You are on page 1of 10

தனித்தமிழ் நடை

உரைநடையும் படைப்பாக்க நுட்பங்களும்

வழங்குவர்:
ஆ. நித்தின்
இளங்கலைத் தமிழ்ப் படைப்பாக்கம்
rjnithin14@gmail.com
‘திராவிட மொழிகள் அனைத்தினும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும்
தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு
உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம்
பெற்றுவளர்வதும் இயலும்’.
- கால்டுவெல் (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்)
தமிழ் இலக்கிய வரலாற்றை நோக்கின் தொல்காப்பியர் காலத்திலேயே
வடமொழிக் கலப்பு இருந்ததை அறிகிறோம்.
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே
சங்க இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
சங்கமருவிய கால இலக்கியங்களில் வடமொழிக் கலப்பு சிறிது அதிகரித்தது.
மணிமேகலை போன்ற நூல்களில் புத்த சமயக்கோட்பாடுகளை விளக்குவதால்
வடசொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. பல்லவர், சோழர் காலத்தில் வடசொல்
கலப்புமிகுந்து காணப்படுகின்றது.
திருவாசகத்திலுள்ள 2810 சொற்களுள் 373 சொற்கள் வடசொற்கள் என
மறைமலையடிகள் குறிப்பிடுகிறார்.
சங்க காலந்தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரை தமிழில் பிறமொழிக்கலப்பு
இருந்ததை மறுப்பதற்கில்லை.
தனித்தமிழ் இயக்கம்
தனித்தமிழ் இயக்கம் என்பது தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலக்காமல்
தனித்தமிழில் எழுதப்பட வேண்டும் அல்லது பேசப்பட வேண்டும், அவ்வாறு கலப்பதால்
தமிழ்மொழிக்கு நன்மையில்லை, பெருந்தீமை என்று சொல்லும் இயக்கம் ஆகும்.
தமிழ் மொழி, இயற்கையாகவே தனித்தியங்கக்கூடியது; அதற்குப் பிறமொழிகளின்
துணை தேவையில்லை என்பது இக்கொள்கையின் அடிப்படையாகும்.
இந்த இயக்கம் 1916 ஆம் ஆண்டு அளவில் தோற்றுவிக்கப்பட்டது.
தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பரிதிமாற்
கலைஞர், கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியவர்கள் தனித்தமிழ் இயக்கத்தில்
குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களில் மறைமலை அடிகள் 'தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை' எனப் போற்றி
வழங்கப்படுகிறார்.
தனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?
இடைக்காலத்தில் தமிழ்மொழிக்குப் பெருங்கேடு தோன்றியது. அது மணிப்பிரவாளம் என்னும்
பெயருடன் தோன்றியது. மணி ஒன்றும் பவளம் ஒன்றும் அடுத்தடுத்துக் கோத்து
உருவாக்கப்படும் மாலையைப் போலத் தமிழ்ச்சொல் ஒன்று வடசொல் ஒன்றென
அடுத்தடுத்துப் பயன்படுத்தி எழுதுவது மணிப்பவளம் என்னும் கலப்படத்தமிழ் நடையாகும்.
இத்தகைய நடையால் தமிழுக்குக் கேடுவிளையும் என்பதை உணர்ந்த அறிஞர் மறைமலை
அடிகள் அதைத்தடுக்க முயன்றார். அதனால் தோன்றியது தனித்தமிழ்க் கொள்கையாகும்.
தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது பிறமொழிச்சொற்கள் தேவையில்லை என்பதை அவர்
வலிமையாகச் சொன்னார்.
தன் பெயரை "வேதாச்சலம் சுவாமிகள்" என்னும் வடமொழிச் சொல்லிலிருந்து "மறைமலை
அடிகள்" என்று தமிழ்ப் படுத்தினார். பரிதிமாற் கலைஞரும் "சூரிய நாராயண சாஸ்த்ரி"
என்னும் தம் பெயரை தமிழாக்கம் செய்தார்.
தனித்தமிழ்க் கொள்கை தோன்றியது ஏன்?
தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வடமொழியோ இந்திய ஆரிய மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்தது. இரு வெவ்வேறு தன்மையுடைய இத்தகைய மொழிகளை
வலுக்கட்டாயமாக இணைப்பது மொழியியல் இயற்கைக்கு மாறானது.

