தியான


மாயையினால், அனைத்து ப்ரபஞ்சங்களையும் படைக்கிறீர். பின்னர்
அவற்றுள் அந்தர்யாமியாக உள்நுழைந்து அவற்றை செயல்பட வைக்கிறீர்.
புலன்களற்ற ஜடப்பொருள்களில் அவைகளின் உருவமாகக் காணப்படுவதும்
நீரே. இவ்வாறு நீங்கள் பல்வேறு உருவங்களில்‌தோற்றமளிக்கிறீர்.

வெவ்வேறு கட்டைகளைப் பற்றிக்கொண்டு எரியும் அக்னி எப்படிக்


கட்டையின் உருவில் தெரிகிறதோ அப்படி. ஆனால் அது எதிலும்
ஒட்டுவதில்லை.

நாதா! படைப்பு துவங்கும்போது தாங்கள் ப்ரும்மாவைப் படைத்தீர்கள். அவர்


தூங்கி எழுந்து காண்பதுபோல் ப்ரபஞ்சத்தைக் கண்டார்.

முக்தி வேண்டுபவர்கள் உம்மையே சரணடைகிறார்கள்.

நற்பிறவி கொடுத்துள்ள ீர்கள். நன்றியுடைவர் தம்மை மறப்பரோ?

பிறப்பு இறப்புச் சுழலிலிருந்து விடுதலையளிக்கக் கூடியவர் தாங்கள். ஆனால்,


கற்பகத்தருவான தங்களை உலக சுகங்களைப் பெற பூஜிப்பவர்கள்
உண்மையில் தங்களது மாயையினால் மோசம் போனவர்கள்.

விஷய சுகம்‌நரகத்தில் கூடக் கிடைக்கும் பெருமானே! உலகில் மக்களுக்கு


தங்களது திருவடித்தாமரைகளைத் தியானம் செய்வதாலும், போற்றிப்
பாடுவதாலும் தங்களது சரிதங்களைக் கேட்பதாலும் ஏற்படும் ஆனந்தம்
ப்ரும்மானுபவத்தில் கூடக்‌கிடைக்காது.

அழிவற்றவரே! தங்களுடைய பக்தி வெள்ளத்தில் திளைக்கும் ஸாதுக்களின்


சங்கம் எனக்கு எப்போதும் ஏற்படட்டும். நான் எப்போதும் தங்களைப் பற்றிய
அமுதக் கதைகளை சான்றோர் வாயிலாகக் கேட்டுக்கொண்டே இருக்கவே
விரும்புகிறேன். அதுவே ஸம்சாரக் கடலைக் கடக்கும்‌
எளிய வழி.

தங்களுடைய சரணகமலத்தின் நறுமணத்தை அனுபவிப்பவர்களுக்கு


எத்தகைய உலக சுகங்களும் இன்பம் அளிப்பதில்லை.

நான் ப்ரத்யக்ஷமாகத் தெரியும் தங்களுடைய இந்த ஸ்வரூபத்தையும், விராட்


ஸ்வரூபத்தையுமே அறிவேன். தங்களுடைய ஸூக்ஷ்ம ரூபம்‌ எனக்குத்
தெரியாது.

தாங்கள் எதற்கும் கட்டுப்படாதவர். ஸ்வதந்த்ரர். தோஷமற்றவர்.


ஞானஸ்வரூபர். ஸர்வக்ஞர். பரமாத்மா. தங்களை விடப் பெரியவர்
எவருமில்லை. மாறுபாடற்ற ஆதிபுருஷர். தங்களுக்கு முன் இருந்தவர்
யாருமில்லை.

215
முக்குணங்களை உடைய மாயையை அடக்கி ஆள்பவர். விழிப்பு, தூக்கம்,
கனவு ஆகிய மூன்று நிலைகளையும் கடந்தவர். அந்தர்யாமி. யக்ஞஸ்வரூபி.
இவ்வளவு இருந்தும் ஜீவாத்மாவிடமிருந்து தனித்தும் விளங்குகிறீர்.
எல்லையற்றவர். ஆனந்த வடிவானவர்.

தாங்கள் ஆனந்த வடிவானவர் என்று எண்ணித் துதிப்போர்க்கு


அரசபோகங்களை வழங்குகிறீர். தங்கள் திருவடித் தாமரைகளை பெறுவதே
பஜிப்பதின் பயன். பக்தர்களைக் காப்பதையே விரதமாக மேற்கொண்டவர்.
உலகப்பற்று மிக்க எங்களது விருப்பங்களைப் பூர்த்தி செய்து உலகியல்
பயத்தை நீக்கி ஆட்கொள்கிறீர். தங்களையே நான் சரணடைகிறேன்.

விதுரா! எடுத்த காரியத்தைச் சரிவர முடிக்கும் நோக்குடைய துருவன்


இவ்வாறு கூற, பகவான் அகமகிழ்ந்து கூறலானார்.

அரசகுலத் திலகமே! உன் எண்ணத்தை நான் அறிவேன். கல்யாண குணங்கள்


நிரம்பியவனே! உனக்கு இதுவரை யாரும் அடையாத ஒளி மயமான ஒரு
உலகத்தைக் கொடுக்கிறேன்.

நெற்கதிர்களைப் போரடிக்கும் மாடுகள் தாங்கள் கட்டப்பட்டிருக்கும்


முளையைச் சுற்றி வருவதுபோல், கோள்களும், மற்ற நக்ஷத்ரங்களும்‌
உன்னைச் சுற்றி வரும். அவாந்தர கல்பம் வரை வேறு ஸ்தானங்கள்
அழிந்தாலும்‌உன் இருப்பிடம் அழியாது.

ஸப்த ரிஷிகளும் உன் ஸ்தானத்தைச் சுற்றியே இருப்பார்கள்.

அந்த துருவ ஸ்தானத்தை உனக்களிக்கிறேன்.

உன் தந்தை பூவுலகை விட்டுக் கானகம் சென்ற பின் முப்பத்தாறாயிரம்‌


ஆண்டுகள் இப்புவியை வலிமையுடன் தர்ம நெறி தவறாது ஆட்சி செய்.

உனக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் அனைத்தும் தானே விலகும். நிறைய


வேள்விகள் செய். இவ்வுலக இன்பங்களை விருப்பம்போல் நன்றாக
அனுபவித்து பின் என்னை நினைத்து என் இடமான வைகுண்டத்தையும்
அடைவாய்.

இவ்வாறு குழந்தைக்கு அனுக்ரஹம்‌ செய்துவிட்டு அவன் பார்த்துக்


கொண்டிருக்கும்போதே வைகுண்டம்‌கிளம்பினார் பகவான்.

பகவானைக் கண்ட பின் தன் விருப்பங்கள் நிறைவு பெற்றாலும், உலகியல்


வாழ்வில் இருக்கும்படி ஆயிற்றே என்று சற்றே குறைப்பட்டான் துருவன்.

ஸ்ரீமத் பாகவதம் - 121-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 65

விதுரர் கேட்டார்:

216
துருவனுக்கு கிடைத்த பேறு மிகவும் பெரியது. கிடைத்தற்கரியது. இருப்பினும்
அவன் ஏன் வருந்த வேண்டும்?

அவனுக்கு ஸாரம் எது, ஸாரமற்றது எது என்று நன்கு தெரியுமே.

மைத்ரேயர் பதில் கூறலானார்:

"துருவன் சிற்றன்னையின் சொல்லம்புகளால் காயப்பட்டிருந்ததால், அதைக்‌


கருத்தில் கொண்டிருந்தான். பகவானைக் கண்ணெதிரே கண்டபோதும்
முக்தியை வேண்டவில்லை. பகவானைக் கண்ணெதிரே கண்டதும் சித்த சுத்தி
ஏற்பட்டுவிட்டது. அதனால், முக்தியை வேண்டாது போனோமே" என்று
வேண்டினான்.

"புலனடக்கம் கொண்டவர்களும், யோகிகளும் பல பிறவிகள் எடுத்து


பலகாலம் தவம் செய்து பகவானைக் கண்டு முக்தியை வரமாகப்
பெற்றிருக்கிறார்கள்."

"நானோ ஆறே மாதங்களில் பகவானின் திருவடித்தாமரைகளைக் கண்டேன்.


இருப்பினும் உலகியல் வாசனைகளால் பகவானிடமிருந்து வெகுதூரம்
தள்ளப்பட்டேன்."

"என்னே என் அறியாமை! பகவானை நேருக்கு நேர் கண்ட பின்பும் இப்படி


கோட்டை விட்டேனே. மாயையில் மாட்டிக்கொண்டேனே"
என்று வருந்தினான்.

விதுரரே! தானாகவே கிடைத்ததைக் கொண்டு த்ருப்தியுறும் தங்களைப்


போன்ற பக்தர்கள் பகவானின் திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே
உண்டு களிப்பவர்கள். பகவானின் பாதஸேவையைத் தவிர வேறெதுவும்
வேண்டுவதில்லை.

யமனுலகு சென்றவன் திரும்பி வந்தான் என்றால் யாராவது நம்புவார்களா?


அதுபோல் பகவானைக் கண்ட பின் துருவன் நாடு திரும்புகிறான் என்ற
செய்தியை உத்தானபாதன் நம்பவே இல்லை. பின்னர் நாரதரின்
வார்த்தைகளை நினைத்துப் பார்த்து உண்மைதான் என்று பெருமகிழ்ச்சி
கொண்டான்.

"காடு சென்ற மகன் திரும்பி வரும் அளவிற்கு பாக்யம் செய்திருக்கிறேனா?


எனக்கு அந்த பாக்யம் கிட்டுமா" என்றும் மருகினான்.

பகவானைக் கண்டு திரும்பி வரும் மகனைக் காணப் பேராவல் கொண்டான்‌


உத்தானபாதன்.

அந்தணர்கள், மந்திரி ப்ரதானிகள், தன் குலத்து மூத்தோர், உற்றார் உறவினர்,


புடைசூழ, பெரிய குதிரைகள் பூட்டிய தங்கத்தேரில் ஏறிக்கொண்டு
நகரிலிருந்து கிளம்பினான்.

217
அரசனின் ஆர்வத்தைக் கண்ட ஸுருசியால் ஏதும் சொல்ல முடியவில்லை
போலும். அரசன் ஸுநீதி, ஸுருசி இருவரையும் பல்லக்கில் அழைத்துக்
கொண்டு உத்தமனுடன் தேரில் சென்றான் உத்தானபாதன்.

நகரத்தின் அருகிலுள்ள பூங்காவின் அருகில் துருவன் வருவதைக் கண்ட


உத்தானபாதன் தேரிலிருந்து கீ ழே குதித்து பெருமூச்செறிய ஓடிச்சென்று
மகனை ஆரத் தழுவிக்கொண்டான். அவன் கண்களிலிருந்து கண்ண ீர் ஆறாகப்
பெருகியது.

இப்போதுள்ள துருவன் முன்பு கண்டவன் அல்லவே. பகவானின் தரிசனம்‌


பெற்று பாவங்கள் அனைத்தும் தொலையப்பெற்று பரம பவித்ரனாக
கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் விளங்கினான் குழந்தை.

அவனை கட்டிக்கொண்டு பலமுறை உச்சி மோந்தான் அரசன். ஆனந்தக்


கண்ண ீரால் அவனை நீராட்டினான்.

ஆனந்தக்கண்ண ீர் குளுமையாகவும்‌இனிப்பாகவும்‌இருக்கும். துன்பத்தினால்


வரும் கண்ண ீர் சூடாகவும் உவர்ப்பாகவும் இருக்கும்.

இவ்வாறு வரவேற்கப்பட்ட துருவன் ஸாதுக்களில் சிறந்தவன் அல்லவா?


தந்தையின் பாதங்களிலும் சிற்றன்னை மற்றும் தாயின் பாதங்களிலும்
விழுந்து வணங்கி ஆசி பெற்றான்.

தன்னால் வெறுப்புடன் துரத்தப்பட்ட துருவனைக் கண்டு இப்போது


ஸூருசிக்குப்‌பொறாமை ஏற்படவில்லை.

ஏன் அப்படி?

ஒருவர் ஸ்வாமியையோ குருவையோ தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினால்


அவருடன் அந்த ஸ்வாமியின் ஸாந்நித்யம்‌ கூடவே வரும். ஸ்வாமி
ஸாந்நித்யம் கூடவே இருக்கும்போது அவரைக்‌கண்டு வெறுப்போ மற்ற
உணர்வுகளோ தோன்றாது. அவர்கள் வரவேற்கப்படுவர்.

இதே காரணத்தினால் தான் நம் பெரியோர் கோவிலுக்குப் போனால் வழியில்


எங்கும் செல்லாமல் நேராக வடு
ீ திரும்பவேண்டும் என்று கூறுவார்கள். அப்படி
வந்தால் நம்முடன் வரும் பகவானின் ஸாந்நித்யத்தோடு மஹாலக்‌ ஷ்மியும்
வருவார். எனவே இருவரையும் நேராக வட்டிற்கு
ீ அழைத்து வர வேண்டும்
என்பதாக கர்ண பரம்பரையாக நம்பிக்கை உண்டு.

துருவனும் உத்தமனும் அன்பு‌


மிகுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்
கொண்டனர்.

ஸுநீதி துருவனைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ண ீர் உகுத்தாள்.


அந்தணரும்‌ மற்ற பெரியோரும் "தாயே! நீ உலகைக்‌
காக்கும் பெருவரனை

மகனாகப் பெற்றாய்" என்று அவளைப் போற்றினர்.

உத்தானபாதன் துருவனையும் உத்தமனையும் ஒரு பெண் யானை மேல்


ஏறச்செய்து ஸகல மரியாதைகளுடன் நகருக்குள்‌அழைத்து வந்தான்.

218
நகரெங்கும் தோரணங்கள், வாழைமரங்கள், தென்னங்குலைகள்,
ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. எல்லா வட்டு ீ வாயில்களிலும்
குத்து விளக்குகள்‌ஒளி வசின.
ீ அழகழகான கோலங்கள்‌போடப்பட்டிருந்தன.
வடுகளில்
ீ தங்ககோபுரங்கள் விளக்குகளால் ஒளிர்ந்தன. மாடவதிகளும்
ீ மற்ற
வதிகளும்
ீ நன்கு அலங்கர்க்கப்பட்டு சந்தன மணம் கமழ புஷ்பங்கள் வாரி
இறைக்கப்பட்டிருந்தன.

வதிகளில்
ீ ஆங்காங்கு பெண்கள் நின்றுகொண்டு வெண்கடுகு, அக்ஷதை,
மற்றும் புஷ்பங்களை துருவன் மீ து தூவி மனதார ஆசி வழங்கினர்.

அரண்மனைக்குத் திரும்பிய துருவன் ஸ்வர்கத்தில் வாழும் தேவர்கள் போல்


மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்ந்தான்.

ஸ்ரீமத் பாகவதம் - 122-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 66

ராஜரிஷியான உத்தானபாதன் தன் புதல்வன் துருவனின் பெருமைகளை


ஏற்கனவே நாரதர் சொல்லக் கேட்டிருக்கிறான். இப்போது அவனது பண்புகளை
நேரில் கண்டு மிகவும் வியந்தான்.

துருவனுக்குத் தகுந்த வயது வந்ததும், சபையோரின் ஆலோசனையின் பேரில்


பூமண்டலம் முழுவதிற்கும் அரசனாக பட்டாபிஷேகம்‌ செய்வித்து மகனை
அழகு பார்த்தான்.

தனக்கு வயோதிகம் வந்துவிட்டதை உணர்ந்து நற்கதி அடையவேண்டி தவம்


செய்யக் காட்டுக்குக் கிளம்பினான் உத்தானபாதன்.

துருவன் சிம்சுமாரன் என்ற ப்ரஜாபதியின் மகளான ப்ரமியை


மணந்துகொண்டான். அவளுக்கு கல்பன், வத்ஸன் என்ற இரு மகன்கள்
பிறந்தனர்.

பின்னர் வாயுவின் புதல்வியான இளை என்பவளை மணந்தான். அவளுக்கு


உத்கலன் என்ற மகனும், மிக அழகான ஒரு மகளும் பிறந்தனர்.

உத்தமன் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஒரு நாள் மலைப்பகுதியில்


வேட்டையாடுகையில் ஒரு வலிமை மிக்க யக்ஷனால் கொல்லப்பட்டான்.
அவன் தாய் ஸுருசியும் மரணமடைந்தாள்.

தம்பியின் மீ து அளவற்ற பாசம் வைத்திருந்த துருவன் அவன்


கொல்லப்பட்டதை அறிந்து துடித்துப்போனான்.

மிகுந்த துயருடனும், கோபத்துடனும், உயர்ந்த தேரில் ஏறிக்கொண்டு


யக்ஷர்களின் உலகமான அளகாபுரிக்குச் சென்றான். சிவ பார்ஷர்கள் சூழ்ந்த
இமயமலையின் வடக்கே அளகாபுரி இருந்தது.

அளகாபுரியின் வாசலில் நின்றுகொண்டு எண்டிசைகளும்‌ நடுங்கும்படி‌


சங்கநாதம்‌செய்தான். அதைக்கேட்டு யக்ஷமகளிர் மிகவும்‌
அஞ்சினர்.

219
யக்ஷர்கள் ஆயுதங்களோடு சண்டைக்கு வந்தனர்.

எதிர்ப்பட்ட ஒவ்வொரு யக்ஷனையும் மும்மூன்று பாணங்களால் அடித்தான்


துருவன். யக்ஷர்களுக்கு அடிபட்டபோதிலும், தனி ஒருவனாக வந்து
சண்டையிடும் துருவனின் திறமையையும் வலிமையையும் கண்டு வியந்து
பாராட்டினர்.

ஆனாலும் சீற்றத்துடன் ஆக்ரோஷமாகப்‌


போர் செய்தனர்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் யக்ஷர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன்


துருவன் மீ து ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தினர்.

பெருத்த மழையில் மறைந்த மலைபோல் துருவன் அம்பு மழையால்


மறைக்கப்பட்டான். அப்போது விண்ணிலிருந்து தேவர்கள் ஹா ஹா என்று
திகைத்தனர்.

துருவன் மறைந்தான் என்றெண்ணி யக்ஷர்கள் மகிழ்ந்து கூச்சலிடும்‌நேரம்


பனி மூட்டத்திலிருந்து சூரியன் வருவதுபோல் வெளிவந்தான் துருவன்.

தன் வில்லில் நாணொலி எழுப்பினான். அந்த ஒலி பகைவரைக் குலை


நடுங்கச் செய்தது. அடுத்து துருவன் எய்த அம்புமழை யக்ஷர்கள் மார்புகளில்‌
பாய்ந்தன.

பல்லாயிரக் கணக்கான யக்ஷர்கள் படுகாயம் அடைந்தனர்.

அவர்களது உடல் துண்டுகளால் போர்க்களம் நிறைந்து காணப்பட்டது.

இறந்தவர் போக
மீ தமுள்ள யக்ஷர்கள்‌சிங்கத்திடம் சிக்கிய யானைகளாய்ச் சிதறுண்டு ஓடினர்.

தன்னை எதிர்ப்பவர் எவருமில்லை என்றறிந்ததும் அளகாபுரிக்குள்


நுழையலாம் என்று நினைத்த துருவன் யக்ஷர்கள் மாய யுத்தம் செய்வார்கள்
என்று சந்தேகம்‌கொண்டு சற்று தாமதித்தான்.

அவன் நினைத்தது போலவே சற்று நேரத்தில் வானிலிருந்து எலும்புகளும்,


குருதியும், மலமும் சீழுமாகப் பொழியத் துவங்கியது. விண்ணிலிருந்து
கல்மழையும் பல ஆயுதங்களும் விழுந்தன.

அந்தரத்தில் ஒரு பெரிய மலை தோன்றியது. பயங்கரமாக


சத்தமிட்டுக்கொண்டு யானைகளும் புலிகளும் சிங்கங்களும் பாய்ந்தோடி
வந்தன. ஊழிக்காலம் வந்ததோ என்றெண்ணுமாறு கடலலைகள் பொங்கி
எழுந்தன.

அசுர மாயை துருவன்‌ மேல் ஏவப்பட்டதைக் கண்டு முனிவர்கள் அனைவரும்


துருவனின் க்ஷேமத்திற்காக ப்ரார்த்தனை செய்தனர்.

220
முனிவர்களின் ப்ரார்த்தனையைச் செவியுற்ற துருவன் ஆசமனம் செய்து
தூய்மை பெற்று நாராயணாஸ்திரத்தைத் தொடுத்தான். அந்த அஸ்திரத்தால்‌
மாயை முழுவதும் ஒரு கணத்தில் மறைந்தது.

இன்னும் பல யக்ஷர்கள் துருவனை எதிர்க்க ஓடிவர அத்தனை பேரையும்


பல்வேறு ஆயுதங்களால் வழ்த்தினான்
ீ துருவன்.

ஒரு குற்றமும் புரியாத யக்ஷர்கள் வணாக


ீ எதிர்ப்பதையும், துருவன்
அவர்களைக் கொல்வதையும் கண்ட ஸ்வாயம்புவமனு கருணையினால்
அவ்விடம் வந்தார்.

ஸ்ரீமத் பாகவதம் - 123-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 67

துருவன் யக்ஷர்களைக் கொன்று குவிப்பது கண்டு, அவனது பாட்டனாரான


ஸ்வாயம்புவ மனு அவ்விடம் வந்தார்.

குழந்தாய்! கட்டுக்கடங்காத இக்கோபத்தை விட்டுவிடு. கோபத்தால் மனிதன்


பாவத்தைச் செய்து நரகம் அடைகிறான். நீ உன் கோபத்தினால் குற்றமற்ற
யக்ஷர்களைக் கொன்று குவித்திருக்கிறாய் பார்.

குழந்தாய்! உனக்கு உன் சகோதரன் மீ து மிகுந்த அன்புள்ளது நியாயம் தான்.


அவனது மரணத்திற்கு வருத்தமடைந்து யாரோ ஒரு யக்ஷன் செய்த
குற்றத்திற்காக குற்றமற்ற மற்ற யக்ஷர்களைக் கொன்றுவிட்டாய் பார்.

ஜடமான இவ்வுடலையே ஆத்மா என்றெண்ணி ஒரு விலங்கு மற்ற


விலங்குகளை துன்புறுத்திக்‌கொல்வதுபோல் மற்ற ஜீவன்களைக்‌கொல்வது
பகவானையே சேவித்து வரும் சான்றோர்களுக்கு அழகல்ல.

