You are on page 1of 13

2.

0 புணரியல்

புணர்ச்சி என்பது இரு சொற்கள் புணர்தலைக் குறிக்கும். அவை தனித்து இயங்கும்


கட்டிலா வடிவம் ஆக இருக்கவேண்டும். அவ்விரண்டும் சொற்களில் புணர்தலுக்குரியவாக
அமைவது நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும் ஆகும்.
வீரமாமுனிவர் புணர்ச்சிக்கு ‘இசைப்பு’ ‘கலத்தல்’ என்ற பொருளினைச் சதுரகராதியில்
தருகின்றார். இதனையே சுருக்கமாக நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் ஒன்றுபட
புணர்வது புணர்ச்சி என்போம். தொல்காப்பியர்,

நிறுத்த சொல்லின் ஈறுஆகும் எழுத்தோடு


குறித்த கிளவி முதலெழுத்து இயைய (தொல்.108)
என்பார். அஃதாவது, நிறுத்த சொல் என்பது நிலைமொழியையும் குறித்த கிளவி என்பது
வருமொழியையும் குறிக்கும்.

தொடர்ந்து, புணர்ச்சி என்பது நிலைமொழி ஈறு, வருமொழி முதல் எழுத்துகள்


அடிப்படையிலே ஆராயப்படுகின்றது. இந்த எழுத்து வகையான புணர்ச்சியையும்
நான்காகத் (படம் 1) தொல்காப்பியர் விளக்குகிறார்.

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்


உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் (தொல்.புணரி.5)
என்று தொல்காப்பியர் தெளிவாக்க விளக்குகிறார்.
உயிர் +
உயிர்

மெய் + புணரியல் உயிர் +


மெய் வகைகள் மெய்

மெய் +
உயிர்

படம் 1: புணரியல் வகைகள்

புணரியல் வரையையும் வகைகளையும் மையமாகக்கொண்டு உங்கள்குரல் சஞ்சிகளையில்


வெளிவந்துள்ள ‘எதிரொலி 2’ என்ற வாசிப்பு பகுதியில் இந்தப் புணரியல் வகைகள் மிகத்
துல்லியமாக ஆய்வுசெய்யப்படுள்ளன.

2.1 உயிர் முன் உயிர் புணர்தல்

நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலிலும் ஓர்


உயிர் எழுத்து வந்தால், அவ்விரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் புணர்ச்சி உயிர்முன்
உயிர் புணர்தல் எனப்படும். இந்த உயிர் முன் உயிர் உயிர் விதியின் கீழ் இன்னும் சில
விதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை மொத்தம் ஐந்து விதிகளாக பிரிக்கலாம்.
அவ்வகையில், எதிரொலி 2 என்ற வாசிப்புப் பகுதியில் மொத்தம் நான்கு உயிர் முன் உயிர்
விதிகள் கண்டறியப்பட்டுள்ளன (படம் 2).
விதி 1 இ, ஈ,
ஐ + உயிர்

விதி 2 அ, ஆ,
தனிக்குறில் உயிர் +
நிலைமொழி உ, ஊ, ஓ, ஔ
உயிர் விதி
ஈறுகள் + உயிர்

உயிர்உயிர்
விதி 4 வு -
ஈறு மட்டும்

படம் 2: உயிர் வகைகள்

2.1.1 உயிர்உயிர் விதி 1 (இ, ஈ, ஐ ஈறுகள் + உயிர்)

நிலைமொழியின் ஈற்றில் இ, ஈ, ஐ ஆகிய மூன்று உயிர்கள் இருந்து


வருமொழியின் முதலில் ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிர்கள் வரின் இவ்வுயிர்களை
உடம்படுத்த ‘ய’ கர உடம்படுமெய் தோன்று. இது ‘ய’ கர உடம்படுமெய் எனப்படும்.
இந்த எதிரொலி 2 என்ற வாசிப்புப் பகுதியில் இந்த விதி அடையாளம்
காணப்பட்டுள்ளது. காட்டாக,

கூறியுள்ள

 கூறி + உள்ள = கூறியுள்ள


(கூ + ற் + இ) + (உ + ள் + ள்)

