You are on page 1of 16

I NSTITUT PENDIDIKAN GURU

KEMENTERIAN PELAJARAN MALAYSIA


AMPUS IPOH, 31150 HULU KINTA
PERAK DARUL RIDZUAN

தமிழ் மொழி செய்பணி


(BTM 3033)

பெயர் : தனேஷ்வரி த / பெ சதாசிவன்


Nama : Taneshwaary A/P Sathasivan

மெட்ரிக் எண் : 30095


No. Matrik : 30095

பிரிவு : எஸ் 5
Unit : S5

பாடம் : தமிழ் செவ்விலக்கியம்


Subjek : KESUSASTERAAN TAMIL KLASIK

விரிவுரையாளர் : முனைவர். மோகன் குமார் செல்லையா


Pensyarah : DR. MOHAN KUMAR CHELAIAH

ஒப்படைக்கும் நாள்: 09. 03. 2018


Tarikh Hantar : 09. 03. 2018
INSTITUT PENDIDIKAN GURU KAMPUS IPOH
BORANG MAKLUM BALAS KERJA KURSUS (PROJEK/ AMALI)

Nama : TANESHWARY A/P SATHASIVAN Angka Giliran Pelajar : 2017242340112

Tajuk Tugasan : PENULISAN AKADEMIK


Pensyarah : DR. MOHAN KUMAR CHELAIAH Subjek / Kursus : BTMB 3033
Tarikh hantar : 09 MAC 2018 Tarikh Diterima ( Diisi oleh pensyarah):

Pengakuan Pelajar
Saya mengaku tugasan ini adalah hasil kerja saya sendiri kecuali nukilan dan ringkasan yang setiap satunya saya
jelaskan sumbernya.

Tandatangan :____________________________ Tarikh : _______________________


( TANESHWARY A/P SATHASIVAN )

Perincian Maklum Balas Tugasan


Pemeriksa Moderator (Jika berkaitan)
Kekuatan: Kekuatan:

Aspek yang boleh diperbaiki: Aspek yang boleh diperbaiki:

Tandatangan: Tarikh: Tandatangan: Tarikh:


Pengesahan Pelajar Terhadap Maklum Balas Yang Diberikan Pensyarah
Saya mengesahkan bahawa maklum balas yang diberikan oleh pensyarah telah saya rujuk dan fahami.

Catatan (Jika ada)

Tandatangan Pelajar : Tarikh :


உள்ளடக்கம்

எண் தலைப்பு பக்கம்

1. முகப்பு

2. ஒத்துழைப்புப் பாரம்

3. செய்பணி கேள்சி தாள்

4. உள்ளடக்கம்

5. நன்றியுரை

6. முன்னுரை

7. முரணான கருத்துக்கள், விளைவுகள், படிப்பினைகள்,


இன்றைய வாழ்ழோடு ஒப்பீடு

8. முடிவுரை

9. மேற்கோள் பட்டியல்

10. பின் இணைப்பு


நன்றியுரை

நான் எஸ் 5 பிரிவைச் சேர்ந்த மாணவியான தனேஷ்வரி த/பெ சதாசிவன் இந்த செய்பணியை மிகவும்
வெற்றிகரமாக செய்து முடித்ததற்கு எனக்கு பலர் உறுதுணையாக இருந்தனர். தமிழ் செவ்விலக்கியம் BTMB 3033
பாடத்தின் முதல் செய்பணி என்றதால், எனக்கு இப்பணியைச் செய்து முடிப்பதற்குச் சிறிது கடினமாக இருந்தது.
இருப்பினும், பலரின் உதவியோடு என்னால் இதனைச் சுலபமாக செய்ய முடிந்தது.

முதலில், இப்பணியை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கு எனக்கு நல்ல சிந்திக்கக் கூடிய திறன் மற்றும்
வளமான ஆரோக்கியத்தை வரமளித்த இறைவனுக்கு என் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கின்றேன்.

அதுமட்டுமின்றி, இந்தச் செய்பணியைச் செய்து முடிப்பதற்குத் தூண்டுகோளாக இருந்த என்


விரிவுரையாளர் முனைவர் மோகன் குமார் செல்லையா அவர்களுக்கு நான் நன்றியைக் கூறக்
கடமைப்பட்டுள்ளேன். என் விரிவுரையாளரின் உதவி எனக்கு மிகவும் ஊக்கமூட்டியது மட்டுமின்றி
இச்செய்பணியைப் பற்றி சரியான மற்றும் தெளிவான விளக்கங்களையும் அளித்தது. அதுமட்டுமில்லாமல், எனக்கு
எந்நேரமும் இப்பணியைப் பற்றி விளக்கம் அளிக்க தயாராக இருந்தார்.

மேலும், நான் என் நன்றியினை என் பெற்றோர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன். என் பெற்றோர்கள் நான்
இச்செய்பணியைச் செய்து முடிக்கும் வரை எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர். இச்செய்பணியைச் செய்து
முடிப்பதற்குத் தேவையான நூல்களை வாங்கி கொடுத்து எனக்கு நிதி வழியாக பேருதவிப் புரிந்த எனது
பெற்றோர்களுக்கு நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதையெடுத்து, நான் என் நன்றி மலர்களை என் நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்பிகிறேன். என்
வகுப்பு தோழி தோழர்கள் எனக்கு பலவிதங்களில் உதவிகளைச் செய்துள்ளனர். இப்பணியைச் செய்வதற்குத்
தேவையான சில முக்கிய குறிப்புகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து, எனக்கு எந்நேரமும்
விளக்கங்களைக் கொடுக்க தயாராக இருந்தனர். ஆகவே, இறுதியாக எனக்கு இச்செய்பணியைச் செய்து
முடிப்பதற்கு உதவி புரிந்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு எனது நன்றியினைச் சமர்ப்பிப்பதில்
மகிழ்ச்சியடைகிறேன். நன்றி, வணக்கம்.

