You are on page 1of 111

சு.

தமிழ்ச்செல்வி படைப்புகளில்

குடும்பம்

பாரதியார் பல்கலைக்கழகம்

ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்., தமிழ்) பட்டத்திற்காக

அளிக்கப்படும் முழுநேர ஆய்வேடு

ஆய்வாளா்

ந. மலர்விழி, எம்.ஏ., பி.எட்.,


பதிவு எண்: 2019R0768

நெறியாளர்

முனைவர் வெ. பன்ன ீர்செல்வம்


உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,jkpo;j;Jiw>
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
காங்கேயம்.
1

தமிழ்த்துறை

வேளாளர் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)

ஈரோடு-638 012
மார்ச்-2022
முன்னுரை

மனிதனின் நாகரிக வளர்ச்சிகளுள் மிகச் சிறந்தது மொழியாகும். மனிதனின்

மனக் கருத்தைப் பேச்சு வடிவிலும் எழுத்து வடிவிலும் புலப்படுத்தப் பயன்படும்.

மொழி இல்லையாயின் நாகரிகம் இல்லை. எனவேதான், மொழியை நாகரிகக் கருவி

எனக் கருதுகின்றனர். இம்மொழியின் வடிவே இலக்கியம் எனப்படும். மனித

வாழ்வின் சிறப்புகளுள் ஒன்றாகக் கருதப்பெறும். மொழியால்தான் இலக்கியம்

அமைகின்றது. எனவேதான் பிற கலைகளைவிட இலக்கியம் பெரிதெனவும் சிறந்து

விளங்குகிறது.

நவன
ீ இலக்கியத்தில் புதினம் படைத்த பெண் எழுத்தாளர்களுள்

குறிப்பிடத்தக்கவர் சு. தமிழ்ச்செல்வி ஆவார். இவர் எழுதிய புதினங்களில்

பெண்ணியக் கருத்துக்கள் நிரம்பி உள்ளன. மேலும், படைப்பாசிரியர் படைத்துள்ள

புதினங்களில் பெண் பாத்திரங்கள் முதன்மை பெறுகின்றனர். இவ்வகையில்

படைப்பாசிரியார் பாத்திரங்களின்வழி குடும்ப அமைப்பு முறையை எவ்வாறு தம்

படைப்புகளின் வழி குறிப்பிடுகிறார் என்பவற்றை மையமாகக் கொண்டு இவ்வாய்வு

நிகழ்த்தப்படுகின்றது.

ஆய்வுத் தலைப்பு
2

“சு. தமிழ்ச்செல்வி படைப்புகளில் குடும்பம்” என்ற தலைப்பில் இவ் ஆய்வு

அமையப்பெறுகின்றன.

ஆய்வுப் பொருள்

புதினப் படைப்பாளி, சமூக வாழ்க்கையின் பன்முக உண்மைகளைச்

சித்தரிக்கின்ற நடப்பியல் காலப் படைப்பாளி ஆவார். சமூகம், பன்முகத்

தன்மைகளைக் கொண்டதென்பதால், புதினத்தின் அடிப்படைக் கருத்துக்களும்

சமூகம் சார்ந்தப் பன்முகத் தன்மைகளைக் கொண்டதே ஆகும் என்பதை

வெளிப்படுத்தும் வண்ணமாக இவ் ஆய்வுப் பொருள் அமைகின்றது.

ஆய்வு நோக்கம்

சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் காணப்பெறும் பன்முகத் தன்மைகளை

அவருடைய புலப்பாட்டு நெறிவழி நின்று கண்டறிவது இவ் ஆய்வின் தலையாய

நோக்கமாகும்.

கருதுகோள்

பெண் குறித்தப் பதிவுகள், மொழியாளுமை ஆகியவை தனித்துவத்துடன்

வெளிப்படுகின்றன. இதுவரை இலக்கிய உலகில் பேசப்படாத பல பொருண்மைகள்

இப்படைப்பாளியின் படைப்புகளில் அதிக அளவில் கவனம் பெறுகின்றன என்பது இவ்

ஆய்வின் கருதுகோளாகும்.

ஆய்வு எல்லை

சு. தமிழ்ச்செல்வி படைத்துள்ள புதினங்களில் மாணிக்கம், கீ தாரி, அளம்

ஆகிய மூன்று புதினங்களும் இவ் ஆய்வின் எல்லையாகும்.

ஆய்வு ஆதாரங்கள்

முதன்மை ஆதாரங்கள்
3

ஆய்விற்குரிய முதன்மை ஆதாரங்களாக சு. தமிழ்ச்செல்வியின்

படைப்புகளான மாணிக்கம், கீ தாரி, அளம் புதினங்கள் முதன்மை ஆதாரங்களாக

எடுத்துக்கொள்ளப் பெறுகின்றன.

துணைமை ஆதாரங்கள்

இவ் ஆய்வின் துணைமை ஆதாரங்களாக இவருடைய நாவல்களில்

உள்ளடக்கப் பொருட் புலப்பாடுகளோடு தொடர்புடையனவும், அவற்றை விளக்கப்

பயன்படுபவையுமான இலக்கண நூல்கள், கலைக்களஞ்சியங்கள், திறனாய்வு

நூல்கள், இதழ்கள் ஆகியன எடுத்தாளப்பெறுகின்றன.

ஆய்வு அணுகுமுறைகள்

இவ் ஆய்வு அணுகுமுறைகளாக விளக்கமுறைத் திறனாய்வும்,

பாராட்டுமுறைத் திறனாய்வும், கதைமாந்தர்களின் உள்ளப்போக்கை உளவியல்

முறை அணுகுமுறையும் இவ் ஆய்வு அணுகுமுறைகளாகும்.

ஆய்வேட்டின் அமைப்பு

ஆய்வு முன்னுரை, ஆய்வு முடிவுரை நீங்கலாக இவ் ஆய்வு பின்வரும் ஐந்து

இயல்களைக் கொண்டு அமைகின்றது.

முன்னுரை

இயல்-1: படைப்புலகில் சு. தமிழ்ச்செல்வி

இயல்-2: சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் பெண் வாழ்வியலும் தீர்வுகளும்

இயல்-3: சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் சமுதாய கருத்துக்கள்

இயல்-4: சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் பாத்திரப்படைப்பு

இயல்-5: சு. தமிழ்ச்செல்வி படைப்புகளில் மொழிநடை

முடிவுரை
4

துணைநூற்பட்டியல்

என்பனவாகும்.

இயல் விளக்கம்

இயல் ஒன்று

“படைப்புலகில் சு. தமிழ்ச்செல்வி“ என்னும் முதல் இயலில் படைப்பாசிரியர்

வாழ்வியல் பின்புல அறிதலின் தேவை குறித்தும், படைப்பாசிரியர்

சு. தமிழ்ச்செல்வியின் பிறப்பு, வாழ்க்கை, கல்வி, பணிநிலை, படைப்புகள், பரிசுகள்,

படைப்பின் தன்மை, படைப்பாக்கக் களங்கள், படைப்பாக்கப் பின்புலங்கள் ஆகியன

குறித்தும் அமைகின்றது.

இயல் இரண்டு

“சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் பெண் வாழ்வியலும் தீர்வுகளும்” என்ற

இரண்டாவது இயலில் பெண்ணியம், பெண்ணியத் தோற்றம், குடும்ப அமைப்பு, பெண்

கற்புநிலை, கல்வியில் பெண் நிலை, பெண் கல்வி பாதியில் பாதிக்கப்படுதல்,

திருமண முறை பற்றியும், பெண்களின் தொழில் சார்ந்த வாழ்வியல் பற்றியும்

ஆய்ந்தறியப் பட்டு பெண்களின் பல்வேறு வகைப்பட்ட நிலைகளில்

இருந்துள்ளமையை இவ்வியல் ஆராயப்படுகிறது.

இயல் மூன்று

“சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் சமுதாய கருத்துக்கள்” எனும் இவ் மூன்றாம்

இயலில் சமுதாயத்தில் நிகழும் சமுதாய மாற்றத்தைச் சித்தரிக்கக்கூடியதாக

புதினம் இருந்து வருகிறது. சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் காணப்படுகின்ற சமுதாய

நிகழ்வுகளை ஆராய்வதாக இவ்வியல் அமைகின்றது.

இயல் நான்கு
5

“சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் பாத்திரப்படைப்பு“ எனும் நான்காம் இயலில்

பாத்திரப்படைப்பின் தேவை, பாத்திர உருவாக்கம், பாத்திரங்களின் வகைகள்,

பாத்திரங்களின் வரிசை முறை, பாத்திரங்களின் வளர்ச்சி, பாத்திரங்களின் பண்பு

நிலைகள், பாத்திரங்களின் பெயர்கள், பாத்திர அறிமுகம் போன்றவை இவ்வியலில்

எடுத்துரைக்கப்படுகிறது.

இயல் ஐந்து

“சு. தமிழ்ச்செல்வி படைப்புகளில் மொழிநடை” எனும் இவ் ஐந்தாம் இயலில்

நாவலாசிரியரின் மொழியாளுமை, மொழிநடை, நடையியல், கருத்து நடை,

உவமைகள், வட்டார வழக்குச் சொற்கள் போன்றவற்றை விளக்கும் வகையில்

இவ்வியலில் அமைகின்றது.

முடிவுரை

ஒவ்வொரு இயலிலும் பெறப்பட்ட ஆய்வு முடிவுகள் இயலின் இறுதியில்

முடிவுரையாகத் தரப்பட்டுள்ளது.

துணைநூற்பட்டியல்

ஆய்வுக்குத் துணைசெய்த முதன்மை நூல், துணைமை நூல்கள் அகர

வரிசையாகத் தொகுக்கப்பட்டு இப்பகுதியில் இடம்பெறுகின்றன.


6

இயல்-1

படைப்புலகில் சு. தமிழ்ச்செல்வி

முன்னுரை

இலக்கியத்தின் முதன்மையான நோக்கம் சமூகத்தை மேம்படுத்துவதே.

இதன்பொருட்டே கலை, இலக்கியங்கள் சமூக வளர்ச்சியை மையமாகக் கொண்டு

படைக்கப்படுகின்றன. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளையும், ஆதிக்கப்

போக்கினையும், அதிகாரப் பகிர்வில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும், சிக்கல்களையும்

படம்பிடித்துக் காட்டி, அதற்கான காரணங்களையும், அதனைக் களைவதற்கான

தீர்வுகளையும் எடுத்துரைப்பது தற்கால இலக்கியங்களின் போக்காக உள்ளது. நாவல்,

சிறுகதை, நாடகம் ஆகியவை தற்காலத்தில் மக்களைக் கவர்ந்த இலக்கியங்களாக

உள்ளன. இவை நிகழ்காலச் சிக்கல்களை மையமாகக் கொண்டு அதன்வழியாகச்

சமூக உரிமை வேட்கையை அறிவிக்கவும், அறிவுறுத்தவும் செய்கின்றன.

கற்பனையாகப் படைக்கப்பெற்ற கதைகளைவிட, நடப்பியலைக் கருவாகக் கொண்டு

படைக்கப்படும் கதைகளே சமுதாயத்திற்குப் பயன்தருவனவாக அமைகின்றன.

அவ்வகையில் நிகழ்காலச் சிக்கல்களை, குறிப்பாகப் பெண்கள் படும் இன்னல்களை

மையப்படுத்திச் சிறுகதைகள், நாவல்கள் படைத்து வருபவர்களில் சு. தமிழ்ச்செல்வி

தனித்துவம் பெற்றவராய்த் திகழ்கிறார். படைப்பாளரின் படைப்புகளில் அவரது

குடும்பம், கல்வி, வாழ்வியல், பணிநிலை, அனுபவங்கள் ஆகியன பின்புலமாக

அமைவதால், சு. தமிழ்ச்செல்வியின் வாழ்வும் பணியும், படைப்பும், படைப்புப்

பின்புலமும் அறியத்தக்கனவாக அமைகின்றன. அவ்வகையில் சு. தமிழ்ச்செல்வியின்

பிறப்பு, கல்வி, பணிநிலை, வாழ்வியல் நிலை, படைப்புகள், படைப்பின் சூழல்,

பின்னணி, படைப்புக்கான அங்கீ காரங்கள் குறித்து இவ்வியலில் ஆய்வு

மேற்கொள்ளப்படுகிறது.
7

சு. தமிழ்ச்செல்வி

தமிழின் புனைகதைப் படைப்பாளர்களில் சு. தமிழ்ச்செல்வி தமிழக

மண்ணையும் மக்களையும் அவர்தம் மன உணர்வுகளையும் நுண்ணோக்கி

வெளிப்படுத்தும் திறமுடையவராக விளங்குகிறார். அவரது கதைக் களங்கள் யாவும்

தமிழகத்தின் நடுமாவட்டப் பகுதியாகத் திகழும் கடலூர், விருத்தாசலம், நெய்வேலி,

வேதாரண்யம் ஆகிய வட்டாரங்களை ஒட்டியதாக அமைந்துள்ளன.

இவ்வட்டாரங்களில் வாழும் மக்களின் வாழ்வியல் பண்பாட்டின் அடையாளங்களுள்

ஒன்றாகச் சு. தமிழ்ச்செல்வியின் கதைப் படைப்புகள் அமைந்துள்ளன.

நகரங்களை ஒட்டிய கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களைத் தன்

படைப்புகளின் வழியாகக் காட்டியுள்ளதோடு, குடும்ப வாழ்வில் பெண்கள் படும்

துயரங்களையும், தொழிற்சாலைகளில் பெண்கள் படும் அவல வாழ்வினையும்,

பொதுவாழ்வில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு

அவரது கதைகள் படைக்கப்பட்டுள்ளன. அறிவியல் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி

ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ள இக்காலகட்டத்தில் மகளிர் நிலை எந்த அளவில்

உள்ளது என்பதனை அறிவிப்பதாக அவரது கதைகள் அமைந்துள்ளன.

படைப்பும் படைப்பாளரும்

இலக்கியத்தைப் படைக்கும் படைப்பாளர் சமுதாயத்தின் ஓர் அங்கமாகத்

திகழ்கிறார். ஆதலால், சமுதாயத்தின் மீ தான எண்ணங்கள், உணர்வுகள் அவர்

படைக்கும் படைப்பின் வழியாக வெளிப்படுவதனை அறியலாம். எந்தவொரு கலை,

இலக்கியப் படைப்பிலும் படைப்பாளரின் அனுபவங்களும் கற்பனையும்,

உணர்ச்சியும், சித்தாந்தமும் கலந்தே உருவாக்கம் பெறும்.

சமுதாயத்தில் விழிப்பை ஏற்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய

ஆற்றலும் வல்லமையும் எழுத்தாளருக்கு உண்டு. எழுத்தாளர் கூர்மையான

சிந்தனைப்போக்கு உடையவராகவும், சமுதாயச் சிந்தனையுடையவராகவும்,

சமுதாயப் பொது நோக்கினைக் கொண்டவராகவும் விளங்குதல் வேண்டும்.


8

அப்போதுதான் சமூகத்தில் காணப்படும் சிக்கல்கள், முரண்பாடுகளை அவரால்

எளிதாக இனங்காண முடியும். சமூகச்சிக்கல்களுக்கு உரிய தேர்வினையும்

எடுத்துரைக்கமுடியும். அவ்வகையில் புதினம், சிறுகதை, கட்டுரை என

இலக்கியத்தின் பரந்துபட்ட துறைகளிலும் தன் ஆளுமையைச் செலுத்திவரும் நவன


இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவராக சு. தமிழ்ச்செல்வி திகழ்ந்து வருகிறார்.

படைப்பும் வாழ்வியற் பின்புலமும்

படைப்பின் எழுத்தாக்கம் என்பது படைப்பாளரின் எழுத்தாற்றல்,

அறிவுத்திறன், புலப்பாட்டு உத்தி போன்றவற்றைச் சார்ந்து அமைந்தாலும்,

படைப்பாளர் பிறந்து வளர்ந்த சூழலும், அவரது வாழ்க்கைப் பின்னணியும், கல்வி,

பணி முதலான கூறுகளும் அவரது படைப்புகளுக்குப் பின்புலமாக அமைகின்றன.

இதனால் ஒரு படைப்பைப் பற்றிய ஆய்வில் படைப்பாளரின் படைப்புப் பின்புல

அறிதலின் தேவையை உணரலாம். படைப்பாளருக்கும் அவரது படைப்புகளுக்கும்

உள்ள தொடர்பு அவரது குருதியோடும், மரபார்ந்த தன்மைகளோடும் அமைந்தது

என்பதனை,

“இலக்கியம் உருவாகிற சமயத்தில் ஆசிரியனுக்கு மட்டுமே அது

சொந்தமான விஷம் என்றாலும், அது தனிமனிதனின் வளர்ப்பு,

பயிற்சி, சூழ்நிலை, குடும்பம், அவனது மதம், கொள்கைகள், அவன்

இனத்தவரின் இரத்த ஓட்டம், வாசனை எல்லாமுமாகச் சேர்ந்துதான்

அவனுடைய சிருஷ்டியை ஓரளவுக்கு உருவாக்குகின்றன என்பது

உண்மையே”1

என்று திறனாய்வாளர் க.நா. சுப்பிரமண்யம் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து

கொள்ளலாம். தனது சமூக நிகழ்வுகளும், தான் பார்த்துப் பழகிய மனிதர்களும்

படைப்பாளருக்குள் ஆதிக்கம் செலுத்தும் நிகழ்வுகளும், அவரது படைப்பின்

வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றன.
9

கலை, இலக்கியங்கள் மனித வாழ்க்கையிலிருந்து முகிழ்க்கின்றன. அதிலும்

குறிப்பாகக் கதை இலக்கியங்கள் மானுட வாழ்வியலுக்கு மிக அணுக்கமான

ஒன்றாகத் திகழ்கிறது. சமூகத்தோடு ஒட்டி உறவாடுபவர்களாலும், சமூகத்திற்கு

அந்நியப்பட்டு வாழ்பவர்களாலுமே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.

படைப்பாளருக்கும், படைப்புக்கும் உள்ள உறவினை,

“இலக்கியம் படைப்பவனைப் படைக்கத் தூண்டுவதே அவன் வாழும்

சமுதாயமும் சுற்றுப்புறச் சூழலும், அவற்றோடு மனிதனுக்கு ஏற்படும்

2
உராய்வுகளுமே ஆகும்”

என்னும் கருத்தின் வழியாக உணர்ந்து கொள்ளலாம்.

இலக்கியங்கள், அவை படைக்கப்பட்ட காலகட்டத்தின் சமூக வரலாற்றை

அடையாளம் காட்டும் ஆவணங்களாகத் திகழ்கின்றன. ஓர் இலக்கியத்தைப் பற்றி

அறிந்து கொள்வதன் வழியாக அக்காலச் சமூக நிலையினைப் பற்றி அறிந்துகொள்ள

வாய்ப்பு ஏற்படுகிறது. ஆதலால், சமூக வரலாற்றுக்குரிய ஆவணங்களில்

இலக்கியமும் ஒன்றாகத் திகழ்வது தெளிவாகிறது.

தமிழ் இலக்கியங்களில் சமூக வரலாற்றுப் பதிவுகள் வாழ்வியல்

அனுபவங்களாகச் சங்க இலக்கியம் தொட்டே வழக்கிலிருந்து வந்து கொண்டுள்ளன.

இதனை, “சங்கப் பாடல்களின் தொகுப்புகளில் அன்றாட வாழ்க்கை அனுபவங்களின்

விரிவான செய்திகள் மிகுதியாகக் காணப்படுகின்றன”3 என்று ஜார்ஜ் எல். ஹார்ட்

குறிப்பிடுவதன் வழியாக உணர்ந்து கொள்ளலாம்.

படைப்பில் வாழ்வியல் அனுபவங்கள்

தற்காலத்தில் படைக்கப்படும் புதினங்களில் சமகாலச் சமுதாய வாழ்வியல்

நிகழ்வுகளோடு, படைப்பாளரின் வாழ்வியல் அனுபவங்களும் இணைந்தே

படைக்கப்பட்டு வருகின்றன. புனைகதைகளுக்குப் படைப்பாளரின் வாழ்க்கை


10

அனுபவங்களே அடிப்படையாய் அமைகின்றன. இம்மரபு உரைநடை வளர்ச்சியின்

காரணமாக ஏற்பட்ட தாக்குரவு வெளிப்பாடு எனக் கருதலாம்.

தமிழ்க் கதைப் படைப்புகளின் முன்னோடிகளில் ஒருவரான பாரதி, தன்

வாழ்வியல் அனுபவங்களைக் கதைப்போக்கில் வெளிப்படுத்தியுள்ளதனை,

பாரதியாரின் சொந்த வாழ்க்கை அனுபவமே. அவருடைய முற்றுப்பெறாத

சின்னச்சங்கரன் கதையில் வெளிப்பட்டிருக்கிறது என்பது பல ஆய்வாளரின் கருத்து.

சின்னச்சங்கரன் என்ற பெயரில், அதில் பாரதி உலாவுகிறார். அவர் பிறந்து வளர்ந்த

ஊரான ‘எட்டயபுரம்’ அதில் கவுண்டனூர் என்று பெயர் மாறி வருகிறது. அதில் வரும்

பாத்திரங்களில் பலர் அவரோடு பழகிய மாந்தர்கள் என்பதில் ஐயமில்லை”4 என்று

அகிலன் குறிப்பிடுவதன் வழியாக அறிந்து கொள்ளலாம். இதனால் படைப்பாளரின்

அனுபவங்கள் படைப்பின் வழியாகப் புலப்படுத்தப்படுவது படைப்பாக்க மரபுகளில்

ஒன்றாக விளங்குவது தெளிவாகிறது.

தாம் பெற்ற அனுபவங்களோடு, தாம் கண்டும் கேட்டும் அறிந்த

அனுபவங்கள்கூட புனைகதைகளில் கதைப்பொருளாக வெளிப்படும் என்பதை

மு. வரதராசன், “கதையாசிரியர் தம் வாழ்க்கையில் பெறாத அனுபவங்களையும்,

பிறருடைய வாழ்க்கையில் கண்டு உணர்ந்திருக்கலாம். தம் நண்பருடைய

அனுபவங்களையோ சுற்றுப்புறத்தாரின் அனுபவங்களையோ கண்டும் கேட்டும்

உணர்ந்திருக்கலாம். அவற்றைக் கொண்டு, அவற்றைவிட உயர்ந்த அனுபவங்களைக்

கற்பனைசெய்து கதையில் உணர்த்தலாம்”5 என்றுரைக்கிறார்.

உண்மை நிகழ்வுகளைக் கதையாகக் கூறும்போது உண்மையை விடவும்

புதிய வடிவத்தை அது அடைவது உண்டு. இது குறித்துத் தமிழவன்,

“நம் அனுபவத்தில் நாம் காணும் ஓர் விஷயம் உள்ளடக்கத்தில்

எழுதப்படும் கதையாகி, எழுதி முடிந்ததும் இன்னொன்றாக

ஆகிவிடுகிறது”6
11

என்றுரைக்கிறார். அதாவது எழுத்தாளரின் வாழ்வியல் அனுபவம் கதையாக

உருவாகும்போது, சில மாற்றங்களைப் பெற்றுப் புதிய உருவத்தைப் பெற்று

வெளிப்படுத்தப்படும் என்பது இதன்வழி தெளிவாகிறது.

இதனால் புனைகதைப் படைப்பாளர்கள் தாம் சந்தித்த மனிதர்களின்

வாழ்க்கை அனுபவங்களையே கதையாகவும் கதை மாந்தர்களாகவும் புனைந்துள்ள

தன்மையை அறியமுடிகிறது. தலைசிறந்த புதினங்களும் திரைப்படங்களும்

படைப்பாளர் கண்டும் கேட்டும் உணர்ந்த அனுபவங்களின் வெளிப்பாடே.

அவ்வகையில், சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் மேற்குறித்த படைப்புப்

போக்கினைக் காணமுடிகின்றது. அவரது வாழ்க்கையை அறிந்து கொள்வதன்

வழியாக அவரது சமூகப் புலப்பாட்டுத் திறனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம்.

சு. தமிழச்செல்வியின் பிறப்பும் இளமைக்கல்வியும்

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிக்கு அருகில்

அமைந்துள்ள கற்பகநாதர்குளம் என்னும் கடலோர கிராமத்தைப் பூரவகமாகக்


கொண்டவர் சு. தமிழ்ச்செல்வி. அவ்வூரில் விவசாயத் தொழில் செய்து வந்த

சுப்பிரமணியன் - முத்துலெட்சுமி தம்பதியர்க்கு நான்காவது மகளாக 04.05.1971-ஆம்

ஆண்டு பிறந்தார் சு. தமிழ்ச்செல்வி. விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த கால்நடை

வளர்ப்புத் தொழிலே அவரது குடும்பத்தினரின் பூர்வகத்


ீ தொழிலாக அமைந்திருந்தது.

சு. தமிழ்ச்செல்வி தனது இளமைக்கல்வியைக் கற்பகநாதர்குளத்தில் இருந்த

அரசு தொடக்கப்பள்ளியில் பயின்றார். பின்னர், உயர்நிலைக் கல்வியை

திருத்துறைப்பூண்டியிலிருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். அதற்குப்

பின்னர் இரண்டு வருடங்கள் பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்சியை வேதாரண்யம்

கஸ்தூரிபாகாந்தி கன்யா குருகுலத்தில் பயின்றார்.

கிராம நினைவுகளில் படைப்பாசிரியர்

தென்னந் தோப்புகளும், அதனிடையிடையே வடுகளும்,


ீ அல்லிப்பூக்கள்

நிறைந்த குளங்களும் நெல் வயல்களும் நிறைந்த செழிப்பான கிராமம் தான்


12

கற்பகநாதர்குளம். அவ்வூரின் அமைப்பே அவருடைய இளம் வயதில் அவரது

கற்பனைக்குக் களம் அமைத்துக் கொடுத்துள்ளது. கிராமத்தில் வாழ்ந்த

காலகட்டத்தில், கிராமியச் சமுதாய வழக்காறுகள் அவரது நெஞ்சில் நீங்காத இடம்

பெற்றுள்ளன. இவ்வாறு கிராமத்தை உற்றுநோக்கியதன் விளைவு அவரது கதைகள்

பெரும்பாலும் கிராமத்து மக்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டமைந்தன.

மிகச் சிறிய அளவிலான நிலங்களை வைத்து வாழ்க்கை நடத்தும் குறுவிவசாயப்

பெருமக்களின் வேளாண் வாழ்முறைகள் அவருக்கு வாழ்க்கை நடைமுறையானது.

படைப்பாளரின் இலக்கிய அனுபவங்கள்

கதைகள் கொட்டிக் கிடக்கின்ற தெருக்களும் வயல்களும் நிறைந்த சிறு

கிராமத்தில் தான் அவரது சிறுபருவம் கழிந்தது. சு. தமிழ்ச்செல்வின் பதின்மப் பருவம்

கால்நடைகள் பராமரிப்பது, புத்தகங்கள் வாசிப்பது, கவிதைகள் எழுதுவது

என்பதாகவே கழிந்துள்ளது. கற்பகநாதர்குளத்தில் பெற்ற இளமைக்கால

அனுபவங்களே அவரது பெரும்பாலான படைப்புகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இளமைக்காலத்தில் எழும் பருவ உணர்ச்சியில் காதல் வயப்பட்டுக்

கவிதைகள் புனைவதும், குறும்புச் சிந்தனைகளில் திளைப்பதும் இளையோர்

யாவர்க்கும் உள்ள பொதுமைப் பண்புகளாகும். சு. தமிழ்ச்செல்வியும் கவிதை மீ து

மிகுந்த ஈடுபாடு உடையவராக இருந்துள்ளார். கண்ணதாசன், வாலி, அப்துல் ரகுமான்

கவிதை நூல்களைப் படித்த தாக்கத்தால் கவிதை எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்

கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்தக் கவிதை ஈடுபாடு அவரது வாழ்க்கைத்

துணைவரைத் தேர்ந்தெடுப்பது வரை இட்டுச் சென்றது.

சு. தமிழ்ச்செல்வி தன் இளம் வயதிலேயே மனித வாழ்க்கையைக் காணத்

துடிக்கும் தாகமுடையவராக, சமூகச் சிந்தனைச் செயற்பாட்டாளராக இருந்துள்ளார்.

சமூகத்தில் உலவும் சிக்கல்கள் அவரது சிந்தனையை உருப்படுத்தியுள்ளன.

கிராமத்தின் எளிய மக்கள், பெண்கள், சிறு வணிகம் செய்யும் பெண்கள்மீ து

இயல்பாகவே பரிவுகாட்டும் நிலையினராகத் திகழ்ந்துள்ளார். இதனை, “விரைவும்


13

கலைத் தன்மையும் இணையப்பெற்று எழுத்தை வசப்படுத்தியிருப்பவர்

தமிழ்ச்செல்வி. உப்புக்கரிப்பும், புழுதி நெடியும், மீ ன் வச்சமும்


ீ படிந்த எளிய சிறு நில

மாந்தர்களின் இருள்படிந்த வாழ்வை புனைவின் வெளிச்சத்திற்குக் கொண்டு

வந்திருக்கும் இவர் சமூகத்தின் கவனத்திலிருந்து விடுபட்டவர்களைத் தன் கரிசனம்

மிக்க எழுத்தால் கவனம்பெற வைத்தவர்“7 என்று சு. தமிழ்ச்செல்வியின் இலக்கியப்

படைப்பாக்க நிலைப்பாட்டினைக் குறிப்பிடுவர். இத்தகு சிந்தனைப் போக்கே அவரது

புதினங்களில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது.

பணிநிலை

சு. தமிழ்ச்செல்வி ஆசிரியர்ப் பயிற்சியைப் பெற்றபிறகு, தம் சொந்த ஊரான

கற்பகநாதர்குளத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கிராமத்தில் அரசுப் பள்ளியில்

தலைமையாசிரியராகப் பணியாற்றி வருகிறார். கல்வி பயிற்றுவிக்கும் பணியோடு

மாணவர்களிடையே நற்சிந்தனைகளை, நல்லொழுக்கங்களை வளர்க்கும்

பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். நற்கல்வி பயின்ற, நற்பண்புள்ள

மாணவர்களை உருவாக்குவதன் பொருட்டுத் தான் பணியாற்றும் பள்ளியை உயர்ந்த

நிலைக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்.

மாணவர்கள் கல்வித் திறத்தோடு, கலையியல் ஈடுபாடும், இலக்கியக்கல்வியும் பெற

வேண்டும் என்பதற்காக மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டும்

விதத்தில் சமூகச் செயல்பாடுமிக்க படைப்பாளர்களைப் பள்ளிக்கு அழைத்து வந்து.

இலக்கியக் கூட்டங்கள் நடத்தி, மாணவர்களின் நற்சிந்தனை வளர்ச்சிக்குத்

துணைசெய்து வருகிறார். சமூகப் பொறுப்புணர்வுமிக்க மாணவர் சமுதாயம்

பின்தங்கிய கிராமங்களிலிருந்து மேலேறி வரவேண்டும் என்பதற்காக அவர்களை

வளர்த்தெடுக்கும் முயற்சிகளில் செயல்பட்டு வருகிறார்.

முதுகலைக்கல்வி

சு. தமிழ்ச்செல்வி எம்.ஏ. முதுகலைப் பட்டப் படிப்பையும், இளங்கலை

கல்வியியல் (பி.எட்.) படிப்பையும் பயின்று முடித்துள்ளார். இவை அவரது கல்வி

மீ தான ஆர்வத்தைக் காட்டுகின்றன.