(இ + உ) = ய்
கூறி + (ய் + உ) + ள் + ள
‘கூறியுள்ள’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘கூறி + உள்ள’ என்று பிரிக்கப்படும். ‘கூறி’
கூறியுள்ள
என்ற சொல்லின் நிலைமொழியின் ஈற்றில் ‘இ’ என்ற உயிர் இருந்து வருமொழியில் ‘உள்ள’
என்ற சொல்லின் முதலில் ‘உ’ என்ற உயிர் வந்து இவ்வுயிர்களை உடம்படுத்த ‘ய’ கர
உடம்படுமெய் தோன்றி கூறியுள்ள என்று புணர்ந்துள்ளது.

2.1.2 உயிர்உயிர் விதி 2 (அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஈறுகள் + உயிர்)

நிலைமொழியின் ஈற்றில் அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ என்ற உயிர் எழுத்துகள் ஈறுகளாக


இருந்து வருமொழியின் முதலில் உயிர்வரின் இரண்டு உயிர்களையும் உடம்படுத்த
இடையில் வகர (வ்) உடம்படுமெய் வந்து, வருமொழி முதல் முதல் உயிரெழுத்துடன்
சேர்ந்து உயிர்மெய்யாகிப் புணரும். இந்த எதிரொலி 2 என்ற வாசிப்புப் பகுதியில் இந்த
விதி அடையாளம் காணப்பட்டுள்ளது. காட்டாக,

சேர்க்கவியலாது

 சேர்க்க + இயலாது = சேர்க்கவியலாது

(சே + ர் + க் + க் + அ) + (இ + லாது)

(அ + இ) = வ்
சேர்க்க + (வ் + இ) + லாது
‘சேர்க்கவியலாது’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘சேர்க்க + இயலாது’ என்று
சேர்க்கவியலாது
பிரிக்கப்படும். ‘சேர்க்க’ என்ற சொல்லின் நிலைமொழியின் ஈற்றில் ‘அ’ என்ற உயிர்
இருந்து வருமொழியில் ‘இயலாது’ என்ற சொல்லின் முதலில் ‘இ’ என்ற உயிர் வந்து
இவ்வுயிர்களை உடம்படுத்த ‘வ’ கர உடம்படுமெய் தோன்றி சேர்க்கவியலாது என்று
புணர்ந்துள்ளது.

2.1.3 உயிர்உயிர் விதி 4 (வு – ஈறு மட்டும்)

உகர ஈறுகளில், வு (வ் + உ) என்பது மட்டும் உடம்படுமெய் வராமல், உகரம்


மறைந்து, எஞ்சியுள்ள ‘வ்’ என்ற மெய்யில் வருமொழி முதல் உயிர் சேர்ந்து உயிர்மெய்யாகி
புணர்கிறது. காட்டாக,

ஆய்வேடுகள்

 ஆய்வு + ஏடுகள் = ஆய்வேடுகள்

(ஆ+ ய் + வு ) + (ஏடுகள்)

(வ் + உ) = வு
ஆய்+ (வ் + ஏ) + டுகள்
ஆய்வேடுகள்
‘ஆய்வேடுகள்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘ஆய்வு + ஏடுகள்’ என விரியும்.
‘ஆய்வு’ என்ற சொல்லில், நிலைமொழி ஈறாக ‘(வ் + வு) உ’ என்ற உயிர் வந்துள்ளது.
வருமொழி முதலில் ‘ஏ’ என்ற உயிர் வந்துள்ளது. எனவே, நிலைமொழியின் ஈற்றில் உள்ள
‘உ’ என்ற உயிர் மறைந்து, எஞ்சிய ‘வ்’ மெய்யில் ‘ஏ’ சேர்ந்து ‘வே’ ஆனது.

