You are on page 1of 15

HBTL 3303

FACULTY OF EDUCATION AND LANGUAGE (FEL)

SEMESTER
MEI 2020

HBTL 3303
TATABAHASA BAHASA TAMIL III

NAMA : Yuvaneshwary A/P Nalajah


NO. MATRIKULASI : 870418086198001
NO. KAD PENGNEALAN : 870418086198
NO. TELEFON : 0122858012
E-MEL : yuvaneshwary@gmail.com
PUSAT PEMBELAJARAN : OUM SRI RAMPAI LEARNING CENTRE
HBTL 3303

1.0 முன்னுரை
நாம் அனுபவிக்கும் உணர்ச்சியை அப்படியே பிறரும் உணர தூண்டுவது கலை எனலாம்.
உள்ளதை உள்ளபடி உரைக்காமல், இருப்பது போலவே உணர்ந்து கூறுவது கவிதைக்கலையாகும்.
கவிதை உலகில் கருப்பொருட்களை விளக்கும் வகையின் பல கவிதைகள் உண்டு. அந்த
கவிதைகள், கவிதைகள் வரலாற்றில் கவிதைகள் பெற்ற மாற்றத்தை எடுத்து உரைக்கின்றன.
அதிலும் புதுக்கவிதை மிகவும் சிறப்பானது.
கி.பி இருபதாம் நூற்றாண்டு தொடங்கியப் புதுக்கவிதை, தமிழலக்கியத்தில் தோன்றிச்
சிறக்கலானது. தமிழில் இருக்கும் புதுக்கவிதை இயற்றுவதற்கு முன்னோடியாக அமைந்தது,
பாரதியார் எழுதிய வசன கவிதைகளாகும். யாப்பிலக்கணத்திற்குக் கட்டுபடாமல் கவிதை
உணர்வுகளுக்குச் சுதந்திரமான எழுத்துருவம் கொடுக்கும் வகையில் உருவானதே புதுக்கவிதை.
எதுகை, மோனை, சீர், தளை சிதையாமை முதலான காரணங்களால் மரபுக் கவிதையில்
அடைமொழிகளாக பயனின்றி தொடுத்தல் அமைவதாக உணரத் தொடங்கியமையின் மடைமாற்ற
முயற்சி எனவும் இதனைக் கருதலாம்.
காலத்திற்குக் காலம் வாழ்க்கையை அடையாளம் காட்டும் முயற்சியில் தமிழ்க்கவிஞ்ர்களின்
சிந்தனை மாறுபட்டுள்ளது. இது போன்ற சிந்தனைகள் மாற்றங்கலை ஏற்றுள்ளது. மனித
வாழ்க்கையின் மாற்றங்களுக்கு ஏற்பக் கவிஞ்ர்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த மாற்றங்களே கவிதையாக தோன்றுகிறது. கவிஞனின் அனுபவத்தில் ஏற்படுவதே
புதுக்கவிதையாக உருமாற்றம் அடைகிறது.
கடந்த காலங்களில் கவிதையானது அரண்மனையில் இருப்பவர்களும், பண்டிதப்
புலவர்களுக்கும் மட்டும் இருந்த நிலை மாறி எளீய மக்கள்களுக்கும் சென்றடைய வேண்டும்
என்று உருவாக்கப்பட்டது.

1(அ) புதுக்கவிதைக்கு எதிர்ப்பு

இருபதாம் நூற்றாண்டுவரை கதை என்ற இலக்கிய வடிவம் செய்யுள் வடிவிலே


வெளிவந்தது. உரைநடை வளர்ச்சியடைந்த பின்னர் சிறுகதையாக, நாவலாக எழுதப்பட்டபோது
மரபு மீறல் என்ற பிரச்சினை எழவில்லை. ஆனால், செய்யுள் மரபிலிருந்து மாறுபட்டு
உரைநடையில் கவிதை வெளிவந்தபோது அதனை ஏற்றுக்கொள்ளப் பெருத்தயக்கம்
தமிழறிஞர்களிடையே இருந்தது. குறிப்பாக புதுமையை வரவேற்கக்கூடிய இடதுசாரி முற்போக்கு
இயக்கத்தினர் எதிர்த்து வரலாற்றூ முரணாக இருக்கின்றது. புதுக்கவிதை யாப்பை மீறி
எழுதப்படுவதற்கான காரணம் குறித்து வால்ட் விட்மன் “யாப்பு பழமையின் சின்னம்!
நிலப்பிரபுத்துவத்தின் எச்சம்! புதிய இலக்கியயத்தின் உரைநடைக்கும் செய்யுளுக்கும் இடையே
HBTL 3303