பகவான் நாராயணனை ஆராதிப்பது எளிதான செயலன்று. நீயோ சின்னஞ்சிறு


வயதிலேயே அவரை ஆராதித்து துருவ பதத்தைப் பெற்றாய்.

இதன் காரணம் என்ன தெரியுமா?

சகல ஜீவன்களுக்கும் ஆதாரம்‌ பகவான். அவரே எல்லா ஜீவன்களிலும்


நீக்கமற நிறைந்திருக்கிறார் என்ற எண்ணத்துடன் நீ ஆராதித்ததுதான்.

உன்னைத் தன் உயர்ந்த அடியவனாக பகவான் ஏற்றுக்கொண்டுள்ளார்.


பகவானின் அடியார்களும் உன்னை அப்படியே கொண்டாடுகின்றனர். எல்லா
ஸாதுக்களுக்கும் நீயே வழிகாட்டி. அப்படி இருக்க இச்செயல் உனக்குத் தகாது.

தன்னைவிட மூத்தோரிடம் விநயமாகவும், இளையவர்களிடம்


பொறுமையாகவும், சமமானவர்களிடம் நட்பு மற்றும் அனைவரிடமும்
அன்புடனும்‌இருப்பவனிடமே பகவான் மகிழ்ச்சி கொள்கிறார்.

பகவானின் மாயை எனும் சக்தியால் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய


தொழில்களைச் செய்கிறார். பகவான் அச்செயல்களுக்கு நிமித்த
காரணமாகிறார். அவரை காரணமாகக் கொண்டே ப்ரபஞ்சம் இயங்குகிறது.

221
ஸத்வம், தமஸ், ரஜஸ் என்ற முக்குண மாறுபாட்டிற்கு ஏற்ப செயல்கள்
நடைபெறுகின்றன.

பகவான் காலஸ்வரூபர். அழிவற்றவர். நீக்கமற நிறைந்தவர். அவர்


இப்ப்ரபஞ்சத்தை முடித்து வைக்கிறார். அவரே அனைத்தையும் முதலில்
படைப்பவர். அவர்தான் ஒரு ஜீவனிடமிருந்து மற்றொரு ஜீவனைப்
படைக்கிறார். அவரே உலகை வ்ருத்தி செய்கிறார். இறக்கவேண்டியவர்களை
மரணதேவனைக் கொண்டு இறக்கச் செய்வதும் அவரே.

காற்று வேகமாக வசும்போது


ீ புழுதி பறப்பதுபோல் அனைத்து ஜீவன்களும்
முன்வினைக்கேற்ப காலத்தினால் அடித்துச் செல்லப்படுகின்றன.

இன்னும் பலவாறு பகவானின் பெருமைகளை துருவனுக்கு எடுத்துச்


சொன்னார் ஸ்வாயம்புவ மனு.

ஸ்ரீமத் பாகவதம் - 124-விதுர மைத்ரேய ஸம்வாதம் -68

ஸ்வாயம்புவ மனு தன்‌ பேரனான துருவனுக்கு ஹிதோபதேசம் செய்தார்.


பகவான் கர்ம பந்தத்திற்காட்பட்ட ஜீவனின் ஆயுளை அவன் வினைக்கேற்ப
நிர்ணயிக்கிறார். கால ம்ருத்யு, அகால ம்ருத்யு இரண்டுமே ஜீவனின்
கர்மத்தைச் சார்ந்தே விதிக்கப்படுகிறது.

இந்த பரமாத்மாவின் செயல்களைத்தான் மீ மாமசகர்கள் கர்மா என்றும்,


சார்வாகர்கள் இயற்கை என்றும், வைசேஷிகர்கள் காலம் என்றும்,
சோதிடர்கள் தெய்வம் என்றும் விஷயங்களால் பீடிக்கப்பட்டவர்கள் ஆசை
என்றும்‌கூறுகிறார்கள்.

குழந்தாய்! பகவான் புலன்களைக் கொண்டு அறியமுடியாதவர். எந்த


ப்ரமாணங்களையோ, உதாரணங்களையோ கொண்டு‌ அவரை அறிய
இயலாது. இவ்வளவுதான் என்று நிர்ணயிக்க இயலாதவர். அவரது நோக்கம்
என்ன? எதைச் செய்ய விரும்புகிறார் என்று எவராலும் கணிக்க இயலாது.

குபேரனது இப்பணியாளர்கள்‌உன் தம்பியைக் கொல்லவில்லை. மனிதனின்


பிறப்பிற்கும் இறப்பிற்கும்‌விதி அல்லது தெய்வமே காரணம்.

பக்தியற்றவர்களுக்கு அவர் மரணதேவதை. பக்தர்களுக்கோ அமுதம்‌


போன்றவர். அகில உலகங்களுக்கும் புகலிடம். அவரையே நீ தஞ்சமாகப்
பற்று.

மூக்கணாங்கயிற்றால் பிணைக்கப்பட்ட மாடுகள்‌எஜமானனின் பாரங்களைச்


சுமந்து அவன்‌ விருப்பப்படி செல்வது போல் ப்ரும்மா முதலிய தேவர்கள்
பெயர்களால் கட்டுண்டு அவரவர் வேலையை பகவானின் கட்டளைப்படி
செய்கிறார்கள்.

222
பகைமையற்ற தூய இதயத்தில் கருணையோடு குடியிருக்கும் பகவான்
ஒத்தார் மிக்கார் இல்லாதவர். தோற்றமற்றவர். ஆகவே அழிவுமற்றவர்.
வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். எதிலும் ஒட்டாதவர்.

வெளிப்பார்வையை உட்புறம்‌செலுத்தி உள்ளத்தால் பகவானைத் தேடி தொடு.

அவ்வாறு நீ தேடும்போது அனைத்து சக்திகளும்‌நிறைந்த பகவானிடத்தில்


ஆழ்ந்த பக்தி தோன்றும். யான் எனது என்ற சிக்கலின் முடிச்சை மெல்ல
அறுத்துவிடு.

மருந்து கொண்டு நோயைப் போக்கிக் கொள்வதைப்போல் எனது இந்தச்


சொற்களால் உன் கோபத்தைப் போக்கிக்கொள்.

குற்றமற்ற யக்ஷர்களைக்‌ கொன்றதனால் நீ குபேரனுக்கு அபராதம்


செய்துவிட்டாய். எனவே அவரை வணங்கி விநயமாக வேண்டி அவரை
மகிழ்ச்சி கொள்ளச் செய்.

குபேரன் பகவானின் பக்தர். அவர் மனம் புண்படும்படி நடக்கலாகாது.


தாத்தாவின் உபதேசங்களைக்கேட்டு துருவன் போரைக் கைவிட்டான்.
துருவன் போரை நிறுத்திவிட்டான் என்று கேள்வியுற்றதும் குபேரன் யக்ஷ
கின்னரர்கள் புடைசூழ துருவனிடம் வந்தார்.

குபேரன் கூறினார்:

குற்றமறியாத க்ஷத்ரிய வரனே!


ீ நீ உன் பாட்டனாரின் சொல்லுக்கிணங்கி
பகைமையை விட்டாய். மிக்க மகிழ்ச்சி. உண்மையில் நீயும் யக்ஷர்களைக்‌
கொல்லவில்லை. யக்ஷனும் உன் தம்பியைக் கொல்லவில்லை. அனைத்தும்
காலவடிவான பகவானால் நிகழ்த்தப்பட்டது.

நான், நீ என்ற வேறுபாடு அஞ்ஞானத்தால் தோன்றுவது. இக்காட்சிகள்


அனைத்தும் கனவில் காண்பது போன்றது. துக்கமும் அதனாலேயே வருகிறது.

துருவனே! பகவான் உனக்கு ஸர்வ மங்களங்களையயும் அருளட்டும். நீ


அனைத்து ஜீவராசிகளிலும்‌அவரையே கண்டு வழிபடு.

நீ பத்மநாபனின் திருவடிக்கருகிலேயே இருப்பவன். நீ விரும்பும் வரத்தைக்‌


கேள் என்றார்.

பரமபக்தனும் அறிஞனுமான துருவன், விஷ்ணு பக்தியையே வரமாக


வேண்டினான்.

நிலையான பகவத் பக்தி உண்டாகும்படி துருவனுக்கு வரமளித்த குபேரன்


அவன் கண்ணெதிரிலேயே மறைந்தார். துருவன் தன் நகரம்‌சென்றான்.

ஸ்ரீமத் பாகவதம் - 125-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 69

நாடு திரும்பிய துருவன் பல்வேறு வேள்விகளால் பகவானை ஆராதித்தான்.

223
வேள்வியில் பயன்படும் பொருள்களும், செயல்களும், செய்பவர்களும்
பகவானே. பலனை அளிப்பவனும் பகவானே.

எனவே ஸர்வம் விஷ்ணுமயம் என்று கண்டான் துருவன். எனவே


அனைவரையும் அன்புடன் நடத்தினான்.

துருவன் நன்னடத்தையின் நாயகன். அந்தணர்களின் அடியவன். வேதத்தின்


பொருள் உணர்ந்த வேதியன். அறநெறிக் காவலன். ஆகவே, மக்கள்
தந்தையெனப் போற்றினர்.

உலகியல் சுகங்களை அனுபவிப்பதன் மூலம் புண்ய பலன்களையும் யாக


யக்ஞங்கள் செய்வதன் மூலம் பாவங்களையும் கழித்தான் துருவன்.

இந்த பூமண்டலத்தை முப்பத்தாறாயிரம் ஆண்டுகள் ஆண்டான் த்ருவன்.

பின்னர் தன் மகன் உத்கலனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தான்.

நிலையாமையை நன்கு மனதில் சிந்தித்து பத்ரிகாஸ்ரமம் சென்றான்.

அங்கு தூய்மையான புண்ய நதியில் நீராடி பொறிபுலன்களை தூய்மையாக்கி,


அமைதியாக ஸ்திரமான ஆசனத்தில் அமர்ந்து ப்ராணாயாமத்தால்
மூச்சுக்‌
காற்றை அடக்கி, மனதை வெளியுலகிலிருந்து இழுத்து நிறுத்தி,
ஸ்தூல ஸ்வரூபமான விராட் ஸ்வரூபத்தில் புத்தியைச் செலுத்தினான்.

அந்த ஸ்வரூபத்தையே மனதில் நினைத்து நினைத்து தியானம் செய்பவன்,


செய்யப்படும்‌பொருள் என்ற பேதம்‌நீங்கி நிர்விகல்ப ஸமாதியில் நிலைத்து
நின்றான்.

அவனது இதயம்‌ பக்தியினால் உருகி ஆனந்தக்கண்ண ீர் பெருகி,


மயிர்க்கூச்செறிந்து தான் என்பதை மறந்தான்.

அப்போது பூரண நிலவு போல் பத்து திசைகளையும் ஒளிமயமாக்கிய


வண்ணம் ஒரு விமானம் இறங்கி வந்தது.

ஸ்ரீமத் பாகவதம் -126-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 70

அரசாட்சியைத் துறந்து வனம் சென்று தவம் மேற்கொண்ட துருவனுக்கு


நிர்விகல்ப ஸமாதி சித்தித்தது. அப்போது வானிலிருந்து திவ்ய விமானம்
வந்தது.

அவ்விமானத்தில் நீலமேக ஷ்யாமள ரூபத்துடன், கிரீட குண்டலங்கள்‌


அணிந்து, கையில் கதையேந்தி, பொன்னாடைகளும் முத்து மாலைகளும்
எல்லா ஆபரணங்களும் தரித்து இளம் வயதினராக இரண்டு தேவ
ஸ்ரேஷ்டர்கள் வந்தனர்.

224
அவர்கள் இருவரையும் தன் தலைவனான விஷ்ணுவின் பாரஷதர்கள்
என்றறிந்தான். பரபரப்புடன் எழுந்து அவர்களை மரியாதையுடன் பகவன்
நாமங்களை கூறிக்கொண்டே விழுந்து வணங்கினான் துருவன்.

பகவானின் தொண்டர்களான நந்தன், ஸுநந்தன் என்ற அவ்விருவரும்


விநயத்துடன் வணங்கி நிற்கும் துருவனிடம் சிரித்தபடியே வந்தனர்.

துருவராஜனே, நாங்கள் இருவரும் பகவானின் அணுக்கத் தொண்டர்கள்.


தம்மை அழைத்துப் போகவே வந்தோம். பகவானது அந்த ஸ்தானத்தை ஸப்த
ரிஷிகளும்கூட மேல்நோக்கி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்களே தவிர,
அடைய முடியவில்லை.

சூரியன், சந்திரன், கோள்கள் எல்லாருமே ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு


போகும் அந்த வைகுண்டம் தங்களால் சுலபமாக அடையப்பட்டது.

தங்கள்‌ முன்னோர்கள் எவரும் அடைந்திராத வைகுண்டத்தை தாங்கள்


பெற்றீர்கள்.

புண்யசிகாமணியான தங்களுக்காக இச்சிறந்த விமானத்தை பகவான்


அனுப்பியுள்ளார்.

பார்ஷதர்களின் தேனொழுகும் சொற்களைக்‌


கேட்ட துருவன் மகிழ்ந்து, நீராடி,
அன்றைய நாளின் கடமைகளை முடித்து, அங்குள்ள முனிவர்களை வணங்கி
ஆசி பெற்றான்.

பின்னர் விமானத்தை வலம் வந்து வணங்கிய துருவனுக்கு பொன்னைப்


போன்ற மேனி கிடைத்தது.

விமானத்தில் ஏறி அமர யத்தனித்த துருவன், அங்கு மரணதேவதையான


யமதர்மராஜன் வந்திருப்பதைக் கண்டான்.

அவர் வந்து குனிந்து விமானத்தின் அருகில் நிற்க, அவரது தலைமேல் கால்


வைத்து விமானத்தில் ஏறி அமர்ந்தான்.

அப்போது துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்கள் பாடினர். பூமாரி பொழிந்தது.

விமானம்‌ புறப்படும் சமயத்தில் தன் தாயார் ஸுநீதியை நினைத்தான் துருவன்.


தன் முன்னேற்றங்கள் அனைத்திற்கும் மூல காரணமான தாயை விட்டு தான்
மட்டும் வைகுண்டம் செல்வதா என்றெண்ணினான்.

அவனது எண்ணத்தை உணர்ந்த விஷ்ணு பார்ஷதர்கள் அவ்விமானத்திற்கு


முன்னால் வேறொரு விமானத்தில் சென்றுகொண்டிருந்த ஸுநீதியைக்
காண்பித்தனர்.

தாய்க்கும் வைகுண்டம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சி கொண்டான் துருவன்.

225
பகவத் பக்தனான துருவனது இந்த தூய்மையான சரித்திரத்தை ஈடுபாட்டுடன்
அடிக்கடி கேட்பவர்க்கு பகவானிடம்‌ இடையறாத பக்தி ஏற்படும். அதனால்
அவரது துக்கங்கள் அனைத்தும் தீயினிற் தூசாகும்.

நல்லொழுக்கம்‌ உண்டாகும். மேன்மை, தேஜஸ், வலிமை ஆகியவற்றைப்


பெறுவர்.

இச்சரிதத்தை காலையிலும் மாலையிலும் கேட்கவேண்டும். பலனில் பற்று


கொள்ளாமல் பௌர்ணமி, அமாவசை, துவாதசி, திருவோணம், சங்கராந்தி,
ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் பகவானை உள்ளத்திலிருத்திக்‌
கூறுபவனுக்கு மகிழ்ச்சி ஏற்படும். அவன் சித்தபுருஷனாகி, பூரணனாவான்.

விதுரா, துருவன் சின்னஞ்சிறு வயதிலேயே வடு,


ீ வாசல், தாயார்
எல்லவற்றையும்‌விட்டு பகவானைச் சரணடைந்தவன். அவனது சரித்திரத்தை
உனக்கு விரிவாகக்‌கூறினேன்.

மேற்கொண்டு விதுரர் ப்ரசேதசர்கள் பற்றிக் கேட்க, அவர்களது கதையைக்


கூறத் துவங்கினார் மைத்ரேயர்.

226
ஸ்ரீமத் பாகவதம் - 127-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 71

மைத்ரேயர் கூறினார்:

ப்ரசேதஸர்கள் அறநெறி வழுவாது பகவான் யக்ஞபுருஷ்னை வேள்விகளால்


ஆராதித்தபோது, நாரதர் அங்கு வந்து துருவனின் கல்யாண குணங்களை
வர்ணித்தார்.

விதுரர் உடனே, "அந்தணகுலதிலகமே!நாரதர் அச்சபையில் கூறிய அனைத்து


கதைகளையும் கருணை கூர்ந்து எனக்குக்‌கூறுங்கள்" என்றார்.

அவரது ஆர்வத்தைக் கண்டு பரவசமடைந்த மைத்ரேயர் கூறலானார்:

துருவன் தான் விரும்பியது போல் உத்தம பதத்தை அடைந்தான். அங்கே


அவனைச் சுற்றி ஸப்தரிஷிகளும் விளங்குகிறார்கள்.

அனவரதமும் அவர்கள் சொல்லும் பகவத் கதைகளை கேட்டுக் கொண்டு


நாளுக்கு நாள் தேஜஸ்‌மிகுந்து ப்ரகாசிக்கிறான்.

துருவனது புதல்வனான உத்கலன் தந்தை கானகம்‌ சென்ற பின்பு அரசை


ஏற்றான். ஆனால் அவன் மனம் பதவியிலோ, செல்வத்திலோ,
செல்லவில்லை.

பிறவி முதலே மனவடக்கமுள்ளவன்; பற்றற்றவன்; எங்கும் எதிலும்


சமநோக்குள்ளவன். அவ்வாறான உத்கலன், அனைத்து ஜீவராசிகளை
தன்னுள்ளும், தன்னை அனைத்து ஜீவராசிகளிடமும் கண்டான்.

தீவிரமான யோகப் பயிற்சியால் அவனது வாசனைகள் எரிந்துபோயின.


ஆத்மானந்தம் சித்தித்தது. தன்னையே பரமசாந்த வடிவினனாக,
ஞானரூபமாக, எங்கும் நிறைந்தவனாகக் கண்டான்.

உடல் தான் என்ற எண்ணம்‌ நீங்கி பரமாத்ம ஸ்வரூபமே தான் என்று


உணர்ந்தான்.

வெளித்தோற்றத்திற்கு ஜடம் போலவும், குருடன் போலவும், பைத்தியம்,


ஊமை போலவும் காணப்பட்டான். ஆனால் உண்மையில் குறைகள்
ஏதுமற்றவன் அவன். உடலைத் தான் என்றெண்ணிய பாமரர்களுக்கு அக்னி
அடங்கிய ஜ்வாலை போல் இருந்தான்.

அதனால் அவனை அறிவனன், ீ பைத்தியம் என்று நினைத்து, அக்குலத்து


மூத்தோர், சபையில் கலந்தாலோசித்து, துருவனின் மனைவி ப்ரமியின்
இளைய குமாரனான வத்ஸரனை அரசனாக்கினர்.

வத்ஸரனின் அன்பு மனைவி ஸ்வர்வதிீ என்பவள், புஷ்பார்ணன், திக்மகேது,


இஷன், ஊர்ஜன், வஸு, ஜயன் என்ற ஆறு புதல்வர்களைப் பெற்றாள்.

227
புஷ்பார்ணனுக்கு ப்ரபை, தோஷை என்று இரு மனைவியர். ப்ரபைக்கு
பிராதன், மத்யந்தினன், ஸாயன் என்று மூன்று பிள்ளைகள்.

தோஷா என்பவளின் மகன்கள்- ப்ரதோஷன், நிசிதன், வியுஷ்டன்.


வியுஷ்டனின் மனைவி புஷ்கரிணி. இவர்களது புதல்வன் ஸர்வதேஜஸ்
என்பவன்.

ஸர்வதேஜஸின் மனைவி ஆகூதி. இவர்களது மகன் சக்ஷுஸ் என்ற மனு.


அவனது மனைவி நட்வலா. இவர்களது புதல்வர்கள் புரு, குத்ஸன், த்ரிதன்,
தியும்னன், ஸத்யவந்தன், ரிதன், விரதன், அக்னிஷ்டோமன், அதிராத்ரன்,
பிரத்யும்னன், சிபி, உல்முகன் ஆகிய பன்னிருவர். அனைவரும்
தூய்மையானவர்கள்.

உல்முகன் புஷ்கரிணியை மணந்து அங்கன், சுமனஸ், கியாதி, கிரது,


அங்கிரஸ், கயன் ஆகிய ஆறு மகன்களைப் பெற்றான்.

அங்கனது மனைவி ஸுநீதை என்பவள் கொடியவனான வேனனை ஈன்றாள்.


அவனது செயல்களைக் கண்டு வருந்திய ராஜரிஷியான அங்கன், நாட்டைத்
துறந்து கானகம் சென்றான். முனிவர்களின் சாபம் வஜ்ரப்படை போன்றது.
வேனனது கொடுங்கோலைக் கண்டு வருந்திய முனிவர்கள், கோபம் கொண்டு
அவனைச் சபிக்க அவன் மாண்டு போனான்.

உலகம் காவலன் இன்றி ஆகவே, திருடர்கள் மிகுந்தனர். இதைக் கண்டு


முனிவர்கள் வேனனது வலது கரத்தைக் கடைந்தபோது, அதிலிருந்து ப்ருது
மஹாராஜன் தோன்றினார். அவர்தான் உலகின் முதல் சக்ரவர்த்தி.

ஸ்ரீமத் பாகவதம் - 128-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 72

விதுரர் கேட்டார்:

முனிவரே! அங்க மஹாராஜன் ஒழுக்கம்‌மிகுந்தவன். பரம ஸாது. மகானும்


கூட. அவனுக்கு வேனன் போன்ற கொடிய இயல்புடைய மகன் எவ்வாறு
பிறந்தான்?

குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் பொறுப்பு அரசனுடையது. அப்படியிருக்க


அரசனையே முனிவர்கள் தண்டிக்க இயலுமா? அவன் அப்படி என்ன தவறு
செய்தான்?

மைத்ரேயர் கூறினார்:

அங்கன் ஒரு சமயம் யாகங்களில் சிறந்த அசுவமேத யாகத்தைச் செய்தான்.