முன்னுரை

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு,

என்று சுப்ரமணிய பாரதியின் கவிதை வரிக்கேற்ப தமிழ்த் தாயின் ஆசியில் பிறந்த தமிழ்நாட்டின் பெருமைக்கு
உகந்தவன் கம்பன். கம்பன் வீட்டுக் கட்டுத் தரியும் கவிபாடும் என்பர். ஆக, இக்கம்பனின் கைவண்ணத்தில்
மலர்ந்தக் கம்பராமாயணமும் செவ்விலக்கிய தகுதியைப் பெற்று சிறந்த விளங்குகின்றது. இதனுடன், திருக்குறள்,
சிலப்பதிகாரம், சங்க பாடலகள் போன்ற முக்கியமான இலக்கிய படைப்புகளும் செவ்விலக்கியத்துள் அடங்கும்.
இவ்விலக்கிய படைப்புகளில் காணும் எழில்நலம் தமிழர் வாழ்வியலைக் காட்டும் உயர்நெறி அம்சமாக மிளிர்ந்து
தமிழ் இலக்கியத்திற்கு மெருகூட்டுகிறது. இருப்பின், கைகேயியின் சூழ்வினைப் படலம் உணர்த்தும் வாழ்வியல்
முரண் மாந்தர்களுக்கு நல்லதோர் படிப்பினையாக அமைவது சிறப்பு.

கம்ராமாயணச் செவ்வியல் கூறுகள்

செவ்விலக்கியமானது, உன்னதமாகவும், செறிவானதாகவும், சிறந்த்தொரு எடுத்துக்காட்டாகவும், உச்சநிலை


படைப்புகளாகவும் வரையறுக்கப்படுகின்றது. செவ்விலக்கியத்திற்குப் பண்பாட்டுச் சுவடுகளோடு சுய
அடையாளமும் தேவை. ஆக, செவ்விலக்கிய கூறுகளான உணர்ச்சி, கற்பனை, அறிவுக்கூறு போன்றவை
கம்பராமாயணத்தில் பெரும் பங்கை வகிக்கின்றது. இதன்வழி, கம்பராமாயணத்தின் சிலகாட்சிகளும் நற்சான்றாக
விளங்குகின்றது.

இதனடிப்படையில், உணர்ச்சி என்ற கூறானது இலக்கியத்தின் முதன்மைக் கூறாகும். அஃது, நம் கண்
முன்னேயும் மனக்கண் முன்னேயும் அழகுடைய பொருள்களைப் பரு வடிவில் தோன்றச் செய்கின்றன. இதனை,
கம்பராமாயண காப்பியத்தில் காண்கையில் காதல் உணர்வானது இராமனுக்கும் சிதைக்கும் இடையில் மிக
அழகாக மெய்ப்பிக்கப்படுகின்றது. காப்பியத்தில், “அண்ணனும் நோக்கினால், அவளும் நோக்கினால்” என்றார்
போல் இருவரும் பார்த்து முதல் கணமே அம்மெய்யான காதல் உணர்வை கண்கள் வழி பகிர்ந்தனர்.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்

செம்பாகம் அன்று பெரிது(1092),

என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப சீதையின் சுயம்வரம் நிகழ்வில் இருவருமே ஒருவரின் ஒருவர் அழகில்
இலையித்த, நோக்குகையில் அப்பார்வையானது காமத்தின் பாதியன்று; மாறாக அதைவிட தெய்வீகமானது;
புனிதமானதாகவும் பரைசாற்றப்படுகிறது. இதுவே, உணர்ச்சி என்ற கூறானது. கம்பராமாயணத்தில் தெள்ளத்
தெளிவாக காண்பித்ததற்குச் சான்று.

