You are on page 1of 46

1

FAKULTI PENDIDIKAN DAN BAHASA

______________________________________________________________________________

HBTL 3103

PENGAYAAN BAHASA TAMIL I

SEMESTER JANUARI 2020

______________________________________________________________________________

NAMA : MEKALAH A/P NARAYANAN

NO.MATRIKULASI : 870407055396001

NO.KAD PENGENALAN : 870407055396

NO.TELEFON : 0103639687

E-MEL : nmekalah@yahoo.com.my

PUSAT PEMBELAJARAN : PPNS

1
2

உள்ளடக்கம்

எண் தலைப்பு பக்கம்

1.0 முன்னுரை 3 - 4

வாதக்கட்டுரை – (தமிழ்

2.0 இளையர்களிடம் இறை நம்பிக்கை 5 - 12


குறைந்துவிட்டது)

சிறுகதை – (பெண்மை – ஆசைக்கும்


3.0 13 - 20
ஆஸ்திக்கும்)

அறிக்கை – (பெற்றோர் ஆசிரியர்

4.0 சங்கத்தின் 2019-ஆம் ஆண்டின் 21 - 25

அறிக்கை)
செய்யுள் நலம் பாராட்டுதல் – (கவிஞர்

5.0 கண்ணதாசனின் தமிழ்த் 26 - 38

திரைப்பாடல்கள்)

6.0 முடிவு 39

7.0 மேற்கோள் நூல்கள் 40

8.0 பின்னிணைப்புகள் 41 – 46

1.0. முன்னுரை

மனத்தில் தோன்றும் கருத்துகளைக் கோவைப்படுமாறு காரண

காரியத் தொடர்பில் மிக அழகான மொழியில் அமைப்பது

2
3

கட்டுரையாகும். இயற்கையாகத் தோன்றி எழும் எண்ணங்கள்

மொழியைப் பொறுத்தவரையில் இரண்டு விதமாக வெளியிடப்படும்.

ஒன்று வாய்மொழி; மற்றொன்று எழுத்து மொழி.

பேச்சில் வெளிப்படும் எண்ணங்கள் எழுத்து வடிவம் பெறாமல்

நிலைத்த தன்மையை அடைய முடியாது. இவை எழுத்து வடிவம்

பெறாமல் நிலைத்த தன்மையை அடைய முடியாது. இவை எழுத்து

தன்மைப் பெற்றால்தான் பேச்சைக் கேட்க முடியும்.

அவ்வகையில், எழுத்துப் படைப்புகளில் வருணனை கட்டுரை,

விளக்கக் கட்டுரை, விவாதக் கட்டுரை, சிறுவர்கள் கதை, சிறுகதை

எழுதுதல், உரையாடல், அறிக்கை எழுதுதல், கவிதைகளைச் செய்யுள்

நலம் பாராட்டிக் கட்டுரை வடிவில் எழுதுதல் என்று இன்னும் பல

உள்ளன.

விவாதக் கட்டுரை என்பது ஒரு தலைப்பினையொட்டி இரு

நிலைகளிலும் விவாதிக்கப்படும் கட்டுரையாகும். இதில், ஒரு

தலைப்பையொட்டிய உடன்பாட்டுச் சிந்தனையையும் அதே வேளையில்

எதிர்மறைக் கருத்தினையும் கூறுதல் வேண்டும். அதனை, ஒரு சார்பாக

விவாதித்தோமானால் அது வாதக் கட்டுரையாகிவிடும்.

தொடர்ந்து, சிறுகதை என்பது அரை மணி முதல் 2 மணி

நேரத்திற்குள் படித்து முடிக்கும் அளவில் எழுதிட வேண்டும் என்று

எட்கார் என்பவர் கூறியுள்ளார். தமிழ் நாட்டுப் பேராசிரியர்களுள் சிலர்

3
4

புல்ஸ்கேப் தாளில் 5 அல்லது 6 பக்கத்தில் எழுதுவது சிறுகதை

என்கிறார்கள். மேலும், சிலர் 2000 – 3000 சொற்களுக்குள் சிறுகதை

இருத்தல் வேண்டும் என்கிறார்கள். சுருங்கக் கூறின் ஒரு குறுகிய

காலத்தில் அல்லது நேரத்தில் படித்து முடிப்பதாகச் சிறுகதை எழுதிட

வேண்டும் என்பது மட்டும் திண்ணம்.

அறிக்கை எழுதுதல் பலவகைப்படும். அவற்றுள் நிதியறிக்கை,

செயலறிக்கை, ஆண்டறிக்கை, முறையீட்டு அறிக்கை, கழக அறிக்கை,

நிகழ்வறிக்கை போன்றன அடங்கும். அறிக்கை எழுதுதலில்

கண்டிப்பாகக் கவனிக்க வேண்டியக் கூறுகளானது அதன் வகை,

வடிவம், மொழி நடை, பின்னணி, விவரங்கள் மற்றும் உள்ளடக்கம்

ஆகியனவாகும்.

மேலும், செய்யுள் நலம் பாராட்டுதல் என்பது ஒரு பாட்டில்

அமைந்துள்ள எழுத்து நயம், சொல் நயம், பொருள் நயம், எதுகை,

மோனை நயம், அணி நயம், ஓசை (சந்தம்), மற்றும் சொற்றொடர் நயம்

ஆகியவற்றை எடுத்துக்காட்டி விளக்குவதாகும்.

2.0. வாதக்கட்டுரை

தமிழ் இளையர்களிடம் இறை நம்பிக்கை குறைந்துவிட்டது.

4
5

‘இறைவன் மீ து நம்பிக்கை வைத்தல்’ எனும் கூற்று நம்

மலேசியர்களின் தேசிய கோட்பாட்டின் முதல் கோட்பாடாகும். உலகின்

மூலை முடுக்குகளில் எம்மதத்தினராக இருந்தாலும் தீயவற்றை

அழிக்க இறைவன் எனும் தூயவன் உருவெடுப்பான் எனும் நம்பிக்கை

ஆழமாக இருந்து வருகிறது.

இறைவன் என்பது இறை என்ற வேர்ச்சொல்லினை

அடிப்படையாகக் கொண்ட சொல் ஆகும். மக்களை இறுக்கி

நல்வழிப்படுத்துவது இறையாகும். இளைஞர்கள் எனப்படுபவர்கள் 15

முதல் 24 வயது வரையிலான இளமையான காலக்கட்டத்தில்

இருப்பவர்கள்.

ஒரு மனிதரை உயர்ந்த பண்புள்ள மனிதனாக ஆக்குவதற்கு

ஒழுக்கம் மிக முக்கியமாகும். ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒழுக்கம்

முக்கியம் என்பதையே திருவள்ளுவர்,

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்”,

எனக் கூறியுள்ளார். ஒழுக்கம் வாழ்வின் நெறியாக இருக்க

அஸ்திவாரமே இறை நம்பிக்கைதான்.

இறைவன் என்பவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும்

இருப்பான். இறைவன் எவ்விடத்திலும் நிறைந்துள்ளான் என்ற இந்த

5
6

எதார்த்தமான உண்மையை உணர்ந்திருந்தாலே இளைஞர்கள் வாழ்வில்

சிறு தவறு கூட இழைக்க மாட்டார்கள். சாமி கண்ண குத்தும் என்ற

பேச்சு வழக்க பழமொழி அவர்களைச் சிறு சிறு தவறுகளுக்கே

அச்சுறுத்தியிருக்கும்.

