You are on page 1of 55

தொகைநிலைத்

தொடர்கள்
சொற்றொடர் அல்லது தொடர்
• சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள்
• தருவது சொற்றொடர் அல்லது தொடர் எனப்படும்.
• சான்று முருகன் சிரித்தான்.
• வெண்சங்கு ஊதினான்.
தொகை என்றால் தொக்கி அல்லது மறைந்து என்று
பொருள்.
தொகையல் என்பது என்ன?

தொகையல் என்பது என்ன?


தேங்காய், பருப்பு, பூபூ ண்டுஇவை மறைந்து ஒரு புதிய
பொருளாக உருவு பெற்றதைத்தான் தொகையல் என்று
கூகூ றுவோம். துவையல் என்று அழைப்பதும் உண்டு.

தொகை….. மறை ந் து வரு தல் ,


தொகைநிலைத் தொடர்
பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் பெயர்ச்சொல்லும் சேரும்
தொடரின் இடையில், வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு
முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) இரண்டு அல்லது அதற்கும்
மேற்பட்ட
சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனைத் தொகைநிலைத்
தொடர் என்று கூறுவர்.
எ. கா : கரும்பு தின்றான், கரும்பு தின்றாள்.
இதில் 'ஐ' உருபு மறைந்து வருகிறது
தொகைநிலைத்தொடர் ஆறு
வகைப்படும்
1. வேற்றுமைத்தொகை
2. வினைத்தொகை
3. பண்புத்தொகை
4. உவமைத்தொகை
5. உம்மைத்தொகை
6. அன்மொழித்தொகை
1) வேற்றுமைத்தொகை
• ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் (ஐ, ஆல், கு, இன், அது,
கண்) ஆகியவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள்
உணர்த்துவது வேற்றுமைத்தொகை.
• எ.கா: பால் பருகினான் … பாலைப் பருகினான்.
• இதில் ‘ஐ' என்ற உருபு மறைந்து நின்று பொருள்
உணர்த்துகிறது. எனவே இது
• வேற்றுமைத்தொகை எனப்படும்.
வேற்றுமை நினைவு கொள்ளல்
• வேற்றுமை….. பெ யர்ச்சொல்லின்பொருளைவேறுபடுத்துதலை
வேற்றுமை என் .
று கூகூ றுவர்
• சான்று. ஆசிரியர் பாராட்டினார்
• ஆசிரியரைப் பாராட்டினர்.
• முதல்தொடரில்ஆசிரியர் பாராட்டுகிறார்.
• இரண்டாம்தொடரில்பாராட்டப்படுப வர் ஆசிரியர்.
வேற்றுமை வகைகள்
• வேற்றுமை எட்டு வகைப்படும்.
• 1.முதல் வேற்றுமை ……. உருபு இல்லை “எழுவாய்”
• 2.இரண்டாம் வேற்றுமை ……. “ஐ” ….. “செயப்படுபொருள்”
• 3.மூமூ ன்றாம்
வேற்றுமை …….. “ஆல்” ….. “கருவிப்பொருள்”
• 4.நான்காம் வேற்றுமை ……… “கு” …….. “கோடற் பொருள்”
• 5.ஐந்தாம் வேற்றுமை ………. “இன்” …… “நீங்கல் பொருள்”
• 6.ஆறாம் வேற்றுமை ……….. “அது” …….“கிழமைப் பொருள்’’
• 7.ஏழாம் வேற்றுமை ………… “கண்”……. “இடப் பொருள்”
• 8.எட்டாம் வேற்றுமை ………… உருபு இல்லை. … “விளி”


சான்றுகள்
மோர் குடித்தான்…, திருக்குறள் கற்றான் என்ற தொடர்களில் “ஐ” என்ற உருபு மறைந்து
வருவதால் இரண்டாம் வேற்றுமைத்தொகை ஆயிற்று.

“மோரைக் குடித்தான்” “ திருக்குறளைக் கற்றான்” .


தலை வணங்கினான்.., கைதொழுது… ஆகிய தொடர்களில்
“ஆல்” மூ ன்
மூ றாம்
வேற்றுமை உருபு மறைந்து வருவதால் மூ ன்றாம்
மூ
வேற்றுமைத் தொகை ஆயிற்று.

“தலையால் வணங்கு” “கையால்


தொழுது”
சப்பாத்திக் குருமா.., தசரதன் மகன் இராமன்.. என்ற தொடர்களில் “கு” என்ற நான்காம்
வேற்றுமை உருபு மறைந்து வருவதால் நான்காம் வேற்றுமைத்தொகை ஆயிற்று.