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீர்ந்துவிடும்


கண்ணில் தோன்றா காட்சி என்றால் கற்பனை வளர்ந்துவிடும்,

என்ற வாலியின் கவிதை வரிக்கேற்ப நாம் காண்பனவற்றையும், காணாததையும் நம் சிந்தைக்குக் கொண்டு சென்று
அதனை மேம்படுத்துவது கற்பனையே. ஒன்றின் அழகை நாம் நுண்ணறிவால் நுகர்ந்து நம்முடைய மகிழ்ச்சி
நிறைந்த அனுபவமாக செய்துக்கொள்ள வேண்டும். மேலும், உணர்ச்சியைப் பெருக்கெடுக்கச் செய்வதும்
கற்பனையே. கம்பராமாயணம் மூலம் பார்த்தோமேயானால், கூனியின் சூழ்ச்சியான எண்ணங்களால் இராமனை
காட்டுக்கு அனுப்புவதிலும் இதனால் பரதன் நாட்டை ஆள்வான் என்பதனையும் கைகேயியிடம் மிகவும்
நாசுக்காக வெளிப்படுத்துகின்றாள். இராமனை பழித்தீற்க வேண்டுமென்ற வஞ்சக எண்ணத்தில், பதினான்கு
ஆண்டு வனவாசத்தில், அவனின் இளமையானது குலைந்து, தோற்றமும் மாறுவதால் மக்களும் அவனை
மறந்தவிடுவர் என்பதையும், கற்பனை காட்சி வழி கூனி தன் சூழ்ச்சி வலையில் கைகேயியைச் சிக்க வைக்கிறாள்.
கூனியின் இச்செயலே இக்காப்பியத்தில் கற்பனை மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அறிவுக்கூறு எனும் செவ்விலக்கியக் கூறானது, வாழ்வியல் உண்மை, சீரிய கருத்து, மற்றும் உயர்ந்த
நீதிநெறி போன்றவற்றைச் சுட்டிகாட்டுவதாகும். கம்பராமாயண்த்திலும் நன்கு திளைப்பதற்கும் தரத்தை
மதிப்பிடுவத்ற்கும் சில விடயங்களை அறிவுக்கூறுச் சான்றாக நாம் கண்டறியலாம். ஓர் உதாரணமாக, செய்தி
அறிந்த பின் தூய உள்ளம் படைத்தப் பரதன் தன் தாய் கைகேயியின் சதிதிட்டத்தை அறிந்து, மீண்டும் தன்
அண்ணன் இராமன் முறைபடி அரசால வேண்டுமென்பதற்காக முயற்சித்தான். ஆனால், கடமை தவறாத இராமன்
பரதனின் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில், இராமனின் பாதுகைகளை அயோதியின் அரியாசனத்தில்
அமர்த்தினான் பரதன். பின்பு பதினான்கு ஆண்டுகளுக்கு அவ்வாறே தன் அண்ணனையே அரசனாகச்
சிந்தையில் கொண்டு ஆட்சி நடத்தினான்.

முரணான கருத்துக்கள், விளைவுகள், படிப்பினைகள், இன்றைய வாழ்வியலோடு ஒப்பிடு.

சுயநலம்

இமை குற்றம் கண்ணுக்குத் தெரியாது, என்றார் போல் தனக்கு வேண்டுயவர்களுக்கும், தன்னுடைய


முக்கியத்துவத்திற்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவற்றை மட்டுமே கருதி செயல்படுவது. பிறரின் நலத்தையும்
கருதாமல் சுயநலமாக வாழ்வதோடு, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சற்றும் ஆராயமல் இருப்பதே
ஒரு நல்லமனிதனுக்கு முரணனச் செயல். ஆக, கம்பராமாயண சூழ்வினைப்படலத்திலும் சுயநலம் கொண்டு
செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளை சான்று வழி நிருவலாம். அதாவது, எவ்விளைவையும் சிந்திக்காமல்,
கூனியின் சூழ்ச்சிப் பிணைப்பில் சிக்கி தன் சுயநலத்தை மட்டுமே எண்ணி வாதமிட்டு இராமனை வனவாசம்
அனுப்பினாள் கைகேயி. இராமன் தனக்கும் மகன் என்பதை மறந்து, சுயநலம் என்று வரும் பொழுது தனது
கருவில் உருவான, இராமனின் இளையவன் என்றும் பாராமல் பரதனே அயோதியை ஆள வேண்டுமென்று
கங்கனம் கட்டினாள்; நாட்டின் நலனையும், இராமன் சீதையின் வாழ்க்கையையும், ஒரு தாயாக, ஒரு பெண்ணாக
அங்கு நினைத்துப் பார்க்கத் தவறினாள். அதேநேரத்தில், முருகுணர்ச்சியானது கைகேயியின் வழி
வெளிப்படவில்லை என்பது தெள்ளனத் தெரிகிறது. சுயநலத்தையே கொண்டிருந்ததால் சிந்தித்துச் செயல்பட்டு
அழகுடன் நடந்துக்கொள்ள அவள் அங்கு தவறினாள். இதுநாள்வரை அவள் கட்டிக்காத்த அறநெறிகளை
அவள் நிலைநாட்டாமல் போனதே இதற்கு காராணம். இம்முரணான கருத்தினை மேலும் இடித்துரைக்கும்
வகையில், உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் எனும் நூல் வழி எடுக்கப்பட்ட, சிலப்பதிகார
காப்பியத்தின் சான்றும் உள்ளது. அதில் கோவலனுக்கு கண்ணகி தாரமாக இருப்பது தெரிந்தும், தன்
சுயநலத்திற்காக மட்டுமே கோவலனைத் தன் காதல் பிடியிலிருந்து மாதவி விடவில்லை. மாதவியால் வசப்பட்டக்
கோவலனும் தன் கண்ணகியைச் சந்திக்க முயன்றானே தவிர, அவளிடம் மீண்டும் அற வாழ்வைத் தொடர
அவன் முற்படவில்லை.

இத்தகையச் செயல்களின், விளைவானது மிகவும் மோசமானதாகதான் இருக்கும். கைகேயியின் செயலால், மன்னர்


தயரதனும் கொடுத்த வாக்கை மீட்க இயலாமல், தன் முடிவால் மகனின் நல்வாழ்க்கை பறிப்போனது. இதனை
ஏற்க இயலாமல், அங்ஙணமே அவரும் மகனின் பிரிவைக் கண்டதோடு உயிர் பிரிந்தார். மேலும், அயோதியின்
அரியனையில் அரசனாக முடிசூட்ட வேண்டிய இராமன், தன் தந்தையின் அணைப்படி அனைத்தையும்
விட்டுவிட்டு பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு வனவாசம் செல்லவும் நேறிட்டது. அண்ணன் நலனை கருதிய
தம்பி இலட்சுமனனும், கணவனின் நலனைக் கருதிய சீதையும் அரச வாழ்க்கையை விட்டு இராமனுடன் செல்லும்
நிலையும் ஏற்பட்டது.

