You are on page 1of 19

1. ‘ய’கர மற்றும் ‘வகர உடம்படு மெய்கள்.

நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலிலும் ஓர் உயிர் எழுத்து வந்தால்,

அவ்விரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் புணர்ச்சி உயிர்முன் உயிர் புணர்தல் எனப்படும். நிலைமொழியின்

ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வருமானால், அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து

ஒலிக்கும்போது, இரண்டுக்கும் இடையே விட்டிசை தோன்றும். ஓர் எழுத்தை ஒலித்து, சற்று இடைவெளி விட்டு, பின்பு

அதற்கு அடுத்த எழுத்தை ஒலிப்பது விட்டிசை எனப்படும். விட்டு இசைப்பது விட்டிசை. இரண்டு உயிர்களுக்கு

இடையே தோன்றும் விட்டிசை, ஒலிக்கும் முயற்சியை அரிதாக்குகிறது.

சான்று
மணி + அரசன் (இ முன் அ)

வர + இல்லை (அ முன் இ)

இச்சான்றுகளை அப்படியே உள்ளபடி வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். நிலைமொழி ஈற்று உயிர்க்கும், வருமொழி

முதல் உயிர்க்கும் இடையே விட்டிசை தோன்றுவதைக் காணலாம். இதற்குக் காரணம் மணி+அரசன் என்பதில், இ,அ

என்னும் இரண்டு உயிர்களும் வர+இல்லை என்பதில், அ,இ என்னும் இரண்டு உயிர்களும் உடம்படாமல்

(உடன்படாமல்) அல்லது ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும்.

இத்தகைய சூழலில் உடம்படாத அவ்விரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக, அவ்வுயிர்களுக்கு இடையே ய், வ்

என்னும் மெய்களுள் ஏதேனும் ஒன்று வரும். சான்று : மணி + அரசன் > மணி + ய் + அரசன் = மணியரசன்
வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை
என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும் முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள்.

உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார்,

ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர். மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள்

(Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை
உடையதால் இவ்வாறு கூறினர்.

இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும்

முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள். உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற

மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார், ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர்.
மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள் (Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே
இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை உடையதால் இவ்வாறு கூறினர்.

நின்ற சொல்லின் ஈறு உயிராயும் அதாகப்பட்டது உயிரெழுத்து ஒலியாயும் வரும் சொல்லின் முன்னும் வருவது

உயிராயும் இருப்பின் உயிரும் உயிரும் ஒன்று சேராது என்பதால் புணர்ச்சிக்கு இடமில்லை, சொற்கள் புணர

வேண்டுமாகையால் ஈருயிர்களுக்கிடையே மெய்யொன்று தோன்றி ஓருயிரைத் தான் பெற்ற உடம்பே உடம்படு மெய்!
உடம்பை அடுத்து வரும் மெய் என்பதை விட சொற்கள் புணர உடன்படும் மெய் என்றே கருதி ஈருயிர்களுக்கிடையே

தோன்றும் மெய்யை உடன்படு மெய் என்போமே! நின்ற சொல்லின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகியவற்றில் ஏதுமொன்று

வரின் இடையில் யகர(ய) மெய்யும் 'ஏ' இன்றி ஏனைய எட்டுக்கும் இடையில் வகர(வ) மெய்யும் ஏகாரம்(ஏ)
தோன்றின் யகர(ய), வகர(வ) மெய்யிரண்டும் உடன்படு மெய்யாகத் தோன்றும், ஏகாரத்தில்(ஏ) முடியும் நின்ற சொல்

பெயர்ச்சொல்லாயின் வகரமும்(வ்) இடைச்சொல் - அதாவது அசைநிலையாயின் யகரமும்(ய்) பண்புச் சொல்லுக்குத்


தான் இரண்டும் உடன்படு மெய்யாகும்.