ஆனால், இன்று அப்படியா? மலேசியத் தமிழ் இளைஞர்கள் பிற

இனத்தவரைக் காட்டிலும் அதிகமான அளவில் குற்றச் செயல்களில்

ஈடுபடுகின்றனர் என்கிறது சான்றுகள். தன் எதிர்கால

இலட்சியத்திற்காகக் குடும்பங்களை விட்டுக் கல்லூரிக்குச் சென்று,

நான்கு நண்பர்களின் பகடி வதையில் ஓர் அப்பாவிச் சிறுவன்

பலியானான். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கூட குற்றச்

செயல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அவற்றுள் இள வயதிலேயே

ஓடிச் சென்று திருமணம் புரிதல், திருமணத்திற்கு முன்பே குழந்தையை

ஈன்றெடுத்தல், தன் தேவைக்காகத் திருடுதல், ஏமாற்றுதல் ஆகியவை

அடங்கும். அண்மையில் தன் காதலனுக்காக உடன் பிறந்த

அண்ணனையே கொலை செய்த தமிழ் யுவதியைப் பற்றி

மலேசியாவுக்கே தெரியும்.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், நவராத்திரி, சிவராத்திரி

போன்றன ஆன்மீ கக் காலக்கட்டத்திலும், பொங்கல், தீபாவளி ஆகிய

விழாக்காலங்களிலும் அதிகமான இளைஞர்கள் கோவிலுக்குச்

செல்கிறார்கள். ஆனால், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கோவிலுக்குச்

செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர்? மார்கழி,

6
7

புரட்டாசி போன்ற புனித மாதங்களில் அதிகாலை வேளையில்

முதியவர்களையாவது கோவில்களில் காணலாம். மாறாகத், தமிழ்

இளைஞர்களை விரல் விட்டு எண்ணலாம். இதை இறைநம்பிக்கை

என்று எப்படிக் கூற முடியும்? இறை நம்பிக்கை பெற்றிருந்தால்

தேவைக்கு மட்டும் நாடும் இடமாகக் கோவில் அமையாதுதானே?

முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகையைத் தவறாமல்

செய்கிறார்கள்; கிருஸ்துவர்கள் ஞாயிறுதோறும் குடும்பத்தோடு

தேவாலயத்திற்குச் சென்று பிராத்தனை செய்கிறார்கள். இவ்வேளை

அவர்கள் இறைவனைத் தொழுவதற்கு மட்டுமல்ல. வட்டில்


ீ அரசியல்,

பொருளாதாரம், கல்வி, சமையல் என்று கலந்துரையாடத்தான் நேரம்

இருக்கும். இறைவன், வழிபாட்டு முறைகள், மத ரீதியாகக்

கடைப்பிடிக்கப்படும் எழுதப்படாத விதிமுறைகள் போன்ற

தலைப்புகளைப் பற்றி மனம் விட்டுப் பேச கோவில் ஏற்ற இடமாக

அமையும்.

தொடர்ந்து, மதம் மாறும் இளைஞர்களைப் பற்றிச் சொல்லியாக

வேண்டும். பல தமிழ் இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த வேறு

மதங்களைத் தழுவத் தொடங்கியுள்ளனர். இதன்வழி, இவர்களிடையே

இறை நம்பிக்கை குறைந்து வருவதை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்து மதம் பற்றிய தெளிவான, முழுமையான விசயங்களைப் பற்றிய

அறியாமையே இறைநம்பிக்கை குறைந்து வருவதற்கு முதன்மை

காரணமாகும்.

7
8

வேதாகமத்தைச் சரிவரத் தெரிந்து கொண்டு முறையாக

இறைவனைத் தொழும் இளைஞர்கள் இன்று மிகக் குறைவு. மலேசிய

இந்து தர்மம் ஏற்பாடு செய்யும் முகாம்கள் மற்றும் நடவடிக்கைகளில்

தமிழ் இளைஞர்களின் எண்ணிகை சரிவை அடைந்து வருவது மிகவும்

வருத்தத்திற்குரிய உண்மையாகும்.

சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும். முன்பு ஆன்மீ கக்

கல்வியைப் பெறுவதற்காகக் குருகுலக்கல்வி நடத்தப்பட்டது. அங்குப்

பிள்ளைகளுக்கு ஆன்மீ கத்தைப் புகட்டுவதற்காகவே ஒரு புலமை பெற்ற

குரு இருப்பார். அங்கு, ஆன்மீ க விசயங்களைப் பெறுவதோடு சுய

கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, மன தைரியம், எதையும்

சமாளிக்கும் சமயோசிதம் அனைத்தும் பெற்றிருப்பார்கள். அதனைத்

தொடர்ந்து, பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் சமயக் கல்வியைப்

புகட்டும் ஆசானாக வாய்மொழியாகவே ஆன்மீ கத்தைப் புகட்டுவார்.

இன்றைய நவன
ீ காலத்தில் பெற்றோர்கள் பணத்திற்குப் பின்னால்

ஓடும் சூழலில் வாழ்கிறார்கள். வட்டிலிருந்து


ீ பிள்ளைகளைக்

கண்காணிக்கவோ அல்லது அவர்களுக்குச் சமயத்தைப் பற்றி எடுத்துக்

கூறவோ பெற்றோருக்கு நேரம் கிடைப்பதில்லை. அப்படியே

பெற்றோர்கள் வட்டில்
ீ இருந்தாலும்கூட, கைக்குள் அடங்கும் விவேகக்

கைத்தொலைப்பேசியில் தன்னை அடக்கி விடுகிறார்கள்.

பெற்றோருக்கும் சமயத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல்

போய்விட்டது; அவர்கள் வளர்க்கும் பிள்ளைகளுக்கும் இறை நம்பிக்கை

8
9

தேவையற்ற ஒன்றாகிவிட்டது. கழுதைகளுக்கா தெரியப்போகிறது

கற்பூர வாசனை?

இறை நம்பிக்கை என்பது மூடத்தனம் என்றும் கூட தமிழ்

இளைஞர்கள் சொல்லித் திரிகிறார்கள். தமிழர்கள் இறை

நம்பிக்கைஊடே அறிவியலின் அற்புதங்களை நுழைத்து வாழ்ந்தவர்கள்.

“அண்டிசெப்திக்” எனப்படும் மருந்துகளைப் பயன்படுத்தும் அவர்கள்

மஞ்சள் கிருமி நாசினி என்பதை ஏற்க மறுக்கிறார்கள். கைக் குலுக்கும்,

கைக் கொடுக்கும், கன்னங்களில் முத்தம் கொடுத்து நலம் விசாரிக்கும்

முறை சிறப்பு என்று நினைக்கும் இளைஞர்கள், இரு கைகளைக் கூப்பி

வணக்கம் சொல்லும் முறை நூறு சதவதம்


ீ சுகாதாரமானது என ஒப்புக்

கொள்ள மறுக்கிறார்கள். வெள்ளைக்காரன் தோப்புக்கரணத்தின்

மகிமையை உணர்ந்து கொண்டு அவனே கண்டுபிடித்த சிறந்த

யோகாசனம் என்று கூறுயபோதுதான் நம்மில் சிலருக்கு

உறைத்திருக்கும். இப்படி இறையைப் பற்றித் தமிழர்கள் கொண்ட

அறியாமையால் கருத்துகளை மூடநம்பிக்கை என்று அமல்படுத்த

வெட்கப்படுகிறார்கள்.

இன்றைய தமிழ் இளைஞர்கள் உண்மையான

இறைநம்பிக்கையில் ஈடுபடுவதாக எண்ணி ஜாதகம் பார்த்தல், தோஷம்

கழித்தல் என்று பணத்தையும் நேரத்தையும் அள்ளி இறைக்கிறார்கள்.

குறிப்பிட்ட திகதியில், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குழந்தை பிறந்தால்

சிறப்பான எதிர்காலம் அமையும் என்று குழந்தையை அந்த

9
10

நேரத்திலேயே அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்துக் கொள்கிறார்கள்;

சிவராத்திரியில் இறந்தால் சொர்க்கம் அடைவார்கள் என்று அறிந்து தன்

இறக்கும் நேரத்தையும் நிர்ணயிக்கிறார்கள். இது எங்குப் போய் முடியும்

என்று இறைவனுக்கே தெரியாது என நினைக்கிறேன்.