“சப்பாத்திக்கு குருமா” “ தசரதனுக்கு மகன் இராமன்”


மலைவீழ் அருவி ….. ஊர் நீங்கினான் … என்ற தொடர்களில் “இன்” என்ற உருபு மறைந்து
வருவதால் ஐந்தாம் வேற்றுமைத்தொகை. ஆயிற்று.

“மலையின் வீழருவி” “ ஊரின் நீங்கினான்”


புலித்தோல்.., மலர் நீட்டம்.., என் சட்டை... என்ற தொடர்களில் “அது” என்ற உருபு மறைந்து
வருவதால் ஆறாம் வேற்றுமைத்தொகை ஆயிற்று.

“புலியினது தோல்” “ மலரது நீட்டம்” “ எனது சட்டை”


குகைப்புலி…., மணியொலி….. என்ற தொடர்களில் “கண்” என்ற உருபு மறைந்து வருதால் ஏழாம்
வேற்றுமைத்தொகை ஆயிற்று.

“குகைக் கண் புலி.” “ மணியின்கண் ஒலி”


உருபும் பயனும் உடன்தொக்க
தொகை
• ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன்
பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து
மறைந்து வருவது உருபும் பயனும் உடன்
தொக்க தொகை எனப்படும்.
“தேர்ப்பாகன்”
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை

இத்தொடர் "தேரை ஓட்டும் பாகன்" என விரிந்து


பொருளை உணர்த்துகிறது.
இதில் 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும்
"ஓட்டும்" என்னும் பொருளை விளக்கும் பயனும்
மறைந்து வந்துள்ளன.
“பொற் குடம்”
மூமூ ன்
றாம்
வேற்றுமை உருபு
ம் பயனும்
உடன்தொக்க தொகை

இத்தொடர் “பொன்னால் ஆகிய குடம்" என


விரிந்து பொருளை உணர்த்துகிறது.
இதில் ‘ஆல்' என்னும் மூன்றாம் வேற்றுமை உருபும்
“ஆகிய" என்னும் பொருளை விளக்கும் பயனும்
மறைந்து வந்துள்ளன
“தலைவலி மருந்து”
நான்காம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை

இத்தொடர் “தலைவலிக்குத் தரும் மருந்து" என


விரிந்து பொருளை உணர்த்துகிறது. இதில் ‘கு'
என்னும் நான்காம் வேற்றுமை உருபும் “தரும்"
என்னும் பொருளை விளக்கும் பயனும் மறைந்து
வந்துள்ளன
“அடுப்புப் புகை”
ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை

இத்தொடர் “அடுப்பினின்று எழும் புகை"


என விரிந்து பொருளை உணர்த்துகிறது.
இதில் ‘இன்' என்னும் ஐந்தாம் வேற்றுமை
உருபும் “எழும்" என்னும் பொருளை
விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன
“ஆறாம் வேற்றுமை உருபு
தொக்க தொகையாக மட்டுமே
வரும்

உருபும் பயனும் உடன் தொக்க


தொகையாக வருவது இல்லை.
“தண்ணீர்ப் பாம்பு”
ஏழாம் வேற்றுமை உருபும் பயனும்
உடன் தொக்க தொகை

இத்தொடர் “தண்ணீர்க் கண் வாழும் பாம்பு"


என விரிந்து பொருளை உணர்த்துகிறது.
இதில் ‘கண்' என்னும் ஏழாம் வேற்றுமை
உருபும் “வாழும்" என்னும் பொருளை
விளக்கும் பயனும் மறைந்து வந்துள்ளன.
2) வினைத்தொகை
• காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து
நிற்க, வினைப்பகுதியைத் தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு
சொல்லைப் போல் நடப்பது "வினைத்தொகை" எனப்படும்.
• சான்று : வீசுதென்றல் , கொல்களிறு
• வீசு, கொல் என்பவை வினைப்பகுதிகள்.
• தென்றல், களிறு என்னும் பெயர்ச்சொற்களோடு சேர்ந்து காலத்தை
வெளிப்படுத்தாத பெயரெச்சங்களாயின.
• காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி
இருக்கின்றன
எ.கா
• எ.கா:1)வீசிய காற்று
வீசுகின்ற காற்று
வீசும் காற்று
• எ.கா:2)கொன்ற களிறு
கொல்கின்ற களிறு
கொல்லும் களிறு
வினைத்தொகை..

இரண் டு சொ ற் க ள் இணை ந் து ஒ ரு சொ ல் லாய் இரு க் கு ம் .


மு தல் சொ ல் வினை அ டி ச் சொ ல் அ ல் ல து வினை
வேர்ச்சொல்லாக இருக்கும்.