ஆகையால், இதன்வழி நாம் பெற வேண்டிய படிப்பினைகள் பலவுண்டு. மனிதர்களாகிய நாம் தன்னலமற்ற
முறையான வாழ்க்கை வாழ வேண்டுமெனில், பொதுநலத்துடன் நடந்துகொள்வது சால்பு.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி(118)

என வள்ளுவனின் வாய்ச்சொல்லுக்கேற்ப ஒரு சாரார் பக்கமில்லாமல் பிறர் நலனையும் கருதி வாழவ்து நன்மை
பயக்கும். பிறகு, எண்திசயிலும் கருத்து எழுந்தாலும், ஆழமாக சிந்தித்து, அவற்றின் விளைவுகளையும்
பகுத்தாய்ந்தப் பின்னரே செயல்பட வேண்டும். ஏன்னில், அது எதுவாயினும் நம்மையும் பிறரையும் பாதிக்காமல்
மிகச் சரியான் முடிவிற்கு வித்திடும்.

இந்த முரணான கருத்தினை இன்றைய காலத்தோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்கையில், சுமந்து, பெற்றெடுத்து
வளர்த்த ஈன்றோரை, தான் வாழ்க்கையில் சிறந்ததொரு நிலைக்கு மேம்பட்டப் பின் மறக்கின்றனர். அவர்களின்
நிழலில்தான் உயர்ந்ததையும் நினைக்கத் தவறி பெற்றொரைப் புரக்கணித்து, தன் மனைவி மக்கள் என சிந்தித்து
தனக்கென சுயநலமாக ஒரு பாதையை வகுத்துகொண்டு செல்கின்றான்; தன் தாய்தந்தையரை முற்றிலும்
விட்டுவிடுகின்றான். தொடர்ந்து, இன்பத்திலும் துன்பத்திலும் பங்குண்டு என்பதனை வாய்மொழியாக மட்டுமே
கூறிவிட்டு, வாழ்க்கை என்று வருகையில் அவரவர் தம் பாதையைப் பார்த்து நடைப்போடுகின்றனர். ஒருவனைக்
கொண்டு ஒருவன் முன்னேறினாலும், அதற்கான அங்கிகாரத்தைப் பெற மட்டும் சுயநலம் எனும் பேய் தலை
விரித்து ஆடுகையில் அக்கணமே நன்றியை மறக்கின்றனர்; தோல்கொடுத்த நண்பனையும் எட்டி உதைக்கின்றனர்.
தன்னைப் பற்றி மட்டுமெ சிந்தித்து கொண்டு, யாரைப் பற்றியும் எதை பற்றியும் பாராமல் தங்களின் சொந்த
வாழ்விற்கு மட்டுமே முக்கியத்துவமளிக்கின்றார்கள். அன்மையில் கட்டட குடியிருப்பில் மேல் மாடியிலிருந்து
நாற்காலி எரியப்பட்டதனால், அச்சிறுவன் மீது அது விழுந்து அவன் இறந்தான். இஃது பிறரை எவ்வகையில்
பாதிக்கும் என்பதனை சிந்திக்காமல் சுயநலமாகச் செயல்பட்டதன் விளைவு.

பழிவாங்குதல்
ஒருவர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ, இழைக்கும் தவற்றை மன்னிப்போம் மறப்போம், என புராணங்கள்
வழி நம் சான்றோர்கள் கூறியது போல் இல்லாமல், அதை மனதில் வைத்து கர்வம் கொண்டு வஞ்சம் தீர்ப்பதே
பழிவாங்குதல் எனப்படும். வஞ்சத்தைத் தீர்ப்பதன் வழியே, அத்ம திருப்தியை ஏற்படுத்திக்கொள்வதுதன்
பழிவாங்குதலின் முக்கிய கூறாகக் கருதப்படுகிறது. முரணான ஒன்றாக விளங்கும் இச்செயலை,
கம்பராமாயணத்திலும் நாம் கண்டறியலாம். சிறுவயதில் இராமன் கூனிக்கு அறியாமல் செய்த தவற்றை, வஞ்சக
எண்ணம் கொண்ட கூனி வஞ்சத்தைத் தீர்க்க எண்ணினாள். சூழ்ச்சி செய்து அதனுள் கைகேயியையும் சிக்க
வைத்து நல்லதொரு குடும்பச் சூழலை சீர்குலைத்து வேடிக்கைக் கண்டாள். அவள் பழிவாங்க
வேண்டுமென்பதற்காகக் கைகேயியைப் பகடகாயாகப் பயன்படுத்தியதோடு, அவள் திட்டமிட்டப்படி இராமனையும்
வனவாசத்திற்கு அனுப்பினாள்; இராமன் வாழ்வில் துன்பப்பட வேண்டும், துயரப்பட வேண்டும் என்ற அவள்
எண்ணமுன் ஈடேறியது. வயது வரம்பையும் பொருட்படுத்தாமல், கீழ்த்தனமாக அதுவும் இராமனை பழிவாங்க
வேண்டும் என எண்ணிய கூனியின் முருகுணர்ச்சியானது அங்கு உடைந்து விட்டது. வாழ்வியல் உண்மைகளை
உணராத கூனி, முற்றிலும் நடுநிலையாக நடந்துகொள்ளாமல் சிறந்த ஒருவனுக்குத் தீங்கு இழைத்தாள்.
அவ்விடத்தில் கொண்டிருக்க வேண்டிய அழகுணர்ச்சியை இழந்தாள். கம்பராமாயணத்தில், மற்றொரு நிகழ்வும்
இம்முரணான கருத்திற்கு இன்னும் வலு சேர்ச்சின்றது. தன் தங்கைச் சூர்ப்பனகைக்கு இராமனால் அவளம்
நேர்ந்துவிட்டது, என எண்ணிய இராவணனும் பழிவாங்கத்துடித்தன்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்(175),

என்ற குறளுக்கேற்ப, இராமனின் மனைவி என்பதை அறிந்தும், பழிவாங்கும் நோக்கில் சீதையை அடைய
எண்ணினான் அரக்கனின் பேரரசன் இராவணன். இராமனை பழிவாங்க வேண்டுமென்பதற்காகவே சீதையைத்
தன் வசப்படுத்தி தன் தாரமாக்க நினைத்தான்.

