You are on page 1of 27

நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 1

The Enigma of Tamil Etymology

நற்பிசி‌த்தொகை
எனும்

சேயாரகவல்
மூலமும் உரையும்

உரையாசிரியர்:
மார்க்கண்டேயம்‌முத்துவிநாயகம்பிள்ளை, 1892

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 2

உரையாசிரியர்: மார்க்கண்டேயம்‌முத்துவிநாயகம்பிள்ளை, 1892


மீள்பதிப்பு வெளியீட்டாசிரியர்: தமிழ்வாணியம்மை (1989), முனைவர் கங்கா டேனியல், கருணாநிதி
பாபு (1995)

இரண்டாம் பகுதி (பொருளதிகாரம்) கிடைத்தில.

இந்நூலின்கண் வரும் நூற்பாக்கள் (சூத்திரங்கள்) பழகியுணர உதவும்


உயிர்மெய் எழுத்துக்களின் வல்லின-மெல்லின-இடையினக் கட்டப் பட்டியல் /
அட்டவணை:

ன ங ஞ ண ந ம ன ங ஞ

ள ய 1 ர 2 ல 3 வ4 ழ 5 ள 6 ய ர

ற 1க ச ட த ப ற க ச

ன 2ங ஞ ண ந ம ன ங ஞ

ள 3ய ர ல வ ழ ள ய ர

ற க ச ட த ப ற க ச

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 3

நற்பிசி‌த்தொகை - சேயாரகவல்

சிறப்புப்பாயிரம்

நெடுவேண் தாண்டொழுது மாம்புறவர் பன்னூல்


புகட்டுபனம் பாரனிற் தெளிவேட்ட வெங்குடி
வேட்டுவஆய்த் தோன்றற் செம்பூட்சேய் ஒண்பியன்,
நெருநைதோழ் காப்பியன் அயன்முறை நறுபுகை
யழனிசின் மறந்தமி ழியற்றொன் வேர்வளர் 5
பற்கிளவி யுள்ளொற்றின் வைப்பென பெரும்புகழ்ப்
பருதித்தோள் நண்ணிறை வழுதிபொலங் காழவைகாண்
பனுவற்பல் வாவியன்ஆர் வெண்டலைப் புணரிப்பைம்
பொருநைவி ளைபொதிகைத் தண்பொழிற் சிவிளெய்
கனிநொவி இரங்கண்ணற் சாத்தனாற்று நில்அகவன் 10
கற்சொன்முண் பல்வளர் வடிவொழுகி சொன்வளவ
வழங்காழி உவ்வரி முதன்கொண் கானத்தும்
தெற்றொண்டி காரவீழ னிற்கலிங்க மென்வரை
கோசரின் பொடலைத் தொண்கரை யொடுநீள்
கிசித்த னாறீற்று நேர்நெடுந் தமிழகத்து 15
பைஞ்ஞில பொழிமிழின் இயன்நெறி யகலாழ்
நவின்ற நல்விளண்தொ கைவணைந் தணித்தனை.

சாத்தனாற்றுநில் அகவனார் இயற்றிய சிறப்புப்பாயிரவுரை:


(அகவனார் என்பார் அகத்தியராயும் கருத இடமுண்டு)

நெடுவேளின் தாள் தொழுது மாம்புறவர்நூல் எனும் பழமையான


இயன்நெறிநூலுணர்ந்து கற்பித்த பனம்பாரனார் சொல் தோற்றம்
குறித்த தெளிவுறுபாடல் கேள விழைந்துப் பணித்ததால்,
வேட்டுவக்குடிசிறந்த ஆய்மரபினன் செம்பூட்சேயனார் இயம்பும் குறிப்புப்
பாடல்கள் இவை. சிலகாலம்முன்னர் அயலார் இலக்கண முறையின்
தொல்காப்பியர் எனும் நறுபுகைஅழலார் (தூமாக்னி) தம் நூலில்
குறிப்பிடாமல் விட்ட தமிழ்வேர்ச்சொற்களின் வளர்வடிவங்கள் பற்றிய
சில அடிப்படை நெறிகளை வெளிக்கொணரும் பேழையாக
நண்ணிறைவழுதி எனும் பாண்டியனின் அவைமுன் பாடப்பெற்றது

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 4

என்றும் கனிவான கண்ணோட்டத்து பொதிகைமலையத்து உச்சியில்


உயர்வெய்திய இறையனார் இரங்கண்ணற் சாத்தனார் வழிநின்று
சொல் பிறந்ததும் வளர்ந்ததும் பலவடிவ வேர்ச்சொற்கள் என வளமை
பெற்றதும் கூறப்பட்டுள்ளன. இத்தகைய வடிதமிழ் தெற்கில் உவரி
மற்றும் தொண்டி முதல் வடக்கில் கொண்கானம் காரவீழனாளும்
கலிங்கம் மற்றும் கோசர் மலிந்த பொடலையெனும் நாட்டின் தெற்கே
ஓடும் கிருஷ்ணையாற்றின் தென்கரைவரை வழங்கும் பசுமைமிகு
நெடுந்தமிழக நிலத்தில் உறையும். இம்மொழியின் ஆழம்பயின்று
இலக்கணம்தனை பணிவுடன் அணியென நவின்றோம்.

1. சொற்றோற்றவியல்

ஆரியத்தெய் யத்தைநைந் தேறுதமிழ்த் தொல்வேண் 1


தண்முருகு சார்குறிஞ்சி வண்மருதஞ் செய்வரை
செற்றாய் மான்முல்லை வெஞ்சுரங்கா கொற்றவை
மாத்திவேலை மூக்குடிவள் மன்னியணங் காழிமகண்
வான்மாரி ஈவுளர்தந் தண்ணளி வணங்குவென். 5

1. சொற்கட்டியல்

ஈரொலி வியரின் ஈற்றிடைக் குறிலும்


நண்வல இயிடை யீர்க்கிடை தவியீர்
ஈற்றொட் டாய்சில துணையும் நண்மெய்
வளரயல் இயதுசொல் வினையி னெய்யுயிர்
வேர்வியர்க் கிளவியின் அமைவடி வணியே. 10

1-5. குறிஞ்சிமருதத்து முருகுநெடுவேள், முல்லையின் செற்றாய்மால்,


பாலையூடு கொற்றவை, நெய்தற் கடலணங்கு ஈன்ற வான்மாரி
ஆகியோரைப் பணிந்து அருட்கொண்டியம்பியவாறே.

6-10. தமிழ் வேர்ச்சொல்கள் அனைத்தும் பொதுவாக இரண்டு


எழுத்துக்கள் மட்டும் கொண்டிருக்கும். (எ.டு. கல், பய்/பை, மெய்).
இரண்டாம் எழுத்து இடையின உயிர்மெய்க் குறிலாக இருக்கும். (எ.டு.
கவ-, கவி-, கவு-, கவு+அய்-; பய-, பயி-, பயு-, பய்+அய்-). மூன்றாம் எழுத்து
சிலநேரங்களில் (அவற்றிலும் பெரும்பாலும் இரண்டாம் எழுத்தில் இகர
உயிர் வரும்போது) வந்தாலும் அவ்வெழுத்து இடையின இரண்டாம்

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 5

எழுத்தினின்று கிடைவரிசையில் (மேற்காணும் அட்டவணையில்) அடுத்த


இரண்டாம் எழுத்தின் மெய்யாக இருக்கும். (எ.டு. அயில், தளிர்).

இவைதவிர பிற சொற்களில் வரும் மூன்றாம் எழுத்துக்கள் அனைத்தும்


இரண்டாம் எழுத்தின் ஒற்றிரட்டின்மேலூறும் உயிராகவும், அல்லது
பொதுவாக வினையெச்சங்களாகவும் இருக்கும். (எ.டு. மய்ய-, மள்ள).

மௌநயஃ படைபு கொண்மழ லுமிழி


கொஞ்சு காட்டகச் சிவிங்கி இண்மொழி
சிவிவளர் சிலதளிரும் பண்மிழ், சொன்முதல்
இடைமி கைவாவ அண்செவ்வி தாமே. 14

11-14. பேசுமொழி ஒலியான் மூவகையின, சிறுமழலை, வளர்காய்ம்மை,


மற்றும் மேனிலைச் செம்மை. சொல் முதலில்
ம,ஔ,ந,ய,ஃ('ஹ'),ப,ட('குடம்'),ப('நண்பன்') வரிசை ஒலிகள் வருதல் குறை
உமிழ்மழலையாம், இயற்கைமாறா பண்படா பேசுமொழியாம்.
க,ஞ,ட,ச்ச,வ,ங,க('காகம்') ('கொஞ்சு காட்டகச் சிவிங்கி' -இல்
வருவனபோல்) வரிசை ஒலிகள் சொன்முதலில் வருதல் காய்ம்மை எனும்
இயல்பாய்ப் பண்பட்ட இடைமொழியாம். உச்சநிலையில் செம்மை கருதி
வலிந்து ஒழுங்குபடுத்தப்பட்ட ஒலிகள் ச,ல(ழ,ள,),த,ர(ற) ('சிலதளிர்' -இல்
வருவனபோல்) வளர்மொழி வரிசைகளாம். பின்னிரண்டு வகையின
மிகுந்த சொற்கள் பண்பட்ட மொழிவடிவாம்.