எவ்வித வேற்றுமையும் இருத்தல் அகாது! விஞ்ஞானம் சமுதாயம் ஆகியவற்றைப்பற்றி


ஆழமாகவும் விரிவாகவும் எழுதவேண்டுமென்றால் கவிதைக்கும் உரைநடைக்கும் இடையே
வேறுபாடு இருத்தல் ஆகாது! பழைய ஆங்கில யாப்பு அமைதிகள் - அடிமைத் தலைகள்",
என்றார். இக்கருத்து தமிழ்ச் சுழலுக்கும் பொருந்துவதாகும். ஆனால் சமூகத்தில் மாற்றத்தை
விரும்பியவர்கள் கவிதையில் மாற்றத்தை ஏற்காதது மட்டுமில்லை. அதை எதிர்த்து எழுதியது
வியப்பாக இருக்கின்றது. நா. வானமாமலை, தொ.மு.சிதம்பரரகுநாதன் தி.க.சி போன்றோர்கள்
எதிர்க்கருத்துக்களை வெளியிட்டார்கள். புதுக்கவிதையைப் பிராய்டியத் தனி மனிதவாதம் என்று
ஒதுக்கினார்கள். தொடாக்கத்தில் இலக்கணம் மீறி எழுதப்பட்ட கவிதைகளுக்கு எதிர்ப்புத்
தெரிவித்த முற்போக்கு இயக்கத்தினர், பின்னர் அதன் பாடுபொருள்கள் குறித்து எதிர்த்தனர்.
அகம்சார்ந்த தனி மனித உணர்வுகள் கவிதையில் வெளிப்படுவது இயல்பானதாகும். கவிதை
என்பது பன்முகம் சார்ந்த வெளியீட்டுச் சாதனமாகும். அதனைக் குறிப்பிட்ட தத்துவ
விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தவேண்டும் என்பது கவிதை இயங்கிலில் ஏற்ற்க்கொள்ள
முடியாத கருத்தாக விளங்குகிறது.
புதுக்கவிதையின் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மற்ற காரணம் இது மேளைநாடுகளிலிருந்து வந்த
ஒரு வடிவம் என்பதும் ஆகும். ரகுநாதன், இந்த இறக்குமதி தமிழுக்குச் சிறிதும் தேவை இல்லை
என்று எதிர்ப்புத் தெரிவித்தார்.
புதுக்கவிதை அமைப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது. புதுக்கவிதை என்ற பெயர் அனைவராழும்
ஏற்றுக் கொண்டாலும் அதன் ஆரம்ப பெயரான “வசனக் கவிதை” என்ற சொற்சேர்க்கையைப்
பலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வசனம் தன் தன்மையை விட்டுக் கவிதையின்
தன்மையை ஏற்றுக்கொண்டது என்றுதான் அர்த்தமாகும். பார்ப்பதற்கு வசனம் போல் இருந்தாலும்
உண்மையில் கவிதையாகும். ஆகையால், வசனம் கவிதையாக முடியாதென்று முன்கூட்டியே
முடிவு செய்வது தாக்கத்திற்கு ஏற்காது. மனிதர்களுடைய மொழிகள் அடைந்துள்ள
வளர்ச்சியையும் சரித்திர ரீதியாக உணராத குற்றம்தான் இது போன்ற கூற்றகளுக்குக்
காரணமாகும் என்று கூறுகிறார் ந.பிச்ச மூர்த்தி.
ஆகையால். புதுக்கவிதைகள் இன்றும் பலரால் எதிர்க்கப்பட்டுதான் வருகிறது. இருப்பினும்
தாம் சொல்ல வரும் கருத்துகளை அனைவருக்கும் புரியும்படி இருப்பதால் புதுக்கவிதை இன்னும்
பலரால் ரசிக்கப்படுகிறது.