எடுத்துக்கட்டுகள்,

யகர(ய்) உடன்படு மெய்யிற்கு

கிளி(இ) + அழகு = கிளியழகு


தீ(ஈ) + அழல் = தீயழல்
மை(ஐ) + அழகு = மையழகு

வகர(வ்) உடன்படு மெய்யிற்கு

பல(அ) + இடங்கள் = பலவிடங்கள்


பலா(ஆ) + அடியில் = பலாவடியில்
நடு(உ) + இடம் = நடுவிடம்
பூ(ஊ) + அழகு = பூவழகு

2. உயிர் முன் மெய் புணரும் பாங்கு


சொற்கள் புணரும்போது நிலைமொழி ஈற்றில் (இறுதியில்) உயிர் எழுத்தும் வருமொழி முதலில் மெய்யெழுத்தும்
இடம்பெற்றுவருதல் உயிர் முன் மெய் புணர்தல் எனப்படும்.

எடுத்துக்கட்டுகள்,

படிக்க + சென்றாள் = படிக்கச்சென்றாள்

தேரடி + தெரு = தேரடித்தெரு


கொட்டை + பாக்கு = கொட்டைப்பாக்கு

உயிர் முன் வல்லின மெய் புணர்தல்

உயிர் முன் வல்லினம் மெய் புணரும் சந்தர்ப்பங்களில் சில இடங்களில் வல்லினம் மிகுந்து வருவதை அவதானிக்கலாம்

அதேபோல் சில இடங்களில் வல்லினம் மிகுந்து வராது.


வல்லினம் மிகுந்து வரும் சந்தர்ப்பங்கள்

அ,இ,உ ஆகிய சுட்டு எழுத்துகள் எ என்ற வினா எழுத்து அந்த, இந்த, உந்த ஆகிய சுட்டுச் சொற்கள் எந்த என்ற வினாச்சொல்

ஆகியவற்றை அடுத்து வரும் வல்லினம் மிகும்.


உதாரணம்
அ + புத்தகம் = அப்புத்தகம்

எ + குழந்தை = எக்குழந்தை

இரண்டாம் நான்காம் வேற்றுமையுருபேற்ற பெயர்ச் சொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகும். இரண்டாம் வேற்றுமைக்குரிய

உருபு ஐ , நான்காம் வேற்றுமைக்கு உரிய கு உருபு என்பவற்றை ஏற்ற பெயர்சச


் ொற்களை அடுத்து வரும் வல்லினம் மிகுந்து
காணப்படும்

உதாரணம் ,

1. வீட்டை + கட்டினான் = வீட்டைக்கட்டினான்


உயிர் முன் மெல்லின / இடையின மெய் புணர்தல்.
அ,இ,,உ ஆகிய சுட்டெழுத்துக்களின் முன்னும், எ என்ற வினாவெழுத்தின் முன்னும் ஞ,ந,ம ஆகிய மெல்லின மெய்களும்,

வகர இடையின மெய்யும் வரும்போது அவ்வவ் எழுத்து மிகுந்து வருவதை காணலாம் . அதேபோல் அ,ஆ,உ,எ எழுத்துக்களின்

முன் யகர இடையினம் வந்தால் வகரம் மிகும்.


உதாரணம்

அ + ஞானம் = அஞ்ஞானம்

இ + நாள் = இந்நாள்

இ + மரம் = இம்மரம்

உ + வீடு = உவ்வீடு

எ + யானை = எவ்யானை
தற்கொலத் தமிழ் ஊடாகம்

1) மின்+ அஞ்சல் = மின்னஞ்சல்


2) செய்தி + தாள் = செய்தித்தாள்
3) தொலை + காட்சி = தொலைக்காட்சி
4) வலை + தளங்கள் = வலைத்தளங்கள்
5) நகை + துணுக்குகள் = நகைத்துணுக்குகள்
6) தொலை + பெசி = தொலைப்பெசி
7) இசை + தட்டுகள் = இசைத்தட்டுகள்
தொகைநிலைத் தொடர்

தொகைநிலைத் தொடர் சொல்லைத் தனிச்சொல் என்றும், தொடர்ச்சொல் என்றும் பகுத்துக்கொள்வது தமிழ் மரபு.

தொடர்ச்சொல்லில் தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் எனக் கொள்ளப்படும் மொழிப் பாங்குகள் உள்ளன .

