You are on page 1of 4

21.03.

1983 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுபன்


_________________________________________________________________________________________________________
பாரத மாதா - மூ
சக்தி அவதாரத்தின் மூலம்விஷ்வத்தின் மேன்மை
(கீதாபாடசாலை நடத்துகின்ற சகோதர சகோதரிகளுடன்)

இன்று பரம ஆத்மா தன்னுடைய மகான் ஆத்மாக்களோடு சந்திப்பதற்காக வந்திருக்கிறார், பாப்தாதா


அனைத்து குழந்தைகளையும் மகான் ஆத்மாக்களாக பார்க்கிறார். உலகத்தினர் எந்த ஆத்மாக்களை
மகாத்மா என்று கூறுகிறார்களோ, அந்த மாதிரி மகாத்மாக்களும், மகான் ஆத்மாக்கள் உங்கள் எதிரில்
என்னவாகத் தென்படுவார்கள்? அனைத்தையும் விட பெரிய மகான் தன்மை, அதன் மூலம் நீங்கள்
மகான் ஆகியிருக்கிறீர்கள், அது என்னவென்று தெரியுமா?

எந்த ஆத்மாக்களை அதிலேயும் முக்கியமாக தாய்மார்களை தகுதியற்றவர்களாக ஆக்கிவிட்டது,


அந்த மாதிரி தகுதியற்ற ஆத்மாக்களை தகுதியானவர்களாக ஆக்கி விட்டது. யாரை கால்களின்
செருப்பு என்று நினைத்தார்களோ, அவர்களை தந்தை கண்களின் மணி ஆக்கி விட்டார். எப்படி
கண்மணி அதாவது கண் பார்வை இல்லையென்றால் உலகமில்லை என்ற பழமொழி இருக்கிறதோ,
அதே போலவே பாரத மாதா சக்தி அவதாரம் இல்லை என்றால் பாரதத்திற்கு மேன்மை இல்லை
என்று பாப்தாதாவும் உலகிற்குக் காண்பிக்கிறார். அந்த மாதிரி தகுதியற்ற ஆத்மாக்களிலிருந்து
தகுதியான ஆத்மா ஆக்கி விட்டார். எனவே மகான் ஆத்மாக்களாக ஆகிவிட்டீர்கள் இல்லையா!
யாரெல்லாம் தந்தையைத் தெரிந்து கொண்டார்கள். மேலும் தெரிந்து தன்னுடையவராக
ஆக்கினாரோ, அவர் மகான். பாண்டவர்களும் தெரிந்து கொண்டார்கள். மேலும் தன்னுடையவராக
ஆக்கினார்களா அல்லது தெரிந்து மட்டும் இருக்கிறார்களா? நீங்கள் தந்தையை தன்னுடையவராக
ஆக்கியவர்கள் தான் இல்லையா! தெரிந்தவர்களின் பட்டியலிலோ அனைவரும் இருக்கிறீர்கள்.
தன்னுடையவர் ஆக்குவதில் நம்பர் ஒன் ஆகி விடுகிறார்கள்.

தன்னுடையவராகி ஆக்குவது என்றால், தன்னுடைய அதிகாரம் அனுபவம் ஆவது, மேலும் அதிகாரம்


அனுபவம் ஆவது என்றால், அனைத்து விதமான அடிமைத்தனங்களுக்கு முடிவடைவது.
அடிமைத்தனம் அனேக விதமானவை. ஒன்று தன்னைப் பற்றி தன்னுடைய அடிமைத்தனம்.
இரண்டாவது அனைவரின் சம்பந்தத்தில் வருவதினால், அது ஞான ஆத்மாக்களாக இருந்தாலும்
இருவர்களின் உறவு தொடர்பு மூலம் அடிமைத்தன்மை. மூன்றாவது இயற்கை மற்றும் சூழ்நிலைகள்
மூலமாக கிடைத்திருக்கும் அடிமைத்தன்மை. மூன்றிலிருந்து ஏதாவது அடிமைத்தனத்தின்
வசமாகியிருக்கிறார் என்றால், அனைத்து அதிகாரம் உடையவர் இல்லை என்று நிரூபணம் ஆகிறது.

