You are on page 1of 22

சிறுகதை திறனாய்வு

தெய்வக் குற்றம்
கதை சுருக்கம்

சிறு வயது முதலே தன் அக்காவின் ஆடைகளை அணிந்து கொண்டு தன் அழகினை இரசித்துக்
கொண்டு வந்தான் அர்தநாரி. இதனைக் கண்ட அவனது அக்கா அவனிடம் பலமுறை
வாக்குவாதங்கள் செயததுண்டு. இருப்பினும், அவனது அம்மா அவனை ஒன்றும் குறை
சொல்லாது மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்தார். உறவினர்களும் அவனை வெறுத்து ஒதுக்கினர்.
ஒரு நாள், தன் அக்காவைப் பெண் பார்க்க வரும் போது அர்தநாரி வீட்டில் இருந்தால் காரியம்
நிறைவேறாது என்று அவனது அப்பா எண்ணினார். உடனே அவனது அம்மாவிடம் கூறி
அவனைக் கோவிலுக்கு அனுப்பி வைத்தனர். தன் அம்மாவே தன்னை வெறுத்து ஒதுக்க
ஆரம்பித்துவிட்டார் என்பதை அவன் உணர்ந்தான். கோவிலிருந்து வீடு திரும்பியவன் அன்று
யாரிடமும் பேசவே இல்லை. அன்றிரவு தன் வீட்டை விட்டு யாருக்கும் தெரியாது
வெளியேறினான். மன உலைச்சலில் இரயில் தண்டவாளத்தில் நின்று தன் உயிரை மாய்த்துக்
கொள்ள முயற்சித்தான். இருப்பினும், அது நிறைவேறாது போனது.

2
உடனே அந்த இரயிலிலே ஏறி எங்கே செல்வதென்று அறியாது பயணம் செய்ய தொடங்கினான்.
இரயிலில் பரிசோதனையாளர் அவன் எங்கு அமர வேண்டும் என்பதை ஏழனமாகக் கூறினார்.
அவ்விடத்தில் தன்னைப் போன்ற பலரும் இருப்பதைக் கண்டு வியந்தான். அவர்களும்
அவனைத் தங்களுள் ஒருவராக இணைத்துக் கொண்டனர். அவர்கள் அங்கிருந்து கூத்தாண்டவர்
கோவில் திருவிழாவிற்குச் சென்றனர். திருவிழா முடிந்ததும் மீண்டும் தனது ஊர் வழியாக வந்து
கொண்டிருக்கும் வேளையில் சுடுகாட்டில் ஒரு பிணம் எறிந்து கொண்டு இருப்பதைக்
காண்கிறான். அவனது மனதில் பல எண்ணங்கள் அலையாக பாய்ந்து செல்கின்றன. ஜன்னலின்
இடுக்கில் இருந்த நாளிதழை எடுத்துப் படிக்கையில் தனது புகைப்படம் ‘காணவில்லை’ என்ற
தலைப்பின் கீழ் இருப்பதைப் பார்க்கிறான். அடுத்தச் செய்தியாக தனது அம்மாவின் புகைப்படம்
‘கண்ணீர் அஞ்சலி’ என்ற தலைப்பிந் கீழ் இருப்பதைக் கண்டு அழுகிறான். எண்ணங்கள் தன்
ஊரில் எறிந்து கொண்டிருந்த பிணத்தை நோக்கி செல்கின்றன. இருப்பினும் தனது துக்கத்தை
வெளியே காட்டிக் கொள்ளாது, இரயில் போகும் பாதையில் தன் வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள அவன் தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

3
கரு தீண்டாமை

 திருநங்கைகளும் ஒரு வகை பாலினம்தான்


என்ற பொது அறிவைக் கூட பெறாத சில
மனிதர்கள் இன்றும் அவர்களை வெறுத்து
ஒதுக்குகின்றனர்.
• அக்காவைப் பெண் பார்க்க வரும் போது,
அர்தநாரி வீட்டில் இருந்தால் நல்லதல்ல என்று
நினைத்து அவனது பெற்றோர்கள் அவனைக்
கோவிலுக்கு அனுப்பி வைப்பர்.
• அந்தநாரியின் உறவினர்களும் அவனை எங்கு
பார்த்தாலும் வெறுத்து ஒதுக்குவர்.