தமிழ் இளைஞர்கள் மனம் மகிழ் நடவடிக்கைகளில் இலயிப்பதை

மிகவும் விரும்புகிறார்கள். புகை பிடித்தல், மதுபானம் அருந்துதல்,

கேளிக்கை விடுதிகளுக்குச் செல்லுதல் என்று தன் கூடா நட்பால் தடம்

மாறிச் செல்வதும் அவர்களின் இறை நம்பிக்கை குறைந்து

வருவதற்கான காரணமாகும். “இளம் கன்று பயமறியாது”, என்பதால்

இவ்வாறான சில விசயங்களைச் செய்து பார்க்கவேண்டும் என்ற

எண்ணம் அவர்களுக்கு எழுவது இயல்புதான். காதல் மூன்று நாள்,

காமம் முப்பது நாள் என்று உடல் ஆசைக்கு இணங்கி வாழ்க்கையைத்

தொலைக்கிறார்கள். திருமணம் செய்தாலும் கூட சில காலங்களே

வாழ்ந்து பின் புரிந்துணர்வும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்

இல்லாமல் விவாகரத்து பெறுகிறார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற

விதி விளங்கினால் இவ்வாறு செயல்பட மாட்டார்கள். இவர்கள்

கெட்டது மட்டுமின்றி, இவர்களது பிள்ளைகளின் எதிர்காலத்தையும்

கேள்விக்குறியாக்கு விடுகின்றனர். குரு மட்டுமில்லை அம்மாவும்,

அப்பாவும் இன்றி இவர்களின் பிள்ளைகள் அல்லல் படுகிறார்கள்;

சுற்றத்தாரின் இழி சொற்களுக்கு ஆளாகி எந்த வழியிலும் தன்னை

உயர்த்திக் கொள்ள இயலாமல் இவர்கள் தவிக்கிறார்கள்; இதுபோன்ற

10
11

இக்கட்டான சூழலில், இவர்களுக்கு இறைவன்மீ து பற்று இல்லாமல்

போய்விடுகிறது. ஒரு தவறும் செய்யாமல் தன்னை இப்படி

தண்டித்துவிட்டாரே இறைவன் என்று புலம்பித் தள்ளுவார்கள். எனவே,

இவர்கள் இறை சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களிலும் பின்

வாங்குவார்கள். இவர்களை இறை நம்பிக்கை பெற்ற ஒருவராக

உருவாக்குவது முயல்கொம்பு.

“ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது”, என்பார்கள். இளம்

பருவத்திலேயே இறை நம்பிக்கையால் ஒருவரை வளைத்திருந்தால்,

அவனது சிந்தனைகள் இறைவனைச் சார்ந்தே இருக்கும்; கூடா நட்பு

எல்லை மீ றும்போதே தீயவற்றைக் களைந்திருக்கலாம். இன்னும்

சொல்லப்போனால், தீய விசயங்களைத், தீயச்சக்திகளை வென்று

நம்மைக் காக்கும் கவசமாக இறைநம்பிக்கை திகழும்.

ஆக, இறை நம்பிக்கை என்பது சிறுவயதிலேயே புகட்டப்பட

வேண்டிய முக்கியமான ஆன்மாவுக்கான பாதுகாப்பு விலங்கு.

அப்போதுதான் இளம் வயதில் தமிழ் இளைஞர்கள் தடம் மாறிப்

போகாமல் இருக்க வழி செய்யும். எதிர்காலத்தில் சிறந்த தமிழ்ச்

சமுதாயத்தை உருவாக்கத் தமிழ் இளைஞர்கள்தாம் ஆணிவேர்.

இன்றே சிறந்த இறைநம்பிக்கை கொண்ட இளங்கன்றுகளுக்கு வித்திட

வேண்டும். தமிழர்களின் வரீ வரலாற்றை அறிந்தாவது தமிழ்

இளைஞர்கள் இறை நம்பிக்கையைத் தரக்குறைவாக எண்ணாமல்

11
12

இருக்க வேண்டும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்றே

ஒன்றிணைந்து செயல்படுவோம்.

3.0. சிறுகதை

12
13

கருப்பொருள் : பெண்மை

ஆசைக்கும் ஆஸ்த்திக்கும்

“அம்மா, இங்க வந்து பாருங்களேன். கபிலன் ரிமோட்

கொந்த்ரோலைத் தர மாட்டீங்கிறான்.”, எனத் தன் அம்மாவைக்

கூச்சலிட்டு அழைத்துக் கொண்டிருந்தாள் இலக்கியா.

“உங்க ரெண்டு பேருக்கும் இதே வேளைதான்”, எனக் கூறிய

வண்ணம் வரவேற்பறையை நோக்கி விரைந்தார் கபிலன்,

இலக்கியாவின் அம்மா. இலக்கியாவும் அவள் தம்பி கபிலனும் ரிமோட்

கொந்த்ரோலை ஆளுக்கொரு திசையில் இழுத்த வண்ணம்

சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவரைப் பொருத்த வரை அது

புதிதல்ல; வழக்கமாக அவர்கள் வட்டில்


ீ கேட்கும் சுப்ரபாதம்தான்.

இலக்கியாவுக்கும் கபிலனுக்கும் அன்றாடக் கடமைகளுள் அதுவும்

ஒன்றாகிவிட்டது.

“இலக்கியா….. கபிலா…… ரெண்டு பேரும் ரிமோட்டை என்கிட்ட

கொடுத்திட்டு, போய் புத்தகத்தைக் கையில எடுங்க”, என்ற அம்மாவின்

வார்த்தைகளைக் கொஞ்சம்கூட காதில் வாங்காமல் இருவரும்

ரிமோட்டை வெற்றி கொள்ளும் போரில் முழு மூச்சாக இறங்கி

இருந்தனர்.

13
14

இன்று இந்தச் சண்டை முடிவு பெறாது என்று உணர்ந்த அம்மா

“இலக்கியா, அத தம்பிக்கிட்ட கொடுத்திட்டுப் போ!”, என்று அதட்டினார்.

ரிமோட்டிலிருந்து கைகளைக் களைந்து தன் அறைக்குள் சென்று

கதவைத் தாழிட்டுக் கொண்டாள் இலக்கியா. தீப்பிழம்புகளாக

உருவெடுத்த இரு கண்களும் அவளது கோபத்தைப் பறைசாற்றின. தன்

தோல்வியை எண்ணி முணுமுணுத்தவாறு மெத்தையில் சாய்ந்தாள்;

பின் தலையணையில் முகம் புதைத்து அழத் தொடங்கினாள்.

இலக்கியா ஐந்தாம் படிவத்தில் பயிலும் மாணவி; கபிலனோ

படிவம் மூன்று. ஆவ்வட்டில்


ீ ஆசைக்கு இலக்கியாவும் ஆஸ்த்திக்குக்

கபிலனும் மட்டும்தான். தந்தை கம்பியூட்டர் இஞ்சினியர்.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று நம்புபவர்; அதற்கேற்ப

எந்நேரமும் தொழில் பற்றித்தான் யோசிப்பார்; தாயோ இல்லத்தரசி.

இலக்கியாவும் கபிலனும் இரு துருவங்களைப் போன்று.

இருவருக்கும் அடிக்கடி சர்ச்சை ஏற்படும். இப்படி எழும் அனைத்துப்

பிரச்சனைகளுக்கும் கபிலனுக்கு மட்டும்தான் மகுடம் சூட்டப்படும்.

அவள் அம்மா கபிலனுக்குத்தான் பரிந்துப் பேசுவார். தந்தை மட்டும்

விதிவிலக்கா என்ன? கபிலன் பிறந்தது முதல் இலக்கியாவுக்கு வந்த

சத்திய சோதனை இது. இஃது அவளுக்கு மன வருத்தத்தையே

அளித்தது.

14
15

கபிலன் கடைக்குட்டி என்பதால் மட்டும் இச்சலுகை அல்ல.

மாறாக, அவர்கள் இருவரையும் தள்ளாத காலத்தில் கரை சேர்க்கப்

போகிறவன் அவந்தானாம். “கொள்ளி வைக்கப் போறவன் அவந்தானே?”,

என்பது அவர்களின் வாதம்.

இரு கண்கள் போல பராமரிக்க வேண்டிய பிள்ளைகளிடம்

பாரபட்சம் காட்டினால் எப்படி? இது பல முறை இலக்கியாவின் மனதை

இரணப்படுத்திப் பலவனமாக்கியது.
ீ சமைக்கின்ற கரங்களும்

விழிப்புணர்வு பெற்று விண்வெளியில் வலம் வந்தாச்சு. ஆனாலும், ஏன்

இந்தப் பாரபட்சம்?

பெண் பிள்ளைக்கு மட்டும் ஏன் இந்த அநியாயம்? ஏன் நம்

சமுதாயம் இப்படி இருக்கிறது? ஆசைக்கு மட்டும்தான்

பெண்பிள்ளையா? பெற்றோரே இப்படி இருந்தால் எப்படி? கள்ளிப்பால்

கொடுத்து பெண் சிசுக்களை நிரந்தர நித்திரை கொள்ள வைத்த

சந்ததியினர்தானே! வேறெப்படி இருக்கும்? இப்படிப் பல கேள்விகளை

மனதில் முணுமுணுத்தவாறே தலையணையை அணைத்துக் கொண்டு

தூங்கிவிட்டாள் இலக்கியா.