2.1.4 உயிர்உயிர் விதி 5 (தனிக்குறில் நிலைமொழி)

நிலைமொழியில் தனி உயிர் குறில் வந்து, அந்த உயிர் ஈறு எதுவாயினும், ‘வ்’
என்ற மெய் வந்து இரட்டும். இரட்டிய ‘வ்’ என்ற மெய் வருமொழி முதல் உயிருடன்
சேர்ந்து உயிர்மெய்யாகும். தனிக்குறில் நிலைமொழி ஓர் எழுத்தைச் சுட்டவோ, சொல்லின்
சுருக்கமாகவோ சுட்டெழுத்தாகவோ வினாவெழுத்தாகவோ வரலாம். காட்டாக,

இவ்வுன்மை

 இ + உன்மை = இவ்வுன்மை

இ+ வ் + வ் + உன்மை

(வ் + உ) = வு
இ+ வ்+ (வ் + உ) + ன்மை
இவ்வுன்மை

‘இவ்வுன்மை’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘இ+உன்மை’ என்று பிரியும்.


நிலைமொழியின் ஈறாக ‘இ’ என்ற உயிர் வந்துள்ளது. வருமொழி முதலும் ‘உ’ என்ற உயிர்
எழுத்து வந்துள்ளது. எனவே, அந்த இரண்டு உயிரும் சேர்வதற்கு முன்பு, அந்த ‘வ்’ என்ற
மெய் இரண்டாக விரிந்து பிந்திய மெய்யில் வரும் உயிர் (வ் + உ) சேர்ந்து உயிர்மெய்யாகி
‘இவ்வுன்மை’ என்றாகியுள்ளது.

2.2 மெய் முன் உயிர் புணர்தல்

மெய்யீற்று நிலைமொழியில் உயிர்முதல் வருமொழியும் புணர்வதே மெய்+ உயிர்ப்


புணர்ச்சி ஆகும். மெய்யை அடுத்து உயிர் வரின் இரண்டும் சேர்ந்து உயிர்மெய் ஆகுதல்
இயல்பாக நிகழக்கூடிய மாற்றமே ஆகும். இந்த மெய் முன் உயிர் விதியின் கீழ் மொத்தம்
நான்கு விதிகளாக பிரிக்கலாம். அவ்வகையில், எதிரொலி 2 என்ற வாசிப்புப் பகுதியில்
மொத்தம் மூன்று விதிகள் கண்டறியப்பட்டுள்ளன (படம் 3).
விதி 1 (பொது)

விதி 2
மகரமெய்யீற்று (தனிக்குறில்
விதி 2 (2/3 ம் நிலைமொழி)
+ பமயவ

மெய் + உயிர்
விதி

மகரமெய்யீற்று விதி மகரமெய்யீற்று


2 (2/2 ம் + கசத விதி 2 (2/1 ம் +
உயிர் )

படம் 2: வாசிப்புப் பகுதியில் மெய் + உயிர் வகைகள்

2.2.1 மெய் + உயிர் விதி 1 (பொது)

மெய் + உயிர் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் மெய் இருந்து, வருமொழி


முதலில் உயிர் வந்தால், அந்த மெய்யும் உயிரும் சேர்ந்து இயல்பாக உயிர்மெய்யாகிப்
புணரும். காட்டாக,

குழப்பமடைய

 குழப்பம் + அடைய = குழப்பமடைய

கு + ழ் + ப் + ப+ (ம் + அ) + டைய

(ம் + அ) = ம
குழப்பமடைய

‘குழப்பமடைய’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘குழப்பம் + அடைய’ என்று பிரியும்.


நிலைமொழியின் ஈற்றில் அஃதவது ‘ம்’ என்ற மெய்யும் வருமொழி முதல் ‘அ’ என்ற
உயிரும் வந்துள்ளது. எனவே, இந்த ‘ம்’ என்ற மெய்யும் ‘அ’ என்ற உயிரும் சேர்ந்து ‘ம’
என்ற உயிர்மெய்யாகி ‘இதழில்’ என்ற புணர்ந்துள்ளது.

