You are on page 1of 11

பெற்றோர் ஆசிரியர் சங்கம் தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளி

ரீஜண்ட் தோட்டம்
73200 கெமெஞ்சே, நெகிரி செம்பிலான் டாருல் கூசுஸ்
PERSATUAN IBUBAPA DAN GURU
SEKOLAH JENIS KEBANGSAAN ( TAMIL ) LADANG REGENT
73200 GEMENCHEH, NEGERI SEMBILAN DARUL KHUSUS
Kod Sekolah :NBD 5031/ No.Tel / Fax : 06-4316643

40-ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொதுக்கூட்டம்

திகதி : 28.02.2017

நேரம் : மாலை 04.30 முதல் 7.30 வரை

இடம் : பள்ளி மண்டபம்

வருகை : 170 பேர்

திறப்புரை : திரு. ஜொவ்ரி பின் மௌலுட்


(தம்பின் மாவட்டக் கல்வி அதிகாரி)

1. இறைவாழ்த்து பாடுதல்.

1.1. ஆசிரியை குமாரி சு.விஜயா இறைவாழ்த்து பாடினார்.

2. வரவேற்புரை (செயலாளர்) – திரு. மு. ரவி

2.1. ஆரம்பத் தமிழ்ப்பள்ளி மாவட்ட கல்வி அதிகாரி திரு. ஜொவ்ரி பின்

மௌலுட், சிறப்பு வருகையாளர், பள்ளியின் தலைமையாசிரியர் திருமது

பூ.நவநீதம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர், எல்.பி.ஸ் உறுப்பினர்கள்,

பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும்

பெற்றோர்களை செயலாளர் வரவேற்றார்.

2.2. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்-(பெ.ஆ.ச.த) திரு. வோங் கிம் ப்போ

அவர்களை உரையாற்ற அழைத்தார்.

3. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் உரை திரு. வோங் கிம் ப்போ


3.1. பெ.ஆ.ச.த திரு. ஜொவ்ரி பின் மௌலுட், திருமது பூ.நவனீதம், சிறப்பு

வருகையாளர், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றார்.

3.2. பள்ளியில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய

பெற்றோர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

3.3. பெ.ஆ.ச ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்பட்டத் திட்டங்களைக் கூறினார்.

அதன் விவரம் பின்வருமாறு :-

 2016 ல் பயின்ற 66 மாணவர்களுக்குப் பள்ளி சீருடை வழங்குதல்

 2016 ல் பயின்ற 54 மாணவர்களுக்கு அகராதி வழங்குதல்

 பள்ளிக்குக் கதைப்புத்தகங்களை வழங்குதல்

 43 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பி.எஸ்.என்(BSN) வங்கித்

திறப்பிற்கான கட்டணத்தை ஏற்றுக்கொள்ளுதல்

 திரு. காதிர் இப்ராஹிம் தன்முனைப்பு உரை

 பள்ளி கடமை மாணவர்களுக்குமேலணி வழங்குதல்

 பள்ளியின் மின்விளக்குகளை சரிசெய்யும் கட்டணம்

 முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரை மாணவர்களுக்கான

பயிற்சிப் புத்தகங்களை வழங்குதல்

 ஆங்கிலப் பயிற்சிப் புத்தகங்களை வழங்குதல்

 தீபாவளி பரிசு - கைவளம்

 52 ஆறாம் ஆண்டு மானவர்களுக்கு ‘ஜூபா’ வாடகை

 2015 ல் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற ஆறாம் ஆண்டு மானவர்களுக்கு

‘சென்பெட்’, கடிகாரம் வழங்குதல்

 மாதிரி யூ.பி.எஸ். ஆர் தேர்வில் பாட வாரியாக முழு தேர்ச்சிப் பெற்ற

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு ரிம 10 கொடுத்தல்

 பள்ளி விளையாட்டு போட்டியின் பரிசுகளின் செலவை

ஏற்றுக்கொள்ளுதல்
3.4. பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் ஒத்துழைப்பும் ஆதரவையும்

பெ.ஆ.சங்கத்திற்கு தரும்படி கேட்டுக்கொண்டார்.

3.5. மாணவர்கள் மற்றும் பள்ளியின் அடைவில் தரம் உயர வேண்டுமெனில்

பாடத்திட்டத்தில் மாற்றம் இருக்க வேண்டுமென அவர் கூறினார்.

