You are on page 1of 13

2.

5 ஒலிகளின் வருகை முறை

தொல்காப்பியர், தம்முடைய காலத்தில் உலக வழக்கிலும் செய்யுள்


வழக்கிலும் வழங்கிய சொற்களை எல்லாம் நன்கு ஆராய்ந்தார். அச்சொற்களில்
எந்தெந்த எழுத்துகள் முதலில் வருகின்றன. எந்தெந்த எழுத்துகள் இறுதியில்
வருகின்றன என்பனவற்றை வரையறுத்துக் கூறியுள்ளார். சொற்களுக்கு இடையில்
எழுத்துகள், குறிப்பாக மெய்யெழுத்துகள் எவ்வாறு ஒன்றோடு ஒன்று மயங்கி
(சேர்ந்து) வருகின்றன என்பது பற்றியும் விரிவான விதிகளைக் கூறியுள்ளார்.
இவ்வாறு சொல்லுக்கு முதலிலும், இறுதியிலும், இடையிலும் வரும் எழுத்துகள்
பற்றி அவர் எழுத்ததிகாரத்தில் வரையறுத்துக் கூறிய விதிகள், அவர் காலத்
தமிழின் ஒலியமைப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன.

2.5.1 மொழி முதல் எழுத்துகள்

1) பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்.

மெய்யெழுத்துகள் தனித்து மொழிக்கு முதலில் வாரா;


2) உயிர்களோடு சேர்ந்து உயிர் மெய்களாக மட்டுமே மொழிக்கு
முதலில் வரும்.

க, த, ந, ப, ம எனும் ஐந்து மெய் எழுத்துகளும் எல்லா


3)
உயிர்களோடும் சேர்ந்து மொழிக்கு முதலில் வரும்.

சகர மெய் அ, ஐ, ஒள - என்னும் மூன்று உயிர்கள் அல்லாத


4) பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி மொழி முதலில்
வரும்.

வகர மெய் உ, ஊ, ஒ, ஓ - என்னும் நான்கு உயிர் நீங்கிய பிற


5)
எட்டு உயிர்களோடு கூடி மட்டுமே மொழி முதலாகும்.

ஞகர மெய் ஆ, எ, ஒ - என்னும் மூன்று உயிர்களோடு கூடி


மட்டுமே மொழி முதலாகும்.
6)
(எ.டு) ஞாலம் (உலகம்) ; ஞெகிழி (கொள்ளிக்கட்டை) ;
ஞொள்கிற்று (சுருங்கிற்று)

யகர மெய் ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழி


முதலாகும்.
7)

(எ.டு) யாடு (ஆடு) ; யாண்டு (ஆண்டு)

குற்றியலுகரம் நுந்தை என்ற ஒரு சொல்லில் மட்டும் மொழி


8)
முதலாகும்.
மேற்கூறிய கருத்துகளை நோக்கின் தொல்காப்பியர் காலத்தில் 94
எழுத்துகள் மட்டுமே மொழிக்கு முதலில் வந்துள்ளன என்பது அறியப்படும்.
இதைக் கீ ழ்வரும் பட்டியல் காட்டும்.

பன்ன ீர் உயிர் மொழிமுதல் 12


க த ந ப ம x 12 உயிர் 60
சகர மெய் x அ ஐ ஒள நீங்கிய 9 உயிர் 9
வகர மெய் x உ ஊ ஒ ஓ நீ்ங்கிய 8 உயிர் 8
ஞகர மெய் x ஆ எ ஒ என்னும் 3 உயிர் 3
யகர மெய் x ஆ என்னும் உயிர் 1
மொழி முதல் குற்றியலுகரம் 1
மொத்தம் 94

2.5.2 மொழி இறுதி எழுத்துகள்

தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் உயிர் எழுத்துகளையும்,


மெய்யெழுத்துகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

 மொழி இறுதி உயிர்கள்


ஒளகாரம் நீங்கிய பதினோர் உயிர்களும் தனித்தோ
மெய்யோடு சேர்ந்தோ மொழிக்கு இறுதியில் வரும். குறில்கள்
தனித்து இறுதியில் வருவது அளபெடையில் ஆகும்.