இவ்வாறான செயல்களால், ஏற்படும் விளைவுகளும் பலதாக்கத்தினை நிகழச்செய்யும். கூனி பழிவாங்க


எண்ணியதால் மன்னர் தயரதனின் இல்ல சுபிட்சமும் சரிந்தது; பிள்ளைகளுக்கும் பெற்றொருக்கும் இடையில்
பெரும் விரிசல் ஏற்பட்டது. இராமனின் தாய்தந்தையாக இருப்பின் பிறர் சூழ்ச்சியால் தங்களின் கடமைகளை
நிறைவேற்றுவதிலும், நடுநிலமையாகச் செயல்படுவதிலிருந்தும் தவறினர். கூனியின் தீய்யெண்ணம்படியே இராமன்
காட்டுக்குச் செல்ல முற்பட்டான்; இராமனின் மனைவியான சீதையும், இராமனுக்குத் தம்பியான இலட்சுமனனும்
தங்களின் வாழ்க்கைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், இராமனுக்கே அற்பணித்தனர். மூவருமே பதினான்கு ஆண்டு
வனவாசத்தில் சுக போகங்கள் அனைத்தையும் துறந்து வாழ துவங்கினர்.

நாம் இத்தகைய கருத்துக்கள் வழி அறிய வேண்டிய படிப்பினைகளானது நிறையவுள்ளது.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று(180),


என வள்ளுவர் கூறுவது போன்று பிறர் நமக்குச் எந்நிலையிலும் எவ்வகையிலும் செய்யும் உதவியை உயிர்
உள்ளவரை மறக்கலாகாது. அவர் நமக்குச் செய்யும் எவ்வகைத் தீங்கையும் சிந்தைக்குக் கொண்டு செல்லாமல்
அங்ஙனமே மறந்துவிடுவது சால்பு. ஏனெனில், இதுவே நாளை பிறர் மீதான கோவத்தையும், வஞ்சக
எண்ணத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கும். மேலும், மற்றொரு படிப்பினையாக, நாம் சில நேரங்களில்
சீற்றத்தாலும், அறிவீனத்தாலும் பிறர் மீது கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற நினைக்கும்
பொழுது, அதனால் ஏற்படும் விளைவினையும் நன்கு ஆராய வேண்டும். சுவாமி விவேகானந்தரின் கூற்றுப்
போல், பூமியைப் போன்று எதையும் பொறுத்துக் கொண்டு, நாம் நம்முடைய பாதையில் பயணிப்பது நனிநன்று.
பொங்கி எழுந்து அதை பிறர் மேல் வெளிப்படுத்துவதால் பின் விளைவானது, நாம்மால் தாங்க இயலத்தாக
இருக்கும்.

இன்றைய வாழ்வியலோடு ஒப்பீடுகையில், முரணான இக்கருத்திற்கு ஒரிரு சான்றுகளும் உண்டு.


எடுத்துரைக்க்கையில், பிறரால் ஏற்பட்ட தீங்கிற்கு பழிதீர்க்கும் வகையில், அவர்களுக்குகான வாய்ப்புகளையும்
அங்கிகாரங்களையும் தட்டிப் பறிக்கின்றனர். இதனால், ஒருவருக்கு ஏற்படும் பேரிழப்பைப் பற்றிய கவலையும்
அக்கறையும் இக்கலியுகத்தில் யாருக்கும் எச்சூழலிலும் இல்லை. அவரவர்கு ஏற்றார் போல் பிறரை பழிவாங்கி
தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்கின்றனர். பிறகு, எந்த ஈவு இரக்கமுமின்றி, மனசாட்சிக்குப் புறம்பாகவும்,
இறைச்சொல்லுக்கும் எவ்வித மதிப்புமின்றி தங்களின் வஞ்சத்திற்கு மாற்றாரைப் பகடகாயகப் பயன்படுத்தும்
காலமாக மருவி வருகின்றது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதற்கு மாறாக , அவன் அடைந்த
துன்பத்தைதான் பிறர் மீது சுமத்துவதோடு, அதில் அவர்கள் எதிர்நோக்கும் வேதனையிலும் குளிர்காய
எண்ணுகிறார் இக்கால மானிடர்கள். இதற்குச் சான்றாக, இடையில் நடந்த தாரணியின் கொலை வழக்கு. அவள்
அவ்விளைஞனின் காதலை ஏற்க மறுத்ததால், பெண் என்றும் பாராமல் அவளைக் கொலை செய்தான். காதலை
ஏற்காததற்கு அவன் பழிவாங்க நினைத்ததன் முடிவு.

