You are on page 1of 2

சிந்தனைமீ ட்சி

அன்னையே போற்றி !

அவள் தந்த தமிழே போற்றி !

முதலில் இக்கையேட்டை செய்ய வாய்ப்பளித்த எங்கள் விரிவுரையாளர்களுக்கு


மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.ஏனெனில், இந்த இடுப்பணியைச்
செய்வததால் எங்கள் இருவருக்கும் நிறைய புதிய விஷயங்கள் கிடைக்கபெற்றன
எனலாம். அவ்வகையில் பார்த்தால், இடுப்பணியைக் கொடுத்த பிறகு,எங்களுக்குத்
தெளிவான விளக்கத்தையும் எங்கள் விரிவுரையாளர் கூறினார்.ஆதலால்,
இப்பணியேட்டை நிறைவு செய்ய தகவல்களைத் திரட்டி கருத்துக்களை முறைப்படுத்தி
தொகுப்பதே எங்கள் பணியாக இருந்தது.

இப்பணியேட்டின் முதல் கேள்வி யாதெனில், வாசிப்பில் கற்றல் நெறிகள்


பயன்படுத்தப்படும் முறைகள் ஆகும்.இரண்டாவது கேள்வி, தொடக்கப்பள்ளிகளுக்கான
தமிழ்மொழி பாடத்திட்டத்தின் ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை இடம்பெற்றுள்ள
வாசிப்புத் திறன் பட்டியல் தயாரிப்பு, வாசிப்பில் மாணவர்கள் செய்யும் தவறுகளும்

அதை நிவர்த்திக்கும் வழிமுறைகளும் இதில் அடங்கும்.இறுதி கேள்விகளாக

வாசிப்பில் புதிய உத்திமுறைகள் மற்றும் ஒரு முழுமை

பாடத்திட்டம் தயாரித்தல் ஆகும்.

முதல் கேள்விக்கான தகவலைத் தேடும் போது நான் எவ்வாறு ஒவ்வொரு


கற்றல் நெறிகளை கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தலாம் என்பதை
அறிந்துக்கொண்டேன்.எந்த நிலை மாணவர்களுக்கு எந்த கற்றல் நெறி ஏற்புடையது
என்பதையும் நான் அறிந்தேன்.அதனை தொடர்ந்து, தொடக்கப்பள்ளிகளுக்குக்கான
வாசிப்புத்திறன் பட்டியலையும் என்னால் தெரிந்துக்கொள்ள முடிந்தது.அதுமட்டுமின்றி

43
மாணவர்கள் வாசிக்கும் போது என்ன தவறுகள் செய்கின்றனர் என்பதையும் அவற்றை
எப்படி களையலாம் என்பதும் எனக்கு எதிர்காலத்தில் நல்ல வழிகாட்டியாக இருக்கும்.

வாசிப்பில் மாணவர்கள் கைதேர்ந்தவர்களாகத் திகழ நிறைய உத்திகளையும்


பயன்படுத்தலாம் என்பதையும் நான் உணர்ந்தேன்.மாணவர்கள் வகுப்பில்
சலிப்படையாமல் இருக்க இந்த உத்தி முறைகள் பெரிதும் உதவும்.அதுமட்டுமல்லாமல்,
எப்படி ஒரு முழுபாடத்திட்டம் எழுதுவது என்றும் அதன் முறைகளையும் நாங்கள்
தெரிந்துக்கொண்ட்டொம்.இப்பணியேட்டைச் செய்யும் போது நாங்கள் பல சிக்கல்களை
எதிர்கொண்டோம்.நானும் என் குழு உறுப்பினரும் கலந்துரையாடியதால் ஒவ்வொரு
சிக்கலையும் சுலபமாகக் களைய முடிந்தது.இக்கையேடு எங்களுக்குள் சுமூகமான
உறவை ஏற்படுத்திக்கொடுத்தது எனலாம்.

ஆகவே,இப்பணியேடு எதிர்காலத்தில் தமிழாசிரியராக போகும் எனக்கு மிகுந்த


பலனை அளித்துள்ளது என்றால் மிகையாகாது.சுறுங்கக்கூறின், ஒவ்வொரு பருவத்திலும்
எங்களுக்கு வழங்கப்படும் பணியேடு பல புதிய அனுபவங்களைக் கொடுத்து எங்களின்
மொழியைச் செம்மைப்படுத்தி வழுச்செய்கிறது.ஆகவே, இப்பணியைத் தந்து சிறந்த
வழிகாட்டியாக இருந்து இக்கையேட்டை செய்து முடிக்க உதவிய
விரிவுரையாளர்களுக்கு எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.

திலகவதி த/பெ திருமலை


BT/PJ/PS க்

44

You might also like