You are on page 1of 13

உள்ளடக்கம்

எண் தலைப்பு பக்கம்

1 உள்ளடக்கம் 12

2 முன்னுரை 13

3 அறிவார்ந்த எழுத்து 14

4 முடிவுரை 22

5 சிறுகதை 23

6 மேற்கோள் 28
1.0 முன்னுரை

சிசுவாய் முத்தின் முதற்மொழி – நனி


யாப்பும் கவினிலக்கியம் கனிந்தமொழி
சொற்சுவையின் வேதாந்தம் காத்த மொழி – நாம்
யேந்தும் ஆதி அந்தம் சாரா மொழி

இப்படி என் கவிதை வழி , உணர்த்தியுள்ள உவட்டா தமிழின் சிறப்பானது


மெய்சிலிர்க்கவைக்கும். தொன்மையான இந்த மொழி வழிப்பெற்ற தமிழிலக்கியங்களோ
எண்ணிலடங்கா. அவை, கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், பாடல், செய்யுள் போன்றவை.
சிதம்பரனார் (2000), கூற்றின் படி இலக்கியங்கள் மக்கள் நன்மைக்காகவே
செய்யப்பட்டவை. கலை கலைக்காகவே என்று கண்மூடிக் கதறுவதைப் போல இலக்கியம்
இலக்கியத்திற்காக அன்று; மக்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதற்காகவே எழுந்தவை
என்று கூறியுள்ளார். மேலும், இலக்கியம் ஆற்றல் என்றாலே, பல புதிய படைப்புகளைப்
படைப்பதில் மட்டுமில்லை, வெளிவந்த இலக்கியத்தைச் சுவைத்து அதன் சிறப்புகளைக்
கூறும் திறனும்தான். ஆக, இப்பருவத்தில், கவிதைகளைக் கொண்டு கருப்பொருள்,
நன்னெறிப்பண்பு, கலைச்சொற்கள், மொழிநடை ஆகிய கூறுகள் இச்செய்பணியில்
ஆராய்ந்து தொகுக்கப்பட்டுள்ளது.
2.0 பாரதிதாசன், ஐ. உலகநாதன் மற்றும் சீனி நைனா முகமது ஆகியோரின்
கவிதைகளில் உணர்த்தப்படும் கருப்பொருள், நன்னெறிப்பண்பு, கலைச்சொற்கள்,
மொழிநடை ஆகிய கூறுகளின் மதிப்பீடு.

கருப்பொருள்

கருப்பொருள் எனப்படுவது அவ்விலக்கிய படைப்பானது எக்கருவை மய்யமாகக்


கொண்டுள்ளதோ அதனையே தெளிவுப்படுத்துவதுதான். ஆக, இம்மூன்று கவிஞ்சரின்
கற்பனையில் வடிந்த கவிதைகளிலும் துள்ளியமான கருப்பொருள்கள் அடங்கியுள்ளது.

இதனை, கவிஞர் பாரதிதாசன் அவர்களின் ‘தமிழின் இனிமை’ எனும் கவிதையில்


காண்கையில், முழுவதுமாய் தமிழின் பால் கொண்டுள்ள ஈர்ப்பையே கருப்பொருளாய்
கொண்டுள்ளது. அக்கவிதையை ஒவ்வொரு கவிதையாய் பகுப்பாய்கையில் முதல்
கண்ணியில், சுவையும் தமிழும், இரண்டம் கண்ணியில் இசையும் தமிழும், மூன்றாம்
கண்ணியில் உறவும் தமிழும் என்றும், நான்காவது கண்ணியில் இயற்கையும் தமிழின்
விந்தையும், இறுதி கண்ணியில் உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என ஒவ்வொரு
கருப்பொருளைக் கண்டறியலாம். அதாவது, கவிஞர் இக்கவிதை வழி தமிழின் சிறப்பை
உய்த்துணர்ந்ததையே வெளிப்படுத்தியுள்ளார். தமிழின் இனிமையையும் செம்மையையும்
வாழ்வியலோடும் இயற்கையோடும் ஒப்பீட்டுக் கூறியுள்ளார்.