14

திருமண வாழ்க்கை

சு. தமிழ்ச்செல்வியின் கணவர், கவிஞர் கரிகாலன் ஆவார். நவன


ீ இலக்கியப்

படைப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தமிழ்ச்செல்வி - கரிகாலன்

தம்பதியினருக்கு சிந்து, சுடர் என்ற இரண்டு பெண்மக்களும், கார்க்கி என்ற ஒரு

ஆண்மகனும் உள்ளனர்.

படைப்புகள்

சு. தமிழ்ச்செல்வி கதை இலக்கியங்களில் பெருவிருப்பம் கொண்டு

திகழ்வதனை அவரது படைப்புகள் காட்டுகின்றன. புனைகதைகளில் சிறுகதைகளும்,

புதினங்களும் படைத்துள்ளார். அவருடைய சிறுகதைகள் தொகுக்கப் பெற்று,

1. சாமுண்டி

2. சு. தமிழ்ச்செல்வி சிறுகதைகள்

என்னும் தலைப்புகளில் வெளிவந்துள்ளன. இவற்றில் சாமுண்டி தொகுதியில்

மொத்தம் எட்டுச் சிறுகதைகளும், சு. தமிழ்ச்செல்வி சிறுகதைகள் தொகுதியில்

மொத்தம் பதிமூன்று சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

புதினங்கள்

சு. தமிழ்ச்செல்வியின் முதல் புதினமான மாணிக்கம் 2002-ஆம் ஆண்டு

வெளியானது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் அவரது இரண்டாவது புதினமான

‘அளம்’ வெளியானது. 2011-ல் வெளிவந்த ‘தொப்புள்கொடி’ வரையிலும் அவர்

மொத்தம் ஏழு புதினங்கள் படைத்துள்ளார். அவை,

1. மாணிக்கம்

2. அளம்

3. கீ தாரி

4. கற்றாழை

5. ஆறுகாட்டுத்துறை

6. கண்ணகி

7. தொப்புள்கொடி
15

ஆகியனவாகும். இப்புதினங்கள் யாவும் அவரது வாழ்வியல் நிகழ்வுகளோடு

தொடர்புடையனவாக அமைந்துள்ளன. மீ ன்பிடித்தொழில், அவற்றில் ஏற்படும்

சிக்கல்கள், விவசாயத் தொழில், விவசாயம் சார்ந்த கிடை போடும் தொழில்,

கால்நடை மேய்ப்பில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியனவற்றைப் பற்றியதாக

அமைந்துள்ளன. அவருடைய படைப்புகள் பெரும்பான்மையும் பெண்கள் மற்றும்

ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பற்றியதாக அமைந்துள்ளன. குறிப்பாக,

பெண்கள், குழந்தைகள், கூலித் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு, அவர்தம்

வாழ்வியல் சிக்கல்களைக் காட்டுவனவாகப் படைக்கப்பெற்றுள்ளன. இவை அந்தந்த

வட்டார மக்களின் மண்வளம் சார்ந்தவனவாக அமைந்துள்ளன.

தமிழச்செல்வி படைப்புகள் வெளிவந்த இதழ்கள்

“சு. தமிழ்ச்செல்வி முதன்முதலாக தன் தந்தையும், சகோதரனும் மீ ன் பிடிக்கச்

சென்ற அனுபவங்களைக் கொண்டு, ‘களம் புதிது’ என்ற இதழுக்கு ஒரு சிறுகதை

எழுதத் தொடங்கினார். ஆனால், அது முடியாமல் நீண்டு கொண்டே சென்றது

என்பதை ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் ஊர் கடலோர கிராமம் என்பதால், காவிரி பொய்த்தபோது விவசாயம் செய்து

வந்தவர்கள் மீ ன்பிடிக்கச் சென்றனர். என் அப்பாவும், அண்ணனும் அவ்வாறே

சென்றனர். அவர்களது அனுபவங்களைக் கொண்டு ‘களம் புதிது’ இதழுக்கு ஒரு

சிறுகதை எழுதத் தொடங்கினேன். ஆனால் அது முடியாமல் நீண்டு கொண்டே

சென்றது. குறிப்பிட்ட அளவு எழுதிய பிறகு, எழுத்தாளர் சபாநாயகத்திடம்

காட்டினேன். அவர், ‘தேர்ந்த எழுத்தாளர் போல் எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்’

என்றார். அதுதான் எனது முதல் புதினம் மாணிக்கமாக வெளியானது”8 என்று

கூறியுள்ளார். அவரது புதினங்கள், சிறுகதைகள் இதுவரை ஏழு இதழ்களில்

வெளிவந்துள்ளன. அவை,

1. கவிதா சரண்

2. உயிர் எழுத்து
16

3. பன்முகம்

4. புது எழுத்து

5. புதிய பார்வை

6. தினமணி கதிர்

7. அணங்கு

முதலியன ஆகும். இன்றும் அவரது படைப்புகள் மற்றும் அவரது நூல்கள் குறித்த

திறனாய்வுகள் இணைய தளங்களின் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழர்களிடம்

சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன.

பாடநூல்களாக சு.தமிழச்செல்வியின் படைப்புகள்

மாணிக்கம், ‘கீ தாரி’, ‘அளம்’ ஆகிய புதினங்கள் பல்கலைக்கழகங்கள்,

கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்புகளை

மையப்படுத்தி தமிழகத்தின் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகத்தைச் சார்ந்த

மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்படத்தில் சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகள்

சு. தமிழ்ச்செல்வியின் ‘கீ தாரி’ புதினம் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில்

‘கிட்னா’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

சு. தமிழ்ச்செல்வி பெற்ற விருதுகள்

சு. தமிழ்ச்செல்வியின் முதல் படைப்பான ‘மாணிக்கம்’ புதினம் தமிழ்

வளர்ச்சித் துறையின் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுள்ளது. இவரது

‘கற்றாழை’ புதினம் 2005-ஆம் ஆண்டிற்கான சிறந்த நாவலாக தமிழ்நாடு முற்போக்கு

எழுத்தாளர் சங்கத்தின் விருதினைப் பெற்றுள்ளது. இவற்றோடு மட்டும் அல்லாது

வேறு சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

1. தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நாவலுக்கான விருது (மாணிக்கம், 2002)

2. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருது, (கற்றாழை, 2005)

3. கலைஞர் பொற்கிழி விருது (2008)

4. புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் விருது (2013)


17

மனித வாழ்வியலின் சிக்கல்களையும், வலிகளையும், துன்ப, துயரங்களையும்

எடுத்துரைக்கும் போக்கில் சு. தமிழ்ச்செல்வியின் கதைப்படைப்பாக்கம் தொடர்ந்து

இயங்கிக் கொண்டிருக்கிறது.

சு. தமிழ்ச்செல்வி புதினங்களின் களம்

தமிழின் தொடக்கக்காலப் புதினங்களில் மிகுகற்பனை முக்கியமாக இடம்

பெற்றிருந்தது. கால வளர்ச்சியில் கற்பனையைவிட மக்கள் வாழ்வியலைப்

பேசுபொருளாக்கும், வளப்படுத்தும் இலக்கியங்களே சமூகத்திற்குப்

பயன்தரத்தக்கதாக அமையும் என்ற நோக்கில் மானுட அறத்தைப் பேசும்

புனைகதைகள் எழுதப்பெற்றன. கதைப்போக்கில் இவை அமைந்திருந்தாலும்,

கதைகளின் வழியாகவே வாழ்வியற் பிரச்சினைகளின் காரணங்களும் அதற்கான

தீர்வுகளும் இடம்பெற்றன. இதன் தொடர்ச்சியாக மக்களை முன்னிலைப்படுத்திப்

பேசும் வட்டாரப் புதினங்கள் செல்வாக்குப் பெற்றன. வட்டாரப் புதினங்களில் களம்

முக்கிய இடத்தைப் பெறுகின்றது.

வட்டாரம் பற்றிய சிந்தனை, தமிழ் இலக்கிய மரபில் நீண்டகாலமாக வழக்கில்

இருந்து வருவது என்றாலும், அண்மைக் காலங்களில் அவை வெகுசன வாசிப்பின்

வழியாகப் பரவலாக்கம் பெற்று வருகின்றன.

இலக்கியப் படைப்பில் படைப்பாளரின் மண்ணும் மக்களும் இடம் பெறுவது

தவிர்க்க இயலாத ஒன்றாக அமைந்துவிடுகிறது. படைப்பாளருக்குத் தெரிந்தோ

தெரியாமலோ அவருடன் உறவாடிய, பழகிய, மக்கள் இடம்பெற்று விடுகின்றனர்.

கதை இலக்கியத்தில் மண்ணும் மக்களும் தொடர்ச்சியாகத் தமிழ்

இலக்கியங்களில் பதிவாகி வருவதனையும், அது தவிர்க்க இயலாத ஒன்றாகத்

திகழ்வதனையும்,

“ஒரு கதையை ஒரு குறிப்பிட்ட பின்னணியில்தான் சொல்ல முடியும்.

மு.வ.வின் நாவல்கள் பெரும்பாலும் சென்னை நகரத்தைப்


18

பின்னணியாகக் கொண்டவை. தி. ஜானகிராமனின் படைப்புகள்

தஞ்சை மாவட்டத்தையும், ஆர். சணமுகசுந்தரத்தின் கதைகள்

கொங்கு நாட்டையும் பின்னணியாகக் கொண்டவை. மு.வ.வின்

கதைகளைக் கொங்கு நாட்டுப் பின்னணியிலும், தி.ஜானகிராமனின்

கதைகளை நெல்லை மாவட்டப் பின்னணியிலும் சொல்ல முடியாது.

எனவே, குறிப்பிட்ட கதைமாந்தர்களின் கதையைச் சொல்லும்போது

அவர்கள் வாழும் அவர்களுக்கே உரிய பின்னணியில்தான் சொல்ல

முடியும். ஏனெனில் மனித வாழ்க்கை அந்த அளவுக்கு அவர்கள்

வாழும் மண்ணிலேயே வேர் கொண்டிருக்கிறது. மண்ணின் மணமே

புதினத்தின் பின்னணியாய் நின்று படிப்போரை ஈடுபடுத்துகின்றது”9

என்னும் மா. இராமலிங்கம் கருத்தின் வழியாக உணர்ந்து கொள்ளமுடிகிறது.

மனிதன் ஒவ்வொரு வகையிலும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடம் சார்ந்தவனாக

இருக்கிறான். அந்தக் குறிப்பிட்ட இடம் சார்ந்த பண்புகளே அவனுக்குரிய

அடையாளத்தை அளிக்கின்றன. வரலாற்றுப் புதினங்களில் காலப்பின்னணி சிறப்பு

அடைகின்றது. சமூகப் புதினங்களில் பொருட்பின்னணி குறிப்பிடத்தக்க இடத்தைப்

பெறுகின்றது. வட்டாரப் புதினங்களில் இடப் பின்னணியும், அதனை ஒட்டிய வட்டாரக்

கூறுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. சு. தமிழ்ச்செல்வியின் நாவல்கள்

அனைத்தும் மண்ணையும் மக்களையுமே பின்னணியாகக் கொண்டு இயங்குகின்றன.

கதைக்களம்

சங்க இலக்கியங்களில் நிலமும் பொழுதும் முதன்மை பெற்றது. சங்க கால

மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடத்தினர் என்பதைக் திணை சார்

பாடல்கள் காட்டுகின்றன. முதல், கரு, உரி என்ற மூன்றும் சங்ககாலக் களத்தின்

வெளிப்பாடுகளாக அமைந்தன. மக்களின் அக உணர்வுகளில் நிலம் (களம்) முதன்மை

பெற்றது. அவர்கள் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்று

கூறியவற்றையே தற்காலத்தில் பின்னணி என்று குறித்தனர்.


19

வட்டார இலக்கியத்தில் கதைக்களத்தின் சிறப்பினை “இலக்கியத்திற்கு

முதன்மையான களமும், அதனோடு பின்னிப் பிணைந்து, இறுகி முறுகிப்

பிரிக்கவியலாது, இரண்டறக் கலந்து காணப்படும் பிற விடயங்களும் ஒரு நாவலில்

முழுமை பெற்றிருந்தால் அதனைப் பிரதேச நாவல் என்ற அடை கொடுத்துக்

கொள்ளலாம்”10 என்ற க.நா. சுப்பிரமணியத்தின் கருத்தும் உணர்த்தி நிற்கிறது.

களத்தின் இன்றியமையாமை

வட்டாரப் புதினத்திற்குக் களம் மிக முக்கியமானது. நாவலில் இடம் மிக

முக்கியம். இடமாவது கதை நிகழும் களம். களமே அந்நில வாழ் மக்களின்

நடத்தையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இடப்பின்னணனி தெளிவாக

அமையாதபோது கதை சிறப்பாக அமைவதில்லை. களத்தில் தெளிவிருந்தால்,

வாசகன் அங்கேயே வாழ்வது போன்ற பிரமையை உண்டாக்கித் தரலாம்.

இதன் இன்றியமையாமையினைத் தி.சு. நடராசன், “படைப்பாசிரியரால்

சித்திரிக்கப்படும் வாழ்க்கையானது காலூன்றுவதற்கு ஒரு இடம் அவசியமாகிறது.

சொல்லுகின்ற செய்தி அல்லது காட்டுகின்ற பிரச்சினைக்குப் பொருந்தி வருவதாக

ஒரு இடத்தைச் சித்திரித்துக் காட்டினால்தான் அது யதார்த்தத்தின் தோற்றத்தினைப்

பெறமுடியும். பின்புலமாகத் தேர்ந்தெடுக்கப்படும் பிராந்தியம் ஆசிரியருக்கு மிகவும்

தொடர்புடையதாக அமைந்து விடுகின்றது”11 என்கிறார்.

தொகுப்புரை

உரைநடையில் அமைந்த புதினங்கள் மனித வாழ்வின் அவலங்களை

எடுத்துரைப்பதற்கேற்ற வடிவமாகத் திகழ்கின்றன. இன்றைய சமூகப் புதினங்கள்,

வாழ்வியல் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அதற்கான

காரணங்களையும், உரிய தீர்வுகளையும் எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன.

மானுட வாழ்வின் பிரச்சினைகளைக் காட்டுவதோடு நில்லாது அதற்கான


20

காரணத்தையும், தரவுகளையும் சொல்லும் படைப்பாளராகச் சு. தமிழ்ச்செல்வி

திகழ்கிறார்.

சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகள் பல்நோக்குடையனவாகத் திகழ்வதற்கு

அவரது பன்முகப்பட்ட ஆளுமையே காரணமாக அமைந்துள்ளது. தமிழ் இலக்கியப்

பரப்பில் தனக்கேயுரிய தனித்துவமான ஆளுமையைச் செலுத்துவதற்கு அவரது

குடும்பச்சூழல், கல்வி பெற்றுக் கொண்ட சூழல், அவர் தொடர்பு கொண்டிருந்த

இயக்கங்கள், அவர்மீ து ஆளுமை செலுத்திய அமைப்புகள் போன்ற பல்வேறு

தொடர்புகளும் அடிப்படைக் காரணிகளாக அமைந்திருக்கின்றன.


21

சான்றெண் விளக்கம்

1. க.நா. சுப்ரமணியன், விமர்சனக்கலை, ப. 12.

2. மு. வரதராசன், இலக்கியமரபு, ப. 22.

3. George L. Hart III, Ancient Tamil Literature: Its Scholarly Part and Future,
Burton Stein (Ed.), Essays on South India, p. 41.

4. அகிலன், பாரதியின் கதைப்படைப்பு, மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா

மலர், (1982), ப. 197.

5. மு. வரதராசன், இலக்கிய மரபு, ப. 109.

6. தமிழவன், படைப்பும் படைப்பாளியும், ப. 15.

7. மருதா பதிப்பகத்தார், அறிமுக உரை, சு.தமிழ்ச்செல்வி, ஆறுகாட்டுத்துறை,

நூலின் முன்னட்டை.

8. ஆனந்தவிகடன், தீபாவளி மலர், (2014), ப.60.

9. மா. இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப. 28.

10. க.நா. சுப்பிரமணியன், விமர்சனக்கலை, ப. 19.

11. தி.சு. நடராசன், திறனாய்வுக்கலை, ப. 100.


22

இயல் - 2

சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பெண் வாழ்வியலும் தீர்வுகளும்

முன்னுரை

காலந்தோறும் பெண்கள் தங்களுக்கான உரிமையை மீ ட்டெடுப்பதிலும்

நிறுவுவதிலும் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தைப் பெண் சமூக

விடுதலையில் நாட்டமுள்ள ஆண்களும் பெண்களும் முன்னெடுத்துச் செயலாற்றி

வருகின்றனர். இன்றைய சமூகத்திலும் இந்நிலை தொடர்ந்து நிகழ்ந்து வருவதைக்

காணமுடிகிறது. பெண் மீ ட்புப்பணி செயல்வேகம் சற்று குறைந்து இருப்பினும்

சீற்றங்கள் அதிகமாக உள்ளன. மாற்றங்களைத் தேடிப் பலர் தடுமாறிக் கொண்டு

இருக்கின்றனர். கல்வியிலும் சுயசிந்தனையிலும் வளர்ந்த நிலையை எய்தியுள்ள

பெண்களில் சிலர் அதற்கான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அந்த வகையில்

கலை இலக்கியப் படைப்பாளியான சு.தமிழ்ச்செல்வி தமது கதையிலக்கியங்களின்வழி

பெண்களின் வாழ்வியல் சிக்கல்களைப் படம் பிடித்துக்காட்டி அதற்கான தீர்வையும்

முன்வைப்பவராக உள்ளார். அவ்வகையில் பெண்கள் பற்றிய வாழ்வியல்

கருத்துகளை சு.தமிழ்ச்செல்வி தமது புதினங்களில் முன்வைக்கும் பாங்குகளைப்

இவ்வியல் ஆராய முற்பட்டுள்ளது.

பெண்ணியம் - விளக்கம்

பெண்கள் சமுதாயக் கடடுப்பாடுகளாலும், அழகுணர்ச்சியினாலும் அடக்கி

வைக்கப்பட்டுள்ளனர். பண்பாட்டு அடிப்படையிலான இந்த அடக்குமுறையில்

இருந்து வெளிவருவதே பெண் விடுதலையாகும். இந்த விடுதலையை நோக்கிய

செயல்பாடுகளே பெண்ணியமாகக் கருதப்படுகிறது.

சமுதாய அக்கறையும் ஒழுக்க நெறியும், பண்பாடும் பெண்களுக்கு மட்டுமே

என்கிறது ஆணாதிக்கச்சமுதாயம். இதனால் பெண்கள் மீ து கட்டுப்பாடுகளைத்

திணிக்கின்றது ஆணாதிக்கம். சமூதாயத்தின் மீ து கோபம் கொள்ளும் பெண்ணியம்


23

இந்தக் கட்டுப்பாடுகளை ஆண்களுக்குமானதாக நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் சமுதாயக் கட்டுப்பாடுகளைத் தாண்டிச் செல்வதே - மீ றுவதே

விடுதலையாகக் கருதினால் அது சமுதாயச் சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவே

அமையும்.

பெண்ணியம் என்பது பெண்களுக்கு எதிராக எழும் எந்த ஆயுதத்தையும்

முறியடித்து அவளுக்குத் தனித்துவம் உண்டு என்பதை அனைவரும் உணரச்

செய்வதை அறியமுடிகிறது.

குடும்ப அமைப்பில் பெண்நிலை

சமுதாயத்தால் அனுமதிக்கப்பட்ட சடங்கு மற்றும் சட்டமுறைப்படி ஓர்

ஆண்மகனைத் திருமணம் செய்து கொண்டு குடும்பத் தலைவியாக வாழும் ஒரு

பெண்ணை கணவன் மனைவி என்று சமுதாயம் ஏற்கிறது. அத்தகைய நிலையில்

வாழும் பெண்ணை தினமும் சாராயம் குடித்துவிட்டு வந்து ஏதேனும் சண்டை செய்து

அவளை அடித்துத் துன்புறுத்துவதைப் பழக்கமாகக் கொண்டுள்ள கணவன்

ஒருவனைப் படைப்பாளர் சுட்டிக்காட்டுகிறார். அப்பெண்ணோ அவனால்

அனுபவிக்கும் துன்பத்திற்கு வருந்தாமல் அதனை நியாயப்படுத்திப் பேசும்

அளவிற்குப் பெண்ணடிமைத் தனத்தில் மூழ்கிக் கிடப்பவளாகக் காட்டுகிறார். இதனை

‘மாணிக்கம்’ என்ற புதினத்தில்.,

“அந்த மனுசனுக்கு மட்டும் என்ன? என்ன அடிச்சி ஒதைக்கணு

முன்னு ஆசயா? அந்த பாழாப் போற சாராயத்தக் குடிக்கிறதால,

வர்ர வெனதான இதெல்லா, ஊருக்கொரு சாராயக்கட வச்சர்ரானுவ.

அவனுவ தாலிய அறுக்கோ. அவந்தலயில இடிவுழோ, அவனப்

பொதக்கிர எடத்துல புல்லு மொளக்காமப் போவோ”1

என்று பதிவு செய்கிறார். இதன்வழி, குடும்பத்தில் உள்ள குடிப்பழக்கத்திற்கு

அடிமையான சில ஆண்கள் சிலர் வட்டிலுள்ள


ீ பெண்களை மதிக்காமல் தினமும்
24

சாராயம் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக்

கொண்டிருந்தனர் என்பதையும் அத்தகைய துன்பத்திற்கு உள்ளான பெண்கள்

இத்துன்பத்தினை முழுவதும் அனுபவித்தாலும் திருமணம் செய்துகொண்ட

ஆண்மகனை எதிர்ப்பதையோ திருத்துவதையோ செய்யாமல் செயலற்று இருந்தனர்

என்னும் அவலநிலையையும் அறியமுடிகிறது.

வட்டிலுள்ள
ீ ஆண்மகன் வட்டுக்குடும்ப
ீ நிர்வாகத்தைக் கவனிப்பதில்லை.

அதுமட்டுமன்றி அவன் தன்னிடம் இருக்கும் நகை, பணம் போன்ற பொருள்களைத்

தன்னுடைய தாய்க்கும் தன்னுடன் பிறந்த மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு

தன்னைநம்பி மனைவியாக வாழவந்தவளுக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதை

‘மாணிக்கம்’ என்ற புதினத்தின் வழியாக சு. தமிழ்ச்செல்வி,

“இருந்த நகநட்டு, பணங்காசி எல்லாத்தயும் மவளுவளுக்கு முந்தியே

பங்கு போட்டுக்குடுத்துட்டாவோ, மிச்சம் மீ தியிருந்த பாத்தர

பண்டத்தயும் சாமாஞ் சட்டுவளையும் எரியிற வூட்டுல அடுப்புக்கு

நெருப்பெடுக்குற கதயா அள்ளிக்கிட்டுப்போயி சேத்துட்டாளுவொ

இனிமே இஞ்ச என்னருக்கு அவ்வொ இருந்து அனுவிக்க வூடு

மட்டுந்தான இருக்கு. அதான் போனா போவுதுன்னு வுட்டுட்டுப்

பெயிட்டாவோ

குடிக்க கொவளயில்லாம படுக்க பாயி இல்லாம முந்தி மாட்டுக்

கொட்டாயிக்கு வெறட்டி வுட்டாவோ. இப்பகூட வௌக்குமாறு கொட

இல்லாம வெறுவ்வூட்டவுட்டுட்டுப் பொறாவோ. இனிமே சின்ன

பின்னி ஒண்ணு ஒண்ணா வாங்கிச் சேக்கணுமே இந்த கொணங்கெட்ட

ஆள வச்சிகிட்டு என்ன மாத்தன் குடும்பம் பண்ணப் போறாளோ.

மனதில் பட்டதை சொல்லிவிட்டு போனார்கள் ஊர்சனங்கள்”2

என்ற கதையாடலில் சுட்டிக் காட்டியுள்ளார். குடும்பத்தில் இது போன்ற சிக்கல்

எழும்போது சமுதாயத்தில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் அதில் ஈடுபட்டுக்


25

குடும்பத்தினர்க்கு அறிவுரை வழங்கியுள்ளனர். குடி குடியைக் கெடுக்கும் என்பதும்

குடும்பத்தினால் ஏற்படும் பெரும் இன்னல்களினால் குடும்ப வாழ்வு சிதைவதும்

இந்தப் புதினத்தின் வழியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூறப்படும் செய்திகளாக

உள்ளன.

ஆடுகளை மேய்க்கும் கீ தாரி மக்கள் எங்கு செல்கின்றனரோ அங்கேயே

தங்களுடைய குடும்பத்தை அமைத்துக்கொண்டு நடத்துகின்ற வழக்கம் உள்ளவராக

வாழ்ந்துள்ளார்கள். இதில் ஆடுகளைப் பராமரித்தல் என்பது அவர்களின் நோக்கம்.

அத்துடன் உணவு சமைத்தல், மற்ற வேலைகளைச் செய்தல் போன்றவை

தங்கியிருக்கும் இடத்திலேயே பெண்களால் நடத்தப்பெறுவதையும் பல்வேறு

குடும்பச் சூழ்நிலைகளிலும் பெண்கள் மட்டுமே சில வேலைகளைச் செய்வதையும்

காணலாகிறது. இதனை,

“இப்படி யோசித்துக் கொண்டே வந்ததில் வடு


ீ வந்து சேர்ந்ததை

வெள்ளைச் சாமி கவனிக்கவில்லை. கூண்டுக்கு வெளியே

கட்டியிருந்த வெள்ளளாடுகளுக்குத் தழையை ஒடித்துக் கட்டிக்

கொண்டிருந்தாள் இருளாயி. அவளுடைய மகள் முத்தம்மாள்

நான்கைந்து பாத்திரங்களை அரிக்கன் வெளிச்சத்தின் உதவியோடு

விளக்கிக் கழுவிக் கொண்டிருந்தாள்”3

என்ற சித்தரிப்பில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். இதன்வழி, ஆடுகளை மேய்த்துக்

கொண்டும் குடும்ப வேலைகளைக் கவனித்துக் கொண்டும் ஆண்களில்லாத

இரவுப்பொழுதுகளிலும் பெண்கள் இயங்கினர் என்பதை புலப்படுத்துகிறார்.

குடும்பத்தில் ஆணாதிக்கத்தால் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை,

“அவன் சொல்லுவது அவள் காதில் விழவில்லை ஒனக்குப் பொங்கிப்

போட ஒரு பொட்டச்சிதானடா வேணும் அதுக்கு ஒன் ஆத்தா

போறாதாடா எங்கயோ இருந்த என் வாழ்க்கய எதுக்குடா பாழாக்குன.

ஒனக்கு என்ன பாவம்டா நான் பண்ணுனன் சொல்லுடா. ஒனக்கு


26

என்ன பாவம் பண்ணுனன். இனிமே ஒன்னோட எனக்கு வாழ்க்க என்று

கோபமாய் தன் துணிமணிகளை பைக்குள் எடுத்துத் திணித்துக்

கொண்டு வட்டைவிட்டு
ீ வெளியே வந்துவிட்டாள். விடியும் வரை

மாட்டுக் கொட்டகையில் உட்கார்ந்திருந்து விட்டு விடிந்ததும் வந்த

முதல் வண்டியில் ஏறி தன் அம்மா வட்டிற்குப்


ீ போய்விட்டாள்”4

என்று கூறப்பட்டிருப்பதன் வழி ஆய்ந்தறிய முடிகிறது. பெண்களுள்ள குடும்பங்களில்

நடைபெறும் அவலநிலையையும், பெண்கள் அனுபவிக்கும் துயரங்களையும்

வாழ்க்கை நடைமுறைகளையும் கூறுவதன்வழி சமுதாயத்தில் தொழில்செய்து

உழைத்து முன்னேறும் குடும்பநிலையை சு.தமிழ்ச்செல்வி தம்முடைய

புதினங்களில் முன்னிறுத்துவதை அறியமுடிகிறது.

கற்பு நோக்கில் பெண் நிலை

பெண்ணிய நோக்கிலான ஆய்வுகள் வளர்நிலையை அடைந்து வரும்

இக்காலச் சூழலில் பெண்களின் கற்பு நிலையைப் பற்றிய சு. தமிழ்ச்செல்வியின்

பார்வை ஆராயப்பட வேண்டியதாக உள்ளது. ஆண்கள், பெண்கள் என்ற இரு

பாலார்க்கும் கற்பு நெறியினின்று தவறாமை சிறந்த ஒழுக்கமாகக் கருதப்படுகிறது.

இருப்பினும் பெண்கள் கற்பு நெறியில் தவறக் கூடாது என்பது தமிழ்ச் சமுதாயத்தில்

அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தும் கற்பு

என்ற கோட்பாடு வழிவழியாகத் தமிழ்ச் சமுதாயத்தில் உயர்ந்த இடம் பெற்று

இருந்தது எனலாம். இதனை,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்”5

என்கிறது வள்ளுவம். இதில் பெண்களின் பண்புகளுள் சிறந்த பண்பு கற்பு என்பதைக்

கூறுகிறார். பல படைப்பாளிகள் கற்பு என்பதனை முன்னிறுத்திப் பெண்மையைப்

போற்றியுள்ளனர். ஒவ்வொரு படைப்பாளியும் கற்பு என்பதை ஒவ்வொரு விதமாகச்

சித்தரித்துள்ளனர். இதனை,
27

“கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை”

“கற்பெனப் படுவது மாதர்க் கணிகலம்”

“கற்புடை மகளிர் பிறர் நெஞ்சுபுகார்”

என்ற இலக்கியச் சொற்றொடர்கள் புலப்படுத்துகின்றன. பெண்மையைப் போற்றிய

சிறப்புக்குரியவர்களில் ஆண் படைப்பாளர்கள் சிலருக்கும் பங்கு உள்ளது. இதில்

பாரதி முதலிடத்தைப் பெறுகிறார் எனலாம். கற்பு என்ற சொல்லானது ஆணுக்கும்,

பெண்ணுக்கும் பொதுவானது என்பதனைப் பாரதியார் கூறும் பொழுது,

“கற்பு நிலை என்று

சொல்ல வந்தால் இரு

கட்சிக்கும் அஃது

பொதுவில் வைப்போம்”

என்கிறார். மேலும், இன்றைய பெண் கவிஞர்கள் புதுக்கவிதைகளில் கற்பு

வழிபாட்டைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளனர். ஆண்கள் தங்களின் தேவை கருதியே

பெண்களின் கற்பு எல்லையை விரிவு செய்துள்ளனர் என்பதை ‘ரோகினி’ என்ற பெண்

கவிஞர்,

“கற்புக்காய் கண்ணர்ீ வடிக்க

நான் ஒன்றும் கண்ணகியல்ல

மானத்தை நினைத்து நிற்க

நான் ஒன்றும்

துணிவிருந்தால்

உண்மையிலும் உண்மையாக

எவராவது ஓடி வரலாம்”6

என ‘உண்மையினும் உண்மையாக’ என்னும் தலைப்பில் அமைத்துக் காட்டுகிறார்.

இக்கவிதை ஆணாதிக்கச் சமுதாயம் உருவாக்கிய கற்புக் கோட்பாட்டை

உடைத்தெறியும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ளதை உணரமுடிகிறது.

