You are on page 1of 4

OCP பிரிவின் முதலாம் பதிவு

கேள்வி சாரம்: ஓர் ஆசிரியராகப் பணித்திர மேம்பாட்டிற்காக மேற்கொண்ட

செயலாய்வில் நான் எதிர்கொண்ட சவால்களும் அவற்றைக் களைய மேற்கொண்ட
நடவடிக்கைகளும்

விரிவுரையாளருக்கும் என் அன்பான சக நண்பர்களுக்கும் என் வணக்கம். இந்தக்

கலந்துரையாடலில் உங்களுடன் நான் சேர்ந்து எனது கருத்துகள் பகிர்வதில்
மகிழ்ச்சி அடைகிறேன்.

செயலாய்வு

நான் தமிழ்மொழிப் போதனையில் என் மாணவர்களிடம் அடையாளங்கண்ட

சிக்கல்: தமிழ்மொழிப் பாடத்தின் முக்கியத்துவம் அறியாமை.

சிக்கலை அடையாளங் காணுதல்:

ஆறாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடக் கற்றல் கற்பித்தலின் போது வகுப்பில் 2/5

மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தின் முக்கியத்துவம் பற்றி அக்கரை இன்றி
காணப்பட்டனர். இதனை மாணவர்கள் தமிழ்மொழிப் பாடம் பயிலும் போதும்
மாணவர்கள் என் கேள்விக்குப் பதில் உணர்ந்தேன். மேலும், அவர்கள் நான்
கொடுக்கும் எந்தவொரு தமிழ்மொழி இடுபணியையும் செய்யாததிலிருந்து உணர்ந்து
கொண்டேன்.மாணவர்களின் பெற்றோர்களின் தமிழ்பற்று இல்லாமையே ஒரு
காரணம் என்பதனை உணர்ந்தேன்.

சிக்கலைக் களையத் திட்டமிட்டு செயல்படுத்துதல்:

இம்மாணவர்கள் தமிழ்மொழிப் பாடத்தின் முக்கியத் துவத்தை அறிய நான் சில

நடவடிக்கைகளைச் செய்தேன். தமிழ்மொழி கற்று வாழ்வில் சிறந்து விளங்கும்
அறிஞர்கள் பற்றிய காணொலிகளை போதனையில் கணினியின் மூலம் காட்டினேன்.
பின்னர், தமிழ்மொழியின் வரலாற்றினை காணொலி மூலம் காட்டினேன்.

பகுத்தாய்ந்து மீட்டுணர்தல்:

என்னுடைய பாடப் போதனையை மூலம் மாணவர்களின் மனமாற்றத்தை

உணர்ந்தேன். இந்த இரண்டு மாணவர்களும் தமிழ்மொழிப் பாடத்தின் மீது மிகுந்த
ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். பாட வேளையில் ஆர்வத்தை
வெளிப்படுத்தி ஆசிரியர் கொடுக்கின்ற இடுபணியை மிகச் சிறப்பாகச்
செய்கின்றனர்.

சுருங்கக் கூறின், நான் தமிழ் ஆசிரியராக என் வகுப்பில் மேற்கொண்ட இந்தச்

செயலாய்வு நல்ல பயனைத் தந்துள்ளது.
OCP பிரிவின் இரண்௶டாம் பதிவு

கேள்வி சாரம்: ஓர் ஆசிரியராகப் பணித்திர மேம்பாட்டிற்காக மேற்கொண்ட

செயலாய்வில் நான் எதிர்கொண்ட சவால்களும் அவற்றைக் களைய மேற்கொண்ட
நடவடிக்கைகளும்

விரிவுரையாளருக்கும் என் அன்பான சக நண்பர்களுக்கும் என் வணக்கம். இந்தக்

கலந்துரையாடலில் உங்களுடன் நான் சேர்ந்து எனது இரண்டாவது கருத்து
பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

செயலாய்வு

நான் தமிழ்மொழிப் போதனையில் என் மாணவர்களிடம் அடையாளங்கண்ட

சிக்கல்: தமிழ்மொழி வாசிப்பில் பின்னடைவு.

சிக்கலை அடையாளங் காணுதல்:

ஆறாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடக் கற்றல் கற்பித்தலின் போது வகுப்பில் 2/5

மாணவர்கள் தமிழ்மொழி வாசிப்பில் மிகவும் பின்னடைவு கண்டிருந்தனர். இதனை
மாணவர்கள் தமிழ்மொழிப் பாடம் பயிலும் போது உணர்ந்தேன். வாசிப்பு
சரளமின்மை அவர்களின் கற்றல் கற்பித்தலில் பிரச்சனை மேற்கண்டது.