திரு. ஐ. உலகநாதன் அவர்களின் ‘மூட்டைப்பூச்சி முகாரி’ எனும் கவிதை மூலம்


பெரும் கருப்பொருளானது, சமுதாய சிக்கல்களையே முதன்மையாகக் கொண்டுள்ளது.
தெள்ளென கூறின், ஒரு மூட்டைப்பூச்சியைக் கருதுகோளாய் கொண்டு சமுதாயத்தில்
ஏற்படும் அவலங்களையும் சிக்கல்களையும் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு
குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் கொண்டிருக்க வேண்டிய கடமைகள், தோட்டப்புர
மனிதர்களின் வாழ்க்கை நிலை, ஒரு மனிதனின் இறுதி சடங்கு, பெண்களுக்கு ஏற்படும்
அவலமும் பாதுகாப்புமின்மை, அறநெறி தவறி வாழ்கின்ற மனிதர்கள் என இப்படி
சமுதாயத்திற்கு விழுமிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார் கவிஞர். ஆக, இக்கவியின்
கருவாய் சமுதாயத்தின் சிக்கல்களும், மக்களின் விழிப்புணர்வு தூண்டுகோள்களும்
அமைந்துள்ளது.
இறுதியாக, சீனி நைனா அவர்தம் கற்பனையில் மலர்ந்த ‘நெஞ்சுக்குள்ளே நிலவு’
என்ற கவிதையின் கருப்பொருளாய் இருப்பது, தலைவன் தன் தலைவியின் வருகைக்குக்
காத்திருக்கையில் அவன் எண்ணலைகள் தலைவியின் எழில் குணங்களை நோக்கிப்
பாய்கின்றது என்பதுவே. அதாவது, சங்க கால இலக்கியங்கள் துணை கொண்டு, குறிஞ்சி,
முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகள் தலைவன் தலைவி கொண்டிருக்கும்
அறவாழ்க்கைப்படியான காதலைக் கவிஞர் இக்கவிதையில்வெளிக்கொணர்ந்துள்ளார்.
மாசற்றக் காதலின் ஆதாரமாக, நாகரீகமான முறையில் தலைவனின் காதலை தலைவி மீது
மெய்ப்பிக்கும் வகையில் இக்கவிதையின் கருவானது அமைந்துள்ளது.

நன்னெறிப்பண்பு

நெறியான வாழ்வில் கொண்டுதர வேண்டிய பண்புநலன்களே நன்னெறிப்பண்புகள்


எனப்படும். இதனை கடைப்பிடித்து சரியான பாதையில் பயணிப்பதே சால்பு. ஆக,
இம்மூன்று கவிதைகளிலும் சில நன்னெறிப்பண்புகள் வெளிக்கொணரப்பட்டுள்ளது. முதலில்,
‘தமிழின் இனிமை’ என்ற கவிதையில், தமிழ்மொழியை நம் உயிர்போல் காக்க வேண்டும்
என்கிற பண்பை வெளிப்படுத்துகிறார் கவிஞர். உலகின் மொழிகளுக்கெல்லாம்
முதற்மொழியாகத் திகழு தமிழை நாம் என்றும் போற்றி வாழ்தலே சிறப்பு. மேலும்,
தமிழனாய் பிறப்பின் மொழியாய் மட்டும் ஏற்றுக்கொண்டு வாழாமல், நன் அன்றாட
வாழ்வின் அங்கமாகவும் கொண்டு அதனுடன் இணைந்து வாழ்வது இன்னும் பல
ஆண்டுக்களுக்குத் தமிழை ஆணிவேராய் காக்கலாம் என்னும் கருத்தையும் கவிஞர்
தெரிவிக்கின்றார்.