1(ஆ) புதுக்கவிதையின் உத்திகள்

யாப்பிலக்கிய கவிதை உரைநடை வடிவத்திற்கு மாறும் போது, புதிய வெளியீட்டுச்


சிக்கல்கலைச் சந்தித்தது. அதனால் புதிய உத்திமுறைகளை தேடும் தேவை கவிஞர்களுக்கு
HBTL 3303

ஏற்பட்டது. அதுமட்டுமின்றி இன்றைய உள்ளடக்கத்திற்கு இணைந்து வரும் வெளியீட்டு


முறையையும் கவிஞன் கடைப்பிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக
தற்போதைய புதுக்கவிதைகள் தனக்கெனத் தனித் தன்மையை ஏற்றுள்ளது. உத்தி என்பது
கவிஞன் கவிதையைக் கையாளும் முறை என்று கூறலாம். ஒரு கவிஞனின் திறமையை அவன்
உபயோகிக்கின்ற உத்திகளைக் கொண்டு அறியகா. ஆகையால், உத்திகள் கவிஞனின்
தனித்தன்மையை வெளிப்படுத்த உதவும்.
புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள்
பல பார்க்க முடியும். பொருளை நேரடியாக உணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப்
பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின்
எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகளாகும்.

உத்தி 1- உவமை
ஒரு பொருளை இன்னோரு பொருளுடன் ஒப்பிடுவது மனிதர்களின் குணமாகும். அதே
போல், கவிஞன் ஒரு பொருளை காணும் போது, அதனுடன் இன்னொரு பொருளை
தொடர்ப்புப்படுத்தி இப்பிடுகிறார்கள். இதனைதான் உவமை என்று அழைப்பார்கள்.
புதுக்கவிதைகளில் உவமை இடம்பெற்று அந்த கவிதைக்கே மெறுகுட்டுகிறது. பெரும்பாலும்
இவ்வுமைகள் புதுமையாகவே அமையும். மீ.ப.சோமு தன் கவிதைத் தொகுதிகளில்
உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

“ மனிதரின் உள்ளத் தாசையைப் போலே


மாமுனி வோர்மன முடிவினை ஒத்தே
தனிமையில் நீல வானிலே நின்று
தாரகை ஒன்று மின்னுதே இன்று"

என்று “இளவேனில்" என்ற கவிதை தொகுப்பில் இயற்றியுள்ளார். இதில் அடுக்கடுக்காக் கவிஞர்


உவமைகளைப் பாயன்படுத்தியுள்ளார்.

உத்தி 2 - உருவகம்
புதுக்கவிதைகளிலும் உருவகம் இடம்பெறுவதை அறிகிறோம். ரோநாவைப் பாத்திகட்டி, நட்டு,
நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி
வடுப்படுத்துவதும் உண்டு, தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு
உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
HBTL 3303

“ தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்.
இருந்து வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்”
என்ற கவிதையில்,
 தொழிற்சாலை - பாத்தி
 வியர்வை - நீர்
 இயந்திரம் - ரோஜா
 வறுமை - முள்
 வடுக்கள் - பரிசு நூள்கள்
என உருவாகம் அமைகின்றது.

உத்தி 3 - படிமம்
வாசிப்பர்களின் மனதில் மட்டும் உணர்வினை உண்டாக்குவதை படிமம் எனலாம்.
அதைத்தவிர பொருளையும் அனுபவத்தையும் உணர்ச்சிகளையும் சொல்லிக் காட்டாமல்
வாசிப்பவர்களின் மனதில் எழுப்பிக் காட்டும் முறையே படிமம் எனலாம். படிமம் என்பது ஒரு
பொருளை விளக்குவதற்காக நிற்கின்ற பிறிதோன்று. இலக்கியத்தில் ஒரு பொருளையோ, ஒரு
நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற் தொகுதி, தன் இயல்பான
பொருளைத் தவிர்த்து பிறதொன்றினைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுவதே ஆகும்.
இக்காலத்தில் புதுக்கவிதைகளில் படிம உத்தியினை அதிகமாகப் பயன்படுத்திக் கவிஞர்கள்
கவிதை எழுதுகிறார்கள்.மீ.ப சோமு தன்னுடைய “மனப் பறவை" உனும் கவிதைத் தொகுப்பில்
படிமங்களைக் பயன்படுத்தியுள்ளார்.
“தியாகம்" என்ற நுண்பொருளை “ஊதுவத்தி" என்று பருப்பொருளின் வாயிலாக ஆசிரியர்
விளக்குகிறார். பிறருக்காத் தன்னை தியாகம் செய்து சாம்பலாகும் ஊதுவத்தியை,
HBTL 3303