அதில் நெறி தவறாது அத்தனை மந்திரங்களையும் கூறி அழைத்தும்,
தேவர்கள் அவிர்பாகத்தை பெற்றுக்கொள்ள வரவில்லை.

இதைக்‌
கண்ட ரித்விக்குகளும் எல்லாமே குறைவற இருந்தும் தேவர்கள்
வராததன் காரணம் தெரியாமல் திகைத்தனர்.

228
அங்கன் மிகவும் வருந்தி, யாகத்திற்காக தான் ஏற்ற மௌன விரதத்தை
விடுத்து அவையோர்களைப் பார்த்து தேவர்கள் வராததன் காரணம் கேட்டான்.

அரசே, இப்போது ஏதும் தவறு இல்லைதான். ஆனால் நிச்சயமாக ஏதோ


முன்வினைப் பயன் உள்ளது. அதன் காரணமாகவே இதுவரை தங்களுக்கு
பிள்ளைப்பேறும் இல்லை. எனவே நீங்கள் நல்லதோர் குமாரனைப் பெற
முயற்சி செய்யுங்கள். புத்ர ஸந்தானம் வேண்டி யக்ஞ புருஷனான ஸ்ரீமன்
நாராயணனை ஆராதனை செய்யுங்கள். அவர் மகிழ்ந்தால் போதும். புத்ர
ஸந்தானமும் கிடைக்கும். தேவர்களும் ஹவியை ஏற்க வருவர் என்றனர்.

புரோகிதர்கள் அங்கனுக்கு புத்ர பாக்யம் வேண்டி புரோடாசம் என்ற அவியைத்


தயாரித்து, மஹாவிஷ்ணுவைத் தியானித்து அதை வேள்வியில் இட்டார்கள்.

உடனே வேள்வியிலிருந்து கழுத்தில் தங்க ஹாரமும் தூய்மையான


பொன்னாடையும் அணிந்த யக்ஞபுருஷன் தங்கப் பாத்திரத்தில் பாயசத்தை
ஏந்திய வண்ணம் வெளிவந்தார்.

அங்கன் மிகவும் மரியாதையுடன் இரு கரங்களால் அதை வாங்கி


மகிழ்ச்சியோடு மனைவியிடம்‌கொடுத்தான்.

அரசி தன் பேற்றை நினைந்து மகிழ்ந்து அந்தப் பாயசத்தை அருந்திக்


கருவுற்றாள்.

உரிய காலத்தில் ஓர் ஆண்மகவை ஈன்றாள்.

அதர்மத்தின் அம்சத்திலிருந்து தோன்றிய ம்ருத்யு இவனது தாய் வழித்


தாத்தா. ஆகவே அக்குழந்தை சிறு வயதிலிருந்தே தாத்தாவைப் பின்பற்றி
தீயவழியிலேயே நின்றான்.

கையில் வில்லேந்தி வேட்டையாடச் சென்று எளிய விலங்குகளைக்


கொன்றான்.

அதைக்‌
கண்டு மக்கள் கொடியவன் என்று பொருள்படும்படி வேனன் என்று
அவனை அழைக்கத் துவங்கினர்.

விளையாட்டுத் திடலில் தன்னொத்த சிறுவர்களைப் பிடித்து பலவந்தமாகக்


கொன்றுவிடுவான்.

மன்னன் அங்கன் அவனை பல விதங்களில் தண்டித்தும், தீய


செயல்களிலிருந்து தடுத்தும் அவன் நல்வழித் திரும்பினான் இல்லை.

229
ஸ்ரீமத் பாகவதம் - 129-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 73

தீயொழுக்கம் உள்ள பிள்ளையின் செயல்களால் பெற்றோரின் புகழ்


மண்ணோடு மண்ணாகும்.

அதர்மத்தில் பங்கேற்கும் பிள்ளையால் வடே


ீ நரகமாகிறது. அனைவரிடமும்
பகை மூள்கிறது. முடிவற்ற மனவேதனை உண்டாகிறது. பெயரளவில்
பிள்ளை வேண்டும் என்பதற்காக தீயொழுக்கம் உள்ள பிள்ளையை
அறிவுள்ளவன் ஆசைப்படுவானா? ஆன்மாவைச் சிறையிடும் மோகவலை
அது.

ஒரு விதத்தில் நல்ல பிள்ளையை விட, கெட்ட பிள்ளை தேவலாமோ?


ஏனெனில் நல்ல பிள்ளை பற்றுக்குக் காரணமாவான். அதனால் அவனைத்
துறப்பது பெரும் துன்பம் தரும். கெட்ட பிள்ளையால் வடே
ீ நரகமாகும். துறவு
மனப்பான்மை விரைவில் ஏற்படும்.

இப்படிப் பலவாறான சிந்தனையில் ஆழ்ந்த அங்கன், தன் மனைவி, தாய்


ஆகியோரைத் துறந்து நள்ளிரவில் யாருமறியா வண்ணம் வட்டைத்
ீ துறந்து
கானகம் சென்றான்.

யோக மார்கத்தின் உண்மை வழியறியாதவன் இறைவனை வெளியில்


தேடுவதுபோல் சபையோரும் மந்திரிகளும், உற்றாரும் அரசனைத்
தேடியலைந்தனர்.

மக்கள் தங்கள் அன்பு மிகுந்த அரசனைக் காணாது கண்ண ீரில் மூழ்கினர்.

ப்ரும்ம ஸ்வரூபத்தையறிந்த ப்ருகு முதலிய முனிவர்கள் உலக


நன்மையையே எப்போதும் வேண்டுபவர்கள்.

மக்களைக் காக்க அரசன் என்று ஒருவன் இல்லாவிடில் நாடு


கேட்டையடையும் என்றறிந்து, மந்திரிகள் விரும்பாவிடினும் தாய்
ஸுநீதையின் அனுமதி பெற்று வேனனை அரசனாக்கினர்.

மிகவும் கொடுமையாக தண்டிக்கும் இயல்புடைய வேனன் அரசனானதும்,


திருடரும் கொள்ளையரும் பாம்பைக் கண்ட எலி போல் பதுங்கினர்.

அரியணை ஏறிய வேனன் அஷ்டதிக்பாலர்களையும் செல்வங்களையும்


பெற்றதால் தன்னை மிக உயர்ந்தவனாக எண்ணிக்கொண்டான். ஸாதுக்களை
அவமதிக்கத் துவங்கினான்.

அடக்குவாரின்றி செல்வச் செருக்கால் மதியிழந்து, கண்ணிருந்தும்


குருடனாய் தேரிலேறி விண்ணும் மண்ணும் அதிர சுற்றியலைந்தான்.

எவரும் வேள்விகள் செய்வதோ, பூஜை செய்வதோ, தானங்கள் அளிப்பதோ


கூடாது என்று முரசறைவித்தான். அனைத்து தர்ம காரியங்களையும் தடுத்து
நிறுத்தினான்.

230
அவனது தீய செயல்களால்‌ அவதியுறும் மக்களைக் கண்டு முனிவர்கள்‌
கருணை கொண்டு ஒன்று கூடினர்.

அரசனில்லாது நாடு துன்பப்படுகிறதே என்று இந்த வேனனை


அரசனாக்கினோம். ஆனால் மக்களின் துன்பம் அதிகரித்துவிட்டதே. எப்படி
இந்த நிலைமையைச் சீர் செய்வது? பாம்பிற்கு பாலூட்டி வளர்த்தாற்போல்
அரசனானதும் இவனது துஷ்டத்தனம் பன்மடங்கு அதிகரித்துவிட்டதே.

இவனைப் பேசி நல்வழிப் படுத்துவோம். அவன் சமாதானப் பேச்சுக்கு


சரிவரவில்லை எனில் எரித்துவிடலாம் என்ற முடிவோடு அவனிடம்
சென்றனர்.

முனிவர்கள் வேனனைப் பார்த்து இனிமையாகப் பேசத் துவங்கினர்.

அரசே! மனம், வாக்கு, உடல், புத்தி இவைகளால் ஒருவன் தர்மத்தைத் தழுவி


நடந்தால் உத்தம லோகங்களை அடையலாம். அதே தர்மத்தை பயன்
கருதாமல் செய்தால் முக்தி கிட்டும்.

அறநெறி பாழானால் செல்வங்கள் அழியும். மக்களுக்கு நன்மை அளிக்கும்


தர்மத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

திருடர்களிடமிருந்தும், தீயோரிடமிருந்தும் மக்களைக் காத்து, முறையாக


கப்பம்‌வசூலித்து அறநெறிப்படி வாழும் அரசன் இம்மையிலும் மறுமையிலும்
அனைத்து நன்மைகளையும்‌பெறுவான்.

எந்த அரசாட்சியில் மக்கள் முறைப்படி இறைவனைப் பூஜிக்கிறார்களோ அந்த


அரசனின் ஆட்சி கண்டு இறைவன் மகிழ்கிறார்.

பகவான் அரசர்க்கரசர். இந்திராதி தேவர்களும் அவரை பணிகின்றனர்.

அவரே அனைத்து பொருள்களாகவும் தவமாகவும் விளங்குகிறார்.

தங்களது தேசத்தில் வசிக்கும் நாங்களும் தங்களது நன்மைக்காகவே


வேள்விகளால் பகவானை ஆராதனை செய்கிறோம்.

அந்தணர்கள் அரசனின் நன்மை கருதி முறையாக வேள்வி செய்தால்,


தேவர்கள் அரசனிடத்தில் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மக்கள்
விரும்பியதனைத்தையும் கொடுக்கிறார்கள். தாங்கள் அவர்களை
அவமதிக்கக்கூடாது என்றனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 130-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 74

முனிவர்களின் பேச்சைக் கேட்ட வேனன் ஏளனமாய் சிரித்தான். பின்னர்


மனம்போன போக்கில் பேசத் துவங்கினான்.

அறிவிலிகளே! மதநெறியை அறநெறி என்கிறீர்களே. உங்களுக்கு


சோறுபோடும் என்னை விடுத்து யாரோ ஒருவனை வேண்டுகிறீர்களே.

231
கணவனை விடுத்து கள்ளக் காதலனை அணுகுவார்களா? அதுபோல் உள்ளது
உங்கள் செயல்.

அரசனே கடவுள். தீய நடத்தையுள்ள பெண் கணவனை விடுத்து


வேறொருவனை நாடுவதுபோல் அரசானான என்னை விடுத்து இவ்வளவு
பக்தியுடன் எவனோ ஒரு யக்ஞபுருஷனைக் கொண்டாடுகிறீர்கள்.

அனைத்து தேவர்களும் அரசனின் திருமேனியில் வாசம் செய்கிறார்கள்.

ஆகவே, நீங்கள்‌ முதலில் என்னை பூஜை செய்யுங்கள். எல்லாக்


காணிக்கையும் எனக்கே. உங்கள் வேள்விகளின் ஹவிர்பாகம் என்னையே
அடையட்டும். என்னைத் தவிர இங்கு வேறெவருக்கும் ஆராதனை
நடைபெறுவது தகாது என்றான்.

தீய புத்தி கொண்ட வேனன் ஸாதுக்களை அவமதித்ததால் அவனிடம்


கொஞ்சமாய் ஒட்டிக்கொண்டிருந்த புண்யபலன் அப்போதே தீர்ந்துபோய்,
பாவம் மலையென உயர்ந்தது.

முனிவர்கள் அவன்‌
மீது கடுங்கோபம் கொண்டனர்.

மஹா பொறுமைசாலிகளும் ஞானிகளுமான அவர்கள் உலக நன்மை கருதி


கோபத்தை ஏற்றனர்.

இந்தப் பாவியைக்‌ கொல்லுங்கள். இவன் சில நாள்களிலேயே பூமியைச்


சாம்பலாக்கிவிடுவான். வேள்விகளின் தலைவனான ஸ்ரீமன் நாராயணனை
வெட்கமின்றி நிந்திக்கிறான். இவன் சிங்காசனத்திற்கு ஏற்றவனல்லன்
என்று கூக்குரலிட்டனர்.

அனைவரும்‌ சேர்ந்து ஒரு ஹூங்கரம் செய்தனர். அதனால் எழுந்த அக்னி


ஜ்வாலையால் அவன் உயிர் அக்கணமே பிரிந்தது.

பகவான் அச்சுதனை நிந்தித்ததால் அவன் முன்பே இறந்ததற் கொப்பானவனே.

வேனன் இறந்துபட்டதும் முனிவர்களின்‌ கோபம் தணிந்தது. துக்கத்தினால்


துன்புற்ற வேனனின் தாய் தன் தவ வலிமையாலும், வேறு சில யுக்திகளாலும்
வேனனின் உடலை காத்து வந்தாள்.

முனிவர்கள் ஆசிரமம் சென்று ஸரஸ்வதி நதியில் நீராடி, அனுஷ்டானங்களை‌


முடித்து, பகவானின் திருவிளையாடல்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது துர்நிமித்தங்கள் தோன்றின.

அரசனில்லாததால் கொள்ளையர்கள் பெருகுவரே என்று கவலை கொண்டனர்.


அச்சமயம் கொள்ளையடித்துக் கொண்டு திருடர்கள் குதிரை மீ தேறி
ஓடுவதால் புழுதி நாற்றிசையையும் மூடியது.

232
அரசன் இல்லாததால் அதர்மம் சூழ்வது கண்டு வருந்தினர். தங்கள் தவ
வலிமையால் அதர்மத்தை தடுக்க இயலும் என்றாலும் அதில் பல தோஷங்கள்
ஏற்படும் என்பதால் செய்யவில்லை.

அந்தணன் அனைத்திலும் ஒரே நோக்குடையவன் ஆயினும், அமைதியே


உருவெடுத்தவனாயினும், தீனர்களது துன்பம்‌கண்டு அதை நீக்க வழி வகை
செய்ய இயன்றும் வாளாவிருந்தால் அவனது தவம்‌ஓட்டை பாத்திரத்திலுள்ள
நீர்போல் சிறிது சிறிதாய் குறையும்.

ராஜராஜனான அங்கனது வம்சம் வேனனோடு அழியக்கூடாது. இந்த


வம்சத்தரசர்கள் பக்தர்கள். பகவானையே நம்பியவர்கள் என்றெல்லாம்
தீர்மானித்த முனிவர்கள் அரண்மனையை அடைந்தனர்.

வேனனது உடலை கொண்டு வரச்சொல்லி அவனது தொடையைக்‌கடைய


அதிலிருந்து பாகுகன்‌என்ற குள்ளமான ஒரு மனிதன் தோன்றினான்.

அவன் காக்கை போல் கருப்பாக இருந்தான். குட்டையான உடலும் கை


கால்களும் கொண்டு செம்பட்டை முடியுடன் இருந்தான்.

அவன் முனிவர்களை வணங்கினான்.

நான் பாகுகன். உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்?


என்று கேட்டான்.

அவனை முனிவர்கள் "நிஷீத! உட்கார்" என்றனர். அவன் பெயர் நிஷாதன்


என்றாயிற்று.

அவன் வேனனின் பாவங்கள் மொத்தத்தின் உருவாக இருந்தான். அவன்


வம்சத்தினர் ஹிம்சை, திருட்டுu முதலியவைகளில்‌ ஈடுபட்டனர்.
மலைகளிலும் வங்களிலும் வசிக்கலாயினர்.

அதன்‌பின்னர் முனிவர்கள் வேனனின் கைகளைக் கடைய அவற்றிலிருந்து


ஒரு ஆணும் பெண்ணும் தோன்றினார்கள்.

ஸ்ரீமத் பாகவதம் - 131-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 75

வேனனின் கைகளை‌ முனிவர்கள் கடைய அவற்றிலிருந்து ஒரு ஆணும்


பெண்ணும் தோன்றினர்.

ப்ரும்மத்தின் தத்வம்‌ அறிந்த ரிஷிகள்‌ அவர்களைக்‌ கண்டதுமே பகவத்


அம்சமாய் வந்தவர்கள்‌என்று அறிந்துகொண்டனர்.

ரிஷிகள் கூறினர்:

இந்த ஆண்மகன் பகவான் விஷ்ணுவின் அம்சம். இவன் பெயர் ப்ருது. இவன்


உலகை காக்கப் பிறந்தவன்.

233
இவளோ திருமகளின் அவதாரம். முத்துப் பற்களைக் கொண்ட இவள் பெயர்
அர்ச்சிஸ். இவளை ப்ருது மணப்பான்.

உலகைக் காக்க மஹாவிஷ்ணுவே அவதரித்துள்ளார். அவருக்கு பணிவிடை


செய்ய மஹாலக்ஷ்மியே உடன் வந்துள்ளாள்.

அனைவரும் அவர்களது அவதாரத்தைக் கொண்டாடினர். ஆடிப் பாடினர்.


பூமாரி பொழிந்தனர்.

தேவர்களும் ரிஷிகளும்‌கூட்டம் கூட்டமாக வந்தனர். பல மங்கள வாத்யங்கள்


முழங்கின.

ப்ரும்மதேவர் அங்கு வந்து ப்ருதுவின் வலது திருக்கரத்தில் ஸ்ரீமன்


நாராயணன் போன்ற ரேகைகளும் பாதத்தில் தாமரை ரேகைகளும்‌இருப்பது
கண்டு ஸ்ரீ ஹரியின் அம்சமே என்று நிர்ணயம் செய்தார்.

எவருடைய கைகளில் வேறு ரேகைகளின் தொடர்பின்றி சக்ர ரேகை மட்டும்


தனித்துள்ளதோ அவர் ஸ்ரீ ஹரியின் அம்சமே.

ப்ருதுவுக்கு முனிவர்கள் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தனர். மக்கள்


பலவிடங்களிலிருந்தும் பட்டாபிஷேகத்திற்கு தேவையானவற்றை
ஆசையுடன் கொண்டு வந்து குவித்தனர்.

பஞ்சபூதங்களின் தேவதைகளும் காணிக்கைகள் கொடுத்தன.

ப்ருது மஹாராஜன் தன் தேவியோடு பட்டாபிஷேகம்‌ செய்துகொண்டு


இன்னொரு அக்னியோ எனும்படி ஒளிர்ந்தார்.

விதுரரே!

குபேரன் அவருக்கு தங்க சிம்மாசனம்‌கொடுத்தான். வருணன் நீர்த்திவலைகள்


தெளிப்பதுபோல் குளிர்ந்த வெண்கொற்றக்குடை கொடுத்தான்.

வாயு வெண்சாமரங்களையும், தர்ம தேவதை புகழ் பரப்பும்‌ மலர்


மாலையையும், இந்திரன் ரத்தின கிரீடத்தையும், யமன் அனைவரையும்
அடக்கியாளும் தண்டத்தையும் கொடுத்தனர்.

ப்ரும்மதேவர் வேதமயமான யும், ஸரஸ்வதி அழகான ஹாரத்தையும், மஹா


விஷ்ணு சுதர்சனத்தையும், மஹாலக்ஷ்மி குறைவற்ற செல்வத்தையும்‌
கொடுத்தார்கள்.

ருத்ரன் பத்து சந்திர பிம்பங்கள்‌பொறித்த கூரிய வாளையும், அம்பிகை நூறு


சந்திர பிம்பங்கள் பொறித்த கேடயத்தையும், சந்திரன் அமுதமயமான
குதிரைகளையும், தேவசிற்பியான துவஷ்டா அழகிய ரதத்தையும்‌
கொடுத்தனர்.

234
அக்னி உயர்ந்த வில் கொடுத்தார். சூரியன் தன் கிரணங்களைப் போல்
ஒளிமிக்க அம்புகளைக் கொடுத்தார். பூமாதேவி நினைத்த இடத்திற்கு
செல்லக்கூடிய யோகசக்தியுள்ள பாதுகைகளைக் கொடுத்தாள்.

ஆகாயமோ தினமும் அணிய தேவலோகப் பூக்களைக் கொடுத்தது.

சித்தர்களும், கந்தர்வர்களும் ஆடல் பாடல்களையும், வாத்தியம்‌இசைக்கும்


கலையையும், திடீரென மறையும்‌அந்தர்தான வித்தையையும் அளித்தனர்.

சமுத்திரம் தன்னிடம்‌தோன்றிய சங்கத்தைக் கொடுத்தது.

ப்ருதுவைப் பாட துதி பாடகர்கள் வந்தனர். அவர்களைப் பார்த்து


புன்முறுவலுடன் ப்ருது கூறினார்.

"அன்பு மிக்கவர்களே! என் குணங்கள் பற்றிய புகழ் ஏது? இல்லாத


குணங்களைப் பாடுவார்களா? தகுதியுள்ளவர்களைப் பாடுங்களேன்!"

"இனி வரப்போகும் காலங்களில் என் புகழ் பரவினால் அப்போது பாடலாம். ஸ்ரீ


மன் நாராயணனின் புகழில் மனம் கொண்டவர்கள்‌ மனிதர்களைப்
பாடமாட்டார்கள்."

"சான்றோர்கள் புகழுக்குப் பாத்திரமான போதிலும் தங்கள் புகழைக் கேட்பதை


விரும்பார். நானோ இன்னும் நற்செயல்களைத் துவங்கவில்லை.
அப்படியிருக்க எனது புகழ் என்று ஏதுமில்லையே!"
என்றார்.

ஆனால், முனிவர்களின் கூற்றுப்படி அவர்கள் ப்ருதுவைப் பாடத் துவங்கினர்.

ஸ்ரீமத் பாகவதம் - 132-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 76

ப்ருது மன்னனின் விநயத்தையும் இனிமையான பேச்சையும் கண்டு


அனைவரும் மகிழ்ந்தனர்.

முனிவர்களின் கூற்றுப்படி துதிபாடகர்கள் பாடத் துவங்கினர்.

மன்னவா! தாங்கள் ஸ்ரீமன் நாராயணனின் திருவவதாரமே. தங்கள்


பெருமைகளை வர்ணிக்க உண்மையில் எங்களுக்கு திறமையில்லை தான்.
மன்னன் வேனனது உயிரற்ற உடலிலிருந்து வெளிவந்தபோதும்,
உண்மையில் நீங்கள் மங்கள ரூபம் கொண்டவர். தங்கள் பௌருஷத்தை
நினைத்தால் ப்ரும்மதேவர் உள்பட அனைவரும் மதி மயங்குகின்றனர்.