தொல்காப்பியம் தொகைநிலைத் தொடரைத் தொகைமொழி என்று குறிப்பிடுகிறது. தொகைநிலைத் தொடரானது

வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என

ஆறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறில் உம்மைத்தொகை மட்டும் சில இடங்களில் இருசொல் நடை உடையது.

1) வேற்றுமைத் தொகை
நூல் படித்தான்’ என்னும் தொடர், ‘நூலைப் படித்தான்’ என விரியும். இதில், ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து
வந்துள்ளது. வேற்றுமை உருபு மறைந்து வந்தால் அது வேற்றுமைத் தொகை எனப்படும். ‘ஐ’ என்பது இரண்டாம் வேற்றுமை

உருபு என்று முன்னரே படித்துள்ளீர்கள். ஆதலால், இத் தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாயிற்று.

தலை வணங்கினான்’ என்பது ‘தலையால் வணங்கினான்’ என விரியுமாதலின் இது மூன்றாம் வேற்றுமைத் தொகை.

‘மங்கை மகள்’ என்பது ‘மங்கைக்கு மகள்’ என விரியும். ஆதலின், இது நான்காம் வேற்றுமைத் தொகை
் ினான்’ என விரியும். ஆதலின் இது ஐந்தாம் வேற்றுமைத் தொகை
நாடு நீங்கினான்’ என்பது ‘நாட்டின் நீஙக

வேலன் சட்டை’ என்பது ‘வேலனது சட்டை’ என விரியும். ஆதலின், இது, ஆறாம் வேற்றுமைத் தொகை

மரக்கிளி’ என்பது ‘மரத்தின் கண் கிளி’ என விரியும் ஆதலின் இது, ஏழாம் வேற்றுமைத் தொகை.

2) வினைத் தொகை
குடி நீர்’ என்னும் தொடரைக் கவனியுங்கள். இது, குடித்த நீர், குடிக்கும் நீர், குடிக்க இருக்கின்ற நீர் என

முக்காலத்திற்கும் ஏற்பப் பொருள் தரும். ஆனால், காலம் காட்டும் இடைநிலை மறைந்துள்ளது. இவ்வாறு, காலம்
மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும்
அலைகடல், பாய்புலி, உண்கலம், ஆடுகொடி, ஊறுகாய்.

3) பண்புத் தொகை
செந்தாமரை’ என்பது ‘செம்மையாகிய தாமரை’ என விரியும். இடையில், ‘மை’ என்னும் பண்புப் பெயர் விகுதியும்

‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு, பண்பை விளக்கும் உருபு மறைந்து (தொக்கு)

வருவது பண்புத் தொகை.

வெண்ணிலவு, இன்சுவை, வட்டக்கல்

4) உவமைத் தொகை
‘தேன்மொழி’ என்பது ‘தேன்போன்ற மொழி’ என விரியும். இடையில், ‘போலும்’ என்னும் உவம உருபு மறைந்து
வந்துள்ளது. ‘மலர்ப்பாதம்’ ‘கயல்விழி’ போல்வன மேலும் சில எடுத்துக்காட்டுகளாகும்.

5) உம்மைத் தொகை
‘இரவு பகல்’ என்பது ‘இரவும் பகலும்’ என விரியும். இடையில் ‘உம்’ என்னும் இடைச் சொல் மறைந்து வந்துள்ளது.
ஆதலால் இது, உம்மைத் தொகை எனப்படும்.

‘கபிலபரணர்’, ‘உற்றார் உறவினர்


6) அன்மொழித் தொகை
பொற்றொடி வந்தாள்’ என்பது ‘பொன்னால் ஆகிய தொடியை (வளையலை) அணிந்த பெண் வந்தாள்’ என விரியும்.

பொன்னால் ஆகிய என மூன்றாம் வேற்றுமை உருபும் ‘ஆகிய’ என்னும் பண்பு உருபும் மறைந்து வந்துள்ளது. இவ்வாறு

வேற்றுமைத் தொகையை அடுத்து, அல்லாத மொழி (அணிந்த, பெண்) மறைந்ததால். இது, வேற்றுமைத்தொகைப்

புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆயிற்று.


