You are on page 1of 3

சிந்தனைமீ ட்சி

இந்த இடுபணியைச் சிறப்பாக செய்து முடிக்க வழி வகுத்த இறைவனுக்கு

எனது முதற்கண் நன்றி. எத்தனையோ இடர்களைக் கடந்து இந்த

இடுப்பணியைக் குறித்த நாளுக்குள் வெற்றிகரமாக செய்துமுடித்துள்ளேன்.

முதலில், இந்த இடுப்பணியை ஏற்றுக்கொள்ளும்போது, கேள்வியைப் பற்றி

குழப்பத்தில் இருந்தேன். இருப்பினும், இந்தத் தடைகளைச் சவாலாக

எடுத்துக்கொண்டு முயற்சி செய்து சிறந்த இடுப்பணியைக் கொடுக்க

வேண்டுமென்று என்னை ஊக்கப் படுத்திக் கொண்டேன்.

அதைத் தவிர, புதிய ‘விண்டோஸ் 10’ பயன்பாடுகளைப் பற்றிய திறன்

இல்லாததால், இந்த இடுப்பணியைச் செய்து முடிப்பதில் சற்று தாமதமானது.

இந்த இடுபணியின் மூலம் நான் பல நன்மைகளை அடைந்துள்ளேன்.

முதலாவதாக, விரிவுரையாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இந்த இடுபணி

தொடர்பான சந்தேகங்களைக் கலந்து பேச வாய்ப்பு கிடைத்தது. இந்த

அனுபவத்தின் வழி, என் பேச்சு திறன் மற்றும் தைரியத்தை மேம்படுத்திக்

கொள்ள முடிந்தது.

மேலும், இந்த இடுப்பணியின் கேள்வி நன்கு புரிந்த பிறகு, தகவல்கள்

தேடுவது சற்று சுலபமாக இருந்தது. நூலகத்திலுள்ள புத்தகங்களில்

மட்டுமின்றி பல பயனுள்ள வலைத்தளங்களிலிருந்தும் இந்த இடுப்பணி

தொடர்பான தகவல்களை திரட்டினேன். அனைத்து தகவல்களும் கிடைத்த

பிறகு, நான் விடாமுயற்சியுடனும் மற்றும் பொறுமையுடனும் கேள்விகளுக்கு

ஏற்ற மிக சரியான தகவலைத் தேடினேன்.

அதை தவிர, இந்த இடுப்பணி செய்வதற்கு அயராது வழிகாட்டல் கொடுத்த

விரிவுரையாளர்களைப் பெருமையாக உணர்கிறேன். விரிவுரையாளர்களின்


வழிகாட்டினால் இந்த இடுப்பணியில் என் குறைபாடுகளைச் சரி செய்ய

முடிந்தது மற்றும் இந்தக் குறைகளை எதிர்காலத்தில் மீ ண்டும் செய்ய

மாட்டேன். விரிவுரையாளர்கள் மற்றும் வகுப்பு தோழிகள் ஒத்துழைப்புடன்,

நான் இறுதியாக, வெற்றிகரமாக இந்த இடுப்பணியைப் பூர்த்தி செய்ய

முடிந்தது.

இந்த இடுப்பணியின் மூலம், தொடர்பாடல் குறித்த நிலையான துல்லித

தெளிவு எனக்குக் கிடைத்தது. அதாவது ஓரிடத்திலிருந்து இன்னோர்

இடத்திற்கோ அல்லது ஒருவரிடத்திருந்து இன்னொருவருக்கோ தன் எண்ணம்,

கருத்து, ஏடல், உணர்வு போன்றவற்றை தகவலாகப் பரிமாற்றாம் செய்யும்

செயல்முறையே தொடர்பாடலாகும். அதுமட்டுமின்றி, தொடர்பாடலின்

பயன்பாடுகள் மற்றும் வகைகளையும் தெரிந்து கொண்டேன்.

அதை தவிர, உலக அறிஞர்கள் வகுத்த தொடர்பாடல் கோட்பாடுகளையும்

நான் அறிந்துக் கொண்டேன். அறிஞர்களிடைய தொடர்பாடல் பற்றிய

அவர்களின் கருத்துக்கள் வேறுப்பட்டு இருக்கின்றது. முதல் தொடர்பாடல்

மாதிரி லாஸ்வெல் வகுத்தது என்பது இந்த இடுப்பணி செய்ததின் மூலமாக

தான் தெரிந்தது. மேலும், தொடர்பாடல் பற்றி எழுந்த மாதிரிகளில் ஷான்னன்

மற்றும் வவர்,
ீ ஓஸ்கூட், ஸ்க்ராம், நியூகோம்ப் போன்ற உலக அறிஞர்களின்

மாதிரிகளையும் தெரிந்து கொண்டேன்.

மேலும், உரை நிகழ்தியது எனக்கு ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது.

சரியான மொழிப்பயன்பாட்டினைக் கொண்டு நான் உரை நிகழ்தியதில்லை.

அதனால், இந்த வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்தி என்

திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்ற ஆர்வம் என்னுல் தோன்றியது.

இதனால், என் மொழி வளம், துணிச்சலானப் பேச்சு திறன், சரியான மொழிப்

பயன்பாடு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள ஒரு தூண்டுகோலாக இருந்தது.


அடுத்து, படைப்பாக்கமொழி, சமயமொழி, தொழிற்நுட்பமொழி ஆகிய

மொழிவழக்குகளில் அமைந்த கட்டுரைகளைப் படித்து பல தெரியாத

தகவல்களை அறிந்து கொண்டேன். இதனிடயே, இந்த மூன்று

மொழிவழக்குகளிலிருக்கும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளையும் ஆய்ந்து,

புறிந்து கொண்டேன்.

இந்த இடுப்பணி தொர்பாக என்னிடம் நிறைய குறைகள் இருப்பதாக

நினைக்கிறேன். அதனால், இன்னும் கண்ணும் கருத்துமாக படித்து மற்றும்

வகுப்பறையில் பாடத்தில் கவனம் செலுத்துவேன். மேலும், இந்த இடுப்பணி

எனக்குப் பொறுமை குணத்தை எப்படி காப்பது என்பதையும்

புரியவைத்துள்ளது.

இப்பொழுது தான், இந்த பாடத்தின் பயன்பாட்டினை நன்கு உணர்ந்தேன்.

இந்த இடுப்பணிபணியைச் செய்த என் அனுபவம் ஒரு எடுத்துக்காட்டாக வேறு

பணி உருவாக்குவதற்கு இருக்க வேண்டும் என்பதை அறிகிறேன். ஆகவே,

இவ்விடுபணியினால் பல நன்மைகள் எனக்கு கிடைத்தாலும் சில சமயங்களில்

சில குறைகளும் ஏற்பட்டன. மொத்தத்தில், இவ்விடுபணி எனக்குப் புதிய

அனுபவமாக அமைந்தது என்பதில் முற்றிலும் சந்தேகமில்லை. இந்த

இடுப்பணிபணியைச் செய்ய எனக்குப் பெரிதும் உதவியாக இருந்த

விரிவுரையாளர், திரு மணியரசன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்

கொள்கிறேன்.

You might also like