மறுநாள், பள்ளிக்குப் புறப்பட்டாள். நூல்நிலையத்தில்

வைரமுத்துவின் கவிதைப் புத்தகத்தில் மூழ்கிப் போய் இருந்தாள்

இலக்கியா. “இலக்கியா கா” என்ற குரல் கேட்டுக் கரை சேர்ந்தாள்

அவள். அவள் எதிரே மூன்றாம் படிவ மாணவி பூவிழி நின்று

15
16

கொண்டிருந்தாள். அவள் கபிலனுடன் ஒரே வகுப்பில் பயில்வதை

அவள் நன்கு அறிவாள்.

“அக்கா நேத்து மாலை வகுப்புக்கு கபிலன் வரல” என்றுத்

தயங்கித் தயங்கிக் கூறினாள். “என்கூடத்தானே காலையில வந்தான்” ,

என்று ஆச்சரியத்தோடு அவளைப் பார்த்தாள் இலக்கியா. “வந்தாங்க கா.

ஆனால், மாலை வகுப்புக்கு வரல. கபிலன் பக்கத்து கிளாஸ் படிக்கிற

சுரேஸ், முகேன் கூட பிகில் படம் பார்க்கப் போய்ட்டாங்க கா.

இன்னைக்குச் சாப்பிடும்போது பேசிக்கிட்டு இருந்தாங்க கா. முன்ன

எல்லாம் கபிலன் சரியா கிளாஸ்கு வருவான் கா. என்கிட்ட கேட்டு

பாடம் எல்லாம் செஞ்சிடுவான் கா. ஆனா, இப்ப கொஞ்சம் மாசமா

அடிக்கடி மதிய வகுப்புக்கு வரதேயில்ல கா. என்கிட்ட கூட பேசுறது

இல்ல கா”, என்று கூறிவிட்டுப் பாரம் குறைந்த நிம்மதியோடு

சென்றாள் பூவிழி.

“இந்த வருடம் தேர்வு வருடமாச்சே! இப்படியே போனா அவன்

எப்படி பாசாவான்” என்ற குழப்பம் இலக்கியாவுக்கு இருந்தாலும்கூட

தம்பி திருந்தி விடுவான் என்று இருந்து விட்டாள். ஆனால், நாள்கள்

உருண்டோட கபிலனின் நடவடிக்கைகளும் மாறத் தொடங்கின.

கபிலனின் வகுப்பாசிரியை இலக்கியாவை அழைத்து இவ்வாறு

கூறினார். “என்ன இலக்கியா? உன் தம்பி முன்ன மாதிரி படிப்பில

அக்கறையே இல்லாம இருக்கானே? அடிக்கடி வேற மட்டம் போடுறான்.

16
17

இப்படியே போனா பி.தி.த்ரி ல பாஸ் பண்றது ரொம்ப கஷ்டம்”, என்று

அறிவுரை கூறிவிட்டுச் சென்றார் அவர்.

மறுநாள், வட்டிற்குச்
ீ செல்லும் முன் இலக்கியா பேருந்தில்

கபிலனிடம் “ஏன் கபிலா இப்பலாம் நீ பள்ளிக்குச் சரியா வரதில்லை?”,

என்று கேட்டாள். “அது உனக்குத் தேவையில்லாத வேலை. உன்

வேலையை மட்டும் பார்க்கிறது உனக்கு நல்லது”, என்று

இலக்கியாவிடம் வேண்டா வெறுப்பாகப் பதிலளித்தான் கபிலன்.

வட்டிற்கு
ீ வந்ததும் குளித்துவிட்டு இரவு உணவுகாகக் கீ ழே

இறங்கினாள் இலக்கியா. “அம்மா.. .. .. ஒன்னு சொல்லனும்”, என்று

வாய்திறந்த இலக்கியாவைச், “சாப்பிடும்போது என்ன சொல்லனும்?

எல்லாம் அப்றம் பார்த்துக்கலாம்” என்று கண்டிப்போடு வாயடைத்தார்

அப்பா.

உணவருந்திய பின் அனைவரும் தொலைக்காட்சி முன்

அமர்ந்தனர். ஆனால், தொலைக்காட்சியின் காட்சி இலக்கியாவின்

கண்களுக்குத் தூரமானது. எப்படியாவது சொல்லிடணும்னு தன்னைத்

தைரியப்படுத்திக் கொண்டு வாய் திறக்கும் முன், “இலக்கியா.. .. நீ

இப்பலாம் பள்ளிக்குச் சரியா போறதில்லையாமே? என்ன இது புது

பழக்கம்?”, என்று அப்பா அதட்டினார். கபிலனும் மெல்லிய

புன்னகைக்குப் பின் இலக்கியாவிற்கு எல்லாம் புரிந்தது. பழி ஓர் இடம்;

பாவம் ஓர் இடம் என்பதைப் போல் ஆனது அவள் நிலை.

17
18

“அம்மா…. அப்பா…. நான் தப்பு ஒன்னும் செய்யல. கபிலன் பொய்

சொல்றான். அவன்தான் பள்ளிக்குச் சரியா போறதில்லை”, என்ற

இலக்கியாவின் உண்மை அங்கு எடுபடவில்லை. “தப்பு செஞ்சது

இல்லாம எதிர்த்து வேற பேசுறியா?”, என்று கோபத்தோடு

இலக்கியாவுக்கு ஓங்கி ஓர் அறை விட்டார் அவள் அப்பா. “இதுதான்

கடைசி. இனிமேல இப்படி நடக்காம ஒழுங்கா ஸ்கூலுக்குப் போற

வேலையப் பாரு. இல்லைனா நடக்குறதே வேற”, என்று கூறி

பெற்றோர் இருவரும் உறங்கச் சென்று விட்டார்கள். இலக்கியாவைப்

பார்த்து ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சென்றான் கபிலன்.

கண்களின் விளிம்பில் மல்கிய கண்ண ீர்த் துளிகள் கன்னங்களில்

வழிந்தோடத் தொடங்கியது அவளுக்கு. வழக்கம்போல்

தலையணையில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழத்

தொடங்கினாள். அவளால் வேறு என்ன செய்ய இயலும்?

மறுநாள், பள்ளிக்கு நேரமாகியும் வெளியே வராத இலக்கியாவை

எழுப்ப அவள் அம்மா மாடிக்கு வந்தார். இலக்கியா கட்டிலில் தூங்கிக்

கொண்டிருப்பதைப் பார்த்து மேலும் கோபமானார். அருகே வந்து

நின்றதும் அவள் உடலின் அனல் வசியதைக்


ீ கண்டு திகைத்தார்.

இலக்கியாவுக்குக் கடுமையான காய்ச்சல்.

“என்னங்க இங்க வந்து பாருங்க…. இலக்கியா உடம்பு எப்படி

கொதிக்கிது பாருங்க. ரொம்ப காய்ச்சலா இருக்கு”, என்று

18
19

அறையிலிருந்து கூக்குரலிட்டார். அருகிலுள்ள மருத்துவமனைக்குச்

செல்லும் வழியிலே, “அது என்ன புதுசா ஒரு வைரஸ் வந்திருக்கே?

க்ரோனோ….. அதுவா இருக்குமோ?” என்று இலக்கியாவின் அம்மா

புலம்பிக் கொண்டே வந்தார். “அதெல்லாம் ஒன்னும் இருக்காது. நீ

சும்மா கண்டதை நினைச்சு என்னையும் டென்சன் ஆக்காதே!” என்று

அப்பா கூறி முடிக்க மருத்துவமனையும் வந்து விட்டது.

சில மணிநேரம் காத்திருந்து, பின் மருத்துவர் இருவரையும்

அழைத்தார். “இது வைரல் காய்ச்சல்தான். இப்பதான் இது சீசன் ஆச்சே.

இன்னைகே டிச்சார்ச் பண்ணிடலாம். கொடுக்கிற மருந்த சரியா

சாப்பிடனும். ஒரு வாரம் கழிச்சு திரும்பவும் ரெகுலர் செக்காப் வாங்க.

இலக்கியா நல்லா சாப்பிடனும் மா”, என்று ஆறுதல் வார்த்தைகள்

சொன்னார் மருத்துவர்.

இலக்கியாவின் தந்தை இலக்கியாவையும் அவள் அம்மாவையும்

வட்டில்
ீ சேர்த்துவிட்டுக் கபிலனை அழைத்து வரலாம் என்று

பள்ளிக்குப் புறப்பட்டார். நீண்ட நேரம் காத்திருந்தும் கபிலனைக்

காணவில்லை. பேருந்திலே கிளம்பியிருப்பான் என நினைத்துக்

கொண்டு செல்லும் முன் கபிலனது வகுப்பாசிரியர் அவ்வழியே வந்தார்.