இக்கருத்துடன், கற்பு என்னும் கருத்தாக்கத்தின் முக்கியக் கருத்தெல்லாம்


28

ஆண் - பெண் என்ற இரு சாராரில் பெண்களுக்கு மாத்திரமே வலியுறுத்தப்

பட்டிருக்கிறதென்றும், இவ்வலியுறுத்தலே பெண்ணை அடிமையாக்கப் பெரிதும்

காரணமாய் இருந்து வந்திருக்கிறதென்றும் தந்தை பெரியார் தனது ‘பெண் ஏன்

அடிமையானாள்?’ என்ற நூலில் கூறியுள்ள கற்பு தொடர்பான கருத்தும் ஈண்டு ஒத்து

எண்ணத்தக்கதாக உள்ளது.

சு.தமிழ்ச்செல்வியின் புதினங்களில் இடம்பெறும் பெண் கதைமாந்தர்கள்

பலர் கற்பு என்ற தளத்தில் பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளனர். இதனை பல

நிலைகளில் அறிய வாய்ப்புள்ளது. கணவனைப் பிரிந்து வாழும் பெண் ஒழுக்கம்

சார்ந்த நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகக் கூடியவளாக உள்ளாள்

என்பதை,

“நீ பேசாம எழும்பிப் போப்பா தங்கச்சி நீ போயி ஒன் வேலயப் பாரு

எதயும் மனசில வச்சிக்காதப்பா என்று செல்லாயியை

சமானாதப்படுத்தி அனுப்பி வைத்தார். செல்லாயிக்கு மனம்

ஆறவில்லை. அவ்வொ இல்லாத நேர கூடி பேசுனவ்வொளுக்கு கூலி

குடுக்கமாட்டியா? நாக்கு மேலே பல்லப் போட்டு என்ன அவுசாரின்னு

சொன்னாவொளே அவ்வொ நாக்கு அழுவிப் பொயிடாதா?”7

என்னும் கதைச் சித்தரிப்பின் வழி வெளிப்படுத்துகிறார். இதில் செல்லாயி என்னும்

பெண் கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் அவள் கற்பு நெறி பிறழ்ந்தாள் என்று

கெட்ட எண்ணம் படைத்த சில ஊராரும் உறவினரும் அவள் மீ து பழி சுமத்தி

அவளுக்கு ‘அவுசாரி’ என்ற பட்டத்தைக் கட்டி விட்டார்கள் என்பதனைக் கூறுகிறார்.

தவறிழைக்காமல் பழி சுமந்து வாழும் தன்னை நினைத்துத் துன்பமுறும்

அப்பெண்ணின் மனநிலையைச் சித்தரித்துக் காட்டுகிறார். மேலும் கணவன் இல்லை

என்றாலும் கற்பு நெறியில் தவறக் கூடாது என்பதிலும், அப்படி நெறிபிறழாமல்

வாழ்ந்தாலும் இந்தச் சமுதாயம் பழி சுமத்துவதில் தயங்காது என்பதனையும்

வெளிப்படுத்துகிறார். மேலும், பொருளாதாரத்தில் நலிவுற்று வாழும் சூழ்நிலையைக்


29

கொண்ட பெண்களுக்கே இது போன்ற சவாலை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி

ஏற்படுகின்றது என்பதையும் உணர்த்துகிறார். சமூகத்தின் இந்தச் சாடலை

எதிர்கொள்ள முடியாத இப்பெண்கள் பல நேரங்களில் சுயபலம் இழந்தவர்களாய்க்

கடவுளிடம் முறையிடும் அவலத்திற்குத் தள்ளப்படுகின்றனர் என்பதும்

இச்சித்தரிப்பில் புலனாகிறது.

இச்செய்தியுடன்,

“ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால்

நன்மையுண்டாகும். பதிவிரதைக்கு அதிக வரமும்


ீ சக்தியும் உண்டு.

சாவித்ரி தனது கணவனை எமன் கையிலிருந்து மீ ட்ட கதையில்

உண்மைபொருள் பொதிந்திருக்கிறது. ஆனால் பதிவிரதை இல்லை

என்பதற்காக ஒரு ஸ்திரியை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து

ஜாதியை விட்டுத்தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும்

பேசாமல் கொள்ளாமல் தாழ்வுபடுத்தி அவளைத் தெருவிலே

சாகும்படி விடுதல் அநியாயத்திலும் அநியாயம்”8

எனக் கூறும் பாரதியார் கருத்து ஈண்டு ஒத்து எண்ணத்தக்கதாக உள்ளது.

கற்பு என்பது பெண்களுக்கு ஓர் உன்னதமான பொருளாகச்

சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கற்பினைப் பெண்கள் இழக்கும் போதோ அதற்குக்

களங்கம் விளையும்போதோ அவர்கள் உலகில் வாழ்வதையே வெறுக்கின்றனர்

என்பதனை சு. தமிழ்ச்செல்வி குறிப்பிடுகிறார். வாழ்க்கையில் நல்ல உறவாக

நினைத்த ஆண் ஒருவர் தன்னுடைய கற்பினைச் சூறையாடிவிட்ட நிலையில் கற்பை

இழந்த பெண் சிவப்பி என்பவள் தன்னையே மாய்த்துக் கொள்ளுதல் மூலம்

இச்செய்தியை வெளிப்படுத்துகிறார். இதனை,

“ஒரு நாள் குடித்து விட்டு வந்த சாம்பசிவம் ஒந்தங்கச்சிய வளத்த

சித்தப்பங்காரனே அந்தக் குட்டிய கட்டி கிட்டப்ப. எடுத்து வளத்த நான்

ஒன்ன தொடக் கொடாதா? என்று சொல்லியபடி சிவப்பியை


30

நெருங்கியிருக்கிறான். நீங்க எனக்கு அப்பா என்று சொல்லி

அழுதிருக்கிறாள் பைத்தியம் பெத்த குட்டிக்கு மொற தல என்ன

வேண்டிருக்கு? ஒங்கம்மா மொற பாத்து படுத்தா ஒங்களப் பெத்தா?

என்று கேவலமாய்ப் பேசியவன் வெறிநாய் போல் நடந்து

கொண்டுள்ளான். தன் வேதனையை யாரிடமும் சொல்ல முடியாத

சிவப்பி விடிவதற்குள் தனக்கு விருப்பமான தேன் இலுப்பை மரத்தில்

தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி விட்டாள்”9

என்ற கதைச்சித்தரிப்பு வழியாகச் சுட்டிக்காட்டுகிறார். கற்புநிலையில் தவறாத

பெண்கள் கற்பும் உயிரும் ஒன்றெனக் கருதி பங்கம் நேர்ந்தால் உயிரை மாய்த்துக்

கொள்வது தமிழ்ப் பண்பாடு என போதிக்கப் பட்டிருப்பதும் ஈண்டு எண்ணத்தக்கதாக

உள்ளது. மேலும், உறவுநிலை மீ றலைச் செய்தும் பெண்களிடம் மரபு மீ றிப்

பாலியலுறவை மேற்கொள்கின்றனர் என்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

கல்வியில் பெண்நிலை

ஆண்களுக்கு இணையாகச் சமுதாய உரிமைகள் பெண்களுக்கும் கிடைக்க

வேண்டும் என்னும் உரிமைக்குரல் பல காலமாக ஒலிக்கப்பட்டு வருகிறது. அதற்கான

போராட்டங்களில் பலரும் ஈடுபட்டும் வருகின்றனர். இருப்பினும், இன்றைய

சமுதாயத்தில் பெண்களுக்கு இன்னும் அந்நிலை முழுமையாகக் கிடைத்து

விடவில்லை என்பதும் எதார்த்த நிலையாக உள்ளது. இந்நிலையில் கல்வியில்

ஆணும் பெண்ணும் சமநிலையை உடையவர்களாக இருக்கவேண்டியது

இன்றியமையாததாக உள்ளது.

கல்வி ஆண், பெண் இருபாலார்க்கும் சிறப்பளிக்கக் கூடியது. கல்வியின்

உயர்வையும், கல்லாதவரின் இழிவையும் அறநூல்கள் வலியுறுத்துகின்றன.

வாழ்க்கைக்கு உறுதி தரும் அறிவு இந்நூல்களில் தான் உள்ளது என்பதினை,

“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்


31

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவுநிலைமையால்

கல்வி அழகே அழகு”10

என்று நாலடியாரின் வாயிலாக அறிய முடிகிறது. கல்வி மட்டுமே அழியாத சிறந்த

செல்வம் என்பதினைக் கூறும் பொருட்டுத் திருவள்ளுவர் ,

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை”11

என்றும் கூறியுள்ளார்.

பெண்கல்வியை முன்னிறுத்தி பாரதிதாசன்,

“பெண்கட்குக் கல்வி வேண்டும்

குடித்தனம் பேணுவதற்கே

பெண்கட்குக் கல்வி வேண்டும்

மக்களைப் பேணுவதற்கே

பெண்கட்குக் கல்வி வேண்டும்

உலகினைப் பேணுவதற்கே”

என்றும்,

“கல்வி இல்லாத பெண்கள்

களர்நிலம்! அந்நிலத்தில்

புல் விளைந்திடலாம் நல்ல

புதல்வர்கள் விளைதல் இல்லை”12

என்றும் சுட்டுகிறார். இக்கூற்றுகள் பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதை

வலியுறுத்துவதன்வழி தனித்த நிலையில் சிறந்து விளங்குவதற்கும் அதே

வேளையில் தாம்வாழும் வட்டையும்


ீ குழந்தைகளையும் சிறப்பாக நிர்வகிக்கவும்

பெண்களுக்குக் கல்வி தேவை என்றும் அதற்கேனும் கல்வி கற்க வேண்டும் என்றும்

வலியுறுத்துவதாகவும் உள்ளன என்பது புலனாகிறது.


32

இக்காலத்துப் பெண்கள் கல்வியின் தேவையை நன்குணர்ந்துள்ளனர்.

சமுதாயத்தில் முன்னேற்றமடையக் கல்வி பெரும் பங்கு வகிக்கிறது. இன்றைய

நிலையில் கல்வி இல்லாத சமூகத்தை அதிகளவில் பார்க்க முடிவதில்லை.

இச்சூழலில் சு. தமிழ்ச்செல்வியின் புதினங்களில் வரும் பெண்கள் பள்ளிக்கூடம்,

கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களுக்குச் சென்று கல்வி கற்கும் வயதில்

பள்ளிக்கூட நிலையிலேயே இடையில் நிறுத்தப்படுவதையும் அல்லது கல்வி கற்கப்

பல இடையூறுகள் எழுவதையும் சுட்டிக்காட்டுவதுடன் கல்வியின்

முக்கியத்துவத்தையும் பல நிலைகளில் வெளிப்படுத்துகிறார். இதனை,

“வாணியை பள்ளியில் சேர்த்துவிட்டாள். வாணியும் பள்ளிக்கு

ஓடினாள். அவளுடன் மணியும் சேர்ந்து சென்றான். இருவரும் தட்டை

எடுத்துக்கொண்டு காலையிலேயே பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பி

விடுவார்கள்.”13

என்ற கதைச் சித்தரிப்பில் காட்டுகிறார்.

வாழ்வில் அதிக இன்னல்களைச் சந்தித்தாலும் பெண் பிள்ளைகளைப்

பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதைச் ‘செல்லாயி’ என்ற பாத்திரத்தின் வழியாக

நிகழ்த்திக் காட்டுகிறார். மேலும், பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்ற ஆவல்

பள்ளிக்கூடத்தின் மதியவேளையில் கிடைக்கும் மதிய உணவை உள்ளடக்கியதாய்

உள்ளது என்பதைச் சுட்டுகிறார். இதன் வழி பெரும்பாலானவர்களின் கல்விக்குத்

தடையாக வறுமைநிலை அதாவது சோற்றுக்கும் வழியின்றி தவிக்கும் நிலை

இன்றும் உள்ளது என்பதையும் புலப்படுத்துகிறார்.

ஒரு பெண் படித்தால் ஒரு குடும்பமே பயன்பெறும் என்பதினைக் ‘கீ தாரி’

என்னும் புதினத்தில் அமைத்துக் காட்டுகிறார் இதில் ஆடு மேய்க்கும் மக்கள்

கல்வியின் நிலையறிந்து அதிலும் குறிப்பாக பெண் குழந்தையைப் பள்ளிக்கு

அனுப்புவதில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளனர். இச்செய்தியை,


33

“நீ பள்ளிக்கொடம் போயி எளுத்தெல்லாம் படிச்சிக்கிட்டு பெரிய

வாத்தியாரம்மாவா வரணும். படிக்காத முட்டாக் களுதையொளாக்

கெடக்குற எங்களுக்கு எளுத்துக் கத்துக் குடுக்கணும்”14

என்று சு. தமிழ்ச்செல்வி கூறியுள்ளதைக் காணமுடிகிறது. இதனைப் போன்றே

‘கற்றாழை’ புதினத்தில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகப் பெண்கள்

எதிர்கொள்ளும் துயரத்தினை விளக்கும் வகையில்,

“ஒரு பொண்ணு வச்சிருக்குற. அதயும் கண்ணு காணாம

கொண்டவுட்டுட்டு என்னமா மாங்கச்சி இருப்ப..!

யாம் பொண்ணு படிக்கணுங்குறத்துக்காவ நான் என்ன

வேணுமுன்னாலும் தாங்கிக் கிடுவங்கா”15

என்ற கதைச் சித்தரிப்பை அமைத்துக் காட்டுகிறார். மேலும், கூலி வேலை

செய்தாலும் தன் பிள்ளையைப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு தாய் ஒருத்தி

எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறிக்கும் வகையில் ‘கற்றாழை’ என்ற

புதினத்திலும்,

“நாங்க ரெண்டியரும் வந்தாலும் வராட்டியும் ஒண்ணும் கஸ்டமில்ல

எனக்கு. அப்புடியா? பள்ளிக் கொடம் ஆரம்பிக்க இன்னும் பத்து நாளு

கொட இல்ல. கலாவ வேற பள்ளிக்கொடத்துக்கு சேக்கணும். அந்த

பள்ளிக் கொடத்துக்கு ஏத்தமேரி பாவாட சட்ட தைக்கணும், நோட்டு

புத்தகம், பேனா, பென்சிலுன்னு எவ்வள செலவு இருக்கு தெரியுமா

அதான், நாலு நாளைக்குப் போயி வெட்டுன முன்னாக்க கையில்

கெடக்கிற காச வச்சிக்கிட்டு முடிஞ்சத செய்யலாமுல்ல”16

என்ற கதையாடல் வழியாக சு.தமிழ்ச்செல்வி வெளிப்படுத்துகிறார். இதில் பள்ளிக்

கூடத்திற்கான சீருடை, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருள்கள் வாங்குவது

போன்றவற்றில் அவர்களது பெற்றோர்களுக்கு உள்ள சிக்கல்களை உணர்த்துகிறார்.


34

பெண்கல்வி பாதியில் பாதிக்கப்படுதல்

சமூக வாழ்வியல் நடைமுறைகளில் ஆண்களுடன் சேர்ந்து பங்கெடுத்துக்

கொள்ள பெண்களுக்குத் தடை இருந்ததாலும் இளவயதிலேயே திருமணங்கள்

நடைபெற்றதாலும் பொருளாதாரப் பற்றாக் குறையான நிலை, மற்றும் ஒடுக்கப்பட்ட

சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் வாழும் வாழிடங்களிலிருந்து கல்வி நிலையங்கள்

தொலைவில் இருந்ததாலும் பெண்களின் கல்வி பாதியிலேயே பாதிக்கப்படுகின்ற

சூழ்நிலை இருந்துள்ளது. இதனை, உணர்த்தும் விதமாக சு.தமிழ்ச்செல்வி புதினத்தில்

பெண் கல்வியையும், அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதையும் எதார்த்தமாகக்

கூறியுள்ளமை புலப்படுகிறது.

“உள்ளுர் பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வரையாவது படித்துவிட

வேண்டுமென்றுதான் ஆசைப்பட்டாள் சிவப்பி. ஆனால், மூன்றாவது

போகும் போதே அவர்களது பெற்றோர் பள்ளிக்கூடம் போவதை

நிறுத்திவிட்டனர். சாம்பசிவத்தின் முதல் மனைவி, அவளுடைய

பிள்ளைகள் யாரும் ஒழுங்காய்ப் பள்ளிக்கூடம் போய் எதையும்

கற்றுக்கொண்டு வரவில்லை. தான் பெற்ற பிள்ளைகளே படிக்காத

போது இந்த அனாதைப் பெண் ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணம்

அவளுக்கு. நீ படிச்சி என்னத்த கிளிக்கப் போற ஊட்டோட கெட...

என்பாள், அடிக்கடி மெல்ல மெல்ல பள்ளிக்கூடம் போகும் ஆசையும்

படிக்கும் ஆசையும் சிவப்பியை விட்டு போயே போய் விட்டது”17

என்ற கதைச்சித்தரிப்பில் வெளிப்படுத்துகிறார். தன்னுடைய பிள்ளை படிக்கவில்லை

என்பதற்காக இரண்டாந் தாரமாகத் திருமணமான தன் சித்தி சிவப்பி என்ற

பெண்ணிற்குக் கொடுக்கும் தண்டனையையும் பள்ளியை விட்டுப் பாதியில்

நிறுத்துவதையும் ‘கீ தாரி’ என்ற புதினத்தின் ஊடாக ஆய்ந்தறிந்து கொள்ளமுடிகிறது.

‘மாணிக்கம்’ என்ற புதினத்தின் மூலமாக உள்ளுர்ப் பள்ளியில் படித்து முடித்தவுடன்

வெளியூர் சென்று படிக்க வேண்டிய நிலை ஏற்படுவதைக் காட்டி வெளியூருக்குப்


35

பெண் பிள்ளையின் பாதுகாப்பைக் கருதியும் பெண் கல்வியை இடையிலேயே

நிறுத்தி விடுவதையும்....

“வாணியும் பள்ளிக்கூடம் போய் படிக்க எவ்வளவோ ஆசைப்பட்டாள்.

ஆறாவது படிக்க வேண்டுமென்றால் இடும்பாவனம் தான் போக

வேண்டும். கற்பகநாதர் குளத்துப் பெண்களெல்லாம் ஐந்தாம் வகுப்பு

வரை தான் படித்தார்கள்”18

எனக் காட்டுகிறார். மேலும், ஐந்தாம் வகுப்பு வரை மட்டும் படித்தால் போதும் என்ற

நிலையில் பெண் கல்விநிலை இருந்துள்ளதையும் அதையும் தாண்டிப் போகும்

பெண்களது கல்வி தடைபட்டுப் போவதையும் அறியமுடிகிறது,

“வாணியை ஐந்தாம் வகுப்பு படித்ததோடு போதுமென்று நிறுத்தி

விட்டார்கள். மணியும் நாஞ்சியும் மட்டும் பள்ளிக்கூடம் போனார்கள்.

அவர்களுடன் செல்லாயியின் சின்னப் பெண் பிள்ளையும்

பள்ளிக்கூடத்திற்குப் போய்விடும். வட்டு


ீ வேலைகளை யெல்லாம்

வாணி தான் செய்தாள்”19

என்ற கதையாடல் வழி உணரமுடிகிறது. ஒரு குடும்பத்தில் அக்கா, தங்கையாக

பெண்கள் இருவர் உள்ளனர். அக்கா பள்ளிக்கூடம் சென்று படிக்காதவள். தங்கை

பள்ளிக்கூடம் சென்று படித்து வருகிறாள். இதனால் மன உளைச்சல் அடைந்த

அக்காள். நான் மட்டும் படிக்கவில்லை. நீ படித்து என்ன செய்ய போகிறாய்? என்று

தன்னுடைய தங்கையைப் பள்ளிகூடத்தை விட்டுப் பாதியிலேயே நிறுத்தி

விடுகிறாள். கல்வி கற்க வாய்ப்பு கிடைக்காத பெண்ணையும், கல்வியில் சிறந்து

விளங்கிய பெண் பாதியிலேயே கல்வி கற்பதை நிறுத்தி விட்ட நிலையையும்

‘கற்றாழை’ என்னும் புதினத்தின் வாயிலாக சு.தமிழ்ச்செல்வி கூறியுள்ளார். இதனை,

“மணிமேகலையோ ஆறாம் வகுப்புக் கூட முழுதாய் முடிக்காமல்

நின்றுவிட்டாள். படிப்பில் எவ்வளவு கெட்டிக் காரியாயிருந்தாள்.


36

இவள் நிறைய படிக்க வேண்டுமென்று எவ்வளவு ஆசைகளோடு

புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு இடும்பாவனத்திற்கு ஓடினாள்.

ஆறாம் வகுப்பிற்கு மேல் அடியெடுத்து வைக்க முடிந்ததா அவளால்?

இப்போது நினைத்தாலும் தன்னுடைய அக்கா பூரணத்தின் மீ தும்

அம்மா, அப்பா மீ தும் கோவம் கோவமாக வந்தது. எல்லாவற்றிக்கும்

பூரணம் தான் காரணம். அவளால் தான் மணிமேகலை படிக்க

முடியாமல் போனது. நான் அஞ்சாவுது வரக்கிந்தான் படிச்சன் அவள

மட்டும் எதுக்கு ஆறாவது சேத்து விடணும் என்பாள். அடிக்கடி தல

வாழ்ந்தாதான் தலக்கடயும் வாழும்.. நானே படிக்கல! இது படிச்சி

என்ன கிழிக்கப் போகுது என்பாள்.”20

என்னும் கதையாடலில் ஆராய்ந்து அறியமுடிகிறது.

திருமண முறை

ஓர் ஆணும் பெண்ணும் சமுதாயம் வகுத்துள்ள சடங்கு அல்லது சட்ட

முறைப்படி இணைந்து குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்குரிய நிலையினைச்

சமூகத்திற்கு அறிவிப்பதாக திருமணம் உள்ளது. உடலாலும் உள்ளத்தாலும்

இணைந்து குடும்பத்தை உருவாக்கும் பணியைத் திருமணம் ஆற்றுகிறது. அம்முறை

புதிய உறவு முறைகளை உண்டாக்கித் தருகிறது. இதனை, ஒருவன் ஒருத்தியையோ

ஒருத்தி ஒருவனையோ வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு

மணம் அல்லது திருமணம் என்று பெயர். ‘திரு’ என்னும் சொல்லுக்கு அழகு, செல்வம்,

தெய்வகம்,
ீ மேன்மை, செம்மை, சிறப்பு முதலிய மங்கலச் சொற்களையும் கூறலாம்.

இதன்வழி, ஓர் ஆணும் பெண்ணும் மரபு வழியிலோ காதல் வழியிலோ சமுதாயம்

வரையறுத்து வைத்துள்ள சடங்கின் வழி இணைந்து ஒரு கூரையின் கீ ழ்க்

குடும்பமாக வாழ்வதைத் திருமணம் என உணரமுடிகிறது.

திருமணமும் பெண்களும்

தமிழ்ச் சமுதாயத்தில் திருமணம் பல வகைகளில் நடைபெற்று வருகின்றது.

இதனை ஒரு துணை மணம், பல துணை மணம் என்பனவாக அறியமுடிகிறது.


37

அவ்வகையில், படைப்பாளரின் படைப்புகளில் எந்தெந்தச் சூழ்நிலைகளில் எவ்வெவ்

வகையான திருமணங்கள் நிகழ்ந்தன என்பதை,

1. ஒரு துணை மணம்

2. பல துணை மணம்

3. அகமணம் - புறமணம்

என்பனவாக பிரித்தறிய முடிகிறது.

ஒரு துணை மணம்

திருமண வயதினை அடைந்த ஒருவன் அந்நிலையை எய்திய

ஒருத்தியையோ ஒருத்தி ஒருவனையோ மணம் செய்து கொள்வது ஒரு துணை

மணமாகும். சட்டம், மதம் முதலிய சமூகக் காரணிகள் ஒரு துணை மணத்தைச்

சமுதாய தளத்தின் ஏற்று நிலைநிறுத்தி வைத்துள்ளன. ஒரு துணை மணம் நீண்ட

காலமாக வழிவழியாக நிலைத்து நீடிப்பதற்கும் அனைவரும் இதனை

விரும்புவதற்குப் பொருளாதாரமும் முக்கியக் காரணமாக உள்ளது. திருமணம் புரிந்து

கொண்டோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மணவிலக்கு நிகழ்ந்தாலும்

மீ ண்டும் பெற்றோர் முயற்சியாலோ தங்கள் முயற்சியாலோ வேறொரு திருமணம்

புரிந்துகொண்டு வாழ்வர். இத்தகைய மறுமணத்தையும் ஒரு துணை மணமாகவே

கருதுவர். ஒரு நேரத்தில் வாழ்க்கைத் துணையாக ஒருவரை மட்டுமே ஏற்று வாழும்

ஓர் ஆணுக்கு ஒரு பெண் என்னும் நிலையிலேயே தமிழர் திருமணம் ஏற்றுக்

கொள்ளப்பட்டு வருகிறது. இதனை,

“எந்த ஒரு காலத்திலும் ஒரு துணைக்கு மேல் கொண்டிராத

மணவாழ்க்கையை மட்டுமே மணமாகக் கொள்ளலாம்”21

என்னும் கருத்து உறுதி செய்கிறது. இதனை முன்னிறுத்தியே சு. தமிழ்ச்செல்வி

தன்னுடைய புதினங்களில் அதிகமாக ஒரு துணை மணம் பற்றிய செய்திகளைக்

கூறியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. இதனை விளக்கும் வகையில் ‘மாணிக்கம்’

என்னும் புதினத்தில்,
38

“கணேச பிள்ளைக்கு மாப்பிள்ளையைப் பிடித்ததோ இல்லை தனது

கடமையை இத்தோடு முடித்துவிட்டு நிம்மதியாய் இருக்கலாமென்று

நினைத்தாரோ தெரியவில்லை. உடனே சம்மதித்து விட்டார். பேசி

முடித்து முகூர்த்தோலை எழுதி விட்டார்கள். கல்யாண நாள்

நெருங்கிக் கொண்டே வந்தது.

கல்யாணம் முடிந்து செல்லாயி மாணிக்கத்துடன் வாழ

வந்துவிட்டாள்”22

என்று கூறியுள்ளதைக் காணமுடிகிறது. இன்றளவும் தமிழர்ப் பண்பாட்டு நிலையில்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒரு துணை மணமே அதிகளவில் காணப்படுகின்றது

என்பது கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது.

‘கீ தாரி’ என்னும் புதினத்தில்,

“வெள்ளைச்சாமிக்கே ஆயிய கட்டி வைக்கிறதுதான் ரொம்ப சரி

என்றாள் இருளாயி….

ஆனா, இதுக்கு வெள்ளச்சாமி ஒத்துக்கிறணுமே..... என்றான்

ராமுவின் மருமகன்.

வெள்ளைச்சாமி யாம் புள்ள. நா சொன்னா கேக்காம பெயிடுவானா?

சேரிப்பா நீங்க நெனச்சமேரியே ரெண்டியருக்கும் தையில

கல்யாணத்தைப் பண்ணிவுட்டுருங்க”23

எனத் திருமண நிகழ்வு கூறப்படுகிறது.

அகமணம் - புறமணம்

மதம், இனம், சாதி என்கின்ற ஒரு குழுவிலிருக்கும் ஓர் ஆணோ ஒரு

பெண்ணோ தான் கலந்துள்ள குழுவிற்குள்ளேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணம்

புரிந்து கொள்வது அகமணம் என்றும் அல்லது குழுவுக்கு வெளியிலிருந்து


39

ஒருவரைத் தேர்ந்தெடுத்;து மணம் புரிந்து கொள்வது புறமணம் என்றும் திருமணம்

இரு நிலைகளில் அமைகிறது. இதன்வழி, அகமண முறையில் குறிப்பிட்ட

குழுவுக்குள்ளேயே வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதி

பின்பற்றப்பட்டு வருகிறது என்பதையும், புறமணம் என்பது அகமண முறைக்கு

நேர்மாறானது என்பதையும் சமுதாய நோக்கில் உணரமுடிகிறது. இதனை,

“பல சமூகங்கள் ஒருவன் அல்லது ஒருத்தி தன்னுடைய துணையைக்

குறிப்பிட்ட சில குழுக்களுக்கு வெளியே தான் தேர்ந்தெடுக்க

வேண்டும் என்று வற்புறுத்துகின்றன. அந்த எல்லைகள் குடும்ப

உறவுக்குக் குழு, குலம், சாதி முதலியனவாகும். இந்த எல்லைகளுக்கு

வெளியேதான் திருமணம் நடைபெற வேண்டும் என்பது விதி அந்த

விதியின்படி அமைகிற மணம் புற மணம் எனப்படுகிறது”24

அகமணம், புறமணம் என்ற கோட்பாட்டின்படி இன்றைய சமுதாயத்தில் நிகழும்

திருமணங்கள் ஒரு குழுவுக்குள்ளேயோ மாற்று இனத்திலோ மாற்று மதத்திலோ

நிகழக்கூடியனவாக உள்ளன. இதனை சு. தமிழ்ச்செல்வி புதினத்தில் ஒரு இன

வரைவில் உள்ள மக்கள் அதே இனக்குழுவில் திருமணம் செய்வதையும், சாதி மாற்றி

திருமணம் செய்துகொள்வதையும் கூறியுள்ளார்.

‘கீ தாரி’ புதினத்தில் ஆடு மேய்க்கும் கீ தாரி இனக்குழு மக்கள் தங்கள்

குழுவைத் தவிர வேறு இனத்தில் பெண் கொடுப்பதுமில்லை பெண் எடுப்பதுமில்லை

என்பதனை,

“என்னங்க பெரியய கருப்பு. கருப்புச் செவப்பும் கண்ணுக்கு

மட்டுந்தானுங்க. அந்த மேரி அளகு அந்துசா இருக்கணுமுன்னல்லாம்

நாங்க பாக்கல. நாங்களும் ஒங்களமேரி ஆட்டுக்காரவகதான்

வெயில்லயும் மளயிலயும் தண்ணியிலயும் அலயினவகதான்.

தாராளமா கட்டிக் கொடுங்க”25

என்பதன்வழி தெரிந்து கொள்ள முடிகின்றது.


40

வறுமையில் பெண்மை

சமுதாயத்தில் ஏற்படும் பல்வேறு அரசியல் மாற்றங்களினாலும்

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளினாலும் நாட்டில் வறுமை ஏற்படுகின்றது. நமது நாடு

வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. நம் நாட்டில் வறுமையில் நடைபெறும்

நிகழ்வுகளும், பஞ்சங்களும், விவசாய இழப்புகளும் நாட்டின் சிறப்பினைக்

குறைப்பனவாகவே உள்ளன. இன்று ஏற்படும் பல சமுதாயப் பிரச்சனைகளுக்கு

எல்லாம் வறுமைப் பின்னணி காரணமாக இருக்கிறது. அதன் காரணமாக நவன


இலக்கியப் புனைவுகள் வறுமையைப் பற்றி நிரம்பக் கூறியுள்ளன. அதில்

சு.சமுத்திரம் வறுமையைப் பற்றிக் கூறும்பொழுது ‘வறுமை’ என்பது அடிப்படை

வசதிகளே கிடைக்காமல் அல்லற்படுவதாகும். ஆங்கிலத்தில் இதனைப் ‘பாவர்ட்டி’

எனக் கூறுவர். ”வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளே கிடைக்காத மக்கள்

வறுமையிலுள்ளோர் என்று அழைக்கப்படுகின்றனர். இதனை வறுமைக் கோட்டிற்குக்

கீ ழ் உள்ளவர்கள் (people under the poverty line)”26 என்று கூறுகிறார்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ள பேராசிரியர் (உ.வே) வறுமை

என்பதினை ‘போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம்’ என்று கூறி விளக்கியுள்ளார். ஒரு

நாட்டில் வறுமை ஏற்பட்டால் அதனை மற்ற நோய்களைவிட மிகக்

கொடுமையானதாகக் கருதுவர். இது நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக

அமைந்துவிடும். இச் செய்திகளை நவன


ீ இலக்கியங்கள் பலவகையில் கூறுகின்றன.