15 சந்திப்பிலழகள்

திருத்தம்
உலகநாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

170 நாடுகளில் பரவிய கொரோனாவால் இரண்டரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு

கடைபிடிக்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந்தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க இருந்தன. ஆனால்
கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்காமல் இருக்கத் தேர்வை ஒத்தி வைக்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை
விடுத்திருந்தனர். குறிப்பாகச் சட்டசபையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்துத் தமிழகத்தில் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி

பழனிசாமி சட்டசபையில் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15-ம் தேதி

தொடங்கி நடைபெறும் எனவும் 11 மற்றும் 12-ம் வகுப்புத் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி நடைபெறும் எனவும்

முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றுவதால் புதுச்சேரியிலும் 10 ம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக,

அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்துள்ளார்.

1) இருக்கத் தேர்வை
வலி மிகுவதற்கான காரணிகள்
 வினையெச்சமாக இருந்தால்

 வேற்றுமைத் தொகை (இருக்க+ ஆக/கு தேர்வை)

 6 வேற்றுமைத் தொகை (இருக்க+ உடைய/பற்றிய/அது தேர்வை)


 உவமைத்தொகை (இருக்க போன்ற தேர்வை)

 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்


வலி மிகாததற்கான காரணிகள்
 7 வேற்றுமைத் தொகை(இருக்க+ இல்/கண் தேர்வை)
 5 வேற்றுமைத் தொகை (இருக்க+ இன்/இருந்து தேர்வை)
 3 வேற்றுமைத் தொகை (இருக்க+ ஆல்/ஓடு தேர்வை
 2 வேற்றுமைத் தொகை (இருக்க+ ஐ தேர்வை)
 உம்மைத்தொகை (இருக்க+ உம், தேர்வை+உம்)
 எழுவாய்த் தொடர் (இருக்க- எழுவாய், தேர்வை- பயனிலை)
 விளித் தொடர் (தேர்வை-ஏவல் வினையென்றால்)

2) குறிப்பாகச் சட்டசபையில்
வலி மிகுவதற்கான காரணிகள்
 நான்காம் வேற்றுமை விரியாக இருந்தால்
வலி மிகாததற்கான காரணிகள்
 'சட்டசபையில்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'குறிப்பாக' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
3) இதையடுத்துத் தமிழகத்தில்
வலி மிகுவதற்கான காரணிகள்
 வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
 வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
 4 வேற்றுமைத் தொகை (இதையடுத்து+ ஆக/கு தமிழகத்தில்)
 6 வேற்றுமைத் தொகை (இதையடுத்து+ உடைய/பற்றிய/அது தமிழகத்தில்
 உவமைத்தொகை (இதையடுத்து போன்ற தமிழகத்தில்)
வலி மிகாததற்கான காரணிகள்
 தமிழகத்தில்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'இதையடுத்து' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 உம்மைத்தொகை (இதையடுத்து+ உம், தமிழகத்தில்+உம்)
 எழுவாய்த் தொடர் (இதையடுத்து- எழுவாய், தமிழகத்தில்- பயனிலை)
 விளித் தொடர் (தமிழகத்தில்-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
4) வகுப்புப் பொதுத்
வலி மிகுவதற்கான காரணிகள்
 வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
 வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
 4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொது
 6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொது)
 உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொது
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொது+உம்)
 ழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொது- பயனிலை)
 விளித் தொடர் (பொது-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
5) வகுப்புத் தேர்வுகள்
வலி மிகுவதற்கான காரணிகள்
 வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
 வன்தொடர்க்குற்றியலுகரத்தைத் தொடர்ந்துவந்த பெயர்சொல்லென்றால்*
 4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொது
 6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொது)
 உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொது
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.