இதனையே, ‘மூட்டைப்பூச்சி முகாரி’ கவிதையில் நன்னெறிப்பண்பு என


பார்த்தோமேயானால், நன்றி பாராட்டுதல் என்பதை வலியுறுத்தியுள்ளார். அதாவது,
மூட்டைப்பூச்சியானது தான் செய்ததற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்காத நல்ல
எஜமானுருக்கு தன் நன்றியை அவர் இல்லத போது ஒப்பாரி மூலம் தெரிவிக்கின்றது.
அடுத்து, பிற உயிர்களை மதித்தல் என்பதையும் இக்கவிதை வழி உணர்த்துகிறார் கவிஞர்.
சிற்றுயிராயின் அதற்கான வாழ்வாதாரமும் இப்புவியின் இருக்கின்றது; அதை வதைப்பது
கொடுமை என்பதையும் உணர்ந்த மனிதரின் உள்ளக்கிடக்கே இதன் மூலம்
வெளிப்படுகின்றது. மனிதர்களாகிய நாமும் பிறர் செய்த உதவிக்கு நன்றியுணர்வுடன்
இருப்பதோடு, வள்ளலாரின் கூற்றுக்கேற்ப உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம்
செய்யாதீர், பிற உயிர்களை வதைக்காமல் வாழ்தலே நன்றி.

தொடர்ந்து, நன்னெறிப்பணபை ‘நெஞ்சுக்குள் நிலவு’ என்ற கவிதையில் பார்த்தால்,


அறம், அறவாழ்க்கை வாழ்க்கை வாழ மெய்யான அன்பில் வரும் களவற்ற காதலைக்
காண்பிக்கின்றார். அதாவது, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற அறத்தை கொண்டு காதல்
புரிவதை தெளிவுப்படுத்துகின்றார்.

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்


ஒள்ளமரக் கண்ணாள் குணம், (குறள் 1125)

என்ற குறளுக்கேற்ப தன் தலைவியை மட்டுமே நினைத்து வாழ்கின்ற தூய அன்பு


கொண்ட தலைவனின் வழி இப்பணபை அடைபாளமிடுகின்றார் கவிஞர். மேலும், ஒருவர்
மற்றொருவர் மீது கொண்ட நம்பிக்கையை நன்னெறிப்பண்பாய் இக்கவிதையில் கவிஞ்ர்
அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். தெள்ளெனக் கூறினால், தலைவியின்
வருகைக்காகக் காத்திருக்கும் தலைவன் அவன் அவள் மீது நம்பிக்கையும் பற்றும்தான்
அவன் காத்திருப்பிற்கு அர்த்தமாய் அமைகின்றது என்கிறார் கவிஞர். ஆக,
காதலிப்பதோடு ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையும் மெய்யான அன்புமே
இல்வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

கலைச்சொற்கள்

கலைச்சொற்களாயின் கவிதையில் காணப்படும் இயல்பான வார்த்தைகளின்றி, மேலும்


மெருக்கூட்டும் வகையில் அமையப்பெற்றிருக்கும் சொற்களாகும். அதன்
சொற்களஞ்சியமானது மிக அழகாக இருக்கும். இதனை, ‘தமிழின் இனிமை’ என்கிற
கவிதையில் காண்கையில் முதல் கண்ணியில், முதல் வரியில்

‘கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்


கழையிடை ஏறிய சாறும்,
என்ற வரியில் கனி என்பதற்கும், கழையிடை என்பதற்கும் பொருளாய் கனி அல்லது பழம்,
கரும்பு என்றும் இருக்கின்றது. இயல்பாக இல்லாமல் இத்தகைய கலைச்சொற்கள்
கவிதைக்கு முருகுணர்ச்சியைக் கொடுகின்றது. மேலும், மற்றோரு வரியில்,
காலைப் பரிதியின் உதயம்,
என்ற வரியில் பரிதி என்பதற்கு சூரியன் என பொருளாகும். காலையின் உதிக்கும்
சூரியனுக்கு, இத்தகையக் கலைச்சொற்களைப் பயன்படுத்துகையில் கவிதையை மேலும்
எழில்படுத்துகின்றது.

மூட்டைப்பூச்சி முகாரி கவிதை கலைச்சொற்களைக் கண்டால், அதன் தலைப்பினிலே


மூட்டைப்பூச்சி முகாரி என்பதில் மூட்டைப்பூச்சியின் ஒப்பாரியாகத்தான் பொருள்படும்.
அதை சந்தத்தோடும் கவிதை நயத்தோடும் காண்பிக்கையில் ‘மூட்டைப்பூச்சி முகாரி’ என
அமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்றாக,
ஐயையோ வீட்டில் அவலம்! சிவப்பு நிறம்!