கபிலனைப் பற்றிய உண்மைகளைக் கூறினார். அனைத்தையும் கேட்டு

அவர் கண்கள் தீப்பிழம்புகளாக மாறின.

19
20

மாலை தாமதமாக வட்டிற்கு


ீ வந்த கபிலன், அன்று மாலை

வகுப்பில் தாமதமாகிவிட்டது என்றதும் அவன் அப்பாவால் மேலும்

பொறுமை காக்க முடியவில்லை. அன்று கபிலன் தன் அப்பாவின்

இடைவாருக்குப் பலியானான். “எவ்வளவு நாளா இந்தப் பழக்கம்?

செய்றதெல்லாம் செஞ்சிட்டு எவ்வல நல்லா நடிக்கிற பாரு நீ? இதுல

இலக்கியாவைப் பத்தி கதை வேற சொல்றியா நீ? இனி நாந்தான்

பள்ளிக்குக் கூட்டிட்டுப் போய் முடிஞ்சு கூட்டிட்டு வருவேன். இனி

என்ன நடக்குதுன்னு பாக்கலாம் ” என்று பொறிந்து தள்ளினார்.

“நாமதான் செஞ்சிட்டோங்க. கடைக்குட்டி; அதுவும் ஆம்பிள

பையனு ஓவரா இடம் கொடுத்திட்டோம் போல. ரெண்டு பேரையும்

ஒரே மாதிரி பார்த்திருக்கலாம். அவன் கிளாஸ் டீச்சர் கேட்டது எனக்கு

அவமானமா போச்சி. இனிமேல ரெண்டு பேரையும் கவனிக்கனும்”,

என்று இலக்கியாவின் அப்பா கூறியதில் குற்ற உணர்ச்சி

மிகுந்திருந்தது. “ஆமாங்க. நாம இந்த விசயத்தில அவசரப்பட்டுட்டோம்

போல”, என்று இலக்கியாவின் அம்மாவும் கூறினார்.

இந்த வைரல் காய்ச்சலோடு தன் துன்பங்களும் விரைவில்

மாய்ந்து போகப் போகின்றன என்று அறியாதவளாய் அயர்ந்து உறங்கிக்

கொண்டிருந்தாள் இலக்கியா. இது கடவுளே அவள் துன்பங்களைத்

துடைக்கத் தந்த அக்னிப் பிரவேசம் போல.

20
21

4.0. அறிக்கை

தேசிய வகை சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 2019 -ஆம் ஆண்டறிக்கை

கடந்த 21.02.2019 வெள்ளியன்று தேசிய வகை சிலியாவ் தோட்டத்

தமிழ்ப்பள்ளியில் 46 –ஆம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் சங்க பொதுக்

கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. இக்கூட்டம் மாலை மணி 3.30 க்குப்

பள்ளி மண்டபத்தில் நடைப்பெற்றது. பள்ளித் தலைமையாசிரியர்,

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இக்கூட்டத்தில் கலந்து

கொண்டனர். இப்பள்ளியின் முன்னாள் மாணவரான டாக்டர் திரு.

இர.துரை அவர்கள் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார்

என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தின் முதல் அங்கமாக, இப்பள்ளியில் பயிலும் ஐந்தாம்

ஆண்டு மாணவி செல்வி, ம.நித்திய ஸ்ரீ தேவாரம் ஓதி கூட்டத்தை

இனிதே தொடக்கி வைத்தார். தொடர்ந்து, தேசியப் பண் பாடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு

ஓ.சுரேஸ் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில்,

சென்ற ஒராண்டு காலமாகத் தனக்குப் பக்க பலமாக இருந்து

ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து,

வருங்காலங்களிலும் இதேபோல் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்

கொண்டார்.

21
22

தொடர்ந்து, கடந்தாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் நமது பள்ளி

அனைத்துப் பாடங்களிலும் முழு தேர்ச்சி பெற்றுள்ளது. அயராத

உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றியைக் கூறிக் கொண்டார்.

இவ்வருடம் அதேபோல் சிறந்த தேர்ச்சியை அடைய நாம் அனைவரும்

சேர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மாணவர்களின்

கல்வி நலனுக்காகப் பல திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. பல திட்டங்கள்

நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்துப் பெற்றோர்களும் பள்ளியில்

நடைபெறும் எல்லா நிகழ்விற்கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்

கொண்டு விடைப்பெற்றார்.

அடுத்த அங்கமாகப், பள்ளித் தலைமையாசியரும் சங்கத்தின்

ஆலோசகருமான திரு. வெ.சிவகுமார் அவர்கள் வருகை புரிந்த

அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் எல்லா வழிகளிலும்

உதவிகள் புரிந்த பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தமது

நன்றியைக் கூறிக் கொண்டார். வரலாறு காணாத வகையில் 2018-ஆம்

ஆண்டின் யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் இப்பள்ளி முழு தேர்ச்சி அடைந்த்தை

ஒட்டி அஃது மிகவும் அதிர்ஸ்டகரமான வருடம் என மிகவும்

மகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும், சிறு பள்ளியாக இருப்பினும், சென்றாண்டு நிறைய

வெற்றிகளைப் பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்

இவ்வேளையில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்

கொண்டார். சென்ற மூன்றாண்டு காலமாக இப்பள்ளியில் பயிலும்

22
23

மாணவர்களுக்குப் புத்தகம் மற்றும் மதிய உணவு வழங்கி வரும்

இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான மற்றும் இன்றைய சிறப்பு

வருகையாளரான டாக்டர் திரு. இர.துரை அவர்களுக்கும், ஏழு வருட

காலமாக இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு

இலவசமாகப் பள்ளிச் சீருடை, காலணி, புத்தகப் பை மற்றும் மதிய

உணவு “கே.எவ்.சீ” வழங்கி வரும் திரு.குருமூர்த்தி மற்றும் அவர்

நண்பர்களுக்கும் இவ்வேளையில் பள்ளித் தலைமையாசிரியர்

திரு.வெ.சிவகுமார் அவரகள் தமது மனமார்ந்த நன்றியைக் கூறிக்

கொண்டார்.

இக்கூட்டத்தின் அடுத்த அங்கமாக, சிறப்பு வருகையாளரான

டாக்டர் திரு.இர.துரை அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க

உறுப்பினர்களுக்கும் பள்ளிக்குப் பல வகையில் உதவி செய்து வரும்

நல்லுள்ளங்களுக்கும் நினைவுச்சின்னம் எடுத்து வழங்கினார்.

அதுமட்டுமின்றி, எஸ்.தி.பி.எம் தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற

இப்பள்ளியின் முன்னாள் மாணவன் செல்வன் இரா.குகனுக்கும்

நினைவிச்சின்னம் மற்றும் சன்மானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சிறப்பு வருகையாளரான டாக்டர் திரு.இர.துரை

அவர்கள் திறப்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் இப்பள்ளியில்

அனைவரும் பெண் ஆசிரியர்களாக இருந்தாலும் நிறைய வெற்றிகளைப்

பெற்றிருக்கும் பள்ளிக்கு வாழ்த்துகளைக் கூறிக் கொண்டார். தான் ஒரு

சிறந்த மனிதனாகத் திகழ இச்சிலியாவ் தமிழ்ப்பள்ளியே காரணம்

23
24

என்று கூறி பெருமிதம் கொண்டார். அவர் பெற்றோர்கள்

பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும் என்றார். தங்கள்

பிள்ளைகளின் திறமைகளைப் பெற்றோர்கள் கண்டறிந்து அதற்கு

ஏற்றவாறு அவர்களுக்குப் பயிற்சி அளிக்க முயற்சி செய்ய வேண்டும்

என்று மேலும் தமது உரையில் கூறினார். கல்வி மற்றும்

விளையாட்டின் முக்கியத்துவத்தைப் பெற்றோர்கள் கண்டிப்பாகத்

தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி, 46-ஆம் ஆண்டு

பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து

வைத்தார்.

அடுத்த அங்கமாக, சென்றாண்டு ஆண்டறிக்கையையும்

செயலறிக்கையும் செயலாளர் குமாரி நா.மேகலா வாசித்தார்.