2.2.2 மெய் + உயிர் விதி 2 (தனிக்குறில் நிலைமொழி)

மெய் உயிர் புணர்ச்சியில், நிலைமொழித் தனிகுறிலுடன் வந்த மெய் எனில்,


மெய்யீறு இரட்டி, இரட்டிய மெய் வருமொழி உயிர் சேர்ந்து உயிர்மெய்யாகும். காட்டாக,

தன்னுரிமை

 தன் + உரிமை = தன்னுரிமை

தன் + (ன் + உ) + ரிமை

ன் + உ = னு
தன்னுரிமை

இந்தக் காட்டில் மெய்யும் உயிரும் இயல்பாய்ப் புணரவில்லை. அஃதாவது,


நிலைமொழியின் ஈற்றிலுள்ள ‘ன்’ இரட்டித்துள்ளது. பின் வருமொழியின் ‘உ’ என்னும்
உயிரோடு சேர்ந்து இயல்பாகப் புணர்ந்து ‘தன்னுரிமை’ ஆனது.

2.2.3 மகரமெய்யீற்று விதி 2


 2/1 ம் + உயிர்

அடைப்பெயர் அல்லாத மகர (ம்) ஈற்று நிலைமொழி, உயிர் வந்தால் உயிர்மெய்யாகிப்


இடமுண்டு
புணரும். காட்டாக,
 இடம் + உண்டு = இடமுண்டு

இட + (ம் + உ) + ண்டு

ண் + உ = ணு
இடமுண்டு

‘இடமுண்டு’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘இடம் + உண்டு’ என்று பிரியும்.


அஃதாவது நிலைமொழி ஈற்றில் ‘ம்’ என்ற மகர மெய் வருமொழி முதலில் உள்ள ‘உ’
என்ற உயிருட சேர்ந்து ‘ணு’ என்று புணர்ந்துள்ளது. ‘இடம் + உண்டு = இடமுண்டு’ என
தோன்றியுள்ளது.

 2/2 ம் + கசத
அடைப்பெயர் அல்லாத மகர (ம்) ஈற்று நிலைமொழி, க, ச, த, மெய்கள் வந்தால்,
ஈற்று மகர (ம்) மெய் இன மெல்லெழுத்தாகும்.

நலங்கருதும்

 நலம் + கருதும் = நலங்கருதும்

நல + (ம் + க) + ருதும்
நலங்கருதும்
‘நலங்கருதும்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘நலம் + கருதும்’ என்று பிரியும்.
அஃதாவது நிலைமொழி ஈற்றில் ‘ம்’ என்ற மகர வந்து வருமொழி முதல் ‘க’ என்ற மெய்
வந்துள்ளது. இவ்விரண்டும் புணரும்பொழுது மெய் ‘ந்’ என்ற மெய் தோன்றி இன
மெல்லெழுத்தாகியுள்ளது. ‘நலம் + கருதும் = நலங்கருதும்’ என தோன்றியுள்ளது.

 2/3 ம் + பமயவ

அடைப்பெயர் அல்லாத மகர (ம்) ஈற்று நிலைமொழி, ப, ம, ய, வ, மெய்கள்


வந்தால், இயல்பாகப் புணரும். காட்டாக,

இடம்பெற்றது

 இடம் + பெற்றது = இடம்பெற்றது.


இடம்பெற்றது

இடம் என்ற அடைப்பெயர் அல்லாத மகர (ம்) ஈற்று நிலைமொழியில் வந்து,


வருமொழி முதல்லில் ‘பெ’ (ப் + எ) என்ற மெய் வந்த்தால், ‘இடம்பெற்றது’ என்று
இயல்பாகப் புணர்ந்துள்ளது.

2.3 உயிர் முன் மெய்

நிலைமொழி ஈற்றில் (இறுதியில்) உயிர் எழுத்தும் வருமொழி முதலில் மெய்யெழுத்தும்


இடம்பெற்றுவந்தால் சொற்கள் புணரும். நான் தேர்தெடுத்த இலக்கியப் படிவத்தில் சில
உயிர் முன் மெய் புணரும் சொற்களைக் கண்டறிந்தேன். அவ்வகையில், எதிரொலி 2 என்ற
வாசிப்புப் பகுதியில் மொத்தம் எட்டு விதிகள் கண்டறியப்பட்டுள்ளன (படம் 4).
உயிர்மெய் விதி 1
(தனிக்குறில் +
இடைச்சொல் விதி கசதப ஞநம யவ)
1 (வேற்றுமை பெயர்ச்சொல்
உருபுகள்) பொது விதி 2