இரண் டாவது சொ ல் பெயர் ச் சொ ல் லாக இரு க் கு ம் .

காலம் காட்டும் இடைநிலையும்,. பெயரெச்ச விகுதியும் மறை ந் து


வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்.

உண்கலம் .. இத் தொ டரைப் படி த் து ப் பாரு ங் க ள் . இதனை


உண்டகலம், உண்கின்ற கலம், உண்ணும் கலம், என
மு க் காலத் திற் கு ம் ஏற் பப் பொரு ள் கொ ள் ளலாம் .
மேலும் சான்றுகள்.
ஆடுகொடி …… ஆடியகொடி, ஆடுகின்ற கொடி, ஆடும்கொடி

பாய்புலி ….. பாய்ந்த புலி, பாய்கின்ற புலி, பாயும் புலி

குடிநீர் …. குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்

அலைகடல் …… அலைந்த கடல், அலைகின்ற கடல், அலையும்கடல்

வளர்மதி ….. வளர்ந்த மதி, வளருகின்ற மதி, வளரும் மதி

விரிமலர் ……. விரிந்த மலர், விரிகின்ற மலர், விரியும் மலர்

இமிழ்திரை….. இமிழ்ந்த திரை, இமிழ்கின்ற திரை, இமிழும் திரை


ஊறிய காய் ஊறுகின்ற காய் ஊறும் காய்

.
3) பண்புத்தொகை
• நிறம், வடிவம், சுவை , அளவு முதலானவற்றை உணர்த்தும்
பண்புப்பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கு
இடையில் "மை" என்னும் பண்பு விகுதியும் ஆகிய, ஆன என்னும்
பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
• எ.கா:1) செங்காந்தள்- செம்மையாகிய காந்தள்.
2) வட்டத்தொட்டி - வட்டமான தொட்டி.
3) இன்மொழி - இனிமையான மொழி
4) முத்தமிழ் … மும்மையான தமிழ்
செந்தாமரை வெண்ணிலவு
கரும்பலகை செங்கதிரோன் நெடுந்தேர்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை

இது பண்புத்தொகையின் ஒரு வகையாகும்

*சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில்


'ஆகிய' என்னும் பண்பு உருபு தொக்கி வருவது இருபெயரொட்டுப்
பண்புத்தொகையாகும்.
*இரண்டு சொற்கள் இணைந்து ஒரு சொல்லாய் இருக்கும்.
*முதல்சொல் சிறப்புப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
*இரண்டாவது சொல் பொதுப் பெயர்ச்சொல்லாக இருக்கும்.
எ.கா : 1) மார்கழித் திங்கள்
திங்கள் - பொதுப்பெயர்
மார்கழி - சிறப்புப்பெயர்
=> மார்கழி ஆகிய திங்கள்
எ.கா :2) சாரைப்பாம்பு
பாம்பு - பொதுப்பெயர்
சாரை - சிறப்புப்பெயர்
=> சாரை ஆகிய பாம்பு
பலாப்பழம் தமிழ் மொழி
சாரைப் பாம்பு
பூ மல்லிகைப் பூ பனைமரம்
4) உவமைத்தொகை
• உவமைக்கும் பொருளுக்கும் (உவமேயம்) இடையில் உவம உருபு
மறைந்து வருவது உவமைத்தொகை.
எ.கா: 1) மலர்க்கை (மலர் போன்ற கை)
மலர் - உவமை
கை - உவமேயம்
போன்ற - உவம உருபு
க யல் விழி பவள வாய்
5) உம்மைத்தொகை
• இருசொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும்
இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகை.
• இது நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்
 எண்ணல்
 எடுத்தல்
 முகத்தல்
 நீட்டல்
எ.கா:
1) அண்ணன் தம்பி
Þஅண்ணனும் தம்பியும்

2) தாய்சேய்
=> தாயும் சேயும்
தாய் சேய்
வெற்றிலைப் பாக்கு
அண்ணன் தங்கை அக்கா தம்பி
உற்றார் உறவினர்
6) அன்மொழித்தொகை
• வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய
தொகைநிலைத் தொடர்கள் அவை அல்லாத வேறு சொற்கள்
மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை.
எ.கா: 1) சிவப்புச் சட்டை சிரித்தார்
=> சிவப்புச் சட்டை அணிந்தவர் சிரித்தார்.
2) முறுக்கு மீசை வந்தார்
=> முறுக்கு மீசையை உடையவர் வந்தார்.
சிவப்புச் சட்டை சிரித்தார்
முறுக்கு மீசை வந்தார்
நீ
ல வண்
ணன்வந்தான் கார்குழலாள்வந்தாள்
நன்றி

You might also like