You are on page 1of 4

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

The “levator labii superioris alaeque nasi” muscle and swami Nammaalvar
தமிழுக்கு ஆழ்வார் தந்த கொடை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“levator labii superioris alaeque nasi” என்பது மனித உடலில் காணும் தசைகளில் மிக நீண்ட பெயர்
கொண்டது ஆகும். பொதுவாக தசை, எலும்பு, நரம்பு, (Anatomy) ,உடலியல் (Physiology) என அனைத்துமே
இப்படி 3,4,5 சொற்களால் இணைக்கப்பெற்ற நீண்டபெயர்கொண்டவை தான். [பார்க்க படம்]. இந்தப்
பெயர்கள் அனைத்துமே காரணப்பெயர்கள் தான். உலகில் பெரும்பாலான மொழிகள் காரணப்பெயர்கள்
நிறைந்தவை. பெரும்பாலும் பகுதி-விகுதி கொண்டு இணைக்கப்பெற்ற பகுபதங்கள் தான். பல
பகுபதங்களைத் தொகுத்து உருவான அச்சொற்களும் நீண்டவை. எனவே புதிது புதிதாக காலத்திற்கேற்ப
கோடிக்கணக்கான சொற்களை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
ஆனால் இவைகளுக்கு மாறாக அகத்திய பகவான் உருவான தமிழ் மொழியோ இடுகுறிப்பெயர்கள்
நிறைந்தவை. குறுகியவை. பெரும்பாலான சொற்கள் மேற்காட்டிய வழியில் பகுக்கமுடியாதவை.
உதாரணமாக
குறிஞ்சி, முல்லை, உழிஞை, நொச்சி, வஞ்சி, வாகை என்று சொல்லிக்கொண்டே போகலாம். தொல்காப்பியம்
இந்த சொற்களை ஆதரிக்கிறது.
[தமிழிலும் வேற்றுமைத் தொகை, உவமைத்தொகை, பண்புத்தொகை, வினைத்தொகை இருக்கவே
செய்கிறது.]
ஆயினும் 3,4,5 சொற்களை தொகுத்து கூட்டு சொற்களை உருவாக்கும் மரபு சங்ககாலத்தில் இல்லை.
வைரமுத்து கூட “காதலன்” படத்தில் “ஊர்வசி ஊர்வசி” பாடலில் “கேளடி ரதியே ரதியே ! தமிழில்
வார்த்தைகள் 6 லட்சம்” என்று பாடினான்.
எனவே காலப்போக்கில், உலகின் அறிவியல் வளர்ச்சி, வாழ்வியல் வசதி, தேவைகளுக்கு ஏற்ப தமிழும்
பிழைக்க வேண்டும் என்று நினைத்த ஸ்வாமி நம்மாழ்வார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன்முதலில்
தமிழிலும் காரணப் பெயர்களை, பகுபதங்களை ஸ்ருஷ்டித்தார். எனவே வெறுமனே “6 லட்சம் சொற்கள்”
மட்டுமே கொண்ட தமிழ்மொழியும் கோடானுகோடி சொற்களை உருவாக்கும் திறனைப் பெற்றது.
ஆழ்வார் தான் முதன்முதலில் திருமால் என்ற சொல்லினை மாற்றி “உயர்வற உயர்நலம் உடையவன்”,”
ஒத்தாரை மிக்காரை இலையாய மாமாயன்” என்றெல்லாம் நீட்டினார்.
“மிகுநரை இலனே” என்ற திருவாய்மொழியில் “மிகுநர்” என்ற சொல்லை அடியாகக் கொண்டுதான் நாம்
இன்று விடுநர், பெறுநர் என்று கடிதம் எழுத பயன்படுத்துகிறோம். தமிழுக்கே சொந்தமான “னகரம்”
சொல்லின் இறுதியில் பயன்படுவது. ஆனால் அதனை மாற்றி “மிகுநர்” என்று சொல்லின் இறுதியில்
வைத்தார்.
“நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பன்” என்று புதுசொல்லை (இன்பன்) புகுத்தினார்.
“முனைவன் மூவுலகாளி” என்ற இடத்தில் காணும் “முனைவன்” என்ற சொல்லே இன்று “Doctorate”
பட்டத்தினைக் குறிக்கப் பயன்படுகிறது.
இன்னும் “தெய்வவாரி”, “இலையாய மாமாயன்” என்றெல்லாம் நூற்றுக்கணக்கான உதாரணங்களை
எழுதலாம்.
“உவன், உவள், உவர், உது” என்பன தொல்காப்பியத்தில் இல்லாத புரட்சிகள் தானே.
இந்த புரட்சியை ஆதரித்து நன்னூல் என்னும் இலக்கண நூல் எழுதப்பட்டது. “பழையன கழிதலும் புதியன
புகுதலும் வழுவல கால வகையி னானே- நன்னூல்-462” என்று பவணந்தியார் தொல்காப்பிய மரபினை
மாற்றினார். பகுபதம்(காரணப்பெயர்), பகாபதம்(இடுகுறிப்பெயர்) என்று புது இலக்கணம் புகுத்தினார்.
இந்த வழியில் வீரசோழியம், இலக்கணக்கொத்து, பிரயோகவிளக்கம் என்ற இலக்கணநூல்கள்
காணப்பெறுகின்றன.
இவற்றை வைத்தே இன்றுவரை தமிழ்வழி தொடக்கபள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிப் பாடங்களில்
(விக்ஞானம்=அறிவியல், பூகோளம்=புவியியல், சரித்திரம்=வரலாறு) பல்வேறு கலைச்சொற்கள்
உருவாக்கப்பட்டன. தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் என்றும் பல்லாயிரக்கணக்கான
புதுப்புது கலைச்சொற்கள் உருவாகின. இவை சங்கஇலக்கியங்களில் காணப்படாதவை.
உலகில் அந்தணர்கள் மீது காழ்ப்பு கொண்ட பல திராவிடகழக தற்குறி தமிழாசிரியர்கள் தொல்காப்பியமே
சிறந்தது என்றும் வடமொழி வழி பகுபதத்தினை ஆதரிக்கும் நன்னூல் கீழானது என்றும் வக்கிர எண்ணம்
கொண்டோராக உளர்.
இவர்கள் ழகரம், ஞகரம் டகரம் ஙகரம் கொண்ட எழுத்துக்கள், குறுகிய 3, 4 அல்லது 5 எழுத்துக்களால் ஆன
இடுகுறிப் பெயர்களைத்தான் விரும்புவர். இவர்கள் ஆழ்வார் ஸ்ருஷ்டித்த சொற்களை அறியாதவர்கள்.
இவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்.
ஜெர்மானிய மொழியில் “Sehenwurdigkeiten” என்பர். அதாவது “காணத்தகுந்த இடங்கள்” என்று
மொழிபெயர்க்கலாம். “Suss” என்றால் இனிப்பு , Sussikeit என்றால் இனிப்புப்பண்டம். இப்படி ஃரெஞ்ச்,
ஜெர்மானியம், ஜப்பானியம், ஆங்கிலம், ஸ்பானியம், ருஷ்யம் என்று பலமொழிகளும் பகுபதங்கள்
கொண்டவை. ஆகவே தான் அவைகளில் MEDICINE, ENGINEERING, LAW, SCIENCE, ARTS என்று
எதற்குமே பற்பல சொற்களை பகுதி-விகுதிகளாக இணைத்து கலைச்சொற்களை உருவாக்க முடிகிறது.
“Bedienung-Anleitung (user manual)” என்பதனை தமிழில் “பயனர் கையேடு” என்று எழுதுவதும் “மிகுநரை
இலனே” என்ற திருவாய்மொழியின் கொடையே தவிர வேறு என்ன ? “மிகுநர்” என்றுபாடிய ஸ்வாமி
நம்மாழ்வார் வழியில் “பயனர்” என்று எழுதுகிறோம்!! ஆயினும் பயநர் என்பதே சரி !