வலி மிகாததற்கான காரணிகள்


 'தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல் உயர்திணைப்
பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொது+உம்)
 ழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொது- பயனிலை)
 விளித் தொடர் (பொது-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது
6) தமிழகப்
வலி மிகுவதற்கான காரணிகள்
 'தமிழகம்' என்ற சொல்லின் மகரம் கெட்டால்*
வலி மிகாததற்கான காரணிகள்
 'பாடத்திட்டத்தை' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'தமிழக' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
7)பாடத்திட்டத்தைப்
வலி மிகுவதற்கான காரணிகள்
 இரண்டாம் வேற்றுமை விரியாக இருந்தால்
வலி மிகாததற்கான காரணிகள்
 'பின்பற்றுவதால்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'பாடத்திட்டத்தை' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது

8) மேற்பட்டோர்
வலி மிகுவதற்கான காரணிகள்
 4 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஆக/கு பலியாகி)
 6 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ உடைய/பற்றிய/அது பலியாகி)
 உவமைத்தொகை (மேற்பட்டோர் போன்ற பலியாகி)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'பலியாகி' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'மேற்பட்டோர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(மேற்பட்டோர்+ இல்/கண் பலியாகி)
 5 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ இன்/இருந்து பலியாகி)
 3 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஆல்/ஓடு பலியாகி)
 2 வேற்றுமைத் தொகை (மேற்பட்டோர்+ ஐ பலியாகி)
உம்மைத்தொகை (மேற்பட்டோர்+ உம், பலியாகி+உம்

 எழுவாய்த் தொடர் (மேற்பட்டோர்- எழுவாய், பலியாகி- பயனிலை


 விளித் தொடர் (பலியாகி-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

9) பேர்
வலி மிகுவதற்கான காரணிகள்
 4 வேற்றுமைத் தொகை (பேர்+ ஆக/கு பாதிக்கப்பட்டுள்ளனர்)
 6 வேற்றுமைத் தொகை (பேர்+ உடைய/பற்றிய/அது பாதிக்கப்பட்டுள்ளனர்)
 உவமைத்தொகை (பேர் போன்ற பாதிக்கப்பட்டுள்ளனர்)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'பாதிக்கப்பட்டுள்ளனர்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'பேர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(பேர்+ இல்/கண் பாதிக்கப்பட்டுள்ளனர்)
 5 வேற்றுமைத் தொகை (பேர்+ இன்/இருந்து பாதிக்கப்பட்டுள்ளனர்)
 3 வேற்றுமைத் தொகை (பேர்+ ஆல்/ஓடு பாதிக்கப்பட்டுள்ளனர்)
 2 வேற்றுமைத் தொகை (பேர்+ ஐ பாதிக்கப்பட்டுள்ளனர்)
 உம்மைத்தொகை (பேர்+ உம், பாதிக்கப்பட்டுள்ளனர்+உம்)
 எழுவாய்த் தொடர் (பேர்- எழுவாய், பாதிக்கப்பட்டுள்ளனர்- பயனிலை
 விளித் தொடர் (பாதிக்கப்பட்டுள்ளனர்-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

9) வகுப்பு
வலி மிகுவதற்கான காரணிகள்
 வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
 4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொதுத்தேர்வுகள்)
 6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொதுத்தேர்வுகள்)
 உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள்)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(வகுப்பு+ இல்/கண் பொதுத்தேர்வுகள்)
 5 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ இன்/இருந்து பொதுத்தேர்வுகள்)
 3 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆல்/ஓடு பொதுத்தேர்வுகள்)
 2 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஐ பொதுத்தேர்வுகள்)
 உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொதுத்தேர்வுகள்+உம்)
 எழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொதுத்தேர்வுகள்- பயனிலை)
 விளித் தொடர் (பொதுத்தேர்வுகள்-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

10) அன்சாரி
வலி மிகுவதற்கான காரணிகள்
 வினையெச்சமாக இருந்தால்
 4 வேற்றுமைத் தொகை (அன்சாரி+ ஆக/கு கோரிக்கை)
 6 வேற்றுமைத் தொகை (அன்சாரி+ உடைய/பற்றிய/அது கோரிக்கை)
 உவமைத்தொகை (அன்சாரி போன்ற கோரிக்கை)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.

