You are on page 1of 6

சிறுகதை திறனாய்வு : அட்டைகள் (மு.

அன்புச்செல்வன்)

1.0 கதை ஆசிரியர் குறிப்பு

நாட்டின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக, தமிழ் இலக்கிய உலகில் தனது


எழுத்துப் படிவங்களால் தனி இடம் பிடித்தவர் எழுத்தாளர் மு.அன்புச்செல்வன் . மலேசிய
எழுத்துலகில் சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல்கள் என பல முனைகளில் தனது இலக்கிய
ஆளுமையை ஆழமாகப் பதிவு செய்தவர். இவரின் இயற்பெயர் பெருமாள். வானொலியிலும்,
செய்தி வாசிப்பாளராக தனது குரல் வளத்தால் முத்திரையைப் பதித்தவர் அன்புச் செல்வன்.
இவர் மலேசியாவில் நடைபெற்ற பல்வேறு இலக்கியக் கருத்தரங்கள், சிறுகதைக் கருத்தரங்கள்,
இலக்கிய நிகழ்வுகள் என பல்வேறு மொழி, இலக்கிய அங்கங்களில் ஆர்வமுடன் கலந்து
கொண்டவர்.

2.0 தலைப்பு

அன்புச் செல்வன் எழுதிய சிறுகதைகளுள் ‘அட்டைகள்’ எனும் சிறுகதை மிகவும் புகழ்


பெற்றதாகும். தோட்ட மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் இன்னல்களையும்
அவலங்களையும் இக்கதையின் வழி சித்தரித்துள்ளார். இக்கதைக்கேற்ப கதையாசிரியர்
தலைப்பைத் தெரிவு செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது. ஒரு சமுதாயத்தின்
நல்வாழ்வுக்கும், வசதிக்கும், இன்னொரு சமுதாயம் தெரிந்தோ தெரியாமலோ தன்னை
அழித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த வகையில் மனித இரத்தம் அட்டைகளுக்குதான்
உணவாக இருக்க வேண்டுமா என்ற கேள்வியை இக்கதை முன்வைப்பதால் ஆசிரியர்
இக்கதைக்கு இத்தலைப்பைத் தெரிவு செய்திருக்க வேண்டும்.

3.0 சிறுகதையின் சுருக்கம்

தோட்டத் தொழிலாளியான அழகிரி என்பவர் தன் மகனை எப்பாடுபட்டாவது படிக்க


வைத்து தமது குடும்பத்தை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென பாடுபடுகிறார்.
தன் மகனை ஆங்கில பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையைக்
களைக்க மறைமுகமாக முயற்சிக்கிறார் அழகிரியின் முதலாளி மேத்யூஸ். ஆயினும், அழகிரி
தன் மகனை ஆங்கில பள்ளியில் தான் படிக்க வைக்கப் போவதாக உறுதியாகக் கூறுகிறார்.
மேத்யூஸின் போலியான பாராட்டை நம்புகிறான் அழகிரி. பட்டணத்தில் சென்று
ஆங்கிலப்பள்ளியில் படிக்கப் போகிறோம் என்ற ஆசையில் அழகிரியின் மகன் தங்கையா
உச்சி குளிர்கிறான். அவன் படிக்க ஆரம்பித்ததிலிருந்து அழகிரி தன் மகனின் கல்விச்
செலவை ஈடுக்கட்ட தவிக்கலானான். அச்சமயத்தில் அழகிரி தன் மனைவியின் வேலையையும்
அவனுடைய பகுதி நேர வேலையையும் இழக்கிறான். வறுமையும் பசி கொடுமையும்
அழகிரியின் குடும்பத்தைத் தாக்குகிறது. அதனால் அழகிரியால் தங்கையாவைத் தொடர்ந்து
ஆங்கில் பள்ளியில் படிக்க வைக்க முடியவில்லை. தங்கையா குடும்ப நிலை அறிந்து பெரிய
கிராணி மேத்யூஸிடம் கூலி தொழிலாளியாக வேலைக்குச் செல்கிறான்.

4.0 தொடக்கம்

இச்சிறுகதையின் தொடக்கத்தில் அழகிரியைப் பற்றியும் தோட்டபுறத்து மக்களின்


வாழ்க்கையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அழகிரியின் அறியாமையைப் பயன்படுத்திக்
கொண்டு அவனின் முதலாளி மேத்யூஸ் அழகிரியின் மகனை ஆங்கில பள்ளியில் படிக்க
வைப்பதை மறைமுகமாகத் தடுக்க நினைக்கிறார். ஏழை சமுதாயம் முன்னேற நினைப்பதைத்
தடுக்கும் சில பணக்காரர்களின் கீழ்தரமான எண்ணங்களை மிக அழகாகக் காண்பித்துள்ளார்
கதையாசிரியர்.