வழங்கொலி உயிரினம் பதினென் தவ்வு


வடமொழி பழகப்பு குத்தின் ஔவும்
ஐயும் ஐயமற தொன்றில் தோன்றில,
வையும் வையற வழக்கினுழை பாலிலா
அகவென் ஆய்தக் காற்றும் தண்மிழா,
அஃதின் எஃகினூ துவளியும் சுவையிலா,
சொற்றொடர் இயல பஃறுளியும் ஏமோ. 21

15-21. பலவகை காரணங்களால் ஐ, ஔ வரிசை எழுத்துக்கள் பழந்தமிழில்


பயனாகாது. இவற்றிற்கு பதில் அய், அவ் என்றே
பயன்படுத்தப்பட்டுள்ளன. ("அவ்வையார்" என்ற சொல்லைத் தவிர்த்து
வேறு ஔகாரத்துடன் தொடங்குவதில்லை. விதிவிலக்காக: வடமொழி
ஔகார முதலெழுத்துக் கொண்ட சொற்கள்: கௌமாரி, பௌத்தம்,
பௌஷ, ஔஷதம், சௌராஷ்டிரா, மௌனம்).

தமிழில் "அய்" என்ற விகுதி பெற்று முடியும் பெயர்ச்சொற்கள் பல,


அதனால் எளிமையாக எழுதவேண்டி மேற்கூறியபடியே "ஐ" என்ற
வடமொழி எழுத்து இணைக்கப்பட்டிருக்கலாம்.

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 6

ஃ எனும் ஆய்த எழுத்துக்கும் வேர்ச்சொல் கட்டமைப்பில் இடமில்லை.


அஃது, எஃகு என்ற சிலவும் இயல்பில் வழுவ, அத்து, எற்கம் இயல்பாய்
முன்பிருந்தே வழங்கிவருவன. பஃறுளி, அஃறிணை என்பனவற்றைவிட
பற்று, கற்றளி, நற்றிணை, சொற்றொடர் என்று றகர ஒற்றிரட்டல் மலிந்து
இயல்பான மொழி வழக்கில் உள்ளது. அன்பு, நண்பர், என்பு, காண்க,
காண்பன என்று இயைந்தியல்பினதாகவும் வழங்கப்படும்.
(நூலாசிரியரின் ஆய்தம் பற்றிய இக்கருத்தினை ஒத்த இன்னும் சில
சான்றுகள் இறுதியில் வழங்கப்பட்டுள்ளன).
இவற்றின்பொருட்டு உயிரென்ப பத்தாம்.

இருவல் மும்மெல் நாலிடை முதனில்லா


எவலமும் ஒவலமும் நெடிலுமிண் கடைநில்லா
நிற்கடை எவலம் அய்ஆய்ச் ச ீர்ந்தாய்
நான்பதின் குறையும் ஆயிரவேர் ஆறிணையே. 25

22-25. தமிழ்ச்சொற்கள் ட, ற, ங, ண, ன, ர, ல, ழ, ள வரிசை எழுத்துக்களில்


தொடங்காது. ஞ வரிசையில் ஞா, ஞி, ஞெ எழுத்துக்களிலும், ய
வரிசையில் யா எழுத்திலும் தொடங்கலாம். வ வரிசையில் வு, வூ, வொ,
வோ எழுத்துக்களைத் தவிர பிற எழுத்துக்கள் சொல்லின் முதலில்
வரலாம். மற்ற எல்லா உயிர்மெய் மற்றும் உயிர் எழுத்துக்கள்
சொல்முதலில் வரலாம்.

வேர்ச்சொற்கள் இரண்டாம் எழுத்தாகவோ ஈற்றிலோ எ, ஒ என்ற


உயிரெழுத்துக்களைக் கொண்டிருக்காது, எந்த நெடிலையும்
கொண்டிருக்காது. ஈற்றில் எகர உயிர் பொதுவாக அய் எனச்
ச ீர்மாற்றம்பெற்று வரும்.சொல் ஈற்றில் மெய்களுள் ண்,ம்,ன்,ய்,ர்,ல்,ழ்,ள்
என்பவை மட்டுமே வரலாம்.

மேற்கூறப்பட்ட கட்டுப்பாடுகளால் தமிழ் வேர்ச்சொற்கள் 900-1000


தொன்வேர்களாகவும் ஒவ்வொன்றும் ஆறு வடிவங்களில்
(தொன்வேரைச் சேர்த்து) இணைவேர்ச் சொற்களாகவும் இருக்கும்.

2. வேர்ச்சொல்லினம்
எனும் ஏகாந்த சூத்திரம்

*தெரிந்த இணைச் சொற்கள் கொண்டு, தற்காலத்தின் மாறிவந்துள்ள


சொற்களை பின்னோக்கி ஆய்ந்து பார்த்தால் தொலைந்தும் மறந்தும்
போன பண்டைய வேர்ச்சொற்களையும் அவற்றினின்று தோன்றிய‌
இணைச்சொற்களையும் எளிதில் கண்டறியலாம்.

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 7

கீழே இணையான பொருள் கொண்ட சொற்களை எவ்வாறு அறிந்து


கொள்ளலாம், அதற்கான சூத்திரங்கள் என்ன என்று பார்க்கலாம்.

பழவேர்த் தொன்கிள வியகழ்த்தி யற்றுநெறி,


முற்குறில் நெடிற்றும்பின் மெய்கிடை யிருதவ்வும்,
மய்மாலா கும்யவலம் பின்ஈரென லவலமாய்,
மெய்மேலென் மேனியாகப் பொய்போ லாகவே. 29

26-29. 1. முதல் வேர்ச்சொல்லின் முதலில் குறில்வரின் நாம் தேடும்


இணைச்சொல்லின் முதலில் அதே எழுத்தின் நெடில் வரும்; பின்
முதல்சொல்லின் இரண்டாம் இடத்தில் வரும் இடையின எழுத்தினின்று
கிடைவரிசையில் அடுத்த இரண்டாம் எழுத்தின் மெய்யெழுத்து புதிய
இணைச்சொல்லின் இரண்டாம் எழுத்தாக வரும். (எ.டு.)

க-->கா; ய்-->ல்; க ¹-->கா¹; ய்² +0,2 -->ல்²;


(கை), கய் = கால் (உடலுடன் இணைக்கப்பட்டுள்ள "சிறிய" செயல்
உறுப்புகள்);
இவ்வாறு
தொய் => தோல்; (மேற்பூச்சு, மேலுறை);
பய் = பால்; (பசுமை, பச்சை (புதிய, தூய)); (பைம்பால் => பசும்பால்; பசும்பால்
தரும் மாட்டினை (பெற்றம்) பசு என்றனர்);
பழ் (= பற்று) --> x பாய்;
பொய் = போல், போலி;
மய் = மால் (கருமை);
மெய் = மேல், மேனி (உடல்);
(மிய்யம்) மிச்சம் = (மீல்) மீதம்;
வய்யம் => வால், வான், வானம்;
வெய்-, வெயில் => வேல்-, வேனில்;
அர(ட்டை) <=> ஆவல்;
அருவி = ஆவி (= ஆம்); (நீரின் நிலைகள்);
இரக்கம் => ஈவு;
கர- (=கடி) --> காவ(ல்);
சரி(ந்த) (-> சண்டை, சடுகுடு) => சாவு; சரிந்த- --> சருகு (இலை);
தரு- => தா(வி);
பரி (= பண்) --> பா(வு)
பரு- => பாவு;
வரு <=> வாவு; (வா)
வரி > வாவு; (முக்கோணம்);
இல்லம் = ஈழம்;
கலி- = காழ்- (கலிங்கம், துணி; காழகம், ஆடை);
தலை =>x தாழ்- (= தாறு-); (அடியில்);

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 8

பலி => பாழ்;