பரிசீலனைக்குப் பிறகு ஆண்டறிக்கையும் செயலறிக்கையும் ஏற்றுக்

கொள்ளப்பட்டது. அதனை திருமதி மு. ஜெகதீஸ்வரி முன்மொழிய,

திருமதி தமிழ்ச்செல்வி வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து,

சங்கத்தின் கணக்கறிக்கை வாசித்து பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்

கொள்ளப்பட்டது.

இப்பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தின் இறுதி அங்கமாக, 2019-

2020 ற்கான செயற்குழு தேர்வு நடைபெற்றது. புதிய செயலவை

உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெற்றோர்களின் தீர்மானங்கள்

வாசிக்கப்பட்டன. பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டன. 46-

ஆவது பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தின்வழி நன்கொடையாக ஒரு

24
25

குடும்பத்திற்கு ரிங்கிட் மலேசியா ஐம்பது வசூலிக்கப்படும் கருத்து

அனைவராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டம் சங்க

செயலாளரின் நன்றியுரையோடு மாலை மணி 7.15 அளவில் இனிதே

நிறைவுற்றது.

அறிக்கை தயாரித்தவர், 03 மார்ச் 2020

……………………………………………………………………………………………….
(குமாரி மேகலா த/பெ நாராயணன்)
செயலாளர்,
பெற்றோர் ஆசிரியர் சங்க செயற்குழு,
சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

25
26

5.0. செய்யுள் நலம் பாராட்டுதல்

கவிஞர் கண்ணதாசனின் தமிழ்த் திரைப்பாடல்களுள் மூன்றனைச்

செய்யுள் நலம் பாராட்டுதல்.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் உலக தமிழ் மக்கள் விரும்பும்

சிறந்த கவிஞரும் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பல கவிதைதளையும்,

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், கட்டுரைகள்

போன்றவற்றைத் தமிழுக்காக விட்டுச் சென்றுள்ளார். தமிழக அரசின்

“அரசவைக் கவிஞராகவும்” இவர் இருந்துள்ளார்.

இன்று தமிழ் தெரிந்த பலரும் உலகின் ஏதோ ஒரு மூலையில்

இவரின் பாடலை இன்னும் முணுமுணுத்துக் கொண்டு இருக்கிறார்கள்

என்பதில் ஐயமேயில்லை. திரைக்காட்சியில் கண்ணதாசன் அவர்களால்

இப்பாடல்கள் மட்டுமல்லாது திரைப்படங்கள், கதாநாயகர்களும் கூட

பிரபலமடைந்துள்ளன. இவ்வாறு புகழ் பெற்ற பல தமிழ்த்

தொண்டாற்றிய இவரின் திரைப்பபட்பாடல்களை ஆய்வு செய்வதில்

பெருமை கொள்கிறேன்.

அவர் ஒலி சொல்வார் அதற்கு இவர் மொழி சொல்வார். அதாவது,

இசை அமைப்பாளர் ஒலி சொல்வார்; அதற்கேற்ப கண்ணதாசன் மொழி

26
27

சொல்வார் என்று இவரைத் தன்முனைப்புப் பேச்சாளர் திரு சுகி சிவம்

அவர்கள் சிறப்பித்துள்ளார்.

பாடல் 1

1980- ல் கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் விழாவில்

‘எனக்கு எப்போதாவது மனக்கலக்கம் வரும்போது, நான் நமது

அரசவைக் கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலைப் போட்டுக்

கேட்பதுண்டு. அதைக் கேட்கும்போது எனக்குத் தெம்பு வரும்”, என்று

மன நெகிழ்வோடு கூறினார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர்.

அவர் பாராட்டிக் கூறியது ‘அச்சம் என்பது மடமையடா , அஞ்சாமை

திராவிட உடமையடா!’ எனத் தொடங்கும் பாடலாகும்.

‘அச்சம் தவிர்’ என்ற முண்டாசுக் கவிஞரின் சாயலில் கண்ணதாசனும்

இப்பாடலை அச்சத்தை விட்டொழிக்கச் சொல்லித்தான்

தொடங்கியிருப்பார். அதைக் கேட்கும் போதே தைரியம் சிலிர்க்கும்.

காலத்தை வென்று நிற்கும் எழுச்சிப் பாடல்களுள் இதுவும் ஒன்று.

“அஞ்சி அஞ்சி சாவார்

இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில்”,

27
28

என்று அவல நிலை நிலவிய காலக்கட்டத்தில் கண்ணதாசன்

“அஞ்சாமை திராவிட உடமையடா” என்று ஒவ்வொரு தமிழனின்

உள்ளத்திலும் அஞ்சாமை உணர்வை விதைத்தார். அடிமையாக வாழ

வேண்டிய காலக்கட்டத்திலும் தைரியத்தோடு போராட வேண்டும்

என்கிறார் அவர். காசுக்குக் கவி எழுதும் கவிஞர்கள் மத்தியில் மனதில்

பட்டதை பிரச்சனை வரும் என்றாலும், எழுதும் திமிர் கண்ணதாசனை

நிஜக் கவிஞராகக் காட்டுகிறது.

“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

தாயகம் காப்பது கடமையடா”

சாவு என்பது இயற்கையான ஒன்று; அஃது ஆறு வயதாக இருந்தாலும்

சரி, அறுபது வயதாக இருந்தாலும் சரி, நிச்சயம் வரும். அதை

நினைத்து நினைத்து நித்தம் பயத்தோடு செத்துக் கொண்டே வாழாதே!

அதற்குப் பதிலாக, இறந்தாலும் கூட தாயகத்தைக் காத்த

மனத்திருப்தியோடு பலர் மனதில் வாழும்படி சாகலாம்.

இக்கருத்தினைக் கேட்பவர் மனதில் விதைத்து வாழ்வதற்காகச்

சொற்களின் ஊடே ஊக்கமருந்து தருவது கண்ணதாசனின் தனிச்சிறந்த

பாணி ஆகும்.

28
29

பாடல் வரிகளில் மடமையடா, உடமையடா, கடமையடா மற்றும்

ஆறிலும், நூறிலும் ஆகியவை சந்தச்சொற்கள் எதுகை சிறப்பையும்

கொள்வதன் வழி கவிதை மேலும் அழகு பெறுகிறது. இரண்டாம்

எழுத்து ஒன்றிப் போனால் எதுகை சிறப்பு என்பார்கள். மடமையடா,

உடமையடா, கடமையடா எனும் சொற்களில் முதல் எழுத்தைத்

தவிர்த்து அனைத்து எழுத்துகளும் ஒரே எழுத்துகளாக வந்துள்ளன. அது

போலவே ஆறிலும், நூறிலும் ஆகிய சொற்களிலும்.

தொடர்ந்து இப்பாடலில் உவமை நயமும் இடம்பெற்றுள்ளது.

“கனகவிஜயரின் முடித்தலை நெறித்து

கல்லினை வைத்தான் சேர மகன்

இமய வரம்பினில் மீ ன்கொடு ஏற்றி

இசைபாட வந்தான் பாண்டியனே”

இவ்வரிகளில் சேர, சோழ, பாண்டியரின் வரீ வரலாற்றைப்

பறைசாற்றுவதோடு அதனை கேட்பவர் உணர்வைத் தட்டியெழுப்பும்

உவமைகளாகப் பயன்படுத்தியுள்ளார். வரீ மரபைக் கொண்டவர்கள் நாம்

29
30

எனக் கவிஞர் முழங்குகிறார். ஒவ்வொரு வரிகளிலும் வரம்


பொதிந்திருப்பது திராவிடத்தின் பெருமை சொல்ல இந்தப் பாடல்

ஒன்றே போதும் என்கிறது.

பாடல் 2

“அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத் திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல பெண்ணல்லவோ”

கோபம் கொண்டு அங்கு நிற்கும் காதலியே, ஆலமரத்துக் காயைப்

போல் தூரத்தில் இருந்து சிறியதாகத் தோன்றும் வெண்ணிலவே! இங்கு

உன் கோபக் கனல்களை வசாதே!


ீ ஏனென்றால் என் உயிரைப் போல்

உன்னைக் கருதும் நான் நின்று கொண்டிருக்கிறேன் என்ற வரிகளோடு

இப்பாடல் தொடங்குகிறது.

