You are on page 1of 7

அ.

புதுக்கவிதை இயல்பு

கவிதை வாழ்வில் விளைவது. உணர்வில் முகிப்பது.காலந்தோறும்


புதுப்புதுக் கோலம் புனைந்து அழகில் நிலைப்பது புதிக்கவிதை
தோன்றியபொழுது ‘ இது இயற்கையில் விளைந்ததா, செயற்கையால்
தோற்றவித்ததா? என்ற வினா விளைந்தது; அன்றி தோன்றி மறையும்
நிலையற்ற உரையா? என்ற கேள்வி முகிழ்த்தது.

இன்று தமிழ் இலக்கிய வரலாற்றில் பதுக்கவிதை சிறப்பிடம் பெற்று


வருகின்றன. உருவத்தாலும் உள்ளடக்கத்தாலும் முன்னைய யாப்பு
நெறியின்றும் வேறுபடும் வகையில் இக்கவிதைகள் அமைந்துள்ளன.
எந்த இல்க்கியமாயின்னும் அந்தக் காலச்சமுதாயத்தைத்
தழுவியதாக இருக்க வேண்டுமென்பது இலக்கிய உண்மையாகும்.

புதுக்கவிதை சமுதாயத்தில் பல்வேறு கூறுகளையும்


எடுத்தியம்புகின்ற தன்மையைப் பெற்றிருக்கின்றன. சமுதாயத்தின்
சிக்கல்களைக் கூறுவதோடு நின்று விடாமல் அச்சிக்கல்களுக்குரிய
தீர்வுகளைக் கானும் வகையிலும் இப்புதுக்கவிதைகள்
அமைந்துள்ளது.

புதுக்கவிதையின் உத்திகள் உள்ளடக்கமு, ஒன்றொடொன்று


தொடர்புடையவை. உள்ளடக்கத்தினை உணர்த்தும் முறையே உத்தி
எனக் கூறப்படிகிறது. உத்தி என்பது கலையாக்க முறையாகும்.
கவிதைகளில் சொல்லப்படும் உத்தியே இன்றியமையாததாகும்.

மரபுக் கவிதைக்கு இருப்பது போன்ற யாப்பிலக்கணம் புதுக்கவிதைக்கு


இல்லாததால் புதிக்கவிதைக்குரிய வடிவத்தை உத்திகளே நிர்ணயம்
செய்கின்றன.புதிக்கவிதையின் வடிவச் செழுமைக்கும் செறிவிற்கும்
உத்திகளே அடிப்படையாக உயிர்நாடியாக அமைகின்றன. இங்கு உவமை,
உருவகம், படிமம், குறியீடு, முரண், அங்கதம் ஆகிய ஆறுன்
குறிப்பிடப்பெற்றுள்ளன.

அ. உவமை

ஒரு பொருளை இன்னொரு பொருளைக் கொண்டு விளக்கப்படுத்திக்


காட்டுவது உவமையாகும். வேல் போன்ற விழி, மதி போன்ற முகம்,
வெட்டிய கோட்டில் விழிந்தோடும் இரப்பர் பாலைப்போல கண்ணீர்
வழிந்த்து.....

கடற்கரையில் நாம் பழகிய

பொழுதுகளை நினைத்துப் பார்!

அன்று நீ பேசிய வார்த்தைகள்

கடற்கரைக் கூட்டத்தில்

கட்சிகள் வழங்கும் உறுதிபோல்

காற்றில் கரைந்து விட்டன (கௌதமன்)

மேற்கண்ட புதுக்கவிதையில் காதலி வழங்கிய உறுதிமொழி அரசியல்


கட்சிகளின் வெற்று வாக்குறுதி போல் அமைந்த விட்டதை
உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.இன்றைய புதுக்கவிதைகளில்
நவீன உவமைகள் தனித்தன்மையோடு திகழ்கின்றன.

ஆ. உருவகம்.

வேல் போன்ற விழி என்ற சொற்றொடரில் “ வேல்’ என்ற உவமானப்


பொருளும் “ விழி’ என்ற பொருளும் ஒன்றாக இணையும் போது” விழி
வேல்’ என்ற உருவகம் தோன்றுகிறது.