5.0 கதை பின்னல்

இச்சிறுகதையில் அழகிரி தன்னுடைய மகன் தங்கையாவைப் படிக்க வைப்பத்தில் தானும்


அவனது மனைவியும் படும் இன்னல்களே இக்கதையின் கதை பின்னலாக அமைகிறது. அழகிரி
தன்னுடைய மகன் தன்னைப் போல் எதிர்காலத்தில் கஷ்டப்பட கூடாது எப்பாடுபட்டாவது
தன் மகனைப் படிக்க வைத்து தன்னுடைய குடும்பத்தின் இந்த ஏழ்மை நிலையைப் போக்க
வேண்டும் என அல்லும் பகலும் உழைக்கிறான். அழகிரிக்கு ஒரு கால் ஊனமாக இருந்தாலும்
தன் மகனை எப்பாடுபட்டாவது படிக்க வைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஊனம்
இல்லை என்றே கூறலாம். மகன் தங்கையா படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து அழகிரி
பணத்திற்கு அல்லாடுகிறான். அழகிரியின் தன்னுடைய முப்பது ஆண்டுகள் எஸ்டேட்
வாழ்க்கை கழித்தாகிவிட்டது; தான் படும் கஷ்டங்களெல்லாம் தன்னோடு மக்கி, மறைந்து,
மண்ணாகி விட வேண்டும்; பிள்ளைகளும் அந்தத் துன்பத்தை அனுபவிக்கக்கூடாது எனும்
அழகிரியின் ஆசையைக் களைக்க நினைப்பவராக அழகிரியின் முதலாளி மேத்யூஸ்
அழகிரியைப் பகுதி நேர வேலையிலிருந்து நீக்குகிறார். அவனது மனைவியைப் பணி நீக்கம்
செய்வதற்கும் மேத்யூஸே காரணமாகிறார். வறுமையினாலும் தனது குடும்பம் அனுபவிக்கும் பசி
கொடுமையினாலும் தனது மகனை மேலும் படிக்க வைக்க முடியாமல் சூழ்நிலை கைதியாக
மாறுகிறான் அழகிரி.

6.0 கதைக்கரு

சுயநலம் படைத்த முதலாளிகளிடம் மாட்டிக் கொண்ட தோட்டத் தொழிலாளிகளின்


அறியாமையையும் அவல நிலையையும் சூழலாகக் கொண்டு இக்கதையின் கரு
அமைந்துள்ளது.

7.0 கதைமாந்தர்களும் பண்பு நலன்களும்

இக்கதையில் முதன்மை கதை மாந்தராக வலம் வருபவர் அழகிரி. இவர் தங்கையாவின்


தந்தை மற்றும் சாதாரண தொழிலாளியாவார். அழகிரி மிகவும் உறுதியான மனம் உடையவர்
என்பதை இச்சிறுகதையின் வழி நாம் அறிந்து கொள்ளலாம். சான்றாக, பெரிய கிராணி
மேத்யூஸ் தங்கையாவை ஆங்கில பள்ளியில் சேர்த்தால் அதிக பணம் தேவைப்படும் என்று
கூறியும் மனம் தளராமல் மகனை ஆங்கில பள்ளிக்கு அனுப்பினார் அழகிரி. அழகிரி நல்ல
மனம் கொண்டவர் என்றால் அது மிகையாகாது. தன்னைப் போல் தன்னுடைய மகனம்
தோட்ட தொழிலாளியாகத் துன்பம் படக் கூடாது என்பதற்காகத் தங்கையாவை ஆங்கில
பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க பாடுபட்டார். அழகிரி தியாக குணம் உடையவர் என்பதை
வாசகர்கள் மத்தியில் சித்தரித்துள்ளார் கதையாசிரியர். அழகிரிக்கு ஒரு கால் ஊனமாக
இருந்தாலும் மகனைப் படிக்க வைப்பதற்காகப் பகுதி நேர வேலையைச் செய்தார். தன்னுடைய
ஆசைகளையும் தியாகம் செய்தார். ஒரு தந்தையின் எல்லையில்லா தியாகக் குணத்தைப்
பற்றி பேசுகையில் அழகிரியின் பாத்திரப்படைப்பு வாசகர்கள் மத்தியில் மெய் சிலிர்க்க
வைக்கிறது என்றால் அதை மறுக்க இயலாது என்றே கூற வேண்டும்.