மையீற்றுப்
பண்புப்பெயர் விதி உயிர் + மெய்
2 (ண் + மெய்) விதி
இடைச்சொலி
விதி 2

உயிர்மெய் விதி
3 (இ ஐ வு ய்
ர் ழ் ம் + வினையடை
கசப)

படம் 2: வாசிப்புப் பகுதியில் உயிர் + மெய் வகைகள்

2.3.1 உயிர்மெய் விதி 1 (தனிக்குறில் + கசதப ஞநம யவ)

நிலைமொழியின் ஈற்றில் தனிக்குறில் வந்து, வருமொழியின் முதலில் ‘கசதப,


ஞநம, யவ’, மெய்கள் வந்தால் மிகுந்து புணரும். காட்டாக,

அந்நாட்டின்

 அ + நாட்டின் = அந்நாட்டின்
அ + ந் + நா + ட்டின்
வருமொழி முதல் நா வந்ததால்
ந் மிகுந்துள்ளது.
‘அந்நாட்டில்’ என்ற சொல்லைப் பிரித்தால் ‘அ + நாட்டின்’ நிலைமொழியின் ஈற்றில் ‘அ’
என்ற தனிக்குறில் வந்து, வருமொழியின் முதலில் ‘நா’ வந்ததால் ந் மிகுந்துள்ளது.

2.3.2 பெயர்ச்சொல் விதி 2 (பெயர் நிலைமொழி)

பெயர்பெயர் தொடரில் இ, ஐ, வு, ய், ர், ழ், ம் என்ற ஏழு ஈறுகள்கொண்ட


அஃறிணைப் பெயர் நிலைமொழி, அடைப்பெயர் என்றால் வலிமிகும்.

ஆய்வுக்கட்டுரை

 ஆய்வு + கட்டுரை = ஆய்வுக்கட்டுரை


ஆ + ய்+ வு + க் + க + ட் + டு + ரை
பெயர்பெயர்த் தொடர், ‘ஆய்வு’ அடைப்பெயர்

‘ஆய்வுக்கட்டுரை’ என்ற பெயர் தொடரில் ‘ஆய்வு’ என்ற அடைப்பெயரின்


ஈற்றில் ‘வு’ என்ற ஈறு கொண்ட அஃறிணைப் பெயர் நிலைமொழி வந்து, வருமொழியில்
‘கட்டுரை’ ‘க் + அ’ (க்) என்ற மெய்யெழுத்துடன் சேர்ந்து வலிமிகுந்துள்ளது

2.3.3 மையீற்றுப் பண்புப்பெயர் விதி 2 (ண் + மெய்)


‘மை’ நீங்கிய ண் ஈறுகள், பொதுவான ண் ஏறு போலவே புணர்கின்றன:
மயங்கும் மெய் வந்தால் இயல்பாக புணரும். காட்டாக,

வெண்பொங்கல்

வெண்மை + பொங்கல் = வெண்பொங்கல்

(வெ + ண் + மை)+ பொங்கல்

‘வெண்பொங்கல்’ என்ற வெண்பொங்கல்


தொடரைப் பிரித்தால் ‘வெண்மை + பொங்கல்’ என
பிரியும். ‘வெண்மை’ என்ற சொல்லின் நிலைமொழி ஈற்றிலுள்ள ‘மை’ என்ற உயிர்மெய்
நீங்கி, (ண் + பொ) மயங்கும் மெய்யாக வந்து இயல்பாக புணர்ந்துள்ளது.

2.3.4 இடைச்சொல் விதி 1 (வேற்றுமை உருபுகள்)


ஐ என்ற இரண்டாம் வேற்றுமௌ உருபுக்குப் பின் வலிமிகும். காட்டாக,

எல்லாவகைத் தரப்பாடுகளும்

எல்லாவகை + தரப்பாடுகளும் = எல்லாவகைத் தரப்பாடுகளும்


இரண்டாம் வேற்றுமை உருபு
‘எல்லாவகை’ என்ற சொல்லின் ஈற்றில் இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ வந்து
வருமொழியின் முதலோடு சேர்ந்து வலிமிகுந்து புணர்ந்துள்ளது.