இருப்பினும் தங்களது கதாம்ருதத்தின் சுவையில் உள்ள ஆசையால்,


முனிவர்களது கட்டளையை ஏற்று எங்களால் இயன்றவரை தங்கள்‌
பெருமைகளை விவரிக்கிறோம்.

235
தங்கள் புகழ் எல்லையற்றது. தாங்கள் தர்ம நெறிகளை ஒழுகுவதில் தலை
சிறந்தவர். மக்களை அறநெறியில் செலுத்தி அவர்களைக் காப்பவர்.
தர்மத்திற்கு ஊறு விளைவிப்போரை தண்டிப்பவர்.

தாங்கள் ஒருவராகவே , மக்களைக் காப்பது, போஷிப்பது, மகிழ்விப்பது ஆகிய


செயல்களையொட்டி லோகபாலர்களின் சக்தியை தாங்கி நிற்கிறீர்.

வேள்விகள் மூலம் விண்ணுலகங்களையும், மழை பொழிவதை


ஒழுங்குபடுத்தி மண்ணுலகையும் காக்கிறீர்.

சூரியன்போல் உலகியலுக்கு அப்பாற்பட்ட மகிமை உடையவர்.

சூரியன் எட்டு மாதங்கள் தண்ண ீரை உறிஞ்சியெடுத்து, பின் வர்ஷருதுவில்


மழையாகப் பொழிந்து காக்கிறார்.

மலரிலிருந்து வண்டு மலரைப் பாதிக்காமல் தேனைச் சேகரிப்பதுபோல்


சுபிக்ஷமான காலத்தில் வரிவசூல் செய்து, பஞ்சம்‌ வரும் காலங்களில்
அவற்றை மக்களுக்காகப் பயன்படுத்துகிறீர்.

நீர் ஏழைப்பங்காளன். தரையில் கால் வைத்து நடந்தாலும் அசுத்தம்


செய்தாலும் பூமி அவற்றை தாங்குவதுபோல், தன்னை தகைபவர்களையும்
எதிர்ச் செயல் புரிவோரையும் பொறுக்கிறீர்.

தங்களது தோற்றமே மக்களை‌


‌மகிழ்ச்சிப் படுத்துகிறது.

தங்கள் செயல்முறை மிகவும் ரகசியமானது. எவரும் அறியவொண்ணாதது.


தங்களது செல்வப் பெருக்கு எவராலும் களவு செய்ய இயலாதது.
பாதுகாப்பானது. பெருமைக்கும் நற்குணங்களும் வற்றாத ஊற்றாவர்.

பகைவர்களால் அணுகவோ அடக்கவோ இயலாதவர்.

ஒற்றர் வாயிலாக மக்களின் எண்ண ஓட்டத்தை நன்கறிந்தபோதிலும்,


தன்னைப் பற்றிய நிந்தையையோ, புகழையோ செவி மடுப்பதில்லை.

பகைவனின் புதல்வனே ஆனாலும், தவறு செய்யாவிடில் தண்டிக்கமாட்டீர்.

சூரியனின் ப்ரகாசம் எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் பரவுகிறதோ


அத்தனையும் உங்கள் ஆட்சிக்குட்பட்டதே.

தனது நற்செயல்களால் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துவதால் மக்கள்


தங்களை ராஜா (ரஞ்சயிஷ்யதி ராஜா - மனம் மகிழச் செய்பவர்) என்றழைப்பர்.

உறுதியான எண்ணம் படைத்தவர். அசைக்க முடியாத கொள்கை உடையவர்.


சத்தியசந்தர். அந்தணர்களிடம்‌ அன்பு பூண்டவர். மூத்தோரைப் பணிபவர்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் அடைக்கலமானவர். அவற்றை மதிப்பவர்.

பிறன் மனையைத் தாயென மதிப்பவர். தன் மனையைத் தன்னில் பாதியாய்


எண்ணுபவர். குடிமக்களை தன் மக்களென பாவிப்பவர். ஞானிகளின்
தொண்டர்.

236
தீயவர்களுக்கு யமன்.

மக்கள் அவித்யையால் இவரை சாதாரண மன்னன் என்று நினைப்பவர்.


ஆனால் இவர் ஆத்ம ஸ்வரூபமானவர்.

ஒரே வெண்கொற்றக் குடையின் கீ ழ் பூமண்டலம் முழுவதையும் ஆட்சி


செய்பவர்.

கைகளில் வில்லேந்தி சூரியன்போல் நாற்றிசையிலும் தடையின்றி


சஞ்சரிப்பார்.

மக்களின் ஜீவனோபாயத்திற்காக பசு வடிவம் தாங்கிய பூமாதேவியிடமிருந்து


அனைத்துப் பொருள்களையும் கறப்பார்.

தன் வில்லம்புகளால் மலைகளைப் பிளந்து பூமியைச் சமன் செய்வார். இவரது


வில்லின் நாணொலி கேட்டு தீயவர்கள் நடுநடுங்கி அழிந்துபோவர். ஸரஸ்வதி
நதிக்கரையில் நூறு அஸ்வமேதயாகங்கள் செய்யப்போகிறார். நூறாவது
யாகத்தில் இந்திரன் இவரது குதிரையைக் கவர்ந்து செல்வான்.

தன் அரண்மனைப் பூங்காவில் ஸனத்குமாரரைச் சந்தித்து, அவருக்கு


பரமபக்தியோடு பணிவிடைகள் செய்து, ஞானத்தைப் பெறுவார்.

இவரது பராக்கிரமம் கொடி கட்டிப் பறக்கும்போது, அதைப் பற்றியே அனைத்து


மக்களும் பேசுவர்.

இவ்வாறு கூறியவுடன் துதிபாடகர்களைக் கௌரவித்து சன்மானங்கள்


அளித்தார்.

விதுரர் கேட்டார்.

ப்ருது எவ்வாறு பூமியைச் சமன் செய்தார்?

பூமியிடமிருந்து என்னென்ன பொருள்களைக் கறந்தார்?

இந்திரன் எதற்காகக் குதிரைகளை அபகரித்தான்?

ஆத்மஞானம்‌பெற்று எந்த லோகத்தை அடைந்தார்?

மஹரிஷியே!

ப்ருது மன்னரின் சரித்திரத்தை விரிவாகக்‌கூறுங்கள். அவரது புகழ் பகவான்


நாராயணின் புகழே அன்றோ? என்றார்.

ஸ்ரீமத் பாகவதம் - 133-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 77

விதுரர் கூறினார்:

237
அந்தணர்கள்‌ப்ருதுவிற்கு பட்டாபிஷேகம்‌செய்து மக்களின் காவலன் என்று
அழைத்தனர்.

வேனனது கொடுஞ்செயலால் பூமி தன் வளங்களை தனக்குள்


ஒளித்துக்கொண்டாள். அதனால் பஞ்சம் தலைவிரித்தாடியது.

மக்கள்‌பட்டினியால் வாடினர். ப்ருதுவிடம் முறையிட்டனர்.

அகில உலகிற்கும் காவலர் தாங்களே! தாங்களே எங்கள் பிழைப்பிற்கும் வழி


செய்யவேண்டும். பசிக்கொடுமை வாட்டுகிறது. உடனே ஆவன செய்யுங்கள்.
இல்லையேல் மடிந்து போக நேரிடும்.

மக்களின் பரிதாபமான அழுகுரலைக் கேட்டு இந்நிலைமைக்கு காரணம்‌என்ன


என்று யோசிக்கலானார்.

பூமி பயிர், பச்சைகள், மூலிகைகள் அனைத்தையும் தனக்குள்‌


ஒளித்துக்கொண்டது என்று ஆராய்ந்து கண்டார். சிவபெருமான்
முப்புரமெரிக்கக் கிளம்பியதுபோல் கடுங்கோபம் கொண்டு வில்லை எடுத்து
பூமியின் மேல் எய்வதற்காகத் தொடுத்தார்.

அதைக் கண்டு பயந்த பூமிதேவி பசுவின் உருக்கொண்டு ஓடலானாள். அவள்


நாற்றிசைகளிலும் ஓட அவளை விடாமல் தொடர்ந்தார் ப்ருது.

அவள்‌ மூவுலகிலும்‌ காப்பார் யாருமின்றி ப்ருதுவிடமே திரும்பி வந்து


கூறலானாள்:

தர்ம நெறியறிந்தவரே! துன்பமடைந்தவரைக் காப்பவரே! என்னையும்


தாங்களே காக்க வேண்டும். குற்றம்‌ புரியாத என்னை ஏன் கொல்ல
விரும்புகிறீர்? தர்மநெறியறிந்தவன் பெண்ணைக் கொல்ல முயல்வானா?

நான் உறுதியான படகுபோல் அனைத்து ஜீவன்களையும் என்மேல் வைத்து


காக்கிறேன். நீங்கள்‌
என்னை அழித்தால்‌ உங்களையே நம்பிய மக்களை
நீரின்மேல் வைத்து எப்படிக் காப்பாற்றுவர்கள்?

ப்ருது சொன்னார்..

பூமியே! என் கட்டளையை மீ றுகிறாய். அதனால் உன்னை


கொல்லப்போகிறேன். வேள்வியில் ஹவிர்பாகம் பெறுகிறாய் அல்லவா?
ஆனால் தானியங்களைத் தர மறுக்கிறாய்.

நீ பசு உருவின் புல்லை மட்டும் உண்டு பாலைக் கொடுப்பதில்லை.


கொடியவளான உன்னைத் தண்டிப்பது குற்றமாகாது.

ப்ரும்மதேவரால் உண்டாக்கப்பட்ட தானிய வகைகளை உன்னுள்


ஒளித்துக்கொண்டு கொடுக்க மறுக்கிறாய். உன்னைக் கொன்று உன்
கொழுப்பால் என் மக்களின் பசியைத் தீர்ப்பேன். எவன் தன்னை மட்டும்
போஷித்துக் கொண்டு மற்ற ஜீவராசிகளிடம் கருணையின்றி நடக்கிறானோ

238
அவன் ஆணானாலும், பெண்ணானாலும் மூன்றாம் பாலினத்தவராயினும்,
சுயநலமியான அவனைக் கொல்வது கொலையாகாது.

திமிர் பிடித்த உன்னைத் துண்டு துண்டாய் வெட்டி என் யோக சக்தியால்


மக்களைக்‌காப்பேன் என்றார்.

பூமி நடுங்கிக்கொண்டு கூறினாள்: நீங்கள் ஸாக்ஷாத் பரமபுருஷரே ஆவர்.



மாயையை ஏற்று பல உருவம்‌ கொள்கிறீர். உண்மையில் விருப்பு
வெறுப்பற்றவர். தங்களை திரும்பத் திரும்ப வணங்குகிறேன்.

அனைத்தையும்‌படைத்த தாங்களே என்னைக் கொல்ல வந்தால் நான் யாரிடம்


சரண் புகுவேன்?

தங்கள்‌ மாயையை எவராலும் வெல்ல முடியாது. தாங்களே அன்று


ஆதிவராஹமூர்த்தியாய் என்னை சமுத்திரத்திலிருந்து தூக்கிவந்தீர்கள்.
இபோது தாங்களே என்னைக் கொல்லத் துணியலாமா?

தங்களுக்கும் தங்கள் அடியார்களுக்கும் வணக்கம்.

என்மீ து கொண்ட கோபத்தை சற்றே அடக்கிக்கொண்டு நான் கூறுவதைக்


கேளுங்கள்.

உண்மையைக் கண்ட முனிவர்கள் மக்களின் நன்மையின் பொருட்டு பல்வேறு


வழிகளை நடைமுறைப்படுத்தி உள்ளனர். மக்கள் அந்த தர்ம வழிகளில்
ஒழுகினால் பல்வேறு விருப்பங்களையும் அடையப்பெறுவர்.

ஆனால், அவற்றில் நம்பிக்கையற்ற மூடன் தன் விருப்பப்படி ஒரு வழியைக்


கைக்கொண்டால் அது பலனளிப்பதில்லை.

ப்ரும்மதேவரால் படைக்கப்பட்ட தானியங்களை தீயவர்கள் உண்டு


கொழுத்திருந்தனர். அவர்களின் அதர்மச் செயல்கள்‌ பெருகின. எனவே
அவற்றை நான் என்னுள்‌ ஒளித்தேன். தாங்கள் நம் முன்னோர்களின்
அறவுரைப்படி அவற்றை என்னிடமிருந்து கறக்க ஆவன செய்யுங்கள்.

ஒரு கன்றுக்குட்டியும் பாத்திரமும் கொண்டு வந்தால், கன்றின் மேலுள்ள


அன்பினால் பாலின் உருவில் அனைத்து வளங்களையும் பொழிந்து
விடுகிறேன்.

அரசே! நதிப்பாசன நிலமாய் என்னைச் சமன் செய்தால் மழைக் காலத்திலும்


வறண்ட காலத்திலும் மாரிகாலத்து மழை என்னுள் தங்கும். அது மக்களுக்கு
நன்மைகளைத் தரும் என்றாள்.

239
ஸ்ரீமத் பாகவதம் - 134-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 78

பூமிதேவியின் சொற்களால் மகிழ்ந்தார் ப்ருது.

பசு உருவத்திலிருந்த பூமியிடம் ஸ்வாயம்புவமனுவை கன்றாகக் கொண்டு


அனைத்து விதமான பயிர்களையும் கைகளாலேயே கறந்து ஏந்திக்கொண்டார்.

ப்ருதுவைப் போலவே மற்றவர்களும் பேச்சின் ஸாரத்தையே உள்வாங்கிக்


கொண்டனர்.

எனவே ரிஷிகள் ப்ருஹஸ்பதியை கன்றாகக் கொண்டு வேதங்களைக்


கறந்தனர்.

தேவர்கள் இந்திரனை கன்றாக அமைத்து தங்கப்பாத்திரத்தில் மனவலிமை,


பொறி புலன்களின் வலிமை, உடல் வலிமை, அமிர்தம் ஆகியவற்றைக்
கறந்தனர்.

அசுரர்கள் அசுரர்களில் சிறந்தவனான ப்ரஹ்லாதனை கன்றாகக் கொண்டு


இரும்புப் பாத்திரத்தில் கள்ளையும், மற்ற போதை தரும் வஸ்துக்களையும்
கறந்தனர்.

கந்தர்வர்களும் அப்ஸரஸ்களும் விச்வாவசு என்ற கந்தர்வனை கன்றாய்க்


கொண்டு தாமரை மலர்ப் பாத்திரத்தில் சங்கீ தம் என்ற தேனையும், அழகு
என்ற பாலையும் கறந்தனர்.

ச்ராத்த தேவர்களான பித்ருக்கள் அர்யமா என்ற பித்ரு தேவனை கன்றாக்கி


சூளையில் சுடாத மண் பாத்திரத்தில் பிதுர் தேவதைகளுக்கு
அர்ப்பணிக்கப்படும் கவயம் என்ற ஹவிஸைக் கறந்தனர்.

சித்தர்கள் கபிலரை கன்றாகக் கொண்டு அஷ்ட சித்திகளையும், அந்தர்தானம்


முதலிய வித்தைகளையும் ஆகாயமாகிய பாத்திரத்தில் கறந்தனர்.

மாயையில் வல்ல கிம்புருஷர்கள் மயனை கன்றாக்கி பலவிதமான


மாயைகளைக் கறந்தனர்.

மாமிசம் உண்ணும் யக்ஷ கின்னரர்களும் பூத பிசாசர்களும் ருத்ரனை


கன்றாய்க் கொண்டு, மண்டை ஓட்டில் ரத்தமான கள்ளைக் கறந்தனர்.

படம் எடுக்கும், எடுக்காத பாம்பு வகைகளும், தேள் முதலியவையும்,


தக்ஷகனை கன்றாக்கி தம் வாய் எனும் பாத்திரத்தில் விஷமாகிய பாலைக்
கறந்தனர்.

பசுக்கள் ருத்ரனின் வாகனமான காளையை கன்றாய்க் கொண்டு வனமாகிய


பாத்திரத்தில் புல்லைக் கறந்தன.

பறவைகள் கருடனை கன்றாக்கி அசைவ உணவுகளையும், பழங்களையும்


கறந்தன.

240
மரங்கள் ஆலமரத்தை கன்றாக்கி ரஸரூபமான பாலைக் கறந்தன.

மலைகள் இமயமலையை கன்றாக்கி தாழ்வரைப் பாத்திரத்தில்


தாதுப்பொருள்களைக் கறந்தன.

ப்ருது மன்னனின் அனுமதியோடு அவரவர் தத்தம் தலைவர்களை கன்றாய்க்


கொண்டு, தங்களுக்கு விருப்பமானவற்றைக் கறந்துகொண்டனர்.

விரும்பியதனைத்தையும் கொடுத்த பூமாதேவியிடம் அன்பு பெருகி அவளைத்


தன் மகளாகவே ஏற்றார் ப்ருது.

இவையனைத்தும் உருவகங்கள். அனைவர்க்கும் வேண்டியதை பூமி


அளித்தது என்பதே அறிய வேண்டிய விஷயம்.

ஒரு தந்தைபோல் பூமிக்கு சிறப்பான வாழ்வை அமைத்துக் கொடுத்தார்.

ஏழு கண்டங்களாகப் பிரித்து (எவ்வளவோ நிலப்பரப்புகளைக் கடல்


கொண்டாலும், வெளி வந்தாலும் இன்று வரை ஏழு கண்டங்களே)

மேடு பள்ளங்களைச் சமனாக்கி, மக்கள் வாழ வடுகளையும்,


ீ நகரங்களையும்
அமைத்தார்.

கிராமங்கள், பட்டணங்கள், நகரங்கள், கூடாரங்கள், சுரங்கங்கள், கோட்டைகள்,


வேடுவச்சேரிகள், இடைச்சேரிகள், சேனைக் கூடாரங்கள், வேளாண்
கிராமங்கள், மலைச் சாரல் கிராமங்கள், அனைவர்க்குமான வாழ்க்கைத் தளம்
ஆகியவற்றை ஏற்படுத்தினார்.

ப்ருதுவிற்கு முன்பு இவ்வாறான கட்டமைப்புகள் இல்லை. மக்கள் தங்கள்


வசதிக்கேற்ப இன்பமாக வாழ்ந்தனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 135-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 79

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்:

ஸரஸ்வதி நதி கிழக்கு நோக்கி பாயும் ப்ரும்மாவர்த்தம் என்ற இடம் மனு


சக்ரவர்த்தியின் புனிதத்தலம். அங்கு ப்ருது நூறு அச்வமேத யாகங்கள்
செய்வதாக சங்கல்பம் செய்துகொண்டார்.

நூறு அச்வமேத யாகங்கள் செய்பவரே இந்திர பதவியை அடையலாம். ப்ருது


பதவியை எண்ணிச் செய்யவில்லை. ஆனாலும் இந்திரன் அவர் மீ து
பொறாமை கொண்டான்.

ப்ருது மன்னனின் இவ்வேள்வியில் அனைத்துலகோரும் மகிழ்ந்து வணங்கும்


யக்ஞ நாராயணனான பகவான் ஸ்ரீ ஹரி நேரிடையாக தரிசனம் தந்தார்.

241
அவருடன் ப்ரும்மாவும், பரிவாரங்களும், எண்டிசை பாலகர்களும் வந்தனர்.
அப்போது கந்தர்வர்கள், முனிவர்கள், அப்சரஸ்கள் அனைவரும் பகவானின்
புகழை இசைத்தனர்.

அனைத்து தேவர்களும், முனிவர்களும் அங்கு குழுமினர்.

விதுரா! பூமாதேவி காமதேனு உருக்கொண்டு யாகத்திற்கு வேண்டிய


அனைத்து பொருள்களையும் வழங்கினாள்.

திராட்சை, பழரசம், கரும்புச்சாறு, பால், தயிர், அன்னம், நெய் அனைத்தும்


பெருகி வந்தன. மரங்கள் தேன் சிந்தும் பழங்களை அளித்தன.

அனைத்து வகையான உணவு வகைகளையும் மலைகள் கொடுத்தன.


ரத்தினங்களை ஸமுத்திரங்கள் அளித்தன.

எண்டிசைப் பாலர்களும், மற்ற மன்னர்களும் பல உயர்ந்த காணிக்கைகளை


அளித்தனர். ப்ருதுவின் செழிப்பைக் கண்டு மனம் பொறாத இந்திரன்
வேள்விக்கு இடையூறு செய்ய முற்பட்டான்.

ப்ருது தொண்ணூற்றொன்பது அச்வமேத யாகங்களை முடித்தார். நூறாவது


யாகத்தில் இந்திரன் குதிரைகளை கவர்ந்து சென்றான்.

மறநெறியை (அதர்மத்தை) அறநெறியாகக் காட்டுவது நாத்திகம். அதைப்


பாகண்டம் என்பர்.

இந்த வேடத்தில் தீயோனும் நல்லவனாகக் காட்சி தருவான்.

தன்னை காத்துக்கொள்ள நாத்திக வேடம் தரித்து வேள்விக்கான குதிரையை


இந்திரன் கவர்ந்து கொண்டு வான் வழி சென்றான். அதை அத்ரி முனிவர்
பார்த்தார்.

அவர் ப்ருதுவின் மகனிடம் கூறினார். அவன் சினம் கொண்டு இந்திரனைக்


கொல்ல எண்ணி நில் நில் என்று கத்திக்கொண்டு துரத்திச் சென்றான்.

தலையில் சடாமுடியும், விபூதி பூசிய திருமேனியுமாக இருந்த இந்திரனைக்


கண்டு தர்மதேவதையே உருவெடுத்து வந்ததோ என்றெண்ணி ஏமாந்தான்.

இந்திரன் மீ து பாணம் எய்யாமல் திரும்பினான்.

ப்ருதுவின் மகன் இந்திரனைக் கொல்லாமல் திரும்பியது கண்டு, அத்ரி,


"குழந்தாய்! அவன் தீய குணம் கொண்ட இந்திரனே. யாகத்தைக் கெடுக்க
வந்தவன். அவனைக் கொல்" என்றார்.

சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனை ஜடாயு துரத்தியதுபோல்


ப்ருதுவின் மகன் மறுபடி இந்திரனைத் தொடர்ந்தான்.

அவன் துரத்துவதைக் கண்ட இந்திரன் தன் வேஷத்தைக் கலைத்துவிட்டு


குதிரைகளை விட்டு விட்டு மறைந்தான்.

242
குதிரையோடு திரும்பி வந்த ப்ருதுவின் மகனை முனிவர்கள் "விஜிதாச்வன்"
என்று கொண்டாடினர்.