கதை இலக்கியப் படைப்பாளர்கள் பலரும் மனிதச் சமூகத்தை வாட்டி வதைக்கும்

பொருளாதாரப் பிரச்சனையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அந்த வகையில் புதின

ஆசிரியர் சு. தமிழ்ச்செல்வி வறுமையின் வாட்டத்தை ஏழ்மையின் இயலாமையை

மிகவும் செறிவாக வெளிக்காட்டியுள்ளார். அந்த வகையில் ‘அளம்’ என்ற புதினம்,


41

“நா வாங்கிக் குடுக்காதத்துக்கு புள்ளய யாம் பேசுற? நம்ம எடுத்தாந்தத

வச்சிக்கிட்டா போடாம திரியுது. பாவம் நாம் போறத்துக்குள்ள அதுக்கு

இரண்டு மேச்சட்ட தச்சிக் குடுத்துட்டுப் போவணும்”

என்றும்,

“யாம்மா, இவ்வள நாளுமில்லாம புதுசா இப்ப வேலக்கிப் போப்

போறங். வூட்டுல இருந்து என்ன பண்ணுறது, செலவுக்கும் கொட

காசில்லாம இவ்வள நாளு மேரி இருக்குறத்த வச்சிக்கிட்டு ஓட்ட

வேண்டியதுதாங்”27

என்றும் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான உடை கூட இல்லாமல்

அவதிப்படும் பெண் பிள்ளைகளின் நிலையினைச் சுட்டிக் காட்டுகிறார். உணவுக்கு

வழியின்றி அளத்திற்குக் கூலி வேலைக்குச் செல்லும் பெண்களின் வறுமை

நிலையைப் புலப்படுத்துகிறார்.

மேலும், உணவின்றிக் கிழங்கையும், கொமுட்டிப் பழங்களையும்,

கேப்பங்கூழையும் சாப்பிட்டுக் கொண்டும் ஒரு சில நேரம் அதற்கும் வழியின்றிப்

பட்டினியாகவும் கிடக்கும் பெண்களின் வறுமை நிலையை வெளிப்படுத்துகிறார்.

‘மாணிக்கம்’ என்ற புதினத்தில் கணவன் துணை இல்லாமல் பெண்

குழந்தைகளை வைத்துக்கொண்டு வறுமையில் போராடி வாழ்க்கையின்

அடிப்படைத் தேவைகளாக உள்ள உணவு, உடை, இருப்பிடம் என்பவை கூட

இல்லாமல் கடினப்படும் பெண்ணின் நிலையை.,

“அரைச்சட்டி மாவிலிருந்து இதை களியாக கிண்டினால் அப்படியே

போட்டுக் கிண்ட வேண்டியது தான். கூழாய்க் காய்ச்சினால் பாதி மாவு

போட்டால் போதும். இதையே இரண்டு வேளைக்கு வைத்துக்

கொள்ளலாம் என நினைத்தாள். கூழாய்க் காய்ச்சினால் ஊற்றிக்

குடிக்க டம்ளர் வேண்டுமே டம்ளருக்கு எங்கே போவது? களியாக


42

கிண்டி விடலாம் என யோசித்தவளாய் எல்லா மாவையும்

கொட்டிக் கிண்டினாள்”28

என வறுமையின் நிலையினை சூழ்நிலைக்குத் தக்கவாறு எவ்வாறு

எடுத்துக்கொண்டு வாழ்கின்றனர் அமைத்துக் காட்டுகிறார்.

உறவுகளில் பெண்நிலை

உறவு என்பது சமூக வாழ்வியலோடு கலந்த ஒன்றாக உள்ளது. பிறப்பு முதல்

வாழ்வின் நிறைவு வரை இணைந்தே பயணம் செய்யும் தமிழ்ப் பண்பாட்டின்

அடையாளங்களாக உறவு விளங்குகிறது. உறவுகளால் ஒரு பெண் எத்தகைய

உணர்வுகளை மேற்கொள்கிறாள் என்பதனையும் உலக வாழ்வியலோடு எவ்வாறு

ஒன்றிப் போகிறாள் என்பதையும் சு.தமிழ்ச்செல்வி தம்முடைய புதினங்களின்வழி

பல நிலைகளில் எடுத்தியம்பியுள்ளார்.

புதினங்களில் காணப்படும் உறவுகள் பற்றிய செய்திகளை,

1. தாய் மகள் உறவு

2. தந்தை மகள் உறவு

3. கணவன் மனைவி உறவு

4. அக்காள் தங்கை உறவு

5. அண்ணன் தங்கை உறவு

என வகைப்படுத்தி அறியமுடிகிறது.

தாய் மகள் உறவு

திருமணம் புரிந்துக்கொண்டு கணவன் வட்டுக்குச்


ீ சென்றுவிட்ட மகளைப்

பார்த்து வருவதற்குச் சென்ற தாயின் மன நிலையையும், புதிதாகப் பிறந்திருக்கும்

பெண் குழந்தையைப் பார்க்கும் தாயானவள் மகள் மூலம் வாய்த்த புதிய உறவு

நிலையை எதிர் கொள்ளும் தன்மையையும் கூறுகிறார். இதில்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை நீ புள்ளய பத்தரமா பாத்துக்க என்றாள்.


43

பொயிட்டு மறுபுடு எப்பம்மா வருவ?

நா எங்க வரப் போறங்....வேல ஒளிஞ்சாத்தான வாரத்துக்கு.

தெரியும்மா எனக்கு... இனிமே நீ இஞ்ச வரமாட்டன்னு தெரியும். நீ

வருத்த மாத்தான் போற என்றவளின் கண்கள் கலங்கியது...

பச்ச புள்ள காரி இப்ப யாங் கலங்குற?”29

என்ற தாய், மகள் என்ற உறவுகளுக்கிடையே நடக்கும் உரையாடலில்

அவர்களிடையே உள்ள உறவு நிலை புலனாகின்றது.

தந்தை மகள் உறவு

ஆடுகளை அடைத்துப் பராமரிக்கக் கிடை என்பதை அமைப்பர். கிடை

அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு தன் மகளையும் ஆடுகளையும்

நினைக்கும் தந்தை இராமு கீ தாரியின் உறவு நிலையினை,

“வெள்ளச்சாமி கெடக்குறான் அவன யாரு பாத்துக்கிடனும் அவன்

ஆம்புளப்புள்ள இந்தக் கரிச்சாவ நெனச்சிதான் நாங்க கெடக்குறம்”30

என்ற கதையாடல் வழி கூறியுள்ளமை புலப்படுகிறது.

வெளியூர் சென்று பணம் சம்பாதிக்க வேலைக்குச் செல்லும் தந்தை தன் மகள்

அழுவதைப் பார்த்துத் தானும் அழும் நிகழ்வை,

“சேரிப்பா’ என்று அழுது கொண்டே வாங்கிக் கொண்டாள்

வடிவாம்பாள். சுந்தரம்பாள் கீ ழே விழுந்து அழுது புரண்டாள். அவள்

அழுவதைப் பார்த்து வழியனுப்ப வந்திருந்த மற்ற சொந்தக்கார

சனங்களும் அழுதார்கள். கண்களைத் துடைத்துக்கொண்டு

இராமையாப் பிள்ளையுடன் போனான் சுப்பையன்”31

எனும் சித்தரிப்பில் புலப்படுத்துகின்றார். இதில் பிள்ளைகளையும் மனைவியையும்

விட்டுப் பிரிந்து பணம் சம்பாதிக்கும் பொருட்டு வெளிநாட்டிற்குச் செல்லும் வறுமைப்


44

பின்னணியில் உள்ள குடும்பத்தினரிடையே நிலவும் உறவு நிலையை

வெளிப்படுத்துவதை உணரமுடிகிறது.

கணவன் மனைவி உறவு

ஒரு குடும்பத்தில் உள்ள கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள அன்பு

வயப்பட்ட உறவு நிலைதான் குடும்ப வாழ்வின் ஆணி வேராக அமைந்திருக்கும்.

இந்த உறவு குடும்பத்தை வழி நடத்த உதவும். புதியதாகத் திருமணமான கணவன்,

தன் மனைவியிடம் மேற்கொள்ளும் உறவுப் பேணலை வைத்து அவர்களது குடும்ப

மகிழ்வினை மற்ற உறவுக்காரர்கள் அளந்தறிவார்கள். இதனை,

“கருக்கும் வெயிலில் உப்பளத்து வெக்கையில் வெந்து

தணிந்தவளுக்குத் தென்னந்தோப்பின் குளுமை சந்தோஷமாக

இருந்தது. பொன்னையன் அவளிடம் காட்டிய அன்பு அதை விடவும்

ஆறுதலாயிருந்தது அண்ணன், தம்பி கூடப் பிறக்காதவள்,

வளரும்போது அப்பாவின் அன்பு கிடைக்காமல் ஏங்கியவளுக்குப்

பொன்னையனை ரொம்பவும் பிடித்துப் போனது”32

என்னும் கதைச் சித்தரிப்பில் படைப்பாசிரியர் அமைத்துக் காட்டுகிறார்.

அக்காள் தங்கை உறவுநிலை

‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீ தாரி’, ‘கற்றாழை’ போன்ற சு.தமிழ்ச்செல்வியின்

புதினங்கள் பெண் வாழ்வியலை மையப்படுத்திய புதினங்களாகவே

படைக்கப்பட்டுள்ளன. இதில் அக்காள் தங்கை என்ற உடன்பிறந்தார் உறவானது மிக

நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. இதனைக் கற்றாழை புதினம்,

“சோடாவை உடைத்து வாங்கி வந்த வளர்மதி அதிலிருந்து

கொஞ்சமாய்த் தன் கையில் ஊற்றி மணிமேகலையின் தலையை

நிமிர்த்தி முகத்தில் அடித்தாள்.


45

இதக் குடிக்கா சரியாயிடும் என்று சோடாவை அவள் கையில்

கொடுத்தாள்.

முகத்தைத் துடைத்துக் கொண்டு சோடாவை ஒவ்வொரு வாயாகக்

குடித்தாள் மணிமேகலை. என்ன நம்ம இப்படியெல்லாம் பண்ணுறம்?

நம்மளப்பத்தி தங்கச்சி என்ன நெனச்சிகிடும்?”33

என்று அக்கா தங்கை என்பாரிடையே நிகழும் பாசப்பகிர்வைப் பாங்குடன்

புலப்படுத்துகிறது.

தொழிலாளர்ப் பெண்களின் நிலை

புதினம் என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினருடைய செயல்களைக்

கதையாளுகை மூலம் வெளிப்பாடு செய்வது மட்டுமன்று. அது ஒரு காலக் கட்ட

உணர்ச்சிகளின் வெளிப்பாடாகவும் அமைகிறது. அவ்வகைப்பட்ட சூழலில் மக்களின்

அன்றாட வாழ்க்கையை உள்ளடக்கிப் பார்ப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

வாழ்க்கையில் தன்னுடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக்

கொள்வதற்காக மற்றவர்களுடன் உறவாட வேண்டியிருக்கிறது. இதனை மனிதனின்

வாழ்வியல் பதிவாக உணரமுடிகிறது. இப்பதிவுகள் சு.தமிழ்ச்செல்வி

கதையாடல்களில் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாக உள்ள உணவு, உடை, இருப்பிடம்

முதலானவற்றை முழுமையாகத் தக்க வைத்துக் கொள்ள, தொழில் மிகவும்

முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இச் செய்தியை.,

“இச் சமூகம் ஒழுக்க நெறிகள் மரபுகள் சட்டங்களால்

வகுக்கப்பட்டுள்ளன. தொழில், வாழ்வைத் தீர்மானிக்கின்றது. உணவு,

உடை, உறையுள் போன்ற தேவைகளையும் வசதிப் பொருள்கள்,

ஆடம்பரப் பொருட்கள் ஆகியவற்றையும் அடைய விழையும் மனித

விருப்பத்தை அடையத் தொழில் வழிவகுக்கிறது”34


46

என்று பாஸ்கல் கிஸ்பர்ட் என்பார் சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள்

என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

ஒரு புதினமானது நடப்பியல் சித்தரிப்பு, சமூக வாழ்க்கைச் சிக்கல், தனி

மனிதர்களின் அனுபவம், வாழ்வியல் பதிவுகள் போன்றவற்றைப் படம்பிடித்துக்

காட்டுகின்றது. அந்த வகையில் சு. தமிழ்ச்செல்வியின் ‘கற்றாழை’, ‘மாணிக்கம்’,

‘அளம்’ போன்ற புதினங்கள் பெண்கள் படும் துயர்களையும், தொழில் சார்ந்த

பதிவுகளையும் வாசகரின் மனக்கண் முன்னே காட்டுகின்றன. இவற்றில் பெண்கள்

ஈடுபட்டிருந்த தொழில்களையும் இத் தொழில்களைச் செய்த காலங்களில் அவர்கள்

எதிர்கொண்ட சிக்கல்களையும் விவரிக்கின்றார். அவ்வகையில் படைப்பாளர்

படைத்த பெண்கள் ஈடுபட்டிருந்த தொழில்களைப் பின்வருமாறு பிரித்தறிய

முடிகிறது. அவையாவன,

1. வயல் வேலை செய்யும் பெண்கள்

2. ஆடு மேய்க்கும் பெண்கள்

3. கம்பெனியில் வேலை செய்யும் பெண்கள்

4. விறகு விற்கும் பெண்கள்

5. உப்பு விற்கும் பெண்கள்

6. பெண்குழந்தைத் தொழிலாளர்கள்

என்பனவாகும். இது போன்று உடல் உழைப்பை முன்னிறுத்தித் தொழில் செய்து

வாழும் பெண்களின் பதிவுகளை சு. தமிழ்ச்செல்வி தமது புதினங்களில் காட்டுவதை

அறியமுடிகிறது.

வயல் வேலை செய்யும் பெண்கள்

மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக உணவு விளங்குகிறது.

உணவுமுறை ஒவ்வொரு வட்டாரத்திலும் வேறுபடுகிறது. பொருளாதாரத்தில்

உயர்த்தட்டு மக்களிடத்து இருக்கின்ற உணவுப் பழக்க வழக்க முறைகள் நடுத்தட்டு

மற்றும் கீ ழ்த்தட்டு உழைக்கும் மக்களிடம் இருப்பதில்லை.


47

உணவு பழக்கத்தில் நெல் முக்கியப் பங்கினை வகிக்கின்றது. நெல் அறுவடை,

நெல் விளைவித்தல், நெல் விளைச்சலில்லாததால் ஏற்படும் இழப்பு, இயற்கைப்

பேரிடரினால் விளைச்சலின்மை போன்றவற்றை ‘மாணிக்கம்’, ‘அளம்’ போன்ற

புதினங்களில் சுட்டிச்செல்கிறார். அவற்றில், நெல் விளைவிக்கும் கூலிப் பெண்களின்

நிலைகளைச் சித்தரித்துக் காட்டுகின்றார்.

“சடை சடையாய் வளர்ந்திருந்தது. நெற்பயிர் தொண்டைக் கதிரி

பருவத்திலிருந்து பயிர் சாகுபடி செய்வதையே மறந்து விட்டிருந்த

சுந்தராம்பாளைப் பாடாய்ப் படுத்தி இந்த வருடம் தெளிக்க

வைத்திருந்தாள் வடிவாம்பாள். வட்டைச்


ீ சுற்றியிருந்த பள்ளக்கால்

கொல்லைகளில் வெள்ளைக்கொடவால் நெல்லைத்

தெளித்திருந்தாள். பயிர் வளர்ந்திருந்ததைப் பார்க்கப் பார்க்க

வடிவாம்பாளுக்கு சந்தோஷம் தாங்கவில்லை”35

என்பதின் வழியாக ‘அளம்’ என்ற புதினத்தில் காட்டுகிறார்.

தொகுப்புரை

இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை பெற்று அறிவியல்,

அரசியல், தொழிற்கூடம் போன்ற பல நிறுவனங்களில் சரி நிகராய்க் காலூன்றி

வருகிறார்கள். பொதுநிலையில் தொழில்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்கள் என்பது

புலப்படுத்தப் பட்டுள்ளது.

பெண்களுக்கான வாழ்வு பல நிலைகளில் முன்னேற்றம் அடைவது போன்ற

தோற்றம் காணப்பட்டாலும் குடும்பம், திருமணம், அரசியல், கல்வி, பொருளாதாரம்

போன்ற பல நிலைகளில் பெண்களுக்கான உரிமை சிக்கலுக்குரியதாகவே உள்ள

தன்மை சான்றாதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.


48

ஆண்களைவிடப் பெண்கள் கல்வி கற்றால் இந்தச் சமுதாயம் மிக நல்ல

முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது என்பதும், வடு


ீ தொடங்கி சமுதாயம் வரை

பெண்கல்வி முன்னேற்றத்திற்குத் தடை உள்ளது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதஇனம் உறவுமுறைகளால் பலப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறவு

பண்பாட்டுக் கட்டுகளும் சிற்சில சமயங்களில் சிதைவுபட்டுப் பெண்களின் கற்பும்

பாதுகாப்பும் சிக்கலுக்குரியாதாகி விடுகின்ற துயரம் கண்டறியப் பட்டுள்ளது.

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடம்

பெறுகிறது. இவ்வுணவு வகைகள் நிலத்துக்கு நிலம் பல சூழல்களால்

வேறுபடுகின்றன என்பது சுட்டப்பட்டுள்ளது. ஆனால், பல குடும்பங்கள் வறுமை

நிலையில் உள்ளமை சான்றாதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.


49

சான்றெண் விளக்கம்

1. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக் - 51.

2. மேலது., பக். 206.

3. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 46.

4. சு. தமிழ்ச்செல்வி, கற்றாழை, பக். 330.

5. திருக்குறள், 54.

6. ரோஷினி, தேன் முள்ளுகள், பக். 33.

7. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 180-181.

8. மகாகவி பாரதியார், பெண்ணியக் கட்டுரைகள், பக். 46.

9. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 112.

10. நாலடியார், உரைவளம்.

11. அ. மாணிக்கம், திருக்குறள் தெளிவுரை, குறள் எண். 563.

12. பாரதிதாசன், குடும்ப விளக்கு, பக். 54.

13. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 23;7.

14. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 55.

15. சு. தமிழ்ச்செல்வி, கற்றாழை, பக். 242.

16. மேலது., பக். 251.

17. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 64-65.

18. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 257.

19. மேலது., பக். 56.

20. சு. தமிழ்ச்செல்வி, கற்றாழை, பக். 20-21.

21. பக்தவசல பாரதி, பண்பாட்டு மானிடவியல், பக். 386.

22. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 76-78.


50

23. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 98.

24. M.N. Srinivasan, Cast in Modern India. P. 3.

25. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 95.

26. ஆ. ஜெகதீஸ், சு.சமுத்திரம் நாவல்களில் சமூகம், பக். 57.

27. சு. தமிழ்ச்செல்வி, அளம், பக். 17, 65.

28. சு. தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 151.

29. சு. தமிழ்ச்செல்வி, அளம், பக். 250.

30. சு. தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 59.

31. சு. தமிழ்ச்செல்வி, அளம், பக்-18.

32. மேலது., பக். 194.

33. சு. தமிழ்ச்செல்வி, கற்றாழை, பக். 403.

34. மேலது., ப. 88.

35. ஜெ. நாராயணன், பாஸ்கல்கிஸ்பர்ட் சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள்,

(தமிழாக்கம்), பக். 177.


51

இயல்-3

சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் சமுதாய கருத்துகள்

முன்னுரை

ஒரு காலத்தின் சமுதாயப் போக்கில் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பல

கதாபாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தும் இலக்கிய வடிவமாகப் புதின

இலக்கியம் உள்ளது. அக்காலச் சமுதாயத்தில் நிகழும் சமுதாய மாற்றத்தைச்

சித்தரிக்கக் கூடியதாகவும் புதினம் இருந்து வருகிறது. சமுதாய நிகழ்வுகளைப்

பாடுபொருளாகக் கொண்ட இலக்கியங்களின் வழி நிகழ்காலச் சமுதாயச்

சிக்கல்களையும், சமூக வாழ்வியலையும் சமுதாயவியல் கண்ணோட்டத்தில் காண

வாய்ப்புள்ளது. இம்முயற்சிக்கு சு.தமிழ்ச்செல்வி புதினங்கள் நல்ல பாதைகளை

அமைத்துத் தருகின்றது. சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் காணப்படும் சமுதாய

நிகழ்வுகளை ஆராயும் வகையில் இவ்வியல் அமைந்துள்ளது.

சமுதாயம் - விளக்கம்.

‘சமுதாயம்’ என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட

விதிமுறைகளுடன் வாழும் மக்கள் குழுவைக் குறிக்கும் சொல்லாகும். இது மக்களின்

பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குமுறைகள், வாழ்வியல் கூறுகள்

முதலியவற்றை உள்ளடக்கியுள்ளது. மக்கள் எவ்விதம் கூடி வாழ்கின்றனர். எவ்வித

அமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர் என்பன போன்ற தன்மைகளைக்

கண்டறிவதன்வழி சமுதாயத்தை உணர முடியும்.

மக்கள் தங்களுக்குள் கொண்டிருக்கும் உள்ளுறவையும் அதன்

விளைவுகளையும், தனி மனிதன் சமுதாயத்தோடு கொண்டிருக்கின்ற

உறவுகளையும், சமுதாயம் தனிமனிதனுக்கு எத்தகைய நெறிகளைக் கற்றுத்

தருகிறது என்பதையும் சமுதாயக் குறிக்கோளாக அறியமுடிகிறது. இதன்வழி,


52

தனிமனிதன் தனது தேவைகளுக்காகவும் பாதுகாப்புக்காகவும் சமுதாயத்தோடு கூடி

வாழ்கிறான் என்பதை உணரமுடிகிறது.

ஒருவனுடைய நடத்தை ஒரு குறிப்பிட்ட குழுவில் அல்லது சமுதாய

நிறுவனத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பதைச் சமுதாயவியல் என்பதற்கான

விளக்கமாகக் காணமுடிகிறது. இதனை,

“ஒவ்வொரு மனிதனும் ஏனைய மனிதர்களுடன் கொண்டிருக்கின்ற

சிக்கலான சமூக உறவு முறை தொடர்புகளைத்தான் சமூகம்

என்கிறோம்”1

என்ற விளக்கத்தால் அறியமுடிகின்றது.

சமுதாயம் வெளிப்படுத்தும் சமுதாயக் கூறுகளை பொகார்டஸ் என்னும்

அறிஞர்,

“சமூகவியல், சமூக வளர்ச்சியையும் மாறுதல்களையும் பருவத்

தன்மையையும் தனிமனிதனின் வேட்கை உள்ளடக்குதல்

இவற்றையும் முறையே எடுத்துக் காட்டுகின்றது”2

எனவும் கூறுகின்றார். இதன் வழியாக சமூகத்தின் அமைப்பு, போக்குகள், சமூக

வளர்ச்சிகள் சமூக வேட்கை, மாறுதல்கள், ஒற்றுமை வேற்றுமை போன்றவற்றைச்

சமூகவியல் முன்னிறுத்துவதை அறிய வாய்ப்புள்ளது.

சமுதாய அமைப்பானது ஒரு களமாக இருந்து வருகிறது. அந்தச் சமுதாய

அமைப்பு குடும்பம், மதம், கல்வி, அரசு, நீதி, பொருளாதாரம் உற்பத்தி, கலை,

இலக்கியம், நாடு, மொழி முதலிய பல உட்கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் நெறிப்படுத்தும் பெரும் அமைப்பாகச் சமுதாயத்தை

உணரமுடிகிறது.

சு.தமிழ்ச்செல்வி தம் புதினங்களில் கதைமாந்தர்களின் வாழ்வியல் பற்றியும்

சமுதாய அமைப்புகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.


53

இலக்கியமும் சமுதாயமும்

சமுதாயத்தைச் சொல்லில் வடித்தெடுப்பதாய் இலக்கியம் உள்ளது.

இலக்கியத்தையும் ஒரு சமுதாய நிறுவனம் எனலாம். இலக்கியத்தின்

மூலக்கருவியான மொழியின் எழுத்து, யாப்பு, குறியீடு முதலியனவும் சமுதாயத்தில்

இருந்து விளைந்தவை என உணரமுடிகிறது. சமுதாய உறவுகள் மூலமாகத்தான்

அவற்றுக்கும் பொருள் விளக்கம் வந்து சேர்கின்றது என உணரமுடிகின்றது.

இலக்கியத்தின் உற்பத்தி, விற்பனை, மதிப்பு, அங்கீ காரம், பரிசு, புகழ் யாவும்

சமுதாய அமைப்போடு தொடர்புடையவையாகவே உள்ளன. சமுதாயம் என்ற

அமைப்பில் இலக்கியத்திற்குத் தேவையான மரபுகளும் மாதிரிகளும் அமைகின்றன.

இவ்வாறு சமுதாயம் சாh;ந்ததாக இலக்கியங்கள் உள்ளன என்றாலும்,

இலக்கியங்களுக்கென்று ஒரு தனிவாழ்வு இருப்பதையும் அது சமூகத்தை

முதன்மைப்படுத்துவதையும் அறிய முடிகிறது. இலக்கியம் சமுதாயத்தில்

இருந்துதான் தொடங்குகிறது என்றாலும் சமூகம் கடந்தும் சிந்திக்கிற ஆற்றலைத்

தன்னுள் கொண்டிருக்கிறது என்பதையும் சமுதாயப் புதினங்களின் வழி

அறியமுடிகிறது.

சமுதாயத்தை நோக்கிய அல்லது சமுதாயத்திலிருந்து வெளிவருகின்ற

படைப்புகள் காலத்தை வென்று நிற்கும் தன்மையைப் பெற்று விளங்குவதைக்

காணமுடிகிறது. சமுதாயத்தை ஆராய்வதற்கு இலக்கியம் அதிகமான அளவிற்குப்

பயன்படும் என்பதைச் சமுதாயம் சாh;ந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்குச் சமுதாயச் சூழல்களையும் தனிமனித

சமுதாய அமைப்பையும் கருவாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் பிறதுறை

சார்ந்த அணுகுமுறை மூலம் இலக்கியத்துறையோடு சேர்ந்து சமுதாயமும் பல

வழிகளில் பயன் பெறுகிறது என்பது புலனாகிறது.

படைப்பாளரும் சமுதாயமும்

தமிழ் இலக்கியங்களுக்கு வாழ்வியலைப் புலப்படுத்துவதும் சமுதாயத்தை

நல்வழிப்படுத்துவதும் நோக்கங்களாக அமைகின்றன எனலாம். பொதுவாக


54

புதினங்களைப் படைக்கும் படைப்பாளியின் எண்ணப்படி இலக்கியம்

உருப்பெறுகின்றது. சமுதாயத்தின் மீ து படைப்பாளி கொண்டுள்ள தாக்கத்தின்

அடிப்படையிலேயே ஒரு படைப்பானது படைக்கப்படுகிறது எனலாம்.

சு.தமிழ்ச்செல்வி அந்த வகையில் ஒரு சமுதாய லட்சியம் கொண்ட படைப்பாளி

என்பது அவரின் புதினங்களின் வழி புலப்படுகின்றது.

ஒருவர் தாம் வாழ்கின்ற சமுதாயத்தின் மீ து கொண்டுள்ள ஈடுபாட்டினையும்,

சமுதாய அவலங்களையும் தம்முடைய புதினத்தின் வாயிலாகப் புலப்படுத்துகிறார்

எனலாம். சமுதாயத்தினால் ஏற்படுகின்ற ஏமாற்றங்கள், தவிப்புகள், பெண்நிலை,

வாழ்வியல் சார்ந்த தொழில்கள், சமுதாயக் கட்டமைப்புகள், காயங்கள் போன்றவை

சாதாரண மனிதமனத்தை ஒரு படைப்பாளிக்கான மனமாக உருமாற்றம்

செய்கின்றன எனலாம்.

சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களில் தன்னைப் பாதித்த நிகழ்வினையும்,

தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்கும் ஏற்பட்ட அல்லது ஏற்படும் கசப்பான

பக்கங்களையும் சமூக முன்னேற்றத்திற்காகப் புதினமாகவோ வேறோர் இலக்கியப்

படைப்பாகவோ வடிவமைத்திடுவதின் உயரிய நோக்கம் எண்ணத்தக்கதாக உள்ளது.

மேல்தட்டு மக்களின் ஆடம்பர வாழ்வியலினைப் புறம் தள்ளிவிட்டு

கீ ழ்த்தட்டு உழைக்கும் மக்களின் அனைத்துச் சுகத்துக்கங்களையும் குறிப்பாக

பெண்களின் வாழ்வியலையும் ஆண்களின் ஆணாதிக்க மூர்க்கத்தனத்தையும்

அவற்றால் வாழ்வியலில் விளையும் சிக்கல்களையும், பொருளாதாரத்

தடுமாற்றத்தையும், பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்துவதாக சு.தமிழ்ச்செல்வி

புதினங்களில் காணமுடிகிறது.

பெண் எழுத்தாளர் ஒருவர் தம்முள் ஓர் ஆணாகவும், குழந்தையாகவும்,

வியாபாரியாகவும், விதவைப் பெண்ணாகவும், மரபுபை மீ றிய பெண்ணாகவும்,

இளைஞனாகவும் இன்னும் பல்வேறு கோணங்களில் தம்மையே அர்ப்பணித்து

உள்ளம் மாற்றி எழுதும் படைப்புகளில் சமுதாயப் பிரதிபலிப்பும் வாழ்வியலின்


55

முழுக்கட்டமைப்பும் ஒருங்கே காணலாகிறது. இத்தகைய பதிவாக

சு.தமிழ்செல்வியின் புதினப் படைப்புகளை உள்வாங்க இயலுகிறது.

இன்றைய நிலையில் மனிதனின் வாழ்வியல்; பெரும்பாலும், தனிமனிதச்

சுயநலத்தனம், பொதுவிழிப்புணர்வு இன்மை, அடிப்படைத் தேவைகளில் கவனம்,

வாழ்வியல் மாற்றம் போன்ற பல்வேறு நிலைகளில் கட்டவிழ்ந்து கிடக்கின்றன.

இதனைக் கவனத்தில் கொண்ட இன்றைய இலக்கியங்கள் சமுதாயச் சிதைவையும்

அது சார்ந்த விழிப்புணர்வையும் படைத்துக் கொண்டிருக்கும் படைப்பாளர்களில்

ஒருவராக சு.தமிழ்ச்செல்வி விளங்கி வருகிறார் எனலாம்.

சமுதாய வாழ்வியல் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்

சமுதாயத்தில் வாழ்வியலுக்கான நிலைகள் குடும்பம், கல்வி, வறுமை,

உறவு, சாதி, சமயம், பொருளாதாரம், அரசியல் போன்ற பல்வேறு கட்டமைப்புக்குள்

அமைந்து வருகின்றன. மேலும், வாழ்வியலில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகளும்

சிக்கல்களும் அதனை நெறிப்படுத்தும் சமுதாயமும் சு.தமிழ்ச்செல்வி புதினங்கள்

ஊடாக அணுகப்பட்டுள்ளன.