என்ற வரியில் சிவப்பு நிறம் என்பதில் இரத்ததை பொருளணர்த்துகிறார் கவிஞர்.


உணர்ச்சியின் வெளிப்பாடாக இச்சொல்லாடல் அங்கு இடம்பெற்றுள்ளது. இதன்
வெளிப்பாடு கவிதையின் தாக்கத்தையும் மேலோங்கியுள்ளது.

இதுவே, ‘நெஞ்சுக்குள் நிலவு’ கவிதையில் காண்கையில்,


நினைவு முகில் மஞ்சத்திலே,
என்ற வரியில் மேகத்தைதான் கவிஞர் முகில் என கூறுகிறார். அதாவது, தலைவியின்
நினைவலகள மேகமாய் அவன் உடன் இருக்கின்றது என்கிறார். இதில் தலைவனின்
எண்ணலைகளில் அழகை எடுத்து இயம்புகின்றது. மேலூம்,
நங்கையரின் இலக்கணத்தில்,
என்கிற வரியில் தலைவி அவளை நங்கையென குறிப்பிடுகின்றார். கவியில் பெண்ணவளை
இலக்கணமாக கொண்டு ‘துக் லக்’ கேள்விகளில் வழக்கறிஞர் சோவின் பெண் என்பவள்
பெண்ணாய் இருத்தலே போதும், என்பதைப் போன்று, சிறந்த மங்கையாய் குறிகின்றார்.

மொழியிடை

படைப்பாளன் தம் படைப்பில் கையாளும் அழுத்து நடை, பேச்சு நடை


இவற்றையே குறிப்பதுதான் மொழிநடை. உவமைகள், கவிதை நடை, வருணனை,
மொழியணிகள், சொல்லாட்சி போன்றவையே உள்ளடக்கியது. ஆக, அதனை ‘தமிழின்
இனிமை’ என்ற கவிதை செரிவான கவிதைநடையைக் கொண்டிருக்கின்றது. அதிலும்
இயற்கையைக் கொண்டு அழகாகத் தமிழோடு இணைத்து வருணனையும் செய்துள்ளார்.
நல்ல கற்பனை வலமும் உடன் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக,
பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்

என்ற வரி இரண்டு அடியில், சந்தங்களோடும், எதுகையோடும் கவிஞர் இயற்றியுள்ளர்.

இதனையே, ‘மூட்டைப்பூச்சி முகாரி’ என்ற கவிதையில் பார்க்கையில்,


சமுதாயவியலின் சாரத்தில் இக்கவிதையின் நடை உள்ளது. சமுதயத்திற்கு ஏற்ற
கருத்துக்களை ஆங்காங்கே கவிஞர் இவ்வொப்பாரி கவிதை மூலம் காண்பிக்கின்றார்.
மேலும், உணர்ச்சி வருணனை வழியும் இக்கவிதை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மில்
என்பவர் கருத்திலும் சொற்களிலும் உணர்ச்சி கோயில் கொள்வதே கவிதையாகும்

எனக் குறிப்பிட்டுள்ளார் (பரந்தாமனார், 2012). எடுத்துக்காட்டாக,


“அப்பா” என சேயும் “அத்தான்” எனும் தாயும்
ஒப்பாரி வைக்கின்றனர் உன்றன் பிரிவாலே!

அன்ற வரியில் அக்குடும்ப தலைவனின் பிரிவில் மனைவியும் பிள்ளையும் துயரித்தில்


கதறுகின்றனர். மேலும், பேச்சுவழக்குச் சொற்களையும் இக்கவிதையில் ஆங்காங்கே
காணமுடிகிறது. அதாவது, “சீ”, “வெடுக்”, “சுருக்” போன்ற சொற்களேயாகும்.