3.6. பள்ளிக்கு நேரத்துடன் வருவதையும் மற்றும் மாணவர்கள் அனைவரையும்

பாகுபாடின்றி பார்த்துக்கொள்ளுவதையும் உறுதிசெய்யுமாறு ஆசிரியர்களைக்

கேட்டுக்கொண்டார்.

3.7. 2016 யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கும்

பெற்றோர்களுக்கும் தமது வாழத்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

3.8. இறுதியாக, பள்ளியில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒத்துழைப்பு

நல்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

4. ஆலோசகர் உரை – தலைமையாசிரியர் (திருமதி. பூ. நவநீதம்)

4.1. 45 ஆவது பெ.ஆ.ச. பொதுகூட்டத்திற்கு சிரமம் பாராமல் வருகை புரிந்த

சிறப்பு விருந்தினர் திரு. ஜொவ்ரி பின் மௌலுட், பெற்றோர் ஆசிரியர் சங்க

தலைவர் திரு.வோங் கிம் ப்போ, பள்ளியின் துணைத்தலைமையாசிரியர்கள்,

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தலைமையாசிரியர் தமது

நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

4.2. இதுவரையில் ஒத்துழைப்பு நல்கிய பள்ளியின்

துணைத்தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், தோட்ட நிர்வாகி, பெ.ஆ.ச.

உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், அரசு சாரா அமைப்பு

மற்றும் கெமெஞ்சே தன்னார்வல குழுவிற்கும் தமது நன்றியினைத்

தெரிவித்துக் கொண்டார்.
4.3. சென்ற ஆண்டு பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ரிம 50 000.00

நன்கொடை வசூலித்ததற்காக தமது வாழ்த்துகளையும் பாராட்டினையும்

கூறினார்.

4.4. அனைத்து வகையிலும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய எல்.பி.எஸ்(LPS)

மற்றும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் திரு. தமிழ்வாணன்

அவர்களுக்கும் நன்றி கூறினார்.

4.5. பள்ளியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர்களின்

ஒத்துழைப்பு வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

4.6. பள்ளியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர்களின் வருகை

மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வண்ணம் இருப்பதாக கூறினார்.

4.7. பள்ளியில் மொத்தம் 25 ஆசிரியர்கள், 263 மாணவர்கள், 4 உதவி ஊழியர்கள்

மற்றும் 4 தனியார் ஊழியர்கள் உள்ளனர்.

4.8. திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் நன்முறையில் நடைபெறவும் அதில்

மாணவர்கள் நற்பயனை அடையவும் பெற்றோர்களைப் பள்ளி

நிர்வாகத்தினருடன் நல்லுறவை வளர்த்துக்கொள்ளுமாறு

கேட்டுக்கொண்டார்.

4.9. ஆறாம் ஆண்டு பெற்றோர் சந்திப்பு கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களுக்கு

நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

4.10 மாணவர்கள் அனைத்து கூறுகளிலும் முழு தேர்ச்சிப் பெற பள்ளி

நிர்வாகத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பெ.ஆ.ச, அரசு

சார்பற்ற அமைப்பு, நிதியாளர்கள் மற்றும் பெற்றோர்களைக் கேட்டுக்

கொண்டார்.

4.11 யூ.பி.எஸ்.ஆர் பிரத்தியேக வகுப்பு, விடுமுறை கால கூடுதல் வகுப்பு,

யூ.பி.எஸ்.ஆர் பட்டறை, யூ.பி.எஸ்.ஆர் சிறப்பு நடவடிக்கைகள்

திட்டமிடப்பட்டும் நடத்தப்பட்டும் வருகின்றது.


4.12 ஆண்டு 4,5 மாணவர்களுக்கான குறைநீக்கல் வகுப்புகளும்

தொடங்கப்பட்டுவிட்டன. கல்வி அமைச்சின் திட்டங்களின் ஒன்றான இதற்கு

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆதரவு தர வேண்டுமென

கூறினார்.

4.13 லினூஸ் (LINUS), இகாம், பிபிஎஸ்(PBS), எம்.பி.எம்.எம்.பி.ஐ(MBMMBI)

தொடர்பான சிறு விளக்கத்தை த.ஆசிரியர் விளக்கினார்.

4.14 69 மாணவர்களுக்கு சத்துணவு திட்டம்(RMT), 80 மாணவர்களுக்கு புடிமாஸ்

மற்றும்178 மாணவர்கள் பள்ளி ஆரம்ப உதவித்தொகை பெறுகின்றனர்.