தவ்வு => தாள், தாண்டு;
(துகள்-) துவள் => தூள-, தூள்;
தெவ்வர் => தேள்;
நவில் = (நாள்), நாடு (வினை);
நவை => நாள் => நாகு (கொல், அடு);
(வெவ்-), வெம்மை, வெப்பம் = வேக(வைத்தல்); (பே.வழ.);
அழி = ஆய் (அழிப்பான்);
கழு (த்து)) (மெல்லிய, மென்னி) --> x காயம் (உடல், ?வ.மொ.);
கழ்- (=> கன்றி-, கனி) --> காய்;
சழ்- (=> சறு(க்கு)) -> சாய்;
சள்ளை (=> சக்கை) => சாரம்;
செழி- (=செறிவு) --> சேய்;
தழ்- (=> தன்றி, தனி) --> தாய(ம்);
பழய் (=> பற-) --> பாய்(தல்);
வழி = வாய், வாயில்;
வழு- => x வாய்(மை);
உள்(ளிடம்) = ஊர்;
தெளிவு => தேர்வு;
நெளிவு => நேர்;
பள்-, பண் => பார் (=பாடு, 2-ஆம் நூற்பா);
மள், மடங்கு = மார் (=மாடு, 2-ஆம் நூற்பா) (பன்மடங்கு செல்வம்);
வளம் = வாரி;
வெளி(வரும்-) => வேர்;

பழவியர்க் கிளவித் தோற்றங் கேளின்


பல்லாற்றி லோர்பெரு நடையி சைப்ப,
ஈரிடம்மெய் யண்மை ஈர்க்கிடையி லொன்றுங்
கீழொன்று மோர்மறு குயிர்மருங் குறிலாய,
கயிற்கச்சும் பைம்பசுவுஞ் சாற்சாத்தற் சாயலாய். 34

30-34. 2. முதல்சொல்லின் முதலில் குறில்வரின் நாம் தேடும்


இணைச்சொல்லின் முதலில் அதே எழுத்து வரும்; பின் முதல்சொல்லின்
இரண்டாம் இடத்தில் வரும் இடையின எழுத்தினின்று நெடுவரிசையில்
மேலெழுந்து (முன்னிற்கும்) முதல் மற்றும் இரண்டாம் வரிகளின்
(அதாவது வல்லின அல்லது மெல்லின வரிசைகளில்) கிடைவரிசையில்
அடுத்த எழுத்தின் மெய்யெழுத்து நம் இணைச்சொல்லின் இரண்டாம்
எழுத்தின் மெய்யாக வரும், அது ஒற்றிரட்டியும் அல்லது மெல்லின
இணைமெய்யுடனும் வரும்; அதற்கான உயிராக முதல்சொல்லின்
இடையின் இரண்டாம் எழுத்தில் வரும் உயிரெழுத்திற்கு அடுத்த

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 9

உயிர்க்குறில் இடம் பெறும். பலநேரங்களில் வேற்று உயிர் விகுதிகள்


பெற்றும் வேர்ச்சொல் முழுச்சொல்லாகி முடியும்.
(எ.டு.) (குறிப்பு: மேலும் பழந்தமிழில் மறந்த, ஒரு பொருள் அல்லது
தொடர்பு பொருள் கொண்ட இணைச் சொற்கள் கண்டறிய உதவும் எளிய
சூத்திரம்)

க ¹-->க ¹; ய்² +1,1 -->ச்²/ச்ச்/ஞ்/ஞ்ஞ்/ஞ்ச்; -இ ² +1 -->உ ²; கய்--கசு;


கயி, கயில், கய் = கசு, கச்சு, கஞ்சு (சிறிய அளவிலுள்ள பொருள்; (பின்னர்)
கயிலி, கச்சை - துண்டு ஆடை; கயிறு - இறுக்கித் திரிந்த நார்));
கயி = கச்சு; (*இது கீழை ஐரோப்பிய மொழிகளுக்கும் j-->y ஒலி மாற்றமாக
வருவதுபோன்ற அடிப்படை இயன்நெறி விளக்கமாக இருக்கலாம்; Jugoslavi
-Yugoslavia; Jews -யூதர்; Jesus -யேசு; Joseph -Yousuf, யோசேப்பு; John - யோவான்);
இவ்வாறு -

அயர்ச்சி = அசர்,அசதி;
அயல் = அசல் (பே.வழ.);
அயல் (-பரப்புதல், செலுத்துதல்) => அஞ்சல்;
அய்(ந்து), ஐ = அஞ்சு; (ஐ, எண்ணிக்கை);
அய்!, ஐ! = அச(ந்து) (வியப்புக்குறி);
அய்யன் = அச்சன் (மலையாள மொழியிலும் காணப்படுகிறது இந்த
இயன்நெறி);
அய்யம் = அச்சம், அஞ்சு; (ஐயமும் இழியுணர்வே);
அய்யோ! (துயர் ஓலக்குறி) => அஞ்சலி;
அயில் => அச்சு;
ஆய் = ஆஞ்சு (பே.வழ.);
ஆயி = ஆச்சி;
இயை- => இசை(தல்) (வினை);
(இணய்இ, இணைஇ, இணையி =>) இணை(ந்து) => இணஞ்சு (பே.வழ.);
இணை(ந்த) => இணஞ்சு (பே.வழ.);
உயரம் = உசரம் (பே.வழ.);
'ஏய்!' => ஏசு(தல்);
கயமை => கசப்பு;
அழுகய், அழுகை => அழுகாச்சி (பே.வழ.);
தங்கய், தங்கை = தங்கச்சி (பே.வழ.);
கயிறு => கசை; (கசையடி என்பதில் வரும் கசை);
காயல் = காஞ்சி;
குய(வ-) = குச-, (திரி.) கொச- (பே.வழ.: எ.டு. கொசப்பேட்டை);
குயில் = குஞ்சு, குச்சு;
சாய், (சாயில்) = சாஞ்சு (பே.வழ.);
சேய் => சேச்சி;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 10

தய்(த்து) (தைத்தல்) = தச்சு (வி.யெ.) (பே.வழ.);


அத்தய், அத்தை = அத்தச்சி (பே.வழ.);
நயம் = நசை;
நய்ய, நைநை(என்று) = நசை, நச்சு (பே.வழ.), => நசுக்குதல்;
நொயல் = நொச்சி;
பய் = பசுமை, பச்சை;
பையல், பையன், பைதல் = பசு(மையான சிறுவன்),
பையன்கள் = பசங்கள் (பே.வழ.);
பதினைந்து => ப(தின்)அய்ந்து, பய்ஞ்சு => பாம்பு (பே.வழ.);
பாய் = பாஞ்சு (பே.வழ.);
பிய் = பிஞ்சு;
பெய் => பெஞ்சு -பேஞ்சு (வி.யெ.); (பே.வழ.);
பேயள் = பேச்சி;
மயில் = மஞ்சு, மஞ்ஞை;
மயல், மய்யல் = மஞ்சி, (விகுதி பெற்று) மஞ்சம்;
மய்யம் = மச்சம்;
மய்த்துனன், மய்(த்துன்)அன் = மச்சான் (வடமொழிச் சொல்லைத் தமிழ்ச்
சொல்லாடலில் கொண்டுவரும்போதும்);
மய் = மச்சை (எலும்பினுள்);
(மைதானம், மய்தானம்) => மயானம் => மசானம் (பே.வழ.);
மயக்கம் => மசக்கை;
மயிர் = மசிர் (பே. வழ.);
மிய் = மிசு(மிசு);
மாய் = மாஞ்சு (பே.வழ.);
முயல் = முசல்;
மெய்(யுவந்து) = மெச்சு;
வயல் = வஞ்சி;
வய் => வஞ்சம்; (வைதல், திட்டுதல்);
வை = வய- = வசம்;
வயிரம் = வச்சிரம், (வ.மொ.) வஜ்ரம்;
வாயல், வாயில் = (வாசுஅல்), வாசல்;
வியாழ(க்கிழமை) = விசால(க்கிழமை) (பே.வழ.);

அரு(கில்) = அடுத்த-, அடை(ந்த-), அண்(மை);


(இள்) இணை = ஈர் = ஈடு;
கரடுமுரடான => கடாமுடாவென்ற;
கரை => கடை;
சரளம் <=> சடுதி;
சிரி => x சிடு-;
தேர்(ந்து) => தேடு;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 11

நார் => நாண்;


பரவு => x படி; பரி => x படு (வினை); பரு = படை;*
பார் => பாடு, பாண(ன்);
மர(ம்) = மட்(டி), (விகுதி பெற்று) மட்டை;
வரி => வட்டி;
வாரி --> x வாடு;
விரை(வாக) = விரசா(க) (பே.வழ.);