இந்திரன் அடர்ந்த இருளைத் தோற்றுவித்து, அதில் மறைந்திருந்து, சஷாலம்


என்னும் யூபஸ்தம்பத்திலிருந்து தங்கக் கடிவாளம் போட்ட வேள்விக்
குதிரையை மீ ண்டும் கவர்ந்து சென்றான்.

கையில் கபாலமும் கட்வாங்கம் என்னும் தண்டமும் ஏந்தி காபாலிகன்


வேடத்தில் குதிரையுடன் விண்வழி தப்பியோடினான் இந்திரன். அத்ரி
முனிவர் சுட்டிக்காட்டியும், அவன் சிவபக்தன்போல் வேடமணிந்திருந்ததால்
விஜிதாச்வன் தயங்கினான்.

அத்ரி மீ ண்டும் தூண்டவே, கோபம் கொண்டு அம்பு தொடுத்தான் விஜிதாச்வன்.

இந்திரன் உடனே குதிரையை விட்டு மறைந்துவிட்டான்.

விஜிதாச்வன் குதிரையுடன் திரும்பினான். இந்திரன் விட்டுச் சென்ற


வேஷங்களை அறிவிலிகள் ஏற்று நாத்திகர்களாயினர்.

அவை பாவத்தின் சின்னங்கள் எனவும், பாகண்டம் எனவும்


அழைக்கப்படுகின்றன.

அவ்வேடங்களின் கொள்கைகள் மனம் மயக்குபவை. செவிக்கு


இனிமையானவை. பலவிதமான இனிய உத்திகளால் தம் கொள்கைகளை
நிறுத்துபவை. ஆனால் அத்தனையும் போலி தர்மங்கள். ஆனால், உலகோர்
அவற்றை நம்பி மனதைப் பறிகொடுக்கின்றனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 136-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 80

இந்திரனது தீய செயலை அறிந்த ப்ருது சினம் கொண்டு அவனைக் கொல்ல


வில்லையெடுத்தார்.

சினத்தால் பொங்கும் அவரது கண்களைக் காணமுடியாமல் அனைவரும்


கூசினர். மிகுந்த பராக்கிரமுள்ள அவரை ரித்விக்குகள் தடுத்தனர்.

மன்னவா! தாங்கள் வேள்விக்கான தீட்சை ஏற்றபின் வேள்விப் பசுவைத் தவிர


வேறெந்த ஜீவனையும் வதம் செய்யக்கூடாது. அது வேள்விக்கு
இடையூறாகும்.

தங்கள் பகைவன் இந்திரன் பொறாமையால் ஒளியிழந்துபோனான். அவனை


மந்திரக்கட்டு போட்டு இங்கு இழுத்துவந்து ஹோமம் செய்துவிடுகிறோம்
என்று சொன்னார்கள்.

அவர்கள் இந்திரனை ஆவாஹனம் செய்து ஹோமத்தில் விடத் துணிந்தபோது


ப்ரும்மதேவர் எழுந்தருளினார்.

243
ரித்விக்குகளே ! நீங்கள் செய்வது தவறு. எந்த தேவர்களுக்காக வேள்வி
செய்கிறீர்களோ அவர்கள் இந்திரனின் திருமேனி. இந்திரன் பகவான் யக்ஞ
நாராயணனின் அம்சம்.

இந்திரன் பொறாமை கொண்டு நாத்திகத்தை பரப்பி விட்டான். உங்கள்


பகைமை அதிகமானால் அவன் சினம் கொண்டு தர்மத்திற்கு எதிரானவற்றை
வளர்த்து விடுவான்.

மிகுந்த புகழ் கொண்ட ப்ருதுவிற்கு தொண்ணூற்றொன்பது அச்வமேதம்


செய்தவர் என்ற புகழே போதும். சதக்ரது என்பது இந்திரனின் பெயர்.

ஏகோன சதக்ரது (நூறுக்கு ஒன்று குறைவு) என்ற பெயர் ப்ருதுவுக்கு மட்டுமே


உரியது.

இதுவரை அறநெறி வழுவாது செய்த வேள்விகளின் பயனை, இந்த ஒரு


செயலால் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.

ப்ருதுவிற்கும் இந்திர பதவியில் ஆசை இல்லை. எனவே இவ்வேள்வியினால்


பயனில்லை.

ப்ருதுவே, நீங்களும் இந்திரனும் பகவானின் அம்சங்களே. ஒருவர் மற்றவர்


மீ து கோபம் கொள்ளலாகாது.

இவ்வேள்வி தெய்வத்தினால் தடைபட்டது. எனவே வருத்தம் வேண்டாம்.

தெய்வம் தடை செய்ததை மீ ண்டும் சரிவரச் செய்ய நினைப்பவனின் மனம்


சினத்தினால் மயங்குகிறது.

வேள்வியை நிறுத்த இந்திரன் ஏற்படுத்திய நாத்தீக தர்மங்களால் மக்கள்


கெட்டுப்போய்க் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, வேள்வியை நிறுத்திவிட்டு உங்கள் முதல் கடமையான மக்களைக்


காப்பாற்றுவதைச் செய்யுங்கள்.

இந்த மறநெறிகளை அழிக்க வல்லவர் நீர் ஒருவரே.

ப்ரும்மாவின் வார்த்தைகளைக் கேட்ட ப்ருது சமாதானம் அடைந்து அவரை


வணங்கி வேள்வியை நிறுத்தினார்.

பின்னர் வேள்வி முடிந்ததற்கான அவ்ப்ருத ஸ்நானத்தைச் செய்துவிட்டு


இந்திரனோடு நட்பு கொண்டார்.

அனைவர்க்கும் ஏராளமான தட்சிணைகள் அளித்தார்.

இந்திரன் மீ ண்டும் மனமார ப்ருதுவிடம் மன்னிப்பு வேண்டினான்.

யாகங்களால் மகிழ்ச்சி கொண்ட பகவான் மீ ண்டும் தோன்றினார்.

244
அரசே! இவன் வேள்விகளுக்கு இடையூறு செய்தவன்தான். இப்போது
மன்னிப்பு வேண்டுகிறான்.
சான்றோர்கள் பிறரிடம் ஒருபோதும் பகை கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் இவ்வுடலை ஆன்மா என்று எண்ணுவதில்லை.

உன்னைப் போன்றவர்கள் மாயையில் மயங்குவாராயின், இவ்வளவு காலம்


பெரியோர்க்குச் செய்த பணிவிடைகளுக்கு பலன் ஏது?

அத்தனையும் வண்
ீ சிரமம் என்றாகும். உடலில் பற்றில்லாதவன், உறவு, பகை,
மனைவி, மக்கள், நட்பு என்று பற்று கொள்வானா?

தனக்கென்று நியமிக்கப்பட்ட தர்மங்களை பயனில் பற்றின்றி சிரத்தையுடன்


எனக்காகச் செய்பவனது மனம் தெளிவடைகிறது. மனம் தெளிந்தால், உடல்
ஆன்மா அல்ல என்ற அறிவு பிறக்கும். அதனாலேயே அவன் என்னைப்
(சாருப்யத்தை) போன்ற திருமேனியை அடைகிறான். இதுவே அழிவற்ற
சாந்தமான நிலை.

என் அடியார்கள் என்னிடம் புத்தியைச் செலுத்துவதால் எவரிடமும் உயர்வு


தாழ்வு பார்ப்பதில்லை. அதனால் மகிழ்ச்சியோ துக்கமோ கொள்வதில்லை.

எனவே, வரனே! ீ வேறுபாடுகளை விடுத்து, அமைதி கொள். உனக்கு


நியமிக்கப்பட்ட சபையையும், படைகளையும் கொண்டு உலக மக்களைக்
காத்து நில்.

மக்களைக் காப்பதே அரசனின் பணி. அப்படிச் செய்தால் அவர்களது


புண்ணியத்தில் ஒரு பங்கு அரசனைச் சேர்கிறது.

வரிவசூல் மட்டும் செய்து மக்களை காக்கத் தவறுபவன் மக்கள் செய்யும்


தீவினைகளின் பயனை அடைகிறான்.

அறநெறியைப் பின்பற்றி அரசாட்சி செய். ஸனகாதி முனிவர்கள் உன்னைத்


தேடி வருவர்.

உனது நற்குணங்களும் நன்னடத்தையும் என்னைக் கட்டிவிட்டன.

ஏதேனும் ஒரு வரம் கேள்! அனைத்தையும் சமமாகப் பார்ப்பவனின் இதயத்தில்


நான் இருக்கிறேன். மற்றபடி, தவம் செய்வதாலோ, யோகாசனத்தில்
நிற்பதாலோ, என்னை அடைய முடியாது.

நற்குணங்களும் நற்சிந்தனைகளும் உள்ளவனின் உள்ளத்தில் விரும்பிக்


குடியேறுகிறேன் என்றார்.

ப்ருது, பகவானின் சொற்களைக் கேட்டு கண்ண ீர் உகுத்தார். அவனது


கருணையால் நெஞ்சம் விம்மினார். இந்திரனிடத்துப் பகையை விட்டு
அவனை கட்டித் தழுவிக்கொண்டார்.

245
பகவானின் சரணத்தில் விழுந்து அவரது பாத தாமரைகளைப் பிடித்துக்
கொண்டார்.

பகவான் அங்கிருந்து புறப்பட நினைத்தார். ஆனால் போக விடாமல் ப்ருதுவின்


அன்பினால் கட்டுண்டுபோய் அவரை அன்பொழுகப் பார்த்துக்கொண்டே
நின்றார்.

போதும் என்று சொல்ல முடியாதபடி பகவானும் பக்தனும் ஒருவரை ஒருவர்


கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 137-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 81

அன்பின் வலைக்குள் ஆட்பட்ட இறைவனை கைகூப்பித் தொழுதார் ப்ருது.

"இறைவா! எங்கும் நிறைந்தவர் நீர்! உலகியல் இன்பங்கள் நரகத்தில்கூடக்


கிடைக்கும். ஆறாத முக்தியின்பம் நல்கும்‌உம்மிடம் எவனாவது உலகியல்
சுகங்களை வழங்கும் அற்ப வரங்களைக்‌கேட்டுப்‌பெறுவானா?"

"பகவானே! எனக்கு அதுவும் வேண்டாம். அங்கு உங்கள் திருவிளையாடல்கள்


பற்றிய கதையமுதங்களைக்‌கேட்க இயலாதே!"

"உங்கள் அடியார்கள் உங்கள்‌


மீது கொண்ட அன்பினால் இதயம்‌ கனிந்து,
ஊனுருகி, உங்கள் அமுதத் திருவிளையாடல்களை இங்குதானே
கூறுகிறார்கள்."

"அவைகளைக்‌ கேட்டுக்கொண்டே இருக்க எனக்கு ஆயிரம்‌ காதுகளைக்‌


கொடுங்கள்."

"அடியார்களின் திருமுகங்களிலிருந்து வெளிவரும் காற்று, தங்கள்‌


திருவடிகளின் மகரந்தத் தேன்துளிகளை ஏந்தி வருவதன்றோ! அவை
என்னைப் போன்ற மூடர்களுக்கும் கசடர்களுக்கும் உண்மையறிவை
அளிக்கிறது."

"ப்ரும்மாதி தேவர்களும் அனைத்துச் செல்வங்களைப் பெற மஹாலக்ஷ்மியை


வேண்டுகின்றனர். ஆனால், திருமகளோ, ஸகல புருஷார்த்தங்களையும்‌
வேண்டி தங்களை வேண்டி நிற்கிறாள். தங்கள் கதையமுதத்தினையே பருக
விரும்புகிறாள்."

"அனைத்து நலனையும் வாரி வழங்கும் உமது புகழை அடியார்கள்


பாடும்போது, தற்செயலாகக் கேட்டவன்கூட போதும் என்று
நினைப்பதேயில்லை."

"புருஷோத்தமரும், கல்யாண குணசீலருமான தங்களுக்கு திருமகள் போல்


சேவை செய்ய விரும்புகிறேன். ஒரு புருஷனுக்கு இரு பெண்கள் சேவை
செய்தால் கலகம் ஏற்படும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். ஏனெனில்
நாங்கள் விரும்புவது சரண சேவையே. அதனால் எங்களுக்குள் கலகம் வராது."

246
"லோகநாயகியான மஹாலக்ஷ்மிக்கு எங்களிடம்‌ பகைமை ஏற்படலாம்.
ஏனெனில் அவள் செய்யும் சேவையையே நாங்களும் விரும்புகிறோம்."

"அவ்வாறு நிகழ்ந்தால் ஏழைப் பங்காளரான தாங்கள் எங்கள் பக்கமே


நிற்பீர்கள். மஹாலக்ஷ்மியின் தயவால் தங்களுக்கு ஆக
வேண்டியதொன்றுமில்லை. "

"அதனாலேயே சான்றோர்கள்‌ ஞானம்‌ பெற்றபின்பும் தங்களையே


துதிக்கின்றனர்."

"நான் எந்தப் பற்றுமின்றித்தான் தங்களைப் பூஜிக்கிறேன். ஆனாலும், என்ன


வரம் வேண்டும் கேள் என்ற சொல், உலகையே ஆசை ‌மயக்கத்தில்
தள்ளிவிடும் சொல்லாகும்."

"தங்களது வேதரூபமான வாக்கும் மக்களை மயக்கத்தில் கட்டிப்போடுகிறது.


இல்லையேல் அவர்கள் ஏன் ஆசையோடு பயனை எதிர்பார்த்து கர்மங்களைச்
செய்யப்போகிறார்கள்?"

"அறியாமையால் மக்கள் எதையெதையோ வேண்டுகிறார்கள். ஒரு தந்தை


தனயனுக்கு வேண்டியதை அவன் கேட்ட பின்பா செய்கிறார்?"

"நான் எப்போதும் தங்கள் கதையமுத்தையே கேட்க விரும்புகிறேன். என்


நேரத்தைத் திருடும் விஷயங்களிலிருந்தும், மனிதர்களிடமிருந்தும் என்னைக்
காத்தருளுங்கள்" என்றார் ப்ருது.

ஸ்ரீமத் பாகவதம் - 138-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 82

உண்மையில் ப்ருது நம் அனைவர்க்கும் எப்படி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்


என்பதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

பகவான் ப்ருதுவைக் கருணை பொங்கப் பார்த்துக் கொண்டு சொன்னார்:

"அரசே! உனக்கு என்னிடம் ஆழ்ந்த பக்தி உண்டாகட்டும். கடக்க முடியாத


மாயையை நீ எளிதில் கடந்துவிட்டாய்."

"நான் உனக்கு ஏற்கனவே கட்டளையிட்டவற்றை குறையின்றிச் செய்து வா.


உனக்கு நன்மைகள் உண்டாகட்டும்" என்று கூறி, பின் ப்ருதுவின்
வணக்கங்களையும் பூஜைகளையும் ஏற்றுக்கொண்டு வைகுண்டம்‌
கிளம்பினார்.

பகவானுடன் வந்திருந்த தேவர்கள், முனிவர்கள், யக்ஷ கின்னரர்கள்,


மற்றவர்களையும் ப்ருது அவர்கள் பகவானே என்ற எண்ணத்துடன் பூஜை
செய்தார். அனைவரும் தத்தம்‌ இருப்பிடங்களுக்குச் சென்றனர். ப்ருதுவும்
நகரம் திரும்பினார்.

247
நாடு திரும்பும் மன்னனை வரவேற்க மக்கள் நகரத்தை மிக அழகாக
அலங்கரித்திருந்தனர்.

வழியெங்கிலும்‌ கிராம மக்களும் நகர மக்களும் மன்னரை முறைப்படி


உபசரித்தனர்.

பெரும் சிறப்பை அடைந்தபோதும்‌ப்ருது செருக்கடையவில்லை.

விதுரர் கேட்டார்:

ப்ருது, மஹாவிஷ்ணுவின் பாலன சக்தியை கைகளில் ஏற்று பூமியிலிருந்து


அனைத்துப் பொருள்களையும்‌ கறந்தவர். அவ்வாறு அவர் பூமியிடமிருந்து
பெற்று வாரி வழங்கியவற்றைத்தான் இந்திராதி தேவர்களும்
லோகபாலர்களும்‌ மனம் போல்‌ அனுபவித்து வருகிறார்கள். ஆகையால்
அவரது சரித்திரத்தின் சிறந்த செயல்களைக் கூறுங்கள்.

மைத்ரேயர் கூறத் துவங்கினார்:

ஒவ்வொருவரும் தமது நல்வினை, தீவினைப் பயனை அனுபவித்துக்


‌கழிக்காத வரை சம்சார பந்தத்திலிருந்து விடுபட இயலாது. எனவே கங்கை,
யமுனை நதிகளுக்கிடையே உள்ள புண்யக்ஷேத்ரத்தில் வசித்துக் கொண்டு,
ப்ரார்ப்த கர்மத்தால் கிடைத்த போகங்களை மட்டும் அனுபவித்து
புண்யகர்மாக்களை குறைத்தார்.

பகவானது அடியார்களையும், அந்தணர்களையும் தவிர்த்து, ஏழு தீவுகள்


கொண்ட பூமண்டலம் முழுவதிலும் அவரது ஆணை கொடி கட்டிப் பறந்தது.

ஒரு சமயம் மன்னர் மஹாஸ்த்ரம் என்ற வேள்வி செய்ய தீக்ஷை பெற்றார்.


அங்கு முனிவர்களும், சான்றோர்களும்‌ஒன்று கூடினர்.

வந்திருந்த அனைவரையும் முறைப்படி உபசரித்த மன்னர், நக்ஷத்திரங்களின்


மத்தியில் ஒளிரும் சந்திரன் போல் ப்ரகாசித்தார்.

நெடிதுயர்ந்த திருமேனி, உருண்டு திரண்ட மேனி, பொன்னென ஒளிரும்


உடலழகு, தாமரையொத்த கண்கள், உயர்ந்த மூக்கு, அழகிய முகம்,
வசீகரமான தோற்றம், திரண்ட தோள்கள், முத்துப் பற்கள், கவரும்‌புன்சிரிப்பு,
பரந்த மார்பு, ஆலிலை போன்ற வயிறு, அதில் மூன்று மடிப்புகள், சுழல்
போன்ற தொப்புள், நல்ல காந்தி, தங்கத்தூண்கள் போன்ற தொடைகள், நுனி
உயர்ந்த பாதங்கள், மெல்லிய சுருண்ட பளபளப்பான கேசங்கள், சங்கு போன்ற
கழுத்து, அரையில் பட்டாடை, தோளில் பொன்னாடை, இவ்வாறு அழகு
ஜொலிக்க, வேள்வி தீக்ஷை மேற்கொண்டதால், ஆபரணங்களற்று, தர்பைப்
புல்லைக் கையில் தரித்து, நற்காரியங்களைச் செய்தார்.

பின் அன்பும், கருணையும் ததும்பி வழியும் கண்களால் சபையோரைக் குளிரக்


குளிர நோக்கினார்.

248
அவையிலுள்ளோர் மனம்‌ குளிருமாறு சொல்லழகு மிளிர, எளிதில் புரியும்
வண்ணம், ஐயந்திரிபற உண்மைப் பொருளை விளக்கும் வண்ணம் ஆழ்ந்த
கருத்துக்களை அனைவர்க்கும் பயன்படும்படி பேசினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 139-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 83

ப்ருது தன் மக்களையும் சபையோரையும் பார்த்து இனிமையாகப் பேசத்


துவங்கினார்:

அவையோர்களே! உங்கள் அனைவர்க்கும் மங்களம் உண்டாகட்டும். நான்


கூறுவதை சற்றே கேளுங்கள்.

அறநெறிகளை அறிய விரும்புபவன் தன் எண்ணத்தை சான்றோரிடம்‌கூறி


ஒப்புதலைப் பெற வேண்டும்.

தீயவர்களைத் தண்டிக்கவும், மக்களைக்‌காக்கவும், அவர்கள் நலமோடு வாழ


ஆவன செய்யவும், அவர்கள் தங்கள் கடமைகளை சரிவரச் செய்ய
அறிவுறுத்தவுமே என்னை மன்னனாக நியமித்திருக்கிறீர்கள்.

ஒருவன் தனது கடமைகளை சரிவரச் செய்வானாகில், அவனைக் கண்டு


அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்கும் பகவான் மகிழ்ச்சி கொண்டு
அவனுக்கு உயர்ந்த உலகங்களை அளிக்கிறார். எனக்கும் அப்படிப்பட்ட
பாக்கியம் வேண்டும்.

எந்த அரசன் மக்களை நல்வழியில் செலுத்தாமல், கப்பத்தை மட்டும்


பெறுகிறானோ அவன் ப்ரஜைகளின் பாவப்பயன்களை அனுபவிக்கிறான். தன்
புண்ணியத்தையும் இழக்கிறான்.

ஆகவே, மக்களே, நீங்கள் உங்கள் அரசனான எனக்கு மறு உலகில் நற்கதி


கிடைப்பதற்காக எனக்கு உதவி செய்யுங்கள். பகைமை எண்ணத்தையும்,
குற்றம் காணும் குணத்தையும் விட்டு மனதில் இறைவனை நிறுத்தி,
அறநெறிப்படி உங்கள் கடமைகளைச் செய்து வாருங்கள்.

தூய்மையான மனமுடையவர்களே! பிதுர் தேவதைகளே! முனிவர்களே!


புனிதமானவர்களாகிய நீங்கள் என் வேண்டுகோளை ஏற்கவேண்டும்.
ஏனெனில் எச்செயலானாலும், மரணத்திற்குப் பின்னால், அதைச் செய்தவன்,
செய்யத் தூண்டியவன், உடந்தையாய் இருந்தவன் ஆகிய மூவர்க்கும் ஒரே
பலன் தான். கர்மங்களுக்குப் பயன் அளிப்பவர் யக்ஞநாராயணன் ஒருவரே.

ஸ்வாயம்புவமனு, ப்ரியவிரதன், உத்தானபாதன், மஹாராஜா த்ருவன், என்


தாத்தா அங்கன், ப்ரும்மதேவர் முதலிய பெரியோர்களும், ப்ரஹ்லாதன், பலி
முதலிய அசுர ச்ரேஷ்டர்களும் நால்வகைப்‌ புருஷார்த்தங்களையும்
அளிப்பவர், மற்றும் அனைத்து லோகங்களின் தலைவர் ஸ்ரீமன் நாராயணனே
என்று தீர்மானம் செய்துள்ளார்கள்.

