You are on page 1of 5

இடுபணி 2

அ) திறனாய்வு பட்டறையின் மூன்று முக்கியத்துவத்தையும் பயிற்சி ஆசிரியர்களாகிய


நீங்கள் அடைந்த பயன்களுள் ஐந்தனையும் விளக்குக.

1) திறனாய்வு பட்டறையின் மூன்று முக்கியத்துவங்கள்

திறனாய்வு பட்டறை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று குறிப்பாக பயிற்சி


ஆசியர்களுக்கும் இம்மாதிதியான திறனாய்வு பட்டறை முக்கியமாகத் திகழ்கிறது.

இத்திறனாய்வு பட்டறை ஒரு தரமான படைப்பினை படைக்க வழிவகுக்கின்றது. இலக்கிய


படைப்பில் இருக்க வேண்டிய கூறுகளை திறனாய்வு கலையின் வழி நாம் அறியலாம்.
அவ்வகையில் திறனாய்வு பட்டறையில் வழங்கப்படும் ஒவ்வொரு படைப்பின் திறனாய்வு
கூறுகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு சிறப்பான படைப்பினை உருவாக்குவதற்கு
அவசியமாக திகழ்கிறது. உதாரணமாக, கவிதைத் திறனாய்வு கூறுகளின் வழி ஒரு தரமான
கவிதை அதாவது கரு, சிந்தனை சிதறல், உணர்துதல்கள், பாடுப்பொருள்
அக்கபவிதையினை உருவாக்க இத்திறனாய்வு பட்டறை அவசியமாகும்.

அதோடுமட்டுமல்லாமல், கவிதை திறனாய்வு கூறுகள் அடிப்படையில் அதனை


ஆய்வு செய்யும்பொழுது ஒரு வாசகனிடையே கவிதை உருவாக்கும் ஆற்றல்
உருபெறுகின்றது. ஒரு கவிதையின் சிறப்புகளை திறனாய்வு செய்வதன் வழி ஒரு
வாசகரால் அறிப்பட கூடும். அவ்வகையில் வாசகரால் ஒரு கவிதையின் கூறுகளை
அறிந்து ஒரு சிறந்த கவிதையை உருவாக்க இயலுகிறது. ஒரு கவிதை இயற்றுவதற்கான
அனைத்து தன்மைகளையும் கூறுகளையும் கையாள இந்த திறனாய்வு அடிப்படையாக
அமைகிறது என்றால் மிகையாகது. இதுவே ஒரு சிறந்த கவிதை படைப்பாளியை
உருவாக்க பெரும் உந்துதலாக அமைகின்றது.

அதனை அடுத்து, இத்திறனாய்வு பட்டறையின் வழி, வாசகர்கள் படைப்பில் உள்ள


சிறப்புகளையும் குறைகளையும் வெளிப்படையாகப் பேச திறனாய்வு வழியமைத்துக்
கொடுக்கிறது. பொதுவாக, ஒரு இலக்கிய படைப்பினை அதாவது சிறுகதை, கவிதை, நாவல்
போன்றவற்றை திறனாய்வு செய்வதன் வழி அதன் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
அதோடுமட்டுமல்லாமல் அப்படைப்புகளின் குறைகளையும் ஆராய இத்திறனாய்வு
பட்டறை அவசியமாக விளங்குகிறது. ஆகவே, திறனாய்வு பிரதிகளைச் சில
அளவுகோல்களுக்கு ஏற்ப மதிப்பீடு செய்யப்படுகிறது. மதிப்பீடு என்பது வாசகனுக்கு
வாசிப்புக்குள் நுழைய எளிய வழிகாட்டியாகிறது. அதுமட்டுமின்றி வாசகனிடையே ஒரு
படைப்பினை மதிப்பீடு திறனும் வளர திறனாய்வு அத்தியாவசியமாக திகழ்கிறது.