வலி மிகாததற்கான காரணிகள்


 கோரிக்கை' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'அன்சாரி' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாதுவியங்கோள் வினைமுற்று என்றால் வலிமிகாத
 உம்மைத்தொகை (அன்சாரி+ உம், கோரிக்கை+உம்)
 எழுவாய்த் தொடர் (அன்சாரி- எழுவாய், கோரிக்கை- பயனிலை)
 விளித் தொடர் (கோரிக்கை-ஏவல் வினையென்றால்)
வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

11) தேதி
வலி மிகுவதற்கான காரணிகள்
 வினையெச்சமாக இருந்தால்
 4 வேற்றுமைத் தொகை (தேதி+ ஆக/கு தொடங்கி)
 6 வேற்றுமைத் தொகை (தேதி+ உடைய/பற்றிய/அது தொடங்கி)
 உவமைத்தொகை (தேதி போன்ற தொடங்கி)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'தொடங்கி' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'தேதி' என்ற சொல் உயர்திணைப்
பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 வியங்கோள் வினைமுற்று என்றால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(தேதி+ இல்/கண் தொடங்கி)
 5 வேற்றுமைத் தொகை (தேதி+ இன்/இருந்து தொடங்கி
 3 வேற்றுமைத் தொகை (தேதி+ ஆல்/ஓடு தொடங்கி)
 2 வேற்றுமைத் தொகை (தேதி+ ஐ தொடங்கி)
 உம்மைத்தொகை (தேதி+ உம், தொடங்கி+உம்
 எழுவாய்த் தொடர் (தேதி- எழுவாய், தொடங்கி- பயனிலை)
 விளித் தொடர் (தொடங்கி-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

12) அமைச்சர்
வலி மிகுவதற்கான காரணிகள்
 4 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஆக/கு கமலக்கண்ணன்)
 6 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ உடைய/பற்றிய/அது கமலக்கண்ணன்)
 உவமைத்தொகை (அமைச்சர் போன்ற கமலக்கண்ணன்)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 கமலக்கண்ணன்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'அமைச்சர்' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(அமைச்சர்+ இல்/கண் கமலக்கண்ணன்)
 5 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ இன்/இருந்து கமலக்கண்ணன்)
 3 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஆல்/ஓடு கமலக்கண்ணன்)
 2 வேற்றுமைத் தொகை (அமைச்சர்+ ஐ கமலக்கண்ணன்)
 உம்மைத்தொகை (அமைச்சர்+ உம், கமலக்கண்ணன்+உம்)
 எழுவாய்த் தொடர் (அமைச்சர்- எழுவாய், கமலக்கண்ணன்- பயனிலை)
 விளித் தொடர் (கமலக்கண்ணன்-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

13) வகுப்பு
வலி மிகுவதற்கான காரணிகள்
 வன்தொடர்க் குற்றியலுகர வினையெச்சச் சொல்லென்றால்
 4 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆக/கு பொதுத்தேர்வுகள்)
 6 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ உடைய/பற்றிய/அது பொதுத்தேர்வுகள்)
 உவமைத்தொகை (வகுப்பு போன்ற பொதுத்தேர்வுகள்)
 பண்புத் தொகை, ஊர்ப்பெயர் என்றால் வலிமிகும்.
வலி மிகாததற்கான காரணிகள்
 'பொதுத்தேர்வுகள்' என்ற சொல் பிறமொழி/வடமொழி/இடப் பெயராகவோ அல்லது 'வகுப்பு' என்ற சொல்
உயர்திணைப் பெயராகவோ இருந்தால் வலிமிகாது
 7 வேற்றுமைத் தொகை(வகுப்பு+ இல்/கண் பொதுத்தேர்வுகள்)
 5 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ இன்/இருந்து பொதுத்தேர்வுகள்)
 3 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஆல்/ஓடு பொதுத்தேர்வுகள்
 2 வேற்றுமைத் தொகை (வகுப்பு+ ஐ பொதுத்தேர்வுகள்)
 உம்மைத்தொகை (வகுப்பு+ உம், பொதுத்தேர்வுகள்+உம்)
 எழுவாய்த் தொடர் (வகுப்பு- எழுவாய், பொதுத்தேர்வுகள்- பயனிலை)
 விளித் தொடர் (பொதுத்தேர்வுகள்-ஏவல் வினையென்றால்)
 வினைத்தொகை, அடுக்குத் தொடர், இரட்டைக்கிளவி என்றால் வலிமிகாது