2.3.5 இடைச்சொல் விதி 2 (அந்த, இந்த, எந்த – சுட்டு வினாச்சொற்கள்)

அந்த, இந்த, எந்த என்ற சுட்டு வலிமிகுந்து புணரும். அந்த, இந்த, எந்த
என்பவையும் தனிக்குறிலாக வந்த அ,இ,எ என்ற சுட்டு, வினாச்சொற்களிலிருந்து மருவிய
சொற்களே ஆதலால், அவை போலவே இவையும் புணர்ந்து வழக்குப் பெற்றன. காட்டாக,

இந்தப்புத்தகம்

இந்த + புத்தகம் = இந்தப்புத்தகம்

‘இந்தப்புத்தகம்’ என்ற தொடரில் ‘இந்த’ சுட்டு வந்து, வருமொழியின் முதல் ‘புத்தகம்’ என்ற
சொல் வந்துள்ளது. இந்த நிலைமொழிக்கும், வருமொழிக்கும் இடையில் ‘க்’ என்ற
மெய்தோன்றி ‘இந்தப்புத்தகம்’ என்று புணர்ந்துள்ளது.

2.3.6 ஆக்கப்பெயர்/மாற்றுப்பெயர் விதி

அது, இது, இவை, அவை என்ற இந்தச் சொற்கள் அனைத்தும்


சுட்டெழுத்துகளால் உருவான ஆக்கப்பெயர்கள். வாக்கியங்களில் கூறப்பட்ட பெயர்களை
மீண்டும் குறிக்கும் பொழுது அதே பெயர்களை மீண்டும் பயன்படுத்தாமல் அவற்றுக்கு
மாற்றாக ஆளப்படும் பெயர்கள் மாற்றுப்பெயர்கள் எனப்படுகின்றன. ஆக்கப் பெயர்களும்,
ஆக்கப்பெயர் அல்லாதவையும் மாற்றுப்பெயர்களாகப் பயன்படலாம். இந்த இருவகைப்
பெயர்களும் எப்பொழுதும் இயல்பாகவே புண்ரும். காட்டாக,

‘இது போட்டியில்’ என்ற தொடரில் வந்து ‘இந்து’ என்ற சொல் மாற்றுப்பெயர் ஆகும்.
ஏனெனில்,ஆய்வுச்செய்யப்பட்ட வாசிப்புப் பகுதில் ‘இது’ என்ற சொல் மாணவர்களின்
இது + போட்டியில் = இது போட்டியில்
‘பட்டக்கல்வியின் தன்மை’ குறிக்கின்றது. இதனை மீண்டும் இரண்டாவது வாக்கியத்தில்
மாற்றுப்பெயர்
‘பட்டக்கல்வியின் தன்மை’ என்ற சொற்றொடரை மீண்டும் அவ்வாறே எழுதாமல், இந்தச்
சொற்றொடருக்கு மாற்றுப்பெயராக ‘இது’ என்ற சொல்லைக் கையாண்டுள்ளார்.
அவ்வகையில் ‘இது’ என்ற மாற்றுப்பெயரும் ‘போட்டியில்’ என்ற சொல்லும் புணரும்
பொழுது இயல்பாகவே புணர்ந்து ‘இது போட்டியில்’ என்று தோன்றியுள்ளது.
2.3.7 உயிர்மெய் விதி 3 (அ ஆ உ ஊ ஈ ஏ ஒ ஔ + கசதப)

அ ஆ உ ஊ ஈ ஏ ஒ ஔ + கசதப என்ற எட்டு உயிர் ஈற்று அஃறிணைப்


பெயர் எல்லாம் வலிமிகும். இங்கு ‘வு’ என்றது (வ் + உ) ஆக்கும். காட்டாக,

ஆய்வுப்பிரிவு

 ஆய்வு + பிரிவு = ஆய்வுப்பிரிவு

பெயர்பெயர்த்தொடர்

‘ஆய்வுப்பெயர்’ என்ற தொடரில் ‘ஆய்வு’ என்ற நிலைமொழியின் ஈற்றில் உ என்ற உயிர்


எழுத்து வந்துள்ளது (வ் + உ = வு). வருமொழி அஃதாவது ‘பிரிவு’ என்ற சொல்லின்
முதலில் ‘ப’ வந்துள்ளது. எனவே, நிலைமொழியில் உள்ள ஆய்வு என்ற சொல்
அடைப்பெயராக வந்து வலிமிகுந்துள்ளது.