இதனை தொடர்ந்து, திறனாய்வு பட்டறை ஒரு படைப்பினை திறனாய்வு செய்து


அதிலுள்ள கருத்துகளை தெரிந்து கொள்ளவும் வழி வகுக்கின்றது. விமர்சானம் செய்வது
மூலம் ஒரு இலக்கிய படைப்பில் உள்ள பலவிதமான கருத்துகளைத் தெரிந்துக் கொள்ள
முடியும். இதற்கு உதாரணமாக, ஒரு கவிதையில் புறநோக்கு கருத்து, அகநோக்கு கருத்து
புலப்படும் அவ்வகையில் இக்கருத்துகளை அறிவதற்கு உதவுகிறது இத்திறனாய்வு
பட்டறை. படைப்புகளின் பண்புகளை மேலும் சரியாகவும், நிறைவாகவும் புரிந்து
கொள்ளவும் பிறருக்கு விளக்கவும் உதவுகிறது. ஒரு புதிய கோணத்தில், இலக்கிய
பொதுமைப் பண்புகளின் பின்னணியில் திறனாய்வு செய்கின்ற போது, அந்த இலக்கியம்
ஏற்புடைய தளத்தில் வைத்துக் திறனாய்வு செய்யப்படுகின்றது. இவை அனைத்தையும்
பெறுவதற்கு திறனாய்வு பட்டறை என்பது மிகவும் அவசியம்.

2) பயிற்சி ஆசிரியர்களாகிய நான் அடைந்த பயன்களுள்


இத்திறனாய்வு பட்டறையில் கலந்து கொண்டவதன் வழி பயிற்சி ஆசியர்களாகிய நாங்கள்
பல பயன்களை அடைந்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில்
இத்திறனாய்வு பட்டறையின் வழி நாங்கள் சுயமாக, ஒரு சிறுகதையும் கவிதையும்
உருவாக்க வழிவகுத்துள்ளது இப்பட்டறையானது. சிறுகதை திறனாய்வு கூறுகளின் வழி
ஒரு தரமான சிறுகதை அதாவது அச்சிறுகதையின் கரு, கதைப்பின்னனி, படிப்பினைகள்,
கதாப்பாத்திரமும் அதன் பண்புலன்களையும் கொண்டு அச்சிறுகதையினை உருவாக்க
கற்றுத்தந்துள்ளது.

அதோடுமட்டுமல்லாமல், கவிதை திறனாய்வு கூறுகள் அடிப்படையில் அதனை


ஆய்வு செய்யும்பொழுது ஒரு வாசகனிடையே கவிதை உருவாக்கும் ஆற்றல்
உருபெறுகின்றது. ஒரு கவிதையின் சிறப்புகளை திறனாய்வு செய்வதன் வழி ஒரு
வாசகரால் அறிப்பட கூடும். அவ்வகையில் பயிற்சி ஆசிரியர்களாகிய எங்களால் ஒரு
கவிதையின் கூறுகளை அறிந்து ஒரு சிறந்த கவிதையை உருவாக்க இயன்றது. ஒரு கவிதை
இயற்றுவதற்கான அனைத்து தன்மைகளையும் கூறுகளையும் கையாள இந்த திறனாய்வு
அடிப்படையாக அமைகிறது என்றால் மிகையாகது. இதுவே ஒரு சிறந்த கவிதை
படைப்பாளியை உருவாக்க பெரும் உந்துதலாக அமைகின்றது.

இத்திறனாய்வு பட்டறையின் வழி, ஒரு படைப்பினை திறனாய்வு செய்து அதிலுள்ள


கருத்துகளை தெரிந்து கொள்ள இயன்றது. இத்திறனாய்வு பட்டறையின் வழி ஒரு
படைப்பினை திறனாய்வு செய்து அதிலுள்ள கருத்துகளை தெரிந்து கொண்டோம்.
விமர்சனம் செய்வது மூலம் ஒரு இலக்கிய படைப்பில் உள்ள பலவிதமான கருத்துகளைத்
தெரிந்துக் கொள்ள முடிகிறது. இதற்கு உதாரணமாக, ஒரு கவிதையில் புறநோக்கு கருத்து,
அகநோக்கு கருத்து புலப்படும் அவ்வகையில் இக்கருத்துகளை அறிவதற்கு உதவியது
இத்திறனாய்வு பட்டறை. படைப்புகளின் பண்புகளை மேலும் சரியாகவும், நிறைவாகவும்
புரிந்து கொள்ளவும் பிறருக்கு விளக்கவும் உதவுகிறது. ஒரு புதிய கோணத்தில், இலக்கிய
பொதுமைப் பண்புகளின் பின்னணியில் திறனாய்வு செய்கின்ற போது, அந்த இலக்கியம்
ஏற்புடைய தளத்தில் வைத்துக் திறனாய்வு செய்யப்படுகின்றது. இவை அனைத்தையும்
பெறுவதற்கு திறனாய்வு பட்டறை வழிவகுத்துள்ளது.