4.15 ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு சாய்ல்ட்(CHILD) நடத்தும் சிட்ஸ்(CIDS)

நடவடிக்கைகள் அதாவது கூடுதல் வகுப்பு, புத்தகம் மற்றும் உணவு

வழங்குவது

நடத்தப்பட்டு வருகின்றன.

4.16 கல்வி மேம்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பிபிபிம்(PPPM) 2013-2015 இல்

அடங்கியுள்ள 11 கோட்பாடுகளில் 9 ஆவது கோட்பாடு

பெற்றோர்களுக்கானது ஆகும்.

4.17 தேசிய அளவில் பி. எஸ். என் (BSN) ஏற்பாட்டில் சிறந்த பங்கேற்பிற்காக ரி.ம

5000 கிடைத்தமையால் அதனை மாணவர்களின் பயன்பாட்டிற்காகப்

பயன்படுத்தப்படும்.

4.18 பெற்றோர், பெ.ஆ.ச, முன்னாள் மாணவர் மற்றும் அரசு சார்பற்ற

அமைப்புகளையும் பள்ளி நிர்வாகத்தினருடன் ஒன்றிணைந்து பெற்றோர்

நல்கை திட்டம் வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

4.19 பெற்றோர் நல்கை திட்டம் கீழ் பல நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. அதற்கு

ஆதரவளித்த பெ.ஆ.ச நன்றி.

4.20 புதிய பள்ளியின் கட்டுமானப் பணி 97% முடிவடைந்துள்ளது. இதன்

தொடர்பான மேலும் விபரங்கள் பெறுவதற்கு பெற்றோர்கள் கட்டிட

ஒப்பந்ததாரரை அணுகலாம்.
4.21 பள்ளி கட்டிட பணிக்கு
YB Dato L. Manickam (ahli Exco Kerajaan Negeri Sembilan ) untuk sokongan
mendapatkan sumbangan RM 50 000.00 daripada KPM untuk
penyelenggaran banggunan sekolah.

4.22 இப்பள்ளி மாணவர்கள் மிகவும் ஊக்கத்துடன் புறப்பாட நடவடிக்கைகளில்

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் ஈடுபடுகின்றனர்.

4.23 கல்வி துறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அனைத்து கல்வி

திட்டங்களையும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென கூறினார்.

5. சிறப்பு உரை – திரு. ஜொவ்ரி பின் மௌலுட்

(தம்பின் மாவட்ட கல்வி அதிகாரி)

5.1. இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த த.ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும்

பெற்றோர்களை வரவேற்றார்.

5.2. இக்கூட்டத்திற்கு பெற்றோர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும் வகையில்

உள்ளது என கூறினார். நெகிரி செம்பிலான் கல்வி இலாகா பார்வையிடுவதால்

இவ்வருகையானது மிகவும் முக்கியம் என நினைவுறுத்தினார்.

5.3. கல்வி, புறப்பாட பிரிவு மற்றும் பள்ளி உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும்

தேர்ச்சிக்கும் பள்ளி பெ.ஆ.சங்கத்தின் ஒத்துழைப்பும் ஆதரவுக்கும்

நன்றியினைத் தெர்வித்தார். பள்ளி நிர்வாகத்தினருக்கு பாராட்டினையும்

மற்றும் பெ.ஆ.ச உறுப்பினர்களைத் தத்தம் கடமைகளை முறையாகச்

செயல்படுத்தும்படி கூறினார்.

5.4. பள்ளியின் நடவடிக்கைகளைச் செயல்படுத்த, மாணவர்களின் கல்வி மற்றும்

ஒழுக்கத்தை மேம்படுத்துவதில் பள்ளியுடன் சேர்ந்து உதவுவதில் பெ.ஆ.ச.

முக்கிய பங்கு வகிக்கிறது.


5.5. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வளர்ச்சிக்கும் தேர்ச்சிக்கும் உதவிட

அரசாங்கம் எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார்.

5.6. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டும்படி

பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டார்.

5.7. மாணவர்களின் வருகையில் அதிக கவனம் செலுத்தும்படி பெற்றோர்களைக்

கேட்டுக் கொண்டார். மாணவர்களின் வருகையை மாவட்ட கல்வி இலாகா,

நெகிரி மாநில கல்வி இலாகா மற்றும் மலேசிய கல்வி அமைச்சும்

பார்வையிட்டு வருகின்றன என்பதையும் கூறினார்.