பின் விளைவை ஆராயாமல் வாக்குக் கொடுப்பது

பிற்காலத்தில் நிகழக்கூடிய நன்மை தீமைகளை அலசி ஆராயாமல், ஒருவருக்குக் கொடுப்படும் வாக்கானது


மிகவும் விபரீதமானது. ஒன்றனைப் பற்றியும் தெள்ளத தெளிவாகக் கண்டறியாமல் அளிக்கப்படும் முடிவால் பல
சிக்கல்களைச் சந்திக்கவும் நேறிடும். இதனையே நாம் கம்பராமாயணம் காப்பியம் காட்டும் சான்று வழி
அறியலாம். கைகேயியின் பிடிவாதத்தாலும் வாதத்தாலும்தான் மன்னர் தயரதன் இராமன் வனவாசம் செல்ல
ஒப்புக்கொண்டார். கைகேகியின் சதிதிட்டத்தை அவர் கடுகளவும் அகக் கண் கொண்டு பார்க்காமல், புறத்தே
உள்ள சிக்கல்களை மட்டும் கலைய முயன்று, எடுத்த முடிவின் பின் விளைவையும் சிந்திக்காமல் ஆணையிட்டார்.
மேலும்,

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு(642),


என்ற பொதுநூலின் வார்த்தைக்கேற்ப, சம்பராசுரனுடன் போரிட்டப் போது மன்னர் தயரதன் கைகேயியிடம்
கேட்ட இரண்டு வரங்களை அவள் சதிதிட்டத்திற்கு சாதகமாகப் பயன்படுத்துக்கொண்டாள். அரசனால், தான்
கொடுத்த வரங்களையும் இட்ட கட்டளையையும் மீட்க இயலாமல் துயரத்தில் மாண்டுவிடுகிறார். இதில், ஒரு
மன்னராக தயரதன் கொண்டிருக்க வேண்டிய முருகுணர்ச்சிகளை அவர் இழந்தார். மன்னர்க்கு அழகு, செங்கோன்
முறைமை என்பதற்கொப்ப, எதனையும் ஆராயாமல், பின் விளைவுகளைச் சிந்திக்காமல் ஆணையிட்ட
அங்ஙணமே நெறி தவறிவிட்டர். தன் இராஜாங்கத்தில் பிழை ஏற்படுவதற்கு அவரே காரணமாகிணார்.
இச்சூழலுக்கு மற்றொருச் சான்றாக, உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் எனும் நூல் வழி
எடுக்கப்பட்டது. அதாவது, குண்டலகேசியில் மன்னன் தன் மகள் பத்தா விரும்பிவிட்டள் என்பதாலே, சற்றும் பின்
வரக்கூடிய சிக்கல்களை ஆராயாமல், அத்துவன் திருடனாக இருப்பின் அவனை சிறையிலிருந்து விடுவித்து
பத்தாவுக்கு மணமுடித்தார். என்னத்தான் செய்தாலும் நாய் வாலை நிமிர்த்த இயலாது என்று சான்றோர்கள்
கூறூவது போன்று, இறுதியில் சத்துவன் மனைவியென்றும் பார்க்காமல், அவளுடை செல்வங்களுக்கே அலாதி
ஆசைக்கொண்டு அவற்றை அடைய எண்ணினான்.

இந்நிலையில் பலவாறு பாதிக்கக்கூடிய விளைவுகளானது பெரிதளவும் உண்டு. மன்னரின் ஆணையால், தந்தை


சொல் மீறாத இராமன் வனவாசம் செல்ல ஒப்புக்கொண்டான். தன் குடும்பத்தையும் மீறி, நாட்டையும் மீறி,
தாந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி காட்டிற்கே பயணம் செய்தான். சீரும் சிறப்பும் நிறைந்த குடும்பச் சூழல்
மறைந்து, இருள் சூழ்ந்தது. கணவன் மனைவி, சாகோதர சகோதரிகள், தாய் சேய் போன்ற பிரிவினைகளுக்கு
மன்னரின் முடிவானது முடிச்சுப்போட்டது. ஆட்சி முறையிலும் திண்டாட்டம் நிலவியது.

இதன்வழி நமக்குப் படிபினையாகப் பார்த்தோமேயானால், அறிஞர்களின் வார்த்தை என்ற நூல் மூலம், சொல்லும்
செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே, உலகில் மிகவுன்ம் இன்பமாக வாழும் மனிதன் என ஜவஹர்லால்
நேரு சொன்னது போல், நாம் வாக்கும் செயலும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கை
சிறப்பானதாக அமையும். நாமும் பிறருக்கு முன்னோடியாகவுன் திகழ முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேலும், ஒருவருக்கு வாக்கையோ ஓர் உறுதியையோ அளிக்கும் முன் அதனால விளையக்கூடிய நன்மை
தீமைகளை ஆழமாக ஆராய்வது சால்பு. இதனால், நாளடைவில் பல சிக்கலிலிருந்து விடுப்படுவடுதோடு,
பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதையும் நம்மால் உறுதி செய்ய இயலும்.