4
துணை கரு

உணர்வுகளை மதித்தல்
• யாரும் அர்தநாரியின் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளாது, அவனை
உதாசினப்படுத்திக் கொண்டே இருப்பர்.

குழந்தைகளை அக்கறையோடு வளர்த்தல்


• அர்தநாரியின் பெற்றோர்கள் அவனது இந்த உணர்ச்சி மாற்றங்களை அறிந்து,
அவனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.

அனைத்து மனிதர்களையும் சரிசமமாக நடத்துதல்


• அர்தநாரியின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பரிசோதனையாளர் அனைவரும்
திருநங்கைகளையும் சரிசமமாக நடத்த வேண்டும்.

5
முதன்மை கதை துணை கதை
மாந்தர்கள் மாந்தர்கள்

அம்மா அப்பா

நான் அக்கா உறவினர்கள்


(அர்தநாரி)
கோவில் அர்ச்சகர் பரிசோதனையாளர்

மற்ற திருநங்கைகள்

6
நோக்குநிலை
அகநோக்குநிலை

சிறுகதையில் முதன்மை
கதாபாத்திரமே கதையைக் கூறுவதாக
அமைந்துள்ளது.
• “எங்கள் குலதெய்வக் கோவில்
இதுதான். அதனால்தான் அப்பா
எனக்கு அர்தநாரி என்று பெயர்
வைத்தாக அடிக்கடி சொல்வார்.”
காலப் பின்னனி

அரை மணி
காலை மாலை இரவு
நேரம்

பொழுது
பின்னிரவு
விடியும் நேரம்

8
இடப் பின்னனி

வீடு
கூத்தாண்டவர்
கோவில்
இரயில் கோவில்

ஆற்றுப்பாலம்
சுடுகாடு
இரயில்
புழக்கடை
தண்டவாளம்

9
சமுதாயப் பின்னனி

திருநங்கைகளை இழிவாகப் பார்க்கும் சமுதாயம்

அதனாலேயே நண்பர்கள் ஒவ்வொருவராக என்னைவிட்டு விலகலானார்கள்.


அம்மாவைக் கூப்பிட்டு தலைமை ஆசிரியர் ஏதோ சொல்ல, பள்ளிக்குச்
செல்வதும் அதோடு நின்றது. வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும்
உறவுகளும் கூட என்னை ஒதுக்கத் தொடங்கினர்.

குடும்ப உறுப்பினர்களையே தாழ்வாகப் பேசும் சமுதாயம்

அப்பா என்னைப் பார்த்தாலே தலையில் அடித்துக்கொள்வதும் சமயத்தில்


நேரடியாகவே "போன ஜென்மத்துப் பாவம், இப்படி வந்து பிறந்திருக்கு" என்று
சொல்லக் கேட்கும்போதும், எதிரில் பார்க்கும்போதெல்லாம் 'சனியனே’ என்ற
அக்காவின் அர்ச்சனையும் என்னைக் கூனிக்குருகச் செய்தது.

10
மற்றவர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத சமுதாயம்

ஒற்றை நூலில் தொங்கும் சிலந்தி எதிர்பாராமல் வந்த காற்றின் வேகத்தில்


நுலறுந்து திசை தெரியாமல் எங்கோ போய் சேர்வது போல் "நீ இங்கே
இருக்கக்கூடாது”. என்று அம்மா சொன்ன சொல், என்னை வாழ்வின்
எல்லைக்கே துரத்தியது.