(எ.டு) பலாஅ
1)

எகரம் மெய்யோடு சேர்ந்து ஈற்றில் வராது. அளபெடையில்


தனித்து மட்டுமே ஈறாகும்.

(எ.டு) ஏஎ

ஒளகாரம் ககர, வகர மெய்களோடு சேர்ந்து மட்டும் மொழி


இறுதியில் வரும்.
2)

(எ.டு) கௌ, வௌ

ஒகர உயிர் நகர மெய் ஒன்றோடு மட்டும் சேர்ந்து இறுதியில்


வரும்.
3)

(எ.டு) நொ (துன்பப்படு)
உகர உயிர் சகர மெய்யோடு கூடி இரு சொற்களில் மட்டும்
இறுதியாகும்.
4)

(எ.டு) உசு (உளுந்து) ; முசு (குரங்கு)

உகர உயிர் பகர மெய்யோடு சேர்ந்து ஒரு சொல்லில் மட்டும்


ஈறாகும். அச்சொல் தன்வினை, பிறவினை என்னும் இரண்டு
பொருளிலும் வரும்.

5) (எ.டு) தபு

இதனை படுத்து(தாழ்த்தி)க் கூற, நீ சா எனத் தன்வினையாகும்;


எடுத்து (உயர்த்தி)க் கூற, நீ ஒன்றினைச் சாவப் பண்ணு எனப்
பிறவினையாகும்.

குற்றியலுகரம் மொழி இறுதியில் வல்லின மெய்களின் மேல்


6)
வந்து இறுதியாகும்.
 மொழி இறுதி மெய்கள்
மெல்லின ஒலிகளில் ஙகர மெய் ஒழிந்த ஐந்தும், இடையின
1) ஒலிகள் ஆறும் ஆகிய பதினொரு மெய்களும் மொழிக்கு
இறுதியில் வரும்.

நகர மெய் இரு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.


2)
(எ.டு) பொருந் (பொருந்துதல்) ; வெரிந் (முதுகு)

ஞகர மெய் ஒரு சொல்லில் மட்டுமே இறுதியாகும்.


3)
(எ.டு) உரிஞ் (உராய்தல்)

வகர மெய் நான்கு சொற்களில் மட்டுமே இறுதியாகும்.

4)
(எ.டு) அவ், இவ், உவ் (இவை மூன்றும் சுட்டுப் பெயர்கள்)
தெவ் (பகை)

2.5.3 மொழி இடை மெய்ம்மயக்கம்

மொழி இடையில் ஒரு மெய் தன்னோடும் பிற மெய்யோடும் சேர்ந்து


வருவதை மெய்ம்மயக்கம் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். க ச த ப எனும்
நான்கு மெய்களும் தம்மொடு தாம் மட்டுமே மயங்கி வரும் ; பிற மெய்களோடு
மயங்கி வாரா. ர, ழ எனும் இரு மெய்களும் பிற மெய்களோடு மட்டுமே மயங்கி
வரும் ; தம்மோடு தாம் மயங்கி வாரா. ஏனைய பன்னிரண்டு மெய்களும்
தம்மொடு தாமும், தம்மொடு பிறவுமாக மயங்கி வரும். ஆகவே தம்மொடு தாம்
மயங்குவன ர ழ நீங்கிய பதினாறு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தைத்
தொல்காப்பியர் உடனிலை எனக் குறிப்பிடுகிறார். தம்மொடு பிற வந்து
மயங்குவன க ச த ப நீங்கிய பதினான்கு மெய்களும் ஆகும். இம்மயக்கத்தை
மெய்ம்மயக்கு எனக் குறிப்பிடுகிறார்.