உலை = உந்து;
கலி(ங்கம்) = கந்துஅய், கந்தை;
குலை = (பே.வழ.) கொலை = கொத்து;
கொல் = கொந்து;
சால்பு = சாத்தன்; (சான்றோர்);
செல் = செத்து;
(தை,தய்) = தால் = தாத்தன்;
பல் = பத்து; (பூண்டுப் பல், தேங்காய்ப்பத்து; பத்து -குறிப்பிட்ட
எண்ணிக்கை அளவு கொண்ட கோவை, தொகுப்பு)
பால் = பாதை (பால்மாறி, அப்பால்); (பே.வழ.);
பொலம் (பொன்) => பொதிகை; => x பொது; (அருமையான, சிறப்பான x
வழக்கமான);
(மிய்) = மீல் = மீது; = (மிய்) = மிசை;
மெல்ல = மெதுவாக;
மெலிந்த x மெத்து(மெத்தான), மெத்தையான;
வால் => வாத்து (வால், வெண்மை);

ஔவை, அவ்வய் => அம்மை, அப்பன்;


(அருவி =) ஆவி = ஆம்; (நீரின் நிலைகள்);
உவர்- = உப்பு; உம்பர்;
கவ்(வு) = கப்பு (கப்பென்று பிடித்தல்);
காவல் = காப்பு (விகுதிகளுக்குள் மாற்றம் பெறுவதால் இந்தச் சூத்திரம்
பேச்சு வழக்கிலும் இயற்கையாக பயன்பாட்டில் உள்ளது என்றும் அதன்
உண்மைத்தன்மையை உணரலாம்);
குவி = குப்பை;
கூவி = கூப்பு (கூவி அழைத்தல், கூப்பிடுதல்);
கோவை => கோப்பு;
சவை- => சப்பு (பே.வழ.);
செவி =>=> செப்பு;
சுலப- (வ.மொ.) => சுளுவு (பே.வழ.);
தவறு => தப்பு;
தவ்வு => தப்பு-; --> தாள், தாண்டு, தாக்கு);

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 12

நவில் => நம்பு;


நோவு = நோம்பு (பே.வழ.);
விவரம் =< விபரம் (வ.மொ.);

அழி = அறு; அழுந்து- = அறாவு; அழை = அறம்;


எழு = ஏறு; (வினை);
ஊழ் = ஊறு;
செழிப்பு = செறிவு;
தொல், தோழ் = தோற்றம்;
நாழ் (ஏர்) => நாற்று;
(பொலம், பொன்) = (போழ்) => போற்று;
வழவழ, வழுக்கி- = வற- (ஈர் மிகுந்து வழுக்கும்; ஈரம் காய்ந்து
வறண்டிருந்தது);

அளவு => அகலம்;


எள்ளு => எக்காளம்;
கொளு(வி) => கொக்கி;
தள்- => தண்மை, தட்ப- -> x தகி(க்கும்), தகனம்; (குளிர்ச்சி x வெப்பம்);
துள்-, துணி => துகில்;
துளி -=> துகிர்;
தூள- => தூக்கு;
தெளிவு =>தெங்கு (தேங்காய்);
தொள்- => தொக்கி-; (தொள்ளாயிரம், தொண்ணூறு - முழுஎண்ணிற்கு
சற்று கீழே தொக்கிஇருத்தல்);
தொள்- = தொடு(க்க) => தொகு(க்க-);
பள- => பக-; (பளபளப்பான, பள ீரென்று, பளிங்கு, பகட்டாக, பகல்);
மள்- => மக(ன்), மக்க(ள்) (மள, மணங்கு, மடங்கு -பெருக்கம்; மக-,
அடுத்த/இரண்டாம் தோன்றல், மகன், மக்கள்);
முளை => முகம்; (மெய்ம்மேல் அரும்பியதால் முளைத்ததால் முகம்);
வள- => வக்கணை, வக்கு (பே.வழ.);
வாள் -வாட்டம் = வாகு;
வெள், வெடி => வேர்-, => வேட்டு;

முன்ன ீட் டண்குறிலாய் மெய்யிடை கிடைவரி


நாலென் தவ்விஇ யெனமுடிப்ப கைகிழி
வயனது விழிக்கண் பெய்பொழி யெரியொளியே. 37

35-37. 3. வேறு சில இணைச்சொற்களும் இவ்வாறே வரும்.


முதலெழுத்துயிர் அடுத்த உயிர்க்குறிலாகவும் தோன்றி, அதனுடன்
இடையெழுத்தின் மெய் அட்டவணையில் கிடையில் நான்கு கட்டங்கள்

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 13

தள்ளியுள்ள மெய் பெற்று, பெரும்பாலும் ஈற்றில் இகரம்பெற்று (விகுதி),


புது வேர்ச்சொல்லாக வரும்.
அது இ என்ற விகுதியைப் பொதுவாக பெற்று வரும். அப்போது முதல்
எழுத்து முந்து வேர்ச்சொல்லின் அடுத்த குறிலாகும். (எ.டு.)

மி¹+1-->மு¹; யி² +4-->ழி²;


மியி(ல்), மிய் -->முழி;
கய், கயில் --> கிழி;
கொய் --> கழி;
பிய் --> புழி (பே.வழ.);
பெய் --> பொழி;
பொய் --> பழி;
வயன், வை, வையம் (இடம், கண்) --> விழி (கண்);
எரி --> ஒளி;
பழைய --> x பில்-, பின், பிந்து;
செழி- --> சொலி --> சோழி (4 மற்றும் 1-ஆம் நூற்பா);
உள(வு) --> (வுள-) --> வெவு --> வேவு (காண்க: 'ஒருவோர்' நூற்பா); மேலும்,
(வுள-) --> வெவு -->வேறு, வேகு --> வேவு ('க்-வ் திரிபு' நூற்பா);

இணக்கின் வேர்க்கிளவி ஐந்தில் ஓரோர்


எதிர்பொருட் கொளுமுறை பயனிலு ளவாறே
சார்சாட தண்தகிப்ப ரவிப்படி யுமாறே. 40

38-40. 4. ஒரு வேர்ச்சொல்லின் மேற்கூறிய சூத்திரங்களின்படியான


இணைவேர்ச்சொற்கள் தமக்குள் எதிர்ச்சொற்களாகவும்
பயன்படுத்தப்படும். (எ.டு.)
சார்(பு) × சாடு;
சிரி => x சிடு-;
தள்-, தண்மை, தட்ப- x தகித்து;
நள்(ளு) x நங்கு; (நட்பு x எள்ளிநகையாடல்);
நள்-, நடு x நங்கு (பே.வழ.; சரிசமமின்றி பங்குபிரித்தல்);
நெளிவு (-நெண்டு) x நேர்;
பரவு x படி; பரி x படு (வினை); (பரிவு, படுதல் - பாடு);
மள-, மணங்கு (பெருகும்), மார், மாடு x மக்கு (அழியும்), மடு, மட்டம் (உயர
அளவு), மட்டி (குன்றும்), மட்டும் (குறிப்பிட்ட அளவு வரை);
மெலிந்த x மெத்து, மொத்தையான;
வய்யம் x வால், வான், வானம்;
வழிதல் x வற்றுதல்;
வழு- x வாய்(மை);
வாரி x வாடு;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 14

அவ்வலம் விவலத்தென் ஈரிலோர் அடுக்கண்


அருகழை விலகுவிளி வேர்மறு கிணையென். 42

41-42. 5. குறிப்பிட்ட சில உயிரெழுத்தில் தொடங்கும் பல


வேர்ச்சொற்களுக்கு இணையான வேர்ச்சொற்கள் வழக்கில் உள்ளன.
இவை குறிப்பிட்ட சில உயிர்மெய் எழுத்துக்களை முதலாகக்
கொண்டனவாக இருக்கின்றன.
இத்தகையவற்றுள் ஒன்று: முதல் வேர்ச்சொல்லின் முதலெழுத்து
அகரமெனில், அதன்‌ இணையெழுத்தின் முதல் "வ"கர மெய்ப் பெற்று
அகரத்திற்கு அடுத்த உயிர்க்குறிலாக மாறித் தொடங்கும். முதல் வேரின்
இரண்டாம் இடத்தில் வரும் இடையின எழுத்திற்கு அடுத்து வரும்
இடையின எழுத்து, புதிய இணைவேர்ச்சொல்லின் இரண்டாம் எழுத்தாக
வரும். (எ.டு.):

அ 1 ---> வ் + (அ+2) -->வ்+(இ) --> வி; ய்2+1--> ர்2; அய்- ==>விர்-;


