You are on page 1of 3

கூட்டுக் குடும்பம்

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.


ஆனால் இன்றோ கூடி வாழ்ந்தால் கோடி இன்னல் என்று நினைக்கிறார்கள். தனிக்
குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள். கூட்டுக்
குடும்பம் என்பது இக்காலத்தில் அரிதிலும் அரிதாகி விட்டது. அதன்
பின்விளைவுகளை இன்று நாம் பல விதத்தில் காண முடிகிறது. தனிக்குடும்ப
வாழ்வில் நாம் மட்டும் விலகி நிற்க வில்லை. அன்பு, பாசம், நேசம்
யாவற்றிலிருந்தும் சிறிது சிறிதாக விலகி தூரமாக்கப்பட்டு விடுகிறோம்.

முன்பொரு காலத்தில் அநேக குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து


வந்தன. கூட்டுக் குடும்பங்களில் சிறு சிறு பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.
இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் வராது.
வந்து மறையும் பிரச்சனைகளாகத்தான் இருக்கும். கூட்டுக்குடும்பம் நம் வாழ்வில்
எத்தனையோ விதத்தில் பயனுள்ளதாகவும் பலமாகவும் இருந்திருக்கிறது. கூட்டுக்
குடும்பமாய் வாழ்வது நம் உடமைக்கும் பொருளுக்கும் குழந்தைகளுக்கும் பெரும்
பாதுகாப்பாக இருக்கும் என்பது வெள்ளிடைமலை.

அது மட்டுமின்றி, கூட்டுக் குடும்பத்தில் வட்டு


ீ வேலைகளைப்
பகிர்ந்து செய்து கொள்ள முடிந்தது. ஒரு நிகழ்ச்சியானாலும் ஒரு
பிரச்சனையானாலும் கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பிருந்தது.
சமையல் எல்லோருக்கும் சேர்த்து ஒரே சமையலாய் இருந்ததால் வண்விரயம்

ஆகாமல் இருந்தது. செலவினங்களும் குறைந்தது. ஏதாவது அசம்பாவிதங்கள்
நடந்தால் காப்பாற்ற, உதவி செய்ய ஆள் இருந்தது. குழந்தைகளைப் பராமரித்துப்
பாசம் காட்ட தாத்தா, பாட்டி இருப்பார்கள். கொஞ்சிப்பேசி மகிழ்ந்து விளையாட
தாய்மாமன் இருப்பார். தூக்கி அணைத்து தூரத்து நிலாவைக் காண்பித்து
அழுகையை நிறுத்த அத்தை இருப்பாள். இப்படி அந்தக் குழந்தை பாசத்துடன்
வளர பேருதவியாக அனைவரும் இருப்பர். ஒரு தலைமைக்குக் கட்டுப்பட்டு
ஒழுக்கமாக, கண்ணியமாக, கௌரவமாக வாழ கூட்டுக் குடும்பம் வழிவகுத்தது.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், மச்சான், மனைவி, மக்கள்
என்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தினரிடையே சுமூகமான
நட்புறவும் இருந்தது. முற்காலத்தில் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு
இல்லாமல் வாழ்ந்து வந்ததற்கு அன்பு, பாசம், நட்பு, மரியாதை ஆகியவை கூட்டுக்
குடும்பத்தில் இருந்ததே முக்கியக் காரணமாகும்.

இப்படி ஒவ்வொரு விதத்திலும் நமக்குச் சிறப்பானதாக


சிறந்து விளங்கிய கூட்டுக்குடும்பம் இன்றைய காலக்கட்டத்தில்
தனிக்குடித்தனமாக உருவாகி விட்டதால் எல்லாவற்றிலுமே நாம் மாற்றங்களைக்
காண முடிகிறது. கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு தனிக்குடித்தனம் என்று போன
பிறகு நாம் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. அதாவது,
கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்லும் இக்காலத்தில் குழந்தைகளைப்
பெரும்பாலும் பிள்ளை பார்த்துக் கொள்ளும் காப்பகத்திலேயே விட்டுச்
செல்கிறார்கள். பள்ளி செல்லும் பிள்ளைகளோ பெற்றோர் வடு
ீ திரும்பும் வரை
பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறார்கள். கணவன் வேலைக்குச் சென்று
விட்டாலோ வெளியூர், வெளிநாடு சென்று விட்டாலோ குடும்பம் தனிமையில்
இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இச்சூழ்நிலை திருடர்களுக்கும் கயவர்களுக்கும்
சாதகமாக அமைகிறது.

அடுத்து, கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில்


விவாகரத்து என்பது விரல்விட்டு என்னும் அளவுக்குத்தான் இருந்தது. இன்றோ
சர்வசாதாரணமாக விவாகரத்து நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. சின்னச்
சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு நேருக்கு நேர் பேசிக்
கொள்வதால் அவசரத்தில் எடுக்கும் முடிவு வாழ்க்கையைச் சின்னா பின்னமாக்கி
விடுகிறது. இதுவே கூட்டுக் குடும்பமாக இருந்தால் யோசித்துப் பேசத் தோன்றும்.
பெரியவர்கள் சொல்லுக்கு மரியாதை இருக்கும். அதனால், அவர்கள்
ஆலோசனைக்குக் கட்டுப்படும் சூழல் ஏற்படும். இரண்டொரு நாளில் சமரசமாகித்
தம்பதியர் மீ ண்டும் பழைய நிலையில் சந்தோசமாக வாழவும் முடியும்,

தொடர்ந்து, அன்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில்


முதியோர் இல்லம் என்று ஒன்று இருந்ததா? இல்லை. இன்றோ புதிது புதிதாக
காணும் இடங்களிலெல்லாம் முதியோர் இல்லம் முளைத்து வருகிறது. நம்
பிள்ளை முதுமையில் அரவணைத்துக் காப்பான் என்று நம்பியிருந்த தாய்,
தந்தையைப் பாரமாக நினைத்து முதியோர் இல்லத்தில் விட்டுச்செல்லும் அவல
நிலையைக் காண்கின்றோம். இச்சூழல் ஏற்படுவதற்குத் தனிக்குடும்ப வாழ்வு
மோகமும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது.
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தனிக்குடும்பத்தைவிட கூட்டுக்குடும்பமே
சிறந்ததாக இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பை நல்குவதோடு
குடும்ப உறவை மேம்படுத்துவதற்கும் கூட்டுக் குடும்பம் உதவுகிறது. ஆகவே, கூடி
வாழ்ந்து கோடி நன்மைகள் பெற்று நாம் அனைவரும் மகிழ்வுடன் இருக்க
முயற்சிப்போமாக!

பின்வரும் வினாக்களுக்கு விடையளித்திடுக.


1. கூட்டுக்குடும்பத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
2. முற்காலத்தில் குடும்பங்களில் விவாகரத்துப் பிரச்சனை குறைவாக
இருந்ததற்குக்
காரணம் என்ன?
3. கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?
(i) அசம்பாவிதங்கள் (ill) கயவர்க ளுக்கும் (iii) சமரசமாகி
4. இன்றைய காலக்கட்டத்தில் முதியோர் இல்லம் அதிகமாகி வருவதற்கான
காரணங்கள்
யாவை?
5. கூட்டுக்குடும்பத்தில் பல நன்மைகள் இருந்தும் ஒருசிலர் தனிக்குடும்பத்தில்
வாழ்வதையே விரும்புகின்றனர். அதற்கான காரணங்கள் யாவை என நீ
கருதுகிறாய்?

You might also like