ஆன்மீக வெள்ளம்

அலைபுரளும் பாரதம்

அறிவியல் உச்சியில்

ஆர்ப்பரிக்கும் அமெரிக்கா ( தமிழன்பன்)

இங்கு பாரத நாடு ஆன்மிகத்தில் சிறந்த விளங்குவதால், கரை, புரளும்


வெள்ளம் போல் அதி இருப்பதால் “ஆன்மீகம் வெள்ளம்” என்று
உருவகமாகக் கூறப்பட்டுள்ளது.மி.

இ. படிமம்

“ படிமம்” சொற்களால் தீட்டும் ஒவியம்.சொல்லிலே வடிக்கும் சிற்பம்


என்கிறார் முனைவர் சி.இ. மறைமலை. ஓர் ஓவியமோ. சிற்பமோ
தன்னைச் சொற்களின் மூலமாக வெளிப்படுத்திக் கொள்ளும்
முறையென்று படிம இயக்கத் தந்தை எஸ்ரா பவுண்ட்
விளக்குகிறார்.படைபபாளன் தான் விளக்குவதற்கு எடுத்துக் கொண்ட
பாடுபொருளைக் காட்சியாக்கிக் காட்டுகிறான்.

நிலத்தின் நிர்வாணத்திற்கு

பசும்பட்டு உடுத்திவிட்டு

நீ மட்டுமே

அரை நிர்வாணத்தில்

பவனிவரும் போதுதான்

இந்த தேசமே

மானங்கெட்டு நிற்கிறது( பழநி பாரதி)

உழவன் தன் உழைப்பால் நிலத்தை வளமாக்கி விட்டு தான் வாழ்விழந்து


நிற்பதை கவிஞர் அழகான படிமத்தில் வழி படம் பிடிக்கிறார்.

ஈ. குறியீடு

இலக்கியத்தில் ஒரு பொருளையோ ஒரு நிகழ்ச்சியையோ குறிப்பிட


வரும் ஒரு சொல் அல்லது சொற்றொடர் தனக்குரிய இயல்பான
பொருளைத் தவிர்த்து வேறொன்றினையும் காட்டுவதே குறியீடாகும்.
மு.மேத்தாவின் “அரளிப்பூ அழுகிறது” என்ற கவிதை குறியீட்டு
உத்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

பூக்களிலே நானொரு

பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்

பூவாகப் பிறந்தாலும்

பொன் விரல்கள் தீண்டலையே

பொன் விரல்கள் தீண்டலையே நான்

பூமாலையாகலையே
இது அரளிப்பூவின் அழுகையைப் படம் பிடிப்பதுபோல இருந்தாலும்
உண்மையில் சமுதாயத்தில் மணமாகாத முதிர்கன்னிகளின்
உள்ளக்குமுறலைக் குறியீடாகக் காட்டியுள்ளது.

உ. முரண்

முரண் என்பதை மாறுபாடு என்று சுட்டலாம். ஆனால் கவிதையின்


அடிகளில் சொற்கள் முரண் உத்தியாகும்.புதுக்கவிதை
இலக்கியத்தின் செழுமைக்கு முரண் உத்தியின் பங்கு மிக
முக்கியமானது. இந்த உத்தியின் வழி சமுதாயத்தின் முரண்பட்ட
போக்கின் முகத்திரையைக் கிழித்தெரிவதில் படைப்பாளார்கள்
முகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர்.

நாங்கள் நிர்வாணத்தை

விற்பனை செய்கிறோம்

ஆடை தொலைக்கிறது( நா. காமராசன்)

இங்கு முரன் உத்தியில் விலைமகளின் சோகத்தின் அடர்த்தியை


நம்மால் உணர முடிகிறது.

ஊ. அங்கதம்

அங்கதம் என்பது மருந்தை கொடுத்து மறைவாக உணர்த்தும்


மற்றுமொரு உத்தியாகும். வெறும் கிண்டல், எள்ளல், நகைச்சுவை என்ற
நிலைகளைத் தாண்டி பழி வாங்குகின்ற, குரோதம் பாராட்டுகின்ற
உணர்ச்சியோடு கூடிய நகைச்சுவையாக இதனைலக் கொள்ளலாம்

‘ ஏழையின் தலையில்

எண்ணெய் இல்லை

எதனால் என்றால்

ஆள்பவர் தலையில்

எதுவும் இல்லை( சி.விநாயகமூர்த்தி)

கொத்துக் கறிவறுவல்
மீன் குளம்பு சமைத்துவை

இன்று அருட்பாக் கூட்டம் (தேவமகள்)

மேற்கணட படைப்புகள் உழைப்பை மறந்த அரசியல் தலைவர் மீது


விமர்சனப் பார்வையை வீசுகிறது. வசனத்தின் வேலை விளக்குவது.
ஆனால், கவிதையின் வேலையோ உணர்த்துவது. இந்த உணர்த்தும்
பணிக்கு உத்திகளே துணைக்கு வருகின்றன.