அய்யம் --> விரை; அதாவது,
(ஐய(வி)), அச(ர)-, அஞ்சு, அய்யோ, ஐயம் --> விரை- (மனங்கலங்குதல்);
விரவு- (கலங்குதல்);
அயர்- x விரகு (உற்சாகம்);
அயர் - விரும்பு;
அயர் - விரட்டு;
ஐ!, அய்ந்து, அயந்து, அசந்து - விரைந்து, விரும்பு;
ஐய்-யொ! (பே.வழ. அருமை!), அசந்து- - விர-, விண்(விண்ணுயர்-);
ஐயம், அய்யம் (சந்தேகம், குழப்பம்) x விர(கு) (உபாயம்), விடை;
அயில் (-அகில்) - விரை (நறுமணப் பொருள்);
அய்-, அசை - விரல், விடை;
ஐ, அச்சம் - விடிவு; அயன்முகம் - விடியல்;

அரக்கு(தல்) - வில்- --> வீழ்;


அரும்பு <--> விதை, விந்து;
அருள்/ அரண்டு x வீறு;
அரண்டு - விதிர்ப்பு;
அருகில் (பக்கம்) - விலா (பக்கவாட்டில்);
அருகு x விலகு;

அலர், அலங்கு - விம்மு;


அலசு (வடிகட்டுதல்) - வீண்;

அவா - விழை;
அவை --> விழி;
அவ்வை --> விழுமிய;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 15

அவிழ் - விழு;

அழை - விளித்தல்;
அழல் - விளக்கு;
அழி - விளித்தல்;
அழி x விளை, (விட்டு)விடு(தல்);
அழுதல் - விளிதல் (நாணுதல், வருத்தம்);
அழுகல் - விளிவு (கெடுதல்);

அள்ளு, அளவு, அகலம் - வியன்;


அளை (குறுகிய, குகை, பொந்து, புற்று, புரை, வளை) x வியன், வீல், வீதி;
அளாவு- x விய், விசும்பு (எட்டித் தொடும் x தொட இயலா தொலைவு,
வானம்);
அளறு - வியர்வை; (அளறு - சேறு, மண்ணின் வியர்வை; வெண்ணெய்,
பாலின் வியர்வை);
அளறு- (சிதறிவெடித்தல், கலக்கியடித்தல், பிறத்தல், நெரிதல்,
குழப்பியரைத்தல், குழைத்துச் சேறாக்கல்) - வியை, விசை, விசிறு;
அளி- (விருப்பமுண்டாக்குதல், சோர்வை நீக்குதல்) -வியப்பு;

உவ்வினத்துத் துவ்வினம் மருமியடு மெய்யிடைக்


கிடையின் ஈரயற்கால் உய்த்துலங் குளந்துரவே. 44

43-44. 6. உகர முதல் வேர்ச்சொல்லின் இணைவேர்ச்சொல் -- உகர


முதலெழுத்துடன் தகர மெய் சேர்ந்து, இரண்டாம் இடத்தில் உள்ள
மெய்யெழுத்திற்கு இரண்டாம் மெய்யாக மாறி வரும். (எ.டு.)

த்+ உ 1 --> து1; ய்2+2--> ல்2; உய்-->துல்-;


உய் --> துலங்கு (சிறத்தல்);
உரி --> துவி --> தூளி, தூக்கு;
உலம்பு --> துழாவு-;
உவகை --> துள்ளல்;
உழை x உறங்கு --> துயில், துஞ்சு;
உளவு --> துரவு;
உளை --> துரத்தல் (சிதறு, நெற்று);
உளி --> துர- (ஆணிப்பிடி, ஆணிசெலுத்து-);
உள்ளம், உள்ளுதல் --> துர-;
உளுத்தல் --> துரு-;

மறுகுநடை வாயின் உவ்வின மடுகுறிலென்


புதிந்துஎ நவலமெய் புணர்நெவி, இடைமெய்தற்

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 16

கிடைமுன் மெய்த்திகிர், உயருர நெடுநெய்யென். 47

45-47. 7. மேலும் பல உகர முதல் வேர்ச்சொல்லின் இணைவேர்ச்சொல் --


உகர முதலெழுத்து அடுத்த குறிலான எகரமாக மாறியும் அதன் மேல்
நகரமெய் ஏறியும், பின் இரண்டாம் இடத்தில் உள்ள மெய்யெழுத்திற்கு
அட்டவணையில் உள்ள முந்தைய மெய்யாக மாறி வரும். (எ.டு.)

உ 1+ 1--> எ 1; ந்+எ 1 --> நெ1; ய்2-1--> ள்2; உய்-->நெள்-;


உயர் --> நெள், நெடு, (நெண்டு) --> நேர்; உய், ஊல், ஊது -> நெளிர் (கூவு);
உய் --> நெளிவு (பாடு, இணங்கு, கர்வம்);
உரம் ---> நெய் --> நெஞ்சு; உரி --> நெஞ்சம் (உடைமை, self)
உலவு --> நெருங்கு; உலம்பு --> நெருடல்; உலி, ஊழி --> நெருநை ->நேரம்,
நேற்று; உலை --> நெருப்பு;
உவகை உள் ஊர் ஊக்கம் --> நெல-, நெல்லிச்சிக்கூத்து;
உழன்று --> நெவு, நெம்பு; உழக்குதல் --> (நெவு, நேள்) நேகம் (நயி, நைநை
நசுக்குதல், பொடித்தல்);
உள் --> நெழ்; உளை --> நெறு (ஒலி); உளை x நெறி (சிதறுx ஒழுகு;
உளைமயிர் x சுருள்/வளைமயிர்); உளர்தல் --> நெற்றுதல், நெற்றெடுத்தல்;

வேற்றிணை பவலமென் எவும்ஈரன் மூவண்மாழ்


எல்லெதிர் பகற்பகை எறுபருந் தெயப்பாடே. 49

48-49. 8. மற்றுமோர் இணையான வேர்ச்சொல் யாதெனின் எகரமுதல்


பகரமென்றும் இரண்டாம் இடத்து மெய் (அட்டவணை வரிசைக்) கிடையில்
மூன்றிடம் நகர்ந்தும் மாறிவரும். (எ.டு.)

எ 1+ 1-->அ 1; ப்+அ 1 --> ப 1; வ்2+3-->ய்2; எவ்- => பய்-;


எவ்வம் (வெறுப்பு) - பயிர்ப்பு;
எவ்-, ஏள-, ஏங்கு - பசி;
எவ்-, ஏள்-, ஏடு --> பயில்;
எவ்-, ஏள்-, ஏடு (குற்றம், அசுத்தம்) --> பயிர்ப்பு;
எவ்-, ஏள்-, ஏடுபடுதல் --> பயி-, பசிய, பாசிபடிதல்;
எழால், எறுவை --> பருந்து;
எழு --> பர(வல்), x படி(தல்);
எழு- --> பரி(ப்பு) x படு(க்கும்);
எழுது x படி(த்தல்);
எள்-, எண், எட்டு --> பல, பல், பத்து;
எய்து --> பவ்-, பாடு (அனுபவம், படும்பாடு);
எயில் --> பவ்-, பாளையம்;
எரு --> பழைய;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 17

எல் --> பளபள, பகல்;


எல-, எதிர் --> பகை;
எல்-, எதுர், எருது --> பகடு;
எல்லா x பகிர், பகுதி;
எல்லை x (உட்)பகுதி;

சொன்முதல் ஒவலத்து முற்குறில் வருவ லும்


வவலத் தெய்தலும் நெடித்திரு நொடித்தும்
புதுவியர்க் கிளவியாய், ஒருவெரு வொளிவெளிராய். 52

50-52 9. இன்னும் சில ஒகரமுதல் இணை வேர்ச்சொற்களாவன: மொழி


முதலில் வரும் ஒகரத்தின் பந்து குறிலான எகரமாய் மாற்றம் பெற்று
வகர மெய்யும் சேர்ந்து வெ என்று மாற்றம் பெறும். இவ்வாறு கிடைக்கும்
சொல் முதல் சொல்லின் இணைவேர்ச்சொல்லாகும்.
பின்னர் முன்னுயிர் நெடிலாகி ஈற்று மெய் இரண்டு இடம் தாவி,
மற்றும் ஓர் இணையாக மாற்றம் பெறும் (காண்: நூற்பா: 2). (எ.டு.):

ஒ 1-1--> எ 1; வ்+எ 1-->வெ1;