அதனை தொடர்ந்து, படைப்பில் உள்ள சிறப்புகளையும் குறைகளையும் வெளிப்படையாகப்


பேச இத்திறனாய்வு பட்டறை வழியமைத்துக் கொடுக்கிறது. பொதுவாக, ஒரு இலக்கிய
படைப்பினை அதாவது சிறுகதை, கவிதை, நாவல் போன்றவற்றை திறனாய்வு செய்வதன்
வழி அதன் சிறப்புகளை அறிந்து கொள்ளலாம். அதோடுமட்டுமல்லாமல்
அப்படைப்புகளின் குறைகளையும் ஆராய இத்திறனாய்வு பட்டறை அவசியமாக
விளங்குகிறது.இதில் கலந்து கொண்டதன் வழி இலக்கிய படைப்பினை திறனாய்வு
கூறுகளின் அடிப்படையில் ஆராய்ந்து அதிலுள்ள நிறைகளையும் குறைகளையும்
கண்டறிய இயன்றது. ஆகவே, திறனாய்வு பட்டறை ஒரு படைப்பின் குறை நிறைகளை
ஆராய்ந்து கண்டறிய வழிவகுத்துள்ளது.

அதனை அடுத்து, பழைய இலக்கியங்களை ஆராயவும் புதிய இலக்கியங்களை


ஆராயவும் ஒரு தூண்டுகோலையும், முறையியலையும் பெறவதற்கு இத்திறனாய்வு பட்டறை
வழிவகுத்துள்ளது. இப்பட்டறையில் கிடைக்கப்பெற்ற திறனாய்வு கூறுகளின் அடிப்படையில்
நமது பழைய இலக்கியங்களை ஆராயவதற்கு வழிவகுத்துள்ளது. சிறுகதை, கவிதை, நாவல்,
இதிகாசங்கள் போன்றவற்றை ஆராய்ந்து அதில் புலப்பட்ட கருத்துகளை அறிந்தது
மட்டுமல்லாமல், அதோடு புதிய இலக்கியங்களையும் ஆராய்ந்து அதில் புலப்பட்ட
கருத்துகளைக் கொண்டு இரண்டையும் ஒப்பீடு செய்ய வழிவகுத்துள்ளது இத்திறனாய்வு
பட்டறை.

இறுதியாக, ஒவ்வொரு படைப்பினை ரசிக்கும் தன்மையைக் உணரப்படுத்தியது


இத்திறனாய்வு பட்டறை. பொதுவாக, இயல்பாகவும் ஒரு செய்தி சொல்லப்படுமானால்,
அதனைக் கேட்பவர் விரும்பிக் கேட்பதில்லை, கேட்பவரை, எழுந்திருக்கவிடாமல் ஈடுபாடு
கொள்ளச் செய்வது அதனுடைய சார்ந்த பகுதியாகும். இலக்கியத்திற்கு அந்த இயல்பு
உண்டு. இவ்வாறாக இலக்கியத்தின் தன்மையை உணர்ந்து அதனை ரசிப்பதற்கு
வித்திட்டுள்ளது இத்திறனாய்வு பட்டறை. உதாரணத்திற்கு, கவிதையில் புலப்படும் அதன்
கருத்துகளை வாசித்து அதன் பொருளை அறிந்து கொண்டு அக்கவிதையை ரசிக்க
இயன்றது. எனவே, இத்திறனாய்வு பட்டறை வாசகர்களின் ரசிப்பு தன்மையை வளர்ச்
செய்கிறது என்று கூறினால் அது வெள்ளிடமலையாகும்.