 உடனிலை

ஒரு மெய்யின் முன்னர் அதே மெய் மயங்கி வருதல் உடனிலை என்பதை


மேலே கண்டோம். இதை நன்னூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று
குறிப்பிடுவார்.

(எ.டு)
பக்கம் - பக்க்அம்
முந்நீர் - முந்ந்ஈர்
பாட்டு - பாட்ட்உ
தெவ்வர் - தெவ்வ்அர்
 மெய்ம்மயக்கு

ஒரு மெய்யின் முன்னர் அம்மெய் அல்லாத பிற மெய்கள் மயங்கி வருவது


மெய்ம்மயக்கு ஆகும். இதனை நன்னூலார் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனக்
குறிப்பிடுகிறார்.

(எ.டு)

மார்பு - மார்ப்உ
வழ்து
ீ - வழ்த்உ

பந்து - பந்த்உ
அம்பு - அம்ப்உ
காட்சி - காட்ச்இ

மேலே கூறப்பட்டவை இரண்டு மெய்களின் மயக்கம் பற்றியாகும். மொழி


இடையில் மூன்று மெய்கள் அடுத்தடுத்துச் சேர்ந்து வருவதையும் தொல்காப்பியர்
எடுத்துக் காட்டுகிறார்.

 மூன்று மெய்களின் மயக்கம்

ய, ர, ழ ஆகிய மூன்று மெய்களின் முன்னர், க, ச, த, ப ஆகிய நான்கு


மெய்கள் இரட்டித்து வரும்.

வாய்ப்பு - (ய்ப்ப்)
தேர்ச்சி - (ர்ச்ச்)
வாழ்க்கை - (ழ்க்க்)
வாழ்த்து - (ழ்த்த்)

ங, ஞ, ந, ம ஆகிய நான்கு மெய்கள் இரட்டித்தும், தமக்கு இனமான வல்லின


மெய்களாகிய க, ச, த, ப ஆகிய நான்கோடு முறையே சேர்ந்தும் வரும்.

மெய்ம்மை (ய்ம்ம்)
வழ்ந்தது
ீ (ழ்ந்த்)

இதுகாறும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் மொழி முதல், இடை,


இறுதி வருகை முறை பற்றிக் கூறியவற்றைப் பார்த்தோம். இவ்விதிகள், தமிழ்
மொழியின் அமைப்பை அவர் காலத்திற்குப் பின்பும் பன்னெடுங் காலமாகச்
சிதைந்து விடாது காத்து வந்துள்ளன. தமிழில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக
வடமொழிச் சொற்கள் வந்து கலக்கும்போது அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள
இவ்விதிகள் இடம் தரவில்லை. சான்றாக, க, ச, த, ப ஆகிய மெய்களை அடுத்து
அம்மெய்களே வரவேண்டும்; பிற மெய்கள் வருதல் கூடாது என்பது
தொல்காப்பியர் வரையறுத்துக் கூறிய விதி. ஆனால் தொல்காப்பியர் காலத்திற்குப்
பின்பு சங்க காலம் தொட்டுத் தோன்றிய பிற்காலத் தமிழ் இலக்கியங்களில்
வாக்யம், அக்ரமம், சுக்லம், வச்ரம், வாத்யம் போன்ற வடமொழிச் சொற்கள் வந்து
கலந்தன. இச்சொற்களின் இடையில் க்ய், க்ர், க்ல், ச்ர், த்ய் என்ற
மெய்ம்மயக்கங்கள் காணப்படுகின்றன. இவை தொல்காப்பியரின் விதிக்குப்
புறம்பானவை. எனவே இச்சொற்கள் அவ்விலக்கியங்களில் தொல்காப்பியர் கூறிய
தமிழ் ஒலியமைப்பிற்கு ஏற்பக் கீ ழ்க் கண்டவாறு மாற்றி ஏற்றிக் கொள்ளப்பட்டன.