30
31

“மாதுளங்காய் ஆனாலும்

என்னுளம் காய் ஆகுமோ

என்னை நீ காயாதே” , ஆகிய வரிகளில் பெண் அவ்வாறு கூறியதும்

ஆண் சமாதானம் கூறுகிறான். அந்த மாதின் உள்ளம் என்னைக் காய்

(மாது + உள்ளம் + காய்) எனக் கட்டளையிடுவதன் மூலம் காய்போல்

ஆனாலும் அவளை விரும்பியிருக்கும் என்னுள்ளம் காய் போலாகுமா

என்ன? அதனால் என்மீ து வெம்மையுற வசாதே


ீ வெண்ணிலவே!

“கோதையெனக் காயாதே

கொற்றவரைக் காய் வெண்ணிலவே

இருவரையும் காயாதே

தனிமையிலே காய் வெண்ணிலா”

கோதையெல்லாம் காயாமல் என் மன்னவனைக் காய்வாய்

வெண்ணிலவே! எங்கள் இருவரையும் காய வேண்டாம் வெண்ணிலவே.

எங்கள் பாவிளையாடல் முடிந்து விட்டது. இனி பருவ விளையாடல்

ஆடப்போகிறோம். அதனால் இனி நீ தொலைவே போய் தனிமையில்

வசிக்
ீ கொண்டிரு வெண்ணிலவே! என்று மேற்கண்ட பாடல் வரிகள்

நிறைவடைகின்றன.

31
32

“அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத் திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல பெண்ணல்லவோ”

இக்கவிதையின் முதல் இரண்டு கண்ணிகளில் ஒரே மாதிரியான முதல்

எழுத்து வரிசைகள் இடம்பெற்றுள்ளன.

“அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத் திக்காய் காயாதே

என்னைப் போல் பெண்ணல்லவோ

நீ என்னைப் போல பெண்ணல்லவோ”

அத்திக்காய் காய் காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத் திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

என்னுயிரும் நீயல்லவோ

32
33

இப்படி முதல் எழுத்துகள் ஒரே மாதிரி வந்துள்ளன. தொடர்ந்து, வரும்

அனைத்து வரிகளிலும் நான்கு வரிகள் இடம்பெற்றுள்ளன. அனைத்துக்

கண்ணிகளிலும் குறைந்தது இரண்டு வரிகளாவது ஒரே வரிசை

எழுத்துகளை முதல் எழுத்துகளாக இடம்பெற்றுள்ளன.

எடுத்துக்காட்டாக,

“மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமா

எனை நீ காயாதே

என்னுயிரும் நீ அல்லவோ”

மேற்கண்ட கண்ணியில் முதல் வரியில் மா என்ற எழுத்து

இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வரும் மூன்று வரிகளிலும் எ எனும்

எழுத்தே இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பாடல் முழுவதும் எழுத்து

சிறப்பு இடம்பெற்றுள்ளது.

இக்கவிதையைத் தமிழ்த் தெரியாதவர் கேட்டாலும்கூட

அனைவரும் கண்டிப்பாக இப்பாடலின் சொல் சிறப்பை

உணர்ந்திருப்பார்கள். அத்திக்காய், ஆலங்காய், இத்திக்காய், ஆசைக்காய்,

33
34

பாவைக்காய், அவரைக்காய், கோவைக்காய், கன்னிக்காய், மாதுளங்காய்

என்று 54 முறை காய் என்ற சொல் இப்பாடலில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாகக் கவிஞர்கள் ஒரு கண்ணியில் மட்டுமே எதுகை மோனை

சிறப்பைக் கவிதைகளில் கையாள்வது வழக்கம். ஆனால், கவிஞர்

கண்ணதாசன் இப்படி 54 இடங்களில் இப்பாடலில் காய் எனும் சொல்

இடம்பெறும் எதுகையும் ஓசைநயமும் அற்புதம்.

இவர் பாடலில் காய் எனும் சொல் தாவரம் மூலம்

கிடைக்கப்பெறும் விளைச்சலை மட்டும் குறிப்பிடவில்லை. மாறாக,

வெம்மையுற வசு,
ீ கோபம் கொள், கடிந்து பேசு எனப் பொருள்படும்

வினைச்சொல்லாகவும், ஆய் எனும் முடியும் வேற்றுமை உருபாகவும்

பலவாறாகத் தமிழின் சிறப்பினை எழுதியுள்ளார். இவ்வாறு தமிழின்

சிறப்பினைப் பாமர மக்களும் பாடும் அளவுக்குக் கண்ணதாசன் வழி

செய்துள்ளார்.

“ஏலக்காய் வாசனை போல்

எங்கள் உள்ளம் வாழக்காய்

ஜாதிக்காய் பெட்டகம் போல்

தனிமை இன்பம் கனியக்காய்” ,

34
35

ஆகிய வரிகளில் கவிஞரின் உவமை நயம் வெளிப்படுகிறது. ஏலக்காய்

வாசனை எப்படித் தன் காலமுள்ளவரை மணம் பரப்பி நிற்குமோ அது

போல எங்கள் உள்ளத்தில் காதல் எனும் நறுமணம் காலம்தோறும்

மணந்து நிற்கட்டும் என்று நிலவை வசச்


ீ சொல்; ஜாதிக்காய்

பெட்டகத்தைப் போல இந்தத் தனிமை இன்பத்தால் நிறைந்து

கனியும்படி காய்வாயாக நிலவே என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.

பாடல் 3

அடுத்து, கண்ணே கலைமானே எனும் திரைப்படப்பாடல். இஃது

அவரது வாழ்வின் இறுதி நொடிகளில் எழுதப்பட்ட பாடலாகும். உயிர்

பிரியும் தருவாயில்கூட உயிருக்காக எண்ணி கலங்காமல்,

குடும்பத்தினரோடு இறுதி ஆசைகளைச் சொல்லாமல் தமிழை விட்டுப்

பிரிகிறோமே என்ற ஏக்கத்தில் தமிழ் மீ து கொண்ட காதலை இப்பாடல்

வழி வெளிப்படுத்துகிறார் இவ்வுன்னதமான மனிதர்.

கொடுக்கப்பட்ட சூழலில் ஓர் ஆணின் கைகளில் தங்க பொம்மை

போன்ற ஒரு பெண் கிடைக்கிறாள். அவளின் மீ து காதல் கொண்ட

பின் இப்பாடல் தோன்றும். திரைக் கட்சிக்காகப் பாடல் எழுதக்

கேட்டமைக்குத்தான் தமிழ்மீ து கொண்ட காதலைப் பாட்டாக எழுதினார்

கண்ணதாசன். ஆனால், திரையில் பார்த்தாலும் சரி, வானொலியில்

கேட்டாலும் சரி, கேட்பவர் அனைவரையும் கண்கலங்கச் செய்வது

கண்ணதாசனின் இறுதி மூச்சுப் பாடல் என்பதுதான்.

35
36

“கண்ணே கலைமானே

கன்னி மயிலென

கண்டேன் உனைநானே

அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்”

குறும்புத்தனமாகக், குழந்தைத்தனமாக இருக்கும் தன் காதலியை

இரவும் பகலுமாய்ப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிறான் காதலன்.

அவளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்க அவன் இறைவனை நித்தம்

வேண்டுகிறான். அக்கண்ணியைப் பார்த்தோமானால், முதல் மூன்று

வரிகளில் உள்ள க எனும் முதல் எழுத்தும் நான்காம் மற்றும் ஐந்தாம்

வரிகளின் முதல் எழுத்து அ, ஆ என்றும் மோனை சிறப்புப்

பெற்றுள்ளன.

“ஊமை என்றால் ஒரு வகை அமைதி

ஏழை என்றால் அதிலொரு அமைதி

நீயோ கிளி பேடு – பண்பாடும்

ஆனந்தக் குயில் பேடு

ஏனோ தெய்வம் சதி செய்தது”

36
37

பேதை போல விதி செய்தது”

இந்த வரிகளில் சொல்ல முடியாமல், நினைவுகள் இல்லாமல்

தவிக்கும் பறவையினைப் போல் இருவரும் தவிப்பதாகக் கூறுகிறார்.

அந்நிலையை ஊமை போன்ற அமைதி எனக் கண்ணதாசன்

உவமைப்படுத்துகிறார். அந்த ஊமை செயலற்ற அவர்களின்

நிலைப்பாட்டைத்தான் கூறுகின்றதே தவிர, ஊனத்தைச் சொல்வதாக

இல்லை.