ஒய் --> வெய் --> வேல், வேந்து (செலுத்துதல், கொடை-இறை); ஒய்- --
>ஒச்சை (காய்ந்த உணவு) --> ஓலை (காய்ந்த பனையிலை); ஒய்- --> வெய்,
வெயில் (காயும் பருதி);
ஒருக்கு --> வெரு --> வெட்டு (அடக்கு, அழி); ஒருவு- --> வெரு (நீக்கு, விரட்டு);
ஒல்கு- x வெல், வேழ (வலிமை); ஒல்லுதல் --> வெல் (இயலும்);
ஒழி --> வெழ் --> வெற்று, ஒழிந்த வெறும்; ஒறு --> வெறு, ஒழு --> வேய்
(ஒழுகுவதால் இன்னும் (கூரை) வேய்தல்);
ஒளி --> வெள் (வெளிச்சம், வெள்ளை, வெளிர்; ஒளித்து வைத்த,
வெளிவந்த);

சொன்முதல் பவலம்நில் லீரிடை யவலமெய்


முதலா வாவ்வரை தொடரும்பால் ஒவ்வுயிர்
முதலாவாந் தொடர்த்திய, பயில்லொயின் பருகருந்தி
பல்லிலாவு பவ்வுவத்து பாய்பழவேழ் பளவொளியே. 56

53-56. 10. சொல் முதலில் 'ப'கர உயிர்மெய்யுடன் தொடங்கும்போது இரண்டாம்


இடத்தில் 'ய்'கரம்‌ முதல் 'ள்'கரம் வரையான மெல்லினம்வர,
அவ்வேர்ச்சொல்லின் இணைவேர்ச்சொல் இரண்டாம் இடத்து மெய் ''ய்'கரம்‌
முதல் 'ள்'கரம் வரைவர அதன் முதலெழுத்தாய் 'ஒ'கரம் தொடங்கி 'அ,இ,உ,எ,ஒ'
என்று அடுத்தடுத்து பெற்று வரும். (எ.டு.):

ப 1--> ஒ 1; ய்2-->ய்2;
ப 1--> அ 1; ர்2-->ர்2;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 18

ப 1--> இ 1; ல்2-->ல்2;
ப 1--> உ 1; வ்2-->வ்2;
ப 1--> எ 1; ழ்2-->ழ்2;
ப 1--> ஒ 1; ள்2-->ள்2;

பயில் --> ஒயி-, ஓது;


பருகு --> அருந்து;
பருந்து --> அருகு (அறுகு);
பல x (ஒன்றும்) இல்லை;
பல்-, (பதர்) --> இல்லாதது;
பல்-, (பதறு, பதை) --> இலம்பு;
பவ-, (பாள்-, பாடு) --> x உவகை;
பவ-, (பாள்-, பாங்கு) --> உவகைச்சொல் (அன்பான -சொல், (-நடத்தை));
பவ-, (பாள்-, பாங்கு(டன்)) - உவட்சி (துவளுகை);
பவ-, (பாள்-, பாணன்) --> உவச்சன்;
பவ-, (பாள்-, பாகு) --> உவட்டு- (தெவிட்டுதல்); x உவர்ப்பு;
பழி --> எழுதல், ஏய், ஏசு;
பழுது --> x எழுதல்
பழைய- --> எழுச்சி (தொன்மையான, தொடக்கம் --> முந்தைய-);
பளபள --> ஒளி(மிகு);

........... ........ .......

.......... ......... .......

57-87 வரையான அடிகள் கிடைத்தில.

வேரின ீர்க் கிளாதொடு பொருளி னேரே,


மளமள மணங்கழை பளபள பளிங்கும்
கடகட விரைகட தகதக தகிப்பினை. 90

88-90. 11. இரட்டைக்கிளவியில் ஒவ்வொரு கிளவியும் பண்புப்


பொருளுடனான உரிச்சொல் வகையினதாக தனித்தனியாகவே
வேர்ச்சொல்லின் நேரடிப் பொருளையோ வேர்ச்சொல்லுக்குத்
தொடர்பான பொருளையோ தருவதாக இருக்கும். பிற்கால
இரட்டைக்கிளவிகள் சில ஒலிக்குறிப்புணர்த்துவதாக அமைவதால்
அவை மட்டும் தனித்தனியே பொருள் தராமல் இருக்கலாம். (எ.டு.):

கரகர (கடி, கடுப்பு, "கரை"யும் குரல்),


கலகல (வெண்கலக் "கல"ம் ஒலியெழுப்புவது போல் சிரித்தான்),
கிளுகிளு ("கிள"ர்ச்சி ஊட்டுவதாய்),

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 19

தகதக ("தக"டு/தங்கம் போன்று பளபளத்தல்/பின்னுதல்),


தரதர ("தரை"யோடு இழுத்துச் செல்லும்-),
திருதிரு (பிடிபட்ட "திரு"டன்போல் விழித்தல்),
திடுதிடு ("திடீ"ரென),
நசநச, நைநை ("நசை", "நை"யப்புடைக்கும்),
நறநற ("நறு"க்கும்வகையில் கடித்தல்),
பரபர (படியாத, படுத்தாத, ஓய்வில்லாத உயிர்ப்புடன் விரைவாய்ப்
"பர"வித்தாவும் எண்ணம் செயல், பரபரப்பு, பரபரவெனும் கை),
பளபள (பளிச்சென்று, "பளி"ங்கு போன்ற),
பொலபொல <-- பொளபொள ("பொள்-", பொங்குதல்),
மடமட ((ஒரு) "மட"க்கு (நீர்) முழுங்குதல்),
மளமள (பன்மடங்கு/மடங்கு விரைவாக உணர்தல்/இறங்குதல்),
மொசுமொசு ("மொசு" -மொய்க்கும் அளவு அடர்த்தியாக),
வழவழ ("வழு"க்கும் வகையில்),
வறவற ("வற"ட்சியான),
வளவள (பேச்சை "வள"ர்த்துக்கொண்டேயிருத்தல்),
விதுக்விதுக்கென (படபடப்பு, "விதி"ர்ப்பு (அச்சம்) பொருட்டு),
விறுவிறு ("விறை"த்து நின்றதற்கு எதிர்ப்பொருளில்),

ஈர்வன் மெய்இரட்டு மற்றன இயக்க


தாமென் மெல்மெய் வல்லிணை இனவி
மேற்றா னேத்துச் சொல்வினை இயல்பே. 93

91-93. 12. வல்லின ஈற்றெழுத்து அல்லது விகுதி ஒற்றிரட்டல், பிறர் மேல்


செய்யும் செயலாகவும் மெல்லின இணையெழுத்துடன் வரும்போது தன்
மேல் செய்யும் வினையாகவும் வரும். (எ.டு.)

அச்சம், அஞ்சு(தல்);
அடக்கு, அடங்கு;
ஆட்டு(வி), ஆடு;
இணைத்து, இணைந்து;
இயக்கு, இயங்கு;
உதிர்த்து, உதிர்ந்து; (வி.யெ.);
ஒடுக்கு, ஒடுங்கு;
ஒதுக்கு, ஒதுங்கு;
ஓத்து (குறள்: மறப்பினும்), ஓது;
கொடு, கொண்டு;
சுருக்கு(தல்), சுருங்கு(தல்);
தயக்கம், தயங்கு;
தேக்கு, தேங்கு;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 20

நெருக்கு, நெருங்கு;
பதித்து, பதிந்து; (வி.யெ.);
புகுத்து, புகுந்து;
பொரித்து, பொரிந்து; (வி.யெ.);
பொருத்து, பொருந்து;
மக்கு, மங்கு;
மயக்கு, மயங்கு;
மறத்து, மறந்து; (வி.யெ.);
வருத்து, வருந்து;
*பகுத்தல், பங்குஇடு என்பனவும் இதை ஒட்டியே அமைந்துள்ளன.
(கொடுத்தல், கொடுப்பித்தல்; செய்தல், செய்வித்தல், -என்பன
செய்வினை செயப்பாட்டு வினையாக அமையும்).

விகுபும் சிலபெயரு மேறவேரீ றாய்நில்லா. 94

94. 13. சில அடிப்படை வேர்ச்சொற்கள் விகுதிகள் அல்லது மற்றோர் பெயர்


வேர்ச்சொற்களுடன் இணைகையில் ஈற்றெழுத்து மறைந்து பின்
புணரும். (எ.டு.)

