You are on page 1of 15

மின் வழிப் பாடம்

வாய்மொழி: வாசிப்பும் உரையாடலும்


இந்தக் காணொளியைப் பாருங்கள்!
இப்போது நீ பார்த்த ஒளிக்காட்சியைப் பற்றி
அடியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப்
பதிலளிக்கும் வகையில் உரையாடுக
• நீ பார்த்த ஒளிக்காட்சியில் குடும்ப உறவை வலுப்படுத்த உதவிய ஒரு
நடவடிக்கையைப் பற்றிக் கூறுக
• ஓய்வு நேரங்களில் உன் குடும்பத்துடன் நீ என்ன செய்வாய்?
• குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவிது முக்கியம்
என்று நீ நினைக்கிறாயா? ஏன்?
நீ பார்த்த ஒளிக்காட்சியில் குடும்ப உறவை வலுப்படுத்த உதவிய
ஒரு நடவடிக்கையைப்
பற்றிக் கூறுக

• குடும்பம் என்பது அம்மா, அப்பா, சகோதரர்கள் சில சமயங்களில் தாத்தா பாட்டியரையும்


குறிக்கும். எல்லாரும் அன்போடு வாழ்வதுதான் குடும்பம். அதற்கு மேல் ஒருவர்
மற்றொருவர்மீது காட்டும் அன்பு மிக முக்கியம். இந்த ஒளிக்காட்சியில் அக்கா தம்பிக்கு
உதவி செய்வதைப் பார்க்கலாம். தம்பிக்கு எட்ட முடியாத இடத்தில் உணவு இருக்கிறது.
அந்த உணவை எடுக்கத் தம்பி ஒரு நாற்காலியில் ஏற முயற்சி செய்கிறான். இதை அக்கா
பார்த்துவிடுகிறார். உடனே அக்கா தம்பியிடம் அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தை எடுத்துச்
சொல்கிறார். பின்னர் அவரே தம்பிக்கு அதை எடுத்துக் கொடுக்கிறார். தம்பிமீது அக்கா
கொண்டுள்ள பாசத்தையும் அக்கறையையும் இது காட்டுகிறது. இப்படி இருப்பதால்
தம்பிக்கு அக்காமீதும், அக்காவுக்குத் தம்பிமீதும் வலுவான ஓர் உறவு ஏற்படுகிறது. மேலும்
அடுத்த காட்சியில் அண்ணன் தங்கை மருந்து மாத்திரைகளைத் தவறாகப் பயன்படுத்தி
ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து அதை பத்திரமாக ஓரிடத்தில் எடுத்து
வைப்பதிலிருந்து அண்ணன் தங்கைமீது கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகிறது.
இதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அன்பைக் காட்டுகிறது.
ஓய்வு நேரங்களில் உன் குடும்பத்துடன் நீ
என்ன செய்வாய்?
• என் குடும்பம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். என் குடும்பத்தில் நானும், என்
பெற்றொரும் என் தங்கையும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். அம்மாவும் அப்பாவும்
வேலை செய்வதால் ஓய்வு நேரம் எங்களுக்குப் பொன்னான நேரம். அந்தச் சமயங்களில்
நாம் வீட்டிலோ வெளியிலோ நேரத்தைச் செலவு செய்வோம். அப்படிச் செய்யும்போது
நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். வீட்டில் இருந்தால் மொனாபொலி, ஸ்கிராபல்
முதலான விளையாட்டுகளை விளையாடுவோம். வாய்ப்பு கிடைக்கும்போது நாங்கள்
திரையரங்கிற்குச் சென்று திரைப்படம் பார்ப்போம், சில சமயங்களில் கடற்கரைக்குச்
சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்போம். இன்னும் சில சமயங்களில் என்
பெற்றோர் எங்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பல இடங்களைக்
காட்டுவார்கள். அப்படிச் செல்லும் போது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்படும்.
குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவிது
முக்கியம் என்று நீ நினைக்கிறாயா? ஏன்?