“ அறையின் கோடி மூலையிலே - மன


அமைதி யோடே புகைந்திடுவது
சிறையில் நின்று மன மெல்லாம் - புகைச்
சிறகை விரித்துப் பறந்திடுவது - ஊதுவத்தி!
வாசம் தந்து தந்து கொண்டே - அதன்
வாழ்வும் முடிந்து மறைதிடுது"
என்று கவிதை பாடுகிறார் கவிஞர். ஊதுவத்தியைப் போல ஒருவன் தன் வாழ்வைத் தியாகம்
செய்தால் மற்றவர்கள் வாழ்ழில் மணம் வீசும் என்கிறார். பிறர், வாழ்விற்காகத் தன் வாழ்வைத்
தியாகம் செய்பவனை கவிஞர் போற்றுகிறார்.

உத்தி 4 - குறியீடு
குறியீடு, புதுக்கவிதையில் ஓர் இலக்கிய உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒன்றை
சொல்வதன் மூலமாக மற்றொன்றை உணரவைப்பதைக் குறியீடு என்று அழைக்கலாம்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கதில் தோன்றியது குரியீட்டியல் இயக்கமாகும். இ ந்த
இயக்கமானது 1838-ஆம் ஆண்டிலிருந்து 1920-ஆம் ஆண்டு வரை பிரெஞ்சு நாட்டில்
தழைத்துப் பின் ஆங்கில, அமெரிக்க நாட்டின் செல்வாக்கு பெற்றது.
கிரேக்க நாட்டுல் ஓர் உடன்பாட்டை உறுதி செய்து கொள்ளும் போது ஒரு நாணயத்தை
இரு சமபாகங்களாக்கி ஆளுக்கொரு பகுதியை உடன்படுவோர் கொண்டு செல்லும் வழக்கம்
இருந்திருக்கிறது. அப்பகுதி ‘சிம்பலான்' என்று அழைக்கப்படுகிரது. செம்பலான் என்ற வினைச்
சில்லில் இருந்து “சிம்பல்" என்ற சொல் பெறப்பட்டுள்ளது. ஒரு பாதி நாணயம் இன்னொரு பாதி
நாணயத்தைச் சுட்டி நிற்பதால் சேர்தல் அல்லது அனதல் என்ற அர்த்தத்தில் குறியீடு
பயன்படுத்தப்படுகிறது. ஆகையால், ஒன்று இன்னோறை உணர்த்துவதைக் குறியீடு என்று
கொண்டனர் எனக் கூறியுள்ளார் இரா.பாலச்சந்திரன்.
மீ.ப சோமுவின் “மனப்பறவை" என்னும் கவிதைத் தொகுப்பிலுள்ள “நிழல்கள்" என்னும்
கவிதையில் குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளார். “நிழல்கள்" என்ற தலைப்பில் அமைந்த
கவிதையில் தலைப்பே குறியீடாக அமைந்து உள்ளது. நிழல்கள் என்று மனித வாழ்க்கையில்
பொன், பொருளால் பெறும் போலி இன்பங்களைக் குறிப்பிடுகிறார்.
உலகிலுள்ள பொன்னும், பொருளும் நிலையற்றது. பொன்னும் பொருளும் முதலில்
இன்பத்தைத் தந்தாளும் மன அமைதியைத் தராது. உண்மையான இன்பம் பொன்னிளும்
பொருளிலும் இல்லை. இவ்வுலகமே மாயையால் ஆனது. இரைவனை நினைத்து அவன்
திருவடிகளைப் போற்றுவதே உண்மையான இன்பம். இறைவனைக் காண்பதே இன்பம், என்ற
கருத்துக்களை உணர்த்த விரும்பியது கவிஞர் தம் கவிதையில் குறியீட்டைக் கையாளுகிரார்.
HBTL 3303

“ ஓசை கேட்ட மான் உற்றுப் பார்த்தது


நீரின் அமைதி நீர்மை குலைந்தது
மரமும் செடியும் மடுவிற் கரைந்தன
பொய்கையின் நிழல்மான் பொய்யெனப் போயது
பூம்புனல் கலைந்தது புத்தி தெறிந்தது"
என்று ‘நிழல்கள்' கவிதையில் உலகம் மாயை என்பதைத் தெளிந்ததைப் “பொய்கையில் நிழல்மான்
பொய்யெனப் போனது பூம்புனல் கலைந்த்து புத்தி தெளிந்தது" என்ற குறியீட்டின் மூலம்
விளக்குகிறார்.