புதுக்கவிதை பாடுபொருள் பெண்ணியச் சிந்தனை, சமூக அவலங்கள்


, அறிவியல் நோக்கு, காதல், போன்ற கூறுகளைக் கொண்டு உள்ளது.

ஆ.மரபு மற்றும் புதுக்கவிதையின் வேறுபாடுகள்

ஒரு கவிதையின் கூறுகளுள் மிக முக்கியமானது


ஒலிநயமாகும்( rhythm) ஒலிநயம் இல்லாத கவிதை உயிர் இல்லாததுப்
போன்றது. மேலும் பாவகையில் அமைந்த இலக்கணங்களும் நீண்ட
காலம் மரபாகப் போற்றப்பட்டு வந்த யாப்பு வகைகளும் இல்லாமற் கூட
ஒரு கவிஞன் கவிதை இயற்றத் தொடங்குவது இயலாது. அத்துடன்
தப்பித் தவறிக் கவிதை ஒலிநயம் இல்லாமல் எழுதப்படும் கவிதையில்
இனிமையே, ஒலியின் சக்தியோ, பொறி புலன்களை அடங்கச் செய்யும்
குண இயல்போ, மனித உள்ளத்திற்கு இன்பத்தைக் கொடுத்துக்
கற்பனை முறையில் சுவையுடன் துலக்க வல்ல சிறப்போ இருக்க
முடியாது. மேலும் மரபு கவிதைகளில் மிக மேம்பட்ட நிலையைப் பா
முறையில் காண்கின்றோம். ஆகவே, மரபுக் கவிதைகளில் அசை, சீர்,
தளை, அடி, தொடை, என வருவனவும் வெண்பா, ஆசிரிப்பா முதலான
பாவகைகள் இடம் பெறுவதும் ஒலி நயத்தின் அடிப்படையே ஆகும்.

மரபு கவிதையை அசை நேரசை என்றும் நிரையசை என்றும்


இருவகைப்படும். ஒரு குறிலோ ஒரு நெடிலோ தனித்தோ, ஒற்றடுத்தோ
வரின் நேரசையாகும். மேலும் இரு குறிலோ , ஒரு குறில் நெடிலோ
தனித்தோ ஒற்றடுத்தோ வருவது நிரையசையாகும். எனவே,
ஓசையின் அடிப்படையில் அசைத்து அசைத்து இசை கூட்டலின் அசை
என்றும் இவ்வகை உறுப்புக்குப் பெயர் எழுந்தது ; அசைத்து கேடலின்
அசையே என்பர்.
மரபுக் கவிதையில் அசை, தனித்தோ இரண்டு முதலாகத்
தொடர்ந்தோ சீராகச் செய்யுளில் அமைவது உண்டு, “சீர் கொள
நிற்றளீண் சீரே” என்பர். சீர்களை இக்கவிதையில் ஐந்து பக்கமாக
பிரிக்கின்றனர் யாப்பிலக்கண கவிஞர்கள். மேலும் இரண்டு
அசையினாலாகிய தேமா, புளிமா , கருவிளம், கூவிளம் என்ற
வாய்பாட்டில் வரும் மூவகைச் சீர் நான்கும் வெண்பா உரிச் சீராகும்.
மேலும் நிரையசை இறுதியாக உடைய தேமாங்கனி, புளிமாங்கனி,
கருவிளங்கனி, கூவிளங்கனி என்றவாய்ப்பாட்டில் வரும் நான்கு சீரும்
வஞ்சி, உரிச்சீர் எனப்படும். மேலும் நான்கு அசையினால் அமைந்த
சீர்’ பொதுச்சீர் எனப்படும் தேமா, புளிமா, கருவிளம், கூவிளம், ஆகிய
வாய்ப்பாட்டுடன் தண்ணிழல், தண்பூ, நறும்பூ, ஆகிய நான்கையும்
ஒவ்வொன்றோடும் கூட்ட வரும் வாய்ப்பாட்டில் அமைந்தவையோ
தனித்து நின்ற ஒரு ஒரு சீராய் வரும்.