தற்கொலையைத் தீர்வாக எண்ணும் சமுதாயம்

இதோ, முகவிளக்கின் வெளிச்சத்தில் கண்கள் கூச ‘தடக் தடக்' என்ற சப்தம்


என்னை நெருங்க தண்டவாளத்தை மேலும் நெருங்கி கண்களையும் இறுக
மூடிக்கொண்ட நான் என் முடிவைத் தேடிக்கொள்ளத் தயாரானேன்.

11
மொழிநடை

• தூரத்தே ‘தடக் தடக்’ என்ற இரயிலின் சப்தம்...(ப.4)


அடுக்கு மொழி • நான் திருவிழாவில் தொலைந்துபோன
பயன்பாடு குழந்தையைப்போல் மலங்க மலங்க விழித்தப்படி
நின்றேன். (ப.6)

• உணர்ச்சி வருணனை: “அய்யோ, அம்மா” என்று


கதறியவன், அம்மாவின் புகைப்படத்துடன் இருந்த
அந்த நாளிதழை முகத்தில் மூடிக்கொண்டு
வருணனை கதறலானேன். (ப.7)
• கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் பட்டு கேசரி
உப்புக்கரித்தது. (ப.4)

12
• “என்ன, புதுசா? நாங்கள்ளாம் இருக்கோம்
கவலைப்படாதே...” (ப.6)
• “அவங்கள்ளாம் வரும்போது நீ இங்க
பேச்சு வழக்குச் இருக்கக்கூடாது”. (ப.2)
சொற்கள் • “அரம்பிச்சிட்டீங்களா, விடிந்ததும் விடியாததுமா” என்று
அம்மா கடிந்து கொள்ள....” (ப.1)
• “சனியனே, எதுக்கு என் துணியெல்லாம் நீ எடுக்கற....”
(ப.1)

• “படியில் ஏன் நிக்கிறே, ஒங்க ஆளுங்கள்லாம் அந்த


கடைசி கம்பார்மெண்டில் இருக்காங்க பார்...” (ப.5)
பிறமொழிச்
• சிக்கனல் மாறி பச்சை விளக்கு எரிய... (ப.5)
சொல்லாட்சிகள்
• “நான் ப்ரஷ்ஷையும் பேஸ்டையும் எடுத்துக் கொண்டு
கொல்லைப்புறமாக ஓட்டம் பிடித்தேன். (ப.1)

13
• ஒற்றை நூலில் தொங்கும் சிலந்தி
எதிர்பாராமல் வந்த காற்றின் வேகத்தில்
நூலறுந்து திசை தெரியாமல் எங்கோபோய்
உவமைகள்
சேர்வது போல் “நீ இங்கே இருக்கக்கூடாது”,
என்று அம்மா சொன்ன சொல், என்னை
வாழ்வின் எல்லைக்கே துரத்தியது. (ப.3)

14
அர்தநாரி

 பாசமானவர் பண்புக்கூறு
 குழப்பதில்
அப்பா
இருப்பவர்
 ஏக்கம் கொண்டவர்
 பிள்ளைகள் உணர்வைப்
அம்மா புரிந்து கொள்ளாதவர்
 அக்கறை இல்லாதவர்
 பாசமானவர்  சரிசமமாக பார்க்கத் அக்கா
 குடும்பத்தின் மீது தெரியாதவர்
 அன்பு காட்டத்
அக்கறை
கொண்டவர் தெரியாதவர்
 சமயோஜித புத்தி  மரியாதை தெரியாதவர்
 சுயநலவாதி
கொண்டவர்

15
படிப்பினை

நாம் என்றும் தற்கொலையை ஒரு சிக்கலின் முடிவாக ஏற்றுகொள்ள கூடாது

தற்கொலை என்பது ஒரு பிரச்சனையின் நிரந்தர தீர்வாகாது.

தன்னை அனைவரும் தூற்றி/ ஒதுக்கிறார்கள் என்று அறிந்ததும் இரயில் முன் சென்று


தண்டவாளத்தில் படுத்தான்.

திருநங்கையாக இருப்பது ஒரு குற்றமல்ல என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.