2 (அ) அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின்


பொருள் நோக்கம்.
 அகத்திணை
அகத்திணை என்பது இன்பப்பொருள் இலக்கியம், காதல் இலக்கியம் எனவும் கூறலாம்.
ஒருவனும் ஒருத்தியும் கண்டு விழைந்து கூடி இல்வாழ்க்கையேற்று வாழும் ஒழுகலாறு
அகப்பொரிளாக அமைகிறது. மணமக்களாவதற்கு முன்னர் கூறப்படும் கூறுகளைக்
களவொழுக்கம் எனவும், மணமான பின்னர் கூறப்படும் கூறுகளைக் கற்பொழுக்கம் என்றும்
கொண்டுள்ளதாகத் தெரிகிறது.” என்று அ.மணவாளன் விளக்கிறார்.
அகம் வாழ்வின் இன்றியமையாத கூறு என்பதை, “அகம் சிறப்படையாவிடில் புறம்
சிரக்கமுடியாது. பெரியதொரு மரமாக ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்கே தெரியாத
சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு
அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழமுடியாது. அதே போலப் பிறர் அறியமுடியாத
சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் இல்லறம் செம்மையாக அமைந்தாதான் புரவாழ்வு
செம்மைப்படும்" என்று கூறுகிறார் அ.ச.ஞானசம்பந்தன். நம் வாழ்வின் இன்றியமையாத கூறாக
அகம் விளங்குகிறது என்கிறது.
 களவியல்
காதல் வாழ்க்கையை கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும்.
ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு உன்று
வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.
களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே அத்த
இளமை, முதலிய அத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு
அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு
நெறியில் இருப்பர். களவு நெறியயைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக்
HBTL 3303

கருதவில்லை. தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை


அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது.
 கற்பியல்
களவு இன்பம் நீண்ட நாட்கள் தொடர முடியாது. காளவிற்குப் பல்வேறு இடையூறுகள்
உண்டு. அவை அம்பல், அலர் என இருவகைப்படும். அம்பல் என்பது பிறர் அறியாமல் இருவர்
தமக்குள் தலைவன், தலைவியின் காதல் செய்தியைப் பரிமாறிக் கொள்வது,. இது விரிந்த மலரின்
நறுமணத்தோடு ஒப்புமைப்படுத்தப்படும். ஊரில் அலர் தூற்றத் தொடங்கி விடுவார்கள். அலர்
என்றால் ஊரில் உள்ள மக்கள் இந்தத் தலைவன்- தலைவி காதல் பற்றி ஆங்காங்கே பேசத்
தலைப்படுதல் ஆகும். இத்தக சூழல் வரும்போது காதல் வெளிப்பட்டு, பெற்றோரின்
செவிகளுக்குச் செய்தி எட்டிவிடுவது உண்டு. பொற்றோரில் சிலர் இக்காதலை ஏற்றுக்கொண்டு
திருமண ஏற்பாட்டைச் செய்வர். பெற்றோரே கதலை அறிந்து, திருமணத்தை முடிக்காமல்
பெண்ணையோ, ஆணையோ காதல் நிலையில் இருந்து பிரிக்க நினைத்தால் இருவரும் சேர்ந்து
யாருமறியாமல் ஊரைவிட்டு வெளியூர் சென்றுவிடுதலும் உண்டு. இதற்கு உடன்போக்கு என்று
பெயர்.
 அகத்திணையின் நோக்கம்
அகத்திணையின் களவு வாழ்க்கை கற்பியல் வாழ்க்கை என்னும் வரையறையின் பொருள்
நோக்கம், பிறர் வாழ்க்கை குறிப்போ, பெயர் குறிப்போ தோன்றாது யாத்த தூய காதல் இலக்கியம்
உலக நிலை பேரு காதலில் உண்டு. மன உனைர்வுடையவர்கள் மக்கள். அவர்கள் ஆடல் பாடல்
கேளிக்கைகளில் நாட்டமுடையவர்கள். இனப்பெருக்கம்நாட்டமின்றி இன்ப நாட்டத்துடனே
உறவாடுபவர்கள். இலக்கிய முறையே நெஞ்சையும் உணர்ச்சியையும் இயக்க வல்லது. ஆதனால்
மக்கள் ஆண் பெண் உறவு கல்வியையும் குடும்பக் கல்வியையும் கற்பிப்பதற்கென்று கண்ட தூய
இலக்கியமே அகத்திணை. ஆணும் பெண்ணும் ஒருவர் காதல் விருபபத்தையும், அளவையும்,
மற்றோருவர் புரிந்து கொள்ள வேண்டும். நிரைவான இன்பத்திற்கு ஊடல் வேண்டும். ஊடல்
குறைவுபட்டால் உள்ளமும் குறைவுபடும். போற்றோர்களின் துணை கொண்டு, சான்றோர்களின்
துணை கொண்டு காதலர்களின் பூசர்களை போக்குதல் வேண்டும். இன்பம் உரவிலும் மன்பதை
உறவிலும் நாணயமும் கற்பும் தழுவிய இல்லறக் கல்வியை அகத்திணையை கற்பித்தால் இன்ப
கமறல்களும் குடும்ப கோணல்களும் குறைந்து விடும். இன்பம் பெருகும் வாழ்வு இனிக்கும்
கண்டது காதல் கொண்டதே கோலம் என்ர நிலை மாறும்.
HBTL 3303