• நிச்சயமாக அதை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆசிரியர். குடும்ப உறுப்பினர்களை


நாம் பார்ப்பதே அரிது. ஒன்று அவர்கள் வேலைக்குப் போய் சாயுங்காலம் நேரம்
கழித்துத்தான் வீடு திரும்புகிறார்கள். இல்லாவிட்டால் நாம் அவர்கள் தூங்கி
எழுவதற்கு முன்பாகப் பள்ளிக்குச் செல்கிறோம். அவர்களை ஒரு நாள் பொழுதில்
நாம் குறைவாகத்தான் பார்க்கிறோம். பாக்கி நேரத்தில் அவர்கள் நமக்கு வீட்டுப்
பாடங்களைச் செய்ய உதவி செய்கிறார்கள் அல்லது வீட்டு வேலைகளைச்
செய்கிறார்கள். அதுவும் இல்லாவிட்டால் ஏதோ கொஞ்ச நேரம் எல்லாரும் சேர்ந்து
தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்போம். இப்படி இருந்தால் நாம் ஒருவர்
மற்றொருவரோடு பேசக்கூட நேரம் கிடைக்காது. பின் நாம் எப்படி ஒருவரை
ஒருவர் புரிந்துகொள்வது. இப்படி இருந்தால் பிரச்சினைகள்தான் வரும். அதனால்
நிச்சயமாகக் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவிது முக்கியம்.
மாதிரி வாசிப்பு
• இன்று சிங்கப்பூரில் குடும்ப உறுப்பினர்கள் ஒருவர்
மற்றொருவருடன் போதுமான நேரத்தை செலவழிப்பது
அபூர்வம். இந்த நிலை தொடர்ந்து நடக்குமேயானால் குடும்ப
உறவுகள் பாதிக்கப்படும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும்
போதுமான நெருக்கம் ஏற்படாது. இதனால் ஏற்படும்
விளைவுகள் உடனே தெரியாது. நாளடைவில் இது பெரும்
பிரச்சினையாக மாறிவிடும். பிள்ளைகள் பெற்றோரின் சொல்
பேச்சைக் கேட்க மாட்டார்கள். இதனால் அவர்கள் தவறான
பாதையில்கூடச் செல்ல வாய்ப்பு உண்டு. பிள்ளைகளுக்குத்
தம் பெற்றோர்மீது போதுமான நெருக்கம் ஏற்படாமல்
போகும். காலப்போக்கில் முதியோர் இல்லங்களின்
ஆசிரியர் வாசித்ததைக் கேட்டீர்களா?
நீங்களும் அப்படியே வாசிக்க முயற்சி
செய்யுங்கள்!