தனி மனிதன் மற்றும் அவனது உறவுகள் இணைந்த குடும்பம், குடும்பங்கள்

இணைந்த சமுதாயம் எனும் மூன்று வேறுபட்ட ஒருங்கிணைப்பிற்கு

ஆட்படுத்தப்பட்டுள்ளதாக சமுதாய அமைப்புநிலை உள்ளது. இருப்பினும் மக்கள்

வாழ்க்கை முழு நிறைவுத்தன்மை கொண்டதாகக் காணப்படவில்லை எனலாம். தனி

மனிதன் முதல் ஒருங்கிணைந்த சமுதாயம் வரை பல்வேறு சிக்கல்களை

எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இச்சிக்கல்களைக் களைவதில் கடினமான

சூழல் நிலவுகிறது. எது துன்பம் அனுபவிக்கின்றதோ அதுவே அதை

ஏற்படுத்துவதாகவும் உள்ளதே சிக்கலுக்கான அடிப்படையாக உள்ளது.

ஒரு மனிதன் தனது வாழ்வின் தேவைகளில் ஒன்றினை மையமாகக்

கொண்டு தனிமனிதச் சிக்கலில் நேரடியாகவும், மறைமுகத் தேவைகளினால் சமூகச்


56

சிக்கலிலும் ஆட்பட்டு விடுகின்றான். இவை சமுதாயச் சீர்கேடுகளைத் தூண்டிவிடும்

காரணிகளாகவும் அமைந்து விடுகின்றன.

ஒருங்கிணைந்து காணப்படும் சமுதாயத்திலும் பல சிக்கல்கள்

உருவாகின்றன. மக்களிடையே ஒற்றுமை உணர்வினை ஏற்படுத்த முடியாத

நிலையிலும் அதனுடைய அங்கங்களான அதிகார மையங்கள் சரிவர இயங்காத

நேரத்திலும், சட்ட திட்டங்கள் முறையாகப் பின்பற்றப்படாத நேரத்திலும்,

வழிவழியாக வரும் பண்பாட்டு நெறிகள் வருங்காலச் சமுதாயத்திற்குக் கிடைக்காத

நேரத்திலும், விரும்பத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறாமல் போகும் நிலையிலும்

சமூகம் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இதனை,

“சமூகத்தில் பெரும்பாலோர்களால் அல்லது சக்தி வாய்ந்த

வகுப்பினரால், விரும்பத்தகாதது என்றும் கவனிப்புத் தேவை என்றும்

கூறப்படும் ஒரு சமூகநிலை, சிக்கல் உடையதாக உருக்கொள்கிறது.

ஒரு சமூக நிலைமை சமூகச் சிக்கலாக உருவாவதற்கு முன்னர் அது

அந்தச் சமூகத்தில் இயல்பாகக் காணப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக குற்றம், வறுமை முதலிய சிக்கல்கள் எழுவதற்கு

முன்னர் அந்தச் சமூகத்தில் குற்றவாளிகளும் ஏழை மக்களும்

காணப்படுகிறார்கள். ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமூக

நிலைமையே பின்னர் ஒரு சிக்கலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.”3

என்ற கருத்து இதனைப் புலப்படுத்துகிறது.

கால ஓட்டத்தினால் ஏற்படக்கூடிய சமுதாய மாற்றங்கள் பல புதிய சமுதாயச்

சிக்கல்களை மக்கள் வாழ்வில் ஏற்படுத்தி விடுகின்றன. சமயப் பூசல்கள்,

சாதிச்சண்டைகள், மொழிப் போராட்டங்கள், இனச் சச்சரவுகள், வட்டாரச் சண்டைகள்,

அடிப்படைத் தேவைகளுக்கான பங்கீ டுகள் போன்ற வாழ்வியல் சிக்கல்கள்

உருவெடுக்கின்றன. இக்காலத்தில் வளர்ந்துவரும் தொழில்மயமாதல் அதனால்

உருவாக்கப்படும் புதிய நகரங்கள் எனப் பல்வேறு விதமான சிக்கல்கள்


57

உருவாகின்றன. இளைய தலைமுறையினரிடையே வேலையில்லாத் திண்டாட்டம்,

குற்ற உணர்வுப் பெருக்கம், திருட்டு, குடிப்பழக்கம், பண்பாட்டுச் சிதைவு, சூதாட்டம்,

விபச்சாரம், பெண்கள் மீ தான பாலியல் அத்துமீ றல்கள் போன்ற பல சிக்கல்கள்

தோற்றம் பெற்றுள்ளன என்பதைக் காண்பதற்கு வாய்ப்புள்ளது.

இத்தகைய பல வாழ்வியல் சிக்கல்கள் ஏற்படுவதற்குப் பழமையான கூட்டுக்

குடும்ப அமைப்பின் சிதைவே முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது எனலாம்.

தனிமனிதமனச் சிதைவும் குடும்பம் தன்னுடைய உறுப்பினர்களைத் தக்கவைத்துக்

கொள்ள இயலாத நிலையும் இதன் விளைவுகளாக உள்ளன.

சமுதாயப் பாதுகாப்புக் குறைவு ஏற்படும் நிலையில் சமுதாயச் சீர்கேடுகள்

தலை தூக்குகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலிருந்து இறப்பு வரை

பாதுகாப்பு தேவைப்படுகின்றது. சமுதாயக் கட்டமைப்பில் ஏற்படும் விரிசலினால்

அதன் உறுதித் தன்மை தளர்கின்றது. இது மக்களுக்கான வாழ்வியல் பாதுகாப்பைப்

பொருளற்றதாக மாற்றி விடுகின்றது. மேலும், வறுமை காரணமாக

உடல்நலக்குறைவு, குற்ற எண்ணம், விபசாரத்தில் ஈடுபடுதல் போன்ற சிக்கல்கள்

உண்டாவதும் தவிர்க்க இயலாததாய் ஆகிவிடுகின்றது.

தனிமனிதர்கள் அல்லது குழுக்கள் சமுதாயத்தின் வழக்கத்திற்குப் புறம்பான,

ஊறு விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது அவர்கள் சமூகத்தின்

எதிராளிகளாக மாறிவிடுகிறார்கள். இவர்களின் செயல்கள் ஒட்டுமொத்த

சமுதாயத்தின் வாழ்வியலைப் பாதிக்கும் சிக்கலாக மாறிவிடுகின்றது. சில

நேரங்களில் சமுதாய வாழ்வியல் சிக்கலாகக் கருதப்படும் ஒரு செயல், மற்றொரு

சமுதாயத்தில் அவ்வாறு கருதப்படாத நிலையில் இருக்க வாய்ப்புள்ளது. சூதாட்டம்,

குடிப்பழக்கம், ஆண்-பெண் உறவுமுறைகள் போன்றவை மேலை நாட்டு

மக்களிடையே எவ்வித வாழ்வியல் சிக்கல்களையும் ஏற்படுத்தாமையைச் சான்றாக

அறியமுடிகிறது.
58

கூட்டுக்குடும்பச்சிதைவு, நகரமயமாக்கம், இயற்கை அழிப்பு, வாழ்விடப்

பற்றாக்குறை, உணவு உற்பத்தி மற்றும் பகிர்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வி

இன்மை, பண்பாட்டுச் சிதைவு, பழக்கவழக்களில் ஏற்படும் மாற்றம், வேலையின்மை

உலகமயமாக்கம், போர்ச்சூழல் ஆகிய பல்வேறு காரணிகளும் மக்களிடையே

வாழ்வியல் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காணமுடிகிறது.

அரசியல்

ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுந்த இலக்கியங்களின் மூலம் அந்தந்தக்

காலத்திய அரசியல் நெறியை அறிய முடிகின்றது. அரசியல், சமுதாயத்தை

நெறிப்படுத்தும் துறையாகவும், ஒன்றிணைக்கும் துறையாகவும் விளங்குகின்றது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, மக்களால்

ஏற்படுத்தப்பட்ட அமைப்பை அரசியல் அமைப்பு எனலாம்.

இதனையே,

“ஒரு நாடு பலதரப்பட்ட மக்களைக் கொண்ட சமுதாயமாக

விளங்குகிறது. இதில் வாழும் மக்கள் தங்களுக்கென்று ஓர்

அரசாங்கத்தை நிறுவி அதற்குக்கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.

இத்தகைய சமுதாய அமைப்பே அரசியல் சமுதாயம்“4

என கூறுவர்.

சமுதாயத்தால் அரசியல் என்பது எப்படிப் பார்க்கப்படுகின்றது என்பதை,

“அரசியல் என்பது நாகரிகம் அடைந்த ஒரு சமூகத்தின் அரசாங்கம்,

அடிப்படைச்சட்டம், குடிமக்கள் ஒருவரோடு ஒருவர் கொண்டுள்ள

தொடர்புகள், இவற்றை வகுத்துக் காக்கும் நீதிகள், சமூக நிலைகள்

அவற்றின் குறிக்கோள்கள் என்பன பற்றிக் கூறும் ஓர் அறிவுத் துறை

ஆகும்.”5

என்ற கூற்று மூலம் அறியமுடிகிறது.


59

அரசியலின் நிலையினைப் புதின ஆசிரியர்கள் பல்வேறு வகைகளில்

கூறியுள்ளனர். சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் அரசியவாதிகளின் நிலைகளையும்

அரசு நிலையையும் சில இடங்களில் குறிப்பிட்டுள்ளார். தாதுவருடப் புயல் காற்றில்

மக்கள் வடுகளையும்
ீ உடைமைகளையும் இழந்து, உணவுகள் இன்றியும் இருக்க

இடம் இன்றியும் மிகவும் அவதிப்படுகின்ற நேரத்தில் அரசாங்கத்தின் உதவிகள்

கிடைக்கவில்லை என்பதையும் உண்ண உணவு கிடைக்காமல் இயற்கையில்

கிடைக்கும் கொட்டை, காய், கிழங்கு போன்றவற்றை உண்டு வாழ்ந்துள்ளனர்

என்பதையும் கூறுவதன் மூலம் அரசின் மெத்தனப்போக்கை அளம் என்ற புதினத்தில்

காட்டுகிறார். இதனை,

“எல்லாவூருக்கும் பொயலடிச்சத்துக்காவ சர்க்காருலேருந்து அரிசி,

மண்ணெண்ணை, வூட்டுக்கு நாப்பது ரூவா பணமெல்லாங்

குடுத்துருக்குறானுவொ நம்ம ரெண்டு வூருக்கும் ஒண்ணும் குடுக்காம

ஏமாத்திப்புட்டானுவொ என்றார் கணேசன்”6

என்று கூறியுள்ளதன் மூலம் அறியமுடிகிறது. இது மட்டுமல்லாது அனைத்து

ஊர்களும் புயல் காரணமாக அழிந்தும் சிதைந்தும் துண்டாடப்பட்டுத் தனித்தனித்

தீவாக மாறிப்போனதால் உதவி செய்பவர்கள்கூட ஊரினுள் வரமுடியவில்லை

எனவும், அரசியல்வாதிகள்தாம் இதற்கெல்லாம் காரணம் என்பதையும் ,

“சர்க்காரு ஆளுவொன்னாக்க அவனுவொளும் மனுசனுவ தான.

அவனுவொ மட்டும் எப்படி நம்ம ஊருக்குள்ள கொண்டாந்து குடுக்க

முடியும்? நம்ம வூருவதாங் தீவுமேரி தனியா தண்ணிக்குள்ள

கெடந்துச்சே”7

என்பதின் மூலம் சுட்டிக் காட்டுகின்றார்.

ஊர்மக்களுள் சிலர் அரசாங்க அதிகாரிக்கு ஒத்துப்போக மீ தம் உள்ளவர்கள்

அரசாலும் அரசியல்வாதிகளாலும் அவர்களால் ஏமாற்றப்படுவதை,


60

‘அட நீங்க வேறண்ண’. சர்க்காரு நெனச்சாக்க குடுக்க முடியாதா, நம்ம

ஊரு சனங்களெல்லாம் பட்டினியும் பசியிமா கெடந்து சாவுதே,

கொட்டிக் கெழங்கும். பனங்கெழங்கும் இல்லன்னாக்க நம்ம இப்ப

பேசிக்கிட்ருக்க முடியுமா? இதயெல்லாம் நெனச்சிப்

பாக்குறதில்லையா?

‘ஆமாந் தம்பி’. நம்மளயெல்லாம் மனசனுவளாவே நெனச்சிப் பாக்கல

பொலருக்கு என்றார் முருகையன்.

‘இதுக்கெல்லாம் அந்த கருப்பம்பலத்து அருணாயிலம் தான்

காரணமுன்னு பேசிக்கிறா வொண்ணே’ என்றார் கணேசன்.”8

என்னும் உரைச் சித்திரங்கள் மூலமாகக் காட்டுகின்றார். இதன்வழி, இன்றைய

அரசியல் நிறுவனத் தலைவர்களும் அரசாங்கம் கொடுக்கின்ற திட்டங்களை

மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசியல்வாதிகளின் கடமை என்றும், அந்தக்

கடமைகளை அரசியல் வாதிகள் ஊழல், லஞ்சம் போன்றவற்றின் மூலமாக

மக்களுக்குக் கிடைக்கவிடாமல் செய்வதையும் உணரமுடிகிறது.

இவ்வகை அரசியல் சில நேரங்களில் சாதிய அரசியலாக

நிலைநாட்டப்படுகின்றது. அரசியல்வாதிகள் தம்முடைய தொகுதி ஊராட்சி

மக்களுக்கு நலத்திட்ட உதவிகளாகிய சாலை அமைத்தல், மின்விளக்கு, பாலம்

கட்டுதல், கல்விக்கூடம் அமைத்தல் போன்ற பொதுமக்களுக்காகச் செய்யும்

பணிகளைத் தம்முடைய உறவினர்களுக்கும் தம்முடைய தெருவுக்கும் தம்முடைய

சாதிக்காரனுக்கும் செய்து கொள்கின்றனர் என்பதை அளம் என்ற புதினத்தில்

வெளிப்படுத்தியுள்ளமையை,

“சர்க்காருலேருந்து நம்மவூருக்கு என்ன சலுவ வந்தாலும் அத இவரு

வுடனேத் தடுத்து அவரு சாதிக்கார ஆளுங்க இருக்குற வூருவளுக்கே

செய்ய வச்சர்றாருண்ண...
61

அய்யய்யோ பாவி.... பாவி... படுபாவி... அதுமட்டுமில்லண்ண...

அம்பலகாரனுவொளுக்கெல்லாம் ஒரு வூரு அதுக்கு ஒரு ரோடான்னு

எளக்காரமாப் பேசு வாராண்ண அந்தாளு”9

என்னும் கதையாடலில் காணலாகிறது. இதனால், இன்றைய நிலையில்

நேர்மையற்ற அரசியல்வாதிகள் சிலரால் அரசியலும் அரசியல் சார்ந்த துறைகளும்

மதிப்பிழந்து இருக்கின்ற நிலையை உணர முடிகின்றது. இதுபோன்ற

அரசியல்வாதிகளினால் பல்வேறு வகைகளில் பல்வேறு மக்களின் நலன்

பாதிக்கப்படுவதுடன் ஏமாற்றவும் படுகின்றனர். இந்த அரசியல்வாதிகளின்

செய்கையினால் சாதிக்கலவரங்கள், சாதிய அடக்குமுறைகள், சாதிய

அடிமைத்தனங்கள், தீண்டாமை போன்றவை வேரூன்றி நிலைபெற்று விடுகின்றன.

அரசு என்னும் இயந்திரத்தை நல்லமுறையில் இயக்க அரசு அதிகாரிகளுக்கு

அரசியல்வாதிகள் துணை நிற்க வேண்டும். அரசியல்வாதிகள் சுயநலத்தை நீக்கிப்

பொதுநலத்துடன் செயல்பட வேண்டும் என்பதை, உணர்த்துவதாக புதினக்

கருத்துகளை அறியமுடிகிறது.

சமயம்

இந்தியச் சூழலில் சமயம் என்ற நிறுவனமே சாதியப் படிநிலைக்கு

அடித்தளமிடுகிறது என்றளவிற்குச் சமயக் கட்டமைப்புகள் உள்ளன. சமுதாய

வாழ்வின்வழி உருவாக்கம் பெற்ற பல்வேறு நிறுவனங்களுள் சமயநிறுவனமும்

ஒன்றாகும். பொதுவாக மனித வாழ்வின் இயக்கங்களுக்கு அடிப்படை உருவாக்கமே

சமயம் எனலாம். இது சமுதாய அடையாளங்களின் மதிப்புகள். இயற்கையோடு

இயைந்த ஆற்றல் மிகுந்த சமுதாயத்தினால் இணைக்கப்பட்ட நிறுவனமாகும்.

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் சமயமும் வழிபாடும் முக்கிய இடம்

வகிக்கின்றன. மக்களுடைய விருப்பங்களையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றி

அவர்களது எண்ணங்களை வாழ்க்கையில் ஈடேற்றும் வல்லமை கொண்ட ஒரு


62

முழுமுதற்பொருளைப் பற்றுக்கோடாகக் கொண்டு சமயம் உள்ளது எனலாம்.

இக்கருத்தை,

“தெய்வகச்
ீ சக்திகளிடம் வைக்கின்ற நம்பிக்கைகளும் அந்த

நம்பிக்கையோடு இயைந்த உணர்வுகளும், அந்த நம்பிக்கையால்

வெளிப்படுகிற நடவடிக்கைகளும் அமைந்த ஒரு தொகுதி சமயம்

எனப்படுகிறது”10

எனக் கூறுவர் பண்பாட்டு ஆய்வாளர் மு.சந்தானம்,

“சமயம் என்னும் சொல் சமைப்பது என்னும் பொருளில்

அமைந்துள்ளது. சமைத்தல் - சமையல் - சமயல் - சமயம் என

இச்சொல்லின் வரலாற்றை விளக்குகிறார்.”11

இக்கருத்தின் மூலம் சமைத்தல் என்பதன் பொருள் உண்ண இயலாத பச்சையாக

உள்ளவற்றை உண்பதற்கு ஏற்றபடி சுவையோடு பக்குவப்படுத்துதல் என்பதாகும்.

இதுபோல மனிதனின் மனதைப் பண்படுத்தியும் பக்குவப்படுத்தியும் சமைப்பது

சமயம் என்பதும் மனிதன் நல்வழிகளை மேற்கொள்ளச் சமயம் உதவுகிறது என்பதும்

உணரமுடிகிறது.

பொதுவாக, சமயங்கள் மக்கள் நலன் பாதுகாப்புக்காகப் பல்வேறு

பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவும் ஒவ்வொரு சடங்கு

மற்றும் மரபுவழி முறைகளைக் கையாண்டு வருகின்றது. இத்தகைய தன்மையில்

பொதுவாகக் கூறப்படும் இந்து, கிருத்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள்

காணப்படுகின்றன. இவ்வகை மதங்களின் அடிப்படையில் மக்கள் தங்களுக்கான

பெயரினை மாற்றிக்கொண்டும் பிரிவுகளை ஏற்படுத்திக் கொண்டும் வாழ்கின்றனர்.

இதனை இந்து மதத்திலிருந்து கிருத்துவ மதத்திற்கு மாறியதையும் சமயக்

கட்டுப்பாடுகளையும் சமயத்தின் வழியாகக் காண முடிகிறது. இச்செய்தியின் மூலம்,


63

“மாமா நாங்களும் கூட ஆரம்பத்துல ஒங்கள மாதிரி

இருந்தவங்கதானாம். எங்க பாட்டனோட பாட்டனெல்லாம்

திருச்செந்தூர் கோயிலுல சாமிக்கு பல்லக்குத் தூக்கிக்கிட்டு

இருந்தவங்கதானாம். எடையிலதான் ஏசுவ கும்பிடுற மாதிரி மதம்

மாறியிருக்குறாங்க. இந்த ஊருக்கு வந்த பொறவுதான் நாங்க

பொறந்தம் நீங்க கும்புடுற சாமியத்தான் உங்க கூட நின்று நாங்களும்

கும்படுறம்”12

என மத மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்பதையும், சமயத்தின் வளர்ச்சியினால்

சமுதாயமும் சமுதாயத்தினால் வாழ்வியல் முறைகளும் எவ்வாறு

மாற்றமடைகின்றன என்பதையும் காணலாகிறது.

தொகுப்புரை

சமுதாயம் பற்றிய செய்திகளும் விளக்கங்களும் அறிஞர்கள் கூற்று வழி

விளக்கப்பட்டுள்ளன. சமுதாய வாழ்வியல் மற்றும் வாழ்வியல் சிக்கல்கள்

போன்றவை கூறப்பட்டுள்ளன.

கிராமங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட சு.தமிழ்ச்செல்வி

புதினங்களில் கிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக வாழ்வியல், சடங்கு முறைகள்,

பழக்க வழக்கங்கள், திருவிழா மற்றும் வழிபாடு போன்றவைகளும்

விளக்கப்பட்டுள்ளன. வழிபாடுகள் பற்றிக் குறிப்பிடும்போது ஒவ்வொரு

கதைக்களத்திலும் உள்ள மீ ன்பிடி மக்கள், விவசாய மக்கள் மற்றும் அளத்தில்

வேலை செய்யும் மக்கள் போன்றவர்கள் தங்களின் வழிபாட்டு முறைகளிலும்

வழக்கங்களிலும் மாறுபடுவது சான்றாதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.


64

சான்றெண் விளக்கம்

1. கிஸ்பர்ட் ஜே. நாராயணன், சமூகவியலின் அடிப்படைக் கோட்பாடுகள், ப. 12.

2. இரா.கல்பகம், சமூகவியல், ப. 6

3. வாழ்வியற் களஞ்சியம் - தொ - 8, ப. 526

4. இரா. கல்பகம் - சமூகவியல் - ப. 113

5. ஆர். பாஸ்கரன், அரசியல், ப. 1

6. சு. தமிழ்ச்செல்வி. அளம், - ப. 104

7. மேலது, - ப. 104

8. மேலது, - ப. 105

9. மேலது, - ப. 105

10. வாழ்வியல்களஞ்சியம், தொகுதி-8, ப. - 564

11. மு.சந்தானம், தமிழர் பண்பாடு, ப - 30

12. சு.தமிழ்ச்செல்வி. ஆறுகாட்டுத்துறை, ப - 81


65

இயல்-4

சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் பாத்திரப் படைப்பு

முன்னுரை

ஒரு புதினம் சிறந்து விளங்க அதன் பாத்திரப்படைப்பு சிறப்புடையதாக

அமைய வேண்டும். கதைப் பின்னலுக்குச் சிறப்பையும் பாத்திரங்களுக்கு

உயிரோட்டத்தையும் கொடுத்து உண்மை மாந்தர்களைப் போல உயிர்ப் பெற்று உலவ

விடுவது புதினத்தின் சிறப்பாகும். இவ்வகையில் சு. தமிழ்ச்செல்வி தம் புதினங்களில்

வாயிலாக குறிப்பிடும் பாத்திரங்களின் பண்பு நலன்களை ஆராயும் விதமாக

இவ்வியல் அமைகின்றன.

தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாடு

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் மெய்ப்பாட்டியல் மனிதனின்

உணர்ச்சிகளை எட்டு வகையாகச் சுட்டுகிறது. இதனை,

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”1

என்னும் நூற்பா வெளிப்படுத்துகிறது. இவ்வடிப்படையில் புதினத்தில் இடம் பெறும்

பாத்திரங்கள் பல்வேறு மெய்ப்பாட்டு உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும்

ஆற்றலுடையதாகப் படைத்தல் சிறப்பாகும். இப்படிப்பட்ட படைப்புகள் புதின

ஆசிரியரின் கற்பனையாகப் படைக்கப் பட்டாலும் படிப்பவருடன் கலந்து உறவாடும்

தன்மை கொண்டவையாக இருக்கும் என கருத முடிகிறது.

பாத்திரங்கள்

படிப்பவர் கண்முன் உண்மை மாந்தர் போல பாத்திரங்கள் நடமாட வேண்டும்.

கதையில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பாத்திரப்படைப்பே மூலமாகவும்

காரணமாகவும் அமைகின்றது. பாத்திரங்களின் செயல்பாட்டிற்கு ஒரு காலமும்,


66

களமும் தேவைப்படுகிறது. செயல்பாட்டின்வழிதான் பாத்திரத்தின் பண்புகள்

சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றன. பாத்திரங்கள் இல்லாமல் கதையில் சிறப்பு

இல்லை என்பதால் பாத்திரப் படைப்புப் புதினத்தில் ஓர் இன்றியமையாத கூறாக

அமைகிறது. தமிழ் நாவல்கள் ஓர் அறிமுகம் என்ற நூலில் வரும்,

“ஒரு நாவலில் கடைசியாக எஞ்சி நிற்பது

அதன் கதாபாத்திரங்களே”2

என்னும் கூற்றின் மூலம், புதினத்திற்கு அடிப்படையானது பாத்திரப்படைப்பு என்பதை

உணர முடிகிறது. மேலும், புதினக் கூறுகளுள் முதன்மையாவை பாத்திரங்களே

என்பதையும் அறியமுடிகிறது.

படைப்பாசிரியர் தம் கதை மாந்தருடைய இயல்புகளைக் கற்போர்க்கு

அறிவிக்கக் கையாளும் முறைகள் பலவாக உள்ளன. இதனைக் குறிப்பிடும் போது

எர்னஸ்ட் எமிங்வே என்ற அறிஞர்,

“படைப்பாளர் வாழும் மாந்தரையே படைத்தல்

வேண்டும் கதை மாந்தரை அன்று”3

என்று கூறுவதைக் கொண்டு படைப்பாசிரியர் எப்படிப்பட்ட மாந்தரைப் படைக்க

வேண்டும் என்பது புலனாகிறது.

இதனை மு.வ. அவர்கள்,

“கதை மாந்தர் உண்மையில் நடமாடும் மக்களைப் போல படைக்கப்

பட்டால் கற்பவருக்கு மட்டுமல்லாமல் படைப்பவர்க்கும் அவர்கள்

அவ்வாறு உண்மை மனிதர் போல் ஆகி விடுகின்றனர்”4

என்று கூறுகிறார். இதன் வழியாக ஒரு சில இயல்புகளை மட்டும் வெளிக் கொணர்ந்து

அவற்றாலேயே பாத்திரங்கள் முழுமைப் பெறுமாறு படைக்கப்படுவதைப்

படைப்பாளார்திறன் என்று உணரமுடிகிறது.

பாத்திரப் படைப்பின் சிறப்பு


67

கதை மாந்தர்களின் மூலம் சமுதாய உணர்வினைப் படைப்பாசிரியர்

பிரதிப்பலிக்கின்றார். தனிமனித உணர்வுகளைக் காட்டும் கதைக்கருவையும், கதை

மாந்தர்களையும் கற்போர் விரும்பும் நிலை உள்ளது. அத்தகைய விருப்பத்தின்

விளைவாகவே புதின ஆசிhp யரால் படைக்கப்படும் கதைமாந்தர்கள் சமுதாயத்தின்

மீ து மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றவராக உலா வருகின்றனர்.

இப்பாத்திரங்களின் மூலம் சமுதாய உணர்வும், சமுதாய மாற்றங்களும் வெளிக்

கொணரப்படுகின்றன. சமுதாய நோக்குடைய புதினத்தைப் படைப்பவர் சிறந்த புதின

ஆசிரியராகக் கருதப்படுகின்றனர். இதனைக் குறிப்பிடும் போது ரெ. கார்த்திகேசு

என்பவர்,

“தனிமனித உணர்வுகளையே பெரிது படுத்தி எழுதும் ஜெயகாந்தனை

விட சமுதாய நடவடிக்கைகளையே தன் கதைகளுக்குக் கருவாகக்

கொள்ளும் பார்த்தசாரதிகளே நமக்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்க

முடியும் என எனக்குத் தோன்றுகிது. இந்தச் தேவை சாத்தியமான

பின்னர்த் தனிமனித உணர்வுக் கதைகளில் நாம் நமது கவனத்தைத்

திருப்ப வேண்டும்”5

என கூறுவதன் மூலம் நன்கு உணரமுடிகிறது.

புதினத்தில் சந்திக்கும் பாத்திரங்கள் வாசகர்க்கு அறிமுகமானவர்கள் போலத்

தோன்றினாலும் அவர்கள் புதின ஆசிரியரின் கற்பனையில் பிறந்தவர்கள் என்பதே

உண்மையாகும். பெரும்பாலான ஆசிர்யர்கள் தமது வாழ்க்கையில் கண்டு, கேட்டு

அனுபவித்த நிகழ்ச்சியிலிருந்து பாத்திரங்களைப் படைக்கின்றனர். இதனால்

பாத்திரத்தின் சிறப்பு தெரிய வருகிறது.

உயிருள்ள மனிதர்களை விடவும் புதினப்பாத்திரம் சிறப்பாக

அமைந்துள்ளதை மா.இராமலிங்கம் அவர்கள்,


68

“கற்பனைப் பாத்திரங்கள் அவர்களைப் படைத்த ஆசிரியர்களுக்குப்

பின்னேயும் பல்லாண்டு வாழும் ஆற்றல் பெற்றிருப்பது உயிருள்ள

மனிதர்களையும் விட அவர்கள் வலிமை வாய்ந்தவர்கள்”6

எனக் கூறியுள்ளார். இச்செய்தி புதினத்திற்கு உயிர்க் கொடுப்போர் கற்பனைக் கதை

மாந்தர்களே என்பதை உணர்த்துகிறது.

கதை மாந்தரின் இன்றியமையாமை

பாத்திரப் படைப்புகள் இயல்புத் தன்மையுடன் வாழ்க்கையைக் காட்டக் கூடிய

நகல்களாகப் படைக்கப்பட வேண்டும். கதையில் இடம்பெறும் கதை மாந்தர்ப் படைப்பு

கவனத்துடன் உருவாக்கப்படாத நிலை இருந்தால் அதைப் படிக்கும் ஆர்வம் குறைந்து

போகும் அபாயம் ஏற்பட்டுவிடுவதுண்டு. கதை மீ து வெறுப்பு தோன்றும். எனவே,

கதை மாந்தரைப் படைப்பது மிகவும் இன்றியமையாததாக இருக்க வேண்டும்.

அதுவும் ஒரு நுட்பமான கலை நேர்த்தியுடன் படைக்க வேண்டுமென்பதும்

உணரமுடிகின்றது. இதனை தா.ஏ.ஞானமூர்த்தி அவர்கள்,

“கதை மாந்தர்களே படிப்பவர் கருத்தைப் பெரிதும் ஈர்ப்பவராவார்.

கதையில் கதை மாந்தர் படைப்பதைக் கலையுடையதாகச் செய்ய

அவர்கள் ஒவ்வொருவரையும் தனி இயல்புடையவராக அமைப்பது

நுட்பமான கலையாகும்”7

என்று கூறியுள்ளது புலனாக்குகிறது. இது மட்டுமல்லாது படைப்பாசிரியர் படைக்கும்

கதைமாந்தர்கள் தன் சொந்த அனுபவங்களிலிருந்தும் பிறந்தவர்களாகவும்

இருக்கலாம்.