அடுத்ததாக, இச்சிறுகதையில் அழகிரியின் மகனாக இருப்பவன் தங்கையா. தங்கையா


அழகிரியின் மூத்த மகனாவான். கல்வியில் ஆர்வம் கொண்டுள்ளவன்; நன்றாகப் படிக்கும்
ஆற்றல் உள்ளவன். தங்கையா குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுபவன் என்றே கூற
வேண்டும். உதாரணத்திற்கு, தங்கையா குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு படிப்பை
நிறுத்தி விட்டு பெரிய கிராணி மேத்யூஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்றான்.
தொடர்ந்து, இக்கதையில் எதிர்மறை கதாபாத்திரத்தை ஏற்று வருபவர் அழகிரியின்
முதலாளி மேத்யூஸ். மேத்யூஸ் சுயநலம் படைத்தவன். சான்றாக, தன்னுடைய பிள்ளை மட்டும்
ஆங்கில பள்ளியில் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற சுயநலம் படைத்தவன். அதனால்,
தங்கையா ஆங்கில பள்ளியில் படிப்பதை நிறுத்துவதற்காக அழகிரியின் பகுதி நேர
வேலையும் அழகிரியின் மனைவியின் வேலையும் போவதற்குக் காரணமாக இருந்தான்.

8.0 மொழிவளம், நடை, உத்தி

இச்சிறுகதை தோட்டப்புற சூழலில் அமைந்திருந்ததால் இக்கதையின் மொழிநடை


தோட்டப்புற மக்களின் பேச்சு வழக்கும் பிற மொழி கலப்பையும் கொண்டுள்ளது.
உதாரணத்திற்கு, பெரிய கிராணி, மழைத்திட்டி, “இங்கிலீஸ் பள்ளிக்கூடத்திலே படிக்க வெக்கிறது
லேசான காரியமில்லே..”, பஸ் பாஸ், எஸ்டேட், மானேஜர், போன்ற கலப்பு மொழி
இச்சிறுகதையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கதையில் ஆசிரியர் நனவோடை (நிகழ்காலம்) உத்திமுறையைப்


பயன்படுத்தியுள்ளார். சான்றாக, அழகிரி தன் மகனைப் படிக்க வைப்பதற்காகப் பல முயற்சிகள்
செய்கிறார். இறுதியில் வறுமை தங்கையா படிப்பிற்குத் தடைக்கல்லாக அமைகிறது.

9.0 வாழ்வியல் கருத்து

‘ கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில்


முழு சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிபடுத்துவது என்பதேயாகும். அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத்
தகுதியுடையவனாக்குவது என்பதாகும்’ என்று தந்தை பெரியார் கூறியது போல கதையாசிரியர் கல்வியின்
அவசியத்தைப் பற்றி அழகிரியின் பாத்திரப்படைப்பின் வழி புகுத்தியுள்ளார். கல்வியறிவு இல்லாத தோட்டத்
தொழிலாளியான அழகிரி தன் மகனை எப்பாடுபட்டாவது நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைமையில் தன்
குடும்பத்தை இட்டுச் செல்ல வேண்டுமென நினைக்கிறார். மேலும் கல்வியில்லாதவர்களைப் பணக்காரர்கள்
ஆதிக்கம் செய்வதிலிருந்து கல்வியில்லாத வாழ்க்கை ஒரு மனிதனின் வாழ்க்கை அடிமைத்தனமான
வாழ்க்கைக்கு வித்திடுகிறது என்பதை மறுக்க இயலாது.

“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு


புண்ணுடையார் கல்லா தவர்”

என்கிறார் திருவள்ளுவர். கல்வி கற்றவர்களே கண்ணுடையவர்கள். கல்லாதவர் முகத்தில் இருப்பது புண்கள்


என கூறுகிறார். ஆகவே, கல்லாதவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள் எனவே நாம் கல்வி கற்ற
சமூதாயமாகத் திகழ வேண்டும் என்ற உயர்நெறி சிந்தனையைக் கதையாசிரியர் வாசகர்கள் முன்னிலையில்
வைத்துள்ளார்.