வடமொழி தமிழில் புணரும்


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வட மொழிச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம்
முன்னோர்களின் மொழிப்பற்றாலும் தமிழறிஞர்களின் தொண்டாலும் வடமொழிச் சொற்களால் தமிழில் பெரிய

பாதிப்பு உருவாகவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வடமொழிச் சொற்கள் கைவிடப்பட்டு எளிய தமிழ்ச்

சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன. இன்றைய கல்விச் சூழலாலும் ஊடகங்களாலும் நம்மில் பலருக்கு

வடமொழிச் சொற்களுக்கும் தமிழ் சொற்களுக்கும் வேறுபாடே காண முடியாத நிலை உருவாகியுள்ளது. கீழக
் ண்ட

பத்து சொற்களில் வடமொழிச் சொற்கள் எத்தனை தமிழ்ச் சொற்கள் எத்தனை என்று கண்டறியுங்கள் பார்க்கலாம்.

ஆரம்பம்
கல்யாணம்
அவசரம்
அன்னியம்
ஞாபகம்
சந்தோசம்
கர்வம்
துரோகம்
பரம்பரை
யோக்யதை

மேலே கொடுக்கப்பட்டுள்ள பத்து சொற்களுமே வடமொழிச் சொற்களே. பல வடமொழிச் சொற்கள் தமிழில்


வடமொழிச் சொற்களை எழுதுவதற்காகவே உருவாக்கப்பட்ட எழுத்துக்களை (ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ)
உள்ளடக்கியிருக்கின்றன. இது போன்ற சொற்களை வடமொழிச் சொற்கள் என்று எளிதாக
கண்டறிந்துவிடலாம். உதாரணம்: நஷ்டம், ஆக்ஷேபம் போன்ற சொற்கள். ஆனால் பல வடமொழிச் சொற்கள்
தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. உதாரணம்: ஆரம்பம்,
கல்யாணம் போன்ற சொற்கள். இவற்றை பெரும்பாலானோர் தமிழ்ச் சொற்கள் என்றே எண்ணுகின்றனர்.

நம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும்

கீழே அட்டவணைப்படுத்தி உள்ளோம்.

வடமொழிச் சொல் தமிழ்ச் சொல்


இருதயம் உள்ளம்
ஆச்சர்யம் வியப்பு
ஆரம்பம் தொடக்கம்
அக்ஷேபம் மறுப்பு
சங்கத
ீ ம் இன்னிசை
கோஷ்டி குழு
அபிவிருத்தி செழிப்பு
அபூர்வம் அருமை
அர்தத
் ம் பொருள்
அவசரம் விரைவு
அவசியம் தேவை
அனாவசியம் தேவையற்றது

நாம் அனைவரும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் .


தவிர்கக
் இயலாமல் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் அதற்கான விதி முறைகளுக்கேற்ப
பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துகளை தமிழில் பயன்படுத்த உதவும் சில விதிமுறைகள் கீழக
் ண்ட
அட்டவணையில் விளக்கப் பட்டுள்ளது.
வட எழுத்து தமிழில் புணரும் முறை உதாரணம்
ஜயம் – சயம்
ஜ ‘ச’ அல்லது ‘ய’ பங்கஜம் – பங்கயம்
ஷண்முகம் – சண்முகம்
ஷ ‘ச’ அல்லது ‘ட’ விஷம் – விடம்
ஸபா – சபை
ஸ ‘ச’ அல்லது ‘ய’ நேசம் – நேயம்
ஹ ‘அ’ அல்லது ‘க’ ஹரி – அரி
க்ஷ ‘க்க’ அல்லது ‘ட்ச’ பக்ஷி – பட்சி
பக்ஷம் – பக்கம்
மாலா – மாலை
சொல்லிருதியில்
வரும் ‘ஆ’ ‘ஐ’ கலா – கலை
ரங்கம் – அரங்கம்
‘ர’ ‘அ’ அல்லது ‘இ’ உடன் வரும் ராமன் – இராமன்
லாபம் – இலாபம்
‘ல’ ‘இ’ அல்லது ‘உ’ லோகம் – உலோகம்
யமன் – இயமன்
‘ய’ ‘இ’ அல்லது ‘உ’ யுத்தம் – உயுத்தம்

You might also like