மொழிநடையை ‘நெஞ்சுக்குள்ளே நிலவு’ என்ற கவிதையில்,


அந்த நிலா வருவ தெல்லாம்
இரவில் மட்டும்தான் – என்
அன்புநிலா அந்தி பகல்
எனது பக்கந்தான்
என்ற வரிகளில் முதல் நிலாவை வானில் தெரியும் நிலவு என்பதையும் அடுத்ததில்
அன்பு நிலா என்பதில் தன் தலைவியை நிலவென உருவக்கப்படுத்தியும் கூறுகிறார்
கவிஞர். இதில் மிக முக்கியமாகத் தெரிவது சிலேடையாகும்; அதன் சான்றே அந்த
நிலா என்கிற சொல். தொடர்ந்து, காதல் நயமும் கவிதை நயமும் பொருந்திய
இக்கவிதையில், பாத்திர வருணனையும் இடம்பெற்றுள்ளது. அதாவது. தலைவன் தன்
தலைவியை கற்பனையிலே வருணனைச் செய்து அவள் வருகைக்காகக்
காத்திருப்பதைத்தான் கவிஞர் அழகான மொழி நடையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

3.0 முடிவுரை
முடிபாக, இவையே கவிதகள் வழி ஆராயப்பட்ட மானுட சிந்தனைகளும், கவிதை
கூறுகளும். இலக்கியத்தைச் சுவைத்து மகிழ்வது மட்டுமின்றி, அவரவரின்
தனித்திறமையை வளர்த்துக் கொள்வது தனிநபரின் கடப்பாடாகும். சிதம்பரனார் (2000),
கூற்றின் படி இலக்கியங்கள் மக்கள் நன்மைக்காகவே செய்யப்பட்டவை. ஆகவே,
இலக்கியத்தை இன்புற கற்று, திலைத்து பயனடைவோம்.

4.0
4.0 இன்றைய பள்ளிக்கல்விச் சூழலை மையமாகக் கொண்ட ஒரு சிறுகதை

அவனுக்கான அங்கிகாரம்

“ஏய் இந்த நான் சரியா சொல்லுறனா பாரு. …பிடி”, “கவிதா என்னுடை


முறையா இருக்கா பாரு?” என இப்படிப் பல குரல்கள் தேவாவைச் சுற்றி போட்டிக்கு
பிற மாணவர்களின் தயார்நிலை, அவனைச் சற்றுப் பட படக்க வைத்தது. மண்டபத்தின்
குளிரூட்டியின் வேகம் இருந்தும் தனக்கும் மட்டும் வியர்த்துக் கொட்டுவது போல்
உணர்ந்தான். அவனது விழிகள் ஒருவரை மட்டும் தேடின. புதிய உறவின் பெயரில்
போட்டியில் தனக்கென ஒரு நண்பனை நாடாமல், யாரோ ஒருவரின்
அரவணைப்பையும் அவன் உள்ளம் எதிர்பார்த்தது. “நில்லுடா! இன்னொரு முறை
போலாம். ஒங்க அப்பாகிட்ட என்னலே பதில் சொல்ல முடியாது! எனக்குச் சக்தி
இல்லடா தேவா!”, என்ற அம்மாவின் காலை புலம்பல்களையும் கெஞ்சல்களையும்
தாண்டி இன்று தப்பினான் தேவா வீட்டிலிருந்து, ஆசிரியரின் அன்பிற்குக்
கட்டுப்பட்டவனாய்.