2 (ஆ) அகப்பொருள் நூலானது, களவியலில் காதலரது களவொழுக்கத்தைக் கூறுவதுபோல்,


கற்பியலில் காதலர் முறையே மணந்து வாழுங்கால், தலைவன் மனைவியைத் தனியே விட்டு
விட்டு வெளியூர் செல்வதையும், அப்பொழுது தலைவி பிரிவினால் வாடுவதையும்
விவரித்துக் கூறும். கற்பியல் பிரிவினை வகைப்படுத்திக் காட்டியிருக்கும் சங்க
இலக்கியத்தின் மாண்பினை விளக்குக.
 அகப்பொருள் நூலானது, களவியலில் காதலரது களவொழுக்கத்தைக் கூறுவதுபோல்,
கற்பியலில் காதலர் முறையே மணந்து வாழுங்கால், தலைவன் மனைவியைத் தனியே
விட்டு விட்டு வெளியூர் செல்வதையும், அப்பொழுது தலைவி பிரிவினால் வாடுவதையும்
விவரித்துக் கூறுக.
புணர்ந்துடன் போய் மீண்ட தலைவி, தலைவனிடமும் தோழிமார்களிடமும் சுரத்தின்
இயல்பை உணர்தலும், தன் வருத்தத்தை நெஞ்சோடும், குறையைப் பிறரோடும்
துன்பமுற்றவளாய்க் கூறுவாள் என்றும், பிரிந்த காலத்தில் தலைவியின் கண்ணும் தோளும்,
மார்புகளும் வாடி, மனது புண்பட்டுப் போக அறிவுடை அன்பனாகிய தலைவனை

 
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
HBTL 3303
HBTL 3303

மேற்கோள் குறிப்புகள்
1. https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/147502/8/08_chapter
%202.pdf
2. http://www.tamilvu.org/library/nationalized/pdf/81-vallikannan/111-
puthukkavithaiyinthottramumvalarchchiyum.pdf
3. https://www.jeyamohan.in/290/
http://siragu.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE
%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE
%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/

https://ta.vikaspedia.in/education/ba4baebbfbb4bcd-
ba8bc2bb2bcdb95bb3bcd/b9ab99bcdb95-b87bb2b95bcdb95bbfbafbaebcd-i-
b85b95ba4bcdba4bbfba3bc8baabcd-baabbeb95bc1baabbeb9fbc1#section-13
http://www.tamilvu.org/courses/diploma/c021/c0214/html/c0214116.htm
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE
%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_
%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE
%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
HBTL 3303

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE
%B5%E0%AF%81_(%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE
%A3%E0%AF%88)#%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE
%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88

You might also like