5.8. மாணவர்கள் தொடர்பான பிரச்சனையை ஆசிரியர்கள் மற்றும் த.

ஆசிரியருடன் பேசி தீர்க்க வேண்டும் என்றார்.

5.9. மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கிய பங்கை

வகிக்கின்றதாகவும் மாணவர்கள் எப்போதும் முயற்சியை விட்டுவிடக்

கூடாது எனவும் கூறினார்.

5.10. இறுதியாக 45 ஆவது பெ.ஆ.ச பொதுக்கூட்டத்தை

அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

6. 44 ஆவது கூட்ட அறிக்கையை வாசித்தேற்றல்

6.1 2015 பெ.ஆ.ச உறுப்பினர்களை திரு. ரவி அறிமுகப்படுத்தினார்.

6.2 பள்ளி பெ.ஆ.ச. செயலாளர் திரு. ரவி 44 ஆவது கூட்ட அறிக்கையை

வாசித்தார்.

6.3 முன்மொழிந்தவர் : திருமதி. பி. கோமதி (பெற்றோர்)

வழிமொழிந்தவர் : திருமதி பிரவினா (பெற்றோர்)

7. ஆண்டு செயலறிக்கையை வாசித்தேற்றல்

7.1 பெ.ஆ.ச. செயலாளர் திரு. ரவி செயலறிக்கையை வாசித்தார்.


7.2 முன்மொழிந்தவர் : திருமதி. எஸ். கொடிமலர் (பெற்றோர்)

வழிமொழிந்தவர் : திரு. தமிழ் அன்பன் (பெற்றோர்)

8. 2015 –ன் பெ.ஆ.ச கணக்கறிக்கையை வாசித்தேற்றல்

8.1 கணக்கறிக்கையை பொருளாளர் திரு. முத்துக்குமரன் வாசித்தார். ஒவ்வொரு

செலவினையும் பெற்றோர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறி விளக்கினார்.

8.2 2015-ன் பெ.ஆ.ச வரவு ரி.ம 54 295.54 ஆகும். மொத்த செலவு ரி.ம 52 315.67

ஆகும். கைவசம் உள்ள பணம் ரி.ம 1979.87 ஆகும்.

8.3 முன்மொழிந்தவர் : திரு. மருதமுத்து (பெற்றோர்)

வழிமொழிந்தவர் : திரு. வி. தினேஷ் குமார் தமிழ் அன்பன் (பெற்றோர்)

9. கடந்த கூட்டறிக்கையில் எழும் பிரச்சனை

இல்லை

10. 2017 –ன் புதிய பெ.ஆ.ச செயலவையினரைத் தேர்ந்தெடுத்தல்

10.1 2015-ன் செயலவையை த.ஆசிரியர் கலைத்தார்.

10.2 புதிய பெ.ஆ.ச. செயலவையினரை த.ஆசிரியர் மற்றும் திரு. எம். கணேசன்

(பள்ளி முன்னாள் கௌன்செலிங் ஆசிரியர்) தேர்ந்தெடுத்தனர்.

10.3 2017-ன் பெ.ஆ.ச. தலைவராக ஒருமித்த குரலில் கூட்டம் திரு. கணேசன்

சிதம்பரம் அவர்களைத் தேர்ந்தெடுத்தது.

10.4 2017/2018-ன் புதிய பெ. ஆ.ச செயலவை உறுப்பினர்கள் :-

ஆலோசகர் திருமதி நவநீதம் பூமாலை (த. ஆசிரியர்)

தலைவர் திரு கணேசன் சிதம்பரம் (பெற்றோர்)

து.தலைவர் திரு சரவணா சுப்பிரமணியம்(பெற்றோர்)

செயலாளர் திரு ரவி முருகா (ஆசிரியர்)


பொருளாலர் திரு முத்துகுமரன் சுப்பிரமணியம் (ஆசிரியர்)

உறுப்பினர்கள் திருமதி. சாந்தி குஞ்சிராமன் (பெற்றோர்)

திரு. ராஜேந்திரன் (பெற்றோர்)

திரு. தமிழ் அன்பன் பழனிவேலு (பெற்றோர்)

திருமதி. தெய்வாணை சிவாசி (பெற்றோர்)

திருமதி. பார்வதி கிருஷ்ணன் (பெற்றோர்)

திரு சுந்தரமூர்த்தி அங்கமுத்து (பெற்றோர்)