வெற்றி நிச்சயம்!
4 இது
பனுவல்க வேத சத்தியம்!
ள்

இது

ஜு ஜு பி!
வாசித்துப் பயிற்சி செய்

• குழந்தைகள் தப்பு செய்வது இயல்பு. தாம் செய்வது தவறு


என்று அவர்களுக்குத் தெரியாததால்தான் அவர்கள் அப்படிச்
செய்கிறார்கள். அதனால் பெற்றோர் பிள்ளைகளிடம்
பொறுமையுடன் நடக்க வேண்டும். முதலில் பெற்றோர்
பிள்ளைகள் தவறு செய்வதற்கான வாயப்புகளைக் குறைக்க
வேண்டும். அடுத்து அவர்கள் தவறு என்று கருதுபவற்றைப்
பற்றிப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அது
மட்டும் போதாது, அது ஏன் தவறு என்று கருதப்படுகிறது,
அதைச் செய்வதால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதைப்
பற்றி எல்லாம் குழந்தைகளுக்குப் புரியும்படி எடுத்துக் கூற
வேண்டும். இறுதியாக அவற்றையும் மீறி அதைச் செய்யும்
குழந்தைகளைப் பொறுமையுடன் நடத்த வேண்டும்.
வாசித்துப் பயிற்சி செய்
• சகோதர்கள் எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவர்
மற்றொருவரை நன்கு புரிந்துகொண்டு வாழ வேண்டும். மிக முக்கியமாக
சகோதரர்கள் நல்ல நண்பர்களாகப் பழக வேண்டும். மூத்த சகோதரர்கள்
பொறுப்புடன் நடக்க வேண்டும். தனக்குப் பின் பிறந்தவர்களுக்கு ஒரு
நல்ல முன்ணுதாரனமாகத் திகழ வேண்டும். இளைய சகோதரர்கள் மூத்த
சகோதர்களை மதித்து நடக்க வேண்டும். புரியாதது அல்லது தெரியாதது
ஏதேனும் இருந்தால் அதைப் பற்றிக் கேட்டுத் தெளிந்துகொள்ள
தைரியமாக அவர்களை அணுக வேண்டும். மூத்த சகோதரர்கள்
அதற்கான வாய்ப்பையும் வழியையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.
இதற்கான ஒரே ஒரு வழி உண்மையான அன்பு மட்டுமே ஆகும்.
வாசித்துப் பயிற்சி செய்
• தாத்தா பாட்டியரை யாருக்குத்தான் பிடிக்காது? பெற்றோர்
காட்டும் அன்பையும் பாசத்தையும்விட தாத்தா பாட்டியர்
காட்டும் அன்பானது பெரிது. தாத்தா பாட்டியர் தம் பேரப்
பிள்ளைகள்மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருப்பார்கள்.
அவர்களைச் சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதில் மிகவும்
ஆர்வமாக இருப்பார்கள். எவ்வளவு தொலைவில் தங்கி
இருந்தாலும் வாரத்திற்கு ஒரு முறையாவது பேரப்
பிள்ளைகளைப் பார்க்கச் சிரமம் பாராமல் பயணம்
செய்வார்கள். பேரப் பிள்ளைகள் தம்மைக் காண
வருகிறார்கள் என்றால் உடனே அவர்களுக்குப்
பிடித்தவற்றைத் தயாரிக்க ஆரம்பிப்பார்கள். எவ்வளவு
சிரமப்பட்டாலும் பேரப் பிள்ளைகளின் முகங்களைப்
வாசித்துப் பயிற்சி செய்
• பிறந்தநாள் கொண்டாட்டம் ஆகட்டும் அல்லது வேறு
விழாக்கள் ஆகட்டும் நம் உற்றார் உறவினர்களை அழைப்பது
நம் வழக்கம். இந்த வழக்கம் ஏன் நம்மிடையே அன்றும்
இன்றும் போற்றப்படும் பண்பாக இருக்கிறது? உறவுகள்
எப்போதும் நமக்கு அவசியம். உறவுகளைப் பாதுகாக்க நாம்
மிகவும் கவனத்துடன் நடந்துகொள்கிறறோம். யாருக்கு என்ன
பிடிக்கும் யாருக்கு என்ன பிடிக்காது என்பதை எல்லாம்
நினைவில் நிறுத்துகிறோம். இதனால் நாம் எல்லாரும்
பொறுமையைக் கடைபிடிக்கக் கற்றுக்கொள்கிறோம். அது
மட்டும் இல்லாமல் சகிப்புத்தன்மையையும்
வழக்கமாக்குகிறோம். உறவினர்களை மதிப்பவர்கள்
இப்பாடம்வழி நீங்கள் தெரிந்துகொண்ட புதிய
சொல்வளம்
• இயல்பு – தன்மை (nature)
• பாதிப்பு – விளைவு (effect)
• முன்னுதாரணம் – எடுத்துக்காட்டு (exemplify)
• தெளிந்துகொள்ள – அறிந்துகொள்ள (clarify)
• உற்றார் – நலம் விரும்பிகள் (well-wishers)
• கடைபிடிக்க – பின்பற்ற (follow)
• சகிப்புத்தன்மை – பொறுமை (tolerance)
குடும்ப உறவுகள் பற்றிய சில பொன்மொழிகள்
• நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
• தாயிற் சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க
மந்திரம் இல்லை
• மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல் எனும் சொல்
• ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்
• உறவு போகாமல் கெடும்
நீங்கள்
வெற்றி பெற
என்
மனமுவந்த வாழ்த்துகள்!

You might also like