அக்ரமம் - அக்கிரமம்
இவற்றில் தமிழில் வரக்கூடாத
சுக்லம் - சுக்கிலம் (மருந்து)
மெய்க்கூட்டுகளின் இடையே
- வச்சிரம் (இந்திரனது உயிரெழுத்து ஒன்றைநுழைத்துத்
வச்ரம்
படை) தமிழின் ஒலியமைப்பு
- வாத்தியம் காக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
வாத்யம்
(இசைக்கருவி)

இதுபோலத் தமிழ் மொழியின் ஒலியமைப்பைக் காலந்தோறும் தனித்


தன்மையுடன் பேணிக் காப்பதற்கு ஏற்ற விதிமுறைகளைத் தொல்காப்பியர்
வகுத்திருப்பது தனிச் சிறப்பாக உள்ளது.
2.3 எழுத்து வருகை வரலாறு

    எழுத்து வருகை என்றால் தமிழ் எழுத்துகள் சொல்லின் எப்பகுதியில்


அமைந்து வருகின்றன என்பது பற்றியது எனப் பார்த்தோம். அவ்வாறு வரும்
தமிழ் எழுத்துகளை உயிர்எழுத்து, மெய்எழுத்து என இரண்டாகப் பிரித்து
அவை சொல்லின் எப்பகுதியில் வருகின்றன என்பதைப் பற்றியும்,
இவ்வருகை சங்க காலத்திலும், இடைக்காலத்திலும், எவ்வாறு
அமைந்திருந்தது, தற்காலத்திலும் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதைப்
பற்றியும் வரலாற்று ரீதியாக இங்குக் காண இருக்கிறோம்.

2.3.1 சங்க காலம்

    உயிர் எழுத்துகள் (vowels) (அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள)


பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும் என்கிறார் தொல்காப்பியர்.

       பன்ன ீர் உயிரும் மொழிமுதல் ஆகும்

       (மொழி = சொல்)        (தொல்.எழுத்து.59)

    ‘அடை, ஆடை, இடை, ஈயம்’ போன்ற சொற்களின் மூலம் அவ்வுயிர்


எழுத்துகள் மொழி முதலில் வருகின்றன.

    உயிர்மெய் எழுத்துகள் மொழிமுதலில் இடம் பெறும். ஆனால் தனி மெய்


எழுத்துகள் (consonants) மொழி முதல் வரலாகாது என்கிறார் தொல்காப்பியர்.

    உயிர்மெய் அல்லன மொழிமுதல் ஆகா

                   (தொல்.எழுத்து.60)

    அதுபோலவே சகரம் என்ற மெய் அ, ஐ, ஒள ஆகிய மூன்று உயிர்களுடன்


சேர்ந்து சொல்லின் முதலில் வருவதில்லை என்கிறார் தொல்காப்பியர்.

    சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே


        அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே

                   (தொல்.எழுத்து.62)

    ச- சை- சௌ- போன்று மொழிமுதலில் வருவது கிடையாது. ஆனால்


சாளரம், சிலை, சுரும்பு போன்ற சொற்களில் ஏனைய உயிர்களுடன் சேர்ந்து
மொழிமுதலில் சகரம் வருகிறது.

    தொல்காப்பியத்தை அடுத்துத் தோன்றிய சங்க இலக்கியத்தில் சகரமெய்


அகர உயிரோடு சேர்ந்து பல சொற்களிலும், ஐகார உயிரோடு சேர்ந்து ஒரு
சொல்லிலும் மொழி முதலில் வரும் நிலையைக் காணலாம்.

சகடம் (நற்றிணை. 4:9)

சடை (புறநானூறு. 166:1)

சண்பகம் (கலித்தொகை. 150:21)

சையம் (பரிபாடல். 11:14)


    ‘வ’ எனும் மெய் எழுத்து ‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்களுடன்
சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை என்கிறது தொல்காப்பியம்.