தொடர்ந்து, சில பணக்காரர்கள் ஏழைகளை முன்னேற விடாமல் தடுக்கின்ற பொறாமை குணத்தை


ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். தங்கையாவை ஆங்கில பள்ளியில் அனுப்பப் போவதாக அழகிரி கூறியதும்
அவனின் முதலாளி மேத்யூஸ் அதற்கு நிறைய செல்வாகும் என அச்சுறுத்தி தங்கையாவை ஆங்கில
பள்ளிக்கு அனுப்புவதைத் தடுக்கிறான். மேலும், தங்கையா படிப்பை நிறுத்துவதற்காக மேத்யுஸ் அழகிரியின்
பகுதி நேர வேலை போவதற்கும் அவனது மனைவியின் வேலை போவதற்கும் காரணமாக அமைகிறான் . இது
போன்ற பொறாமை குணங்கள் இன்றளவும் மக்கள் மனதில் இருந்து வருகிறதென்றால் அது
வெள்ளிடைமலை. தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய
ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான். இதனையே தான் திருவள்ளுவரும்
கூறுகின்றார்.

‘அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்


பேணா தழுக்கறுப் பான்’

என்கிறார். பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை


வேண்டா என மறுப்பவன் ஆவான் என்பதே இதற்குப் பொருள். அந்த வகையில் கதையாசிரியர்
வாசகர்களிடையே பொறாமையால் ஏற்படும் விளைவுகளை இக்கதையில் முடிவில்
காண்பித்துள்ளார்.

அடுத்ததாகத், தோட்டத்துப்புற மக்கள் படும் இன்னல்களையும் அவலங்களையும் ஆசிரியர்


மிக ஆழமாக வாசகர்களின் மனதில் பதித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும். அழகிரி தன் மகன்
தங்கையாவை படிக்க வைப்பதில் எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கினான்.
மேத்யூஸிடமிருந்து வந்த தடைகளை எடுத்தெறியெ முடியாமல் இறுதியில் அவனின் குடும்பம்
பசியின் கொடுமையில் சிக்கிக் கொண்டு தவிப்பதைப் படிக்கும் பொழுது வாசகர்களின் மனதை
உருக்கவே செய்கின்றது. தோட்டத்துப்புற மக்களின் வாழ்க்கை என்பது தோட்டத்துப் புண்ணியவான்
குடி இருப்பதற்காகக் கொடுத்த வீடும், உழைப்புக்காகக் கொடுத்த பணமும் சோற்றால் வளரும்
உடலைக் காப்பாற்றிக் கொள்ளவும், ஓய்வுக் கொள்ளவும் பழக்கப்பட்டு விட்ட வாழ்க்கையாக
ஆகிவிட்டது. படித்து முன்னேற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசைகளோ, உணவையும், ஏதொ
கடமைக்காக உடலை மறைக்கப் போட்டுக் கொள்ளும் உடைகளையும் தவிர, இந்த உலகில் இன்னும்
என்னெவெல்லாமோ இருக்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படாத உள்ளங்கள் என
கதையாசிரியர் சித்தரித்ததிலிருந்து தோட்டத்துப்புற மக்கள் படும் துன்பங்களை நம்மால் உணர
முடிகின்றது.

தோட்டத்துப்புற மக்களின் அறியாமையையும் ஆசிரியர் இச்சிறுகதையில் புகுத்தியுள்ளார்.


சான்றாக, கதையில் ‘தன்னுடைய சம்பளம் ஒருமாதம் ஏன் குறைவாகக் கிடைக்கிறது. ஒரு மாதம்
அதிகமாகக் கிடைக்கக் காரணம் என்ன? மழத்திட்டி எவ்வளவு? வெட்டுக் காசு எவ்வளவு வருகிறது
என்பது தெரியாமல், இருபது ஆண்டுக் காலமாக மேரித் தோட்டத்தில் வாழ்ந்து வருகிறான் அழகிரி’
என்ற வரிகளின் வழி அழகிரியின் அறியாமையைப் பற்றிப் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும்,
அழகிரியின் பகுதி நேர வேலை பறிபோனதற்கும் அழகிரியின் மனைவியின் திடீர் வேலை
நிறுத்தத்திற்கும் மேத்யூஸ் தான் காரணம் என தெரியாமல் அழகிரி அறியாமையில் தவித்துக்
கொண்டிருந்தான்.

10.0 முடிவு

இச்சிறுகதியின் இறுதியில் பெரிய கிராணியின் மகன் படித்துப் பட்டம் பெறுகிறான். பெரிய


கிராணியின் சதியை அறிகிறான் தங்கையா. தானும் படித்திருந்தால் பட்டம் பெற்றிருக்கலாம் என்ற
ஆவலும் ஏமாற்றமும் தங்கையாவை மனம் வருந்த செய்கிறது. தன்னுடைய இயலாமையைக் கருதி
மனம் உடைந்து போகிறான் தங்கையா.

You might also like