இக்கூற்றினை இன்றைய வாழ்க்கையோடு ஒப்பிடுகையில், மனிதனால் கொடுக்கப்படுகின்ற வாக்கும், உறுதியும்,


நிலையற்றதாகவும், கடக்கின்ற ஆற்று நீராகவும்தான் தெரிகிறது. இன்று ஒருவர் மற்றொருவருக்குத் தரும்
சத்தியத்தில் மெய்யென்பதே கிடையாது; அதுவும் அச்சத்தியத்தால் மேலும் பல சிக்கல்களே உருவாகுகின்றன.
எடுத்துக்காட்டாக கடன் கொடுக்கல் வாங்கலில், முக்கிய பணிகளைப் பூர்த்திச் செய்ய இயலா நிலை, சந்திப்பை
நிறைவேற்றுவதில் சிக்கல் என இப்படி பலவாறு இன்று சொல்லிய வாக்கில் நிலையாக இருக்க முடியவில்லை.
காரணம் மனிதனுக்கு வாக்குத்தான் வாழ்க்கை என்ற காலமெல்லாம் மறைந்து, இப்பொழுது எதுவுமே
பொருட்டல்ல. தொடர்ந்து, மனம் போகிற போக்கில் எடுத்தற்கெல்லம் வாக்குறுதிக் கொடுத்துவிட்டு, பின் அதனால்
வரக்கூடிய இன்னல்களை பாரமாக யார்மீதாவது சுமத்திவிடுகிற நிலை இன்று. வாக்குத் தவறினால் மானம்
இழந்து உயிர் நீத்தவர்களின் காலம் மருவி, எத்தகைய விளைவு ஏற்ப்பட்டாயினும் பிறரை அது ஈடுபடுத்தி
துன்பப்படுத்தினாலும் வேடிக்கை மட்டுமே பார்க்கின்ற கூட்டம் இன்று அதிகம். தன்னால் ஏற்பட்டயினும்
எந்தவித குற்ற உணர்ச்சியுமின்றி செயல்பட்டு, மேலும் தவறுகளையும் பாவங்களையும் கூட்டிகின்றனர்.

பொய் முகம் காட்டுதல்

எப்படியாகயிருந்தாலும் தான் நினைத்ததை சாதிக்க வேண்டு என்பதற்காகவும், தன் குற்றங்களை


எத்தடயமுமின்றி மறைப்பதற்காகவும் முகத்திரைப் போட்டு பாசாங்கு செய்வது. இதற்குக் கம்பராமாயணத்தில்
சிறந்த்தொரு சான்றாக, கைகேயியின் செயல் ஆகும். அவள், தான் நினைத்தப்படியே இராமனை நாட்டை
ஆளவிடாமல், பரதனே அரியனையில் அமர வேண்டுமென்பதற்காகவே தன்னை அலங்கோலப்படித்திக் கொண்டு
மன்னர் தயரதனிடம் வாதமிட்டால். தன் சதிதிட்டத்தை மன்னர் கண்டு அதை முறியடிக்காதப்படி
அலங்காரத்துடன் இருந்தத் தோற்றத்தைக் கலைத்து, பொய் முகம் காட்டி எண்ணியதைச் செய்து முடித்தாள்.
மன்னரும் அவளுக்கிணங்கி இராமன் காட்டிற்குச் செல்லும்படி கட்டளையிட்டார். பெண், தாய், அரசி என்று
மூன்று நிலையில் கடமைகளைக் கொண்டிருக்கும் கைகேயி, இவ்வாறு நடந்ததால் இம்மூன்று நிலைகளின்
மகத்துவத்தையும் பிறவிப்பலனையும் அடைய தகுதியற்றவலாகிறாள். அவளின் முருகுணர்ச்சியானது அங்கு
மடிந்துவிடுகிறது. தொடர்ந்து பிறச்சான்றாக, மகாபாரத்ததில் காண்பிக்கும் காட்சி. அதாவது, இதுநாள்வரை
அண்ணன் துரியோதனனுக்கு மிக விசுவாசமான, பெரிய பொருட்டாக இல்லாமல் தெரிந்த துச்சாதனனின்
சுயரூபமானது அன்று வெளியானது. காரணம் அவன் த்ரௌபதியை மோசம் செய்வதிலும் அவளை
அடைவதிலும் நோக்கமாக இருந்தான்; சரியான நேரத்தில் அவன் எண்ணத்தைச் செயல்படுத்துவதற்காக
பொய்முகம் காட்டி நல்லவன்போல் நடித்து ஏமாற்றினான். அத்தருணம் வந்ததும் தன் நோக்கத்தை
வெளிப்படுத்தினான்.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்

தீமை புரிந்துஒழுகு வார்(143),

எனும் திருக்குறளுக்கேட்ப, துச்சாதனனின் பாத்திரமானது இவ்வாறே வரையறுக்கப்பட்டு, அவனும்


இறந்தவனைவிட கீழ்த்தனமாகப் பொருள்படுவான்.

ஆக, இவ்வாறு நடந்துகொள்வதால் விளை தீமைகளைப் பற்றி சிந்திக்கும் தன்மையானது இல்லை. தான்
நினைத்ததை மட்டும் சாதிதால் போதுமென நினைத்து கைகேயி பொய் முகம் காட்டியதற்கு, ஏற்பட்ட விளைவே
இராமனின் வனவாசமும் மன்னர் தயரதனின் உயிரிழப்பும். அவள் பிடிவாதத்தால் செய்த செயலே நலல்
மகனையும் இழந்து, நாட்டிற்கு நல்ல அரசனையும் இழந்து நின்றாள். மேலும், தன்னை முழுமனதோடு தாய் என்று
நினைத்த இராமனின் அருமையை சூழ்ச்சி என்று வரும்பொழுது மகன்களினிடையில் பேதம் பார்த்து இறுதி
நொடியிலும் உணரத் தவறினாள். இராமனுக்கும் சீதைக்கும் தகப்பன் என்றும் மாமனார் என்றும் இருந்த உரிமை
உறவைப் பறித்தாள். அவள் சதியில் இலட்சுமனனும் சதியென்று தெரியாமல், பாசமும், அக்கறையும் கண்களை
மறைத்தால், தானே வந்து வீழ்ந்தான்.
இவையெல்லாம் கொண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிச்சயம் உண்டு. தான் எண்ணியதை
அடைந்தால் மட்டும் போதுமே, நிறைவேறினால் போதுமே என்கிற மாசடைந்த சிந்தனையைக் கழற்றி எரிய
வேண்டும். இன்னும் சொன்னால், அத்தீய எண்ணத்தை முறியடிப்பதற்கு பொய் முகம் காட்ட வேடமிடக்கூடாது.
பாசாங்கு செய்வதே நினைத்ததை நடத்திமுடிக்க ஒரு ஆயுதம் என்பதை மனதில் பதையவத்தலாகாது. ஏனெனில்,
அந்நாடகம் முடிந்ததும் பலவாறு சிக்கல்கள் நேர்ந்தால், நாமே அதற்கு முமுதற்காரணம்; வேடம் கலைந்ததும்
மீண்டு பழைய நிலைக்கு வீழ்ந்த ஒன்றை இட்டுச் செல்வது மிகக் கடினமான காரியமாகும்.