‘உ, ஊ, ஒ, ஓ’ என்னும் நான்கு உயிர்

‘வ’ என் எழுத்தோடு வருவ தில்லை

(தொல். எழுத்து.63)
    ‘பிற உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதலில் வகரம் வருகின்றது.
வளை, வாளி என வரும்.

    ‘ஞ’ என்னும் மெய் ஆ,எ,ஒ என்னும் மூன்று உயிர்களோடு கூடி மட்டுமே


மொழி முதலாகும் என்கிறார் தொல்காப்பியர்.

‘ஆ, எ, ஒ’ எனும் மூவுயிர் ஞகாரத்து உரிய

(தொல். எழுத்து.64)
    சங்க இலக்கியத்தில் ஞகரமெய் இம்மூன்று உயிர்களோடு மட்டும்
அல்லாமல் அ, இ என்னும் இரண்டு உயிர்களோடு சேர்ந்தும் மொழி முதலாகி
வருகிறது.

சான்று:

ஞமலி (அகநானூறு. 140 : 8)

ஞிமிறு (அகநானூறு. 124 : 5)


    ‘ய’ என்னும் மெய், ஆகார உயிரோடு கூடி மட்டுமே மொழிமுதலில் வரும்
என்கிறார் தொல்காப்பியர்.

ஆவோடு அல்லது யகரம் முதலாது

(தொல். எழுத்து.65)
    சங்க இலக்கியத்திலோ யகர மெய் ஆகாரத்தோடு மட்டுமன்றி, அகர
உயிரோடும் ஊகார உயிரோடும் கூடி மொழி முதலாகும் வழக்கைக்
காணலாம்.

சான்று:

யவனர் (அகநானூறு. 149 : 9)

யூபம் (புறநானூறு. 15 : 21)


    இதுவரை நாம் சகரமும், வகரமும், ஞகரமும், யகரமும் குறிப்பிட்ட உயிர்
எழுத்துகளுடன்தான் மொழிமுதல் வரும் எனவும், ஒருசில உயிர்
எழுத்துகளுடன் சேர்ந்து மொழிமுதல் வருவதில்லை எனவும் கண்டோம்.

    க, த, ந, ப, ம என்னும் ஐந்து மெய் எழுத்துகளும் பன்னிரண்டு உயிர்


எழுத்துகளுடனும் சேர்ந்து மொழிமுதல் வரலாயின.

க, த, ந, ப, மஎனும் ஆவைந்து எழுத்தும்

எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே

(தொல். எழுத்து. 61)


சான்று:

    கலை, காளி, கிளி, கீ ரி,...     தந்தை, தாடி, தீமை,...     நடம், நாரை, நிலம், நீர்,
படை, பாடி, பிடி,     மடம், மாலை, மிடறு, மீ னம்.

    மேலே குறிப்பிட்ட க, ச, ஞ, த, ந, ப, ம, வ, ய என்னும் ஒன்பது மெய்


எழுத்துகளே சங்க காலத்தில் மொழி முதலாயின. ஏனைய ங, ட, ண, ர, ல,
ழ, ள, ற, ன என்னும் ஒன்பது மெய் எழுத்துகளும் சங்க காலத்தில் எந்த ஓர்
உயிரோடும் சேர்ந்து மொழி முதலில் வரவில்லை.

    எல்லா உயிர் எழுத்துகளும், அனைத்து மெய் எழுத்துகளும் சொல்லின்


இடையில் வருகின்றன. ஆனால் சொல்லின் இறுதியில் குறிப்பிட்ட
எழுத்துகள் மட்டுமே வருகின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால்
‘ஒள’ சொல்லின் இறுதியில் வருவது கிடையாது.