மேலும் ஜெர்மானிய மொழியில் kaufen (கிரயம்) என்றால் வாங்குவது verkaufen(விக்ரயம்) என்றால் விற்பது.
இதேபோல “ஒத்தார், மிக்கார்” என்று positive form மற்றும் “மனனுணர்வு அளவிலன்” என்றும்
“பொறியுணர்வு அவையிலன்”,”இரு தகைமையொடு ஒழிவிலன் என்று negative form பாடினார். Prefix,
suffix என்று ஆங்கிலத்தில் உண்டு. வடமொழியில் உபசர்க்கம் என்பர். ஜெர்மானியத்தில் இதனை trenbarren
verben என்பர்.
ஆழ்வார் வழியில் இதுவே பின்னாளில் “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்” என்று
உருவாகக் காரணமாயிற்று.
இந்த பத்ததியே பின்னர் கடைக்குட்டி ஆழ்வாரான திருமங்கையாழ்வாரால் ஆதரிக்கப்பெற்றது.
அவர் அருளிய “பெரிய திருமொழி” முழுதுமே இரட்டை வினைகள் கொண்டவை தான். இது தொல்காப்பிய
பத்ததியை ஆதரிக்காமல் நன்னூலுக்கு வழிகோலுவது தான். இவரது அருளிச் செயல்களில் மனதைப்
பறிகொடுத்த ஸ்வாமி கூரேஶரும் “தமிழ நன்னூல் துறைகள் ஐஞ்சுக்கு இலக்கியம்” என்றார். ஆழ்வார் பாடிய
இதுவும் வடமொழி பத்ததியே.
உதாரணமாக
வாலி மாவலத்து ஏன்னும் பெரியதிருமொழிப் பாசுரத்தினை எடுத்துக் கொள்ளலாம்.
உடல்கெட, இடம்பெற, அதிர்தர, நடம்செயும், சென்றுஅடை என்று ஆழ்வார் பாடிய அழகே தனிதான்.
இவற்றை ஜெர்மானியத்தில் Trenbare verben என்பர்.
மாறாக இன்று தமிழ்ப்படுத்துகிறேன் பேர்வழி என்று பலமுட்டாள்கள் தமிழை கெடுக்கின்றனர்.
உதாரணமாக “Whatsup” என்ற ஸ்மார்டப ் ோன் செயலிக்கு “கட்செவி” என்று பெயர்வைத்தனர். ஆடியோவும்
வீடியோவும் உள்ளமையால் அதற்கு கட்செவி என்று தமிழில் இதுவரை இல்லாத புதுப்பெயரை உருவாக்கி
விட்டனராம். ஆஹா ! என்ன ஒரு ஞானம் ? மாறாக ஏற்கனவே “கட்செவி” என்றால் பாம்பு என்று
பொருள்படுமாறு சொல் உண்டு. இந்த முட்டாள்களுக்கு எப்படிப் புரியவைப்பது ?
இன்னொரு இயற்பியல் மேதாவி “Quantum” என்ற ஆற்றல் துளிக்கு “அக்குவம்” என்று பெயர் வைத்தார்.
அக்கு என்றால் அணுபரிமாணமாம். அதனுடன் “அம்” விகுதி சேர்த்தால் அக்குவம் வந்துவிட்டதாம். ஆஹா
என்ன ஒரு சிந்தனை , என்னே எனது புதிய கிளவியாக்கம் என்று தன்னையே வியந்து போகிறான்.
மாறாக தமிழில் “அக்கு” என்றால் “எலும்பு” என்று பொருள்தரும் சொல் ஏற்கனவே உண்டு.
“அக்கும் புலியின் அதளும் உடையார்” என்பது பெரியதிருமொழியில் திருக்குறுங்குடிப் பதிகப் பாசுரம்.