சிக்கலைக் களையத் திட்டமிட்டு செயல்படுத்துதல்:

இம்மாணவர்கள் தமிழ்மொழியில் சரளமாக வாசிக்க நான் அவர்களுக்குத் தினசரி

வாசிப்பு பயிற்சி வழங்கினேன். அவர்கள் தினசரி நூல்நிலையத்திலிருந்து ஒரு
புத்தகம் இரவல் வாங்குவதை கட்டாயம் படுத்தி, அதனை வாசித்து மருநாௐள்
காலை பள்ளி தொடங்குவதற்கு முன் என்னிடம் வாசித்துக் காட்ட பணித்தேன்.
இந்த நடவடிக்கை தொடர்ந்தார் போல் தினசரி நடைப்பெற்றது.

பகுத்தாய்ந்து மீட்டுணர்தல்:

என்னுடைய பாடப் போதனையை மூலம் மாணவர்களின் வாசிப்பில்

மாற்ற௹த்தை உணர்ந்தேன். இந்த இரண்டு மாணவர்களும் தமிழ்மொழியில்
சரளமாக வாசிக்க தொடங்கியதை கண்டு நான் மகிழ்ந்தேன். தினசரி வாசிக்கும்
பழக்கம் மிக பங்கௐௐளிக்கும் என்பதனை மாணவர்கள் உணர்ந்தனர்.

சுருங்கக் கூறின், நான் தமிழ் ஆசிரியராக என் வகுப்பில் மேற்கொண்ட இந்தச்

செயலாய்வு நல்ல பயனைத் தந்துள்ளது.
OCP பிரிவின் மூன்றாம் பதிவு

கேள்வி சாரம்: ஓர் ஆசிரியராகப் பணித்திர மேம்பாட்டிற்காக மேற்கொண்ட

செயலாய்வில் நான் எதிர்கொண்ட சவால்களும் அவற்றைக் களைய மேற்கொண்ட
நடவடிக்கைகளும்

விரிவுரையாளருக்கும் என் அன்பான சக நண்பர்களுக்கும் என் வணக்கம். இந்தக்

கலந்துரையாடலில் உங்களுடன் நான் சேர்ந்து எனது மூன்றாவது கருத்து
பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

செயலாய்வு

நான் தமிழ்மொழிப் போதனையில் என் மாணவர்களிடம் அடையாளங்கண்ட

சிக்கல்: தமிழ்மொழி இலக்கியம் நினைவில் இல்லாமை.

சிக்கலை அடையாளங் காணுதல்:

ஆறாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடக் கற்றல் கற்பித்தலின் போது வகுப்பில் 3/5

மாணவர்கள் தமிழ்மொழி இலக்கியம் கூறுகளில் மிகவும் பின்னடைவு
கண்டிருந்தனர். இதனை மாணவர்கள் தமிழ்மொழிப் பாடம் பயிலும் போது
உணர்ந்தேன். தமிழ் இலக்கியம் கூறுகளில் மறதியாக இருப்பதை அவர்களின்
கற்றல் கற்பித்தலில் மேற்கண்டது.

சிக்கலைக் களையத் திட்டமிட்டு செயல்படுத்துதல்:

இம்மாணவர்கள் தமிழ்மொழியில் இலக்கியம் பகுதியினை நினைவில் வைத்துக்

கொள்வதில் சிரமம் அடைகிறார்கள். அவர்கள் தினசரி இலக்கியம் கூறுகளை
மனனம் செய்து கூற பணி௹த்தேன். மனனம் செய்த கூறுகளை கையெழுத்துப்
பயிற்ச்சியாக வழங்கினேன். இந்த நடவடிக்கை தொடர்ந்தார் போல் தினசரி
நடைப்பெற்றது.

பகுத்தாய்ந்து மீட்டுணர்தல்:

என்னுடைய பாடப் போதனையை மூலம் மாணவர்களின் வாசிப்பில்

மாற்ற௹த்தை உணர்ந்தேன். இந்த மூன்று மாணவர்களும் தமிழ்மொழியின்
இலக்கிய கூறுகளையும் அறிந்தனர்.

சுருங்கக் கூறின், நான் தமிழ் ஆசிரியராக என் வகுப்பில் மேற்கொண்ட இந்தச்

செயலாய்வு நல்ல பயனைத் தந்துள்ளது.

You might also like