உயிர்ஒள எஞ்சிய இறுதி ஆகும்

(தொல். எழுத்து. 69)


    இந்நூற்பா ‘ஒள’ இன் உயிர்மெய்க்கும் பொருந்தும். அதாவது ‘ஒள’ என்ற
உயிர் எழுத்துடன் யாதொரு மெய்எழுத்தும் சேர்ந்து மொழியின் இறுதியில்
வருவதில்லை.

    மெய் எழுத்துகளைப் பொறுத்தவரை ‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’


எனும் பதினொன்றே சொல்லின் இறுதியில் புள்ளியுடன் வருகின்றன.

‘ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள’ என்னும்
அப்பதி னொன்றே புள்ளி இறுதி
(தொல். எழுத்து. 78)
சான்று:

    உரிஞ், மண், வெரிந், மரம், பொன், பேய், வேர், வேல்,     யாழ், தேள்.

    இவை தவிர ஏனைய மெய்கள் சொல்லின் இறுதியில் வராது என்ற ஒரு


வழக்கம் சங்ககாலத்தில் இருந்தது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட எழுத்துகள்
குறிப்பிட்ட இடத்தில்தான் வந்து அமைந்திருந்தமை தெரியவருகிறது.

2.3.2 இடைக்காலம்

    இடைக்காலத்தில் பிற மொழிகளின் தாக்கம் இருந்தது. சங்க காலத்தில்


பிறமொழிச் சொற்கள் தமிழுடன் கலந்திருந்தாலும் அச்சொற்களைத்
தமிழ்மொழியின் ஒலியமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்
கொண்டார்கள். எந்த ஒரு நிலையிலும் வடமொழிச் சொற்களை அப்படியே
ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இடைக்காலத்தில் தோன்றிய வரசோழியம்

போன்ற இலக்கண நூல்கள் வடமொழி இலக்கணத்தைத் தழுவியே
தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்தன. இதனால் வடமொழி போன்ற
பிறமொழிச் சொற்களின் ஆதிக்கம் வேரூன்ற ஆரம்பித்தது. இதுபோன்று
ஏற்பட்டதால் எழுத்து வருகை வரலாற்றில் சற்று மாறுதல் ஏற்பட்டது
எனலாம். ஏனெனில் கல்வெட்டு எழுத்துகள் என்று கூறக்கூடிய கிரந்த
எழுத்துகள் பயன்பாட்டுக்கு வரலாயின. இதனால் அவ்வெழுத்துகள்
சொல்லின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் நிலைபெற்று
வழங்கலாயின.

    சங்ககாலத்தில் சொல்லப்பட்டதுபோல் உயிர் எழுத்துகளும், உயிர் மெய்,


மெய் எழுத்துகளும் அதன்படியே இடைக்காலத்திலும் வரலாயின. ஆனால்
ஒருசில மெய் எழுத்துகள் சொல்லின் இறுதியில் சங்ககாலத்தில்
உள்ளதுபோல் வராமல் போயிற்று எனலாம்.

சான்று:

    ‘வெரிந்’

    இங்குக் கடைசியில் வரும் /ந்/ இடைக்கால இலக்கியங்களில் காணப்


படவில்லை.

கிரந்த எழுத்துகளின் வருகை

‘ஷ் - முஷிக (திருப்புகழ் 13. திருச்செந்தில்)

‘ஜ் - கவிராஜ ( ’’ 19. திருப்பழநிமாலை)


‘ஹ் - ஜெயஹர ( ’’ 427. திருச்செந்தூர்)

‘க்ஷ் - மோக்ஷத்தை ( ’’ 52. குமரக் கோட்டம்)

‘ஸ்ரீ - ஸ்ரீபாத நூபுரி ( ’’ 131. திருச்செந்தூர்)


    மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள ‘ஸ்ரீ’ என்ற எழுத்துச் சொல்லின் முதலில்
மட்டும் வருகிறது; இடையிலோ, அல்லது கடைசியிலோ வருவது இல்லை.
ஏனைய எழுத்துகள் சொல்லின் இடையிலும் கடைசியிலும் வருகின்றன.

