You are on page 1of 20

புணர்ச்சி

படைப்பாளர்கள்: சொற்கள் ஒன்றோடொன்று


காயத்திரி
யமுனா சேருவது புணர்ச்சி எனப்படும்.
ரஜியா பேகம்
பிரியதர்சினி
உயிர் முன்
உயிர்ப் புணர்ச்சி
1) இ, ஈ, ஐ ஈறுகள் + உயிர்
 நிலைமொழி இறுதியில் இ, ஈ, ஐ ஈறு இருந்தால் இடையில் யகர(ய்)
உடம்படுமெய் வந்து அடுத்த உயிருடன் சேர்ந்து உயிர்மெய் ஆகிறது.

 எடுத்துக்காட்டு :

நிலைமொழி வருமொழி

 மணி + அடித்தான் - மணி + ய் + அடித்தான் = மணியடித்தான்

ண் + இ

உயிர் எழுத்து யகர உடம்படுமெய்


 தீ + அணைந்தது - தீ + ய் + அணைந்தது = தீயணைந்தது

த் + ஈ

உயிர் எழுத்து யகர உடம்படுமெய்

 மலை + அருவி - மலை + ய் + அருவி = மலையருவி

ல் + ஐ

உயிர் எழுத்து யகர உடம்படுமெய்


உதாரணங்கள்
1. தீ (த்+ஈ) + எரிந்தது = தீயெரிந்தது
2. வாழை (ழ்+ஐ) + இலை = வாழையிலை
3. கிளி (ள்+இ) + அழகு = கிளியழகு
4. துணி (ண்+இ) + எடு = துணியெடு
5. வேலை (ல்+ஐ) + ஆள் = வேலையாள்
6. பனை (ன்+ஐ) + ஓலை = பனையோலை
2) அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ ஈறுகள் + உயிர்

 அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஔ என்ற ஈறுகள் இருந்தால் வகர(வ்) உடம்படுமெய் வந்து,


வருமொழி முதல் உயிர் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய்யாகிப் புணரும்.

 எடுத்துக்காட்டு :

 நிலா + ஒளி - நிலா + வ் + ஒளி = நிலாவொளி

ல் + ஆ

உயிர் எழுத்து வகர உடம்படுமெய்


 ஔ + எழுது - ஔ + வ் + எழுது = ஔவெழுது

உயிர் எழுத்து வகர உடம்படுமெய்

 உரு + ஆக்கம் - உரு + வ் + ஆக்கம் = உருவாக்கம்

ர் + உ

உயிர் எழுத்து வகர உடம்படுமெய்


உதாரணங்கள்
1. பல (ல்+அ) + இடங்கள் = பலவிடங்கள்
2. திரு (ர்+உ) + அருள் = திருவருள்
3. மா (ம்+ஆ) + இலை = மாவிலை

4. அப்பா (ப்+ஆ) + உடன் = அப்பாவுடன்

5. நிலா (ல்+ஆ) + அழகு = நிலாவழகு

6. கோ (க்+ஓ) + இல் = கோவில்


3) ஏ ஈறு + உயிர்

 நிலைமொழியில் ஏ ஈறு இருந்தால், அது பெயர்ச்சொல் என்றால்


வ் என்ற உடம்படுமெய்யும் இடைச்சொல் என்றால் ய் என்ற
உடம்படுமெய்யும் வரும்.

 உடம்படுமெய் வரும் புணர்ச்சியில், ஏகார ஈற்றில் ய் வருவதே


ஒலியியல்பு; வ் வருவது பொருட்கூறு சார்ந்து செயற்கை
ஏற்பாடேயாகும்.
தே - பெயர்ச்சொல்

 தே + உலகம் - தே + வ் + உலகம் = தேவுலகம்

த் + ஏ

உயிர் எழுத்து வகர உடம்படுமெய்

தே என்பது தெய்வம் என்ற பொருளில் வந்த பெயர்ச்சொல். எனவே, இந்த


ஏ ஈறு வகர உடம்படுமெய் பெற்றது.
 அதே + இடம் - அதே + ய் + இடம் = அதேயிடம்; தே(த்+ஏ)

த் + ஏ

உயிர் எழுத்து யகர உடம்படுமெய்

அதே என்ற சொல்லிலுள்ள (அது + ஏ) ஏ என்பது உறுதிப்பொருள் தரும்


ஏகார+இடைச்சொல். எனவே, இந்த ஏ ஈறு, யகர உடம்படுமெய் பெற்றது.
உதாரணங்கள்
1. சே (ச்+ஏ) + அழகு = சேவழகு (பெயர்சொல்)
2. சே (ச்+ஏ) + அடி = சேவடி (பெயர்சொல்)
3. தே (த்+ஏ) + ஆரம் = தேவாரம் (பெயர்சொல்)
4. அதுவே (வ்+ஏ) + இது = அதுவேயிது (இடைச்சொல்)
அல்வழிப் புணர்ச்