பேடு என்ற சொல் ஆணுமல்லாத, பெண்ணுமல்லாத மூன்றாம்

பாலினத்தைக் குறிப்பிடுகிறது அகரமுதலி. ஆனால், இக்கவியில்

குழந்தையாகவும் இல்லாமல், குமரியாகவும் இல்லாத சூழலில்

இருக்கும் அந்தக் காதலியின் பேதை நிலையைக் கவிஞர் கிளிப்பேடு,

குயில்பேடு என்று உவமைப்படுத்துகிறார். இவ்வாறு தெய்வம்

காதலியை அப்பாவியாக்கி விட்டதைத் தெய்வத்தின் சதி என எண்ணிக்

காதலன் வருந்துகிறான்.

“உனக்கே உயிரானேன் – எந்நாளும்

எனை நீ மறவாதே

நீ இல்லாமல் எது நிம்மதி

37
38

நீதான் என்றும் என் சந்நிதி”

என்ற இப்பாடலின் இறுதிக் கண்ணி நம்மை அழ வைக்கத் தவறாது.

பார்த்துப் பார்த்து வளர்த்த காதலி, சுயநினைவை அடைந்ததும் தன்னை

என்றும் மறந்துவிடக்கூடாது என்ற அச்சம் இவ்வரிகளில் தெரிகிறது.

காதலிக்காகக் காதலன் வருத்தப்படுவதாகச் சூழல்

அமையப்பெற்றிருந்தாலும், கண்ணதாசன் தான் நேசித்தத் தமிழை

விட்டுச் செல்வதை எண்ணி வருந்துவதாகத்தான் எழுதியுள்ளார்.

மேலும், நிம்மதி, சந்நிதி ஆகிய சொற்கள், சதி, விதி என்று இப்பாடலில்

இடம்பெற்றுள்ள சொற்கள் இப்பாடலுக்குப் பொருள் சிறப்பை

மட்டுமல்லாது சந்தச் சிறப்பையும் காட்டுகிறது. நேரம் குறைவாக

இருப்பினும் தன் யதார்த்தமான வார்த்தைகளே இவ்வாறு கவிதை

சிறப்பைப் பெற்று வந்துள்ளது பாராட்டத்தக்கது.

இறுதி மூச்சு வரை தமிழை நேசித்த கண்ணதாசன் அவர்களின்

கவித்திறம் இந்த மூன்று பாடல்களில் அடங்காது. அவரின் திரைப்படப்

பாடல்களை ஆய்வு செய்ததில் பெருமை கொள்கிறேன்.

38
39

6.0. முடிவு

ஒரு மானிடன் எப்பொழுது, எப்படிப் பேசக் கற்றுக்

கொண்டான் என்பது இன்னும் கண்டறிய முடியாத மறைபொருளாய்

இருக்கிறது. நாகரிகம் நாளுக்கு நாள் வளர, அவன் தன் கருத்தை

மற்றவருக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால்,

மொழியைக் கண்டு பிடித்தான். ஒருவருக்கொருவர் தத்தம் கருத்துகளை

வெளியிடுவதற்குக் கருவியாக இருப்பது மொழி ஆகும்.

தொடர்ந்து, நாகரிகம் மேலும் வளர்ச்சியடையவே தன்

அனுபவத்தை எழுதி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, அவன்

எழுத்தைக் கண்டு பிடித்தான். தமிழ்மொழியில் மூவாயிரம்

ஆண்டுகளுக்கு முன்னமே எழுத்து உண்டாகியது.

மேலும், அந்த எழுத்துகளிலும் நாளடைவில் மாறுபாடுகள்

தோன்றலாயின. மொழி சொற்களால் ஆனது. சொல் எழுத்தால் ஆனது.

ஆகவே, எழுத்தே சொல்லுக்கு அடிப்படை ஆகும்.

எழுதி வைக்கும் பழக்கம் இல்லையேல், மனித நாகரிகம்

இன்றிருப்பதைப் போல் சிறந்து வளர்ந்தோங்கி இருக்க முடியாது.

எழுத்து மொழியில்தான் ஒரு தலைமுறையின் அறிவுச்செல்வம்

இன்னொரு தலைமுறைக்குப் பயன்பட வாய்ப்பு ஏற்படுகின்றது.

39
40

7.0. மேற்கோள் நூல்கள்

அ) நூல்கள்

Janakey Raman Manickam, (2012) The Malaysian Indian Dilemma, Malaysia : Nationwide

Human Development and Research Centre.

Kannadasan, (2011) Ennangal Ayiram, India : Kannadasan Pathipagam.

Kannadasan, (2011) Kannadasanin Tirayisai padalgal vol 2.

Kannadasan, (2009) Oru kavinyanin kathai. India: Kannadasan Pathipagam

Kumaran.S , (2011) Brittaniar achi kalathil Malaya Inthiyarkalidaiye eerpatha

Kalaacaara marumalarchi. Tamil Library Journal (October) 1-9.

Samitha Subramaniam, (2015) Rajavoda Rosi. Selangor : Dimension Publication.

Shankar Rao, (2015) Indian Social Problems : A sociological Perspective, India: Chand

Publishing.

Veerappan. (1988). Malaysia Tamilar. Chennai: Kanimozhi Publication.

ஆ) இணையம்

https://www.slideshare.net/mathanraja/2012-new

http://btupsr.blogspot.com/2016/08/blog-post_31.html

http://kuppilan.net/?p=11246

40
41

8.0. பின்னிணைப்பு

பாடல் 1:

ஆண் : அச்சம் என்பது மடமையடா


{ அஞ்சாமை திராவிடர் உடமையடா } (2)
ஆண் : { அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா } (2)
ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது கடமையடா } (2)
ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன் ஆஆ ஆஆ
ஆண் : கனகவிஜயரின் முடித்தலை நெறித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
ஆண் : இமய வரம்பினில் மீ ன்கொடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை ஆஆஆ
ஆண் : கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
ஆண் : களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

41
42

ஆண் : 
{ வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார் } (2)
ஆண் : மாபெரும் வரர்
ீ மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆண் : ஆறிலும் சாவு நூறிலும் சாவு
{ தாயகம் காப்பது கடமையடா } (2)
ஆண் : அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா

பாடல் 2:

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னைப் போல் பெண்ணல்லவோ
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
என்னுயிரும் நீ அல்லவோ 

42
43

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே... ஏ... ..ஓ... ஓ... 

கன்னிக் காய் ஆசைக் காய் 


காதல் கொண்ட பாவைக் காய்
அங்கே காய் அவரைக் காய் 
மங்கை எந்தன் கோவைக் காய்  (x2)

மாதுளங்காய் ஆனாலும் 
என்னுளங்காய் ஆகுமா
எனை நீ காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

இத் திக்காய் காயாதே 


என்னைப் போல் பெண்ணல்லவோ  ….ஓ... ஓ... ஆ... ஆ...

இரவுக்காய் உறவுக்காய் 
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் 
நேரில் நிற்கும் இவளைக் காய் (x2)

புருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ


என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

43
44

ஆஹாஹா ஹாஹாஹா……….ஆஹாஹா ஹா...

ஏலக் காய் வாசனை போல் 


எங்கள் உள்ளம் வாழக் காய்
ஜாதிக் காய் பெட்டகம் போல் 
தனிமை இன்பம் கனியக் காய் (x2)

சொன்னதெல்லாம் விளங்காயோ 
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே 
என்னுயிரும் நீயல்லவோ

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ

ஆஹாஹா ஹாஹாஹா ………..ஆஹாஹா ஹா...

உள்ளமெலாம் மிளகாயோ 
ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக் காய் பிளந்தது போல் 
வெண்ணிலவே சிரித்தாயோ (x2)

கோதை என்னை காயாதே 


கொற்றவரங்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே 

44
45

தனிமையிலேங்காய் வெண்ணிலா

அத் திக்காய் காய் காய் 


ஆலங்காய் வெண்ணிலவே
இத் திக்காய் காயாதே 
என்னுயிரும் நீ அல்லவோ
ஆஹாஹா... ஆ... ஆ...
ஓஹோஹோ... ஹோ... ஹோ... ம்ஹும்... ஹும்...

பாடல் 3:

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே


கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ………ராரிராரோ ஓராரிரோ

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே

ஊமை என்றால் ஒரு வகை அமைதி


ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே


அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்

45
46

ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்


ராரிராரோ ஓராரிரோ………..ராரிராரோ ஓராரிரோ

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்


கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே


அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ
ராரிராரோ ஓராரிரோ...

46

You might also like