தன்னுடையவர் ஆக்குவது என்றால் அதிகாரி ஆவதின் அனுபவம் எப்பொழுதும் மற்றும்


அனைத்திலும் இருக்கும். இது இருக்கிறதா என்று தன்னைப் பாருங்கள். மேலும் சில நேரம் எந்த
விஷயத்தில் ஆகிறது. எந்த விஷயத்தில் ஆவதில்லை என்று பாருங்கள். குழந்தைகளின் உயர்ந்த
எதிர்காலத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியும் அடைகிறார். ஏனென்றால் உலகத்தின் அனேக
விதமான தீயிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள். இன்றைய மனிதன் அனேக விதமான தீயில் எரிந்து
கொண்டிருக்கிறான். மேலும் குழந்தைகள் நீங்கள் சீதளமான கடலின் கரையில்
அமர்ந்திருக்கிறீர்கள். அங்கு கடலின் சீதளமான அலைகளில், அதி இந்திரிய சுகத்தின் அமைதியின்
பிராப்தியில் முழ்கியிருக்கிறீர்கள். அணு குண்டுகள் அல்லது அனேக விதமான குண்டுகளின் அக்னி
ஜூவாலையை கண்டு மனிதர்கள் மிக அதிகம் பயப்படுகிறார்கள். ஆனால் அதுவோ விநாடிகள்
மற்றும் நிமிடங்களின் விஷயம். ஆனால் இன்றைய நாட்களின் அனேக விதமான துக்கம்,
கவலைகள், பிரச்சனைகளின் வித விதமான காயங்கள். ஆத்மாவில் ஏற்படுகிறது. இந்த அக்னி
உயிரோடு இருந்து கொண்டும் எரிக்கும் அனுபவத்தை செய்விக்கிறது. உயிரோடும் இல்லை,
இறக்கவும் இல்லை, விடவும் முடியாது. உருவாக்கவும் முடியாது. நீங்கள் அந்த மாதிரி
வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிரேஷ்ட வாழ்க்கையில் வந்து விட்டீர்கள். எனவே அனைவரின்
மேலும் இரக்கம் வருகிறது. இல்லையா? எனவே தான் ஒவ்வொரு வீட்டையும் சேவை நிலையம்
ஆக்கியிருக்கிறீர்கள். மிக நல்ல சேவையின் இலட்சியத்தை வைத்திருக்கிறீர்கள். இப்பொழுதோ
கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதியில் இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒவ்வொரு தெருவிலும்
ஞான ஸ்தானம் இருக்க வேண்டும். பக்தியில் தேவ ஸ்தானத்தை உருவாக்குகிறார்கள். ஆனால்
இங்கு ஒவ்வொரு வீட்டிலும் பிராமண ஆத்மாக்கள் இருக்கிறீர்கள். எப்படி ஒவ்வொரு வீட்டிலும்
வேறு எதுவும் இல்லையின்றாலும் தேவதைகளின் படங்கள் கட்டாயம் இருக்கும். அதே மாதிரி
ஒவ்வொரு வீட்டிலும் சைதன்ய பிராமண ஆத்மா இருக்க வேண்டும், ஒவ்வொரு தெருவிலும் ஞான
ஸ்தானம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒவ்வொரு தெருவிலும் பிரத்யக்ஷத்தின் கொடி
பறக்கும். இப்பொழுதோ இன்னும் சேவை அதிகம் செய்ய வேண்டியது இருக்கிறது. இருந்தும்
குழந்தைகள் தைரியம் வைத்து எவ்வளவு சேவை செய்திருக்கிறார்களோ அந்த மாதிரி
தைரியமுள்ள குழந்தைகளுக்கு பாப்தாதா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார், மேலும் எப்பொழுதும்
உதவியைப் பெற்றுக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு நல் ஆசீர்வாதமும் கொடுக்கிறார்,. மேலும்
பிறகு எப்பொழுது ஒவ்வொரு வீட்டிலும் தீபத்தை ஏற்றி தீபாவளி கொண்டாடி விட்டு வந்தீர்கள்
என்றால் பரிசும் கொடுப்போம்.