மரபுக் கவிதைக்கு மேனை, இயைபு, எதுகை, முரண் அளபெடை என்ற


நான்கு தொடைகள் அமைந்த வண்ணமாய் அமைந்துள்ளது. மேலும்
ஒவ்வொன்றுன் அடி , இணை, ஒலிப்பு, ஒரஉ, கூழை, மேற்காதுவாய் ,
முற்று என எட்டு விகற்பங்கள் அமைந்துள்ளன.

கவிதையின் யாப்பின் வடிவம் பொருள் மற்றும் உணர்ச்சி அழகு


கொடுப்பதாக திகழ்கின்றது.ஒலிநயம் வகை-வகையான சீர்களின்
அமைப்பின் அடிப்படையில் உருவாயிருக்கும்.மரபுக் கவிதைகளில் கலை
நுணுக்கத்திறன் அதிகமாக உள்ளது. சொல்லாட்சிமொழியை
அற்புதமாக கையாள பெருவுதவுயாக அமைந்துள்ளது. வெளியிட்டு
முறையில் சிறந்த திறன் மற்றும் இனிய சொற்கள் அற்புதமான
சொற்றொடர்கள் அமைந்த வண்ணமாக உள்ளது.

அத்துடம் இக்கவிதையில் உள்ல சொல்லாட்சிகள் கருத்துக்கு


பொருத்தமான சொற்கள் தேர்தெடுக்க முறைபடுத்தி
அமைந்துள்ளது. சொல் விளையாட்டு அடிப்படையில் ஒரு சொல்லுக்கு
இரண்டு மற்றும் மூன்று பொருள் அமைத்தல் என்ற வகையில் சிலேடை
அணியைப் பயன்படுத்தி இந்த ஆட்டத்தை ஆடுவதும் உண்டு. மேலும்
மரபுக்கவிதையில் சொற்கள் அடுத்து கூடும் போது ஒரு புதிய
சொற்றொடரை உருவாக்கும் படிப்பவர்க்கு இன்பூட்டும்
சொற்றொடர்கள் ஆகும்.
உவமை அணியின் கீழ் இக்கவிதையில் ஒலியும் தெளிவும்
சேர்க்கும்.படிப்பவரை ஈர்க்கும் வகையில் இருக்கும் கவிஞன் கண்ட
காட்சியை மற்றவரும் உணர்ந்துக் கொள்ள துணைப்புரியும்.
மரபுக்கவிதையில் காணும் உருவக அணி உபமானத்தையும்
உபமேயத்தையும் இரண்டாக அன்றி ஒன்றாக காட்டுவது உருவக
அணி.

புதுக்கவிதை

‘சுவைபுதிது பொருள்புதிது வளம்புதிது


சொற்புதிது சோதி மிக்க நவகவிதை’

எனப் பாரதி அறுசீர் விருத்தத்தில் விடுத்த அழைப்புதான்,


புதுக்கவிதை வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய்
அமைந்தது.மேலும் சீர், தளை, அடி, தொடை என்னும்
கட்டுப்பாடுகளை உடையது மரபுக்கவிதை. அக்கட்டுப்பாடுகளை
உடைத்தது புதுக்கவிதை.

மரபு இலக்கணம் இல்லாததால் தான் புதுக்கவிதைக்கான இலக்கணம்


ஆகிறது. புதுக்கவிதை தோன்றியதற்கான நோக்கம் என்னவோ
இதுதான். இருப்பினும் புதுக்கவிதைக்கு என்று சொற்செட்டு, உருவ
அமைப்பு என்ற ஒன்று வேண்டுமல்லவா? புதுக்கவிதையின் உருவம்
எவ்வாறு இருக்கிறது என, இதுவரையில் வந்துள்ள கவிதைகளைக்
கொண்டு அடையாளம் கண்டுணர வேண்டியுள்ளது.

You might also like