ஒரு சொற்றொடரில்
வேற்றுமை அல்லாத
பொருளில் சொற்கள்
புணர்வது அல்வழிப்
புணர்ச்சி எனப்படும்.
அல்வழிப்
புணர்ச்சி வகைகள்
1. வினைத்தொகை 2. பண்புத்தொகை
(மூன்று காலத்தை அடங்கியிருக்கும்) (ஆகிய / ஆன மறைந்து வரும்)
• தொடுவானம் • செந்தாமரை
• சுடுகாடு • செந்தமிழ்
• குடிநீர் • வெண்ணிலா
• வளர்பிறை • நீலவானம்

3. உவமைத்தொகை 4. உம்மைத்தொகை
(போல மறைந்திருக்கும்) (உம் மறைந்திருக்கும்)
• தாமரைமுகம் • அருமை பெருமை
• கயல் விழி • மேடு பள்ளம்
• கார் குழல் • ஆடல் பாடல்
• முத்து பல் • இரவு பகல்
5. அன்மொழித்தொகை
6. எழுவாய்த்தொடர்
(இயல்பாக பொருள் வராமல்
(முதல் சொல் எழுவாய்)
வேறொது பொருளைக் குறிப்பது)
• மாடு மேய்ந்தது.
• பொற்றொடி
• சிவா உறங்கினான்.
• தேன்மொழி
• மான்விழி பார்த்தாள்.
• பூங்குழல்
• கண்ணன் வந்தான்.
• வளர்மதி

7. விளித்தொடர் 8. பெயரெச்சத்தொடர்
• நண்பா வா ! • பார்த்த படம்
• இங்கே வா ! • வீசிய குப்பை
• மயிலே ! நீ தூது சொல்வாயோ? • வந்த மனிதர்
• படித்த புத்தகம்

9. வினையெச்சத்தொடர்
• செய்து பார்
• விரைந்து ஓடினான்.
• கூடி மகிழ்ந்தனர்.
• உண்டு களித்தனர்.
10. தெரிநிலை வினைமுற்றுத்தொடர் 11. குறிப்பு வினைமுற்றுத் தொடர்
• உறவினர் வந்தனர். • செல்வன் சென்றான்
• கரைத்தது காகம். • நடிகன் விழுந்தான்
• சரிந்தது கட்டடம். • மலைநாடன் வந்தான்
• உடைந்தது கண்ணாடி. • நெடியன் பாடினான்

12. இடைச்சொற்றொடர் 13. உரிச்சொற்றொடர்


• இனிப் பேசேன். • சாலப் பேசினார்.
• மற்றொன்று • உறு பொருள்.
• அவன் வாளா இருந்தான் • சாலப் பேசினான்.
• அவன்தான் மனிதன் • கடி மணம்.

14. அடுக்குத்தொடர்
• பாம்பு பாம்பு
• போ போ
• வா வா
• குழந்தை குழந்தை
வேற்றுமை புணர்

நிலைமொழியும் வருமொழியும்
வேற்றுமைப் பொருளில் புணரும்
பொழுது அவ்விரு சொற்களுக்கும்
இடையே ஆறு வேற்றுமைகளுக்கு
உரிய உருபுகள் மறைந்தோ அல்லது
வெளிப்பட்டோ வருவதே வேற்றுமை
புணர்ச்சி ஆகும்.
வேற்றுமை புணர்ச்சி வகைகள்

வேற்றுமை உருபுகள்
தொக்கி (மறைந்து)
வருவது வேற்றுமை
தொகை எனப்படும். அவ்வேற்றுமை உருபுகள்
தொகாது (மறையாது)
விரிந்து வருவது
வேற்றுமை விரி என்று
கூறப்படும்.
எடுத்துக்காட்டுகள்
வேற்றுமைத் தொகை உருபு வேற்றுமை விரி

• பால் குடித்தான் ஐ • பாலைக் குடித்தான்


• கம்பன் பாடினான் • கம்பனைப் பாடினான்
• தலை வணங்கினான் ஆல் • தலையால் வணங்கினான்
• வாழ் வீழ்த்தினான் • வாழால் வீழ்த்தினான்
• அரசன் மகன் கு • அரசனுக்கு மகன்
• நோய் மருந்து • நோய்க்கு மருந்து
• மழை வீழ் அருவி இன் • மலையின் வீழ் அருவி
• ஊர் நீங்கினான் • ஊரின் நீங்கினான்
• மலை உச்சி அது • மலையினது உச்சி
• தமிழர் பண்பு • தமிழரது பண்பு
• மாடப் புறா கண் • மாடத்தின் கண் புறா
• மரக்கிளி • மரத்தின் கண் கிளி
நன்றி

You might also like