You are on page 1of 10

BTMB 3043: தமிழ் மொழி இலக்கணம் 1

முதலெழுத்து மற்றும் சார்பெழுத்து


வகைகள்
குழு உறுப்பினர்கள் : எட்வட் ஈஷ்வர்
சந்தனசாமி
கண்ணன் ரகுராமன்
உயிர் எழுத்து

• உயிர் எழுத்துகள் மொத்தம் 12


• அவை : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
• இவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
- குறில் - 5 - அ, இ, உ, எ, ஒ
- நெடில் - 7 - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
• குறுகிய ஓசை உடையவை குறில். நீண்ட ஓசை உடையவை நெடில்.
மெய் எழுத்துகள்
• மெய் எழுத்துகள் 18.
• அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்.
• மெய்யெழுத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
- வல்லினம் : வலிமையான ஓசை உள்ளவை
க், ச், ட், த், ப், ற் ஆறும் வல்லின மெய்கள்.
- மெல்லினம் : மென்மையான ஓசை உள்ளவை
ங், ஞ், ண், ந், ம், ன் ஆறும் மெல்லின மெய்கள்.
- இடையினம் : வல்லினம் மற்றும் மெல்லினம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஓசை
உள்ளவை.
ய், ர், ல், வ், ழ், ள் ஆறும் இடையின மெய்கள்.
உயிர்மெய் எழுத்து

• மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்ந்து உருவாவதே உயிர்மெய்


எழுத்தாகும்.
• இதில் மெய் எழுத்து முன்னும் உயிர் எழுத்துப் பின்னும் ஒலிக்கப்படும்.
• பதினெட்டு மெய் எழுத்துகள், பன்னிரண்டு உயிர் எழுத்துகளோடும்
சேர்ந்து, இருநூற்றுப் பதினாறு உயிர்மெய் எழுத்துகள் தோன்றும்.
- எ.கா
க் + அ = க
ஆய்த எழுத்து

• மூன்று புள்ளிகளைக் கொண்ட எழுத்து வடிவம்.


• தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் பின்னே ஒரு வல்லின
உயிர்மெய் எழுத்தையும் துணையாகக் கொண்டு அமையும்.
- எ.கா : அஃது, இஃது, எஃகு
• இவ்வெழுத்து தனிநிலை என்றும் குறிக்கப்பெறும்.
• ஆய்த எழுத்துக்கு அஃகேனம் என்ற பெயரும் உண்டு.
அளபெடை
(உயிரளபெடை / ஒற்றளபெடை )

• உயிரெழுத்து அளவு நீண்டு ஒலிக்கும் பொழுது, அதனை


உயிரளபெடை என்றும் மெய்யெழுத்தின் ஓசை அல்லது
அளவு இரட்டிக்கும் பொழுது ஒற்றளபெடை என்றும்
அழைப்பர்.
உயிரளபெடை

• செய்யு ள்கள ில ் ஓசை குறையும் ப ொழு து, ஏ ழு நெட ்டெ ழுத்து ச ொல ்ல ின் முதல ில ், இடை ய ில ்
அ ல்ல து கடை ய ில ் தனக்குர ிய ம ாத்த ிரையளவ ில ிரு ந்து ம ிகுத்து ஒல ிக்கும்.
• உ ய ிர ்நெடில் அ ளபெடுக்கும்ப ோது, அ ளபெடுத்த உ ய ிர ்நெடி ல ின் இனம க ா ிய குற்றெழுத்துகளை
அ தன் ப க்கத்த ில ் அ ற ிகுற ிய ாய ் வரும். உ ய ிர ளபெடை யை ஒரே எ ழுத்த ாய ் உ ச்சர ித்தல் வே ண்டும்.
- எ .க ா: 1. ஓஒதுதல் வே ண்டும் (ச ொல ்ல ின் முதல ில ்)
2. நற்ற ாள ் த ொழ ாஅ ர் எ னின் (ச ொல ்ல ின் இடை ய ில ்)
3. கழ ாஅ (ச ொல ்ல ின் கடை சிய ில ்)
ஒற்றளபெடை

• செய்யுள்களிலோசை குறையும் பொருட்டு ஒன்று அல்லது இரண்டு பின்னால்


சொல்லில் இடையிலும், இறுதியிலும் ங், ஞ், ண், ந், ம், வ், ய், ல், ள், ன் ஆகிய 10
மெய்யெழுத்துகள் அந்த ஓசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மாத்திரையளவு
உயர்ந்து ஒலிக்கும்.
- எ.கா : "எஙங் கிறைவனுள் என்பாய் மனனேயான்எங்ங்
கெனத்திரிவாரின்"
கேள்விகள்

1) உயிர் மற்றும் மெய் எழுத்துகளைப் பற்றி விளக்கி எழுதுக. (5M)


2) உயிர்மெய் எழுத்துகளைத் தகுந்தக் காட்டுகளுடன் பகுத்தாய்ந்திடுக. (5M)
3) ஆய்த எழுத்து என்றால் என்ன? (5M)
4) அளபபெடை இருவகை எனப்படும். அவற்றை விளக்கி எழுதிடுக. (10M)
5) மன்ன்ன்னா எனும் சொல் எந்த வகை அளபெடை ? ஏன் ? (5M)

You might also like