திரு. தினகரன் ஞானசேகரன் (ஆசிரியர்)

திரு. ஜெயா ஆனந்த் (ஆசிரியர்)

திருமதி. மாதவி கிருஷ்ணமூர்த்தி (ஆசிரியர்)

திருமதி. முல்லைகொடி செல்வராஜா

(ஆசிரியர்

சிறப்பு துணை திருமதி மேரி ஜானகி கனகமணி

தலைமையாசிரியர் திருமதி ஜெயந்தி பெரியண்ணா உடையார்

திரு. நரேந்திரன் நாகரத்தினம்

கணிக்கையாளர் திருமதி பிரவீனா அங்கமுத்து (பெற்றோர்)

குமாரி ஷாலினி முருகன் (ஆசிரியர்)

10.5 புதிய செயலவை உறுப்பினர்களுக்கு த. ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தார்.

11. தலைவர் உரை – திரு கணேசன் சிதம்பரம்

11.1 தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தமைக்குப் பெற்றோர்களுக்கும்

ஆசிரியர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.


11.2 தமது கடமையினை செவ்வன ஆற்றுவதாகவும் கல்வி மற்றும் புறப்பாட

பிரிவில் சிறந்த தேர்ச்சியடைய பள்ளி நிர்வாகத்தினருக்கு உதவுவதாகவும்

தெரிவித்தார். மேலும், பள்ளி அடைவுநிலை உயர்த்துவதற்கும் உதவி

புரிவதாக்க் கூறினார்.

11.3 பெ.ஆ.ச வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை நிர்வகிக்கும் பொறுப்பு

பொருளாளர், தலைவர் அல்லது பெ.ஆ.ச செயலாளர் மற்றும் ரீஜண்ட்

தோட்டப் பள்ளி ஆசிரியர்கள் ஆகும்.

சங்க பெயர் : பெற்றோர் ஆசிரியர் சங்கம் ரீஜண்ட் தோட்டம்

தலைவர் : திரு கணேசன் சிதம்பரம் (அ.எண் 761225-04-5469)

செயலாளர் : திரு ரவி முருகா (அ.எண் 890512-04-5083)

பொருளாளர் : திரு முத்துகுமரன் சுப்பிரமணியம் (அ.எண் 830707-04-5425)

வங்கி : MAY BANK

முன்மொழிந்தவர் : திரு. சரவணா சுப்பிரமணியம்

வழிமொழிந்தவர் : திரு. தினகரன்

12. பெ.ஆ.ச நன்கொடை

12.1 2017-க்கான பெ.ஆ.ச நன்கொடை தொடர்பான முழு விளக்கத்தை பெ.ஆ.ச

தலைவர் விளக்கினார்.

12.2 ஒரு குடும்பத்திற்கு ரி.ம 84 வழங்குவதாக அனைத்து பெ.ஆ.ச உறுப்பினர்களும்

ஏகமனதாக சம்மதம் தெரிவித்தனர்.

முன்மொழிந்தவர் : திரு. வி. தினேஷ்குமார்

வழிமொழிந்தவர் : திருமதி. ரத்னா தேவி


13. பொது

13.1. 2017-க்கான யூ.பி.எஸ்.ஆர் சிறப்பு திட்டம் குறித்து த. ஆசிரியர் விளக்கம்

கொடுத்தார்.

13.2. யூ.பி.எஸ்.ஆர் கூட்டத்திற்கு வருகைப் புரிந்த பெற்றோர்கள், 2017-க்கான

யூ.பி.எஸ்.ஆர் திட்டங்களின் செலவிற்காக ஒரு மாணவருக்கு ரி.ம 60

கொடுப்பதாக ஒருமித்த குரலில் சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

14. நன்றியுரை

14.1 இந்தப் பொதுக்கூட்டத்திற்கு சிரமம் பாராமல் நேரத்தை ஒதுக்கி வருகை தந்த

அனைவருக்கும் திரு. கணேசன் நன்றி கூறினார்.

பொதுக்கூட்டம் 7.30 க்கு முடிவுற்றது.

குறிப்பெடுத்தவர் : குமாரி சு. ரோஹினி

குமாரி பா.கவிதா

தயாரித்தவர், உறுதிப்படுத்தியவர்,

…………………………………. …………………………………..
பெ.ஆ.ச செயலாளர் பெ.ஆ.ச.தலைவர்
SJKT Ladang Regent SJKT Ladang Regent

You might also like