எளிதில் துவண்டு விடக் கூடாது.
பெற்றோர் பிள்ளைகளின் நிலையை ஏற்று கொள்ள வேண்டும்

சான்று : அப்பா
என்னைப்பார்த்தாலே
அர்த்தநாரி என்று
தலையில்
பிள்ளைக்குப் பெயர்
அடித்துக்கொள்வதும்
வைத்திருந்தாலும்
சமயத்தில்
பிள்ளை திருநங்கையாக
நேரடியாகவே “போன
மாறி வருவதை ஏற்றுக்
ஜென்மத்துப் பாவம்,
கொள்ள முடிவதில்லை.
இப்படி வந்து
பிறந்திருக்கு” என்பார்.

பிள்ளையின்
உணர்வுகளை ஏற்று ஊராரின் கருத்துக்கு
அவர்களுக்கு முக்கியத்துவம்
உறுதுணையாக இருக்க கொடுக்கக் கூடாது.
வேண்டும்.
யாரையும் ஒதுக்கக் கூடாது

ஆண் பெண் போல


அனைவரிடத்திலும் சமமாக தவறான வார்த்தைகளை
திருநங்கையும் ஒரு
பாகுப்பாடில்லாமல் பழக உபயோகித்து திட்ட கூடாது
பாலினமாக ஏற்று கொள்ள
வேண்டும். (சனியனே)
வேண்டும்

அக்கம்பக்கத்தில்
சகநண்பர்களில் யாராவது உள்ளவர்களும்
திருநங்கையாக இருந்தால் உறவினர்களும் தூற்றி
அவர்களை விலகி பேசாமல் மற்றவர்களிடம்
செல்லக்கூடாது. பழகுவதைப் போல
இயல்பாக பழக வேண்டும்.
பிறர் செலுத்தும் அன்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.

தன் தம்பி தன்


மீது செலுதும் தன் பையனை
அன்பிற்கு சுமை என்று
மதிப்பளிக்காத கருதும் தந்தை.
அக்கா.

மகன் தன் மீது


கொண்டுள்ள
அன்பினையும் உற்றார்
நம்பிக்கையும் உறவினர்கள்
உணராமல் அவனை
அவனின் வெறுக்கும்
உணர்ச்சிகளைக் நிலையையும்
கொள்ளும் காண இயலுகிறது.
அன்னை.
பாலினம் பிள்ளைகளின் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது

பள்ளியின் தலைமையாசிரியர் அர்த்தநாரி திருநங்கையாக மாறுகிறான் என்று


அறிந்ததும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கூறினார்.

அர்த்தநாரியின் கல்வி அதிலிருந்து முடிவுக்கு வந்தது.

கல்வி என்பது அனைத்துப் பாலினத்திற்கும் சமமான ஒன்றாகும். அதனை பிரித்துக்


கொடுக்கக் கூடாது.

மாதா, பிதா பின் குருவாக இருக்கும் தலைமையாசிரியர் ஒவ்வொரு மாணவரின்


உணர்வுகளைப் புரிந்து கொண்டு சமமான கல்வியைக் கொடுக்க வேண்டும்.
பல இன்னல்களிலும் மனம் தளராமல்
தன்னபிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மற்றவர்களின் ஆசைகளுக்கு மதிப்பளிக்க
வேண்டும் “புதிய மனிதர்கள் புதிய உலகம் புதிய பயணம்
என்று நானும் அவர்களில் ஒருவரானேன்”
அர்த்தநாரி தன் அக்காவின் துப்பட்டாவை
அணிந்ததால் அவள் கடுமையான சொற்களைப் “பாலத்தைக் கடந்த பின் தடக் தடக் என்ற
பயன்படுத்துகிறாள். ரயிலின் சீரான தொடர் சப்தம், வாழ்க்கைப்
பயணம் இன்னும் வெகுதூரம் இருப்பதை
என்னுள் உணர்த்தியது”
நன்றி

22

You might also like