மகான் ஆத்மாக்களுக்கும் சவால் விட்டு தூய்மையான இல்லறத்தை நிரூபித்துக் காண்பிக்கக் கூடிய,


எல்லைக்குட்பட்ட குடும்பத்தின் வீட்டை தந்தையின் சேவை ஸ்தானமாக ஆக்கக் கூடிய,
உண்மையான குழந்தைகளின் பிரத்யக்ஷ பங்கை செய்து கொண்டிருக்கிறார்கள், எனவே அந்த
மாதிரி சேவாதாரி குழந்தைகளைப் பார்த்து பாப்தாதா எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறார்,
இதிலேயும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகம், ஒருவேளை பாண்டவர்கள் ஏதாவது விஷயத்தில்
முன்னுக்குச் செல்கிறார்கள் என்றால், சக்திகளுக்கு எப்பொழுதும் குஷி ஏற்படுகிறது, பாப்தாதாவும்
பாண்டவர்களை முன்னுக்கு வைக்கிறார், சக்திகளை முன்னுக்கு வைப்பது அவசியம் என்று
பாண்டவர்களும் நினைக்கிறார்கள். முதல் முயற்சி என்ன செய்கிறீர்கள்? முரளி யார் படிப்பது? இதில்
கூட பிரம்மா பாபாவைப் பின்பற்றுகிறீர்கள். சிவ தந்தை பிரம்மா தாயை முன்னுக்கு வைத்தார்,
மேலும் பிரம்மா பாபா சரஸ்வதி தாயை முன்னுக்கு வைத்தார்,. அப்படி தாய் தந்தையைப் பின்பற்றி
நடப்பதாக ஆகிவிட்டது இல்லையா! முன்னேற வைப்பதில் முன்னேறுவது அடங்கியிருக்கிறது
என்று எப்பொழுதும் நினைவில் வையுங்கள். எப்பொழுதிலிருந்து பாப்தாதா தாய்மார்களை மேல்
பார்வையை வைத்தாரோ, அப்பொழுதிலிருந்து உலகத்தினரும் முதலில் பெண்கள் என்ற
கோஷத்தை எழுப்பினார்கள். கோஷமிடுகிறார்கள் இல்லையா! பாரதத்தின் அரசியல் கூட
பாருங்கள், ஆண்களும் பெண்களுக்காக மகிமையோ பாடுகிறார்கள் இல்லையா! அந்த மாதிரி ஏதோ
ஒரு வகையில் பாண்டவர்களும் பெண்களே தான்! ஆத்மா பெண் மேலும் பரமாத்மா ஆண்.
அப்படியானால் என்ன ஆனது. ஆத்மா கூறுகிறாள் என்று கூறப்படுவது, மாறாக ஆத்மா கூறுகிறான்
என்ற அல்ல. என்னவாக வேண்டுமானாலும் ஆகிக் கொள்ளுங்கள், ஆனால் நீங்கள் பெண்கள்,
பரமாத்மாவின் எதிரிலோ ஆத்மா பெண்தான். நீங்கள் பிரியதர்ஷினிகள் தான் இல்லையா? அனைத்து
உறவுகளையும் ஒரு தந்தையுடன் வைத்து நடந்து கொள்பவர்கள், இதுவோ நீங்கள் செய்த
உறுதிமொழி இல்லையா! இது பாப்தாதா குழந்தைகளுடன் ஆன்மீக உரையாடல் செய்து
கொண்டிருக்கிறார், அனைவரும் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகள், எப்பொழுதும் ஒரு தந்தையைத்
தவிர வேறு யாரும் இல்லை என்ற இதே ஆனுபவத்தில் எப்பொழுதும் இருப்பவர். அந்த மாதிரி
குழந்தைகள் தான் தந்தைக்குச் சமமான சிரேஷ்ட ஆத்மாக்கள் ஆகிறார்கள். நல்லது.
அந்த மாதிரி எப்பொழுதும் சேவையின் ஊக்கம், உற்சாகத்தில் இருக்கக் கூடிய, எப்பொழுதும்
அனைத்து ஆத்மாக்களுக்காக உயர்ந்த நன்மை பயக்கும் பாவனை வைக்கக்கூடிய, உயர்ந்த தைரியம்
மூலமாக தந்தையின் உதவிக்கு பாத்திரமான ஆத்மாக்களுக்கு, அந்த மாதிரி சேவை ஸ்தானத்திற்கு
பொறுப்பாளாராகியிருக்கும் மகான் ஆத்மாக்களுக்கு, பரமாத்மாவின் அன்பு நினைவுகள் மற்றும்
நமஸ்காரம்.