ம்ருத்யுவின் பெண்வயிற்றுப் பேரனான என் தந்தை வேனனைப் போன்ற


சிலர்தான் பகவானை நம்ப மறுப்பவர்கள்.

249
பகவானின் திருவடித் தாமரைகளில் தீவிரமான பக்தி ஏற்படுமானால், அது
அவரது திருவடியில் தோன்றிப் பெருகும் கங்கைபோல் அனைவரின் மன
அழுக்கையும்‌கணத்தில் நீக்கிவிடும்.

பகவானின் திருவடித்தாமரையின் நிழலில் இருப்பவன் ஞானம் பெறுகிறான்.


அவன் ஸம்சாரத் தளையில் சிக்கமாட்டான்.

பகவானின் திருவடிக்‌
கமலங்கள் மனவிருப்பங்கள் அனைத்தையும்‌முடித்துத்
தரவல்லது.

பகட்டான பக்தியின்றி, வேதம் ஓதுதல், ஓதுவித்தல், த்யானம் செய்தல்,


துதிசெய்தல், பூஜை செய்தல் ஆகியவற்றோடு அவரவர்க்கு நியமிக்கப்பட்ட
கடமைகளையும், மனம், வாக்கு, காயம் ஆகியவற்றை ஒருமுகப்படுத்திச்
செய்யுங்கள். நம் தகுதிக்கேற்ப நிச்சயம்‌நற்பலன் ஏற்படும் என்ற நம்பிக்கை
முக்கியமானது.

பகவான் நித்ய முக்தன். ஞானமே வடிவானவர்.

ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் அற்றவர்.

கர்மயோகமான வேள்விகள், அவற்றின் பயன்கள், மந்திரங்கள் நெல்,


தானியங்கள், நிறங்கள், அவற்றின் குணங்கள், பொருள்களின் திறம்
அனைத்தும் பகவானே.

அவரே பயனின் உருவில் பலவாறாகக் காட்சியளிக்கிறார்.

என் மக்கள் தேவாதிதேவனான யக்ஞநாராயணனைப் பூஜிக்கிறார்கள்.


உண்மையில் நானே பாக்கியவான். அரசர்கள் அந்தணர்களை ஆள்பலம்,
அதிகாரம் காரணமாக அடக்கியாள நினைக்கலாகாது.

அவர்கள் பொறுமையும், தவமும், ஞானமும், பகவானிடம் பக்தியும் பெற்று


ஒளிர்பவர்கள்.

அந்தணர்களின் திருவடிகளில் பக்தி செய்வதாலேயே பகவானுக்கு


ப்ரும்மண்ய தேவன் (அந்தணர்களை தெய்வமாக மதிப்பவன்) என்ற பெயர்
உண்டு.

வேதம் என்பது அப்பழுக்கற்ற கண்ணாடி. அதில்‌இப்பிரபஞ்சத்தின் தத்துவம்‌


முழுவதையும் தெளிவாய்க் காணலாம்.

அதன் உண்மைப் பொருளை அறிய ஆவல்கொண்டு, மிகுந்த ஈடுபாட்டுடனும்,


தவம், நல்லொழுக்கம், வண்பேச்சு
ீ பேசாமை, மனவடக்கம் ஆகிய
சாதனைகளை கைக்கொண்டு மன ஒருமையுடன் வேதத்தை தினம்
ஓதுகிறார்கள்‌ அந்தணர்கள். அவர்களது திருவடித் துகளை ஆயுள்
முழுவதிலும்‌என் சிரசில் தாங்குவேன்.

250
நற்குணசீலன், நல்லொழுக்கமே செல்வம் எனக்கொள்பவன், நன்றி
மறவாதவன், பெரியோரை மதிப்பவன் ஆகியோரைச் செல்வம் தானாக
வந்தடையும்.

ஆகவே, பசுக்கள், அந்தணர்கள், பகவான், அடியார் குழாம் அனைவரும் எனக்கு


அருள்‌
புரியட்டும் என்றார்.

அங்கிருந்த சான்றோர் ப்ருதுவின் பேச்சைக் கேட்டு மனம்‌மகிழ்ந்தனர்.

நல்ல ‌மகனைப் பெற்றவன்‌ நல்ல உலகங்களை அடைகிறான் என்கிறது


வேதம். அவ்வகையில் ப்ராமண சாபத்தினால்‌தண்டிக்கப்பட்டு இறந்த உன்
தந்தை வேனன் உன்னால் நரகத்திலிருந்து விடுதலை பெற்றான்.

ப்ரஹலாதனது பக்தியால், நாசங்கள் புரிந்த அவன் தந்தை ஹிரண்யகசிபுவும்


நற்கதி பெற்றான்.

நீர் பூமியின் நாயகனாக நீடுழி வாழவேண்டும். உமது புகழ் எங்கும் பரவட்டும்.


ஸ்ரீ ஹரியின் புகழை எமக்கு கூறின ீர்கள்.

அரசனாகப் பெற்ற நாங்களே பாக்யசாலிகள். மக்களின் அறியாமை இருளை


நீக்கி நல்வழி காட்டின ீர்கள்.

நற்குணச் சுரங்கமான தாங்கள், அந்தணர் செயலை ஏற்று நல்லுபதேசம்‌


செய்தீர்கள். ‌க்ஷத்ரியர் செயலை ஏற்று அந்தணரைக்‌ காக்கிறீர்கள்;
ப்ரபஞ்சத்தை பரிபாலிக்கிறீர்கள். முத்தொழிலையும் செய்யும்‌
மஹாபுருஷரான உம்மை வணங்குகிறோம்‌என்று சபையோர் கூறினர்.

ஸ்ரீமத் பாகவதம் - 140-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 84

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்:

மிகுந்த பராக்கிரமசாலியான மன்னன் ப்ருதுவை மக்கள் புகழ்ந்து பேசிக்


கொண்டிருந்த போது, அங்கே ஸனகர், ஸநந்தனர், ஸனத்குமாரர்,
ஸனத்சுஜாதர் ஆகிய நால்வரும் வந்தனர்.

அரசரும் அவரது பரிவாரமும் ஒளிவசும்


ீ அவர்களைக் கண்டதுமே
ஸநகாதியர் என்று புரிந்து கொண்டனர். அனைவரும் விரைந்து எழுந்தனர்.
அவ்வாறு அவர்கள் எழுந்தது புலன் இன்பங்களிலிருந்து ஜீவனைத் தடுத்து
நிறுத்தவே ஆகும்.

பெரியவர்களைக் காணும்போது ஜீவன் அவர்களோடு மேலெழும்புகிறது.


வணங்கியதும் ப்ராணன் தங்கிவிடுகிறது என்கிறது மனு ஸ்ம்ருதி.

அவர்களைக் கண்டு பூரித்துப்போன ப்ருது, ஸாதுக்களை உபசரிக்கும் முறை


அறிந்தவராகையால், வணங்கி, ஆசனத்தில் அமர்த்தி, முறைப்படி பூஜை
செய்தார்.

251
அவர்களது பாத தீர்த்தத்தை சிரத்தில் தரித்தார்.

ஸனகாதி முனிவர்கள் பரமேஸ்வரனுக்கும் முன் தோன்றியவர்கள்.

தங்கச் சிம்மாசனத்தில் தக்ஷிணாக்னி போல் ப்ரகாசிக்கும் அவர்களைப் பார்த்து


ப்ருது கூறினார்.

மங்களமான திருவுருவுடையவர்களே! யோகிகளுக்கும் கிடைத்தற்கரியது


தங்கள் தரிசனம்‌
. நான் என்ன புண்ணியம் செய்தேனோ?

கண்களுக்கு புலனாகும் இப்பிரபஞ்சத்தின் மஹத் முதலிய தத்வங்களை


எவரும் காண இயலாது. அதுபோல், நீங்கள் எல்லா இடங்களிலும் சுற்றி
வந்தாலும், தங்கள் தரிசனம் அரிதே.

எவருடைய வட்டில்,
ீ சான்றோர்கள், தண்ண ீர், ஆசனம், உபசரிப்பு, நல்மனம்
கொண்ட பணியாள்கள் ஆகியவற்றில் ஏதாவதொன்றையாவது
ஏற்கிறார்களோ அவனே சிறந்த செல்வந்தன்.

எவனது திருமாளிகையில் ஸாதுக்களின் திருவடிகள் பதியுமோ அவனே


செல்வந்தன். அவ்வாறு அந்த இல்லம் தூமையாக்கப்படாவிடில், அது பாம்பு
வாழும் புற்றுக்கு ஒப்பாகும். தாங்கள் தோற்றத்தில் சிறுவயதினர். எனினும்,
மனதை ஒருநிலைப்படுத்தி ப்ரும்மசர்ய விரதம் அனுஷ்டிக்கிறீர்கள்.

நாங்களோ துன்பங்களின் விளைநிலமான இப்புவியில் புலன் இன்பங்களை


பெரிதாகக் கருதி உழல்கிறோம். எங்களுக்கும் நற்கதி கிடைக்க உபாயம்‌
உண்டா?

தாங்கள் எப்போதும் ஆத்மானந்தத்தில் லயித்திருப்பவர்கள். இது நல்லது,


கெட்டது என்ற வேறுபாடு தங்களிடம் இல்லை.

இவ்வுலகில் காட்டுத்தீயில் வெந்து கொண்டிருக்கும் எங்களுக்கு தாங்களே


உற்ற நண்பராவர்.

அந்த நம்பிக்கையில் தங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

இவ்வுலக மக்கள் நன்மை பெறுவதற்கான சிறந்த எளிய வழிதான் என்ன?

இறைவன் நாராயணனே அடியார்க்கு அருள் புரிய எண்ணி தங்களைப் போன்ற


சித்தபுருஷர்கள் உருவில் ஆங்காங்கு சுற்றித் திரிகிறார் என்பதே உண்மை.
தாங்கள் எங்களுக்கு கருணைகூர்ந்து நல்வழியைக் காட்டுங்கள் என்றார்.

ப்ருது பேசியது மிக அழகாகவும், சுருக்கமாகவும், ஆழ்ந்த கருத்துக்கள்


கொண்டதாகவும் இருந்தது கண்டு ஸநத்குமாரர் பெருமகிழ்ச்சி கொண்டு
பேசத் துவங்கினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 141-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 85

252
ப்ருது பேசியதைக் கேட்டதும், மிகவும் மகிழ்ந்தனர் ஸநகாதியர். ஸநத்குமாரர்
பேசத் துவங்கினார்:

அரசே! அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை கிட்டவேண்டும் என்ற


ஆசையால் இவ்வாறு கேட்டீர்கள்.

பகவானிடம் உறுதியான பற்று, தீவிரமான ஈடுபாடு, பகவானைப் பற்றிய


தர்மநெறிகளில் நிற்றல்,
ஆன்மஞானம் பெறத் துடிப்பு, மனதை ஒரு முகப்படுத்துதல், பகவானையே
உபாசித்தல்,
எப்போதும் பகவத் கதைகளைச் செவியாரப் பருகுதல், உலகியல்
செல்வங்களில் ஈடுபாடு கொண்டவரிடம் இணக்கமின்மை,
அவ்வகையான விருப்பங்களில் வெறுப்பு,
அவர்களது கொள்கைகளைத் தாம் ஏற்காதிருத்தல்,
பகவத் கதையமுதம் பருகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் தனித்திருத்தல்,
அஹிம்சை,
துறவு மனப்பான்மை,
பயன் கருதாத யமம்,
நியமம், மற்றும் விரதங்களைக் கைக்கொளல்,
பிறர் மனம் புண்படப் பேசாதிருத்தல்,
தன்னலம் கருதிப் பொருள் சேர்க்காமை,
வெம்மை-குளுமை ஆகிய இரட்டையைப் பொறுத்தல்,
பகவத் குணங்களை வாயாரக் கீ ர்த்தனம் செய்தல்,
ஆகியவற்றால் பகவானிடம் பக்தி பெருகும்.

பின்னர் ஒரு ஸத்குருவை நாடி அடைய வேண்டும்.

அவரது உபதேசத்தால், அஹங்காரமும், வாசனைகளும் அழிந்துவிடும்.

இதனால் மனிதன் நான் செய்கிறேன் என்று நினைக்கும் குணத்திலிருந்து


விடுபடுகிறான். கனவு காணும்போது பார்க்கும் பொருளை, கனவு கலைந்த
நிலையில் காண இயலாது. அதுபோல், ஞானத்தை அடைந்தவனுக்கு இந்த
ப்ரபஞ்சமோ, அதன் சுக துக்கங்களோ தெரிவதில்லை.

இந்த நிலையடைவதற்கு முன்னால், ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும்


இடையே மெல்லிய திரையாக விளங்குவது "நான் செய்கிறேன்" என்ற
எண்ணமே.

அப்போது பார்க்கிறவன், பார்க்கப்படுகிறவன் என்ற வேறுபாடு இருக்கும்.

மனம் என்ற ஒரு எண்ணங்களின் கூட்டுப்பொருள்‌ இருக்கும் வரையே


ஜீவாத்மாவான, தான், புலனுக்குப் புலனாகும் விஷயங்கள், இரண்டுக்கும்
தொடர்பைக் கொடுக்கும் அஹங்காறம் ஆகியவை புலப்படுகின்றன.

மனம் அழிந்துபோனாலோ, அல்லது செயலற்றுப் போனாலோ, வேறுபாடுகள்


முற்றிலுமாக நீங்குகின்றன.

253
ஜலம் அல்லது முகம்‌ பார்க்கும் கண்ணாடி இருக்கும் போது, பொருளும் அதன்‌
ப்ரதிபிம்பமும் தெரியும்.

மனமாகிய கண்ணாடி தன்னிஷ்டம் போல் செயல்பட்டால் அவன் தானல்லாத


பிற பொருள்களைக் காண்கிறான்.

மனக் கண்ணாடி உடைந்தால் வேறுபாடுகள், ப்ரதிபிம்பம் எதுவுமே இல்லை.

உலக விஷயங்களைத் தேடி அலையும்‌ மனது, நுகர்ப்பொருளையே


சிந்திப்பவனின் பகுத்தறிவை அழிக்கிறது.

குளம் முதலிய நீர்நிலைகளின் கரையில் வளரும் புற்கள், குளத்து நீரை


உறிஞ்சிவிடுவது போல், மனம் புத்தியின் நல்லது தீது என்று ஆராய்ந்தறியும்
சக்தியை உறிஞ்சி, தன்னிஷ்டம் போல் ஆட்டுவிக்கிறது. ஆராயும் அறிவு
அழியுமானால், முன்பு நடந்த செயல்களும்‌மறந்து போகின்றன.

ஞாபக சக்தி அழிந்தால் ஞானமும் நாசமடைகிறது. இதைத்தான்


தன்னைத்தான் அழித்தல் என்கிறார்கள்.

ஆன்மா இருப்பதால்தான் அனைத்துப் பொருள்களிலும் அன்பு உண்டாகிறது.


ஆன்மாவிற்கு தன்னாலேயே கேடு விளையுமானால் அதுவே ஆத்மஹத்தி.
இதுவே ஜீவனுக்கு பெரிய இழப்பு. அதாவது ஆன்மாவை அறிவதைத் தவிர
மற்ற அனைத்து இன்பங்களும் வண்.

மேலும் தொடர்ந்து கூறலானார் ஸநத்குமாரர்.

ஸ்ரீமத் பாகவதம் - 142-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 86

சநத்குமாரர் மேலும்‌கூறலானார்:

செல்வம், புலன் நுகர்ப்பொருள்கள், அதனால் வரும் இன்பம் என்று


சிந்தித்திருப்பவன் தனது உயர்ந்த புருஷார்த்தங்களை அழித்துக்கொள்கிறான்.

அவற்றால் பகுத்தறிவும், சிற்றறிவும் மொத்தமாக அழிந்துபோய், அடுத்த


பிறவியில் பகுத்தறிவற்ற ஜீவனாகவும் மரம், செடி, கொடிகளாகவும்
பிறக்கிறான்.

அஞ்ஞானமாகிய இருளைக் கடக்க விரும்புகிறவன், இவ்வுலகியல்‌


இன்பங்களில் மனதைச் செலுத்தாமல்‌இருக்க வேண்டும்.

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்‌


ஆகிய நால்வகைப் புருஷார்த்தங்களையும்‌
அடைய விடாமல் தடுப்பது உலகியல் பற்றே ஆகும்.

நான்கு புருஷார்த்தங்களிலும் சிறந்தது முக்தி இன்பம். மற்ற மூன்றும்


காலத்தால் அழியக்கூடியவை. முக்குணங்களின்‌ பாதிப்புகளால் பிறக்கும்
எப்பிறவியாயினும், காலன் விழுங்குகிறான். அவற்றிற்கு அழிவு உண்டு.

254
அனைத்து ஜீவராசிகளும் இறைவனே என்று அறியுங்கள். இது
அபேதோபாசனை எனப்படும். அந்த பகவான் தான் நான் என்ற வேறுபாடற்ற
எண்ணத்தைக் கொள்ளுங்கள்.

பகவான் நித்யமுக்தன்.
அவருக்கு தளை என்பதே இல்லை.

உள்ளும் புறமும் தூய்மையானவர்.

ப்ரபஞ்சம்‌தோன்றக்‌காரணமானவர்.

கர்மாவினால் ஏற்படும் பிறவிகள் அவருக்கு இல்லை.

பஞ்சபூத தேகமற்றவர். அவர்‌திருமேனி ஸத் சித் ஆனந்தமயமானது.

அவரது மாயைக்கு ஆட்பட்டவர்களுக்கு அவரைப் பற்றி புரியாது.

இருட்டில் பூமாலையைக் கண்டவன் பாம்பு என்று பயம் கொள்கிறான்.

வெளிச்சம் வந்ததும் மாலை என்று தெரிகிறது. பயமும் போய்விட்டது.

ஒருமுறை மாலை என்று தெளிந்தபின் பாம்பு என்ற அச்சமே வராது.

அதுபோல் உண்மை ஞானம் பெற்றவன் மாயையால் பாதிக்கப்படுவதில்லை.

பகவான் வாசுதேவனின் பாதகமலங்களில் கொண்ட பக்தியால், சாதுக்கள்


பந்தத்தினால் ஏற்படும் அஹங்காரத்தை அறுத்தெறிகிறார்கள்.

யோகிகளால் கூட பந்தத்தை பக்தனைப்போல் சுலபமாக அறுத்தெறிய


முடிவதில்லை.

ஐந்து புலன்களும் மனமும் சேர்ந்து ஆறு முதலைகள் போல் சுற்றி சுற்றி


வரும் இந்த ஸம்சாரமாகிய ஆழ்கடலை பக்தர்கள் பகவானின்
சரணகமலமாகிய ஓடத்தைப் பற்றிக்கொண்டு கடந்து விடுகிறார்கள்.

ஆனால் சிலர் அந்த கோரமான கடலை ஓடமின்றி கடக்க முயல்கின்றனர்.

அதற்குக் காரணம் கர்மம், யோகம்‌முதலிய சாதனங்கள்.

அவை எளிதில் கடக்க உதவி செய்யாது.

நிறைய கஷ்டங்கள் நிரம்பிய பாதைகள் அவை.

ஆகவே, அனைவராலும் எளிதில் சேவித்து வணங்கக்கூடிய பகவானின்


திருப்பாத கமலங்களை தெப்பமாகப் பற்றிக்கொண்டு இறைநாமத்தினால் இந்த
சம்சாரக் கடலைத் தாண்டுங்கள் என்றார்.

255
இவற்றைக்‌
கேட்டதும் ப்ருது உணர்ச்சி மிகுதியால் தழுதழுத்தார். பின்னர்
பேசலானார்:

முன்னர் கருணைக்கடலான பகவான் நேரில் வந்து காட்சியளித்தார்.


பகவானான தாங்களோ ஞானத்தை மொத்தமாக வழங்க நேரில்‌
வந்திருக்கிறீர்கள்.

பகவானின் திருவருளை முழுவதுமாக எனக்குக் கிடைக்கும் படி செய்தீர்கள்.

இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?

(அனைத்துமே இறைவன் படைத்ததாகையால், அவன் கொடுத்ததை


அவனுக்கே தக்ஷிணையாகக் கொடுப்பது அழகில்லை).

என் சொந்தம், சொத்துக்கள், அரண்மனை, ராஜ்யம் சேனைகள், பூமி,


பொக்கிஷங்கள் அனைத்தும்‌தங்களுக்கே சமர்ப்பணம்.

பகவானை அடையும் சன்மார்கம் இதுதான் என்று காட்டித்தருபவர்க்கு


கைம்மாறு செய்துவிடமுடியும் என்று நினைத்தல் நகைப்புக்குரியது. இரு கரம்‌
கூப்பி வணங்குவதைத் தவிர வேறெதுவும் செய்துவிடமுடியாது
என்றார் ப்ருது.

அதன் பின் சனகாதியர் ப்ருதுவிற்கு அனுக்ரஹம் செய்துவிட்டு ஆகாய


மார்கமாய்ச் சென்றனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 143-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 87

அரசன் ப்ருது தன் வாழ்க்கையை பகவத் அர்ப்பணமாகவே வாழ்ந்தார். ஸ்ரீ


ராமச்சந்திர மூர்த்தியைப் போல் அரசாட்சி நடத்தினார்.

பூபதி என்ற பெயர் பூமியின் கணவன் என்பதாக அரசர்களுக்கு


வழங்கப்படுகிறது.

ப்ருது பூமியைத் தன்‌மகளாக ஏற்றதால், அனைவராலும் ஏகபத்னி விரதன்


என்று கொண்டாடப்பட்டார்.

ராஜா என்னும் பெயருக்கேற்ப மக்களின் மனம் மகிழ்விக்கும் சந்திரனாக


விளங்கினார்.

மக்கள் அரசனை தெய்வமாகப்‌போற்றினர். தன் கடமைகள் அனைத்தையும்


வழுவாது ஆற்றி வந்த அவருக்கு ஐந்து மகன்கள்‌பிறந்தனர்.

விஜிதாச்வன், தூம்ரகேசன், ஹர்யக்ஷன், திரவிணன், விருகன் என்பது


அவர்களின் பெயர்கள்.