இத்தனித்தமிழ் இயக்கம் தோன்றிய காலகட்டத்தில் வாழ்ந்த அறிஞர்கள், தமிழார்வலர்கள் பலரும்


மணிப்பிரவாள நடையின் வாயிலாக, வடமொழி சார்ந்த நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள்,
கலாச்சாரக் கூறுகள் முதலியன தமிழர் மீது திணிக்கப்படுகிறதாகக் கருதினார்கள்.
இவற்றை அகற்றும் நோக்கத்தில்,
தமிழ்த் திருமணம்
திருவள்ளுவர் ஆண்டுமுறை
தமிழர் மதம்
தமிழரின் நான்மறை
முதலிய கோட்பாடுகள் முதன்முறையாகத் தமிழ் நிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மறைமலை அடிகள் நடை
இங்ஙனமாக நங்கட்புலனெதிரே இயங்காநின்ற மாப்பேருலகக் களும், இவை
தமக்கு இடனாய் எல்லையின்றி எங்கும் விரிந்து இலங்காநின்ற நுண்ணிய
வான்வெளியும் எல்லாம் என்றும் மங்கா இலகு பேரொளியுடன் சுடர்விரிந்து
துலங்கக் காண்டலால். இவ்வொளியின் எல்லையற்ற பரப்பே எல்லையின்றி
எங்கும் விரவி விளங்காநின்ற இறைவன்றன் றிருவுருவமாகப் பண்டைத் தமிழராற்
கருதி வழுத்தப்படுவதாயிற்று. இவ்வாறு வரம்பற்ற வான்வெளியின் ஒளிப்பரப்பு
இறைவன்றன் றிருவுருவமாகக் கருதப்படவே, அவ்வான்வெளியிற் றிகழும்
ஞாயிறு திங்களும் அத்திருவுருவத்திற்கு இரண்டு கண்களாகவும், வான்
அளாவிநிற்கும் எரிமலைகளின் முகட்டிற் கிளர்ந்து தோன்றும் பேரனற்
கொழுந்து, அவ்விரு கண்களின் இடையே நுதலின்கட் சுடர்ந்தெரியும் நெற்றிக்
கண்ணாகவும் கருதப்படலாயின.
(தமிழர் மதம்)
ஆறுமுக நாவலர் நடை
சில நாள் கழிந்த பின், சோழராசன், வரகுண பாண்டியனோடு போர் செய்யக்
கருதித் தன் சேனையோடு வந்து, மதுரையை அணுகினான். வரகுண பாண்டியன்,
அஃதறிந்து, தன் சேனையோடு எதிர்ந்து பொருதான்.

திரு.வி.க. நடை
“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர் வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி
! என் பெயர் தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில் தீயன் சிக்கல் !
‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது என் நா !”
(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்.807)
மனோன்மணியம் பெ. சுந்தரனார் நடை
“அன்பும் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவு நூலுணர்வும்
தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் வாய்மையும் சொல்லில் வழுவா
வன்மையும் துணிவும் காலமும் கனமும் துணியுங் குணமும் மந்திரத் தலைவர்
துணைமையும் உடையனே வினையாள் தூதனென்று ஓதினர்"

ரா.பி. சேதுபிள்ளை நடை


"அந்நியப் பரப்பில் அடுக்கடுக்காக உயர்ந்து ஓங்கி நின்ற குமரி என்னும்
பெருமலையும் உன்பாழும் வயிற்றில் பட்டு ஒழிந்ததே. ஐயோ நீ எங்கள்
மண்ணைக் கடித்தாய்; ஆற்றைக் குடித்தாய்; மலையை முடித்தாய்; இப்படி
எல்லாவற்றையும் வாரி எடுத்து வயிற்றில் அடக்கும் உன்னை வாரி என்று
அழைப்பது சாலவும் பொருந்தும்..."
தேவநேயப் பாவாணர் நடை
இறைவன் ஏற்பாட்டின்படி மக்களுலகம் இடையறாது. தொடர்ந்து வருவதற்கு
இல்லறமே காரணமாதலாலும், துறவியர்க்கும் அவர் முற்றத் துறக்கும் வரை
இன்றியமையாத் துணையாயிருப்பது இல்லறத்தாரேயாதலாலும்,
இல்லறத்தாலும் வீடுபேறு கிட்டுமாதலாலும் மாயமால நடிப்பிற் கிடம்
துறவறத்தினும் இல்லறத்திற் குறைவாதலாலும் இல்லறமே நல்லறமாம்.

ஒருவன் காலையில் எழுந்தவுடனும், பின்னர், உண்ணு முன்னும், ஓரிடத்திற்குப்


புறப்படு முன்னும், ஒரு வினையைத் தொடங்கு முன்னும், ஒரு நன்மை கிட்டிய
போதும், தீங்கு நேர்ந்தபோதும், உறங்கப் புகு முன்னும் இறைவனை ஒரு
நிமையம் எண்ணினாலும் இறைவழிபாடு செய்ததாகும். இங்ஙனம் மன
நிலையிலேயே இருக்கக் கூடிய மதத்தை எவரும் அழிக்க முடியாது.

You might also like