குடிக்கு அடிமை தந்தை. அந்தத் தந்தைக்கு அடிமையான தாய். இந்த இருவருக்கும்


பிறந்து, வாழ்க்கையின் போரட்டங்களின் மூட்டி மோதி வாழும் ஒரு நல்ல தாயின் சேய்
தேவா. “ 10 வயசாச்சு. ஆம்பல பையன் வேரு, போதும் இனிமே குடும்பத்துக்கு
உழைக்கட்டும்….ம்ம்ம்ம்” என்ற அப்பாவின் போக்கிற்க செவி சாய்க்காத அம்மா…” …
அ…..ஆ… பாப்போம். சரி சரி நான் சொல்டறேன்”, என்றாள். “குடி குடியே
கெடுக்குன்றெ மாதிரி, மனுசன் குடிச்சு எல்லாத்தையும் கெடுத்து கடைசில உன்
படிப்பிலேயும் கைய்ய வச்சாச்சு! டேய் என்ன நடந்தாலும் படிப்ப விட்டுக் கொடுக்க
நினைச்சு முட்டாளையிடாதே! இப்ப கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு நீ நல்ல
இருக்குறப்பே என் மனசு குளிர்காயும்”, இப்படி நிதமும் அம்மாவின் வார்த்தைக்கும்,
அக்கறையான ஆசிரியரின் கண்டிப்புக்கு அடங்கி அப்பாவின் பார்வையிலிருந்து
கம்பிநீட்டுவான் தேவா. அந்த வெளிச்சமான எதிகாலத்தின் துவக்கமாக இந்நாளையும்
எண்ண நினைத்தான் தேவா மண்டபத்தின் வாசலிலே தன் ஆசிரியர் எழிலின்
வருகைக்காக. அவனை முற்றிலும் அறிந்தவரே ஆசிரியர் குமாரி எழில். அவர்
பணியின் அர்ப்பணிப்பின் ஒரு முத்தாய் தேவாவும் இருப்பதை உறுதிப்படுத்திக்
கொள்வார்.
கையில் எழுதுகோலோடும், நெஞில் முறுக்கோடும் நின்றருந்த அவனைப் பார்த்து,
தன் ஹொண்டா ஜஸ் காரை மண்டபத்தின் வாசலிலே நிறுத்துவிட்டு இறங்கினார்; தம்
மடிப்புக் கலைந்த புடைவையையும் கொஞ்சம் சரிப்படுத்திக் கொண்டு தேவாவை
நோக்கி நடந்தார். “வணக்கம். அப்புறம் ரெடியா?” என்று கேட்டதிலே மனதளவில்
முழுவதும் தயாரானான் தேவா. போட்டியின் சூழலோ, மேடையின் பாராட்டுகளோ
ஏதும் அறிமுகமற்ற அவனுக்குப் புதிய அனுபவத்தைக் கொடுத்தாலும், உள்ளே ஒரு
நெருடலும் பயமும் “ வந்த வழியே வீட்டுக்குப் போய்டலாமா?” என்பதை அசரீரியாக
ஒலித்துக் கொண்டே இருந்தது.

“வாயா, பெயரைப் பதிவு செய்துட்டு, உன் பிரிவு போட்டி மாணவர்களுடன்


கலந்துகொள்ளலாம். அப்புறம் போட்டிக்கான விவரங்களைத் தெரிஞ்சுகிட்டு போட்டிலே
கலந்துகோ, ச.” என்ற ஆசிரியர் உரையாடலை முடிப்பதற்குள் தேவா,” டீச்சர் நான்
அப்பாக்குத் தெரியாமதான் வந்தேன். அம்மாக்குத் தெரியும்! ஆனா அப்பகிட்டெ
சமாளிக்க முடியாது, பாவம் டிச்சர் அம்மா. காலைலேயே வங்சா கடைக்குப் போய்
இருபது வெள்ளி சம்பலத்துக்குச் சாமா அடுக்கி வரச் சொன்னார் அப்பா; சரின்டு இங்க
வந்துட்டேன். எதுமே இல்லாத எனக்கு, எப்படி டீச்சர் எழுத வரும்? இப்படியே
போயிறேன்……” என்றான். அமைதி காத்த ஆசிரியர் அவன் தோளைத் தட்டி;
அருகில் அணைத்துப் போட்டி அங்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