இறங்(கு)+காடு = இறங்காடு (எரங்காடு);


இரங்(கு)+கண்ணன் = இரங்கண்ணன்;
எலும்பு, எல்(உம்)+பு = என்பு;
கு(று)+வளை = குவளை; குவலயம்;
த(ம்)+ஆய் = தாய்;
ந(ம்)+ஆயன் = நாய(னார்);
பு(து)+உழி = புழி;
மே(ன்(மை))+தகு = மேதகு;
ப(தின்)+அய்ந்து = பய்ந்து, பய்ஞ்சு (பே.வழ.);

(இதுவல்லாது வழக்கமான புணர்ச்சி வகையில் வரும் தொடர்புடைய பிற


சொற்கள்: எம்+தய் = எந்தை; தம்+தய் =தந்தை, தந்தய்;
தம்+அயன் = தமயன்; தன்+அயன் = தனயன்).

விளிவுய் யீறுகரை நள்ளுயிர் நெடித்தே. 95

95. 14. விளிப்பெயரின் ஈற்றில் வரும் வுகரம் மறைந்து இரண்டாம் இடத்து


உயிர்க்குறில் அகரம் ஆகாரமாகும். (எ.டு.)

இரவு --> இரா-


உயவு, உசவு --> உசா-
உலவு --> உலா

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 21

கனவு --> கனா


தினவு --> தினா (தினா எடுத்து -> தெனாவெட்டு, (பே.வழ.))
நிலவு --> நிலா
பலவு --> பலா
காவு --> கா
பாவு --> பா
புறவு --> புறா
மாவு <--> மா
விழவு --> விழா
வினவு --> வினா

கிளவியி னிருமுவ் விடமெய் மாறநவில்


பழவே ரீரிடத் திடைமெய் முந்தியல்பின்,
மருதமும் மதுரை வயிர்வரை திரிந்திகிரே. 98

96-98. 15. பேச்சு/செய்யுள் வழக்கில் மருவி வழங்கும் முறைகள்:


சொல்லின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்து மெய்யெழுத்துக்கள்
இடம் மாறி வழங்குதல் பேச்சு வழக்காக்கத்திலும், செய்யுளாக்கத்திலும்
செய்யப்படும். இதில் புலப்பட்டது யாதெனின் இரண்டாம் இடத்தில்
இடையினம் வருவது இயற்கைத் தமிழின் இயல்பே. ஒலி மற்றும்
அசையின் நிறைவுக்காய் செய்யுளில் வல்லின மாற்றம்
அமைத்திருந்தனர்.

அபராதம் =>(அவராதம்) =>அவதாரம்;


அலரி => (அரலி), அரளி;
கருது => கதிர்;
சுருக்(கமாக) => சுகுர்(ஆக) (பே.வழ.);
திரிகை => திகிரி;
மருத(ம்) => மதுர-, மதுரை;
வயிர் => (வயர்) => வரய், வரை;
வியர் (வேர்) <=> விரய், விரை; (வியர், வேர் <--> விரை);

3. மரூஉப் பொழிபு

திரிபுவேற் றிடைவன் மெய்யழிய வெஞ்சுயிர்


முதன்னுயி ரொடிழைந் தோர்நெடிலாய் நீள்வழங்கின்,
பகுபாத்தி வேர்வியர் இயவேவ போத்துபுகல்
மகமானுந் மோமுக தொகுதோப்பு தேர்திகிரே. 102

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 22

99-102. 16. மென்மையான ஒலி கொண்டு சொல்லின் நடுவில் வரும்


வல்லின எழுத்துக்கள் தம் ஒற்றை இழந்து, பின் எஞ்சியுள்ள
உயிரெழுத்தும் முதலெழுத்தின் உயிருடன் சேர்ந்து மற்றோர்
உயிர்நெடிலாக உருமாறி வரும். சிலநேரங்களில் இவ்வுயிரெழுத்துக்கள்
சேரும் பொழுது வகர யகர ஒற்றுப் பெற்றும் வரும். இத்தகைய நெடில்
திரிபுகள் இலக்கண அமைதிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டனவையே.
ஆனால், கொடுந்தமிழ் வழக்கில் மட்டும் ரகர, றகர முதலிகளாகவும்
ஒகரத் திரிபுகளாகவும் வரும்.

இதைப்போன்றே சொல்லின் நடுவில் வரும் "வ/வு" எழுத்துக்களும் வகர


ஒற்றை இழந்து, பின் எஞ்சியுள்ள உயிரெழுத்துக்கள் பிணைந்தும்
குழைந்தும் மற்றோர் உயிர்நெடிலாக உருமாறித் தோன்றும்.

அ+அ -->ஆ:

அகத்திற்கு -ஆத்துக்கு (பே.வழ.);


மகா (வ.மொ.) -மா;
மகன் -மான்;

அ+உ -->ஆ:

பகுதி -பாதி;
பகுத்துண்டு -பாத்துண்டு;

அ+உ+ஏ -->ஓ:

தகு(தி)ஏதுவாய் -(தஉ(ஏ)து) -தோது;

இ+எ -->எ: (கொ.தமிழ்..பே.வழ.)

இறக்கை -றெக்கை;
இறகு+பை, இறப்பை -றெப்பை, ரெப்பை (இமை);
இரங்கன் -ரெங்கன்; (அரங்கன் என்று தவறுதலாக மீளுருவாக்கம்
செய்யப்படுகின்றது);
இரண்டு -ரெண்டு;
இரட்டை -ரெட்டை;
(நிரம்ப)- -(ந்)இரம்ப -ரெம்ப;

இ+அ -->ஏ:

இயல் - ஏல்;
இயவுள் - ஏவல்;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 23

இறவு(த்துறை) -றேவு(த்துறை), ரேவு;


கரியல் - கரேல்;
சிகப்பு (பே.வழ.) -சேப்பு;
பசியல் - பசேல்;
பிதற்றல் -பேற்றல், பேத்தல் (பே.வழ.);
வியர்(வை) -வேர் (=அரும்பு, துளிர்);
வியர்வை -வேர்வை;

இ+இ --> ஈ:

விகிதம் -(விகிதம்) -வீதம் (வ.மொ.);

இ+இ --> ஏ:

திகிரி - தேர்;

இ+உ --> ஒ: (கொ.தமிழ்..பே.வழ.)

இருப்பு(-வைத்தல்) - ரொப்பு;
!கை-இருப்பு - இரு+கய் --> ரொக்கம்;

உ+அ -->ஓ:

குய(வர்) -கோ(வேள்);
துவை -துவய் -தோய்;
புகல்(வி), புகற்று -போத்து;
செம்புகம் -செம்போத்து;
முகட்டுவாய் -மோட்டுவாய்;
முகவாய் -மோவாய்;
முகர்ந்து -மோந்து (பே.வழ.);
முகரை -மோரை (பே.வழ.);

எ+அ -->ஏ:

பெயரன் -பேரன்;
பெயர்த்து -பேர்த்து (மே.வழ.);
(செம்மை)- செவப்பு -சே, சேப்பு (பே.வழ.) -(பிற்கால ச ீர்திருத்த மருவிகள்)
சேப்பு -சியப்பு -சிகப்பு -சிவப்பு;

எ+இ -->ஏ:

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 24

எகிறு -ஏறு;
தெகிடி -தேடி;

ஒ+உ -->ஓ:

தொகுப்பு -(தொஉப்பு) -தோப்பு;

திரிபுகாண் இடையிரு இடையினத்து மெய்க்கண்


வல்லினம், அதியனெயி ரின்யக வபவென்,
நல்லியற் குவுவெருவுங் கார்கருவும் ஆய்வினை. 105

103-105. 17. பிற திரிபுகள்:


ய்-->க், வ்-->ப்

அதியமான் <--> அதிகமான்;


ஆய் -ஆக (தானாய் -தானாக);
ஆயி(வருதல்) -ஆகி(வருதல்);
எயிறு, எயிர் --> எகிர், (ஈறு);
(வ.மொ.) தைரியம் -தயிரியம் --> தகிரியம்;
நய்யாண்டி (பே.வழ.) <--> நக்கல், நங்கு;
போய் -போகி, போயும் -போகும்;
மயன் <--> மகன் (பே.வழ.);
வயிறு --> பகிறு, பகில் (பே.வழ.);
வழுதுணங்காய் -வைங்க(ண்) -பைங்கண் (வ.மொ.);

க்-->வ்:

சொல்லின் ஈற்றில் நிற்கும் கு என்ற விகுதி பேச்சு வழக்கில் உகரமாக


மாறி பின்னர் வு என்று திரிகிறது. அல்லது உ, வு என்பன பழந்தமிழிலும்
இயல்பான விகுதியாக இருந்திருக்க வாய்ப்பும் உள்ளது.