2.3.8 வினையடை

நிலைமொழியில் ஆக என்ற ஈற்றுடன் முடியும் குறிப்பு வினையெச்சமே


இக்காலத்தில் வினையடை எனப்படுகிறது. எனவே, இந்தக் குறிப்பு வினையெச்சம்
வலிமிகுந்து புணரும். காட்டாக,

கூட்டாகச் சேர்ந்து

 கூட்டாக + சேர்ந்து = கூட்டாகச் சேர்ந்து

ஆக (வினையெச்சம்)

‘கூட்டாகச் சேர்ந்து’ என்ற தொடரில், நிலைமொழியில் ‘கூட்டாக’ என்ற குறிப்பு


வினையெச்சம் வந்துள்ளது. ‘கூட்டாக’ என்ற நிலைமொழி ‘ஆக’ என்ற ஈற்றுடனும்
முடிந்துள்ளது. எனவே, இந்த குறிப்பு வினையெச்சம் ‘கூட்டாகச் சேர்ந்து’ என்று வலிமிகுந்து
புணர்ந்துள்ளது.

2.3 மெய் முன் மெய்

நிலைமொழி ஈற்றில் மெய் எழுத்தும் வருமொழி முதலில் மெய்யெழுத்தும்


இடம்பெற்றுவருதல் திரிபு புணர்ச்சி ஏற்படும். மெய் முன் மெய் என்ற விதியின் கீழ் ‘ண், ன்,
ள், ல்’ என்ற நான்கு மெய்யீறுகளின் விதிகள் மட்டுமே சுட்டப்படும். இந்த மெய் முன் உயிர்
விதியின் கீழ் மொத்தம் எட்டு விதிகளாக பிரிக்கலாம். அவ்வகையில், எதிரொலி 2 என்ற
வாசிப்புப் பகுதியில் மொத்தம் இரண்டு விதிகள் கண்டறியப்பட்டுள்ளன (படம் 5).

2.4.1 மெய்மெய்ப் புணர்ச்சி விதி 6 (ன் + கசப)

‘ன்’ ஈறுக்குப்பின் ‘க, ச, ப’ வருமொழி முதலாக வரும் தொடர்கள் இயல்பாக


புணர்கின்றன. காட்டாக, மெய் + மெய் விதி 6 (ன்
விதி 7 (ள் +
விதி + கசப)
கசப)
பயன்கிடைப்பதில்லை

பயன் + கிடைப்பதில்லை = பயன்கிடைப்பதில்லை

பயனதருவதால் என்ற தொடரைப் பிரித்தால் ‘பயன் + கிடைப்பதில்லை’ என்று


பிரியும். நிலைமொழி ஈற்றில் அஃதாவது ‘பயன்’ என்ற தொடரின் ஈற்றில் ‘ன்’ என்ற
மெய்வந்துள்ளது. வருமொழி முதலில் ‘கிடைப்பதில்லை’ என்ற தொடரின் முதலில் ‘கி’
என்ற எழுத்து வந்துள்ளது. எனவே, இந்தத் தொடர்கள் இயல்பாகவே புணர்ந்துள்ளது.

2.4.2 மெய்மெய்ப் புணர்ச்சி விதி 7 (ள் + கசப)

படம் 2:அடைப்பெயராக
நிலைமொழி இல்லாத
வாசிப்புப் பகுதியில் இடங்களில்
மெய் ள் + கசப இயல்பாகவே
+ மெய் வகைகள்
புணரும். காட்டாக,

உங்கள்குரல்

உங்கள் + குரல் = உங்கள்குரல்

உங்கள்குரல் என்ற தொடரில் உங்கள் என்பது அடைப்பெயர் இல்லாமல், அச்சொல்லின்


ஈற்றில் ள் என்ற மெய்யெழுத்து வந்து, வருமொழி முதல் ‘க’ வந்து இயல்பாகவே
புணர்ந்துள்ளது.

You might also like