நான் படைத்த கதை மாந்தர்கள் என்னில் இருந்தும் என் இரத்தத்தின்

துளியிலிருந்தும் மண்ணில் அலைந்து திhp ந்த வேளையில் என்னில் இருந்து

பிறந்தவர்கள்
69

“என் கதைத் தலைவர் தலைவியரை அவர்கள் எவ்வளவு குறைபாடு

உடையவர்களாக இருந்தாலும் நான் நேசிக்கின்றேன். என்

இரத்தத்திலிருந்தும், உயிர் மூச்சிலிருந்தும், இதயத் துடிப்பிலிருந்தும்

பிறந்தவர்கள் அவர்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள்

என்னைவிட உயர்ந்தவர்கள் மண்ணின் தெருப்புழுதியில் அலைந்து

திரியும் என் உணர்ச்சிகள் எண்ணிலும் உணர்ந்து விண்ணை நோக்கிப்

பறந்த வேளைகளில் என்னிடமிருந்து பிறந்தவர்கள் அவர்கள்”8

என்று அகிலன் கூறுகிறார். இதன்வழி, கதைமாந்தர்களின் இன்றியமையாமை

மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருப்பதையும் சமூகத்திற்குக் கூறவிழையும்

கருத்தைக் கதைமாந்தர்கள் வாயிலாகப் படைப்பாசிரியர் வெளிப்படுத்துகிறார்

என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஒரு கதையில் கதை மாந்தர்களின் வாயிலாக ஆசிரியன் தான் நினைக்கும்

கருத்துக்களைச் சொல்ல முடியும். மனித சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் புதினத்தில்

மனிதப் பிரச்சனைகளே முதலிடம் பெறுகின்றன. இப்பிரச்சினைகளுக்குக்

கதைமாந்தர்களே காரணகர்த்தாவாக இருப்பதால் புதினத்தில் கதைமாந்தர் படைப்பே

முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நிலையில் சூழ்நிலைகளும் பாத்திர நிகழ்வுகளும்

கதையினை இயக்கிச் செல்கின்றன எனலாம். இதனை,

“கதைக்கு வேண்டிய பாத்திரங்கள், பாத்திரங்களை இயக்கிச் செல்லும்

நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகளுக்கேற்ற சூழ்நிலைகள், சூழ்நிலைகளுக்கும்

பாத்திரப் பண்புகளுக்கும் ஏற்ற உரையாடல்கள் இவ்வளவும் வேண்டும்”9

என்பர். இந்த பாத்திரப் படைப்பின் அமைப்பு அடுக்குமுறை என்பது ஒரு பாத்திரத்தை

முழுமைப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் என்பதை உணரமுடிகிறது.

இவ்வாறு ஒரு படைப்பை எண்ணும் போதே அதன் கதை மாந்தர்கள் நெஞ்சில்

நிழலாடுவதையும், நிகழ்வுகளைப் படிப்பவர் உணரக் கூடியதாக உள்ளது. இதுவே


70

கதை மாந்தர்களின் இன்றியமையாத அமைப்பாக அமைந்து புதினத்தின் கதை

ஓட்டத்தை வேகப்படுத்துகிறது எனலாம்.

பாத்திர வகைகள்

ஒரு புதினம் சிறந்து விளங்க அப்புதினத்தில் அமையும் பாத்திரங்கள் சிறப்புற

அமைதல் வேண்டும். மனிதன் தான்பழகும் ஒவ்வொருவரின் மன உலகினை

அறிவதில் மேம்பட்டு விளங்குகின்றான். இவ்வடிப்படையில் புதினத்தில்

படைத்துள்ள பாத்திரத்தின் தன்மையினைக் கொண்டே படைப்பாளியின் படைப்புத்

திறனை அறிந்து கொள்ள வாய்ப்புள்ளது எனலாம்.

இவ்வாறு அமையும் பாத்திரங்களை கதைக்கோப்பிற்கேற்றாற்போலப் பலர்

பலவாறு பிரித்துள்ளனர். அதனை முன்வைத்து,

1. முதன்மைப் பாத்திரம்

2. துணைப்பாத்திரம்

3. பிறபாத்திரங்கள்

என்ற மூன்று வகையாகப் பிரித்தறிய முடிகிறது.”10 இப்பிரிப்புகளின் வழியே

சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் வரும் பாத்திரங்களையும் பிரித்தாராய வாய்ப்புள்ளது.

முதன்மை பாத்திரங்கள்

புதின ஆசிரியர்கள் கதைச் சூழலை உருவாக்கும் பொழுது புதினத்தின் மையக்

கருத்தை விளக்குவதற்கோ வெளிப்படுத்துவதற்கோ முதன்மைக்

கதைமாந்தர்களைப் படைக்கின்றனர். இக்கதை மாந்தர்கள் ஏனையோர்க்கு

வழிகாட்டியாகவும், சமுதாயத்துடன் போராடுபவர்களாகவும், பிறருக்கு

முன்மாதிரியாகவும் பெரும்பாலும் படைக்கப்பட்டுளனர் எனலாம். கதையின் கருவை

விளக்குவதற்குப் படைப்பாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாத்திரங்களை

மையப்படுத்திக் காட்டுவது புதினத்திற்கு மெருகூட்டுவது போலாகும்.

இப்பாத்திரங்கள், கதைக்கருவிற்கு விளக்கம் தருவனவாகவும் கதை நிகழ்ச்சிகள்

இப்பாத்திரங்களைச் சுற்றியே இயங்குவனவாகவும் அமைக்கப் படுகின்றன.


71

பொதுவாக கதையின் முடிவு இம்மாந்தர்களைப் பற்றியதாக அமைந்து

விடுவதும் உண்டு. படிப்போர் உள்ளத்திலும் இம்மாந்தர்கள் ஆழ்ந்த விளைவை

ஏற்படுத்துகின்றனர். கதையின் தலைமைப் பாத்திரங்களான இவர்களைச் சுற்றியே

மற்ற பாத்திரங்கள் படைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு புதினத்திற்கு மிக

முக்கியமான கூறுகளுள் முதன்மைப் பாத்திரங்கள் முதலிடம்

பெறுகின்றனவென்றால் அது மிகையாகாது என்றே கூறலாம். கதைக்கு உயிர்ப்புக்

கொடுக்கும் வரிசையில் முதன்மைப் பாத்திரங்கள் முதலிடம் வகுக்கின்றன.

எனலாம். முதன்மை பாத்திரம் கருத்து மற்றும் உணர்வுகளின் மூலமாகப்

பாத்திரப்பண்பை விளக்குகிறது. இதனை,

“ஒரு பாத்திரத்தைப் பற்றி மற்றப் பாத்திரங்கள் சொல்லுகின்ற

கருத்துக்களின் மூலமும், உணர்கின்ற உணர்வுகளின் மூலமும்

அந்தப் பாத்திரப் பண்பை விளக்குவது”11

எனக் காணலாகிறது. இதனைப் போன்றே முதன்மைப் பாத்திரம் என்பதினையும்

அதன் இயல்பினையும்,

“பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துப் பொருத்தமான முறையில்

அமைக்கும் போது நாவல் சிறப்பிடம் பெறுகின்றது. நாவலாசிரியர்

அவர் அறிந்த உணர்ந்த அனுபவித்த, கற்பனை செய்த, வாழ்க்கையை

அவரது கண்ணோட்டத்தின்படி புதினத்துக்கான கலைவடிவத்தின்

வாயிலாக வெளிப்படுத்துவது”12

எனக் குறிப்பிடுவதில் காணமுடிகிறது.

சு.தமிழ்ச்செல்வியின் ‘அளம்’, ‘கீ தாரி’, ‘கற்றாழை’, ‘மாணிக்கம்’ போன்ற

புதினங்களில் முதன்மைப் பாத்திரங்களாக வரும் அனைத்து பாத்திரங்களும்

கதையினை நகர்த்தி செல்கின்றன.


72

‘மாணிக்கம்’ என்ற புதினத்தில் மாணிக்கம், செல்லாயி போன்றோர்

முதன்மைப் பாத்திரங்களாகவும் தங்கதாச்சி, சக்குபாய், செல்வி, நாஞ்சி, கோமுட்டி

செட்டியார், புருட்டியர் போன்றோர் துணைமைப் பாத்திரமாகவும் காணப்படுகின்றனர்.

‘கீ தாரி’ புதினத்தில் இராமுகீ தாரி, கரிச்சா, சிவப்பி போன்றோர் முதன்மை

பாத்திரமாக அறியப்பட்டாலும் பெண்களின் நிலையினை முதன்மைப்

படுத்துவதினால் கரிச்சா என்ற பாத்திரத்தையே முதன்மையானதாகக் கருத

முடிகின்றது.

வெள்ளளைச்சாமி, இருளாயி, முத்தம்மாள், பைத்தியக்காரப் பெண்,

வடிவேல்தேவர் சாம்பசிவம், சேது, ராமாயி, சுந்தரமூர்த்தி சேர்வை, சோமசுந்தரச்

சேர்வை, ரெங்கநாதக்கோனார் போன்ற பாத்திரங்கள் துணையாக நின்று கீ தாரி

புதினத்தினை நகர்த்தும் தன்மை படைப்பாசிரியரின் கற்பனைத் தன்மையையும்

பாத்திரப்படைப்பின் பன்முகத்தன்மையையும் எடுத்துரைக்கின்றது.

‘காற்றாழையில் மணிமேகலை என்ற கதாபாத்திரத்தை முதன்மைப்

பாத்திரமாக அறியமுடிகிறது.

செல்வராசு, வளர்மதி, குமாரி, கலா, பாக்கியம், அம்முனி, சங்கரன்,

செல்வராசு, பவுனு, தெய்வாணை, விஜி, மரியா, லிடியா, சென்சிலா, கார்த்தி, செந்தில்

போன்றோர் கதையில் துணைமைப் பாத்திரங்களாக நின்று கதைக்கு உயிர்

கொடுத்திருப்பதையும் காணமுடிகிறது.

‘அளம்’ என்னும் புதினத்தை உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வியலை

முன்னிருத்தும் புதினமாக சு.தமிழ்ச்செல்வி அமைத்துள்ளார். இதில் சுந்தரம்பாள்

என்ற பெண் பாத்திரம் முதன்மைப் பாத்திரமாக அறியலாகிறது. சுப்பையன்,

வடிவம்பாள், ராசாம்பாள், அஞ்சம்மாள் இராமையாப்பிள்ளை, மீ னாட்சி, கோவிந்தன்,

கணேசன் போன்ற சிறு பாத்திரங்களும் கதை நகர்விற்கு மிக முக்கிய பங்காற்றுகின்ற

துணைமைப் பாத்திரங்களாக உள்ளன.


73

மாணிக்கம்

‘மாணிக்கம்’ என்னும் புதினத்தில் முதன்மைப் பாத்திரமாக மாணிக்கம்

அறியப்படுகிறார். மாணிக்கம் மூர்க்கக்குணத்தார், சாகசமனிதர், மருத்துவர்,

சூதாட்டக்காரர், நல்ல மனிதர் போன்ற பல்வேறு கோணங்களில் இந்த ஒரு

பாத்திரமானது சூழ்நிலைக்கேற்ப அமைந்து கதையினை நகர்த்திச் செல்கின்றது. ஒரு

கதாபாத்திரத்தினை உருவாக்குவதும் அதனைக் கைவிடுவதும் படைப்பாசிரியர்

கையில் உள்ளது எனலாம். புதினத்தினைப் பொருத்தவரையில் நன்மை, தீமை

போன்ற பல்வேறு முரண்பாடுகளுடன் கூடிய இவ்வகைப் பாத்திரங்கள்

சமுதாயத்தின் பல முரண்பாடுகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

இதனை,

“பாத்திரப்படைப்புகள் சமூக முரண்பாடுகளை வெளிப்படுத்தும்

கருவி”13

என்னும் கூற்று குறிப்பிடுவதன்வழி உணரமுடிகின்றது. பன்முகத் தன்மையுடன்

அமைந்துள்ளதாக மாணிக்கம் என்னும் பாத்திரத்தை உணரமுடிகிறது. மாணிக்கம்

என்ற பாத்திரத்தை முதலில் அறிமுகம் செய்யும் போது படைப்பாசிரியர்.

“எப்போதும் கழுத்தில் நரிப்பல் டாலரும், மோதிரமும்,

கைக்கடிகாரமுமென மிடுக்கானத் தோற்றம் மாணிக்கத்திற்கு. ஊர்

ஊராய்ச் சென்று வர சைக்கிள். அப்பகுதியில் இதுபோன்ற வசதிகள்

எளிதில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. விவசாயக் குடும்பத்தில்

பிறந்தவன். விவசாய வேலைகளையும் அவ்வப்போது செய்வான்.

எல்லாவற்றை விடவும் மருந்துக்குக்கூட கெட்ட குணமோ தீய

பழக்கங்களோ கிடையாது. இப்படியுள்ள ஒருவனுடன் யார் தான்

விரும்பிப் பழக மாட்டார்கள்?”14

இப்படியாகக் கதையின் தலைமைப் பாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதின

ஆசிரியர், மாணிக்கத்திற்கு மருந்துக்குக்கூட கெட்ட குணமோ தீய குணமோ தீய


74

பழக்கங்களோ கிடையாது எனக் கூறியுள்ளார். மேலும், படைப்பாசிரியர் பாத்திரத்தின்

குடும்பநிலை, கல்விமுறை, சமுதாயச்சூழல் போன்றவற்றின் மூலமாகக் குடிகாரன்,

சூதாட்டக்காரன், மூர்க்கக்குணம் உடையவன் எனப் பாத்திரத்தின் குணத்தன்மையை

மாற்றியமைத்துக் காட்டும் தன்மையில் சிறந்த படைப்பாசிரியராக மிளிருவது

எண்ணத்தக்கதாக உள்ளது.

மருத்துவர் மாணிக்கம்

தன்னுடன் படித்த மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்ப் பயிற்சிப் பள்ளியில்

சேர்ந்த போதும் கூட, தான் மருத்துவம் தான் படிப்பேன் என்று கூறுவதில் மாணிக்கம்

உறுதியாக இருந்தான். அது அவனது சிறுவயது ஆசை என்பதினைப் பாத்திரச்

சித்தரிப்பில் ஆசிரியர் அமைத்துக் காட்டுகிறார். இதனை,

“மெட்ராசில் வி.எஸ்.சுப்ரமணியய்யர், ஹோமியோ இன்ஸ்டியூட்

நடத்தி வந்தார். மருத்துவம் படிக்கும் ஆசை சின்ன வயதிலிருந்தே

இருந்தது மாணிக்கத்திற்கு, இன்ஸ்டியூட்டில் சோ;ந்து தபால்

மூலமாகவே ஒரு வருடம் படித்து டிப்ளமோ வாங்கினான்”15

என்று கூறுவதன் வாயிலாகப் புலனாகிறது. மருத்துவப் படிப்பின் அவசியத்தையும்

பாத்திரத்தின் உண்மை நிலையையும் அந்தப் பாத்திரத்தின் மீ து ஆசிரியர் கொண்ட

ஈடுபாட்டையும் கதைக் கருவினைவிடப் பாத்திரமே பிரதானப் படைப்பாகக் கருதும்

நிலை இங்கு உணரப்படுவதாய் உள்ளது. இச்செய்தி,

“பாத்திரம் இல்லாமல் கதைக்கரு அமைவதில்லை பாத்திரங்களின்

செயலாலேயே கரு அமைந்திருக்கின்றது”16

என்னும் கூற்றுடன் ஒப்பிட்டு நோக்கத்தக்கதாக உள்ளது.

மருத்துவத் துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தன்னால் முயன்ற

அனைத்தையும் படிப்பாலும் பயிற்சியாலும் கற்றுக் கொண்டு தனக்கான ஒரு


75

மருத்துவமனையையும் மாணிக்கம் அமைத்துக் கொண்டான் என்று கூறும்போது

பாத்திரத்தின் கட்டமைப்பு கதையோடு இரண்டறக் கலந்துள்ளதை உணரமுடிகிறது.

“படித்துக் கொண்டிருக்கும் போதே திருவாரூரில் ஆறு மாதங்கள்

நோயாளிகளுக்கு நேரடி மருத்துவமளித்தல், கட்டுக்கட்டுதல் போன்ற

முக்கியமான பயிற்சிகளைப் பெற்றான். இதுவரை அறிந்திராத

மருத்துவமும், மருத்துவம் பற்றிய புதிய செய்திகளும் அவனை

வெகுவாய்க் கவர்ந்தன. அதனால், அதிக ஈடுபாட்டோடு கற்றுத்

தேர்ந்தான். ஹோமியோவின் அடிப்படை அம்சங்களை நன்றாகப்

புரிந்துகொண்டான்”17

எனப் பாத்திரத்தின் குணச்சித்தரிப்பைக் காட்டுகிறார்.

ஆசிரியர் இந்தப் பாத்திரம்தான் தமது புதினப்படைப்புக்குப் பொருந்தும்

என்றும், இந்தப் பெயர்தான் பாத்திரத்திற்கு வைக்க வேண்டும் என்றும் இருந்த

மனத்தாக்கம் புதினம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற

ஆழமான நோக்கத்தோடு படைக்கப்பட்ட ஒன்றாகப் பாத்திரப்படைப்புகள்

அமைத்துள்ளதைக் காணமுடிகிறது.

சாகச மனிதர் மாணிக்கம்

பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய பாத்திர படைப்பாக மாணிக்கம் என்னும்

பாத்திரம் உள்ளது. தன் பழைய நண்பன் கோவிந்து செய்யும் தொழிலான சைக்கிள்

சாகச வித்தையினைப் பார்த்து வியந்து தானும் அதனைப் போன்று ஒரே நாளில்

கற்றுத் தேர்ந்து அவ்வித்தையைச் செய்யக்கூடிய சாகசமனிதனாகத் தன்னை

மாற்றிக்கொள்ளும் தன்மையினைப் இப்பாத்திரத்தின் வழியாக உணர்த்துகிறார்.

இதனை,

“தெரியும் கோயிந்து நீ செய்யிர எல்லா வித்தையையும் நானும்

செய்வேன்.
76

நெசமாவா?

நெசமாத்தான்.

மூன்றாம் நாள் சைக்கிளை விட்டு இறங்கிய பிறகு மாணிக்கத்திடம்

வித்தைகளையெல்லாம் செய்துக்காட்டச் சொன்னான். எல்லா வித்தைகளையும்

செய்து காட்டினான். வடபாதி கோவிந்துவுக்கு ஒரே ஆச்சரியமாகி விட்டது.

எப்படி ஒரே நாள்ல கத்துக்கிட்டே என்று வியந்து போனான்”18

என்னும் கதைச் சித்தரிப்பு வெளிப்படுத்துகிறது. மாணிக்கம் என்னும் கதாபாத்திரம்

பல்வேறு நிகழ்வுகளைக் கதையின் ஊடாக எடுத்துச் சென்றாலும், எவரொருவரும்

தம்முடைய ஆர்வத்தினால் எந்த ஒரு செயலினையும் கற்றுத்தேர்ந்து செய்துவிட

இயலும் என்ற கருத்தாடலை இந்த புதினத்தின் வழியாகப் படைப்பாசிரியர்

வெளிப்படுத்துகிறார்.

இப்படிப்பட்ட கதாபாத்திரங்களின் சாகச உணர்வுகளையும் மருத்துவம்,

விவசாயம், மீ ன்பிடித்தல் போன்ற பல்வேறு திறமைகளுடன் கூடிய ஒரு

பாத்திரத்தினைப் படைத்துக் காட்டுகிறார். அப்பாத்திரத்தையே முதன்மையான

பாத்திரமாக வெளிப்படுத்துவதுடன் அதே பாத்திரத்தின் பெயரையே புதினத்தின்

தலைப்பாகவும் ஆக்கியுள்ளார். இதன்வழி புதினத்தின் உயர்வுக்கு மாணிக்கம்

என்னும் பாத்திரம் வலுசேர்த்திருப்பதை உணரமுடிகிறது. இதுபோன்று,

வாழ்க்கையில் ஒன்றினைச்சாதிக்கும் வேட்கையிலும் புதுமையைச் செய்ய

வேண்டும் என்ற ஆர்வத்திலும் உணர்வு குறையாத பாத்திரமாகப்

படைக்கப்படும்போது அந்தப் பாத்திரம் முழுமையும் முதன்மையும் உடையதாக

அமைகின்றது எனலாம்.

செல்லாயி

புதினத்தின் கதையோட்டத்தில் முதன்மைப் பாத்திரமானது புதினத்தையே

புரட்டிப்போடும் அளவிற்கு மிகவும் கனமான பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட பாத்திரமாக செல்லாயி என்னும் பெண் பாத்திரம் ‘மாணிக்கம்’ புதினக்


77

கதையோட்டத்தில் இரண்டறக் கலந்த பாத்திரமாக உள்ளது. கதையையும்

பாத்திரத்தையும் பிரித்துப் பார்ப்பதே கடினம் என்ற போக்கில் இப்பாத்திரம்

அமைந்துள்ளது. இதுபோன்ற பாத்திரத்தின் தன்மையை விளக்கும் வகையில்,

“எந்த ஒரு இலக்கியப் படைப்பாக்கத்திலும் பாத்திரம் என்பது பிhp க்க

முடியாத ஒரு கூறாக விளங்குவதனை அறியமுடிகிறது. இதனை,

இலக்கியம் பல பாத்திரங்களின் உணா;ச்சிகளை வடித்துக்காட்டும்

தன்மையுடையது”19

என்ற வ.சுப.மாணிக்கனாரின் கூற்று வலியுறுத்துகிறது. இக்கருத்தை இதுபோன்ற

பாத்திரத்திற்கு நங்கூரம் போன்றதொரு பிணைப்பாகக் கருதமுடிகிறது.

செல்லாயியைப் புதினப் படைப்பாசிரியர் அறிமுகம் செய்யும்போது தாய்

இல்லாத பெண்ணாக மட்டுமன்றி வயதுக்கு வந்த பெண்ணாகவும் இருப்பதால்

அவளை வட்டில்
ீ வைத்திருக்கக் கூடாது என்று எண்ணி ஆதனூரில் உள்ள

தன்னுடைய தாய் வட்டில்


ீ வளர்த்தனர். பின்பு மாணிக்கத்துடன் திருணம்

முடித்தவுடன் குறிப்பாகக் கொடுமை செய்யும் மாமியார், முரட்டுத்தனமான குடிகாரக்

கணவன் ஆகியோரால் ஏற்படும் துன்ப வாழ்வில் எதிர்நீச்சல் போடும் முதன்மைப்

பாத்திரமாக செல்லாயி உள்ளாள். இவள் மூலமாகக் கிராமத்துப் பெண் வாழ்வியலை

எடுத்துக் கூறியுள்ள தன்மை விளங்குகின்றது.

தாயின் பேச்சினைக்கேட்டு தன் மனைவி செல்லாயி தரம் கெட்டவள் என்று

ஊர் முன்னால் அவளைப் போட்டு உதைக்கும் ஆணாதிக்கக் கொடுமைகள்

அனைத்தையும் தன்னுள் தாங்கிக் கொண்டு அக்குடும்பத்தில் வாழும் ஒரு

பொறுப்புள்ள பாத்திரமாக முதன்மைப்படுத்தப்பட்டு, செல்லாயி என்ற பாத்திரத்திற்கு

உயிர் கொடுத்திருப்பதன் மூலம் சு.தமிழ்ச்செல்வியின் படைப்புத் தன்மையைக்

காணமுடிகிறது. செல்லாயி தனது திருமணம் முடிந்தவுடன் தன் மாமியார் குணம்

பற்றிய செய்தியைக் கேட்டறிந்தாள் அதன்பின் அவளின் நிலை,


78

“அதோட அந்த தங்கச்சி இருக்கறாளே அவ வெல மோருல வெண்ணெ

எடுக்கறவ என்றாள் வந்தவள்,

இதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்லாயிக்கு சுருக்கென்றது. பிறந்து

வினவு தெரியும்முன் தாயை இழந்தவள். கூடப்பிறந்த சகோதரிகளின்

அன்புகூட அவளுக்குக் கொஞ்ச நாள் தான் கிடைத்தது.

அம்மா... ஏழு நாத்துனா... மாமியாக்கிட்ட எப்புடிருந்து குப்ப கொட்டப்

போறன். செத்த நீ தெய்வமா இருந்து ஒம் பெண்ணக் காப்பாத்தும்மா

என்று மனத்திற்குள் தன் அம்மாவை நினைத்து வேண்டிக்

கொண்டாள்”20

இப்படியாக செல்லாயி என்னும் பாத்திரத்தின் மூலமாக கூட்டுக் குடும்பத்தில் நிகழும்

இன்னல்கள் மற்றும் தங்கதாச்சி என்ற நாத்தனார்ப் பாத்திரத்தினைச் சமாளிக்கும்

தன்மையில் முதன்மைப் பாத்திரத்தினை அமைத்துள்ளார்.

முதன்மைப் பெண் பாத்திரங்கள்

சு.தமிழ்ச்செல்வி புதினங்களில் படைக்கப்பட்டுள்ள முதன்மைப்

பாத்திரங்களில் பெரும்பான்மையும் பெண் பாத்திரங்களாகவே உள்ளனர். ஒவ்வொரு

பாத்திரமும் தனித்து நின்று சமுதாய இன்னல்களையும் அவலங்களையும் எதிர்த்து

வெல்லும் தன்மையில் முதன்மைப் படுத்தப்படுகின்றன.

புதினங்களில் வருகின்ற பெரும்பாலான பெண் முதன்மை பாத்திரங்கள்

கணவனை இழந்த பாத்திரங்களாகவும் மற்றும் இரண்டு மூன்று பெண்

பிள்ளைகளுடன் வாழக்கூடிய பாத்திரமாகவும் படைக்கப்பட்டுள்ளனர். ‘அளம்’ என்ற

புதினத்தில் முதன்மைப் பாத்திரமாக சுந்தரம்மாள் என்னும் பாத்திரம் முன்னிறுத்தப்

படுகின்றது. இப் பாத்திரம் விவசாயக்கூலி, உப்பளத்தின் வேலைக்காரி, மூன்று

பெண்களின் தாய் என்று பல நிலைகளில் நிற்பவளாகப் படைக்கப்பட்டுள்ளாள்.

அத்துடன் வாழ்வின் பல்வேறு சூழல்களில் தன்னையும் தன் மூன்று பெண்களையும்


79

பாதுகாத்துக்கொள்ளும் திறமைகளைக் கொண்டவளாகவும் படைக்கப்பட்டுள்ளதையும்

உணரமுடிகிறது.

வெளிநாட்டிற்குச் சென்ற கணவன் பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்பும்

வட்டிற்குத்
ீ திரும்பி வரவில்லை. கணவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்து

எதிர்பார்த்து வருந்தும் அவளுடன் சேர்ந்து பெண்பிள்ளைகளும் ஏங்கித்

தவிக்கின்றனர். இருந்தும் தன் பிள்ளைகளை நல்ல முறையில் திருமணம் செய்து

கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டு

உழைக்கும் பெண் பாத்திரமாக சுந்தரம்பாள் படைக்கப்பட்டுள்ளார்.

குடும்ப வறுமையைப் போக்குவதற்காக மிகக் கடினப்பட்டு அடுத்தவரை நம்பி

வெளிநாட்டிற்குக் கணவன் சென்று விடுகின்றான். அவன் மீ ண்டும் குறிப்பிட்ட

காலத்தில் திரும்பி வருவான் என எதிர்பார்த்திருக்கும் மனைவிக்கு ஏமாற்றமே

மிஞ்சுகிறது. சென்றவனும் வராமல் அவனது சம்பாத்யமும் வராமல் மிகவும்

வறுமை நிலையில் பெண்பிள்ளைகளுடன் குடும்பத்தில் அவலநிலையைச்

சந்திக்கும் பெண்ணாக சுந்தரம்பாள் என்ற பாத்திரத்தைப் புதின ஆசிரியர் படைத்துக்

காட்டுகிறார். இதனை,

“இல்ல இந்த புள்ளைவொள வச்சிக்கிட்டு நாமட்டும் ஒண்டியா என்ன

பண்ணுவன்னு நெனக்கிறங்....

கப்பலுக்குப் போறவனுவெல்லாம் பொண்டாட்டிய ஒண்டியாத்தாங்

உட்டுட்டுப் போறானுவொ பெயிட்டு வார வரக்கிம் அவனோட

இருன்னு வேற கல்யாணமா பண்ணி வச்சிட்டுப் போறானுவ?

நக்கலாய் சொன்னான் சுப்பையன். கெப்புருதான இதெல்லாம். நா

என்ன சொல்லுறங் நீங்க என்ன சொல்லுறிய? பொண்டாட்டின்னா

ஒங்களுக்கு அவ்வள எளக்காரமா பொயிட்டா,”21

இதுபோன்று சமுதாயத்திலும் குடும்பத்திலும் பெண்களின் நிலை மிகவும்

ஏமாற்றத்துடனும் விமர்சனத்துடனும் காணப்படுகின்றது என்பதை சுந்தரம்மாள்

பாத்திரத்தின் ஊடாகப் புலப்படுத்துகிறார்.


80

சு.தமிழ்ச்செல்வி தம்முடைய அணிந்துரையில் கூறும் போது என்னோடு இருந்த

மக்களின் நிலையையும் நான் கண்ட, தொp ந்த மக்களின் வாழ்வியலையும் எடுத்துக்

கூறுகின்றேன் என்கிறார. இத்தன்மையை,

“ஓர் ஆசிரியன் உலக வாழ்க்கையில் காணும் ஒரு மாந்தரை

அப்படியே தன் நாவலில் புகுத்தி விடுவதுண்டு. சில மாற்றங்களுடன்

புகுத்துவதும் உண்டு அல்லது அவனிடமுள்ள ஏதோ ஒரு சிறு பண்பை

எடுத்துக் கொண்டு அதைத்தன் கற்பனை மூலம் வளர்த்து ஒரு புதிய

மாந்தனாகப் படைத்துக் கொள்வதுமுண்டு, இது விதையைக்கொண்டு

பூத்துக் குலுங்கும் செடியை உண்டாக்கும் செயல் போன்றது. இது

வாழ்வோடு இணைந்த ஒன்றாக அமைய வேண்டும். நான் இந்த

மக்களின் வாழ்வோடு இணைந்து அவர்களை உற்றுக் கவனித்தவன்.

அதனால்தான் இத்தகவல்களைச் சரியாக பதிவு செய்ய முடிந்தது”22

என ச.பாலமுருகன் கூறியுள்ளது ஈண்டு ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது. சமகாலப்

புதின ஆசிரியர்கள் தமது புதினங்களில் சமூகத்தின் சிக்கல்களையும்

மாற்றங்களையும் வெளிப்படுத்துவதற்கு இத்தகைய பாத்திர வகைகளைக்

கையாளுகின்றனர். உண்மையான பாத்திரங்களைப் படைக்க வேண்டும் என்ற

நோக்கத்தில், தான் பார்த்த மனிதர்களையும் பழகிய மனிதர்களையும் கொண்டு

அவர்களது பலவகைப் பண்புகளிலிருந்து கதைக்குத் தேவையானவற்றை எடுத்துப்

படைப்பாளர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை உணரமுடிகின்றது.

கரிச்சா

இராமு கீ தாரி கிடை போட்டிருக்கும் இடத்திற்கு மனநலம் பாதிக்கப்பட்ட

கர்ப்பவதிப் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் யாரால் வஞ்சிக்கப்பட்டுக் கர்ப்பம்

அடைந்தாள் என்று கூடத் தெரியாமல் அவளைத் தன் வட்டுப்


ீ பிள்ளையாக மதித்துப்

பிரசவமும் பார்க்கின்றார். அவளுக்கு இரட்டைப்பெண் பிள்ளைகள் பிறக்கின்றன.

அதில் ஒன்றுதான் கரிச்சா என்ற பாத்திரம்.


81

‘கீ தாரி’ என்ற இந்தப் புதினத்தில் இராமு கீ தாரி என்னும் பாத்திரம் தான்

தலைமைப் பாத்திரம் என்றாலும், கரிச்சாவின் வாழ்நாள் முழுவதும் அவள் மீ து

அன்பும் அரவணைப்பும் கொண்டு தனது வாழ்க்கையையே அவளுக்காக

நடத்துவதாக அமைத்துள்ளார். கீ தாரி என்னும் ஆடு மேய்க்கும் இன மக்களின்

வாழ்வியலைக் கரிச்சா என்ற பெண் பாத்திரத்தின் ஊடாகத் தெரிந்து கொள்ளும்

வகையில் இப்புதினச் சித்தரிப்பை அமைத்துள்ளார்.