மக்களின் தலைவர், தான் தோற்றுவித்த அன்னபானங்கள் அனைத்தையும்


பன்மடங்காக்கியவர்; அசையும் அசையாப் பொருள்கள் அனைத்திற்கும் வாழ

256
வழி செய்தவர்; சாதுக்களின் அறநெறியில் தான் ஒழுகியதோடு, மக்களையும்
நல்வழியில் நிறுத்தியவர். தன் கடமைகள் அனைத்தும் முடிந்து விட்டதாய்
உணர்ந்தார்.

முக்தி நெறிக்கான முயற்சியை மேற்கொள்ள எண்ணி, தன் மகனிடம்


அரசாட்சியை ஒப்படைத்தார்.

பிரிவாற்றாமையால் கதறி அழும் மக்களையும் சுற்றத்தையும் விடுத்து


மனைவியுடன் வனம் ஏகினார். வானப்ரஸ்த ஆசிரமத்திற்கான தர்மங்களை
தீவிரமாகப் பின்பற்றினார்.

காய், கனி, கிழங்குகளை உண்டு தவம்‌செய்தவர், பின்னர் தானாக உதிர்ந்த


சருகுகளை உண்டார்.

பின்னர் சில மாதங்களில் பதினைந்து நாட்களுக்கொரு முறை நீரை மட்டும்


அருந்தியும், பின்னர் காற்றையே உணவாகக் கொண்டும் தவம்‌இயற்றினார்.

கடும் கோடைக்காலத்தில் பஞ்சாக்னி நடுவிலும், மழைக்காலத்தில் நனைந்து


கொண்டும், பனிக்காலத்தில், நீர்நிலையில் கழுத்தளவு நீரில்‌நின்றும், மற்ற
நேரங்களில் மண் தரையில் எடுத்துக் கொண்டும் முனிவர்களது வாழ்கை
நெறியில் தவமியற்றினார்.

தட்பவெப்ப நிலைகளைப் பொறுத்து, மௌனவிரதம் ஏற்று, ப்ராணாயாமத்தால்


பொறிகளை அடக்கினார். மனத்தூய்மை பெற்றார். இயல்பாக அவர் மனதில்
ஸநத்குமாரர் உபதேசம் செய்தபடி ஸ்ரீமன் நாராயணனின் பாததாமரைகளை
எழுந்தருளச்செய்து பக்தி செய்தார்.

பகவானுக்கு பிரியமான தர்மங்களை அனுஷ்டித்ததால் உறுதியான பக்தி


ஏற்பட்டது. பொங்கியெழுந்த பக்தி வெள்ளத்தால் தளைகள் அனைத்தும்
அறுபட்டன.

இவ்வுடலே நான் என்ற எண்ணம் முழுதுமாய் நீங்கி ஞானம் பெற்றார். பின்னர்


ஆசனவாயில் குதிகாலை அழுத்தி, மூச்சுக்காற்றை மூலாதாரத்திலிருந்து
மேலெழுப்பி ஒவ்வொரு இடமாக தொப்புள், மார்பு, தொண்டைக்குழி,
புருவமத்தி ஆகியவற்றில் நகர்த்தி, உச்சந்தலையில் உள்ள ப்ரும்மரந்திரத்தில்
நிறுத்தினார்.

ஆசைகள் அற்ற நிலையில், பஞ்சபூதங்களால் ஆன உடலினின்று அவற்றைப்


பிரித்து அந்தந்த மஹாபூதங்களில் கலந்தார்.

ப்ராணவாயுவை காற்றிலும், பௌதிக உடலை பூமியில், உடலிலுள்ள நீரை


நீரிலும், உடலின் வெம்மையை அக்னியிலும் கலக்கச் செய்து அக்கணமே
உடலின் உருவத்தைக் கலைத்தார்.

அவரது மனைவியான அர்ச்சிஸ், மஹா பதிவ்ரதை. மஹாலக்ஷ்மி ஸ்ரீமன்


நாராயணனைத் தொடர்வதுபோல் தொடர்ந்து பணிவிடை செய்தவள்.

கணவர் பின்பற்றிய அத்தனை நெறிகளையும் பின்பற்றியவள்.

257
உடல் மெலிந்து களைத்தவள்.

கணவனுக்குச் செய்ய வேண்டிய ஈமச்சடங்குகளை முறைப்படி செய்து


தர்ப்பணமும் செய்தாள்.

பின்னர் சிதை மூட்டி கணவனின் திருவடிகளை தியானித்து அனைத்து


தேவர்களையும் வணங்கி சிதையில் புகுந்தாள்.

இதைக் கண்டு ஆயிரமாயிரம் தேவர்கள் வந்து பூமாரி பொழிந்தனர்.


தேவர்களின் மனைவியர் அர்ச்சிஸைப் போற்றிப் புகழ்ந்தனர். அவள்
மேலுலகம் செல்வதை அவர்கள் அனைவரும் கண்டனர்.

ஸ்ரீமத் பாகவதம் - 144-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 88

மைத்ரேயர் ப்ருதுவின் கதையை முழுமையாகக் கூறிவிட்டு தொடர்ந்தார்:

"மிகவும் புனிதமான ப்ருதுவின் கதையைக் கேட்பவர், படிப்பவர், பிறர் கேட்கச்


சொல்பவர் ஆகியோர் ப்ருது மன்னர் அடைந்த உயர்ந்த உலகை, அதாவது
வைகுண்டத்தை அடைவர். இதைப் படிக்கும் அந்தணன் ப்ரும்மதேஜஸை
அடைவான். க்ஷத்ரியன் அரசர்க்கரசனாவான். வைஸ்யன் மிகச் சிறந்த
வாணிபத்தையும் செல்வத்தையும் அடைவான். நான்காம் வர்ணத்தவன்
பெரும்பேறு பெற்று நீங்காத செல்வத்தையும், பல பெருமைகளையும்
அடைவான்."

"மிகுந்த ஈடுபாட்டுடன் இக்கதையைக் கேட்பவர்க்கு மக்கட்செல்வம்


உண்டாகும். தரித்திரன் பெரும் செல்வந்தனாவான். யாரென்று அறியாதவன்
பெரும் புகழை அடைவான். அறிவிலி ஞானியாவான்."

"நான்கு விதமான புருஷார்த்தங்களையும் வழங்கக்கூடியது ப்ருதுவின்


சரித்ரம்."

"ப்ருதுவின் சரித்திரத்தைக் கேட்டுவிட்டு ஒரு முயற்சியில் ஈடுபடுவோர்க்கு


வெற்றி நிச்சயம்."

"அனைவரும் கீ ழ்ப்படிவர்."

"பகவானின் சரணங்களில் ஈடு இணையற்ற பக்தி பெருகச் செய்து சம்சார


சாகரத்தைக் கடக்கச் செய்வது இச்சரித்திரம்" என்றார்.

ப்ருதுவிற்குப் பின் அவரது மகன் விஜிதாச்வன் பெரும்புகழ் பெற்ற மன்னனாக


விளங்கினான். தம்பிகளிடம் மிகுந்த அன்பு கொண்ட அவன்,
நாற்றிசைகளுக்கும் அவர்களை அதிபதிகளாக்கினான்.

ஹிரண்யாக்ஷனுக்கு கிழக்கையும், தூம்ரகேசரனுக்கு தெற்கையும்,


விருகனுக்கு மேற்கையும், நான்காவதான வடதிசை அரசை திரவிணனுக்கும்
அளித்தான்.

258
மறைந்து வாழும் அந்தர்தான வித்தையை இந்திரனிடமிருந்து கற்று,
அந்தர்தானன் என்று பெயர் பெற்றான். சிகண்டினி என்ற பெண்ணை மணந்து
தன்னைப்போலவே மூன்று புதல்வர்களைப் பெற்றான்.

பின்னர் நபஸ்வதீ என்பவளை மணந்து ஹவிர்தானன் என்ற மகனைப்


பெற்றான்.

அவன் மிகவும் மென்மையான மனம் படைத்தவன். தன் தந்தையின் வேள்விக்


குதிரைகளை இந்திரன்தான் கவர்ந்தான் என்றறிந்தும் அவனைக் கொல்லாமல்
விட்டான்.

கப்பம் வாங்குதல், தண்டனையளித்தல் ஆகிய அரசுப் பணிகளை


கொடுமைகளாக எண்ணினான். தீர்க ஸத்ரம் என்ற வெகுநாட்கள் செய்யும்
வேள்விக்கு சங்கல்பம் செய்துகொண்டு அரசுப் பொறுப்பை விடுத்தான்.

ஆன்மஞானம் கைவரப் பெற்று ஸத்ரயாகத்திலேயே ஹம்ஸ வடிவினனான


பகவானை தீவிர ஸமாதி யோகத்தால் ஆராதனை செய்து பகவானின்
லோகத்தை அடைந்தான்.

ஹவிர்தானனின் மனைவி பர்ஹிஷதன், கயன், சுக்லன், கிருஷ்ணன்,


ஸத்யன், ஜிதவிரதன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றாள்.

ஹவிர்தானனின் மகன் பர்ஹிஷதன் மிகவும் சிறப்பு வாய்ந்தவன். நிறைய


வேள்விகள் செய்தான். யோக மார்கத்திலும் சிறந்து விளங்கினான். சிறந்த
பிரஜாபதியாக இருந்தான்.

அவன் ஒரே இடத்தில் இல்லாமல் பூமியின் பல்வேறு இடங்களில் யாகம்


செய்ததால், பூமி முழுவதும் கிழக்கு நுனியாக பரப்பப்பட்ட தர்பைகளால்
மூடப் பட்டிருந்தது.

ப்ராசீனபர்ஹிஸ் என்றழைக்கப்பட்ட பர்ஹிஷதன் ப்ரும்மதேவரின் சொற்படி


சமுத்ரராஜனின் மகளான சதத்ருதியை மணந்தான். பதினைந்தே வயது
நிரம்பிய அவள் அதிரூபசுந்தரியாய் விளங்கினாள். திருமணத்தில் அனைத்து
ஆபரணங்களும் அணிந்து திருமண மண்டபத்தில் வலம் வரும்போது
அவளைக் கண்டு அக்னி தேவன் உள்பட அனைத்து தேவர்களும்,
தன்வசமிழந்து காமுற்றனர்.

ப்ராசீனபர்ஹிஸுக்கு சதத்ருதியிடம் பத்து பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள்


அனைவரும் ப்ரசேதஸ் என்றழக்கப்பட்டனர். ஒரே மாதிரியான தர்மங்களும்,
அனுஷ்டானங்களும் உடையவர்கள்.

அவர்களை ப்ரஜைகளை ச்ருஷ்டிக்கும்படி ப்ராசீனபர்ஹிஸ் கூறவே, அவர்கள்


அதை மறுத்து தவம் செய்யப் புறப்பட்டனர்.

அவர்களை பரமேஸ்வரன் தடுத்தாட்கொண்டு உபதேசம்‌செய்தார்.

உடனே, விதுரர் இடைமறித்துக்‌கேட்டார்.

259
"ப்ரும்மரிஷியே! சிவதரிசனம் மிகவும் அரிதானது."

"சங்கரரோ‌ஆத்மாராமர். இவ்வுலகைக் காக்கும் பொருட்டு சக்தியுடன் உலா


வருகிறார். ப்ரசேதஸ்கள் எங்ஙனம் அவரது தரிசனம்‌பெற்றனர்? விவரமாகக்
கூறுங்கள்‌
" என்றார்.

ஸ்ரீமத் பாகவதம் - 145-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 89

மைத்ரேயர் தொடர்ந்து கூறலானார்:

ப்ரசேதஸ்கள் தந்தையின் மீ து மிகுந்த மதிப்பு கொண்டவர்களாயினும்,


சான்றோரின் இயல்பின்படி தவத்திலேயே மனம் சென்றது.

அவர்கள் தவம் செய்ய விரும்பி மேற்றிசை நோக்கிச் சென்றனர். அங்கு கடல்


போன்ற ஒரு பெரிய ஏரியைக் கண்டனர். அங்குள்ள நீர் சான்றோரின் இதயம்
போல் தூய்மையாக இருந்தது.

நீர் வாழ்வன துள்ளி விளையாடின.

நீலத்தாமரை, செந்தாமரை, இரவில் மலரும்‌ஆம்பல், மாலையில் மலரும்‌


கல்ஹாரம் மற்றும் இந்தீவரம் எனப்படும் கருநெய்தற்பூ முதலிய பல்வேறு
மலர்வகைகள் பூத்துக் குலுங்கின.

கரைகளில் அன்னப்பறவை, ஸாரஸம், சக்ரவாகம், காரண்டவம் முதலிய


நீர்ப்பறவைகள் கூவி விளையாடின.

நாற்கரைகளிலும் பலவிதமான மரங்களும், செடி கொடிகளும்


தழைத்திருந்தன. அவற்றின் மேல் மதம் பிடித்த வண்டுகள்‌பாடின.

தாமரை மலர்களின் மகரந்தப் பொடிகள் காற்றினால் பறந்தன. அது ஏதோ


திருவிழா நடப்பது போல் தோற்றமளித்தது.

அப்போது பலவிதமான வாத்யங்களின் இசை கேட்டது.

அதைக்கேட்டு ஆச்சர்யமுற்ற அரச குமாரர்கள் இசை வந்த திசை நோக்கித்


திரும்பினர்.

அப்போது தேவாதி தேவரான பரமேஸ்வரன் பரிவாரங்களுடன் அந்த


நீர்நிலையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தார்.

அவரது திருமேனி உருக்கி வார்த்த தங்கம் போல் பளபளத்தது.

கழுத்தோ நீலம். செவ்வரியோடிய திருக்கண்கள். கந்தர்வர்கள் அவர் புகழைப்


பாடிக் கொண்டிருந்தனர்.

260
அனைவர்க்கும் அருள் புரிவதையே தன் மகிழ்ச்சியாய்க் கொண்டவர்.
அவரைக் கண்டதும் மிகுந்த குதூஹலத்துடன் அவரது திருவடிகளில்
வழ்ந்தனர்
ீ ப்ரசேதஸர்கள்.

அறநெறி தவறாத அந்த அரச குமாரர்களைக் கண்டு பரமேஸ்வரன் மிகவும்


மகிழ்ந்து கூறலானார்.

நீங்கள் பர்ஹிஷதனின் புதல்வர்கள்தானே? உங்களுக்கு அருள் செய்யவே


இப்போது தரிசனம் தந்தேன்.

எவன் ப்ரக்ருதி மற்றும் ஜீவனைக் காட்டிலும் மேலான பகவான் நாராயணனை


அடைக்கலமாகப் பற்றியவனோ, அவனே எனக்கு மிகவும் ப்ரியமானவன்.

அறநெறி தவறாது கடமைகளை ஆற்றுபவன் நூறு பிறவிகளில் ப்ரும்ம


பதவியை அடைகிறான்.

அதற்கு மேல் பயனில் பற்றின்றி கர்மங்களைச் செய்பவன் என்னை


அடைகிறான். நானும்‌ மற்ற தேவர்களும், எங்கள்‌ லோகத்தை
அடைந்தவர்களும் எங்கள் பதவிக்காலம்‌ முடியும் தருவாயில் பகவான்
நாராயணனை அடைகிறோம். ஆனால், பகவானது அடியாரோ அப்பிறவியின்
முடிவிலேயே நேரடியாக பரமபதத்தை அடைகின்றார்.

நீங்கள்‌ பகவானது பக்தர்களாகையால் எனக்கும்‌மிகவும் பிரியமானவர்கள்.


அதுபோல் பகவத் பக்தர்களுக்கும் என்னைவிடப்‌ பிரியமானவர் இல்லை.
இப்போது பவித்ரமானதும், முக்தியளிக்கக் கூடியதுமான ஒரு ஸ்லோகத்தை
உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். அதை நீங்கள் ஒன்றுபட்ட மனதுடன்‌
தனிமையில் ஜபம் செய்து வாருங்கள்
என்று சொல்லி ப்ரும்ம தத்வத்தை விளக்கும் நாற்பத்திஏழு ஸ்லோகங்களை
ப்ரசேதஸர்களுக்கு பரமேஸ்வரன் உபதேசம் செய்து அருளினார்.

இத்தொகுப்பு ருத்ரகீ தம் எனப்படுகிறது.

261
ஸ்ரீ மத் பாகவதம் - 146-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 90

ருத்ரகீ தம்-பரமேஸ்வரனால் ப்ரசேதஸர்களுக்கு உபதேசம்‌


செய்யப்பட்டது.

1. இறைவா! தங்களுக்கு வெற்றி உண்டாகட்டும். தங்களுடைய பெருமைகள்,


ஆன்ம ஸ்வரூபம் அறிந்த ஞானியர்க்கு ஆனந்தத்தை அளிப்பது. நன்மைகளை
வழங்குவது. எனக்கும் அந்த அந்த ஆனந்தத்தை அருள்வராக! ீ எல்லா
‌ஜவ
ீ ராசிகளிலும் ஆத்மஸ்வரூபமாக விளங்கும்‌தங்களுக்கு வணக்கம்.

2. அனைத்து உலகங்களுக்கும் ஆதிகாரணனான பத்மநாபர் தாங்கள். பூத


ஸூக்ஷ்மங்களுக்கும், பொறிபுலன்களுக்கும் தலைவர். நீக்கமற எங்கும்
நிறையும்‌ வாசுதேவர். மாறுதலற்றவர். தானாக ஒளிர்பவர். தங்களுக்கு
நமஸ்காரம்.

3. தாங்கள் அறிவுக்குப் புலப்படாதவர். நுட்பமானவர். எல்லையற்றவர்.


மூச்சுக்காற்றாலேயே அகில ‌உலகங்களையும் அழிக்கும் ஸங்கர்ஷணர் நீரே.
உயர்ந்த ஞான தேவதையும், புத்தியின் தேவதையுமான ப்ரத்யும்னனும்
தாங்களே. தங்களுக்கு வணக்கம்.

4. பொறிபுலன்களின் தலைவனும், மஹத் தத்வத்தின் தேவதையுமான


அநிருத்தனும் நீரே. சுடரொளியை உலகெங்கும் பரப்பும் சூரியனும் நீரே.
பரிபூரணரான தாங்கள் குறைவதுமில்லை. நிறைவதுமில்லை. தங்களை
திரும்பத் திரும்ப வணங்குகிறேன்.

5. ஸ்வர்கம், மோக்ஷம் இரண்டிற்கும் ஒரே வழி தாங்கள்தான். தூய்மையான


சான்றோரின் ஹ்ருதயகமலத்தில்‌வசிப்பவர். வேள்வித்தீயாக விளங்குபவர்.
வேள்வியான கர்மங்களுக்கு சாதனமும் தாங்களே. தங்களுக்கு நமஸ்காரம்.

6. பித்ரு தேவதைகளுக்கு அன்னரூபமாகவும், தேவர்களுக்குரிய


அன்னமாகவும், மூன்று வேதங்களின் ஸ்வரூபமாகவும் விளங்குகிறீர்.
அனைத்து ஜீவராசிகளையும்‌ மகிழ்விக்கும் ஜலஸ்வரூபமான தங்களுக்கு
நமஸ்காரம்.

7. ஒலியை குணமாகக் கொண்டு அகம், புறம் என்ற வேறுபாடு காட்டும் ஆகாய


ஸ்வரூபம்‌ தாங்கள். அனைத்து புண்ய லோகங்களும் தாங்களே. திரும்பத்
திரும்ப தங்களை வணங்குகிறேன்.

8. பித்ரு லோகத்தை பெற்றுத்தரும் ப்ரவ்ருத்தி தர்மமும், ஸ்வர்கம் முதலிய


தேவலோகங்களை அளிக்கும் நிவ்ருத்தி தர்மமும் தாங்களே. மறவழியின்
பயனான துன்பத்தைத் தரும் ம்ருத்யுவும் தாங்களே. தங்களை
வணங்குகிறேன்.

9. அனைத்து செயல்களுக்கும் உண்டான பலன்களை அளிப்பவர் நீரே!


அனைத்தும் அறிந்தவர். தர்மஸ்வரூபம், அனைவரையும் தன்பால்
கவர்ந்திழுப்பவர். தடைகளற்றவர். ஞான வடிவினர். தோற்றமற்றவர். ஞானம்,
யோகம் ஆகியவற்றின் தலைவர். தங்களை வணங்குகிறேன்.

262
10. இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்தி ஆகிய சக்திகளின் ரூபமானவர்.
படைத்து, காத்து, அழிப்பவரும் தாங்களே! பர்ஜன்யன் என்ற மேக வடிவாய்
இருப்பவர். அஹங்கார தத்வமான ருத்ரனும் தாங்களே. அறிவு, செயல்,
இரண்டுமாக இருப்பவர். தங்களிடமிருந்தே அனைத்து வகை ஒலிகளும்
தோன்றின. தங்களை வணங்குகிறேன்.

11. ப்ரபோ! அடியார்கள்‌ மிகவும் அன்போடு பூஜிக்கும் தங்களது அழகிய


திருமேனியை எங்களுக்குக் காட்டி அருளுங்கள். அத்திருமேனி கண்டதுமே,
அத்தனை இந்திரியங்களையும்‌மகிழ்விக்குமே.

12 - 19. மழைக்கால மேகம் போல் கறுத்தது, அனைத்து அழகுகளுக்கும்


கொள்கலன், நீண்ட கைகள், மனங்கவர் திருமுக மண்டலம், செந்தாமரைக்
கண்கள், செம்பவளவாய், வளைந்த புருவம், உயர்ந்த நாசி, முத்துப்பற்கள்,
வழுவழுப்பான கன்னங்கள், அழகான காதுகள், அன்பு சிந்தும் புன்முறுவல்,
கருணைவழியும் கடைக்கண் நோக்கு, சுருண்டு நெளிந்த முன் நெற்றிக் கேசம்,
தாமரை போன்ற பாதங்கள், அரையில் பொன்னாடை, அசையும்‌
குண்டலங்கள், சூரியன் போல் ஒளிரும் மணிமகுடம், தோள்வளை,
முத்துஹாரம், கால்களில் நூபுரங்கள், அரையில் தங்க ஒட்டியாணம்,
திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கதை, பத்மம், கழுத்தில் வனமாலை,
திருமார்பில் கௌஸ்துபம், சிங்கம் போல் நிமிர்ந்த கழுத்து,
திருமங்கையுடைத் திருமார்பம், மூச்சு விடுவதால் அசையும் மூன்று
மடிப்புகள் கொண்ட திருவயிறு, ப்ரளயத்தில் தன்னுள் உலகையே ஒடுக்குவது
போன்ற சுழித்த ஆழ்ந்த தொப்புள், சமமான முழங்கால்கள், மன அழுக்கைத்
துடைக்கும் நகங்களின் ஒளி, சரத்காலத் தாமரைபோல் திருவடிகள்
ஆகியவற்றோடு விளங்குவதும், பக்தர்களின் துயரைத் துடைப்பதுமான
திருமேனிக் காட்சி எங்களுக்கு வேண்டும்‌ . தன்னை வந்தடையும் வழியைக்
காட்டித் தரும் நீங்களே எங்கள் ஞான குரு! தங்களுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீமத் பாகவதம் - 147-விதுர மைத்ரேய ஸம்வாதம் -


91-ருத்ரகீ தம் - 2

20. மனத்தூய்மை வேண்டுபவர்கள் எப்போதும் தியானம் செய்யவேண்டிய


மனோஹர ரூபம்‌இதுவே. தத்தம் கடமைகளையும் அனுஷ்டானங்களையும்
தவறாது பின்பற்றுபவர்க்கு பக்தியோகமே சிறந்தது.