இச்சூழலை நாம் இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், இயல்பாகவே அதிகம் பொய் முகம்
காட்டி, நாடகம் போடும் மானிடருக்கு இங்கு பஞ்சமில்லை.

எல்லாம் நாடக மேடை – அதில்

எங்கும் நடிகர் கூட்டம்,

என்ற பாடல்வரிக்கேற்ப, எதிலும் எப்பொழுதும் பாசாங்குச் செய்து செயல்படுபவரே இன்று அதிகம். நல்லதொரு
சான்றாக, கடந்த மாதம் செல்லியல் எனும் வலைப்பகுதியில், வெளிவந்த செய்தியானது, துணைப்பிரதமர் என்ற
பதவிக்கே இலக்கணமாக திகழ்ந்த ஆஸ்திரேலிய துணைப்பிரதமர், தான் கொண்டிருந்த கள்ள உறவு
அம்பலப்பட்ட்தால் பதவி விலகினார். எவ்வள்வுத்தான் நல்லவர் போல் பணியில் அமர்ந்தாலும் யாரும்
அறிந்திடாத அவரின் மறுப்பக்கமானது தெரிய வரும்பொழுது, இதுநாள்வரை இருந்த அவரின் நெறிகள் யாவும்
சுக்குநூறாய் உடைந்துவிடும். இதுபோன்று, இன்று அனைவரும் இப்படி பல முகத்திரைகளைக்
கொண்டிருக்கின்றனர். தான் பொய் முகத்துடன் செயல்படுவதாலும், சமூதாயத்தில் பழகுவதாலும் அதனின்
பாதிப்பை அறியான். இப்படி ஒவ்வொருவராக நடிக்கத் துவங்கி, நினைத்ததைச் சாதிக்கையில், கிடைக்கப் பெறும்
விடயாமானது, எந்தவொரு பயனில்லாமலு, உண்மையற்றதாகவும் போய்விடுகின்றது. இவ்வழியே, வாழ்வில்
உயர்வதற்கான சிறந்தப் பாதையென தீர்மானிக்கின்றனர். இதன் உண்மையை அறிந்தவர்களும்கூட , இப்படி
வேடமிடுபவர்களால் தங்களை யாருக்கும் யாதொரு பயனுமில்லாத பாதைக்கு இட்டுச் செல்கின்றனர்.

முடிவுரை

ஆகையால், கம்பராமாயணம் சூழ்வினைப்படலம்படி நாம் அலசி ஆராய்ந்த முரணான கருத்துக்களை அறிந்து


தெளிவு பெறுவதோடு, அதற்கான விளைவுகளையும் படிப்பினைகளையும் நன்கு உய்த்துணர வேண்டும். பின்னர்,
அதனையே வாழ்வில் கடபாடாகக் கொண்டு, முன்னேருவதற்கான மிகச் சரியான தேர்ந்தெடுப்பது நனிநன்று.
இத்தகைய காப்பியங்களே நமக்கு தமிழர் வாவியலைப் படம்பிடித்துக் காட்டும் உயர்நெறி பெட்டகமாக என்றும்
திகழ்கிறது.
மேற்கோள் நூல்கள்

பரந்தாமனார்.அ.கி. (2012). நல்ல தமிழ் எழுத வேண்டுமா? (2 பதி.). சென்னை:


எம்.கே.கிராபிக்ஸ்.

பவணந்தி முனிவர். (1994). நன்னூல் காண்டிகையுரை (2 ed.). சென்னை: ஸ்ரீ வெங்கடேஸ்வரா


அச்சகம்.

வரதராசன்.மு. (2014). தமிழ் இலக்கிய வரலாறு (9 பதி.). சென்னை: சாகித்திய அகாதெமி.

பாலசுப்பிரமணியன்.சி. (1993). திருக்குறள் (1 பதி.). சென்னை: கங்கை புத்தக நிலையம்.

நாராயணவேலுப்பிள்ளை.எம். (2014). உரைநடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் (2 பதி.).


சென்னை: நர்மதா பதிப்பகம்.

மரபின்மைந்தன் முத்தையா. (2017). என்றுமுள தென்தமிழ் (1 பதி.). கோலாலம்பூர்: நாம்


அறவாரியம்.

முருகுபாலமுருகன்.(2011). அரிஞர்களின் வார்த்தை (1 பதி.). சென்னை

தென்றல் பதிப்பகம்.
செல்லியல் ( 5 மார்ச் 2018 ) Retrieved from Bilingual Digital News Media.

http://selliyal.com
பின் இணைப்பு

You might also like