You are on page 1of 1

ஒருவன் உறவுகளைப் பெற்றிருப்பது 100 உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதை விட

மேலானாது என்கிறார் ஆங்கில அறிஞர் ஒருவர்.

குறிப்பாக, சகோதர உறவுகள் ஒருவருடய குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக


அமைகின்றன. ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு
கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும்.
எனவே தான் ஒரு குழந்தையின் மனம் மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு சகோதர உறவு
முறை மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஒருவர் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில்
அவர்களுடைய சகோதரர்கள் அவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்கள். கடினமான
நேரங்களில் ஒரு நல்ல ஆசானாகவும, வழிகாட்டியாகவும் சகோதரர்கள் இருப்பார்கள்.
இந்த குணங்களை கொண்ட சகோதரர்கள் நண்பர்களாகவும், அன்பு கொண்டவர்களாகவும்
பாசத்துடன் இருப்பார்கள்.

உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை நமது பண்பாடும் பாரம்பரியமும் வழங்கியிருக்கின்றன. நமது
அன்றாட வாழ்வில் ஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை,
உறவுகளில் சகோதரர்கள் மட்டுமல்லாமல் உறவினர்கள் கூட தங்களுக்குள் மன
ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் ஆதரவாக இருக்க முயலுவார்கள். அவர்களுக்குள்
சொந்தமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் போதும், குடும்ப பிரச்னைகளின் போதும்
ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பார்கள். சகோதரர்கள் அல்லது சகோதரிகள்
ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள். ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தவும்,
தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்வார்கள். எனவே, நட்பைவிட இன்றைய நிலையில்
மட்டுமல்ல எந்நிலையிலும் உறவே மேன்மையானது.

You might also like