பார்டிகளுடன்:

பாப்தாதா குழந்தைகளின் விஷேஷ குணங்களைப் பற்றி சொன்னார். பாப்தாதாவிற்கு சமமாக


சேவை செய்யும் குழந்தைகளை பாப்தாதா எங்கே வைத்திருக்கிறார்? (கண்களில்) கண்கள் முழு
உடலிலும் மிகவும் நுண்ணியவை, கண்களில் உள்ள ஒளி எவ்வளவு நுண்ணியது, ஒரு புள்ளி
போலவே உள்ளது. எனவே, தந்தையின் கண்களில் ஒன்றிணைபவர்கள் மிகவும்
நுண்ணியமானவர்கள். மிகவும் அன்பானவர்கள் மற்றும் தந்தையின் அன்பானவர்கள். அப்படியே
உணர்கிறீர்களா? மிகவும் நல்ல வாய்ப்பு நாடகப்படி கிடைத்திருக்கிறது. ஏன் நல்லது என்று
சொல்கிறோம்? ஏனென்றால், நாம் எவ்வளவு பிஸியாக இருக்கிறோமோ, அவ்வளவு மாயையை
வெல்ல முடியும். பிஸியாக இருக்க ஒரு நல்ல வழி கிடைத்திருக்கிறது, இல்லையா? சேவை
என்பது பிஸியாக இருக்க ஒரு வழி. எந்த நேரத்திலும் மாயையின் தடங்கல் வந்தாலும்,
சேவை செய்பவர்கள் முன் வந்து தங்களை சரிசெய்து கொண்டு சேவை செய்வார்கள். என்ன
நடந்தாலும், தன்னை தயார் செய்து தானே முரளி எடுப்பார்கள், இல்லையா? பிறருக்கு சொல்லி
சொல்லியே தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு சேவை
செய்வதன் மூலம் தங்களுக்கும் உதவி கிடைக்கிறது. எனவே, மிகவும் சிறந்த வழி
கிடைத்திருக்கிறது. ஒன்று சுய முயற்சி செய்தல், மற்றொன்று மற்றவர்களின்
ஒத்துழைப்புக்கான வழி. எனவே, இரட்டிப்பாகிவிட்டது, இல்லையா? வீட்டை கையாளும்
சேவையின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள், இதுவும் இரட்டிப்பான லாபம்.இதுவோ
வழியில் நடந்துக்கொண்டிருக்கும் போதே கடவுளெனும் நண்பரால் ராஜ்யம் கிடைத்தது போல.
இரட்டிப்பான லாபம், இரட்டிப்பான பொறுப்பு, ஆனால் இரட்டிப்பான பொறுப்புகள் இருந்தாலும்,
இரட்டிப்பான லேசாக இருக்க தெரிந்தவர்கள், எப்போதும் உலக பொறுப்புகளில் சோர்வடைய
முடியாது, ஏனென்றால் நீங்கள் ஒரு டிரஸ்டி, இல்லையா? ஒரு டிரஸ்டி என்ன சோர்வு? தன்
குடும்பம், தன் இல்லம் என புரிந்து கொண்டால் அது சுமை ஆகும். சொந்தமானது அல்ல
என்றால், சுமை எதற்காக? பாண்டவர்களுக்கு எப்போதாவது உலக நடத்தை, உலக சூழலில்
சுமை என்று தோன்றியதுண்டா? முற்றிலும் அன்பானவர்கள் மற்றும் விலகியவர்கள். குழந்தை
மற்றும் எஜமானன். அப்படி ஒரு போதை இருக்கிறதா? எஜமானனின் போதை மிகவும் நல்லது.
எல்லைக்கப்பாற்பட்ட போதை எல்லைக்கப்பாற்பட்டு செல்லும்.எல்லைக்குட்பட்ட போதை
எல்லைக்குட்பட்டு செல்லும். எப்போதும் இந்த எல்லைக்குட்பட்ட போதையை நினைவில்
கொள்ளுங்கள், தந்தை என்ன கொடுத்தார், அந்த கொடுக்கப்பட்ட கஜானாவை முன்வைத்து,
பின்னர் உங்களைப் பாருங்கள், அனைத்து கஜானாக்களாலும் நிரப்ப பெற்றிருக்கிறீர்களா?
இல்லையென்றால், எந்த கஜானா மற்றும் ஏன் தாரணை ஆகவில்லை என பாருங்கள் மற்றும்
தாரணை செய்யுங்கள். இந்த நேரம் எந்த மாதிரியானது? தந்தையும் சிறந்தவர், ப்ராப்தியும்
சிறந்தது, நீங்களும் சிறந்தவர். சிறப்பு இருக்கும் இடத்தில் நிச்சயமாக ப்ராப்தியும் இருக்கிறது.
சாதாரணமானது என்றால் லாபமும் சாதாரணமானது. நல்லது!

You might also like