ஆகு(க) -ஆவு;
கருகு -கருவு;
சிக(ப்பு) -சிவ(ப்பு); (பே.வழ.);
சொருகு -சொருவு;
துகள் -துவள்;
வெருகு(ப்பூனை) -வெருவு;
அழுகிறான் -அழுவுறான், அழும்போது, அழுகும்போது. (பே.வழ.) -
அழுவும்போது; (அழுகிறான் -அழுவான் என்று வழங்கப்படும் காலநிலை
விகுதிகளை ஒப்பிடுக);

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 25

நோகுகிறதா, நோகுதா (பே.வழ.) => நோவுதா;


பிறகு -பிறவு, (பொறவு);
போகும் -போவும் (பே.வழ.);
மகன் -மவன்;

மருவுவேர் முதனுயிர் நெடிற்றி யீற்றுயிர்


கரையும் புத்துயிர் வருமொழி முதல்வரின்,
ஓரொரு கருபெரும் பொருபோர் பொற்போற்றென். 108

106-108. 18. "ஒரு-ஓர்" நூற்பா: சொல் முதலில் வரும் உயிர் நீள,


பலநேரங்களில் --குறிப்பாக உயிர்முதல்கொண்ட வருமொழிப்பெயருடன்
சேர்கையில் ஈற்றுயிர் கெடும். (எ.டு.)

ஒரு -ஓர்;
இரு -ஈர்;
உணவு -ஊண்;
எழு -ஏழ்;
கரு -கார்;
கெடு -கேடு;
கொழு -கோழ்;
(கண்) சொருகி -சோர்(ந்து);
தரு -?தார்;
தி(த்திப்பு) <-->தீ(ம்சுவை);
தெங்கு- -தேங்(காய்);
நறு- - நாற்றம்;
நெரு(நை) - நேற்று;
பசுமை, பச்சை -பாசி;
படுதல் -பாடு;
பெய்து -பெஞ்சு - பேஞ்சு (வழக்கு);
பெரிய, பெரு+ -பேர்+ (வருமொழி முதலில் உயிரெழுத்து வருவதாலும்
கூட);
பெருமை - பேர்(விளங்க-);
பெட்டை -பேடு;
பொரு -போர்;
பொழுது --போழ்து, -போது;
பொன்,பொன்று‌-போற்று;
மடு -மாடி, மாடம் (மள-, மட்டம் (-உயர அளவு));
மறு (மரூஉ) - மாறு;
மு -மூ (மூன்று);
வருவாய் (வினை) -வாராய்;
வெட்டு -வேடு;

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 26

எண்ணெழுத்தின் பால்பகருஞ் சில்வகை கமுதன்கீழ்


ஙசஞடஓர் முக்கால் பின்அரைகால் ஈர்மாவும்
ணதநபம மாஅரைமா ஓர்காணி ஆவரை
முந்திகிரி நுண்குறிப்ப, முற்றெண்பின் தாவரின்
இடையின யளவரை பதின்முதலா ஐயெணென்
றனானகநால் மூவீரோர் நூறுஎஆய் ஆயிரம்ஈ. 114

109-114. 19. உயிர்மெய் எழுத்துக்கள் கொண்டு எண்களைக் குறிக்கும்வகை


வரிசைபட உரைக்கப்பெற்றுள்ளது. ஒன்று என்பதற்கு ககரம்
வடிவக்குறியீடாயும், சிற்றெண்களான முக்கால், அரை, கால், இருமா, மா,
அரைமா, காணி, அரைகாணி மற்றும் முந்திரி ஆகியவை, ங முதல் ம
வரை குறியீடுகளாயும் உள்ளன. முழுஎண்களுள் பத்து முதல் இரண்டு
வரையானவை முறையே ய,ர,ல,வ,ழ,ள,ற,னா,ன என்பவற்றால்
குறிக்கப்படும்.
ஈ,எ எனும் உயிரெழுத்துகள் ஆயிரம் மற்றும் நூறு என்பனவற்றைக்
குறித்ததாகவுள்ளன.

பின்குறிப்பு:

15-21: ஃ என்ற ஆய்த எழுத்து, தொல்காப்பியம் மற்றும் கடைச்சங்க


இலக்கியங்களில் பங்கெடுத்த வடமொழி அறிஞர்கள் வலியப்
புகுத்தியதாகத் தெரிகிறது. ஏனெனில் அதற்கு இணையான சமஸ்கிருத
உயிரெழுத்து அஹ: என்று வருவதைக் காணலாம். மேலும் பல்துளி,
அல்திணை, எல்கு என்ற சொற்களைச் சேர்த்து சொல்லும்போது
சொற்களுக்குள் அஹ் எனும் ஒலி புலப்படுவதில்லை. மாறாக "பல்துளி,
அல்திணை, எல்கு" என்று அப்படியே பலநேரங்களில் சங்க
இலக்கியங்களிலே கூட எழுதப்பட்டுள்ளன.

அதேநேரம் "கற்றளி, கற்பு, கொற்கை, சிற்பி, நெற்பயிர், நற்பலன்,


நற்றிணை, நவிற்சி" போன்ற சொற்கள் ஃ ஒலி தவிர்த்தே
வழங்கப்பட்டுவருகின்றன. (சில்பி என்ற வடமொழி சிற்பி என மக்களால்
இயற்கையாக மாற்றப்பட்டுள்ளது).

தற்காலப் பயன்பாட்டிலும் "பல்கிப் பெருகி, நல்கும், பல்கலைக்கழகம்,


பல்குழல், அல்குல், கண்ண ீர் மல்கி" என்று ஆயதமின்றியே
சொல்லப்படுகின்றன. அல்குல் என்பது அக்குல் என்று வல்லின
ஒற்றிரட்டியே வழக்கில் உள்ளது. "எஃகு" (உறுதிப்படுத்தப்பட்ட இரும்பு)

மார்க்கண்டேயம் பிள்ளை
நற்பிசித்தொகை - சேயாரகவல் Enigma of Tamil Etymology 27

என்ற சொல் மட்டுமே எஞ்சியுள்ளது. அச்சொல்லும் வழக்கில் எகு என்றும்


எக்கு என்றும் இடைப்பட்ட ஒலியுடனும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

சுட்டுச் சொற்களில் (அஃது, இஃது என்பன) வரும் ஃ எழுத்தும்


பேச்சுவழக்கில் காணக்கிடைக்கவில்லை. இதனால் வடமொழியில் வஹ்,
யஹ் என்று வருவதுபோன்றாக்கவும் (இயையவைக்கவும்) அல்லது
வடமொழியின் சாயலைச் செயற்கையாகத் தோன்றவைக்கும்
வகையிலும் ஆய்த எழுத்து புகுத்தப்பட்டிருக்கலாம்; அல்லது இசை
அமைதிக்கென ஒலி நீட்டிப்புக்கென இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் செருகப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மேலும் மேற்சொன்னபடி (13) சொல்லின் நடுவில் வரும் மென்மையான


க/கு எழுத்துக்களும் ஹ/ஹு போன்று வெறுமையாக நிற்பதற்கு பதில்
அருகமைந்த பிற உயிர்களுடன் ஒருங்கிணைந்து மாற்று
உயிரநெடிலாகத் திரிந்தே வரும். இவ்வாறு பேச்சு வழக்கில் "பகுதி" என்ற
சொல் "பஹுதி" என்பதாக தவறி ஒலிக்க வாய்ப்பு இருப்பினும்
முழுமையான ச ீர்மாற்றம் பெற்று "பாதி" என்றே சொல்வழக்கில்
வழங்கப்பட்டு வந்துள்ளது.

வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தும்போதும் ஹ என்ற எழுத்து


ககரமாக மாற்றி தமிழர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். (எ.டு.)
அக்ரஹாரம் -அக்ரகாரம்; பாஹு -பாகு; ஆஹுதி -ஆகுதி; மஹா -மகா;
க்ரஹம் -கிரகம். இதுவே ஆய்த எழுத்தின் ஒலியான ஹ் என்பதைப்
பொறுத்த அளவில் தமிழின் மொழிநடை மற்றும் தனிப்பட்ட சிறப்பு
முறையாகக் காணப்படுகிறது.

எனவே ஆய்த எழுத்திற்கானத் தேவை ஏதுமில்லாதபோது அதன்


பயன்பாடும் சொல்வழக்கில் இதுவரை நுழையவேயில்லை என்பது
தெரிகிறது. (பொருள்: ஆய்தம் -ஒலியை நீட்டிப்பது. ஆய்த எழுத்து -ஃ).
ஆயுதம் (கேடயத்தின் முக்கண்) போன்று இருப்பதால் ஆய்த எழுத்து
என்று அழைக்கப்பட்டது என்பது பின்னாளில் வரையப்பெற்ற கற்பனை.

மார்க்கண்டேயம் பிள்ளை

You might also like