“அக்கு” அறியாத தற்குறி இவன் என்னலாம். இவனும் அதிமேதாவிகளில் அடக்கம்.
மேலும் சங்கத்தமிழை “கழகத்தமிழ்” என்றும் “நடுவணரசு” என்பதை “ஒன்றியம்” என்றும் அரசியல்
உள்நோக்கம் கொண்டு மாற்றுகிறார்கள்.
இந்த ஜென்மங்கள் என்றுதான் திருந்துமோ ? இவர்களா தமிழின் காப்பாளர்கள் ? இவர்கள் தமிழை
வாழவிடுவார்களா ? இவர்களா பொதுவுடமைவாதிகள் ?
சரி போகட்டும் ! இவ்வாண்டும் மத்திய மனிதவளத்துறையின் அனுமதிப்படி தமிழ்வழிக் கல்விப்படி
MEDICINE, ENGINEERING, LAW, SCIENCE, ARTS பயிலுவிக்கலாம் என்ற ஆணையும் பெற்றுள்ளோம்
என்றால் அது ஆழ்வார்களின் கொடைதானே !
ஸ்ரீஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
!@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@22
பிற்சேர்க்கை : வடமொழியில் “ராமாநுஜ” என்ற சொல் ராம: + அநுஜ: என்ற இருபெயர்களால் ஆனது. அதில்
ராம: என்னும் சொல் பகுதி விகுதிகள் சேர்ந்து உருவானது. அவ்வாறே அநுஜ: என்ற சொல்லும் பகுதி
விகுதிகள் சேர்ந்து உருவானது. இதுவும் அஜ என்ற சொல்லும் அ என்ற உபசர்கமும் சேர்ந்து உருவானது.
கிரேக்க, லத்தீன் வேர்களைக் கொண்டே ப்ரெஞ்ச், ஆங்கில சொற்கள் உருவாகின்றன. உதாரணமாக vitamin
என்ற சொல்லினை vit+amin என்று பிரிக்கலாம். Vit என்றால் வாழ என்றும் amin என்றால் அமினோமிலம்
என்றும் பொருள்தரும். இவைகள் கூடி உயிர்வாழத்தேவையான அமினோஅமிலம் என்றாகும். Revive என்ற
சொல்லில் re+viv என்று பிரிக்கலாம். Viv (Vit) என்றால் வாழ. அத்துடன் re- மீண்டும் என்ற உபசர்க்கம் கூடி
திரும்பவாழவைப்பது என்றபொருளைத் தருகிறது.
இதுபோல வழக்கத்தினை முதலில் ஆழ்வார் உருவாக்கினார். அது தெரியாத திக தமிழாய்ச்சியாளர்கள்
அவர் வழியை பின்பற்றுகிறார்கள். ஆயினும் அவரை ஏற்று, வாழ்த்தி முழுதுமாக பின்பற்றினால் மகிழ்ச்சி
தானே !

அதாவது 55 அல்லது 100 இஞ்ச் டிவியில் படம் பார்க்கலாம். ஆனால் அதையே 3 இஞ்ச் ஸ்மார்ட்போனில்
இணைத்து படம்பார்த்து “ஹாஹ்ஹா ! என்ன ஒரு சிந்தனை” என்று கொக்கரிக்கும் வக்கிரர்கள் போலவாம்.
அதேபோல என்னதான் திருவாய்மொழி எளிதாக இருந்தாலும் அதையும் கடினமான வடமொழியில் முழுதாக
மொழிபெயர்த்தும், முழுதாக வ்யாக்யானம் எழுதியும் திரியும் வக்கிரர்கள் இவர்கள்.
ஸ்ரீவைஷ்ணவத்தில் ஜாதிவெறி பிடித்த பலர் தமிழைவிட வடமொழியே பெரிது,சிறந்தது என்ற தவறான
எண்ணம் கொண்ட வக்கிரர்களாக உளர்.

You might also like