21. இந்திராதி தேவர்களும், லோகபாலர்களும் தங்களை அடையவே


விரும்புகிறார்கள். ஆத்மஞானிகளும் விரும்புவது தங்கள் சரணமே. இறைவா!
தங்களையே நம்பும் அடியவர்கள்தான் தம்மை சுலபமாக அடைய இயலும்.

22. தர்மங்களை அனுஷ்டிப்பதால் மட்டும் தங்களை‌ மகிழ்விக்க இயலாது.


பக்தியற்ற கர்மயோகிகள் தங்களை அடைவார்கள் என்பதும் நிச்சயமில்லை.
ஏகாந்த பக்தி உள்ளவன் தங்கள் சரணத்தைத் தவிர எவ்வித உயர்ந்த
லோகத்தையும் விரும்பான் (விரும்ப மாட்டான்).

263
23. தனது புருவங்களை நெறிப்பதாலேயே ப்ரபஞ்சத்தை அழிக்கும்
மரணதேவன் தங்களிடம் சரண் புகுந்தவனின் நிழலைக்கூடத் தொடமுடியாது.
தங்களது அடியார்களுக்கு எமபயமில்லை.

24. பகவானின் திருவடிகளில் பக்தி செய்யும் அடியார்களின் சங்கம் அரைநொடி


கிடைத்தாலும் அதற்கிணையாக ஸ்வர்காதி புண்ய லோகத்தையோ
முக்தியின்பத்தையோ இணையாகக் கருதமாட்டேன். அவ்வாறிருக்க உலக
இன்பங்களை எவரேனும் விரும்புவாரா?

25. தங்கள் சரணம், பாவங்கள் அனைத்தையும் ஒரு நொடியில் போக்குகிறது.


அந்த சரண கமலங்களின் புகழ் பாடுவதால் மன அழுக்கு தொலைகிறது.
தங்கள் சரண சம்பந்தத்தால் அன்றோ கங்கை புற அழுக்கையும்
பாவங்களையும் போக்குகிறது?

இவ்வாறு மன அழுக்கு நீங்கப்பெற்ற சாதுக்களின் இணக்கம் எங்களுக்கு


எப்போதும்‌கிடைக்க வேண்டும்.

26. எந்த சாதகனுடைய சித்தம் உலகியல்‌ இன்பங்களை விடுத்து,


அஞ்ஞானத்தில் மயங்குவதில்லையோ, அவன் வெகு எளிதில் தங்கள்‌
தரிசனத்தைப்‌பெறுகிறான்.

27. பெருமானே! தாங்களே பரப்ரும்மம். தங்களிடமிருந்து தோன்றியதே இந்த


ப்ரபஞ்சம். ப்ரபஞ்சமாகக் காணப்படுபவரும் நீரே. தங்களிடம் அடங்கும்
இவ்வுலகில் தாங்கள் எங்கும்‌பரவியிருக்கிறீர். தாங்கள் ஒளிமயமானவர்.

28. இறைவா! தங்கள்‌ மாயைக்குத்தான் எத்தனை வடிவங்கள்!


அதைக்கொண்டே இவ்வுலகைப் படைத்து, பரிபாலித்து அழிக்கவும் செய்கிறீர்.
இவையனைத்தும் கண்ணுக்கு உண்மைபோல் தோன்றினாலும் தங்களிடம்
எந்த மாறுதலும்‌ இல்லை. ஜீவராசிகளிடம்‌ பல்வேறு வேறுபாடுகள்
தோற்றமளிக்கின்றன. ஆனால் அனைத்தும் தாங்களே. தங்களிடம் மாயை
செல்லாக் காசு. தாங்களே பூரண ஸ்வதந்த்ரர்.

29. பஞ்சபூதங்கள் பொறி, புலன்கள் ஆகியவற்றை வழிநடத்திச்


செல்வதிலிருந்து தாங்கள் மிகவும் ஸூக்ஷ்மமானவர் என்பது புரிகிறது.
தங்களை அடையத் துடிக்கும் ஒருவன் பல்வேறு செயல்கள் (வேதம் ஓதுதல்,
விரதம் இருத்தல், தியானம் செய்தல், அன்னதானம் செய்தல், குளங்கள்
வெட்டுதல்) வாயிலாக தங்களது ஸகுண ஸ்வரூபத்தை மிகுந்த
ஈடுபாட்டுடன்‌
பூஜிக்கிறான். உண்மையில் அவனே வேதத்தி்ன் கருத்தை
அறிந்தவன்.

30. ஈடு இணையற்ற ஆதி புருஷர் தாங்கள். படைப்பிற்கு முன் மாயாசக்தி


தங்களிடமே அடங்கியிருந்தது. பின், அதனினின்றும் ஸத்வம், ரஜஸ், தமஸ்
என்ற முக்குண வேறுபாடுகள் தோன்றின. அவற்றிலிருந்து பஞ்ச மஹா
பூதங்களும், தேவர்களும், ரிஷிகளும், இந்த ப்ரபஞ்சமும் தோன்றின.

31. பின்னர், தங்களது மாயா சக்தியால் தோன்றிய நால்வகைப் பிறப்புகளின்


உடல்களிலும் தங்களது ஓர் அம்சத்துடன் உட்புகுந்தீர்கள். ஆகவேதான்

264
உள்ளிருக்கும் ஜீவனை அனைவரும் பகவான் என்றறிகின்றனர். ஜீவன்
உடலில் இருந்து கொண்டு உலக சுகங்களை அனுபவிக்கிறான்.

32. ப்ரபோ! தங்கள் தத்துவத்தை நேருக்கு நேர் கண்டவர் எவருமிலர். ஸ்தூல


ஸூக்ஷ்மங்களாக விளங்கும் பொருள்களால், தோற்றுவித்த தங்களை
ஊகித்தறியமுடியும். ஊழிக்காலத்தில் காலரூபியான தாங்கள்‌ பஞ்ச
மஹாபூதங்களை ஒன்றுக்கொன்று மோதவிட்டு அனைத்து உலகங்களையும்
அழிக்கிறீர்கள்.

ஸ்ரீமத் பாகவதம் - 148-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 92

33. பகவானே! மாயையால் மயங்கிய ஜீவன் ஒவ்வொரு நிமிடத்தையும்‌


குழப்பத்திலேயே கழிக்கிறான். உலக சுகங்களில் பேராசை கொள்கிறான்.
இறுதிக்காலம் பற்றி நினைப்பதேயில்லை. தாங்களோ எப்போதும் விழிப்புடன்
இருப்பவர். பசியுடன் இருக்கும் பாம்பு திடீரெனப் பாய்ந்து எலியைப்
பிடிப்பதுபோல் காலரூபமாய் நின்று திடீரென்று யமனின் வாயிலாக உயிரைப்
பறிக்கிறீர்.

34. இவ்வுடல் என்றோ ஒருநாள் அழியக்கூடியதே. தங்களைத் துதிக்காமல்


காலத்தை வணடிப்பவனுடைய
ீ ஆயுள் சீக்கிரம் கரைகிறது. சற்றேனும்
உண்மை புரிந்தவனும் தங்கள் திருவடிகளை விடுவானா?

35. காலரூபனான ருத்ரனுக்கு பயந்து அனைவரும் கலங்கி நிற்கின்றனர். இந்த


உண்மையறிந்த எங்களுக்கு நீரே புகல்.

36. அரசகுமாரர்களே ! இந்த ருத்ர கீ தத்தை நீங்கள் ஒருமனத்தோடு விடாமல்


ஜபியுங்கள்.

37. அனைத்து ஜீவராசிகளிலும் விளங்கும் ஸ்ரீ ஹரியை உங்கள் ஹ்ருதய


குகையில் வைத்து பூஜை செய்யுங்கள்.

38. முனிவர்களுடைய விரதத்தை ஏற்று நம்பிக்கையுடன் பயிற்சி செய்யுங்கள்.

39. ப்ரும்மா தன் படைப்பைத் துவங்கியபோது, தன் புதல்வர்களுக்கும், ப்ருகு


முதலிய ரிஷிகளுக்கும், எனக்கும் இந்த கீ தத்தைக் கூறினார்.

40. ப்ரஜாபதிகளான நாங்கள் இந்த கீ தத்தை ஓதி, அஞ்ஞானம் நீங்கப்பெற்று


பலவித படைப்புகளைச் செய்தோம்.

41. இப்போதும், "இறைவனே தனக்கு அனைத்தும்" என்ற நம்பிக்கையுடன்


ஜபம் செய்பவர்கள் விரைவில் அனைத்து நலன்களையும் பெறுவர்.

42 - 47. முக்தியின்பம் தரும் ஞானமே சிறந்தது. பகவானை ஆராதிப்பது


கடினம்தான். இந்த துதியை சிரத்தையுடன் படிப்பவன் எளிதில் பகவானை
மகிழ்விக்கிறான். நன்மையளிக்கும் அனைத்து சாதனங்களாலும்
அடையப்படுபவர் பகவான் ஒருவரே. இதை ஜபிப்பவனுக்கு விரும்புவது

265
கிடைக்கும். கைகூப்பி சிரத்தையுடன் கேட்பவனும் சொல்பவனும் எல்லாத்
தளைகளிலிருந்தும் விடுபடுகிறார்கள்.

அரசகுமாரர்களே! இந்த ருத்ரகீ தத்தை ஜபம் செய்து கடுந்தவம் செய்யுங்கள்.


தவத்தின் முடிவில் எல்லா நன்மையும்‌கிடைக்கப் பெறுவர்கள்!

என்று பரமேஸ்வரன் கூறிவிட்டு அந்தர்தானம் ஆனார்.

ருத்ரகீ தத்தை ப்ரசேதஸர்கள் பத்தாயிரம் வருடங்கள் நீரில் நின்ற வண்ணம்


ஜபித்து தவம் இயற்றினர்.

ஸ்ரீமத் பாகவதம் - 149-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 93

ப்ரசேதஸர்கள் தவம்‌ செய்யும் காலத்தில் அவர்களின் தந்தையான


ப்ராசீனபர்ஹிஸின் மனம் கர்மங்களைச் செய்வதிலேயே ஈடுபாடு கொண்டது.
அப்போது நாரதர் அவர் முன் தோன்றி புரஞ்சனன் என்பவனின் சரித்திரத்தைக்
கூறினார்.

ஸ்ரீமத் பாகவதத்தில் ஐந்து அத்யாயங்களில் புரஞ்சனோபாக்யானம்


சொல்லப்படுகிறது. அதன் பிறகு மீ ண்டும் விதுரர் கேள்வியெழுப்பவே
ப்ரசேதஸர்களின் கதை தொடர்கிறது. நாம் இப்போது ப்ரசேதஸர்களின்
கதையை பார்த்துவிட்டுப் பிறகு புரஞ்சனனின் கதையை சுருக்கமாகப்
பார்க்கலாம்.

விதுரர் கேட்டார்:

ப்ரசேதஸர்கள் ருத்ரகீ தத்தை ஜபித்து நிச்சயம் பகவானின் திருவடியை


அடைந்திருப்பார்கள். அக்கதையை விரிவாகக் கூறுங்கள் என்றார். ஐந்து
அத்யாயங்கள் புரஞ்சனோபாக்யானம் கேட்டுவிட்டு மறக்காமல், மீ ண்டும்
ப்ரசேதஸர்களின் கதையைப் பற்றி கேட்ட விதுரரின் விழிப்புணர்வை எண்ணி
மகிழ்ந்தார் மைத்ரேயர்.

பரமேஸ்வரனிடம் உபதேசம் பெற்ற பின்னர் ப்ரசேதஸர்கள் நடுக்கடலில்


நின்று கொண்டு தவம் இயற்ற ஆரம்பித்தனர்.

ருத்ரகீ தத்தினால் ஸ்ரீ ஹரியை‌மகிழ்வித்தனர். பத்தாயிரம் வருடங்கள் முடிந்த


நிலையில் பகவான் ஸ்ரீமன் நாராயணன் அவர்களுக்கு காட்சியளித்தார்.

அவரது திருமேனியின் ஒளியால் ப்ரசேதஸர்களுக்கு தவம் செய்த களைப்பு


நீங்கியது.

கருடன்மீ து அமர்ந்துவந்த பகவான் கார்மேகம் போல்‌இருந்தார். அரையில்‌


பொன்னாடை, கழுத்தில் கௌஸ்துபம். அவரது ஒளியால்‌ நாற்றிசையும்‌
ப்ரகாசமடைந்தது.

266
ஒளிவசும்
ீ ஆபரணங்கள். எட்டுக் கைகளிலும் எண்வகை ஆயுதங்கள்.
கருடாழ்வார் சாமவேதமயமான இறக்கைகளின் இனிய நாதத்தால்
பகவானின் திருப்புகழைப் பாடுகிறார்.

வனமாலை புரளும் மார்பில் ஸ்ரீவத்ஸம். அழகிய திருக்கண்களால்


அன்பொழுகப் பார்த்து மேக கர்ஜனை போன்ற‌குரலில் பேசத் துவங்கினார்.

அரசகுமாரர்களே! உங்களுக்கு அனைத்து நலன்களும் உண்டாகட்டும். நீங்கள்


அனைவரும் உடலால் மட்டுமே வேறுபட்டவர்கள். தங்களின் மன ஒற்றுமை
கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.

தினமும் மாலை வேளையில் தங்களை நினைப்பவனுக்கு தன்


சகோதரர்களிடமும், மற்ற ஜீவராசிகளிடமும் நீங்காத அன்பு பெருகும்.

காலையும் மாலையும் நீங்கள் துதித்த ருத்ரகீ தத்தால் என்னை


ஆராதிப்பவனுக்கு அவன் விரும்பும் வரத்தையும் மெய்ஞானத்தையும்
அளிப்பேன்.

உங்கள்‌புகழ் உலகெங்கும்‌பரவப்போகிறது.

எனதருளால் குன்றாத வலிமையோடும் இளமையோடும் பத்து லட்சம்‌தேவ


வருடங்கள் இம்மை‌மறுமை இன்பங்களை அனுபவிப்பீர்களாக!

முடிவில், என்னை ஆராதித்ததன் பலனாய் பெறற்கரிய மனத்தூய்மை பெற்று


அற்ப சுகங்களில் வெறுப்புற்று என் லோகமான வைகுண்டத்தை அடைவர்கள்.

எவரது செயல்கள் அனைத்தும் பகவத் அர்ப்பணமாகச்


செய்யப்படுகின்றனவோ, எவரது நேரமும்‌ காலமும் என் திவ்ய
சரித்ரங்களைக்‌ கேட்பதிலும் கூறுவதிலுமாகவே கழிகிறதோ, அவர்
இல்லறத்தில் இருந்தபோதும் இல்லற இன்ப துன்பங்களால்
பாதிக்கப்படுவதில்லை.

அவர்கள் தினமும் என் கதைகளையே பேசி வருவதால், நான் அவர்களது


ஹ்ருதய கமலத்தில் தினம்தினம் புதிய புதிய வடிவங்களில் காட்சி
அளிப்பேன். அவர் உலகியல் ஆசாபாசங்களைக் கடந்து நித்ய முக்தராக
விளங்குவார் என்று கூறினார்.

ஸ்ரீமத் பாகவதம் - 150-விதுர மைத்ரேய ஸம்வாதம் - 94

தங்கள் முன் தோன்றிய பகவான் நாராயணனைப் பார்த்து இருகை கூப்பிய


வண்ணம் நா தழுதழுக்கக் கூறினார்கள்:

இறைவா! பக்தர்கள் அனைவரின் துயரத்தையும் துடைப்பவர் தாங்களே!


வேதங்களும் ஞானியரும் தங்கள் புகழையே பறைசாற்றுகின்றனர்.

தாங்கள் எப்போதும் ஸத்ய வடிவினராக இருப்பதால் தூய்மையாகவும்,


அமைதியாகவும் இருக்கிறீர்கள்.

267
முத்தொழில்களைச் செய்வதற்காக மூன்று உருவங்களை ஏற்கிறீர்கள்.
தங்களுடைய திருவுந்திக் கமலத்திலிருந்து இந்த ப்ரும்மாண்டம் தோன்றியது.
தங்கள்‌ கண்களும் தாமரை. கழுத்தில் தாமரை மலர். திருவடிகளும்
தாமரையே.

அரையில், தாமரை மலரின் மகரந்தம் போன்ற பட்டாடை. அனைத்து


ஜீவராசிகளின் புகலிடம். அனைத்திற்கும் சாட்சி. தங்கள் தரிசனம் அனைத்து
துன்பங்களையும்‌நொடியில் தீர்ப்பது.

அறியாமை, செருக்கு, விருப்பு, வெறுப்புகளுக்கிடையில் உழலும்


எங்களுக்கும் தங்களை தரிசிக்கும்‌பாக்கியம்‌கிட்டியதே!

தங்களை மனதார நினைப்பதாலேயே அனைத்து ஜீவன்களுக்கும் அமைதி


கிடைக்கிறது.

அந்தர்யாமியாக இருக்கும்‌தங்களுக்கு எங்கள் விருப்பம் தெரியாதா?

தங்களிடம்‌எப்போதும் அன்பாக இருப்பது ஒன்றே நாங்கள் வேண்டும் வரம்.

கற்பகமலர் கிடைத்து விட்டால் வேறு மலரில் விருப்பம் வருமா? அதுபோல்


தங்கள்‌திருவடி‌
மலரைக் கண்ட எங்களுக்கு வேறென்ன வேண்டும்?

எப்போதும் தங்களுடைய அடியார்களின் இணக்கம் வேண்டும்.

இறையடியார் கூட்டத்தில் எப்போதும் தங்களுடைய திருவிளையாடல்


பற்றிய கதையமுதம் பெருகிக்கொண்டே இருக்கும். அதை அரைநொடி
கேட்டாலும் தாபங்கள் அனைத்தும் தீரும். ஜீவன்களுக்குள்‌பகைமை விலகும்.
அன்பு பெருகும். ஸாதுக்கள் புண்யநதிகளையும் க்ஷேத்ரங்களையும்
தூய்மைப்படுத்துவதற்காகவே தீர்த்தயாத்திரை என்ற பெயரில் உலவி
வருகிறார்கள்.

தங்களுக்கு மிகவும் நெருங்கியவரான பரமேஸ்வரனின் ஒரு கணநேர


இணக்கத்தாலேயே தங்கள் தரிசனம்‌கிடைத்தது.

தங்கள்‌ பெருமை அளவிட இயலாதது. எங்கள் அறிவுக்கெட்டியவரை


தங்களைப் போற்றினோம் இறைவா! இதுவரை ஒன்றிய மனத்துடன் நாங்கள்
செய்த வேத அத்யயனம், ஆசிரியர்களுக்குச் செய்த பணிவிடை,
அந்தணர்களுக்கும், பெரியோர்களுக்கும் மூத்தோர்களுக்கும் செய்த சேவை,
அதனால் அவர்கள் அடைந்த மகிழ்ச்சி, உற்றார் உறவினர், நண்பர்கள்
ஆகியோர்க்கு தன்னலமற்றுச் செய்த உதவிகளும், தொண்டும், ஊண்
உறக்கமின்றி நெடுங்காலம் இயற்றிய தவம் அனைத்தும் சர்வவியாபியான
தங்களுடைய மகிழ்ச்சிக்காகவே ஆகட்டும்.

இதுவே நாங்கள் கோரும் வரம். தங்களை மீ ண்டும்‌மீ ண்டும் வணங்குகிறோம்.

பகவான் மனம் மகிழ்ந்து "நீங்கள் விரும்பியவாறே ஆகட்டும்‌


!" என்று அருள்
செய்துவிட்டு அவர்கள் கண்ணெதிரிலேயே வைகுண்டம்‌கிளம்பினார்.

268
பின்னர், கடல் நீரிலிருந்து வெளிவந்த ப்ரசேதஸர்கள் கரைக்கு வந்து
நிற்கக்கூட இடமின்றி, வானளாவ உயர்ந்து நிற்கும்‌மரங்களைச் சினத்துடன்
பார்க்க, அவை பற்றி எரியத் துவங்கின.

மரஞ்செடிகொடிகள் பற்றியெரிவது கண்டு அங்கு தோன்றிய ப்ரும்மதேவர்,


அவர்களை ஆற்றுப்படுத்தினார். மீ தமிருந்த மரங்கள் தங்கள் புதல்விகளை
ப்ரசேதஸர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர். அவர்களுக்கு ஒரு மகன்
பிறந்தான். முன்பு பரமேஸ்வரனை நிந்தித்ததன் பயனாக உடலை இழந்த
தக்ஷன் இப்போது மீ ண்டும்‌பிறந்தான். கால வெள்ளத்தில் முந்திய படைப்புகள்
அழிந்து சாக்ஷுஷ மன்வந்தரம் துவங்கியபோது இந்த தக்ஷன் மீ ண்டும்
ப்ரும்மதேவரால் ப்ரஜாபதியாக நியமிக்கப்பட்டான்.

அவனை, மக்களைப் படைத்து நன்முறையில் காக்குமாறு ப்ரும்மதேவர்


உத்தரவிட்டார். மரீசி முதலிய மற்ற ப்ரஜாபதிகளையும் அவரவர் பதவியில்
நியமித்தார்.

269

You might also like