கரிச்சாவின் உடன்பிறந்த சகோதரியாக வரும் சிவப்பியைப் பற்றிய சில

இடங்களில் கரிச்சா நினைத்தாலும் கரிச்சா என்னும் பாத்திரமே முதன்மைப்

பாத்திரமாய்ப் படிப்போரின் கண்முன் நிற்கின்றது எனலாம்.

‘கீ தாரி’ என்னும் புதினத்தில் படைக்கப்பட்டுள்ள கரிச்சா என்ற பாத்திரத்தின்

மூலம் கீ தாரி மக்களின் உறவுமுறை, திருமணமுறை, வாழ்வியல் முறை போன்ற

அனைத்துச் செய்திகளையும் அவர்களின் வாழ்க்கை நிலையிலேயே நின்று

விவரணை செய்துள்ளார்.

இராமு கீ தாரி கரிச்சாவை வேறு யாருக்கும் திருமணம் செய்து வைக்காமல்

வெள்ளைச்சாமிக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இரண்டு பேரும்

சிறுபிள்ளையிலிருந்தே சித்தப்பன் உறவு முறையாய் இருந்து வந்தவர்கள். இருந்தும்

வெள்ளையன் கரிச்சாவைத் திருமணம் செய்து கொள்ளுவது தவறில்லை என்பதை,

“சித்தப்பன் மொறயில பொண்ணக்கட்டுறது

புதுசில்ல நம்மளுக்கு”23

என்ற இராமு கீ தாரியின் கூற்றில் வெளிக்காட்டுகிறார்.

கீ தாரி மக்களுக்கு இவ்வகையான உறவு மீ றலில் திருமண உறவுமுறையை

உருவாக்கி அமைத்துக்கொள்வது ஒன்றும் புதியது இல்லை. பழைய முறைதான்.

இவ்வடிப்படையில் சித்தப்பனுக்கே கரிச்சாவைக் திருமணம் செய்து வைக்கும்

இடையர்களின் திருமண முறையைக் கரிச்சா என்ற முதன்மை பாத்திரத்தைக்

கொண்டே நிகழ்த்திக் காட்டுகிறார்.


82

இவ்வாறு திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையில் மனம்

ஒத்துவராமல் போவதால் வெள்ளையன் வேறு திருமணம் செய்து கொள்கிறான்.

அதன் காரணமாகக் கரிச்சாவின் மனம் முழுவதும் ரணம் சுமந்து காயப்பட்டுத்

துன்பம் அடைகிறாள். இராமுகீ தாரி அதனைக் கண்டு வேதனை அடைகிறார்.

இச்செய்திகளைக் கரிச்சா பாத்திரத்தின் வழி காணலாகிறது.

தொகுப்புரை

சு.தமிழ்ச்செல்வி புதினத்தில் வரும் பாத்திரப்படைப்புகள் பற்றி இவ்வியல்

தொகுத்துக் கூறியுள்ளது. கதை மாந்தர்கள் படைப்பு பற்றியும் அவர்களின் மூலம்

சமூகத்திற்குக் கூற விழையும் கருத்துப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஒருசில

இயல்புகளின் வாயிலாகப் பாத்திரங்கள் முழுமைபெறச் செய்யப்பட்டுள்ளன.

பாத்திரப்படைப்புகள் புதினத்திற்கு இன்றியமையாதனவாக உள்ளன.

புதினத்தில் பாத்திரப்படைப்புகள் இடம் பெறுவதால் அவை சிறப்புடன்

விளங்குகின்றன. பாத்திரத்தின் வகைகளும் முதன்மைப் பாத்திரத்தில் வரும்

மாந்தர்களும், துணைப்பாத்திரத்தில் வரும் மாந்தர்களும் அவர்களது

பண்புநலன்களும், விளக்கமாக தம் புதினங்களில் ஆசிர்யர் குறிப்பிடுவதை

அறியமுடிகிறது.
83

சான்றெண் விளக்கம்

1. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள், நூ.எ. 251.

2. கோ.வே.கீ தா, தமிழ்நாவல்கள் ஓர் அறிமுகம், ப. 136.

3. க.பிரபாகரி, இலக்கியத்திறனாய்வும், கொள்கைகளும், ப. 188.

4. க.பிரபாகரி, இலக்கியத்திறனாய்வும், கொள்கைகளும், ப. 188.

5. சு.சண்முகசுந்தரம், தமிழ் வட்டார நாவல்கள், ப. 2.

6. மா.இராமலிங்கம், நாவல் இலக்கியம், ப. 20.

7. தா.ஏ.ஞானமூர்த்தி, இலக்கியத் திறனாய்வியல், ப. 417.

8. அகிலன், கதைக்கலை, ப. 111.

9. மேலது., ப. 63.

10. க.கிருஷ்ணகுமாரி, சூர்யகாந்தனின் மானாவாரி மனிதர்கள் ஒர் ஆய்வு, ப. 20

11. இரா.தண்டாயுதம், தமிழ் நாவல்கள், ப. 97.

12. த.மணிமாறன், இலக்கியக்கலை, பக். 17-18.

13. கைலாசபதி நாவல் இலக்கியம், ப. 42.

14. சு.தமிழ்ச்செல்வி, மாணிக்கம், ப. 55.

15. மேலது., ப. 52.

16. Maren Elwood, Characters make your story, P. 156 .

17. சு.தமிழ்ச்செல்வி, மாணிக்கம், ப. 52.

18. மேலது, ப. 93.

19. வ.சுப.மாணிக்கம், காப்பியப் பார்வை, ப. 3.

20. சு.தமிழ்ச்செல்வி, மாணிக்கம், பக். 77.

21. சு.தமிழ்ச்செல்வி, அளம், பக். 12.

22. ச.பாலமுருகன், சோளகர் தொட்டி நாவல், முன்னுரை.

23. சு.தமிழ்ச்செல்வி, கீ தாரி, பக். 98.


84

இயல் - 5

சு. தமிழ்ச்செல்வி படைப்புகளில் மொழிநடை

முன்னுரை

படைப்பாளன் தன் படைப்பு வெற்றிபெறக் கையாளும் முயற்சிகள்

உத்திகளாகின்றன. இலக்கியப் படைப்பாளர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு

வகையான நடை அமைகிறது. இங்ஙனம் அமைவதுதான் இலக்கியக் கலையின்

சுவை வேறுபாட்டுக்குரிய உயிர்நாடி ஆகும். படைப்பாளன் தன்னுடைய கருத்தை

வாசகனிடம் தெரிவிக்க மொழி இன்றியமையாததாக அமைகின்றது. தான் கூற

நினைக்கும் கருத்து தெளிவில்லையென்றால் அக்கருத்து வாசகனிடம் சென்று

சேருவதில்லை. எனவே பேச எடுத்துக் கொண்ட கருத்து எந்த அளவிற்கு

முக்கியத்துவம் வாய்ந்ததோ அந்த அளவிற்கு இலக்கியத்தில் மொழியும்

முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றது. அந்த வகையில் தமிழ்ச்செல்வியின்

படைப்புகளான ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீ தாரி’, ‘கற்றாழை’ ஆகிய நாவல்களிலும்

அவர்களின் மொழிநடையின் தனித்துவத்தை இவ்வியல் எடுத்துரைக்கின்றது.

மொழித் தோற்றம்

உலகில் பல மொழிகள் பேசப்படினும், அனைத்து மொழிகளுக்கும்,

மூலமொழியாக ஒரு மொழி இருந்திருக்க வேண்டும்.

இலெமூரியாக் கண்டம் என்று அழைக்கப்படும் குமரிக் கண்டத்தில் தான்

முதல் மனிதன் தோன்றினான் என்பர், தொடக்கத்தில் அவர்கள் பேசிய ஒரே மொழி

தமிழ். அவர்கள் சென்று தங்கிய இடங்களுக்கேற்ப பல்வேறு மாற்றங்களைப்

பெற்றது. தொடக்கத்தில் உலகம் முழுவதும் ஒரே மொழி இருந்தது. கடவுள் அதைச்

சிதைத்துப் பல மொழிகளாக்கினார். ஒருவர் பேசுவது ஒருவருக்குப் புரியாதது

மாதிரிச் செய்தார் என்ற செய்தி பழைய ஏற்பாட்டிலே காணப்படுகின்றது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொடக்ககால மக்கள் பேசிய மொழி,


85

அந்தப் பழைய மொழி தமிழ் அல்லது மூலத்திராவிட மொழியாக இருந்திருக்கலாம்

என ஊகிக்க முடிகின்றது.

“முதல் மனிதனுக்கு மொழி தேவையில்லை. அவன் மக்களைப்

பெற்றுப் பெருகிய பின்னர் கூடி வாழத் தலைப்பட்டான். தன்

எண்ணத்தைக் கைக்குறியாலும், முகக்குறியாலும், படக்குறியாலும்

பிறர்க்குப் புலப்படுத்தினான். இக்குறிகள் இரவிலும் தொலைவிலும்

பயன்படுத்த முடியாததனால் அதன் பின்னரே மொழி தோன்றியது”1

என்று மொழியின் தோற்றம் பற்றி ஞா.தேவநேயப் பாவாணர் கூறுகின்றார்.

மொழிப் பற்றி அறிஞர்கள் கருத்து

“மொழியானது மரபாலும், உடன்பாட்டாலும் தோன்றியது என

நம்பினார். மொழியாளர்கள் இக்கொள்கையை ஆதரிக்கின்றனர்”2

என்று சு.சக்திவேல் குறிப்பிடுகின்றார்.

“எங்கு முதல் மாந்தன் தோன்றினானோ அங்குதான் ஞாலமுதல்

மொழியும் தோன்றியிருக்க முடியும். அவன் பேசிய மொழியே

முதன்மொழி”3

என்பர் ஞா.தேவநேயப்பாவாணர். அதுவே பாவாணரின் அசைக்க முடியாத கருத்தாக

இருந்தது.

“மொழி என்பது வாயால் மொழியப்படும் ஒலியின் ஈட்டத்தையே

குறிக்கும்”4

என்று ரா.சீனிவாசன் கூறுகிறார்.

“மொழி ஒரு தனிமனிதச் சாதனையோ ஒரு சமுதாயத்தின் ஒரு

தலைமுறையினரின் சாதனையோ அன்று. எத்தனையோ

தலைமுறையினர் சாதனைகள் தான் இன்று நாம் பேசும் மொழியாக


86

அமைந்துள்ளது. உலகத்து மொழிகள் ஒவ்வொன்றும் இவ்வாறு பல

தலைமுறையினரின் உழைப்பில் வளர்ந்து விளங்கும் பெரிய

அமைப்பு”5

என்று அறிஞர் விட்னே குறிப்பிடுவதாக சண்முக. செல்வகணபதி கூறுகின்றார்.

மொழிநடை

மொழியை இலக்கியப் படைப்பிற்காகப் பயன்படுத்தும் ஒவ்வொரு

படைப்பாளரும் தங்களுக்கெனத் தனித்தனி உத்திகளை அமைத்துக் கொண்டு

படைக்கின்றார்கள். மொழிநடைக்கான கோட்பாடு ஒன்றாக இருந்தாலும் மொழியைப்

பயன்படுத்தும் முறை வேறுவேறாக இருக்கும்.

“நடை என்பது ஒரு கலைப்படைப்பின் உயிரோட்டமாக அமையும்

இயல்புடைய ஒழுங்குமுறையாகும். படைக்கப்படும் ஒவ்வொன்றும்

தலையும் காலும் உடலுள்ள ஓர் உயிரினம் போலப் படைக்கப்படுதல்

வேண்டும்”6

என்னும் சு.பாலச்சந்திரன் கருத்து இவண் நோக்கத்தக்கது.

மொழிநடையின் சிறப்பு

மொழியின் சிறப்பைத் தொன்றுதொட்டு கூறுகையில் மொழி இல்லையேல்

சமுதாயம் இல்லை. மனித சமுதாயத்தின் வாழ்வு, வளர்ச்சி, இவற்றுடன்

மொழிக்குரிய தொடர்பு மிகப் பெரிது. சமுதாய இயக்கத்துக்குரிய அடிப்படையான

செய்தித் தொடர்புக் கருவியாக மொழி செயல்படுகிறது. அத்துடன் மனித இனத்தின்

சமுதாய அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் காட்டவல்லதாகவும்

அமைகின்றது.

“மொழி சமுதாயத்தின் இயல்பான நிலையைச் சூழலைப்

பின்னணியைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி”7


87

என்று கூறுவர் அ. அழகிரிசாமி. மொழி சமுதாயம் தொடர்பான ஒரு கருவியாக

அமைகின்ற காரணத்தால் சமுதாய வாழ்வு மற்றும் நாகரிகப் பண்பாட்டு

வளர்ச்சியோடு ஒருங்கிணைந்து செல்லக் கூடியதாக அமைகிறது. சமுதாய

வாழ்விலிருந்தும் மனித மனங்களிலிருந்தும் பிறக்கும் இலக்கியக் கலை வடிவம்

மொழியின் மூலமே வெளியிடப்படுவதால் இலக்கியமும் மொழியும் இருவேறு

கூறுகளாகப் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஒன்றையொன்று சார்ந்து

நிற்பனவாகின்றன.

மொழியின் பேச்சு வழக்கு தோன்றிப் பலகாலம் கழித்தே மொழியின்

இலக்கிய வழக்கு தோன்றியது. இலக்கிய வழக்கு மொழி என்பது பேச்சு மொழி

வழக்குகளை உள்வாங்கிக் கொண்டு மொழியை மெருகேற்றிப் புதுப்புனைவுகளைக்

கூட்டி அலங்கார ஆடம்பரங்களைப் புனைந்து கொண்டு உருவான ஒன்றாகும்.

ஆதலினால் பேச்சு மொழிக்கும் இலக்கிய மொழிக்கும் இடையே இடைவெளி

தோன்றலாயிற்று. இலக்கியமொழி என்பது தயாரிப்பு மொழி என்றும் பேச்சு

மொழியை இயற்கையான மொழி என்றும் கூற வேண்டும்.

பேச்சு மொழி

தமிழ்மொழியில் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு என்ற இரண்டன்

அடிப்படையில் இலக்கியப் பிரிவினையும் மொழிப் பிரிவினையும் நிகழ்ந்திருக்கிறது.

இலக்கிய மொழி மேலான மதிப்புடையது என்றும் பேச்சு வழக்கு அதற்கு அடுத்த

நிலையினது என்பதுமான கருத்து நிலவி வருகிறது.

ஆரம்பகால உரைநடை இலக்கியங்களில் படைப்பாளிகள் இலக்கியத்

தமிழையே கையாண்டனர். தூய தமிழ்ச் சொற்களால் எதுகை, மோனை

நயங்களுடன் அடுக்குமொழிச் சொற்களுடன் அலங்காரத் தமிழில் படைத்தனர்.

பின்னர் கதை நிகழும் இடத்தினைச் சமுதாய அமைப்பினை இயல்பாகக் காட்ட

அவ்வப் பகுதி அல்லது சமுதாயத்தில் வழங்கும் பேச்சு வழக்கு மொழியைக்

கையாண்டனர்.
88

“தமிழ் என்ற மொழித் தொகுதியானது பல்வேறு பேச்சு மரபுகளின்

பொதுக்குறியீடு என்ற அளவிலேயே இயங்கும் ஒன்று. இந்தத்

தளத்தில் தமிழ் என்பது ஒரு மொழி அல்ல என்பதும் அது பல்வேறு

பேச்சு மொழிப்பாடுகளின் தொகுப்புநிலை”8

என்பதுமான சிந்தனைகள் நிலவத் தொடங்கின.

“எல்லா பேச்சு வழக்குகளும் ஒவ்வொரு வகையின் முழுமையான

மொழியமைப்பாகவே உள்ளன என்பதும் எழுத்து மரபு என்பதும் கூட

ஒரு வகை மொழி வகையாக அமைகிறது. பேச்சுத் தமிழைப் பொது,

பேச்சு வழக்கு என்ற நிலைகளில் வகைப்படுத்துவர்.”9

தமிழ் உரைநடையின் வரலாற்றை ஆய்ந்துப் பார்த்தால் மக்களை முன்னிறுத்திய

எழுத்து மொழி பேச்சுப் பாங்கானதாக இருப்பதை அறியமுடியும். சங்ககாலத்து

உரைநடையென்று சங்கக் கவிதைகளுக்கு எழுதப்பட்டிருக்கும் குறிப்புரைகள் தவிர

வேறெவற்றையும் நாம் காணமுடிவதில்லை. எனவே பேச்சுப்பாங்கின் கலப்புப் பற்றி

அறியமுடியவில்லை. பல்லவர், பாண்டியர், பிற்காலச் சோழர் காலங்களின்

கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் மக்களுக்காகத்தான் செய்திகள் என்பதால்

பேச்சுப்பாங்கான எழுத்து நடையே இடம்பெற்றுள்ளது. மக்களுக்கான சமயப் பிரச்சார

உரைகளிலும் இந்தப் பேச்சுப்பாங்கு தன்மையைக் காணமுடிகிறது.

16 ஆம் நூற்றாண்டு கிறித்தவர்கள் பேச்சுப்பாங்கான தமிழில் எழுதினார்கள்.

இந்தப் போக்கிலேயே பரமார்த்தகுரு கதையும் அமைந்தது. ஆனந்தரங்கம்

பிள்ளையின் பேச்சு வழக்குத் தன்மை நிறைந்து காணப்படுகிறது. இராமலிங்க

அடிகள், வராசாமி
ீ செட்டியார் போன்றவர்களின் உரைநடையிலும் இந்தப் பேச்சுத்

தன்மை கலந்திருக்கிறது. பேச்சுநடையின் விறுவிறுப்பையும் உயிர்த்துடிப்பையும்

எழுத்துநடை பயன்படுத்திக் கொண்டது.


89

நாவல், சிறுகதை போன்றவற்றின் நடையமைப்பிலும் இந்தத் தன்மை ஓரளவு

இருந்தது. தொடக்ககால எழுத்தாளர்களான வேதநாயகம்பிள்ளை போன்றவர்களது

எழுத்து நடையில் நாடோடிக் கதையினதும் பாகவத மரபினதுமான பேச்சுப் பாங்கு

இடம்பெற்றது. வட்டாரப் பேச்சுப் பாங்கை கலந்து எழுதுவதும் காணப்பட்டது.

புதுமைப்பித்தன் வட்டார மொழியின் சாத்தியத்தை முழுமையாகப் புரிந்து கொண்டு

அதைத் தம் படைப்புகளில் அனுபவ வெளியீட்டிற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

தயாரிப்பு மொழியைப் புறக்கணித்து வட்டார பேச்சு வழக்கிற்கு இடமளித்தார். இந்த

வகையில் ஆர். சண்முகசுந்தரம் வட்டார வழக்கின் முழுச்சாத்தியத்தைத் தம்

எல்லையாகக் கொண்டு படைத்தார். தி. ஜானகிராமனிடமும் இந்தப் போக்கு

காணப்பட்டது. கு. அழகிரிசாமியும் தம் கரிசல் மண்ணின் வழக்கைப் பயன்படுத்தி

கதை படைத்தார். இப்படி முன்னோடியான எழுத்தாளர்களின் வரிசையில்

சு. தமிழ்ச்செல்வி தம் சொந்த மண்ணின் வட்டார வழக்கு மொழியில்

கதைமாந்தர்களின் எதார்த்த நிலையை உரையாடல்களின் மூலம் பேச்சு நடைக்குப்

பொருத்தமாக அமைத்திருக்கிறார். கதைக்களம் மற்றும் தொழில் அடிப்படையில்

மக்களின் எதார்த்த பேச்சுகள் முழுவதும் கதைக்கும் கருத்துக்கும் வலிமை சேர்க்கிறது.

‘கீ தாரி’ என்னும் நாவலில் ஆடுகளைக் கிடைபோடும் இடையர்கள் பிறர்

வயலில் உள்ள பயிர்களை மேய்ந்து விடாதபடி கவனமாக ஓட்டி வருவர். ஆடுகள்

தாம் பேசுவதைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு அவ்ஆடுகளுக்குக்

கட்டளையிட்டுக் கொண்டே ஓட்டி வருவர்.

“ச்சூ... ச்சூ... தே... தே என ஆடுகளை வாயால் விரட்டுவதோடு கையில்

வைத்திருக்கும் கம்பால் தரையைத் தட்டி எச்சரிக்கை செய்வர்.

யாரும் மேட்டுல ஏறக்கூடாது. எல்லாரும் படுவயிலயே வாங்க

யாராவது ஏறி பயிருல வாயவக்க நெனச்சிய... அப்புறம் பாத்து

குடுங்க. நான் என்ன செய்யிறனனு. இந்த தடிக்கம்பு அடி

எப்படியிருக்குமுன்னு அப்பறந்தாற் தெரியும் ஒங்களுக்கு”10


90

என்று கரிச்சா ஆடுகளை ஒட்டி வருவதை இந்நாவலின் தொடக்கத்தில் காட்டுகிறார்

ஆசிரியர். இது இடையர்களின் பேச்சு மொழியாகப் பிரதிபலிக்கிறது.

‘அளம்’ நாவலில் கடல்கடந்து வேலைக்குப் போன சுப்பையன் நீண்ட

வருடங்களாகியும் வரவில்லை. ஊர் சனங்களெல்லாம் வெவ்வேறு விதமாகப் பேசும்

பேச்சு சுந்தராம்பாள் மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இதனால் சாமி குற்றமாக

இருக்கும் எனச் சுப்பையனின் குலதெய்வம் திருத்துறைப்பூண்டியில் இருக்கும்

நொண்டி வரனுக்கு
ீ ஆடி மாதம் பூசை செய்தனர். பூவரசு மரத்தில் சூடிக்

கொண்டிருக்கும் நொண்டி வரனுக்கும்,


ீ ஆவுத்திகாத்தானுக்கும் சாமியாடி விரட்டிக்

கொண்டிருந்தனர். பாலாப்பிள்ளை சாமியாடி முடித்தார். அதை சு.தமிழ்ச்செல்வி

பேச்சுமொழியில்,

“ம்... ம்... புடி... புடி... ம்... என்று அவள் கையில் விபூதியை அள்ளிப்

போட்டது”11

என்று குறிப்பிடுகின்றார்.

‘மாணிக்கம்’ நாவலில் கடலுக்கு மீ ன்பிடிக்கப் போன மாணிக்கமும் அவனது

மகன் நாஞ்சியும் வெவ்வேறு திசைகளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த

காற்றுடன் வானம் கறுத்தது. மழை வரும் என நினைத்து மாணிக்கம் நாஞ்சியைத்

தூரத்திலிருந்து சத்தம் போட்டு கூப்பிட்டான். அதை ஆசிரியர் பேச்சுமொழியில் மிக

அழகாய் பயன்படுத்தியிருக்கிறார்.

“ஏ... தம்பியோ... வ்... வ்... வ்...”12

என்று அவர் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டு நாஞ்சியும் பதிலுக்குப் பேச்சு மொழியில்,

“வா... றே... ம்... ம்பா... நீங்க போங்க

க... க...”13

என்ற சத்தம் மாணிக்கம் காதில் விழுந்ததால் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தார்.


91

‘கற்றாழை’ நாவலில் கதைத் தொடக்கத்தின்போது மணிமேகலையோடு மற்ற

சிறுவர்களும் மாடுமேய்க்கச் சென்றனர். அப்போது வாய்க்காலில் சேற்றைக் குழப்பி

வடு
ீ கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அக்காட்சியைச் சிறுவர்களின்

விளையாட்டுப் பாடலைக் கொண்டு அவர்களுக்கேற்ற பேச்சு மொழியில் ஆசிரியர்

கூறுகின்றார். விளையாட்டு முடிந்தவுடன் வட்டுக்குத்


ீ திரும்பும் சூழலில்,

“ச்சூ... ச்சூ... வாங்க எல்லோரும் போவம்”14

என்று எல்லோரையும் கூப்பிடுவதைப் போல் பாசாங்கு செய்து அழைத்ததையும்

ஆசிரியர் தம் நாவலில் எடுத்துரைக்கின்றார்.

இவ்வாறு சு. தமிழ்ச்செல்வி நாவல்களில் பேச்சுமொழி இடம்பெற்றுள்ளதை

அறியமுடிகிறது.

வட்டார மொழி

மொழியின் துணை இல்லாமல் ஒரு கருத்தை நினைத்துப் பார்ப்பது என்பது

மனிதனால் இயலாத ஒன்று. படைப்பாளி தாம் உணர்ந்த அனுபவமாக எழுத்தில்

தரும்போது அங்கு மொழி என்பது ஆற்றல் வாய்ந்த ஒரு கருவியாக அமைந்து

விடுகிறது.

குறிப்பாக வட்டார இலக்கியம் படைக்கும் படைப்பாளிக்கு அவ்வட்டார

மொழியைக் கையாண்டு தமது படைப்புகளைத் தருவது என்பது படைப்பின்

அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகவே அமைந்துவிடுகிறது. ஒரு குறிப்பிட்ட வட்டார

மக்களை, மற்ற வட்டாரங்களில் வாழும் மக்களின்றும் வேறுபடுத்திக் காட்டுவது

அவர்களது பேச்சுமொழியாகும். அவர்கள் பேசுவதை எழுத வேண்டும் என்ற

உணர்வினின்று தோன்றியது வட்டார இலக்கியம். ஆதலின் வட்டாரப் படைப்புக்கும்

யதார்த்த தன்மை கொடுக்கும் மூலப்பண்புகளில் வலுவானதாக வட்டார மொழிநடை

அமைகிறது. கதைக்கு இயல்பான தோற்றம் கொடுத்து நடப்பியல் இலக்கியம்

படைக்க முனையும்.
92

“எழுத்தாளன் தன்னுடைய கதைக்களனில் நிகழ்வதை அப்படியே

வெளியிடுவதற்கு அக்களனில் புழக்கத்தில் இருக்கும்

மொழிநடையைப் பயன்படுத்துகிறான். இந்தக் களமொழி அல்லது

வட்டார மொழியில் பொதுவாக அவ்வட்டாரப் பேச்சு நடை

இருக்கிறது”15

என்கிறார் ஆய்வாளர் விஜயலெட்சுமி. இதனையே,

“யதார்த்தவாதம் சிறக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு

பயன்படுத்தப்படுகிறது”16

என்கிறார் தி.முருகன். இந்த வகையில் இலக்கிய மொழி, பேச்சு மொழி என்ற

நிலையைக் கடந்து வட்டார இலக்கியங்களில் வட்டார மொழி என்பது

எழுத்தாளர்களின் படைப்புகுறி படைப்பு மொழியாக அமைகிறது. அவ்வரிசையில்

சு.தமிழ்ச்செல்வி தம் சொந்த மண்ணின் வட்டார வழக்கு மொழியைக் கையில்

கொண்டு வெவ்வேறு களங்களுக்குள் தன் படைப்புகளைப் படைத்திருக்கின்றார்.

திருத்துறைப்பூண்டியிலிருக்கும் கோவிந்தனின் அக்கா மகன்

பக்கிரிசாமிக்குப் பெரிய வசூரி கண்டிருந்தது. பக்கிரிசாமியைப் பார்க்க கோவிந்தன்

போகும் போது இருட்டி விட்டது. இரவில் போகும் போது நடு இரவில் ஏன் இங்கு

வந்தாய் என்று அவன் அக்கா கேட்கத் தொடங்கினாள். கோவிந்தன் கோபித்துக்

கொண்டான். அதனால் அவனைச் சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.

“நீ கோச்சிக்கிடாதப்பா சம்மந்தி வந்தா கொம்பேறி பாக்குமாங்

மகமாயி ஒலிக்கம் வசூரி பாத்துடக் கொடாதேன்னு தாங் அப்படிச்

சொன்னாங்க”17

என்று சமாதானப்படுத்தினாள்.

‘கற்றாழை’ நாவலில் மணிமேகலையும் தங்கை வளர்மதியும் மேலத்தெரு

அம்மாச்சி திடலுக்கு விறகு பொறுக்கப் போனார்கள். அப்போது இருவருமே பேசிக்

கொண்டிருக்கையில்,
93

“பொறந்து காட்டுல மரத்துக்கு கீ ள நெறயா முள்ளு கெடக்கும்

இருட்டுக்குள்ள முள்ள பாத்தாகாலு வய்க்க முடியும்? பொறாந்து

பொறுக்கியாற முள்ளெல்லாம் ஈட்டி ஈட்டியாட்டம் இருக்கும்

நறுக்குன்னு ஏறிடும்”18

என்று விறகு பொறுக்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்தார்கள்.

‘மாணிக்கம்’ நாவலில் செல்லாயிக்குப் பிரசவம் பார்த்துவிட்டுக் கூடவே

எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டாள் சரசு. தம் கணவனிடம் சவுக்காரக் கட்டி

வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பினாள்.

“இஞ்சேருங்க அவ்வோ ரெண்டியரும் கௌம்புறவொ

குளிக்கிறத்துக்கு ரெண்டியருக்கும் ஆளுக்கொரு சவுக்காரக்கட்டி

வாங்கியாந்து குடுங்க”19

என்று வட்டார மொழியைக் கொண்டு பேச்சு நடையை விவரித்துள்ளார்.

‘அளம்’ நாவலில் சுந்தராம்பாள் தன் கணவன் சுப்பையனை வேலைக்குப்

போகச் சொல்லி காலையிலேயே வற்புறுத்தினாள். அதற்குள் சுப்பையன்,

“செவ்வாச்சந்தக்கி காளமாட்ட ரெண்டையும் ஒட்டிக்கிட்டு

போவப்போறங் ஒப்புறான... வுட்டன் வுட்டன் காளமாட்ட

விக்கப்போறியளா? அதயும் வித்துப்புட்டு இஞ்ச யாரு மசுர

புடுங்கிக்கிட்டு நக்காந்திருக்கு போறிய”20

வேலை வெட்டிக்குப் போகாமல் வட்டில்


ீ இருந்த மாடுகளை ஓட்டி விற்கப்

போவதாகச் சுந்தராம்பாளிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தான் சுப்பையன்.

‘கீ தாரி’ நாவலில் ராமு கீ தாரியும் இருளாயும் ஓர் இடத்திலும்

மற்றோரிடத்தில் வெள்ளைச்சாமியும் அவனுடைய அண்ணனும் ஆடு மேய்த்துக்

கொண்டிருந்தனர். திடீரென்று ஓர் நாள் வெள்ளைச்சாமி தன் அப்பா அம்மாவைப்


94

பார்க்க வந்திருந்தான். அப்போது இருளாயி நீ மட்டும்தான் வந்திருக்கிறாயா

அண்ணன் வரவில்லையா என்று கேட்டாள். அதற்கு வெள்ளைச்சாமி இருளாயிடம்

கூறும் செய்தியை வட்டார வழக்கு மொழியில் ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி

கூறுவதை,

“காத்தும் மளயுமாருக்கு, ரெண்டு நாளுப் போயி வாறேன்னாக.

வரட்டும் வரட்டும். எப்ப யாவும் வருதோ அப்பயே வரட்டும். இப்ப

யாரு இனனக்கே வரணுமுண்டு பாக்கு வச்சிக்கிட்டு காத்திருக்குறவக

என்றாள் பெருமூச்சு விட்டபடி”21

என்ற கீ தாரியின் பேச்சுமொழி மூலம் அறியலாம்.