எனவே, திறனாய்வு பட்டறையின் வழி நாம் பல பயன்களையும் அதன்


முக்கியத்துவத்தையும் அறிய முடிகிறது. இலக்கியத்தின் பல்வேறு பண்புகளைத் திறனாய்வு
விளக்குகிறது. அவ்வகையில் திறனாய்வு பட்டறை என்பது அனைவருக்கும் முக்கியமான
ஒன்று குறிப்பாக பயிற்சி ஆசியர்களுக்கும் இம்மாதிதியான திறனாய்வு பட்டறை
முக்கியமாகத் திகழ்கிறது.
ஆ. நீங்கள் எழுதிய கவிதையின் கருவினை தேர்வு செய்த காரணத்தையும் உங்கள்
அனுபவத்தையும் விளக்குக.

“என் உயிந் நாடியே” என்ற தலைப்பைக் கொண்டுள்ள எனது கவிதை பல காரணங்கள்


உட்படுத்தி புனைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஒரு தாய் மற்றும் மகளின் உறவை
சித்தரிக்கும் வகையில் இக்கவிதைப் புனைக்கப்பட்டுள்ளது. ஒரு தாயின் சிறப்பையும்
பண்புகளையும் தியாகங்களையும் சித்தரிக்கும் கவிதையாகும். ஆவரின் தியாகங்கள்
என்னிலடங்கா என்பதையே இக்கவிதையின் கரு எழுந்துள்ளது. அதாவது இக்கவிதையில்
இளம் பருவத்தின் படிவாசலில் இருக்கிற மகளுக்கும் , சமூகத்தில் பெண்ணின் இருப்பை
உணர்ந்த அம்மாவிற்கும் இடையே, போராட்டமும் அன்பும் பதற்றமுமான ஒரு
கதவொன்று திறந்திருப்பதை உணரமுடியும். தன்னுடைய இளமை காலத்தை மகளின்
பருவத்தோடும், வாழ்வோடும் இணைத்து ஒரே கணக்கில் புதிய கதை ஒன்றை எழுதி
கொண்டிருக்கும் மனம் அம்மாவுக்கு வாய்த்திருகிறது. அதே போல் அம்மாவின் கதைக்குள்
அடங்காத கனவொன்றை காண்பது என்பது மகளுக்கு நிகழ்கிறது. சமூகம் அறிமுகம்
செய்திருக்கிற துயரங்களும், போராட்டங்களுக்கும் மத்தியில், வாழ்தலின் மென்மையை
பத்திரபடுத்திருக்கும் பெண்ணொருத்தி தன்னுடிய இளம்பருவத்து மகளை தாயாகவும்.
தோழியாகவும், மகளாகவும் ஒரு சேர உணர்கிறாள். அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள
உறவு அவர்களிடயே ஒவொவொரு பருவத்திலும் ஒவ்வொரு வாசலை திறந்து வைக்கிறது.
பதின் பருவத்தில் மகள் இருக்கும் அம்மாக்கள் ஆசீர்வதிக்கபட்டவர்கள். நாற்பதில்
இருக்கும் அம்மாக்கள் தங்களுடிய இளமையை மீட்டெடுத்துகொள்ள மகள்களே
உதவுகிறார்கள். அத்தனை எளிதில் சொற்களில் சொல்லிவிட இயலாத பரவசத்தை தன்
மகளிடம் காணுகிற அம்மாக்கள், தங்களுடிய தளர்ந்த உடல் களைந்து அவர்களுடிய
வளரிளம் பாருவ நாட்களின் ஆனந்தத்தை அணிந்து கொள்கிறார்கள்.

இதோடு, எனது அனுபவம் என்ற அடிப்படையில் பார்த்தால் இன்றைய நிலையில்


பல பிள்ளைகள் தங்களின் தாயின் தியாகத்தை உணராமல் இருக்கின்றார்கள். தாயின்
தியாகத்தை மனதில் கொள்ளாமல் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைகாக தன் தாயின்
சொத்துகளை அபகரிக்கப்பதே கொள்கையாக கொள்கிறார்கள். மேலும், தாய் என்றாலே
இயல்பாகவே அவர் சிறந்த பண்புகளையும் , கருணை உள்ளத்தையும் படைத்தவர் ஆவர்.
இக்காலகட்டத்தில், இக்குணம் பெற்றோர்களிடம் இருந்து வருகிறது இருப்பினும்
குழந்தைகளிடம் காண்பது அறிதாகிவிட்டது. எனவே, இச்சூழலை நான் அடிப்படையாக
கொண்டே நான் இக்கவிதையை எழுதி உள்ளேன்.

You might also like