You are on page 1of 2

குடும்ப நிர்வாகத்தில் அதிகம் சிறந்தவர் அம்மா

இயங்கலை மாணவர் முழக்கம் போட்டியில் இணைந்திருக்கும் அனைவருக்கும் என் மு


த்தமிழ் வணக்கம். இன்று நான் , குடும்ப நிர்வாகத்தில் அதிகம் சிறந்தவர் அம்மா என்பதை
மெய்ப்பிக்கவே களம் இறங்கியுள்ளேன்.

பார்வையாளர்களே,

குடும்ப நிர்வாகத்தை திருவள்ளுவர் ‘ இல்லறவியல்’ என்கிறார். இல்லறத்தை நல்லறம


ாக்கி சிறந்த மேலாண்மை வித்தகர் என்று அழைப்பதற்கு தகுதியானவர் அம்மா. அப்படி அம்
மாவிடம் என்னதான் நிர்வாகத் திறன் இருக்கிறது? எடுத்துரைக்கிறேன் கேளுங்கள்.

முதலாவது திறன் பிள்ளை வளர்ப்பு. பிள்ளை வளர்ப்பு என்றால், அடுத்த சந்ததியின


ரை உருவாக்குதல் என்பதாகும். அதாவது, ஒரு சமூகத்தின் எதிர்காலமே குடும்பம் என்ற கட்ட
மைப்பிடம் கொடுக்கப்படுகிறது. அதில் பெரும் பங்கு வகிப்பவர் அம்மாதான். ‘எந்தக் குழந்தை
யும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அ
ன்னையின் வளர்ப்பினிலே’ என்பதுபோல் ஒரு சிறந்த குடிமகனை உருவாக்கும் ஆணிவேர் அம்ம
ா என்பது வெள்ளிடை மலை.

அவையோரே, இக்கூற்று சாத்தியமா? ஆம் சாத்தியமே. குழந்தைக்கு பாலூட்டுவது,


குளிப்பாட்டுவது, பள்ளிக்கு அழைத்து செல்வது , பாடம் சொல்லித் தருவது , நோயுற்றால் உட
னிருந்து கவனிப்பது, பிள்ளைகளுக்கு ஏற்ற உடையை வாங்கி தருவது , ஆரோக்கியமான உண
வு சமைத்து தருவது , நற்பண்புகளை விதைப்பது, கலை கலாச்சாரங்களை சொல்லி தருவது
என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இன்னும் சொல்லப்போனால், அப்பா இல்லாமல் ஒரு அ
ம்மாவால் தனித்திருந்து பிள்ளைகளை வளர்க்க முடியும். ஆனால், ஒரு அப்பாவால் தனித்துரு
ந்து பிள்ளைகளை வளர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே.

இரண்டாவது திறன் பொருளாதார நிர்வகிப்பு. அன்பர்களே, பொருளீட்டுவது புருஷலட்ச


ணம் என்றார்கள் அன்று. அப்பா சம்பாரிக்கும் பணத்தை அப்படியே அம்மாவின் கையில் கொடு
த்துவிடுவார். அம்மாவோ ‘சிக்கனம் சீரையளிக்கும்’ என்பதற்கேற்ப வீட்டு செலவீனங்களை நெ
றிப்படுத்தி, செலவுகளை வரவுக்குள் நிலை நிறுத்துவார்.ஆனால், இக்காலக்கட்டத்தில், பெரு
ம்பாலான அம்மாக்கள் குடும்ப பண சுமையை ஈடுகட்ட தானும் வேலைக்குச் சென்று பணம் சம்
பாதிக்கிறார்கள்.இன்னும் சிலரோ, பற்பல வழிகளில் சிருதொழில் வியாபாரம் செய்து தங்களின்
குடும்ப பொருளாதாரத்தை சீர்செய்கிறார்கள். இதற்கு சான்று, நமது முகநூலில் பல அம்மாக்
கள் உணவு, அணிச்சல்,அணிகலன்கள் போன்ற பலவற்றை விற்கிறார்கள். எதற்காக ? குடும்ப
பொருளாதாரம் உயர்வதற்கு.

சான்றோர்களே,

மூன்றாவது திறன், குடும்ப உறவுகளை பேணி காப்பது. இதுலும் அம்மாவே அதிகம் சிறந்தவர்
. ‘ தற்காத்து தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்’ என்ற கு
றளுக்கேற்ப குடும்பத் தலைவியாகிய அம்மா தன்னை காத்துக் கொண்டு தன் கணவனையும்
தன்னைச் சார்ந்தவர்களையும் காத்து குடும்ப கடைமைகளை நிறைவேற்றி எந்த சூழ்நிலையிலு
ம் தளர்ந்து விடாமல் வாழ்கிறார். அப்பாவின் உறவுகளை அம்மாவானவர் அகம் மலர வரவேற்று
விருந்தோம்பல் செய்வதை நாம் பார்தத ் ிருப்போம்.உதாரணத்திற்கு, உறவினர் வீட்டு கல்யாணம்
என்றால், அம்மாவே தன் கடமைகளை குடும்பத்தோடு சென்று முறையோடு செய்யும் பக்குவமு
ள்ளவர்.எது யாருக்கு பிடிக்கும், யாருக்கு பிடிக்காது என்று பார்து பார்த்து செய்யும் அம்மா ,ஒ
ரு மெழுகுவர்த்தி. உறவுகளை பேணிக்காப்பதில் அவரே புத்திசாலி.

பார்வையாளர்களே,

இருதியாக, ‘ இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை’ என்பது மூதுரை.அம்மா இல்லை


யேல் குடும்ப நிர்வாகம் சரியாக நடக்காது. அம்மா குடும்பத்தை நல்வழியில் நடத்தும் அகல் வி
ளக்கு. எனவே, குடும்ப நிர்வாகத்தில் அம்மாவே மிகவும் சிறந்தவர் என்று ஆணித்தரமாக கூ
றி அமர்கிறேன்.

நன்றி .

ஆக்கம்:ஏஞ்சலின் டேவிட்

You might also like