You are on page 1of 4

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ 

என ஔவையார் இவ்வுலகிற்கு
உரைத்திருக்கிறார். இப்படிப்பட்ட அரிய பிறப்பைப் பெற்றுள்ள நமக்கு வாழ்க்கை ஒரு
யுத்தமாகவே உள்ளது. ஏனெனில் நம்மிடம் நல்ல குணங்களும் தீய குணங்களும்
கலந்தே உள்ளன. இப்படிப்பட்ட நமது வாழ்வை நிர்ணயிக்கும் பொறுப்பானது
குடும்பத்திற்கே உள்ளது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே அது நல்லவராவதும் தீயவராவதும் குடும்பச் சூழலிலே உள்ளது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்ற முதுமொழியினை போல


மனிதன் ஒன்றுபட்டு சிந்திக்கவும் செயலாற்றவும், பல அபாயங்களில்
இருந்து தப்பி வாழவும், தமக்கான உணவை தேடவும் தொழில்களை
ஆற்றவும், இதன் காரணமாக தான் மனிதன் குடும்பம், உறவுகள், நண்பர்கள்,
அயலவர்கள் என்ற ஒரு சமூக அமைப்பிற்கு உட்பட்டு வாழ்ந்து வருகின்றான்.

“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை” என்ற ஒளவையாரின் கருத்தின் படி நாம்


பிற மனிதர்களோடு புரிந்துணர்வோடும், விட்டுக்கொடுப்போடும் இருக்கின்ற
போது தான் எம்மோடு ஒன்றாக பயணிக்க கூடிய உறவினர்களையோ
நண்பர்களையோ நம்மால் உருவாக்கி கொள்ள முடியம்.

சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வட்டு



விசேஷங்கள்தான். 
கல்யாணத்தில், 
காதுகுத்தில், 
சடங்கில், 
ஊர்த் திருவிழாவில், 
என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில்
கூடி, 
பேசி, 
சிரித்து, 
அழுது, 
கோபம்கொண்டு, 
விருந்து உண்டு, 
கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின்
சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப


வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. 

அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும்


உண்டு என்பது போல, 
உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள்
இருப்பார்கள்தானே? 
அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத்
தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள்


எல்லாம் செஞ்சாரு. 
நீ எங்கே இருக்க, 
எத்தனை பிள்ளைங்க?’ 
என்று கண்கள் மல்க விசாரித்து, 
‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர்
அத்தையின் ஆசீர்வாதம், 
உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா


இருக்கணும்!’ 
என்று உரிமையும், 
கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, 
சித்தியின் சிடுசிடுப்பை, சகித்துக்கொண்டாவது 
சுவகரிக்கத்தான்
ீ வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே,


‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும்,
தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு, 
இந்த உலகில் ஈடு இணை இல்லை.

வடு, 

பேங்க் பேலன்ஸ், 
போர்டிகோவில் பெரிய கார், 
ஆடம்பர வாழ்க்கை 
என எல்லாம் இருந்தும், 
உறவுகள் இல்லை எனில், 
ஒருநாள் இல்லையென்றால், 
ஒருநாள் அந்த பலவனத்தை
ீ உணரத்தான் வேண்டும். 
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ 


என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக் கிடக்கும் மனநிலையை
மாற்றுங்கள்; 

“ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே”


என்பது போல மனிதர்கள் உறவினர்களோ இன்றி ஒரு சமூகதத்தில்
மகிழ்ச்சிகவோ நிம்மதியாகவோ வாழ முடியாது.

தலைமுறைகள் என்றும் தரணியில்


தலை தூக்கி வாழ்ந்திட செழிப்புடன்
செதுக்கிடுமே சொந்தமும், பந்தமும்

யாருமில்லை என்று யாரையும்


ஆண்டவன் படைக்கவில்லை
சொந்த பந்தம் சேர்ந்ததுதான் வாழ்கை

சோர்ந்து விடாமல் சேர்ந்து வாழ


வந்ததுதான் சொந்தம் பந்தம்
உறவுகள் பேணுங்கள்!!! 

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். 


அது ஓர் அழகிய தொடர்கதை!

உறவுகளைப் பரிசளியுங்கள்,
அடுத்த சந்ததிக்கு!!!
அடுத்த தலைமுறைக்கு. !!!

You might also like