    சங்ககாலத்தில் சொல்லின் இறுதியில் வந்த எழுத்து /ந்/ இடைக்காலத்தில்


வழக்கொழிந்தது. அதுபோலவே சங்ககாலத்தில் யகாரம் சொல்லின் முதலில்
வந்து இடைக்காலத்தில் ஆகாரம் ஆக மாறியது, இருப்பினும் மொழிமுதல்
யகரம் கெட்டு விட்டது எனலாம். இதனால் யகரம் மொழி முதல் வராத
சூழல் இருந்து வந்தது தெரிய வருகிறது.

சான்று:

ஆரிக் கொடுமை செய்தாரென்று அன்னை அறியின்

(சிலம்பு.7:38-4)

ஆரெனக் கேட்டீங் கறிகுவம் என்றே

(சிலம்பு.1:22)
    இச்சான்றுகளில் யார் என்பது ஆர் என (யா>ஆ) மாறி வழங்குவதைக்
காணலாம்.

    சகரமெய் அ,ஐ,ஒள என்னும் மூன்று உயிர்களோடு சேர்ந்து மொழிமுதல்


வாராது என்று தொல்காப்பியம் விதித்திருக்க, சங்க இலக்கியத்தில் அகர
உயிரோடும், ஐகார உயிரோடும் சேர்ந்து மொழி முதலானதை மேலே
கண்டோம். ஆனால் இடைக் காலத்தில் ஒளகாரத்துடன் இணைந்தும்
மொழிக்கு முதலில் வருவதைக் காணமுடிகிறது.

சான்று:

       ‘சௌபலர்’ (வில்லிபாரதம். 3:4)

    அது போன்றே சங்க காலத்தில் ரகரமும், லகரமும் முதலில் வருவது


கிடையாது. இடைக்காலத்தில் இவ்விரண்டு எழுத்துகளும் முறையே ‘இ’, ‘உ’
என்னும் உயிர்களை மொழிமுதல் துணையாகக் கொண்டு வழங்கி
வருகின்றன.

சான்று:

       ‘இராமன்’       (மணிமேகலை. 27:53)


       ‘இரவி குலத்து’ (மணிமேகலை. 24:58)
       ‘உலோகாயதம்’ (மணிமேகலை. 27:78)

    சங்க இலக்கியங்களில்     யகரம்     அகரத்தோடும், ஆகாரத்தோடும்,


ஊகாரத்தோடும் இணைந்து வர இடைக் காலத்தில்     தோன்றிய    
நூல்களிலோ ஓகாரத்தோடும் ஒளகாரத்தோடும் இணைந்து வருகிறது.

சான்று:

       ‘யோகம்’      (மணிமேகலை. 3)
       ‘யோசனை’ (மணிமேகலை. 6:211)
       ‘யௌவனம்’ (சூடாமணி நிகண்டு)

சொல்லின் இடையில் உயிர் எழுத்துகள் இரண்டு (vowel cluster) சேர்ந்து


வருவதில்லை. அவ்வாறு வந்தால் அவற்றை உடன்படுத்த வகரம் அல்லது
யகரம் அவற்றிற்கு இடையில் உடம்படுமெய்யாக வரும். சொல்லின்
இடையில் மெய் எழுத்துகள் தன்னுடன் தானும் தன்னுடன் பிறவும் என்று
பலவாறு மயங்கிவரும்.

சான்று:

    பக்கம், அச்சம் - தன்னுடன் தான் மயங்கியது.


    தங்கம், பஞ்சம் - தன்னுடன் பிற மயங்கியது.

2.3.3 தற்காலம்

    தற்காலத் தமிழில் எல்லா உயிர் எழுத்துகளும் மொழிமுதல் வருகின்றன.