‘அளம்’ நாவலில் ராமையாபிள்ளை வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு

வந்திருந்தார். சுப்பையன் வேலைவெட்டி எதுவுமில்லாத காரணத்தினால்

ராமையாவிடம் வெளிநாட்டுக்குத் தானும் வருவதாகப் பலமுறை கூறியிருந்தான்.

அதைக்கேட்ட அவர் நீ புள்ளக்குட்டிக்காரன் அங்கு வந்து ஏன் கஷ்டப்படப் போகிறாய்.

இங்கயே இருந்து வேலை பார்க்கலாமே என்று கூறுகிறார். அதற்குச் சுப்பையன்

பேசுவதை ஆசிரியர் வட்டார வழக்கில் மிகவும் நேர்த்தியாகக் கூறுகின்றார்.

“நா வாரண்ண முடிவு பண்ணுனது பண்ணுனது தாண்ண. இனிமே

அதுல மாத்தமில்ல வூட்டுல அதக் கேட்டாலும் இப்புடித்தாண்ன

சொல்லும், இஞ்சருந்து ஒண்ணும் வேல செய்ய முடியலண்ண.

கூலிவேலக்குப் போறதுக்கும் ஒத்துவல்ல. ஒக்காந்து திங்கிறதுக்கும்

ஆயா அப்பந் தேடிவய்யக்கல. கண்ணு காணாத சீமயில சாணியள்ளிக்

கொட்டுனாத்தாங் யாருக்குத் தெரியப் போவுது நா வரண்ண”22

என்று கெஞ்சிய நிலையில் ராமையாவிடம் சுப்பையன் மனம் இளகி வட்டாரச்

சொற்களைப் பயன்படுத்திப் பேசுகிறான்.


95

‘மாணிக்கம்’ நாவலில் கடலுக்கு மீ ன்பிடிக்கச் சென்ற மாணிக்கத்தையும்

அவன் மகன் நாஞ்சியையும் காணாது தவித்தாள் செல்லாயி. சிறிது நேரத்திற்குப்

பிறகு இரண்டு பேரையும் பார்த்தவுடனே அவள் மனசுக்கு நிம்மதியாக இருந்தது.

ஆனாலும் நாஞ்சியைப் பார்த்துக் கோபமாக வெடுக்கெனப் பேசி அவன்மீ து

பாய்ந்தாள். அதற்கு அவன்,

“ஒரு வத்தயுந்தாம் தெக்க போவலாய முல்ல நீங்க ரெண்டியரும்

மட்டும் எதுக்குப் போவணும்

பேசாம இரும்மா வந்ததும் வராதுமா யாங் கரயிற அண்டாங்காக்கா

யாட்டம் என்றான் நாஞ்சி”23

மகனுக்கும் தாய்க்கும் இடையே நடந்த போராட்டத்தை அவ்வூரின் வட்டார வழக்கில்

பேச்சுமொழியில கூறுவது ஆசிரியரின் திறமையாகும்.

‘கற்றாழை’ நாவலின் கதைமாந்தர் மணிமேகலை. அவள் பள்ளிக்கூடம் போய்

படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை அப்பா தடுத்து விடுகிறார். அதனால் படுத்த

படுக்கையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று அவள் அடம்பிடித்தாள். வட்டு


வேலைகளைச் செய்ய மாட்டேன் என்று தன் அக்கா பூரணத்திடம் சண்டை

போட்டாள். அதைக்கண்ட அவள் அம்மா பாக்கியம் அவர்களைத் திட்டுவதை,

“இந்த மூட்டயத் தூக்கி முதுவுல வச்சிக்கிட்டுதான் ராமுச்சூடும்

கெடந்தியா? ஊத்தவாய களவுனியாங்கச்சி நீ? யாம் இப்படி

பொச்செரிப்பு புடிச்சி அலயிற என்று வாயிக்கு வந்தபடி பேசித்

தீர்த்தாள்”24

என்று நாவலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை பள்ளிக்கூடம் போகக் கூடாது என்று மூத்தவள் பூரணமும்

சண்டை போட்டாள். அதனால் அவர்கள் இருவருக்கும் நடந்த சண்டையைப் பார்த்து


96

பாக்கியம் பூரணத்திடம் எதிர்த்து சத்தம் போட ஆரம்பித்ததை வட்டார மொழியில்

நாவலாசிரியர் கூறுகின்றார்.

நடை

எழுத்தாளர் எழுதுகிற விதத்தை ‘நடை’ என்று குறிப்பிடுகிறோம். நடையில்

ஓவ்வொரு எழுத்தாளருக்கு ஓவ்வொரு விதமான தனித்தன்மை இருக்கிறது.

“வெள்ளப் பெருக்கைப் போல எழுதும் கல்கியின் நடை நவரசம்

ததும்பும். உரையாடல்களில் மெல்லிய நகைச்சுவையும்,

உயிர்த்துடிப்பும் இருக்கும்.

புதுமைப்பித்தன் நடையில் சாடல் தன்மை கொண்ட வன்மை

இருக்கும்.

அகிலன் நடையில் லட்சிய வாதம் புரிகின்ற தொனி இருக்கும்

நா. பார்த்தசாரதியிடம் கவிதை நடை வெளிப்படும்.

மு.வ. நடையில் எளிமையும் அறிவுரைத் தன்மை இருக்கும்.

ராஜம் கிருஷ்ணன் நடையில் பரவசமும் குமுறலும் வெளிப்படும்”25

என எழுத்தாளர்கள் பலரது நடையின் தனித்தன்மையைப் பற்றி மதிப்பீடு செய்வர்.

“தெளிவுகள், அனுபவங்களின் பாதிப்புகள், மொழியின் கட்டமைப்பு

ஆகியன படைப்பாளிகளுக்கிடையே நடைவேறுபாட்டுக் கூறுகளுக்குக்

காரணமாகின்றன. இந்த வேறுபாடே ஒரு படைப்பாளியின்

தனிநடையாகிறது”26

என்கிறார் ஜெ. நீதிவாணன்.

ஒருவரது எழுத்தைப் படித்தாலே அந்த எழுத்துக்குரிய எழுத்தாளரின்

பெயரைப் படிக்காமலேயே அவரை அடையாளம் காணும் வகையில் நடையில்


97

தனித்துவம் வேண்டும். இந்தத் தனித்துவத்தைக் கொண்டு படைப்பாளியை

இனங்காணவும் படைப்பாற்றலை அளவிடவும் முடிகிறது.


98

நடைக்கூறுகள்

நடைக்கூறுகள் இரண்டு பண்புகளையும் பெற்றிருக்கும். ஒன்று

ஆற்றல்மற்றொன்று கருத்து. படிப்போர் கவனத்தை ஈர்ப்பது. பொருளைத் தெளிவாக

உள்ளத்தில் செலுத்துவது கருத்து நுட்பமானது பொருளைச் சிறிதும் பிழையின்றித்

துல்லியமாக உணர்த்துவதாகும். உணர்ச்சியில் பல்வேறு வகைப்பட்ட நுட்பம்

வாய்ந்தத் தன்மைகளை உள்ளவாறே உணர்த்தும் திறமுடையது.

“கரு-உரு ஆகியவற்றுக்கிடையே காணப்படும் உறவு எத்தகைய

உத்திகளால் பின்னப்படுகிறதோ அவ்வுத்திகளின் ஒட்டுமொத்தத்தை

நடைக்கூறுகளாக ஏற்றுக் கொள்ளலாம்”27

என்னும் ஜெ.நீதிவாணன் கூற்றின்படி நோக்கினால் நடை என்பது சிறுகதையின்

கட்டமைப்புடன் உறவுடையது என்பது புலனாகிறது.

“உரையாடல், தொகையுரை, வருணனை என்பனவற்றை நடையின்

கூறுகளாகப் பகுத்துக் கூறுவர்”28

என்று மா.இராமலிங்கம் கூறுகிறார்.

வட்டார இலக்கியங்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது வட்டார

மொழியில் அமைந்த பேச்சு வழக்கு, குறிப்பு மொழி, ஒலிக்குறிப்பு ஆகியவை

உள்ளடங்கிய உரையாடல் அமைவது. ‘தொகையுர’ என்பது படைப்பாளி

எடுத்துரைப்பது. இதில் வெளிப்படும் நடை படைப்பாளி வாழும் காலகட்டத்தில் உள்ள

மொழியின் பொது வச்சில்


ீ அமையும். வருணனைப் பகுதியில் படைப்பாளியின்

தனித்த மொழித் திறமைகள் வெளிப்படும்.

சு.தமிழ்ச்செல்வியின் படைப்புகள் அனைத்தும் ஒரே வட்டார மொழியில்

மக்களின் எதார்த்த பேச்சு நடையைக் கொண்டு கடினமில்லாமல் படிப்பவர்க்கு

எளிமையாகப் புரியும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனும் வாழ்வில்


99

எதிர்நோக்கும் நிலைகளை வெவ்வேறு சூழல் களங்களில் உரையாடல்கள் மூலமாக

கதைப் பின்புலத்தைப் பேச்சு நடையாகவும், இயல்பாகவும் படைத்திருக்கின்றார்.

‘கற்றாழை’ நாவலில் மணிமேகலை வயல் காட்டிற்குப் புல்லறுக்கப்

போகிறாள். கஷ்டப்பட்டு அதிகமான புல்லை அறுத்துக் கூடையில் அள்ளுகிறாள்.

அதில் புல்லோடு பாம்பையும் சேர்த்து அள்ளுகிறாள். கூடையைத் தூக்கிக் கொண்டு

வரும்போது பாம்பு அவளின் முன் விழுந்து அவளைத் துரத்துகிறது. சேற்றில்

புதைந்து கிடக்கும் கருவை முட்களும் நத்தை ஓடுகளும் அவளுடைய

கால்களிரண்டிலும் குத்திக் கிழிக்கின்றன.

“அவள் கால்களிலிருந்து பெருகும் ரத்தம் சேற்றோடும் தண்ண ீரோடும்

கலந்து தரிசு முழுவதும் சிவப்பாகிறது. வளர்ந்து நிற்கும் வக்காப்

புற்களும் அறுத்த அடித்த தட்டைகளும் அந்த இரத்தத் தண்ண ீரை

உறிஞ்சி ரத்தச் சிவப்பாகின்றன”29

இயற்கையோடு கதைமாந்தரையும் இணைத்த அவள் சோகத்தின் நிலையைப்

படிப்பவர்களின் மனத்தில் எளிய நடை உத்தியைக் கொண்டு பதிவு செய்கிறார்.

‘அளம்’ நாவலில் சுந்தராம்பாளும் அவளுடைய மகள்கள் அஞ்சம்மாளும்,

வடிவாம்பாளும் உப்பளத்தில் வேலை செய்த களைப்பினால் சற்று

ஓய்வெடுத்தார்கள். இரவு நேரம் நெருங்கியது. கடலும் கடல் சார்ந்த உப்பளமும்

நிலவு வெளிச்சம் குறைவாக இருந்த காட்சியை நாவலாசிரியார் தனக்கே உரிய

எளிய நடையில் விளக்குகின்றார்.

“பாத்திகளில் நிலா வெளிச்சம்பட்டு மின்னிக் கொண்டிருந்தன.

கடலிருந்து வசிய
ீ காற்று சில்லென்று உடம்பில் பட்டுச் சென்றது”30

அச்சூழலைப் பார்த்து வடிவாம்பாள் அளத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘கற்றாழை’ நாவலில் மணிமேகலை பிரசவத்திற்காகத் தாய் வட்டிற்கு


வருகிறாள். அங்கு அவளுக்குக் குழந்தை பிறந்தது. அதைப் பார்க்க செல்வராசும்


100

வந்திருந்தான். குழந்தையை அவனிடம் காட்டக் கூடாது என்று வலுக்கட்டாயமாகப்

பேசினாள் மணிமேகலை. செல்வராசும் பதிலுக்குப் பேச ஆரம்பித்தான். நான் பெற்ற

பிள்ளையைப் பார்க்கக் கூடாது என்று கூறுவதற்கு அவளுக்கு என்ன

உரிமையிருக்கிறது என்று எதிர்த்து வாதாடினான். அதற்கு மணிமேகலை கூறுகின்ற

செய்தியை ஆசிரியர் இச்சமூகத்தில் ஆண் வர்க்கதீதிற்கு ஓர் முற்றுப்புள்ளி வைப்பது

போல் எழுதுகின்றார்.

“குடிபோதையில் வந்து என்ன ஏதுன்னு கொடத் தெரியாம

மேலவுழுந்து எழும்பிப் பெயிட்டா மட்டும் போயிருமா?

அதனாலேயே புள்ள அதுக்குச் சொந்தமாயிருமா? இதுக்கெல்லாம்

நான் ஒத்துக் கிடமாட்டன் புள்ள எனக்குத் தான் சொந்தம் எனக்கு

மட்டும்தான் சொந்தம்”31

என்று மணிமேகலை வாயிலாக எளிய நடையில் ஆண் வர்க்கத்தைச் சாடுகின்றார்.

தொகுப்புரை

படைப்பாளரின் வெற்றிக்குக் கதைக்கரு, கதைச்சூழல், இடஅமைவு,

பின்புலம், கலைநுட்பம் எனும் கூறுகள் ஒருங்கே ஒரு கதையில் அமையும் பொழுது

அக்கதை வெற்றி பெறுகிறது. இருப்பினும் கதைமாந்தர் வாழும் சூழலுக்கேற்பவும்

அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த வட்டார மொழிகளை நேர்த்தியாகப் படைப்பாளன்

படைக்கும் போது ஒரு படைப்பாளன் மிகப் பெரிய வெற்றி பெறுவான் என்பது

உண்மை.

அவ்வகையில் சு.தமிழ்ச்செல்வி ‘கீ தாரி’ புதினத்தில் ஆடு மேய்ப்பவர்களின்

மொழி, மீ னவ மக்களின் பேச்சு வழக்கு நடை, புதினங்களில் இடம்பெறும் வட்டார

மொழி, பழமொழிகள், வருணனைகள் போன்றவற்றை இயல்பாகவே தம்

கதைக்கேற்ப படைக்கும் படைப்பாளுமையைப் பெற்றவர் என்பதை அறியமுடிகிறது.


101

சான்றெண் விளக்கம்

1. ஞா. தேவநேயப்பாவாணர், முன்னுரை, பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின்

சீர்கேடு, ப. 1.

2. சு. சக்திவேல், தமிழ்மொழி வரலாறு, ப. 25.

3. ஞா. தேவநேயப்பாவாணர், பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் சீர்கேடு, ப. 1.

4. ரா. சீனிவாசன், மொழியியல், ப. 1.

5. சணமுக. செல்வகணபதி, மொழிவரலாறும் மொழியியலும், ப. 1.

6. சு. பாலச்சந்திரன், இலக்கியத் திறனாய்வு, ப. 121.

7. அ. அழகிரிசாமி, காலந்தோறும் தமிழ், ப. 13.

8. பிரேம், ரமேஷ் (தொ.ஆ.), கி.ராஜநாராயணன் எழுத்துலகம், ப. 7.

9. கோ. பாலசுப்பிரமணியம், வாசகர் நோக்கில் வட்டார நாவல், 18-வது

கருத்தரங்க ஆய்வுக்கோவை, தொகுதி 2, ப. 224.

10. கீ தாரி, ப. 9.

11. அளம். ப. 47.

12. மாணிக்கம், ப. 12.

13. மேலது., ப. 12.

14. கற்றாழை, ப. 88.

15. விஜயலட்சுமி இராஜாராம், வட்டார இலக்கியமும் கி.ராஜநாராயணனும், ப. 93.

16. தி. முருகன், தமிழில் வட்டார இலக்கியம் ஒரு பொதுப்பார்வை, 20 ஆம்

ஆண்டு இந்திய ஆய்வுக்கோவை, தொகுதி 4, ப. 527.

17. அளம், ப. 46,

18. கற்றாழை, ப. 605.

19. மாணிக்கம், ப. 111.

20. அளம், ப. 8.
102

21. கீ தாரி, ப. 46.

22. அளம், ப. 5.

23. மாணிக்கம், ப. 19,

24. கற்றாழை, ப. 25.

25. மு. சுதந்திரமுத்து, படைப்புக்கலை, ப. 113.

26. ஜெ. நீதிவாணன், நடையியல், ப. 148.

27. மேலது., ப. 151.

28. மா. இராமலிங்கம், விடுதலைக்கு முன் புதிய தமிழ்ச் சிறுகதைகள், ப. 174.

29. கற்றாழை, ப. 45.

30. அளம், ப. 214.

31. கற்றாழை, ப. 198.


103

முடிவுரை

“சு. தமிழ்ச்செல்வி படைப்புகளில் குடும்பம்” என்னும் தலைப்பில் ஒவ்வொரு

இயலிலும் இறுதியில் கண்ட மெய்மைகள் ஆய்வு முடிவுரையாக தரப்பட்டுள்ளது.

ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் நாவல், சிறுகதை முதலான உரைநடை

இலக்கியங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. மானுட வாழ்வின்

சுகதுக்கங்களை, புனைகதை இலக்கியங்கள் நடப்பியல் போக்கில்

எடுத்துரைக்கின்றன. வாழ்வியல் மெய்ம்மைகளைக் கற்பனை கலந்துகூறும்

இவ்வாறான புதினங்களின் மையமாக மானுட விடுதலையும், அடிமை ஒழிப்பும்,

மானுட உரிமையுமே அமைந்திருப்பது தெளிவாகிறது.

‘கலை கலைக்காகவே’, ‘கலை வாழ்க்கைக்காகவே’ என்ற இருவேறு

இலக்கியக் கொள்கைகள் வழக்கில் உள்ளன. இவற்றில் பின்னவற்றில்கொள்கைப்

பிடிப்புள்ளவராகச் சு. தமிழ்ச்செல்வி திகழ்கிறார்.

உரைநடையில் அமைந்த புதினங்கள் மனித வாழ்வின் அவலங்களை

எடுத்துரைப்பதற்கேற்ற வடிவமாகத் திகழ்கின்றன. இன்றைய சமூகப் புதினங்கள்,

வாழ்வியல் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதோடு நின்றுவிடாமல் அதற்கான

காரணங்களையும், உரிய தீர்வுகளையும் எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன.

மானுட வாழ்வின் பிரச்சினைகளைக் காட்டுவதோடு நில்லாது அதற்கான

காரணத்தையும், தரவுகளையும் சொல்லும் படைப்பாளராகச் சு. தமிழ்ச்செல்வி

திகழ்கிறார்.

சு. தமிழ்ச்செல்வியின் படைப்புகள் பல்நோக்குடையனவாகத் திகழ்வதற்கு

அவரது பன்முகப்பட்ட ஆளுமையே காரணமாக அமைந்துள்ளது. தமிழ் இலக்கியப்

பரப்பில் தனக்கேயுரிய தனித்துவமான ஆளுமையைச் செலுத்துவதற்கு அவரது

குடும்பச்சூழல், கல்வி பெற்றுக் கொண்ட சூழல், அவர் தொடர்பு கொண்டிருந்த

இயக்கங்கள், அவர்மீ து ஆளுமை செலுத்திய அமைப்புகள் போன்ற பல்வேறு

தொடர்புகளும் அடிப்படைக் காரணிகளாக அமைந்திருக்கின்றன.


104

04.05.1971-ஆம் ஆண்டு, தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள

கற்பகநாதர்குளம் என்ற கிராமத்தில் சுப்பிரமணியன் - முத்துலெட்சுமி தம்பதியர்க்கு

நான்காவது மகளாகப் பிறந்துள்ளார் சு. தமிழ்ச்செல்வி.

தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் பெற்ற அனுபவங்களே அவரது கதைப்

படைப்பாக்கத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. விவசாயம், அதனைச் சார்ந்த

தொழில்கள், கால்நடை வளர்ப்பு, மீ ன்பிடித்தொழில், உப்பளத் தொழில், சிறு

வணிகங்கள், ஆயத்த ஆடைத்தொழில் ஆகியன அவரது கதைகளில்

வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தான் படைத்த புதினங்களில் பெண்களை மையப்

பொருளாக்கிக் கொண்டு, அவர்கள் தொழிற்களங்களில் படும் இன்னல்களையும்,

எதிர்வினைகளையும், ஏற்றங்களையும் கதைப்போக்கில் காட்டியுள்ளார்.

‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீ தாரி’, ‘கற்றாழை’, ‘ஆறுகாட்டுத்துறை’, ‘கண்ணகி’,

‘தொப்புள்கொடி’ என்னும் ஏழு புதினங்களையும், சாமுண்டி, சு. தமிழ்ச்செல்வி

சிறுகதைகள் என்னும் தலைப்பில் இரு சிறுகதைக் தொகுப்புகளையும்

படைத்தளித்துள்ளார்.

சு. தமிழ்ச்செல்வி தமது முதல் புதினமான ‘மாணிக்கம்’ புதினத்தில் வரும்

முதன்மைப் பாத்திரமான மாணிக்கம் என்ற பாத்திரத்தை தன் தந்தையாரை

மனங்கொண்டே படைத்துள்ளார் என்பது அவரது கூற்றின்வழி தெளிவாகிறது.

மாணிக்கம், ‘கீ தாரி’, ‘அளம்’ ஆகிய புதினங்கள் பல்கலைக்கழகங்கள்,

கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவரது படைப்புகளை

மையப்படுத்தி தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள்

ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

‘அளம்’, ‘கற்றாழை’ ஆகிய புதினங்கள் மலையாளத்திலும், ஆங்கிலத்திலும்

மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளன.


105

தமிழ் வளர்ச்சித்துறை விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்சங்க

விருது, கலைஞர் பொற்கிழி விருது போன்ற விருதுகளைத் தனது இலக்கியப்

படைப்புகளுக்காகப் பெற்றுள்ளார்.

மண்ணையும் மக்களையும் இவரது புதினங்கள் மொழி வழியாகப் பதிவு

செய்துள்ளன. மானுடத்தைப் பேசும் இவரது கதைகளில் பெண்கள், குழந்தைகள்,

ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்தம் வாழ்க்கை முறை முதலானவை சிறப்பிடம்

பெற்றுள்ளன.

தனது புனைகதைகளுக்குரிய கதைக்களங்களைத் தமிழகத்தின்

நடுநாட்டிலிருந்து அமைத்துள்ளார். ஒவ்வொரு கதைக்கான பின்புலத்தையும்,

கதைபெற்ற விதத்தையும் ஆசிரியர் குறிப்பிடுவதன்வழி இவரது கதைகள்

வாழ்வியல் உண்மைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன என்பது தெளிவாகிறது.

சமகாலத் தமிழ்ச்சமுதாயத்தில் பெண்கள் நிலை எவ்வாறு உள்ளது

என்பதனை அறிவிக்கும் பதிவுகளாக அவரது படைப்புகள் அமைந்துள்ளன என்பது

அவரது படைப்பாக்க நிலைக்களன்களைக் கொண்டு உணர முடிகிறது.

இன்றைய சமுதாயத்தில் ஆணும் பெண்ணும் சம உரிமை பெற்று அறிவியல்,

அரசியல், தொழிற்கூடம் போன்ற பல நிறுவனங்களில் சரி நிகராய்க் காலூன்றி

வருகிறார்கள். பொதுநிலையில் தொழில்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு வருகிறார்கள் என்பது

புலப்படுத்தப் பட்டுள்ளது.

பெண்களுக்கான வாழ்வு பல நிலைகளில் முன்னேற்றம் அடைவது போன்ற

தோற்றம் காணப்பட்டாலும் குடும்பம், திருமணம், அரசியல், கல்வி, பொருளாதாரம்

போன்ற பல நிலைகளில் பெண்களுக்கான உரிமை சிக்கலுக்குரியதாகவே உள்ள

தன்மை சான்றாதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

ஆண்களைவிடப் பெண்கள் கல்வி கற்றால் இந்தச் சமுதாயம் மிக நல்ல

முன்னேற்றத்தை அடைய வாய்ப்புள்ளது என்பதும், ஆனால், வடு


ீ தொடங்கி
106

சமுதாயம் வரை பெண்கல்வி முன்னேற்றத்திற்குத் தடை உள்ளது என்பதும்

வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மனித இனம் உறவுமுறைகளால் பலப்பட்டுள்ளது. ஆனால், அந்த உறவு

பண்பாட்டுக் கட்டுகளும் சிற்சில சமயங்களில் சிதைவுபட்டுப் பெண்களின் கற்பும்

பாதுகாப்பும் சிக்கலுக்குரியாதாகி விடுகின்ற துயரம் கண்டறியப் பட்டுள்ளது.

மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளில் உணவு முதலிடம்

பெறுகிறது. இவ்வுணவு வகைகள் நிலத்துக்கு நிலம் பல சூழல்களால்

வேறுபடுகின்றன என்பது சுட்டப்பட்டுள்ளது. ஆனால், பல குடும்பங்கள் வறுமை

நிலையில் உள்ளமை சான்றாதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளது.

சமுதாயம் பற்றிய செய்திகளும் விளக்கங்களும் அறிஞர்கள் கூற்று வழி

விளக்கப்பட்டுள்ளன. சமுதாய வாழ்வியல் மற்றும் வாழ்வியல் சிக்கல்கள்

போன்றவை கூறப்பட்டுள்ளன.

கிராமங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட சு.தமிழ்ச்செல்வி

புதினங்களில் கிராமங்களில் நடைபெறக்கூடிய சமூக வாழ்வியல், சடங்கு முறைகள்,

பழக்க வழக்கங்கள், திருவிழா மற்றும் வழிபாடு போன்றவைகளும்

விளக்கப்பட்டுள்ளன. வழிபாடுகள் பற்றிக் குறிப்பிடும்போது ஒவ்வொரு

கதைக்களத்திலும் உள்ள மீ ன்பிடி மக்கள், விவசாய மக்கள் மற்றும் அளத்தில்

வேலை செய்யும் மக்கள் போன்றவர்கள் தங்களின் வழிபாட்டு முறைகளிலும்

வழக்கங்களிலும் மாறுபடுவது சான்றாதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

சு.தமிழ்ச்செல்வி புதினத்தில் வரும் பாத்திரப்படைப்புகள் பற்றி இவ்வியல்

தொகுத்துக் கூறியுள்ளது. கதை மாந்தர்கள் படைப்பு பற்றியும் அவர்களின் மூலம்

சமூகத்திற்குக் கூற விழையும் கருத்துப் பற்றியும் கூறப்பட்டுள்ளன. ஒருசில

இயல்புகளின் வாயிலாகப் பாத்திரங்கள் முழுமைபெறச் செய்யப்பட்டுள்ளன.

பாத்திரப்படைப்புகள் புதினத்திற்கு இன்றியமையாதனவாக உள்ளன.

புதினத்தில் பாத்திரப்படைப்புகள் இடம் பெறுவதால் அவை சிறப்புடன்


107

விளங்குகின்றன. பாத்திரத்தின் வகைகளும் முதன்மைப் பாத்திரத்தில் வரும்

மாந்தர்களும், துணைப்பாத்திரத்தில் வரும் மாந்தர்களும் சார்புப் பாத்திரங்களாக

உள்ளவர்களும், அவர்களது பண்புநலன்களும், விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

படைப்பாளரின் வெற்றிக்குக் கதைக்கரு, கதைச்சூழல், இடஅமைவு,

பின்புலம், கலைநுட்பம் எனும் கூறுகள் ஒருங்கே ஒரு கதையில் அமையும் பொழுது

அக்கதை வெற்றி பெறுகிறது. இருப்பினும் கதைமாந்தர் வாழும் சூழலுக்கேற்பவும்

அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த வட்டார மொழிகளை நேர்த்தியாகப் படைப்பாளன்

படைக்கும் போது ஒரு படைப்பாளன் மிகப் பெரிய வெற்றி பெறுவான் என்பது

உண்மை.

அவ்வகையில் சு.தமிழ்ச்செல்வி ‘கீ தாரி’ புதினத்தில் ஆடு மேய்ப்பவர்களின்

மொழி, மீ னவ மக்களின் பேச்சு வழக்கு நடை, புதினங்களில் இடம்பெறும் வட்டார

மொழி, பழமொழிகள், வருணனைகள், சொல்லாட்சி, ஒலிக்குறிப்புச் சொற்கள்,

உவமைகள், உரையாடல் பாங்கு போன்றவற்றை இயல்பாகவே தம் கதைக்கேற்ப

படைக்கும் படைப்பாளுமையைப் பெற்றவர் என்பதை அறியமுடிகிறது.


108

துணைநூற்பட்டியல்

முதன்மை நூல்கள்

1. தமிழ்ச்செல்வி.சு. - கீ தாரி
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் லிட்
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98
முதற்பதிப்பு. செப்டம்பர் - 2010

2. தமிழ்ச்செல்வி.சு. - மாணிக்கம்
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் லிட்
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98
முதற்பதிப்பு. செப்டம்பர் - 2007

3. தமிழ்ச்செல்வி.சு. - அளம்
நியு செஞ்சுரி புக் ஹவுஸ் லிட்
41 - பி, சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை - 98
முதற்பதிப்பு. செப்டம்பர் - 2010

துணைமை நூல்கள்

1. சண்முகசுந்தரம் - பெண்ணியமும் கலை இலக்கியப்


பிரதிகாரமும்
காவ்யா வெள ீயிடு,
பெங்களுர்
முதற்பதிப்பு-1994

2. பிரேமா .இரா - பெண்ணியம்


தமிழ்ப் புத்தகாலயம்
சென்னை.

4. தனலெட்சுமி. சோ - பெண்ணியம் நோக்கில் திலகவதியின்


குறும்புதினங்கள்
இளமுனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை - புதுவை
(அக்) 2006
8. திருவள்ளுவர் - திருக்குறள்
109

கழகம் பதிப்பு
சென்னை - 16
முதற்பதிப்பு - 1953

15. பாரதிதாசன் - குடும்பவிளக்கு


மாணிக்க வாசகர் பதிப்பு
சிதம்பரம்
மு.ப.1991

19. கைலாசபதி. சு - தமிழ் நாவல் இலக்கியம்


சென்னை
3-ஆம் பதிப்பு - 1984

20. சண்முக சுந்தரம்.சு - நாட்டுப்புற இலக்கியத்தில் செல்வாக்கு


3-ம் பதிப்பு
தன்னானே, பதிப்பகம்
பெங்களுர்
3-ஆம் பதிப்பு - 1998

26. இளம்பூரனார் (கூ.ஆ) - தொல்காப்பிய - பொருளதிகாரம்


கழக வெளியீடு
சென்னை
பதிப்பு -1987

29. மீ னா.ச - ஒப்பாரி காட்டும் பெண்கள் சமுதாயம்


நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோவை
தொகுதி - 1

32. ஈஸ்வரன் . ச - நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம்


பாவை பப்ளி கேசன்ஸ் வெளியீடு
42, ஜானி ஜான்கான் சாலை
இராயப்பேட்டை
சென்னை 600 014.
மு.பதிப்பு - மே 2011

35. இராசமாணிக்கம்பிள்ளை.ம- பழமொழி நானூறு


திருநெல்வேலி தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்
522.டி,டி,கே சாலை
சென்னை - 600 018.
பதிப்பு - 1948
110

41. கனகசபாபதி.சி - இலக்கியமும் நடப்பியலும்


சென்னை
மு.பதிப்பு 1990

43. ஞானசம்மந்தன்.அ.ச - இலக்கியக்கலை


சைவ சித்தாந்த நூல் பதிப்புக்க கழகம்.
சென்னை பதிப்பு - 1973

45. முத்தையா.கரு - தமிழ் நாவல்களில் மொழியின் பயன்பாடு


முந்தைய வெளியீடு
சிவகாசி
மு.பதிப்பு - 1980

You might also like