போட்டிக்கான நேரம் துவங்கியது. மாணவர்கள் பிரிவு வாரியாகப் போட்டிகளுக்கு


அழைத்துச் செல்லப்பட்டனர். தேவாவும் கதை எழுதுவதற்குத் தயாரானான் அறைக்குள்
நுழைந்ததும். ஹ்ஹ்ம்ம்ம்ம்……..கடவுளே எனப் பெருமூச்சுடன் தாளில் பெயர்
எழுதினான் மற்றொரு கையில் வியர்வைகளைத் துடைத்துக் கொண்டும், கண்கள் அறை
வாசலில் ஆசிரியர் எழிலைத் தேடி அலைமோத. “தேவா உனக்காக எழுது. நான்
வெளியேதன் காத்துக்கிட்டிருப்பேன்…ஓகே” ஆசிரியர் கலைந்திருந்த அவன்
தலையைச் சற்று கோதிவிட்டுச் சென்றதும் அவர் மென்மையான வாசனையும்
அவனைக் கொஞ்ச நேரம் தணிய வைத்தது.
1 மணி நேரத்திற்கு ஏதோ எழுதிய திருப்தியுடன் அறையை விட்டு வெளிவந்தான்
தேவா. தான் வடித்ததைப் பகிர ஆசிரியரைத் தேடினான்; மண்டபம் நோக்கி நடந்தான்.
விட்டா போதும் அடைக்கப்பட்டிருந்து கூண்டைவிட்டு வெளியான கோழியைப் போல
மற்ற மாணவர்களும் ஆசிரியரையும் பெற்றோரையும் நோக்கி ஓடினர். தேடலின்
போது, தாய்தந்தையுடன் பிள்ளைகள் கல கலப்புடன் இருப்பதையும்,
அலவளவுவதையும் கண்டான் தேவா. தன்னில் சற்றுத் தடுமாறி நின்றான். அம்மாவை
நினைத்துப் பார்த்தான்; கண்ணீர் கசிந்தான் குனிந்தவாறு. “டேய்!!” என ஒரு குரல்
அவனை நோக்கி விரைய, பட்டென்று திரும்பினான்.

“ஒங்க அம்மா சொல்லியும் வந்திருகே?? “ பலார் பலார் என அரை விழுந்த


தடையம் தேவாவின் முகத்தில். முரட்டுக் கையால் விழுந்தது; தினமும் வாங்கி
மறுத்தவனாய் அனைவரும் பார்க்க அவமானத்தொடு நின்றான். கேட்க தகாத
கேள்விகளும் வார்த்தைகளும் காதில் வாங்கினான் அவன் அப்பாவைக் கண்டு
அஞ்சியவர்களாய் அனைவரும் நிற்க. ஆசிரியர் எழிலும் அவனை நோக்கி திகைப்பில்
நடந்துவர “ நாந்தான் கூட்டிட்டு வந்தேன்” அவன் அப்பாவை நோக்கி கோபமாக.
குனிந்தவனாய் தேவா.

“டீச்சர் அந்தப் பயனைத் தயாரா நிற்க சொல்லுங்கே. அவன் கதைக்கு முதல்


சிறப்பு பரிசு மலேசியாவின் ஒரு சிறந்த எழுத்தாளரிடமிருந்து. நல்ல கதை எழுத்தாளன்
அவன். இன்னும் கொஞ்ச நேரத்திலே கூப்ட்ருவாங்கே” எனத் தம் வாழ்த்தைத்
தேவாவின் அப்பா முன்னிலையில் ஆசிரியர் எழிலிடம் தெரிவித்துப் புன்னகையில்
நகர்ந்தார் ஆசிரியர் தேன்மொழி. ஒரு கணம் வாய் மூடிய நிலையில் அவன் அப்பா;
தனக்கான அங்கிகாரமாய் உணர்ந்த தேவா நிமிர்ந்து அப்பாவைப் பார்த்தான். “வரேன்
டீச்சர்….” எனக் கலைங்கிய கண்களோடும் அதறிய குரலோடும் ஆசிரியரிடம்
விடைப்பெற்று, மண்டப வாசலை நோக்கி நடந்தான் தேவா, நிமிர்ந்தவனாய்.
மேற்கோள் பட்டியல்

சீனி நைனா,முகம்மது.செ. (2014). தேன் கூடு. பினாங்கு: உங்கள்குரல் எண்டர்பிரைசு.

ஞானமூர்த்தி, தா, ஏ. (2002) இலக்கியத் திறனாய்வியல். சென்னை: யாழ் வெளியீடு.

புதினம்(2016).மொழிநடை:
http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p1013664.htm இல் இருந்து

எடுக்கப்பட்டது.

மோனேஸ். (2015, ஆகஸ்ட்). சிறுகதை திறனாய்வு. Retrieved மார்ச் ஞாயிறு, 2018, from
Scribd: https://www.scribd.com/doc/273285974/
மதன்.க. (2017,Mac). மயில்: உமா பதிப்பகம், 4-5 .

தற்கால தமிழ் இலக்கிய தொகுப்பு. ஈப்போ வளாக ஆசிரியர் பயிற்சி கல்லூரி.

You might also like