அதுபோலவே ஆய்த (ஃ) எழுத்தும் மொழி முதல் வருகிறது. இது தற்காலத்
தமிழில் காணப்படும் குறிப்பிடத்தக்க இயல்பாகும்.

சான்று:

    ஃபைட் - ‘fight’

    பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து விட்டன எனப் பார்த்தோம். ஆதலால்


அம்மொழிகளில் உள்ள சொற்களை அவற்றின்படியே உச்சரிப்பதற்காகத்
தமிழ்மொழியில் அதற்கு இணையான எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டி
வருகிறது. இதனால் பழைய தமிழ் இலக்கண மரபினைப் பின்பற்ற
முடியாமல் போய் விடுகிறது.

    தொல்காப்பியர் மெய் எழுத்துகள் தனியே மொழி முதலில் வருவதில்லை


என்றார். ஆனால் தற்காலத் தமிழில் பிற மொழிச்சொற்கள் கலந்துள்ளதால்
தொல்காப்பியர் கூற்று வலுவிழந்து விட்டது எனலாம். வேற்றுமொழிச்
சொற்களை அவற்றின் ஒலியமைப்பிற்கு ஏற்ப அப்படியே எழுதும்போது மெய்
எழுத்துகள் தனித்து மொழி முதலில் வருவதைக் காணலாம்.

சான்று:

    க்ராஸ் ரோடு - ‘cross road’

    ககர மெய்யில் சொல் ஆரம்பம் ஆவதைக் காண முடிகிறது.

    மற்றும் எல்லாக் கிரந்த எழுத்துகளும் மொழி முதலில் வருகின்றன.


சொல்லின் இடையில் அனைத்து உயிர் எழுத்துகளும், மெய்எழுத்துகளும்
வருகின்றன.

    சொல்லின் இறுதியில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய மெய்களே


அல்லாமல், வேறுபல மெய் எழுத்துகளும் வருவதைக் காணமுடிகிறது.
பழந்தமிழில் ஙகரம் சொல்லின் இறுதியில் வருவது கிடையாது. இன்றும்
அவ்வாறே உள்ளது. இருப்பினும் பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக்
கொள்வதால் ஙகரம் இறுதியில் வருகிறது.

சான்று:

    ‘வி.பி.சிங்’

    இதுபோன்று இன்னும்பல மெய் எழுத்துகள் இறுதியில் வருகின்றன. (க், ச்,


ட், த், ப், வ்)

சான்று:

    ‘பேங்காக்’
    ‘பீச்’
    ‘வெங்கட்’
    ‘பாக்தாத்’
    ‘பஞ்சாப்’
    ‘மாதவ்’

    இவை அல்லாமல் கல்வெட்டு எழுத்துகள் என்று கூறக்கூடிய கிரந்த


எழுத்துகளில் (ஸ், ஷ், க்ஷ், ஜ், ஹ், ஸ்ரீ) சில எழுத்துகள் மொழி முதலிலும்
கடைசியிலும் வருகின்றன.

சான்று:

    ‘ஸ்போர்ட்ஸ்’
    ‘ஹஜ்’
    ‘பிரஷ்’

இவ்வாறான வருகையால் மெய்மயக்கங்களிலும் (consonant cluster) பலவிதமான


மாற்றங்கள் சங்க காலத்திலிருந்து இடைக்காலத்திலும்,    
இடைக்காலத்திலிருந்து தற்காலத்திலும் தோன்றி நிலைபெற்றன.

    தற்காலத்தில் ‘கட், தவ், க்த், ஹஜ், ரஷ், ட்ன், ட்ல, ட்ஜ், ன்ச் , ன்ய், ன்ஜ்,
ர்ர், ர்ஜ், லஷ்’ போன்ற புதிய புதிய மெய்மயக்கங்கள் பிறமொழிச்
சொற்களால் தமிழினுள் வந்து புகுந்துவிட்டன எனலாம்.

You might also like